வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

யாழில் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் மற்றும் பலக்லைக்கழகை அனுமதி ஆகியவைற்றை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் மற்றும் பலக்லைக்கழகை அனுமதி ஆகியவைற்றை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களை விட பல மடங்கு குறைவான வாக்களார்களே வாக்களித்துள்ளதாகவம் இதனால் அந்த மாவட்டத்தின் புதிதான சனத்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸநாயக்கா அறிவித்துள்ளார். இதன் மூலம் யாழ் மாவட்டத்தின் சனத்தொகை கணிசமாக குறைவடைந்துள்ளமை ஆவணப்படுத்தப்படவுள்ளது. இதனை அடுத்து பாராளுமன்ற பிரதிநிதித்துவம் சனத்தொகை பரம்பலுக்கு அமைவாக குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை புதிய சனத்தொகைக்கு அமைவாக பல்கலைக்கழைகத்திற்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வெளிமாவட்டங்களில் இருந்து சிங்கள மாணவர்கள் யாழ் பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரியவந்துள்ளது

பிரிவுகளை சந்தித்துள்ள சிறீலங்கா ஒற்றுமையை தேடுகின்றது

சிறீலங்காவில் நடைபெற்ற அரச தலைவர் தேர்தலைத் தொடர்ந்து அங்கு பிரிவினைகள் மேலும் அதிகரித்துள்ளன. ஆனால் தற்போது தான் சிறீலங்கா தனது ஒற்றுமையை தேடுகின்றது என 'த அல்ஜசீரா' செய்தி நிறுவனம் தன் செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளது. அதன் தமிழ் வடிவம் வருமாறு: சிறீலங்காவின் நெருக்கடிகளை குறைப்பதற்குச் சிறுபான்மை தமிழ் மக்கள் உதவ வேண்டும் என சிறீலங்கா அரச தலைவர் தனது சுதந்திரதின உரையில் கேட்டுக்கொண்டுள்ளார். உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர் நடைபெற்ற முதலாவது சுதந்திரதினம் இதுவாகும். கண்டியில் உரையாற்றிய மகிந்தா தமிழ் மக்களுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்கப்படமாட்டாது எனத் தெரிவித்துள்ளதுடன், தமிழ் மக்கள் அரசுடன் இணைந்து இயங்கவேண்டும் என தெரிவித்துள்ளார். கலந்துரையாடல்கள் மூலம் எமது பிரச்சனைகளை நாமே தீர்த்துக்கொள்ள வேண்டும் என அவர் தமிழ் மொழியில் தெரிவித்திருந்தார். ஆனால் மகிந்தாவின் இந்த கோரிக்கையை நிராகரித்துள்ள பிரித்தானியா தமிழ் பேரவையின் மூத்த உறுப்பினர் சுரேன் சுரேந்திரன், தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். மகிந்தா இதனை எப்போதும் தெரிவித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். மிகவும் மோசமான, இனவேற்றுமை கொண்ட அரச தலைவராக மகிந்தா தன்னை உறுதிபடுத்தியுள்ளார். தமிழ் மக்கள் சிறீலங்காவின் சுதந்திரதினத்தை கொண்டாடவில்லை. வடக்கு – கிழக்கில் அவர்கள் மகிந்தவுக்கு வாக்களிக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இரண்டாவது தடவை அரச தலைவராக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் மகிந்த பங்குபற்றிய முதலாவது வெளிப்படையான நிகழ்வு இதுவாகும். ஆனால் அவருக்கு எதிராக போட்டியிட்ட பொன்சேகாவை அவர் தாக்கி வருகின்றார். சுதந்திரதினத்திற்கு முன்னர் 5,000 இற்கு மேற்பட்ட பொன்சேகாவின் ஆதரவாளர்கள் கொழும்பில் உள்ள வீதிகளில் இறங்கி தேர்தல் முடிவுகளுக்கு எதிராக பேரணி ஒன்றை நடத்தியிருந்தனர். அரச தலைவரை தேர்ந்தெடுக்கும் மக்களின் உரிமைகளை மகிந்தா கொள்ளையடித்துள்ளதாக பொன்சேகா அங்கு பேசும் போது தெரிவித்திருந்தார். அவர் உரையாற்றும் போது அவருக்கு ஆதரவாக அளிக்கப்பட்டு பின்னர் எரிந்த நிலையில் குப்பைத் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட வாக்காளர் அட்டைகளையும் காண்பித்தார். என்ன விலை கொடுத்தாவது உங்களின் உரிமைகளை நாம் பெற்றுத்தருவோம். திருடிய வெற்றியை கொண்டாட நாம் அவர்களை அனுமதிக்கப்போவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஆனால் தேர்தல் முடிவுகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை தேர்தல் ஆணையாளர் தயானந்தா திஸாநாயக்கா மறுத்துள்ளார். தேர்தலுக்கு முன்னர் பிரச்சாரங்களின் போது நடைபெற்றவை தொடர்பில் நான் நிறைவடையவில்லை, ஆனால் தேர்தல் தினம் அமைதியாக இருந்ததுடன் முடிவுகளும் உண்மையானவை என அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்ட உள்ளூர் மற்றும் அனைத்துலக கண்காணிப்பாளர்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்ட காலம் வன்முறை மிக்கதாக இருந்ததாக தெரிவித்துள்ளனர். அதன்போது 5 பேர் கொல்லப்பட்டிருந்தனர். ஆனால் தேர்தல் தினம் அமைதியாக இருந்ததாகவும், சிறு சம்பவங்களே நடைபெற்றதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்பிரல் மாதம் மேற்கொண்டு அதிகாரத்தை மேலும் உறுதிப்படுத்த மகிந்த முயன்று வருகின்றார். மகிந்தாவின் அடுத்த 6 வருடங்களுக்கான பதவிக்காலம் இந்த வருடம் நவம்பர் மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக உயர் நீதிமன்றம் கடந்த புதன்கிழமை தெரிவித்துள்ளது. மகிந்தா இரு வருடங்களுக்கு முன்னர் தேர்தலை நடத்தியிருந்தார். ஊடகத்துறையினர் மீது வன்முறைகள் மேற்கொள்ளப்படுவதாக மகிந்தா அரசு மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. தேர்தலின் பின்னர் பல இணையத்தள ஊடகங்கள் மீது தடைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஒரு ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டுள்ளார், ஒருவர் காணாமல் போயுள்ளார். ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். பலருக்கு கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது. தற்போது அரச தலைவர் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார், ஆனால் மிக அதிகளவிலான குற்றச்சாட்டுக்களுக்கு அரசு உட்பட்டு வருகின்றது என நியூயோர்க்கை தளமாக கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியா பிராந்திய பணிப்பாளர் பிராட் அடம்ஸ் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு மறுநாள் சில அதிகாரிகள் தமது அதிகாரங்களை தவறாக பயன்படுத்த முனைந்திருந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். மகிந்தா அரசு 14 மூத்த இராணுவ அதிகாரிகளை பதவி விலக்கியுள்ளது. அவர்கள் பொன்சேகாவின் ஆதரவாளர்கள் என அரசு கூறுகின்றது. அவர்களால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. முன்னாள் இராணுவ அதிகாரிகள் 15 பேர் உட்பட 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அரச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை பொன்சேகாவின் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போதும் பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். டசின் கணக்கான படை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரசுக்கு சார்பானவர்கள் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். தேர்தலுக்கு மறுநாளில் இருந்து பொன்சேகா மீதும் அவரின் ஆதரவாளர்கள் மீதும் அரசு பல குற்றங்களை சுமத்தி வருகின்றது. அவர்கள் அரச தலைவரை கொலை செய்ய முயன்றதாகவும், இராணுவப்புரட்சியை மேற்கொள்ள முயன்றதாகவும் அரசு குற்றம் சுமத்தியுள்ளது. ஆனால் தேர்தல் முடிவுகளை நீதிமன்றத்தின் மூலம் பெறப்போவதாக பொன்சேகா தெரிவித்து வருகின்றார். ஆனால் அதற்கான செயல்திட்டங்களை அவர் இன்றுவரை ஆரம்பிக்கவில்லை. மகிந்த நேர்மையாக வெற்றிபெற்றிருந்தால் ஏன் என்னை கண்டு அஞ்சுகிறார்? ஏன் எங்களின் சுதந்திரமாக நடமாட்டங்களை தடுக்கிறார். ஏன் எனது ஆதரவாளர்களை கைது செய்கிறார்? இந்த கேள்விகளை அவர் கடந்த புதன்கிழமை நடைபெற்ற பேரணியில் கேட்டிருந்தார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 மணிநேரத்தில் தமிழர் தாயகப்பகுதிகளில் 07 படுகொலைகள்

கடந்த 24 மணிநேரத்தில் தமிழர் தாயகப்பகுதிகளில் இரு தமிழர்கள் உள்ளிட்ட 07படுகொலைகள் நடந்தேறியுள்ளன.தமிழர்தாயகபகுதிகளான வவுனியா யாழ்ப்பாணம் அம்பாறை மாவட்டங்களில் இரண்டு தமிழர்கள் உள்ளிட்ட 07 படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. நேற்று வவுனியாவில் தமிழ்ப்பெண் உள்ளிட நால்வர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.வவுனியா நெளுக்குளம் பிரதேசத்தில் இரும்புக்கம்பியால் தாக்கி சிங்கள மக்கள் மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. இதில் காயம் அடைந்த ஒருவர் அனுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.சிங்களக்குடியிருப்புக்களுக்கு அருகில் உள்ள நெளுக்குளம் பகுதியில் இடம்பெற்ற இக்கொலைச் சம்பவத்தினைத் தொடர்ந்து பிரதேச மக்கள் அச்சம் அடைந்துள்ளார்கள். இதேவேளை வவுனியயா புளியங்குளம் பகுதியில் பெண் ஒருவர் மர்மமான முறையில் படுகொலைசெய்யப்பட்டுள்ளார்.ஏ09 வீதி புளியங்குளம் பகுதியினைச் சேர்ந்த 30 அகவையுடைய பாலச்சந்திரன் தங்கதேவி என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணம் கொழும்புத்துறைமுகத்தில் இளம் குடும்பத்தலைவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுக் கிணற்றில் வீசப்பட்டுள்ளார். கொழும்புத்துறைமுகத்தினைச் சேர்ந்த இரண்டுபிள்ளைகளின் தந்தையான 34 அகவையுடை மார்க்கண்டு சிவராசா என்பவரே படுகொலை செய்யப்பட்டு இவரது உடலம் கிணற்றில் வீசப்பட்டுள்ளது.நேற்று முன்னாள் காணமல்போன இவர் நேற்று உடலமாக கிணற்றில் கண்ட்டெடுக்கப்பபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் உகண வலகம்பற காட்டுப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் பெண் ஒருவரின் உடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள். அம்பாறை உறமசந்திப்பகுதிக்கு அருகில் இருந்து பெண்ஒருவரின் உடலம் உருக்குலைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களது உடலங்கள் அடையாளம் காணும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறீலங்காப்படையினரின் கட்டுப்பாட்டுப்பகுதிகளில் தமிழ்மக்களின் மர்மக் கொலைகள் அண்மைய காலங்களில் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் 15வயது சிறுமியை திருமணம் செய்ய முயன்ற 25வயதான திருமணமானவர் கைது

வீடொன்றின் மதில் சுவரைக் கட்டுவதற்கு நியமிக்கப்பட்ட 25வயதான திருமணமான நபரொருவர் அவ்வீட்டின் அயல்வீட்டிலிருந்த 15வயதுச் சிறுமியை திருமணம் செய்து கொள்ள முயன்ற சம்பவமொன்று மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு கொக்குவில் பிரதேசவாசியான குறித்த நபர் மேசன்வேலை செய்பவராவார். சில தினங்களுக்கு முன்பு வெல்லாவெளி பிரதேசத்தில் மன்சூர் பகுதி கிராமத்திலுள்ள வீடொன்றின் சுற்றுமதில் எழுப்புவதற்காக அவர் வந்துள்ளர். இப்பணியில் ஈடுபட்டிருந்த போது அவர் அயல் வீட்டில் தங்கும் இடவசதியை ஏற்படுத்திக் கொண்டு தான் திருமணம் முடிக்காதவர் என்று தெரிவித்து சிறுமியை திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறி திருமணம் பதிவுக்காக பதிவாளரிடம் சென்றுள்ளார். இவர்மீது சந்தேகம் கொண்ட திருமணம் பதிவாளர் மேற்கொண்ட விசாரணைகளின் பின் அவர் ஏற்கனவே திருமணமானவர் என்பது வெளியானது. இதனையடுத்து அவர் பொலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

காங்கேசன்துறை, கீரிமலைப் பகுதிகளில் மண் அணை

யாழ் குடாநாட்டின் வலிகாமல் வடக்குப் பகுதியிலிருந்த மக்கள் கடந்த 20 வருடங்களாக பல இடங்களுக்கும் இடம்பெயர்ந்து அகதிகளாகத் திரிகின்றனர். இப்பகுதியானது இலங்கை ராணுவத்தில் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால், அந்தப் பகுதிகளுக்குள் மக்கள் சென்றுவரக்கூட அனுமதி இல்லை. ஆனால் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்துக்காக குடாநாடு வந்த ஜனாதிபதி மஹிந்த, அவர் சகோதரரான ஜனாதிபதி ஆலோசகர் பசில் ஆகியோர் மேற்படி உயர் பாதுகாப்பு வலயத்தில் மீண்டும் மக்கள் மீளக்குடியமர்த்தப்படுவர் என வாக்குறுதி கொடுத்தனர். இதனையே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் மக்களுக்குக் கூறினார். ஆனால் தேர்தல் வெற்றி கண்டபின்னர் அங்குள்ள நிலமை மாறியுள்ளது. மேலும் மேலும் அதிகபட்ச பாதுகாப்பு வலயத்தை ராணுவத்தினர் அமைத்து வருகின்றனர். காங்கேசன்துறை, கீரிமலைப் பகுதிகளை உள்ளடக்கியதாக பெரியதொரு மண் அணையைக் கட்டத்தொடங்கியுள்ளனர் ராணுவத்தினர். இந்தப் பகுதிக்குள் 20 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளடங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. வலிகாமம் வடக்குப் பகுதியில் மொத்தமாக 27 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன. அதில் 20 இந்த புதிய பாதுகாப்பு வலயத்துக்குள் செல்கிறது. மிகுதி 7 கிராமத்து மக்களும் தமது பகுதிகளுக்குச் சென்றுவர அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும், அவர்கள் இரவில் தமது வீடுகளில் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

11 ஆயிரம் புலிச் சந்தேக நபர்களையும் இன்னும் கூட சந்திக்க முடியாத நிலைமை மனிதாபிமான அமைப்புகள் விசனம்

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடை யவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 11,000 பேரை தாம் சந்திக்க முடியாத நிலை காணப் படுவதாக மனிதாபிமான அமைப்புகள் தெரிவித்துள்ளன. விடுதலைப் புலிகளுடன் தொடர்புடை யவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 11,000 பேரை தாம் சந்திக்க முடியாத நிலை காணப் படுவதாக மனிதாபிமான அமைப்புகள் தெரிவித்துள்ளன. விடுதலைப் புலிகளுடன் தொடர்புடை யவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நபர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்கு 2009 ஜூலை மாதத்திற்குப் பின்னர் தாங் கள் செல்லவில்லை எனத் தெரிவித்துள்ள செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது. முகாமில் உள்ளவர்களின் பெயர் விவ ரங்களை அவ்வேளையில் பதிவு செய்தோம். அதற்குப் பின்னர் எமக்குஅனுமதி வழங்கப்படவில்லை எனச் செஞ்சிலுவைச் சர்வதேசக்குழுவின் இலங்கைக்கான பேச்சாளர் சரசி விஜயரட்ண ஐ.பி.எஸ். செய்திச்சேவைக்குத் தெரிவித்துள்ளார். இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனும் இதே கருத்தை வெளியிட்டுள்ளார். இந்த முகாம்களில் யார், யார் உள்ளனர் என்பது தெரியாது. கடந்த தடவை ஜனாதிபதியை நாம் சந்தித்த வேளை அவர், சம்பந்தப்பட்டோரின் பெயர் விவரங்களை வெளியிடுவார் எனத் தெரிவித்திருந்தார். எனினும், இதுவரை எதுவும் இடம்பெறவில்லை என சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். அரசு தேர்தலுக்காகவே ஒரு சிலரை விடுவித்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, உள்ளூர் மனிதாபிமான அமைப்பொன்று தேர்தல் காரணமாக இவர்களைச் சந்திப்பதற்கான வாய்ப்புகளை வழங்குவதை அரசு அதிகரித்துள்ளது எனத் தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களில் பெற்றோராலும் உறவினர்களாலும் இந்த முகாம்களுக்குச் செல்ல முடிந்துள்ளது. என்றாலும் அதிகாரிகள் மட்டத்தில் அதற்குப் பலத்த தடை காணப்படுகின்றது எனத் தெரிவித்துள்ள குறிப்பிட்ட அமைப்பின் பேச்சாளர், தமிழ் வாக்குகளைப் பெறுவதற்காகவே அரசு இதனைச் செய்ததாகக் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, காலியில் உள்ள அரச தடுப்பு முகாமொன்றில் விடுதலை செய்யப்பட்டவர்களில் 200 பேர் மீண்டும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனக் கிடைத்துள்ள தகவல்கள் குறித்துத் தாங்கள் ஆராய்ந்து வருகின்றனர் என்றும் அந்த அமைப்பின் பிரதிநிதி தெரிவித்துள்ளார். ஜனவரி 9ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டவர்கள் காலியில் உள்ள தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர் என 60 வயது நபர் ஒருவர் தெரிவித்தார் எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

உளவு தற்கொலைப்படை குண்டு வாகனம் ஒன்றை இந்திய இராணுவம் உருவாக்கியுள்ளது.

தீவிரவாதிகளை தீர்த்துக் கட்டும் 4 சக்கர வாகனம் ஒன்றை, இந்திய எல்லை பாதுகாப்பு படையின் தொழில்நுட்பப் பிரிவு உருவாக்கி உள்ளது. இதற்கு „உளவு தற்கொலைப்படை குண்டு வாகனம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இது ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படக் கூடியது. 200 மீட்டர் தூரத்தில் இருந்து இதை இயக்ககூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ள இவ்வண்டியில் இரவு நேரத்திலும் காட்சிகளை பதிவு செய்யக்கூடிய வீடியோ கமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. இதில் வெடிகுண்டைப் பொருத்துவதற்காக, ஒரு குழிவான பகுதியும் உள்ளது. இந்த வாகனத்தை தீவிரவாதியின் மறைவிடத்துக்குள் நுழைய வைத்து, 200 மீட்டர் தூரத்தில் இருந்தபடி இயக்கி, குண்டு வெடிக்கச் செய்து தீவிரவாதியை அழிக்கலாம்

இராணுவத்திலிருந்து தப்பியோடியிருந்த 1422 பேர் சரண்.

இராணுவத்திலிருந்து தப்பியோடி சேவைக்கு சமூகமளிக்காதிருந்தவர்கள் நேற்று சுதந்திர தினத்தன்று சரணடைந்தால் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுமென இராணுவத் தலைமையகம் விடுத்திருந்த அறிவிப்பை ஏற்று 1422 பேர் சரணடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். சரணடைந்த அனைவரும் இராணுவ முகாம்களில் உள்ளதாக தெரிவித்துள்ள பிரிகேடியர் சரணடைந்தவர்கள் மீது எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்கப்படமாட்டாது எனவும் சரணடைய தவறியுள்ளவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

தேர்தல் ஆணையாளரின் மனைவி, மகள் ஆகியோரை இராணுவத்தினர் கடத்திச் சென்று தடுத்துவைத்திருந்தனர்

ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற கடந்த 26ம் திகதி இரவு இராணுவத்தினர் சிலரால் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்கவின் மகள், மனைவி ஆகியோர் கடத்திச் செல்லப்பட்டு வோடஸ் எஜ் விடுதியில் தடுத்துவைக்கப்பட்டிருந்ததாகதகவல்கள் கிடைத்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளதாக சிங்கள இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணையாளரின் மகள் வீட்டிலிருந்து வெளியில் செல்வதைக் கடுமையான நிராகரித்ததாகவும் இதனையடுத்து படையினர் அவரைத் தாக்கி பலவந்தமாக அழைத்துச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த 26ம் திகதி இரவு 12.30 அளவில் இடம்பெற்றதாகவும் இவர்கள் மறுநாள் 27ம் திகதி மாலை 5 மணிக்கே விடுவிக்கப்பட்டதாகவும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கூறியுள்ளார். அதேவேளை, தேர்தல் ஆணையாளரும் தேர்தல் தினத்திற்கு அடுத்தநாள் இந்த விடுதிக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும் அவ்வாறு கொண்டுசெல்லப்பட்ட அவர் 27ம் திகதி பிற்பகல் 1.30 அளவில் தேர்தல் திணைக்களத்தில் கொண்டுசென்றவிடப்பட்டதாகவும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் அவரை விடுவித்ததாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார். இவற்றை கோதாபய ராஜபக்ஸ பசில் ராஜபக்ஸ ஆகியோரே திட்டமிட்டதாகவும் இவர்களின் திட்டத்தின்படி இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஸவை 3 லட்சத்து 80 ஆயிரம் வாக்குகளில் வெற்றியடையச் செய்யத் திட்டமிட்டிருந்ததாகவும் பசில் ராஜபக்ஸவின் கணக்கீட்டுச் சிக்கல் காரணமாக அது 18 லட்சத்தையும் தாண்டியதாக அவர் கூறியுள்ளார். இதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தல்களில் வாக்கு எண்ணும் பணிகள் மேற்கொள்ளப்படும் போதும் மாவட்ட முடிவுகள் வெளியிடும் சந்தர்ப்பத்திலும் தேர்தல் ஆணையாளர் தனது செயலகத்தில் வேலைப்பளுவில் இருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது. எனினும், இம்முறை தேர்தல் ஆணையாளரை எவரும் காணவில்லை. இம்முறை மாவட்ட முடிவுகள் வெளியிடப்பட்ட போது அவை தொடர்பாக இறுதி முடிவுகளை பிரதித் தேர்தல் ஆணையாளர்களே மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது

வன்னிப்போரும் ரொனி பிளேயர் வாக்குமூலமும் ஓர் அடிப்படை ஒற்றுமை..04.02.2010

வன்னியில் காணாமல் போன பெரும் செல்வம் அதிர்ஷ்டமானவரின் கைக்கே போகும் என்பது உண்மையே. சிறீலங்கா இன்று 62 வது சுதந்திரதினத்தைக் கொண்டாடுகிறது. சிறீலங்கா அதிபர்களில் தானே மிகவும் அதிர்ஷ்டமான அதிபர் என்று கூறியுள்ளார். அவரைப் பாராட்ட வேண்டும், வன்னியில் காணாமல் போன பெரும் செல்வம் அதிர்ஷ்டமானவரின் கைக்கே போகும் என்பது உண்மையே. இந்த நேரம் பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரொனி பிளேயர் ஈராக் போர் குறித்து வழங்கிய வாக்கு மூலத்தையும், வன்னிப் போரையும் இணைத்துப் பார்க்க உதவியாக எழுதப்பட்டுகிறது இக்கட்டுரை. அளவுக்கு அதிகமாக பணம் திரட்சியடையும் இடங்கள் சர்வதேச சமுதாயத்தால் சூறையாடப்படும்.. இந்த உண்மையை அனைவரும் புரிய பிளேயரின் வாக்குமூலம் உதவியாக உள்ளது. சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இலங்கைத் தமிழ் மக்கள் வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி சேர்த்த செல்வங்களை சூறையாடுவதே சிறீலங்காவின் சுதந்திரதின பெருமையாக உள்ளது. வடக்குக் கிழக்கு இணைப்பு, தமிழீழம் போன்ற வாதங்களுக்கு அப்பால் தமிழர் செல்வத்தை கொள்ளையிடுவதில்லை என்ற ஒப்பந்தத்தை எழுதுவதே வன்னிப்போர் தரும் முக்கிய பாடமாக உள்ளது. இதை விளங்க ரொனி பிளேயரின் வாதங்களை சகல விடயங்களுடனும் ஒப்பிட்டு நோக்குகிறோம்.. ரொனி பிளேயர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஈராக் போர் தொடர்பான வாக்குமூலம் ஒன்றை வழங்கியிருந்தார். சுமார் ஆறு மணி நேரமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் வழங்கினார். இது ஒரு திட்டமிட்ட, நன்கு ஒத்திகை பார்க்கப்பட்டு அரங்கேறிய நாடகம் என்றாலும் இதைக் கவனமாகப் பார்க்க வேண்டியது பிரிட்டனால் சுதந்திரமிழந்த தமிழினத்திற்கு அவசியம். சதாம் உசேனிடம் அணு ஆயுதம் இல்லை என்று தெரிந்திருந்தாலும் போருக்கு போவதை நிறுத்தியிருக்க மாட்டேன் என்று முன்னர் கூறிய பிளேயர் இப்போது அதை மாற்றியிருக்கிறார். இந்த மாற்றத்திற்குள்தான் எல்லாமே புதைந்திருக்கிறது. உலகத்தின் முக்கிய தொலைக்காட்சிகளில் எல்லாம் பிளேயரின் கருத்துக்கள் நேரடியாக ஒளிபரப்பாகியிருந்தன.. அந்த ஆறு மணி நேர வாக்குமூலத்தை முதலில் இரண்டே வரிகளில் சுருக்கிப் பார்க்க வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தின் வரவிற்குப் பின்னர் வளமான நாடுகளை சூறையாடாவிட்டால் அமெரிக்காவும் பிரிட்டனும் தமது முதன்மையை 21ம் நூற்றாண்டில் தக்கவைக்க இயலாது ! இதுதான் அவருடைய கருத்துக்களில் இருந்து நமக்குக் கிடைக்கும் இரண்டேயிரண்டு வரிகளிலான கதைச் சுருக்கம். இந்தக் கதைச் சுருக்கத்தில் இருந்து பல உண்மைகளை பார்த்துவிட்டுத்தான் நாம் வன்னிக்குள் போக வேண்டும். ஏனெனில் இரண்டு கதைகளும் அடிப்படையில் ஒன்றுதான். ஈராக் நாட்டின் பழைய பெயர் பாபிலோனியா. கடந்த 10.000 வருட வரலாற்றில் பாபிலோனியாவை சூறையாடாத வல்லரசுகளே கிடையாது. மகா அலெக்சாண்டர் முதல் நெப்போலியன் தொடங்கி உலகப் புகழ் பெற்ற பேரரசர்கள் எல்லோருமே பாபிலோனியா மீது படையெடுத்தவர்களே. அதன் கடைசி அத்தியாயமே 2003ம் ஆண்டுப் போர். ஈராக்கைப் போல செல்வம் கொழிக்கும் பூமியாக இருந்து இதே மன்னர்களின் தாக்குதல்களை சந்தித்தது எகிப்திய பேரரசு. பேரழகி கிளியோபாற்றாவையும் அவளுடைய செல்வங்களையும் சூறையாட அங்கு போகாத பேரரசுகளே கிடையாது. செல்வம் திரட்சியடைந்தால் பிரிட்டன் போர் தொடுக்கும், ஆகவே குடியேற்ற நாடுகளை அமைத்து செல்வத்தை பெருக்க வேண்டாம் என்று அக்கால ஜேர்மனிய சக்கரவர்த்தி பேர்டினன்ட் வில்லியத்திடம் பிரபல இராஜதந்திரி வொன் பிஸ்மார்க் பல்லாயிரம் தடவைகள் கேட்டான். அவனைப் பதவி விலத்திவிட்டு வில்லியம் செல்வத்தை குவித்த காரணத்தால் உலகப்போரில் ஜேர்மனி மாட்டிக் கொண்டது. முப்பதிற்கும் மேற்பட்ட சிறிய இராட்சியங்களாக இருந்த ஜேர்மனியை ஒரு நாடாக்கிய பிஸ்மார்க் மிகவும் கவனமாக இருந்தது ஒரேயொரு விடயத்தில்தான், தேசம் உருவாக முன் செல்வத்தை குவித்தால் அந்தத் தேசம் சுடுகாடாகும் என்பதை தெளிவாக அறிந்த உலகின் ஒரேயொரு இராஜதந்திரி அவன்தான். இவைகளை மனதில் வைத்து மேலே செல்வோம்.. 2001 செப் 11 தாக்குதலுக்குப் பின்னர் சுமார் 20ற்கும் மேற்பட்ட அமைப்புக்கள் பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கப்பட்டன. 1. சதாமிடம் இருந்த எண்ணெய் வளம், தங்க வளம், டாலர்களின் குவியல் யாவும் அந்தப் பட்டியலுக்கு உயிர் கொடுத்தன. 2. உலகக் கஞ்சா ஏற்றுமதியில் 99 வீதமான வருமானம் உழைப்பவர்கள் ஆப்கானின் தலபான்கள் அது மேலும் அசைவைக் கொடுத்தது. இப்படி பட்டியலில் இடம் பெற்ற அனைத்து பயங்கரவாத அமைப்புக்களுமே செல்வங்களை குவித்து வைத்திருந்த அமைப்புக்களே. இவைகளுக்குள் புலிகளை எதற்காக சேர்த்தார்கள், அவர்கள் உண்மையாகவே ஒரு விடுதலை அமைப்பு என்று நாம் வாதிட்டோம், ஆனால் உலக நாடுகள் அதை ஏற்க மறுத்து அவர்களையும் பட்டியலில் சேர்த்தார்கள். அதற்கு என்ன காரணம் ? தென்னாசியாவின் போராட்டக் குழுக்களிலேயே அதிக பணமுள்ள, வளமுள்ள அமைப்பு விடுதலைப் புலிகள்தான். அவர்கள் உருவாக்கிய பண சாம்ராஜ்ஜியமே அவர்களை இந்தப் பட்டியலுக்குள் அநியாயமாகக் கொண்டு வந்துள்ளது என்பதை விளங்க ரொனி பிளேயரின் வாக்கு மூலமே போதுமானதாகும். ஈராக் மீதான போர் மேலை நாடுகளுக்கு மிகவும் இலாபகரமான போர்.. அதுபோல புலிகளுக்கு எதிரான போருக்கு செலவிட்ட பணத்தோடு புலிகளிடம் இருந்த பணத்தையும், ஆயுதங்களையும் கணக்கிட்டால் சிறீலங்கா அரசிற்கும் அதற்கு ஆதரவளித்த நாடுகளுக்கும் வன்னிப் போர் மிகப்பெரிய ஆதாயமாகும். வன்னியில் ஒரு தேங்காய் உரிக்கும் அலவாங்கு விடாமல் அள்ளிச் சென்றுவிட்டார்கள். புலிகளின் வாகனங்களில் ஒரு வாகனத்தைக் கூட வன்னியில் காண முடியவில்லை. லாரி லாரியாக வன்னியின் பொருட்கள் சூறையாடப்பட்டுவிட்டன. இதைப்போல இலாபகரமான போர் எதுவுமே கிடையாது. அந்த உருசியில் இப்போது புலிகளின் வெளிநாட்டு சொத்துக்களும் தமக்கே உரியது என்கிறார் கோத்தபாய ராஜபக்ஷ. புலிகளிடம் எடுத்த நிதி இருக்கும்வரை சிறீலங்கா ஆட்சியாளருக்கு மேலும் பல ஆண்டுகள் நிதித் தட்டுப்பாடே கிடையாது..சிறீலங்காவின் மிக அதிர்ஷ்டமான ஜனாதிபதி தானே என்று மகிந்த இன்று கூறியிருப்பது தவறல்ல. கடந்த வாரம்; புலிகள் சேர்த்த 4000 கிலோ தங்கம் எங்கே என்று கேள்வி எழுந்தது.. அவர்கள் சேர்த்த பணம் எங்கே… வருடாவருடம் அவர்கள் சேகரித்த அவசர பாதுகாப்பு நிதிகள், வரிகள் எல்லாம் வன்னியில் திரண்டுவிட்டதாலேயே இந்தப் போர் நடாத்தப்பட்டுள்ளது. இதற்கும் பிளேயரின் ஈராக் போர் வியூகத்திற்கும் யாதொரு வேறுபாடும் கிடையாது. இது மாபெரும் அபாயம், இந்த அபாயத்தில் புலிகளை மாட்டாதீர்கள் என்று எவ்வளவோ கூறியும் யாரும் கேட்கவில்லை. அதனால்தான் இதற்கான பொறுப்பு புலம் பெயர் தமிழரையும் கணிசமான அளவு சார்கிறது.. வன்னிக்குள் சொத்துக்களை குவிக்காதீர்கள் என்று புலிகளுக்கு பிஸ்மார்க் போல அறிவுரை கூற சரியான மதியுரைஞர் இருக்கவில்லை, அப்படி மதியுரைஞர் சொன்னாலும் அதை அவர்கள் கேட்கமுடியாதவிற்கு நிதி குவிந்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் நிதியைவிட வேறு எதுவுமே இல்லை என்ற இடத்திற்கு புலம் பெயர் நாடுகள் கூர்ப்படைந்தது பெரும் தவறு. 1983 யூலைக் கலவரத்தை இனவாதம் என்பதை விட தமிழரின் சொத்தை சுரண்டும் ஒரு கலவரம்தான் என்பதை உணர்ந்தால் பலும் பெயர் தமிழர் வன்னிக்குள் சொத்தை முடக்குவதன் ஆபத்தைப் புரிந்திருப்பர்.. பிளேயரின் வாதங்களைக் கேட்டால் இவைகள் உங்கள் எண்ணங்களில் எழுந்து வரும்.. அப்படியானால் சொத்தை வைத்திருப்பவர் என்ன செய்வது.. கேணல் கடாபியிடம் இதற்கு பதில் இருக்கிறது. அவர் இந்த ஆபத்தை உணர்ந்து தனது செல்வத்தில் பெரும்பகுதியை கொடுத்துவிட்டார். விமானம் தகர்ப்பிற்காக அவர் வழங்கிய நட்டஈடு மிகப்பெரிய தொகை.. ரொனிபிளேயர் அவரைச் சந்தித்து வந்த பின் ஆபத்துக்களில் இருந்து தப்பினார். இப்போது ஈரான் விளிம்பு நிலையில் நிற்கிறது.. சோமாலியக் கடற் கொள்ளையர் விஷயம் தெரியாமல் கொள்ளையிடுகிறார்கள், அவர்களுடைய குதம் நிரம்பி வழியும்போது எல்லாவற்றையும் ஒரே வாரத்தில் இழக்க நேரிடும், இதுதான் அவர்களுடைய தலையெழுத்து.. சுதந்திரம் பெற்றாலும், பெறாவிட்டாலும் செல்வம் அளவிற்கு அதிகமாகக் குவியும் இடங்கள் ஏதோ ஒரு பயங்கரவாதமாக அடையாளப்படுத்தப்பட்டு சுடுகாடாக்கப்படும்.. சூறையாடப்படும்.. ஆறுமணி நேரம் பிளேயரின் பேச்சைக் கேட்க எம்மிடம் ஏது நேரம்.. ஏதோ ஆறு போன போக்கில் போகிறோம் என்று வாழ்வோர் இதை ஓர் எடுகோளாக வைத்து சிந்தித்தால் மேலும் பல உண்மைகளை புரிய முடியும். பிளேயரின் பேச்சு பிழையல்ல..

வியாழன், 4 பிப்ரவரி, 2010

கிளிநொச்சியில் இருந்து பரந்தன் மனித நடமாட்டமற்ற பகுதியாக உள்ளது

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கிளிநொச்சிக்கும் பரந்தனுக்கும் இடையில் பயணம் செய்த ஒருவர் அப்பகுதி எவ்வாறு காட்சியளிக்கிறது என்பதைத் படம்பிடித்து வெளியிட்டுள்ளார். தமிழீழத்தின் இதயமாக விளங்கிய கிளிநொச்சி நகரில் இப்போது மக்கள் நடமாட்டம் அற்ற நிலை காணப்படுகிறது. கட்டடங்களோ ஆளரவம் அற்ற பேய்வீடுகளாக உள்ளன. ஆங்காங்கே கைவிடப்பட்ட மாடுகள் கூட்டம் கூட்டமாக நிற்பதைக் காணக்கூடியதாக உள்ளது. இதிலிருந்தே அங்கு நடந்துள்ள இன அழிப்பு நன்கு புலப்படுகிறது. 21 ஆம் நூற்றாண்டின் மிக மோசமான குற்றமான இந்த இன அழிப்பைச் செய்தவர்கள் அதை மறுத்து வருகின்றபோதும், அவர்கள் அதை மறைத்து, இன அழிப்பு குறித்து பேசத் தடைவிதித்து, பல வழிகளில் தமது என்ணத்தை நிறைவேற்றி வருவதாகவே ஈழத்தில் உள்ள மற்றும் புலம்பெயர் தமிழர்களின் கருத்தாகும். தற்போது நடந்துவரும் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, மீள்கட்டுமானம், அபிவிருத்தி ஆகியனவும் கூட இன அழிப்பின் ஒரு திட்டமே. சர்வதேசநீதியான பொருத்தமான ஒரு தீர்வை விடுத்து சில அரசாங்கங்கள் தமது சொந்த திட்டங்களை தமிழீழத்தில் அமுல்படுத்துவதில் ஆர்வமாக உள்ளன. அதுவும் நடந்து முடிந்துள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு அரசுடன் சேர்ந்து இத்திட்டங்களை அமுல்படுத்துவதானது ஜனநாயகத்தை அவர்கள் மதிக்கவில்லை என்பதையே காட்டுகிறது தமிழர் வட்டாரங்கள் கூறுகின்றன.

சிங்கக் கொடியை ஏற்றுமாறு ஈ.பி.டி.பி யாழ் மக்களை அச்சுறுத்தல்

சிறிலங்காவின் சுதந்திர நாளுக்கு சிங்க கொடிகளை வியாபார நிலையங்களிலும் பொதுநிறுவனங்களிலும் மட்டுமல்லாது ஒவ்வொரு வீடுகளிலும் ஏற்றுமாறு ஈபிடிபியின் ”தொண்டர்கள்” வற்புறுத்தி வருவதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று நடைபெறவுள்ள சிறிலங்காவின் சுதந்திர நாளை சிறிலங்காவின் பிரதான எதிர்கட்சிகள் அனைத்தும் புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ள நிலையில் தமிழர் தேசங்களில் தமது சிங்கள மேலாண்மையை காட்டுவதற்கான முயற்சிக்கு ஈபிடிபி தொண்டர்கள் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை யாழ் குடாநாட்டில் குறிப்பிட்டளவு வாக்குகளை கூட மகிந்தவுக்கு பெற்றுக்கொடுக்க முடியாத நிலையினால், தென்னிலங்கை அரசியற் கட்சிகள், ஈபிடிபியை ஒரு பொருட்டாக கருதவேண்டியதில்லை என்ற நிலைக்கு வந்துவிட்டதாகவும், அதனால் தான் தற்போது சுதந்திர நாளை அனைத்து இடங்களிலும் கட்டாயப்படுத்தி கொடி ஏற்றிவைத்து தனது பலத்தை காட்ட ஈபிடிபி முற்படுவதாகவும் மேலும் தெரியவருகிறது.

உதயன்", "சுடர் ஒளி" ஆசிரியருக்கு கிஷோர் எம்.பி. கொலை மிரட்டல்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர்"உதயன்", "சுடர் ஒளி" பத்திரிகைகளின் ஆசிரியருக்குத் தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல் விடுத்திருப்பதாக உதயன் பத்திரிகைச் செய்தி தெரிவிக்கிறது. இச்சம்பவம் நேற்று மாலை 5.15 மணியளவில் இடம்பெற்றதாகவும், முன்னதாக நேற்றுக்காலை 11 மணியளவில் 024 2222068 என்ற வவுனியா தொலைபேசி இலக்கத்திலிருந்து "சுடர் ஒளி" கொழும்பு அலுவலகத்துடன் தொடர்புகொண்ட சிவநாதன் கிஷோர், ஆசிரியர் வித்தியாதரனை விசாரித்துள்ளார் என்றும், அச்சமயம் அவர் ஆசிரிய பீடத்தில் இருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தமக்கு எதிராக "உதயன்", "சுடர் ஒளி"யில் விமர்சனச் செய்திகள் பிரசுரிக்கக்கூடாது என்ற தொனியில் ஆசிரிய பீட உறுப்பினருக்கு அவர் அறிவுறுத்தியிருக்கின்றார். தாம் எதையும் பகிரங்கமாகவே செய்பவர் என்றும், மற்றவர்களைப் போல எதையும் ஒளித்துக்கொண்டு போய் அரசுடன் சேர்ந்து செய்பவரல்லர் என்றும் அவர் குறிப்பிட்டார். தம்மைப் பற்றிச் செய்தி வெளியிடுவதை நிறுத்தும்படியும் இறுக்கமான தொனியில் அவர் கூறினார். இந்த விடயம் குறித்து ஆசிரியர் அலுவலகத்துக்கு வந்த பின்னர் அவரிடம் கூறும்படி ஆசிரிய பீட பணியாளர் அவருக்குத் தெரிவித்தார் என உதயன் தெரிவித்துள்ளது. மேலும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, மீண்டும் மாலை 5.13 மணியளவில் 024 2222706 இலக்கத் தொலைபேசியில் இருந்து அவர் தொடர்புகொண்டார். அவரது கோரிக்கையின்படி ஆசிரியர் வித்தியாதரனுக்கு அவரது இணைப்பு கொடுக்கப்பட்டது. தம்மைப்பற்றிய செய்திகள் தருபவர் யார், தன்னைப்பற்றி செய்திகளை தனது முன் அனுமதியின்றி வெளியிடக்கூடாது என்ற கடுந்தொனிப் பீடிகையுடன் உரையாடலை ஆரம்பித்தார் கிஷோர். "பகிரங்கப் பொது வாழ்வுக்கு வந்தவர்கள் குறித்து செய்தி வெளியிடுவதற்கு யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை. மக்களின் வாக்குகளைப் பெற்று மக்கள் பிரதிநிதிகள் என்ற பெயரில் செயற்படுவோர் பற்றிய செய்திகள், தகவல்கள் வெளியிடுவதற்கு யாரிடமும் அனுமதி பெறுவது அவசியமல்ல. அதைத் தடுப்பதற்கு உங்களுக்கு அதிகாரமும் இல்லை; உரிமையுமில்லை. செய்திகள் தவறாக இருந்தால் என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதைச் செய்யுங்கள்" என்று பதிலளித்தார் ஆசிரியர். அதற்கு "உன்னைக் கொலை செய்யச் செய்திருக்க வேண்டும். கொல்லுவதற்கு ........"என்று அவர் மிரட்டும் தொனியில் பேச்சைத் தொடர்ந்தும், "தொலைபேசி உரையாடல் தொடர்ந்து பதிவு செய்யப்படுகின்றது. உங்களுக்கு விரும்பிய மிரட்டலை எல்லாம் கூறுங்கள்" என்றார் ஆசிரியர். அவ்வளவுதான். தொலைபேசி இணைப்பு உடனே சட் என்று துண்டிக்கப்பட்டது. இந்த மிரட்டல் குறித்து உரிய தரப்புகளிடம் முறைப்பாடு செய்ய "உதயன்", "சுடர் ஒளி" நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகவும் அறியப்பட்டுள்ளது.

தமிழ் ஊடகங்களின் உதவாத [ ஊடக ] தர்மமும் பிண்ணனியும்

இது பற்றி நாம் பல தடைவைகள் விவாதித்திருந்தாலும் மீண்டும் இது குறித்த ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டிய புறச்சூழல்களினால் இது பலரை சங்கடப்படுத்தும் என்பதால் பல தடவைகள் எழுத முற்பட்டு எழுதாமல் விட்டதை எழுதலாம் என்றிருக்கின்றேன். அண்மையில் தேசிகன் என்பவர் மின்னஞ்சலில் கடுமையாக சாடியிருந்தார் அவருக்கும் இது பதிலாக அமையும் பொதுவாகவே எல்லா ஊடகங்களும் தத்தம் நலன், இனம் சார்ந்ததாகவே இயங்குகின்றன இது சர்வதேச ஊடகங்களிலிருந்து உலக வல்லரசுகளினது ஊடகங்கள் வரை பொருந்தும் இது தான் உலக நியதியாக இருந்தும் உலகத்தால் கைவிடப்பட்ட , புறக்கணிக்கப்பட்ட , பயங்கரவாதிகளாக்கப்பட்ட எமது ஊடகங்கள் மட்டும் ஊடக தர்மம் என்னும் உதவாத தர்மத்தைக் கட்டிக் கொண்டு அழுகின்றன. அது ஏன் என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை ? மின்னஞ்சல்கள், பின்னூட்டங்கள் புறக்கணிப்பு , கருத்துக்களங்களில் சர்வதிகார தணிக்கைகள் , திணிப்புக்கள் எதுவும் பயன் அளிக்காத பட்சத்தில் நாம் சுத்துமாத்துக்கள் என்று வலைப்பூவை ஆரம்பித்தோம் இந்த ஊடகங்களினது இருட்டடிப்புக்களை அம்பலப்படுத்த வேறு வழியிருக்கவில்லை இந்த வலைப்பூவினால் அம்பலப்படுத்தப்பட்ட பச்சோந்தித்தனங்கள் பெரியளவு மாற்றத்தைக் கொண்டு வந்தது என்று சொல்லாவிட்டாலும் பலரது மறுபக்கத்தையும், பச்சோந்தித் தனங்களையும் வெளிச்சம் போட்டுக்காட்டியிருந்தோம். அது இனி தமிழ்த்தேசியத்தில் தொடரும் இதற்கு எமக்கெதிரான எதிரான பின்னூட்டல்கள் மட்டும் பகிரங்கமாக வந்தன மாறாக ஆதரவானவை பகிரங்கப்படுத்த வேண்டாம் என்று மின்னஞ்சல்களாக வந்தன இது ஒன்றைத் தெளிவாகக் காட்டுகின்றது ஒருவரும் எதிர்வினையாற்ற பகிரங்கத்தில் விரும்பவில்லை என்பது தான் பட்டும் படாமல் எழுதுவதை மட்டும் சொந்தப் பெயரிலும் , முகம் அறிந்த பெயரிலும் எழுதுவது இப்போது வழக்கமாகிவிட்டது எதிர்மறையான கட்டுரைகளை ஆய்வுகளை முகம் அறியாத பெயர்களிலேயே எழுதுகின்றார்கள். இதற்கு புதிது புதிதாக வரும் பெயர்களைக் கொண்டு அறிந்து கொள்ளலாம் ஆனால் இவர்கள் ஒன்றும் புதிய ஆய்வாளர்கள் இல்லை அதே குட்டையில் ஊறிய மட்டைகளே ஆனால் வேறு பெயர்களில் அதை விடக் கேவலம் என்னவென்றால் முன்னாள் புலிகளின் கூட்டம் செய்வது தான் யாரையாவது திட்டுவதென்றால் இவர்களுக்கு பெயர் அறிந்த இணையங்கள் இருந்தாலும் வலைப்பூக்களில் தான் திட்டுவார்கள் தாம் யாரென்று தெரிந்தால் நாளை தமிழர்களிடம் பிச்சை கேட்க முடியாது அல்லவா தமிழ் ஊடகங்களில் முகம் அறிந்த ஆய்வுகள் செய்பவர்கள் நிச்சயமாக இவற்றுக்கு கட்டணம் அறவிடுவார்கள் இந்த ஆய்வாளர்களைப் பொறுத்தமட்டில் தமது பெயர் கேட்டுப்போகாத வகையிலேயே இவர்களின் ஆய்வுகளும் இருந்து வருகின்றன. ஆனாலும் இவர்கள் எவரிலும் தூரநோக்கு இருப்பதாகத் தெரியவில்லை பெரும்பாலான ஆய்வுகள் பிசுபிசுத்துப் போய்விட்டன அதனால் தான் இவர்களே வேறு பெயர்களில் ஆய்வுகளை எழுதிவருக்கின்றார்கள் போலும் ஆனால் ஒரு துர்ப்பாக்கியம் என்வென்றால் தமிழர்களின் ஏகோபித்த ஆதரவுடன் இயங்கிய 30 வருட ஆயுதப்போராட்டத்தின் பிரச்சாரத்தை 30 வருடமாக அந்த இனத்திற்கே பிரச்சாரம் செய்து வந்திருக்கின்றோம் என்பது தான். ஆனால் போராட்டம் அழிக்கப்பட்டும் இன்னும் பிரச்சாரம் மட்டும் ஓயவில்லை ஆனால் முன்னெப்போது இல்லாத முரண்பாடுகளும் , துரோகங்களும் , விலை போவதும் , ஊடுருவல்களும் , சதிகளும் இப்போது அரங்கேறி வருகின்றது தமிழர்களின் தலைமையின் பிரசன்னம் இன்மை, உறுதிப்படுத்தக் கூடிய தலைமையகம் இன்மையால் ஏற்பட்ட வெற்றிடத்தால் முன்னேப்போதும் இல்லாத பிரச்சாரம் இப்போது தேவைப்படுகின்றது. முரண்பட்ட ஆய்வுகளை தெரிந்தும் உறுதிப்படுத்த முடியாமையால் பிரசுரித்து வந்திருக்கின்றோம் இப்படியான வெறுமையைத் தொடர வேண்டுமா ? இதனைத் தெளிவு படுத்தும் வகையில் நமது ஊடகங்களும் , அமைப்பாளர்களும் செயற்படுகின்றனவா ? அது குறித்த ஒரு பதிவாகவே இதனை இடுகின்றோம் இதுவரை வந்த ஆய்வுகள், பின்னணிகள், சம்பவங்களை வைத்து முடிந்தவரை எல்லா ஊடகங்களையும் அதற்கு நீண்ட தேடல்கள் தேவையாக இருப்பதால் முடிந்தவரை அம்பலபடுத்த முயற்சிக்கின்றோம் தற்போதுள்ள வெறுமை நிலையில் தமிழ் ஊடகங்கள் பெரும் வரலாற்றுத் தவறிழைப்பதாகவே படுகின்றது கடந்த காலத்தினை திரும்பிப் பார்த்தால் 1. புலிகளின் உண்மை நிலவரத்தை மக்களுக்கு தெளிவு படுத்தாமல் உசுப்பேத்தி மக்களை வெற்றி மாயைக்குள் வைத்திருந்து தோற்கடித்தது 2. மே 2009 இல் ஏற்பட்ட தமிழர்களுக்கு ஏற்பட்ட பேரழிவுக்கும் அதன் பின்னரான உளவியல் ஊடக யுத்தத்திலும் சிதைக்கப்பட்ட தமிழர்கள் 3.கேபி இன் வரவும் அதன் பின்னணியில் நடந்த சதிகளும், துரோகங்களும் , ஊடுருவல்களும், விலைபோனவைகளும் மூடி மறைக்கப்பட்டதும் , மெளனமாக இன்று வரை இருப்பதும் 4. நாடுகடந்த அரசின் உருவாக்கமும் அதன் பின்னணியும் பற்றி மக்களுக்கு தெளிவு படுத்தாமை 5.வட்டுகோட்டை மீள் வாக்கெடுப்பில் நடாத்தப்பட்ட துரோகங்களின் பின்னணிகளை அம்பலப்படுத்தாமை 6.இலங்கைத் தேர்தலில் ஒருமித்த, தூரநோக்கில்லாமல் , தெளிவில்லாமல் எல்லோரையும் குழப்பியமை 7.இலங்கைத் தேர்தல் முடிவுகளை வைத்து மீண்டும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற வகையில் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதை தொடர்வது 8. இவை எல்லாவற்றுக்கும் மேலாக புலிகளின் பெயரில் வெளிவரும் அறிக்கைகளையோ, அல்லது புதிது புதிதாக வரும் இணையம் ,தலைமைச்செயலகம் பற்றிய செய்திகளை உறுதிப்படுத்தாமை , அல்லது மெளனம் காப்பது இந்த முண்ணனி ஊடகங்கள் எல்லாமே புலம் அமைப்பாளர்களுடனும் புலிகளுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்பு பட்டவர்கள் நேரடியாகச் சம்பந்தப்பட்ட இணையங்களும், அமைப்பாளர்களும் அப்படி ஒன்று நடந்ததாக அலட்டிக்கொள்ளக் கூட இல்லை ஆனால் உறுதிப்படுத்துவதற்கு தலைமைச் செயலகம் இல்லையே என்றால் இது குறித்த செய்திகளை விகடனும், நக்கீரனும் இந்தியாவிலிருந்து ஆய்வு செய்கின்றார்கள் எப்படி ? இது என்ன எப்படி இருக்கின்றது என்றால் கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வைகுண்டம் போய் சிவனை காட்டப்போவது போல் இருக்கின்றது இதை பாணியிலே தான் எமது தமிழ் ஊடகங்கள் ஆய்வுகளும் செய்கின்றன இவர்களின் ஆய்வுகளும் செய்திகளும் இந்த வகையில் தான் பார்க்கவேண்டியிருக்கின்றது வலைப்பதிவர்களாகிய நாங்கள் இந்த ஊடகங்களை பிரதி பண்ணுவர்களே அவை இவை மீதுள்ள அபிமானத்தை நம்பிக்கையை வைத்துத் தான் உறுதிப்படுத்தி அல்ல

இலங்கை வரலாற்றில் அதிஷ்டமுள்ள ஜனாதிபதி நானே சுதந்திர தின நிகழ்வில் மகிந்த ராஜபக்ஷ

இலங்கையின் ஜனாதிபதி வரலாற்றில் அதிஷ்டமுள்ள ஜனாதிபதி நானே என்பதில் பெருமை கொள்கிறேன். அரசியல்வாதிகள் மக்களை ஒரு போதும் தவறான பாதையில் வழிநடத்தக் கூடாது. நான் நாட்டைக் காட்டிக் கொடுப்பதற்கான எந்த முயற்சிகளிலும் ஈடுபடவில்லை. இனியும் அவ்வாறான செயலை செய்ய மாட்டேன்” என இன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சுதந்திர தின வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். “இந்த நாட்டில் வாழ்கின்ற மக்கள் அனைவரும் மன்னர்களே. 30 வருட காலத்தில் இந் நாட்டில் மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை இருந்தது. அந்த நிலைமையை நான் முற்றாக மாற்றியமைத்தேன். வடக்கு கிழக்கில் ஜனநாயக முறையில் தேர்தல் நடந்தது. வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் ஆகிய பாரிய அபிவிருத்தி திட்டங்களை நாம் அப்பகுதிகளில் மேற்கொண்டு வருகின்றோம். அரசியல்வாதிகள் மக்களை தவறாக வழிநடத்தக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதி தமிழில் உரையாற்றுகையில், “இன்று எமது சுதந்திர தினம். நம் எல்லோருக்கும் சந்தோஷமான நாள். 30 வருட காலமாக நிலவிய பயங்கரவாத நிலைமை இப்போது இல்லை. அப்படியான சூழ்நிலையில் இன்று நாம் சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகின்றோம். இன்று நாம் பிரச்சினைகள் எதுவுமின்றி நிம்மதியாக வாழ முடியும். பாதுகாப்பாக வாழ முடியும். காலம் முழுவதும் நாம் சந்தோஷமாக வாழ முடியும். அதுதான் மிக மிக முக்கியம். இது நமது தாய் நாடு. நாம் எல்லோரும் ஒரு தாய் மக்கள். இந்நாட்டு மக்கள். நாம் அனைவரும் சகோதரர்கள். சம உரிமையோடு கௌரவத்துடன் நாம் வாழ வேண்டும். எல்லோருக்கும் எல்லா வசதிகளும் கிடைக்க வேண்டும் அதுதான் சமத்துவம், சம நிலை. ஒரே நாடு, ஒரே மக்கள் என்றவாறு நாம் வாழ வேண்டும். தாய் நாட்டை நீங்கள் எப்போதும் மறக்க வேண்டாம் இந்நாட்டில் சிறுபான்மை என்று யாரும் இல்லை. அபிவிருத்தி பாதையில் நமது தாய் நாட்டை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அபிவிருத்தியில் முக்கிய கேந்திர ஸ்தானமாக எமது நாடு திகழ வேண்டும்” என்றார். யுத்தம் நிறைவடைந்த பின்னர் இடம் பெறும் சுதந்திர தின வைபவம் என்பதாலும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இடம்பெறும் மிக முக்கியமான வைபவம் இது என்பதாலும் உள்நாட்டு, சர்வதேச மக்கள் மத்தியில் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

விடுதலை வீரர்கள் சமாதி

ஆறடி நிலத்தில் மீளாத்துயில் கொள்பவர்கள் விடுதலை வீரர்கள் சமாதி அது எங்கள் விடுதலை விலை நிலங்கள் இல்லாதொழிக்கும் நயவன்சகர்களுட்ன் கூட்டு சேர்ந்த தேச விரோதிகள் அன்று உன்னை காக்க வெடியை வெடித்தவர் நினைவு தூபி உனது கண்ணுக்கு தெரியவில்லையா? எட்டப்பா எட்டி நின்று பார் உறங்கவில்லை எமது தேச குருவிகள் சிறகு அடித்து பறக்க சற்று சயனம் கொள்ளுகிறார்கள் எழுந்து விடுவார்கள் உங்கள் சங்கு அறுக்க எட்டப்பா எட்டி நின்று பார் காட்டி கொடுப்பதும் தாயை கூட்டி கொடுப்பது உனது செயல் எலும்பை தின்னும் எச்சில் நரியே சிங்கள வெறியனின் வாழ் பிடிக்கும் குள்ள நரியே கல்லறைகள் விழித்து எழும் காவியம் படிக்கும் காவியத்தலைவன் வருவான் உனக்கு தருவான் தர்மத்தின் அடி சினங்கள் வெறியன் சிதறுவான் நீ ஓடுவாய் உன் மரணவாசலை நோக்கி