இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
செவ்வாய், 16 பிப்ரவரி, 2010
தகவல்களை குறித்து வைக்க ......
கம்ப்யூட்டரில் மிகவும் கவனமாகப் பணியாற்றிக் கொண்டிருக்கையில் திடீரென நமக்கு ஒரு போன் அழைப்பு வரலாம். அவசரமாய் ஏதேனும் தகவல்களை போன் செய்பவர் கூறுவார்.
அப்போதுதான் பேனா, பென்சில் மற்றும் பேப்பரைத் தேடுவோம். எதிர் முனையில் இருப்பவர், என்னய்யா இதெல்லாம் பக்கத்தில் வைத்துக் கொள்வதில்லையா என்று அங்கலாய்ப்பார். ஏன், கையில் இருக்கும் கம்ப்யூட்டரில் தகவலைக் குறித்துக் கொள்ள முடியாதா?
முடியும். நோட்ஸ், ஸ்டிக்கி நோட்ஸ், அர்ஜன்ட் நோட்ஸ் என இதனைக் குறிப்பிடுவோம். இது போல நோட்ஸ் குறிப்புகளை, டெஸ்க்டாப்பில் எழுதி வைக்கும் வசதியைத் தர பல புரோகிராம்கள் இருந்தாலும், ஹாட்நோட்ஸ் (Hot Notes) என்னும் புரோகிராம், இவ்வகையில் சிறப்பானதாக இருந்தது.
மெசேஜ், லிஸ்ட், ஸ்கிரிப்பிள் என மூன்று வகைகளில், மூன்று தனி தனிக் கட்டங்களில் நாம் அவசரத் தகவல்களை எழுதி வைக்கலாம். இந்த கட்டங்கள் ஒளி ஊடுறுவும் தன்மை உடையதாய், டெஸ்க் டாப்பில் உள்ளதை மறைக்காதவகையில் இருக்கும். சிறிய அளவில் இதில் படங்களைக் கூட வரைந்து வைக்கலாம். அல்லது படத்தை ஒட்டியும் வைக்கலாம். வேஸ்ட் பாஸ்கட் என்னும் வசதியில், அதிகம் பயன்படாத குறிப்புகளை எழுதி வைக்கலாம். தேவைப்பட்டால், ரீசைக்கிள் பின்னிலிருந்து எடுத்துக் கொள்வதைப் போல எடுத்துக் கொள்ளலாம். முக்கியமான தகவல்களை பேக்கப் பைலாக வைத்துக் கொள்ளவும் இதனைப் பயன்படுத்தலாம்.
நினைவில் வைத்துக் கொண்டு, வரும் நாட்களில் மேற்கொள்ள வேண்டிய வேலைகளை, இதில் ஒரு நினைவூட்டல் போர்டு மாதிரி எழுதி வைத்துக் கொள்ளலாம்.இது எங்கும் எடுத்துச் செல்லும் வகையில் போர்ட்டபிள் வெர்ஷனாகவும் கிடைக்கிறது. இதனை பிளாஷ் டிரைவில் எடுத்துச் சென்று எந்த பெர்சனல் கம்ப்யூட்டரிலும் பயன்படுத்தலாம்.
மூளைக்கு ஆபத்து,,,,,,,,
வண்ண விளக்குகள் வசீகரமானவை. கண்களை கவர்ந்திழுக்கும். பலரும் விரும்புவதால் வண்ணவிளக்குகள் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பாக பூஜையறை, படுக்கை அறை மற்றும் பெரியவர்களின் படங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் `ஜீரோ வாட்ஸ்’ பல்புகளாவது ஒவ்வொரு வீடுகளிலும் ஒளிரும்.
அமெரிக்காவின் எம்.ஐ.டி. பல்கலைக்கழக நரம்பியல் வல்லுனர்கள், விளக்கு ஒளியால் ஏற்படும் நரம்பியல் மாற்றங்கள் குறித்து ஆய்வு நடத்தினார்கள். இதில் வண்ண விளக்குகளில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகள் மூளையைப் பாதிப்பது தெரியவந்துள்ளது.
இதற்காக ஆய்வகத்தில் பல வண்ண விளக்குகளுக்கு இடையே எலிகள் பரிசோதித்துப் பார்க்கப்பட்டன. ஆய்வில் விளக்குகளை அணைக்கும்போது ஏற்படும் எலக்ட்ரிக் கதிர்வீச்சு மூளை செல்களான நிரான்களைப் பாதிக்கின்றன. அவற்றின் செயல்பாட்டை தடுப்பதால் பல விபரீத வியாதிகள் ஏற்படுகின்றன.
குறிப்பாக உடல் வலி, பார்கின்சன் என்னும் ஞாபகமறதி வியாதி, மூளை முடக்கம், இதயக் கோளாறுகள், நோய் எதிர்ப்பு அமைப்பு (இம்ன் சிஸ்டம்) செயல்களில் பாதிப்பு மற்றும் இன்னும் பல வியாதிகளுக்கு வழி வகுக்கிறது.
ஒவ்வொரு வண்ண விளக்கும் வேறுவேறு பாதிப்புகளை உருவாக்குவது குறிப்பிடத்தக்கது. சிவப்பு வண்ண விளக்கு நிரான்களை செயலிழக்கச் செய்கிறது. நீல வண்ண விளக்குகள் ஒரு வகை ஜீன்களைப் பாதிக்கிறது. மஞ்சள் விளக்குகள் வேறுவகை ஜீன்களைப் பாதிக்கிறது.
உடலியக்கம் பல மின்தூண்டல்களால்தான் நடைபெறுகிறது. இதற்கிடையே விளக்குகளை அணைக்கும்போது ஏற்படும் மின் அதிர்வுகள், மூளையை பாதிக்கிறது என்கிறது ஆய்வு
மகிந்தவிற்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார் கே.பி
சிறிலங்காவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன், உலகின் பல நாடுகளிலும் உள்ள தனக்கு நெருக்கமானவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி வருவதாக தெரியவருகின்றது.
தொலைபேசியூடாக தொடர்புகளை ஏற்படுத்தி வரும் இவர், மகிந்தவிற்கு ஆதரவான செயற்பாடுகளில் ஈடுபடுமாறு தனது ஆதரவாளர்களுக்கு கூறி வருவதாகவும், மகிந்தவின் சகோதரர் பசில் ராஜபக்சவுடன் இணைந்து பல நடவடிக்கையில் இவர் ஈட்டுபட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.
தற்போது புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தனது முன்னாள் ஆதாரவளர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், இவர்கள் மூலமாக மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக சர்வதேச ரீதியாக வலுப்பெற்றுவரும் எதிர்ப்பலைகளை தணித்து, புலம்பெயர்ந்த தமிழர்களின் மகிந்த அரசிற்கு எதிரான செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் பணி ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகின்றது.
அத்துடன், எதிர்வரும் சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் தமிழத் தேசியக் கூட்டடைப்பு சனாதிபதி தேர்தலைப் போன்று ஒருமித்து நின்றால், மகிந்த ராஜபக்சவிற்கு வடக்கு கிழக்கு மாநிலங்களில் வெற்றிவாய்ப்பு கிடைக்காது என்பதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்தவர்களை அதிலிருந்து பிரித்தெடுப்பதுடன், சுயேட்சையாகப் பலரைக் களமிறக்கி, வாக்குகளை சிதறிடித்து வெற்றிவாய்ப்பை மகிந்தவிற்கு சாதகமாக திருப்புவதற்கும் இவர் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
சுயேட்சையாக தேர்தல் களத்தில் குதிக்குமாறு இவர் தனக்கு நெருக்கமான பலருக்கு தொலைபேசி எடுத்து அழைப்பு விடுத்துள்ளதாகவும் அறியவந்துள்ளது. சிறிலங்கா இராணுவத்தின் உச்ச பாதுகாப்பில் இருப்பதாகக் கூறப்படும் ஒருவர் இவ்வாறு வெளிப்படையாக தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொள்ளத் தொடங்கியிருப்பது இவர் கடத்தப்பட்டது மற்றும் கைதானது தொடர்பான பலத்த சந்தேகங்களை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
கருணாநிதியிடம் அளவோடு பழகாவிட்டால் ஆபத்து
கருணாநிதிக்கு பல்வேறு தரப்பினரும் விழா எடுப்பதும் விழாவில் கலந்துக்கொண்டு பேசுவோர் சொறிந்து விடுவதில் சூரன் நீயா? நானா? என் போட்டிபோட்டுக்கொண்டு கருணாநிதிக்கு புகழ் மலர்கள் சொரிவதும் அந்தப் புகழுரைகளைக் கூச்ச நாச்சமில்லாமல் முதுகெலும்பே முறிந்தாலும் கவலையில்லை என கருணாநிதி காலை முதல் மாலைவரை இருந்த இடத்திலேயே இருந்து ரசிப்பதும் தமிழ்நாட்டில் அன்றாட நிகழ்வாகிப்போனது அனைவரும் அறிந்ததே.
இந்த வகையில் 14-2-2010 அன்று சங்கத் தமிழ் பேரவை சார்பில் நட ந்த பாராட்டு விழவில் கலந்துகொண்டு பேசிய ரஜினி கருணாநிதியைப் பற்றி குறிப்பிடும் போது சூரியனுக்கு அருகில் சென்றால் சுடும் எட்ட இருந்தால் குளிரும் நான் அருகிலும் செல்ல மாட்டேன் எட்டியும் போக மாட்டேன் என கருணாநிதியிடம் அளவோடு பழகாவிட்டால் ஆபத்து என்பதை சூசகமாக எச்சரித்தார். போலிஸ் காரனோடு பழகும் போது இப்படி தான் பழகவேண்டும் என்று பொதுவாகச் சொல்வார்கள் காவல்துறையை கையில் வைத்திருக்கும் கருணாநிதியை விட்டு எட்ட நின்றதால் பாரதிராஜா பட்ட பாட்டை ரஜினியின் எச்சரிக்கை நினைவூட்டியது.
அவரது பேச்சு இப்படியென்றால் அவரது செயல்பாடுகள் அரசியல் நோக்கர்களை வேறு மாதிரி சிந்திக்க வைத்திருக்கிறது ! தனது மகளின் நிச்சயதார்த்த அழைப்பிதழை தான்நேரில் ஜெயலாலிதாவிடம் கொடுத்ததையும், மனைவியை அனுப்பி கருணாநிதியிடம் அழைப்பிதழ் கொடுத்ததையும் ஒப்பிட்டு பேசுகிறார்கள் ரஜினியின் இந்தச் செயலுக்குக் காரணம் கான நாம் கடந்த வாரம் திரைத்துறையினர் எடுத்த விழா நிகழ்வுகளை நினைவூட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது.
அந்த விழாவில் நடிகர் அஜித், கலைஞர்கள் பொதுவானவர்கள் ! அரசியல் வாதிகள் தங்களது போராட்டங்களுக்கும், அரசியல் சார்ந்த நிகழ்வுகளுக்கும், வரச்சொல்லி மிரட்டுகிறார்கள். என்றும் கருணாநிதி இதில் தலையிட்டு நீதி வழங்க வேண்டும் என்றும் ஒரு குற்றப்பத்திரிகையை வாசித்தார். அஜித் பேசும் போது ரஜினி தன் இருக்கையில் இருந்து எழுந்து இரு கைகளையும் தட்டி அஜித்தின் குற்றச்சாட்டை ஆமோதித்து வரவேற்று தனது ஆதரவை அப்போதே வெளிப்படுத்தினார்
இது கருணாநிதியின் கைத்தடிகளுக்கு பேரதிர்ச்சியை உண்டாக்கியது விழா முடிந்த ஒரிரு நாட்களிலேயே கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் ”உயரேயும் தூக்குவார்கள் பொத்தென்றும் போடுவார்கள்” எனக் குறிப்பிட்டது திரைத்துறையினரைத்தான் என்பதும் குறிப்பாக விழாவில் ரஜினியின் வினைக்கான, எதிர்வினை தான் அந்த அறிக்கை என்பதை எல்லோராலும் விளங்கிக்கொள்ள முடிந்தது இந்த அறிக்கைக்கு பிறகுதான் கலைஞர்கள் பொதுவானவர்கள் என்ற தன் கருத்தை செயலாக்கிக் காட்டவே ஜெயலலிதாவிற்கு நேரில் சென்று தன் மகளின் நிச்சியதார்த்த அழைப்பிதழை கொடுத்துள்ளார் என தெரிகிறது.
ரஜினி, ஜெயலலிதா சந்திப்பு இன்னொரு முக்கியத்துவம் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். அ.தி.மு.க. காங்கிரஸ் கூட்டனிக்கு முயல்பவர்களின் முயற்சி வெற்றிபெற்று விடுமென்றே தெரிகிறது.
தி.மு.க. காங்கிரஸ் கூட்டனியை முறியடிக்க சதி நடப்பதாக கருணாநிதியின் ஆதரவாளர் தங்கபாலு அலறுவதில் இருந்தே இச்செய்தி உறுதிபடுகிறது கோடி கோடியாய் சம்பாதிக்கும் திரைத்துறையினரைப் பொருத்தவரையில் அவர்களுக்கு சிம்மச் சொப்பனமாக விளங்குவது வருமான வரித்துரையினரும், இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு மேல் அதை தன் வீட்டு வேட்டை நாயைப்போல கட்டுக்குள் வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சியும்.
காங்கிரஸ் கட்சிக்குள் தமிழ்நாட்டிலும், டெல்லியிலும் உள்ள பலரும் ரஜினிக்கு நெருக்கமானவர்கள் அவர்கள் மூலமாக காங்கிரஸ் – அ.தி.மு.க கூட்டனி உறுதியாகப் போகிற செய்தி ரஜினி தெரிந்துகொண்டதன் வெளிப்பாடுதான் ரஜினி, ஜெயலலிதா சந்திப்பு. கருணாநிதி இருதலை முனியன் என்றால் அந்த முனியன் பாம்புக்கு தலையையும், இன்னொருபக்கம் வாலையும் காட்டத் தெரிந்த விலாங்கு மீன் தான் என்பதை ரஜினி நிருபித்து விட்டார்.
ரஜினியின் செயலில் தெரிவது முதிர்ச்சி
கருணா நிதியின்முகத்தில் தெரிவது அதிர்ச்சி
பொன்சேகாவால் பாதிக்கப்பட்ட இன்னொரு பெண்ணின் ஆதங்கம்
21 வருடங்களாக இராணுவத்தில் சேவையாற்றிய எனது கணவர் செய்யாத குற்றத்திற்காக சிறைக்கு அனுப்பி, சேவையிலிருந்து நீக்கப்பட்ட அநியாயத்து க்காக சரத் பொன்சேகா தற்பொழுது தண்ட னையை அனுபவித்து வருவதாக அநீதி இழைக்கப்பட்ட படைவீரரின் மனைவியான சமிலா நிஷாந்தி விஜேதுங்க தெரிவித்தார்.
பத்தரமுல்லயிலுள்ள தொண்டர் படையணியின் ஒழுக்கம் மற்றும் பயிற்சி நடவடிக்கைகளுக்கு முன்னர் பொறுப்பாக செயற்பட்ட சார்ஜன்ட் மேஜர் எஸ். ஏ. எஸ். விஜேதுங்கவின் மனைவியே மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.
முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தனது கணவரை பலிவாங்கும் வகையிலேயே இவ்வாறு செய்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
பெண் இராணுவ வீராங்கனை செய்த குற்றத்திற்காக எச்சரிக்கை விடுத்தமை தொடர்பாகவே சரத் பொன்சேகா தனது கணவருக்கு 21 நாள் சிறைத் தண்டனை வழங்கினார். என்னால் தேடிக் கண்டு பிடிக்க முடியாத வகையில் எனது கணவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்றும் கூறினார். பின்னர் எந்த ஒரு விசாரணையும் நடத் தாது இராணுவத்திலிருந்து எனது கணவர் நீக்கப்பட்டார் என்றும் சுட்டிக்காட்டினார்.
எனது கணவர் எங்கு இருக்கின்றார் என்பது கூட தெரியாத நிலையில் எனது சின்னஞ்சிறு குழந்தைகளுடன் நான் அழுது திரிந்ததை கண்ட சில இராணுவத்தினர் எனக்கு உதவி செய்தனர்.
இலங்கை பிரதமர் தேர்தல் பொன்சேகா மனைவி போட்டி
இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்ட ராணுவ முன்னாள் தலைமை தளபதி சரத்பொன்சேகா தோல்வி அடைந்தார். இதை தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக இலங்கை ராணுவ போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இலங்கையில் வருகிற ஏப்ரல் மாதம் பராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில், வெற்றி பெற்று பிரதமர் பதவியை பிடிக்க எதிர்க்கட்சிகள் தீவிரமாக உள்ளன.
இந்த தேர்தலில் சரத் பொன்சேகாவின் மீது ராஜபக்சே அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து மக்களிடத்தில் எடுத்து கூறி வாக்குகளை பெற திட்டமிட்டுள்ளனர். அதற்கு சரியான வேட்பாளர் பொன் சேகாவின் மனைவி அனோமா தான் என முடிவு செய்துள்ளனர்.
எனவே, பிரதமர் தேர்தலில் பொதுவேட்பாளராக இவரையே நிறுத்த உள்ளனர். பொன்சேகாவின் மனைவி அனோமாவுக்கு ஜனதா விமுக்தி வரமுனா (ஜெ.வி.பி.) கட்சி தலைவர் சோமவான்சா அமர்சிங்கே ஆதரவு தெரிவித்துள்ளார்.
இருந்தாலும், தேர்தலில் போட்டியிடுவது குறித்து சரத் பொன்சேகாவின் மனைவி அனோமாவின் முடிவு பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. இதற் கிடையே பாராளுமன்ற தேர்தலில் தமது கட்சி தலைமையிலான கூட்டணி பொது சின்னத்தில் போட்டியிடுவது குறித்து ரனில் விக்ரமசிங்கே விரும்புகிறார்.
இது குறித்து அவர் தனது ஐக்கிய தேசிய கட்சியினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தற்போது இலங்கையில் நீடித்து வரும் குழப்பமான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் புதிய கூட்டணியை ஏற்படுத்தவும் முயற்சி நடந்து வருகிறது.
ஜனாதிபதித் தேர்தல் முழுமையாக ஜனநாயக ரீதியில் இடம்பெறவில்லை
கடந்த மாதம் 26 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் முற்று முழுதாக ஜனநாயக ரீதியில் இடம்பெறவில்லை என கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்ட பொதுநலவாய நாடுகளின் குழு தமது இறுதி அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இக்குழுவின் பொதுச் செயலாளர் கமலேஷ் ஷர்மா இவ்வறிக்கையில்,தேர்தல் தினத்தன்று வாக்காளர்கள் தமது வாக்குகளை சுதந்திரமாக அளித்திருந்தாலும், தேர்தலுக்கு முன்னைய காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள வன்முறைகள் ஜனநாயக இலக்குகளை அடைவதற்கான ஒன்றான மைல்கல்லாக இல்லை.” எனத் தெரிவித்தார்.
இம்முறை தேர்தலில் இடம்பெற்ற பலசம்பவங்கள் கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் இடம்பெற்றவையே.இவற்றை தேர்தல் ஆணையாளர் சுட்டிக் காட்டியுள்ளார்.இவை குறித்து உடனடியாக கவனம்செலுத்தப்பட வேண்டும். கோரிக்கைகள் விடும் பட்சத்தில் பொதுநலவாய நாடுகளின் ஒன்றியம் இவ்விடயத்தில் உதவ தயாராகவுள்ளது எனவும் அவர் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாக்களிப்பு மற்றும் வாக்கு எண்ணும் பணிகளிர்கு முறையான நிர்வாக ஒழுங்கு கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.அத்துடன் தேர்தல் ஆணையாளரும் தேர்தல் உத்தியோகத்தர்களும் வாக்காளர்கள் வாக்களிக்க தேவையான ஒழுங்குமுறைகளை சீராகச் செய்திருந்ததாகவும் கமலேஷ் கான் தெரிவித்துள்ளார்.
தேர்தலின் பின்னரான அபிவிருத்தி மற்றும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் கைது குறித்து அவர் அவ்வறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,இவ் அபிவிருத்திகள் ஒரு பதற்ற நிலையை அதிகரித்துள்ளன.சட்டமும் ஒழுங்கும் முறையாக பின்பற்றப்பட வேண்டியது இங்கு முக்கியம்.மோதல்களின் பின்னரான தேர்தல்களையடுத்து இலங்கை அரசியல் மற்றும் சமூக விடயங்களில் இணக்கப்பாட்டினை எட்டும் என தாம் நம்புவதாக தெரிவித்துள்ளார்.
நான் சிவிலியன் இராணுவம் என்னை விசாரிக்க முடியாது
இராணுவத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத்தின் ஆரம்ப கட்ட விசாரணைகளுக்கு ஒத்துழைப்ப தற்கு மறுத்துவிட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக மேலும் தெரியவருபவை வருமாறு:
ஜெனரல் பொன்சேகாவின் சுருக்கமான சாட்சியத்தைப் பெறுமாறு பணிக்கப்பட்ட மூத்த இராணுவ அதிகாரியின் முன்னிலை யில் தோன்றுவதற்கு ஜெனரல் சரத் பொன் சேகா மறுத்துவிட்டார்.
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல்
ஜகத் ஜயசூரிய இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரி மேஜர் ஜெனரல் தயா ரட்ண நாயக்காவைப் பணித்திருந்தார்.
அரசைக் கவிழ்க்க முயன்றமை, ஜனாதிபதியைக் கொலை செய்யத் திட்ட மிட்டமை மற்றும் ஆயுத ஊழல்கள் தொடர்பாக எழுத்து மூலமான சுருக்க சாட்சியத்தை பொன்சேகாவிடம் பெறுமாறு அவர் தயா ரட்ணநாயக்காவைப் பணித்திருந்தார்.
எனினும், தான் தற்போது ஒரு சிவிலியன் எனத் தெரிவித்துள்ள ஜெனரல் பொன் சேகா தாம் இப்போது இராணுவச் சட்டத் திற்குக் கட்டுப்பட்ட வரல்லர் என வலியு றுத்தியுள்ளமையுடன் அதனால் இராணுவ அதிகாரிக்கு சுருக்கமான சாட்சியத்தைத் தாம் வழங்கமாட்டார் எனவும் தெரிவித்துவிட்டார்.
கடற்படைத் தலைமையகத்தில் உள்ள விடுதியொன்றில் சரத் பொன்சேகாவின் சாட்சியத்தைப் பெறுவதற்கே மேஜர் ஜெனரல் ரட்ணாயக்கா திட்டமிட்டிருந் தார். பொன்சேகா அங்கேயே தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
ஜெனரல் பொன்சேகா ஆரம்பக் கட்ட இராணுவ விசாரணைகளில் பங்குபெற மறுத்துள்ளதன் காரணமாக சட்டச் சிக்க லொன்று உருவாகியுள்ளது. அவர் தொடர்ந் தும் ஒத்துழைக்க மறுத்தால், என்ன செய் வது என்ற கேள்வி எழுந்துள்ளது என சுட் டிக்காட்டப்பட்டுள்ளது
இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் ரத்து
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் G.S.P பிளஸ் சலுகை ரத்துச் செய்யப்பட்டுள்ளது. இலங்கைக்கு வழங்கப்படுகின்ற ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் நேற்று திங்கட்கிழமை இலங்கை அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த தகவல் பிறஸல்ஸில் உள்ள இலங்கை தூதுவர் ரவிநாத ஆரியசிங்க ஊடாக இலங்கை அரசாங்கத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்தத் தீர்மானம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் இன்று தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான சாசனத்தின் மூன்று பிரிவுகளை நடைமுறைப்படுத்துவதில் குறைபாடுகள் காணப்பட்டதாகத் தெரிவித்தே இந்த சலுகை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும்,
எனினும் எதிர்வரும் ஆறுமாத காலப் பகுதியில் இவை தொடர்பில் இலங்கை அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி ஒருவர் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கள், 15 பிப்ரவரி, 2010
மறுபடியும் பிரபாகரன்..
சி.பி.ஐ – சிதம்பரம் குழப்பத்திற்கு பிரபாகரன் காரணமல்ல..
பிரபாகரன் தப்பிவிட்டார் என்று சரத் பொய்யாகத்தன்னும் சொன்னாலே போதும்…
பிரபாகரனின் மரணச்சாட்சிப் பத்திரத்தை சிறீலங்கா அரசு தம்மிடம் தரவேயில்லை என்று சி.பி.ஐ நேற்று மீண்டும் கூறியுள்ளது. முன்னர் ஒரு தடவை இதே அறிக்கையை சி-பி.ஐ வெளியீடு செய்ய, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அதை மறுத்து இன்னொரு அறிக்கை விட்டிருந்தார். இப்போது மீண்டும் சி.பி.ஐ அதை மறுத்திருக்கிறது. நாளை ப.சிதம்பரம் மீண்டும் இன்னொரு தடவை மறுக்க நாடகம் மேலும் பல படிகளாக தொடரலாம்…
இப்படி இந்தியாவில் இருந்து அமைச்சர் ப.சிதம்பரம் ஒரு விதமாகவும், சி.பி.ஐ மறுவிதமாகவும் முரண்பட்ட அறிக்கை விடுவது எதற்காக என்று சிந்திக்க வேண்டிய பருவம் இதுவாகும். பிரபாகரன் விவகாரத்தை தொடர் குழப்பகரமாகவே வைத்திருக்க இந்திய ஆட்சியாளர் எதற்காக முயல்கிறார்கள் என்பது பலத்த சந்தேகங்களை உருவாக்குகிறது. இது தொடர்பாக ஐந்து சிந்தனைகள் இங்கே தரப்படுகின்றன.
01. பிரபாகரன் மரணம் தொடர்பாக குழப்பமான நிலை நிலவுகிறது என்று கூறிக்கொண்டே, காலத்தை கடத்துவதே இந்திய – இலங்கை அரசுகளுக்கு வசதியானது.
02. பிரபாகரன் கடந்த ஆண்டு மே 17ம் திகதியே தப்பிவிட்டார், சிறீலங்கா அரசால் காட்டப்பட்டது போலியான உருவம் என்று வாதிடுவோருக்கு ஒரு பிடிமானத்தை வழங்க வேண்டும். அவர்கள் பிரபாகரன் வரும்வரை காத்திருப்போம் என்று வீர முழக்கமிட, அனுமதிப்பது புத்திசாலித்தனமானது. போராட்டத்தின் வெப்பத்தை மெல்ல மெல்ல தணிப்பதற்கு அவர் இருக்கிறார் என்ற கருத்து அவசியமென இந்தியா கருதலாம். பிரபாகரன் வருவார் என்ற கொள்கையை காரணம் காட்டி, எல்லாவற்றையும் பின்போடுவது தமிழரைவிட தமிழர் எதிர்ப்பு சக்திகளுக்கே அதிக இலாபமானது.
03. பிரபாகரன் மரணமடைந்துவிட்டார் என்பதை – இருக்கிறார் ! இல்லை ! – என்ற இரு வேறுபட்ட குழப்பான பின்னணியோடு உறுதி செய்தால், கலவரங்கள் வெடிக்காது. இந்திய அரசும் அந்தப்பழியில் இருந்து தப்பிவிடலாம். மேலும் பிரபாகரனை புதுமாத்தளினில் வைத்துக்கொன்றது உண்மையானால், அந்த வரலாற்றுப் பழியை காங்கிரஸ் சுமக்க நேரிடும். அப்படியான பழியோடு தமிழகத்தில் காங்கிரஸ் தலை நிமிர்ந்து நடப்பது கடினம். மேலும் அதைக் காரணம் காட்டியே வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரசிற்கு குறைந்தளவு ஆசனங்களை கொடுத்து மிளகாய் அரைத்துவிடுவார் கலைஞர். ஆகவே காங்கிரஸ் தெற்கே வண்டியோட்ட இப்படி இருவிதமான கருத்துக்கள் அவசியமாகிறது. ( தமிழ்நாடு காங்கிரஸ் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகவே யுத்தத்தை இரண்டு தினங்கள் நிறுத்தியதாக சிங்கள அமைச்சர் ஒருவர் அண்மையில் கூறியது தெரிந்ததே. )
04. இவை எல்லாவற்றையும் விட ஆபத்தானது சரத் பொன்சேகாவிற்கும், மகிந்த குடும்பத்திற்கும் ஏற்பட்டுள்ள முரண்பாடு. இந்த முரண்பாட்டின் மையப்புள்ளியாக இருப்பதே பிரபாகரன்தான். உயிராபத்தை பார்க்காது உண்மையை வெளியிடுவேன் என்று சரத் பொன்சேகா கூறிவருவது பிரபாகரன் தொட்ர்பான மர்மமேயாகும்.
05. மேலும் சரத் பொன்சேகா பிரபாகரன் தொடர்பான தகவலை வெளியிடமாட்டார் என்று கருதுவது தவறு, இறுதி நேரத்தில் எடுக்கப்பட்ட ஒளிநாடா ஒன்று இதுவரை வெளியாகவில்லை என்ற சந்தேகம் நிலவுகிறது. அதை அவர் எங்காவது கொடுத்திருக்கலாம். அது வெளியானால் இந்திய அரசுக்கும் சிறீலங்கா அரசுக்கும் பெரும் சிக்கல் ஏற்படும்.
மேலும்…
சரத் பொன்சேகா பிரபாகரன் இறந்துவிட்டதாக கூறினால் ப.சிதம்பரம் சொன்னது சரியாகும். இருக்கிறார் என்று கூறினால் சி.பி.ஐ சொன்னது சரியாகும். ஆகவே இரண்டுக்கும் தயாராக இந்தியா திட்டமிடுகிறது என்று எண்ண இந்த இரு வேறுபட்ட அறிக்கைகளே சான்றாகும்.
இடையில் ஒன்று..
அரசியலில் குதித்த சரத் பொன்சேகாவை ஏன் இராணுவ நீதிமன்றில் விசாரிக்க வேண்டும் என்று சிறீலங்கா துடிக்கிறது..
ஆம்.. !
அவர் கூறுவதை எல்லாம் இரகசியமாக வைக்க இராணுவ நீதிமன்றமே தேவை. சாதாரண நீதி மன்றில் விசாரித்தால் அவர் ஏதாவது உண்மைகளை தாறுமாறாக வெளியிட்டால் அது பெரும் அரசியல் சங்கடங்களை ஏற்படுத்தும்.
அத்துடன் நின்றுவிடாது கோத்தபாய ராஜபக்ஷ, உட்பட மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தின் இரகசியங்களை உண்மையும் பொய்யுமாகக் கலந்து தாறுமாறாக வெளியிட வாய்ப்புள்ளது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக இன்னொரு ஆபத்தும் உள்ளது.
சரத் பொன்சேகா வேண்டுமென்றே பிரபாகரன் தப்பிவிட்டார் என்று கூறினால், மகிந்தவின் திட்டங்கள் எல்லாமே நாசமாகிவிடும்.
பிரபாகரன் உயிரோடு இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர் தப்பிவிட்டார் என்று ஒரு பொய் சொன்னால் போதும், பாரிய சிக்கல் ஏற்படும். வரும் தேர்தலில் மகிந்த மண் கவ்வ நேரிடும்..
மறுபுறம்
இப்படியான உறுதியற்ற நிலை இருக்கும்போது மரண அறிக்கை கிடைத்துவிட்டதாக இந்தியா ஒப்புக் கொண்டால் அது இந்தியா முழுவதும் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தும்.
ஆகவே ஒரு பக்கம் சி.பி.ஐயும் மறுபக்கம் ப.சிதம்பரமும் இரு வேறு அறிக்கைகளை விடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் குழம்புவதற்கு உண்மையாகவே பிரபாகரன் காரணமல்ல, சரத் பொன்சேகாவே காரணமாகும்.
இது குறித்து புலம் பெயர் தமிழர் வீறு கொண்டு எழுந்துவிட யாதொரு முகாந்திரமும் இல்லை. சி.பி.ஐயும் ப.சிதம்பரமும் ஈழத்தமிழருக்கு வாய்ப்பான எந்த அறிக்கையையும் வெளியிடமாட்டார்கள் என்ற அடிப்படையை விளங்கினால் அதுவே போதுமானதாக இருக்கும்.
உண்மையான அறிக்கை எது ?
சரத் பொன்சேகா கைது விவகாரம் சடையப்படும்போது அது வெளிவரும்…
நேட்டோ படையினர் பெரும் தாக்குதல்
ஆப்கானிஸ்தானின் தென் பகுதியில் தாலிபான்கள் பலமாக உள்ள மர்ஜா நகர் மீது நேட்டோ, அமெரிக்கப் படைகள் பெரும் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
தெற்கு ஆப்கானிஸ்தானுக்கான நேட்டோ படை கமாண்டர் நிர் கார்ட்டர் கூறுகையில், 60 ஹெலிகாப்டர்களுடன் நேட்டோ மற்றும் ஆப்கானிஸ்தான் படையினர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
மர்ஜா நகருக்குள் முன்னேறிச் செல்வதில் எந்தத் தடையும் இல்லை. இதுவரை எங்கள் தரப்பில் உயிரிழப்பும் இல்லை. நேட்டோ படையில் அமெரிக்க, இங்கிலாந்து உள்ளிட்ட நாட்டின் வீரர்கள் உள்ளனர் என்று கூறியுள்ளார்.
எங்கு சென்றாலும் மிக கவனமாக இருங்கள்
“அமெரிக்க நாட்டவர்களுக்கு உலக அளவில் அச்சுறுத்தல் உள்ளதால், குறிப்பாக அல்-குவைதா இயக்கத்தினர் தாக்குதல் நடத்தலாம் என்பதால், உஷாராக இருக்க வேண்டும்’ என, தங்கள் நாட்டவர்களுக்கு அதிபர் ஒபாமா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா, தன் குடிமக்களுக்கு உலகளவிலான பயண எச்சரிக்கை விடுத்துள்ளது; குறிப்பாக, அல்-குவைதா இயக்கத்தினர் தற்கொலைப் படை தாக்குதல், கடத்தல் மற்றும் குண்டு வைத்தல் போன்ற சம்பவங்களை நிகழ்த்தலாம்’ என, அந்நாடு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு:அமெரிக்க குடிமக்கள் தங்கள் பாதுகாப்பு விஷயத்தில், அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்த, அல்-குவைதா பயங்கரவாத இயக்கத்தினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.தற்கொலைப் படை தாக்குதல், கடத்தல், படுகொலைகள் மற்றும் வெடிகுண்டுகள் வைத்தல் போன்ற செயல்கள் மூலம், அவர்கள் அமெரிக்கர்களுக்கு பிரச்னை உண்டாக்கலாம். இதற்கு அவர்கள் எந்த வகையான ஆயுதங்களை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
மேலும், விடுமுறை நாட்களில் அமெரிக்கர்கள் அதிகளவில் கூடும், விளையாட்டு மைதானங்கள், குடியிருப்பு பகுதிகள், வர்த்தக வளாகங்கள், ஓட்டல்கள், கிளப்கள், உணவு விடுதிகள், பள்ளிகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பொது இடங்கள் போன்ற எந்த இடத்தை வேண்டுமானாலும், பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்கலாம்.கடந்த டிசம்பரில், அமெரிக்க விமானம் ஒன்றில் குண்டு வைக்க நைஜீரியர் ஒருவர் முயன்றார். இச்சம்பவத்திற்கு அல்-குவைதாவினர் பொறுப்பேற்றுள்ளனர். அதே போன்று, கடந்தாண்டு ஆகஸ்ட் 25ல், டில்லி ரயில் நிலையத்தில் வெடி பொருட்களுடன் வந்த ஒருவரை, போலீசார் கைது செய்தனர். அன்றைய தினமே, ஒரிசா ரயில் நிலையத்தில் மாவோயிஸ்ட்கள் ஏராளமான வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். கடந்த 2008ம் ஆண்டு, இலங்கையில் பயணிகள் பஸ்சிலும், 2006ம் ஆண்டு இந்தியாவில் ரயிலிலும், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
எனவே, அமெரிக்கர்கள் தங்கள் பாதுகாப்பு விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.அமெரிக்கர்களுக்கு உலகளாவிய அச்சுறுத்தல் உள்ளதால், எங்கு சென்றாலும் கவனமாக இருப்பது நல்லது.இவ்வாறு எச்சரிக்கை செய்தியில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில், வெள்ளை மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட செய்தியில், “மும்பை பயங்கரவாத தாக்குதலில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் காலித் ஷேக் முகமதை நீதியின் முன் நிறுத்த வேண்டும்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீன அதிபரின் சகா பதவியிலிருந்து நீக்கம்
பாலஸ்தீனிய அதிபர் மஹ்முத் அபாஸ், அவரது மூத்த சகாவான ரபீக் ஹுசைனியை பதவியிலிருந்து இடைநிறுத்தியுள்ளார்.
இஸ்ரேலிய தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் ரபீக் ஹுசைனி பாலியல் உறவு குறித்து வெளிப்படுத்திய கருத்துப் பற்றி வெளியான குற்றச்சாட்டுக்களை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தின் மீது அவதூறு ஏற்படுத்தும் விதமாக இஸ்ரேல் செயற்படுவதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு பற்றி விசாரிப்பதற்கு பாலஸ்தீன அதிகாரிகள் குழுவொன்றை நியமித்துள்ளனர்.
இஸ்ரேலிய தொலைக்காட்சியில் வெளியான வீடியோ பதிவில் ரபீக் ஹுசைனி ஆடைகளைக் களைவது போலவும் பெண்ணொருவரை அழைப்பது போலவும் காட்சி வெளியாகியிருந்தது.
ஹெலிகாப்டர் மலையில் மோதி 10 பேர் மரணம்
ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஒரு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை அடக்கும் பணியில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டது. தற்போது அவர்களுக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஏமன் நாட்டின் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று அங்குள்ள வடக்கு மலைப்பகுதிக்கு நேற்று புறப்பட்டு சென்றது. அதில் ராணுவ வீரர்களும் இருந்தனர்.
திடீரென இந்த ஹெலிகாப்டர் சானா நகர் பகுதியில் உள்ள கஹியன்மலையில் மோதி நொறுங்கியது. எனவே, இதில் பயணம் செய்த ராணுவ வீரர்கள் 10 பேர் அதே இடத்தில் பலியானார்கள்.
இந்த விபத்துக்கு எந்திர கோளாறு காரணமாக இருக்கலாம் என தெரிகிறது. இருந்தாலும் இது கலவரக்காரர்களின் சதியாக இருக்கலாம் என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பை முறியடிக்க வேண்டும்
விடுதலைப்புலிகள் வெளிநாடுகளில் மிகப்பெரும் வலையமைப்பை கொண்டுள்ளனர். அவற்றில் பெருமளவானவற்றை நாம் முறியடித்துள்ளோம், எனினும் அதனை முறியடிக்கும் பணிகள் தொடரப்பட வேண்டும் என சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
சிறீலங்காவில் மேலும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பாதுகாப்பு செயலாளராகிய நான் நாட்டில் உறுதித்தன்மையை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ளேன். விடுதலைப்புலிகள் வெளிநாடுகளில் மிகப்பெரும் வலையமைப்பை கொண்டுள்ளனர். அவற்றில் பெருமளவானவற்றை நாம் முறியடித்துள்ளோம், எனினும் அதனை முறியடிக்கும் பணிகள் தொடரப்பட வேண்டும்.
எமது படையினர் எவ்வளவு தரமானவர்கள் என்ற புரிந்துணர்வுகள் மக்களிடம் இல்லை. கிழக்கு மாகாணத்தில் இராணுவம் நிலைகொணடிருக்க வேண்டும் என பெருமளவான மக்கள் என்னிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் காவல்துறையினர் அங்கு நிலைகொள்வதை விரும்பவில்லை. நாம் பயிற்சி பெற்ற இராணுவத்தை கொண்டுள்ளோம் அவர்கள் அபிவிருத்தி நடவடிக்கைகளில் அதிகம் பங்குகொள்ள முடியும்.
நான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. பொன்சேகாவை நாம் கடற்படைத் தளத்தில் தடுத்து வைத்துள்ளோம். அவரை சிறையில் அடைக்கவில்லை, அவருக்கு ஒரு வீடு வழங்கப்பட்டுள்ளது. அது முன்னர் கடற்படை தளபதியால் பயன்படுத்தப்பட்டது. அது ஒரு ஆடம்பரமான மாளிகை.
பொன்சேகா அரச தலைவர் தேர்தலில் வெற்றிபெற்றிருந்தால் கூட எமக்கு இவ்வாறான வசதிகளை தந்திருக்கமாட்டார், ஏன் மகிந்தா ராஜபக்சாவுக்கும் வழங்கியிருக்கமாட்டார். பொன்சேகாவும், அவரின் மனைவியும் பொய்கூறுகின்றனர். பொன்சேகாவின் ஆதரவாளர்களும் பொய் கூறுகின்றனர். பொன்சேகா மீதான இராணுவ விசாரணைகள் உடனயடியாக மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்
இரண்டு மாணவர்கள் பலி
யாழ்ப்பாணம் இலந்தைக்குளம் பிரதேசத்தில் வெடிக்காத நிலையில் இருந்த எறிகணையொன்றை எடுத்து விளையாடியதாகக் கூறப்படும் கொழும்புத்துறை இந்து மகாவித்தியாலத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவர், அது வெடித்ததால் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் இலந்தைக்குளம் புளியடிச்சந்தி பிரதேசத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
பாடசாலையை விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த மாணவர்கள் இந்த பிரதேசத்தில் கிடந்ததாக கூறப்படும் எறிகணையை எடுத்தவேளையிலேயே அது வெடித்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் அரியாலை ஏ.வி. பாதையைச் சேர்ந்த 9 வயதான ஏ.லக்ஷன், 10 வயதான ஆர்.ராம்சிங் என இனங்காணப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் மேலும் ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
இவர்களில் மூவர் நாவற்குழி 300 வீட்டுத்திட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் சுழிபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)