இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
சனி, 6 பிப்ரவரி, 2010
இன்டர்நெட்டுக்கு நோபல் பரிசு?
இன்டர்நெட்டுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என இத்தாலிய இதழ் மற்றும் நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
இத்தாலியிலின் புகழ்பெற்ற இதழ் வயர்டு இத்தாலி. உலக நாடுகளிடையே அமைதியை ஏற்படுத்துவதில் இன்டர்நெட் முக்கிய பங்கு வகிப்பதாக அது தெரிவித்துள்ளது. மகத்தான சேவையைப் பாராட்டி, இன்டர்நெட்டுக்கு இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.
இதற்காக, இன்டர்நெட் பார் பீஸ் என்ற தலைப்பில் ஒரு பிரசாரத்தைத் தொடங்கி உள்ளது. இதன்படி, உலகில் அமைதியை ஏற்படுத்துவதற்கு இன்டர்நெட் ஆற்றி வரும் பங்கு குறித்து பல்வேறு தகவல்கள் எடுத்துரைக்கப்படும். இந்த பிரசாரம் வரும் செப்டம்பர் வரை தொடரும். இதுகுறித்த தங்களது கருத்துகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
இன்டர்நெட் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்களை மத, இன வேறுபாடு இல்லாமல் ஒருங்கிணைக்கிறது என வயர்டு இத்தாலி பத்திரிகை ஆசிரியர் லுனா தெரிவித்துள்ளார்.
இதுதவிர, 2003ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற ஷிரின் எபடி மற்றும் புற்றுநோய் சிகிச்சை நிபுணரான உம்பெர்டோ வெரோனெசி ஆகியோரும், இன்டர்நெட்டுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளனர்.
டொயொட்டோ நிறுவனம் மிகப்பெரும் சிக்கலில்
மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான டொயொட்டோ, தமது வாகனங்களின் வேகத்தை அதிகரிக்க உதவும் ஆக்ஸிலரேட்டர் பெடல்களில் பிரச்சினைகள் இருந்ததால் எண்பது லட்சம் வாகனங்களை மீள்ப்பெற எடுத்த முடிவுக்கு பிறகு, அதற்கு மேலும் ஒரு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.பெட்ரோல் மற்று இயற்கை வாயு ஆகியவற்றின் கலப்பில் ஓடும் டொயொட்டோவின் புதிய அறிமுகமாக பிரியஸ் எனும் மாடல் கார்களின் பிரேக்குகளில் பிரச்சினை இருப்பதாக அந்த நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.
அந்த வகையான காரின் பிரேக் செயற்பாட்டின் வடிவமைப்பை தாங்கள் மாற்றியமைத்துள்ளதாகக் கூறும் டொயொட்டோ, ஏற்கனவே சாலைகளில் ஓடிக் கொண்டிருக்கும் வாகனங்களை எப்படி சரி செய்வது என்பது தொடர்பிலான நடவடிக்கைகளும் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
எனினும் இந்த சிக்கல் பாதுகாப்பு தொடர்பான அபாயம் ஏதும் கிடையாது என்றும் அதை சுலபமாக சரி செய்துவிடலாம் என்றும் அந்த நிறுவனம் கூறுகிறது.
ஏற்கனவே ஓடிக் கொண்டிரும் தமது வாகனங்களை திரும்பப் பெற நேர்ந்தது அந்த நிறுவனத்துக்கு இரண்டு பில்லியன் டாலர்கள் இழப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆளும் கட்சி அழைப்பு
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆளும் கட்சி அழைபப்பு விடுத்துள்ளது
ஜனாதிபதித் தேர்தலின் போது ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளித்ததன் மூலம் மேற்கொண்ட தவறுகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் திருத்திக் கொள்ள சந்தர்ப்பம் இருப்பதாக> சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா> தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் அறிவித்துள்ளார்.
அவசர காலச் சட்ட நீடிப்பு தொடர்பில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உங்களது மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டுமாயின் எங்களுடன் இணைந்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை எனவும்> எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இதனை ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனரல் சரத் பொன்சேகா தேர்தல் முடிவுகளுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தால் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை தங்களது சார்பில் சாட்சிக்காக ஆஜர்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் போன்றே ரணில் விக்ரமசிங்கவும் ஒர் வெற்றியாளராக கருதப்பட வேண்டும் எனவும்> ஜெனரல் பொன்சேகாவின் தோல்வியின் மூலம் ரணிலின் அரசியல் பயணம் தொடர வழிகோலியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி வெற்றி பெற வேண்டும் என்பதே ரணில் விக்ரமசிங்கவின் இரகசிய எதிர்பார்ப்பாக அமைந்ததென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஒரு சில ஊடகங்கள் மட்டுமே பக்கச்சார்பின்றி செயற்பட்டதாக அவா தெரிவித்துள்ளார்.
போலியான பிரச்சாரங்கள் மற்றும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி அதன் மூலம் அரசியல் லாபமீட்ட எந்தவொரு எதிர்க்கட்சியும் முனைப்புக் காட்டக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆயுததாரி இனியபாரதி சிறார் போராளிகளை இணைப்பதாக ஐ.நா குற்றம் சுமத்தியுள்ளது
சிறீலங்காத் துணை இராணுவக் குழுவின் ஆயுததாரியான இனிய பாரதி சிறுவர் போராளிகளை இணைப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இன்னர் சிட்டி பிரஸ் நியூஸ் இணையத்தை மேற்கோள்காட்டி டெய்லிமிரர் எனும் ஆங்கில இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
சிறுவர் மற்றும் ஆயுத போராட்டம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி மேஜர் ஜெனரல் பெற்றிக் கெமார்ட் தனது இலங்கைப் பயணம் குறித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிறீலங்கா அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் என்றழைக்கப்படும் கருணாவின் ஆதரவாளரான இனிய பாரதி என்பவரே அகவை குறைந்தவர்களை போராளிகளை இணைப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அப்பாறைப் பிரதேசத்தில் இவ்வாறு சிறுவர்கள் இணைக்கப்படுவதாக தகவல் கிடைக்கப்பெற்றதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சோகம் தொலைத்து உறுதி கொள்வோம்!
கூண்டோடு எங்கள் மக்கள் அழிக்கப்ப்பட்டனம். குற்றுயிராய் கிடந்த எம் மக்கள் கொலை செய்யப்பட்டனர். புல் டோசர்களால் எங்கள் மக்கள் பிணங்கள் புதைக்கப்பட்டது. புகை கக்கிய முள்ளிவாய்காலின் இறுதி நாள் நிகழ்வுகள் நெஞ்சை பிழிந்து இரத்தத்தை உறைய வைத்தன. விடுதலை என்பது சும்மா சுண்டங்காய் அல்ல தலைவன் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை அத்தனை வலிகளையும் சுமந்த மக்களும் புரிந்திருந்தனர்.
நீண்ட நெடு நிரை நின்று வவுனியாவுக்கு பயணிக்கும் பாதி வழியில் தண்ணீரின்றி, உண்ண உணவின்ற மடிந்து போயினர் எங்கள் உறவுகள். மனிதம் மரணித்ததை முதல் முதலாய் கண்டென் என்று கண்ணீர் சிந்திம் விழியோடு சொல்லுகின்றார் ஒரு முதியவர்.
வாழ்வு எறிகணைக்குள்ளும் குருதி பாயும் ஆறுகளுக்குள் மிதந்த போதும் முள்ளி வாய்க்கால் வரை மனிதநேயம் மண்டியிடாது இருந்தது. மரத்தடி வாழ்வு எனினும் மற்றும் படி எத்த சட்டமும் எந்த முள்வேலி வளையங்களும் எம்மை தடுததில்லை.
கேள்வி கேட்க தயங்கி நின்று, சில ஒட்டுண்ணிகளின் ஆதரவுக்காய் காத்திருக்கும் போது தான் எத்தனை பேச்சுங்கள், எத்தனை சாபங்கள் தாங்கிய படியும் மீண்டும் ஐயா, அம்மா, என்று தங்கள் முகம்களை பார்க்கும் புலிகளின் நினைவு நெஞ்சுக்கு வருகிறாதாய் சொல்கிறார் அந்த முதியவர்.
முள்ளிவாய்காலில் தங்களிடம் தஞ்சமென வந்தவர்களுக்கு வாழ்வளிக்க இலட்சியத்தை பெற இருந்த ஆயதத்தை கிழே போட்டு நஞ்சுண்ண முடிவெடுத்த அந்த போராளிகளின் தியாகம் எங்கே? அரைப்பாசல் சாப்பாட்டுக்கு மக்களை முண்டியடிக்க வைத்து கொலை செய்யும் இந்த துரோகிகள் எங்கே?
விடுதலை பெற்ற இலங்கை குடிமக்கள் யார் என்பதை உலகுக்கு சிங்களவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் போது அடிமைப்படுத்தப்பட்ட தமிழினத்தின் குடும்பத்தின் குருத்துக்களின் கற்பு அரச படைகளிடமும், கூலிக்குழுக்களிடமும் பறிபோய் கொண்டிருந்தது.
சாபம் பெற்ற இனம் ஒன்றின் இன்னல்களை கண்டுகொள்ள யார் உள்ளனர்? ஓமந்தையில் இருந்து ஒட்டுசுட்டான் வரை நிரையாக நிற்க்கும் எம் மக்களின் உணர்வுகள் பேசும் கதைதான் என்ன?
கொள்ளிகட்டை கூட போட முடியாது வீதி வழிவிட்டு வந்த உறவுகளின் மரணங்கள் அவர்கள் உறவுகள் மனதில் ஆறாத வடுவைவிட்டுச் சென்றது.
உயிர் உள்ளவரை உற்றவரை உறவினரை வாட்டும் இந்த சோகம் என்று தீருமோ,?
தீரத்தான் வேண்டும் உறவுகளே!
எம் கூடுகலைத்து கும்மிருட்டில் எம் இனத்தை தள்ளியவன் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். சிங்கள தேசமும் அதன் அரசும் இதற்க்கு கண்டிப்பாக தமிழினத்தின் வரலாற்றில் குருதியால் பதில் எழுதியே தீருவார்கள்!
30000 மக்களின் ஆன்மாக்களின் மீது உறுதி எடுத்துக்கொள்வோம்... 30000க்கு மேற்ப்பட்ட மாவீரரின் துணையோடு தொலையாக கனவொன்றை வென்றெடுக்க நம் சோகம் கலைவோம்.
சுக்குநூறாக சிங்களம் வெடிக்கும் வரை வெற்றிக்காய் உழைப்போம் எழுந்திருங்கள்....!
என் தலைவரை ஏன் கொன்றீர்...?
என்தலைவரை ஏன் கொன்றீர்கள் என்று உரக்க கத்த வேண்டும் என்ற உணர்வு, வானொலிகள், பத்திரிகைகள், ஏன் இணையங்கள் எல்லாமே என் தலைவனின் வீரச்சாவு பற்றியே பேசிக்கொண்டிருக்கின்றது.
விடுதலைப்புலிகளின் சர்வதேச தொடர்பாளரான எஸ்.பத்மநாதன் என்பவர் கூட இதை உறுதிப்படுத்தி அறிக்கை விட்டார், போதாததிற்க்கு மட்டு, அம்பாறை அரசியல்த்துறையும் அறிக்கை விட்டது. அதனால் உயிரோடு இருக்கும் ஒரு தலைவனுக்கு அஞ்சலி செலுத்தும் கொடுமை மிக்க இனமாக்கப்பட்டோமா?
தளத்திலிருந்து புலனாய்ப்பிரிவின் பொறுப்பாளர்களின் ஒருவர் தெரிவித்த கருத்துக்கள் இங்கு மழுங்கடிக்கப்பட்டு, முகம் தெரியாத மனிதர்களின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கபட்டுள்ளது. இத்தனை வருட கால போராட்டத்திற்க்கு யாரெல்லாம் உழைத்தார்களோ, எவர் எல்லாம் களப்பணி ஆற்றினார்களோ அவர்களை எல்லாம் நாம் இழந்து கண்ணீரோடு நிற்க்கின்றோம். ஊடைந்து போன எம் உள்ளமைப்புக்களையும் வெளிக்கட்டமைப்புக்களையும் மீண்டும் நலிவடைய செய்யும் பாரிய சதியா? தலைவரின் வீரச்சாவு செய்தி என்பதை எமக்குள் நாம் கேட்க வேண்டிய தேவை எமக்கு உள்ளது.
காற்றோடு கதை பேசி பல ஆயிரம் வீரரைப்படைத்தது எங்கள் மண்! நேற்றைக்கும் இன்றைக்கும் நாளைக்கும் தமிழை நிமிர்த்தி வைத்தவன் எங்கள் தலைவன்.
நம்பிக்கையற்றவர்கள் தங்கள் நம்பிக்கையீனங்களை வெறுப்புக்களால் அல்லது தலைவருக்கு அஞ்சலி செலுத்த விடுங்கள் என் தொனியில் வெளிப்படுத்த தவறவில்லை. மாற்றுக்கருத்தாளர்கள், மற்றும் பலர் இன்றும் இப்போதும் தலைவர் பற்றிய விமர்சனங்களை முன்வைத்தபடியே இருக்கும் போது நேற்று வரை போராட்டத்தை நேசித்தவர்களும், அதற்காய் தளத்திற்ககு வெளியே உழைத்தவர்களுக்கும் இந்த போராட்டம் கசத்தது என்பது தமிழினத்தின் துரதிஸ்டமே! களத்தில் நின்று அளப்பெரிய தியாங்களை செய்த போராளிகளுக்கும் அந்த போராளிகளுக்கு உதவியதால் கொல்லப்பட்ட மக்களுக்கும் சொல்ல வேண்டிய நாம் அழிக்க வேண்டிய பதிலை மறந்து அகதி முகாம் வாழ்க்கையையும், அவல வாழ்வு பற்றியும் பேசாமல் புலிகளை பற்றி விமர்சனங்களை மட்டும் முன்வைப்போர் உண்மையில் விடுதலைப் போரை நேசித்தவர்களா? அல்லது திண்னை எப்போது காலியாகும், உட்காரலாம் என்று பாத்திருந்தவர்களா?
விடுதலைப்புலிகள் என்ற ஒரு சக்தி ஈழத்தில் அழிக்கபட்டது உண்மை எனில், அதன் தலைவன் எங்கள் தேசியத்தலைவர் வீரச்சாவை அணைத்தது உண்மை எனில் நாளைய தமிழினத்தின் எதிர்காலம் என்ன என்பதை இந்த அஞ்சலி செய்ய விருமப்பும் நபர்கள் அமைப்புக்கள் உறுதி செய்ய வேண்டுமல்லவா?
அகதி முகாம்களில் வாழும் இளைஞர்களுக்கு இன்று அந்த வாழ்வு இனிக்கலாம் ஆனால் அதே நேரம் தன் முன்னே நடக்கும் அக்கிரமங்களுக்கு அந்த இளைஞனும் ஓர் நாள் பதில் சொல்லியே தீர்வான் என்றால் அவன் தேர்தெடுக்கப்போகும் வழி அரசியலோ, அகிம்சையோ அல்ல என்பதை எல்லோரும் மறந்து விடுகின்றனர்.
இன்று புலிகளைப்பற்றி பேசும் பலருக்கும் அதன் தேவை உணரப்படும் போது தங்கள் வாய்களை எங்கே வைத்துக்கொள்வார்கள் என்பது வேறு கேள்வி!
புலத்தில் நடைபெற்ற பேராட்டங்களை நலிவுறச் செய்து அதல் பாரிய வெற்றியை கண்டுள்ளது சிங்கள அரசு. இது எதனால் என்று கேட்டால் முற்று முழுதாக தலைவரின் வீரச்சாவு செய்தியால் என்று என்னால் 100 வீதம் சொல்ல முடியும்.
தலைவர் இல்லாத விடுதலையை யாரால் எப்படி பெற்றுக்கொள்ள முடியும் என்பது பாரிய கேள்விக்குறியாக உள்ள போது இங்கு பலருக்கு வேறு விதமான நாட்டங்கள் அதிகரித்துள்ளன.
அது தான் யார் அடுத்த தலமை!
வெற்று பேச்சு மேடை ஏறி பேசுபவனோ! 33 வருடங்கள் தலைவரின் நண்பன் என்பதாலே தமிழரின் தலைமை ஏற்றுக்கொள்ளும் தகுதி யாருக்கும் இல்லை. புலிகளுக்கு அரசியல் அறிவு இல்லை என்று சொல்லும் தமிழகத்து ஊடகங்களோ, எம் புலம்பெயர் தமிழர்களோ, கண்டிப்பாக அரசியல் என்றால் என்ன என்பதை வெளிகாட்ட வேண்டும்!
வார்த்தைகளை கோர்த்து வர்ண ஜாலங்கள் போடுவதால் உண்மைகள் ஒருபோது; அழியப் போவதில்லை. எம் தலைவனை கொன்றவன் யாராக இருந்தாலும் அவனை நான் மட்டுமல்ல என் சந்ததியும் மன்னிக்காது.
உயிருள்ள மனிதனுக்கு அஞ்சலி செய்ய விளையும் ஊடக ஜாம்பவான்கள் ஒரு நிமிடம் தங்கள் சிந்தனையை மீட்டி யாதார்த்தத்தை உணருங்கள்...!
உலகுக்கு எம் தலைவன் மானச்சாவடைந்தான் என்று ஒரக்க சொல்வதால் உங்கள் உள்ளங்கைகளில் ஈழத்தை கொண்டு வந்து தருவார்கள் என்று கனவு காணும் புலம் பெயர்வாழ் தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகளே உங்கள் அறிவு கெட்டத்தனமான அறிவுரைக்கு புலிகளின் சர்வதேச தொடர்பாளர் பலியானார் என்ற செய்தி கசக்கின்றது.
எம் சமூகத்தை வழி நடாத்த முடியாத உங்களால் எப்படி இப்படியான ஆலோசனைகளை வழங்க முடிந்தது என்பதை பற்றி சிந்தியுங்கள்.
தமிழர்கள் பற்றிய முடிவை எடுக்க வேண்டிய தலமையை இல்லை என்று சொல்லி விட்டு யாரின் கழுத்தில் மாலையிட இந்த ஆலோசனைகள்???
ஆரம்பிக்கிறது ஆடம்பர கழியாட்டங்கள்
நாங்கள் இத்தனை நாளாய் நடித்துக்கொண்டிருந்தோம்.எங்களுக்கு எமது மக்கள் பற்றி அக்கறை, தேவை அவர்களுக்காக நாங்கள் போராட்டம் செய்கின்றோம். எங்கள் விருப்பங்களை அவர்களுக்காக விட்டு விடுகின்றோம். என்று எத்தனையோ கதைகளை நாம் சொல்லிவிட்டோம். ஆனால் அவை அனைத்தும் முள்ளிவாய்க்கால் கடந்து வவுனியாவில் மக்கள் அடைபடும் வரை தான். அப்படியானால் இத்தனை நாட்கள் நாங்கள் எதற்காகநடித்தோம்? யாரினதும் வற்ப்புறுத்தலுக்காகவா,? இல்லையேல் மற்றவர்களுக்காகவா?
தமிழர்கள் மத்தியில் உண்மையான உணர்வு இருந்திருக்குமானால் இந்த கலியாட்டங்கள் நடைபெறுமா? ஊடகங்கள், அமைப்புக்கள் எல்லாமே தமிழ் மக்கள் மீது எத்துணை பற்று வைத்திருக்கின்றன என்பதை மிக குறுகிய காலத்தில் தமிழ் மக்கள் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளனர்.
அமைப்புகளுக்குள்ளும்,, ஊடகங்களுக்குள் தனிமனிதர்கள் முடிவுகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதன் காரணமாக மற்றையவர்களின் கருத்து என்பது மிகவும் குறைவாகவே இங்கு உள்வாங்கப்படுகின்றது. நேற்று நாம் எல்லோரும் சேர்ந்து ஒப்பாரி வைத்து விட்டு நாளைகக்கு கலியாட்டம் செய்வது நல்லதல்ல.
மக்கள் ஒன்று கூடல்கள், கவலைகள் பகிர்ந்து கொள்ள உதவும். ஆனாலும் அந்த ஒன்று கூடல்கள் எப்படி அமைய வேண்டும் என்பதில் ஏற்ப்பபாட்டடாளர்கள் கவனமாக இருக்க வேண்டும். நாங்கள் எமது உறவுகளின் சோகத்தை பகிர்ந்து கொள்ளுமுகமாக ஒன்றுகூடல்களை ஏற்பாடு செய்தன் ஊடகா நாம் இழந்த உறவுகளை, உறவுகளை இழந்த மற்றையோரின் துயரினை பகிர்ந்து கொள்ள ஒன்று கூடல்கள் இடம் கொடுக்க வேண்டும்.
மக்களின் மனதை பாதிக்கும் வகையில் நடைபெறும் நிகழ்வுகள் பற்றி ஏற்பாடாளர்கள் சிந்திக்க வேண்டும். வெறும் பணம் சேர்ப்பதை மட்டும் குறிக்கோளாக கொள்ளாது மக்களின் உணர்வுகளை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
ஊடகங்கள், மற்றும் அமைப்புகள் தமது நிகழ்வுகள் பற்றிய விளக்கத்தில் மக்களினன் மன அழுத்ததை போக்க வேண்டும் என்று கூறும் கருத்து சரியானது ஏனினும் மக்களின் மன அழுத்தத்தை கூட்டும் வகையில் இவர்களின் செயற்ப்பாடுகள் அமையப்பெற்றுள்ளமை வருந்தத்தக்கது.
கறுப்பு ஜீலை 83 ல் இருந்து மே 2009 வரையில்
கறுப்பு ஜீலையில் காணமல் போன உறவுகளுக்கு கண்ணீர் வணக்கம் செய்தபடியே நெருப்பு நினைவுகளை அள்ளிவரமுயல்கின்றேன். புகை எழுந்த கொழும்பு மாநகரத்தின் மத்தியில் எரிந்து கொண்டிருந்த தமிழர் வீடுகளும், வணிப நிறுவனங்களுக்கே தமிழர் உடல்களும் வெந்து கொண்டிக்க சிங்களம் எகத்தாளமிட்டு கூச்சலிட்டு கும்மாளம் கொண்டாடியது.
கறுப்பு ஜீலையில் நாம் ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்தோம், பல்லாயிரம் பேர் அகதிகளாகி இன்று வரை மாற்றான் தேசங்களின் அலைகின்றனர். அதை விடவும் பல மில்லியன் கணக்கான சொத்துக்கள் அழிந்து நாசமாய் போனது.
கறுப்பு ஜீலையின் நினைவுகளை ஈழத்தமிழனுக்கு யாருதம் சொல்லித்தர தேவையில்லை என்ற ரீதியில் அதன் வடு ஈழத்தமிழர் வாழ்வியலில் ஒரு அங்கமாகிவிட்டது.
ஜீலை மாதம் 83ம் மூன்றான் ஆண்டின் பின் எழுந்த தமிழர் வரலாற்று எழுச்சியானது தொடர்ந்து அவ்வாறனதொரு கலவரத்தை, சிங்கள் ஆளும் வார்க்கமும் காடையர் கூட்டம் நடாத்த அனுமதிக்கவில்லை. அதற்க்கு சாதகமான சூழல் தென்னிலங்கையிலும் சரி எந்த பிரதேசத்திலும் எழுந்திருக்கவில்லை.
தமிழீழ விடுதலைப்போரின் உச்சக்கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினர் கொல்லப்பட்ட போதும் அதன் தாக்கம் தென்னிலங்கை தமிழர்களை பாதிக்கவில்லை. அவர்களது அந்த அமைதிக்கு காரணம் சிங்கள இனத்துடனான ஒன்றிணைவு அல்ல. மாறாய் சிங்கள இனத்துக்கும் ஆளும் சமூகத்துக்கும் தமிழர் தலைமை மீது கொண்ட அச்ச உணர்வே.!
இத்தனைக்கு பின்னர் இன்று நாம் நட்டாற்றில் நிற்பதாய் பலரும் நம்ப தலைப்பட்டுள்ளனர். கறுப்பு ஜீலையை நினைவு கூரும் நாம் இன்னோரு கறுப்பு கறைந் படிந்த ஒரு “மே” யையும் நினைவு கூரத்தலைப்பட்டுள்ளோம். தமிழீழ போரின் எழுச்சியை கறுப்பு ஜீலையும் தமிழீழ விடுதலை; போரின் பின்னடைவை கறுப்பு மே தீர்மானித்திருக்கின்றது.
கறுப்பு ஜீலையில் 2000 வரையிலான தமிழர் கொல்லப்பட்ட போது எமது இனம் பெற்ற எழுச்சியும், அந்த அழிவிலிருந்து மீள வேண்டும் என்ற எண்ணமும் மே மாதம் இருபதினாயிரம் போது மக்கள் கொல்லப்பட காரணமான சிங்கள இனவாத அரசின் போருக்கு எதிரான போராடவோ அல்லது அந்த போரின் போது சிதைவடைந்து போன எமது சில கட்டமைப்புகளை சீர் செய்யவோ இந்த மக்கள் தயாராய் இல்லை.
சிதைந்து போன கட்டமைப்புகளை சீர் செய்ய வேண்டிய காலத்தில் சிதைவுகளை மென்மேலும் வளர்ப்பதில் சிங்களத்தின் ஆதரவுக்குழுக்களை விடவும் தமிழ் மக்கள் மத்தியில் இயங்கிய கட்டமைப்புக்கள் செயல்ப்படுவது வருந்தத்தக்கது.
கறுப்பு ஜீலையில பிரசவித்த எத்தனையோ கண்மனிகளை விடுதலையின் விலையாய் தாய் மடியின் உரமாய் நாம் இட்ட போதும் விடுதலையை வெறும் அரசியலாய் மட்டும் பார்க்கும் கேவலமானவர்களுடன் நாம் வாழ நிர்பந்திக்கப்ட்டிருப்பது வேதனையான விடயமாகும்.
செய் அல்லது செத்து மடி என்று எம் தலைவன் காட்டிய பாதையில் நடந்த அந்த உன் வீரர்களின் கனவுகளை கலைத்து நம் சுயத்தை வெளிப்படுத்த முனைவோர் கறுப்பு ஜீலை ஒன்றில் கனடா ஓடி வந்தவர்களாகவே இருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.
கறுப்பு ஜீலையில் எம் தமிழன் சிந்திய குருதி எப்படி எழுச்சியை உண்டாக்கி ஈழ விடுதலையின் வாசலை அடைந்தததோ அவ்வாறு மே மாதம் எம் விடுதலைப் போரை அணைக்க, அழிக்க சிங்கள தேசம் மேற்க்கொண்ட அழிவு நடவடிக்கைகளிலிருந்து நாம் மீண்டும் எழ வேண்டும். நாம் மீண்டிட எமது கட்டமைப்புக்கள் மீண்டும் சரி செய்யப்பட வேண்டும் என்ற ஆவல் எல்லாத் தமிழ் மக்களின் மத்தியிலும் இருக்கத்தான் செய்கின்றது.
அதை தமிழீழ விடுதலை; போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல விளையும் பெருந்தகைகள் புரிந்து கொண்டு தமது அடுத்த கட்ட நகர்வுகளுக்கு செல்ல வேண்டும் அல்லது அடுத்த கட்டம் தொடர்பான ஆக்க பூர்வமான செயற்ப்பாடுகளுக்கு வழி விட வேண்டும்
யார் இந்த புலித்தலைமை!
இன்று ஊடகங்கள் ஆனாலும் சரி சில தமிழர்களானாலும் சரி விடுதலைப்புலிகளின் தலைமையை “புலித்தலமை” என்று விழிப்பதை அவதானிக்க முடிகின்றது. எனவே இந்த விளக்கென்னை ஊடகங்குக்கும் “நான் பிடிச்ச முயலுக்கு மூன்று கால்” என்று அடம்பிடிக்கும் தமிழர்களுக்கும் ஒரு விளக்கம் கொடுக்கலாம் என்றால் எனக்கு அதற்க்குரிய தகுதி இருக்கிறதா? ஏன்பது கேள்வியே!
ஆனாலும் தமிழீழ தேசியத்தின் தலைமை மீது எனக்கு இன்றும் இருக்கும் அசையாத நம்பிக்கையின் அடிப்படையில் தொடர்கின்றேன். புலித்தலைமை முடிவுக்கு வந்தது, புலித்தலைவர் கொல்லப்பட்டர், புலித்தலைமை மாற்றப்பட வேண்டும், புலித்தலைமையால் எதுகும் செய்ய முடியாது. என்று கூக்குரலிட்டு எகத்தாளமிடுபவர்கள் வேறு யாருமல்ல சில இந்திய ஊடகத்தினரும், சில ஈழத்தமிழினத்தின் முற்போக்கு வாதிகள் என்ற போர்வைக்குள் இருக்கும் பிற்போக்கு வாதிகள். அதாவது வரலாற்றின் நல்ல பக்கங்கள் அனைத்தையும் கழுவித்துடைத்து விட்டு வரலாற்றில் எங்கெல்லாம் வடு இருக்கின்றதோ, வரலாற்றில் எங்கெல்லாம் சில தவறுகள் இடம் பெற்றுள்ளதோ அவற்றை மட்டும் தம் மடியில் கட்டிக்கொண்டு அலைகின்றது சில “முற்போக்கு சிந்தினையாளர்கள் வட்டம்” இது ஈழத்தமிழருக்கு மட்டுமல்ல அவர்களுக்கும் அரோக்கியமானதல்ல என்பதை உணர்ச்சி வசப்படும் அவர்களால் உணரமுடியாது. நாளும் பொழுதும் இந்த இனத்தின் விடுதலைக்காய் போராடி வீழ்ந்த 35000க்கு மேற்ப்பட்ட போராளிகளின் கல்லறைகள் மீது இவர்கள் காறித்துப்பாத குறை!
அந்த போராளிகள் எந்த தலைமை நேசித்தார்களோ, அவர்கள் எந்த தலைமையால் வளர்க்ப் பட்டார்களோ அவர்களை புறந்தள்ளும் இந்த வட்டத்தினால் அதிக பட்சம் சாதிக்க கூடியது என்ன என்றால் புலிகளை இன்றும் விமர்ச்சிப்பது என்ற பெயரில் தங்களை தாங்களே விமர்சிப்பது. முள்ளிவாய்க்காலில் கடைசிவரை நின்று வந்த மக்கள் இன்றும் தலைமைபற்றி நன்மதிப்பை வைத்துள்ள அதே நேரம் கனடாவில் கோப்பி கடை பேச்சுகளின் பங்கு பற்றும் இவ்வாறனர்கள் அவர்களின் பிரதிநிதிகளாய் பேசுகின்றனர்.
மாற்றுக்கருத்து என்ற வட்டத்தை ஏற்றுக்கொள்ளும் நான், இவர்களின் மாற்றமில்ல கருத்துக்களை ஏற்க்கொள்ள முடியாத படி தொடர்கின்றேன். இன்றும் தலைமைச் சண்டைக்கு இவர்கள் தயார் எனினும் தடை முகாம்களில் இருக்கும் மக்களை பற்றி கரிசனை அரிதாகவே இவர்கள் மனதில் படமாகின்றது. முகாம்களில் குடிநீரே இல்லாத போதும் அங்கு ஒழுங்காக உணவு கிடைக்கின்றது, அது கிடைக்கின்றது இது கிடைக்கின்றது என்று தமது வாய்க்கு வந்த படி பேசக் கூடியவர்களாக இவர்கள் வந்து விட்டார்கள். ஒரு தலைமையின் கீழ் ஒன்று பட முடியாதவர்கள், மாற்றுக்கருத்து என்ற பெயரில் எம் மானத்தையும் தமது தன்மானத்தை விற்க்கும் செயல் வருந்தத்தக்கது.
கால ஓட்டத்தில் இன்று அனைவரும் புலித்தலைமை என்று விழிக்கும் நிலைக்கு வந்திருப்பதும் அதனிலும் வருத்த தக்கது. புலித்தலைமை என்று இவர்கள் கூறும் போது “இது எங்கோ கேட்ட குரல் என்று எனக்கும் புரிகின்றது” அதே குரல்கள் இன்று புலத்தில் ஒலிப்பது ஆரோக்கியமானதல்ல. தமிழீழ தேசியத்தலைமை ஒன்றை தவிர புலித்தலைமை என்ற ஒன்றை நான் அறியவில்லை. முள்ளிவாய்க்காலில் மௌத்த தேசியத்தலைமையில் ஆயுதங்கள் பலரின் மௌத்தை கலைத்து வதந்திகளையும், போலிப் பரப்புரைகளையும் பரப்பியுள்ளது.
முட்டாள்த்தனமான சிந்தனைகள், முடிவெடுக்க முடியாது கனடா ஓடி வந்தவர்களின் இயலாமை எல்லாம் புலிகள் என்ற தமிழீழ தேசிய தலைமை மீதான கோபமாக மாறுவதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியாவை ஆதரிக்கும் இவர்கள் அனைவரும் தமிழீழ விடுதலைப்புலிகள் இந்தியாவில் காலில் விழ்ந்து மடிப்பிச்சை கேட்க வேண்டும் என்று கோருகின்றனரே தவிர தமிழீழ விடுதலைப்போரில் நாம் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒன்று பட்ட தமிழினமாய் ஒன்று பட இவர்கள் எப்போதுமே தயாராய் இருந்ததில்லை. காரணம் புலிகள் அல்ல… அவர்களது விட்டுக்கொடுத்து இனத்தின் வாழ்வு தொடர்பாக சிந்திக்க முடியாத மனது!
இப்போதும் இவர்கள் தம் இனத்தை விட தமிழீழ தேசிய தலைமை மீதான தமது வசைபாடல்களை தொடர்ந்து செய்வதால் இவர்கள் எப்போதும் திருந்த மாட்டார்கள் என்பது திண்ணம். தேசியப் போராட்டத்தை முன்னெடுத்து மக்களுக்கான விடிவை ஏற்ப்படுத்த வேண்டியவர்கள், தாம் ஆகாயத்திலிருந்து குதித்தவர்கள் போல் மற்றவர்களை கேள்வி கேட்பது மடமை!
இன்றைய இளைஞர்கள் மீது இந்த விடுதலைப்பாரத்தை சுமத்திய பாரிய பொறுப்பு இவர்களையும் சாhரும் என்பதை இவர்கள் மறந்து விடுகின்றனர். 35 வருடம் இந்த ஆயுதப்போராட்டம் இலக்கை அடையாமல் தொடர்ந்தது என்றால் அதற்க்கு ஒற்றுமைப்படாத எமது இனம் காரணமே அன்றி விடுதலைப்புலிகளோ, அல்லது தேசியத்தலைவரோ அல்ல!
இருந்தாலும், மீண்டும் இவர்களுக்கான சந்தர்ப்பம் வந்திருக்கின்றது, முயன்று பார்;க்கட்டும் சிங்களவன் காலில் வீழ்ந்து கிடக்கட்டும், இந்தியாவின் செருபாகட்டும், தனித்தமிழீழத்தை இவர்களால் பெற்றுத்தர முடியுமெனில்…இந்தியாவிற்காக வக்காலத்து வாங்கும் இவர்களால் அவர்கள் காலடியில் தான் நாம் கிடக்க வேண்டும் என விரும்பும் இவர்களால் தமிழீழ விடுதலைப்போராட்ட முன்னோக்கி நகரும் எனில்……….
இது இவர்களுக்கான காலம்…என்பதை நாமும் ஏற்றுக்கொள்கின்றோம்
வட அயர்லாந்தில் அதிகாரப் பகிர்வு தொடர்பாக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது
வட அயர்நால்தில் அதிகாரப் பகிர்வு தொடர்பான உடன்பாட்டை காப்பாற்றும் விதமாக ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தினை பிரிட்டிஷ் மற்றும் அயர்லாந்தின் பிரதமர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த உடன்பாடு வட அயர்லாந்தின் இரு பிரதான அரசியல் கட்சிகளான ஷின் ஃபெயின் மற்றும் ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சி ஆகிவகைகளிடையே ஏற்பட்டுள்ளது.
அயர்லாந்து முழுமையாக ஒன்றிணைந்து இருக்க வேண்டும் என்பது ஷின் ஃபெயின் கட்சியின் நிலைப்பாடு, ஆனால் ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியோ பிரிட்டனுடன் உறவை தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்கிற கொள்கையை கொண்டுள்ளது.
வட அயர்லாந்தில் காவல்துறை மற்றும் நீதித்துறை தொடர்பான அதிகாரங்கள் லண்டனில் இருக்கும் பிரிட்டனின் மத்திய அரசிடமிருந்து ஃபெல்பாஸ்ட்டில் இயங்கும் மாகாண அரசுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி மாற்றப்படும்.
இந்த அதிகார மாற்றத்தை ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சி இதுவரை காலமும் எதிர்த்து வந்தது.
ஷிண் ஃபெயின் கட்சியின் போராளிகள் அமைப்பான ஐ ஆர் ஏ வின் முன்னாள் போராளித் தளபதிகள் சட்டம் ஒழுங்கு தொடர்பான பணிகளை மேற்கொள்ள நேரிடும் என்று ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்து வந்தது.
மீண்டும் படுகொலைகள் ஆரம்பம் – 2ம் கட்ட இன அழிப்பு தொடங்கியுள்ளதா?
சிறீலங்கா ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச மீண்டும் தெரிவாகியுள்ள நிலையில் மீண்டும் தமிழினப் படுகொலைகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. முள்ளிவாய்க்கால் பெரும் இன அழிப்பிற்குப் பின்னர் சற்று ஓய்வடைந்திருந்த இந்தப் படுகொலை மற்றும் காணாமல் போதல்கள் தற்போது மீண்டும் வெளிப்படையாக இடம்பெறத் தொடங்கியுள்ளன.
இவற்றில் சில படுகொலைகள் வெளிவருகின்றபோதும், பல வெளியுகிற்கு தெரியாமல் மறைக்கப்படுவதாகவும் எமக்குக் கிடைத்த தகவல்களில் இருந்து அறியமுடிகின்றது. வன்னியில் இருந்து சிறீலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வவுனியா தடுப்பு முகாம் சிறைகளில் அடைக்கப்பட்டு தற்போது வன்னியில் பல்வேறு பகுதிகளிலும் இராணுவ வலயங்களுக்கு நடுவில் சிறு சிறு குழுக்களாக குடியமர்த்தப்பட்டுள்ள மக்களில், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாக இருப்பவர்களை இனங்கண்டு, அவர்களை மர்மமான முறையில் படுகொலை செய்யும் நிகழ்வுகளும் இவ்வாறான படுகொலைகள் வெளியில் தெரியவராதவாறு மறைக்கும் நிகழ்வுகளும் அங்கு நடைபெற்றுக் கொண்டிருப்பதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
.
விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் போல் மக்களோடு கலக்கவிட்டுள்ள சிறீலங்கா துணை இராணுவக் குழுக்களைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் மற்றும் சிறீலங்காவிற்கு ஆதரவாகச் செயற்படுகின்ற தமிழர்களை இந்த மக்களோடு பழகவிட்டு அவர்களிடம் விடுதலைப் புலிகளின் அனுதாபிகள் இருக்கின்றார்களா என்று கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.
.
அத்துடன், யாழ்குடாவில் சென்று தங்கியுள்ள வன்னி மக்களில் சிலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். எனினும், இதுகுறித்த தகவல்கள் வெளிவராதவாறு அச்சுறுத்தல்கள் மூலம் மறைக்கப்பட்டுள்ளன. இதேவேளை, இன்னொரு பக்கம் வெளிப்படையாகவும் படுகொலைகளும், கடத்தல்களும் இடம்பெறத் தொடங்கியுள்ளன.
.
இதுவரை ஏழு பேர் படுகொலையானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா நெள்ளுக்குளம் பிரதேசத்தில் இரும்புக் கம்பியால் தாக்கி மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அறியவருகின்றது. இச்சம்பவம் கடந்த 2ம் திகதி செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. இதில் காயம் அடைந்த ஒருவர் அனுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
சிங்களக் குடியிருப்புக்களுக்கு அருகில் உள்ள நெள்ளுக்குளம் பகுதியில் இப்படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதேவேளை வவுனியா புளியங்குளம் பகுதியில் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடக்க பாணப்பட்டுள்ளார். ஏ-9 வீதி புளியங்குளம் பகுதியினை சேர்ந்த பாலச்சந்திரன் தங்கதேவி என்ற 30 வயதான பெண்ணே மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
.
இதேவேளை, யாழ்ப்பாணம், கொழும்புத் துறை நெடுங்குளம் வீதியில் உள்ள கிணற்றிலிருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நெடுங்குளம் வீதியைச் சேர்ந்த எஸ்.சிவராசா (30 வயது) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே கடந்த 3ம் திகதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலத்தின் உடலிலும் தலையிலும் பலத்த அடி காயங்கள் காணப்படுகின்றன. கொலை செய்யப்பட்டுப் பின்னர் கிணற்றில் போடப்பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
.
இதேவேளை, யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்த விபுலானந்தறாஜா புவசாந்த் என்ற 16 வயது இளைஞன் கடந்த 26ம் நாள்முதல் காணாமல் போயுள்ளதாக பெற்றோர்களால் முறையிடப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக குறைந்துபோயிருந்த கடத்தல்கள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளமை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
.
இதற்கிடையே, கிளிநொச்சியில் தனது உறவினரை பார்க்கச் சென்ற இளைஞர் ஒருவரும் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 25ம் திகதி திங்கட்கிழமை தனது உறவினர் ஒருவரை பார்க்க யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி சென்ற இளைஞர் இது வரையிலும் காணவில்லையென உறவினர் தேடியுள்ளனர். இந்நிலையில் அவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்துள்ள இளைஞன் வேலுப்பிள்ளை சசிரூபன் (30 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
.
கிளிநொச்சி சிங்கள மகா வித்தியாலயம் அருகேயுள்ள உறவினர் வீட்டுப் பகுதியில் கிணற்றுக் கட்டில் இரத்த கறை படிந்து இருந்ததையடுத்து கிணற்றினுள் பார்த்த போது அவ் இளைஞன் கல்லில் கட்டப்பட்டு கிணற்றில் போடப்பட்டிருந்ததாக அந்த இளைஞனின் உறவினர்கள் தெரிவித்தனர். இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் உகண வலகம்பற காட்டுப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் பெண் ஒருவரின் உடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.
.
அம்பாறை உறமசந்திப்பகுதிக்கு அருகில் இருந்தே பெண் ஒருவரின் உடலம் உருக்குலைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவரது உடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. விடுதலைப் புலிகள் இருந்தபோது இவ்வாறான படுகொலைகளுக்கும் காணாமல்போதல்களுக்கும் அவர்கள் மீது குற்றம்சாட்டிய சிறீலங்கா, தற்போது முழுமையாக தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இடம்பெறும் படுகொலைகள் காணாமல்போதல்கள் குறித்து மௌனம் காப்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சிறீலங்கா இராணுவத்தின் தமிழ் மக்கள் மீதான கெடுபிடிகள் மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரியவருகின்றது. தேர்தலுக்காக கெடுபிடிகளைக் குறைத்திருந்த படையினர் தற்போது மீண்டும் கெடுபிடிகளையும் சோதனைகளையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது மேலும் பல படுகொலைகளும், காணாமல்போதல்களும் இடம்பெற வழிவகுத்துள்ளதாக மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
பாக். கராச்சி இரட்டை வெடிப்புச் சம்பவத்தில் 22 பேர் பலி : 50 பேர் வரை காயம்
பாகிஸ்தானின் கராச்சி நகரில் மோட்டார் சைக்கிள்களில் வைக்கப்பட்டிருந்த இரண்டு குண்டுகள் வெடித்ததில், குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
முதல் சம்பவத்தில்,வெடிமருந்துகள் நிரம்பியிருந்த ஒரு மோட்டார் சைக்கிள், ஷியா இன மக்களை ஒரு மத ஊர்வலத்துக்கு ஏற்றிச் சென்ற பஸ் மீது மோதியதில், 12 பேர் கொல்லப்பட்டனர்.
ஒரு மணிநேரத்துக்கு பின்னர், இந்த முதல் தாக்குதலில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த மருத்துவ மனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே மற்றுமொரு மோட்டார் சைக்கிள் வெடித்ததில், குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானில் பலத்த பாதுகாப்பின் மத்தியில் இந்தக் குண்டுத்தாக்குதல்கள் நடந்திருப்பதாக இஸ்லாமாபாத் செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்
யாழில் இந்தியா தூதுவராலயம் திறக்கும் நோக்கம், தமிழர் பண்பாட்டை சிதைத்து, சமுதாய சீரழிவை செயல்படுத்தவே...
இந்தியா யாழில் தூதுவராலயம் திறக்கும் நோக்கம் இந்திய உளவுபிரிவான "றோ" அங்கே அலுவலகம் திறந்து தமிழர் பண்பாட்டை சிதைப்பதற்கும் தேசியத்தில் உள்ள உள்ள மாணவர்களை அழித்து யாழில் சமுதாய சீரழிவை செயல்படுத்தவுமே என புலம்பெயர் தமிழர் சமூக அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக புலம்பெயர் தமிழர் சமூக அமைப்பு விடுத்துள்ள அறிக்கை:-
உலக தமிழர்களே! ஈழ தமிழர்களே! யாழ் தமிழர்களே!
தமிழர்களை இன்னும் அடிமையாக்கும் எண்ணத்தில் யாழில் தூதுவராலயம் திறக்க இருக்கும் அந்நிய அழிப்பு சக்திய மக்கள் பலத்தால் தடுப்போம்.
இந்தியா யாழில் தூதுவராலயம் திறக்கும் நோக்கம் இந்திய உளவுப் பிரிவான "றோ" அங்கே அலுவலகம் திறந்து, யாழில் மக்களை தங்கள் அடிமை சேவகம் செய்ய வைப்பதற்கும், யாழில் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதற்கும், தங்களுக்கு தலை ஆட்டும் துரோகிகளை தமிழர் மத்தியில் வளர்ப்பதற்கும், தமிழர் பண்பாட்டை சிதைப்பதற்கும், தேசியத்தில் உள்ள உள்ள மாணவர்களை அழித்து யாழில் சமுதாய சீரழிவை செயல்படுத்தவுமே அங்கு தூதுவராலயம் திறக்க இருக்கிறார்கள்.
இதை யாழ், ஈழ, உலக தமிழர்கள் தடுப்பதற்கு முயற்சி செய்யவேண்டும். மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து யாழ்ப்பாணத்தில் தென் ஆசிய பயங்கரவாதிகளின் தூதுவராலயம் திறப்பதை தடுப்போம்,
இல்லையேல் 1987-1990 போல மக்கள் மத்தியில் கஞ்சா, அபின் போன்ற போதைவஸ்துக்களை பாவனையில் கொண்டு வருவார்கள் இந்திய ஆதிக்க சக்திகள். கற்பழிப்புகளை தாங்களும் செய்து தங்கள் அருவருடிகளையும் செய்ய வைத்து, தமிழர் பண்பாட்டையும் கலாசாரத்தையும் கல்வியையும் அழிப்பார்கள்.
இந்தியாவை விட மோசமான நாடாக இந்தியாவின் அடிமையாக யாழ்பாணத்தை மாற்றுவதே அவர்கள் திட்டம். இதை நாங்க முளையிலே கிள்ளி எறிய புறப்படுவீர்!
எம் மக்களே!
1987 இந்திய இராணுவத்தால் செய்து முடித்த யாழ் வைத்தியசாலை படுகொலையை மறக்கவில்லை,
1987- இந்திய இராணுவத்தால் யாழ் ஊடகங்கள் அழிக்கபட்டதை மறக்கவில்லை,
1987-1990 அப்பாவி மக்களை, புத்திஜீவிகளை, போராளிகளை, தளபதிகளை, அழித்ததை மறக்கவில்லை,
1988 இல் அப்பாவி புளொட் போராளிகளை மாலைதீவை அழிக்க அனுப்பி அந்த போராளிகளை தாங்களே அழித்த இந்தியாவை மறக்கவில்லை,
1982-2009 தமிழ் போராளி குழுக்களுக்கு ஆயுதங்களை, பயிற்சிகளைக் கொடுத்து சகோதர பகையைத் தூண்டி அவர்களை அழித்த இந்தியாவை மறக்கவில்லை
புலம்பெயர் தமிழர் சமூக அமைப்பு
இலங்கையில் அவசரகாலச் சட்டம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது
இலங்கையில் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்படுவதற்கான பிரேரணை 87 மேலதிக வாக்குகளினால் வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
இந்தப் பிரேரணை தொடர்பான விவாதங்களின் பின்னர் பிரேரணைக்கு ஆதரவாக 102 உறுப்பினர்களும் எதிராக ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 15 உறுப்பினர்களும் வாக்களித்திருக்கின்றார்கள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஜேவிபி ஆகிய கட்சிகள் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
கடந்த மே மாதம் விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவடைந்து, நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறிவருகின்றது.
அதேவேளை, நாட்டின் சமாதானத்தைப் பாதுகாப்பதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அரச உடைமைகளின் பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்துவதற்காகவே அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்படுவதாகப் பிரதமர் ரட்ணஸ்ரீ விக்கிரமநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கின்றார்
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆடைக்கோட்டா சலுகை ரத்து
இலங்கைக்கான ஆடை ஏற்றுமதி கோட்டா சலுகையை ரத்துச்செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் உத்தியோகபூர்வ முன்னெடுப்புகள், இந்த மாத இறுதியில் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த தடை 6 மாதத்திற்கு பின்னரே அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் இந்த தீhமானத்தை எடுத்துள்ளனர்.
விசாரணை அறிக்கைகளின்படி ஜி எஸ் பி பிளஸ் சலுகையை பெற்றுக்கொள்வதற்கான ஒழுங்குகளை இலங்கை நிறைவேற்றவில்லை என தெரியவந்துள்ளதாக ராஜதந்திர தரப்புகள் தெரிவித்துள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆடை கோட்டா சலுகை வறிய நிலையில் உள்ள 16 நாடுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இலங்கைக்கான ஜி எஸ் பி பிளஸ் ரத்து தீர்மானம் கடந்த வாரம் எடுக்கப்பட்டது.
இந்தநிலையில் அது எதிர்வரும் 16 ஆம் திகதி பிரசல்ஸில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியமைச்சர்கள் கூடும் போது உறுதிப்படுத்தப்படவுள்ளது.
அதேநேரம் இந்த முடிவை திரும்பப்பெறுவதற்கு கொழும்புக்கு வாய்ப்பு ஒன்றும் வழங்கப்படவுள்ளதாக ராஜதந்திர தரப்புகள் குறிப்பிட்டுள்ளன.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் அது தொடர்பான விசாரணைகள் உரியவகையில் முன்னெடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த தடை அமுலுக்கு வருகிறது
கருணா மற்றும் பிள்ளையானுக்கும் இடையிலான முறுகல் நிலை உக்கிரம்
தேச நிர்மான அமைச்சர் விநாகமூர்த்தி முரளீதரன் என்றழைக்கப்படும் கருணாவிற்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கும் இடையிலான முறுகல் நிலை உக்கிரமடைந்துள்ளதாக லக்பிம பிரதான செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது இந்த நிலைமை மேலும் உக்கிரமடையக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் இரகசியமாக எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஆதரவளித்துள்ளதாக கருணா தரப்பினர் குற்றம் சுமத்துகின்றனர்.
இம்முறை பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித்து போட்டியிடக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
பொதுத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் இன்றைய தினம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி விசேட கூட்டமொன்றை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)