புதன், 17 மார்ச், 2010

"தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முறியடித்து விட்டதாகக் கூறி மார் தட்டும் சிறிலங்கா அரசுக்கு" "நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பதிலடியாக அமையும்".

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்களை மே 2ம் திகதி அனைத்து நாடுகளிலும் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது என இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் விசுவநாதன் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையின் முழுவிபரமாவது: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பது தொடர்பான மதியுரைக்குழுவின் ஆய்வின் அடிப்படையில் உருவான அறிக்கை தைத்திருநாளன்று [14.01.2010] மக்கள் கருத்துக்காக முன்வைக்கப்பட்டிருந்தது. இவ் அறிக்கை குறித்த மக்கள் கருத்துக்களை மதியுரைக்குழு கவனத்திற் கொண்டு, இக் கருத்துக்கள் தொடர்பான தனது மீளாய்வினை மேற்கொண்டு அறிக்கையினை செழுமைப்படுத்தி அதன் ஆங்கில மொழியிலான அறிக்கையினை இன்று வெளியிடப்படுகிறது. அவ்வறிக்கையின் தமிழ் வடிவம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை [19.03.10] வெளியிடப்படும். இம் மீளமைக்கப்பட்ட அறிக்கையில் கவனத்திற் கொள்ளப்பட்ட விடயங்களில் முக்கியமானவை கீழே தரப்படுகின்றன. . நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எனும் பெயரில் உள்ள தமிழீழம், அரசாங்கம் ஆகிய இரு பதங்களுக்குப் பதிலாக ஈழத் தமிழர், பேரவை போன்ற பதங்கள் பயன்படுத்தப்படலாம் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. [உதாரணமாக பரிந்துரைக்கப்பட்ட மாற்றுப்பெயர்களில் ஒன்று: நாடு கடந்த ஈழத்தமிழர் பேரவை - Transnational Assembly of Eelam Tamils]. தமிழீழம், அரசாங்கம் என்ற பதங்கள் அனைத்துலக சமூகத்தின் ஆதரவினைப் பெற்றுக் கொள்வதற்கு இடையூறாக இருக்கும் என்பதுவும் மரபுசார் அர்த்தத்தில் இவை நிலப்பரப்பினை ஆட்சி செய்யும் தகமையினைக் குறித்து நிற்கும் என்பதுவும் இது சார்ந்து முன்வைக்கப்பட்டிருந்த வாதங்களாகும். இவற்றை ஆய்வு செய்த மதியுரைக்குழு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற பெயரினையே தொடர்ந்து பேணுவது என முடிவு செய்துள்ளது. ’தமிழீழம்’ எனும் பதம் ஈழத் தமிழர் தேசத்தின் அரசியல் அபிலாசைகளின் குறியீடாகவும், உருவாக்கப்படும் அமைப்பின் செயற்பாட்டு இலக்காகவும் இருப்பதனால் அதில் மாற்றங்கள் செய்யக்கூடாது எனவும் ஆட்சி [governence] தொடர்பாக அரசுகளின் பாத்திரத்தைக் கடந்த புதிய அரசியற் கோட்பாட்டை உருவாக்கவும் ’அரசாங்கம்’ என்ற பதம் பேணப்படுவது துணைபுரியும் எனவும் மதியுரைக்;குழு கருதுகிறது. மேலும், அனைத்துலக சமூகத்தின் மத்தியில் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் அபிலாசைகளுக்கு ஆதரவினை வென்றெடுப்பதற்கான மூலோபாயங்களையும் தந்திரோயாயங்களையும் இப் பதங்களில் மாற்றங்களை ஏற்படுத்தாத வகையில் சிந்திப்பதே சிறந்தது எனவும் மதியுரைக்குழு கருதுகிறது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான யாப்பானது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தமது முதலாவது அமர்வை அரசியல் நிர்ணயசபையாக மாற்றியமைப்பதனூடாக உருவாக்கப்பபட்டு, அதன் அடிப்படையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது பணிகளை மேற்கொள்ளும் என மக்கள் கருத்துக்கு முன்வைக்கப்பட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந் நடைமுறைக்கு மாறாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்கள் நடைபெறுவதற்கு முன்னரே யாப்பு உருவாக்கப்பட்டு இவ் யாப்பின் அடிப்படையிலேயே தேர்தல்கள் நடாத்தப்படவேண்டுமென்ற கருத்தும் முன்வைக்கப்பட்டிருந்தது. மதியுரைக்குழு இவ்விரண்டு நடைமுறைகளிலும் உள்ள சாதக பாதக அம்சங்களை விரிவாக மீளாய்வுக்கு உட்படுத்தியது. மதியுரைக்குழு ஆய்வுக்கெடுத்துக்கொண்ட பல்வேறு விடயங்களில் இதுவே மிக முக்கியமானதாகவும் இருந்தது. இம் மீளாய்வின் அடிப்படையிலும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளால் யாப்பு உருவாக்கப்படுதலே ஜனநாயக விழுமியங்களுக்கு ஏற்றதாகவும் அனைத்துலக சமூகத்தின் மத்தியில் கூடுதல் ஏற்புடமை கொண்டதாகவும் அமையும் என்பதனால் அந் நடைமுறையினையைப் பின்பற்றுதலே மீளமைக்கப்பட்ட அறிக்கையிலும் பரிந்துரைக்கப்படுகிறது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வழிகாட்டிக்கோட்பாடுகளில் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனிஅரசினை அமைத்தல் இலக்காக இருக்கும் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இவ் இலக்கினை அடைவதற்கான மூலோபாயமாக தமிழர் தேசியம், தாயகம், சுயநிர்ணயம் ஆகிய கோட்பாடுகளுக்கு முதலில் அங்கீகாரம் பெற்று - பின்னர் அவ் அங்கீகாரத்தின் அடிப்படையில் ஈழத்தமிழர் தேசம் தனது சுயநிர்ணய உரிமையினைப் பிரயோகித்து இறைமையினை வென்றெடுத்தல் அமையும் எனும் அர்த்தத்தில் 'படிப்படி அணுகுமுறை' பின்பற்றப்படுதல் குறித்து பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இப் பதப்பிரயோகம் வெவ்வேறுவகையான வியாக்கியானங்களை கொண்டிருக்கக்கூடியது என்பதனால் மீளமைக்கப்பட்ட அறிக்கையில் 'படிப்படி அணுகுமுறை' என்பது நீக்கப்படுகிறது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்படும் நோக்கு வாக்களிப்பின் மூலம் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் மக்களுக்கும், பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்படுவதற்காகத் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கும் முன்கூட்டியே தெளிவாக வெளிப்படுத்தப்படுவது ஜனநாயகப்பண்பின் அடிப்படையில் அவசியமாக உணரப்பட்டமையாலேயே மதியுரைக்குழுவின் அறிக்கையில் வழிகாட்டிக் கோட்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஜனநாயகப் பிரதிநிதித்துவ முறையில் மக்கள் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்த பின்னர் அடுத்த தேர்தல் வரும்வரை அவர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மீதான கட்டுப்பாடுகள் எதுவும் நடைமுறையில் இருப்பதில்லை என்பது இம் முறையின் குறைபாடாகவும் கருதப்படுகிறது. இதனால் இதனை நிவர்த்தி செய்வதற்கான பொறிமுறை குறித்த சிந்தனையும் நடைமுறையும் தற்போது கவனத்திற் கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியை பிரதிநிதித்துவத்திலிருந்து மக்கள் ’மீளப்பெறும்’ நடைமுறை கூடுதல் கவனத்தைப் பெறுகிறது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்காக மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் குறித்தும் அவர்கள் வழி தவறி நடக்கும் பட்சத்தில் மக்கள் அவர்களை மீளப்பெறும் அதாவது பிரதிநிதித்துவத் தகமையிலிருந்து விடுவிக்கும் பொறிமுறையொன்றும் மீளமைக்கப்பட்ட அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான செயற்குழு என்பது இணைப்பாளரின் ஒருங்கிணைப்பில் மதியுரைக்குழு, நாடுவாரியான செயற்பாட்டுக்குழுக்கள், அனைத்துலகச் செயலகம் ஆகியவற்றினைக் கொண்ட கூட்டுத்தொகுதியாக இயங்கி வருகிறது. ஆரம்பத்தில் திட்டமிட்டவாறு செயற்குழுவில் மேலதிகப் பிரதிநிதிகளை இணைப்பது என்பதற்குப் பதிலாகவே இப் புதிய அணுகுமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இச் செயற்குழுக் கட்டமைப்புக்களதும் இணைப்பாளரதும் பணிகள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டு அதன் நிர்வாகக்கட்டமைப்பு செயற்பட ஆரம்பிக்கும் போது முடிவுக்கு வரும். அவை குறித்து மீளமைக்கப்பட்ட அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு இனம் இனஅழிப்புக்கு [Genocide] உள்ளாகிறது என நிரூபிக்கப்படும் பொழுது சர்வதேசச் சட்டக் கோட்பாடுகளான தற்பாதுகாப்பு [Self defence], தற்காப்பு [Self preservation] ஆகியவற்றின் அடிப்படையில் ஈடுசெய் நடவடிக்கையாக சுதந்திரநாட்டினைக் கோருவதற்கு சர்வதேச சட்டத்தில் இடமுண்டு. தற்போது சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது புரிந்த இனஅழிப்பு இன்று ஓரளவுக்கு உலக அரங்கில் வெளிப்படத் தொடங்கியுள்ள சூழலில் எமது இனம் இனப்படுகொலைக்கு உட்பட்ட இனம் என நிரூபிப்பதன் ஊடாக சுதந்திரத் தமிழீழத்தை வென்றெடுக்கும் அணுகுமுறை தொடர்பாகவும் மீளமைக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பல்வேறு நாடுகளிலும் இயங்கி வரும் மற்றும்; உருவாக்கப்பட்டு வரும் மக்கள் அமைப்புக்களுடன் இணைந்து எவ்வாறு பணியாற்றுவது தொடர்பான திட்டங்களையும் அதற்குரிய கட்டமைப்பு வடிவங்களையும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் உரிய கலந்தாலோசனைகளின் அடிப்படையில் முடிவு செய்தலே கூடுதல் பொருத்தமானது என்று மதியுரைக்குழு கருதுகிறது. இது அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்குறிப்பட்ட விடயங்கள் உள்ளடங்கலாக முன்வைக்கப்பட்ட பல்வேறு மக்கள் கருத்துக்களையும் ஆராய்ந்து அதன் அடிப்படையில் அறிக்கை மீளமைக்கப்பட்டுள்ளது. இன்று ஆங்கில மொழியில் வெளியிடப்படும் இவ் அறிக்கையின் தமிழ் வடிவம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை [19.03.10] வெளியிடப்படும். இம் மீளளிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல்கள் ஏற்பாடு செய்யப்படும். இம் மீளமைக்கப்பட்ட அறிக்கை தொடர்பாக வெளியிடப்படும் கருத்துக்களை மதியுரைக்குழு மேலதிக ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளாது. இக் கருத்துக்கள் செயலகத்தினூடாக தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் கவனத்திற்குரியவையாகவே இனி கொண்டு வரப்படும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்களை மே 2 ஆம் திகதி அனைத்து நாடுகளிலும் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு தேர்தல்களை நடத்தி முடித்து, பிரதிநிதிகளைத் தெரிவு செய்து, மே 17 – 19 க்கு இடைப்பட்ட காலத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அமர்வைக் கூட்டலாம் என எண்ணியுள்ளோம். இது முள்ளிவாய்க்காலுடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முறியடித்து விட்டதாகக் கூறி மார் தட்டும் சிறிலங்கா அரசுக்கு ஈழத்தமிழர் தேசம் கொடுக்கும் குறியீட்டு வடிவிலான பதிலடியாக அமையும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்களை ஒழுங்கு செய்து நடத்துவதற்கான செயற்பாட்டுக்குழுக்கள் இதுவரை அறிவிக்கப்படாத நாடுகளுக்கு இம் மாத இறுதிக்குள் இவை அறிவிக்கப்படும். இத் தேர்தல்களில் போட்டியிட்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டு எம் தேச விடுதலைக்காக உழைத்திட முன்வருமாறு தகமையும் ஆர்வமும் உடைய அனைவரையும் அழைக்கிறோம். இத் தேர்தல்களை வெற்றிகரமாக நடாத்த இணைந்து பணியாற்ற விரும்பும் அனைவரையும் தொண்டர்களாகப் பதிவு செய்து கொள்ளுமாறும் கோருகிறோம். திட்டமிட்டவாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்களை நடாத்தி முடிப்பதற்கான முழுமையான ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் வழங்குமாறு அனைத்துத் தமிழர் அமைப்புக்களையும் தமிழ் பேசும் மக்களையும் உரிமையுடன் வேண்டிக்கொள்கிறோம்.

இன்று பரிதாபகரமான நிலையில்;அநாதைகளாய் ஈழதமிழினம்?

பிரதிநிதித்துவத்தைச் சிதறடிக்கும் சதி முயற்சிக்கு தமிழர் பலியாகக் கூடாது "பயனற்றுப் போன அணுகுமுறைகளை மீண்டும் நியாயப்படுத்தும் சக்திகளின் கபடநோக்கத்தை புரிந்துகொள்ளவது அவசியம் தமிழ் மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைச் சிதைத்துச் சீர்குலைத்து எதிர்காலத்தில் தங்களது எந்தவொரு அரசியல் கோரிக்கைக்காகவும் வலுவான முறையில் குரல் கொடுக்க முடியாதவர்களாக அவர்களை வைத்திருப்பதற்கான ஒரு சதி முயற்சிக்கு துணைபோவதற்காகவே வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொதுத் தேர்தலில் பெருவாரியான அரசியல் குழுக்களும் சுயேச்சைக் குழுக்களும் களமிறக்கப்பட்டிருக்கின்றன என்பதை அந்த மக்கள் தற்போது புரிந்து கொள்ள ஆரம்பித்திருப்பதாக அரசியல் அவதானிகள் அபிப்பிராயம் தெரிவித்திருக்கிறார்கள். அடுத்த பாராளுமன்றத்தில் தமிழ் மக்கள் கொண்டிருக்கக்கூடிய பிரதிநிதித்துவத்தின் கனதியையும் கட்டுக்கோப்பையும் பொறுத்தே அவர்களின் எதிர்கால அரசியல் பாதை அமையும் என்பதில் சந்தேகமில்லை. போரின் முடிவுக்குப் பிறகு அரசியல் வெற்றிடத்தில் விடப்பட்டிருக்கின்ற தமிழ் மக்கள் தங்கள் மத்தியில் கட்டுறுதியான அரசியல் சமுதாயமொன்றை உருவாக்குவதற்கான வாய்ப்பாக பாராளுமன்றத் தேர்தலை நிதானத்துடனும் விவேகத்துடனும் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. இலங்கைத் தமிழ் மக்கள் அவர்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளுக்காக உறுதிப்பாட்டுடன் குரல் கொடுக்கக் கூடிய அரசியல் தலைமைத்துவம் அற்றவர்களாக இருக்கின்ற நிலை தொடரவேண்டுமென்பதே பேரினவாத சக்திகளின் விருப்பமாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இந்த நோக்கத்திற்காக அச்சக்திகள் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளையும் விலைபோகக்கூடிய கல்விமான்கள், புத்திஜீவிகள் எனப்படுவோரையும் பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றன என்பதை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் விசமத்தனமான பிரசாரங்களின் மூலம் தெளிவாக உணரக்கூடியதாக இருப்பதாகவும் அவதானிகள் கூறியிருக்கிறார்கள். தவறான கொள்கைகளும் தவறான தந்திரோபாயங்களுமே தமிழ் மக்களை இன்று அரசியல் அநாதைகளாக்கியிருக்கின்றன என்பதை அகவுணர்வுகளுக்கு அப்பால் புரிந்துகொண்டு வரலாற்றில் இருந்து படிப்பினைகளைப் பெற்றுக்கொண்டு சுயவிமர்சனங்களுக்குத் தங்களை உட்படுத்தத் தயாராயிருக்கக் கூடிய அரசியல் வாதிகளினாலேயே தமிழ் மக்களை இன்றைய அரசியல் வனாந்தரத்தில் இருந்து மீட்பதற்கு எதையாவது செய்யக்கூடியதாக இருக்கும். அந்த யதார்த்த நிலைக்கு முரணாக பழைய, பயனற்றுப் போன கடும் போக்கு கொள்கைகளை மீண்டும் தமிழ் மக்கள் மத்தியில் பிரசாரம் செய்ய சில அரசியல்வாதிகள் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைப் பற்றியும் கூட இன்று சில அரசியல்வாதிகள் குடாநாட்டு மக்கள் மத்தியில் பிரசாரம் செய்து வாக்குக் கேட்கின்ற அளவுக்கு வங்குரோத்து நிலையடைந்திருக்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த சில கட்சிகள் போரின் முடிவுக்குப் பிறகு ஆரோக்கியமான முறையில் தங்களுக்குள் சுயவிமர்சனங்களைச் செய்யாமல் தான்தோன்றித்தனமான நிலைப்பாடுகளை எடுத்துக் கொண்டு கதிரில் இருந்து உதிரும் நெல்மணிகள் போன்று சிதறி நின்று கொண்டு தமிழ் மக்களை மீண்டும் தவறாக வழிநடத்துவதற்கு முயற்சிசெய்து கொண்டிருக்கின்றன. சமகால உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் சூழ்நிலைக்கு இசைவான முறையில் நடைமுறைச்சாத்தியமான கொள்கைகளையும் அணுகுமுறையையும் கடைப்பிடிக்காமல் தமிழ் மக்களுக்கு மீண்டும் கண்ணாடியில் நிலவைக் காட்டுவதற்கு முயற்சிக்கும் சிறுபிள்ளைத்தனமான அரசியல்வாதிகள் குறித்து விழிப்பாக இருக்க வேண்டுமென்று அரசியல் அவதானிகள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். தமிழ் மக்கள் அவர்களது உரிமைப் போராட்டங்களின் வரலாற்றில் இன்றுள்ளதைப்போன்று முன்னென்றுமே பரிதாபகரமான நிலையில் இருந்ததில்லை. அத்தகையதொரு சூழ்நிலையில் பல்வேறு அரசியல் குழுக்களாகவும் சுயேச்சைக் குழுக்களாகவும் தேர்தல் களத்தில் குதித்திருப்பவர்கள் உண்மையில் தமிழ் மக்களுக்கு துரோகமே செய்கிறார்கள். பல சுயேச்சைக் குழுக்களுக்கு பணம் எங்கிருந்து கிடைக்கிறது என்பது மக்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டிய இன்னொரு விடயமாகும். பம்பலுக்கு போட்டி கல்விமான்கள் என்றும் எழுத்தாளர்கள் என்றும் புத்திஜீவிகள் என்றும் தங்களைக் கூறிக்கொள்ளும் சிலரும் யாழ்ப்பாண மாவட்டத்தில் சுயேச்சைக் குழுவாகத் தேர்தல் களத்தில் குதித்திருக்கிறார்கள். இக்குழுவின் வேட்பாளர்களில் ஒருவர் தேர்தல் நியமனப் பத்திரம் தாக்கல் இறுதித் தினத்தன்று யாழ்ப்பாணக் கச்சேரியில் இடதுசாரி அரசியல் பிரமுகர் ஒருவருடன் கலந்துரையாடுகையில்; "நாங்கள் தேர்தலில் போட்டியிடுவது ஒரு பம்பலுக்கு என்று கூறினாராம். மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போரின் விளைவான அவலங்களில் இருந்து மீளமுடியாமல் தமிழ் மக்கள் அல்லாடிக் கொண்டு இருக்கும் போது படித்தவர்கள் என்ற தங்களைக் காட்டிக்கொள்வோர் "பம்பலுக்கு தேர்தலில் நிற்கிறார்கள் என்றால் இவர்களின் படிப்பில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா என்று கேட்கவேண்டியிருக்கிறது. பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைச் சீர்குலைத்து தங்களை நிரந்தரமாகவே அரசியல் அனாதைகளாக்குவதற்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் சதிமுயற்சிகளுக்கு பலியாகாமல் தமிழ் மக்கள் தங்களது தேர்தலில் விவேகத்துடன் செயற்படவேண்டுமென்பதே அவர்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளில் பற்றுறுதி கொண்டவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. சிறுபிள்ளைத் தனமான அரசியல் சாகசங்களுக்கு இடங்கொடாமல் தமிழ் மக்கள் தங்களுக்கு எதிர்கால அரசியல் பாதையை உருப்படியாக வகுத்துத்தரக்கூடிய அனுபவமுடையவர்களைக் கொண்ட அணியையே பாராளுமன்றத்துக்கு அனுப்பவேண்டும். வடக்கு,கிழக்கில் இருந்து வலுவான அரசியல் அணியொன்று பொதுத்தேர்தலில் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படாதிருப்பதை உறுதிசெய்யும் நோக்கிலான சதிமுயற்சிகளை முறியடிக்க தமிழ் மக்கள் திடசங்கற்பம் பூணவேண்டும் என்பதே இவர்களின் வேண்டுகோளாகும்.

உறவுகளே உங்கள் மௌனம் எதுவரைக்கும்?

இலங்கைப்பாராளுமன்ற தேர்தல் என்றுமில்லாதவாறு வடகிழக்கு பகுதிகளில் சிறீலங்கா பேரினவாத அரசு தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை சிதைப்பதில் மிகவும் வெற்றிகரமாகவும் ,பேரினவாத சிந்தனையுடனும் செயற்பட்டுவருவதை தெளிவாக காணமுடிகின்றது. இதுவரைகாலமும் யாழ் தேர்தல் தொகுதியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கும் சிறீலங்கா அரசிற்கு ஒத்தூதும் ஒருசில கட்சிகளுமே போட்டியிட்டு வந்தன ஆனால் இம்முறை தமிழ் தேசியத்திற்கு எதிராக போட்டியிடக்கூடிய வலு அக்கட்சிகளுக்கு இல்லாதமையாலும் அவர்களின் செல்வாக்கு குறைவடைந்து செல்வதாலும் யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் பல்வேறுபட்ட பெயர்களில் ஓரளவு செல்வாக்குடைய பிரமுகர்களை பணத்துக்காக பேரம் பேசி சுயேட்சைக்குழுக்களாக களமிறக்கியுள்ளார் மகிந்த இந்த செயற்பாட்டில் எம்மவர்கள் விலைபோனதால் மகிந்த ஓரளவு வெற்றி கண்டுள்ளார் என்பது உண்மையே ஆனால் அதற்கான இறுதி வெற்றி கிடைக்கவேண்டுமானால் அது தமிழர்களின் கைகளிலேயே உள்ளது அதை நினைத்து ஓரளவு ஆறுதல்படலாம் ஏனென்றால் இவர்களுக்கெல்லாம் புள்ளிபோடுவது ஒவ்வொரு தமிழர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கெதிராக கூட்டமைப்பின் உறுப்பினர்களே போட்டியிடுகின்றனர் இவர்கள் மும்முனைகளில் தேர்தலை முகம்கொடுப்பதால் தமிழ் மக்களின் பார்வை எப்படி இருக்கின்றது என்பதே எம்முன்னேயுள்ள கேள்வி. ஆயுதப்போராட்டம் 2000ஆம் ஆண்டிற்கு பின்னர் ஆயுதரீதியில் பெரு வெற்றி கண்டபோதே அதற்கீடாக களத்திலும் புலத்திலும் தமிழர்களின் அரசியல் வலு தேவைப்பட்டபோதே தமிழீழ விடுதலைப்புலிகளும் தமிழ் முற்போக்காளர்களும் இணைந்து அனைத்து தமிழ் கட்சிகளுடன் தனித்தனியாகவும் ஒன்றாகவும் அழைத்து பேசி ஒருமுடிவெடுக்கப்பட்டே தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெருவிருட்சம் ஸ்தாபிக்கப்பட்டது. பின்னர் சிறந்த வழிகாட்டுதலும் ஆலோசனையும் கிடைத்தமையால் அவை ஓர் சீரான பாதையிலும் ஒரே தலமைத்துவத்தின் கீழும் செயற்பட்டு வந்தனர் ஆனால் தற்போது அக்கூட்டமைப்பை சிதறடிக்கும் வகையில் சிலர் செயற்படுவதும் செயற்பட தூண்டுவதும் புலம்பெயர் உறவுகள் சிலர் பணம் அனுப்பி சிலரை தூண்டுவதும் தொடர்தவண்ணமேயுள்ளது என்பதை நினைத்து ஒவொரு தமிழர்களும்; உள்மனதினுள் கவலையடைந்த வண்ணமேயுள்ளனர். கூட்டமைப்பு ஆரம்பமானபோது எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக 23 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களில் 22 பேரை தமிழ் மக்கள் தேர்வு செய்து சிறிலங்காவிற்கும் சர்வதேசத்திற்கும் எமது முடிவை ஒருமித்த குரலில் எடுத்தியம்பினர். பின்னர் அவர்கள்கூட விடுதலைப்புலிகளின் நிகழ்ச்சி நிரலில் இயங்குவதாக சிறிலங்காவால் சொல்லப்பட்டு வந்தது. தற்போது ஆயுதபு;போராட்டம் ஓர் முடிவுக்கு வந்தடைந்து விட்டதாகவும் இனி யார் தேர்தலில் வெற்றிபெறுகின்றார்களோ அவர்களுடன்தான் தமிழர்களின் தீர்வுபற்றி பேசுவேன் என்றும் சனாதிபதி கூறுகின்றார் அதாவது நாம் போரில் வென்றுவிட்டோம் நீங்கள் தேர்தலில் வென்றுவாருங்கள் என ஆணையிடுகின்றார்;. ஆதற்காகவே தமிழ்மக்களின் பிரதிநிதிகள் யாரும் அதிகப்படியான ஆசனங்களை பெற்று உரிமைகளை பேசக்கூடியவாறு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே ஏராளமான கட்சிகளையும்,சுயேட்சை குழுக்களையும் களமிறக்கியுள்ளார். இதன் காரணமாக தமிழ் வாக்காளர்களின் வாக்குகள் சிதறடிக்கப்படுவதன் காரணமாக தமிழ் தேசியம் கடந்தமுறை பெற்ற மேதலதிக(போனஸ் ) ஆசனங்களையும் இழக்கும் வாய்பேற்பட்டுள்ளது. அத்துடன் சுயேட்சைக்குழுக்களாக யாழ்பாணத்தின் ஒருசில கல்வியாளர்களும் உதாரணமாக கலாநிதி குணராசா,ஓய்வுபெற்ற கல்விப்பணிப்பாளர்ஈமுன்னாள் அதிபர் போன்றவர்களும் பணத்திற்காக விலைபோயுள்ளனர். கடந்த தேர்தலில் ஆயுதக்குழுக்களின் பத்துக்கு மேற்பட்ட குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு மக்களை வாக்களிக்க செல்லாது அச்சுறுத்தியபோதிலும் தமிழ் மக்கள் துணிந்து சென்று வாக்களித்ததுடன் எவருடைய வழிகாட்டுதலுமின்றியே கடந்த சனாதிபதி தேர்தலின் தமிழ் மக்கள் கூட்டமைப்பின் முடிவை ஏகோபித்த குரலில் எடுத்தியம்பினர். இம்முறை வேட்பாளர் தெரிவு இடம்பெற்றபோது சில விட்டுக்கொடுப்புக்கள் இடம்பெறாமையினால் சிலர் தனித்து இயங்குவதாக முடிவெடுத்து செயற்பட ஆரம்பித்துள்ளனர். தனித்து செயற்படுவது குற்றமல்ல எங்கே தவறு இடம்பெற்றது என ஆராய்வது எமது நோக்கமில்லாவிட்டாலும் “தமிழீழக்கோரிக்கை கைவிடப்பட்டது, இந்தியாவிற்கு விலையோயுள்ளார்கள் என்பதே இவர்களின் பிரதான வாதமாகும். அவ்வாறாயின் இவர்களின் பிரிந்து செல்வதற்கான முடிவு எப்போது எடுக்கப்பட்டது என்பதே இங்கு ஆழமாக ஆராயப்பட வேண்டியது அதாவது கஜேந்திரன்,பத்மினி சிதம்பரநாதன் இருவருக்குமான வேட்பாளர் தெரிவில் இடம் கிடைக்காமையினாலேயே இவர்கள் இம்முடிவுக்கு வரக்காரணம் என்பது வெளிப்படை அவ்வாறாயின் இவர்களுடைய தமிழீழம், தேசியம் என்பது அவர்களுக்கு ஆசனம் வழங்குவதிலா தங்கியுள்ளது என்பதுடன் இருவரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தால் இவர்களும் கூட்டமைப்பின் கொள்கைக்காக தம்மை அர்ப்பணித்திருப்பார்களே அவ்வாறாயின் இவர்களின் கொள்கை என்ன இரண்டு ஆசனங்களிலா தங்கியுள்ளது.” இதற்காக கூட்டமைப்பு செய்வதெல்லாம் சரியென்றோ எல்லோருமாக ஏற்றுகொண்டதென்றோ சொல்லவரவில்லை இருப்பினும் தற்போதைய கள யதார்த்தத்தில் தெரிவிற்கு முக்கியத்துவமளிக்காமல் எல்லோருமாக கூட்டமைப்பினை பலப்படுத்துவதைவிட சிறந்த மார்க்கம் தமிழர்களுக்கு எதுவுமில்லையென்பதே உண்மை. இவ்வாறு பிரிந்து செயற்பட்டு ஒருவீட்டு பிள்ளைகளே வீதியிலிறங்கி மகன் தந்தையைபற்றியோ தனையன் மகனைபற்றியோ குறைகூறி பக்கத்துக்குபக்கம் அறிக்கை வெளியிடுவதோ அரசிற்கும் அதன் அடிவருடிகளுக்கும் நாமே களமமைத்து கொடுத்தாகிவிடும். தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமிழீழக்கோரிக்கையை கைவிட்டுவிட்டதாக கூறுகின்றீர்களே விடுதலைப்புலிகள் 6 கட்ட பேச்சுக்கு சென்றது தமிழீழத்தை தட்டத்தில் வைத்து அவர்கள் தருவார்கள் என்ற எண்ணத்திலா? அல்லது தமிழீழக்கோரிக்கையை கைவிட்டுவிட்டா? அப்போது எவருமே வாய்திறக்கவில்லையே! களச்சூழலுக்கேற்ப தலைவரின் சிந்தனைக்கேற்ப “போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் இலட்சியம் மாறப்போவதில்லை” அதனடிப்படையில் படிப்படியாகவே எமது நகர்வுகளை செய்யவேண்டிய தேவை உள்ளதை புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் தெளிவாகவே இருக்கின்றார்கள் அவர்களை குழப்பிவிடாதீர்கள் என்பதே எமது கருத்தாகும். அதாவது பல்கலைக்கழகத்திலுள்ள ஒருசிலரை நீதி நியாயத்திற்கான மாணவர் அமைப்பென்றோ அல்லது கருணாகரன்களால் வெளியிடப்படும் விழிப்பு பத்திரிகையாலோ மக்களை திசைதிருப்பலாம் என கஜேந்திரன் எண்ணுவாராயின் அது அவரின் சிறுபிள்ளைத்தனத்தையே காட்டுகின்றது. அதாவது இவர்கள் சட்டம்படித்துகொண்டிருப்பவர்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் நீங்கள் ஒரு உருவாக்கத்திற்கான ஆரம்பம் மட்டுமே உங்களைவிட 50ஆண்டுகளுக்குமுன்னரே அவர்கள் சட்டத்துறையையே பிரதானமாக கற்று மும்மொழியிலுமே சிறப்படைந்து உரிமைக்காக குரல்கொடுத்து இதுவரையும் எதிரிக்கு விலைபோகமல் இருக்கின்றார்கள் அவர்களுடன் பார்த்தால் நீங்கள் பேரப்பிள்ளைகள் இப்படி செய்யலாமா? கடந்த சனாதிபதித் தேர்தலில் யாழ்குடாநாட்டிலே எல்லா தொகுதியிலுமே 19-20 வீதமானோர் ஆளும் ஐக்கிய முன்னணிக்கு வாக்களித்துள்ளார்கள் அதாவது 10பேரில் இரண்டு பேர் அவர்களுக்கு வாக்களித்துள்ளார்கள் அந்த இரண்டு பேரும் அவர்களின் கொள்கைக்காக வாக்களிக்கவில்லை அவர்களிடம் உதவிபெற்றவர்கள் கைமாறாக செய்து கொள்ளப்பட்ட உறுதிமொழிக்கமைவாகவே வாக்களித்ததுள்ளனர் எனவே நாம் நமக்குள் முரண்பட்டுக்கொண்டால் எதிரிக்கும் அவனோடியங்கும் ஆயுதக்குழுக்களுக்கும் அது வாய்ப்பாக போய்விடும் என்பதை கவனிக்கவேண்டும். அன்பான புலம்பெயர் உறவுகளே, தமிழர் அமைப்புகளே உங்கள் மௌனங்கள் எதுவரைக்கும் இறுதிமுடிவுகளை உரியவர்கள் உரிய காலத்தில் எடுப்பார்கள். அதற்கிடைப்பட்ட காலத்தில் நாமே இணைந்து எடுக்க வேண்டும். எமது வலிகள் வேதனைகள்,சுமைகள் எல்லாவற்றிலும் உங்கள் ஒவ்வொருவரின் அர்ப்பணிப்பும்,வியர்வையும்; உண்டென்பதை நாம் அறிவோம். ஆகவே நீங்கள் அவரும் வரட்டும்,இவரும் வரட்டும் என்ற நிலையை மாற்றி தற்போதைய காலத்திற்கு இங்குள்ள நிலமைக்கு எந்தமுடிவு எடுப்பது நல்லதென்பதை உங்கள் மௌனங்களை கலைத்து விரைவாக வெளிப்படுத்துமாறு உரிமையோடு கேட்டுநிற்கின்றோம்

நாங்கள் யார் பக்கம் ?

நாங்கள் யார் பக்கம் சாயவேண்டும் என்பதை மட்டுமே தற்போது இந்தியா தீர்மானிக்கலாம்!. தமிழீழ நிலத்தில் மற்றுமொரு போர் வேகம் பெற்று வருகின்றது. முன்பெல்லாம் தமிழீழ மக்களையும், மண்ணையும் மீட்க விடுதலைப் புலிகள் எதிரியின் படையணிகளுடன் யுத்தம் புரிந்தார்கள். அதில் வீரம் இருந்தது, தியாகம் இருந்தது, ஒரே இலக்கு என்ற உயர்ந்த இலட்சியம் இருந்தது. அதற்காகத் தமது உயிரையும் ஈகம் செய்யும் தற் துணிவும் இருந்தது. முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளும், ஈழத் தமிழினமும் அடித்து நொருக்கப்பட்டு, அழித்து முடிக்கப்பட்டு, முள்வேலி முகாம்களுக்குள் முடக்கப்பட்டு, வாய் திறக்க முடியாத மவுனிகளாக்கப்பட்ட பின்னர் உருவான இரண்டாவது களத்தில் இத்தப் போர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் போர்க் களத்தில் விடுதலைப் புலிகளின் படையணிகள் இல்லை. எதிரிகள் மேலான தாக்குதல்களும் இல்லை. விடுதலைப் புலிகளால் நெறிப்படுத்தப்பட்டவர்கள், வழிப்படுத்தப்பட்டவர்கள் பிளவு படுத்தப்பட்டு வௌ;வேறு படையணிகளாக மாறிக் களம் இறங்கியுள்ளார்கள். அவர்களுக்கு எதிரிகள் குறித்து அலட்டிக் கொள்ளவில்லை. உயிர், உடமைகள், மானம், கவுரவம், எதிர்கால நம்பிக்கை என மனிதத்தின் அத்தனை கூறுகளும் நொருக்கப்பட்டு வாழ்விழந்து நிர்க்கதியாக நிற்கும் ஈழத் தமிழினத்தின் எஞ்சிய மாந்தர் குறித்தும் அக்கறை கொள்ளவில்லை. அடுத்த தலைமுறையையாவது நிம்மதியாக வாழ வைக்கவேண்டும் என்ற சின்ன ஆசை கூடக் கிடையாது. இந்தப் போர்க்களத்தில் வெல்லவேண்டும். சிங்கள நாடாளுமன்றத்திற்குச் சென்று மகிந்த வழங்கும் சிம்மாசனத்தில் அமர வேண்டும். அது மட்டுமே அவர்களது இந்தப் போரின் குறிக்கோள். ஒரு வேளை, ஒட்டு மொத்தத் தமிழர்களும் ஒரே மனதாக வாக்களித்துவிட்டால், முன்னொரு காலத்தில் தமிழீழப் பிரகடனத்தோடு சிங்கள நாடாளுமன்றத்திற்குச் சென்ற தமிழர் விடுதலைக் கூட்டணியினர் அ. அமிர்தலிங்கம் அவர்களை எதிர்க்கட்சித் தலைவராக்கியது போன்ற அவர்களுக்கு மட்டுமேயான ஒரு வசந்த காலம் மீண்டும் கனிந்தால் இரா. சம்பந்தன் அவர்களுக்கு முடி சூட்டி எதிர்க்கட்சித் தலைவராக்கி அழகு பார்க்கும் வெளியே சொல்ல முடியாத ஆசையும் நிச்சயம் அதன் தொடர்ச்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு இருக்காது என்று நம்ப முடியாது. ஏனென்றால், இந்தப் போர்க் களத்தை உருவாக்கியதில் பெரும் பொறுப்பும், அதில் வென்றே தீரவேண்டும் என்ற பெரும் ஆசையும் அவர்களுக்கு இருப்பது ஒன்றும் இரகசியமானது அல்ல. முள்ளிவாய்க்கால் பேரழிவில் அவர்கள் இழந்தது என்று சொல்லும்படியாக எவையும் இல்லை. தவறுதலாகக் களத்தில் தங்க வேண்டிய சூழ்நிலையால் மகிந்த படையினரால் பிடிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினமும் மகிந்தவுடன் உயிர்ப் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டு, அவருடன் சங்கமமாகிவிட்டார். அவருடன் சில உதிரி வக்கிரகங்களும் களன்று ஒட்டிக்கொண்டன. மகிந்த சகோதரர்களால் தமிழ்த் தேசியக் கூட்டணியில் தீவிர தமிழ்த் தேசியவாதிகளாக அடையாளம் காணப்பட்ட ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ் ஆகியோர் ஏற்கனவே சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்கள். இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினரான சிவனேசன் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டார். இதனால், முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்போதும் எழுந்து நின்று துள்ளிக் குதிக்காமல் அடக்கியே வாசித்தார்கள். அதன் பின்னரும், முள்வேலி முகாம்களுக்குள் எமது மக்கள் முடக்கப்பட்டு, சித்திரவதைகளுக்குள்ளான போதும், அங்கே சென்று அவர்களைப் பார்க்க மகிந்த அனுமதி வழங்காமல் மறுத்த போதும் அடக்கமாக அமைதி காத்தனர். அத்தனையும் முடிந்து, அவலத்தையே வாழ்வாக ஏற்றுக்கொண்ட மக்களிடம் அரசியல் செய்து பிழைப்பு நடாத்தும்படி மகிந்த அவிழ்த்து விட்டதும், மன்னார் வரை சென்று, மகிழ்ந்து கோத்தபாயாவுக்கு வாழ்த்துத் தெரிவித்ததைத் தவிர, கூட்டமைப்பு எதைக் கிழித்தது என்று வாள் சுழற்றுகிறது என்று புரியவில்லை. மகிந்த சகோதரர்களின் படுகொலைப் பசிக்கு இரையாகாமல், தப்பிப் பிழைத்த நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரன், பத்மினி ஆகியோரும் தம்முடன் நாடாளுமன்றம் வந்துவிட்டால், தாமும் பேரம் பேசும் தகுதியை இழந்து விடுவோம் என்று அவர்களைக் கழற்றி விட்டதால், இன்னொரு தமிழ்த் தேசிய உணாளரான கஜேந்திரகுமாரும் வெளியேறி விட்டார். அதனால், இப்போதெல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மும் மூர்த்திகளும் வாளை வேகமாகச் சுற்ற வேண்டிய கட்டாய தற்காப்புப் போரை நடாத்தி வருவது நன்றாகவே தெரிகின்றது. சுதந்திர சிறிலங்காவின் ஆட்சிக்குள் அரசியல் செய்ய தமிழ்த் தலைமைகள் அங்கிருந்து தமிழீழ மக்களுக்குப் பெற்றுக் கொடுத்ததைப் பட்டியலிட்டால், இவர்கள் எதற்காக அங்கு செல்ல வேண்டும்? என்ற கேள்வியே எஞ்சுகின்றது. நில ஆக்கிரமிப்பைத் தடுக்க முடியவில்லை. சிங்களக் குடியேற்றங்களைத் தவிர்க்க முடியவில்லை. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் தடுத்து வைக்கப்பட்ட எண்ணற்ற இளைஞர்களை விடுவிக்க முடியவில்லை. தமிழர்கள் மீதான படுகொலைகள், கடத்தல்கள், கற்பழிப்புக்கள், கப்பம் பெறுதல் என்று அத்தனையும் இன்று வரை பெருகி வந்துள்ளதே தவிர, அவற்றைக் குறைத்துவிடக் கூட இந்தத் தலைமைகளால் முடியவில்லையே. அறுபது ஆண்டுகளாக நடந்து, இன்றுவரை தொடர்ந்தே செல்லும் இந்த தமிழின அழிப்பை இப்போதும் இவர்கள் கைகாட்டும் இந்திய தேசம் எப்போது தடுத்து நிறுத்த முயற்சித்தது? தந்தை செல்வா அவர்கள் தமிழ்த் தேசியத்தை வட்டுக்கோட்டைத் தீர்மானம் வரை நகர்த்தி வந்தார். அதன் தொடர்ச்சியாக, தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் வீரம் செறிந்த போராட்ட வடிவத்தினூடாக முள்ளிவாய்க்கால் வரை நகர்த்தி வந்துள்ளார். அந்தப் பேரழிவை முன்னரே கணிப்பிட்டிருந்த தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் அந்தத் தமிழ்த் தேசியத்தை மீட்பதற்கான போராடும் கடமையை புலம்பெயர் தமிழர்களிடமும், இளையோரிடமும் கையளித்திருந்தார். அவரது விருப்பப்படியும், சிந்தனைப்படியும் புலம்பெயர் தமிழர்கள் தங்களுக்கான கடமைகளைத் தோளில் சுமந்துள்ளார்கள். அவர்களது போர்க் களம் மேற்குலகின் அரசியலில் பல அதிசயிக்கத் தக்க மாற்றங்களை உருவாக்கி வருகின்றனர். அந்த மாற்றங்களினூடாக சிங்கள தேசத்திற்குக் கிலியூட்ட ஆரம்பித்துள்ளார்கள். அதனால், சிங்கள தேசத்திற்கும், அங்கு நிலை கொள்வதை மட்டுமே குறியாகக் கொண்ட இந்திய தேசத்திற்கோ தற்போதைய துருப்புச் சீட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே. ஒட்டுக்குழுவாக மக்கள் மத்தியில் எடுபடாத டக்ளசை மட்டும் நம்பி இனிமேலும் மேற்குலகுக்கு எதிரான பனிப் போரை நடாத்த முடியாது என்பது மகிந்தவிற்கு நன்றாகவே தெரியும். இதனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற துருப்புச் சீட்டு மூலமாக இந்தியாவுடன் இணைந்து மேற்குலகின் நகர்வுகளுக்கு அணை போட முயற்சி செய்கின்றார். இத்தனை அழைவுகளுக்கும், இத்தனை அவலங்களுக்கும் பின்னர் அசைந்து கொடுக்காத தன்மீதான அவ நம்பிக்கையைப் போக்க ஐ.நா. செயலாளர் பான் கி மூன் அவர்கள் அறிவித்திருந்த இறுதி யுத்த காலத்தில் இலங்கையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகத் தனக்கு ஆலோசனை வழங்க ஒரு நிபுணர்கள் குழுவை அமைக்கும் தீர்மானத்தை எதிர்த்து இந்தியா கடந்த வாரத்திலும் ஈழத் தமிழர்களுக்கான முடிவுறாத தனது துரோகத்தை நீட்டியுள்ளது. அத்தனை துரோகங்களுக்கும் தலையாட்டி நிட்சயமாகத் தன்னுடன் வரக்கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெல்ல வைக்க வேண்டிய கடமை இந்தியாவுக்குள் உள்ளது இயல்பானதே. புலம்பெயர் தமிழீழ அமைப்புக்களுடன் நெருக்கமான தொடர்பைப் பேண முடியாததற்கும், புலம்பெயர் தமிழீழ மக்களிடம் இன்று வரை நெருங்கிச் செல்ல முடியாததற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இருக்கும் தடைகள் இந்தத் திசைகளிலிருந்தே வருவதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தக் கால்க் கட்டுகளை மகிழ்வோடு ஏற்றுக் கொண்டவர்கள் தமிழ்த் தேசியத்திற்கான ஓட்டப் பந்தயத்தில் வெல்வது சாத்தியமே இல்லை. ஒரு சில புலிகளாவது சிங்களச் சிங்கங்களை எதிர்த்து நின்று கர்ச்சிக்க வேண்டிய நேரத்தில், எத்தனை பன்றிகள் கூட்டமாகப் போனாலும் என்ன கிடைத்துவிடப் போகின்றது. முள்ளிவாய்க்கால் போரை நிறுத்தும்படி புலம்பெயயர் தேசங்கள் எங்கும் கெஞ்சிக் கேட்டோம். அழுது புலம்பினோம். ஆவேசமாக வீதி மறியல் போராட்டங்கள் நடாத்தினோம். இன்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பிரதமர் கோர்டன் பிரவுண் அவர்களுடனும், வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் அவர்களுடனும் ஈழத் தமிழர்களுக்காகப் பேசும் பலத்தைப் பெற்றிருக்கின்றோம். ஐ.நா. மன்றத்தை அசைத்து வருகின்றோம். மேற்குலகின் ஊடகங்களின் கண்களைத் திறந்துள்ளோம். தற்காலிகமாகவாவது ஜி.எஸ்.பி. ப்ளஸ் வரிச் சலுகை சிங்கள தேசத்திற்கக் கிடைக்காமல் தடுத்துள்ளோம். சிங்களத்தின் மீதான ஒரு பொருளாதார யுத்த களத்தைத் திறந்துள்ளோம் என்று கடந்த வருடத்தில் கையேற்ற தமிழ்த் தேசிய விடுதலைப் போரின் வெற்றியைப் பட்டியலிட புலம் பெயர் தமிழர்களால் பட்டியலிட முடிகின்றது. ஈழத் தமிழாகளுக்கான புலம்பெயர் தமிழர்களின் பலத்தை சிங்கள தேசத்தைப் போல… இந்திய ஆட்சியாளாகளைப் போல… தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றுவரை நிராகரித்தது ஏன்? அவர்களுடன் களத்தில் இறங்கி நடந்து வந்த கஜேந்திரன், பத்மினி ஆகியோரை தேர்தல் களத்திலிருந்து அகற்றியது ஏன்? கஜேந்திரகுமார் அவர்கள் ‘காங்கிரஸ் கட்சிக்காகத் தருவதாகக் கூறும் இரண்டு இடங்களையும் அவர்களுக்கே வழங்குங்கள். அவர்கள் கட்டாயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக நாடாளுமன்றம் வரவேண்டும்’ என்று முன்வைத்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டது எதனால்? ஆம், நீங்கள் சோரம் போய்விட்டீர்கள். விடுதலைப் புலிகளால் மானம் மறைக்கப்பட்ட நீங்கள் தற்போது அம்மணமாகிப் போனதால், பிறக்கும்போதே கவச குண்டலங்களுடன் பிறந்த கர்ணர்கள் உங்கள் கண்களுக்கு அசிங்கமாகத் தெரிகிறார்கள். ‘அவர்கள் வரவேண்டும்… உங்களுடன் அவர்களும் வரவேண்டும்… அப்போதுதான் உங்களுக்கும் உங்கள் மானம் மறைக்கப்பட வேண்டும் என்ற துணிவு பிறக்கும்.’ இந்தியா என்ற தேசத்தில் பல மகான்களும், மகாத்மாக்களும் உருவாகியபோதும் அங்கு நல்ல தலைவர்கள் உருவாகாமல் போனதில், அல்லது அங்கு உருவாகிய மாமனிதர்கள் தங்களது கொள்கைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லக்கூடிய நல்ல வாரிசுகளையும் உருவாக்கிச் செல்லவில்லை. புத்தர் பிறந்த மண்ணில் புத்தம் நிலைக்கவில்லை. காந்தி வாழ்ந்த மண்ணில் காந்தியம் வாழவில்லை. தமிழகத்தில் மக்கள் எழுச்சி மூலம் பெரும் அரசியல் புரட்சியை நிகழ்த்தி முடித்த அறிஞர் அண்ணா அவர்களால் கருணாநிதியைத்தான் உருவாக்க முடிந்தது. இடையே தமிழ் மக்களுக்கு அள்ளி வழங்கிய வள்ளல் எம்.ஜி.ஆர். அவர்கள் புரட்சித் தலைவராக உருவெடுத்துத் தமிழகத்தை வழிநடாத்தினாலும், அவரது ஆயுளும் அதுவரை நிலைக்கவில்லை. அதுவே ஈழத் தமிழர்களின் கண்ணீருக்கும், அவலங்களுக்கும் கூடக் காரணமாக அமைந்து விட்டது. இந்தியத் துரோகங்கள் இத்துடன் முடிவுக்கு வரட்டும்! இல்லையேல், மேற்குலகின் மனிதாபிமானத்தை வென்று ஈழத்தை வெல்வோம்! அதுவும் முடியவில்லையானால், சிங்கள எதிரிகளுடன் சமாதானம் பேசுவோம்! அது கைகூடுமானால், சீனாவை அழைத்து வந்தாலும் தப்பேதும் கிடையாது. இந்தியாவின் கையாலாகாத் தனத்தால் ‘தீபெத்’ மக்கள் ஐம்பத வருடங்கள் கழிந்தும் அஞ்ஞானவாசம் புரிவதைப் பார்த்து நாமும் கற்றுக் கொள்வோம். ‘துரோகிகள் எதிரிகளை விடவும் ஆபத்தானவர்கள்’ இது எங்கள் சூரியத் தேவனின் வாக்கு. இந்தியா எங்களின் நண்பனா? எதிரியா? துரோகியா? என்று தீர்மானிக்கப் போகின்றவர்கள் ஈழத் தமிழர்களே! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கப் போகின்றவர்களும் அவர்களே! நாங்கள் யார் பக்கம் சாயவேண்டும் என்பதை மட்டுமே தற்போது இந்தியா தீர்மானிக்கலாம்!

புலம் பெயர் உறவுகளுக்கு ஓர் வேண்டுகோள்.................!

கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக ஈழ விடுதலைப்போராட்டம் ஆரம்பித்து மரபுவழிப்போராக மாற்றமடைந்து கட்டுக்கோப்பான விடுதலை அமைப்பாக இருந்து, கடந்த வருடம் ஈழ விடுதலைக்கான மரபு வழிப்போர் தோழ்வியில் முடிவடைந்தது. காலம் காலமாக பாதிக்கப்பட்ட எம் மக்கள் ஆயிரமாயிரம் உயிர்களைக்கொடுத்து இன்றும் கேள்விக்குறியோடு வாழ்கிறார்கள். ஆனால் இன்று புலம் பெயர் நாடுகளில் தேச விசுவாசிகள் என்ற போர்வையில் பாதிக்கப்ட்டவர்களுக்கு உதவி செய்வதாக கூறி மக்களிடம் நிதி சேகரித்து அதை மோசடி செய்வது இனங்காணப்பட்டுள்ளது. யுத்தத்தின் இறுதி காலத்தில் மிக மோசமான மிகக்கொடூரமான கொலைகளிலும் பட்டினியிலும் இருந்து மீண்ட எம் மக்களின் பெயரால் நிதி மோசடி செய்வது மண்ணிக்கமுடியாத குற்றமாகும். ஈழ மக்களுக்காக எம் புலம் பெயர்வாழ் மக்கள் கொடுத்த, கொடுக்கும் நிதியினை பாதிக்கப்பட்ட மக்களின் பெயரால் விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறையினரோ அல்லது வேறு எந்தத்துறையினரோ எடுத்துக்கொள்வது மண்ணிக்கமுடியாது. எனவே பாதிக்கப்ட்டவர்களுக்கு உதவுவதாக கூறி நிதி சேகரித்து மோசடி செய்வோருக்கு அமைப்பின் அதி உச்ச தண்டனையை வழங்குவதென தீர்மாணித்துள்ளோம். ஈழ விடுதலைக்கனவோடு வீரமரணமடைந்த மாவீரர்களினதும் மக்களினதும் தியாகத்தில் ஏறி நின்று அவர்களின் பெயரால் தவறு செய்பவர்களை மண்ணிக்க முடியாது. நீங்கள் கொடுக்கும் நிதி, துரோகிகளுக்கோ எதிரிகளுக்கோ சென்றடையக்கூடாது. எனவே நீங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கும் நிதி சரியாகச் சென்றடைவதை உறுதிப்படுத்துங்கள்.

பொட்டு அம்மான் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார்?

இலங்கையில் நடந்த போரின் இறுதி நாட்களின்போது விடுதலைப் புலிகள் இயக்க உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மானும், அவரது மனைவியும், உடலில் வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டு விட்டனர். அவர்களது உடலின் ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை. எனவே தான் பொட்டு அம்மான் மரணம் குறித்து சான்றிதழ் கூட கொடுக்க முடியவில்லை என்று தகவல் ஒன்றை இலங்கை வெளியிட்டுள்ளது. ராணுவ ரீதியாக விடுதலைப் புலிகள் இயக்கம் ஒடுக்கப்பட்டு விட்டது. ஈழத்தில் போர் முடிந்து விட்டது, புலிகள் இயக்கத்தின் பல்வேறு தலைவர்கள் கொல்லப்பட்டு விட்டனர் என்பது வரை இலங்கை அரசு கூறி வரும் தகவல்கள் நம்பும்படியாக உள்ளது. அதேசமயம், பொட்டு அம்மான் உயிருடன் இல்லை என்பதை அது இதுவரை உறுதிப்படுத்த முடியாமல் இருந்து வருகிறது. முதலில் அவர் கொல்லப்பட்டு விட்டதாக கூறினார்கள். பின்னர் உடல் கிடைக்கவில்லை என்றனர். பிறகு உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று குழப்பினார்கள். இப்படியாக பொட்டு அம்மான் விஷயத்தில குழப்பமே நீடித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்றை இலங்கை வெளியிட்டுள்ளது. பொட்டு அம்மான் இறந்து விட்டார். அவரும், அவரது மனைவியும், போரின் இறுதி நாட்களின்போது உடலில் வெடிகுண்டுகளைக் கட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டனர். இதனால்தான் அவர்களது உடலை இதுவரை மீட்க முடியவில்லை என்று இலங்கை அரசு கூறியுள்ளது. ஆனால் இன்டர்போல் தொடர்ந்து பொட்டு அம்மானைத் தேடுவதாக தகவல்கள் கூறுகின்றன. இது இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

சாரா சிந்தர் யார்?

சி .என் .என் இன் வட ஆசியா செய்தி நிருபராக செயற்பட்டு வருகிறார் இந்த சாரா சிந்தர். சி .என் .என் இக்கு இலங்கையில் நடை பெறும் யுத்தம் பற்றி செய்திகளை வழங்கி வரும் இவர் தமிழ் மக்கள் படும் இன்னல்களை வெளிக்கொண்டுவருவது போல் விவரணங்களை வழங்கி வரும் இவர் அவருடைய ஒவொரு விவரனங்களிலும் விடுதலை புலிகளை மிக கொடிய பயங்கர வாத இயக்கமாக குறிப்பிட தவறுவதில்லை. வேறு எந்த வெளிநாட்டு செய்தி நிறுவனங்களை சுயேட்சையாக பாதிக்கபட்ட வன்னி மக்களை பேட்டி காண அனுமதிக்க மறுக்கும் இலங்கை அரசு சாரா சிண்டரை அனுமதித்தது ஏன்? தாங்கள் ஒரு சோதனை சாவடிகளிலும் நிறுத்த படவில்லை என்றும் தாங்கள் ஏ9 பாதை ஊடக தொடர்ந்து பயணத்தை மேற்கொண்டு யாழ்ப்பாணத்தை அடைத்தோம் என்று ஏன் குறிபிடுகிறார்? வெளிநாட்டு செய்தியாளர்களுடன் தனது போலீசாரை சிவில் உடையில்/ராணுவத்தை/புலனாய்வு பிரிவினரை அனுப்பும் இலங்கை அரசு சாரா சிண்டருடன் அனுப்பாதது ஏன்? வன்னியில் இருந்து இடம் பெயர்ந்த மக்கள் யாழ்பணத்தில் எங்கு தங்கியிருக்கிறார் என்று எப்படி இவருக்கு தெரியும் ? எந்த இடம் என்றும் குறிப்பிடவில்லை? மொழி பெயர்ப்பாளரை ஒளிபதிவில் காட்டப்படவில்லை? கடைசி யுத்தத்தில் மக்கள் சிறிலங்கா இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையில் அகப்பட்டு தான் இவ்வாறாக பொது மக்களுக்கு இழப்புகள் ஏற்பட்டது என்றும், சிங்கள ராணுவம் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என்ற தோரணையில் கூறுகிறார். தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பு யுத்தத்தினால் தான் என்றும் , சிங்கள இராணுவத்தால் தமிழ் மக்கள் கொல்லபடவில்லை என சுட்டிக் காட்ட விரும்புகிறார். தமிழ் மக்களுக்கு சார்பாக கதைப்பதுபோல் நாடகமாடிக் கொண்டு, தமிழர்களுக்காக போராடிய தமிழர்களின் தேசிய இராணுவத்தை உலகுக்கு பயங்கரவாதிகளாக சித்தரித்துக் கொண்டிருக்கும் இவர் யார்? உண்மையை எடுத்துரைப்பதே ஊடக தர்மம், சரி உண்மையை வேண்டாம் பக்கசார்ப்பில்லாமல் ஆவணங்கள் வெளியிட வேண்டும். இவர் அதையும் செய்யவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளால் மட்டும்தான் மக்களுக்கு இவ்வளவு அழிவென்று இலங்கை இனவாத அரசு போல தெரிவித்துக் கொண்டிருக்கும் இவர் யார்?? இலங்கை இனவாத அரசின் கைகூலியா?

செவ்வாய், 16 மார்ச், 2010

தமிழீழம் மீதான இந்தியாவின் இறுதித் தாக்குதல்!

இலங்கைத் தீவில் நடைபெறும் நம்பவங்களைத் தொகுத்துப் பார்த்தால், தமிழீழம் மீதான தனது இறுதித் தாக்குதலை இந்தியா ஆரம்பித்து விட்டதாகவே தெரிகின்றது. இதை மேலோட்டமாகப் பார்த்தால், கேலிக்குரியதாகத் தோன்றலாம். நம்ப முடியாததாகக் கருதலாம். ஆனாலும், கள யதார்த்தம் இதையே எடுத்துரைக்கின்றது. தமிழீழம் மீதான இறுதித் தாக்குதல் என்பதால், விமானங்கள் குண்டு வீசுகின்றன, பீரங்கிகள் குண்டுகளைப் பொழிகின்றன, கிளாஸ்ரர் குண்டுகள் வீழ்ந்து வெடிக்கின்றன, எரி குண்டுகள் வீழ்ந்து அனைத்தையும் பஸ்பமாக்குகின்றன என்ற முள்ளிவாய்க்கால் நினைவுகளோடு இதனைப் பார்க்க முற்படாதீர்கள். தற்போது, ஆயுதம் எடுத்துத்தான் தமிழர்களை அழிக்கவேண்டும், சிதைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இந்தியாவுக்கும் கிடையாது. ஆயுதம் எதுவும் இல்லாமலே ஈழத் தமிழர்களை அழிப்பதற்கும், புதைப்பதற்கும் அரசியல் என்ற பேராயுதம் உள்ளதே... அதை வைத்து நடாத்தும் இறுதி யுத்தம். சிங்களத்திற்கு இந்தியா கொடுக்க விரும்பும் இறுதி மரியாதைக்கு ஈழத் தமிழர்களின் 'தாயகக் கோட்பாடு' குறி வைக்கப்படுகின்றது. அங்கே இந்தியாவின் சிப்பாய்களாக மாற்றப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு களத்தில் இறங்கி வியூகம் வகுக்கின்றது. இங்கு மகிந்த சகோதரர்களுக்கு அதிகம் வேலை கிடையாது. இந்த யுத்த களத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெல்ல வேண்டும் என்பதற்காகவே, தனது வளர்ப்பிற்குரியவரின் வீணையைப் பிடுங்கிக்கொண்டு வெற்றிலையில் நிற்க வைத்துள்ளார். இந்தியா எதைச் செய்யவேண்டும் என்பதை மகிந்தவே தீர்மானிக்கிறார். இந்தியா எதைச் செய்யக் கூடாது என்பதையும் மகிந்தாவே முடிவு செய்கிறார். இந்தக் களத்தில் மட்டுமல்ல, இதற்கு முந்தைய சிங்கள அதிபர் தேர்தலிலும் இந்தியா என்ன செய்ய வேண்டும் என்று மகிந்தவே முடிவு செய்திருந்தார். அதற்காகவே, சிங்கள மக்களுக்கு உருவேற்றும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அழைக்கப்பட்டு, சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற உத்தரவு அவர்களுக்கு வழங்கப்பட்டது. மகிந்த வெல்லவேண்டும் என்று இந்தியா விரித்த வலையில், அரசியல் கத்துக்குட்டியான சரத் பொன்சேகாவும் சிக்குண்டு, தற்போது கம்பி எண்ணிக் கொண்டுள்ளார். இது கற்பனையான கதை அல்ல, நடைபெற்று முடிந்த அரசியல் கணக்கு. இந்தியாவின் சொல்லை மீறாத, இப்போதும் தமிழர்களின் இரட்சகர் இந்தியாதான் என்று கைநீட்டிக் காட்டும் பக்குவத்தைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுயமாக சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவை எடுத்தார்கள் என்பது பொருந்தாத வாதம். ஈழத் தமிழர்கள் மீதான இறுதி யுத்தத்தின் இராணுவ வெற்றிப் பங்காளர்களான மகிந்தவும், சரத் பொன்சேகாவும் சிங்கள மக்கள் மத்தியில் சம பலத்துடன் இருந்தபோதே அவசரமாக மகிந்த தேர்தல் அழைப்பை விடுத்திருந்தார். யுத்த வெற்றியின் அரை நாயகனான மகிந்தவை எதிர்த்துப் போராட எதிரணிக்குக் கிடைத்த ஒரே துருப்புச் சீட்டு மற்றைய அரை வெற்றியாளனான சரத் பொன்சேகா மட்டுமே. அவர் களம் இறக்கப்பட்டால் மகிந்தவுக்கு வெற்றி நிச்சயமில்லாமல் போகலாம் என்ற நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு சரத் பொன்சேகாவை ஆதரிக்கும்படியான கட்டளை இந்திய தரப்பால் விடுக்கப்பட்டது. அந்த ஆதரவைப் பெறுவதன் மூலம் சரத் பொன்சேகா தமிழர்களுடன் சமரசம் செய்ய முற்படுகிறார் என்ற வதந்திகளும், கருத்துக்களும் சிங்கள மக்கள் மத்தியில் திட்டமிட்டுப் பரப்பப்பட்டது. சிங்கள தேசத்து அரசியலில் காலா காலமாக இனவாதமே வெற்றியைத் தீர்மானித்தது என்பது இந்தியாவுக்குத் தெரியும். அதனாலேயே மகிந்தவை வெல்ல வைக்கும் துருப்புச் சீட்டாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இந்தியா தேர்தல் களத்தில் பயன்படுத்திக் கொண்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தக் கூட்டுச் சதியை உடனடியாகப் புரிந்து கொள்ள முடியாத ஈழத் தமிழர்களும் தேர்தல் முடிந்து, மகிந்த மீண்டும் தெரிவானபோதுதான் தாங்கள் இன்னுமொரு ஏப்ரல் 1 ஐ கடந்து வந்ததாக உணர்ந்தார்கள். இந்தியா தான் நினைத்தது போலவே, ஈழத் தமிழர்களை ஆயுதம் ஏந்த வைத்தது, தான் நினைத்தது போலவே, சிங்கள தேசத்தை பணிய வைத்தது, தான் நினைத்தது போலவே, ஆயுதக் குழுக்களிடையே மோதல்களை உருவாக்கி விரிசலை ஏற்படுத்தியது. தான் நினைத்தது போலவே, தமிழீழ மண்ணில் கால் கதித்தது. தான் நினைத்தது போலவே, வரதராஜப்பெருமாள் என்ற தலையாட்டிப் பொம்மையை வட கிழக்கு மாகாணத்தின் முதல்வராக்கியது. தான் நினைத்தது போலவே, எமது மக்களை அழித்தது, சிதைத்தது, மானபங்கப்படுத்தியது. தான் நினைத்தது போலவே, மேற்குலகால் மேற்கொள்ளப்பட்ட சமாதானப் பேச்சுக்களில் தீர்வுகள் கிட்டவிடாது தடுத்தது. தான் நினைத்தது போலவே, யுத்த நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. தான் நினைத்தது போலவே, ஈழத் தமிழர்களை முள்ளிவாய்க்கால்வரை விரட்டிச் சென்று கொன்று குவிக்க சிங்கள அரசுக்கு உதவி வழங்கியது. தான் நினைத்தது போலவே, சிங்கள தேசத்தை யுத்தக் குற்றச்சாட்டில் சிக்கிக்கொள்ளாமல் காப்பாற்றியும் வருகின்றது. இங்கு, முள்ளிவாய்க்காலின் அவலங்களை உங்கள் கண்களின் முன்னால் நிறுத்திப் பொருத்திப் பாருங்கள் அத்தனை உண்மைகளும் உங்கள் நெஞ்சில் அறைந்து சொல்லும். இந்த நினைவுகளுடன், இப்போதைய யுத்த களத்திற்குச் செல்வோம். முள்ளிவாய்க்கால் யுத்த களத்தைப் பின்நின்று இயக்கிய அதே சாட்சாத் இந்தியாவே இந்த யுத்த களத்தின் பின்னாலும் நிற்கின்றது. அதற்குக் காரணம்... புலம்பெயர் தமிழர்கள். சிறிலங்காவாலும், இந்தியாவாலும் நெருங்க முடியாத, கடத்திச் செல்ல முடியாத நிலையில் விசுவரூபம் கொண்டு தமிழ்த் தேசியத்திற்கான போராட்டத்தை மேற்கொண்டுவரும் புலம்பெயர் தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் பெற்ற வெற்றியைத் தோற்கடிக்கத் தொடங்கிவிட்டார்கள். புலம்பெயர் தமிழர்களின் எழுச்சி சிங்கள தேசத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் பெரும் அச்சத்தைத் தோற்றுவித்து வருகின்றது. ஆயுதும் ஏந்திக் களத்தில் நிறைவு செய்ய முடியாத 'தமிழ்த் தேசியம்' என்ற இலட்சியத்தை புலம்பெயர் நாடுகளில் அமைதி வழிப் போராட்டங்கள் மூலமாகப் பெற்றுவிடப் போகிறார்கள் என்பதே அந்த அச்சம். அதற்கு, அவர்களுக்கு உள்ள ஒரே குறி தமிழீழ மக்களது அரசியல் தலைமை. அந்த அரசியல் தலைமையை அவர்கள் தங்களுக்கானதாக மாற்றிக் கொண்டுவிட்டால், அவர்கள் மூலமாக பிரிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரமற்ற மாகாணசபையை ஏற்கப்பண்ணிவிட்டால்... முடிந்தது பிரச்சினை. ஈழத் தமிழர்களின் அரசியல் தலைமையுடன் நாங்கள் உடன்பாட்டுக்கு வந்துவிட்டோம். எங்கள் பிரச்சினையை நாங்களே தீர்த்துக்கொண்டு விட்டோம். எங்களுக்கு வெளியார் யாரும் சமரசம் பேசி வரத் தேவையில்லை என்ற வார்த்தைகளுடன் புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களும், அதனூடான புலம்பெயர் நாடுகளின் அரசியல் நகர்வும் தடுத்து நிறுத்தப்படும் என்பதே இந்தப் போர்க்களத்தின் கணக்கு. அந்தக் கணக்கில் சறுகல் வரக் கூடாது என்பதனாலேயே தமிழ்த் தேசியத்தை விட்டு நகரமுடியாத கஜேந்திரனும், பத்மினியும் வெளியேற்றப்பட்டனர். அதை உணர்ந்து கொண்டதனால் கஜேந்திரகுமாரும் வெளியேறினார். இந்தத் தேர்தல் போர்க் களத்தில் இந்திய தேசத்தால் இறக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டுத் துரோகம் அரங்கேற்றப்பட விடாமல் களத்தில் பின்புலமற்ற நிலையிலும் போராடுகின்றார்கள். இந்த இடத்தில், உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம், 'இந்த இடத்தில் இந்தியா எங்கே நிற்கிறது?' என்று. இங்கேதான், இந்திய ராஜதந்திரம் தோற்றுப்போய், சிங்களத்திடம் சரணாகதி அடையும் சிக்கலுக்குள் மாட்டிக்கொண்டு வழிக்கும் இந்தியாவின் பரிதாப நிலை புரியும். ஈழத் தமிழர்களது இனப் பிரச்சினை ஊடாக இலங்கையில் கால் பதிக்க இந்தியா நினைத்த காலத்தில் இருந்த களநிலை வேறு. இப்போதைய கதை வேறு. தங்களை மிரட்டும் அரசியலைத் தொடரும் இந்தியாவுக்கு செக் வைக்க சிங்களம் காலத்தை நோக்கிக் காத்திருந்தது. சோவியத் ரஷ்யா சிதைவடைவதற்கு முன்னர், இரு தரப்பு இராணுவ ஒப்பந்தங்களுடன் தென்னாசியப் பிராந்தியத்தின் வல்லரசாக எண்ணி இறுமாந்திருந்த இந்தியாவுக்கு ரஷ்யச் சிதைவு பாரிய நெருக்கடியைத் தோற்றுவித்தது. இந்த வரலாற்றுச் சிதைவினால் ஏற்பட்ட நெருக்கடிகளை ஈடு செய்ய இந்தியா அமெரிக்காவை நெருங்க வியூகம் வளர்த்த வேளையில், அயல்நாட்டு அரசியல்களில் மூக்கைச் செலுத்தி அடிவாங்கும் அவலத்தை விரும்பாத சீனா, தன்னைப் பொருளாதாரப் போரில் முற்றாக ஈடுபடுத்தியது. அதற்கு உலகின் திறந்த பொருளாதாரக் கொள்கையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியது. சீனாவுக்குத் தேவை உலக பொருளாதாரத்தை வென்றெடுப்பது மட்டுமே. அந்தப் பொருளாதாரப் போரில் சீனா பெற்ற வெற்றி மகத்தானது. அளவுக்கதிகமான பொருளாதார பெருக்கத்தையும், உற்பத்தித் திறனையும் கொண்ட சீனாவுக்கான சந்தை வாய்ப்புக்கள் உலகெங்கும் விரிந்து சென்றன. சீனாவின் உற்பத்திக்கான மூலப் பொருட்களின், மசகு எண்ணைகளில் தேவையும் அதிகரித்தது. அந்தத் தேவையின் அடிப்படையில் பெருகிய கடற் போக்குவரத்துப் பாதையில் அமைந்துள்ள இலங்கைத் தீவு சீனாவைக் கவர்ந்தது. சீனாவின் காதலைப் புரிந்து கொண்ட சிறிலங்கா, இந்தியாவின் மிரட்டும்பாணி அதிகாரக் காதலை முடிவுக்குக் கொண்டுவரத் தீர்மானித்தது. அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சிறிலங்கா சீனாவுக்கு சீதனமாக வழங்கியது. இந்தியா முறைத்துப் பார்த்தது. 'இந்தா! உனக்கும் தருகிறேன் திருகோணமலையை, வைச்சுக்கோ' என்றது. பேரம் படிய மறுத்ததால் குடியிருந்த தமிழர்களின் வாழ்விட மண் பறிக்கப்பட்டு, சாம்பூரும் வழங்கப்பட்டது. இந்தக் கதை இப்படியெ தொடர்வதால், இப்போதைக்கு இதை விட்டு விடுவோம். வடக்கும் - கிழக்கும் ஒன்றிணைந்த தமிழர் தாயகம் என்ற கோட்பாடு சிங்கள நீதிமன்றத்தால் உடைக்கப்பட்டு, பிரிக்கப்பட்டாகிவிட்டது. அதை, இனி எந்தக் காலத்திலும் பலப் பிரயோகமின்றி இணைப்பது சாத்தியமே இல்லை. திட்டமிட்ட குடியேற்றங்களினாலும், யுத்தப் படுகொலைகளாலும், விரைவான புலம் பெயர்தல்களினாலும், தமிழ் மக்களின் கறாரான குடும்பக் கட்டுப்பாட்டினாலும் தென்தமிழீழத்தில் தமிழர்களின் மக்கள் தொகை மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டு விட்டது. கிழக்கை வடக்குடன் இணைப்பதில் இஸ்லாமியத் தமிழர்கள் விருப்பம் கொள்வார்கள் என்பதை எதிர்பார்க்க முடியாது. மகிந்த சிந்தனை மூலம் பிரிக்கப்பட்ட கிழக்கில் மகிந்த விரும்பியே பிள்ளையானை ஆட்சியில் அமர்த்தினார். பெரும்பாலும், இவரே கிழக்கின் கடைசித் தமிழ் முதல்வராகவும் இருப்பார் என்பதே பலரது கணிப்புமாக இருக்கின்றது. கிழக்கு, தமிழர்களின் கைகளை விட்டு வெகு வேகமாகச் சென்று கொண்டுள்ளது. இருப்பது வடக்கு மட்டுமே. அங்கேதான் இந்தத் தேர்தல் உச்சவத்தின் தேர்த் திருவிழா நடைபெறப் போகின்றது. இத்தனை அழிவுகளையும், இழப்புக்களையும் எதிர்கொண்ட ஈழத் தமிழர்களிடம் எஞ்சியிருப்பது வட தமிழீழ அரசியல் களம் மட்டுமே. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூலமாக அதனைக் கைப்பற்றி, இன்னொரு அரை வரதராஜப்பெருமாளாக சம்பந்தரை முதல்வராக்கினால் மட்டுமே இலங்கையிலிருந்து வழுக்கிச் செல்லும் தன் கால்களைப் புதைத்து நிற்க முடியும் என்பதே இந்தியாவின் இறுதிக் கணிப்பு. சீனாவுடன் பொருளாதார உதவிகளை வலுப்படுத்திவரும் சிறிலங்காவை மிரட்டி அடிபணிய வைக்கும் நிலை தற்போது இல்லை. அடித்துப் பணியவைக்க இந்தியாவின் ஆயுதங்களைக் கையேற்கவும் அங்கே இளைய தலைமுறை இல்லை. இந்தியாவுக்கு இப்போதுள்ள ஒரே இலக்கு வட தமிழீழம் மட்டுமே. அவர்களது அரசியல் பலம் மட்டுமே. அதற்காகவே இந்த இறுதிப் போர். தமிழீழ மக்கள் மீது தொடுக்கப்படும் இந்தப் போரில் 'தமிழ்த் தேசியம்' சிதைக்கப்படும். இந்த இறுதி யுத்த வெற்றிக்குப் பாடுபட்ட இந்தியாவை மகிந்த கைவிட்டுவிடப் போகிறாரா, என்ன? வடக்கிற்குள் சீனா நுழையாது என்ற உத்தரவாதத்துடன், இந்தியா வளமாக அங்கே காலூன்ற அனுமதிக்கப்படும். இதுதான் தமிழீம் மீதான இந்தியாவின் இறுதித் தாக்குதல்! இதைப் புலம்பெயர் தமிழர்கள் புரிந்துகொண்டால் மட்டுமே தமிழீழ மண்ணையும், தமிழீழ மக்களையும் காப்பாற்ற முடியும்.

முட்டாள் தவளையும் கருணாவின் முடிவும்

நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தமிழீழ விடுதலைப்போராட்டம் மே 19க்கு முன், பின் என இரண்டு காலக்கட்டங்களாக பிரித்தே தீரவேண்டும். காரணம் முள்ளிவாய்க்காலில் முடக்கப்பட்ட மாந்தநேயம், மனிதத்தின் பேரொளி, மனித பேரவலம், முடக்கப்பட்ட மாந்தநேயம், அழுகைக்குரல் என மனிதத்திற்கே சவால்விடும் அனைத்துப் பேரழிவுகளும் அங்கே நிறைவேறி முடிந்தது. இதற்கான காரணங்களை பல்வேறு தளங்களிலிருந்து பலவாறு அலசுகிறார்கள், ஆய்வுநடத்துகிறார்கள். ஒரு விடுதலை இயக்கத்திற்கான பின்னடைவு எதனால் ஏற்படுகிறது? என்பது குறித்தெல்லாம் பகுப்பாய்வு செய்கிறார்கள். ஆனால் மற்றப் போராட்டங்களில் இருப்பதைப் போன்றே தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும் துரோகங்கள் விஸ்வரூபம் எடுத்தன. துரோகத்தின் அடையாளங்கள் தம்மை மிகைப்படுத்திக் கொண்டன. நமக்கு இயல்பாகவே இலக்கியங்களும், கவிதைகளும், கதைகளும் நீதிநெறியை போதிப்பவையாகவே இருக்கின்றன. நாம் கட்டுரைகளாக வாசித்துக் கொண்டிருந்ததில் இருந்து சற்று மாறி, ஒரு கதை கேட்போம். ஒரு ஊர். பெயரை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். அங்கே அழகிய காடு ஒன்று இருந்தது. அந்த காட்டிற்கு நடுப்பகுதியில் குளம், வற்றாத் தண்ணீருடன் எப்போதும் நீராதாரத்துடன் குளிர்ச்சியாக இருந்து கொண்டிருந்தது. அந்த குளத்திலே ஆயிரக்கணக்கான தவளைகள் மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும் வாழ்ந்து கொண்டிருந்தன. தவளைகளின் வாழ்வு, அதன் ஒவ்வொரு தன்மையும், அடையாளமும் அந்த தவளைகளுக்குள் உள்ள ஒற்றுமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. அந்த குளத்தில் வசித்த தவளைகளுள் ஒன்று மிகத் தவறான பாதைகளுக்கு செல்ல தீர்மானித்தப் போது, தவளைகளின் கூட்டம் ஒன்றிணைந்து, தவறான பாதைக்குச் சென்ற அந்த தவளையை குளத்தைவிட்டு விலக்கி வைக்க முடிவு செய்தன. அதை தலைமையும் ஏற்றுக் கொண்டது. கெட்ட எண்ணம் கொண்ட அந்த தவளை குளத்தை விட்டு வெளியேறும்போது மனதிற்குள் சொல்லிக் கொண்டது. என்னையா வெளியேற்றுகிறீர்கள்? உங்களை ஒழிக்காமல் எனக்கு உறக்கம் இல்லையென. பாசம் மிகுந்த அந்த கூட்டத்தைவிட்டு வெளியேறிய தவளை, காட்டுப்பாதை வழியே நடந்து வந்துக் கொண்டிருந்தது. ஆனால் அதன் எண்ணமெல்லாம் தம்மை கூட்டத்தைவிட்டு வெளியேற்றிய அந்த தவளைக்கூட்டத்தை எப்படியாவது பழித் தீர்க்க வேண்டும் என்பதிலேயே உறுதியாக இருந்தது. அது காட்டை கடந்து கொண்டிருந்தபோது அதன் எதிரே ஒரு பாம்பு வந்தது. பாம்பைப் பார்த்த தவளை பரபரப்படையாமல், பாம்பின் நேர்எதிரே நின்று நீங்கள் மிக நல்லவராக தெரிகிறீர்கள். உங்களைப் போன்று திறன் வாய்ந்த, ஆற்றல் மிக்க ஒருவரை காண முடியாது. ஆனால் உங்களைப் பார்த்தால் பலமுறை தோல்விக் கண்டவர்களின் வாரிசாக தெரிகிறீர்கள். உங்களின் பட்டினித் தோற்றமே அதை வெளிப்படுத்துகிறது. வாருங்கள். எனக்குத் தெரிந்த ஒரு குளம் இருக்கிறது. அந்த குளத்தை நான் காட்டுகிறேன். அந்த குளத்திற்கு போகும் வழியையும் காட்டுகிறேன். அந்த குளத்தில் தாங்கள் எங்கே ஒளிந்து கொண்டிருந்தால் அங்கிருக்கும் தவளைகளை எல்லாம் பிடித்துக் கொல்லலாம் என்பதையெல்லாம் சொல்லித் தருகிறேன். நீங்கள் உங்கள் விருப்பம்போல் தவளைகளை கொன்று தின்னலாம். தவளைகளின் ரத்தத்தை நீங்கள் எவ்வளவாவது குடிக்கலாம் என்று சொன்னது. பாம்பிற்கு மகிழ்ச்சி நிலைகொள்ளவில்லை. சரி, வா என்று அழைத்துக் கொண்டு, குளத்திற்கான வழியை தவளையோடு சென்று அறிந்து கொண்டது. அது, தாம் தங்கும் இடத்தை தவளையிடம் கேட்டு தெரிந்து கொண்டது. பின்னர், ஒவ்வொரு நாளும் அந்த பாம்பு குளத்தில் இருந்த தவளைகளை தம் விரும்பிய வண்ணம் கொன்று, தின்று தீர்த்தது. குளத்தில் தவளைகள் ஒட்டுமொத்தமாய் ஒழிக்கப்பட்டது. பாம்பிற்கு ஒன்றும் புரியவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் அக்குளத்தைவிட்டு வெளியேறி மீண்டும் காட்டு வழியே திரும்பி வந்துக் கொண்டிருந்தது.வரும் வழியில் தமது இனத்தையும் அந்த இன வாழ்வின் அடையாளத்தையும் காட்டிக் கொடுத்த தவளை அந்த பாம்பைப் பார்த்து, என்னய்யா, மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? நிறைவாக சாப்பிட்டீர்களா? அனைவரையும் கொன்று தீர்த்தீர்களா? என்று பாம்பை பாராட்டும் முகமாக வாழ்த்தியது. ஆனால் அனைத்தையும் கொன்று தீர்த்த பாம்புக்கு பசி மீண்டுமாய் தூண்டியது. அது எங்கே சென்று இறை தேடுவது என்று புரியாமல் இருந்தபோது அந்த துரோகத் தவளை பாம்பிடம் வந்து செய்திகளை கேட்டவுடன் பாம்பிற்கு மகிழ்ச்சி தாளவில்லை. ஒரே தாவலில் அந்த தவளையை கவ்வி, விழுங்கத் தொடங்கியது. பாம்பின் வயிற்றுக்குள் இறங்குவதற்கு முன்னால் அந்த தவளை நினைத்துக் கொண்டது. ஐயோ, நம் இனத்தை காட்டிக் கொடுத்தோமே? அந்த துரோகத்திற்கு விலையாக நமது உயிரே பறிப்போகிறதே? என்று கதறியபடி செத்துப் போனது. இந்தக் கதை யாருக்குப் புரிகிறதோ இல்லையோ. நிச்சயம் கருணாவுக்குப் புரியும். ராஜபக்சேவுக்கு புரியும். வாசிக்கும் உங்களுக்கும் புரியும் என்று நினைக்கிறேன். -கண்மணி

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடித்தேவை நிவாரணமே அன்றி ......!?

கடந்த சனிக்கிழமை பிரித்தானியாவில் தாஜ்மஹலுக்கு சொந்தக்காரரும்,எவரும் கட்டிய வீட்டை உரிமைகோருபவரும் வசிப்பவரும் ஆகிய இருவராலும் இடம்பெயர்ந்தமக்களுக்கான நிவாரணம் வழங்கல் பற்றி கூட்டப்பட்ட கூட்டத்தில் இவர்கள் தங்களின் ஊடாகத்தான் நிவாரணம் அம்மக்களுக்கு சென்றடையவேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.இதனை கூடியோர் நிராகரிக்க முடியாத நிலையில் முடிவு பெற்றது இம் மக்குகளின் கருத்தரங்கு.விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரிவின் நிதி இவர்களால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் இவர்கள் மக்களைக் காரணம் காட்டி பணம் கறக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்களின் அவசியமும் அவசரமாகிய கடமையாதெனில்.... போரால் பாதிக்கப்பட்டு நாதியற்ற எம்மக்களுக்கு நிவாரணம் கிடைக்கப்பெற, உலகத்தின் எத்திசையில் உள்ள தமிழர்களையும் வெளிநாட்டு உதவி வழங்கும் நிறுவனங்களையும் ஒன்றிணைத்து செயல்படுவதே சாலச்சிறந்தது. கூட்டமும் கருத்தரங்கும் கூட்டி பணத்தையும் நேரத்தையும் வீணடிப்பதற்குப் பதில் உடனடி நடவடிக்கையில் இறங்குவதே பதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் செய்யும் பேருதவி. நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரியது என்று வாழ வேண்டும் - தேசியத்தலைவர்

அரசியல் இராசரீகம் என்பது கைப்பொம்மைகளாக செயற்படுவதல்ல

அரசியல் இராசரீகம் என்பது கைப்பொம்மைகளாகச் செயற்படுவது அல்லது எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை இந்தியாவின் கைப்பொம்மைகளாகச் செயற்பட்ட காரணத்தினால், உள்ளிருந்து சம்மரசம் செய்ய அவகாசமற்று அதிலிருந்து வெளியிற்றப்பட்டதால், அடிப்படைத் தேசியக் கொள்கைகளைக் காப்பாற்றும் வகையில் தேர்தலில் களமிறங்கியிருப்பதாக, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் உள்ளவர்கள் தமிழ் மக்களின் அடிப்படைக் கொள்கைகளைக் கைவிட்டுள்ளதன் மூலம், தாயக மீட்புக்காக இழக்கப்பட்ட உயிர்களுக்கு துரோகம் இழைத்து வருவதாகவும், கொள்கை பிறளும் தலைமையுடன் இணைந்து செயற்பட முடியாத நிலையில் தேசிய நலன் சார்ந்தோர் இணைந்து கூட்டமைப்பை எதிர்த்துப் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு முற்றிலும் முரணாக இந்தியாவின் விருப்பிற்கு இணங்க தீர்வுத் திட்டம் ஒன்றை தயாரித்த கூட்டமைப்பின் தலைமை, அதனை இந்தியா உட்பட சில நாடுகளின் தூதரகங்களுக்கும் இரகசியமாக வழங்கியிருந்ததாகக் கூறிய கஜேந்திரன், அந்தத் தீர்வுத் திட்டத்தின் பிரதியை த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக்கூட வழங்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார். ஒஸ்லோ உடன்படிக்கையை தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்றிருக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இது பற்றி கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களே நேரடியாகக் கூறியிருந்த போதிலும், தேசியத் தலைமையின் முடிவுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்பொழுது தேர்தல் வெற்றிக்கான பொய்ப்பரப்புரையுடன் களமிறங்கியிருப்பதாக இந்த செவ்வியில் அவர் கூறினார். தனது குடும்ப அங்கத்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து தேர்தலில் போட்டியிடுகின்றனர் என்ற ஒரேயொரு காரணத்திற்காக தன்மீதும், தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியில் உள்ள ஏனைய அங்கத்தவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தாயகத்தில் பத்திரிகைகளும், புலம்பெயர் நாட்டில் உள்ள குறிப்பிட்ட ஒரு இணையத்தளமும் பொய்ப் பரப்புரையில் ஈடுபட்டு வருவதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்தார்.

சிறீலங்கா புலனாய்வுத்துறையினரின் தாக்குதல் பட்டியல்

சிறீலங்கா படையினரின் புலனாய்வு அமைப்பு 35 பேர் மீதான தாக்குதல் பட்டியலை கொண்டுள்ளது. அதில் முன்னனி ஊடகவிலாளர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவங்களின் பிரதிநிதிகளின் பெயர்கள் உள்ளன. உறுப்பினர்களின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் பட்டியில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியில் வெளிவந்துள்ளது. அரசு அவர்களை துன்புறுத்தலாம் என்ற அச்சங்களை தோற்றுவித்துள்ளது. இந்த பட்டியிலை வெளியிட்டதன் மூலம் அரசு அவர்களை மறைமுகமாக எச்சரித்து அடக்கிவைக்க முயல்வதாக அனைத்துலக மன்னிப்புச்சபையின் ஊடகப்பிரிவுத் தலைவர் மைக் பிளேக்மோர் தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரசு ஊடக சுதந்திரத்தை மதித்து, மனித உரிமை செயற்பாட்டளர்களை அவர்களின் கடமைகளை செய்ய அனுமதிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த 35 பேரின் பாதுகாப்புக்கள் குறித்து எல்லா தரப்பினரும் அரசுக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும். மனித உரிமை செயற்பாட்டாளர்களான கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, ஜே சி வெலியமுனா ஆகியோருக்கும் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல்கள் உள்ளன. அவர்களுக்கு முன்னர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டபோதும் தற்போது இந்த பட்டியலில் முன்னனி நிலையில் அவர்களின் பெயர்களும் இணைக்கப்பட்டுள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

இந்தியா குறித்து உளவு பார்த்தாராம்!

ஜிஹாத் ஜேன் என்ற பெயரில் இந்தியா வுக்கு எதிரான தீவிரவாத செயல்களுக்கான தகவல்களைத் திரட்டி வந்த அமெரிக்கப் பெண்ணை அந்த நாட்டு எப்பிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்தியாவிலும், தெற்காசியாவிலும், ஐரோப்பாவிலும் பெரும் தீவிரவாத சதிச் செயல்களை இவர் உள்ளிட்டோர் தீட்டி வந்தது தெரிய வந்துள்ளது. தீவிரவாத செயல்களுக்கான ஆளெடுப்பிலும் ஜிஹாத் ஜேன் ஈடுபட்டு வந்துள்ளார். இவருடைய உண்மையான பெயர் கொலீன் லாரோஸ் என்ற பாத்திமா லாரோஸ். பென்சில்வேனியாவைச் சேர்ந்தவர். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத செயல்களில் தற்போது வெள்ளையர்களை ஈடுபடுத்தத் தொடங்கியுள்ளனர் தீவிரவாதிகள். இதை நிரூபிக்கும் வகையில், கடந்த ஆண்டு டேவிட் கோல்மேன் ஹெட்லி என்ற அமெரிக்கர் கைது செய்யப்பட்டார். மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் இவருக்கு மிக நெருங்கிய தொடர்புகள் இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த வரிசையி்ல் இன்னொரு அமெரிக்கப் பெண் பிடிபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 46 வயதாகும் கொலீன் லாரோஸ், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிலடெல்பியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு உலகெங்கிலும் உள்ள பல்வேறு தீவிரவாதக் குழுக்களுடன் நல்ல தொடர்பு உள்ளதாம். கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இவர் தீவிரவாதக் குழுக்களுக்காக பணியாற்றி வந்துள்ளார். நான்கு குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. அவை - தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளித்தது, வெளிநாடு ஒன்றில் கொலைச் செயலை செய்ய திட்டமிட்டது, அடையாளத் திருட்டில் ஈடுபட்டது, போலி வாக்குமூலம் அளித்தது. கொலீன் லாரோஸ் குறித்த வழக்கில், பிலெடல்பியா கோர்ட்டில் அரசு வழக்கறிஞர் மைக்கேல் லெவி கூறுகையில், தீவிரவாதிகள் தற்போது புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது. பார்த்தவுடன் இவர் தீவிரவாதி என்ற சந்தேகம் கொஞ்சம் கூட எழாத வகையில் ஆட்களை இவர்கள் தேர்வு செய்கிறார்கள். அமெரிக்கர்கள் தீவிரவாதிகளுக்குத் துணை போக ஆரம்பித்து பிடிபட்டிருப்பது இதையே காட்டுவதாக உள்ளது என்றார். வெள்ளை இனத்தைச் சேர்ந்த முதல் பெண் தீவிரவாதி கொலீன் லாரோஸ் என்று கூறப்படுகிறது. இவருடைய கூட்டாளி இந்தியா அல்லது பாகிஸ்தானில் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அவருடைய பெயரை எப்.பி.ஐ. குறிப்பிடவில்லை. டென்மார்க்கைச் சேர்ந்த லார்ஸ் வில்க்ஸ் என்ற கார்ட்டூனிஸ்ட்டைக் கொல்ல கொலீன் லாரோசுக்கு இந்த நபர் உத்தரவிட்டிருந்தாராம். இந்த வில்க்ஸ், நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன் வரைந்ததால் சர்ச்சைக்குள்ளானவர். வில்க்ஸ் கொலைச் சதி தொடர்பாக அயர்லாந்து போலீஸார், 4 ஆண்கள், 3 பெண்களை கைது செய்துள்ளனர். இவர்கள் மூலம்தான் கொலீன் லாரோஸ் குறித்த தகவல் வெளியானதாம். வில்க்ஸ் கொலைத் திட்டத்தை நிறைவேற்ற சிலரை தேர்வு செய்திருந்தார் கொலீன் லாரோஸ். மேலும் இதற்காக நிதியும் கூட திரட்டி வைத்திருந்தார். தெற்காசியா, மேற்கு ஐரோப்பா, கிழக்கு ஐரோப்பாவில் உள்ள சில தீவிரவாதிகளுடன் அவர் தொடர்ந்து நல்ல தொடர்பில் இருந்து வந்துள்ளார். இருப்பினும் எந்த குறிப்பிட்ட தீவிரவாத இயக்கத்திற்காகவும் இவர் தனியாக செயல்பட்டதாகத் தெரியவில்லை. இந்தியாவில் தீவிரவாத திட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பான சதியும் கொலீன் லாரோசிடம் கொடுக்கப்பட்டிருந்ததாக தெரிய வந்துள்ளது. இருப்பினும் இந்தியாவில் இதற்கு முன்பு நடந்த தீவிரவாத செயல்களில் கொலீன் லாரோசுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்துத் தெரியவில்லை.

பிரெட்றிக்கா ஜெய்ன்ஸ்

சண்டே லீடர் பத்திரிகையில் கடந்த 28ம் திகதி எழுதப்பட்டிருந்த கட்டுரையில் பிரதி பிரதம நீதியரசர் சிறானி பண்டாரநாயக்கவை அவமானப்படுத்தும் வகையிலான கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தது. இக்கருத்துக்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதுடன் நேற்று வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது கட்டுரையின் உரிமையாளர் பிரெட்றிக்கா ஜெய்ன்ஸ் மன்றில் ஆஜராகி மன்னிப்பு கோரினார். அவர் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணிகள், தமது கட்சிக்காரர் தவறை உணர்ந்துள்ளதாகவும் , தவறுக்காக எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளனர். அதேநேரம் கட்டுரையில் உள்ள பாரதூரமான விடயங்களை அவர் பின்னரே உணர்ந்துள்ளதாகவும் கூறினர். அவருடைய மன்னிப்பு கோரலை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மன்னிப்புகோரும் விடயத்தினை சண்டே ரைம்ஸ் பத்திரிகையின் முதற்பக்கத்தில் பிரசுரிக்க உத்தரவிட்டுள்ளதுடன் கட்டுரையில் உள்ள தவறுகளைத் திருத்தி அவற்றை முன்பக்கத்தில் பிரசுரிக்கவும் உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்டதாக ஜெனரல் பொன்சேகா தெரிவித்தார் என செய்தி வெளியிட்ட பிரெட்றிக்கா ஜெய்ன்ஸ், அவ்வாறு அவர் அதை தெரிவித்தார் என்பதற்கான ஒலிப்பதிவு தன்னிடம் உண்டு என தெரிவித்தபோதும் இதுவரை அவர் அதை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.