இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வியாழன், 18 பிப்ரவரி, 2010
ஊருக்கு வரும் போது கைதாவீர்கள்....
ஊருக்கு வரும் போது கைதாவீர்கள்: வெளிநாட்டில் சிங்களவரை மிரட்டும் சிறிலங்கா தூதரகங்கள்
[ செவ்வாய்க்கிழமை, 16 பெப்ரவரி 2010, 23:06 GMT ] [ கி.வேணி ]
வெளிநாடுகளில் நடக்கும் பொன்சேகாவுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்பவர்கள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் போது கைது செய்யப்படுவர் என சிறிலங்கா தூதுவர்களால் எச்சரிக்கப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக - வோசிங்டன் மற்றும் இத்தாலியில் உள்ள சிறிலங்கா தூதுவர்களே புலம் பெயர்ந்த சிங்கள சமூகத்தை இவ்வாறு மிரட்டி உள்ளனர் என புலம்பெயர்ந்த சிங்கள சமூகத்தை சேர்ந்த ஒருவர் லங்கா ஊடகத்தில் எழுதியுள்ளார்.
அவர் மேலும் எழுதியுள்ளதாவது:
விடுதலைப் புலிகள் மீதான போரின் போது அமைதியை விரும்பிய அனைத்து சிறிலங்கா மக்களும், புலம் பெயர்ந்த சிங்கள சமூகமும் விடுதலைப் புலிகளை சிறிலங்கா மண்ணில் இருந்து அகற்றி அமைதியை உருவாக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு இதுவரை இல்லாத வகையில் திரளாக ஒன்றிணைந்து செயல்பட்டனர்.
இதன் விளைவாகவே பல நாடுகளின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும், சிறிலங்கா அரசால் மிகத் திறமையாக விடுதலைப் புலிகளின் நவீன ஆயுதங்களுடன் போராடி வெற்றி பெற முடிந்தது.
அரசின் போர் முயற்சிகளை ஆதரிக்கும் விதத்தில் நிதி திரட்டும் பிரச்சாரங்கள், சிறிலங்கா விழிப்புணர்வு பிரச்சாரம், ஆர்பாட்டங்கள், மறுப்பு தெரிவிக்கும் கூட்டங்கள் போன்றவற்றை புலம் பெயர்ந்த சிங்கள சமூகம் நடத்தியது.
புலம் பெயர்ந்தவர்களின் இந்த செயல் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் , இனவெறியர்களுக்கும் உண்மையான ஒற்றுமையின் வலிமையை தெரிவித்ததுடன் அவர்களும் பங்கு பெற வேண்டும் என்ற ஆவலை தூண்டியது.
ஆனால், ஒற்றுமையுடன் இருந்த புலம் பெயர்ந்த சிங்கள சமூகம் - தற்போது பொன்சேகாவின் கைதை ஒட்டிப் பிரிந்து விட்டது.
இது மீண்டும் ஒன்று சேர்வதற்கான வாய்ப்பும் தென்படவில்லை. பல வெளிநாட்டு தலைநகரங்களில் பொன்சேகா கைதை ஒட்டி அரசுக்கு மறுப்பு தெரிவிக்கும் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதில் பங்கேற்கும் அனைவருக்கும் பொன்சேகா சிறிலங்கா தேசத்தின் சின்னம் அல்லது நம்பிக்கை நட்சத்திரம் என்றே கூறலாம்.
சதித்திட்டம் தீட்டி அரசு பொன்சேகாவைக் கைது கைது செய்திருப்பதைத் தொடர்ந்து அனைவரும் தங்கள் அதிர்ச்சியையும், அதிருப்தியையும், ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறு பொன்சேகாவுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்பவர்கள் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் போது கைது செய்யப்படுவர் எனவும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் ஆர்ப்பாட்டங்களைத் தடுக்கும் வகையில் கேவலமான முறையில் சிறிய கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
அரசியல்வாதிகளின் உண்மையான முகங்கள் வெளிச்சத்திற்கு வருவதால் இனி சிறிலங்கா அரசியல்வாதிகளின் தேசப்பற்று நாடகங்களை புலம் பெயர்ந்த சிங்கள சமூகம் ஒரு நாளும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை.
ஆட்சியைப் பிடிக்கும் ஒரே நோக்கத்தில் அரசு எந்த விளைவுகளையும் பற்றி சிந்திக்காமல் செயல்பட்டு வருவதாகவும் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி வருவதாகவும் முன்னணி பௌத்த மத அமைப்புக்கள் கண்டித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
அரசின் செயல்பாடுகளால் அரசுக்கும் புலம் பெயர்ந்த சிங்கள சமூகத்திற்குமான உறவு அறுந்து விட்ட இந்த நிலையில் சர்வதேச விவகாரங்களில் அரசுக்கு இனி பாதிப்பே ஏற்படும்.
இனி மீண்டும் புலம் பெயர்ந்த சிங்கள சமூகத்தின் இதயத்தில் அரசு இடம் பிடிப்பதென்பது மிகக் கடினமான ஒன்று.
நாட்டின் தூதுவர்களை மட்டுமே வைத்துக்கொண்டு விடுதலை புலிகளுடன் போராடவோ சர்வேதேச அரங்கத்தில் அரசின் நிலையை நிலைநாட்டவோ முடியாது. அதற்கு புலம் பெயர்ந்தவர்களின் ஆதரவு மிகவும் அவசியம்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டு பலரைக் கொன்று குவித்த கருணா மன்னிக்கப்பட்டிருக்கும் போது, சிறிலங்கா மண்ணிலிருந்து தீவிரவாதத்தை அகற்றப் பாடுபட்ட பொன்சேகாவை ஏன் தண்டிக்க வேண்டும் என்ற தங்கள் ஆதங்கத்தையும் அரசின் இரட்டை நிலைபாடுகளையும் புலம் பெயர்ந்த இச் சிங்கள சமூகம் வன்மையாக கண்டித்துள்ளது.
சிறிலங்கா அரசு பொன்சேகாவிற்கு ஆதரவு கரம் நீட்ட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
அரசின் இந்த வெறிச் செயல் அரசியல் காழ்ப்புணர்ச்சியையும் அரசியல் கருத்து வேறுபாடுகளையும் மட்டுமே காட்டுவதாகவும் அரசு இன்னொரு தீவிரவாத இயக்கம் போல் செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டி உள்ளது.
இதைப் போன்ற செயல்பாடுகளுக்கு ஆதரவளிப்பது மீண்டும் விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் ஊட்டுவதை போன்றது என்றும் புலம் பெயர்ந்த சமூகத்தை சேர்ந்த ஒருவர் லங்கா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளை பொன்சேகா ஊக்குவித்தார்
விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சரத் பொன்சேகா செயல்பட்டதாக இலங்கை அமைச்சர் அனுரா பிரிய தர்ஷனா கூறியுள்ளார்.
இலங்கை அமைச்சர் அனுரா பிரிய தர்ஷனா யாபா இலங்கை அரசு டி.வி.க்கு அளித்த பேட்டி ஒன்றில் சரத் பொன்சேகாவை கடுமையாக விமர்சித்து உள்ளார். அவர் பேட்டியில் கூறியதாவது:
சரத் பொன்சேகாவின் அறிக்கைகள் பொறுப்பற்ற முறையில் இருந்தன. அவரது அறிக்கை இலங்கையின் இறையாண்மைக்கு எதிராக மக்களை திருப்பும் வகையில் இருந்தன.
விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்பான தமிழ் தேசிய கூட்டணி, அதிபர் தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு அளித்தது. விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான அமைப்புகள் கூறியதால்தான் தமிழ் தேசிய கூட்டணி பொன்சேகாவுக்கு ஆதரவு அளித்தது.
இதன் பிறகு பொன்சேகா விடுதலைப்புலி ஆதரவு இயக்கங்களை ஊக்குவிக்கும் செயல்களில் ஈடுபட்டார். இது விடுதலைப்புலிகளை மீண்டும் தலை தூக்க உதவும் வகையில் இருந்தது. அதிபர் ராஜபக்சே கடுமையாக போராடி தீவிரவாதத்தை ஒழித்து இருக்கிறார். ஆனால் பொன்சேகா அறிக்கைகள் தீவிரவாதத்தை மீண்டும் உருவாக்குவதாக இருக்கிறது.
பொன்சேகாவுக்கு அரசியல் அனுபவம் இல்லை. இதனால்தான் என்ன பேசுவது என்றே அவருக்கு தெரியவில்லை என்றார்
இணையத்தளம் முடக்கப்படும் சாத்தியம்
இலங்கை அரசுக்கும், தேசிய பாதுகாப்புக்கும் எதிரானவை என சில இணையத்தளங்களை இலங்கை அரசு குறிப்பிட்டுவருகிறது. அந்த தளங்களை இலங்கையில் முடக்குவது குறித்து தகவல்தொடர்பு ஆணையம் துரித நடவடிக்கை எடுக்கவுள்ளதாக செய்திகள் வந்திருந்தன. ஆனால் பொதுத்தேர்தல் நடந்து அதன் முடிவு வெளியாகும்வரை இவ்வாறான இணையங்களை முடக்கும்பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இருப்பினும் இந்த ஆண்டின் ஒரு செய்தித்தளத்தை 2,00,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்துள்ளார்கள் என்று நிரூபித்தால் மட்டுமே அரச தகவல் திணைக்களத்தில் ஊடக அனுமதியை அந்த செய்தித்தளத்துக்கு வழங்குவதென ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிர்வுக்குக் கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன. இதேபோன்ற ஒரு ஒழுங்குமுறையை முன்பே அறிமுகப்படுத்தியிருந்தபோதும் அது கடுமையாக பின்பற்றப்படவில்லையாம்.
எனவே இப்போதைய ஒழுங்குமுறைகளுக்கு அமையாத செய்தித்தளங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஊடக அனுமதியை ரத்துசெய்யும்படி ஊடக திணைக்களத்துக்கு உத்தரவு கிடைத்துள்ளது. அத்தோடு இலங்கையில் இத் தளங்களைப் பார்வையிட முடியாது.
மேலும் புலனாய்வுப் பிரிவுகளால் கூகிள் தளத்தை கண்காணிக்க முடியவில்லை என்ற காரணத்தால் இலங்கையில் கூகிள் வலைத்தள தேடுபொறியை முடக்கும் எண்ணத்தையும் அரசாங்கம் கொண்டுள்ளது. இதை நடைமுறைப்படுத்துவதற்கு வேண்டிய தொழில்நுட்ப உதவிகள் சீனாவிடம் இருந்து இலங்கைக்குக் கிடைத்துள்ளன. சீனாவும் கூகுள் தளத்தை தனது நாட்டில் கட்டுப்படுத்திவைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கூகுள் அமெரிக்க கம்பனி என்பதால் சீனா இதன் மீது நம்பிக்கை இல்லை என்ற தோற்றப்பாட்டை வெளுக்கொண்டுவர முயல்வதாகச் சொல்லப்படுகிறது.
ஆக மொத்தத்தில் இலங்கையில் ஊடகச் சுதந்திரம் கேள்விக்குறியாகியுள்ளது. எதை மக்கள் பார்க்கலாம் பார்க்கக் கூடாது என்பதை அரசாங்கமே முடிவு எடுக்கின்ற நிலை காணப்படுகிறது.
'பந்தியில் யார் அமர்ந்தாலும் எலும்புகள் தமக்குத்தான்' 'பந்தியில் யார் அமர்ந்தாலும் எலும்புகள் தமக்குத்தான்'
ஒரு காலத்தில் வடக்கு - கிழக்கு மாகாண முதலமைச்சராக அமர்ந்து தன் எஜமானருக்கு வழங்கிய சேவை காரணமாக, அவரை ஆட்டுவித்த இந்தியா, வரதராஜப்பெருமாளை இப்போதும் பாதுகாப்பாகப் பராமரித்துவருகின்றது. இந்த நிலையில், தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்து, அதனால் சொகுசு வாழ்க்கையை அனுபவித்து வரும் டக்ளஸ், கருணா, பிள்ளையான் போன்றவர்களை சிங்கள தேசம் கைவிட்டுவிடவா போகின்றது?
ஈழத் தமிழர்கள்மீது கொடூரமான இன அழிப்பு யுத்தத்தை நடாத்திப் பேரழிவுகளை நடாத்தியதுடன் சிங்கள அரச பயங்கரவாதம் அதில் தப்பிப் பிழைத்த தமிழீழ மக்களை முள்வேலி முகாம்களுக்குள் முடக்கிச் சித்திரவதைகள் புரிந்த போதும் கூட எஜமான விசுவாசத்துடன் தொடர் பணியாற்றிய இவர்களை சிங்கள இனவாத அரசு கைவிட்டு விடுமா? டக்ளசை அமைச்சராகவும், கருணாவை அமைச்சர் 10 கட்சியின் உப தலைவராகவும், பிள்ளையானை கிழக்கின் சொந்தக்காரனாகவும் உயரத் தூக்கி வைத்திருக்கும் ராஜபக்ஷ சகோதரர்களுக்கு இந்தத் தேர்தலில் இவர்கள் தேறுவார்களா என்ற நியாயமான அச்சம் தோன்றியுள்ளது.
ராஜபக்ஷக்களின் தமிழின அழிப்பு யுத்தத்தை சிங்கள மக்கள் பெரும்பாலும் ஏகமனதாக அங்கீகரித்து, ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை அமோக வெற்றியீட்ட வைத்தபோதும், தமிழர் தாயகம் ராஜபக்ஷக்களைத் தண்டிக்கவே முயன்றுள்ளனர். மகிந்த சகோதரர்களின் கயிற்றை இடுப்பில் கட்டிக்கொண்டு டக்ளசும், கருணாவும், பிள்ளையானும் போட்டி போட்டுக்கொண்டு தமிழ் மக்கள் மத்தியில் வித்தை காட்டியபோதும் அவை எவையும் எடுபடவில்லை என்ற கவலை கொண்டுள்ள மகிந்த சகோதரர்களைத் திருப்திப்படுத்த, புதியவிதமான வித்தைகளைக் காட்டும் முயற்சியில் டக்ளசும், கருணாவும், பிள்ளையானும் தத்தமக்கு இருக்கும் மூளையைக் கசக்கிப் பிழிந்தபடி உள்ளனர்.
கடந்த யாழ். மாநகர, வவுனியா நகர சபைகளின் தேர்தல்களில் மகிந்தவின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டி போட்ட டக்ளஸ் அணியால், ஜனாதிபதி தேர்தலில் மகிந்தவுக்கு வாக்குக்களைத் திரட்டிக் கொடுக்க முடியாமல் போய்விட்டது. 'மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி, வடக்கு - கிழக்கு இணைந்த தமிழர் தாயகம்' என்று தன் ஒட்டுக்குழுத் தனத்தை நியாயப்படுத்த முயன்ற டக்ளசால் மகிந்த ராஜபக்ஷவின் வடக்கு - கிழக்கு பிரிப்பையும், அதனை மீண்டும் ஒட்ட வைக்க முடியாது என்ற வக்கிர வசனங்களையும் ஈழத் தமிழ் மக்களிடையே போணியாக்க முடியவில்லை. இந்த நிலையில், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்தவின் வெற்றிலைச் சின்னம் தமிழ் மக்களிடம் எடுபடப் போவதில்லை என்பதால், தனித்து வித்தை காட்டும் முடிவை எடுத்துள்ளார்.
கிழக்கைப் பொறுத்தவரை கருணா எஜமானாக இருந்தாலும், களத்தில் வித்தை காட்ட வேண்டிய பொறுப்பு பிள்ளையானுக்கே உண்டு. ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களின் வாக்குக்களை அள்ளிக் கொடுக்கலாம் என்று நம்பியிருந்த பிள்ளையானால் கிள்ளிக்கூடக் கொடுக்க முடியவில்லை. நாடாளுமன்றத் தேர்தலிலும் மகிந்த மேற்பார்த்து என்ற விலாசத்தில் சென்றால், தனது இருப்பும் கேள்விக்குறியாகிப் போய்விடும் என்ற அச்சம் பிள்ளையானையும் தனி ஆட்டம் ஆடத் தூண்டியுள்ளது.
ஆக மெத்தத்தில், தமிழினத்தைக் காட்டிக்கொடுத்துப் பதிவி சுகம் கண்டவர்கள், இந்த நாடாளுமன்றத் தேர்தல் தமக்கு சங்கு ஊதிவிடுமோ என்ற அச்சத்தில் அவசர அறிக்கைகள் விட்டுக்கொண்டிருக்கிறார்கள். நாட்கள் நெருங்க நெருங்க ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா போல் மகிந்த சகோதரர்கள்மீது குற்றப்பத்திரிகை வாசித்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. டக்ளசின் நாடாளுமன்ற வாழ்க்கை ஐக்கியதேசியக் கட்சியின் அரசிலேயே ஆரம்பமாகியது. கருணாவின் குத்துக்கரணமும் ரணிலின் காலத்திலேயே நடந்தேறியது. 'பந்தியில் யார் அமர்ந்தாலும் எலும்புகள் தமக்குத்தான்' என்பது ஒட்டுக்குழுக்களுக்கு நன்றாகவே தெரியும். மகிந்த மீண்டும் ஜனாதிபதியாகத் Nதுர்ந்தெடுக்கப்பட்டு விட்டதால், கருணாவின் பதவிக்கும், வரவுக்கும் இப்போதைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. கருணாவை வெகு சீக்கிரம் கைவிடும் நிலையில் ராஜபக்ஷ சகோதரர்களும் இல்லை. ஆனால், டக்ளஸ் குழுவும், பிள்ளையான் குழுவும் அங்கே போவதற்கான பாதையின் திறப்பு தற்சமயம் தமிழ் மக்களிடம் இருப்பதுதான் அவர்களுக்கு உதறலாக உள்ளது. ஒருவேளை நியாயமான தேர்தலுக்கான நிர்ப்பந்தங்கள் ஏற்பட்டால், திட்டமிட்ட கள்ள வாக்குக்களும் கிடைக்காமல் போய்விடலாம் அன்ற அச்சத்தோடு, தமிழ் மக்களிடம் புதிய வித்தைகள் காட்டும் அவசியமும் அவர்களுக்கு உள்ளதை மறுத்துவிட முடியாது.
அரசியல் வியாபாரிகளை தமிழ் வேட்பாளர்களாக கொழும்பிலே நிறுத்தவேண்டாம்
அரசியல் வியாபாரிகளை ஐக்கிய தேசிய கட்சியின் நேரடி தமிழ் வேட்பாளர்கள் என்ற போர்வையில் எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது கொழும்பு மாவட்டத்திலே நிறுத்துவதற்கு முயற்சி செய்யவேண்டாம் என ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் தமிழ் மக்கள் துன்புறும்பொழுது அவர்களுக்கு ஒருபோதும் துணையிருந்திராத சில தமிழ் அரசியல் வியாபாரிகளை ஐக்கிய தேசிய கட்சியின் நேரடி தமிழ் வேட்பாளர்கள் என்ற போர்வையில் எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது கொழும்பு மாவட்டத்திலே நிறுத்துவதற்கு முயற்சி செய்யவேண்டாம் என ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்ட தமிழ் வேட்பாளர்களின் நியமனம் தொடர்பில் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவை தொடர்பு கொண்டு மனோ கணேசன் தெரிவித்த கருத்துகள் தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தலைநகர தமிழ் மக்களுக்கு கவசமாக எமது கட்சி இருந்துகொண்டிருக்கின்றது. தமிழ் மக்களுக்காக உயிரையும் துச்சமாக மதித்து வீதியில் இறங்கி போராடியவர்கள் நாங்கள். எங்கள் குரல் ஓங்கி ஒலித்து சர்வதேச சமூகத்தை தட்டியெழுப்பியிருக்காவிட்டால், தலைநகரத்திலே நடந்திருந்த கடத்தல், காணாமல் போதல், வர்த்தக சமூகத்திடம் கப்பம் பெறல் மற்றும் படுகொலைகள் ஆகிய அநீதிகள் கட்டுப்பாட்டிற்கும், முடிவிற்கும் வந்திருக்காது.
இதனாலேயே எமக்கு இன்றைய அரசாங்கத்துடன் பாரிய முரண்பாடு ஏற்பட்டது. இன்று தனது பாதுகாப்பு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வேளையிலும்கூட, தனது தனிப்பட்ட பாதுகாப்பு பறிக்கப்பட்ட நிலைமையில் எமது தலைவர் மனோ கணேசன் இருக்கின்றார்.
போராட்டங்களின் மூலமாக பெருவாரியான அரசியல் இலாபங்களை எதிர்க்கட்சி கூட்டணியும், ஐக்கிய தேசிய கட்சியும் பெற்றுக்கொண்டுள்ளன. இது இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெளிப்பட்டது.
இந்நிலையில் எமது மக்கள் துன்பமடையும் பொழுது எந்தவித எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் தமது சொந்த வியாபாரங்களை கவனித்துகொண்டிருந்த நபர்களை தமது நேரடி தமிழ் வேட்பாளர்களென பெயர் சூட்டி கொழும்பு மாவட்ட தேர்தலில் நிறுத்த நினைப்பது எமது கட்சிக்கும், தலைநகர தமிழ் மக்களுக்கும் ஐக்கிய தேசிய கட்சி செய்கின்ற துரோகமாகும்.
இத்தகைய துரோக முயற்சிகளை ஐதேக தேர்தல் காலத்திலே செய்யுமானால் நாங்கள் மாற்று வழியை நாடவேண்டிவரும். ஐக்கிய தேசிய கட்சியிலுள்ள அனைத்து தமிழ் மக்களின் விரோதிகளையும் அம்பலப்படுத்தி நடுவீதிக்கு கொண்டுவரவேண்டிவரும்.
அதுமட்டுமல்லாமல் நாடு முழுக்க வாழும் அனைத்து தமிழ் வாக்காளர்களையும் அழைத்துக்கொண்டே நாங்கள் ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணியிலிருந்து வெளியேறுவோம். இத்தகைய நிலைமை ஏற்படாமல் இருப்பதை தவிர்ப்பது என்பது, நாளை (19-02-2010) எமக்கிடையே நடைபெறும் இறுதிப் பேச்சுவார்த்தையில் தங்கியுள்ளது.
புதன், 17 பிப்ரவரி, 2010
சொத்துக்கள் விலை வீழ்ச்சி
கொழும்பின் தமிழர்கள் செறிந்து வாழ்ந்து வரும் வெள்ளவத்தை மற்றும் கொட்டாஞ்சேனை ஆகிய இடங்களில் தற்போது காணி மற்றும் சொத்துக்களின் விலைகளில் குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரதேசங்களில் வடக்கு, கிழக்கை சேர்ந்தவர்கள் யுத்தம் காரணமாக பெருமளவில் வந்து தங்கியிருந்தனர். இதன் காரணமாக சொத்துக்களின் விலைகளில் ஏற்றம் காணப்பட்டன.
எனினும் தற்போது யுத்தம் நிறைவடைந்த நிலையில் குறித்த பிரதேசங்களில் குடியேறியிருந்த மக்கள் வடக்கு, கிழக்கில் மீண்டும் குடியேற செல்வதை அடுத்தே சொத்துக்களி;ன் விலைகளில் குறைவு ஏற்பட்டு வருவதாக தரகர்கள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு, கிழக்கு மக்களின் அதிகரிப்பை அடுத்து வெள்ளவத்தையிலும், கொட்டாஞசேனையிலும் உயர்மாடி குடியிருப்புக் கட்டிடங்கள் பல அமைக்கப்பட்டு வந்தன.
இந்தநிலையில், வெள்ளவத்தையில் ஒரு பேர்ச் காணியின் விலை, 30 லட்சம் ரூபாவுக்கும், கொட்டாஞ்சேனையில் ஒரு பேர்ச் காணி: 20 லட்சம் ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டன.
எனினும் தற்போதைய நிலையில் அவற்றில் 75 வீத விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக போட்டி
பாடகி மாயா அருள்பிரகாசத்தின் தந்தையார் அருளர் அருட்பிரகாசம் நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோசின் சார்பில் யாழ்.மாவட்டத்தின் முதன்மை வேட்பாளராக போட்டியிடவுள்ளார். வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தின் இரு மாவட்டங்களிலுமாக மொத்தம் 7மாவட்டங்களில் தாம் போட்டியிடவுள்ளதாக இக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. திருமலை, மட்டக்களப்பு, அம்பாறை, வன்னி, யாழ்ப்பாணம், நுவரேலியா மற்றும் ஹற்றன் ஆகிய மாவட்டங்களில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக இக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஈரோஸின் தவிசாளர் அருளர் அருட்பிரகாசம் யாழ் மாவட்டத்தின் முதன்மை வேட்பாளராக போட்டியிடவுள்ளார். வரலாற்று நாவலான லங்கா ராணியின் ஆசிரியர் இவரென்பது குறிப்பிடத்தக்கது.
ரம்பாவை மணப்பவர் .......................
நடிகை ரம்பாவை மணக்கும் கனடா தமிழ் தொழிலதிபர் இந்திரன் விடுதலைப் புலி ஆதரவாளர் என்று வெளியான செய்திகளை மறுத்துள்ளனர் ரம்பாவும் அவரது அண்ணன் வாசுவும். இந்தத் திருமணத்தை விரும்பாத சிலர் செய்யும் சதி இது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ரம்பா. ரஜினி, கமல் என அனைவருடனும் ஜோடி போட்டவர். ரம்பாவுக்கும் கனடா தொழில் அதிபர் இந்திரனுக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயமானது. இந்திரன் மேஜிக்வுட்ஸ் என்ற பெயரில் இன்டீரியர் டிசைனிங் கம்பெனி நடத்துகிறார். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழர். இந்த நிறுவனம் ரம்பாவை சில மாதங்களுக்கு முன் விளம்பர தூதுவராக நியமித்தது. அப்போது இந்திரனுக்கும் ரம்பாவுக்கும் காதல் மலர்ந்தது. ரம்பாவுக்கு பி.எம்.டபிள்யூ. காரை இந்திரன் பரிசாக வழங்கினார். சமீபத்தில் இருவருக்கும் சென்னை அடையாறு பார்க் ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடந்தது. ஏப்ரல் 8ம் தேதி திருப்பதியில் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந் நிலையில் இந்திரன் பற்றி புது வதந்தி பரவி வருகிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டு தலைவர்களுடன் இந்திரனை தொடர்புபடுத்தி செய்திகள் வெளிவந்துள்ளன. இந்தக் குற்றச்சாட்டை அவருக்கு நெருக்கமானவர்கள் மறுக்கிறார்கள். இந்திரன் விடுதலைப்புலிகள் ஆதரவாளர் இல்லை என்றும் அமெரிக்கா, கனடாவில் உள்ள இந்திய தூதரகங்கள் அவர் இந்தியா வருவதற்கு விசா அளிப்பதன் மூலம் இதை அறிய முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்
ஜனாதிபதி மாளிகையை மக்கள் கைப்பற்றுவார்கள்
போராட்டங்கள் மூலமாக மக்கள் அதிபர் மாளிகையை கைப்பற்றுவதற்கு முன்னர் சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டுமென அதிபர் ராஜபக்சவுக்கு பிரதான எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜே.வி.பி. எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டம் மற்றும் கூட்டத்தின் போதே அக்கட்சியின் தலைவர்களும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மேற்கண்ட எச்சரிக்கையை விடுத்தனர்.
ஊர்வலத்திலும், எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் பங்கேற்றோர் பொன்சேகாவை விடுதலை செய், பொன்சேகாவே உண்மையான ஜனாதிபதி, தேர்தலுக்கும் ஜனநாயகத்திற்கும் பயமில்லை என்றால் பொன்சேகாவை விடுதலை செய், விடுதலை செய், விடுதலை செய், நாட்டின் தளபதியை விடுதலை செய், அதிபர் மாளிகை உனக்கு சொந்தமானது அல்ல, மக்கள் ஆணையை மாற்றிய பொய் அதிபரை வீட்டுக்கு அனுப்புவோம் போன்ற கோஷங்களை எழுப்பினர்.
முன்னாள் எம்.பி.யான லால்காந்த எதிர்ப்பு கூட்டத்தில் உரையாற்றுகையில், "இந்த அரசாங்கத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பொன்சேகா கைது செய்யப்படவில்லை, கடத்தப்பட்டுள்ளார்,அவரை விடுவிக்கும் வரை இந்த போராட்டம் தொடரும் மக்கள் விடுதலை முன்னணி போராட்டத்தை கைவிடாது.
ஜெனரலை விடுவிக்கும் வரை போராட்டமும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் தொடரும். மக்கள் அலரிமாளிகையை கைப்பற்றுவதற்கு முன்னர் ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யவும்.
தேர்தலுக்கும் ஜனநாயகத்திற்கும் பயமில்லை என்றால் ஜெனரலை உடனடியாக விடுதலை செய்யவும். இல்லையேல் ஜனநாயக ரீதியில் போராட்டத்தை முன்னெடுத்து ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுவிப்போம்" என்றார்.
கருணாவுக்கு தேசிய பட்டியலில் இடமில்லை
அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை (கருணா) தேசியப்பட்டியலில் சேர்க்க முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. தேசியப் பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட கருணா, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உபதலைவராக தற்போது பதவி வகிப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்கள் விரும்பிய தலைவர்களைத் தெரிவுசெய்ய அந்த மக்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதால் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுமாறு கருணாவிற்கு அரசதலைவர் மகிந்த அறிவித்துள்ளதாகத் தெரியவருகிறது.
இதனடிப்படையில் கருணா எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளராக மட்டகளப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.
கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, முன்னாள் பிரதியமைச்சரான கணேசமூர்த்தி, அமீர் அலி, அலிஸாஹிர் மௌலானா ஆகியோர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளனர்.
அதேவேளை, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துறை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளமை தெரிந்ததே
துப்பாக்கியை மறைத்திருந்த மாணவர்,,,,,,,,,,,,
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கோகி ரத்னா பகுதியை சேர்ந்தவர் அசார் இக்பால், மாணவர். இவர் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகருக்கு செல்ல பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானத்தில் டிக்கெட் எடுத்திருந்தார்.
விமானத்தில் ஏற ராவல் பிண்டியில் உள்ள பெனாசிர் பூட்டோ சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தார். விமானத்தில் ஏறுவதற்கு முன்பு அவரை எக்ஸ்ரே கருவி மூலம் “ஸ்கேனிங்” சோதனை நடத்தினார்கள்.
அப்போது அவர் ஷூக்களில் துப்பாக்கி, மற்றும் 2 கத்திகளை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
பின்னர் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
தாலிபான்களின் முன்னணித் தலைவர் பிடிபட்டார்
தாலிபான்களின் மூத்த இராணுவத் தளபதியும் முன்னணி வியூக வகுப்பாளருமான முல்லா அப்துல் கனி பராதார் இந்த மாத முற்பகுதியில் கராச்சியில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கப் படைகளினால் கூட்டாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் பிடிக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.
இந்த செய்தி முதலில் வாஷிங்டனில் இருந்து வந்தது. பின்னர் அதனை பாகிஸ்தானிய அதிகாரிகள் அதிகாரபூர்வமற்ற முறையில் பிபிசியிடம் உறுதி செய்தனர்.
ஆனால், இதுவரை பாகிஸ்தானிய அரசாங்கத்திடம் இருந்து இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.
ஆனால், ஆப்கானிய தாலிபான்களின் பேச்சாளர் ஒருவர் இதனை மறுத்துள்ளார்.
அமெரிக்கர்கள் தமது தோல்வியில் இருந்து கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள் என்று அவர் கூறினார்.
அமெரிக்காவே 'சர்வாதிகாரி'
தாம் இராணுவ சர்வாதிகாரியாக வருவதாக அமெரிக்க குற்றஞ்சாட்டியிருப்பதற்கு பதிலடி தந்துள்ள இரான், அமெரிக்கா தான் சர்வாதியாக இருந்து கொண்டு பிறர் மீது குற்றஞ்சாட்டுவதாக கூறியுள்ளது.
இராக்கிலும், ஆப்கானிலும் சண்டையிடுவதற்கு அமெரிக்காதான் வெளிநாட்டுக்கு நூற்றுக்கணக்கான சிப்பாய்களை அனுப்பியதே ஒழிய இரான் அவ்வாறு செய்யவில்லை என்று இரானிய அதிபர் மஃமுட் அஹ்மதிநிஜாத் கூறியுள்ளார்.
தமது நாட்டின் அணுத் திட்டத்துக்கு எதிரான புதிய தடைகளுக்கான அச்சுறுத்தல்களை நிராகரித்துப் பேசிய அவர், அத்தகைய நகர்வுகளினால் தமது நாடு பாதிக்கப்படாது என்றும் கூறினார்.
செவ்வாய், 16 பிப்ரவரி, 2010
செய்த பாவத்தின் பழியை பொன்சேகா அனுபவிக்கிறார்
சரத் பொன்சேகா எனது கணவரை நியாயமற்ற வகையில் இராணுவத்திலிருந்து ஒதுக்கியபோது மிகவும் வேதனைப்பட்டேன். ஒரு பெண்ணாக தனிமைப்படுத்தப்பட்டது போன்று உணர்ந்தேன். அதற்காக ஒவ் வொருவரிடமும் முறையிடப் போகவில்லை. பெண்கள் அமைப்புக்களின் ஆதரவைத்திரட்ட முனையவில்லை. கடவுளிடம் மட்டுமே முறையிட்டேன்.
ஆனால், எனது கணவருக்கும் ஏனை யோருக்கும் செய்த பாவத்தையும் பழி யையும் இன்று சரத் பொன்சேகாவும் அவரது மனைவி அனோமாவும் அனு பவித்துக் கொண்டிருக்கிறார்கள் என கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பாகவிருந்த இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிபிட்டியவின் மனைவி அச்சினி இரோமா தெரிவித்துள்ளார்.
எனது கணவரும் சிங்க ரெஜிமன்ட்டைச் சேர்ந்தவர்தான். அநாமதேய அவதூறு குற்றச்சாட்டை வைத்துக் கொண்டு எனது கணவரை இராணுவத்திலிருந்து விலக்கினார். சரத் பொன்சேகாவின் மனைவியுடன் மிகவும் நெருங்கிய உறவுகளை நான் வைத்திருந்த போதும் எனது கணவருக்கு இவ்வாறு நடந்தது.
ஆனால் இன்று சரத் பொன்சேகாவுக்கு இப்படி நடந்தவுடன் அவரது மனைவி ஒவ்வொருவரிடமும் முறையிடுவதும் பெண்கள் அமைப்புக்களை ஆதரவு வழங்கக்கோரி அழைப்பு விடுப்பதுமாக இருக்கிறார். முன்செய்த பாவங்கள் பலித்துக் கொண்டிருப்பதாகவே நான் கருதுகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.
சரத் பொன்சேகா இன்று தண்டனை பெறும் போது அவரது பிள்ளைகள் பெரியவர்களாக இருக்கிறார்கள். எனது கணவர் விலக்கப்படும் போது எனது மூத்த பிள்ளைக்கு 12 வயது. ஏனைய இரண்டு பிள்ளைகளும் 4 வயதையும், 5 வயதையும் உடையவர்களாக இருந்தனர். கணவர் கைது செய்யப்பட்ட போது இந்தக் குழந்தைகளுடன் தனிமைப்படுத்தப் பட்டேன்.
குழந்தைகளுடன் வீதியிலிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. உத்தியோக பூர்வ இல்லத்திலிருந்து ஒரு மாதத்திற்குள் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில் எமக்கு உதவியது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே. அவரது மனிதாபிமானம், காருண்யம் என்பவற்றால்தான் அதிக பெரும்பான்மை வாக்குகளால் வென்று மீண்டும் ஜனா திபதியாகியிருக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.
கலைஞரின் குடுமி சும்மா ஆடாது
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மீண்டும் ஒரு தடவை சத்தமிட்டு இவ்விடயத்தில் தமது இருப்பை வெளிப்படுத்தியிருக்கின்றார் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி.இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க இலங்கை அரசு தவறுமானால் அதை தி.மு.க. வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இராது என மிரட் டல் விட்டிருக்கின்றார் அவர்.
இது எதிர்பார்க்கப்பட்ட ஒரு விவகாரம்தான். இனிமேல் இதையும் விட மேலும் தீவிரமாக அவர் எகிறிக் குதிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான கொடூர யுத்தம் கட்டவிழ்ந்து, பல்லாயிரக் கணக்கான அப்பாவித் தமிழர் கள் அநியாயமாகக் கொன்றொழிக்கப்பட்ட போதே அதைத் தடுக்க வக்கற்றவராக இருந்துகொண்டு பல் வேறு அரசியல் திருகுதாள நாடகங்களை வெற்றிகரமாக அரங்கேற்றிய பெரும் கலைஞர் அவர்.
தமிழகத்தின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர் களும் கூண்டோடு இராஜிநாமாச் செய்வர் என்ற மிரட்டல் நாடாகத்தோடு தொடங்கி, மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம், புதுடில்லி அரசை எச்சரிக்கும் விதத்தில் அனைத்துக் கட்சிக் குழுவினருடனும் புதுடில்லி படை யெடுப்பு (விஜயம்), உப்புச்சப்பற்ற வகையில் தமிழக சட்டசபையில் பிரயோசனமற்ற தீர்மானங்கள், "ஐயகோ! தமிழினம் அழிகின்றதே!' என்னும் சாரப்பட அழுது வடியும் அறிக்கைகள் என்று தொடர்ந்து, கடைசியாக சுமார் நான்கு மணி நேரம் நடத்திய சாகும்வரையான(?) உண்ணாவிரதப் போராட்டம் வரை இந்த நாடகங்களின் வரிசை நீண்டது.
இறுதியாக, ஈழத் தமிழருக்கான தமது சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை சில மணி நேரம் கூட நீடிக்கமுடியாத அவர் ஈழத்தில் யுத்தநிறுத்தம் வந்துவிட்ட தாக அறிவித்துவிட்டு தமது உண்ணாவிரதக் கதையை முடித்துக் கொண்டமைதான் மிக மோசமான ஈழத் துரோக நடவடிக்கையாகும்.
அவரது அந்த யுத்த நிறுத்தப் பிரகடனம் பற்றிய அறி விப்பின் பின்னர்தான் வன்னியில் மக்கள் பேரழிவு மிக உச்சத்தை எட்டியது. அந்த அழிவுகள் பற்றிய சர்வதேசத் தின் கவனத்தைத் திசை திருப்பி, தவறாக வழி நடத்தும் விதத்தில் கருணாநிதியின் அந்த அறிவிப்பு அமைந்தது. தமது அரசியல் சுயலாபச் செயற்பாட்டுக்காக, ஈழத் தமி ழர்கள் மீது தொடுக்கப்பட்டிருந்த கொடூர யுத்தம் தொடர் பில் சர்வதேசத்தின் கவனத்தை அந்த இக்கட்டான சம யத்தில் இவ்வாறு தவறான திசைக்குத் திருப்பிவிட்டு "யுத்தம் நின்றுவிட்டது, தமிழர்கள் அழிவு தடுத்து நிறுத் தப்பட்டுவிட்டது' என்ற தவறான கருத்தியலை சர்வ தேசத்துக்கும் ஏற்படுத்தி வரலாற்றுத் துரோகமிழைத் தவர் கருணாநிதி என்பதை உலகத் தமிழினம் மறக்காது.
கடந்த மே மாதத்தில் நடந்த இந்தியப் பொதுத் தேர்த லுக்கு முன்னர், மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு, தனது பெரும்பான்மைக்கு தி.மு.க. போன்ற தோழ மைக் கட்சிகளின் தயவில் தங்கியிருந்தது. அந்தச் சமயத் தில் கூட ஈழத் தமிழினத்துக்காக மத்திய அரசைக் கொண்டு ஆக்கபூர்வமாக எதையுமே செய்ய வைப்ப தற்கு லாயக்கற்றவராகவே கருணாநிதி இருந்தார். அச்சம யம் இலங்கையில் நடந்த யுத்தம் தொடர்பில் ஈழத் தமி ழருக்கு ஆதரவாகச் செயற்பட வைக்க அல்ல குறைந்த பட்சம் ஈழத் தமிழர்களுக்கு எதிராகச் செயற்படாமல் மத்திய அரசைத் தடுக்கக் கூட அவரால் இயலாமல் போயிற்று.
இப்போது கடந்த மே மாதத்துடன் இந்திய அரசியல் நிலைமை இன்னும் மாறிவிட்டது.
புதுடில்லியில் ஆளும் காங்கிரஸ் கட்சி, தனது கூட் டணிக் கட்சியான தி.மு.க. போன்றவற்றின் உதவியோ, தயவோ இன்றியே தனித்து தன் சொந்தக் காலில் உறுதியாக ஆட்சியை ஸ்திரப்படுத்திக் கொண்டுவிட் டது.
ஆனால், மறுபுறமாகத் தமிழகத்தில் கலைஞர் கரு ணாநிதியின் பெரும்பான்மைப்பலம் இல்லாத தி.மு.க. அரசோ, தனது ஆட்சியைக் கொண்டு நடத்துவதற்குத் தொடர்ந்தும் காங்கிரஸ் கட்சியின் தயவில் ஆதரவில் தங்கிநிற்க வேண்டிய கட்டாயம்.
இந்த நிலையால் ஈழத் தமிழர் விடயத்தில் கலைஞர் கருணாநிதியின் கூத்தெல்லாம் வெறுமனே இலங்கை அரசுக்கு எதிராக மட்டுமே இருக்கமுடியும். மத்தியில் ஆட்சியிலிருக்கும் காங்கிரஸ் அரசுடன் முட்டுப்படாமல் தான் அவர் எதையும் செய்யமுடியும்.
சரி. இவ்வளவு நீண்ட மௌனத்துக்குப் பின்னர் மீண் டும் இப்போது ஏன் கொழும்பு அரசு மீது காட்டமாகப் பாய முயன்றிருக்கின்றார் கலைஞர்? சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பார்கள். அதே கதைதான் இங்கும்!
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க வுக்கும் காங்கிரஸுக்கும் இடையே நல்லுறவு மீண்டும் அரும்ப மலர தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகின் றது. அத்தகைய ஒரு நிலைமை ஏற்பட்டால் மறுபுறத் தில் தமது தி.மு.க. அரசியல் நடத்துவதற்குப் பொருத்தமான கோஷங்கள் அரசியல் சர்ச்சைகள் அக்கட்சிக்குத் தேவை. அத்தகைய ஒன்று ஈழத் தமிழர்களுக்கு நியாயம் பெற் றுக்கொடுக்கும் விவகாரம். அதனால் முற்கூட்டியே களத் தைத் தயார் படுத்துகின்றார் பழுத்த அரசியல் நடிகரான கலைஞர் கருணாநிதி. அவ்வளவுதான்!
'பில்பிலோட்'
ஒன்லைன்-ல் ஒரு பொருள் வாங்குவதில் இருந்து புத்தகம் வாங்குவது வரை நாம் அத்தனைக்கும் பயன்படுத்துவது பேபால்( Paypal) தான் இந்த பேபால் தான் உலகம் முழுவதும் அனைவரும் அதிகமாக இணையதளம் மூலம் பொருள்களை வாங்க விற்க பயன்படுத்தும் சேவை.
பேபால் மூலம் ஒரு பொம்மை விற்பவர் கூட தனக்கென்றுஉள்ள இணையதளத்தை இலவச பேபால் கணக்கை தொடங்கி விடலாம் ஒவ்வொரு பொருளும் விற்றபின் நாம் சிறு தொகையை சேவைக்காக பிடித்துவிடுகின்றனர்.
இந்த பேபால் இப்போது வரை பணம் அனுப்புபவரின் முழு தகவல்களையும் சேமித்து வைப்பதில்லை எளிய முறையில் பணம் யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம் ஆனால் பணம் அனுப்பியவரின் எந்த முகவரியையும் டிரேஸ் செய்வதில்லை இதுமட்டுமல்ல மேலும் பணம் அனுப்ப பயன்படுத்தும் இமெயில் முகவரியை கூட சில நேரங்களில் தவறாக பயன்பபடுத்தலாம் ஆனால் இந்த எந்தப்பிரச்சினையும் இல்லாமல் இணையதளத்தில் ப்ண பரிமாற்றம் செய்ய பேபால் மற்றும் வென்ராக் இணைந்து புதிதாக 'பில்பிலோட்' என்ற சேவை வர இருக்கிறது.
ஒரு பொருள் வாங்க பணம் அனுப்புவதற்கு பணம் அனுப்புவதில்லிருந்து அதன் அத்தனை விபரங்களையும் துல்லியாமாக கண்டுபிடித்து நமக்கு கொடுக்கும் அதுமட்டுமின்றி பணம் பெறுபவர்கள் தவறுதலாகவோ அல்லது தெரிந்தோ மாற்றி அனுப்பியிருந்தால் கூட தவறுதலாக பணம் அனுப்பியவரின் தகவல்களை கூட தெரிந்து கொள்ளலாம்.பேபால் மூலம் பணம் வெளிநாடுகளில் இருக்கும் நபர்களுக்கு அனுப்பினால் சென்று கிடைக்க மூன்று முதல் நான்கு வரை எடுத்துக்கொள்ளும் ஆனால் இந்த பில்பிலோட் சேவைமூலம் பணம் வெகு விரைவில் நம் கணக்கில் கிடைக்க ஏற்பாடும் செய்துள்ளனர்.
அதேபோல் இணையதள செக்யூரிட்டிக்கும் நம் கணக்கிற்கும் பாதுகாப்பு அதிகப்படுத்த்ப்பட்டுள்ளது.இணையதளத்தில் மட்டுமல்ல மொபைல்போன் மற்றும் வாய்ஸ் ரெககனேசன் மூலமும் பணம் அனுப்பும் தொழில்நுட்ப வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)