இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
செவ்வாய், 6 ஏப்ரல், 2010
ஈழத்தமிழ் அகதிகள் மீது தமிழகக் காவல்துறையினரின் துன்புறுத்தல்கள்
தமிழகத்தில் இருந்து சிறீலங்காவுக்கு செல்ல முற்பட்ட ஈழத்தமிழ் இளைஞர்கள் பலரை கைது செய்துள்ள இந்திய கடற்படை அவர்களை தமிழக காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளது. தமிழக காவல்துறையினர் தம்மை தொடர்ந்து துன்புறுத்தி வருவதால் அவர்களின் துன்புறுத்தல்களில் இருந்து தப்பிக்கவே தாம் சிறிலங்கா செல்ல முற்பட்டதாக ஈழத்தமிழ் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஈழத்தமிழ் மக்கள் மீதான துன்புறுத்தல்கள் அதிகரித்து வருவதாகவும், தமிழக காவல்துறையினர் மேற்கொள்ளும் துன்புறுத்தல்களுடன் ஒப்பிடும் போது சிறிலங்கா இராணுவத்தின் துப்பாக்கி குண்டுபட்டு உயிரை விடலாம் எனவும் அவர்கள் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
திருச்சி பகுதியில் உள்ள கரூர் முகாமில் இருந்த ஆறு இளைஞர்கள் படகு ஒன்றை வாடகைக்கு அமர்த்தி சிறீலங்கா செல்ல முற்பட்டிருந்தனர். கடந்த மாதம் 31 ஆம் நாள் அவர்களை ஏற்றிச் சென்ற படகோட்டி நடுக்கடல் பகுதியில் உள்ள மணல் திட்டு ஒன்றில் நள்ளிரவு நேரம் இறக்கிவிட்டு அது சிறீலங்கா என கூறிச் சென்றுள்ளார்.
ஆனால் அங்கு சிக்கிய இளைஞர்கள் மூன்று நாட்களாக உணவு மற்றும் குடிநீர் இன்றி கடும் துன்பங்களை சந்தித்திருந்தனர். அதன் பின்னர் இந்திய கடற்படையின் சுற்றுக்காவல் படகினை கண்ட அவர்கள், உதவிகேட்டபோது, அவர்களை கைது செய்த கடற்படையினர், காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதேபோல அண்மையில் மற்றுமொரு தொகுதி இளைஞர்கள் சிறீலங்கா செல்ல முற்பட்டபோது இந்திய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
பத்திரிகை தர்மம்
ஜனவரி 8, 2009 அன்று காரில் சென்று கொண்டிருந்தபோது, அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் லசந்தா. தமது மரணம் எவ்வாறு நிகழும் என்பதை மாத்திரம்தான் லசந்தாவால் யூகிக்க முடியவில்லை. மற்றபடி, அவர் தன் மரணத்தை எதிர்பார்த்திருந்தார். நிச்சயம் அரசாங்கம்தான் பொறுப்பாளி என்று எழுதியும் வைத்திருந்தார். ராஜபக்சேவை மகிந்த என்று அழைக்கும் வெகு சிலரில் ஒருவர் லசந்த விக்கிரமதுங்க. ராஜபக்சேவின் ஆட்சியை தீவிரமாக விமர்சனம் செய்து, அவர் ஊழல்களை அம்பலப்படுத்தியவர்களுள் முதன்மையானவரும் அவரேதான். பெரும்பான்மையினரின் பார்வையை பதிவு செய்கிறோம் என்னும் பெயரில் இனப்படுகொலைகளை லசந்த விக்கிரமதுங்கே நியாயப்படுத்தவில்லை. நம் நண்பர்தானே என்பதற்காக கண்டும் காணாமலும் இருந்து விடவில்லை. புலிகளுக்கும் அரசாங்கத்துக்குமான போரில் பாதிக்கப்படுபவர்கள் அப்பாவித் தமிழர்கள்தான் என்பதை அழுத்தமாகப் பலமுறை அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ராஜபக்சேவை கடுமையாகக் கண்டித்தும் இருக்கிறார். மிரட்டல்கள், அடிதடிகள், தாக்குதல்கள் எதுவும் அவரைத் தடுத்து நிறுத்திவிடவில்லை. எனவே கொல்லப்பட்டார். லசந்த விக்கிரமதுங்க விடுதலைப் புலிகள் எதிர்ப்பாளர். ராஜபக்சேவை விமர்சனம் செய்ததைப் போலவே புலிகளையும் அவர் விமர்சனம் செய்திருக்கிறார். நான் எடிட்டர், நான் சொல்வதைத்தான் நீங்கள் கேட்க வேண்டும் என்று தன்னுடன் பணிபுரிபவர்களை லசந்த என்றும் அடக்கி ஆட்கொண்டது கிடையாது. பத்திரிகையாளர்கள் உண்மையை பயமின்றி எடுத்துக் கூறவேண்டும் என்பதுதான் அவர் கொள்கை. சண்டே லீடர் செய்தியாளர்களுக்கு அளவற்ற சுதந்திரத்தை அவர் அளித்திருந்தார். லசந்த விக்கிரமதுங்கவைப் போலவே என்.ராமும் ஒரு எடிட்டர். இந்தியாவின் தேசியப் பத்திரிகையாகத் தன்னை பிரகடனம் செய்துகொள்ளும் தி ஹிந்துவின் எடிட்டர். இன் சீஃப் என்.ராமும் புலிகள் எதிர்ப்பாளர். ஆனால் என்றாவது லசந்தாவைப் போல் நாணயத்தின் இரு பக்கங்களை அவர் பார்த்திருக்கிறாரா? இலங்கை அரசாங்க சார்பு செய்திகள் தவிர்த்து வேறொன்றை அவர் பதிப்பித்திருக்கிறாரா? இலங்கை அரசாங்க சார்பு செய்திகள் தவிர்த்து வேறொன்றை அவர் பதிப்பித்திருக்கிறாரா? இலங்கை இராணுவத்தின் அத்துமீறல்கள் குறித்து இரு சிறிய பெட்டிச் செய்தியையாவது தி ஹிந்துவில் யாரேனும் கண்டதுண்டா?இது தேசிய அவமானம் என்பதாக மங்களூர் பப் விவகாரம் பற்றி நீட்டியும், முடக்கியும் தலையங்கம் எழுதிய தி ஹிந்து, இலங்கை ராணுவத்துக்கு இந்தியா அளிக்கும் தார்மீக ஆதரவை என்றாவது சுட்டிக்காட்டி சாடியிருக்கிறதா? இலங்கை ராணுவம் போரில் சிறு முன்னேற்றம் கண்டாலும், ஆஹா வீழ்ந்தது முல்லைத்தீவு, அடுத்து கிளிநொச்சிதான் என்று கிளர்ச்சியுடன் எழுதிக் கொண்டு போகிறது தி ஹிந்து. புலிகள் இத்தோடு ஒழிந்தார்கள், இனி அவ்வளவுதான் என்று வாரத்துக்கு இருமுறையாவது செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.லெட்டர்ஸ் டூ தி எடிட்டர் பகுதியிலும் கடுமையான தணிக்கை. இருபது கடிதங்கள் வெளியானால் அதில் பத்தொன்பது தி ஹிந்துவை ஆதரித்து வந்திருக்கும். ஸார், மிகவும் சரியாகச் சொன்னீர்கள். புலிகள் ஒழிக்கப்பட வேண்டியவர்கள். புலிகள் ஆயுதம் ஏந்துவதால்தான் இத்தனை பிரச்சனையும். ராஜபக்சே அப்பழுக்கற்ற தியாதி. அவர் அளிக்கும் வாய்ப்புகளை புலிகள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. தமிழகத்தில் உள்ள கட்சிகளும் புலிகளிடம் பேசி, ஆயுதங்களை துறக்கச் சொல்ல வேண்டும். மற்றபடி, தமிழீழம் அமையும் என்று சொல்வதற்கில்லை. சிறிதும் சளைக்காமல் ஒருநாள் விட்டு ஒருநாள் ராஜபக்சேவிடம் பேசி, ஏதாவது மேட்டர் வாங்கி முதல் பக்கத்தில் போட்டு விடுகிறார் என்.ராம். தமிழர்களை நான் அவசியம் பாதுகாப்பேன். இந்தியா இனி அவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. உங்கள் எல்லோரையும் விட, தமிழர்கள்மீது எனக்கு அளவு கடந்த பாசமும், நேசமும் உண்டு. எங்கள் எதிரிகள் விடுதலைப்புலிகள். அவர்கள் மீது மட்டும்தான் நாங்கள் யுத்தம் தொடுத்துக் கொண்டிருக்கிறோம். இடையில் எப்போதாவது, பை மிஸ்டேக் சில சிவிலியன்கள் சிக்கிக் கொள்கிறார்கள். அவ்வளவுதான். என்.ராமின் பத்திரிகை தர்மத்துக்கும் லசந்த விக்கிரமதுங்கவின் பத்திரிகை தர்மத்துக்கும் ஏன் இத்தனை பெரிய வித்தியாசம்? அதற்கான காரணத்தை லசந்தவே சொல்லியிருக்கிறார். ‘உயர்பதவி, புகழ், பொருள், பாதுகாப்பு அனைத்திற்கும் மேலாக ஒரு அழைப்பு இருக்கிறது. அதுதான் மனசாட்சி.’ லசந்த தன் மனசாட்சியின் அழைப்பை இறுதிவரை நிராகரிக்கவில்லை.
பெண்கள் எதிர்கொள்ளும் அவலம்
வன்னி வதை முகாமில் இருந்து தங்கள் வாழ்விடங்களில் மீள்குடியமர்த்தம் செய்யப்பட்ட தமிழக் குடும்பங்களில், ஆண் உறுப்பினர் அற்ற குடும்பத்துப் பெண்கள் பல சங்கடங்களை எதிர்கொண்டு வருகின்றனர். ஈழத் தமிழர்கள் மீது சிறிலங்க அரசு தொடுத்த இனப்படுகொலைப் போரில் தங்கள் குடும்பத்து ஆண் உறுப்பினர்களை இழந்த குடும்பத்துப் பெண்கள் பாதுகாப்பற்ற ஒரு சூழலிலேயே வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் அளிக்கப்பட்ட 15 தகரங்களைக் கொண்டு பாதுகாப்பான தற்காலிக வீடுகளை அமைத்துக்கொள்ளக் கூட முடியாத நிலையில், அவர்களுக்கு கழிப்பிட வசதியில்லாத காரணத்தினால், இரவு வரை காத்திருந்து தாவரங்கள் அடர்ந்த வனப் பகுதிக்குச் சென்று - ஒரு ஆபத்தான சூழலில், தனிமையை காப்பாற்றிக் கொண்டு நிறைவேற்றிக் கொள்கின்றனர். இதுமட்டுமின்றி, தாங்கள் வாழ்ந்த பகுதியில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மக்களை அங்கு முகாம் அமைத்துள்ள இராணுவத்தினரும், காவல் துறையினரும் மறு விசாரணை என்ற பெயரில் அலைக்கழிக்கின்றனர். இவை யாவும் வன்னி முகாமில் முழுமையாக செய்து முடிக்கப்ட்டப் பின்னரே அவர்கள் விடுவிக்கப்பட்டு, மீள் குடியமர அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், மீ்ண்டும் அவர்களிடம் ‘நீங்கள் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்களா’ என்றெல்லாம் கேட்கப்படுவதும், இராணுவ, காவல் துறையினருக்கும் தமிழர்களுக்கும் இடையிலான மொழிப் பிரச்சனையும் இந்த விசாரணையை மேலும் சிக்கலாக்குகிறது. ஆண் துணையற்ற நிலையை விசாரணையின் மூலம் இராணுவத்தினரும், காவல் துறையினரும் தெரிந்துகொள்ளும் நிலையில், தங்களுக்கு மீண்டும் பாலியல் அச்சுறுத்தல் உருவாகுமோ என்ற அச்சமும் இப்படிப்பட்ட பெண்கள் மத்தியில் நிலவுகிறது. நிதியுதவி நிறுத்தம் வன்னி முகாம்களில் இருந்து 1.9 இலட்சம் தமிழர்கள் மீள் குடியமர்த்தம் அல்லது தங்களது உறவினர்களுடன் தங்கிக் கொள்ள அனுமதிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுவிட்ட நிலையில், மீள் குடியமர்த்தம் செய்யப்பட்ட குடும்பங்களுக்கு ஐ.நா.வின் அகதிகள் மறுவாழ்வு ஆணையம் அளித்துவந்த நிதியுதவி மார்ச் 8ஆம் தேதியுடன் நிறுத்தப்பட்டுவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உள் நாட்டிலேயே இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு அன்றாட நிவாரண உதவியில் இருந்து மறுவாழ்விற்கு நிதியுதவி வரை செய்துவந்த ஐ.நா. உள்ளிட்ட பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களுக்கு அயல் நாடுகளில் இருந்து வரும் நிதியுதவியைப் பெற சிறிலங்க அரசு மறுத்துவிட்டதைத் தொடர்ந்து இந்த நிதிச் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பெயர் குறிப்பிடப்படாத நபர்கள் தற்போது உயிருடன் இல்லை
பதினோராயிரம் இளைஞர் யுவதிகளுக்கு அரசாங்கம் மறுவாழ்வு அளித்து வருவதாகவும், இவர்கள் பற்றிய தகவல்கள் குறித்த அமைச்சின் இணைய தளத்தில் பிரசூரிக்கப்பட்டுள்ளதாகவும் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவ்வாறு பெயர் குறிப்பிடப்படாத நபர்கள் தற்போது உயிருடன் இல்லை என்றே கருதப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காணாமல் போனவர்கள் தொடர்பில் கரிட்டாஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மதகுருமார், ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பெசில் ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்பி உள்ளனர். இதன்போதே இந்த அதிர்ச்சியான தகவலை பசில் ராஜபக்ஸ வெளியிட்டுள்ளார். எனினும் விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட மே மாதம் அளவில் இலங்கை அரசாங்க ஊடகங்கள் அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் பாதுகாப்பிற்கான ஊடக மையம் என்பன விடுத்த பல செய்திக் குறிப்புக்களில் ஆரம்பத்தில் 17500 வரையான விடுதலைப் புலிகள் அரசாங்க படைகளால் கைது செய்யப்பட்டனர் அல்லது சரணடைந்தனர் எனக் குறிப்பிடப்பட்டது. பின்னர் 15000 வரையான புலிகள் தம்மிடம் இருப்பதாக கூறப்பட்டது. தொடர்ச்சியாக வந்த செய்திகளில் இந்தத் தொகைகள் 13500, 12500, 11500 என குறைக்கப்பட்டு தற்போது 11 ஆயிரம் என்ற கணக்கு பசில் ராஜபக்ஸவால் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறாயின் விடுதலைப் புலிகளின் உயர்மட்ட மற்றும் நீண்டகால அல்லது தீவிர செயற்பாட்டுப் போராளிகள் என 2 ஆயிரம் வரையானவர்கள் தனியான முகாமிலும் 4 ஆயிரம் வரையிலான போராளிகள் தனியான முகாமிலும் இரகசியமாக வைக்கப்பட்டு இருந்ததாக பலராலும் அறியப்பட்டு இருந்தது. இவ்வாறு இரகசியமான முறையில் விசேட முகாம்கயில் தடுத்து வைக்கப்பட்ட 6 ஆயிரம் விடுதலைப் புலிகளுக்கு என்ன நடந்தது என்ற ஐயம் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் இவர்கள் அரசாங்க படைகளால் கொல்லப்பட்டு இருக்கலாம் அல்லது தொடர்ந்தும் இரகசியமாக தடுத்து வைக்கப்பட்டு இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
வரலாற்றில் புலிகளை அழித்த தளபதி சரத் பொன்சேகா
வரலாற்றில் புலிகளை அழித்த தளபதி என்ற பெயருடன் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டவருக்கு ஆரம்பமாகும் அஸ்தமனம்?. ஜெனரல் சரத் பொன்சேகா இப்போது மறக்கப்பட்டு வரும் ஒரு மனிதராக மாறிக் கொண்டிருக்கிறார். இது எதிர்பாராத ஒரு விடயம் அல்ல. ஆனால் நிச்சயம் அவர் இதை எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. அப்படி எதிர்பார்த்திருந்திருப்பாரேயானால் அரசியலில் அவசர அவசரமாகக் குதிக்கும் முடிவை எடுத்திருக்க மாட்டார். கடற்படைத் தலைமையகத்தில் இளநிலை அதிகாரிகளுக்கான குடியிருப்பில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத்; பொன்சேகாவை மெல்ல மெல்ல அரசாங்கம் சாகடித்துக் கொண்டிருப்பதாக ஜேவிபி குற்றம்சாட்டியுள்ளது. இது பெரும்பாலும் உண்மையான கருத்தாகவே இருக்கக் கூடும். அது எந்தவகையில் என்றால்- அரசியல்ரீதியாக அவர் மெல்ல மெல்ல சாகடிக்கப்பட்டு வருகிறார் என்பதே உண்மை. கடந்த வருட இறுதியில் பாதுகாப்புத் தலைமை அதிகாரி என்ற பதவியை உதறித்தள்ளி விட்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடிவு எடுத்திருந்தார். அப்போதே அவர் அரசியல் ரீதியான தற்காலைக்குத் தயாராகி விட்டார் என்பது தெரிந்தது. ஜனாதிபதித் தேர்தலில் வென்றால் சரி தோற்றால் அவரது எதிர்காலம் பாழாகி விடும் என்பதை தெளிவாகவே உணரமுடிந்தது. ஆனால் இராணுவ அதிகாரியாக இருக்கும் போது எது நடந்தாலும் அதற்கேற்ப செயற்பட வேண்டும் என்ற கோட்பாட்டுக்கு அமைய அரசியலில் அவர் செயற்படவில்லை. வெற்றி ஒன்றையிட்டே சிந்தித்தாரே தவிர தோல்வி ஒன்றின் பின்னால் இருக்கக் கூடிய அபாயங்களையிட்டு கணிக்கத் தவறிவிட்டார். அதைவிட அவர் விரும்பியோ விரும்பாமலோ செய்த சில ஏற்பாடுகளும் சுற்றியிருந்தவர்களின் நடவடிக்கைகளும் சரத் பொன்சேகாவை பெரும் நெருக்கடிக்குள் தள்ளிவிட்டுள்ளன. ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று சினமன் லேக் சைட் விடுதியில் இடம்பற்ற நிகழ்வுகளும், அதனை ஒட்டிய சில சம்பவங்களும் தான் சரத் பொன்சேகாவின் அரசியல் எதிர்காலத்துக்குப் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன. இதன்காரணமாகவே அவர் தடுப்புக்காவலில் வைக்கப்படும் நிலையை அடைந்துள்ளார். * அதுமட்டுமன்றி இரண்டு இராணுவ நீதிமன்றங்களின் விசாரணைகளையும் அவர் சந்திக்க வேண்டியுள்ளது. இராணுவ நீதிமன்ற விசாரணைகள் ஆரம்பக் கட்டத்திலேயே இருந்தாலும் அது எப்படித் தொடரப் போகிறது என்ற கேள்விகள் இருக்கவே செய்கின்றன. காரணம் இரண்டாவது நீதிமன்றத்துக்கான புதிய நீதிபதிகள் நியமனம் கடந்த பத்து நாட்களாக இழுபட்டுக் கொண்டிருக்கிறது. அரசாங்கம் இந்த விடயத்தை எப்படி கொண்டு செல்வது என்பதைத் தீர்மானிப்பதில் சற்றுத் தயக்கம் காட்டுகிறது. இது ஒருபுறத்தில் இருக்க ஜனாதிபதித் தேர்தலின் போது சரத் பொன்சேகாவுடன் ஒட்டியிருந்த கட்சிகள் எதுவும் இப்போது அவருக்குத் துணையாக இல்லை என்பது தான் வேடிக்கை. முன்னாள் பிரதம நீதியரசர் மட்டும் சரத் பொன்சேகா விடயத்தில் அரசாங்கம் செய்வது தவறு என்று கூறிக் கொண்டே இருக்கிறார். * அதைவிட அவரது மனைவி அனோமா இன்னொரு பக்கம் அழுது வடியும் முகத்துடன் அடிக்கடி செய்தியாளர்கள் முன்தோன்றி ஏதாவது பரபரப்பான கதைகளை அவிழ்த்து விடுகிறார். உண்ணாவிரதம் இருப்பதாகவும், மதிய உணவை புறக்கணிப்பதாகவும், உணவு கொண்டு செல்வதற்கு தடை ஏற்படுத்தப்படுவதாகவும் சரத் பொன்சேகா விடயத்தில் ஒரு பரப்பரப்பான செய்தியை அவிழ்த்து விடுவதிலேயே ஜேவிபினர் குறியாக இருக்கின்றனர். காரணம் வெறும் அரசியல் இலாபம் மட்டுமே. ஜனாதிபதித் தேர்தலின் போது சரத் பொன்சேகா போட்டியில் இறங்கியது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியிருந்தது. அவருக்காக பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால் இன்று அவருக்காக வீதியில் இறங்க எத்தனை பேர் தயாராக இருக்கின்றனர் என்பதை- கொழும்பில் நடக்கின்ற அவருக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்போரின் எண்ணிக்கையைக் கொண்டே உறுதி செய்து கொள்ள முடிகிறது. ஜனாதிபதித் தேர்தலின் போது சரத் பொன்சேகாவின் பக்கம் இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலில் விலகிக் கொண்டது. பின்னர் ஐதேகவும் அதனோடு சேர்ந்த கட்சிகளும் ஒதுங்கிக் கொண்டன. இப்போது சரத் பொன்சேகாவின் பெயரை வைத்து அரசியல் நடத்திக் கொண்டிருப்பது ஜேவிபி மட்டும் தான். ஜேவிபியைப் பொறுத்தவரையில் பெரிதும் பலவீனமானதொரு கட்டத்தில் இருக்கிறது. ஐதேகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற அதன் கனவு தகர்ந்து போனபோது சரத் பொன்சேகா என்ற புளியங்கொம்பைப் பிடிப்பதை விட அதற்கு வேறு தெரிவே இருக்கவில்லை. அதனால் பொதுத்தேர்தல் வரைக்கும் சரத் பொன்சேகாவை முன்வைத்துப் போராட்டங்களை நடத்தும். அதற்குப் பிறகும் ஜேவிபி சரத் பொன்சேகாவுக்காக எந்தளவுக்குப் போராட்டங்களை நடத்தும் என்பது சந்தேகமே. சரத் பொன்சேகா விடயத்தில் அவருடன் ஒட்டிக் கொள்ள முனையும் அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்துகிறது அரசாங்கம். இதனால் அனைத்து அரசியல் சக்திகளுமே வில்லங்கத்தை எதற்கு விலை கொடுத்து வாங்க வேண்டும் என்று ஒதுங்கிக் கொள்ளவே விரும்புகின்றன. இது சரத் பொன்சேகாவின் நிலையைப் பெரிதும் கேள்விக்குள்ளாக்க ஆரம்பித்து விட்டது. சரத் பொன்சேகாவுக்குப் பொதுமன்னிப்பு வழங்க அரசாங்கம் தயாராக இல்லை. அதேவேளை அவரை சட்டப்படியாக வெளியே கொண்டு வருவதும் இலகுவான காரியமாக இருக்கப் போவதில்லை. இந்தக் கட்டத்தில் அவருக்காக குரல்கொடுத்து வந்த அரசியல் வட்டம் சுருங்கிப் போய்க் கொண்டிருப்பதால் எதிர்காலத்தில் அவர் யாருமே துணைக்கில்லாத ஒருவராக மாறிவிடக் கூடும். * வரலாற்றில் புலிகளை அழித்த தளபதி என்ற பெயருடன் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டவருக்கு இந்தக்கதி ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு வழங்கப்பட்ட இராணுவ சேவைப் பதக்கங்களைப் பறிக்கின்ற திட்டமும் கூட அரசாங்கத்திடம் இருப்பதாக பேச்சுகள் அடிபடுகின்றன. இப்போதெல்லாம் அவர் பற்றிய செய்திகள் குறைவடையத் தொடங்கியுள்ளன. வெளியாகும் செய்திகளின் மீதான மக்களின் ஆர்வம் குன்றத் தொடங்கி விட்டது. சரத் பொன்சேகா விவகாரம் மெல்ல மெல்ல மறக்கப்பட்டு வருவதையே இது உணர்த்துகிறது. சரத் பொன்சேகாவின் நிலையை அறியும் ஆர்வம் மக்களிடத்தில் மறையத் தொடங்கியிருப்பதால் ஊடகங்களும் அவரைப் பற்றிய செய்திகளை குறைத்துக் கொள்ளத் தொடங்கி விட்டன. இது அரசாரங்கத்துக்கு இன்னமும் வாய்ப்பாகவே அமையப் போகிறது. இந்தநிலை நீடிக்குமானால் வெகுவிரைவிலேயே சரத் பொன்சேகா யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டாலும் ஆச்சரியப்பட முடியாது. இந்தநிலைக்குக் காரணம் அவரைத் தவிர வேறெவராகவும் இருக்க முடியாது. அரசியல் ஆசை அவரை படுகுழிக்குள் கொண்டு போய்த் தள்விட்டிருக்கிறது. மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக அரசியல் நடத்துவதோ அல்லது நடத்த முனைவதோ தவறென்று கூறவரவில்லை. ஆனால் அவர் அரசியல் நடத்துவதற்குத் தெரிவு செய்த பாதைகளும் அதற்கான வழிமுறைகளும்- ஒரு இராணுவ அதிகாரி என்ற தோரணையில் இருந்ததே தவிர அரசியல்வாதி என்ற வகையில் அமைந்திருக்கவிலலை. * ஒரு தேர்ச்சிமிக்க அரசியல்வாதி சொல்லக் கூடாததை அவர் சொல்லத் தொடங்கியதும் செய்யக் கூடாததை அவர் செய்யத் தொடங்கியதும் தான் அவரது இந்த வீழ்ச்சிக்குக் காரணம். இந்தத் தவறுகள் தான் அவரை வரலாற்றின் பக்கங்களில் கைவிடப்பட்ட ஒருவராக மாற்றிக் கொண்டிருக்கிறது.
திங்கள், 5 ஏப்ரல், 2010
வரதராஜா பெருமாளுக்கு வடமாகாண ஆளுநர் பதவி
நாடு திரும்பியுள்ள வரதராஜா பெருமாளுக்கு அரசாங்கத்தின் பொறுப்புள்ள பதவியொன்றை வழங்குவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டமிட்டு வருவதாக தெரியவருகிறது. இதனடிப்படையில், வடக்கில் மாகாண சபையொன்றை நிறுவி, அதன் முதலமைச்சர் பதவியை வரதராஜ பெருமாளுக்கு வழங்க மகிந்த அதிகாரம் ஆலோசித்துள்ளதாக தெரியவருகிறது.
13 வது அரசியல் திருத்தத்தை அமுல்படுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரத்தை வழங்குமாறு இந்தியா தற்போது அழுத்தம் கொடுத்து வருவதன் காரணமாகவே ஜனாதிபதி மஹிந்த இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரியவருகிறது.
ஆளுனர் பதவி அல்லது முதலமைச்சர் பதவியின் பின்னர் சிங்களக் குடியேற்றங்களைத் துரிதப்படுத்தி வட கிழக்கு பிரதேசங்களின் இனச்செறிவை சீர்குலைக்கும் முயற்சிகளை இதே அரச துணைக்குழுக்களுடன் இணைந்து மேற்கொள்ளவும் இந்தியா ஆலோசனை வழங்கியுள்ளதாக கொழும்பிலிருந்து அரசியல் ஆய்வாளர் ஒருவர் கருத்துத்தெரிவித்துள்ளார்
ஐந்து வருடத்தின் பின்னர்தான் எங்களை விடுவாங்களாம் என்று இஞ்ச முகாமில கதைக்கிறாங்கள். உங்க என்னெண்டு கதைக்கிறாங்கள்?
ஐந்து வருடத்தின் பின்னர்தான் எங்களை விடுவாங்களாம் என்று இஞ்ச முகாமில கதைக்கிறாங்கள். உங்க என்னெண்டு கதைக்கிறாங்கள்? ஏதாவது தகவல் எங்களைப்பற்றி சொல்லுறாங்களா?
வெளி நாட்டில இருக்கிற எங்கட அமைப்புக்கள், சனங்கள் எங்களைப்பற்றி ஏதாவது கதைக்கிறார்களா? கிளி நொச்சியில் இருந்து ஒரு போராளியின் துணைவியார் இவ்வாறு கேட்டார். வெள்ளி கிழமை இந்த பெண் தனது துணைவரை பார்ப்பதற்காக வவுனியாவிற்கு சென்றார்.
அங்கு தனது துணைவனான ......... என்ற போராளி மேற்கண்டவாறு தனது மனைவியிடம் கூறி இருக்கின்றார். அவர் மேலும் விவரித்தார்.. நான் முகாமிற்கு இவர பார்க்க போனனான் இங்க கிளிநொச்சியிலதான் இருக்கிறம். தகரம் தந்தவங்கள் நிவாரண காசிற்கு கடிதம் தந்திருகின்றாங்கள் ஆனால் காசு இப்போதைக்கு இல்லையாம் என்று சொல்றாங்கள் நிறைய தடவை கச்சேரிக்கு போனம் ஆனால் காசு இன்னமும் வரவில்லை என்றுதான் சொல்லுகினம்.
தொழில் ஒன்றும் செய்யேலாதுதானே நிவாரணத்தோட இருக்கிறம். எனக்கு சைக்கிளும் இல்லை. பக்கத்து வீட்டு காரரிட்ட சைக்கிள் வாங்கிதான் வவுனியாவிற்கு இவரை பார்க்க நானும் தம்பியும் போறனாங்கள். இவர் உங்களிட்ட சொல்ல சொன்னார்... தங்களை 5 வருஷத்திற்கு வைச்சிருக்க போறாங்களாம் ஆனால் அது உண்மையோ பொய்யோ தெரியாது. கலியாணம் முடிச்ச போராளிகள் 1682 பேர் இருக்கினம் இவர்களை முன்னமே விடப்போறம் என்றும் சொல்றாங்களாம்.
அதோட புதிதாக ஒரு முகாம் அமைத்து கலியாணம் முடிச்ச ஆட்களை அங்க கொண்டுபோக போறாங்களாம் என்றும் சொன்னவங்களாம். எது உண்மை எது பொய் என்று தெரியாது அடிக்கடி மாத்தி மாத்தி கதைபாங்களாம்.போன வெள்ளி, சனி கிழமை காயப்பட்ட ஆட்களை விடுறது என்று அதற்கான கடிதங்களும் எல்லாருக்கும் கொடுத்தாங்கள் கூட்டிக்கொண்டுபோக பெற்றோர்கள் வந்திருந்தார்கள்.
ஆனால் கொஞ்சப்பேரைதான் விட்டவங்கள். என்று கூறியுள்ளார் அந்த போராளி. மேலும் தமக்கு அரச தொலைகாட்சி, வானொலி , பத்திரிகை செய்திகளை படிக்க கொடுப்பதாகவும் கூறியுள்ள போராளி தம்மை பார்க்க வரும் பெற்றோர்கள், உறவினர்கள் இணைய செய்திகள் சிலவற்றை அச்சிட்டு கொண்டு வந்து கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.
எங்கள எவ்வளவு காலத்திற்கு வைச்சிருக்க போறாங்கள் என்று தெரியாது ஆனால் ஆக குறைந்தது 5 வருஷம் என்று இங்க உள்ள ஆமி சொல்லுறாங்கள். வெளி நாட்டில இருக்கிற அமைப்புக்கள், மக்கள் ஏதாவது எங்கள எடுக்கிறதுக்கு அலுவல் பார்க்கிறாங்களா? அங்க என்ன நடக்குது? முடிந்தால் அறிய தாருங்கோ. எங்களை போன்ற சிறையில் உள்ள போராளிகளை பார்க்க வாறதுக்கு சில பெற்றோர், துணைவிமார் சரியான கஸ்டப்படுகினம்.
போக்குவரத்துக்கு காசு இல்லை, சிலபேருக்கு சைக்கிளும் இல்லை. இவர்களுக்கு முடிஞ்சால் இதுக்கு மட்டுமாவது கொஞ்சம் உதவி செய்யுங்கோ. சிலபேருக்கு உதவி கிடைச்சதாக கேள்விபட்டோம் நன்றி ஆனால் எம்மை போன்ற இயக்க கொடுப்பனவை நம்பி வாழ்ந்த போராளி குடும்பங்களுக்கு சரியான கஸ்டம். தயவு செய்து கைவிட்டுவிடாதீர்கள். எங்கள் வாழ்க்கை சிறையோடு முடிந்துவிடும் . எங்கள் பிள்ளைகளை கைவிட்டு விடாதீர்கள் ஏனென்றால் அதுதான் எங்கள் ஆறுதல்.
போராளிகள் எல்லோரும் காட்டி கொடுப்பதாக சிலர் ஏசுகின்றார்களாம். சிறைக்குள் இருந்து கொண்டு வெளியில் நடப்பதனை பற்றி என்னால் சொல்ல முடியாது. ஆனால் நாங்கள் நடக்குறது நடக்கட்டும் என்று சிறையிலேயே வாழ்க்கையினை கழிக்க தயாராகிவிட்டோம். விடுவாங்கள் என்ற நம்பிக்கை துளி கூட எமக்கு இல்லை. ஒரு குறிப்பிட்ட வீத போராளிகள் வெளியில் நடமாடி திரிகின்றார்கள் சிலர் வெளியே சென்றுள்ளார்கள். ஏன்? எப்படி? இதெல்லாம் நடக்கின்றது என என்னால் சொல்ல முடியாது.
ஆனால் பெரும்தொகையான போராளிகள் சிறையில்தான் உள்ளோம். ஒரு சிலரின் நடவடிக்கைகளுக்காக எங்களை கைவிட்டுவிட வேண்டாம். ஒன்றவிட்ட கிழமைதான் என்னை பார்க்க வருவினம் ஏதும் இருந்தால் சொல்லி விடுங்கோ. இவ்வளவும் அந்த போராளியினால் எமக்கு கூறும்படி தனது துணைவியாரிடம் சொல்லப்பட்டவை.
கிளிநொச்சியில் இருந்து வெள்ளிகிழமை காலை இரவல் சைக்கிளில் புறப்பட்ட அந்த போராளியின் துணைவியார் சனி மாலை வவுனியாவில் இருந்து வளர்ப்பதற்காக கோழி குஞ்சுகள் வாங்கி கொண்டு வந்துள்ளார். கிளியில் கைவிடப்பட்ட சைக்கிளை இராணுவத்தினர் சனங்களுக்கு கொடுக்க போகின்றார்களாம் அதற்காக தான் பதிந்து இருப்பதாகவும் சொன்னார்.
அதிர்ந்த ஆனந்தபுரச் சமர்: காவிய நாயர்களுக்கு வீரவணக்கம்
கடந்த வருடம் போர் உச்சக்கட்டமடைந்திருந்த வேளை, ஏப்பிரல் மாதத்தில் ஆனந்தபுரத்தில் தமிழீழ தேசிய தலைவர் அவர்கள் தங்கியிருந்த வீட்டை பெட்டி அடித்து அதனைச் சுற்றி வளைத்த இலங்கை இராணுவத்திற்கு எதிராக கடும் போர் மூண்டது. கேணல் தீபன் தலைமையில் முதலாவது அணி களமிறங்க, இராணுவ முன் நகர்வு வெகுவாகத் தடுக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட கடும் சமரை சமாளிக்க முடியாத இராணுவத்தினர், மேலதிக துருப்புக்களை வரவழைத்து முன்னேற முயன்றவேளை, தீபன் காயமுற்றார். அவருக்கு தோளில் காயம் ஏற்பட்டதன் காரணமாக தளபதி, விதுசா, மற்றும் துர்க்கா ஆகியோர் களமிறங்கினர். தலைவர் தங்கியிருந்த வீட்டை பெட்டியடித்து தாக்கி வந்த இராணுவத்தை, எதிர்த்து தாக்குதல் களத்தில் குதித்தனர் விதுசா மற்றும் துர்க்காவின் அணிகள். அகோரத் தாக்குதல் காரணமாக, பல இழப்புக்களைச் சந்தித்த இராணுவத்திற்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. இச் சமரில் கடாபி நேரடியாக களமிறங்கி பெட்டியடித்த இராணுவத்தை சுற்றி தாம் ஒரு பெட்டி அடித்து பாரிய தாக்குதலை தொடுத்தார். (அதாவது இராணுவத்தை சுற்றிவளைத்தார்) இதனை சற்றும் எதிர்பார்க்காத இராணுவம் பல இழப்புக்களைச் சந்திக்க நேர்ந்தது.
நேரத்திலேயே இலங்கை இராணுவம் உலகப் போர் மரபுகளை மீறும் வண்ணம் ஒரு ஈனச் செயலில் ஈடு படத் துணிந்தது. எதிரியை சமாளிக்க முடியவில்லை என்றதும் பேடித்தனமான செயலை அரங்கேற்றத் நினைத்தது இராணுவம். உடனடியாக தனது இராணுவத்தை 2 கி.மீட்டர் பின்வாங்கச் சொல்லி கட்டளை பிறப்பித்தது. சமரில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் உடனே தமது நிலைகளில் இருந்து பின் வாங்கி சுமார் 3 கிலோ மீட்டர் பின் நகர்ந்தனர். அப்போது இராணுவம் இழப்புக்களை தாங்க முடியாமல் பின் வாங்குவது போன்ற தோற்றப்பாடே மேலோங்கி இருந்தது. இராணுவம் பின் வாங்கிய சிறிது நேரத்திலேயே அங்கே பல எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன, நச்சுவாயுக் குண்டுகளும் பாஸ்பரஸ் குண்டுகளும் அவ்விடத்தில் மழையாகப் பொழிந்தன. இத் தாக்குதலில் காயமுற்றிருந்த கேணல் தீபன் வீரச்சாவை தழுவ, நச்சுக் குண்டின் தாக்குதலில் தளபதி விதுசா, துர்க்கா ஆகியோர் வீரச்சாவடைந்தனர். கடாபியின் அணிமீது எரிகுண்டு வீழ்ந்து வெடித்ததாகக் கூறப்படுகிறது. இறுதிநேரத்தில் 2 கால்களையும் அவர் இழந்ததாக களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேரத்திலேயே இலங்கை இராணுவம் உலகப் போர் மரபுகளை மீறும் வண்ணம் ஒரு ஈனச் செயலில் ஈடு படத் துணிந்தது. எதிரியை சமாளிக்க முடியவில்லை என்றதும் பேடித்தனமான செயலை அரங்கேற்றத் நினைத்தது இராணுவம். உடனடியாக தனது இராணுவத்தை 2 கி.மீட்டர் பின்வாங்கச் சொல்லி கட்டளை பிறப்பித்தது. சமரில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் உடனே தமது நிலைகளில் இருந்து பின் வாங்கி சுமார் 3 கிலோ மீட்டர் பின் நகர்ந்தனர். அப்போது இராணுவம் இழப்புக்களை தாங்க முடியாமல் பின் வாங்குவது போன்ற தோற்றப்பாடே மேலோங்கி இருந்தது. இராணுவம் பின் வாங்கிய சிறிது நேரத்திலேயே அங்கே பல எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன, நச்சுவாயுக் குண்டுகளும் பாஸ்பரஸ் குண்டுகளும் அவ்விடத்தில் மழையாகப் பொழிந்தன. இத் தாக்குதலில் காயமுற்றிருந்த கேணல் தீபன் வீரச்சாவை தழுவ, நச்சுக் குண்டின் தாக்குதலில் தளபதி விதுசா, துர்க்கா ஆகியோர் வீரச்சாவடைந்தனர். கடாபியின் அணிமீது எரிகுண்டு வீழ்ந்து வெடித்ததாகக் கூறப்படுகிறது. இறுதிநேரத்தில் 2 கால்களையும் அவர் இழந்ததாக களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
“இலட்சியத்தை வெல்லும் பணி”
ஏப்ரல் 8 இல் நடைபெறவுள்ள சிறி லங்கா நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் தமது பரப்புரையின் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், வாக்காளப் பெருமக்களோ தேர்தல் தொடர்பில் அக்கறையின்றி இருந்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஈழத் தமிழ் மக்களில் அரசியல் விழ்ப்புணர்வு அதிகம் மிக்கவர்கள் எனக் கருதப்படும் யாழ் குடாநாட்டு மக்களிடையே இத்தகையை அக்கறையின்மை அதிகமாக நிலவுகின்றமை இரட்டிப்புக் கவலையைத் தருகின்றது. * ஈழத் தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றை ஆய்வுக்கு உட்படுத்தும் போது, யாழ் குடாநாடே அதில் முன்னணிப் பாத்திரம் வகிப்பதை மறைப்பதற்கில்லை. ஏனைய பிரதேசங்களில் ஆகர்சமிக்க தலைவர்கள் காலத்துக்குக் காலம் உருவாகிப் பங்களிப்பு நல்கியிருந்த போதிலும், காத்திரமான பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்த போதிலும், தமிழர் அரசியலின் மையம் யாழ் குடாநாட்டிலேயே இருந்து வந்தது. தொடர்ந்தும்; இருந்து வருகின்றது. அத்தகைய யாழ் குடாநாட்டுத் தேர்தல் களம் இன்று கவனத்திற்கு உரிய ஒன்றாக மாறியுள்ள நிலையிலும், அங்கு வசிக்கும் வாக்காளப் பெருமக்கள் தேர்தலில் அக்கறையின்றி இருப்பதற்குப் பிரதான காரணம் எதுவாக இருக்க முடியும்? நாடாளுமன்ற முறைமைகளுக்கு ஊடாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்து கொள்வது முடியாதது என்ற புரிதலின் வெளிப்பாடாகவே ஆயுதப் போராட்டம் முகிழ்த்தது. இந்த ஆயுதப் போராட்டமானது தமிழ் மக்களின் உரிமைபெற்ற தேசம் எவ்வகையினதாக அமையும் என்ற மாதிரியைத் தமிழ் மக்களுக்குக் காண்பித்தது. அது மட்டுமன்றி நாடாளுமன்ற அரசியலுக்கு ஊடாக இது சாத்தியமற்றது என்ற நிதர்சனத்தையும் உறுதிப் படுத்தியது. 1977 இன் பின்னான எந்தவொரு தேர்தலிலும் தமிழ் மக்கள் உணர்வுடன் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. மாறாக, தேர்தல்களை அவர்கள் தேசிய விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புபட்ட ஒரு தந்திரோபாயமாகவே கருதியிருந்தனர். * கடந்த மே மாதத்தில் முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் தலைமை துடைத்தழிக்கப்பட்ட பின்னர் தமிழர் அரசியலில் ஒரு வெறுமை பரவியுள்ளதை மறைப்பதற்கில்லை. அதன் வெளிப்பாடே மக்களின் இன்றைய தேர்தல் தொடர்பிலான அக்கறையின்மை. தமிழ் மக்களுக்கு முன்னரும் தேர்தல்களில் உண்மையான அக்கறை இருந்திருக்கவில்லை. ஆனால், அத்தேர்தல்களில் பங்கு கொண்டு வாக்களிப்பதும், வாக்களிக்காமல் தவிர்ப்பதும் ஒரு தந்திரோபாய நடவடிக்கை என்ற புரிதல் அவர்களிடையே இருந்தது. தமிழ் மக்களின் தலைமை அரசியற் சக்தியாகத் திகழ்ந்த விடுதலைப் புலிகள் கூறியவாறு மக்கள் நடந்து கொண்டார்கள். அதாவது, தேர்தலில் பங்கெடுத்துக் கொள்வது ஒரு தந்திரோபாய நடவடிக்கையே என்பதை அவர்கள் ஏற்றுக் கொண்டிருந்தார்கள். இன்று தமிழ்த் தேசியத்தின் காவலர்கள் தாமே என்று கூறிக் கொண்டு களத்தில் நிற்பவர்கள், தாம் தேர்தல்களைத் தந்திரோபாய ரீதியில் பயன்படுத்துவதாகக் கூறிக் கொண்டாலும், தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளான தாயகம், தேசியம், தன்னாட்சி போன்றவற்றை வெற்றி கொள்ள எத்தகைய திட்டத்தைக் கொண்டுள்ளார்கள் என்பதைத் தெளிவு படுத்தவில்லை. இதுவே, மக்களின் தேர்தல் தொடர்பிலான அக்கறையின்மைக்குப் பிரதான காரணம். தேர்தல்களை ஒரு தந்திரோபாயமாக உயயோகிக்கின்றோம் என விடுதலைப் புலிகள் கூறிய பொழுது அவர்கள் சமாந்தரமாக ஆயுதப் போராட்டத்தை நடாத்திக் கொண்டிருந்தார்கள். ஆகையால், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கூற்றை நம்பி, ஏற்றுக் கொண்டு அதற்கேற்பச் செயற்பட்டார்கள். இன்று தேர்தல் களத்தில் நிற்பவர்களுக்கு தெளிவான செயற்திட்டம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழ் மக்களின் ஜீவாதாரக் கோரிக்கைளை வென்றெடுக்க என்ன வழி என்பது அவர்களுக்கே தெரியாத நிலையில், எந்த வழிமுறைகளுக்கு ஊடாக தமிழர்களின் அபிலாசைகளை வென்றெடுக்க முடியாது என முன்னர் பரப்புரை செய்து, அதனை மக்களை ஏற்றுக் கொள்ளச் செய்தார்களோ, அதே வழிமுறைகளுக்கு ஊடாக தாம் தமிழர்களின் அபிலாசைகளை வென்றெடுக்கப் போவதாக இன்று கூறும்போது மக்கள் அதனை நம்ப மறுப்பதில் வியப்பில்லை. எனவே, இன்று மக்களுக்கு இரண்டு விடயங்கள் புரிய வைக்கப்பட வேண்டும். * முதலாவது, நாங்கள் முன்னைய போராட்ட வடிவத்தை – அதாவது ஆயுதப் போரட்டம் சார்ந்த போராட்ட வடிவத்தை – முற்று முழுதாகக் கைவிட்டு ஜனநாயக வழிமுறைகளுக்கு ஊடாகப் போராடி(?) தமிழ் மக்களின் ஜீவாதாரக் கோரிக்கைகளை வென்றெடுக்கப் போகின்றோம் என்பதை மக்களுக்குத் தெளிவாகக் கூறியாக வேண்டும். இதற்கு அடிப்படையாக விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடம் அழிக்கப்பட்டு, அந்த அமைப்பின் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ள யதார்த்தத்தை பகிரங்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த நிலையில் தமிழ் மக்களின் இலட்சியத்துக்கான போரட்டத்தை முன்னெடுக்கும் பொறுப்பு தமிழ்த் தேசியத்தை ஆதரிக்கும் அரசியல்வாதிகளின் கைகளிலேயே உள்ளது என்ற யதார்த்தத்தை தமிழ் மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும். ஊடக அறிக்கைகளூடாகவோ, செவ்விகளூடாகவோ மாத்திரம் அதனைச் சாதித்துவிட முடியாது. மக்களின் காலடிக்குச் சென்று விடயங்களைத் தெளிவுபடுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அளப்பரிய தியாகங்களைப் புரிந்ததன் பிற்பாடே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டார்கள். எனவே, அவர்களுக்கு மாற்றீடாக அரசியல் நடத்த முன்வருபவர்களும் தமது நம்பகத் தன்மையை நிரூபித்தாக வேண்டும். அதற்குப் பின்னரே மக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியும். * இரண்டாவது விடயம். நாடாளுமன்ற மார்க்கமே தற்போது எம்முன்னே உள்ள ஒரேயொரு மார்க்கம் என்பதை மக்களுக்குப் புரியச் செய்வது இது மிகவும் கடினமான ஒரு செயன்முறையே ஆயினும் செய்யப்பட வேண்டிய ஒன்றே. இதற்கு முறையான நீண்டகாலச் செயற்திட்டம் ஒன்று அவசியம். அதிலே இலக்கு மாத்திரமன்றி இலக்கை அடைவதற்கான வழிமுறைகளும், குறித்த வழிமுறைகள் பயனளிக்காதவிடத்து மேற்கொள்ளப்படக் கூடிய சாத்தியமான மாற்று வழிமுறைகளும் தெளிவுபடுத்தப்பட வேண்டும். அவை மக்கள் முன் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரமும் பெறப்பட வேண்டும். இன்று களத்தில் நிற்கும் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் இடையே பாரிய இடைவெளி காணப்படுகின்றது. மக்களின் எண்ணங்களை விடுதலைப் புலிகள் பிரதிநிதித்துவம் செய்துவந்து நிலையில் முன்னர் இவ் இடைவெளி பெரிதாகத் தெரியவில்லை. தற்போது விடுதலைப் புலிகள் இல்லாத நிலையில் இந்த இடைவெளி தெளிவாகத் தெரிகின்றது. இந்நிலையில் மக்களின் ஜீவாதாரப் பிரச்சினைகளுக்கான மக்கள் போராட்டங்களை தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் முன்னெடுக்க வேண்டும். தடுப்பு முகாம்களில் வாடுவோரின் விடுதலை, மீள் குடியேற்றம் என்ற போர்வையில் மற்றுமொரு இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் விடுதலை, மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மக்களின் அடிப்படை வசதிகளை உறுதி செய்தலும், மேம்படுத்தலும், உயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் மீள் குடியேற்றம், சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலை, தொடரும் சிங்களக் குடியேற்றம் மற்றும் சிங்கள மயமாக்கல்களைத் தடுத்து நிறுத்துதல், சிதைக்கப்படும் தமிழர் நினைவுச் சின்னங்களைக் காப்பாற்றுதல், மனித உரிமை மீறல்களைத் தடுத்தல், தமிழ் மக்களின் கௌரவத்தைக் காப்பாற்றுதல் எனப் பொதுமக்களின் அன்றாடப் பிரச்சினைகள் எத்தனையோ உள்ளன. 2006 ஆம் ஆண்டின் முற்பகுதியின் பின்னர் சிறி லங்காவில் எங்குமே தமிழ் அரசியல் கட்சிகளால் மக்கள் போராட்டங்கள் எதுவும் நடாத்தப்பட்டதாக நினைவில் இல்லை. இந்நிலையில் அரசியற் கட்சிகளிடம் இருந்து மக்கள் விலகியிருப்பதில் வியப்பேதும் இல்லை. இது மாத்திரமன்றி இன்று மக்களிடையே விழிப்புணர்வு அதிகமாக உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்னர் கைக்கொண்ட அதே அணுகுமுறை காலத்துக்கு ஒவ்வாதது. பயன் தராதது. எனவே, புதிய அணுகுமுறை கையாளப்பட வேண்டும். அத்துடன் புதிய முகங்களும் அறிமுகப் படுத்தப்பட வேண்டும். மாற்றம் என்பது சடுதியாக நிகழும் ஒன்றல்ல. அது சூழலைப் பொறுத்து விரைவாகவோ அன்றி மெதுவாகவோ நிகழக் கூடும். எனினும் அதற்கு குறிப்பிட்ட காலம் அவசியம். * இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதனை அடையக் கூடியதான முறையான செயற்பாடுகள் மக்கள் ஒத்துழைப்புடன் சரியான திசையில் பயணிக்குமானால் இலட்சியத்தை வெல்லும் பணி இலகுவாக அமையும். அதற்குத் தேவை சரியான தலைமைத்துவமும் வழிகாட்டலுமே.
அடிப்படை வசதியின்றி அல்லல்படும் தமிழ் மக்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து அடிப்படை வசதிகளை இழந்த நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முதல் போரினால் பாதிக்கப்பட்டு வீடு வாசல்களை இழந்தவர்களுக்கு இதுவரை வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படவில்லை என அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். புனர்வாழ்வு அமைச்சு முஸ்லீம் கிராமங்களில் புனரமைப்பு பணிகளையும் அபி;விருத்தி பணிகளையும் மேற்கொண்டு வருகின்ற போதிலும் தமிழ் கிராமங்கள் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றன. செங்கலடி குமாரவேலியார் கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிக குடிசைகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக இவர்களை கவனிக்காது இருந்த ஆளும் கட்சியைச்சேர்ந்த அமைச்சர்கள் இத்தேர்தல் காலத்தில் பல வாக்குறுதிகளை வழங்கி வருகின்றனர். கிழக்கு மாகாணத்தில் உள்ள பெரும்பாலான தமிழ் கிராமங்கள் அடிப்படை வசதிகள் இன்றி புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுவதாக நமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். பல அரச சார்பற்ற நிறுவனங்களாலும் அரசினாலும் பல உதவித்திட்டங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மேற்கொள்ளப்பட்டாலும் கூட எதுவித உதவிகளும் கிடைக்காத நிலையில் பல தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் உண்மை. தேசத்தை கட்டி எழுப்புவோம் மகிந்த சிந்தனை யாவருக்கும் குடியிருப்பு வசதி என்றெல்லாம் பல திட்டங்கள் இருந்தாலும் இந்த திட்டங்களினூடாக தமிழ் மக்கள் பயனடைவதில்லை.
துயிலுமில்லத்தில் துரோகிகளின் விளம்பரங்கள்
தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்த சிங்களப் படைகளும் அதன் கைக்கூலிகளும் தமிழர்களுடைய வரலாற்று அடையாளங்களை அழித்தும் சிதைத்தும் வருவதுடன் அந்தச் சிதைவுகளைப் பயன்படுத்தி அவற்றின் மீது தமது தேர்தல் விளம்பரங்களைப் பிரசுரித்தும் இழிவு படுத்தல் செயற்பாடுகள் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றன. மாவீரர் துயிலிடங்கள், மாவீர்களின் நினைவுச் சின்னங்கள், நினைவுத் தூபிகள், தமிர்களின் வரலாற்றுச் சான்றுகள் என அனைத்தும் அழிக்கப்பட்டு வருகின்ற அதேவேளை அவற்றை இழிவுபடுத்தும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லம் சிங்களக் கைக்கூலிகளால் இடித்தழிக்கப்பட்டன. இந்த நிலையில் கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தின் முகப்புப் பகுதியில் தமிழின அழிப்பினை மேற்கொண்ட மகிந்த ராஜபக்ச மற்றும் அரசின் கைக்கூலியான ஈபிடிபியின் தலைவர் மற்றும் குழுவினரது விளம்பரங்கள் ஒட்டப்பட்டு மாவீரர்களை இழிவு படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஞாயிறு, 4 ஏப்ரல், 2010
அறம் சார்ந்த வீரம், அதுதான் தமிழ் தேசிய ராணுவத்தின் கட்டமைப்பு. இந்த உலகத்தில் எந்த ராணுவ வீரர்களுக்கும் இல்லாத ஒழுக்கம், தமிழ் தேசிய ராணுவத்திற்கு மட்டும்தான் உண்டு. இதற்காக தமிழர்கள் ஒவ்வொருவரும் கர்வப்பட்டுக் கொள்ளலாம். தமிழ் தேசிய ராணுவத்தை எமது தேசிய தலைவர் அறம் வழி நின்று கட்டியமைத்தார். அறத்தோடுத்தான் மறவர்களை உருவாக்கினார். எந்த நிலையிலும் ஒழுக்க நிலைக்கு எதிராக எமது வீரர்கள் நின்றது கிடையாது. எப்போதும் தமது வாழ்க்கையில் தனிமனித ஒழுக்கத்தை அவர்கள் தகர்த்தெறிந்ததில்லை. எண்ணம், செயல் அனைத்தும் முழுக்க முழுக்க தமது மக்களின் மீட்புக்காக மட்டும் செயல்பட்டது. தமது மண்ணின் விடுதலையே அவர்களின் உயிர் மூச்சாய் இருந்தது. காயங்களை துச்சமென மதித்து, களத்திலே காற்றாய் சுழன்று வீசினார்கள். புரவிகளின் கால்களைவிட, எமது புலிகளின் கால்கள் அதிவேகத்தில் பறந்தது. உலக அரங்கிலே எமது தமிழ் தேசிய ராணுவத்தைப் போன்று வீரத்திலும், விவேகத்திலும் ஒன்று சேர நின்றவர்கள் ஒருவரும் கிடையாது. எந்த ஒரு ராணுவமானாலும், எந்த நாட்டின் மீது போர் தொடுத்தாலும் அந்த நாட்டில் பெண்கள் பாலியல் வக்கிரங்களுக்கு உள்ளாக்கப்படுதல் என்பது இயல்பான நிகழ்வாக கருதப்பட்டது. அணு அளவு, அணுவின் துகள் அளவுகூட எமது வீரர்கள், எமது தேசிய தலைவரின் எண்ணங்களுக்கு எதிராக நடந்தது கிடையாது. சிங்கள மக்களே அவர்களின் மன சிம்மாசனங்களில் எமது வீரர்களை அமர வைத்து அழகு பார்க்கும் அளவிற்கு அவர்களின் அறவாழ்வு செழித்தோங்கி நின்றது. யாரோடும் சமரசம் இல்லாத ஒழுக்கத்திற்கு சொந்தக்காரர்கள் எமது தமிழ்தேசிய ராணுவ வீரர்கள். இதை எமது தேசிய தலைவர், தமது வாழ்க்கையின் மூலம், தமது நடவடிக்கையின் மூலம், தமது சொல்லின் மூலம், தமது செயலின் மூலம் நிகழ்த்திக் காட்டினார். அவரின் குனிதலும், நிமிர்தலும்கூட ஒழுக்கத்தின் அடிப்படையிலேயே இருந்த காரணத்தினால் விடுதலைப்புலிகள் என்கின்ற எமது தமிழ்தேசிய ராணுவம், ஒழுக்கத்திற்கு மாறாக எப்போதுமே நடந்தது கிடையாது என்பதற்கு சான்றுகள் தமிழீழ மண்ணிலே மட்டுமல்ல, சிங்கள தீவிலும் இரைந்து கிடக்கிறது. இவர்களைப்போல் கட்டுப்பாடும், சுய ஒழுக்கமும் கொண்ட வீரர்களை யாம் கண்டதில்லை என சிங்கள இளைஞர்கள் சிரித்த முகத்தோடு எமது தமிழ் தேசிய ராணுவத்தை வர்ணனை செய்கிறார்கள். போர் குணம் மிக்கவர்களாய் இருந்தாலும்கூட, போராளிகளாய் இருந்தாலும்கூட, அச்சமற்று களமாடும் ஆற்றல் கொண்டவர்களாய் இருந்தாலும்கூட, அநீதிக்கு துணைப்போக எமது தமிழ் தேசிய ராணுவம் எப்போதும் முயன்றது கிடையாது. அது வீரத்திற்கு வித்திட்ட, உலகத்திற்கு தமிழ் தேசியத்திற்கு அடையாளம் தந்த எமது தேசிய தலைவரின் கொடை. இப்படி களமாடிய மாவீரர்களின் வரிசையிலே பால்ராஜ், தீபன் போன்ற வீரப்புலிகளின் உன்னதங்களை போற்றிப்புகழ வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். யாழ் மாவட்டம் தென்மராட்சியின் போர்குணம் நிறைந்த மண்ணிலே பூத்தவன்தான் மாவீரன் தீபன். சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் அறிவியல் மாணவனாக சிறந்துயர்ந்த தீபன், தமது இனமக்களின் விடுதலை என்பது இதைவிடச் சிறந்ததென கருதி, வரலாற்றின் பக்கங்களில் வாசித்தறியப்படும் பெயராக தமது பெயரை பதிவு செய்வதின் அவசியத்தை உணர்ந்ததால், இயக்கத்தில் இணைந்தார். தீபனை இயக்கத்திற்கு அறிமுகப்படுத்திய மாவீரன் மேஜர் கேடில்ஸ் 14.2.1987 அன்று கைத்தடியிலே இடம்பெற்ற வெடிவிபத்தில் கள பலியானார். அவர் கண்டெடுத்த அருமை முத்துதான் தீபன் எனும் இயக்கப் போராளி. பகிரத குமார் 1984ல் தன்னை இயக்கத்தில் இணைத்துக் கொண்டதின் மூலம் தீபன் என பெயர்மாறிப் போனார். 1987ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 29ஆம் நாள் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படை மீறல்களால் ஏற்பட்ட பல்வேறு போர், பெரும் எழுச்சி வடிவமாகி, இந்திய ராணுவத்திற்கெதிரான போராக உருமாறியபோது, இந்திய அமைதிப்படை என்ற தமிழின அழிப்பு படைக்கு எதிரான சமரில் தீபன் கிளிநொச்சியில் ராணுவ பொருப்பாளராகவும், பால்ராஜ் முல்லைத்தீவின் ராணுவ பொருப்பாளராகவும் எமது தேசிய தலைவரால் நியமிக்கப்பட்டார்கள். இந்திய அமைதிப்படை அமைதிக்குப் பதிலாக ஆக்கிரமிப்புப்போரை அதிகரித்த போது, தமிழீழத்தில் முல்லைத்தீவும், கிளிநொச்சியும்தான் பெரும் எதிர்ப்பை சந்தித்தன. 1988ஆம் ஆண்டில் வன்னிப்பகுதியின் ராணுவ பொருப்பாளராக ஆற்றல் வாய்ந்த, அசைக்க முடியாத, மண்ணின் மீது மதிப்பும், அன்பும் கொண்ட மாபெரும் போராளி பால்ராஜூக்கு துணையாக தீபன் நியமிக்கப்பட்டபோது, இவர்கள் வழி நடத்திய சமர்களின் ஆற்றல், வரலாற்றுப் பதிவுகளாய் மாறும் என இவர்களே நம்பி இருக்க மாட்டார்கள். பல்வேறு சிறப்பு வாய்ந்த வெற்றிகளை இந்த இணையர்கள் இயக்கத்தின் முடிகளில் சூட்டி மகிழ்ந்தார்கள். அதற்கான இழப்புகளை குறித்து அவர்கள் எந்த நிலையிலும் தம்மை குறைத்துக் கொண்டது கிடையாது. அவர்களின் எண்ணங்களெல்லாம் எமது தேசம் ஒன்றுதான். எமது தேசிய தலைவரின் கட்டளையே அவர்களின் இதயங்களில் ஒலிக்கும் இனிய வார்த்தை. எமது தேசிய தலைவரின் சொற்களே அவர்களை வழி நடத்தும் ஒளி விளக்கு. இந்திய அமைதிப்படை 1990ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழீழத்தை விட்டு தோற்று வெளியேறியபோது, ஜூன் மாதத்தில் மீண்டுமாய் சிங்கள-பௌத்த பேரினவாதிகளுக்கும், தமிழ் தேசியத்திற்கும் இடையேயான சமர் தொடங்கியது. மாங்குளம், கொக்காவில் முகாம் தகர்ப்பு ஆகியவை, பிரிகேடியர் பால்ராஜ் சமர்களத்தில் கண்ட வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளாகும். 1991ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆணையிரவு முகாம் மீதான எதிர்தாக்குதல் சமர், உலகில் உள்ள எந்த ராணுவமும் நிகழ்த்தாத மாபெரும் சிறப்புமிக்க, பெருமைமிக்க வீரத்தை, விவேகத்தை, ஆற்றலை, கண்ணியத்தை, துல்லியமான பகுப்பாய்வு திட்டத்தை வகுத்தளித்த தேசிய தலைவரின் எண்ணங்கள், ஆணையிரவு வெற்றியாக தமிழீழ வரலாற்றில் இடம்பிடித்தது. 1992ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சார்ல்ஸ் அந்தோணி சிறப்புப்படையின் தளபதியாக மாவீரன் பால்ராஜ் நியமிக்கப்படுகிறார். அதே காலக்கட்டத்தில் தீபன், வன்னிப்பகுதிக்கு தளபதியாகிறார். இந்த இருவரின் இணைப்பு, இதயபூமி என்றழைக்கப்பட்ட மண்கின்டி மலைமீதான சமர், வரலாற்றில் இதுவரை எவராலும் அழிக்கமுடியாத பெரும் வெற்றியை தேடித் தந்தது. அதோடு தீபனின் வீரத்தை விளக்கிச்சொல்ல யாழ்தேவி மற்றும் தவளைப்பாய்ச்சல் சமர்கள் எதிராளிக்கூட வியந்து பாராட்டும் விளைச்சலை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பெற்றுத் தந்தது. 93 செப்டம்பரில் நடைபெற்ற இச்சமரில் பால்ராஜூக்கு ஏற்பட்ட காயத்தால், படை களத்திலிருந்து வெளியேறிய பால்ராஜின் வெற்றிடத்தை தீபன் நிரப்பி, சிங்கள பேரினவாத ராணுவத்தை விரட்டியடித்து, மாபெரும் முறியடிப்பு சமரை நிகழ்த்திக் காட்டினார். ராணுவ வரலாற்றில் மண் குவியலுக்கு இடையே நின்று சமர் புரியும் புதிய யுக்தியை நிகழ்த்தி, சிங்கள ராணுவத்தை விரட்டி அடித்து, அவர்களின் உளவியலை உடைத்துப் போட்டதோடு, ராணுவ கட்டுப்கோப்பை சிதறடித்தப் பெருமை தீபனுக்கே உண்டு. இதன் மூலம் இயக்கத்திற்கு புதிய புதிய ராணுவ கருவிகளை சிங்கள ராணுவம் வாரி வழங்கிவிட்டு ஓடி ஒளிந்துவிட்டது. பூநகரி முகாமை தீபனும், தீபன் தலைமையிலான தமிழ் தேசிய ராணுவமும், பானு தலைமையிலான தமிழ் தேசிய ராணுவமும் இணைந்து நடத்திய பெரும் சமர், அவர்களை விரட்டி அடித்ததோடு, அப்போதும் அவர்கள் வாரி வழங்கிய கருவிகளும், குறிப்பாக விசைப்படகுகளும் இயக்கத்திற்கு கடற்புலிகள் உருவாக காரணமாக அமைந்தது. 1993ல் நடைபெற்ற இச்சமர், இதுவரை சமன் செய்யப்படாத அளவிற்கு பெரும் பெருமைக்குரியதாக இன்றுவரை கருதப்பட்டுக் கொண்டிருக்கிறது. 1994ஆம் ஆண்டு இலங்கையின் அன்றைய அதிபர் சதிலீலாவதி சந்திரிகா பொறுப்பில் இருந்தபோது, நடைபெற்ற பேச்சுவார்த்தை முறிந்து போனதால், 95ல் மீண்டுமாய் ஒருசமர் நடைபெற்ற போது, தமது ஆற்றல் வாய்ந்த பங்களிப்பை அழுத்தமாய் பதிவு செய்த, அளப்பரியா ஆற்றல் வாய்ந்தவன் தீபன் எனும் போராளி. யாழ்ப்பானம் இயக்கத்தின் கரங்களிலிருந்து நழுவியப்போது, வன்னியை தமது தளமாக அமைக்க, தலைமை முடிவெடுத்தது. அந்த காலக்கட்டத்தில் தலைமைக்கு பெரும் இடையூறாக இருந்தது, முல்லைத்தீவு ராணுவ முகாம். அதை அகற்றுவதின் மூலமே வன்னிப்பகுதியில் தலைமையகம் சிறப்பாக செயல்படும் என்பதை அறிந்த எமது தலைமை, தீபனை அழைத்து, முல்லைத்தீவு ராணுவ முகாமை அகற்றுவதற்கான திட்டத்தை அளிக்கச் சொன்னபோது, மிகச் சிறப்பான ஒரு திட்டத்தை தீபன் வகுத்தளித்து, எமது தேசிய தலைவரின் பெரும் பாராட்டுதலை பெற்றார். அந்த திட்டத்தின்படி தாக்குதல் நடக்கவும் தேசிய தலைவர் கட்டளையிட்டபோது, தீபனின் திறமை மிக சிறப்பாக வெளிப்பட்டது. ஜூலை 18, 1996 தமிழீழ விடுதலை வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்த ஒரு பெரும் தாக்குதல் அது. முல்லைத்தீவு முகாம் தகர்க்கப்பட்டு, சிங்கள ராணுவத்தினர் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு, பெரும் கருவிக் குவியலை எமது இயக்கத்தின் கரங்களிலே ஒப்புவித்து, ஓடி ஒளிந்தது சிங்கள ராணுவம். இந்த படையெடுப்புதான் எமது தேசிய ராணுவத்தை கரந்தடி தாக்குதலிலிருந்து தடம்மாற்றி, மரபுவழி சமருக்கு இட்டுச் சென்றது என்று குறிப்பிடலாம். அதேபோன்றே 1997ல் சிங்கள ராணுவம் ஜெயசிக்குரூ என்கின்ற ராணுவ நடவடிக்கையை தொடங்கியபோது, புளியங்குளத்தை காக்கும் பொறுப்பு புலிப்படையின் நம்பிக்கை நாயகன் தீபனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஓமந்தையையும், நெடுங்கேனியையும் எளிதாக கைப்பற்றிய சிங்கள ராணுவம், புளியங்குளத்தை கைப்பற்றமுடியாமல் திணறியது. சிங்கள ராணுவத்தை திணறடித்த ஆற்றல் வாய்ந்த களவீரராக களமாடினார் தீபன். இன்றைய தினம் துரோகத்தின் வடிவமாய் திகழும் கருணா என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரன், பலநேரங்களில் ஜெயசிக்குரூ ராணுவ நடவடிக்கை காலங்களில், தாம் வன்னிப்பகுதியின் கட்டளை தளபதியாக நின்று களமாடியதாக கதைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் கருணாவின் களப்பணிக்கு கரம் இணைத்த ஆற்றல் வாய்ந்த அறவீரன் தீபன் என்பதை கருணா, திட்டமிட்டு மறைத்து வருகிறார். அதேபோன்றே 1998ல் சத்ஜெய எனும் ராணுவ நடவடிக்கையை சதிராடிய புலிப்படைக்கு தலைமை தாங்கியவர் தீபன் என்பதை நாம், மறுமுறை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். கிளிநொச்சியை ஓயாத அலைகள் 2ன் மூலம் கைப்பற்றியபோது, தீபனின் பங்களிப்பு அதில் மிகுந்து காணப்பட்டது என்பதை வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது. 18 மாதங்கள் போராடி மீட்ட ஆணையிரவை வெறும் மூன்று வாரங்களில் கைப்பற்றி, தமிழ் வீரத்தை, விடுதலைப்புலிகளின் போர் நுணுக்கத்தை, உலகறிய செய்ய காரணமான தீபனை நாம் இப்போது நினைத்துப் பார்க்கிறோம். இப்படி உலகே வியக்கும் வண்ணம் களப்பணியாற்றிய தீபன், பிரிகேடியர் பால்ராஜோடு இணைந்து ஆற்றிய அளவிட முடியாத தாக்குதலும், ஆணையிரவு களத்தில் தாம் காற்றைவிட மிக வேகமாக களமாடிய வீரமும் இன்றுவரை வியப்புக்குரியதாக நம்மை உற்றுப்பார்க்க வைக்கிறது. 24 ஏப்ரல் 2000 ஆணையிரவை மீண்டும் கைப்பற்றி விடலாம் என்ற கனவோடு சிங்கள பேரினவாத அரசு அக்கினிக்கீலா என்ற நடவடிக்கையை மேற்கொண்டபோது, அந்த நடவடிக்கையை சிதறடித்து, இலங்கை ராணுவத்தின் 55 மற்றும் 53 படை அணியை விரட்டி அடித்த பெரும் சமரின் கட்டளை தளபதியாக தீபன் களத்தில் இருந்தார் என்பதே நம்மை மேலும் உறுதியானர்வர்களாக மாற்ற வைக்கிறது. இப்படி பல்வேறு களங்களை நாம் கண்டு கொண்டே இருக்கலாம். தீபன் அளவிட முடியாத வீரத்தின் விளைநிலம். தாயக மண்ணை நெஞ்சார நேசித்த மாவீரன். சமர் களங்களின் நாயகன் பால்ராஜூக்கு தோளோடு தோள் நின்ற உறவு. பால்ராஜ் என்னும் ஆற்றல் வாய்ந்த பாசறையில் வார்த்தெடுக்கப்பட்ட தீபன்அம்மான், நம்முடைய மனங்களிலிருந்து நீங்காத பேராற்றல் பெற்றவன். இன்று ஆற்றல் வாய்ந்த இந்த வீரமறவர்கள் நம்மிடையே இல்லை. காற்றாகி தமிழீழத்திலே அவர்கள் தவழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தாயக மண் அடிமை விலங்கை உடைத்து, புதிய பரிமாணம் அடைந்து புத்தொளி வீசுவதை காண, அந்த வீரப்புலிகள் விழிகளைத் திறந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எதற்காக களமாடினார்களோ, அவர்களின் வாழ்வு எந்த திசையை நோக்கி பயணித்ததோ, அந்த திசையை நோக்கி நாம் வணங்குகிறோம். அவர்களுக்கு வீர வணக்கம் செய்கிறோம். அவர்களின் எண்ணங்களை ஈடேறச் செய்ய வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. அவர்களின் வீரத்தை குறித்து புகழ் பேசிக் கொண்டிருப்பது மட்டுமே நமது கடமை அல்ல. அவர்கள் எதை செய்ய முனைந்தார்களோ அதை அடைய நாம் ஆற்ற வேண்டிய பெரும்பணி தான் நம் முன்னே குவிந்து கிடக்கிறது. இதுதான் நமது காலத்தின் கடமை. இந்த வரலாற்றுப் பணியை நாம் உடனடியாக செய்ய வேண்டிய கட்டாயம் நமக்குள் புதைந்திருக்கிறது. நாம் புத்தெழுச்சி மிக்க தமிழீழத்தைப் படைத்து, அதை அவர்களின் வீர வாழ்வுக்கு அர்ப்பணிக்கும்போதுதான், அந்த வீர மறவர்களின் எண்ணங்களும், ஏக்கங்களும் நிறைவு காணும். அதை செய்ய வேண்டிய நாளுக்காக நாம் காத்திருக்க வேண்டாம். இன்றே, இப்போதே செய்வோம். ஈகப் போராளிகள் பால்ராஜ், தீபன் அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த வீரவணக்கம். தமிழீழம் நமது வீரர்களின் கனவு.
ஒரு அணியாக செயற்படுமாறு தமிழ் தேசிய கட்சிகளுக்கு உலகத்தமிழர் பேரவை இறுதி நேர வேண்டுதல்!
தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்காக திடசங்கற்பம் பூண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியும் ஒரு அணியாக செயற்படுமாறு இறுதிநேர அழைப்பாக பெரிய வெள்ளி தினத்தை முன்னிட்டு உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வணக்கத்துக்குரிய எஸ்.ஜே.இம்மானுவேல் கேட்டுள்ளார்.
எதிர்வரும் ஏழாம் திகதி இலங்கைத்தீவு முழுவதும் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் உலகத்தமிழர் பேரவையின் தலைவர் வெளியிட்டுள்ள வேண்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:அரச ஆதரவு வேட்பாளர்களையும் மற்றைய சுயேட்சை வேட்பாளர்களையும் போலன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களும் தமிழ் தேசிய மக்கள் முன்னனி வேட்பாளர்களும் தமிழ் மக்களின் விடுதலைக்காக இதயசுத்தியுடன் உழைத்துவருவதை உலகத்தமிழர் பேரவை நன்கறியும்.
எவ்வாறான வழிமுறையில் எமது இலக்குகளை அடையமுடியும் என்பதில்தான் வேறுபாடுகள் வந்திருக்கின்றன. ஆனால் சாதாரண வாக்காளர்களாகிய மக்கள் அதனை வேறுபடுத்தி அறிந்துகொள்ளமுடியாது.
எதிர்வரும் ஏழாம் திகதி இலங்கைத்தீவு முழுவதும் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் உலகத்தமிழர் பேரவையின் தலைவர் வெளியிட்டுள்ள வேண்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:அரச ஆதரவு வேட்பாளர்களையும் மற்றைய சுயேட்சை வேட்பாளர்களையும் போலன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களும் தமிழ் தேசிய மக்கள் முன்னனி வேட்பாளர்களும் தமிழ் மக்களின் விடுதலைக்காக இதயசுத்தியுடன் உழைத்துவருவதை உலகத்தமிழர் பேரவை நன்கறியும்.
எவ்வாறான வழிமுறையில் எமது இலக்குகளை அடையமுடியும் என்பதில்தான் வேறுபாடுகள் வந்திருக்கின்றன. ஆனால் சாதாரண வாக்காளர்களாகிய மக்கள் அதனை வேறுபடுத்தி அறிந்துகொள்ளமுடியாது.
ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணும் மோசடி - 12 இந்திய கணனி தொழில் நுட்பவியலாளர்கள் ஈடுபட்டனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்கு எண்ணூம் போதான மோசடிகளில் ஈடுபடுவதற்காக 12 கணனி தரவு நிரற்படுத்தும் தொழில் நுட்ப நிபுணர்கள் இந்தியாவில் இருந்து மஹிந்த அரசினால் வரவளைக்கப் பட்டிருந்தனர். இவ்வாறு சிங்கள இணையதளம் ஒன்று கூறியுள்ளது. இந்த 12 பேரும் இந்தியாவில் பிரபல கம்பனி ஒன்றில் பணி புரிகின்றவர்கள். இந்த கம்பனி இலங்கையில் பல்வேறு வியாபாரங்களை மஹிந்த அரசின் மூலம் செய்துவருகின்றனர் எனவும் கூறப்படுகின்றது.
இந்து சமுத்திரத்தின் கேந்திரமுக்கியத்துவமும், ஈழத்தமிழர்களின் எதிர்காலமும்
உலக வரைபடத்தில் ஒரு புள்ளியாய் தெரிகின்ற இலங்கைத் தீவு, இன்றைய பூகோள அரசியலில், வரலாற்றில் என்றுமில்லாத கவனத்திற்குரிய ஒரு நாடாக மாறியுள்ளது. சுமார் மூன்று தசாப்தகாலமாக இனக்குழும மோதுகை இடம்பெற்றபோது, சுனாமி பேரனர்த்தம் சம்பவித்த போது, ஏன் சுமார் 40 ஆயிரம் மக்கள் குறுகிய சில நாட்களுக்குள் படுகொலைசெய்யப்பட்ட போது காட்டாத அக்கறையை இன்று சர்வதேச சமூகம் செலுத்துவதற்கான காரணம் என்ன? இலங்கைத் தீவைச் சார்ந்த பெரும்பாலானவர்களுக்கு தமது சிறுபராயத்திலேயே இதற்கான விடை தெரிந்திருந்தது. அதாவது, இலங்கைத் தீவானது இந்து சமுத்திரத்தின் முத்து என சிறு வயதிலிருந்தே பலர் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அதனுடைய ஆழ அகலங்களை, அது பூகோள அரசியலில் செலுத்தக்கூடிய தாக்கங்களை, அதனால் புதிய உலக ஒழுங்கில் ஏற்படக்கூடிய விளைவுகளை ஆக்கபூர்வமான முறையில் ஆய்வு செய்திருக்கவில்லை அல்லது செய்துகொள்ளப்பட்;ட ஆய்வுக்கமைய தமிழ்த் தேசிய அரசியல் நகரவில்லை என்ற சிந்திப்பு இன்றைய சூழலில் தவிர்க்க முடியாததாகிறது.
கடந்த மே 18 ற்குப் பின்னர் பூகோள அரசியலில் இலங்கைத் தீவு காட்டிவரும் வகிபாகம் இந்த சிந்திப்பிற்கான வலுப்படுத்தல் காரணி. இதனடிப்படையில், எதிர்காலத்தை நோக்காகக் கொண்டு இலங்கைத் தீவின் முக்கியத்துவத்தை ஆய்வுக்குட்படுத்துவோம். இலங்கைத் தீவினுடைய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தன்மை, சர்வதேச சக்திகளின் நலன்களை பூர்த்தி செய்வதற்கான ஒரு வடிகாலாக இருந்து வருகிறது. இதன் நிமிர்த்தமே இலங்கைத் தீவில் ஒரு ஸ்திரத்தன்மை ஏற்படவேண்டும் என்பதில் சர்வதேச சக்திகள் கவனம் செலுத்தி வருகின்றன. அந்த கவனச்செலுத்தியே சமகால பூகோள அரசியலில், இலங்கைத் தீவானது பேசுபொருளாக மாறியிருப்பதற்கான காரணமாகிறது. பூகோள அரசியலில், பல்வேறு சர்வதேச சக்திகள் ஆதிக்கம் செலுத்துகின்றன அல்லது ஆதிக்கம் செலுத்த முனைகின்றன. இது பலதுருவ அரசியல் பொருளாதாரப் போட்டிகளுக்கு கால்கோலாகிறது. ஆனால், எல்லா ஆதிக்க சக்திகளும் தாம் மட்டும் செல்வாக்குச் செலுத்தக்கூடிய ஒரு மைய அரசியலையே விரும்புகின்றன. அதற்காகவே முனைப்புக் காட்டி வருகின்றன. இதனடிப்படையிலேயே குறிப்பிட்ட நாடுகளின் வெளியுறவுக் கொள்கையும் அமைகிறது. பல சர்வதேச சக்திகளின் ஒரு மையக் வெளியுறவுக் கொள்கை முட்டிமோதும் களமாக இலங்கைத் தீவு மாறியிருக்கிறது. இன்றைய நிலையானது இராஜபக்ஸ நிர்வாகத்துக்கு குறுங்காலத்துக்கு சாதகமானதாக இருக்காலம். ஆனால், இலங்கைத் தீவினுடைய எதிர்காலத்துக்கான ஒரு புதைகுழி தோண்டும் நடவடிக்கையாகவே அரங்கேறி வருகிறது. ஏனெனில், இலங்கைத் தீவில் ஸ்திரத்தன்மை ஏற்பட வேண்டும் என எதிர்பார்க்கும் ஒவ்வொருதரப்புமே தத்தமது தனிப்பட்ட தேசியநலனை கருத்திற்கொண்ட செயற்படுகின்றன. ஆனால், தனிப்பட்ட தேசிய நலன்களுக்கிடையில் ஒரு பொதுமையப் புள்ளி உருவாகவில்லை. ஆதலால், முரண்பாடுகள் தோற்றம் பெற்றுவருகின்றன. இந்த முரண்பாடென்பது இலங்கைத் தீவில் யார் செல்வாக்கு செலுத்துவதென்பது என்பதில் ஆரம்பமடைகிறது. ஏனெனில், இலங்கத் தீவானது இந்து சமுத்திரத்தின் கேந்திர முக்கியத்துவம் மிக்க ஒரு தேசமாக திகழ்கிறது. ஆபிரிக்காவினதும், அவுஸ்ரேலியாவினதும் தென்முனையில் 10000 கிலோ மீற்றர் விசாலமானதாக இந்து சமுத்திரம் பரிணமித்திருக்கிறது.
இந்த இந்து சமுத்திரமானது அந்தமான் கடல், ஆபிரிக்கக் கடல், வங்காள விரிகுடா, ப்புளோரஸ் கடல், பெரிய அவுஸ்ரேலிய வளைவு, எதேன் வளைகுடா, ஓமான் வளைகுடா, ஜவாக் கடல், மொசாம்பிக் கால்வாய், பெர்ஸ்சியன் வளைகுடா, செங்கடல், சவுகடல், மலாக்க நீரிணை மற்றும் தீமோர் கடல் போன்றவற்றை உள்ளடக்கி பிரமாண்டமாக பரிணமித்திருக்கிறது. நாற்பத்து ஏழு நாடுகள் இந்து சமுத்திரத்தை தமது கடற்கரைகளாக அல்லது கடல் எல்லைகளாக கொண்டுள்ளன. எட்டு நாடுகளிற்கு உரித்துடைய பிரதானமான பன்னிரெண்டு துறைமுகங்களை இந்து சமுத்திரம் உள்ளடக்குகிறது. மத்திய கிழக்கு, கிழக்கு ஆசியா மற்றும் ஆபிரிக்காவை ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுடன் இணைக்கும் ஒரு பிரதான கடலாக இந்து சமுத்திரம் திகழ்கிறது. ஜப்பானுடைய 80 சதவீத எண்ணையும், சீனாவினுடைய 60 சதவீத எண்ணையும் மலாக்க நீரிணையூடாவே விநியோகிக்கப்படுகின்றன. சுமார் 70 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான எண்ணை விநியோகம் குறித்த நீரிணையூடாக இடம்பெற்று வருகிறது. அண்ணளவாக 40 சதவீத எண்ணை வளமானது இந்து சமுத்திர கரைகளுக்கு அப்பாலிந்தே உற்பத்தியாகிறது. உலகில் இடம்பெறும் பெரும்போர்களுக்கு எண்ணை ஒரு பிரதான காரணமாக இருப்பதையும், இந்து சமுத்திரத்தில் மலாக்க நீரிணை இருப்பதையும் நினைவிற்கொள்க. இந்து சமுத்திரத்தை கட்டுப்படுத்துபவர்களாலேயே ஆசியாவில் ஆதிக்கம் செலுத்தமுடியும். இருபத்தோராம் நூற்றாண்டின் பிரதானமான ஏழு கடல்களுக்கு இந்து சமுத்திரமே மிக முக்கியமானது. உலகினுடைய தலைவிதி என்பது இந்த சமுத்திரத்திலேயே நிர்ணயிக்கப்படும் என்று அமெரிக்காவின் முன்னால் ரியல் அட்மிரல் அல்பிரேட் தயார் மஹான் தெரிவித்திருந்தார். இலங்கைத் தீவினுடைய கேந்திரமுக்கியத்துவம் என்பது இந்து சமுத்திரத்திலும், ஆசியாவிலும் அமைந்திருப்பதால் இரட்டிபுப் பெறுமதியடைகிறது.
கடந்த மே 18 ற்குப் பின்னர் பூகோள அரசியலில் இலங்கைத் தீவு காட்டிவரும் வகிபாகம் இந்த சிந்திப்பிற்கான வலுப்படுத்தல் காரணி. இதனடிப்படையில், எதிர்காலத்தை நோக்காகக் கொண்டு இலங்கைத் தீவின் முக்கியத்துவத்தை ஆய்வுக்குட்படுத்துவோம். இலங்கைத் தீவினுடைய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தன்மை, சர்வதேச சக்திகளின் நலன்களை பூர்த்தி செய்வதற்கான ஒரு வடிகாலாக இருந்து வருகிறது. இதன் நிமிர்த்தமே இலங்கைத் தீவில் ஒரு ஸ்திரத்தன்மை ஏற்படவேண்டும் என்பதில் சர்வதேச சக்திகள் கவனம் செலுத்தி வருகின்றன. அந்த கவனச்செலுத்தியே சமகால பூகோள அரசியலில், இலங்கைத் தீவானது பேசுபொருளாக மாறியிருப்பதற்கான காரணமாகிறது. பூகோள அரசியலில், பல்வேறு சர்வதேச சக்திகள் ஆதிக்கம் செலுத்துகின்றன அல்லது ஆதிக்கம் செலுத்த முனைகின்றன. இது பலதுருவ அரசியல் பொருளாதாரப் போட்டிகளுக்கு கால்கோலாகிறது. ஆனால், எல்லா ஆதிக்க சக்திகளும் தாம் மட்டும் செல்வாக்குச் செலுத்தக்கூடிய ஒரு மைய அரசியலையே விரும்புகின்றன. அதற்காகவே முனைப்புக் காட்டி வருகின்றன. இதனடிப்படையிலேயே குறிப்பிட்ட நாடுகளின் வெளியுறவுக் கொள்கையும் அமைகிறது. பல சர்வதேச சக்திகளின் ஒரு மையக் வெளியுறவுக் கொள்கை முட்டிமோதும் களமாக இலங்கைத் தீவு மாறியிருக்கிறது. இன்றைய நிலையானது இராஜபக்ஸ நிர்வாகத்துக்கு குறுங்காலத்துக்கு சாதகமானதாக இருக்காலம். ஆனால், இலங்கைத் தீவினுடைய எதிர்காலத்துக்கான ஒரு புதைகுழி தோண்டும் நடவடிக்கையாகவே அரங்கேறி வருகிறது. ஏனெனில், இலங்கைத் தீவில் ஸ்திரத்தன்மை ஏற்பட வேண்டும் என எதிர்பார்க்கும் ஒவ்வொருதரப்புமே தத்தமது தனிப்பட்ட தேசியநலனை கருத்திற்கொண்ட செயற்படுகின்றன. ஆனால், தனிப்பட்ட தேசிய நலன்களுக்கிடையில் ஒரு பொதுமையப் புள்ளி உருவாகவில்லை. ஆதலால், முரண்பாடுகள் தோற்றம் பெற்றுவருகின்றன. இந்த முரண்பாடென்பது இலங்கைத் தீவில் யார் செல்வாக்கு செலுத்துவதென்பது என்பதில் ஆரம்பமடைகிறது. ஏனெனில், இலங்கத் தீவானது இந்து சமுத்திரத்தின் கேந்திர முக்கியத்துவம் மிக்க ஒரு தேசமாக திகழ்கிறது. ஆபிரிக்காவினதும், அவுஸ்ரேலியாவினதும் தென்முனையில் 10000 கிலோ மீற்றர் விசாலமானதாக இந்து சமுத்திரம் பரிணமித்திருக்கிறது.
இந்த இந்து சமுத்திரமானது அந்தமான் கடல், ஆபிரிக்கக் கடல், வங்காள விரிகுடா, ப்புளோரஸ் கடல், பெரிய அவுஸ்ரேலிய வளைவு, எதேன் வளைகுடா, ஓமான் வளைகுடா, ஜவாக் கடல், மொசாம்பிக் கால்வாய், பெர்ஸ்சியன் வளைகுடா, செங்கடல், சவுகடல், மலாக்க நீரிணை மற்றும் தீமோர் கடல் போன்றவற்றை உள்ளடக்கி பிரமாண்டமாக பரிணமித்திருக்கிறது. நாற்பத்து ஏழு நாடுகள் இந்து சமுத்திரத்தை தமது கடற்கரைகளாக அல்லது கடல் எல்லைகளாக கொண்டுள்ளன. எட்டு நாடுகளிற்கு உரித்துடைய பிரதானமான பன்னிரெண்டு துறைமுகங்களை இந்து சமுத்திரம் உள்ளடக்குகிறது. மத்திய கிழக்கு, கிழக்கு ஆசியா மற்றும் ஆபிரிக்காவை ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுடன் இணைக்கும் ஒரு பிரதான கடலாக இந்து சமுத்திரம் திகழ்கிறது. ஜப்பானுடைய 80 சதவீத எண்ணையும், சீனாவினுடைய 60 சதவீத எண்ணையும் மலாக்க நீரிணையூடாவே விநியோகிக்கப்படுகின்றன. சுமார் 70 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான எண்ணை விநியோகம் குறித்த நீரிணையூடாக இடம்பெற்று வருகிறது. அண்ணளவாக 40 சதவீத எண்ணை வளமானது இந்து சமுத்திர கரைகளுக்கு அப்பாலிந்தே உற்பத்தியாகிறது. உலகில் இடம்பெறும் பெரும்போர்களுக்கு எண்ணை ஒரு பிரதான காரணமாக இருப்பதையும், இந்து சமுத்திரத்தில் மலாக்க நீரிணை இருப்பதையும் நினைவிற்கொள்க. இந்து சமுத்திரத்தை கட்டுப்படுத்துபவர்களாலேயே ஆசியாவில் ஆதிக்கம் செலுத்தமுடியும். இருபத்தோராம் நூற்றாண்டின் பிரதானமான ஏழு கடல்களுக்கு இந்து சமுத்திரமே மிக முக்கியமானது. உலகினுடைய தலைவிதி என்பது இந்த சமுத்திரத்திலேயே நிர்ணயிக்கப்படும் என்று அமெரிக்காவின் முன்னால் ரியல் அட்மிரல் அல்பிரேட் தயார் மஹான் தெரிவித்திருந்தார். இலங்கைத் தீவினுடைய கேந்திரமுக்கியத்துவம் என்பது இந்து சமுத்திரத்திலும், ஆசியாவிலும் அமைந்திருப்பதால் இரட்டிபுப் பெறுமதியடைகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






