ஞாயிறு, 28 நவம்பர், 2010

டக்ளஸ் - மாவை இணைந்து செயற்படத் தயார் ! மாவை தெரிவிப்பு

13 வது திருத்தச் சட்டத்தை அமுல் படுத்தி அதன் மூலம் எமது மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் இணைந்து செயற்பட நாமும் தயாராகவுள்ளோம் என்றும் மாவை. சேனாதிராஜா மேலும் தெரிவித்தார். மீள்குடியேற்றத்திற்கு தயாராகவுள்ள பகுதிகளில் மீளக்குடியேறவுள்ள மக்களுடனான சந்திப்பு கீரிமலை நகுலேஸ்வரக் கோயில் முன்றலில் நடைபெற்ற மக்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவத்துள்ளார்.

வெள்ளி, 26 நவம்பர், 2010

இன்று தமிழீழ மாவீரர் நாள் ,

கடைசிக்கணம் வரை தமிழ் ஈழமே தாகம் என விலைமதிப்பற்ற தம் உயிரை தியாகம் செய்த நமது மாவீரர்களை நினைவு கூரும் இந்தப்புனிதநாளில், எதிரிகளின் நயவஞ்சக செயற்பாடுகளை உதாசீனப்படுத்தி தேசியவிடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்டுள்ள அடுத்தகட்ட நகர்வான அதிஉச்ச இராஜ தந்திர  நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கி முடிந்தவரை நாம் தமிழர்களாக தலைநிமிர்ந்து நிற்போம்!

இன்று தமிழீழ மாவீரர் நாள் ,

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள் காலத்தின் குறிப்பேட்டில் கால் பதித்துச்செல்பவர்கள் சாவு அவர்களைத் தீண்டுவதில்லை அவர்கள் காலத்தின் காவியமாக எமது தேசத்தின் ஆன்மாவில் காலமெல்லாம் நிலைத்திருப்பவர்கள்

இன்று தமிழீழ மாவீரர் நாள் ,

விடுதலை வேண்டிக்களமாடி வீழ்ந்த எமது வீரப்புதல்வர்களை நாம் எமது நினைவில் உயிர்ப்பித்துப் பூசிக்கும் நன்நாள் . தமிழ் இனத்தின் தேசிய வாழ்வு நிலைப் பதற்காகத் தமது சொந்த வாழ்வை ஈகம்செய்த சுதந்திர வீரர்களுக்கு நாம் சிரந்தாழ்த்தி வணக்கம் செலுத்தும் புனித நாள் . எமது இனத்தின் இருப்பிற்காக , தமது இன்னுயிரை ஈகம் செய்த உன்னதமானவர்களை ,
எமது நெஞ்சத்தின் நினைவாலயத்தில் நாம் நினைவு கூரும் நன்நாள் .
விடுதலை என்பது வாழ்வின் அதியுயர்ந்த விழுமியம் .
அந்த விழுமியத்தை இலட்சியமாக வரித்து ,
அதற்காக வாழ்ந்து, அதற்காகப் போராடி ,
அதற்காக மடிந்த எமது மாவீரர்கள் மகத்தான மனிதப் பிறவிகள் .
அவர்களது வாழ்வும் வரலாறும் எமது வீர விடுதலைக் காவியத்தின் உயிர்வரிகள். மாவீரர்களே,
தமிழர் தேசம் உங்களுக்குத் தலைவணங்குகிறோம் .

முட்டாள்கள் சிங்களவர்களா? தமிழர்களா?

போர் நிறைவடைந்து சுமார் இரண்டு வருடங்களை எட்டுவதற்கிடையில் தமிழர்கள் படும் அவஸ்தை சொல்லிலடங்காது.

சிங்களவர்களின் ஆதிக்கம் குடாநாட்டில் அதிகரித்திருப்பதுடன், நிலவளம், கடல்வளம் என்பவற்றை அபகரித்தும் செல்கின்றனர், அத்துடன் வெளிநாட்டு பணத்தையும் வறுகுவதற்கு என பல தமிழ் ஏமாற்று பேர்வழிகள் அரசியல் பின்னனியில் செயற்பட்டுவருகின்றனர். இதற்கு சிங்கள கூட்டும் ஒருபுறம்.

கார்த்திகை பூ எடுத்து வாடா..!

கார்த்திகை பூ எடுத்து வாடா.!
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா...!




இனம் வாழ இவர் செய்தார் தியாகம்.!
இவர் எண்ணம் வாழ நாம் செய்வோம் யாகம்.!
உறவுகளுக்காய் உயிர் கொடுத்த உத்தமரே..!
மக்களின் துன்ப துயரங்களில் பங்குகொண்டு அவர்களின் சுமைகளை நாமும் தாங்கி அவர்களின் கஷ்டங்களைப் போக்குவதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை.

- வே.பிரபாகரன்

வியாழன், 25 நவம்பர், 2010

தேசியத்தலைவருக்கு எங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.........

நீங்களெங்கள் நெஞ்சமதை வென்றீர்,வாழ்கின்றீர்..


தாய் நிலத்தின்மீது தளராத காதலுடன் நின்றீர்,நெருப்பானீர்
நீங்களெங்கள் நெஞ்சமதை வென்றீர்,வாழ்கின்றீர்
கருகற்பொழுதினிலே சென்று விடிவானம் தெரிவதற்குள்
உயிரைக்கருகாக்கி களத்திலே காவியமானீர்
உங்கள் கனவுகள் என்றுமே அழியாது,
எம் மக்களின் விடுதலைக்காய் என்றும் நீங்கள்
எங்களுடன் நிற்பீர்கள்!!!

அளவெடுக்கமுடியாத அக்கினியின் நாவுகளே!!!!.....

எம்மாலே அளவெடுக்கமுடியாத அக்கினியின் நாவுகளே
எதிரியவன் யுத்தமுறைமையினை அழித்து
புதிய வரமொன்றின் போர்வடிவமானீரே
தொட்டுணர முடியாத சோதிப்பொருளாகி
கற்பனைக்கு அப்பாலும் கடந்த வியாபகமாய்
அற்புதத்தில் அற்புதமாய் ஆன அதிசயங்கள் - நீங்கள்

தேசியத்தலைவருக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்...........

வல்லரசுகளே வியந்தவனே. !!!
வரலாறு போற்றும் உன்னை. - எம்
வாழ்வில் வந்த சூரியனே.!!!  - நீ
வந்தாலே விடியும் காலை.
வள்ளலே உன்னை வாழ்த்த
வார்த்தைகள் போதவில்லை.

புதன், 24 நவம்பர், 2010

இதயத்தில் நீக்கமறவெங்கும் நிறைந்த விடுதலைத்தீ

வந்தெம் மண்தொட்டு வளைப்போன் எவனெனினும்
கந்தகக் கணைகள் கருக்குமெனக் கூறி நடுநடுங்க வைத்தவரே
உங்களுக்கு எம் தேசம் என்றும் தலைவணங்கும்
எமையடக்கும் எதிரியவன் கதைமுடித்து
எய்யும் கணைகளுக்கே இலக்காகி பணிமுடித்தீர்
கொடியவனை வீழ்த்த வெடிசுமந்து சென்றாலும்
இதயத்தில் நீக்கமறவெங்கும் நிறைந்த விடுதலைத்தீ. நீங்கள்

ஈரவிழிகள் சொரிய உங்கள் நினைவுகளோடு.............

விண்ணிலம் பூத்த விரிகடளாய்
மரமசைத்த பண்பாடும் தென்றற் பசும்காற்றாய்
இந்த யுகத்தில் தோன்றும் ஊழித்தீச்சுடராய் பேரிடியாய்
வேண்டும் பொழுததிரும் வெடியாய்-எம்மண்ணில்
வீரமுரைக்க விளைந்த புலிகள்
ஈரவிழிகள் சொரிய  உங்கள் நினைவுகளோடு
விளக்கேற்றிவைத்து விம்முகிறோம்

திங்கள், 22 நவம்பர், 2010

வேங்கைகளே!!!!

 விண் வரும் மேகங்கள் பாடும் மாவீரரின் நாமங்கள் கூறும்
 கண் வெளி கங்கைகள் பாயும் இவர் காவிய நாயகர் ஆகும்.
 புதைந்த குழியில் இருந்து நீங்கள் எழுந்து வாருங்கள்!!!
 எரிந்த இடத்தில இருந்து நீங்கள் நிமிர்ந்து வாருங்கள்!!!.
 வேங்கைகள் ஆகி விடிவுகள் தேடி விழுந்த வீரர்களே!!!
 தமிழ் வீடுகள் யாவிலும் விளக்குகள் ஆக எரியும் சுடர்களே!!!
 இளமைக்கால இனிமைகள் யாவும் திறந்த வேங்கைகளே!!!!
 தமிழ் இனத்திற்காக இரந்து தீயில் எரிந்த வீரர்களே...

கார்த்திகை பூவே!!!

கார்த்திகை பூவே!!! கார்த்திகை பூவே!!! கல்லறை மடியினில் மலர்ந்து விடு. கன்னங்கள் சிவக்கும் செவ்வந்திப் பூவே சில்லென்று குளிர்ச்சியை பொழிந்து விடு அழகாக பூக்கும் புது ரோஜாப் பூவே தனியாக வீரர்களின் புகழ் பாடு மனசெங்கும் வாசம் தரும் முல்லைப் பூவே துயில்கின்ற வீரர்களை தாலாட்டு மல்லிகைப் பூச் சிரிப்புடன் தங்கள் உயிர் பூவைத் தந்த வீரருக்கு எந்தப் பூவும் இணை இல்லையே.....

வெள்ளி, 19 நவம்பர், 2010

உயிர் விலைகள்..

விடுதலையின் பிரசவிப்பிற்காய்
வடுக்களை ஏற்றாய்
வசந்தத்தை தொலைத்து
வடிவிழந்து கிடக்கிறாய்
துடிக்கிறது மனசு

பாதகர் கால்கள்
பதிகிறது உன்னில்
வெஞ்சினம் கொள்வாய்
வேதனை வேண்டாம்
தேற்றிடு மனதை.

நீதிக்கான யுத்தம்
அர்த்தமற்றுப்போகுமா.....?
நிறைந்து கிடக்கும் வரலாறு
மறைந்திடுமா..........?
கொடுதலை என்னும்
நிலை வந்த போதும்
விடுதலை நிலை மாறா
தலைவன்............
உயிர் நீக்கத்தயங்காத
உத்தமர்கள்........
குடும்பச் சுமையோடு
விடுதலைச் சுமையை
முழுதாய்ச் சுமந்த மக்கள்.......
குடும்பமே எல்லையில் நின்று
கடுங்சமர் புரிந்த வரலாறு.......

இப்படி இப்படி
எத்தனையோ சுமந்தாய்
எல்லாமே அழிந்துபோகுமா.....?
உன் தேகமெங்கும்
திட்டுத்திட்டாய்
கொட்டுண்டு கிடக்கிறது
உயிர் விலைகள்
அத்தனையும் வீணாகிப்போய் விடுமா?

கிட்ட நின்று
எட்டிப்பார்த்தோம்
தொட்டிடத்தான் முடியவில்லை
ஆனாலும்.........
பாதைகள் மாறலாம்
உனக்கான
பயணம் ஓய்ந்திடுமா........????

வெள்ளி, 12 நவம்பர், 2010

மாரி மழை பொழியும்,
மண் கசியும், ஊர்முழுதும்.
வாரியடித்து வெள்ளம் வான்பாயும்,
கார்த்திகையில் பூமி சிலிர்த்துப்போய் பேறடையும்,.
துயிலுமில்ல சாமிகளுக்கான சந்தன நாள் வந்தடையும்.
மாவீர செல்வங்கள் மண் கிழித்து வெளிவந்து
சாவீரச்செய்தி சாற்றி உறவுரைத்து பேசும் நாள்.
விழியில் பொலபொலன்று நீர்த்தாரை வீசும் நாள்.
தமிழீழம் விடியும் என நம்பி பாடும் நாள்.
விதைத்த பயிர்கள் நிமிர்ந்தழகாய் கூடும் நாள்.
குன்றி குரல் நடுங்கி குற்றவேல் செய்த இனம்
இன்றிந்த நிமிர்வுக்கு இட்டமுதல் விதைப்பு.
சாவைக்கொடுத்தேனும் தமிழ்வாழ்வு என நிமிர்ந்து
பேசும்படியான புதுவாழ்வின் புலர்வுதினம்.
கார்த்திகை மாதமும் வந்துவிட்டதே எம் கண்மணிகள் துயில் எழுந்து பார்க்கப் போகின்றார்களே !! என் தாய் வந்து என்னை அணைக்கும் என்று அவர்களுக்குத் தெரியுமா? தாங்கள் துயில் எழும் கார்த்திகை நாளில் அவர்கள் விதானம் கூட களையப்பட்டுவிட்டதென்று......!!! ஆனாலும் எங்கள் மன விதான‌ங்களில் என்றென்றும் இருப்பார்கள். எவராலும் அசைக்கமுடியாத இடம் அது.......

வியாழன், 11 நவம்பர், 2010

9ம் ஆண்டு நினைவு வீரவணக்கங்கள்

யாழ். தச்சன்தோப்புப் பகுதியில் சிறிலங்கா கடற்படையினருடனான எதிர்பாராத மோதில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் கேணல் சிவநேசன், கப்டன் பருதியப்பன், கப்டன் தூயோன்ஆகிய மாவீரர்களின் 9ம் ஆண்டு நினைவு வீரவணக்கங்கள்

புதன், 10 நவம்பர், 2010

கழுத்தில் கட்டப்பட்டிருந்த சயனைட் குப்பிகளில்
இறுதி வார்த்தைகளை அவர் நிரப்பி விட்டுப் போயிருக்கிறார்கள்
கையில் இலக்கத்தகடுகள் கட்டிய கறுப்பு கயிறுகளில்
இருந்த முடிச்சுக்களினிடையில் துயர்க் காலம் படிந்திருக்கிறது
வரிச்சீருடையின் காற்சட்டை மட்டும்
அணிந்திருக்கும் இரண்டு எலும்புக்கூடுகளில்
அழிக்கப்பட்ட தாய்நிலத்தின் வரைபடம் கீறப்பட்டிருக்கிறது

எங்களுக்காகத் தங்களைக் களப்பலியாக்கிய மாவீரர் தினத்தைக் கேள்விக்குள்ளாக்கும் எவரும் நிச்சயம் எம்மவர்களாக இருக்க முடியாது. மாவீரர்களது தியாகத்தைத் தமக்கான அடையாளப்படுத்தலுக்கும், தமது சுய லாபத்திற்கும் பயன்படுத்த நினைக்கும் எவரும் தமிழனாகப் பிறந்திருக்க முடியாது..காலம் உங்களுக்கு வழங்கிய கடமைகளை நேர்மையான பாதையில் நின்ற...ு நிறைவேற்றுங்கள். மாவீரர்கள் தங்களது உயிரை அர்ப்பணித்து உயர்த்திப் பிடித்த தமிழீழ இலட்சிய நெருப்பை நீங்களும் கைகளில் ஏந்துங்கள். அவர்கள் கல்லறைகளில் உங்கள் கண்ணீரையும் காணிக்கையாக்குங்கள். மாவீரர் நாளில் ஆயிரம் ஆயிரமாகத் திரளும் தமிழ் மக்களுடன் நீங்களும் விளக்கேற்றி சத்தியம் செய்யுங்கள். ‘தமிழீழ இலட்சியம் நோக்கிய பாதையில் நாங்கள் எல்லோரும் ஒன்றாகஎழுவோம்’

ஒவ்வொரு தமிழனின் கடின உழைப்பில்தான் தங்கியுள்ளது ஈழத்தமிழரின் கையில் தமிழீழம் கிடைப்பது.!!!!

* மே 18க்கு முன் தழிழீழ விடுதலைப்போராட்டம் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தலைமையில் வீரத்தோடும் விவேகத்தோடும் களத்தில் நின்று போரடியது. ஆனால் மே18க்குப் பிறகு.... * தமிழீழ மண்ணில் ஈழத்தமிழர் படும் துயரத்தில் பங்கு கொள்ள புலம்பெயர் உறவுகள் சிலர் துடித்தநிலையில் தலைமைத்துவத்திற்காகப் போட்டி போட்டுக்கொண்டார்கள், சில பேராசை பேர்வழிகள்.....


* பெரியளவில் புலம்பெயர் மக்களின் பணத்தைச் சுருட்டியவர்கள் தலைமைத்துவத்திற்குச் சண்டையிடட்டும் நாம் ஏதோ சின்ன அளவில் முயல்வோம் என நேற்று முளைத்த சில காளான்கள்....

ஞாயிறு, 7 நவம்பர், 2010

மாவீரர்கள்..!!!

இவர்கள்
வைராக்கிய விருட்சத்தின்
விழுதுகள்!
ஏகாதிபத்தியத்தை ஏப்பம் விட்ட
அக்கினிக் குஞ்சுகள்!
குறைப் பிரசவங்களுக்கும்
கருச்சிதைவுகளுக்கும் மத்தியில்
பூரணமானவர்கள்
சூறாவளியினாலும் புயற் காற்றினாலும்
அசைக்க முடியாது போன
ஆலமரங்கள் !

ஈழத்தமிழா இனியாவது திருப்பிப்போடு தீபாவளியை ....

நேற்றய போராளி அரக்கனாக்கப்பட்டான் தீபாவளி வந்தது… இன்றய போராளி பயங்கரவாதியாக்கப்பட்டான்.. இனி என்ன வரும்…


அன்பான ஈழத்தமிழா தீபாவளி வாழ்த்துக்கள் கூறத்தொடங்கிவிட்டாயா நீ வாழ்க.. உனக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்..

செவ்வாய், 2 நவம்பர், 2010

வரலாறாய் வாழும் தமிழ்ச்செல்வன் – ச.பொட்டு

பிரிகேடியரின் இருபத்துமூன்றாண்டு கால விடுதலைப் பணியை எதிர்காலத்தில் ஆய்வு செய்கின்ற எந்தவொரு வரலாற்றாசிரியரும் அவருடைய விடுதலைப் பணியை பல்துறைகளினூடாகவும் ஆய்வு செய்யவேண்டியிருக்கும்.
ஏனெனில் அவருடைய விடுதலைப் பணியானது இரு கூறுகளாக நோக்கத் தக்கதாகவுள்ளது.
1. அரசியல் ரீதியிலானது.
2. படைத்துறை ரீதியிலானது.

1984 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராளியாக இணைந்து கொண்ட அவர் அமைப்பின் ஆரம்பகால வளர்ச்சியில் முழுமையாக ஈடுபட்டுள்ளார்.ஆரம்பத்தில் போராட்டத்தின் பின் தளமாக தமிழ்நாடு இருந்தபோது தமிழ்நாட்டில் ஒரு மருத்துவப் போராளியாக செயற்பட்ட அவர் பின்னர் களத்திற்கும், தளத்திற்குமிடையே தேசியத் தலைவர் அவர்களுக்கான இணைப்புச் செயற்பாட்டாளராக செயற்பட்டதன் மூலமாக அவரது ஆளுமை அன்றே தேசியத் தலைவர் அவர்களால் இனங்காணப்பட்டுள்ளதுடன் முதன்மையானதாகவுமிருந்துள்ளது.

திங்கள், 1 நவம்பர், 2010

நினைவு வீரவணக்கம்.

கப்டன் பிரான்சிஸ்

1948 இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து எந்த சிங்கள அரசு பதவிக்கு வந்தாலும் அந்த அரசின் பதவிக்காலத்திலும் பதவிக்காலத்தின் முடிவிலும் தமிழ் மக்கள் உரிமைகளில் ஏதோ ஒன்றை அவர்கள் இழந்துபோய் இருப்பார்கள். இவ்வாறு 48 இல் இருந்து ஒடுக்கப்பட்டுக் கொண்டிருந்த தமிழினம் தமிழ் அரசியல்வாதிகளின் கையாலாகாத்தனங்களை உணர்ந்து தன்னை சுதாகரித்து 1972 க்குப் பின்னர் தமிழ் இளைஞர்கள் மனங்களில் சிங்களத்துக்கு எதிராக போராட வேண்டும் என்ற உணர்வுகள் மேலோங்க தொடங்கியபோது ஆயுதப் போராட்டமே அதற்கான வழியென பல விடுதலை இயக்கங்கள் சிங்களத்துக்கு எதிராக போராடப் புறப்பட்டன .
சிங்களத்தின் திட்டமிட்ட குடியேற்றங்களினாலும் இன ஒடுக்கலாலும் மேலும் பாதிக்கப்பட்ட தென்தமிழீழமக்களும் தமிழ் மக்களின் விடுதலைக்கான தேவை மிக உணர்ந்து தம்மை பல இயக்கங்களில் இணைக்கத் தொடங்கினார்கள் . இவ்வாறு ஒரு ஆயுதப் போராட்டமே தமிழ் மக்களின் இருப்பை இலங்கையில் உறுதிபடுத்தும் என எண்ணிய சடாச்சரபவனும் 1983 இல் இயக்கத்தில் இணைய முடிவெடுக்கிறார் .