இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
புதன், 3 பிப்ரவரி, 2010
சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க 55 நாடுகள் உறுதிமொழி: ஐ.நா.
உலக சுற்றுச்சூழல் மாசுபாடை தடுப்பதற்காக 2050 ஆண்டுக்குள் 78 சதவீத கரியமில வாயு வெளியேற்றத்தை குறைப்பதாக 55 நாடுகள் ஐ.நாவிற்கு உறுதிமொழி அளித்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. மேலும் உலகச் சுற்றுச்சூழல் மாசுபாட்டில் பெரும் அங்கு வகிக்கும் அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியா 17 சதவீத கரியமிலவாயு வெளியேற்றத்தை குறைத்துக்கொள்வதாக ஏற்கனவே உறுதியளித்துள்ளது. மீண்டும் அந்த நாடுகள் உறுதியளித்தது. கோபன்ஹேகன் மாநாட்டில் உலக தலைவர்களுக்கிடையில் நடந்த பேச்சு வார்த்தைக்கு பின் இந்த உறுதி மொழி எடுக்கப்பட்டுள்ளது. ஐ.நா இதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது
அன்பார்ந்த சிலோன் தமிழ் மக்க(ர்க)ளே
..என்னாடா இது ஈழத்தமிர் எண்டும் எழுதாமல் சிறீலங்கா தமிழர் எண்டும் எழுதாமல் சிலோன் தமிழர் எண்டு எழுதிறனெண்டு யோசிக்க வேண்டாம்..அது ஏனெண்டால்..சிறீ லங்கா என்கிற சேத்தில் இன்னமும் வாழுகின்ற முட்டாள் தமிழர்கள் நீங்கள்..வெளிநாடுகளில் அந்தந்ந நாட்டு குடியுரிமையையோ அகதி அந்தஸ்த்தையோ வாங்கி வைத்துவிட்டு ஈழத்தமிழர் என்று பெருமை பேசுகிறவர்கள் நாங்கள்..எனவே உங்களை நான் சிறீலங்கா தமிழர் என்று அழைத்தால் நான் இங்கு துரோகியாகி விடுவேன். உயிரிற்கு உத்தரவாம் உண்டு .அதே போல நீங்கள் உங்களை ஈழத் தமிழர் என்றழைத்தால் உங்கள் உயிரிற்கு உத்தரவாம் இருக்குமா என்பது சந்தேகமே. .எனவேதான் பொதுவாக ஒரு காலத்தில் வெள்ளைக்காரன் ஆட்சியிலும்..பின்னர் 70கள் வரை சிலோன் தமிழர் என்று சொல்லிக் கொண்டு வெள்ளைக்காரன் காலை தடவி கல்வியை பெற்றுக்கொண்டு சிங்களவனை மடையன் என்றும் ..மட்டக்களப்பாரை மந்திரம் செய்யிறவங்கள் எண்டும்.வன்னி மக்களை காட்டான்கள் என்றும்.. மலையகத்தவரை வடக்கத்தையாணென்டும்.. அதே நேரம் உள்ஊரிலே பல்வேறு சாதிகளின் பிரிவினைகளிற்குள்ளும் என்னை முதன்மையானவனாக காட்டிக்கொண்டு புலம் பெயர் தேசத்தில் ஒரு புத்தி ஜீவியான யாழ்ப்பாணத்தான் நான் சொல்வது என்னவெனில்..
பிழைக்கத் தெரியாத புறம்போக்குகள்தான் இனியும் வன்னியில் வாழ்வார்கள்..முப்பத்தைஞ்சு லச்சத்துக்கும் மேலான தமிழ்மக்களிற்கு வன்னியிலையிருந்த வெறும் மூண்டு லச்சம் மக்கள் உங்களை பலி குடுத்தாவது தமிழீழத்தை எடுத்திடலாமெண்டு கனவுகண்டம்..அந்த கனவை நீங்கள் கலைச்சுப் போட்டியள்..நாங்கள் உங்களிற்கு என்ன குறை விட்டம்..ஆனையிறவு விழுந்த கையோடையே 50 யுரோவை இயக்கத்திற்கு குடுத்துப் போட்டு அரைப் போத்தல் வி்ஸ்கியை யையும் அடிச்சுப்போட்டு விசிலடிச்து மகிழ்ந்தனாங்கள்..அடுத்ததாய்யாழ்ப்பாணமும் பிடிக்கவேணுமெண்டுதானே காசை காசெண்டும் பாராமல் ஆயிரம் இண்டாயிரம் எண்டு வட்டிக்கும் கிரெடிட்டும் எடுத்து குடுத்தனாங்கள்...இப்ப அந்த வட்டி கட்டேலாமல் நாங்கள் ஓடித்திரியிறம்..ஆனால் அதை வாங்கினவை AUDI காரிலை ஓடித்திரியினம் எண்டிறது வேறை கதை...இப்பிடியெல்லாம் செய்து போட்டு யாழ்ப்பாணம் விழேக்குள்ளை அடிக்கிறதுக்கெண்டு விலை கூடின சிவாஸ்..விஸ்க்கியையும் வாங்கி வைச்சிட்டு..கிளாலியிலை அடி தொடங்கேக்குள்ளை கிளாசை கழுவினால் கெக்குவில் கோண்டாவில் தாண்டேக்குள்ளை கோழிப் பொரியல் ..பலாலி விழேக்குள்ளை பாதிப் போத்தல் முடிஞ்சிடும்..காரைநகர் கடற்படைத்தளம் அடிக்கேக்குள்ளை கோமாவுக்கு போனால் காத்தாலை எழும்பி தலையிடியோடை தமிழ் தேசிய ஊடகங்களை பாத்தால் யாழ்ப்பாணம் விழுந்திட்டுது தமிழீழம் கிடைச்சிட்டுதெண்டு ( எங்களிற்கு யாழ்ப்பாணம் மட்டும்தானே தமிழீழம்)செய்தியள் வருமெண்டு நாங்கள் போட்டு வைச்சிருந்த திட்டமெல்லாம் அடிச்ச தண்ணி மாதிரியே முறிஞ்சு போச்சுது..ஆனாலும் என்ன செய்ய வாங்கி வைச்சிருந்த விலை கூடின சிவாசை முள்ளி வாய்க்கால் முடிஞ்ச கவலையை நினைச்சு அடிச்சாச்சு..வாங்கின போத்தல் வீண் போகேல்லை.. இப்பிடியே எங்களை நீங்கள் பேக்காட்டி போட்டீங்கள்..பரவாயில்லை ஆனால் இனியாவது நீங்கள் எங்கடை ஆக்கினையளிற்கு ஆளாகாமல் நிம்மதியாய் இருந்கிறதெண்டால் என்னாலை முடிஞ்ச சில யோசனையளை மட்டும்தான் சொல்ல முடியும்..
ஆலோசனை 1)
ஒட்டுமொத்தமாக நீங்கள் எல்லாரும் வெளிநாடுகளிற்கு அகதியாய் வந்து குடியேறுங்கோ.பிரச்சனை தீர்ந்திடும்..அதுக்கு உங்களிட்டை பணவசதி இருக்காது எனவே
ஆலோசனை 2)
நீங்கள் திரும்பவும் வட்டுக் கோட்டையிலையோ அல்லது அதுக்கடுத்த அராலியிலையோ ஒரு மேடையை போட்டு இரண்டு தீர்மானங்களை நிறைவேத்தலாம்..
தீர்மாம் 1)
புலம்பெயர் தமிழ் மக்களே எங்கள் எதிர் காலத்தை நாங்களே தீர்மானிக்கிறம்..எங்கடை வாழ்க்கையை நாங்களே பாக்கிறம்..எங்களிற்கு எது தேவையோ அதை நாங்களே தீர்மானிக்கிறம் எனவே நீங்கள் பொத்திக்கொண்டிருங்கோ..முடிஞ்சால் உதவி செய்யுங்கோ உபத்திரவம் தராதையுங்கோ
தீர்மானம் 2)
புலம் பெயர் தமிழ் மக்களே வட்டுக் கோட்டை தீர்மானத்துக்கு வாக்கெடுப்பு நடத்தாமல் புலம்பெயர் தமிழர்கள் அனைத்து நாடுகளிலிருந்தும் அனைத்து தமிழர்களும் அந்ததந்த நாட்டு குடியுமை வைச்சிருக்கிறவை உட்பட அனைவருமே உடனடியாக ஊருக்கு திரும்புங்கோ அல்லது திருப்பியனுப்பும்படி அந்தந்த நாடுகளை கேட்டுக்கொள்கிறோம். எல்லாரும் வாருங்கள் இஞ்சையிருந்து போராடுவம் என்று இரண்டு தீர்மானத்தை நிறைவேத்துங்கோ ….
.கப் சிப்..சத்தம் வாராது
அப்பிடியும் சின்ன சத்தம் ஏதாவது வந்தால் நீங்கள் நிறைவேத்தின தீர்மானத்தை வடக்கு கிழக்கு எல்லா ஊரிலையும் மறுவாக்கெடுப்பு நடந்துங்கோ..வாக்கெடுப்பிலை எத்தினை ஓட்டு விழுகிறதெண்டெல்லாம் கவலை வேண்டாம்..வாக்கெடுப்பிலை 99.9 வீத வாக்குகளால் வெற்றி எண்டொரு அறிக்கையையும் விட்டுப்பாருங்கோ..அதுக்கு பிறகு நாங்கள் உங்களைப்பற்றி வாயே திறக்கமாட்டம்...அதே நேரம் இஞ்சை சும்மாயும் இருக்கமாட்டம்..இருக்கிறார் எண்டும் இல்லையெண்டும் கட்டுரையள் வந்துகொண்டிருந்தாலும்..அவர் இருந்த காலத்திலை அவரை முருகன் எண்டனாங்கள் இப்ப அவரை யேசுநாதராக்கிப் போட்டம்...இனி அல்லே லூயா என்றபடி அதைவைச்சு பாட்டெழுதி சிடி அடிச்சசு விக்கிற திட்டத்திலை இருக்கிறம்..பல்லாயிரம் சிடி வித்தோ..கரப்பட்டு கலண்டர் வித்தோ புலத்திலை தேசியத்தை வாடவிடாமல் வளர்த்துக்கொண்டுதான்இருப்பம்..
கடிதத்தை முடிக்க முதல் கடைசியாய் ஒரு விசயம்.. எங்களுக்கு முல்லைத் தீவு முத்தையன் கட்டிலை 3 ஏக்கர் காணி இருந்தது (சிறிமா காலத்திலை கள்ள உறுதி முடிச்சதுதான்) அதுகளின்ரை எல்லை கல் இப்ப இருக்கோ இல்லையோ தெரியாது..அதை பாக்கிறதுக்கு இந்த சமர் லீவுக்கு சிறீலங்கா வாறதுக்கு ஏயார் லங்காவிலை றிக்கெற்போட்டு வைச்சிருக்கிறன்..ஒரு கஸ்ரமும் இல்லாமல் கட்டுநாயக்காவை விட்டு வெளியேனால் கதிர் காமகந்தனிட்டை போய் மொட்டையடிக்கிறதாய் வேண்டுதல் வைச்சிருக்கிறன்..மொட்டையடிக்கிறதுக்கு என்ரை மண்டையிலை மயிர் இல்லை அதாலை எனக்கு பதிலா உங்கை யாராவது மொட்டையடிக்க சம்மதித்தால் அவரிற்கு 50 தோ 100 அவரின் மண்டையின் அளவைப்பார்த்துத் தராலம்..
நாங்கள் ஒதுங்கியிருந்தா நாட்டை காக்குறது ஆர்?
கதிர்கள் அறுத்த வயல்வெளி,தேங்கி நிற்கும் மழைதுளிகளில் தெரிகிறது வானம். நாரைகள் நடைபயில காளைகள் வீறு நடைபோட்டன. கலப்பையும் கையுமாக வயலில் பிரசாத். தம்பி டேய் .. உன்ட தங்கச்சி பெரியபிள்ளையாயிட்டாளாம். வரம்பில் நின்று பசுபதி உரத்து சொன்னார். அப்பிடியா ..? பிரசாத்துக்கு மகிழ்ச்சி. டே...சிவலை நீதான் குழப்படி. நான் வரும் வரை இதிலே நிற்கவேணும். என்ன கறுப்பா பார்க்கிறாய்? நீ நல்ல பெடியன். அண்ண போயிட்டு வாறன். இரு மாடுகளையும் பார்த்து சொல்லிவிட்டு வீடு செல்கிறான். தந்தை குடிகாரன். தாய் இல்லை.ஆனாலும் அம்மாவி்ன் இடத்தை நிரப்ப அங்கே பலர் இருந்தனர். மல்லாவி மலர் அக்கா. மாங்குளம் மணியம் சித்தி,அக்கராயன் அன்னம் ஆச்சி,வன்னேரி வதனம் மாமி, இவர்கள் எல்லோரும் இடம்பெயர்ந்து வந்தவர்கள். பிரசாத்தின் காணியில் குடும்பம் குடும்பமாக கொட்டில் அமைத்து குடி இருக்கின்றனர். பிரசாத் வருகிறான். வேப்பம் குழை வாசலில். தந்தை கள்ளுப்போத்தலோடு முற்றத்தில். அங்கு மாறி இங்கு மாறி வதனம் மாமி ஓடித்திரிகிறாள். கால்முகம் கழுவி வாசற்படி மிதிக்கிறான். பொங்கல் பானை அடுப்பில். அடுப்படியில் அன்னம் ஆச்சி. ஓலைப்பாயில் ஒதுக்குப்புறமாக தங்கச்சி. வெள்ளை துணியால் முக்காடு. பக்கத்தில் வருகிறான். வெற்றிலை பாக்கு நெல்லுடன் ஆயிரத்து ஒரு ரூபா அண்ணனின் கைவிசேடம். தலைதொட்டு ஆசிர்வதித்தவன் சுவரில் மாட்டப்பட்டிருந்த தாயின் படத்தை பார்க்கிறான். ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அம்மா போல வருமா? நெஞ்சம் நெகிழ்கிறது.
* * *
பிரசாத் நில்லு நானும் வாறன். வழி மறித்த பசுபதி ஏறுகிறார் ஈருளியில். அவன் வேகமாக ஓட்டத்தொடங்கினான். கள்ளுத்தவறணை கடந்தது தம்பி..தம்பி..நிறுத்தடா.உனக்கு ஞாபகம் வரும் எண்டு நினைச்சன் வர இல்ல ஈருளி நின்றது. பிடரி சொரிந்தவாறு பிரசாத்தின் சட்டைபையை பார்க்கிறார். அண்ண..இதுதான் வேண்டாம் எண்டுறது. சாமத்திய வீட்டை சாட்டி வாங்கினியள்.அந்த கொண்டாட்டமும் முடிஞ்சுது. தம்பி..தம்பி என்னடா..?பதினொண்டுதானே கழிஞ்சது முப்பத்தொண்டு முடிய இல்லைதானே.அதுவரைக்கும் என்னோட சந்தோசத்தை பகிர்ந்து கொள்ளுமன். ச்ச..உயிரை வாங்கிறியள் அண்ண...இந்தாங்கோ நூறு ரூபா. எடுத்து அவரிடம் கொடுத்தான். சரி கண்ணா போயிட்டு வா செல்லம். சொன்ன பசுபதி தவறணை பக்கம் திரும்புகிறார்.பிரசாத்தின் ஈருருளி சூரியின் ஈருருளி திருத்தும் கடையை நோக்குகிறது.அங்கே அவர் துருப்பிடித்த சில்லுக்கு மண்ணெண்னை தடவிக்கொண்டிருந்தார். பிரசாத் இறங்காமல் வீதியில் நின்ற படியே என்ட சயிக்கிளும் கழவி பூட்டவேணும். எப்ப கொண்டு வரலாம். சூரிக்கு கதை சொன்னபடி அவரது வீட்டையும் காணியையும் அலசுகிறான். சோபா விழுந்த தென்னோலைகளை அடுக்கி கொண்ட நின்றாள். ஈருருளி மணிச்சத்தம். நிமிர்ந்து பார்க்கிறாள்.நேற்று குடுத்து விட்ட கடிதம் கிடைச்சதே..?பிரசாத் கைகளால் பேசினான். அவளுக்கு விளங்கவில்லை. அரை லூசு பொழுதுபட மாட்டுபட்டியடிக்கு வாறன். வா கதைப்பம். அவள் மீண்டும் என்ன..? என்று கையால் கேட்டாள். அந்த வேலிக்கரைக்கு போ.. நான் அதால வாறன். அவனது கைகளும் வாயும் மெளனமாக போராடியதை சூரி கண்டு விட்டார். என்ன தம்பி உங்க ஆரோட கதைக்கிறீர். அது வந்து .... தென்னையில் சோமு. பசுபதி அண்ண கள்ளுக்கு வாறதா சொல்லிவிட சொன்னவர் அதுதான்...பிரசாத் மழுப்பினான். அப்ப நாளைக்கு சையிக்கிள் கொண்டு வாறன். ஈருருளி இறக்கை விரி்த்தது.
* * *
அண்ண பயிரை பார்த்தியளே. சும்மா கலகலக்குது.வளர்பிறைக்கு தங்கச்சிமார் தலைகுனிவினம். பிரசாத் தனது வயலைப்பார்த்து பெருமிதம் அடைந்தான். பசுபதி விடுவாரா என்ன ? அட போடா. என்ட பெடிச்சியள்தான் முதல் வெட்கப்படுவாள்கள்...அவரும் அதற்கு மேலாக. இருவரும் பேசிக்கொள்ள இடையில் நின்ற காளைகள் இரண்டும் தலையசைத்து ஆமா போட்டன. சிவலை ஒற்றை காலை தூக்கி அடிப்பதும் பிரசாத்தை பார்ப்பதுமாக நின்றது. சரி கதையை முடிப்பம். சிவலைக்கு பொறுமை இல்லை. கிடுகும் ஏத்தவேணும். பிரசாத் வண்டில் ஏறத்தயாராகினான். ஓமடா தம்பி நானும் கூட வாறன் பசுபதியும் ஏறிக்கொண்டார். காளைகள் இரண்டும் கால்களை எட்டி எட்டி வைத்தன. சலங்கை சத்தம் சரமாரி. பிரதான வீதியில் வண்டில ஏறுகிறது. தீர்த்த மாட செல்வது போல திரள்திரளாக மக்கள். ஆடு மாடுகளும் தமது சொந்த பந்தங்களுடன். மாட்டு வண்டில்கள்,ஈருருளிகள் ஆமை வேகத்தில் ஊர்ந்தன. இடையிடையே பாரவூர்திகள் உறுமின. பக்தர்கள்தான் நேர்த்திக்கடனுக்கு தூக்கு காவடி எடுப்பார்கள்.கோழிகளுமா ? பாவம் உழவு இயந்திரங்களில் தலை கீழாக தூங்கியபடி
கூடவே அதன் கூடுகளும்.கோணாவில்,பூனகரி,முட்கொம்பன் எல்லாமே இடப்பெயர்வு. வானத்தில் வண்டு சத்தம். கிபிர் வருவதற்கான அறிகுறி. படுபாவி
இங்கையும் இருக்க விடான் போல. பிரசாத் வண்டிலை அந்த மரத்தின் கீழ் விடுகிறான். சிங்கள விமான படையின் ஆளில்லா வேவு விமானத்தை வன்னி மக்கள் வண்டு என்றுதான் அழைப்பார்கள். அதன் ஒலி கிட்டத்தட்ட கருவண்டின் சத்தம் மாதிரி. அது வந்து ஜந்து நிமிடம் கூட ஆகவில்லை. வந்தது கிபிர். அந்த இடம் அல்லோலகல்லோலம். அண்ண இறங்கி ஓடுங்கோ.. சொன்னபடி குதிக்கிறான்.அதற்கு முன்பே பசுபதி ஆளில்லை.
* * *
இராணுவம் ஊடுருவி முறிகண்டி காட்டில் நிலை கொண்டுவிட்டது. அயல் கிராமங்களில் பரபரப்பு. சூரிவீடும் சும்மாவா இருக்கும். இனி இங்க இருக்கிறது கஸ்ரம். அடுத்தடுத்து கிபிர் அடி. ஆட்டிலறியும் வேலியால் வரவா. கூரையில் வரவா என்பது போல அங்கையும் இங்கையும் விழுந்து வெடிக்குது.மூட்டை முடிச்சுக்கள கட்டி வையுங்கோ. சொன்ன சூரி தன் வழுக்கல் தலையை தடவுகிறார். இதற்கிடையில்" வீட்டுக்கொரு வீரர் நாட்டை காக்க முன் வாருங்கள்."தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆட்சேர்ப்பு மையத்தில் இருந்து ஓர் கடிதம். மாவீரர், போராளி அல்லாத குடும்பங்கள் அனைத்துக்கும் அனுப்பப்பட்டிருந்தது. சூரி வீட்டில் மூத்த பிள்ளை சோபா. வயது பத்தொன்பது அவளுக்கு கீழே நான்கு பேர். போகவேண்டியவள் சோபாதான். பொழுதுபட்டால் வாசற்படி தாண்டாதவள் எப்படி எதிரியை இரவில் கண்காணிப்பது. சோளகம் அடித்தால் அவ்வளவுதான் சோளம் பயிர்போல் உடம்பு. கடிதத்தை கண்டவுடனே காற்றில் படபடக்கும் கடதாசியானாள். சூரி யோசிக்கிறார். நல்ல விசயந்தான் எத்தின பிள்ளைகள் தாமா முன்வந்து போராடி விதையாயிட்டுதுகள் எத்தின பிள்ளைகள் களத்தில நிக்குதுகள். ஆட்கள் இல்லாதபடியால்தானே கேட்கிறாங்கள். சூரியின் மனம் உருகியது. சிந்தித்தார் உதித்தது உபாயம்.
* * *
வீழ்ந்து வெடித்த குண்டு போராளிகளின் பயிற்சி முகாம் சுக்குநூறு. பொதுமக்களும் சிலர் கொல்லப்பட்டதோடு காயமும் அடைந்தனர். விமானம் சென்று விட்டது. விழுந்தும் உருண்டும் புரண்டும் கிடந்த மக்கள் தலை நிமிர்ந்து நின்றனர். வாய்க்காலுக்குள் .அமிழ்ந்திருந்த பிரசாத் எழுந்து வருகிறான். தலை முதல் கால்வரை எல்லாமே ஈரம் வண்டிலை பார்க்கிறான். கறுப்பன் மரத்திற்கு கீழே ஒதுங்கியபடி அவனை கண்டு கத்தியது. சிவலையை காணவே இல்லை. பயத்தில் எங்கோ ஓடிவிட்டது. அங்கும் இங்கும் தேடுகிறான். பாலத்துக்குள் இருந்து பசுபதி சாரத்தை சிரைத்தவாறு முழங்கைகளில் காயம். கிபிர் தாக்குதலில் அல்ல. பாலத்தின் குழாய் உரசி. பிரசாத்துக்கு சிரிப்பு உடைந்த குடத்தில் இருந்து வரும் நீர் போல. கையால் வாயை மூடுகிறான். எனக்கு சொல்லாமல் கொள்ளாமல் ஓடினியள் காணாது போடா..மடப்பயலே..இறங்கடா வண்டிலால எண்டு சொல்லியிட்டுதான் பாய்ஞ்சனான். கிபிர் சத்தம். அதைவிட சனத்தின்ர கூக்குரல்கள். அதால உனக்கு கேட்கயில்ல. இருவரும் பேசுகின்றனர். இதனிடையே நெரிசல் நிறைந்த அவ்விடத்தில் ஒரு பெண்ணின் அலறல். அங்கு நின்றவர்கள் திரண்டனர். அது பொம்பிளையள் சாமாச்சாரம்.ஆண்கள் விலகுகின்றனர். பிரசவம் நடைபெறுகிறது. கூடி நின்ற பெண்கள் தாவணிகளால் மறைக்கின்றனர். அந்த பிள்ளைக்கும் வீதியில் பிறக்கின்ற தலை எழுத்தது. இனிமேல் உள்ள காலம் என்னென்னவெல்லாம் நடக்கப்போகுதோ ? பசுபதியர் நெஞ்சை தடவுகிறார். களைத்து வந்த சிவலை தான் வந்து விட்டேன் என பிரசாத்தை உரசுகிறது.
* * *
பகலவன் விடைபெறும் நேரம். மாட்டுப்பட்டியை நோக்கி நாய் குரைத்தது. வீட்டினுள் இருந்த சோபாவின் தாய் வெளியே வருகிறாள். குரைத்த நாய் பட்டிப்பக்கமாக ஓடியது. அவளும் அதுக்கு பின்னால். இந்த மனிசி எதுக்கு வருது. பேசாமல் மாடுகளுக்க மறைவம். பிரசாத் பதுங்குகிறான். நாயோ விடவில்லை அவன் கிட்டே சென்று உரத்து உரத்து குரைத்தது. சோபாவின் தாய் குனிந்து குனிந்து பார்க்கிறாள். ஆள் ஒன்று குந்தியிருப்பதை கண்டு விட்டாள்.இருள் கவிழும் நேரமாகையால் அடையாளம் தெரியவில்லை. மாடுபிடிக்க கள்ளன் வந்திருக்கிறான் ஓடி வாருங்கோ உரத்த குரலில் கணவனையும், பிள்ளைகளையும் அழைத்தாள். ஓடுவதா ? விடுவதா ? பிரசாத்துக்கு இரு மனம். ஓடினால் உண்மையாகவே கள்வனாகிவிடுவன். எல்லாம் அந்த வெட்டுக்கோம்பையாலதான் வாறது. சோபா மேல் கோபம் வந்தது. அங்கே எல்லோரும் கூடி விட்டனர். சூரியின் கையில் பெரியதொரு கிழுவங்கதியால். என்ன கள்ளன் எண்டு நினைச்சிட்டீங்களே..நான் பிரசாத் எங்கட மாடு ஒண்டை காண இல்ல. அதுதான் தேடி வந்தனான். சொன்னவாறு சூரிக்கு பக்கத்தில் வருகிறான். அட நீரே ? நல்ல காலம் கிழுவங்கதியால வாங்கப்பார்த்தீ்ர்.. சரி மாடு நிக்குதே.. சூரி கேட்கிறார். இல்ல..இங்க வராது விட்டால் பெரும்பாலும் கந்தசாமியற்ற பட்டிக்குத்தான் போயிருக்கும். அங்க போய் பார்ப்பம். பிரசாத்தின் பதில். அதுசரி தம்பி...போராளியாக இணையசொல்லி உமக்கும் கடிதம் வந்ததே..? ஓம் கிடைச்சது. போகத்தானே வேணும். நாங்கள் ஒதுங்கியிருந்தால் நாட்டை காக்கிறது ஆர்? அவனுடைய வீர வசனத்தின் முன்னால் சூரியி்ன் வாய் மெளனமானது. கண்ணாடி விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் சோபாவின் முகம். அவன் பேச்சை கேட்டு கண்கள் உருண்டு புரண்டன.
* * *
தவில் அடிப்பதுபோல ஊரெங்கும் மக்கள் தம் கூரைகள், வளைகள் கழற்றும் சத்தம். நாதஸ்வர ஓசைக்கும் பஞ்மில்லை. எறிகணைகள் தொடர்ந்து கூவிய வண்ணம் இருந்தன. சந்தைக்கு சென்ற வதனம் மாமி திரும்பி வருகிறாள். கச்சேரி, பள்ளிக்கூடங்கள், நிறுவனங்கள், கடைக்காரர் எல்லாருமே பொருட்கள் ஏத்துறாங்கள்... மாமி அழாத குறையாக. இடப்பெயர்வு என்றால் சும்மாவா? தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான தெரியும். எல்லோர் முகங்களும் மாலை நேர பூக்களாகின.இனியென்ன நாங்களும் வெளிக்கிட வேண்டியதுதான். வதனம் மாமி சுளகு பெட்டிகளை தட்டி அடுக்கினாள். அன்னம் ஆச்சியின் தனித்தேட்டம் ஒரு மூட்டை முடிச்சில் அடங்கியது. மணியம் சித்தப்பா குடும்பம் தடல்புடல்பட்டது. குஞ்சு குருமன்கள் தலையில் ஒவ்வொரு முடிச்சுப்பை. கால் நடையாக உடனே வெளியேறினர். தங்கச்சியை தந்தையின் சையிக்கிளில் அனுப்பி வைத்த பிரசாத் மின்னல் வேகத்தில் செயற்பட்டான். வதனம் மாமியாக்களோடு அன்னம் ஆச்சியும் உழவு இயந்திரத்தில், பிரசாத்துக்கு கையசைத்தனர். பொருட்களால் வண்டில் நிரம்பியது. சிவலைக்கும் கறுப்புக்கும் நிலைமை விளங்கிவிட்டது போல தமக்குரிய இடங்களில் வந்து நின்றன. வருமானம் தரும் தென்னந்தோப்பு, பழங்கள் தரும் மா, பலா, வாழைகள், வீட்டை அழகொளிரச் செய்த மலர்ச்செடிகள் பிரசாத் வெளிக்கிடுவதை கண்டு சோர்வுற்றன. வளர்பிறை பார்த்து தேதி குறித்து அப்பா, அம்மா ஆசையால் கட்டுவித்த வீடு. அவன் தொட்டிலில் ஆடியதும் அதிலேதான். இப்போ வெறுமையாக மனதில் பாரம். கண்களில் ஈரம் பிரசாத் வண்டிலில் ஏறுகிறான்.
* * *
காடு, மேடு, பள்ளம் எதுவும் மிச்சம் இல்லை. வட்டக்கச்சி, தர்மபுரம், விசுவமடு மக்கள் வெள்ளம். மடு தொடங்கி திருவையாறு. புளியங்குளம் இருந்து இயக்கச்சி. இடப்பெயர்வு என்றால் கொல்லைத்தெருவும் எஞ்சுமா? சோபாவின் வீட்டை பிரசாத் கண்டு பிடித்துவிட்டான். புல்வெளியில் மாட்டுப்பட்டி அதுக்கு சற்று தொலைவில் உள்ள கொட்டில்களில் ஒன்று. பக்கத்தில் பசுபதியரின் கொட்டில். மண்வீட்டு வாசம் அறியாதவரும் மழை பெய்தால் ஒழுகும் ஓலை கொட்டில்களில். கீழ்த்திசை அடிவானில் சூரியன். பால் கறக்கும் குடம் இடையில். சோபா பட்டிக்குள் செல்கிறாள். புல்வெளிகளில் பட்டுத் தெறிக்க வெள்ளொளி அவள் அழகை நூறு வீதமாக்கியது. பிரசாத்தை கண்ட அவள், ஆயுதம் தூக்குற போராளி நாட்டை காக்கிற வீரர் ஊரை விட்டே ஓடிவந்திட்டார். கண்ணா ! பார்த்து ரெண்டு கேள்வி கேளடா..சிறிய வெள்ளை கன்றை தடவியபடி சொல்கிறாள். களத்துக்கு போனால் கட்டபொம்மன்தான் முன் வைச்ச அடி பின் வைக்கமாட்டான் . கண்ணா....! அவவுக்கு விளக்கமாக சொல்லு என்றான் பிரசாத். சோபா உள்ளம் பூரிப்படைந்தது. ஆனாலும் தற்போது போர்ச்சூழல் அவன் போராளியானால் தனது நிலை என்னாகும். மனம் சோர்வடைகிறாள். இயக்கத்துக்கு போறது எண்டு முடிவு எடுத்தாச்சா..? போய் ஏதாச்சு..... அவள் மேற்கொண்டு பேசவில்லை. நீ யோசிக்காத நான் போனால் தங்கச்சிக்கு ஆர் ஆறுதல். நிலைமை தெரிஞ்சு இயக்கம் விலக்கழிப்பு கடிதம் தந்திட்டு எண்டாலும் பதினைஞ்சு நாள் பணிக்கு போகவேண்டி வரும். இருவரும் பேசிக்கொண்டிருக்க பசுபதியர் இலக்கு வைக்கிறார். பசுபதியண்ண வாறார் பிறகு சந்திப்பம். அவசரமாக கூறியவன் ஈருருளியை திருப்புகிறான்.
* * *
விசுவமடு பாதுகாப்பு வலயம். மார்கழி திங்களில்(2008) அரசாங்கத்தின் அறிவிப்பு. வந்த வெள்ளம் நின்ற வெள்ளத்தை அடித்து சென்ற கதை. வட்டக்கச்சி வட்டாரமும் வாலை கிளப்பியது. விசுவமடுவோ பாரந்தாங்காமல் விம்மியது. வாய்க்கால் ஓரங்களும் சதுப்பு நிலங்களும் மக்கள் குடியிருப்புகளாக மாறின. மார்கழி மாதம் மயிர் நனையாத தூரல். அது ஒரு காலம். இந்த மார்கழி வானம் இம்மக்களுக்கு என வாரி இறைத்தது. வெள்ளத்தால் குடிசைகள் அடித்து செல்லப்பட, குழந்தைகள் உருட்டி செல்லப்பட, இளசுகள் பழசுகள் செய்வதறியாது தி்ண்டாடினர். ஓடி வந்த மக்கள் கால் ஆறவில்லை. விசுவமடு நீக்கப்பட்டு உடையார்கட்டு தொடக்கம் தேவி புரம் வரை பாதுகாப்பு வலயம். அரசாங்கத்தின் இரண்டாவது அறிவிப்பு தை மாதம்(2009) வெளியானது. மக்கள் நகர்கின்றனர். கொட்டும் மழை....ஓடும் வெள்ளம்....சேறு....சுரி....எல்லாம் கடக்கின்றனர். நெடுந்தூர, குறுந்தூ எறிகணைகளின் கொண்டாட்டம். கும்மாளங்கள் அளவு கணக்கில்லை. சாகிறவர்கள் தப்புகிறவர்கள் தப்ப எடுக்கின்றனர் ஓட்டம். பசுபதியர் தவளுவதும் எழுந்து ஓடுவதுமாக சூரி குடு்ம்பம் உருள்வதும் புரள்வதும் நடப்பதுமாக . பிரசாத் தங்கையை விடாமல் பிடித்து கொண்டான். இருவரும் விழுந்து படுப்பதும் எழுந்து நடப்பதுமாக. இப்படித்தான் எல்லா மக்களும். பட்டாசு சத்தம் போல மக்கள் கூட்டங்களுக்கு இடையிடையே எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன. அவலக்குரல்கள் அந்த யமனுக்கும் கேட்டிருக்கும். பசுபதியரின் தலையில் ஒரு முண்டமில்லாத தலை வந்து மோதியது. கண்டதும் தேகம் பதறியது. தொண்ணூறு பாகையில் காய்ச்சல். வண்டு சுத்துறான். வெளிச்சம் போடாதையுங்கோ. ஊர்ந்து செல்லும் வாகனங்களுக்கு மக்களின் எச்சரிக்கை. இருட்டில் உறவுகள் சிதறுண்டு முன்பின்னாக தவளுகின்றனர்.
* * *
சுதந்திபுரத்தில் புற்தரை கொண்ட சிறிய காணித்துண்டு. பசுபதி, சூரி குடும்பங்கள் காப்பகழிகள் வெட்டி அதற்குமேல் கொட்டில் அமைத்து இருந்தனர். பாதுகாப்பு வலயம் என்ற பெயர்தான். அங்கேயும் விமானப்படை தன் சாகசத்தை காட்டியது. எறிகணைகளும் முழங்கின. தங்கச்சி பசுபதி வீட்டில். பிரசாத் காணாமல்போன தந்தையை தேடி செல்கிறான். இருவாரங்கள் ஆகியும் அகப்படவில்லை. புலிகளின் குரல் உறவுப்பாலம் அறிவித்தலிலும் கொடுத்துப்பார்த்தான். அவரோ வரவில்லை. குடிகாரன் என்றாலும் பி்ள்ளைகளுக்கு அவர் தொந்தரவு கொடுப்பதில்லை. அப்பாவை காணாமல் தங்கச்சி ஒப்பாரி. பிரசாத்துக்கு பத்து வயதின் பின்புதான் அவள் பிறந்தாள். அதனால் செல்லம் அதிகம். அவளை ஆற்றுப்படுத்தி பார்த்தான். அவளோ கேட்கவில்லை அப்பாவை கூட்டி வா. விடாப்பிடியாக நின்றாள். மக்கள் ஓடிவந்த சாலைகளில் அநாதரவாக கிடக்கும் சடலங்களை எடுத்து தமிழர் புனர்வாழ்வுக்கழகம் அடக்கம் செய்யுதாம். பிரசாத்தின் காதிலும் அந்தச்செய்தி. அப்பாவும் ஒரு ஆளாய் இருக்குமோ? அவனுக்கு நா வறண்டது. உங்கட அப்பாவுக்கு ஒண்டம் நடக்கயில. அவர் உயிரோட இருக்கிறார். உங்கள தேடி கட்டாயம் வருவார். சோபா தேற்றுகிறாள். ஆறுதல் அடைந்தவன் பசுபதியரின் கொட்டிலுக்கு வருகிறான். அங்கே அவர் வானொலிப்பெட்டியை முறுக்கி கொண்டிருந்தார். அண்ண..நான் களப்பணிக்கு போறன். சண்டை உக்கிரம் எப்ப திரும்புவன் எண்டு...சொல்ல ஏலாது. தங்கச்சியை கவனமாக பாருங்கோ. ம்....இன்னொரு விசயம். நான் சோபாவை... பிரசாத் வார்த்தையை நீட்டித்தான் தெரியும்..தெரியும்...நீ சூரியிண்ட கடைப்பக்கம் அடிக்கடி போய் வரவே எனக்கு விளங்கியிட்டு. சரி அவளையும் இடக்கண் வலக்கண் பார்க்கச் சொல்லுறாய் அப்பிடித்தானே. பசுபதியர் சொல்ல அவன் கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டு தலையாட்டினான்.
* * *
மாசி மாதம் தேதி பன்னிரண்டு இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு. அரசாங்கத்தின் மூன்றாவது அறிவிப்பு. புது மாத்தளன் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை பாதுகாப்பு வலயம். பசுபதியருக்கு பொங்கி வந்தது கோபம். வானொலிப்பெட்டியை தூக்கி மண்மூடைக்குமேல் வீசினார். இந்த மனிசன் ஏன் அதைப்போட்டு உடைக்குது மனைவி பாக்கியம் கத்தினாள். வாயைப்பொத்து. அங்க போ, இஞ்ச வா எங்களை ஆரெண்டு நினைச்சாங்கள். மனைவி மறுபடியும் புறுபுறுத்தாள். கதைக்காத எண்டு சொன்னனான். பல்லைக்கடித்தபடி பசுபதியர் அவளை நெருங்கினார். ஓடிஓடி களைத்த மக்கள் இப்படித்தான் ஒருவர் மீதுள்ள கோபத்தை இன்னொருவர் மீது சாதித்து தொட்டதுக்கு எல்லாம் சண்டை வந்து விடும். போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இப்பிரதேசத்துக்குள் முடங்கினர். களப்பணிக்கு போன பிரசாத் ஒரு மாதம் ஆகியும் வீடுதிரும்பவில்லை. பசுபதி,சூரி குடும்பங்கள் முள்ளிவாய்க்கால் சென்ற கதை. தங்கச்சி காயப்பட்டு கப்பலில் வவுனியா அனுப்பிய விடயம். காப்பகழிக்குள் எறிகணை வீழ்ந்து வதனம் மாமி குடும்பம் சிதறிய சம்பவம். விசுவமடுவில் இருந்து ஓடி வந்தபோது தந்தை இறந்த உண்மைச்செய்தி. எதுவுமே அவனுக்கு தெரியாது. பசுபதியின் கொட்டிலுக்கும், சூரியின் கொட்டிலுக்கும் உள்ள இடைவெளி ஒரு அடி மட்டுமே. ஒரு நாள் சோபா பசுபதியரின் காப்பகழிக்குள் ஓடிவந்தாள். கண்ணீர் ஆறாக. அவள் பின்னால் சூரி. பசுபதியர் இருவரையும் மாறிமாறி பார்க்கிறார். ஒண்டில் நாட்டில பிரச்சனை இல்லாம இருக்கவேணும் அல்லது வீட்டில பிரச்சனை இல்லாம இருக்கவேணும். ரெண்டிலும் எண்டால்.....பட்டினிக்களைப்பில் பசுபதியர் கொதித்தார். அண்ண....நான் பின்தளப்பணிக்கு போறன் இப்ப போறவங்கள் திரும்புறதில்ல. எனக்கும் அப்பிடி நடந்தால்.... அதுக்கு முதல்....சூரி கண்களை துடைக்கிறார். எண்ட மருமகன் பெடியன் பக்கத்திலதான் இருக்கிறான். நல்லவன். அவனுக்கும் பிள்ளைமேல விருப்பம். கலியாணம் செய்து வைச்சா எண்ட மனமும் ஆறும். கடமையும் முடிஞசதாகுது. இவள் மாட்டாளாம். பிரசாத் எழுதின கடிதங்களை காட்டுறாள் அவன் செத்து 1 மாதம் ஆகியிட்டண்ண...சூரி வாய்விட்டு அழுதார். பசுபதியருக்கு வார்த்தையே வரவில்லை.
* * *
கடும்போர் ஓய்ந்தது. வைகாசி மாதம் மூன்றாம் வாரம்(2009) முள்ளிவாய்க்கால் இராணுவத்தின் கையில். எறிகணைகள், துப்பாக்கி ரவைகளுக்கு இரையான மக்கள் ஆங்காங்கே வீழ்ந்தும் சிதறியும் கிடந்தனர். எஞ்சியவர்களை இராணுவம் பேரூந்தில் ஏற்றிக்கொண்டிருந்தது. கிளிநொச்சியில் இருந்து ஒரு பாரவூர்தி பொருட்களோடு வெளியேறிய பசுபதியரின் கையில் இப்போ ஒரு சொப்பின் பை மட்டும். மீதி இருந்த இடங்கள் ஒவ்வொன்றிலும் கொஞ்சம் கொஞ்சமாக கைவிடப்பட்டன. காலில் காயம் ஊன்று கோலின் உதவியோடு பிரசாத் மக்களோடு மக்களாக வருகிறான். பிரசாத் நில்லு....உன்னை இல்லை எண்டெல்லோ கதைச்சாங்கள்.....பசுபதியர் கட்டியணைத்து அழுகிறார். அவனோ பட்ட பாலைமரம்போல் அப்படியே நின்றான். ஒவ்வொரு சம்பவங்களையும் விடாமல் சொன்னவர் கண்ணீரையும் மூக்கையும் துடைத்துவிட்டு மேலும் தொடர்ந்தார். சோபாவுக்கு கலியாணம் முடிஞ்சுதடா. தகப்பண்ட பரிதாபத்தை பார்த்து அவள் சம்மதிச்சுட்டாள்....களத்துக்கு போன சூரி உயிரோட திரும்பவில்ல. ஓலமிட்டு கத்தினார். உறவுகளை இழந்தவர்களின் ஒப்பாரிகளோடு அவர் குரலும் சேர்ந்தது. போர்க்கள கோலம். உறவுகளை இழந்த துயரம். அதிர்ச்சி, ஏக்கம் எல்லாமே அவன் மனதை தெளிவாக்கியது. பசுபதியரின் தலையை வருடி கண்ணீரை துடைக்கிறான். எதுவுமே எங்கட கையில் இல்லை அண்ண...எது நடக்குமோ அதுதான் நடக்கும். இருவரும் பேரூந்தில் ஏறுகின்றனர். சில நாட்களின் பின் நலன்புரி நிலையத்தில் சோபாவை சந்திக்கிறான். அவனை கண்டதும் நிலைதடுமாறினாள். அவனோ மலர்ந்த முகத்துடன் உன்னில எந்தப்பிழையும் இல்ல. நீ கவலைப்படாமல் சந்தோசமாக இருக்கவேணும். இப்ப நான் உன்மேல வைச்சிருக்கிறது அன்பு மட்டுந்தான். காதல் இல்ல இருவர் மனங்களில் இருந்தும் மாயத்திரை விலகுகிறது. பிரசாத் ஊனமடைந்த ( போரினால்) தன் தங்கையை தாய் போல் கவனித்து வருகிறான். பள்ளியில் படிக்காத பாடம் அனைத்தும் காலம் அவனுக்கு கற்று கொடுத்து விட்டது. இப்போ அவன் ஒரு ஞானி.
செவ்வாய், 2 பிப்ரவரி, 2010
நேரம் வரும்போது தமது தேசிய உணர்வை வெளிப்படுத்தும் மட்டு வாழ் மக்கள்
கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டம் பல வழிகளில் சிங்கள அரசினாலும் , தமிழ் விரோத, தமிழீழ தேசிய விரோதிகளாலும் குதறப்பட்டாலும் சந்தர்ப்பம் வரும்போதெல்லாம் மட்டு வாழ் மக்கள் தமது நிலைப்பாட்டினை தெரிவித்தே வந்துள்ளனர்.
அந்த வகையில்தான் கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் மக்கள் தமது நிலைப்பாட்டினை தெளிவாக உணர்த்தியுள்ளனர். அதாவது மஹிந்த இராசபக்ஷவுக்கு எதிராக வாக்களித்ததன் மூலம் தமது அதிருப்தியினை மட்டுமன்றி விடுதலைக்கான ஒற்றுமையினையும், தேசிய உணர்வையும் வெளிக்காட்டியுள்ளனர்.
மஹிந்த அரசு தமிழ் விரோத செயற்பாட்டாளர்களுடன் சேர்ந்து மிகப்பெரிய இராணுவ நடவடிக்கையினை செய்து, மக்களை படுகொலை செய்து சின்னாபின்னப்படுத்தி, கொடுமைகளை புரிந்தது.
அதன் பின்னர் பிரதேச வேறுபாடுகளை முன்வைத்து தமது தேச விரோதப்போக்கிற்கு நியாயம் கற்பித்துகொண்டிருக்கும் கருணா பிளையான் போன்றோரை வைத்து பொம்மை அதிகாரிகளாக்கி தமது இனப்படுகொலைகளை நியாயப்படுத்தியும், பெரும் செல்வங்களை மக்கள் சார்பாக பெற்றும் வந்தது மஹிந்த அரசு. தாங்க முடியாத அழுத்தத்தில் ஏதோ தேர்தலில் பிள்ளையானுக்கு வாக்களித்ததன் மூலம் மஹிந்த அதனை தனது வெற்றியாக நினைத்தார். தன்னை நியாயப்படுத்திக்கொண்டார்.
ஆனால் மட்டக்களப்பு வாழ் தமிழ் மக்கள் போராட்டத்திற்கு பல ஆயிரக்கணக்கான உயிர்களை போராளிகளாகவும், மக்களாகவும் உயிர்ப்பலி கொடுத்தவர்கள். தியாகம் செய்தவர்கள். கோடிக்கணக்கான சொத்துக்களை இழந்தவர்கள். எனினும் இவை அனைத்தையும் பிரதேச வேறுபாட்டினை கடந்து தழீழ தேச விடுதலை என்ற ஒரே இலட்சியத்திற்காகவே செய்தனர்.
ஆனால் ஆட்சியாளர்களும் தேச விடுதலை விரோதிகளும் அதனை கருத்தில் எடுக்காது மக்கள் அனைத்தையும் மறந்து விட்டதாகவும் அதாவது தேச விடுதலையினை , தேச உணர்வினை, பிரதேச ஒற்றுமையினை மறந்து விட்டதாகவும் தமது வலையில், தமது மாயையில் சிக்கி விட்டதாகவும் நினைத்தனர்.
ஆனால் மட்டக்களப்பில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பட்டிருப்பு, மட்டக்களப்பு, கல்குடா ஆகிய தேர்தல் தொகுதிகளில் மஹிந்தவுக்கு எதிராக ( சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்ததன் மூலம்) பெரும் எண்ணிக்கையில் வாக்களித்துள்ளதன் மூலம் ஆட்சியாளர்களை அதிருப்திக்குள்ளாக்கி இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.
இந்த மட்டு மாவட்ட மக்களில் வாக்களிப்பானது மஹிந்த மீதுள்ள வெறுப்போ அல்லது சரத் மீது கொண்ட விருப்பமோ அல்லது கூட்டமைப்பின் செல்வாக்கோ என்று கூறுவதனை விட மட்டு மாவட்ட மக்கள் மீண்டும் ஒன்று பட்டு தமது பிரதேச ஒற்றுமையினையும், தாயக விடுதலையினையும் கோடிட்டு காட்டியுள்ளனர் என்றே கூறமுடியும்.
கெப்பிற்றிக்கொலாவ கிளைமோர் தாக்குதல்
கெப்பிற்றிக்கொலாவையில் கடந்த 2006 ஆம் ஆண்டு பயணிகள் பேரூந்து மீது நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரை கைது செய்துள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலிகளின் சார்ள்ஸ் அன்ரனி படைப்பிரிவை சேர்ந்த இந்திரன் என்றழைக்கப்படும் மகாலிங்கம் முத்துலிங்கம் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் என்றும் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பில் தான் இணைந்துகொண்டதாக அவர் காவல்துறையினருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தேருநுவரவை சேர்ந்த காவல்துறையின் விசேட குழுவினர் சந்தேக நபரை கைது செய்து தற்போது தடுப்புக்காவலில் வைத்து விசாரித்துவருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 15 ஆம் திகதி கெப்பிற்றிக்கொலாவையில் பயணிகள் பேரூந்து மீது மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 64 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியாவில் புலிகளுக்கு நிதி சேகரித்தவர்களுக்கு எதிராக வழக்கு
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஒரு மில்லியன் அவுஸ்திரேலிய டொலருக்கும் அதிக நிதியை அவுஸ்திரேலியாவில் சேகரித்து அனுப்பியதாக மூவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது. நேற்று அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது ஆரூரன் விநாயகமூர்த்தி, சிவராஜா யாதவன் மற்றும் ஆறுமுகம் ரஜீவன் எனப்படும் மேற்படி மூவரும் தாம் குற்றம் செய்ததாக ஏற்றுக்கொண்டுள்ளனர் என ரேடியோ அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்டுள்ளபோதும், மேற்படி மூவரும் 2004 க்கும் 2007 க்கும் இடைப்பட்ட காலத்தில் பணம் சேகரித்து அனுப்பி வந்தது குற்றச்செயல் என்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புலிகளுக்கு ரேடியோ ட்ரான்ஸ்மிட்டர்களையில் தாம் அனுப்பியிருந்ததாகவும் விநாயகமூர்த்தி நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளாராம். இவர்கள் மூவரும் தமிழ் புலிகளின் ஆதரவாளர்கள் மட்டுமல்ல, இவர்களுக்கும் புலிகள் அமைப்புக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது என இவர்களுக்கு எதிராக அரசு சார்பில் வாதாடிய வக்கீல் கூறியுள்ளாராம். இவ்விசாரணை தொடர்ந்து நடக்கவுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான சிங்கள வியூகம்
இலங்கையில் தமிழர் இல்லையேல் அங்கே இந்தியாவுக்கென்று எதுவும் இருக்காது. பொதுவாக முழு இந்தியாவுக்கும், குறிப்பாக தென் இந்தியாவிற்கும் பாதுகாப்பு இல்லாது போய்விடும் ஆபத்து உண்டு.
இலங்கையின் இனப்பிரச்சினை என்பது உண்மையில் இந்தியாவுக்கு எதிரான சிங்கள அரசியலின் வெளிப்பாடே ஆகும். வெளிப்பார்வைக்கு அது ஈழத்தமிழருக்கு எதிரானது போலத் தோன்றினாலும், சிங்கள ஆட்சியாளரின் இந்திய எதிர்ப்பு நிலைப்பாடுதான் தமிழின எதிர்ப்பாய் வெளிப்படுகின்றது. அதாவது இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் கருவியாகவும், கையாளாகவும் ஈழத்தமிழர் உள்ளனர் என்று கூறி, இந்தியாவுக்கு எதிரான யுத்தத்தை ஈழத்தமிழர் மீது சிங்கள ஆட்சியாளர் புரிகின்றனர். எனவே உள்ளடக்கத்தில் ஈழத்தமிழர் பிரச்சினை என்பது, சிங்கள ஆட்சியாளரின் இந்திய எதிர்ப்பு யுத்தத்தின் ஒரு வடிவமாகவே அமைந்துள்ளது.
இந்தியாவை இலங்கையில் செயலற்றதாக்க வேண்டும் என்றால், தமிழரை இலங்கையில் முற்றிலும் தோற்கடித்தாக வேண்டும் என்பதே சிங்கள அரசியல் இராஜதந்திரத்தின் மூலோபாயம் ஆகும். இதற்காக நயத்தாலும், பயத்தாலும் வேறுபல வியூகங்களினாலும் ஈழத்தமிழரை தனிமைப்படுத்தி தோற்கடிப்பதன் மூலம், இந்தியாவை இலங்கையில் கதியற்ற நிலைக்கு தள்ளுவதும், இந்தியாவின் எதிரிகளுடன் இறுதியில் கூட்டுச் சேர்வதுமே சிங்கள இராஜதந்திரத்தின் இறுதி இலக்காகும்.
இதற்காக முதலில் சர்வதேச வியூகங்களையும், அயலுறவு வியூகங்களையும், உள்நாட்டு வியூகங்களையும், தமிழினத்திற்கு உள்ளேயான உள்ளின அரசியல் வியூகங்களையும் ஒருங்குசேர வடிவமைத்து சிங்கள மயமாக்கும் இனக்கபளீகரக் கொள்கையை (Policy of assimilation) சிங்கள ஆட்சியாளர் வகுத்துள்ளனர். முழு இலங்கைத்தீவையும் முற்றிலுமாக சிங்களமயப்பட்ட இனப்பரம்பலுக்கும், ஆதிக்க வட்டத்திற்கும் உரிய தீவாக்குவதே இக்கொள்கையின் பிரதான உள்ளடக்கம் ஆகும்.
இனக்கபளீகரக் கொள்கையை உள்நாட்டு ரீதியில் பல வழிகளினாலும் சிங்கள ஆட்சியாளர் வெற்றிகரமாய் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். முதலாவதாக இலங்கை சிங்கள, பௌத்த தேசம் என்றும், சிங்கள – பௌத்தத்தை வளர்ப்பதும், பேணிப் பாதுகாப்பதும் அரசின் பிரதான கொள்கை என்றும் சிறிதும் நெகிழ முடியாத அரசியல் யாப்பு ஏற்பாடு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்பாட்டின் கீழ் அனைத்தும் யாப்புக்கும், சட்டத்திற்கும் உட்பட்டே அமைய வேண்டும் என்று கூறி எத்தகைய இனவுரிமை, மனிதவுரிமை மீறல்களையும் சிங்கள ஆட்சியாளர் முதற்கண் நியாயப்படுத்துகின்றனர்.
ஓர் இனத்தின் மேலாதிக்கத்திற்காக மதவாத மேலாதிக்கச் சட்டத்தை எழுதி வைத்துவிட்டு, ஏனைய இனங்கள் தமது இனவுரிமையைப் பற்றிப் பேசுவதை இனவாதம், பிரிவினைவாதம் என சிங்கள அரசு முத்திரை குத்துகிறது. அதாவது ஒடுக்கப்படும் இனம் தன் இனவுரிமையைப் பற்றிப் பேசுவதை, ஒடுக்கும் இனம் பிரிவினைவாதம் என்றும், இனவாதம் என்றும் கொச்சைப்படுத்துகிறது. ஆனால் அவர்களின் யாப்பே முற்றிலும் சிங்கள, பௌத்த மேலாதிக்க இனவாதமாக உள்ளது என்பது பெரிதும் கவனிக்கத்தக்கது. அதாவது ஒடுக்குமுறையும், இனக்கபளீகரமும் யாப்பால் நியாயப்படுத்தி உறுதிப்படுத்தப்படுகிறது.
இவ்வாறு சிங்கள, பௌத்த மேலாதிக்க இனவாதத்தினை அரசியல் யாப்பின் ஊடாக உறுதியாக நிலை நிறுத்திக் கொண்டு, சட்டத்தின் முன் அனைவரும் சமன் என்ற சமத்துவக் கொள்கையை (Egalitarian policy) சிங்கள அரசியல் தலைவர்கள் பேசுகின்றனர். இது அடிப்படையில் மிகவும் அபத்தமானது, அநீதியானது, ஆபத்தானது.
இதனைப் புரிந்து கொள்ள இங்கு ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். ஒரு குடும்பத்தில் கணவன் மீன், இறைச்சி போன்ற மாமிசம் மட்டும் சாப்பிடுபவனாகவும், மனைவி மரக்கறி மட்டும் சாப்பிடுபவளாகவும் இருக்கின்றனர் என வைத்துக் கொள்வோம். இந்நிலையில், வீட்டில் மாமிசம் மட்டும் சமைக்கப்பட வேண்டும் எனக் கணவன் தனது பலத்தின் மூலம் உத்தரவிட்டு, மனைவியையும் மாமிசம் சாப்பிட வேண்டும் என்று திணித்து உணவுண்ண வைத்துக் கொண்டு, தான் வீட்டில் சமத்துவத்தைப் பேணுவதாகவும், உணவில் தனக்குள்ள சகல உரிமையும் தனது மனைவிக்கும் உள்ளதாகவும் கணவன் பெருமை பாராட்டுவது எவ்வளவு அபத்தமானதோ, எவ்வளவு அநீதியானதோ அதே போன்றது தான் சிங்களத் தலைவர்களின் 'சமத்துவ' அணுகுமுறையும். இச் 'சமத்துவ' அணுகுமுறை என்பது இனக்கபளீகரக் கொள்கையினை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு ஏற்பாடேயன்றி வேறொன்றுமல்ல.
இத்ததைய ஓர் அணுகுமுறையைத் தான் தற்போதைய ஸ்ரீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ஸவும் கடைப்பிடிக்கிறார். ஸ்ரீலங்காவில் சிறுபான்மை என்று எவருமே இல்லை என்கிறார். இலங்கைத் தீவில் வாழும் அனைவரும் ஸ்ரீலங்கரே என்கிறார். அனைவருக்கும் சட்டத்தின் முன் சமவுரிமை உண்டு என்கிறார். அனைவரும் எங்கு செல்லவும், வாழவும் உரிமை உண்டு என்கிறார். மக்கள் அனைவரையும் தமது அரசாங்கம் சமத்துவமாக நடத்தும் என்கிறார். எமது உதாரணத்தில் மீன், இறைச்சி மட்டும் உண்ணும் கணவனாக மகிந்த விளங்குகின்றார்.
இவ் அணுகுமுறை மகிந்தவுக்கு மட்டும் உரியது அல்ல. அனைத்துச் சிங்களத் தலைவர்களும் இத்தகைய இனக்கபளீகரக் கொள்கையினைத் தான் கைக்கொண்டுள்ளனர். இதனை வெளிப்படுத்துவதிலும், செயற்படுத்துதிலும் இவர்களிடையே சிறு,சிறு வேறுபாடுகள் இருக்க முடியுமேயன்றி அடிப்படையில் இவர்களது கொள்கை ஒன்றுதான். ஏனெனில் இனக்கபளீகரம் என்பது ஸ்ரீலங்காவின் அரச கொள்கை. அது ஒரு அரசாங்கத்தின் கொள்கை மட்டுமன்று. எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இதனையே மேற்கொண்டு வந்திருக்கிறது. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களை பதவிக்கு வரும் அனைத்து அரசாங்கங்களும் மேற்கொண்டமை இதற்கு சாட்சியாய் அமைகின்றன.
இனக்கபளீகரத்தின் ஆபத்தான அடுத்த ஏற்பாடு சிங்களக் குடியேற்றத்திலேயே தங்கியுள்ளது. சட்டத்தின் முன் அனைவரும் சமன் என்று, பெரியமீன் தத்துவத்தை அரசியல் யாப்பில் எழுதி வைத்துவிட்டு, பெரிய மீனான சிங்கள இனம் சிறிய மீன்களான தமிழர், முஸ்லிம்களை விழுங்குவதை இத்தத்துவம் நியாயப்படுத்துகிறது. அதாவது தமிழ் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ள வேண்டாம் என தமிழர் கூறும் போது, தமிழர் இலங்கையில் எங்கும் குடியேற சட்டப்படி உரிமையுண்டு என்றும், அவ்வாறே சிங்களவரும் எங்கும் குடியேற சட்டப்படி உரிமையுண்டு என்றும் ஒரு 'பெரிய மீன் சட்டத் தத்துவத்தை' கூறுகிறார்கள்.
இதன்படி சிறுபான்மையினரான தமிழர் பெருபான்மையினரான சிங்களவரின் பகுதிகளில் குடியேறுவதனால் சிங்கள குடிப்பரம்பலில் எவ்வித மாற்றமும் ஏற்படமாட்டாது. ஆனால் பெரும்பான்மையினரான சிங்கள மக்கள் சிறுபான்மையினரான தமிழ் பேசும் மக்களது நிலப்பரப்பில் குடியேறினால் அந்த நிலப்பரப்பு சிங்கள மயமாகிவிடும். இதனையே பெரியமீன் தத்துவ சட்டம் எனக் கூறுகிறோம். பார்வைக்கு சட்டம் பெரிய மீனுக்கும், சின்ன மீனுக்கும் இடையே சமம் எனத் தோன்றினாலும் நடைமுறையில் அது பெரிய மீனுக்கு மட்டுமே சேவை செய்யும் சட்டமாக உள்ளது.
இந்த பெரிய மீன் சட்டத்திற்கு பதிலாக சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கான சட்டமே அவசியமானதும், நியாயமானதும் ஆகும். ஆனால் சிங்கள அரசியலானது சிங்கள பெரும்பான்மையினரின் எண்ணிக்கைப் பலத்தை வைத்துக் கொண்டு, அதனை ஜனநாயகம் என வர்ணித்து இனநாயகம் புரிவதன் மூலம் அளவால் சிறிய தேசிய இனங்கள் இலங்கையில் விழுங்கப்படுகின்றன.
இந்த வகையில் குடியேற்றம் எனும் திட்டத்தின் மூலம் முழு இலங்கையையும் சிங்கள மயமாக்கும் மூலோபாயத்தை சிங்கள ஆட்சியாளர் கொண்டுள்ளனர். 1911 ஆம் ஆண்டு புள்ளிவிபரத்தின் படி கிழக்கு மாகாணத்தில் ஒரு வீதம் வரையான சிங்கள மக்களே காணப்பட்டனர். ஆனால் அல்லை கந்தளாய் குடியேற்றத் திட்டத்தை 1937 ஆம் ஆண்டு ஆரம்பித்ததில் இருந்து கிழக்கு மாகாணம் சிங்கள மயமாகும் நிலை உருவாகி, சுதந்திரம் அடையும் காலத்தில் சுமாராக 5 வீதமாய் உயர்ந்து, இன்று கிழக்கு மாகாணத்தின் மொத்த சனத்தொகையில் ஏறக்குறைய 1/3 பங்கினர் சிங்களவர் என்ற ஆபத்து உருவாகிவிட்டது. இன்றைய அரசியல், இராணுவ நிலையின் போக்கின்படி இன்னும் சில வருடங்களுள் கிழக்கு மாகாணத்தில் சிங்களவரே பெரிய இனம் எனும் நிலை உருவாகிவிடும்.
1930 களின் ஆரம்பத்தில் இலங்கை தொடர்பாக ஆங்கிலேய ஆட்சியாளரின் பிரித்தாளும் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டது. அதாவது சிறுபான்மையினரை அணைத்து பெரும்பான்மையினரை ஆளவல்ல பிரித்தாளும் கொள்கையை ஆங்கிலேயர் இலங்கையில் கடைப்பிடித்து வந்தனர். ஆனால் இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய மகாத்மா காந்தியை ஈழத்தமிழர் 1927 ஆம் ஆண்டு இலங்கைக்கு வரவழைத்து மாபெரும் வரவேற்பை அவருக்கு அளித்ததுடன், இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான நிதியையும் சேகரித்து காந்தியிடம் மக்கள் கையளித்தனர்.
இதைக்கண்ட பிரித்தானியர் இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்துடன் இலங்கைத் தீவையும் ஈழத்தமிழர் இணைத்துவிடுவர் என அச்சமடைந்து, ஈழத்தமிழருக்கு எதிராக சிங்கள தலைவர்களை அரவணைக்கும் வகையில், சிங்கள இனத்திற்கு சாதகமான அரசியல் ஏற்பாடுகளை ஏற்படுத்தத் தொடங்கினர். ஈழத்தமிழருக்கு எதிராக பிரித்தானியா இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டதற்கான பிரதான காரணம் ஈழத்தமிழர் இந்தியாவின் நண்பராக உள்ளனர் என்பதும், அதனால் இந்திய விடுதலைப் போராட்டம் இலங்கைக்கு பரவிவிடும் என்ற அச்சமுமே ஆகும்.
இக்காலகட்டத்தில் தமிழர் இந்தியாவுடன் ஒரு மாநிலமாக இணைந்து விடக்கூடிய ஆபத்து இருப்பதாக ஆங்கிலேயக் கனவான் ஒருவரிடம் டி.எஸ்.சேனநாயக்கா கூறியதாகவும், அதற்கு அவர் பின்வருமாறு ஆலோசனை கூறியதாகவும் எழுதப்படாத ஒரு தகவல் ஒன்று உண்டு. அதாவது கிழக்கு மாகாணமே முக்கியமானது என்றும், சிங்கள குடியேற்றத்தை படிப்படியாக செய்வதன் மூலம் கேக் சாப்பிடுவது போல கிழக்கு மாகாணத்தை சிங்களமயமாக்கி விழுங்கலாம் எனவும், கிழக்கில்லாத வறண்ட வடக்கு இந்தியாவுக்கு தேவைப்படாது எனவும் அவர் ஆலோசனை கூறியதாக பேசப்படும் கூற்றொன்று உண்டு.
இதன் பின்பு, அல்லை கந்தளாய் குடியேற்றத் திட்டத்தை அரசியல் உள்நோக்கத்துடன் டி.எஸ்.சேனநாயக்கா வடிவமைத்துக் கொண்டதாக நம்பப்படுகிறது. டி.எஸ்.சேனநாயக்காவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவரும், நிர்வாக சேவை அதிகாரியுமாய் இருந்த தமிழரான திரு.ஸ்ரீகாந்தா என்பவர் இத்தகைய உள்நோக்கத்துடன் டி.எஸ்.சேனநாயக்கா செயற்பட்டார் என்றும், இப்படியொரு ஆலோசனை ஆங்கிலேயரால் அவருக்கு வழங்கப்பட்டதாக தான் அறிந்திருந்ததாகவும் தனிப்பட்ட உரையாடலின் போது அவர் கூறியதான தகவல் ஒன்று உண்டு.
எனவே இந்தக் குடியேற்றத் திட்டக் கொள்கையும், சிங்கள மயமாக்கல் கொள்கையும் இந்தியாவுடன் சம்பந்தப்பட்ட வகையில் கருக்கொண்டிருப்பதை அவதானிக்கும் போது இதன் நீண்டகால நோக்கமும், இதற்குள் அடங்கியிருக்கும் ஆபத்தும் தெளிவாக தெரிய வருகிறது. ஆதலால் இக்குடியேற்றத் திட்டக் கோட்பாட்டை வெறுமனே ஓர் இனம் சார்ந்த உள்நாட்டுப் பிரச்சினையாகப் பார்க்காமல் ஒரு பிராந்திய, சர்வதேச அரசியல் வியூகப் பின்னணியில் வைத்து பார்க்க வேண்டியது அவசியம்.
கிழக்கு மாகாணத்தில் தொடங்கிய இக்குடியேற்றத் திட்டமானது தொடர்ந்து வடக்கு வரை அது விஸ்தரிக்கப்பட்டு வருவதை நாம் காணலாம். மணலாறு குடியேற்றத் திட்டத்தின் மூலம் அது கிழக்கில் இருந்து வடக்குக்கு விரிந்துள்ளதுடன், புவியியல் ரீதியாக கிழக்கையும், வடக்கையும் பிரிக்கும் திட்டச் செயற்பாடுகளையும் இது கொண்டுள்ளது.
எனவே சிங்கள குடியேற்றத் திட்டங்களால் இனக்கபளீகரம் அடிப்படையில் வெற்றிகரமாகச் செயற்படுகிறது. போர் முடிந்து முற்றிலும் வடக்கு - கிழக்கு இராணுவ மயப்பட்டுள்ள சூழலில் சிங்களக் குடியேற்றம் மூலமான சிங்கள மயமாக்கல் துரித வளர்ச்சி அடைந்து வருகிறது. முதலில் கிழக்கு மாகாணம் வேகமாக சிங்கள குடியேற்றத்துக்கு உள்ளாகுவதுடன், வடக்கும் இதன் விஸ்தரிப்புக்கு பல வகைகளிலும் உள்ளாகிறது.
இதனை சற்று விளக்கமாகப் பார்ப்போம். வன்னி மாவட்டங்களில் கிழக்கு கடல் கரையோரம் முழுவதும் சிங்கள மீனவக் குடியேற்றங்களை மேற்கொள்வதன் வாயிலாக ஈழத்தமிழருக்கும், இந்தியாவுக்கும் இடையேயான கடல் தொடர்பை முதற்கண் அறுக்க முனைகிறார்கள். அத்துடன் அக்கடற் பிராந்தியத்தை சிங்கள இன ஆதிக்கத்தின் கையில் எடுத்துக் கொள்ள முனைகிறார்கள். அதேவேளை மேற்கு கடற்கரையோரமாக காலபோக சிங்கள மீனவரை ஆயுதம் தாங்கிய மீனவர்கள் ஆக்கி, மன்னார் கடற்பரப்பை சிங்கள ஆதிக்கத்தின் பிடிக்குள் கொண்டு வருகிறார்கள். காலகதியில் இந்த மீனவர்கள் காலபோக மீனவர்களாக அன்றி, நிரந்தர வாசி மீனவர்களாக விரைவில் மாறிவிடுவார்கள். இதன் மூலம் கிழக்காலும், மேற்காலும் ஈழத்தமிழருக்கும், இந்தியாவுக்கும் இடையிலான கடல் தொடர்பு இன்னும் சில வருடங்களில் முற்றாக அறுந்து போய்விடும். இது தமிழரைத் தனிமைப்படுத்தி இனக்கபளீகரம் செய்ய முடிவதுடன், இலங்கையில் இந்தியாவுக்கான அடிப்படை வாய்ப்புக்களை இல்லாது ஒழிக்கவும் ஏதுவாகிறது.
2500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றில், வன்னியில் மக்கள் அற்றுப் போன காலமாக யுத்தத்தின் மூலமான இன்றைய காலகட்டமே உள்ளது. இது வன்னிக்கு ஏற்பட்ட மிகப் பெரும் அவமானமும், தோல்வியுமாகும். இவ்வாறு வன்னி வாழ் தமிழ் மக்கள் அகற்றப்பட்ட சூழலில் வன்னிப் பிரதேசம் முழுவதுமே சிங்கள இராணுவ வாழ்விடமாகி விட்டது.
மக்கள் குடியகற்றப்பட்ட நிலையில் ஆகக்கூடியது 1,50,000 க்கு மேல் மக்கள் திரும்பக் கூடிய மனநிலை அங்கு இல்லை. குறைந்தது 1,00,000 இராணுவத்தினரைக் கொண்ட இராணுவ குடியிருப்புத் தளமாக வன்னியை ஆக்கும் கொள்கையை அரசு கொண்டுள்ளது. இந்த 1,00,000 இராணுவத்தினருடன் கூடவே காவல்துறையினர், கடற்படையினர் என ஆயுதம் தாங்கிய படையினரின் எண்ணிக்கை ஆக்குறைந்தது 1,25,000 த்தை எட்டும். இத்தொகை ஏறக்குறைய அங்கு குடியிருக்கப் போகும் மக்களின் தொகைக்கு சமனானது.
அத்துடன் இந்த 1,25,000 ஆயுதம் தாங்கிய சிங்கள படையினருடன் அவர்களது குடும்பங்களும் உத்தியோகபூர்வமாகவும், தனிப்பட்ட ரீதியிலும் குடியமர்த்தப்படுவர். இதன் மூலம் வன்னியின் ஆயுதம் சார் படையினரின் குடித்தொகை குறைந்தது 2,00,000 த்தை இலகுவாகவே எட்டிவிடும். மேலும் அபிவிருத்தி, கீழ்கட்டமைப்பு அபிவிருத்தி என்பதன் பேரில் உள்வரவாகவுள்ள சிங்களத் தொழிலாளாரின் தொகை இன்னும் ஒரு பகுதி சிங்கள சனத்தொகையாய் அமையும். அத்துடன் அபிவிருத்தி, கைத்தொழில் திட்டங்களுக்கான உள்நாட்டு, வெளிநாட்டு ஒப்பந்தங்களின் போது 75 வீதத்திற்கு குறையாத சிங்களவர்களிற்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை சிங்கள அரசின் ஒரு கொள்கையாக உள்ளது. இதன் மூலம் அபிவிருத்தி என்பது சிங்கள மயமாக்கலுக்கான விருத்தியாகவே அமையும். இது வன்னிக்கு மட்டுமன்றி முழு வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்திற்கும் பொருந்தும்.
மேலும் இவை சார்ந்து உருவாகும் கடைத் தெருக்கள், சந்தைகள், சேவை மையங்கள் என்பன எல்லாம் திட்டமிட்டு சிங்கள வணிகர்களின் கைகளுக்கு அரசால் வழங்கப்படும். அத்துடன் இராணுவ, காவல் துறையினரின் ஆதரவும், சிங்கள அரச நிர்வாகத்தின் ஆதரவும் நேரடியாக சிங்களவருக்கு துணையாகவே அமைவதால் தமிழர் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு இலகுவில் அனாதரவாய் விழுங்கப்பட்டு விடக்கூடிய பரிதாபமே பெரிதாய் உள்ளது.
இவற்றுடன் கூடவே பௌத்த நிறுவன அமைப்புகளுக்கான அபிவிருத்திகளும் கட்டிட நிர்மாணிப்புக்களும் தமிழ்ப் பிரதேசத்தை காட்சியளவில் சிங்களப் பிரதேசமாக காட்சியளித்துவிடும்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அல்லது தொடர்புபட்டவர்கள் என்பதன் பெயரில் தமிழர் மீது எப்போதும் இராணுவ, பொலீஸ் நடவடிக்கைகளுக்கு வாய்ப்பிருப்பதால் உளவியல் ரீதியாக தமிழர் ஒடுங்கிப் போய் சிங்கள மயமாக்கலுக்கு பலியாகிவிடுவார்கள். இவற்றைத் தவிர தாம் வெற்றி வீரர்கள் என்ற மன உணர்வில் சிங்கள இராணுவ, பொலீஸ் படையினரும், சிங்கள அரச அதிகாரிகளும் தமிழர் மீது நேரடியாக ஆதிக்கம் செலுத்துவர். அத்துடன் சாதாரண பாமர சிங்கள மகனிடமும் இத்தகைய அணுமுறையே நடைமுறையில் இருக்கும். அத்தகைய சிங்கள பாமரர்கள் இராணுவ அரவணைப்பில் தமிழர் மீது ஏளனமாய் நடந்து கொள்ள முடியும்.
அடுத்து வெற்றி வீரர்களாய்க் காட்சியளிக்கும் சிங்களத் தலைவர்கள், தமிழ் அரசியல் தலைவர்களை நாதியற்றவர்களாய் பார்க்கவும், எடுப்பார் கைப்பிள்ளைகளாய் பயன்படுத்தவும் இலகுவில் துணிவர். இவ்வாறு எல்லா வகைகளிலும் தமிழினம் பலவீனப்படுத்தப்பட்டு சில ஆண்டுகளுக்கு உள்ளேயே சிங்கள ஆதிக்கத்தால் விழுங்கி இனக்கபளீகரம் செய்யப்படக் கூடிய ஆபத்து துல்லியமாய்த் தெரிகிறது.
எனவே இப்பொழுது தமிழ் பேசும் மக்களின் பிரதான பிரச்சினை, இந்த இனக்கபளீகரத்தில் இருந்து உடனடி அர்த்தத்தில் எவ்வாறு தற்காப்பது என்பதே. 'சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம்'. அடிப்படையிலும் அடிப்படையாக சிங்களக் குடியேற்றத் தடுப்பு, அபிவிருத்தி என்ற பெயரிலான சிங்களத் தொழிளாளர் குடியிருப்பு வளர்ச்சியை தடுக்க வேண்டியவை என்பன உடனடிக் கவனத்திற்குரிய விடயங்களாய் காணப்படுகின்றன.
ஈழத்தமிழரின் முக்கியத்துவத்தை சனத்தொகை அளவால் பார்ப்பதை விடவும், கேந்திர முக்கியத்துவ அளவால் அவர்களைப் பார்க்க வேண்டியது அவசியம். இலங்கையை ஒரு சிறிய தீவு என்று அளவால் பார்க்காமல் வர்த்தக, இராணுவ, கடல்வழி கேந்திர மையமாக அதனை பார்ப்பது போலவே, ஈழத்தமிழரையும் அவர்களது சனத்தொகை எண்ணிக்கையால் பார்க்காமல் அவர்களுக்கு இருக்கும் கேந்திர முக்கியத்துவத்தால் பார்வையிடவேண்டும்.
பல நூற்றாண்டு கால வரலாற்றை நோக்கும் போது காலத்திற்கு காலம் வெளியரசுகளின் அல்லது வல்லரசுகளின் நலன் சார்ந்து ஈழத்தமிழர் தொடர்ந்து பலியாகும் கதை நீண்டு செல்கின்றது. ஆனால் ஈழத்தமிழருக்கு ஏற்படக் கூடிய முழுத் தோல்வி இறுதியில் இந்தியாவின் பாதுகாப்பிலும், அதன் பொருளாதார நலன்களிலும் பேரடியை ஏற்படுத்தக் கூடியதாய் அமைந்துவிடும். தற்போது படிப்படியான தோல்வியில் இந்தியாவுக்கு நேரடியாக தாக்கம் ஏற்படக் கூடிய அளவிற்கு இந்தியாவின் எதிரிகளின் வளர்ச்சி காணப்படவில்லை. ஆனால் தமிழரின் முழு நீளத் தோல்வியில் இந்தியாவின் எதிரிகள் முழு நீளமாய் இலங்கைத் தீவில் தலையெடுப்பது தெரிய வரும் போது இந்தியாவுக்கு மாற்று வழி இருக்காது.
ஆதலால் வெள்ளம் தலைக்கு மேல் ஏற முன்னர் இந்திய தலைவர்களும், ஈழத்தலைவர்களும் அணைக்கட்டத் தவறினால் ஈழத்தமிழரின் அழிவில் இந்தியாவின் அழிவும் தலையெழுத்தாய் அமையக் கூடிய ஆபத்து உண்டு. தமிழர் தோற்கடிக்கப்பட்டால் சிங்கள ஆட்சியாளர் இலங்கையை எந்நேரத்திலும் இந்தியாவுக்கு எதிரான களமாக்கக் கூடிய ஆபத்து பெரிதாய் உள்ளது. இன்றைய தற்காலிக மனோநிலையில் நின்று பார்க்காது, எதிர்கால சூழலில் வைத்து சிந்தித்தால் இது தெளிவாய்த் தெரிய வரும்.
ஈழத்தமிழர் பிரச்சினையை வெறுமனே ஒரு மொழிப் பிரச்சினையாக அல்லது இனப் பிரச்சினையாக மட்டும் பாராது, இந்திய உபகண்ட பிரச்சினையாய், பிராந்திய அமைதிக்கான பிரச்சினையாய், சர்வதேச அரசியல் பொருளாதாரத்தோடு நெருங்கிய தொடர்புள்ள பிரச்சினையாய், மொத்தத்தில் உலகளாவிய அரசியல் பொருளாதாரப் பிரச்சினையின் ஒரு பகுதியாய் அதனைப் பார்வையிடுவதே மிகவும் சரியான கண்ணோட்டமாய் அமையும்.
நலம்புரி முகாமில் இருந்த போராளிகள் காணமல் போயுள்ளனர்
வவுனியா தடுப்பு முகாம் ஒன்றில் புனர்வாழ்வுக்கு என தடுத்து வைக்கபட்டு இருந்த போராளிகளில் பன்னிரண்டு பேரை
அங்கு வந்த இரரணுவம் மேலதிக விசாரணைக்கு என முகாமுக்கு வெளியே அழைத்து சென்றுள்ளனர்.
எனினும் அழைத்து செல்லபட்டது தொடர்பாக உறவினருக்கோ பாதுகாவலர்களுக்கோ அறிவிக்காமல் இருந்த நிலையில்
போராளிகளை பார்க்க சென்ற உறவினர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வந்ததாக அறிய முடிகிறது.
பிரபாகரன் எங்கே குழப்பம்
குழப்பமான செய்திகளால் உண்மை மறைக்கப்படுகிறதா..
பிரபாகரன் தொடர்பான உண்மைகள் வெடித்துப் பறக்கும் நாட்கள் எண்ணப்படுகின்றன..
தமிழீழ விடுதலைப் புலிகள் தலைர் வே. பிரபாகரனின் மரணச்சான்றிதழை சிறீலங்கா அரசு தமக்கு தரவில்லை என்று நேற்று சி.பி.ஐ வெளியிட்ட தகவல் உலக நாடுகளில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இன்று அதற்கு எதிர் மாறாக ப.சிதம்பரம் இன்று வெளியிட்ட அறிக்கையில் மரணச்சான்றிதழ் தமக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆகவே இந்த விவகாரத்தில் இப்போது இந்திய அதிகார வர்க்கமே குழம்பிப் போயிருப்பதைக் காண முடிகிறது. அல்லது குழப்பமான நிலையை உருவாக்க இப்படிக் கூறப்பட்டதா என்பதும் சிந்திப்பதற்குரியதே.
பிரபாகரன் உயிருடன் இருந்தால் சி.பி.ஐ சொல்லியதுதானே என்று சமாளிக்க முடியும், இல்லையாயின் சிதம்பரம் சொல்லிவிட்டாரே என்று கூற முடியும். இரு தலைக் கொள்ளியெறும்பு போல இந்த விவகாரம் இந்திய இலங்கை அரசுகளை ஆட்டிப் படைக்கின்றன.
சில இரகசியங்களை வெளியிடுவேன், உயிருக்கு பயப்பட மாட்டேன் என்று சரத் பொன்சேகா குறிப்பிட்டது பலத்த சந்தேகங்களை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில் குழப்பமான அறிக்கைகளே உண்மைக்கும் பொய்க்கும் பேதம் காண முடியாத சூழலை உருவாக்கும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இது கூறப்பட்டதா என்பதும் சிந்தையைத் தூண்டுகிறது. இது குறித்து இன்று வெளியான செய்தி
விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மரணச் சான்றிதழை சி.பி.ஐ இலங்கை அரசிடமிருந்து பெற்றுள்ளதாக இந்திய உட்துறை அமைச்சர் பா. சிதம்பரம் இன்று தெரிவித்துள்ளதாக ‘த ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் அண்மையில் வெளியான சி.பி.ஐயின் அறிக்கையில் பிரபாகரனின் மரணச் சான்றிதழுக்காகத் தாம் காத்திருப்பதாக தெரிவித்திருந்தது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் கடந்த மே மாதம் 18ஆம் திகதி இலங்கை இராணுவத்துடனான இறுதிக்கட்ட மோதலில் கொல்லப்பட்டதாக அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
எம் விழிகளில் என்றும் தளம்புவது கண்ணீரோ?
எம் விழிகளில் என்றும் தளம்புவது கண்ணீரோ?
நம்மினம் செய்த தவறு தமிழராய்ப் பிறந்ததா?
சும்மா நிலத்தில் எரிகின்ற சருகுகளா நாங்கள்?
அம்மா! என்று அலறிடினும் கேட்க ஆளில்லையோ?
ஐயகோ! கொடுமையிலும் கொடுமை தாயகத்திலே
தீயிலே பொசுங்குவதும் தீயினையே அணைப்பதும்
கூக்குரலும் கொலைவெறிக் களமுமாக நம்தேசம்!
எக்காளமிடும் சிங்களத்துக்கே துணைபோகும் உலகம்!
ஏனிந்த அவலம்? எமக்கிந்தக் கொடு'ர வாழ்க்கை?
வானைப் பிளக்கும் கொத்தணிக் குண்டுகளின் கோரம்!
இனியும் பொறுமையில்லை இனஅழிப்பைப் பார்த்திட
என்றே எழுந்தனர் வான்புலிவீரர் எம்மினக் காப்பாளர்
தற்கொலைப் படைக்குள் தம்மையே நுழைத்து
அற்புதச் செயலாய் வான்மீதிலே இறக்கை அடித்து
பறந்தனர் மாவீரர் ரூபனும் சிரித்திரனும் சிரித்தவாறே
சுற்றி வளைத்து இலக்கை எய்திட இரையாகினரோ!
வதைபடும் நம்மின மீட்புக்காக வான்புலிகளாகி
சிதைத்தனர் எதிரிகளின் கற்பனைக் கோட்டைகளை
இதைவிட மிகப்பலம்! இன்னுமின்னும்! வருமென்பதை
பதியமிட்டே சிங்களமனதில் பதித்தவருக்கு வீரவணக்கம்!
வான்புலியாகி வானமதிற் கலந்திட்ட தியாகிகளே!
உன்னினங் காக்க இன்னுயிரை நேரங்குறித்து ஈந்த
அன்னைமண் மைந்தர்களே! தீயிலும் ஒளிரும் மணிகளே!
இன்றிங்கே இறைஞ்சுகிறோம் மலரோடு சுடரேற்றியே!
தமிழ் பேசும் மக்கள் வாக்களித்தார்கள் என்பதற்காக சிங்கள மக்கள் மத்தியில் இனவாதம் பரப்பப்படுகிறது- ஜெனரல் பொன்சேகா குற்றச்சாட்டு;
வடக்கு கிழக்கு உள்ளிட்ட பிரதேசங்களில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் எனக்கு வாக்களித்தார்கள் என்பதை மாத்திரமே காரணம் காட்டி, நாட்டில் அரசாங்கம் இனவாதத்தைப் பரப்பிக்கொண்டிருக்கிறது.
வடக்கு கிழக்குப் பிரிவினைக்காக பிரபாகரன் நடவடிக்கைகளை மேற்கொண்டதைப் போன்று, தற்போது தெற்கில் பிரிவினையை ஏற்படுத்துவதற்கு துரோகத்தனமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று கூட்டுப்படைகளின் முன்னாள் தலைமையதிகாரியும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்டவருமான ஜெனரல் சரத் பொன்சேகா குற்றம் சாட்டினார்.
தேர்தலில் தோல்வியடைந்தமை குறித்து நாம் கவலை அடையவில்லை. ஆனால், உண்மையான மாற்றத்திற்காகவும், நிரந்தரமான சுதந்திரத்திற்காகவும் அளிக்கப்பட்ட வாக்குகள் அப்பட்டமான முறையில் பறித்தெடுக்கப்பட்டுள்ளன. எம்மீது மக்கள் வைத்த நம்பிக்கையை நிறைவேற்றமுடியாமல் போனதையிட்டே நாம் கவலை அடைகிறோம்.
இன்று நாட்டில் சட்டம், ஒழுங்கு இல்லை. தேர்தலுக்கு முன்னர் இருந்த சிறிதளவான ஜனநாயகம் கூட அற்றுப்போயுள்ளது. இருப்பினும், மக்களின் வெற்றியை அவர்களுக்கு மீண்டும் பெற்றுக்கொடுப்போம் என்றும் அவர் கூறினார்.
மோசடியான தேர்தலுக்கு எதிராக மக்களை அணிதிரட்டுவோம் எனும் தலைப்பின் கீழ், எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஏற்பாடு செய்திருந்த விசேட செய்தியாளர் மாநாடு நேற்று திங்கட்கிழமை கோட்டே சோலிஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே ஜெனரல் பொன்சேகா மேற்கண்ட வாறு தெரிவித்தார்.
இந்தச் செய்தியாளர் மாநாட்டில் ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் கரு ஜெயசூரிய, ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், மற்றும் ஸ்ரீல.சு.கட்சி மக்கள் பிரிவு ஏற்பாட்டாளர் மங்கள சமரவீர ஆகியோரும் சமுகமளித்திருந்தனர்.
இங்கு ஜெனரல் பொன்சேகா தொடர்ந்தும் கூறுகையில்,
நாம் எமது வெற்றியை மக்களின் வெற்றியாகவே கருதுகிறோம். நடந்து முடிந்த தேர்தல் தொடர்பிலான முடிவுகளை மக்கள் நம்புவதற்குத் தயாரில்லை. மக்களின் வெற்றி மக்களுக்குக் கொடுக்கப்படவில்லை. இலங்கையின் தேர்தல் வரலாற்றில் முதல் தடவையாகவே இவ்வாறான மக்கள் எதிர்ப்பு எழுந்துள்ளது. அத்துடன், இந்த வெற்றி கொள்ளையடிக்கப்பட்டு விட்டதாகவும் மக்களால் கருதப்படுகின்றது. மக்கள் எம்மை நிராகரித்து, அதன்மூலம் நாம் தோற்கடிக்கப்பட்டிருந்தால் பரவாயில்லை. ஆனால், இங்கு நடந்திருப்பது தலைகீழானதாகும். மக்கள் பாரிய எதிர் பார்ப்புகளைக் கொண்டிருந்தனர். மாற்றம் ஒன்று வேண்டுமென முழுநாடும் காத்துக்கொண்டிருந்தது. அந்த மாற்றம் நிகழவில்லையே என்று மக்கள் கவலை தோய்ந்த வண்ணம் வேதனையுடன் உள்ளனர்.
இந்தத் தேர்தல் முடிவு தொடர்பில் நாம் கருத்திற்கொள்ளாதிருப்பதாகக் கூறமுடியாது. சகல விடயங்களும் ஆராயப்பட்டு வருகின்றன. மக்களால் எதிர்பார்க்கப்பட்ட வெற்றியையும், அவர்களது எதிர் பார்ப்பையும் நிச்சயமாக அவர்களுக்குப் பெற்றுக்கொடுப்போம். அந்த நிலைப் பாட்டில் மாற்றமில்லை.
ஜனநாயக நாட்டில் நடைபெறுகின்ற தேர்தல் ஒன்றின் வெற்றி உறுதியாகி விட்டதன் பின்னர் மாற்றுத் தரப்பினரைத் தாக்கவோ அல்லது அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதற்கோ முயற்சிக்கக் கூடாது. ஆனாலும், இன்று அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் பலவகையிலும் பழிவாங்கப்படுகின்றனர்.
எமது ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்ற அதேவேளை, ஊடக அடக்குமுறைகளும், கருத்துச் சுதந்திரத்திற்கு இடையூறுகளும் ஏற்படுத்தப்படுகின்றன. அது மட்டுமல்லாது, எனது பாதுகாப்பு முற்றாக நீக்கப்பட்டுள்ளது. எனக்கு ஆதரவாகச் செயற்பட்ட இராணுவ உயரதிகாரிகளின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.
மேலும், பல அதிகாரிகள் பதவி இறக்கப்பட்டுள்ளனர். இன்னும் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது இவ்வாறிருக்க, எனது பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு உத்தியோத்தர்கள், எனது அலுவலகப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், எனது அலுவலகத்திலுள்ள கணினிகள் மற்றும் அலுவலக உபகரணங்கள் பலவந்தமாக எடுத்துச்செல்லப்பட்டுள்ளதுடன், அலுவலகத்திற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. இவை மிகமோசமான, அராஜகம் நிறைந்த செயற்பாடுகளாகும்.
உண்மையாகவே தேர்தலில் வெற்றிபெற்றிருந்தால் இவ்வாறான செயற்பாடுகள் அவசியமற்றவை. ஆனால், இதுபோன்ற நடவடிக்கைகளே தேர்தலில் பொய் யான வெற்றிபெற்றுள்ளதை உறுதிப்படுத்துகின்றன.
எம்மீதான அடக்குமுறைகள் தொடர்பில் பொலிஸாரும் பக்கச்சார்பாகவே நடந்து கொள்கின்றனர். முறைப்பாடுகளை ஏற்கவும் மறுக்கின்றனர். இதனால் இந் நாட்டில் சட்டம், ஒழுங்கு இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது.
ஜனாதிபதியைக் கொலை செய்வதற்கு சூழ்ச்சித்திட்டம் தீட்டியதாக என்மீது குற்றம் சுமத்தப்பட்டது. குறித்த தினத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எமது அணியில் இருக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனேயே நான் ஹோட்டலில் தங்கியிருந்தேன்.
அந்தச் சந்தர்ப்பத்தில் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அங்கிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டதாகவும் அரசாங்கத்தினால் அரச ஊடகங்களில் வெளிப் படுத்தப்பட்ட தகவல்கள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவையாகும். அவற்றில் எந்தவிதமான உண்மைகளும் கிடையாது. இதனை பின்னணியாகக் கொண்டு நான் வெளிநாடு செல்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதே நிலை தான் எனது மனைவிக்கும் ஏற்பட்டுள்ளது. எனது மருமகன் மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். மொத்தத்தில் எனது குடும்பம் பழிவாங்கலுக்கு உட்பட்டுள்ளது.
இன்றைய சூழ்நிலையில் நானே மக்களின் ஜனாதிபதியாக இருக்கின்றேன். கௌரவமும் நேர்மையும் இல்லாத ஒருவராக நான் இருக்கவில்லை என்பதையும் இங்கு கூறிவைக்க விரும்புகின்றேன். நான் எங்குசென்றாலும் என்னைப் பின் தொடர்கின்றனர். எனது சுதந்திரம் முற்றாகப் பறிக்கப்பட்டுள்ளது
தேர்தலுக்கு முன்பதாக அரச தொலைக் காட்சிகளில் இராணுவ ஆட்சியாளர்களை சித்திரிக்கும் திரைப்படங்கள் ஒளிபரப்பட்டன. அந்த விடயங்கள் இன்று நிஜமாக நடைமுறைப்படுத்தப் படுகின்றன.
வடக்கு கிழக்கு உள்ளிட்ட பிரதேசங்களில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் எனக்கு வாக்களித்தனர். அதேபோல், சிங்களவர்களும் வாக்களித்தனர். இருப்பி னும், தமிழ்பேசும் மக்கள் எனக்கு வாக்களித்தார்கள் என்ற காரணத்தால் நான் பிரிவினைக்குத் துணைபோனதாக என்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சிங்கள மக்களிடையே ஒருவித இனவாதப்போக்கை அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டுள்ளது.
வடக்கு கிழக்குப் பிரதேசங்களைப் பிரித்தெடுக்கும் நோக்கில் செயற்பட்ட பிரபாகரனே கடந்த காலங்களில் பிரிவினைவாதத்தைத் தோற்றுவித்திருந்தார். அந்தப் பிரிவினைவாதத்தை நாம் முறியடித்தோம். இருந்தாலும், இன்று தெற்கிலே பிரிவினையைத் தோற்றுவிப்பதற்கு துரோகத்தனமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றை முற்றாக நாம் நிராகரிக்கிறோம்.
நடந்து முடிந்த தேர்தலில் நாம் 5.5 மில்லியன் வாக்குகளைப் பெற்றிருக்கின்றோம். அதுமட்டுமல்லாது, தமிழ் பேசும் மக்களிடமிருந்து ஒரு மில்லியன் வாக்குகளையும் பெற்றிருக்கின்றோம். அவ்வாறு பெற்ற வாக்குகள்தான் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதிலும் மக்கள் இதனைத் தான் இன்று பேசிக்கொண்டிருக்கின்றனர்.
எனவே, எமது மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பற்கு நாம் சகலவிதத்திலும் நட வடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இதன் முதல் கட்டமாக, தேர்தல் முடிவுகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்டும் நடவடிக்கையை கொழும்பில் ஆரம்பிப்பதற்குத் தீர்மானித்திருக்கின்றோம். இது நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும்.
ஜனாதிபதித் தேர்தலில் வாக்குகள் கொள்ளையடிக்கப்பட்டன. எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் அவ்வாறான கொள்ளை இடம்பெறுவதற்கு இடமளிக்க முடியாது. அதற்கான மாற்று நடவடிக்கைகள் அவசியமானதாகும். அத்துடன், அடுத்து வரும் தேர்தல் விருப்புவாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்கான தேர்தலாகும். எனவே, அதில் இவ்வாறான கணினி தில்லுமுல்லுகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவாகும்.
பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தீர்மானித்திருக்கின்றேன். இது தொடர்பில் என்னோடு இணைந்துள்ள அரசியல் கட்சிகளின் தீர்மானம் மிகவும் முக்கியமானதாகும் என்றார்.
புலிகளுடனான போரில் ஈடுபட்ட இராணுவத்தினர் மீது விசாரணை கிடையாது: கோத்தபாய ராஜபக்ஷ
விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரின் செயற்பாடுகள் குறித்து எந்த வகையான விசாரணைக்கும் அனுமதியளிக்கப் போவதில்லை என்று இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் அண்மையில் முடிவடைந்த ஜனாதிபதி தேர்தலில், பிரதான எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் ஃபொன்சேகா நாட்டின் சட்டதிட்டங்களை மீறியுள்ளார் என்றும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.
இலங்கையின் சட்டவிதிகளுக்கு உட்பட்டு ஜெனரல் சரத் ஃபொன்சேகா மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாதுகாப்புச் செயலர் கூறுகிறார்.
இலங்கையில் இனங்களின் அடிப்படையில் அரசியல் கட்சிகள் அமைந்திருப்பது தவறு என்றும், அவை கொள்கைகளின் அடிப்படையிலேயே அமைய வேண்டும் என தான் கருதுவதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.
சம்பந்தரின் இணக்க அரசியல்
கொள்ளுப்பிட்டி ரேணுகா ஹோட்டலில் செய்தியாளர் மா நாடு ஒன்றினை நடாத்திய ஹக்கீம் மற்றும் சம்பந்தன் ஆகியோர் அங்கு பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளனர். அதில் முக்கியமானது பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காணப்படல்வேண்டும்? என செய்தியாளர் கேட்டபோது சம்பந்தன் கீழ் வருமாறு பதிலளித்தார்.
ஐக்கியப்பட்டு இணைந்து வேலைசெய்யவேண்டும். பிரச்சினைக்கு இணைந்து தீர்வுகாண்பதற்கு முன்வரவேண்டும். பிரிவினைவாத பிரசாரத்தை மேற்கொள்வதன் மூலமாக அபிவிருத்தியை எதிர்பார்க்கமுடியாது. அது எதிர்காலத்தில் பெரும் பிரச்சினையாக அமையும். பிரிவினைவாதத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு நான் அன்றிலிருந்தே கோரிவருகின்றேன்.
என திட்டவட்டமாக குறிப்பிட்டார் சம்பந்தன் இவ்வாறுதான் விடுதலைப்புலிகளை புறம் தள்ளுவதற்காக அல்லது தமது சுய நலன்களிற்காக மக்களின் நலன் கருதி அரசாங்கத்துடன் சேருகின்றோம் அல்லது இணக்க அரசியல் என்று பலர் வரிந்து கட்டிக்கொண்டு சென்றனர். அவர்களின் அரசியல் வாழ்க்கை மக்களால் தோற்கடிகப்பட்டு வருகின்றன.சம்பந்தன் அவர்களையும் மக்கள் பல தடவை தோற்கடித்துள்ளனர். ஆனால் விடுதலைப்புலிகளின் உதவியுடன் மீண்டும் மக்கள் தலைவனாகலாம் என்ற உள் நோக்கோடு வந்த சம்பந்தன் அதனை இலாவகமாக பிடித்துக்கொண்டார்.
இப்போது மீண்டும் தனது சுய நலனை வைத்து தமிழ் மக்களின் உரிமைகளை அடகு வைத்து, நம்பிக்கை துரோகம் இழைக்க முயல்கின்றார். அதாவது இணக்க அரசியல் ஊடாகத்தான் அபிவிருத்தியினை செய்ய முடியும் என ஏமாற்றும் வித்தையினை காட்ட முயல்கின்றார். தான் ஓர் பிரிவினை வாதியாக அல்லாமல் அனைவரையும் அணைத்து போகும் பாங்கு உடையவராக காட்டுகின்றார்.
ஆனால் சிங்கள மக்களும், சிங்கள தலைவரும் பிரிவினை வாதத்தினையும், இனவாதத்தினையும் முற்று முழுதாக ஏற்றுக்கோண்டு செயற்படுகின்றனர். அதில் வெற்றியும் பெற்றுக்கொண்டனர். ஆகவே பிரிவினை வாதமும், இனவாதமும் மேலோங்கி போயிருக்கும் சிங்கள இனத்திற்குள் இணக்க அரசியல் என்பது டக்ளஸ், கருணா, பிள்ளையான் போலவே இருக்கும்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் பாடம் கற்றுக்கொண்ட தமிழ் விரோத செயற்பாட்டாளர்கள் தாம் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் சேர்ந்து கொண்டால் மக்களால் தோற்கடிக்கப்படுவர் என்ற அடிப்படையில் மெது மெதுவாக விலகி தாம் தனித்து போட்டியிட போவதாக முணு முணுத்துக்கொண்டு இருக்கையில் சம்பந்தனோ மீண்டும் அபிவிருத்தி கருதி பிரிவினை வாதத்தினை கைவிட போவதாக அறிவித்துள்ளார்.
தனது சொந்த கருத்தினை தமிழ் மக்களின் உரிமைகள் மீது பிரயோகிக்க கூடாது என்பதே எமது கருத்து. கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் கூட பெரும்பாலான கூட்டமைப்பு எம்.பி.க்களின் முடிவு ஒருவரையும் ஆதரிப்பதில்லை என்று இருந்த போதும் சரத் பொன்சேகாவை ஆதரிக்குமாறு எம்.பி க்களை வற்புறுத்தியும், பல அழுத்தங்களை உபயோகித்துமே ஏகமனதான முடிவு என அறிவிக்கப்பட்டது.
இனி வரும் பொது தேர்தலிலும் சம்பந்தன் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு, அதிகார பரவலாக்கல் என்றுதான் தனது கொள்கையினை முன்வைத்து ஏனைய உறுப்பினர்களையும் தம்பக்கம் சாய வைப்பார். இல்லாவிடில் அவர்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு இருக்காது என விரட்டப்படுவார்கள்.
இப்போதே சிவாஜிலிங்கம் உட்பட பலருக்கு சீட்டு கிழிக்கப்பட்டுள்ளது. இந்த நாடகம் தேர்தலி தனித்து போட்டியிட்டதற்காக என கூறினாலும் காரணம் அதுவல்ல. காரணம் ஏற்கனவே தாம் விரும்பிய பல புதிய உறுப்பினர்களுக்கு அடுத்த தேர்தலில் சீட்டு தருவதாக சம்பந்தன் வாக்குறுதி அளித்துள்ளார்.
புலம்பெயர் நாடுகளில் ஒருபக்கம் மக்கள் தமிழீழ தாயகத்திற்காக வாக்களிக்க, தாயகத்தில் சம்பந்தன் பிரிவினையே தேவை இல்லை என்று கூறிக்கொண்டு இருப்பது மக்களை இரண்டாக பிரிக்கும் செயலாகவே இருக்கும். சிலர் கூறலாம் தாயகத்தில் மக்கள் பெரும் துன்பங்களை அனுபவிக்கின்றார்கள் நிலமை விளங்காது கதைக்கின்றனர் என்று. நிலமை விளங்கி செயற்படுவதனால் எதனையும் மஹிந்த தரும் சாத்தியம் உண்டா? டக்ளஸ் அவர்களும் மத்தியில் கூட்டாட்சி மா நிலத்தில் சுயாட்சி என்றார் நடந்தது என்ன? இவ்வளவு காலமும் தான் புலிகள் விடவிலை என்று காரணம் கூறினாலும் இப்போது கூட மக்கள் ஏற்று கொள்ளவில்லையே.
ஏன் கிழக்கு மாகாணத்தில் இணக்க அரசியல் ஊடாக எதனை சாதித்து கொண்டு இருக்கின்றனர். ஆக குறைந்தது மீன்பிடி தடைகளை கூட கிழக்கு மாகாண தலைவர்களால் நீக்க முடிந்ததா?
ஆகவே ஓவ்வொரு தடவையும் மக்களுக்கு அழுத்தங்களை கொடுத்து அவர்களை தேர்தலில் திக்கு முக்காட வைப்பதனை விட்டு விட்டு கொள்கையில் உறுதியாக இருந்து செயற்படுவதே நீண்டகாலத்தில் தமிழ் மக்களிற்கு பிரயோசனமானது. மக்களை அபிவிருத்தி செய்வதற்கு பல வழிகள் இருக்கின்றன. இணக்க அரசியல் இல்லாமல் சுயாதீனமாக மக்களிற்கு தேவையான உதவிகளை செய்து அவர்களுடனேயே இருந்து பணி புரிவதன் மூலம் மக்களிற்கு நம்பிக்கையினை ஏற்படுத்தவேண்டும்.
மாறாக சம்பந்தன் மக்களிற்கு பீதிகளை உருவாக்கி ஒவ்வொருவரது கருத்துக்களையும் முடக்கி தமது கருத்தினை ஏற்றுக்கொள்ளும் பொறி முறைகளையே செய்து வருகின்றார். இது சாதாரணமாக சிங்கள அரசாங்கம் தேர்தல் காலங்களில் செய்யும் ஒன்றே என்பதனை சம்பந்தனும் அவரை அரசியலில் முதிர்ந்து பழுத்த பழம் எனக்கூறும் புத்திஜீவிகளும் புரிந்து கொள்ளவேண்டும்.
இல்லையேல் மீண்டும் யாராவது இவர்களது விடயங்களில் தலையிடவேண்டிய அசெளகரியமான சூழல் ஏற்படலாம். ஏனெனில் தாயகத்தில் மக்கள் இன்னமும் விழிப்பாகவே இருக்கின்றார்கள்
ஞாயிறு, 31 ஜனவரி, 2010
சிறிலங்காவின் ஜனாதிபதித்தேர்தலும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் முற்றான முடிவுகளும்
இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் பல தில்லுமுல்லுகளுக்கும் மோசடிகளுக்கும் மத்தியில் முடிவுக்கு வந்துள்ளது. தற்போதைய ஜனாதிபதியாகவுள்ள மகிந்த ராஜபக்ச எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேகாவை விட 1,842,749 மேலதிக வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளார் என உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் படி மீண்டும் மகிந்த இராஜபக்சவே ஆட்சிக்கட்டிலை அலங்கரித்தும்விட்டார். இதன் ஊடாக தமிழ் மக்களை கொன்று குவித்த முதன்மையான போர் நாயகன் மகிந்தவே என அழுத்தம் திருத்தமாக சிங்களவர்கள் தீர்ப்புக்கூறி அவருக்கு முடி சூட்டியுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் கணிசமான அளவு வாக்குப்பதிவுகள் இடம் பெற்றிருந்தும் கூட இந்தத் தேர்தலில் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழ்மக்கள் குறைந்தளவிலேயே வாக்களித்திருந்ததாக வெளியாகியிருந்த தகவல்கள் கூறின.இதற்கு பல வகையான காரணங்கள் இருக்கின்றன. ஒன்று சிங்களதேசத்துக்கான ஜனாதிபதியை தேர்வு செய்வதில் தமிழீழ தேசத்து மக்கள் ஆர்வம் காட்டவில்லையென்பதும், இதனால் தமக்கு எவ்வித நன்மையும் வந்து சேரப்போவதில்லை எனவும் அவர்கள் கருதியது, இரண்டு, இரு வேட்பாளர்களுமே தமிழ் மக்களை ஈவு இரக்கமின்றி அதர்மமானமுறையில் யுத்தத்தில் வழிநின்று கொன்று குவித்ததுடன் தங்களினதும் தங்கள் உறவுகளினதும் சொத்துகளுக்கும் உடமைகளுக்கும் பெரும் அழிவினைச்செய்தவர்கள் என எண்ணியதும், இவ்விருவரும் இனவாதத்தில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என கருதியதுமாகும்.
எனினும்,தமிழர் தாயகப்பகுதியான வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கமைய கணிசமான மக்கள் ஆட்சிமாற்றம் ஒன்றினை மட்டும் நோக்காகக்கொண்டு வாக்களிக்க முடிவெடுத்திருந்தனர். ஏனெனில், இதற்கு சில புறநிலைக்காரணிகளும் இருந்தன. எனினும், அரசினதும் அதன் அடிவருடிகளினதும் அடாவடித்தனமான செயல்களாலும், சதிகளாலும், அச்சுறுத்தல்களாலும் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க முடியாதவாறு தடுக்கப்பட்டிருந்தார்கள் என வெளிவந்த செய்திகள் அனைத்தும் எடுத்துக்காட்டியிருந்தன. இதற்காக வடக்கில் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலுள்ள தேசத்துரோகக்கும்பலையும் இன்னும் சில உதிரி ஒட்டுண்ணிகளையும் அரசு பயன்படுத்தியது. இதே போன்று கிழக்கில் தமிழ் பகுதிகளில் கருணா, பிள்ளையான் போன்ற எட்டப்பர்களையும் முஸ்லீம் பகுதிகளில் அதாவுல்லா போன்ற பதவிசுகத்தை மையமாக வைத்து சிங்களத்துக்காக எதையும் செய்ய துணிகின்ற காடையர்களையும் அரசு தீவிரமாக ஈடுபடுத்தியிருந்தது.
வடக்கில் எட்டப்பன் டக்ளஸ் முதலில் மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளையும் ஆசை வலை வீச்சுக்களையும் அள்ளி அள்ளிவீசினார். பின்னர் தன் எஜமானர்களை எப்படியும் ஆட்சிக்கட்டிலில் ஏற்றினால்தான் தொடர்ந்து பிழைப்பை நடத்த முடியும் என்பதற்காக கபடத்தனமான முறையில் சுவரொட்டிகளை ஒட்டி மக்களை திசைதிருப்ப முயன்றார். அதிலும் திருப்தி கொள்ளாத அந்த கோடாலிக்காம்பு வாக்களிப்பு நாளில் தன் கூலிகளை ஏவி பெற்றோல் குண்டுகளை வீசியும், கைக்குண்டுகளை வெடிக்கவைத்தும் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாதவாறு அச்சுறுத்தி மிக மோசமான ஜனநாயக மீறலையும் செய்தார். இதே போன்றே கிழக்கிலும் மேற்சொன்ன கருணா பிள்ளையான் அதாவுல்லா போன்ற எச்சிலைப்பொறுக்கிகளை வைத்து மகிந்த சகோதரர்கள் தமது அடாவடித்தனமான ஜனநாயக விரோதச்செயற்பாடுகளை தேர்தல் திருவிழா தொடங்கிய நாளில் இருந்து நடாத்தி வந்தனர். இதற்கமைய, தமிழ்ப்பகுதிகளில் கருணாவும் பிள்ளையானும் தமது அதி உத்தம சிங்கள எஜமானர்களுக்காக போட்டிபோட்டுக்கொண்டு தங்கள் கைவரிசையக்காட்டி மக்களை சொல்லொணா வகையில் துன்பப்படுத்தினர். தமிழினத்தின் கிழக்கிற்கான முதன்மையான இவ்விரு துரோகிகளும் ஆளாளுக்கு ஒரு பக்கம் நின்றுகொண்டு தேர்தல் பிரச்சார காலங்களில் பலவந்தமாக மக்களை பிடித்து வந்து தமது எஜமானர்கள் கண் முன் கூட்டங்களை நிரப்பி பொய்யான வாக்குறுதிகளையும் வெற்று வாய்ஞாலங்களையும் அள்ளி அள்ளி வீசி எறிந்தனர். அத்தோடு அந்த வீணர்கள் சிங்கள இராணுவ பலத்தின் கால்ச்செருப்பாக தேய்ந்து கொண்டு ஒவ்வொரு தமிழ் மக்கள் வீடுகளுக்கும் படியேறிச் சென்று தமிழ் மக்களை வயது பால் வேறுபாடின்றி கொத்துக்கொத்தாக அழித்தவனுகாக தமது இழிவான வல்லமைகளின் மூலம் வாக்குத்தேடினர். அது மட்டுமின்றி தமிழ் இனத்தின் அக் கழிவுகள் வாக்குச்சாவடி வாசல்களிலும் போய் நின்று கொண்டு மக்களைப்பயமுறுத்தி அவர்கள் சுயமாக வாக்களிக்கமுடியாதவாறு தடுத்து குழப்பங்களை ஏற்படுத்தியதுடன் தமது எஜமானான அதிமேன்மை தங்கிய மகிந்தவிற்கே வாக்களிக்க வேண்டும் என்று கைகாட்டி கட்டளையிட்டும் கட்டாயப்படுத்தியுமிருந்தனர் இந்த புத்திபேதலித்தவர்கள்.
இது இவ்வாறிருக்க, மகிந்த சகோதரர்களின் கிழக்கு முஸ்லீம் பகுதிகளுக்கான முகவர்களில் ஒருவனான சிங்கள அடிவருடியும் ரவுடி அமைச்சருமான அதாவுல்லா தமிழ் மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் இடையே குரோதத்தையும் பகைமையையும் தூண்டி தனது மானசீக தலைவன் மகிந்தவிற்காக வாக்கு வேட்டையில் மிகத்தீவிரமாக இறங்கியிருந்தார். அந்தச்சமயம் காத்தான்குடி பிரதேசத்தில் வாக்குக்கேட்டுச்சென்ற அதாவுல்லாவை அப்பிரதேசமக்கள் கல்லால் அடித்துத்துரத்தியுள்ளனர்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒன்றுபட்டு ஒத்த கொள்கையுடன் ஒரே குறிக்கோளுக்காக தேர்தலை சந்தித்தவேளை இதனை விமர்சனம் செய்து தனது நயவஞ்சக நஞ்சு விதைக்கொள்கையான தமிழ் முஸ்லீம் இனவாதத்தைத்தூண்டி சகல முஸ்லீம் மக்களிடமும் மிகக்கேவலமான முறையில் வாக்குப்பிச்சை கேட்டு அலைந்துதிரிந்தார். அத்துடன், இவரும் தனது வழமையான அடாவடி அரசியல் தனங்களையும் அட்டூழியங்களையும் முஸ்லீம் மக்கள் மீதும் முஸ்லீம் காங்கிரஸ் கட்சியினர் மீதும் ஏவி அநியாயங்களைப்புரிந்திருந்தார்.
எது எப்படி இருந்தாலும் நடந்து முடிந்த தேர்தல் மூலம் சிறிலங்காதேசத்தின் ஜனநாயக விரோதப் போக்கு கொண்ட இந்த பயங்கரவாதக்கூட்டணி தமிழர் தாயகத்தில் மூக்குடைபட்டு தங்கள் முகத்தில் கரியைப்பூசிக்கொண்டு நிற்பதை அனைவரும் இன்று காணக்கூடியதாக இருக்கின்றது.அதாவது, பெரும்பான்மையில் இத் தேர்தலை நிராகரித்துள்ள தமிழ் மக்கள் தங்களை எந்தவிதமான அழுத்தங்களை பிரயோகித்தும் எந்தவகையிலுமான பயங்கரவாதங்களைத்திணித்தும் தமது உணர்வையும் எண்ணப்பாட்டையும் மாற்ற முடியாது என்பதனையும் கட்டுப்படுத்த இயலாது என்பதனையும் அடித்துச்சொல்லியுள்ளார்கள். அதே நேரம் சில புற நிலைக்காரணிகளுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேண்டுதலின் பேரில் மாற்றம் ஒன்றிணை மட்டும் நோக்காகக்கொண்டு அவர்களின் எதிர்பார்ப்பினையும் சில மக்கள் கருத்தில் எடுத்து தமது ஆதரவையும் வழங்கியிருக்கின்றார்கள். அது, சுதந்திர தமிழீழம் நோக்கிய தாயகம் தேசியம் சுயநிர்ணயம் என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் வழிகாட்டுதலில் அவர்கள் பயணிக்கும் ஒட்டுமொத்த தமிழர்களின் அரசியல் எண்ண ஓட்டத்துக்கும் நாட்டத்துக்கும் கிடைத்த ஆதரவேயன்றி வேறொன்றுமில்லை என்பதை அனைவரும் மனதில் நிறுத்துதல் வேண்டும்.
ஆகவே,சிறிலங்காவின் 2010 அரசதலைவர் தேர்தலைப்பொறுத்தவரை வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் மனநிலை என்னவென்பதை தமிழ் மக்களால் மீண்டுமொருமுறை இந்த உலகுக்கும் இதுவரை உணராத எல்லோருக்கும் அறுதியிட்டுச்சொல்லப்பட்டுள்ளது. அதாவது, சிறிலங்கா அரசு எந்த இராணுவப்பல கொடுமைகள் மூலமும் எவ்வகையான அடக்குமுறைகள் அநியாயங்கள் ஊடாகவும் தங்கள் எண்ணங்களையும் தங்கள் எதிர்பார்ப்புக்களையும் தங்கள் மேல் திணிக்கமுடியாது என்பதையும், ஒட்டுக்குழுக்களினது எட்டப்பர்களினதும் பசப்பு வார்த்தைகள் தம்மிடம் ஒருபோதும் எடுபடாது என்பதையும், சோரத்தில் கருவான அந்த இழிபிறவிகள் தமிழ்மக்கள் மேல் செலுத்தும் செல்வாக்கு எப்படிப்பட்டது என்பதையும் இத் தேர்தல் மூலம் மிக ஆணித்தரமாக கூறியுள்ளார்கள்.மொத்தத்தில், எமது மக்கள் நீங்கள் வேறு நாடய்யா நாங்கள் வேறு நாடய்யா என்பதை நிலைநாட்டிக்கொண்டுள்ளனர்.
வெள்ளி, 8 ஜனவரி, 2010
வியாழன், 7 ஜனவரி, 2010
மகிந்தவின் சாதனையும் எட்டப்பர்களின் வேண்டுகோளும் தமிழர்களின் கேள்வியும்
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட முழுநிலப்பரப்பையும், மன்னார் வவுனியா யாழ் மாவட்ட பகுதி நிலப்பரப்புக்களையும் சுடுகாடாக்கி அங்கு வாழ்ந்த தமிழ் முஸ்லீம் மக்களை அடியோடு வேரறுத்து முள்ளிவாய்க்கால் வரை ஓட ஓட விரட்டி கொத்துக்குண்டுகளாலும் எறிகணைகளாலும் இரசாயனக்குண்டுகளாலும் விமானக்குண்டுகளாலும் ரொக்கேட் குண்டுகளாலும் பல்வகை வேட்டுக்களாலும் குண்டு மாரி பொழிந்து நாற்பத்தையாயிரத்துகும் மேற்பட்ட தமிழ் மக்களின் உயிர்களை பலியெடுத்து முப்பத்தையாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களின் உடலுக்குள் இரும்புத் துகள்களை செலுத்தி பல நூறு பேரின் அங்கங்களை பறித்து கோடான கோடி சொத்துக்களை அழித்து மந்தைக்கூட்டத்துக்கு உள்ள சுதந்திரத்தைக் கூட வழங்காது எமது உடன் பிறப்புக்களை முட் கம்பி வேலிகளுக்குள் அடைத்து விட்டு எமது இனத்தின் விடுதலைக்காக உயிர் நீத்த உத்தமர்கள் உறங்கும் கல்லறைகளையும் நினைவுத்தூபிகளையும் மதிக்காமல் இடித்தழித்து உலகெங்கும் கோடி கோடியாக அன்பளிப்பும் கடனும் பெற்று பெற்றதில் முப்பது வீதத்தை மக்களுக்கு பிச்சை போடுவதுபோல் போட்டுவிட்டு மிகுதி எழுபது வீதத்தை தானும் தனது எட்டப்பர் கூட்டங்களும் சூறையாடி அகதிமுகாமில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தை மீதும் கடன் சுமைகளை செலுத்தி மக்களின் பணத்தை சுரண்டி மக்களின் பார்வைக்காக நான்கு பாலங்களைக் கட்டி நான்கு வீதிக்கு கறுப்புத்தார் ஊற்றி நான்கு தெருவுக்கு மின் கம்பங்களை நாட்டியதுதான் மகிந்த இதுவரை செய்த சாதனையாகும்.
யுத்தத்தை யுத்தத்தின் மூலம் அழித்து தமிழ் மக்களின் பிரச்சனைகளை அரசியல் தீர்வு மூலம் முடிப்பதாக கூறிய மகிந்த இன்றுவரை புலிகள் ஆயுதங்களை மௌனித்து வைத்திருக்கும் நிலையிலும் எவ்வித தீர்வையும் வழங்காது தமிழ் மக்களை அடிமைகள் போல் கருதி தமிழர் தாயகத்தில் இராணுவ அதிகாரிகளை மாவட்ட அதிபர்களாகவும் மாகாண ஆளுனர்களாகவும் நியமித்து தனது பேரினவாத சுயரூபத்தை வெளிப்படுத்தியதன் ஊடாகவும் சர்வாதிகார வெறி கொண்டு தனது பதவிக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில் தமிழ் மக்களின் இரத்தம் குடித்த கனவான் நானே என சிங்கள மக்கள் முன் தன்னை நிலை நிறுத்த மகிந்த அமைத்த தேர்தல் களமே இப்போதைய தேர்தல் களம். பல்லாயிரம் தமிழ் இளைஞர்கள் யுவதிகள் சிறைக்கூடங்களிலும் வதை முகாம்களிலும் இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அடைக்கப்பட்டு இருக்கையிலும் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை முட் கம்பி வேலிகளுக்குள் அடைத்து ஏதிலிகளாக்கி சுதந்திரங்களைப் பறித்து நிர்க்கதியாக்கி அனைத்து தமிழ் மக்களையும் பேசா மடந்தையாக்கியுள்ள நிலையிலும் குண்டு மழை பொழிந்து காயப்படுத்திய எமது உடன் பிறப்புக்களின் பச்சைப் புண் ஆறும் முன் அவர்களின் வேதனைகளின் குரலை தனது தாண்டவத்தின் ராகமாக்கி தமிழர் செங்குருதி குடித்த மகிந்தவிற்கு வரும் தேர்தலில் வாக்குப்போட்டு தன்மானத் தமிழர்களாகிய நீங்கள் அவரின் ஆட்டத்துக்கு தாளம் போட்டு துணை போகப்போகின்றீர்களா?
தமிழர்களை கொல்லும் நெஞ்சத்துடன் கொச்சை தமிழ் பேசி முகம் மலர்த்தி கை குலுக்கி கட்டி அணைத்து விட்டு எமது முதுகில் குத்தும் மகிந்தவிற்கு எட்டப்பர்களின் பசப்பு வார்த்தைகளை கேட்டு வாக்குப் போடப்போகின்றீர்ளா? தமிழர்களின் தாயகத்தை மாகாண ரீதியாகப் பிரித்து தமிழர் தலையில் மிளகாய் அரைத்த அத்தனை எட்டப்பர்களையும் கொண்டு குறிப்பாக தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று ராளுமன்றம் செல்லாதவர்களை வைத்து மாவட்ட ரீதியாக தமிழர் தாயகத்தை எவ்வித அதிகாரங்களுமின்றி அதிகார பலத்தால் தனது கட்டுப்பாட்டுக்குள் அடவடித்தனமாக வைத்திருக்கிறார் மகிந்தர். எடுத்துக்பாகாட்டாக, கிழக்கு மாகாண முதல் அமைச்சரான எட்டப்பன் கூட தனது மாகாணத்துக்குட்பட்ட அம்பாறை மாவட்டத்திற்கோ மட்டக்களப்பு மாவட்டத்திற்கோ சென்று சுயமாக நடவடிக்கைகளை செய்ய முடியாத நிலையே உள்ளது. அம்பாறயில் காமவெறியன் இனியபாரதியை வைத்தும் மட்டக்களப்பில் எட்டப்பன் கருணாவை வைத்தும் அதிகாரம் செய்யும் மகிந்த, தமிழ் மக்களின் அறிவினது மையமாக விளங்கும் யாழ் மாவட்டத்தில் பொன்னுக்கும் பொருளுக்கும் புகழாரத்துக்கும் ஆசைப்பட்டு கிடக்கும் எட்டப்பன் டக்ளஸ் தேவானந்தாவை வைத்தும் தனது தேவையை நிறைவேற்றுகின்றார். கடந்த காலங்களில் தமிழ் மக்களின் தனித்துவத்தை விலை பேசிய இத் தேசத்துரோகி மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்று கோசமிட்டு வீணையைத்தூக்கி நாதம் இசைத்தவன் இப்போது எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு வெத்திலை தட்டத்தை ஏந்தி மகிந்தவின் புத்தியில் யாழ் மாவட்டத்துக்குள் முடங்கிப் போய் கிடக்கிறான். இப்படிப்பட்ட மகிந்தவின் பிரித்தாளும் அரசியலுக்காகவா தமிழ் இனம் ஒரு இலட்சத்து எழுபத்தையாயிரம் மக்களின் உயிர்களையும் முப்பத்திமூவாயிரத்துக்குமேற்பட்ட மாவீரர்களையும் கோடான கோடி சொத்துக்களையும் பல்லாயிரம் பேரின் அவயங்களையும் பல்லாயிரம் லீற்றர் செங்குருதிகளையும் வியர்வைகளையும் கண்ணீர்களையும் பறி கொடுத்தார்கள் இவ்வாறு தமிழ் தேசியத்தை பிரித்தாண்டு அடிமைப்படுத்த முகாம் அமைத்து செயற்படும் எட்டப்பர்களின் பேச்சை கேட்டு மகிந்தவிற்கு ஓட்டுப்போட்டு அடுத்த தலை முறைக்கும் சவக்குழி வெட்டப்போகின்றீர்களா?
யுத்தம் நடந்த போது வயது பால் வேறுபாடின்றி ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்த மகிந்த, யுத்தம் முடிந்து விட்டதாக அறிவித்த கடந்த ஏழு மாதத்துக்குள் வடக்கு கிழக்கு தாயகத்திலும் ஏனைய இடங்களிலும் இரண்டு டசினுக்கு மேல் எமது மக்கள் காணாமல் போயினர். பல டசின் கணக்கான இளைஞர் யுவதிகள் கொல்லப்பட்டனர் இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த மகிந்த அங்குறாணை என்ற இடத்தில் பொலிசாரால் இரண்டு சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டவுடன் துடித்துப் பதைத்து அவர்களின் வீட்டுக்குச் நேரில் சென்று மன்னிப்புக்கேட்டு ஆறுதல் கூறிவிட்டு பல இலட்சம் ரூபா பணத்தையும் நட்ட ஈடாகக் கொடுத்தார். ஆனால், இரண்டு டசினுக்கு மேற்பட்ட தமிழர்களை கொன்ற சூத்திரதாரிகளை இன்றுவரை கண்டு பிடிக்கவில்லை அதற்கான முயற்சிகளையும் அவர் எடுக்கவில்லை. அவர்களுக்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படவுமில்லை இப்படி எந்தவித கரிசனையும் கொள்ளாத மகிந்தவினை எட்டப்பர்களின் சொல்லையும் தேசத்துரோகிகளின் பேச்சையும் கேட்டு அரச சிம்மாசனத்தில் அமர வைக்கப் போகின்றீர்களா?
யுத்தம் நடந்த போது தமிழ் மக்களின் வழிபாட்டுத்தலங்களை அழித்து அவர்களின் இரத்தத்தையும் குடித்து கோர தாண்டவம் ஆடிய மகிந்த யுத்தம் முடிந்து ஏழு மாதத்துக்குள் தனது ஏவற் கூட்டத்தை வைத்து கண்டியில் வீதியோர பிள்ளையார் கோயிலை புல்டோசர் கொண்டு தகர்த்து வீதியோரத்தில் தள்ளியுள்ளான். காலி கதிரேசன் ஆலயம் சேதமாக்கப்பட்டு தெய்வ விக்கிரகங்களும் களவாடப்பட்டுள்ளது. திருமலையில் திருக்கரையம்பதி ஆலயம் சேதமக்கப்பட்டு சிவனின் தலை துண்டிக்கப்பட்டு விக்கிரகங்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது இவ்வாறு இருக்க யாழ் மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் அதிகமாக வசிக்கும் இடத்தில் புத்த விகாரை அமைக்கப்படுவதுடன் மற்றும் பல இடங்களிலும் புத்த விகாரைகள் புதிது புதிதாக நிர்மாணிக்கப்படுகின்றன. அன்று திருமலை மத்தியில் புத்த விகாரை அமைக்க முயன்றவர்களை தமிழ் மக்கள் தடுத்த போது இராணுவத்தை வைத்து பாதுகாப்பு வழங்கிய அரசு இன்று தமிழ் மக்களின் வழிபாட்டுத்தலங்களை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுத்தது. புத்தனுக்கு ஒரு நீதி அல்லாவுக்கும் ஜேசுவுக்கும் சிவனுக்கும் ஒரு நீதியா? இப்படிப்பட்ட புறம் போக்கு மகிந்தவிற்கா எட்டப்பர்களின் சொல்லைக் கேட்டு வாக்குப்போடப்போகின்றீர்கள்?
கடந்த அறுபது ஆண்டுகளுக்கு முன் இருந்து சிங்கள பேரினவாதிகள் இன ஒடுக்கலை பற்றி வந்ததன் காரணமாக எமது தாயகத்தையும் எமது பண்பாட்டையும் எமது மொழியையும் காப்பாற்றுவதற்காக கடந்த முப்பது ஆண்டுகளாக எண்ணற்ற உயிர் விலை கொடுத்தும் பல தியாகங்களை செய்தும் தமிழ் மக்களாகிய நாங்கள் போராடி வருகின்றோம் . உலக வல்லாதிக்க கரங்களை கொண்டு தமிழ் இனத்தை தோற்கடித்து விட்டோம் என்ற வேற்றி மமதையில் மூழ்கி நிற்கும் மகிந்த அதன் உச்சக்கட்ட வெளிப்பாடாக 20/09/2009 அன்று தோணிதாண்டமடு என்ற இடத்தில் குடியிருந்த எழுபத்தியொரு தமிழ் குடும்பங்களை ஊரை விட்டே விரட்டி அடித்து நிஜாப் திட்டத்தில் அவர்களுக்கு கட்டிக்கொடுத்த வீடுகளை அவர்களை கொண்டே இடித்து காட்டுமிராண்டித்தனத்தை காட்டி அம் மக்களை ஏதிலியாக்கியுள்ளான். இந்த குடி அழிப்புக்கு பச்சை கொடி காட்டியவனும் இந்த மகிந்த இராஜபக்சதான் . இந்த கழுத்தறுப்புக்கு துணையாக நின்ற பச்சைத் துரோகிகளான எட்டப்பர்களின் பேச்சைக் கேட்டா இந்த படு பாதகனுக்கு வாக்களிக்கப் போகின்றீர்கள்?
கடந்த 2009 மே மாத நடுப்பகுதியில் தமிழர்களின் இதயப்பகுதியான வன்னி மண்ணில் வசித்த மூன்று இலட்சம் தமிழ் மக்களையும் பிடித்து வந்து வதை முகாம்களிலும் முட் கம்பி வேலிகளுக்குள்ளும் அடைத்து விட்டு தமிழ் மக்களின் புனர்வாழ்வுக்கென்று உலகெங்கும் கையேந்தி பிச்சையாகவும் கடனாகவும் பெற்ற கோடி கோடியான பணத்தில் இற்றைவரைக்கும் குறைந்த பட்சம் ஒருவருக்கு மூன்று இலட்சம் ரூபா வீதம் புனர்வாழ்வு அளித்திருக்க வேண்டும் ஆனால் மக்களுக்கு வழங்கப்பட்டதோ சில ஆயிரம் ரூபாக்களும் நுகர்வுப்பொருட்களும் மட்டும்தான் இந்த பாதகச் செயலுக்கும் காரணமானவன் நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான மகிந்த இராஜபக்சதான் என்பதை மக்கள் புரிந்து நடக்க வேண்டும். தமிழ் மக்களின் இத்தனை அவலத்தின் மத்தியிலும் மேலும் ஆட்சிக் கதிரையைப் பிடிக்க நினைக்கும் மகிந்த இராஜபக்சவுக்கு எட்டப்பர்களின் நயவஞ்சக வார்த்தைகளைக் கேட்டு அடிமை சாசனம் எழுதப் போகின்றீர்களா?
அன்பார்ந்த தமிழீழ மக்களே! ஆண்டாண்டு காலமாக நாம் காத்து வந்த மானத்தையும் வீரத்தையும் விவேகத்தையும் விலை பேச எட்டப்பர்கள் முயலலாம் ஆனால், வீரமும் விவேகமும் நிறைந்த தமிழ் மக்களாகிய நாங்கள் விலை போகக்கூடாது என்று உறுதியெடுத்துக்கொள்வோமாக.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
மானத்தமிழ் மகன்
யுத்தத்தை யுத்தத்தின் மூலம் அழித்து தமிழ் மக்களின் பிரச்சனைகளை அரசியல் தீர்வு மூலம் முடிப்பதாக கூறிய மகிந்த இன்றுவரை புலிகள் ஆயுதங்களை மௌனித்து வைத்திருக்கும் நிலையிலும் எவ்வித தீர்வையும் வழங்காது தமிழ் மக்களை அடிமைகள் போல் கருதி தமிழர் தாயகத்தில் இராணுவ அதிகாரிகளை மாவட்ட அதிபர்களாகவும் மாகாண ஆளுனர்களாகவும் நியமித்து தனது பேரினவாத சுயரூபத்தை வெளிப்படுத்தியதன் ஊடாகவும் சர்வாதிகார வெறி கொண்டு தனது பதவிக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில் தமிழ் மக்களின் இரத்தம் குடித்த கனவான் நானே என சிங்கள மக்கள் முன் தன்னை நிலை நிறுத்த மகிந்த அமைத்த தேர்தல் களமே இப்போதைய தேர்தல் களம். பல்லாயிரம் தமிழ் இளைஞர்கள் யுவதிகள் சிறைக்கூடங்களிலும் வதை முகாம்களிலும் இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அடைக்கப்பட்டு இருக்கையிலும் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை முட் கம்பி வேலிகளுக்குள் அடைத்து ஏதிலிகளாக்கி சுதந்திரங்களைப் பறித்து நிர்க்கதியாக்கி அனைத்து தமிழ் மக்களையும் பேசா மடந்தையாக்கியுள்ள நிலையிலும் குண்டு மழை பொழிந்து காயப்படுத்திய எமது உடன் பிறப்புக்களின் பச்சைப் புண் ஆறும் முன் அவர்களின் வேதனைகளின் குரலை தனது தாண்டவத்தின் ராகமாக்கி தமிழர் செங்குருதி குடித்த மகிந்தவிற்கு வரும் தேர்தலில் வாக்குப்போட்டு தன்மானத் தமிழர்களாகிய நீங்கள் அவரின் ஆட்டத்துக்கு தாளம் போட்டு துணை போகப்போகின்றீர்களா?
தமிழர்களை கொல்லும் நெஞ்சத்துடன் கொச்சை தமிழ் பேசி முகம் மலர்த்தி கை குலுக்கி கட்டி அணைத்து விட்டு எமது முதுகில் குத்தும் மகிந்தவிற்கு எட்டப்பர்களின் பசப்பு வார்த்தைகளை கேட்டு வாக்குப் போடப்போகின்றீர்ளா? தமிழர்களின் தாயகத்தை மாகாண ரீதியாகப் பிரித்து தமிழர் தலையில் மிளகாய் அரைத்த அத்தனை எட்டப்பர்களையும் கொண்டு குறிப்பாக தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று ராளுமன்றம் செல்லாதவர்களை வைத்து மாவட்ட ரீதியாக தமிழர் தாயகத்தை எவ்வித அதிகாரங்களுமின்றி அதிகார பலத்தால் தனது கட்டுப்பாட்டுக்குள் அடவடித்தனமாக வைத்திருக்கிறார் மகிந்தர். எடுத்துக்பாகாட்டாக, கிழக்கு மாகாண முதல் அமைச்சரான எட்டப்பன் கூட தனது மாகாணத்துக்குட்பட்ட அம்பாறை மாவட்டத்திற்கோ மட்டக்களப்பு மாவட்டத்திற்கோ சென்று சுயமாக நடவடிக்கைகளை செய்ய முடியாத நிலையே உள்ளது. அம்பாறயில் காமவெறியன் இனியபாரதியை வைத்தும் மட்டக்களப்பில் எட்டப்பன் கருணாவை வைத்தும் அதிகாரம் செய்யும் மகிந்த, தமிழ் மக்களின் அறிவினது மையமாக விளங்கும் யாழ் மாவட்டத்தில் பொன்னுக்கும் பொருளுக்கும் புகழாரத்துக்கும் ஆசைப்பட்டு கிடக்கும் எட்டப்பன் டக்ளஸ் தேவானந்தாவை வைத்தும் தனது தேவையை நிறைவேற்றுகின்றார். கடந்த காலங்களில் தமிழ் மக்களின் தனித்துவத்தை விலை பேசிய இத் தேசத்துரோகி மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்று கோசமிட்டு வீணையைத்தூக்கி நாதம் இசைத்தவன் இப்போது எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு வெத்திலை தட்டத்தை ஏந்தி மகிந்தவின் புத்தியில் யாழ் மாவட்டத்துக்குள் முடங்கிப் போய் கிடக்கிறான். இப்படிப்பட்ட மகிந்தவின் பிரித்தாளும் அரசியலுக்காகவா தமிழ் இனம் ஒரு இலட்சத்து எழுபத்தையாயிரம் மக்களின் உயிர்களையும் முப்பத்திமூவாயிரத்துக்குமேற்பட்ட மாவீரர்களையும் கோடான கோடி சொத்துக்களையும் பல்லாயிரம் பேரின் அவயங்களையும் பல்லாயிரம் லீற்றர் செங்குருதிகளையும் வியர்வைகளையும் கண்ணீர்களையும் பறி கொடுத்தார்கள் இவ்வாறு தமிழ் தேசியத்தை பிரித்தாண்டு அடிமைப்படுத்த முகாம் அமைத்து செயற்படும் எட்டப்பர்களின் பேச்சை கேட்டு மகிந்தவிற்கு ஓட்டுப்போட்டு அடுத்த தலை முறைக்கும் சவக்குழி வெட்டப்போகின்றீர்களா?
யுத்தம் நடந்த போது வயது பால் வேறுபாடின்றி ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்த மகிந்த, யுத்தம் முடிந்து விட்டதாக அறிவித்த கடந்த ஏழு மாதத்துக்குள் வடக்கு கிழக்கு தாயகத்திலும் ஏனைய இடங்களிலும் இரண்டு டசினுக்கு மேல் எமது மக்கள் காணாமல் போயினர். பல டசின் கணக்கான இளைஞர் யுவதிகள் கொல்லப்பட்டனர் இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த மகிந்த அங்குறாணை என்ற இடத்தில் பொலிசாரால் இரண்டு சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டவுடன் துடித்துப் பதைத்து அவர்களின் வீட்டுக்குச் நேரில் சென்று மன்னிப்புக்கேட்டு ஆறுதல் கூறிவிட்டு பல இலட்சம் ரூபா பணத்தையும் நட்ட ஈடாகக் கொடுத்தார். ஆனால், இரண்டு டசினுக்கு மேற்பட்ட தமிழர்களை கொன்ற சூத்திரதாரிகளை இன்றுவரை கண்டு பிடிக்கவில்லை அதற்கான முயற்சிகளையும் அவர் எடுக்கவில்லை. அவர்களுக்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படவுமில்லை இப்படி எந்தவித கரிசனையும் கொள்ளாத மகிந்தவினை எட்டப்பர்களின் சொல்லையும் தேசத்துரோகிகளின் பேச்சையும் கேட்டு அரச சிம்மாசனத்தில் அமர வைக்கப் போகின்றீர்களா?
யுத்தம் நடந்த போது தமிழ் மக்களின் வழிபாட்டுத்தலங்களை அழித்து அவர்களின் இரத்தத்தையும் குடித்து கோர தாண்டவம் ஆடிய மகிந்த யுத்தம் முடிந்து ஏழு மாதத்துக்குள் தனது ஏவற் கூட்டத்தை வைத்து கண்டியில் வீதியோர பிள்ளையார் கோயிலை புல்டோசர் கொண்டு தகர்த்து வீதியோரத்தில் தள்ளியுள்ளான். காலி கதிரேசன் ஆலயம் சேதமாக்கப்பட்டு தெய்வ விக்கிரகங்களும் களவாடப்பட்டுள்ளது. திருமலையில் திருக்கரையம்பதி ஆலயம் சேதமக்கப்பட்டு சிவனின் தலை துண்டிக்கப்பட்டு விக்கிரகங்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது இவ்வாறு இருக்க யாழ் மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் அதிகமாக வசிக்கும் இடத்தில் புத்த விகாரை அமைக்கப்படுவதுடன் மற்றும் பல இடங்களிலும் புத்த விகாரைகள் புதிது புதிதாக நிர்மாணிக்கப்படுகின்றன. அன்று திருமலை மத்தியில் புத்த விகாரை அமைக்க முயன்றவர்களை தமிழ் மக்கள் தடுத்த போது இராணுவத்தை வைத்து பாதுகாப்பு வழங்கிய அரசு இன்று தமிழ் மக்களின் வழிபாட்டுத்தலங்களை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுத்தது. புத்தனுக்கு ஒரு நீதி அல்லாவுக்கும் ஜேசுவுக்கும் சிவனுக்கும் ஒரு நீதியா? இப்படிப்பட்ட புறம் போக்கு மகிந்தவிற்கா எட்டப்பர்களின் சொல்லைக் கேட்டு வாக்குப்போடப்போகின்றீர்கள்?
கடந்த அறுபது ஆண்டுகளுக்கு முன் இருந்து சிங்கள பேரினவாதிகள் இன ஒடுக்கலை பற்றி வந்ததன் காரணமாக எமது தாயகத்தையும் எமது பண்பாட்டையும் எமது மொழியையும் காப்பாற்றுவதற்காக கடந்த முப்பது ஆண்டுகளாக எண்ணற்ற உயிர் விலை கொடுத்தும் பல தியாகங்களை செய்தும் தமிழ் மக்களாகிய நாங்கள் போராடி வருகின்றோம் . உலக வல்லாதிக்க கரங்களை கொண்டு தமிழ் இனத்தை தோற்கடித்து விட்டோம் என்ற வேற்றி மமதையில் மூழ்கி நிற்கும் மகிந்த அதன் உச்சக்கட்ட வெளிப்பாடாக 20/09/2009 அன்று தோணிதாண்டமடு என்ற இடத்தில் குடியிருந்த எழுபத்தியொரு தமிழ் குடும்பங்களை ஊரை விட்டே விரட்டி அடித்து நிஜாப் திட்டத்தில் அவர்களுக்கு கட்டிக்கொடுத்த வீடுகளை அவர்களை கொண்டே இடித்து காட்டுமிராண்டித்தனத்தை காட்டி அம் மக்களை ஏதிலியாக்கியுள்ளான். இந்த குடி அழிப்புக்கு பச்சை கொடி காட்டியவனும் இந்த மகிந்த இராஜபக்சதான் . இந்த கழுத்தறுப்புக்கு துணையாக நின்ற பச்சைத் துரோகிகளான எட்டப்பர்களின் பேச்சைக் கேட்டா இந்த படு பாதகனுக்கு வாக்களிக்கப் போகின்றீர்கள்?
கடந்த 2009 மே மாத நடுப்பகுதியில் தமிழர்களின் இதயப்பகுதியான வன்னி மண்ணில் வசித்த மூன்று இலட்சம் தமிழ் மக்களையும் பிடித்து வந்து வதை முகாம்களிலும் முட் கம்பி வேலிகளுக்குள்ளும் அடைத்து விட்டு தமிழ் மக்களின் புனர்வாழ்வுக்கென்று உலகெங்கும் கையேந்தி பிச்சையாகவும் கடனாகவும் பெற்ற கோடி கோடியான பணத்தில் இற்றைவரைக்கும் குறைந்த பட்சம் ஒருவருக்கு மூன்று இலட்சம் ரூபா வீதம் புனர்வாழ்வு அளித்திருக்க வேண்டும் ஆனால் மக்களுக்கு வழங்கப்பட்டதோ சில ஆயிரம் ரூபாக்களும் நுகர்வுப்பொருட்களும் மட்டும்தான் இந்த பாதகச் செயலுக்கும் காரணமானவன் நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான மகிந்த இராஜபக்சதான் என்பதை மக்கள் புரிந்து நடக்க வேண்டும். தமிழ் மக்களின் இத்தனை அவலத்தின் மத்தியிலும் மேலும் ஆட்சிக் கதிரையைப் பிடிக்க நினைக்கும் மகிந்த இராஜபக்சவுக்கு எட்டப்பர்களின் நயவஞ்சக வார்த்தைகளைக் கேட்டு அடிமை சாசனம் எழுதப் போகின்றீர்களா?
அன்பார்ந்த தமிழீழ மக்களே! ஆண்டாண்டு காலமாக நாம் காத்து வந்த மானத்தையும் வீரத்தையும் விவேகத்தையும் விலை பேச எட்டப்பர்கள் முயலலாம் ஆனால், வீரமும் விவேகமும் நிறைந்த தமிழ் மக்களாகிய நாங்கள் விலை போகக்கூடாது என்று உறுதியெடுத்துக்கொள்வோமாக.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
மானத்தமிழ் மகன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
