வியாழன், 30 செப்டம்பர், 2010

வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம் கையளிப்பு நாடகம்

யாழ். மாவட்டத்தின் வலிகாமம் வடக்கு அதியுயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம் கடந்த செவ்வாய்கிழமை திறந்து வைக்கப்பட்டது. அது சம்பந்தமான செய்திகள் அனைத்து ஊடகங்களிலும் பரவலாக முக்கியத்துவம் மிக்க செய்தியாக வெளிவந்தது. இதனையடுத்து அதியுயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள பல கல்லுரிகள் மக்கள் குடியிருப்புக்கள் மற்றும் ஆலயங்கள் என்பன தொடார்சியாக மக்களின் பாவனைக்கு வரலாம் என்ற நம்பிக்கை யாழ். மக்களின் மனங்களில் தோன்றின. ஆனால், இந்த நிகழ்வில் பாடசாலை கையளிப்பு என்பது மக்களை ஏமாற்றுவதற்கு நடத்தப்பட்ட ஒன்று போல் தென்படுகின்றது.

புதன், 29 செப்டம்பர், 2010

நீர்வழங்கல் சபைக்குத் தண்ணீர் காட்டும் யாழ்ப்பாணத்து சண்டியன்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் பாரம்பரிய கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கொழும்பில் வசித்து வரும் இரண்டு வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீர் விநியோகத்திற்காக கட்டணமாக நூற்றி ஒரு லட்சத்து, 36 ஆயிரத்து, 443 ரூபாவை செலுத்த  வேண்டும்.கொழும்பு 5 பார் வீதியில் அமைச்சர் வசித்து வரும் இலக்கம்; 121 வீட்டிற்கான குடிநீர் விநியோக கட்டணமாக 83 லட்சத்து 65 ஆயிரத்து 695 ரூபாவை செலுத்த வேண்டியுள்ளதாகவும் கடந்த மாதம் 25 ஆயிரம் ரூபா மாத்திரமே செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதேவேளை கொழும்பு 4 லெயாட்ஸ் வீதியில் உள்ள அமைச்சர் தேவானந்தாவின் 15 கீழ் 1 என்ற இலக்க வீட்டின் குடிநீர் கட்டணமாக 17 லட்சத்து 70 ஆயிரத்து 750 ரூபா செலுத்த வேண்டிள்ளது

இலங்கை ஜனாதிபதியைச் சந்திக்க விருப்பம் கொள்ளாத தலைவர்கள்

ஐக்கிய நாடுகளின் 65-வது மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதியை உலகத் தலைவர்கள் எவரும் சந்திக்கவில்லை எனச் சிங்கள இணையத்தளமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கைக்கு இதுவரை காலமும் காணப் பட்ட நற்பெயருக்குத் தற்போது களங்கம் ஏற்பட்டுள்ளதாக அந்த இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையினால் நடத்தப்பட்ட விருந்துப சாரத்திற்கு 100 நாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் ஒரு நாட்டுத் தலைவரே இந்த விருந்துபசாரத்தில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 27 செப்டம்பர், 2010

பாகிஸ்தானுக்கு ஆயுத சப்ளை : அதிபர் ஒபாமா விரும்பவில்லை

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானுக்கு ஆயுதம் வழங்குவதை அமெரிக்கா விரும்பவில்லை' என, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பாகிஸ்தான் அதிபர் சர்தாரியிடம் உறுதியுடன் கூறியதாக, "ஒபாமா'ஸ் வார்' என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியர் எழுதியுள்ளார்.அமெரிக்கப் புலனாய்வு எழுத்தாளரான பாப் உட்வேர்ட் சமீபத்தில், அமெரிக்கா மேற்கொண்ட சமீபத்திய போர்களைப் பற்றி, "ஒபாமா'ஸ் வார்' என்ற புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளார். மொத்தம் 417 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தில், பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, ஒபாமாவைச் சந்தித்த போது நடந்த உரையாடல்களை பதிவு செய்துள்ளார்.

பௌத்த தேரர் மட்டக்களப்பில் சாகும்வரை உண்ணாவிரதம்

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட பிரதி பிரதம சங்கநாயக்கரும் மட்டக்களப்பு ஸ்ரீமங்களாராம ரஜமகா விகாரையின் விகாராதிபதியுமான அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மட்டக்களப்பு நகரில் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மட்டக்களப்பில் வைத்து தன்னை அவமானப்படுத்தியைக் கண்டித்தே தான் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருப்பதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மங்களா ராம விகாரைக்கு முன்னால் இப்போராட்டம் தொடர்கிறது.அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேரடியாக வந்து தன்னிடம் மன்னிப்புக் கோரும் வரை சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் தொடருமென அவர்மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் போராளிகளின் தடுப்பு .ஐ.சி.ஜே கவலை

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள  முன்னாள் போராளிகளும், சரணடைந்தவர்களும், ஒரு சட்டரீதியான கருஞ்சூன்யத்தை எதிர்நோக்குவதாகக் கூறும் இந்த அமைப்பு, இந்தப் புனர்வாழ்வு முயற்சிகளுக்கான சர்வதேச உதவி, இந்த நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்கள் மற்றும் தரவுகளின்படியே எடுக்கப்படவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே தரப்படவேண்டும் என்று கூறுகிறது. இவ்வாறு எந்த நிபந்தனைகளும் இல்லாமல் சர்வதேச உதவி தரப்பட்டால், அது நியாயமற்ற தடுப்பு நடவடிக்கைகளில் சர்வதேச சமூகமும் ஒத்திசைவாகச் செல்லும் ஆபத்தை ஏற்பத்தும் என்று இந்த அமைப்பு கூறுகிறது. இலங்கையில் இவ்வாறான தடுப்புக்காவல் கைதுகள், அவசரகாலச் சட்ட விதிகளின் கீழும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழும் செய்யப்படுவதை சுட்டிக்காட்டும் இந்த அமைப்பு, இந்த சட்டங்களின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலி போராளிகள், புனர்வாழ்வு நடவடிக்கைகள் என்ற பெயரில், இரண்டு ஆண்டுகள் வரை எந்த ஒரு குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படாமல், நிர்வாகத்தால் தடுத்துவைக்கப்படுவது, அவர்களுக்கு தனிப்பட்ட முறையிலோ அல்லது கூட்டாகவோ விதிக்கப்படும் , விசாரணையில்லாத தண்டனை என்றும் வர்ணிக்கிறது.

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

கப்டன் மொறிஸ்

நான் போர்முனையில்
குருதி வெள்ளத்தில் நிற்கிறேன்
மீண்டும் நிட்சயமாகத் திரும்பி வருவேன் - ஆனால்
உங்கள் கனவுகளிலும் நினைவுகளிலும் மட்டுமே...!
என்றான். அவன்தான் மொறிஸ்.
நான்கு ஆண்டுகள் இயக்கப் பணியில் ஈடுபட்டான். குறுகிய காலப் பகுதியில் அவன் ஆற்றிய சேவைகள் அளப்பரியன. சிறீலங்கா இவாணுவம் தொண்டமானாற்றில் குடிகொண்டிருந்த காலம் அது. புலிகள் பெருந்தாக்குதல் ஒன்றை இராணுவ முகாம் மீதுமேற்கொண்டனர். மொறிஸ் அத்தாக்குதலை முன் நின்று நடாத்தி வெற்றியும் கண்டான். இராணுவ வீரரைச் சிதறியோடச் செய்தான். பூநகரி இராணுவ முகாமைத் தாக்கி வெற்றியும் கண்டு காயமும் பட்டான். பருத்தித்துறையில் குடி கொண்டிருந்த இராணுவத்தை வெளியேற விடாமல் சென்ரி போட்டுத் தடுத்து வெளிவந்தோரை விரட்டி அடித்த பெருமை இவனுக்குண்டு. முதல் முதலாக பருத்தித்துறையில் தம்பசிட்டி வீதியில் வைத்து ஆமி றக்கிற்கு கிரனைட் வீசி ஆமியைக் கிலி கொள்ளச் செய்த துணிவும் இவனுக்குண்டு.

இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கையால் அச்சுறுத்தல்

தமது நாட்டுப் பாதுகாப்பு தொடர்பாக இலங்கை அச்சுறுத்தலாக அமைந்துள்ளதா? என்பதில் இந்தியா தற்போது அதிக அக்கறை காட்டத் தொடங்கியுள்ளது. அண்மையில் மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்ட "லஹ்ர் ஈ தொய்பா" அமைப்பின் ஒருவர் தாம் இலங்கையில் பயிற்சி பெற்றதாக தெரிவித்தமையை அடுத்தே இந்த அக்கறை ஏற்பட்டுள்ளது.முதலில் இந்தப் போராளிக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் பயிற்சிகளை வழங்கி யிருப்பார்களா? என்ற சந்தேகத்தை இந்தியா கொண்டிருந்தது.எனினும் பின்னர் அது நிரூபிக்கப்படாத நிலையில் இலங்கையின் படையினர் மீது இந்தியாவின் கவனம் திரும்பியுள்ளது.

கல்வியங்காடு சந்திரசேகரப்பிள்ளையார் குளத்தினுள் ஆயுதம்கள் படையினர் தேடுதல்

கல்வியங்காடு சந்திரசேகரப்பிள்ளையார் ஆலய வீதியிலுள்ள குளம் ஒன்றில் ஆயுதம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அப்பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ள விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் கல்வியங்காடு சந்திரசேகரப் பிள்ளையார் ஆலய வீதியிலுள்ள குளத்தினுள் ஆயுதம் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்ததாகவும் இதனையடுத்து அப்பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு குளத்தை இறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. சுமார் 10 நீர் இறைக்கும் இயந்திரங்களை பயன்படுத்தி நீர் இறைக்கும் பணி நடைபெறுவதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

சனி, 25 செப்டம்பர், 2010

மூத்த தளபதி கேணல் சங்கர் அவர்களின் நினைவு நாள் வீரவணக்கங்கள்

26.09.2001 அன்று ஒட்டுசுட்டான் பகுதியில் சிறிலங்கா படையினரின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான கேணல் சங்கர் அவர்களின் 9ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்கு மேலாக தளரா உறுதியுடன், தமிழீழ விடிவே குறியாகக்கொண்டு செயற்பட்டு வந்த கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம் சாய்ந்துவிட்டது. ஈழ விடுதலைக்காய் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் இதுவும் ஒன்று. 26-09-2001 காலை 10.45 மணிக்கு ஒட்டுசுட்டானுக்கு அண்மித்த பகுதியில், சிறீலங்காப் படைகளின் ஊடுருவல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் கேணல் சங்கர் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீர வணக்கங்கள்

"மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்"

 தியாகசீலன் திலீபனின் நினைவுநாளை அனுஷ்டிக்கும் இத்தருணத்தில், இருபத்திமூன்று வருடங்களுக்கு முன்பு  நல்லூர் முன்றலில் அந்த தியாகி கூறியவை வெறும் வார்த்தைகள் அல்ல அருள்வாக்குகள் என்பதை தற்பொழுது நாம் உணர்கின்றோம். "மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்" என அன்று தியாகி திலீபன் கூறிய வாக்கு இன்று ஈழத்தமிழினத்திற்கு அவசியமான ஒன்றாக மாறியிருக்கின்றது."இனவிடுதலைப் போராட்டம்" என்பது அது எவ்வகையில் அமைந்தாலும் அந்த இன மக்களின் பூரண ஆதரவு இல்லாமல் மேற்கொள்ள முடியாது. ஒட்டுமொத்த மக்களும் விடுதலையென்ற ஒரே இலட்சியத்திற்காக தமது பங்களிப்பினைச் செய்ய முன்வர வேண்டும்அவ்வாறுமுன்வரும்போதுதான் விடுதலைக்கான மக்கள் புரட்சியும் அதன்மூலமான விடுதலையும் சாத்தியப்படும்.

திலீபனுடன் பன்னிரெண்டாம் நாள் – 26.09. 1987

இன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்து விட்டது! திடீரென்று மின்சாரம் தடைப்பட்டு விட்டது. எங்கும் ஒரே இருள்மயம். காற்றும் பலமாக வீசத் தொடங்கியது. பல நாட்களாக திலீபனுடன் சேர்ந்து நானும் எனது நண்பர்களும், முழுமையான தூக்கமில்லாமல் இருந்ததால் இன்று மிகுந்த சோர்வுடன் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தோம். மாறன், ராஜன், தேவர், இரு நவீனங்கள், மாத்தயா, திலீபனின் அண்ணன் இளங்கோ, எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு தூங்கினோம். பன்னிரண்டு நாட்கள் உடல்களைச் சாறாகப் பிழிந்தெடுத்த அசதித் தூக்கமின்றி, அது வேறொன்றுமில்லை. மேடைக்கு முன்னே அமர்ந்திருந்த ஒருவர் என்னை வந்து தட்டி எழும்பியதும் நான்தான் முதலில் திடுக்கிட்டு எழும்பினேன்.

இலங்கை கடற்படை மீது மரைன் போலீசார் வழக்கு

ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை, தாக்கிய இலங்கை கடற்படையினர் மீது, மரைன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவங்களில், இதுவரை நூற்றுக்கணக்கான மீனவர்கள் பலியாகி உள்ளனர். கை, கால், கண்களை இழந்து ஊனமாகி வாழ்க்கையை தொலைத்தவர்கள் ஏராளம். இந்திய அரசு அவ்வப்போது இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும், சில நாட்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் இலங்கை கடற்படையினர், மீண்டும் தாக்குதலை தொடர்கின்றனர்.

யாழ் -ஆரிய குளம் பகுதியில் விபச்சாரம்

யுத்தம் முடிவடைந்து தற்போது தமிழர்  பகுதிகளை ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ள சிங்கள பேரினவாத அரசின் ஆட்சி கட்டு பாட்டு பகுதியில் சிக்கி இருக்கும் யாழ்பாணம் ஆரியகுள சந்தியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் விபச்சராம் நடைபெறுகின்றது . இந்த விடுதியில் வரும் வாடிக்கையாளர்களை குசி படுத்த பல பெண்கள் உள்ளனர் . இந்த விடுதிக்கு பொறுப்பாக உள்ளவருக்கு யாழ் மாநகர சபை சேர்ந்த முக்கிய நபர் ஒருவர் பேராதரவினை வழங்கி வருகின்றார் . இவரும் அந்த பெண்களிடம் சென்று தனது லீலைகளை நடத்தி முடித்து வருகின்றார் . இந்த செய்திகளை யாழில் உள்ள ஊடகங்கள் தெரிந்திருந்தும் வெளியிட முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளபட்டுள்ளனர் .

களியாட்டத்தால் காவு கொள்ளப்பட்ட உயிர்

தமிழ் வானொலி ஒன்றின் அனுசரனையுடன் துரையப்பா விளையாட்டு அரங்கில் நடந்த களியாட்ட நிகழ்வில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். துரையப்பா விளையாட்டரங்கில் உள்ள கால்ப் பந்து தடுப்பு காப்பு கம்பி மீது ஒன்றின் அருகில் நின்று களியாட்டத்தை பார்த்துக் கொண்டிருருந்த வேளை சன நெரிசல் காரணமாக கம்பி வளைந்து குறிப்பிட் இளைஞனின் தலை  மற்றும் நெஞ்சுப் பகுதியை தாக்கியதாக தெரியவருகின்றது. இதனால் படுகாயமடைந்து யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முந்தினம் இளைஞன் உயிரிழந்தார். மல்லாகம் நீதிமன்றவீதியை சேர்த 18 வயதுடைய சி.ஜஸ்ரின் என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

நினைவு நாள் வீரவணக்கங்கள்.

25.09.1992 அன்று பூநகரி பள்ளிக்குடா பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படையினரின் இரு மினி முகாம்கள் மற்றும் 62 காவலரண்கள் மீதான அழித்தொழிப்புத் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் அவர்கள் உட்பட்ட மாவீரர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

மஹிந்தவை அதிர்ச்சியில் ஆழ்த்திய குட்டி விமானம்

ஐக்கிய நாடுகள் சபையின் 65 ஆவது மாநாட்டில் உரையாற்றுவதற்கு நேற்று முன்தினம் புறப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவுக்கு அதிர்ச்சி தரும் வகை யிலான பதாகையொன்று  கண்ணில் பட்டது. இலங்கை சர்வாதிகாரி ராஜபக்ஷ, ஜெனரல் பொன்சேகாவை விடுதலை செய்" என்ற வசனங்களுடனான பதாகையொன்று வானத்தில் காணப்பட்டதாக இணைய தளமொன்று செய்தி வெளியிட்டதுடன் பதாகையின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை அலுவலகக் கட்டடத்துக்கு கிழக்குப் புறமாக வானத்தில் குட்டி விமானமொன்று இந்தப் பதாகையுடன் வலம் வந்து கொண்டிருந்தது.

திலீபனுடன் பதினோராம் நாள் - 25.09. 1987

இன்று திலீபனின் உடல் நிலையைப் பற்றி எழுத முடியாதவாறு என் கை நடுங்குகிறது. அவரது உடலின் சகல உறுப்புகளும் உணர்ச்சியின்றிக் காணப்பட்டன. கை, கால்கள் சில சமயம் தானாகவே அசைக்கின்ற. அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்பதை இதன் மூலம்தான் அறிய முடிகிறது. 'கோமா' வுக்கு முந்திய நிலையில் (Semi Coma) ஒரு நோயாளி எவ்வளவு கஷ்டப்படுவாரோ அதைப்போல், அவர் உடல் தன்னை அறியாமலே அங்குமிங்கும் புரளத் தொடங்கியது. அவர் படுத்திருந்தது சிறிய கட்டில்…. ஆகையால், தேவரிடம் சொல்லி, பெரிய கட்டிலொன்று கொண்டுவரச் செய்து, அதில் திலீபனைப் படுக்க வைத்தோம். அப்போதுதான் அவர் கட்டிலில் ஏற்கனவே சிறுநீர் கழித்திருந்ததைக் காண முடிந்தது.

வியாழன், 23 செப்டம்பர், 2010

ராஜபக்க்ஷாக்களின் தீவு?

ராஜபக்க்ஷ சகல அதிகாரங்களையும் கொண்டிருக்கும் இலங்கையுடன் விடயங்களை கையாள்வது தொடர்பாக முழு அளவிலான தந்திரோபாயத்தை இப்போது இந்தியா வகுத்துக்கொள்வது அவசியமானதாகும்.அதேசமயம், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுப்பொதி உட்பட அடிப்படை ஜனநாயக விதிமுறைகள் மற்றும் நோக்கங்களை இந்தியா மனதில் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு இந்தியாவிலிருந்து வெளியிடப்படும் "எக்கனோமிக் ரைம்ஸ் பத்திரிகை தெரிவித்திருக்கிறது. ராஜபக்ஷாக்களின் தீவு? என்று மகுடமிட்டு  அப்பத்திரிகை ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ளது.அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

திலீபனுடன் பத்தாம் நாள் -24-09-1987

பெற்றோர் – பிள்ளைகள் - சகோதரர்- உற்றார்- உறவினர்- நண்பர் இவர்களின் யாராவது நம் கண் முண்ணாயே முன்னாலே இறக்க நேரிடும்போது மனம் துன்பத்தில் மூழ்கிவிடுறது: கண்கள் கண்ணீர்ரை சொரிகின்றது. ஆனால், இவர்களின் ஒருவர் அணுஅணுவாகச் செத்துக் கொண்டிருப்பைப் பார்க்கும்போது………. துயரத்தின் எல்லைக்கே நாம் போய்விடுகின்றோம். உலகமே சில வினாடிக்குள் வெறுத்துப்போய்விடும். கண்களில் அழுவற்குக் கண்ணீர்கூட எஞ்சியிருக்காது. ஆனால், இவர்கள் ஓருவர் ஓரு சொட்டு நீர் கூடஅருந்தால்10 நதற்களாக எம் கண் முண்ணாதல் அணு அணுவாகச் சாவின் விளின் வழளிம்பில் நின்று தத்தளிப்பதைப் பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கும் போது ஏற்படும் மன வேதனை இருக்கிறதே- அப்பப்பா! ….. அதை வாய்விட்டுச் சொல்ல முடியாது. ஆத்துனை கொடுமை அது அனுபவித்தவர்களுக்கு மட்டும் புரியும் அது.

நமது ஈழநாடு நாளிதழின் அச்சகம் சிறிலங்கா சிறப்பு குற்றப் புலனாய்வுக் காவல்துறையினரால் மூடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ’நமது ஈழநாடு’ நாளிதழின் அச்சகம் சிறிலங்கா சிறப்பு குற்றப் புலனாய்வுக் காவல்துறையினரால் முத்திரையிட்டு மூடப்பட்டுள்ளதுடன் அதன் உரிமையாளர் பொன்னுத்துரை குருதேவ் கைது செய்யப்பட்டுள்ளார். நாவலர் வீதியில் உள்ள ’நமது ஈழநாடு’ அச்சகம் மற்றும் பணியகமே காவல்துறையினரால் மூடப்பட்டுள்ளது.

புதன், 22 செப்டம்பர், 2010

திலீபனுடன் ஒன்பதாம் நாள் -23-09-1987

அதிகாலை 5 மணியிருக்கும். கிழக்குப் பக்கத்தே தேர்முட்டி வாசலில் நின்றிருந்த வேப்ப மரத்தினின்று குயில் ஒன்று கூவிக் கொண்டிருக்கிறது. "கூ.......கூ.....குக்….கூ......" அதன் குரலில் தொனித்த விரக்தியின் சாயலைக் கேட்ட நான், தலீபனை ஏக்கத்துடன் பார்க்கின்றேன். அந்தக் குயில் எதை இழந்து இப்படிக் கூவுகிறதோ தெரியவில்லை. ஆனால் இந்தக் குயில்…? எம்மை - எம் இனத்தைக் காக்க தன்னையே இழந்து கொண்டிருக்கிறதே…. இந்த சிறு குயிலின் சோக கீதம் உலகத்தின் காதுகளில் இன்னுமா விழவில்லை…..? திலீபனை நன்றாக உற்றுப் பார்க்கிறேன். அவரின் உடலிலுள்ள சகல உறுப்புகளும் இன்று செயலற்றுக் கொண்டிருக்கின்றன

வெறுமை நிறைந்த மனங்களில்

சிதைவுகளால் மூடுண்டுள்ள நிலத்தில்
சாட்சிகள் ஒளிக்கப்பட்டுள்ளது…..
ஒளித்திருப்போர் ஒளிவீசாதபடி
அச்சமூட்டும் பேய்கள் நிறைந்து
பயங்களால் அழிகிறது வாழ்வு……

பதுங்குகுளியிலிருந்த வாழ்வு இப்போ
பயங்களால் நிறைகிறது.
கம்பிகளின் பின்னால் சாவுறையும் நினைவுகளோடு
காத்திருக்கும் மகன்களுக்காகவும் மகள்களுக்காகவும்
அம்மாக்கள் அழுதுவடிக்கும் கண்ணீரால்
காலம் தனது கவிதைகளை எழுதிச் செல்கிறது.

காணாமற்போன பிள்ளைகளையும் கணவர்களையும்
கனவுகளில் கண்ணுற்றுத் திடுக்குற்று விழித்த
கண்களிலிருந்து வரலாற்றின் கதைகள்
தோற்றுக் கொண்டிருக்கிறது…..

வெறுமை நிறைந்த மனங்களில் – எல்லாம்
வெற்றிடமாய் கிடக்கிறது
ஓர் சந்ததியின் வாழ்வு
சாவுகளால் அடை(ட)க்கப்பட்டுள்ளது…..

பிரசவிக்கப்பட்ட மறுகணமே கைவிடப்படும் குழந்தைகள்

முதல் நாள் பெய்த பெருமழையின் மிச்சமாக வானம் இருண்டு கிடந்தது. மெலிதான தூறல். விடிந்தும் விடியாத காலைப்பொழுது. தூக்கத்திலிருந்து விழித்துக்கொள்ளத் தொடங்கிய கிராமத்தின் வீதிகளில் இன்னமும் மனித நடமாட்டம் தொடங்கவில்லை. எங்கும் அமைதி போர்த்தப்பட்டி ருந்தது. அந்த அமைதி வெகு நேரம் நீடிக்கவில்லை.  வீதியோரமாய் தேங்கிநின்ற வெள்ள நீரைவிலக்கியவாறு வந்துகொண்டிருந்த வயோதிபர் ஒருவரின் காதில் திடீரென எழுந்த  முனகல் ஒலி விழுந்தது.வீதியில் யாருமில்லை. வீடுகளும் திறந்திருக்கவில்லை.  எங்கிருந்து அந்த முனகல் சத்தம் வருகின்றதென அவருக்கு ஒரே குழப்பம். சுற்றும் முற்றும் துழாவிப்  பார்த்த போதுதான்   ஒரு சாக்குப்பை அவரின் கண்ணில் பட்டது. அதிலிருந்தே பூனைக்குட்டியின்  மெலிதான குரல் போல ஒலி வந்துகொண்டிருந்தது. அவருக்கு எரிச்சலாக வந்தது.

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

திலீபனுடன் எட்டாம் நாள் -22-09-1987


 இன்று அதிகாலையிலே நிரஞ்சன் குழுவின் கொட்டகை போடும் வேலையை ஆரம்பித்து விட்டனர். முதல் நாள் இலட்சக்கணக்கான மக்கள் வந்திருந்ததால் போடப்பட்டிருந்த கொட்டகைகள் எல்லாம் சனக்கூட்டத்தினால் நிரம்பி வழிந்தன ஏராளமானோர் சுடுவெயிலில் கால்கடுக்க நிற்கவேண்டி ஏற்பட்டதால் நல்லூர் கோவில் மைதானம் முழுவதிலும் படங்குகளினால் கொட்டகை போடத்தொடங்கியிருந்தார்கள். உண்ணாவிரதம் ஆரம்பிக்கும்போது இத்தனை சனக்கூட்டம் வருமென் யாருமே எதிர்பார்க்கவில்லை. இலங்கையில் மட்டுமன்றி, இந்தியா மற்றும் பல வெளிநாடுகளில் கூட திலீபனின் தியாகப் பயணம் பற்றியே  பெரும்பாலானோர் பேசிக் கொண்டிருப்பதாகப், பத்திரிகைகளில் போட்டிருந்தார்கள்.

திங்கள், 20 செப்டம்பர், 2010

எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்- திருமலை அரசியல் துறை பொறுப்பாளர் எழிலனின் மனைவி

எனக்கு பின்விளைவுகள் வந்தாலும் பிரச்சினையில்லை. நான் பயப்படவில்லை. வந்தால் எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். வாழ வேண்டும் என்ற விருப்பத்துடன் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை இலங்கை அரசால் அமைக்கப்பட்டிருக்கின்ற நல்லிணக்க ஆணையத்தின் முன்பு விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலனின் மனைவி ஆனந்தி சசிதரன் சாட்சியமளித்துள்ளார்

'பேஸ்புக்' தயாரிக்கும் இரகசிய கையடக்கத் தொலைபேசி

பிரபல சமூக வலைபின்னல் தளமான 'பேஸ்புக்', கையடக்கத் தொலைபேசி ஒன்றை உருவாக்கி வருவதாக 'டெக்கிரன்ச்' இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது. மூன்றாம் நபர் வன்பொருளில் இயங்குவதற்கான இயங்குதளத்தினை ( ஒபரேடிங் சிஸ்டம்) 'பேஸ்புக்' தயாரித்து வருகின்றதென அத்தளம் குறிப்பிட்டிருந்தது. கூகுளின் 'அண்ரோயிட்' இயங்குதளத்தினைப் போன்ற ஒரு முயற்சியில் 'பேஸ்புக்' இறங்கியிருக்கலாமெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கூகுளின் 'அண்ரோயிட்' கையடக்கத் தொலைபேசிகள் தற்போது பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளவத்தையில் தமிழ் வர்த்தகர் ஒருவர் கடத்தல்

கொழும்பு வெள்ளவத்தையில் தமிழ் வர்த்தகர் ஒருவர்  வெள்ளை வானில் வந்த இனந் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளார் என குறித்த பிரதேச மக்கள்  தெரிவித்தனர். வெள்ளவத்தையில் புதிதாக திறக்ப்பட்ட வெதுப்பகம் ஒன்றின் உரிமையாளர் ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்

திலீபனுடன் ஏழாம் நாள் -21-09-1987

 நேற்றைய பேச்சுவார்த்ததையின் முடிவு என்னவாக இருக்கும்….? இந்தக் கேள்விதான் இதயத்தின் பெரும் பாகத்தை அரித்துக் கொண்டிருந்தது. காலை 10 மணிவரை எவ்வளவோ முயன்றும் அவர்கள் இருவரும் என் கண்களில் படவேயில்லை. ஆனால், திடீரென்று "இந்தியா ருடே" (India Tiday) பத்திரிகை நிருபரும் இந்திய துரதஷனின் (இந்தியத் தொலைக்காட்சி ஸ்தாகனம்) வீடியோப் படப் பிடிப்பாளரும், யோகியுடன் வந்து திலீபனைப் படம்பிடிக்கத் தொடங்கினர். "இந்தியா ருடே" நிருவர் என்னிடம் திலீபனின் உடல் நிலையைப்பற்றித் துருவித் துருவித் கேட்டுத் தெரிந்துகொண்டார்.

முறிகண்டிப் பிள்ளையார் கோவிலுக்கு அண்மையாக புத்தபிரானுக்கு இருப்பிடம்,,ஹோட்டல்

முறிகண்டிப் பிள்ளையார் ஆலய சூழல், அங்கிருந்த இறைபக்தி, நம்பிக்கை என அனைத்தும் வெறுமையாகிப் போகும் அளவில் அந்தப் பகுதி ஆக்கப்பட்டுள்ளது. முறிகண்டிப் பிள்ளையார் கோவிலுக்கு அண்மையாக புத்தபிரானுக்கு இருப்பிடம் அமைக்கப்படும் பணி நடைபெறுகின்றது. இந்துசமயம் சார்ந்தவர்கள் தங்கள் வழிபாட்டை மேற்கொள்வதற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் முறிகண்டிப் பிள்ளையார் ஆலய சூழலில் ஹோட்டல் அமைக்கும் பணி நடந்தேறியுள்ளது. ஹோட்டல் என்றால் அங்கு மதுவும் மாமிசமும் தாராளமாக பரிமாறப்படும். அவ்வாறாயின் முறி கண்டிப் பிள்ளையார் ஆலய சூழலின் புனிதத் தன்மையை வேரறுப்பதே இதன் நோக்கம் ஆகும். இத்தகைய செயற்பாட்டின் மூலம் வடக்கில் தமிழர்களின் தனித்துவமான இடங்கள் என எதுவும் இருக்கக் கூடாது.

உல்லாச நகராக யாழ்ப்பாணம் திறந்து விடப்பட்டிருக்கிறது....

சந்தியில் நிற்பதும், மது அருந்துவதும், கையடக்கத் தொலைபேசியும்தான் எங்கள் சீவியம் என்றால் இந்த மண்ணில் நிகழ்ந்த தியாகங்களுக்கு எந்த அர்த்தமும் இல்லாமல் போகும்  அன்புக்குரிய இளைஞர்களே! நாங்கள் முதலில் எங்களை அறிய வேண்டும்  குடாநாட்டில் எங்கு பார்த்தாலும் சிரழிகின்றது எமது தனித்துவமான கலை கலாச்சாரங்கள். "இயக்க நிலையில் சீராக இயங்கிய எமது பண்பாடு, கலாச்சாரங்கள் தற்போது இயக்கமற்ற நிலையில் சீரழிகின்றது". சரியான பாதை காட்டுவதற்கு முறையான ஆட்கள் இல்லாத நிலையில் மேய்பன் இல்லாத மந்தைகள் போல மாறிவிட்டது எமது  யாழ்ப்பாணம் பட்டினம் .

ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை கடற்படையினர், தங்கச்சிமடம் மீனவர்களை தாக்கி மீன்களை பறித்துச் சென்றனர். ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு சென்றன. இந்திய கடல் எல்லையான 9 கடல் மைல் தூரத்தில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தனர்.

தமிழ் மக்களின் பெருமூச்சு

 இலங்கையின் தமிழ் அரசியல் கட்சிகள் இன்று இருப்பதைப்போன்ற படுமோசமான பலவீனமான நிலையில் அவற்றின் வரலாற்றில் முன்னொருபோதுமே இருந்ததில்லை. தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்குப் பரிகாரம் காண்பதற்கு உருப்படியான அரசியல் அணுகுமுறைகளை வகுக்க இயலாமல் இந்தக் கட்சிகள் தடுமாறிக் கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. உள்நாட்டுப் போரின் பின்னரான காலகட்டத்தில் இலங்கைத் தமிழ்மக்கள் தங்கள் மத்தியில் கட்டுறுதியான அரசியல் சமுதாயம் ஒன்று இல்லாமல் அரசியல் வெற்றிடத்தில் விடப்பட்டிருக்கிறார்கள்

திலீபனுடன் ஆறாம் நாள் -20-09-1987

அதிகாலையில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது. ஆம் ! இன்று திலீபன் காலை 5 மணிக்கே படுக்கையை விட்டு எழுந்து விட்டார். அதுமட்டுமன்றி தான் சிறுநீர் கழிக்கப்போவதாகக் கூறினார். அவர் இருக்கும் நிலையிலே படுக்கையை விட்டு எழுந்து செல்வது என்பது முடியாமல் இருந்ததால் படுக்கையிலேயே சலப் போத்தலைக் கொடுத்தேன். ஆனால் சலம் போகவில்லை. வயிற்றை வலிப்பதாகவும் சலம் போவதற்குக் கஷ்டமாக இருப்பதாகவும் கூறினார். சுகிச்சையின் மூலம் கொஞ்சமாவது சிறுநீர் கழிக்க முடியும். ஆனால் அதைப்பற்றி பேசினாலே எரிந்து விழுவார் என்பதற்காக ஒன்றும் பேசாமல் இருந்தேன்.

யாழ்ப்பாணத்தில் புதிய அரசியல் கட்சி

யாழ்ப்பாணத்தில் ஜனநாயக மக்கள் கட்சி எனும் புதிய அரசியல் கட்சி ஒன்று ஆரம்பிக்கப் படவுள்ளது. யாழ். மாநகரசபை மேயர் பதவிக்காக ஐக்கிய தேசியக்கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளரும், யாழ்ப்பாண அமைப்பாளருமான எஸ்.சத்யேந்திரா தலைமையிலேயே இந்த கட்சி ஆரம்பிக்கப்படவுள்ளது.

சரணடைந்த போராளிகள் அனைவரையும் படையினர் 16 பஸ்களில் ஏற்றிச் சென்றனர்

இறுதிக் கட்டயுத்தத்தின் போது சரணடைந்த மற்றும் பிடிபட்ட போராளிகளையும் ஏற்றி 16 பஸ்களில் கொண்டு சென்றார்கள். இன்றுவரை அவர்களின் கதி என்ன வென்று தெரியாது.இவ்வாறு முன்னாள் போராளி ஒருவரின் தாயார்   தெரிவித்தார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு கண்டாவளை பிரதேச செயலகத்தில் நடத்திய அமர்வில் சாட்சியம் அளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

சனி, 18 செப்டம்பர், 2010

திலீபனுடன் ஐந்தாம் நாள் 19-09-1987

வழக்கம் போல் சகல பத்திரிகைகளையும் காலையில் வாசித்து முடிக்கும் திலீபனால் இன்று எதுவுமே செய்ய முடியவில்லை. யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதிலுமிருந்து தனியார் பஸ் வண்டிககளில், மக்கள் வெள்ளம்போல் வந்து நிறையத் தொடங்கி விட்டனர். இன்னமும் திலீபன் போர்வைக்குள்ளேயே புதைந்து கிடக்கிறார். ஆவரால் எழும்ப முடியவில்லை. உடல் பயங்கரமாக வியர்த்துக் கொட்டியது.மின்விசிறி அவர் பக்கத்தில் வேகமாகச் சுழன்று கொண்டிருக்கிறது. ஒரு மனித இயந்திரம் தன் முழுச்சக்தியையும் பிரயோகித்து இயங்கிக் கொண்டிருக்கிறது. அன்றைய பத்திரிகைகளில் முக்கிய செய்திகளாக வழக்கம்போல் திலீபனைப் பற்றிய செய்திகளே இடம்பெற்றிருக்கின்றன.

இழப்பு எண்ணிக்கைகளை பலரும் பல்வேறு விதமாக கூறிக்கொள்வதன் காரணம் என்ன?...

புனர்வாழ்வு அழித்தல் எனும் பெயரில் பலசரணடைந்த முன்னாள் போராளிகள் பலரும் மேற்படி கல்அகழ்தல் வேலையில் ஈடுபடவைத்தது சிங்கள அரசு. மேற்படி சம்பவ  இழப்பு எண்ணிக்கைகளை பலரும் பல்வேறு  விதமாக கூறிக்கொள்கின்றனர் .மருத்துவமனை செய்திக்குறிப்பில் கூறபட்ட எண்ணிக்கையை விட  அமைச்சர் முரளிதரன் ஒருபுறம்,, இராணுவ பேச்சாளர் மறுபுறம்,, பொலிஸ் பேச்சாளர் என மாறுபட்ட எண்ணிக்கைகளை கூறுவதன் காரணம் தான் என்ன?.
முன்னாள் போராளிகளின் இழப்பினை அரசு  மறைக்க முயல்வதாக பலரும் கருத்து தெரிவிக்கும் வேளை பல இழப்புக்களை ஏற்படுத்தக் கூடிய பெருந்தொகை வெடிபொருட்கள் முன் பாதுகாப்பின்றி பொதுமக்கள் பலரும் ஒன்று கூடும் இடத்தில் வைத்திருந்த காரணம் தான் என்ன? இழப்புகளை மறைக்க முற்படுதுவதன் நோக்கம் தான் என்ன?

சண்டிலிப்பாயில் பெண் கடத்தல் சம்பவம்

சண்டிலிப்பாய் கொம்பனிப்புலம் பகுதியில்  ஒரு வெள்ளை நிற வாகனம் வேகமாக சென்றதாகவும் அதற்குள் இருந்து ஒரு பெண் கத்தியபடி சென்றதாகவும் இதனை அவதானித்த அப்பகுதி பொதுமக்கள் அவ் வாகனத்தை துரத்தி சென்ற போது அது தெல்லிப்பளைப் பக்கமாக சென்று உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் நுழைந்து விட்டதாகவும் அப் பகுதி பொதுமக்களால் தெரிவிக்கபட்டுள்ளது. இதனை அடுத்து அப் பகுதியில் பொலிசாரும் படையினரும் சேர்ந்து வீதிச் சோதனை செய்ததாகவும் தெரியவருகின்றது. ஆனால் பொலிசார் தரப்பில் இவ்வாறான சம்பவம் இடம் பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதுறு கொடவாக மாறியது கந்தரோடை

யாழ்ப்பாணத் தமிழர்களின் பாரம்பரிய இடங்களின் பெயர்களை சிங்களமயமாக்கி பெயர்ப்பலகைகளைத் தொங்க விட்டுள்ள இராணுவமும் அரசாங்கமும் அம்மக்கள் மீது கலாச்சார மற்றும் உளவியல் ரீதியான தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது. யாழ்ப்பாண வரலாற்றின் புரதான இடங்களில் ஒன்றான கந்தரோடை என்னும் வரலாற்று புகழ்மிக்க இடத்தினை தற்போது கதுறுகொடவாக மாற்றியுள்ளனர் பெரும்பான்மை இனத்தவர்கள்.
புத்த விகாரையி்ன் தோற்றத்தில் கந்தரோடையின் சில பகுதிகளில் கட்டிட வடிவமைப்புகள் காணப்படுகின்றன. தென்பகுதி சிங்கள சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து பார்த்துவிட்டு செல்லும் இடமான கந்தரோடை என்னும் இவ்வூரினை கதுறு கொடவாக மாற்றி பெயருடன் கூடியதான குறியீட்டு பலகை அங்கே பொருத்தப்பட்டுள்ளது. சிங்களத்திலும் தமிழிலும் இது காணப்படுகின்றது. சிங்கள சுற்றுலாப் பயணிகளுக்கு புரிவதற்காக எழுதப்பட்டிருந்தால் அதனை சிங்களத்தில் இவ்வாறு எழுதிவிட்டு தமிழில் கந்தரோடை என எழுதியிருக்கலாம். ஆனால் தமிழிலும் இவ்வாறு எழுதியுள்ளது அனைவரையும் சிந்திக்க வைக்கும் செயலாக அமைந்துள்ளது.  இதுதவிர சுன்னாகம் என்ற தமிழ்ப் பெயரை தொல்பொருள் திணைக்களமானது சிங்கள மயமாக்கி ஹுனுகம என்ற பெயரைக் கொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

கோண்டாவிலில் ஆயுதங்கள் மீட்பு

கோண்டாவில் குமரகோட்டம் வைரவர் ஆலய வெளிவீதியில் நேற்று முன்தினம் இரவு படையினரால் ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளன. அப்பகுதியில்  மாலை விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் துப்பாக்கி ஒன்றைக் கண்டதாகவும் அது தொடர்பில் ஊரெழு இராணுவமுகாமிலுள்ள படையினருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு சென்ற படையினரால் ஆயுதங்கள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சரத் பொன் சேகாவுக்கு 3 வருட கடுங்காவல் சிறைத்தண்டனை

நாடாளுமன்ற உறுப்பினரும் முன் னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன் சேகாவுக்கு இரண்டாவது இராணுவ நீதி மன்றம் 3 வருட கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இந்தத் தீர்ப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஒப்புதலின் பின்னரே அமுலுக்கு வரவுள்ளது.
சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாகப் பதவி வகித்தபோது மேற்கொள்ளப்பட்ட ஆயுதக் கொள்வனவில் இடம் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்ட முறைகேடுகள் தொடர்பாக இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.அந்நீதிமன்றம்  தண்டனையை விதித்துத் தீர்ப்பளித்தது
.

திலீபனுடன் நான்காம் நாள் 18-09-1987


கடந்த மூன்று நாட்களாக மேடையில் திலீபனுடன் சேர்ந்து ஒரு சொட்டு நீர் கூட அருந்தாது இருந்தேன். மானசீகமாகத் திலீபனின் நட்புக்கு உயரிய மதிப்பளிப்பவன் நான். அதனால் தான் என்னால் எதுவும் அருந்த முடியவில்லை. திலீபன் ஒன்றும் அருந்தவில்லையே, உண்ணவில்லையே, என்ற வேதனைதான் என்வாய்க்கு பூட்டுப்போட்டதே தவிர வேறு ஓன்றுமே இல்லை. கடந்த மூன்று நாள்களாக ஒன்றுமே நான் உண்ணாமல் அருந்தாமால் இருந்தது சிறிது களைப்பை ஏற்படுத்தி இருந்தாலும் திட மனத்துடன் அதைச்சமாளித்துக் கொண்டேன். நான்காம நாளான இன்றுதான் எனக்குச் சற்று நாவறர்ச்சியாக இருந்தது. ஆனாலும் அதைப்பொருட்படுத்தாமல் யாரிடமும் என் விரதத்தைப்பற்றிக் கூறாமல் இருந்தேன். இரண்டு மூன்று முறை ராஜனும் - நவீனும் என்னைச் சாப்பிட அழைத்த போது நான் பிடிவாதமாக மறுத்து விட்டேன். என்னை மேடைக்குப் பின்புறமிருந்த வீட்டிற்கு அழைத்துப் திலீபன் இருக்கும் நிலையைப் பார்க்கும் போது என்னால் எதுவும் அருந்த முடியவில்லை என்று மாத்தயாவிடம் கூறிய போது என்னால் தாங்க முடியவில்லை. விம்மி விம்மி அழத்தொடங்கி விட்டேன்.

பதுங்கிய புலிகளின் தாக்குதலா?, சதியா?, விபத்தா?

தமது இலக்கு நிறைவேறும்  வரை நீண்டகாலம் காத்திருந்து தமது இலக்குகளை அழித்தொழித்த பல தற்கொடையாளர் பலர். இந்த வகையில் மட்டு. கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் வெடிப்பு சம்பவம்.குண்டு வெடிப்பு நிகழ்வதற்கு சற்று சில நிமிடங்களிற்கு முன் அமைச்சர் முரளிதரன் பன்குடாவெளி நரிப்புத்தோட்டத்தில் மின்சாரம் வழங்கும் நிகழ்வில் பங்குகொள்ளும் நோக்குடன் தனது காவலர்களுடன் மேற்படி பொலிஸ் நிலையத்தில் தங்கி நின்று சென்றுள்ளார். குண்டுவெடிப்பு அமைச்சருக்கு குறிவைக்க பட்டதா? அண்மைய நாள்களில் பல விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள்,,ஆதரவாளர்கள் கிழக்கில் கைது செய்ய பட்டதாக சிங்கள ஊடகங்கள் பல செய்தி வெளியிட்டமை உற்று நோக்கதக்கது.  புலிகள் அமைப்பின் கடந்த கால தாக்குதல்கள் பல தம் தளபதிகளின் நினைவு நாள்களிலேயே நடைபெற்றுள்ளது ..அந்த வகையில் தியாக தீபம் திலீபன் அவர்களுடைய 03ம் நாளிலேயே சம்பவம் நடந்தேறியுள்ளது
இலங்கையில் சீனாவின் அபிவிருத்தி திட்டங்கள் பல இடம்பெற்று வருகின்றது யாவரும் அறிந்ததே. சீனாவின் அபிவிருத்தி

திட்டத்திற்காக கல் உடைப்பதற்கு பல டைனமைட் வெடிபெருட்கள் ஒரு பாரிய கொள்கலனில் கொண்டுவரப்பட்டு, அது கரடியனாறு
பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக வைத்து வேறு ஒரு பாரஊர்திக்கு மாற்றப்பட்டுக்கொண்டு இருந்தவேளையே இக் குண்டுவெடிப்பு
நிகழ்ந்துள்ளது. 2 சீனர்கள் உட்பட சுமார் 60 பொலிசார் இறந்துள்ளதாக,மேலும் 60 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக  செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த டைனமைட் குண்டுகள் சி 4 வகை அல்ல அது இலகுவில் வெடிக்க. அவை பற்றவைத்தாலே வெடிக்கும். இந்நிலையில் இக் குண்டுவெடிப்புக்கும் இந்தியாவின் உளவுத்துறைக்கும் சம்பந்தம்
இருக்கலாம் என அறியப்படுகிறது. இலங்கையில் சீனாவின் அபிவிருத்தித் திட்டங்கள் மிக ஆபத்தானவை எனக் காட்டவே இவ்வாறு
ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது. அத்தோடு சில தினங்களுக்கு முன்னர் 2 இந்திய ரோ அதிகாரிகளை இலங்கை நாடு
கடத்தியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் பெருகிவரும் நிலையில், சீனாவினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களை தவிடுபொடியாக்கவும், அதன் ஆதிக்கத்தை இலங்கையில் குறைக்கவும், மற்றும் போர் ஓய்ந்துள்ள நிலையில் சுமார் 60 பொலிசார் மரணமடைந்திருப்பதும் பெரும் நெருக்கடியைத் தோற்றுவிக்கும். சிங்கள மக்கள் சீனாமேல் அதிருப்தியடைந்துள்ளனர்.
பெருந்தெருக்கள் வேலைக்கான கல்லுடைத்தல், பாறையகழ்தல் வேலைகளிற்கான மேற்படி டைனமற் நிரப்பப்பட்ட இரண்டு

கொள்கலன்களும் பாதுகாப்புக் காரணங்களிற்காக பொலிஸ் நிலைய வளவிற்குள்ளேயே நிரந்தரமாக வைக்கப்பட்டிருந்தன என்றும்
மேற்படி சீன நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தினமும் தங்களிற்கு தேவையான அளவு வெடிமருந்தை மேற்படி கொள்கலன்களிலிருந்து
பெறுவார்கள் என்றும்,அதே போன்று இன்று தமக்கு தேவையான டைனமற்றை எடுத்துக் கொண்டு கல்குவாரிக்குச் செல்வதற்காக வருகை தந்த மேற்படி
சீன நிறுவனத்தினர் டைனமற்றை தங்களின் வாகனத்திற்கு மாற்றிக் கொண்டிருந்த போதே இவ் விபத்து ஏற்பட்டதாகவும், தொடர்ந்து
அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று கொள்கலன்களும் வெடித்துச் சிதறியதாகவும் தெரியவருகிறது.

வியாழன், 16 செப்டம்பர், 2010

இராணுவ உறவைப் பலப்படுத்த சீனா-இலங்கை அரசு தீர்மானம்!

இராணுவ உறவுகளைப் பலப்படுத்துவதற்கு சீனாவும் இலங்கையும்  இணங்கியுள்ளன. இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் (பி.எல்.ஏ) பிரதம பொது அதிகாரிகளின் தளபதி சென்பிங்டேவுக்கும் இடையிலான சந்திப்பின்போது இது குறித்து கலந்துரையாடப்பட்டது.

கிழக்கில் வெள்ளை வான் கடத்தல் சம்பவங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன.

ஒருவர் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டவர் மட்டக்களப்பு, திருச்செந்தூரைச் சேர்ந்த முனுசாமி நரேந்திரன் (வயது  30) எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.வாகனமொன்றில் வீட்டுக்கு வந்தவர்கள் இவரை வெளியே அழைத்துச் சென்று பலவந்தமாக வானில் தூக்கிப் போட்டுச் சென்றுள்ளனர் என  பொலிஸ் நிலையத்திலும், கடத்தப்பட்வரின் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.அண்மையில் மட்டக்களப்பு மாநகரசபை யின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் பிரகாசம் சகாயமணி கடத்தப் பட்டமையும்,  கணவரை விடுதலை செய்யாவிட்டால் தானும் குழந்தைகளும் மாநகரசபை முன்னால் தீக்குளிப்பர் என அவரது மனைவி அறிவித்திருந்தமையும் தெரிந்ததே.

திலீபனுடன் மூன்றாம் நாள் 17-09-1987

காலை ஆறு மணிக்குத் துயில் எழும்பிய திலீபனின் முகத்தைப் பார்த்த எனக்கு, ஓரு கணம் அதிர்ச்சியாயிருந்தது. காரணம் அவரின் உதடுகள் இரண்டும் பாளம்பாளமாக வெடித்து வெளிறிப்போயிருந்தன.கண்கள் நேற்றைக்கு இருந்ததைவிட இன்னும் சற்று உள்ளேபோயிருப்பது போல் தோன்றியது...... முகம் வரண்டு, காய்ந்து கிடந்தது, தலை குழம்பியிருந்தது "பல் விளக்கி முகம் கழுவவில்லையோ?" "இல்லை வாஞ்சியண்ணை... வேண்டாம்." கலைந்திருந்த தலைமயிரை நானே அவரருகில் சென்று வாரி விடுகிறேன். அவர் இன்னும் சிறுநீர் கழிக்கவில்லை. "வெளிக்குப் போகேல்லையோ?" என்று மெதுவாகக் கேட்கிறேன். "போகவேணும் போலதான் இருக்கு." "சரி கீழே இறங்கி வாருங்கோ" என்று கூறிவிட்டு, மேடையை விட்டு நானே முதலில் இறங்கி, கீழே இறங்குவதற்கு உதவி செய்ய முயன்றேன். "வேண்டாம் விடுங்கோ......நானே வருகின்றேன்" என்று என் கையை விலக்கிவிட்டு தானே கீழே குதிக்கின்றார்.