இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
செவ்வாய், 16 மார்ச், 2010
முட்டாள் தவளையும் கருணாவின் முடிவும்
நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தமிழீழ விடுதலைப்போராட்டம் மே 19க்கு முன், பின் என இரண்டு காலக்கட்டங்களாக பிரித்தே தீரவேண்டும். காரணம் முள்ளிவாய்க்காலில் முடக்கப்பட்ட மாந்தநேயம், மனிதத்தின் பேரொளி, மனித பேரவலம், முடக்கப்பட்ட மாந்தநேயம், அழுகைக்குரல் என மனிதத்திற்கே சவால்விடும் அனைத்துப் பேரழிவுகளும் அங்கே நிறைவேறி முடிந்தது.
இதற்கான காரணங்களை பல்வேறு தளங்களிலிருந்து பலவாறு அலசுகிறார்கள், ஆய்வுநடத்துகிறார்கள். ஒரு விடுதலை இயக்கத்திற்கான பின்னடைவு எதனால் ஏற்படுகிறது? என்பது குறித்தெல்லாம் பகுப்பாய்வு செய்கிறார்கள். ஆனால் மற்றப் போராட்டங்களில் இருப்பதைப் போன்றே தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும் துரோகங்கள் விஸ்வரூபம் எடுத்தன. துரோகத்தின் அடையாளங்கள் தம்மை மிகைப்படுத்திக் கொண்டன. நமக்கு இயல்பாகவே இலக்கியங்களும், கவிதைகளும், கதைகளும் நீதிநெறியை போதிப்பவையாகவே இருக்கின்றன. நாம் கட்டுரைகளாக வாசித்துக் கொண்டிருந்ததில் இருந்து சற்று மாறி, ஒரு கதை கேட்போம்.
ஒரு ஊர். பெயரை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். அங்கே அழகிய காடு ஒன்று இருந்தது. அந்த காட்டிற்கு நடுப்பகுதியில் குளம், வற்றாத் தண்ணீருடன் எப்போதும் நீராதாரத்துடன் குளிர்ச்சியாக இருந்து கொண்டிருந்தது. அந்த குளத்திலே ஆயிரக்கணக்கான தவளைகள் மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும் வாழ்ந்து கொண்டிருந்தன. தவளைகளின் வாழ்வு, அதன் ஒவ்வொரு தன்மையும், அடையாளமும் அந்த தவளைகளுக்குள் உள்ள ஒற்றுமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. அந்த குளத்தில் வசித்த தவளைகளுள் ஒன்று மிகத் தவறான பாதைகளுக்கு செல்ல தீர்மானித்தப் போது, தவளைகளின் கூட்டம் ஒன்றிணைந்து, தவறான பாதைக்குச் சென்ற அந்த தவளையை குளத்தைவிட்டு விலக்கி வைக்க முடிவு செய்தன. அதை தலைமையும் ஏற்றுக் கொண்டது.
கெட்ட எண்ணம் கொண்ட அந்த தவளை குளத்தை விட்டு வெளியேறும்போது மனதிற்குள் சொல்லிக் கொண்டது. என்னையா வெளியேற்றுகிறீர்கள்? உங்களை ஒழிக்காமல் எனக்கு உறக்கம் இல்லையென. பாசம் மிகுந்த அந்த கூட்டத்தைவிட்டு வெளியேறிய தவளை, காட்டுப்பாதை வழியே நடந்து வந்துக் கொண்டிருந்தது. ஆனால் அதன் எண்ணமெல்லாம் தம்மை கூட்டத்தைவிட்டு வெளியேற்றிய அந்த தவளைக்கூட்டத்தை எப்படியாவது பழித் தீர்க்க வேண்டும் என்பதிலேயே உறுதியாக இருந்தது. அது காட்டை கடந்து கொண்டிருந்தபோது அதன் எதிரே ஒரு பாம்பு வந்தது. பாம்பைப் பார்த்த தவளை பரபரப்படையாமல், பாம்பின் நேர்எதிரே நின்று நீங்கள் மிக நல்லவராக தெரிகிறீர்கள். உங்களைப் போன்று திறன் வாய்ந்த, ஆற்றல் மிக்க ஒருவரை காண முடியாது.
ஆனால் உங்களைப் பார்த்தால் பலமுறை தோல்விக் கண்டவர்களின் வாரிசாக தெரிகிறீர்கள். உங்களின் பட்டினித் தோற்றமே அதை வெளிப்படுத்துகிறது. வாருங்கள். எனக்குத் தெரிந்த ஒரு குளம் இருக்கிறது. அந்த குளத்தை நான் காட்டுகிறேன். அந்த குளத்திற்கு போகும் வழியையும் காட்டுகிறேன். அந்த குளத்தில் தாங்கள் எங்கே ஒளிந்து கொண்டிருந்தால் அங்கிருக்கும் தவளைகளை எல்லாம் பிடித்துக் கொல்லலாம் என்பதையெல்லாம் சொல்லித் தருகிறேன். நீங்கள் உங்கள் விருப்பம்போல் தவளைகளை கொன்று தின்னலாம். தவளைகளின் ரத்தத்தை நீங்கள் எவ்வளவாவது குடிக்கலாம் என்று சொன்னது. பாம்பிற்கு மகிழ்ச்சி நிலைகொள்ளவில்லை.
சரி, வா என்று அழைத்துக் கொண்டு, குளத்திற்கான வழியை தவளையோடு சென்று அறிந்து கொண்டது. அது, தாம் தங்கும் இடத்தை தவளையிடம் கேட்டு தெரிந்து கொண்டது. பின்னர், ஒவ்வொரு நாளும் அந்த பாம்பு குளத்தில் இருந்த தவளைகளை தம் விரும்பிய வண்ணம் கொன்று, தின்று தீர்த்தது. குளத்தில் தவளைகள் ஒட்டுமொத்தமாய் ஒழிக்கப்பட்டது. பாம்பிற்கு ஒன்றும் புரியவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் அக்குளத்தைவிட்டு வெளியேறி மீண்டும் காட்டு வழியே திரும்பி வந்துக் கொண்டிருந்தது.வரும் வழியில் தமது இனத்தையும் அந்த இன வாழ்வின் அடையாளத்தையும் காட்டிக் கொடுத்த தவளை அந்த பாம்பைப் பார்த்து, என்னய்யா, மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? நிறைவாக சாப்பிட்டீர்களா? அனைவரையும் கொன்று தீர்த்தீர்களா? என்று பாம்பை பாராட்டும் முகமாக வாழ்த்தியது.
ஆனால் அனைத்தையும் கொன்று தீர்த்த பாம்புக்கு பசி மீண்டுமாய் தூண்டியது. அது எங்கே சென்று இறை தேடுவது என்று புரியாமல் இருந்தபோது அந்த துரோகத் தவளை பாம்பிடம் வந்து செய்திகளை கேட்டவுடன் பாம்பிற்கு மகிழ்ச்சி தாளவில்லை. ஒரே தாவலில் அந்த தவளையை கவ்வி, விழுங்கத் தொடங்கியது. பாம்பின் வயிற்றுக்குள் இறங்குவதற்கு முன்னால் அந்த தவளை நினைத்துக் கொண்டது. ஐயோ, நம் இனத்தை காட்டிக் கொடுத்தோமே? அந்த துரோகத்திற்கு விலையாக நமது உயிரே பறிப்போகிறதே? என்று கதறியபடி செத்துப் போனது. இந்தக் கதை யாருக்குப் புரிகிறதோ இல்லையோ. நிச்சயம் கருணாவுக்குப் புரியும். ராஜபக்சேவுக்கு புரியும். வாசிக்கும் உங்களுக்கும் புரியும் என்று நினைக்கிறேன்.
-கண்மணி
போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடித்தேவை நிவாரணமே அன்றி ......!?
கடந்த சனிக்கிழமை பிரித்தானியாவில் தாஜ்மஹலுக்கு சொந்தக்காரரும்,எவரும் கட்டிய வீட்டை உரிமைகோருபவரும் வசிப்பவரும் ஆகிய இருவராலும் இடம்பெயர்ந்தமக்களுக்கான நிவாரணம் வழங்கல் பற்றி கூட்டப்பட்ட கூட்டத்தில் இவர்கள் தங்களின் ஊடாகத்தான் நிவாரணம் அம்மக்களுக்கு சென்றடையவேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.இதனை கூடியோர் நிராகரிக்க முடியாத நிலையில் முடிவு பெற்றது இம் மக்குகளின் கருத்தரங்கு.விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரிவின் நிதி இவர்களால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் இவர்கள் மக்களைக் காரணம் காட்டி பணம் கறக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்களின் அவசியமும் அவசரமாகிய கடமையாதெனில்.... போரால் பாதிக்கப்பட்டு நாதியற்ற எம்மக்களுக்கு நிவாரணம் கிடைக்கப்பெற, உலகத்தின் எத்திசையில் உள்ள தமிழர்களையும் வெளிநாட்டு உதவி வழங்கும் நிறுவனங்களையும் ஒன்றிணைத்து செயல்படுவதே சாலச்சிறந்தது. கூட்டமும் கருத்தரங்கும் கூட்டி பணத்தையும் நேரத்தையும் வீணடிப்பதற்குப் பதில் உடனடி நடவடிக்கையில் இறங்குவதே பதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் செய்யும் பேருதவி. நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரியது என்று வாழ வேண்டும் - தேசியத்தலைவர்
அரசியல் இராசரீகம் என்பது கைப்பொம்மைகளாக செயற்படுவதல்ல
அரசியல் இராசரீகம் என்பது கைப்பொம்மைகளாகச் செயற்படுவது அல்லது எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை இந்தியாவின் கைப்பொம்மைகளாகச் செயற்பட்ட காரணத்தினால், உள்ளிருந்து சம்மரசம் செய்ய அவகாசமற்று அதிலிருந்து வெளியிற்றப்பட்டதால், அடிப்படைத் தேசியக் கொள்கைகளைக் காப்பாற்றும் வகையில் தேர்தலில் களமிறங்கியிருப்பதாக, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் உள்ளவர்கள் தமிழ் மக்களின் அடிப்படைக் கொள்கைகளைக் கைவிட்டுள்ளதன் மூலம், தாயக மீட்புக்காக இழக்கப்பட்ட உயிர்களுக்கு துரோகம் இழைத்து வருவதாகவும், கொள்கை பிறளும் தலைமையுடன் இணைந்து செயற்பட முடியாத நிலையில் தேசிய நலன் சார்ந்தோர் இணைந்து கூட்டமைப்பை எதிர்த்துப் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு முற்றிலும் முரணாக இந்தியாவின் விருப்பிற்கு இணங்க தீர்வுத் திட்டம் ஒன்றை தயாரித்த கூட்டமைப்பின் தலைமை, அதனை இந்தியா உட்பட சில நாடுகளின் தூதரகங்களுக்கும் இரகசியமாக வழங்கியிருந்ததாகக் கூறிய கஜேந்திரன், அந்தத் தீர்வுத் திட்டத்தின் பிரதியை த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக்கூட வழங்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
ஒஸ்லோ உடன்படிக்கையை தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்றிருக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இது பற்றி கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களே நேரடியாகக் கூறியிருந்த போதிலும், தேசியத் தலைமையின் முடிவுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்பொழுது தேர்தல் வெற்றிக்கான பொய்ப்பரப்புரையுடன் களமிறங்கியிருப்பதாக இந்த செவ்வியில் அவர் கூறினார்.
தனது குடும்ப அங்கத்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து தேர்தலில் போட்டியிடுகின்றனர் என்ற ஒரேயொரு காரணத்திற்காக தன்மீதும், தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியில் உள்ள ஏனைய அங்கத்தவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தாயகத்தில் பத்திரிகைகளும், புலம்பெயர் நாட்டில் உள்ள குறிப்பிட்ட ஒரு இணையத்தளமும் பொய்ப் பரப்புரையில் ஈடுபட்டு வருவதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்தார்.
சிறீலங்கா புலனாய்வுத்துறையினரின் தாக்குதல் பட்டியல்
சிறீலங்கா படையினரின் புலனாய்வு அமைப்பு 35 பேர் மீதான தாக்குதல் பட்டியலை கொண்டுள்ளது. அதில் முன்னனி ஊடகவிலாளர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவங்களின் பிரதிநிதிகளின் பெயர்கள் உள்ளன.
உறுப்பினர்களின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் பட்டியில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியில் வெளிவந்துள்ளது. அரசு அவர்களை துன்புறுத்தலாம் என்ற அச்சங்களை தோற்றுவித்துள்ளது. இந்த பட்டியிலை வெளியிட்டதன் மூலம் அரசு அவர்களை மறைமுகமாக எச்சரித்து அடக்கிவைக்க முயல்வதாக அனைத்துலக மன்னிப்புச்சபையின் ஊடகப்பிரிவுத் தலைவர் மைக் பிளேக்மோர் தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா அரசு ஊடக சுதந்திரத்தை மதித்து, மனித உரிமை செயற்பாட்டளர்களை அவர்களின் கடமைகளை செய்ய அனுமதிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த 35 பேரின் பாதுகாப்புக்கள் குறித்து எல்லா தரப்பினரும் அரசுக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும். மனித உரிமை செயற்பாட்டாளர்களான கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, ஜே சி வெலியமுனா ஆகியோருக்கும் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல்கள் உள்ளன.
அவர்களுக்கு முன்னர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டபோதும் தற்போது இந்த பட்டியலில் முன்னனி நிலையில் அவர்களின் பெயர்களும் இணைக்கப்பட்டுள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.
இந்தியா குறித்து உளவு பார்த்தாராம்!
ஜிஹாத் ஜேன் என்ற பெயரில் இந்தியா வுக்கு எதிரான தீவிரவாத செயல்களுக்கான தகவல்களைத் திரட்டி வந்த அமெரிக்கப் பெண்ணை அந்த நாட்டு எப்பிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்தியாவிலும், தெற்காசியாவிலும், ஐரோப்பாவிலும் பெரும் தீவிரவாத சதிச் செயல்களை இவர் உள்ளிட்டோர் தீட்டி வந்தது தெரிய வந்துள்ளது. தீவிரவாத செயல்களுக்கான ஆளெடுப்பிலும் ஜிஹாத் ஜேன் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவருடைய உண்மையான பெயர் கொலீன் லாரோஸ் என்ற பாத்திமா லாரோஸ். பென்சில்வேனியாவைச் சேர்ந்தவர். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்.
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத செயல்களில் தற்போது வெள்ளையர்களை ஈடுபடுத்தத் தொடங்கியுள்ளனர் தீவிரவாதிகள். இதை நிரூபிக்கும் வகையில், கடந்த ஆண்டு டேவிட் கோல்மேன் ஹெட்லி என்ற அமெரிக்கர் கைது செய்யப்பட்டார். மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் இவருக்கு மிக நெருங்கிய தொடர்புகள் இருப்பது உறுதியாகியுள்ளது.
இந்த வரிசையி்ல் இன்னொரு அமெரிக்கப் பெண் பிடிபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 46 வயதாகும் கொலீன் லாரோஸ், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிலடெல்பியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு உலகெங்கிலும் உள்ள பல்வேறு தீவிரவாதக் குழுக்களுடன் நல்ல தொடர்பு உள்ளதாம். கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இவர் தீவிரவாதக் குழுக்களுக்காக பணியாற்றி வந்துள்ளார்.
நான்கு குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. அவை - தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளித்தது, வெளிநாடு ஒன்றில் கொலைச் செயலை செய்ய திட்டமிட்டது, அடையாளத் திருட்டில் ஈடுபட்டது, போலி வாக்குமூலம் அளித்தது.
கொலீன் லாரோஸ் குறித்த வழக்கில், பிலெடல்பியா கோர்ட்டில் அரசு வழக்கறிஞர் மைக்கேல் லெவி கூறுகையில், தீவிரவாதிகள் தற்போது புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது. பார்த்தவுடன் இவர் தீவிரவாதி என்ற சந்தேகம் கொஞ்சம் கூட எழாத வகையில் ஆட்களை இவர்கள் தேர்வு செய்கிறார்கள். அமெரிக்கர்கள் தீவிரவாதிகளுக்குத் துணை போக ஆரம்பித்து பிடிபட்டிருப்பது இதையே காட்டுவதாக உள்ளது என்றார்.
வெள்ளை இனத்தைச் சேர்ந்த முதல் பெண் தீவிரவாதி கொலீன் லாரோஸ் என்று கூறப்படுகிறது. இவருடைய கூட்டாளி இந்தியா அல்லது பாகிஸ்தானில் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அவருடைய பெயரை எப்.பி.ஐ. குறிப்பிடவில்லை.
டென்மார்க்கைச் சேர்ந்த லார்ஸ் வில்க்ஸ் என்ற கார்ட்டூனிஸ்ட்டைக் கொல்ல கொலீன் லாரோசுக்கு இந்த நபர் உத்தரவிட்டிருந்தாராம். இந்த வில்க்ஸ், நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன் வரைந்ததால் சர்ச்சைக்குள்ளானவர்.
வில்க்ஸ் கொலைச் சதி தொடர்பாக அயர்லாந்து போலீஸார், 4 ஆண்கள், 3 பெண்களை கைது செய்துள்ளனர். இவர்கள் மூலம்தான் கொலீன் லாரோஸ் குறித்த தகவல் வெளியானதாம்.
வில்க்ஸ் கொலைத் திட்டத்தை நிறைவேற்ற சிலரை தேர்வு செய்திருந்தார் கொலீன் லாரோஸ். மேலும் இதற்காக நிதியும் கூட திரட்டி வைத்திருந்தார். தெற்காசியா, மேற்கு ஐரோப்பா, கிழக்கு ஐரோப்பாவில் உள்ள சில தீவிரவாதிகளுடன் அவர் தொடர்ந்து நல்ல தொடர்பில் இருந்து வந்துள்ளார். இருப்பினும் எந்த குறிப்பிட்ட தீவிரவாத இயக்கத்திற்காகவும் இவர் தனியாக செயல்பட்டதாகத் தெரியவில்லை.
இந்தியாவில் தீவிரவாத திட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பான சதியும் கொலீன் லாரோசிடம் கொடுக்கப்பட்டிருந்ததாக தெரிய வந்துள்ளது. இருப்பினும் இந்தியாவில் இதற்கு முன்பு நடந்த தீவிரவாத செயல்களில் கொலீன் லாரோசுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்துத் தெரியவில்லை.
பிரெட்றிக்கா ஜெய்ன்ஸ்
சண்டே லீடர் பத்திரிகையில் கடந்த 28ம் திகதி எழுதப்பட்டிருந்த கட்டுரையில் பிரதி பிரதம நீதியரசர் சிறானி பண்டாரநாயக்கவை அவமானப்படுத்தும் வகையிலான கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தது. இக்கருத்துக்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதுடன் நேற்று வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது கட்டுரையின் உரிமையாளர் பிரெட்றிக்கா ஜெய்ன்ஸ் மன்றில் ஆஜராகி மன்னிப்பு கோரினார். அவர் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணிகள், தமது கட்சிக்காரர் தவறை உணர்ந்துள்ளதாகவும் , தவறுக்காக எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளனர். அதேநேரம் கட்டுரையில் உள்ள பாரதூரமான விடயங்களை அவர் பின்னரே உணர்ந்துள்ளதாகவும் கூறினர்.
அவருடைய மன்னிப்பு கோரலை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மன்னிப்புகோரும் விடயத்தினை சண்டே ரைம்ஸ் பத்திரிகையின் முதற்பக்கத்தில் பிரசுரிக்க உத்தரவிட்டுள்ளதுடன் கட்டுரையில் உள்ள தவறுகளைத் திருத்தி அவற்றை முன்பக்கத்தில் பிரசுரிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்டதாக ஜெனரல் பொன்சேகா தெரிவித்தார் என செய்தி வெளியிட்ட பிரெட்றிக்கா ஜெய்ன்ஸ், அவ்வாறு அவர் அதை தெரிவித்தார் என்பதற்கான ஒலிப்பதிவு தன்னிடம் உண்டு என தெரிவித்தபோதும் இதுவரை அவர் அதை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இரகசிய தடுப்புமுகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 10781 பேர் பற்றிய விபரங்களை வெளியிடப்பட்டது!
இரகசிய முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 11 000 இற்கும் மேற்பட்டவர்கள் பற்றிய விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள சிறிலங்கா அரசின் புனர்வாழ்வு அமைப்பு 10 781 பேர் பற்றிய விபரங்களின் தொகுப்பை வெளியிட்டுள்ளது. ஆனாலும் ஏனைய 1000 பேர் அளவான பற்றிய விபரங்களை வெளியிடாமல் தொடர்ந்தும் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளமை பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் வெளியிடப்பட்டவர்களில் 19 – 24 அகவைக்குட்பட்டவர்கள் 4580 பேர்கள் எனவும் 25 – 34 அகவைக்குட்பட்டவர்கள் 4220 பேர்கள் எனவும் தெரிவித்துள்ளது. ஆனால் 19 அகவைக்குட்பட்டவர்கள் பற்றிய தொகையை வெளியிடவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது
வெளிவிடப்பட்ட தகவல்களின் படி 8791 ஆண்களும் 1990 பெண்களும் உள்ளடங்குவதாகவும் அவர்களில் 1422 பேர் ஊனமடைந்தவர்களாகும்.
குறித்த 1422 மாற்றுவலு தேவைப்படுவோரின் மேலதிக விபரங்கள் வருமாறு:
முழுமையாக காது கேட்கும் திறன் இழந்தவர்கள் – 04
காது கேட்கும் திறன் பாதிப்படைந்தவர்கள் – 01
முழுமையான கண் பார்வை இழந்தவர்கள் - 03
கண் பார்வை இழந்தவர்கள் - 144
இரண்டு கால்களும் முழுமையாக இழந்தவர்கள் - 05
ஒரு கால் இழந்தவர்கள் - 686
இரண்டு கைகளையும் இழந்தவர்கள் - 17
ஒரு கை இழந்தவர்கள் - 387
ஏனைய உடல்உறுப்புகளை இழந்தோர்கள் - 175
மார்ச் மாதம் முதலாம் திகதி கணக்கெடுப்பின்படி இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் 17 தடுப்புமுகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களில் 108 பேர் அரச உத்தியோகத்தர்களாக இருந்தவர்கள் எனவும் 150 பேர் அளவில் பல்கலைக்கழக கற்கைநெறிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்ததாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுரை 900 சந்தேகநபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளபோதும் இன்னும் 11 000 இற்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டிருப்பதும் அவர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையானார் இப்பதிவுகளில் உள்ளடக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னர் வெளியாகியிருந்த செய்திகளின்படி 11000 ஏக்கர் நிலப்பரப்பில் பெரும் பண்ணைகளை அமைத்து அங்கு தடுத்துவைத்து பண்ணை வேலைகளில் ஈடுபடவைத்து தொடர்ந்தும் தடுத்துவைக்கும் சிறிலங்கா அரசின் திட்டம் ஊடகங்களில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
இதன்படி திருமணம் செய்துள்ளவர்களையும் குடும்பமாக தடுப்புமுகாம்களில் தங்கவைத்து அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் புதுமுறையான திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சர் மிலிந்த மொறகொட தகவல் வெளியிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி பிரித்தானியாவில் ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது
தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ அரசியல் கட்சியான விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி (People’s Front of Liberation Tigers) என்ற கட்சி, தற்பொழுது பிரித்தானியாவில் ஒரு அரசியல் கட்சியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய அரசியல் கட்சி தொடர்பாகப் பேசிய என் பாலசுப்பிரமணியம், விடுதலைப் புலிகளும், ஈழத் தமிழர்களும் பயங்கரவாதிகள் என்ற கண்ணோட்டம் பிரித்தானியாவில் மறையும் காலம் உருவாகி இருக்கிறது என்று தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்ற கட்சி தமிழீழத் தேசியத் தலைவரால் ஒரு தேவைக்காக உருவாக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து இடம்பெற்ற ஆயுதப் போராட்டம் அந்தக் கட்சியின் தேவையை சிறிது காலத்திற்கு இல்லாமல் செய்திருந்தது.
தற்பொழுது ஆயுதங்கள் மௌனித்துள்ள நிலையில் இந்தக் கட்சியின் தேவை மீண்டும் ஏற்பட்டுள்ளது.
தேசியத் தலைவர் காட்டிய பாதையில் எமது மக்களின் விடுதலைக்கான பயணத்தை தாம் தொடர இருப்பதாக பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிவரும் புலம் பெயர் அமைப்புக்களுடன் இணைந்து தாம் போராட்டத்தை முன்கொண்டு செல்வோம் என்று பாலசுப்பிரமணியம் மேலும் தெரிவித்தார்.
புலிச்சின்னமே தமது கட்சியின் சின்னமாக பிரித்தானியாவில் பதியப்பட்டுள்ளதாகவும், புலிக்கொடியேற்றப்பட்ட தமது கட்சி அலுவலகம் Unit G11, Lombard Business Park
2 Purley Way, Croydon, Surrey, CR0 3JP என்ற விலாசத்தில் விரைவில் திறக்கப்பட இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் 1989ம் ஆண்டின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்டது.
புலிகளின் அந்த அரசியல் கட்சியின் தலைவராக மாத்தையாவின் பெயரே பதியப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் புலிகள் அமைப்பின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த யோகரட்ணம் யோகி அவர்கள் விடுதலைப் புலிகளின் அந்த அரசியல் கட்சியின் செயலதிபராக நியமிக்கப்பட்டார்.
விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சி சிறிலங்காவின் தேர்தல் திணைக்களத்தில் தன்னை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவுசெய்து கொண்டது.
இனப்பிரச்சனைக்கான தீர்வைக் காணும் நோக்கத்தோடு இலங்கையின் ஜனாதிபதி பிரேமதாசவினால் 1989ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ம் திகதி கூட்டப்பட்ட அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி கட்சியின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டார்கள்.
விடுதலைப் புலிகளின் அந்த அரசியல் கட்சியின் முதலாவது மாநாடு மட்டக்களப்பு வாகரையில் 1990ம் ஆண்டு பெப்ரவரி 24ம் திகதி முதல் மார்ச் மாதம் 1ம் திகதி வரை நடைபெற்றது.
1990ம் ஆண்டு ஆனி மாதம் ஆரம்பமான 2ம் கட்ட ஈழ யுத்தத்தைத் தொடர்ந்து இந்தக் கட்சியின் செயற்பாடு முற்றாகவே இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இன்றைக்கும் இலங்கை தேர்தல் திணைக்களத்தில் ஒரு அரசியல் கட்சியாக இருந்துவரும் விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி என்ற கட்சி, தற்பொழுது பிரித்தானியாவிலும் ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திங்கள், 15 மார்ச், 2010
சிறீலங்கா அரசு 1,422 ஊனமுற்றவர்களையும், 397 சிறுவர்களையும் தடுத்து வைத்துள்ளது
சிறீலங்கா அரசின் தடுப்புக்காவலில் 11,000 இற்கு மேற்பட்ட விடுதலைப்புலிகள் உள்ளனர். அவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களில் சிறப்பு பயிற்சி பெற்றவர்களும் உள்ளனர். பயிற்சி பெற்ற 19 தொடக்கம் 24 வயதுள்ள 4,580 பேரும், 25 தொடக்கம் 34 வயதுள்ள 4,220 பேரும் தடுப்பு முகாம்களில் உள்ளனர்.
தடுப்புக்காவலில் உள்ள 11,000 பேரில் 4,953 பேர் கடந்த இரு வருடங்களில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டவர்கள். அவர்களில் பெருமளவானவர்கள் வன்னி பகுதியை சேர்ந்தவர்கள்.
மேலும் அவர்களில் 1,422 பேர் ஊனமுற்றவர்கள். நான்கு பேர் முற்றாக கேட்கும் சக்தியை இழந்துள்ளனர். ஒருவர் பகுதியாக கேட்கும் சக்தியை இழந்துள்ளார். மூவர் முற்றாக பார்வையை இழந்துள்ளனர். 144 பேர் பகுதியாக பார்வையை இழந்துள்ளனர். ஐந்து பேர் இரு கால்களையும் இழந்துள்ளனர். 686 பேர் ஒரு காலை இழந்துள்ளனர்.
17 பேர் இரு கைகளையும் இழந்துள்ளனர். 387 பேர் ஒரு கையை இழந்துள்ளனர். இந்த வருடத்தின் மார்ச் மாதம் 1 ஆம் நாளில் இருந்து 10,781 பேர் 17 தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 8,791 பேர் ஆண்களும், 1,990 பேர் பெண்களும், 397 சிறுவர்களும் உள்ளனர்.
கஜேந்திரனின் மறுப்பு அறிக்கையும்,நம்பகதன்மைகளின் வெளிப்பாடும் ........
15-03-2010
ஊடக அறிக்கை
கடந்த 14-03-2010 அன்று தமிழ் இணையத்தளத்தில் கஜேந்திரன் குழுவினருக்கு வன்னியில் இருந்து ஒரு மடல் என்ற தலைப்பில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி மகாவித்தியாலய அதிபராக சிறீதரன் அவர்கள் கடமையாற்றிய காலத்தில் கிளிநொச்சிப் பாடசாலைக்கு விளையாட்டு மைதானம் பெறுவது தொடர்பாக அதிபர் சிறீதரன் அவர்கள் விடுதலைப் புலிகளது அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களை அணுகியதாகவும் அதன்போது தமிழ்ச்செல்வன் குழுவில் இருந்த சிலருடன் இணைந்து அந்த முயற்சியை நானும் எதிர்த்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக் குற்றச்சாட்டை நான் முழுமையாக நிராகரிக்கின்றேன். அத்துடன் கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு மைதானம் பெறுவது தொடர்பான எந்தவொரு கலந்துரையாடலிலும் எந்தவொரு சந்தற்பத்திலும் நான் கலந்து கொண்டிருக்கவில்லை. அப்படியிருக்க தமிழ்ச்சசெல்வன் குழுவில் இருந்து நானும் எதிர்த்ததாக கூறப்படுவது முற்றிலும் பொய்யான விடயமாகும்.
மைதான விடயத்தில் தமிழ்ச்செல்வன் குழு, நடேசன் குழு என்ற இரண்டு குழுக்கள் உருவாக நான் காரணம் என்ற பொய்க் குற்றச்சாட்டை சுமத்துவதன் மூலம் என் மீது சேறு பூசுவதன் மூலம் கொள்கையில் இருந்து விலகிச் செல்வும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெல்ல வைப்பதற்கான அரசியல் வங்குரோத்துத்தனமான பிரசார உத்தியை கூட்டமைப்பு கையாள்கின்றது.
அத்துடன் தலைவர் பிரபாகரனின் ஆழுமையை கேவலப்படுத்தும் மறைமுக நிகழ்ச்சி நிரலும் அரங்கேறுகின்றது. மைதானம் வழங்க தமிழ்ச்செல்வன் முட்டுக்கட்டாயக இருந்தார் என்றும், தமிழ்ச்செல்வன் குழு என்ற ஒரு இந்தது போன்றதொரு பொய்ப்பரப்புரையை இச் சந்தற்பத்தில் என்னோடு தொடர்பு படுத்தி கூற முற்படுவதன் மூலம் உலகத் தமிழ் மக்களால் ஆழமாக நேசிக்கப்பட்ட தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்கள் பற்றி தமிழ் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் சதித்திட்டம் ஒன்றை நாசூக்காக அரங்கேற்றுகின்றனர்.
திரு.சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்குப் பின்னர் நடேசன் அண்ணா அவர்கள் அரசியல் துறைப் பொறுப்பாளராக பதவியேற்ற காலத்திற்கு முன்னரும் பின்னரும் அவருக்கும் எனக்கும் மிகவும் நெருக்கமான நட்புறவு இருந்தது. இது உண்மையில் வன்னியில் வசித்த மக்களுக்கு தெரியும். பிளவுகளை ஏற்படுத்த நான் முயல்வதாக வதந்திகள் பரப்பப்படுகின்றது. ஆனால் பிளவுபட்டு சோர்வடைந்து, மரணபயத்தில் உறைந்து போயிருந்த யாழ் மக்களையும் ஏனைய தாயக மக்களையும் பொங்குதமிழ் என்ற நிகழ்வினூடாக சாதி, சமய, பிரதேச, வர்க்க வேறுபாடுகளை தாண்டி தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களது தலைமையினால புனிதப் போராட்டத்தின் பின்னால் அணிதிரட்டும் பணியை செய்திருந்தேன்.
வேற்றுமைகளை களைந்து கொள்கை அடிப்படையில் ஒற்றுமையை ஏற்படுத்த உழைத்தமையே என்னுடய வாழ்நாளில் நான் அதிகம் செய்த பணியாகும்.புலம் பெயர் மக்கள் வாழும் தேசங்களிலும் கூட பல்லாயிரம் மக்களை தேசிய விடுதலைப் போராட்த்தின் பின்னல் அரவணைத்து ஒன்று திரட்டும் பணியை நான் மேற்கொண்டிருந்தேன். ஒற்றுமை என்பது ஒரு சமூகத்தினது உரிமைகளை பெறுவதனூடாக கௌரவமானதும் பாதுகாப்பானதுமான, நீதியுடன் வாழக் கூடிய எதிர்காலத்தை பெற்றுக் கொடுப்பதற்கானதாக இருக்க வேண்டும்.
கொள்கைக்காக 150000 மக்களும் 40000 இளைஞர்களும் உயிர்த்தியாகம் செய்துள்ள நிலையில் அந்த தியாகங்களை கொச்சைப்படுத்தும் வகையில் அடிப்படை கொள்கைகளை கைவிட்ட அடிப்படையிலான தீர்வுத்திட்டம் ஒன்றை மக்களுக்கு தெரியாமலே ஒற்றுமை என்னும் பெயரால் ஏமாற்றி பிறசக்திகளின் தேவைக்காக திணிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு ஒத்துழைப்பது ஒன்றுமை அல்ல.
இராஐதந்திரம் என்பது வல்லமை மிக்க சக்திகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து அவர்கள் வழங்குவதை பெற்றுக் கொள்ள முயற்சிப்பது அல்ல. கடந்த 12-3-2010 அன்ற தினம் இரவு கல்வியங்காட்டுப்பகுதிக்கு வாகனத்தில் சென்ற எனது ஆதரவாளர்கள் அப்பகுதியில் ஒட்டப்பட்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் சுவரொட்டிகள் மீது எனது தேர்தல் பிரசார சுவரொட்டிகளை ஒட்டியதாகவும் அவ்விடத்தில் இருந்த பொது மக்கள் அதற்கு ஆட்சேபனை தெரிவித்த பொழுது எனது ஆதரவாளர்கள் டக்களஸ் வென்றாலும் பரவாயில்லை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெல்லக் கூடாதுதென எனது ஆதரவாளர்கள் கூறியதாகவும் 13-3-2010 அன்று தமிழ்வின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் இன்று வரை எனக்குரிய சுவரொட்டிகள் எதனையும் அச்சிடுப் பெற்றுக் கொள்ளவில்லை. சுவரொட்டிகளே அச்சிடப்பட்டிருக்காத நிலையில் மேற்படி சம்பவம் எப்படி நடந்திருக்க முடியும். அது மட்டுமன்றி கடந்த நான்கு நாட்களாக எனது தேர்தல் பிரசாரம் என்பது வடமராட்சிப் பிரதேசத்தில் மட்டுமே இடம் பெற்று வருகின்றது. இவர்கள் குறிப்பிடுவது போன்று கல்வியங்காட்டுப் பகுதியில் எனது ஆதரவாளர்கள் யாரையும் தேர்தல் பிரசார நடவடிக்கையில் நான் ஈடுபடுத்தியிருக்கவில்லை.
எனக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கைகளுக்கும் தாயகத்திலும், புலத்திலும் தமிழ் மக்கள் மத்தியில் அதிகரித்துவரும் ஆதரவை கண்டு சகித்துக் கொள்ள முடியாத நிலையில் எமது நற்பெயருக்கு கழங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இவ்வாறான பொய்ப்பிரசாரங்களை செய்து வருகின்றனர். கூட்டமைப்பு கொள்கையை கைவிட்டிருந்தாலும் கூட கூட்டமைப்பில் போட்டியிடும் தனது சகோதரரை வெல்ல வைக்க வேண்டும் என்ற சுயநல நோக்கின் அடிப்படையில் கூட்டமைப்பை வெல்ல வைக்க வேண்டும் என்பதற்காக கூட்டமைப்பில் போட்டியிடும் சிலருடன் இணைந்து கஜேந்திரன் குழுவினருக்கு ஒருமடல் என்ற தலைப்பிலும், வன்னியில் இருந்து ஒரு மடல் என்ற பெயரிலும் தமிழ்வின் இணையத்தள உரிமையாளரே மேற்படி பொய்யான செய்திகளை வெளியிட்டுள்ளதாக நான் கருதுகின்றேன்.
இதற்கு முன்னரும் இவ்வாறான பொய்யான ஆதராம் அற்ற செய்திகளை சொந்த சுயநலனுக்கான தமிழ்வின் இணையத்தளம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வந்தார் சென்றார்................
தென்னிந்தியாவிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலிருந்த தொடர்புகளை மீளவும் ஏற்படுத்துவதற்குத் துணைத் தூதரகம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் அமைப்பதற்கு இந்தியா விரும்புகிறது. தூதரகம் அமைக்கும் இந்தியாவின் பிரேரணையினை சிறிலங்கா ஏற்றுக்கொண்டிருக்கிறது.
கடந்த ஞாயிறன்று நாட்டினது குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் இரண்டு மணிநேரங்களுக்கும் மேலாகக் கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பின்போது யாழ்ப்பாணத்தில் துணைத் தூதரகத்தினை அமைக்கும் தமது முனைப்புத் தொடர்பில் மகிந்தவிற்கு எடுத்துக்கூறியதாக இந்தியப் பத்திரிகையாளர்களுடனான உத்தியோகப் பற்றற்ற சந்திப்பின் போது வெளிவிவகாரச் செயலர் நிருபாமா ராவ் கூறியிருக்கிறார்.
இந்தியாவின் சென்னை, மும்பாய் மற்றும் கல்கத்தா ஆகிய நகரங்களில் சிறிலங்கா தனது துணைத் தூதரகங்களைக் கொண்டிருக்கின்ற போதும் இந்தியாவின் ஒரேயொரு துணைத் தூதரகம் கண்டியில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டினது ஏனைய பாகங்களில் இந்தியா தனது துணைத் தூதரகங்களை அமைக்க விரும்பினால் அது தொடர்பாகத் தமக்கு எந்தத் தயக்கமும் இல்லையென சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் றோகித போகல்லகம ஒரு சில வாரங்களின் முன்னர் குறிப்பிட்டிருந்தார்.
யாழ்ப்பாணத்தில் துணைத் தூதுவராலயத்தினை அமைப்பதற்கான நடைமுறைச் செயற்திட்டங்கள் பூரணப்படுத்தப்படவேண்டியிருக்கிறது என்றும் யாழ் குடாநாட்டினது மக்களின் நலனே துணைத் தூதுவராலயத்தினை அமைப்பதற்கான அடைப்படை நோக்கம் என உத்தியோகபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
“துணைத் தூதரகம் அமைக்கப்படுமிடத்து அது குடாநாட்டு மக்கள் தங்களுக்குத் தேவையான விசாவினை இலகுவாகப் பெறுவதற்கு வழிசெய்யும் என்பதற்கப்பால் சிறிலங்காவின் வட மாகணத்திற்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான கலாச்சார உறவுகளை மேம்படுத்தவும் உதவும்” என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இரண்டு நாடுகளினதும் பரஸ்பர நலன்களுடன் தொடர்புடைய பரந்துபட்ட விடயங்கள் பற்றிக் கலந்துரையாடுவதற்காக சிறிலங்கா அரசாங்கத்தின் அழைப்பினை ஏற்று, மூன்று நாள் பயணமாக ராவ் கொழும்பு சென்றிருந்தார்.
சிறிலங்காவில் போர் முடிவுக்குவந்துவிட்டாலும் அரசியல் தீர்வுக்கான தேடல் அங்கு தொடர்ந்துகொண்டே இருக்கிறது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம் கிருஸ்ணா பாராளுமன்றில் தனது எழுத்து மூலப் பதிலில் தெரிவித்திருந்த ஓரிரு நாட்களின் பின்னர் நிருபாமாவின் கொழும்புக்கான இந்த பயணம் இடம்பெற்றது.
வெளிவிவகாரச் செயலராகப் பொறுப்பேற்ற பின்னர் நிருபாமா ராவ் கொழும்புக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணமாகவும் குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச மீண்டும் தேர்தெடுக்கப்பட்ட பின்னர் இந்திய உயர் அதிகாரி ஒருவர் சிறிலங்காவிற்கு மேற்கொள்ளும் முதலாவது பயணமாகவும் இது அமைகிறது.
இடம்பெயர்ந்திருக்கும் தமிழ்ப் பொதுமக்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதை வரவேற்ற நிருபாமாராவ் முல்லைத்தீவு மற்றும் கிளிநெச்சிப் பிரதேசங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படுமிடத்து இடம்பெயர்ந்த மக்கள் தங்களது சொந்த இடங்களில் இயல்பாக வாழும் நிலைதோன்றும் என ராஜபக்சவுடனான சந்திப்பின்போது வலியுறுத்தியதாக அவரது கொழும்பு பயணம் தொடர்பாக இந்தியத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
நடைபெற்று முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் திரு ராஜபக்ச வெற்றி பெற்றமைக்குத் தனது வாழ்த்தினைத் தெரிவித்த நிருபாமா, நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு சனநாயக முறையிலமைந்த தேர்தல்கள் இடம்பெறுவதானது சிறீலங்காவினது அனைத்து இன மக்களும் அமைதியுடனும் இணக்கப்பாட்டுடனும் வாழக்கூடியவகையில் அரசியல் இணக்கப்பாட்டினை முன்னெடுப்பதற்கேற்ற ஒரு வரலாற்றுச் சந்தர்ப்பத்தினை வழங்கியிருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டினார்.
கொழும்பில் தான் தூதுவராக இருந்த காலத்திற்குப் பின்னர் இப்போது நிறைய விடயங்கள் நடந்தேறிவிட்டன என்பதையும் இந்தச் சந்திப்பின் போது அவர் சுட்டிக்காட்டினார்.
இடம்பெயர்ந்த தமிழ் மக்களை மீளக்குடியமர்த்துவதில் சிறிலங்கா குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றிருப்பதாகக் கூறிய நிருபமா ராவ், இந்த விவகாரம் தற்போது அனைத்துலக சமூகத்தின் கவனத்தில் இருந்து அகன்று விட்டதாகவும் தெரிவித்தார்.
தற்போதைய அரசியல் விவகாரம் குறித்துக் கலந்துரையாடுகையில், நடக்க இருக்கும் பொதுத் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மட்டும் 1,000 வரையான வேட்பாளர்கள் போட்டியிடுவது மக்களாட்சி நடைமுறையில் மக்கள் எவ்வளவு ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது என நிருபமா கூறினார். நிலையான அமைதியுடன் அந்த மாற்றம் நடந்திருப்பதையும் அவர் எடுத்துக் காட்டினார்.
அண்மையில் நடைபெற்ற, கச்சதீவு அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் 3,000 இந்தியர்கள் கலந்துகொண்டமை இரு நாடுகளுக்கும் இடையிலான சிறந்த பரிமாற்றத்தின் மற்றொரு வெளிப்பாடு எனவும் அவர் குறிப்பிட்டார்.
குடியரசுத் தலைவர் ராஜபக்ச இந்தியாவிற்கான பயணமொன்றை மேற்கொள்ளவேண்டும் எனத் தான் அழைப்பு விடுத்ததாகவும் ஏப்பிரல் 8ம் நாள் இடம்பெறவிருக்கும் பொதுத்தேர்தலின் பின்னர் இந்தியாவிற்குப் பயணம் செய்வதற்கு அவர் இணங்கியிருப்பதாகவும் வெளியுறவுச் செயலர் குறிப்பிட்டார்.
ராஜபக்சவினது இந்திய பயணத்தினது திகதி தொடர்பாக பின்னர் திட்டமிடப்படும் என உத்தியோக பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர், வெளிவிவகாரச் செயலர், குடியரசுத் தலைவருக்கான சிறப்பு ஆலோசகர் பசில் ராஜபக்ச, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் குடியரசுத் தலைவரின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரையும் தனது கொழும்பு பயணத்தின் போது நிருபாமா சந்தித்திருக்கிறார்.
இவை தவிர, தமிழ் மற்றும் முஸ்லீம் கட்சிகள் உள்ளிட்ட நாட்டினது முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளோடும் வெளியுறவுச் செயலர் சந்திப்பினை நடாத்தியிருக்கிறார்.
இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதியின் புனர்வாழ்வு, புனர்நிர்மாணப் பணிகள் மற்றும் இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம் ஆகியவற்றுக்கு இந்தியா தொடர்ந்தும் வழங்கிவரும் உதவிகளை ராஜபக்ச பாராட்டியதாக இந்தியத் தூதரகம் வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
குறிப்பாக சிறிலங்காவின் வடக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் புகையிரதப்பாதைகள் மற்றும் புகையிரத நிலையங்களைச் சீர்செய்யும் பணிக்கென 425 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் வழங்கப்பட்டிருப்பதை சிறிலங்கா வரவேற்றிருக்கிறது.
இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தற்போது தங்கியிருக்கும் 70,000 மக்களும் தங்களது சொந்த விருப்பத்தின் பெயரிலேயே தங்கியிருக்கக்கூடும் என குடியரசுத் தலைவர் நிருபாமாவிடம் தெரிவித்ததாக தூதரகத்தின் ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
சிறிலங்காவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் அபிவிருத்தி மற்றும் மீள்கட்டுமானப் பணிகளுக்குத் தொடர்ந்தும் உதவுவதே இந்திய அரசாங்கத்தின் நோக்கம் என வெளிவிவகார அமைச்சருடனும் அவரது அமைச்சக அதிகாரிகளுடனும் இடம்பெற்ற சந்திப்பின் போது நிருபாமா உறுதியளித்திருக்கிறார்.
இடம்பெயர்ந்தவர்களின் நன்மை கருதி கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் வீட்டுத் திட்டங்களுக்கு இந்தியா தனது உதவிகளை வழங்கும் எனவும் இந்திய வெளியுறவுச் செயலர் அறிவித்திருக்கிறார்.
இடம்பெயர்ந்தவர்களின் நன்மைகருதி தற்காலிக வீடுகளை அமைத்தல், போரின் போது சேதமடைந்த வீடுகளைத் திருத்துதல் மற்றும் வீடற்றவர்களுக்குப் புதிய வீடுகளை அமைத்தல் போன்றவை இந்த வீடமைப்புத் திட்டத்திற்குள் அடங்கும்.
சிறிலங்காவின் வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் போக்குவரவுத் துறையினை மேம்படுத்துவதற்காக 55 பேருந்துகளை கல்விசார், கலாச்சார மற்றும் சமூக அமைப்புக்களுக்கும் இந்தப் பகுதியின் உள்ளுராட்சிக் கட்டமைப்புகளுக்கும் வழங்குவதற்கு இந்தியா அனுமதியளித்திருக்கிறது.
சிறிலங்காவின் வடக்குப் பகுதியில் இடம்பெற்றுவரும் தொடருந்து பாதை கட்டுமானப் பணிகளுக்கு மேலதிக நிதியினை வழங்குவது தொடர்பாகப் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் நிருபாமா தெரிவித்தார்.
“இந்திய-இலங்கை உறவில் கலாசார தொடர்புகளையும் பொதுவான பாரம்பரியத்தைப் பேணுவதுமே மிக முக்கிய விடயங்களாகக் கருதப்பட்டு வந்தன. தலதா மாளிகை வளாகத்தினுள் சர்வதேச பௌத்த அரும்பொருள் காட்சியகம் ஒன்றை நிறுவுவதில் முழுமையாகப் பங்குகொள்வதற்கு இந்தியா தீர்மானித்திருக்கிறதென நிருபாமா தெரிவித்தார்”, என இந்திய தூதரக அறிக்கை கூறுகிறது.
இந்தியத் தேசிய அரும்பொருள் காட்சியகத்தின் வழிகாட்டலின் கீழ் ஓர் கலைக் காட்சியகத்தினை சிறிலங்காவில் நிறுவுவதற்கான முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மன்னாரில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற திருக்கேதீஸ்வரத்தின் புனர்நிர்மாணப் பணிகளுக்காகவும் இந்தியா தனது உதவிகளை வழங்கும் என நிருபாமா தெரிவித்தார்.
மேற்குறித்த இந்தப் பணிகள் தொடர்பாக ஆராய்வதற்கு இந்தியாவின் மகாவலிபுரத்திலுள்ள கட்டடக்கலைக் கல்லூரி [College of Architecture] இந்தியத் தொல்பொருள் ஆய்வு மையம் [Archeological Survey of India] என்பனவற்றின் அலுவலர்களை உள்ளடக்கிய குழுவொன்று இலங்கைக்கு வரவிருக்கிறது.
மேலும் கலை, கலாச்சாரம், கல்வி, மனிதவள மேம்பாடு மற்றும் பயிற்சி போன்ற விடயங்களில் மக்களமைப்புக்கள் மேற்கொள்ளும் முனைப்புக்களுக்குத் தேவையான ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் வழங்கிவரும் தனித்துவமானதோர் அரச நிறுவனமாகச் செயற்படும் இந்திய-இலங்கை அறக்கட்டளை நிறுவனத்திற்கு [India-Sri Lanka Foundation] இந்தியா வழங்கிவரும் ஆதரவினை அதிகரிப்பது என்ற முடிவினையும் நிருபாமா ராவ் அறிவித்தார்
அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் தீர்வென்று இந்தியா எதைக் கூறுகிறது?அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் தீர்வென்று இந்தியா எதைக் கூறுகிறது?
கண்டி மாவட்டத்தில் அராஜக அரசியல் சூழ்நிலை நிலவுவதாகவும் இதனால் மக்களின் சுதந்திரம் பாதிக்கப்படுவதாகச் சுலோக அட்டை ஏந்தி நாடாளுமன்றில் போராட்டம் நிகழ்த்திய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஆளும் கட்சி வேட்பாளர் ஒருவரின் தேர்தல் பிரசார நிலையமாக நாவலப்பிட்டி காவல் நிலையம் இயங்குவதாகவும் கூறியுள்ளார்.
புதிதாக முகிழ்ந்து வரும், மனோ கணேசனின் மலையக தலைமைத்துவம் குறித்து அச்சம் கொள்ளும் சக்திகள், அவரைத் தமது முதன்மையான அரசியல் இலக்காகக் கொண்டு காய்களை நகர்த்துகின்றன போல் தெரிகின்றது.
மலையக தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை சிதைப்பதற்குப் பல அச்சுறுத்தல்களையும் அவர்களிடையே பிளவுகளையும் மேற்கொண்டு பேரினவாத கூட்டுக் குழுக்களை அவர்களுக்கு எதிராக நிறுத்துவதன் மூலம் பெரும்பான்மையின மக்களின் நாடாளுமன்ற அங்கத்துவத்தினை மலையகத்தில் அதிகரிக்கும் நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இது போன்ற நடவடிக்கைகள், வேறு பரிமாணத்தில் வடகிழக்கில் மேற்கொள்ளப்படுவதை அவதானிக்கலாம்.
வடக்கு, கிழக்கில் 31 நாடாளுமன்ற ஆசனங்களுக்கு 1,867 பேர் மோதுகின்றனர்.
யாழ். மாவட்டத்தில் 12 குழுக்களும் மட்டக்களப்பில் 26 குழுக்களும் திருமலையில் 14 குழுக்களும் அம்பாறையில் 49 குழுக்களும், சுயேச்சையாக கட்சிகளைப் பிரதிநிதித்துவம் செய்யாமல் தேர்தல் களத்தில் குதித்துள்ளன.
வடக்கு, கிழக்கில் 1,000 பேரளவில் போட்டியிடுவதால் மக்களாட்சி நடைமுறையில் மக்கள் எத்தனை ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் என்று புளகாங்கிதம் அடைந்துள்ளார் இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் நிருபமாராவ்.
போர் முடிவடைந்ததால் நாட்டின் அபிவிருத்திக்கும் மீள்கட்டுமானப் பணிகளுக்கும் எவ்வாறு உதவலாம் என்பது குறித்து கலந்துரையாடுவதற்கு நிருபமா ராவ் வருகை தந்ததாகக் கூறப்பட்டது.
ஆனாலும், இப்பயணத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்த இந்திய வெளியுறவுத்துறைச் செயலர், பிரித்தெடுக்கப்பட்ட, கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனைச் சந்தித்து இந்தியாவிற்கு வருகை தருமாறு அழைப்பினை விடுத்ததாக வந்த செய்தியே சற்று வித்தியாசமாக அமைந்திருந்தது.
5th-Cartoonஇந்தியாவின் அனுசரணை இல்லாமல் இனப்பிரச்சினைக்கான தீர்வு சாத்தியமில்லையென நம்பிக்கை கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஒரு முக்கிய செய்தியொன்று இச்சந்திப்பினூடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, 1987இல் உருவாக்கப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தம் விதந்துரைக்கும் மாகாண சபைத் தீர்வினையும் 13ஆவது திருத்தச் சட்டம் கூறும் அதிகாரப் பரவலாக்கத்தினையும் (அதிகாரப் பகிர்வல்ல) தவிர, வேறெந்த தீர்வுத் திட்டங்களையும் இலங்கை அரசின் மீது தம்மால் திணிக்கவோ அல்லது வலியுறுத்தவோ முடியாதென்கிற விவகாரத்தை மறைமுகமாக கூற விழைகிறது இந்திய அரசு.
தனது இந்தியப் பயணத்தின்போது, காணி மற்றும் காவல்துறை அமைக்கும் அதிகாரங்களைப் பெற்றுத் தருமாறு இந்தியாவிடம் ஒரு வேண்டுகோளை கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் முன்வைப்பாரெனக் கருதலாம்.
அத்தோடு, மாகாண சபை ஆட்சி முறைமையை வலுப்படுத்தும் அல்லது சீர் செய்யும் நகர்வுகளையே இந்தியா முன்னெடுக்குமென எதிர்பார்க்கலாம்.
ஆனாலும் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ஆளும் தரப்பினர் பெற்றால் அரசியல் அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் ஊடாக நடைமுறையிலுள்ள அரைகுறையான மாகாண சபை அதிகாரங்களை அழித்து விடும் நிலையும் ஏற்படலாம்.
அப்போது அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினை தாம் ஆதரிப்பதாகக் கூறிவரும் இந்தியாவும் மேற்குலகும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மேற்கொள்ளும் முடிவுகளை நிராகரிக்க முடியாததொரு கையறு நிலைக்குத் தள்ளப்படும்.
அதேவேளை, பிராந்திய அரசியலில் வல்லரசுகளின் ஆதிக்கப் போட்டிகளை எதிர்கொள்ளும் இந்திய வல்லாதிக்கமானது, மாகாண சபைத் தீர்வினை அமுல்படுத்துமாறு வலியுறுத்துவதோடு தனது வகிபாகத்தை மட்டுப்படுத்திவிடுமென்பது யதார்த்தமாகும்.
ஆனாலும் இங்கு புரிதலுக்கு உள்ளாக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், தமிழர் தாயக இறைமையை இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை என்பதாகும். அனைத்து இலங்கை மக்களுக்கும் ஏற்புடையதான தீர்வு என்பதன் உட்பொருள் பெரும்பான்மையின மக்களின் முழு இலங்கைக்குமான இறைமையை இங்கு வாழும் சிறுபான்மையான பூர்வீக தேசிய இனமானது ஏற்றுக்கொள்ள வேண்டுமென்கிற கருத்தியல் கோட்பாட்டின் அடிப்படையில் எடுத்தாளப்படுகிறது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது நோர்வே தலைநகர் ஒஸ்லோவில், 2002 டிசம்பரில் இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொண்டு வெளியிட்ட “ஒஸ்லோ பிரகடனம்’ என்று தவறாக அழைக்கப்படும் ஒஸ்லோ உடன்படிக்கையின் அடிப்படையில் தீர்வு காணப்படலாமெனக் கூறுகிறது.
உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் சரித்திர ரீதியாக தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வந்துள்ள தாயகத்தில் ஒருமித்த நாட்டிற்குள் சமஷ்டி அடிப்படையில் ஆட்சிமுறை அமைய வேண்டும் என்பதுதான் ஆராய்ந்து பார்ப்பதன் அடிப்படையில் ஒஸ்லோவில் இருதரப்பும் செய்து கொண்ட உடன்படிக்கையின் சாராம்சமாகும்.
ஆனாலும் மாநிலங்களுக்கு இறையாண்மை அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதற்குப் பதிலாக, அதிகாரப் பரவலாக்கம் (ஈஞுதிணிடூதtடிணிண ணிஞூ கணிதீஞுணூ) என்கிற பதத்தை பிரயோகிக்கவே அன்று சிங்களதேசம் விரும்பியது.
tna-1ஆகவே, ஒஸ்லோ உடன்பாட்டினை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளோம் என்பதன் அடிப்படையிலா அல்லது அன்ரன் பாலசிங்கம் கூறியது போல் ஆராய்ந்து பார்ப்பதன் அடிப்படையிலா, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஒஸ்லோ விவகாரத்தை கையிலெடுத்தது என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
இருப்பினும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒஸ்லோ நகர்வினை இலங்கை ஆட்சியாளர்கள் முற்றாக நிராகரித்து விட்டார்கள்.
ஆனால், தனியரசுக் கோட்பாட்டை மட்டுமல்ல, ஒஸ்லோ கதைகளையும் சிங்களதேசம் விரும்பாதென்பதை கூட்டமைப்பின் தலைவர் இப்போது புரிந்து கொள்வார்.
அதேபோல் ஒருநாடு இருதேசம், கூட்டாட்சி போன்ற தமிழர் இறைமையை அடித்தளமாகக் கொண்ட கோட்பாடுகளையும் சிங்களதேசம் ஏற்றுக்கொள்ளாது.
தமிழர் தரப்பின் கோட்பாட்டு ரீதியான அகநிலை முரண்பாடுகளுக்கும், தென்னாசியாவில் தமிழர் தாயக புவிவியல் அமைவிடத்தால் எழும் அனைத்துலக உறவுச் சிக்கல்களுக்கும் இடைவெளி மிகப் பெரியது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் முன்வைக்கப்படக்கூடிய குறைந்தபட்ச தீர்வுக் கோரிக்கையான ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஷ்டி முறைமை என்பதனை சிங்களதேசம் பரீசிலனைக்குக்கூட எடுத்துக் கொள்ளாது என்பதே உண்மை நிலையாகும்.
இவை தவிர அதிகாரப் பரவலாக்கம், நிர்வாகப் பரவலாக்கம், அதிகாரப் பகிர்வு போன்ற சொல்லாடல்கள் தற்போது தீர்வு யோசனைகளில் பரவலாகப் பேசப்படும் வார்த்தை ஜாலங்களாகக் காணப்படுகிறது.
இதில் அதிகாரப் பகிர்வு என்பது தமிழ்த் தேசிய இனத்தின் இறைமை என்கிற அடிப்படைக் கோட்பாட்டை நிராகரிக்காத கருத்தியலைக் கொண்ட நடைமுறை சார்ந்த அரசியல் படி நிலையாகும்.
ஆனால், சிங்களதேசம் முன்வைக்கும் அதிகாரப் பரவலாக்கலானது சிங்கள தேசத்தின் இறையாண்மையை உறுதிப்படுத்தியவாறு ஏனைய தேசிய இனங்களுக்கு வழங்கப்படும் வெறும் நிர்வாகப் பரவலாக்க நடைமுறையை சார்ந்ததாகும்.
இறைமையற்ற சுயநிர்ணய உரிமை, அதன் உள்ளார்ந்த இறுக்கமான பண்புகளை இழந்து வெறும் சொற் பிரயோகமாகவே கருதப்படும்.
ஆகவே, தாயகம், தேசியம் என்கிற அடிப்படைக் கோட்பாடுகளை நிராகரிக்கும் முரண்நிலைச் சக்திகள் இறைமை, சுயநிர்ணய உரிமை என்பவற்றை ஏற்றுக்கொள்ள மறுப்பது அதிசயமான விடயமல்ல.
ஒஸ்லோ உடன்படிக்கையில் ஆராய்ந்து பார்ப்பதற்கு முன்வைக்கப்பட்ட இறைமையுள்ள சமஷ்டி குறித்து தொடர்ந்து பேசுவதற்கும் சிங்களதேசம் மறுத்தது.
தமிழீழ விடுதலைப் புலிகளால் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் தடைநீக்கியாக முன்மொழிந்த இடைக்கால தன்னாட்சி அதிகார சபை முறைமையினை அவ்வடிவமானது தமிழரின் இறைமையை உள்ளடக்கியதாக இருந்ததால் அதனையும் சிங்களதேசம் நிராகரித்தது.
ஆகவே, சகல நிறைவேற்று அதிகாரங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள ஜனாதிபதி முறைமையானது அதிகாரங்களை பகிர்ந்தளிக்கவோ அல்லது தேசிய இனமொன்றின் பிரிக்க முடியாத பிறப்புரிமை சார்ந்த இறைமையுள்ள தமிழினத்திற்கு சுயநிர்ணய உரிமை உண்டென்பதை ஏற்றுக்கொள்ளவோ மாட்டாது.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்ததும், வட மாகாண சபைத் தேர்தலை நடத்த உத்தேசித்திருப்பதாக ஜனாதிபதி கூறி வருகிறார். அதற்கு இந்தியாவின் ஆதரவு உண்டென்று நம்பலாம்.
1980களில் பல் போராட்ட இயக்கங்களைக் கையாண்டது போலவே இப்போதுள்ள தமிழ் அரசியல் கட்சிகளை கையாள இந்தியா எண்ணுகிறது.
ஏற்கெனவே கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோட்பாட்டு ரீதியிலான உடைவுகள், பிராந்திய வல்லரசுகளின் நிகழ்ச்சி நிரலிற்கு சாதகமான தளத்தினை உருவாக்கப் போகிறது.
கிழக்கு மாகாண முதலமைச்சரை வரவேற்பதன் ஊடாக மாகாண சபை மற்றும் 13ஆவது திருத்தச் சட்டம் போன்றவற்றையே தீர்விற்கான தமது விருப்பத் தெரிவாக இந்தியா கொண்டுள்ளதென்பதை கூட்டமைப்பினர் புரிந்து கொள்வார்களா?
இந்தியாவை விட்டால் வேறு கதியில்லையென்றால் அவர்கள் பரிந்துரைக்கும் அதிகாரமற்ற மாகாண சபை முறைமையை ஏற்றுக்கொள்வதைத் தவிர கூட்டமைப்பிற்கு வேறு வழியில்லை.
ஏனெனில் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கூறப்பட்ட விடயந்தான் இனப்பிரச்சினைக்கு இந்தியா முன்வைக்கும் தீர்வு.
அதை மெருகூட்டி அழகுபடுத்தி தமிழர் மீது திணிக்கும் நகர்வினையே இந்தியா முன்னெடுக்கிறது. ஆகவே, கூட்டமைப்பு முன்வைக்கும் குறைந்தபட்ச சமஷ்டி கோரிக்கைகளை இந்திய இலங்கை தரப்புகள் ஏற்றுக்கொள்ள முன்வராது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
— இதயச்சந்திரன்
சனி, 13 மார்ச், 2010
மீண்டும் உலகை ஏமாற்ற சுயாதீன நிபுணர் குழு அமைப்பு
உலகை ஏமாற்ற பல குழுக்களை அமைத்து இழுத்தடித்த மஹிந்த இப்போ மனித உரிமைகள் தொடர்பிலும் சுயாதீன குழுவை அமைக்கப்போவதாக கூறியுள்ளது.
அரச சார்பற்ற பணியாளர்களின் முதூர் படுகொலை உட்பட பல கொலைகளுக்கு விசாரணைக்குழு அமைத்து இறுதியில் என்ன நடந்தது என்பதனை சர்வதேசம் மறந்தாலும் நிச்சயமாக தமிழர்கள் மறக்கமாட்டார்கள்.
இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையினால் நிறுவப்படபோகும் ஆலோசனைக்குழுவினை நிறுத்த அல்லது வலுவற்றதாக்கவே தற்போதைய சுயாதீன குழு அமைத்தல் நாடகம் அமையப்போகின்றது.
இது தொடர்பாக அமைச்சர் மங்கள சமரசிங்க கூறுகையில் இலங்கையில் கடந்த மூன்று தசாப்த காலங்களாக நிலவிய பயங்கரவாதத்துக்கான காரணம் என்ன? மற்றும் இனிவரும் காலங்களில் அவ்வாறான நிலைமை ஒன்று ஏற்படாமல் எவ்வாறு தடுப்பது என்பன தொடர்பில் விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க சுயாதீன நிபுணர் குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
நாங்கள் வெளிநாடுகளில் இருந்து 'இறக்குமதி' செய்யப்பட்ட தீர்வுத் திட்டங்களை இங்கு நடைமுறைப்படுத்தமாட்டோம். எமது மக்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் என்னவென்று எமது 38 வருட அரசியல் அனுபவம் கொண்ட ஜனாதிபதிக்கு நன்றாக தெரியும். எனவே நாங்கள் எமக்கே தனித்துவமான வேலைத்திட்டங்களுடன் நாட்டை முன்னெடுப்போம். சுயாதீன நிபுணர் குழு தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி முறையாக மேற்கொள்வார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
"இம்மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட ஐ. நா. செயலாளர் பான் கீ. மூன் இலங்கை தொடர்பில் ஆலோசனை பெற தான் ஆலோசனைக் குழுவொன்றை நியமிக்கப்போவதாக கூறியிருந்தார். ஆனால் அது தேவையற்றது என்று ஜனாதிபதி கூறிவிட்டார்.
தற்போது 124 நாடுகளை அங்கத்துவமாகக்கொண்ட அணி சேரா அமைப்பு ஆலோசனை குழுவை அமைப்பது தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து பான் கீ. மூனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. ஐ.நா. வில் 194 உறுப்பு நாடுகள் உள்ளன.
ஆனால் அணிசேரா நாடுகள் அமைப்பில் 124 நாடுகள் உள்ளன. இங்கும் எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது. எனவே ஆலோசனை குழு தேவையற்றது என்று நாங்கள் கருதுகின்றோம்.
இதனடிப்படையில் அரசாங்கம் ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளது. அதாவது இலங்கையில் கடந்த மூன்று தசாப்த காலங்களாக நிலவிய பயங்கரவாதத்துக்கான காரணம் என்ன? மற்றும் இனிவரும் காலங்களில் அவ்வாறான நிலைமை ஒன்றை எவ்வாறு தடுப்பது என்பது தொடர்பில் விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க சுயாதீன நிபுணர் குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
முக்கியமாக அல்பிரட் துரையப்பாவின் கொலையிருந்து அனைத்து விடயங்களும் ஆராயப்படும். யுத்தம் முடிவடைந்த பின்னர் இடம்பெற்ற விடயங்களும் ஆராயப்படும்"
ஆர்வத்துடன் பங்குபற்றுகின்றனராம்...................
இராணுவத்தினரின் ஏற்பாட்டில் இளைஞர், யுவதிகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு தற்காப்புக்கலைப் பயிற்சி வழங்கப் பட்டு வருகின்றது.
துரையப்பா விளையாட்டரங்கில் நேற்றுமுன்தினம் ஒருதொகுதியினருக்கு இந்தப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது பயிற்சி நாளை யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெறும்.
இந்தப் பயிற்சியைப் பெறவிரும்புபவர்கள் நேரடியாக அங்கு வந்து பயிற்சியில் இணைந்து கொள்ளலாம் என பலாலி படைத் தலைமையகம் அறிவித்துள்ளது.
வாரத்தில் வியாழன், ஞாயிறு ஆகிய நாள்களில் இந்தப் பயிற்சி இடம்பெறும் என்றும் முதலாவது பயிற்சியில் பங்கு பற்றியவர்கள் படையினருக்கு நன்றி தெரிவித்தனர் என்றும் படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்தத் தற்காப்பு பயிற்சிகளை வழங்கு வதற்கான ஏற்பாடுகளை யாழ்.மாவட்ட பாதுகாப்புப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த கத்துறுசிங்க செய்துள்ளாராம்.
முன்னாள் விடுதலைப் புலிகள் குடும்பங்களுக்கு தனியான சிறப்பு முகாம்
சிறிலங்காப் படைகளின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் 11,000 விடுதலைப் புலி உறுப்பினர்களுக்குமான புனர்வாழ்வு நடவடிக்கைகள் சர்வதேச சமூகத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தடுப்பிலிருக்கும் கணவன், வெளியே இருக்கும் மனைவி மற்றும் பிள்ளைகள் என அனைவரையும் குடும்பத்துடன் ஒரே கூடாரத்தில் தங்கவைப்பதற்கு ஏதுவாக மாணிக்கம் பண்ணையின் [மெனிக் பாம்] ஐந்தாவது வலயத்தில் சிறப்பு புனர்வாழ்வு மையத்தினை அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதுபோன்ற முதலாவது வசதி மல்வத்து ஓயாவின் ஓரத்திலிருக்கும் மாணிக்கம் பண்ணையின் வலயம் ஐந்தில் அமைக்கப்படவிருக்கிறது.
விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் பொதுவாழ்வில் இணைவதற்கு வழிசெய்யும் திட்டத்தின் ஒருபகுதியாக இதுபோன்ற வசதிகள் திருகோணமலை, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் அமைக்கப்படவிருக்கின்றன.
தங்களது குடும்பங்களுடனும் அன்புக்குரியவர்களுடனும் இணைந்திருந்தவாறே முன்னாள் போராளிகள் புனர்வாழ்வினைப் பெறக்கூடிய சந்தர்ப்பத்தினை இச்செயல்திட்டம் அவர்களுக்கு வழங்கும் என நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொட தெரிவித்திருக்கிறார்.
கணவன் மாத்திரம் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் எனின், மனைவி மற்றும் பிள்ளைகள் சுதந்திரமாக வெளியே சென்று வர அனுமதிக்கப்படுவார்கள்.
அதேநேரம் இப்புனர்வாழ்வுச் செயல்திட்டத்தினைத் தங்கு தடையின்றி முன்னெடுப்பதற்கு ஏதுவாக அங்கிருக்கும் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு ஏற்ப கணவன் இத்தகைய புனர்வாழ்வு நிலையங்களுக்கு வெளியே செல்ல அனுமதிக்கப்படமாட்டார்.
அரசாங்கத்தின் இந்த முனைப்புக்களுக்கு IOM மற்றும் வேறுபல உள்ளுர், வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்கள் ஆதரவு வழங்கிவருகின்றன.
அகில அலங்கை இந்து மாமன்றத்தையும் இதில் ஈடுபடச் செய்ததன்மூலம் தமிழ் மக்களுக்கும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கும் நம்பிக்கையைப் ஏற்படுத்த அமைச்சர் மொறகொட திட்டமிட்டுள்ளார்.
முன்பள்ளிகள், பகல்நேர சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் தனியான தொழிற்கல்வி, தொழில் நுட்பப் பயிற்சி மையங்களையும் இத்தகைய புனர்வாழ்வு மையங்களுக்குள் அமைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக அமைச்சர் மொறகொட தொரிவித்தார்.
விடுதலைப் புலிகள் அமைப்பு இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னான இந்தக் காலப்பகுதியில் தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையினைக் கட்யெழுப்பும் முனைப்பாக இதுபோன்ற செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
போர் முடிவுக்கு வந்து ஒருவருடம் கூட ஆகியவிடாத நிலையில் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகள் அதிக வெற்றியினைத் தந்திருப்பதாக மொறகொட மேலும் தெரிவித்தார்.
இலங்கை இராணுவம், இதரபல அமைச்சுக்களின் துணையுடன் நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கிறது.
கணவன் மற்றும் மனைவி என இருவருமே புலிகளமைப்பின் முன்னாள் போராளிகளாக இருக்குமிடத்து அவர்களை ஒரேயிடத்தில் தங்கவைத்துப் புனர்வாழ்வாளிப்பதற்கு ஏதுவாக வவுனியாவில் சிறப்பு வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திவருகிறது.
இதுபோன்ற 142 முன்னாள் போராளிக் குடும்பங்களும் குழந்தைகளுடனிருக்கும் 8 தாய்மாரும் இந்தப் புதிய முகாமிற்கு அனுப்பப்படவிருக்கிறார்கள்.
இந்த முன்னாள் போராளிக் குடும்பங்களுக்காக தனியான தொழில் நுட்ப மற்றும் தொழிற்கல்வி வகுப்புக்கள் ஒழுங்குசெய்யப்படும் என இராணுவ அலுவலர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
திருகோணமலையின் அல்லைக்கந்தளாயிலுள்ள சூரியவேவ பகுதியில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் 500 பேருக்குப் புனர்வாழ்வளிக்கப்பட்டு வருகிறது.
இவர்களுக்கான கால்நடைவளர்ப்புத் திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுக்கவிருக்கிறது. இலங்கை இராணுவமும் Ceylon Cold Stores என்ற நிறுவனமும் இணைந்தே இந்தத் திட்டத்தினை முன்னெடுக்கின்றன.
Ceylon Cold Stores என்ற இந்த நிறுவனந்தான் இத்திட்டத்திற்கான நிதியுதவியினை வழங்குகிறது. பால் விநியோகத்தினை மேற்கொள்வதற்காக 1800 வரையிலான விவசாயிகள் வேலைக்கமர்த்தப்படவிருக்கிறார்கள் என இராணுவ அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
இதற்குத் தேவையான நிலத்தினை அரசகாணியிலிருந்து பெறுவதற்கான முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். திருக்கோணமடுவின் கண்டல்காடுப் பகுதியில் அரசாங்கம் விவசாய மற்றும் கால்நடைப் பண்ணைகளை ஏற்படுத்தவிருக்கிறது.
இலங்கை இராணுவத்தினரும் கடற்படையினரும் இங்கு நிலைப்படுத்தப்படுவர். இது போன்ற ஆறு பண்ணைகள் அமைக்கப்படும். ஒவ்வொரு பண்ணைகளிலும் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் 500 போர் உள்வாங்கப்படுவார்கள்.
கொழும்பு யாழ்ப்பாண வெற்றிலைகளுக்கு இடையில் அரசியல் முறுகல்
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் நாளுக்கு நாள் முறுகல் நிலைகளும், கருத்து மோதல்களும் இடம்பெற்று வரும் நிலையில் யாழ்ப்பாணத்தில் சிறீலங்கா சுதந்திரக் கூட்டமைப்பிற்குள் பாரிய முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் வெற்றிலைச் சின்னத்தின்கீழ் ஈபிடிபியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா உட்பட்ட குழுவினரும், அதே சின்னத்தில் அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
இந்தநிலையில் அங்கஜன் இராமநாதன், மகிந்த ராஜபக்சவினால் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக கூடுதல் வாக்குகளைப் பெற்று அதன் மூலம் டக்ளஸ் தேவானந்தாவைத் தோற்கடிக்கவைக்கும் நோக்கில் யாழ்.தேர்தல் தொகுதியில் தேர்தலில் களம் இறக்கப்பட்டுள்ளமை தொடர்பிலான ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
ஆனாலும் இரண்டு தரப்பும் வெற்றிலைச் சின்னத்தில் பரப்புரை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதால் பல இடங்களில் முறுகல் நிலை ஏற்பட்டே வந்துள்ளது.
குறிப்பாக இரு தரப்பினரும் ஒரே பகுதி மக்களிடம் சென்று வெற்றிலைச் சின்னத்தில் தமக்கு மட்டுமே வாக்களிக்கும் படி கேட்டுக் கொள்வது, மற்றும் சுவரொட்டிகள் மீது தமது சுவரொட்டிகளை ஒட்டுவது போன்ற நடவடிக்கைகள் இரண்டு தரப்பிற்கும் இடையில் முறுகல் நிலையினை வலுப்படுத்தியது.
இந்த நிலையில் நேற்று முன்னாள் யாழ். நகரை அண்மித்த பகுதி ஒன்றில் அங்கஜன் இராமநாதன் பயணித்த சொகுசு வாகனத்தினைக் கலைத்துச் சென்ற ஈபிடிபி வாகனம் மோதியுள்ளது.
இதனை அடுத்து இரண்டு தரப்பிற்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் கைத்துப்பாக்கியினை எடுத்த ஈபிடிபியினர் அங்கஜன் இராமநாதன் உடனடியாக நாட்டைவிட்டே வெளியேற வேண்டும் என்றும், தவறினால் சுட்டுக் கொல்லப்படுவீர் என்றும் எச்சரித்துள்ளனர்.
சம்பவத்தினை அடுத்து பதட்டமடைந்த அங்கஜன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார். குறிப்பிட்ட அங்கஜன் வெளிநாட்டில் இருந்து தற்போதே இலங்கைக்கு வருகைதந்து தேர்தலில் குதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
