ஐஸ்லாந்தில் எரிமலை ஒன்று வெடித்ததால் ஏற்பட்ட சாம்பல் மூட்டம் காரணமாக ஐரோப்பிய வான்பாதையில் இயக்கப்படும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருப்பதால், பிரான்சில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு சென்ற உல்லாசப் பயணிகள் நாடு திரும்ப முடியாத நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள்து.
குறிப்பாக இந்தியா, இலங்கை, மாலத்தீவு போன்ற நாடுகளுக்குச் சென்றவர்கள் பெரும் அவதிக்குள்ளாகியிருப்பதாகவும், சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாத கவலையில் பிரான்ஸ் மக்கள் தவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் பொருளாதாரப் பிரச்னையாலும் அவர்கள் சிரமத்திற்குள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட சாம்பல் மூட்டம் காரணமாக ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து 5 நாட்களாக தமது விமானச் சேவைகளை நிறுத்தியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
விமானச் சேவைகள் யாவும் மீண்டும் மெதுவாக சேவைக்கு திரும்பியுள்ள போதும் ஆசனங்களைப் வழங்குவதில் பெரும் சிக்கல்கள் தோன்றியுள்ளதாக விமானச் சேவை நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
புதன், 21 ஏப்ரல், 2010
யாழில்............?
கடந்த திங்கட்கிழமை யாழ்பாணம் சுன்னாகம் பகுதியில் இளம் பெண் ஒருவரை இரு இளைஞர்கள் கடத்தி பாலீயல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாக தெரியவருகிறது. வவுனியா இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்த அப்பெண் தனது உறவினரை பார்ப்பதற்காக யாழ்வந்தபோதே இவ்வாறு கடத்தப்பட்டு திங்கட்கிழமை இரவு பாலீயல்ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும் இவர் செவ்வாய் காலை ஒருவாறு அங்கிருந்து தப்பி வந்ததாகவும் அயலவர்களிடம் முறையிட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. அக்குறித்த இளம்பெண்ணிடம் இருந்து பறித்த கைத்தொலைபேசியை வைத்திருந்த நபர் மூலம் அவரை இனம் கண்டு இருவரையும் மடக்கி பிடித்த அயலவர்கள் இவ் இரு இளைஞருக்கும் நையப்புடைத்து தகுந்த பாடம் படிப்பித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்ததாகவும் அவர்கள் தற்போது காவல்துறையினரின் கண்காணிப்பில் யாழ் ஆசிரியர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறியமுடிகிறது. 24 அகவையுடைய இப்பெண் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து குடும்பத்தினருடன் வவுனியா தடுப்பு முகாமில் தங்கியிருந்தவர் என்பதுவும் தற்போது யாழ் ஆசிரியர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவருகிறது.
செவ்வாய், 20 ஏப்ரல், 2010
எரிமலையே ஏன்.....................!
புலனாய்வு பிரிவு உயர்பதவிகளில் மாற்றம்..
காவல்துறை புலனாய்வுபிரிவு உயர்பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் காவல்துறை உயர்பதவிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது நான்கு பிரதிக் காவல்துறை மா அதிபர்கள் மற்றும் நான்கு சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்கள் உள்ளிட்ட 64 சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை காலமும் புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரியாக செயற்பட்டு வந்த பிரதிக் காவல்துறை மா அதிபர் நந்தன முணசிங்க கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் வடமேல் மாகாண பிரதிக் காவல்துறை மா அதிபராக கடமையாற்றிய தயா சமரவீர புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் புலனாய்வு பிரிவில் கடமையாற்றிய பல முக்கிய அதிகாரிகள் வேறும் பிரிவுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய அரசின் ..................?
தமிழர்களைக் கொன்றுகுவித்த சிறீலங்கா படைகளுக்கான இந்திய அரசின் படைத்துறை உதவியின் ஒரு கட்டமாக, சிறீலங்கா காவல்துறையினருக்கு பயிற்சி வழங்கப்பட இருப்பதுடன், இவ்வாறு பயிற்சி பெறும் காவல்துறையினர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியத் தலைநகர் டெல்லியைச் சென்றடைந்துள்ளனர்.
சிறீலங்கா காவல்துறை உயர் அத்தியட்சகர் எல்.ஆர்.விஜயசிங்க தலைமையில் சென்றுள்ள காவல்துறையினர் 50 பேருக்கு முக்கியஸ்தர்களைப் பாதுகாப்பது பற்றிய பயிற்சி 3 மாத காலத்திற்கு வழங்கப்படவுள்ளது.
ஹர்யானா மாநிலத்தில் வழங்கப்படவுள்ள இந்தப் பயிற்சியைப் பெறும் சிறீலங்கா காவல்துறையினர் நேற்று டெல்லி வானூர்தி நிலையத்தின் ஊடாகப் பயணித்துள்ளனர்..
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களது அகவை முதிர்ந்த தாயாரால் தமக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்து, சிகிச்சைக்காக உள்நுழைய அனுமதி மறுத்துள்ள இந்திய அரசு, மறுபுறத்தில் தமிழர்களைக் கொன்று குவித்த சிறீலங்கா படைகளுக்கு படைத்துறை உதவிகளை வழங்கி வருகின்றது.
அணையாத் தீபம் அன்னை பூபதி!
தேசபக்தி எனப்படுவது அடிமனதில் எழுகின்ற ஒரு தீ. அது ஒரு மனிதனை ஆட்கொண்டு விட்டால் இலட்சியத்துக்காக உயிரைத் தருவதற்கும் கூட அவன் தயங்குவதில்லை. அவ்வாறு தமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து தேசத்தையும் அதன் கௌரவத்தையும் காப்பவர்கள் தேசபக்தர்கள் எனக் கருதப்படுகின்றனர். அவர்கள் தேசத்தினாலும், தேச மக்களாலும் என்றென்றும் நினைவு கூரப்படுவர். விடுதலைப் போராட்டம் ஒன்று நடைபெறுகின்ற தேசத்தில் தேசப்பற்றாளர்களுக்கான கௌரவம் அபரிமிதமாக இருக்கும். அது தேசப்பற்றாளர்களைக் கௌரவிப்பதாக மட்டும் அமையாது, புதிய தேசப்பற்றாளர்கள் உருவாவதற்கான உந்து சக்தியாகவும் அமைந்து விடுகின்றது. அத்துடன், தேசத்தின் மீது காதல் கொண்டோருக்கு தமது பணியை மென்மேலும் விஸ்தரிப்பதற்கான உத்வேகத்தையும் தருகின்றது. தேசப் பற்றாளர்களாக விளங்குபவர்கள் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டியது அவசியமல்ல. அதேவேளை, அவர்களின் செயற்பாடுகள் ஆயுதப் போராட்டத்துக்குச் சற்றும் குறைவானதல்ல. ஆயுதம் ஏந்திய போராளிகளுக்குக் குறி வைப்பதற்கு முன்னதாகவே தேசப் பற்றாளர்களை அகற்றிவிட எதிரி துடிப்பதில் இருந்தே இவர்களின் பணி எதிரியின் இருப்புக்கு எத்துணை இடைஞ்சலாக இருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ளலாம். உலகப் பந்தின் ஒரு மூலையில் உள்ள இலங்கைத் தீவிற்குள் மட்டுப் பட்டதாகவே ஈழ தேசிய விடுதலைப் போராட்டம் நடைபெற்ற போதிலும் அது பல சாதனைகளைப் படைத்திருக்கின்றது. ஏனைய விடுதலைப் போராட்டங்களுக்கு பல முன்மாதிரிகளைத் தந்திருக்கின்றது. போராளிகளின் செயற்பாடுகளில் மட்டுமன்றி தேசப் பற்றாளர்களின் அர்ப்பணிப்பில் கூட பல முன்மாதிரிகள் படைக்கப் பட்டிருக்கின்றன. அதிலொன்றே ‘அணையாத் தீபம்” அன்னை பூபதியின் தியாகமும் எனலாம். மக்களோடு மக்களாக வாழ்ந்து மக்கள் நலனுக்காக உயிர் ஈந்தோரை நினைவு கூரும் முகமாக தாயக மக்களால் பிரதி வருடமும் ஏப்ரல் 19 இல் அனுட்டிக்கப்படும் ‘தமிழீழ நாட்டுப்பற்றாளர் தினத்தை” ஒட்டி இக்கட்டுரை பிரசுரமாகின்றது. * ஈழத் தமிழினத்தின் தேசிய விடுதலைக்கான போராட்டத்தில் ஒளியேற்றிய தீபங்கள் பற்பல. அவற்றின் தியாகங்கள் விலை மதிக்க முடியாதவை. அவை ஒவ்வொன்றும் தன்னளவில் தனித்துவமானவையும் கூட. அத்தகையவற்றுக்குள்ளும் ஈண்டு குறிப்பிடத்தக்க தீபங்கள் ஒருசில உள்ளன. அந்த வரிசையில் வரும் அணையாத தீபங்களுள் ஒன்றே ‘அணையாத் தீபம்” அன்னை பூபதி. ஈழ தேசிய விடுதலைப் போரட்டத்தில் யுத்த களத்தில் தீரமுடன் போராடி தம்முயிர் ஈந்த மாவீரர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கும் அதிகம். அவர்களுள் தமது அடையாளத்தை இறுதிவரை வெளியிடாது ஆகுதியாகிய கரும்புலிகளும் அடக்கம். எதிரியோடு சரிக்குச் சமமாக ஆயுதமேந்தி – தற்காப்புக்கும், தாக்குதலுக்கும் வாய்ப்புள்ள ஒரு களத்தில் – போராடி வீரமரணம் எய்தியோரின் தியாகம் ஒருவகையினதென்றால் நிராயுதபாணியாக, தற்காப்புக்கு எத்தகைய வாய்ப்பும் அற்ற அகிம்சைக் களத்தில், மனவுறுதி ஒன்றை மாத்திரமே ஆயுதமாகக் கொண்டு மாண்புடன் போராடி மடிந்தோர் வேறு வகையினர். இவர்களின் தியாகம் ஒரு வகையில் முன்னைய வகையினரை விட ஒருபடி உயர்ந்தது எனலாம். உலகப் பொதுமையான இந்தப் போராட்ட வடிவத்தை சகல விடுதலை அமைப்புக்களையும் போன்றே ஈழ தேசிய விடுதலைப் போராட்டமும் உள்வாங்கிக் கொண்டது. அதன் அடையாளமாக இன்றும் எம்மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் நாட்டுப் பற்றாளர் அன்னை பூபதியும், ‘தியாக தீபம்” திலீபனும் ஆவர். ஒரு போராளியாக ஆயுதப் பயிற்சியைப் பெற்று, ஒரு மக்கள் தலைவனாகப் நீண்ட காலம் பணியாற்றிய அனுபவத்துடன் உண்ணா நோன்பிருந்து தன்னை வருத்தி திலீபன் செய்த தியாகம் மகத்தானது, தன்னிகரற்றது. வாழ்வின் வசந்தத்தில் இருந்த அவன், பூரண வாழ்க்கையை வாழ்ந்து, அனுபவிக்க வேண்டியவை அனைத்தையும் அனுபவிக்க முன்னரேயே கொண்ட இலட்சியத்துக்காக உயிரைத் துறந்திருந்தான். ஆனால், அன்னை பூபதியோ சாதாரண குடும்பப் பெண்மணியாக இருந்து கொண்டே தாய்நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்தவர். பெரும்பாலான தாய்மாரைப் போன்று தேச விடுதலைப் போராட்டத்தில் பார்வையாளராக மாத்திரம் இருந்துவிட்டுப் போகாமல் காத்திரமான பங்காளியாக மாறி தமிழின வரலாற்றில் தடம் பதித்தவர். வாழ்க்கையை வாழ்ந்து அனுபவித்து மரணம் என்பதன் விளைவைத் தெரிந்து கொண்ட பின்னரும் கொண்ட இலட்சியத்துக்காக வைராக்கியத்துடன் இருந்து தனது வாழ்வைத் தியாகம் செய்தவர். அவர் தனது தேசப்பற்றை நிரூபிக்கத் தெரிவு செய்திருந்த களம் மிகவும் வித்தியாசமானது, அதே நேரம் அது சவால் நிறைந்ததாகவும் இருந்தது. பேரினவாதம் தமிழ் மக்களின் இருப்புக்கு அச்சுறுத்தலாக மாறிய நிலையில் சிங்களப் பேரினவாதத்தின் அடிமைத் தளையில் இருந்து விடுபடும் நோக்குடனேயே தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப் பட்டது. தேசியம், தாயகம், தன்னாட்சி ஆகிய உரிமைகளைப் பெற்றுக் கொள்ளவென சிங்களப் பேரினவாதிகளுக்கு எதிராகப் போராடிய தமிழ் மக்கள் ஒரு காலகட்டத்தில் இந்திய வல்லாதிக்கத்திற்கு எதிராகவும் போராட வேண்டிய நிலைக்குத்; தள்ளப் பட்டார்கள். தமிழ் மக்களின் நலன் பேணும் நோக்கில் செய்து கொள்ளப் பட்டதாக வர்ணிக்கப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தம் சிங்களப் பேரினவாதிகளின் குள்ளநரித் தனத்தால், தமிழ் மக்களின் நலனை மறுதலித்து தனது வல்லாதிக்க நலனை மேம்படுத்தும் சிந்தனையின் பால் இந்தியாவைத் தூண்டியது. இதன் விளைவாக தமிழ் மண்ணில் மீண்டும் ஒரு இரத்தக் களரி உருவானது. தமது தந்தையர் நாடான இந்தியாவை ஒரு இரட்சகராகப் பார்த்து வந்த தமிழ் மக்களுக்கு, இந்தியாவுக்கு எதிரான ஒரு ஆயுதப் போராட்டம் என்பது ஜீரணிக்க முடியாத விடயமாக இருந்தது. இந்திய இராணுவம் ஈழத் தமிழ் மண்ணில் நிலை கொண்டிருந்த சுமார் 3 வருட காலத்தில் இந்தியா தொடர்பிலான அடையாளச் சிக்கல் பெரும்பாலான தமிழ் மக்களுக்கு இருந்து வந்ததை மறைப்பதற்கில்லை. அவ்வாறான ஒரு சூழலிலேயே அன்னை பூபதி இந்திய வல்லாதிக்கத்துக்கு எதிராக விளைவுகளைப் பற்றிக் கவலைப் படாமல் களமிறங்கினார். அன்னையர் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவி திருமதி டேவிட் அன்னம்மா உண்ணா நோன்பில் குதித்து, அவர் இந்திய இராணுவத்தினாலும், கைக் கூலிகளாலும் பலவந்தமாக அகற்றப்பட்ட நிலையிலேயே அன்னை பூபதி துணிவுடன் உண்ணா நோன்பில் ஈடுபட முன்வந்தார். சாகும்வரை தனது உறுதியில் இருந்து தளராது அவர் மேற்கொண்ட உண்ணா நோன்புப் போராட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமன்றி தமிழீழப் பிரதேசமெங்கும் மிகப்பெரிய எழுச்சியை உருவாக்கியது. அவரது போராட்டத்தை ஒட்டி தாயகம் முழுவதிலும் பல்வேறு எழுச்சி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. எனினும், அவரின் கோரிக்கைகளை இந்திய வல்லாதிக்கம் ஏற்றுக் கொள்ள முன்வராத நிலையில் 1998 ஏப்ரல் 19 ஆம் திகதி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் குருந்தை மரத்தின் கீழே அவரின் ஆவி பிரிந்தது. அகிம்சையைப் பேசிக் கொண்டே உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மிகப் பாரிய அடக்குமுறை மற்றும் நாசகாரச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் இந்திய வல்லாதிக்கத்தின் சுயரூபம் அன்று மீண்டுமொருமுறை வெளிப்பட்டது. அதேவேளை, தமிழீழம் ஒரு உன்னதப் பெண்மணியை இழந்து கண்ணீர் வடித்தது. அன்னை பூபதி உண்ணா நோன்பிருந்த காலகட்டத்தில் அவரின் மனவுறுதியைக் குலைக்கவும், போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரவும் இந்தியப் படைகளும் அவர்களின் கைக்கூலிகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இச் செயன்முறையில் அவர்கள் சாம, தான, பேத, தண்ட முறைகளைப் பாவித்தனர். ஆயினும், இவை எவற்றுக்கும் அன்னை பூபதி மசியவில்லை. மாறாக, அவரின் மனவுறுதி மேலும் அதிகரிக்கவே செய்தது. தங்கள் முயற்சியில் தோற்றுப்போன எதிரிகள் ஈற்றில் அன்னை பூபதி மீது சேறு பூசும் முயற்சியில் ஈடுபட்டனர் அவரின் உன்னத தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் கட்டுக் கதைகளைப் பரப்பினர். இன்றும் கூட அவர்கள் ஓய்ந்துவிட வில்லை. * தேச விடுதலைப் போராட்டத்திலே ஒரு பொதுமகன் எத்துணை உட்சபட்ச தியாகத்தைப் புரிய முடியும் என்பதற்கு அன்னை பூபதி ஒரு சிறந்த உதாரணம். அவரின் தியாகம் ஈடிணையற்றது. அது அன்னையர் குலத்துக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழ் இனத்துக்கே பெருமை சேர்க்கின்றது. * ஆனால், முள்ளிவாய்க்காலின் பின்னான இன்றைய காலகட்டத்தில் எமது உறவுகள் தமது கடமையை மறந்தவர்களாக, சுயநலமிகளாக, மனம்போன போக்கில் வாழ முனைவதைப் பார்க்கிறோம். சாதாரண மனிதர்கள் முதற்கொண்டு அரசியல்வாதிகள் வரை ‘இப்படித்தான் வாழவேண்டும்” என்ற கோட்பாட்டை விடுத்து ‘எப்படியும் வாழலாம்” என்ற கோட்பாட்டுடன் வாழ நினைப்பதைப் போன்று தென்படுகின்றது. பைபிளில் கூறப்படுவதைப் போன்று ‘அவர்கள் அறியாமற் செய்கிறார்கள்! அவர்களை மன்னியும்!” என்று சாதாரணமாகக் கூறிவிட்டுச் சென்றுவிட முடியாத அளவிற்கு ஆபத்தான போக்கு இது. சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டு வாழ்வது இயற்கையின் இயங்கியலே ஆயினும், கொண்ட கொள்கையையும், இலட்சியத்தையும் சமரசம் செய்வதென்பது ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது. அன்னை பூபதியைப் போன்ற நாட்டுப் பற்றாளர்கள் எந்த இலட்சியத்தை எட்ட வேண்டும் என்பதற்காகத் தமது இன்னுயிர்களைத் துறந்தார்களோ, அந்த இலட்சியம் பற்றிய நினைவை மறந்தவர்களாகவே இன்று எம்மவர்கள் வாழ நினைக்கிறார்கள். கடந்த 3 தசாப்தங்களாக தமிழ் மக்களின் தலைமை அரசியற் சக்தியாக விளங்கி வந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பலம் நிர்மூலமாக்கப் பட்டமையின் விளைவாகவே இந்நிலை உருவாகியுள்ளது. * தமிழ் மக்களின் அரசியல் பலமாக இதுவரை விடுதலைப் புலிகளே விளங்கி வந்தார்கள். அந்தப் பலத்தை தமிழ் மக்கள் மீளவும் தமது கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கூடாக அன்னை பூபதி போன்ற நாட்டுப் பற்றாளர்கள் கண்ட கனவை நனவாக்க முடியும். இதுவே, அவரைப் போன்று தேசத்துக்காக உயிர் துறந்த நாட்டுப் பற்றாளர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி ஆகும்.
ஞாயிறு, 18 ஏப்ரல், 2010
கிடைப்பதை வாங்கிக் கொண்டு திருப்தியடைய அரசியல் அபிலாசை ஒன்றும் வர்தகப் பண்டமல்ல
““தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கேட்பது கிடைக்காது அவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொடுப்பதை வாங்கிக் கொண்டு வாழப் பழகிக் கொள்ள வேண் டும்.'' இப்படி உபதேசம் செய்துள்ளார் ஜாதிக ஹெல உறுமயவின் எல்லாவெல மேத் தானந்த தேரர். பொதுத்தேர்தலில் ஆளும்கட்சி வெற்றி பெற்றதை அடுத்தே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது தேர்தல் விஞ்ஞாபனத்தை ஏற்க முடியாது. அது புலிகளின் கோக்கைகளே. தமிழ்மக்களுக்குத் தமிழீழம் தேவையில்லை. அவர்களுக்கு தமிழீழம் தேவை என்று கூறி நாட்டைப் பிரிக்க முனையக் கூடாது. தமிழ்மக்களின் பிரச்சினைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொடுக்கின்ற தீர்வை வாங்கிக் கொண்டு வாழப் பழகிக் கொள்ள வேண்டும்' என்றெல்லாம் மேத்தானந்ததேரர் கூறியிருக்கிறார். எல்லாவெல மேத்தானந்த தேரர் உள்ளிட்ட சிங்களத் தேசியவாதிகள் அனைவருமே தமிழ்மக்களின் உரிமைக் கோரிக்கைகளை எந்தளவுக்குப் புரிந்து வைத்துள்ளார்கள் என்பதற்கு இது நல்லதொரு உதாரணம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்காவது ஓரிடத்தில் தனிநாடு பற்றிய கருத்தை முன்வைத்திருக்கிறதா? இல்லவே இல்லை. ஆனாலும் எல்லாவெல மேத்தானந்த தேரர் ஆகட்டும் ஏனைய சிங்களத் தேசியவாதிகள் ஆகட்டும் எல்லோருமே அப்படிப் புரிந்து கொண்டிருப்பது அவர்கள் எந்தளவுக்கு கிணற்றுத் தவளைகளாக இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம், புலிகளின் கோரிக்கையும் ஒன்றே என்று அவர் கூற வருவது தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்ற திம்புக் கோட்பாட்டைத் தான் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இது ஒன்றும் தனிநாட்டுக்கான கோரிக்கை அல்ல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதோ தனிநாட்டுக் கோக்கையைக் கைவிட்டு விட்டதாக இரா. சம்பந்தன் கூறியிருக்கிறார். ஆனாலும், சிங்களத் தேசியவாதிகள் இன்னமும் கூட்டமைப்பை புலிகளாவே பார்க்க முனைவது தான் வேடிக்கை. இந்தத் தேர்தலில் கூட்டமைப்புக்கு எஞ்சியிருக்கும் புலிகள் எனக் கூறிக்கொள்வோரின் ஆதரவு கூடக் கிடைக்கவில்லை. ஆனாலும் சிங்களத் தேசியவாதிகள் கூட் டமைப்பை புலிகளின் விம்பமாகப் பார்ப்பது ஆச்சரியம் தான். வடக்கு, கிழக்கில் பெரும்பான்மையான மக்கள் கூட்டமைப்பையே ஆதத்திருக்கிறார்கள் என்றால் அதற்கு அவர்கள் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனம் தான் காரணம். எனவே கூட்டமைப்பின் கொள்கைகளைத் தமிழ் மக்கள் ஏற்கவில்லை என்று நியாயம் கூறுவது யதார்த்தத்துக்கு முரணானது. புலிகளின் கோரிக்கை, கூட்டமைப்பின் கொள்கை, தமிழ் மக்களின் நிலைப்பாடு இவை அனைத்தும் ஒரே புள்ளியில் இருந்து தான் தொடக்கம் பெற்றவை. இதைச் சிங்களத் தேசியவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கான அடிப்படைகளையும் புரிந்து கொள்வது அவசியம். 1977ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ் மக்கள் தனிநாடு அமைக்கும் கோரிக்கைக்கு ஆதரவாகவே பெருவாரியாக வாக்களித்தார்கள் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. அங்கிருந்துதான் புலிகளின் ஆயுதப் போராட்டமாயினும் சரி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இன்றைய அரசியலாயினும் சரி வீரியம் பெற்றன. வட்டுக்கோட்டையில் நிறைவேற்றப்பட்ட அந்தத் தீர்மானத்துக்கான மக்களின் அங்கீகாரம் தான் இந்தக் கோரிக்கைகள், கோட்பாடுகளின் ஆணிவேர். அப்படியொரு தீர்மானத்துக்கு தமிழ்மக்கள் வருவதற்குக் காரணமாக இருந்தது இலங்கையில் காலாகாலமாக ஆட்சியில் இருந்து வந்த அரசுகளும் சிங்களத் தேசியவாதிகளுமே என்பதையும் மறந்து போக முடியாது. எத்தனை தீர்வு முயற்சிகள், பேச்சுக்கள், அகிம்சைப் போராட்டங்களையெல்லாம் தமிழ்மக்கள் சந்தித்தார்கள். சிங்களத் தேசியவாதிகளும் அவர்களின் கையில் இருந்த அரசுகளும் எதற்குமே இணங்காமல் மசியாமல் நின்றதன் விளைவாகவே தனிநாடு பற்றியதொரு தீர் மானத்தை தமிழ் மக்கள் அன்று எடுக்க நேரிட்டது. அது மட்டுமன்றி 1958, 1977, 1983 என்று காலாகாலமாகத் தொடர்ந்த தமிழ்மக்கள் மீதான இன வன்றைகளின் வெளிப்பாடாகவே தனிநாட்டுக் கோரிக்கை தீவிரமடைந்தது. இதையெல்லாம் மறந்துவிட்டு தமிழ்மக்கள் தனிநாட்டுக் கோக்கையை மறந்து விட வேண்டும் என்ற பாணியில் கருத்து வெளியிட்டிருக்கிறார் எல்லாவெல மேத்தானந்த தேரர். ஏன் கடைசியாக நடந்த பேச்சுக்களின் போதும் அமைதி நிலையை உருவாக்கப் புலிகள் முன்வந்த சந்தர்ப்பங்களுக்கெல்லாம் முட்டுக்கட்டை போட்டு முறியடித்தது யார்? சுனாமி நிவாரணப் பொதுக்கட்டமைப்பை ரத்துச் செய்ய உத்தரவிட்ட முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா சொல்லியிருக்கிறார் அதன் தலைமையகம் கிளிநொச்சி யில் இருப்பதை தான் விரும்பவில்லை என்பதால் அதை ரத்துச் செய்ய உத்தரவிட்டதாக. இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை ஒன்றை நிறுவும் யோசனையை புலிகள் முன்வைத்த போது அதைக் குழப்பியடித்து தீர்வுகாண முடியாது தடை போட்டது யார்? அமைதிக்கான குறைந்தபட்சத் தீர்வுகளை தமிழ் மக்கள் ஏற்கத் தயாராக இருந்த போதெல்லாம் அதற்கு சிங்களத் தேசியவாதிகளிடத்தில் இருந்தே எதிர்ப்புகள் கிளம்பின. அதன் விளைவாகவே அனைத்து சமாதான வாய்ப்புகளும் கருகிப் போனது வரலாறு. இது பண்டா செல்வா ஒப்பந்தம் தொடக்கம் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபைக்கான வரைபு வரைக்கும் நடந்த வரலாறு. தமிழ்மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக வாழ்வதற்கு நியாயமான உரிமைகளை வழங்குமாறு கேட்டபோது அரசாங்கம் எதைக் கொடுத்தது? ஆரம்பத்தில் மாவட்டசபைகளை கொடுப்பதாக கூறினார் ஜே.ஆர். பின்னர் ஏதோ இந்தியாவின் வற்புறுத்தலினால் மாகாணசபைகள் கொண்டு வரப்பட்டன. ஆனால், இன்று மாகாணசபைகளுக்குய அதிகாரங்களைக் கூடத் தரமுடியாது என்கிறது அரசாங்கம். இப்படிப்பட்ட நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஷ தமிழ் மக்களுக்கு தரப் போகும் தீர்வு என்னவாக இருக்கப் போகிறது? கிராமசபைகளையே அவர் தீர்வாகக் கொடுக்கப் போகிறாராம். இதைத்தான் வாங்கிக் கொண்டு திருப்தியாக வாழப் பழக வேண்டும் என்று கூட்டமைப்புக்கு ஆலோசனை கூறியிருக்கிறார் எல்லாவெல மேத்தானந்த தேரர். கிடைப்பதை வாங்கிக் கொண்டு திருப்தி யடையுமாறு அவர் கூறுவதற்கு இது ஒன்றும் வர்த்தகப் பண்டம் அல்ல. தமிழ்மக்களின் உரிமைகள் அபிலாஷை கள் சம்பந்தப்பட்ட விடயம். இன்றும் கூட வடக்கு,கிழக்கில் 13 ஆசனங்களை கூட்டமைப்பு வென்றிருக்கிறது என்றால் அங்குள்ள மக்களின் உணர்வுகள் எப்படியிருக்கின்றன என்பதை சிங்களத் தேசிய வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்மக்கள் தமக்கென அரசியல் அதிகாரங்கள் தேவை என்று உணர்கிறார்கள் என் பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் இது தனியே கூட்டமைப்பு சம்பந்தப்பட்ட விடயம் அல்ல. இது தமிழ்மக்கள் அவர்களுக்குக் கொடுத்த ஆணையே. மேத்தானந்த தேரர் கூறுவது போல ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொடுப்பதை வாங்கிக் கொண்டு திருப்தியாக வாழப் பழகினால் தமிழ்மக்கள் கூட்ட மைப்பை நிராகத்து விடுவார்கள். தமிழ்மக்களின் அபிலாஷைகளை மறந்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்டவர்களை அவர்கள் தேர்தலில் நிராகத்துள்ளார்கள். இதிலிருந்தாவது தமிழ்மக்களின் அபிலாசைகள் கூட்டமைப்பின் கொள்கைகளுக்கு இடையில் வேறுபாடுகள் எவையும் இல்லை என்பதை சிங்களத் தேசியவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்
வீழ்ந்தவர்களைத் தூக்குதல்
புலம்பெயர் தமிழர்களின் கவனத்துக்காக ஒரு முக்கிய குறிப்புரை
இலங்கையில் போர் முடிந்து விட்டது. ஆனால் சிறுபான்மை மக்களின் பிரச்சனைகள் எதுவும் தீரவேயில்லை. அவை இப்போதைக்குத் தீரப்போவதுமில்லை. அதற்குரிய களச்சூழலும் அரசியல் நிலைமையும் இலங்கையில் இப்போதில்லை. அதை முன்னெடுக்கக்கூடிய அரசியல் தலைமைகள்கூட தமிழர்களிடமும் சிங்களவர்களிடமும் இன்றில்லை என்பது சகலருக்கும் தெரிந்த உண்மைகள்.
'பிரச்சனைகள் தீரவில்லை என்றால், போராட்டம் தொடரும். அதுதானே விதி?' என்று சிலர் சொல்கிறார்கள். 'அந்தப் போராட்டம் வெவ்வேறு ரூபங்களில், வெவ்வேறு திசைகளில் நடக்கிறது' என்றும் சிலர் சொல்கிறார்கள். வேறு சிலர் சொல்கிறார்கள் 'அதுதான் நாடுகடந்த தமிழீழம்' என்று. இன்னும் சிலர் சொல்கிறார்கள் 'இந்தப் பிரச்சனைகளை வெளிப்படுத்தவும் தமிழ்ச் சனங்களுடைய அரசியல் உணர்வுகளை வெளிப்படுத்தவும்தான் வட்டுக் கோட்டைத் தீர்மானத்துக்கான வாக்கெடுப்புகளை புலம் பெயர்ந்த தமிழர்கள் நடத்துகிறார்கள்' என்று.
வேறு சிலரோ இதை வேறு விதமாக நோக்குகிறார்கள். 'இனித் தமிழ் பேசும் மக்களுடைய போராட்டம் என்பதும் அரசியல் என்பதும் இதுகாலவரையிலான அனுபவங்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு, புதிய உபாயங்களின் அடிப்படையில் அமையவேண்டும்' என்பது இவர்களுடைய அபிப்பிராயம். பத்திரிகைள், இணையத் தளங்கள் எல்லாம் இந்தமாதிரிச் செய்திகளை எழுதித் தள்ளுகின்றன் விவாதிக்கின்றன.
இதைப் பற்றிய வாதப்பிரதிவாதங்களில் ஈடுபடுவதோ அல்லது இதுபற்றி அபிப்பிராயம் சொல்வதோ இங்கே நோக்கமில்லை. இதையெல்லாம் விட மிக அவசிய, அவசரமான பல விசயங்கள் இப்பொழுது இருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டவே இந்தக் குறிப்பு இங்கே எழுதப்படுகிறது.
இங்கே குறிப்பிடப்படும் விசயங்கள் மிகவும் முக்கியமானவை. எந்தவிதமான அபிப்பிராய பேதங்களுமில்லாமல் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடியவை மட்டுமல்ல, மனிதாபிமான ரீதியாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ள வேண்டியவையும் கூட.
வன்னிப் போரின் பாதிப்புகள் உலகறிந்தவை. வன்னியிலிருந்த மூன்று லட்சத்து முப்பதினாயிரம் சனங்களும் போருக்குள் சிக்கிப் பெரும்பாதிப்புகளைச் சந்தித்தவர்கள். இதில் ஒரு குறிப்பிட்ட வீதத்தினர் மட்டும் (ஒரு ஆயிரம் பேர்வரை இருக்கலாம்) எப்படியோ இலங்கையை விட்டு வெளியேறி விட்டனர். ஏனையவர்கள் இலங்கையிலேயே இருக்கிறார்கள். அவர்கள் இலங்கையில்தான் தொடர்ந்தும் இருக்கப்போகிறார்கள். வேண்டுமானால் இதிலும் மிகக் குறைந்தளவானவர்கள் இலங்கையை விட்டு வெளியேறலாம்.
அப்படி அவர்கள் வெளியேறுவதாக இருந்தாலும் அது ஒரு ஆயிரம் இரண்டாயிரம் பேர்வரையில்தான் இருக்கும். எனவே இலங்கையில் இருக்கப்போகின்ற இந்த வன்னி மக்களின் நிலை எப்படி இருக்கப் போகிறது? இப்போது அது எப்படி இருக்கிறது என்று பார்க்கிறது இந்தக் குறிப்பு.
வன்னியிலிருந்த சனங்கள் தனியே, வன்னியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர்களல்ல. ஒரு குறிப்பிட்ட வீதத்திலான சனங்களைத் தவிர, ஏனையவர்கள் வடக்கு, கிழக்கின் பல இடங்களிலிருந்தும் போராட்டத்தின்பால் வன்னிக்கு இடம் பெயர்ந்து வந்தவர்கள். இராணுவ நெருக்குவாரங்கள் அதிகரித்ததால் பாதுகாப்புத் தேடி வன்னிக்கு இடம் பெயர்ந்தவர்கள். 1985 தொடக்கம் இவ்வாறு இடம் பெயர்ந்தவர்கள் இருக்கிறார்கள். 1990 களில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மக்கள் பெருவாரியாக வன்னிக்கு வந்தார்கள்.
அதுவும் காட்டுப்பாதைகளின் வழியாக பெரும் சிரமங்களைப் பட்டே இவர்கள் வந்திருந்தனர். வருகின்ற வழியில் நோயாலும் பாம்புக்கடி போன்ற அபாய நிலைமைகளினாலும் பலர் இறந்திருந்தனர். 1985 க்குப் பின்னரும் 1990 களிலும் கிழக்கில் நடந்த படுகொலைகளும் பாலியல் வன்முறைகளும் மிகக் கொடியவை. அதையெல்லாம் சந்தித்தே இந்த மக்கள் வன்னிக்கு இடம் பெயர்ந்திருந்தார்கள்.
இந்தச் சந்தர்ப்பத்தில் வவுனியா, மன்னார் மாவட்டங்களின் நகர்ப்பகுதியிலிருந்தும் பலர் - குறிப்பாக போராட்டத்துடன் தம்மை நெருக்கமாகப் பிணைத்திருந்தோர் - வன்னிக்கு இடம்பெயர்ந்திருந்தனர். இவர்கள் எல்லாம்; எந்தப் பொருட்களையும் எடுக்க முடியாமல்; வெறுங்கையுடன் வன்னிக்கு வந்தவர்கள். அப்போதே அகதிகளாகவே வந்தவர்கள். அப்போதே தங்கள் குடும்ப உறுப்பினர்களை இராணுவத்தின் படுகொலையிலோ அல்லது போராட்டத்திலோ இழந்திருந்தவர்கள்.
இதைப்போல யாழ்ப்பாணத்திலிருந்தும் ஏறக்குறைய இரண்டு லட்சம் மக்கள் 1995 – 1996 காலப்பகுதியில் (யாழ்ப்பாண இடம் பெயர்வு) வன்னிக்கு இடம் பெயர்ந்திருந்தனர். ஆனால் கிழக்கிலிருந்து வந்த மக்களைப் போலல்லாமல், இவர்களில் பெரும்பாலானவர்கள் ஏதோ கொஞ்சப் பொருட்களையாவது எடுத்துவந்தார்கள்.
கிழக்குச் சனங்களைப் போல யாழ்ப்பாணத்தில் பெரும் படுகொலைகள் நடக்கவில்லை. யாழ்ப்பாணம் ஏற்கனவே போராளிகளின் கட்டுப்பாட்டிலிருந்த படியால் அத்தகைய அனர்த்தங்கள் குறைவாக இருந்தது. ஆகவே இவர்கள் குறைந்தளவு பாதிப்புகளுடன் இடம்பெயர்ந்திருந்தார்கள்.
எனவே வன்னியிலிருந்த மக்களில் பெரும்பாலானவர்கள் ஏதோ வகையில் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள். சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில் வன்னியில் நடந்த 'ஜெயசிக்குறு' இராணுவ நடவடிக்கை ஏற்கனவே பாதிப்புகளைச் சந்தித்திருந்த வன்னி மக்களில் பெரும்பாலானவர்களை மீண்டும் அகதிகளாக்கியது.
அத்துடன் அந்தப் போரை இரண்டாண்டுகள் தொடர்ச்சியாக எதிர்கொண்டுதான் நோர்வேயுடனான பேச்சுவார்த்தைக்கு முன்னான வெற்றியைப்பெற்றவர்கள். இதற்காக இந்தச் சனங்கள் சந்தித்த இழப்புகள் அதிகம். தவிர, பொருளாதாரத் தடைகள், போக்குவரத்துத் தடைகள் என்று ஏராளம் நெருக்குவாரங்களின் மத்தியில் வாழ்ந்தவர்கள் இந்த மக்கள்.
ஆக மொத்தத்தில் வன்னி மக்கள் இறுதி யுத்தத்தில் மட்டும் துன்பங்களைச் சந்திக்கவில்லை. முள்ளிவாய்க்காலில் மட்;டும் தங்கள் வாழ்க்கையை இழந்து போகவில்லை. அதற்கு முன்னரே பல தடவைகள், பல விதமான பேரிழப்புகளைச் சந்தித்தவர்கள். இறுதியாகச் சந்தித்த இழப்பு அவர்களை முற்றாக நிர்க்கதிக்குள்ளாக்கியது.
இந்த நிர்க்கதி என்பது இதுவரையிலும் தாங்கள் சந்தித்த இழப்புகளும் பாடுகளும் எதற்கும் பயனற்றுப் போனதே என்ற துக்கத்தினாலானது. அவர்களுடைய நம்பிக்கையே தகர்ந்து போனதால் ஏற்பட்ட நிர்க்கதி நிலை. மனிதர்கள் நிர்க்கதி ஆகுவது எப்போதென்றால், அவர்கள் தங்களின் நம்பிக்கைகளை இழக்கும் போதும் அவர்களுடைய நம்பிக்கைகள் சிதறும் போதும்தான். அத்தகைய நிலையோடுதான் அவர்கள் அந்த நிலத்திலிருந்து பெயர்த்தெடுக்கப்பட்டார்கள்.
வன்னியை விட்டு இந்த மக்கள் வெளியேறும்போது வெறுங்கையுடன், காயப்பட்டவர்களாக, குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களாக, கண்ணீர் சிந்தியவர்களாக, ஒட்டியுலர்ந்தவர்களாக, போக்கிடமற்றவர்களாக, போர்க்கைதிகளாக, தோற்கடிக்கப்பட்டவர்களாக எனப் பலவிதமான மிகக் கடினமான நிலைகளில்தானிருந்தார்கள்.
இவர்கள் வெளியேறிய காட்சிகளை இப்போது மீண்டும் ஒரு தடவை யாராவது நினைவிற் கொண்டு வந்து பாருங்கள். இதை நீங்கள் விரும்பாது விட்டாலும் அவசியங்கருதி இதைச் செய்யுங்கள். எப்படியான நிலையில் இந்தச் சனங்கள் வெளியேறினார்கள் என்பது தெரிகிறதல்லவா?
மூன்று லட்சத்து முப்பதினாயிரம் பேரையும் படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்கும் போது அவர்கள் உடுத்த உடுப்பைத் தவிர வேறு எந்தப் பொருட்களையும் கொண்டு வரவில்லை என்பது உலகறிந்த விசயம். பின்னர் மிகக் கடினமான முகாம் வாழ்க்கை. இப்போதும் அரைவாசிப் பேருக்கு மேல் முகாம்களில்தானிருக்கின்றனர். மிகுதிப்பேர் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த மீளக் குடியமர்வு மிக மோசமானது. (இதைப் பற்றித் தனியாக இன்னொரு கட்டுரையில் குறிப்பிடுகிறேன்).
மீளக் குடியமர்த்தல் என்ற பெயரில் எந்தவகையான உதவிகளுமில்லாமல், வெறுங்கையுடன் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றனர். அதாவது எல்லாவற்றையும் வன்னியில் போர்க்களத்தில் இழந்து விட்டு, வெறுங்கையுடன் வெளியேறிய மக்கள் மீண்டும் வெறுங்கையுடன் அனுப்பப்பட்டிருக்கிறார்கள். இப்படி இந்த மக்கள் வெறுமனே அனுப்பப் படுவதையும் உலகம் பார்த்துக் கொண்டுதானிருக்கிறது. இதையும் எங்கள் தமிழர்களும் பார்த்துக் கொண்டுதானிருக்கின்றனர்.
இலங்கை அரசாங்கம் இப்படித்தான் செய்யும். அதற்கு இந்த மக்களைப் பற்றி என்ன கவலையுண்டு? ஆனால், இந்த மக்களின் நிலைமையை எடுத்துச் சொல்லி, இவர்களுக்கான தேவைகளைச் செய்ய வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கே இருக்கிறது என உணர்த்துவதற்கோ நெருக்கு வாரங்களைக் கொடுப்பதற்கோ எத்தகைய பொறிமுறைகளையும் தமிழர் தரப்பிலிருந்து யாரும் செய்யவேயில்லை.
இதில் தமிழ்த் தேசிக் கூட்டமைப்பும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் கருணா, பிள்ளையான் தரப்பும் பிற தமிழ்க்கட்சிகளும் அடங்கும். அரசாங்கத்துடன் சேர்ந்திருப்பவர்களாலும் இந்த மக்களின் நிலைமைக்கு உதவ முடியவில்லை. அரசாங்கத்தை எதிர்த்துக் கொண்டு வெளியே நிற்பவர்களாலும் எதனையும் செய்ய முடியவில்லை. ஆகவே சனங்கள் எதையுமே செய்ய முடியாத பெரும் அவலநிலையில்தான் இருக்கிறார்கள்.
தமிழ் மக்களின் தாயக வேட்கைக்காகவும், எல்லாத் தமிழர்களினதும் விடுதலைக்காகவும் பாடுகளைச் சுமந்த மக்கள், உச்சமான தியாகங்களைச் செய்த மக்கள் இன்று எல்லோராலும் கைவிடப்பட்டிருக்கிறார்கள். அரசாங்கம் இந்த மக்களை இன்னும் புலிகளுடன் நின்றவர்கள் என்ற நோக்கில்தான் பார்க்கிறது. எனவே இவர்கள் இன்னுமின்னும் பாதிப்புகளையும் புறக்கணிப்புகளையும் சந்திக்கப் போகிறார்கள்.
அந்த வகையில்தான் இந்தச் சனங்கள் இப்போது பன்னிரண்டு தகரங்களுடன் கைவிடப் பட்டிருக்கிறார்கள். அதனால், இவர்கள் மீண்டும் மரநிழல்களின் கீழே, சுவரில்லாத கூரைகளின் கீழே இரவையும் பகலையும் கழிக்க வேண்டியிருக்கிறது. இறைக்க வசதியில்லாத நிலையில் பாழடைந்த கிணறுகளிலிருந்து தண்ணீரை எடுத்து துணியால் வடித்துக் குடிக்கிறார்கள். அதைத்தவிர வேறு என்னதான் செய்யமுடியும்?
இவர்கள் வேறு யாருமல்ல. விடுதலைக்காக தங்கள் வாழ்வைக் கொடுத்தவர்கள். தாயகக் கனவோடு வாழ்ந்தவர்கள். தமிழ் மக்களின் உறவுகள். எனவே சர்வதேசத்தின் அன்பும் கருணையும் இவர்களுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கவே முடியாது. மட்டுமல்ல, சர்வதேச தொண்டு நிறுவனங்கள் கூட இந்த மக்களுக்கு உதவ முடியாது. அரசாங்கம் அதற்கு அனுமதிக்கவில்லை.
இந்தப் பெரிய அநீதியை, அநியாயத்தை, இந்த மாபெருங்கொடுமையை எல்லோரும் பார்த்துக் கொண்டேயிருக்கின்றனர். சர்வதேச சமூகத்துக்கு இதைப் பற்றி என்ன கவலை இருக்கப்போகிறது? மனித உரிமை அமைப்பினர் வேண்டுமானால் ஏதாவது அறிக்கையை விடுவார்கள். ஆனால், அவர்களும் இந்த விசயத்தைப் பற்றிக் கவனித்ததாக இல்லை.
வன்னிக்கு வெளியேயான தமிழ் மக்களும் சரி, தமிழ் அமைப்புகளும்சரி இது குறித்து அக்கறைப்பட்டதாகவும் இல்லை. உருப்படியாக எதையாவது செய்ததாகவும் இல்லை. இதை இங்கே குறையாகவோ குற்றச்சாட்டாகவோ சொல்லவில்லை.
போராட்டத்தின் போது நிறையப் பங்களித்தவர்கள் புலம் பெயர் மக்கள். உபாயங்கள் தொடர்பான குறைபாடுகள் இருந்தாலும் இறுதிக் கட்டத்தில் கூட அவர்களின் பங்கேற்பு மதிப்புக்குரியதாகவே இருந்தது. ஆனால், போர் முடிந்த பிற்பாடு சில தனிப்பட்ட உதவிகள், அக்கறைகளைத் தவிர பொதுவாக வன்னி மக்களுக்கு சரியான உதவிகள், ஆதரவு எதுவும் இதுவரையில் கிட்டவேயில்லை.
வன்னியில் இருப்பதற்கு வீடுகளில்லை. செய்வதற்குத் தொழில் இல்லை. காணிகளைத் துப்புரவாக்குவதற்கே பெருமளவு காசு தேவை. சாப்பிடுவதற்கு, பிள்ளைகளைப் படிப்பிப்பதற்கு, உடுப்பு வாங்குவதற்கு என்று அடிப்படையான தேவைகளை நிறைவேற்றவே முடியாத நிலையில்தான் இந்தச் சனங்களிருக்கிறார்கள்.
வரலாற்றில் எத்தனையோ இடப்பெயர்வுகளைச் சந்தித்த போதும் நிமிர்ந்தவர்கள். பெரும் இழப்புகளைச் சந்தித்து அவற்றிலிருந்து மீண்டவர்கள். எந்த நெருக்கடியான நிலையிலும் தளர்ந்து விடாமல் நிமிர்ந்து நின்று தாக்குப்பிடித்தவர்கள். இன்று எதையும் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள். ஆதிவாசிகளைப் போல, இந்த மாபெரும் உலகத்தால் வஞ்சிக்கப்பட்டவர்களாக, திக்கற்றவர்களாக, சொந்த வீட்டிலேயே அகதிகளாக, எந்தக் குற்றமும் செய்யாமலே தண்டனையை அனுபவிப்பவர்களாக இருக்கின்றனர்.
இப்போது தமிழர்கள் செய்ய வேண்டிய அவசிய உதவி இவர்களுக்கானதே. முதற்பணியும் தலையாய கடமையும் அதுவே. வீழ்ந்தவர்களைத் தூக்குதல். காயமடைந்தவர்களைக் குணப்படுத்துதல். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலாயிருத்தல். தனித்தவர்களுக்குத் துணையாயிருத்தல். இது முதற்பணி. முதலுதவி என்பார்களே அதுதான்.
இந்த முதலுதவிகூட இவ்வளவு நாட்களாகச் செய்யப்படாமலிருக்கிறதே! இதை நினைக்கும் போதுதான் நாங்கள் எல்லாம் பிரச்சினைகளிலிருந்தும் தேவைகளிலிருந்தும் உண்மைகள், யதார்த்தங்களிலிருந்தும் எவ்வளவு தூரம் விலகியிருக்கிறோம் என்பதையிட்ட கவலைவருகிறது.
எல்லோருடைய விடுதலைக் கனவுக்காகவும் பாடுகளைச் சுமந்தவர்களையிட்டு, சர்வதேச தேசத்துக்கு என்ன கவலைகள் இருக்க முடியும்? அதைப்போல இலங்கை அரசிடமும் நற்சகுனங்களை எதிர்பார்க்க முடியாது.
ஆனால், தமிழ் அரசியல்வாதிகள் அத்தனை பேருக்கும் இந்த மக்களைப் பராமரிக்க வேண்டிய பொறுப்புண்டு. அதைப்போல புலத்திலிருக்கிற அத்தனை மக்களும் இந்த விசயத்தைக் குறித்து பாரபட்சமில்லாமல், அரசியல் கருத்து வேறுபாடுகளிலில்லாமல் ஒன்று பட்டு இந்த மக்களுக்கு தம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும்.
வேண்டுமானால், அதற்கு முன்னர் வரக் கூடியவர்கள் வந்து ஒரு தடவை இந்த மக்களைப் பார்த்துச் செல்லுங்கள். அப்போது இதைப் போல இன்னும் குறிப்புகளை எழுத வேண்டிய தேவை இருக்காது. இப்படிக் கோரிக்கைகளை விடவும் தேவையிருக்காது.
சனி, 17 ஏப்ரல், 2010
யாழ்ப்பாணமக்களின் எதிர்காலம்தான் எங்கே?
தென்னிலங்கையில் இருந்து வரும் சிங்கள மக்களுக்கு, தங்குமிட வசதிகளை செய்து கொடுக்கின்றனர். ஆனால் எம்மக்கள் தறப்பாளுக்குள்ளும் தகரக் கொட்டிலுக்குள்ளும் தவியாய்த்தவித்து வருகின்றார்கள். 2010.04.08 ஆம் திகதி இடம்பெற்று இருந்த பாராளுமன்றப் பொதுத்தேர்தல் தேர்தல் பிரச்சார நடவடிக்கையே எல்லாச் செயற்பாடுகளை விடவும் மேலோங்கி இருந்தது. எங்குபார்த்தாலும் தேர்தல் சுவரொட்டிகள். யாருமே அறியாத புதுமுகங்கள் பல.. யாழ்ப்பான மக்களுக்கு இவர்களின் பிரச்சாரங்கள் அள்ளி வீசிய வார்த்தைகள், வாக்குறுதிகள் என எல்லாவற்ரையும் கேட்டு காது புளித்துப் போயிற்று. ‘சண்டையென்றால் சட்டை கிழியும்’ என்பார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தில் தேர்தல் என்றாலே சட்டை கிழியும் என்ற நிலைதான் காணப்படுகிறது. இங்கு ஆழுந்தரப்பில் போட்டியிட்ட ஒரே கும்பலுக்குள்தான் இந்தக்குத்துப்பாடு நடந்திருக்கின்றது. இதனுடைய விபரம்பற்றி யாழ்ப்பாணப் பத்திரிகைகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முதன்மை வேட்பாளர் இராமநாதன் அங்கஜணிண் வாகனங்கள் தீழூட்டி எரிப்பு, அங்கஜன் துப்பாக்கிச்சூட்டிலிருந்து உயிர்தப்பினார் என்ற செய்திதான் வெளியாகியிருந்தது. இந்தச்சம்பவம் மகிந்த அவர்கள் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த நாளே இடம் பெற்றிருந்தது. இதற்கு மறுநாள் மாறுபட்ட வகையில் யாழ்ப்பாணப் பத்திரிக்கைகளில் செய்திகள் வெளிவந்திருந்தன. இந்தச் செய்தியை யாழ்ப்பாணத்தில் தங்களைத் தாங்களே ஜனநாயகவாதிகள் என்று மார்தட்டும் ஈ.பி.டி.பி'யை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்டிருந்தது. அதாவது தமது பிரச்சார வாகனத்தொடரணி மீது அங்கஜன் குழுவினர் பரமேஸ்வராச் சந்திக்கண்மையாகவுள்ள கெற்றப்புள் சந்தியில் வழிமறித்து வாகனங்களை எரித்து நாசம் செய்ததாகவும், தமது யாழ்ப்பாண மேயர் அங்கயனால் இழுத்து தாக்கப்பட்டு தலையில் கைத்துப்பாக்கி வைத்து சுட்டதாகவும் தான் மயிரிழையில் உயிர் தப்பியதாகவும் ஊடகங்களுக்கு செய்தியனுப்பியிருந்தனர். இந்தச்செய்தியை அறிந்த யாழ்ப்பாண மக்கள் பலர் ‘இனி ஏன்தான் டக்கிளசை மகிந்தவிற்கு?’ டக்கிளசின் செல்வாக்கை குறைப்பதற்கு யாழ்மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்புப்பட்டுயலில் முதன்மை வேட்பாளராக இராமநாதன் அங்கஜனை நிருத்தியிருகிறார் என்று முனுமுனுத்தார்கள். இதே வேளை இந்த வன்முறை நடந்து முடிந்த சில நாட்களின் பின் இராமநாதன் அங்கஜன் குழுவினர் (சுமார் 10 பேர்) யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திற்குள்ளே தமது பிரச்சாரத்திற்கு வலுச்சேர்த்து துண்டுப் பிரசுரங்களையும விநியோகித்தனர். இதனிடையே சில மாணவர்கள், இ.அங்கஜனிடம் சில கேள்விக்கணைகளைத் தொடுத்திருந்தனர். அதற்கு அங்கஜனும் பதில்களை கொடுத்திருந்தார். குறுக்கிட்ட ஒரு நடுத்தர வயதாளி, கட்சிக்குள்ளே இடம் பெரும் குத்து வெட்டுகள் பற்றி கேட்டபோது, அங்கஜனின் பதில் திருப்திதராததால் “கள்ளனுடன் சேர்ந்துதான் அல்லது இருந்துதான் திருத்த வேண்டுமா?” என்று கேட்டு இங்குள்ள அரச ஆதரவு கட்சியை புட்டுப் புட்டுக் காட்டினார். யாழ்ப்பாணத்தில் சட்டம் செத்து விட்டது என்றே தோன்றுகிறது. கடந்த வாரம் யாழ்மாவட்டத்தையே பீதிக்குள்ளும், கோபத்திற்குள்ளும் ஆளாக்கிய மிகக்கேவலமான அநாகரியமான செயல் என்று வர்னிக்கப்படும் கபிலநாத்தின் படுகொலை தான். இந்த கொலையுடன் நேரடியாக சம்பந்தப்பட்டவர், நுணாவில் இராணுவ முகாமில் செயற்பட்டு வந்த ஈ.பி.டி.பி யை சேர்ந்த ரஜீவன் என்பவருடன் தொடர்பு பட்டிருக்கிறது. ஆனால் அந்த நபர் கைது செய்யப்படவில்லை. இதற்கான காரணம் தான் என்ன? மேற்படி முகாமில் இராணுவத்துடன் செயற்பட்டவர் எவ்வாறு? எங்கே? தப்பிச் செல்ல முடியும்? இந்தக் கட்டுரை எழுதும் வரைக்கும் அந்த நபர் கைது செய்யப்படவில்லை. இலங்கையில் “சட்டம் யாவருக்கும் சமம்” என்று ஜனாதிபதி கூறினாலும் சட்டத்தை சில சந்தர்பங்களில் கணக்கில் எடுப்பதில்லை. கபிலநாத்தின் சம்பவமும் இவ்வாறு தான் செய்யப்பட்டதா? இருந்தாலும் நீதிமன்றம் பிடியானைப் பிறப்பித்து கைது செய்ய நடவடிக்கை எடுத்திருக்கிறது. இருந்தாலும் இதில் அரசியல் செல்வாக்கு சில வேளை குற்றவாளியை தண்டனையிலிருந்து மீட்டுவிடும் என்ற கதையும் இங்குள்ள மக்களால் பேசப்படுகின்றது. கல்விப் பாரம்பரியத்திற்குப் பெயர் பெற்ற யாழ்ப்பாணம் இப்போது கலாச்சாரச் சீரழிவுக்கு உட்பட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக உள்நாட்டு யுத்தம் முடிந்த பின்னர் தென்னிலங்கையிலிருந்து வரும் சிங்கள மக்களின் எண்ணிக்கை அதிகரித்ததுள்ளது. இதில் என்ன துர்ப்பாக்கிய நிலை என்றால், வன்னியில் போரின அழிவிற்குப் பின்னர் இடம் பெயர்ந்து வவுனியா மற்றும் யாழ்ப்பாண முட்கம்பி வேலிக்குள் அடைப்பட்டுக் கிடந்த எமது மக்கள், ஒருவாறு விடுதலையாகி வெளியே வந்து தமது உறவினர் வீடுகளிலும், தமது சொந்தக் காணிகளிலும் தறப்பாளினால் வீடமைத்து குடியிருக்கும் போது, தென்னிலங்கையில் இருந்து வரும் சிங்கள மக்களுக்கு பாழடைந்த வீடுகளை திருத்தியும், தங்குமிட வசதிகளையும் பணத்தின் பேராசையில் செய்துகொடுக்கின்றனர். ஆனால் எம்மக்கள் தறப்பாளுக்குள்ளும் தகரக்கொட்டிலுக்குள்ளும் தவியாய்த்தவித்து வசித்துவருகின்றார்கள். இதுபற்றி எப்போதுதான் இந்தப் பணப்பேராசைக்காரர்கள் உணரப்போகிறார்கள்? இது வெளியுலகு அறியாத பரகசியம். இளையசமுதாயம் வழிதவறிப்போகும் நிலை காணப்படுகின்றது. கல்விச்செயற்பாட்டில் இருந்துகொண்டே மதுக்கலாச்சாரத்தை ஊட்டிவளத்து வருகின்றார்கள். இவற்றுடன் புகைப்பிடித்தல் பளக்கம் தற்போது அதிகரித்தே வருகின்றது. இவை இரண்டையும் தமக்கு ஒரு அந்தஸ்தாகப் பார்க்கிறார்கள். குறிப்பாக சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கசுர்ணாபீஜ் இற்குப்போனால் இதை நேரடியாகபார்க்கலாம். இவ்வாறு சென்றால் யாழ்ப்பாணமக்களின் எதிர்காலம் எங்கேதான் சென்று முடியுமோ.
வெள்ளி, 16 ஏப்ரல், 2010
மௌனத்தின் மூலம் ....................
ஈழத் தமிழர்கள் மௌனத்தின் மூலம் பலமானதொரு செய்தியை உலகிற்குத் தெரிவித்துள்ளார்கள்!. சொந்த மண்ணிலிருந்து புலம் பெயர்ந்து மேற்குலகில் வாழும் எங்களில் பெரும்பான்மையானவர்கள், இந்த நாட்டு மக்களைப் பார்த்து எங்களது வெளிப்படையான நாகரிகத்தை மாற்றிக்கொள்ள முயல்கிறோமே தவிர, மனதால் மாற்றம் அடைய மறுத்தே வருகின்றோம். எங்கள் கைகளில் முள்ளுக் கரண்டியும் கத்தியும் முளைத்த அளவிற்கு, எங்கள் மனங்களிலும், செயல்களிலும் புதிதாகப் பெரிய மாற்றங்கள் புதிதாக உருவாகிவிடவில்லை. முள்ளிவாய்க்கால் பேரழிவுடன் தமிழீழத்தின் யுத்த களம் பின் நோக்கிச் சென்றது போலவே, எங்கள் இலட்சிய சிந்தனைகளும் குறுகிய அரசியல் பிளவுகளோடு இன்னமும் வேகமாகப் பின் நகர்ந்தே வருகின்றது போலவே தோன்றுகிறது. தமிழீழத்தின் விடுதலைக்காகவும், தமிழீழ மக்களின் விடிவிற்காகவும் போராட வேண்டிய புலம்பெயர் தமிழர்கள் சிங்கள தேசத்திற்கான தேர்தல் களத்தில் பிளவு பட்டு அணி திரண்டதையும், சிங்கள தேசம் போலவே தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றியைக் கொண்டாடுவதும், தமிழீழத்தின் தேசிய ஆன்மாக்களைக் காயப்படுத்துவதாகவே அமைகின்றது. விடுதலைப் புலிகளின் வேள்வித் தீயில் தம்மையும் அர்ப்பணித்துக்கொண்ட தமிழீழ மக்கள் மௌனமாக அழுவதைக்கூட, தமது அணிக்கான ஆதரவுக் குரலாகக் காட்டும் முயற்சியும் புலம் பெயர் தேசத்தின் கூட்டமைப்பு அணியினரால் மேற்கொள்ளப்படுகின்றது. விடுதலைப் புலிகளின் களமுனை வீழ்ச்சிக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மேற்கொண்டிருந்த தவறான நகர்வுகளும், புதிய கற்பிதங்களும் புலம்பெயர் தமிழீழப் போர்க் களத்தில் பலமான சலசலப்புகளையும், சந்தேகங்களையும் உருவாக்கியிருந்தது. அதன் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான கருத்துக்களும் ஓங்கி ஒலித்தன. இந்தத் தேர்தலை முன் நிறுத்தி, ஈழத் தமிழர்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் இடையே ஒரு சுவரை எழுப்பும் சதி முயற்சிகளும் கூட மேற்கொள்ளப்பட்டன. நடைபெற்ற தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பாலான ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தாலும் ஈழத் தமிழர்கள் மௌனத்தின் மூலம் பலமானதொரு செய்தியை உலகிற்குத் தெரிவித்துள்ளார்கள். அது, “நாங்கள் சிங்கள தேசத்தின் இனவாத அரசியலுக்குள் எமது நலன்களைத் தேட விரும்பவில்லை” என்பதாகும். யாழ். மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 721,359 வாக்காளர்களில் 168,277 பேர் மட்டுமே வாக்களித்துள்ளார்கள். இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வாக்குக்கள் 65,119 மட்டுமே. இது, மொத்த வாக்காளர்களில் 9 வீதமானவர்கள் என்பதும், வன்னி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 266,975 வாக்காளர்களில் 117,185 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வாக்குக்கள் 41,673 மட்டுமே. இது, மொத்த வாக்காளர்களில் 15.6 வீதமானவர்கள் என்பதும், மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 333,664 வாக்காளர்களில் 195,368 பேர் மட்டுமே வாக்களித்துள்ளார்கள். இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வாக்குக்கள் 66,235 மட்டுமே. இது, மொத்த வாக்காளர்களில் 19.85 வீதத்தினர் மட்டுமே. அம்பாறை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 420,835 வாக்காளர்களில் 272,462 பேர் மட்டுமே வாக்களித்துள்ளார்கள். இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வாக்குக்கள் 26,895 மட்டுமே. இது, மொத்த வாக்காளர்களில் 6.39 வீதத்தினர் மட்டுமே. திருகோணமலை மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் வெளிவராத நிலையில், ஏனைய மாவட்டங்களில் பெரும்பான்மையான, அதாவது 80 வீதத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் சிங்கள நாடாளுமன்றத்திற்கான இந்தத் தேர்தலை நிராகரித்து, மௌனமாகத் தமது தீர்ப்பை வழங்கியுள்ளார்கள். சிங்கள அதிபருக்கான தேர்தலில், மலையகம் உட்பட வட – கிழக்குத் தமிழர்கள் கொடியவன் ராஜபக்ஷவை நிராகரித்ததுடன், பெரும்பான்மையான தமிழர்கள் சரத் பொன்சேகாவுக்கும் வாக்களிக்காமல் அந்தத் தேர்தலைப் புறக்கணித்தனர். அதைப் பெருமையுடன் நினைவு கூர்ந்த புலம் பெயர் தமிழர்களில் சிலர் தற்போது இந்தக் கணக்கைத் தமது வசதிக்காக மாற்றிப் போட்டுப் பார்க்கிறார்கள். ஈழத் தமிழர்கள் சிங்கள நாடாளுமன்றத்தின் ஊடாகத் தீர்வைப் பெற விரும்புகிறார்கள் என அவர்களின் விடுதலை உணர்வுகளைக் கொச்சைப்படுத்த முயல்கின்றனர். யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு நண்பரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, விடுதலைப் புலிகள் யாருக்கு வாக்குப் போடச் சொன்னார்களோ, அவர்களுக்கு நாம் வாக்குகளைப் போட்டோம். விடுதலைப் புலிகள் தேர்தலைப் புறக்கணிக்கச் சொன்னபோது, நாங்கள் முற்றாகத் தேர்தலைப் புறக்கணித்தோம். இந்தத் தடவை அவர்கள் யாருக்கும் வாக்குப் போடும்படி சொல்லவில்லை. அதனால், தேர்தலைப் புறக்கணித்தோம் என்று கூறினார். ஈழத் தமிழர்களின் முடிவு இப்படித்தான் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் சார்பாக, ஓங்கிக் குரல் எழுப்பும் புலம்பெயர் தமிழர்களும் ஈழத் தமிழர்களின் இந்த விடுதலை உணர்வைப் பெருமிதத்தோடு புரிந்து கொள்கிறார்கள். ஈழத் தமிழர்களம சார்பாக சிங்கள தேசத்தின் நாடாளுமன்றம் செல்லும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனிமேல் எப்படி நடந்து கொள்ளப் போகின்றது என்பதில்தான் அவர்களது எதிர்காலம் தங்கியிருக்கின்றது. எடுப்பார் கைப்பிள்ளையாக, கிடைத்த அரங்கத்தில் தப்புத் தாளங்கள் போட முயற்சித்தால் காலம் அவர்களுக்கான தண்டனையை வழங்கும். தமிழீழம் மலரும் என்ற நம்பிக்கையோடு கல்லறைகளில் கண்ணுறங்கும் மாவீரர்களும், அந்த மண்ணுக்காய் மரணித்த மக்களும் மீண்டும் எழுவார்கள்.
வியாழன், 15 ஏப்ரல், 2010
வலிகளைத் தாங்கிக்கொள்ளப் பழக்கப்பட்டுள்ளனர் இவர்கள்
கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே என்ற ஒளவையாரின் வாக்கை நேரடியாக மெய்ப்பிப்பதுபோலவே இன்றைய ஈழத்தின் நிலைமை இருக்கிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் பலர் அரசாங்க உதவித் தொகையை மட்டுமே நம்பித் தமது காலத்தை ஓட்ட வேண்டியிருக்கிறது. அரைகுறை உணவு, பழைய ஆடைகள், புத்தகங்களோடு செலவுகளைக் குறைக்க வேண்டி அநேக மாணவர்கள் தம் வெறும் வயிற்றில் தண்ணீரை மாத்திரம் அருந்தியபடி கல்வி கற்றுக்கொண்டிருக்கிறார்கள். குடும்பத்தினர் அகதி முகாம்களிலும் தொழிலற்றும் வாடியிருக்கும்போது தமது தேவைகளுக்காகக் குடும்பத்தை நாடவும் இவர்களால் முடியாதுள்ளது. அடுத்ததாக யுத்தத்தின் மூலமாக ஏற்பட்ட உடல் சுகவீனங்களுக்கான மருந்துகளைப் பெற்றுக்கொள்ளவும் பணம் தேவைப்படுவதால் பலர் மருத்துவத்தை இடைநிறுத்தி, வலிகளைத் தாங்கிக்கொள்ளப் பழக்கப்பட்டுள்ளனர். இது இப்படியிருக்க, ஷெல் விழுந்தபோது நாங்கள் அன்றே செத்துப்போயிருந்தால் இதைவிடவும் நன்றாக இருந்திருக்கும் என்று சொல்கிறார்கள் வவுனியா மெனிக்பார்ம் முள்வேலி முகாமில் தங்கவைக்கப்பட்டிருக்கும் இடம்பெயர்ந்த மக்கள். ஜனாதிபதி தேர்தலுக்குப் பிற்பாடு இங்குள்ள அனேகமான மக்கள் பட்டினியோடுதான் காலத்தைக் கடத்துகிறார்கள். 1.5 லிற்றர் கொள்ளளவுடைய ப்ளாஸ்டிக் பெப்சி போத்தலொன்றின் மேற்பகுதியை வெட்டிவிட்டால் கிடைக்கும் பாத்திரத்தினளவு அரிசிதான் ஒரு கிழமைக்கு ஒருவருக்குக் கொடுக்கப்படுகிறது. கோதுமை மாவும் அதே அளவுதான் கொடுக்கப்படுகிறது. ஐம்பது கிராமுக்கும் குறைவான அளவுடைய சீனியும் அதே அளவு பருப்பும் கொடுக்கப்படுகிறது. ஒரு சிறிய குவளையில் தேங்காயெண்ணெய் வழங்கப்படுவதோடு ஒரு வாரத்தின் ஏழு நாட்களையும் இந்த உணவுப் பொருட்களோடு மட்டுமே கழிக்க வேண்டியுள்ளது. மரக்கறி, கீரை வகைகள், இறைச்சி, மீனென்று எதுவுமே இல்லை. உடைகள், சமைக்கத் தேவையான மற்ற பொருட்கள், பாத்திரங்களென அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான எதுவுமேயில்லை. ஆனால் தேர்தலுக்கு முன்பு அரச சார்பற்ற நிறுவனங்களின் மூலம் மரக்கறி வகைகள், வெங்காயம், மிளகாய்த் தூள், மசாலாத் தூள், உப்பு, முட்டை, கிழங்கு, நெத்திலி போன்றவை இவர்களுக்குக் கிடைத்துள்ளன. ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் இவை அனைத்தும் நிறுத்தப்பட்டதோடு வழங்கப்பட்ட அரிசி, கோதுமையின் அளவும் பாதியாகக் குறைந்துள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் தற்போது அரிசி, கோதுமை வழங்கப்படும் அதே பாத்திரத்தின் இருமடங்கு அளவு ஒரு வாரத் தேவைக்கென ஒருவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் இம்மக்களது விருப்பு வாக்குகள் எதிர்க்கட்சியைச் சார்ந்திருந்ததே இன்றைய நிலைக்கான காரணமென்பது வெளிப்படையாகிறது. உண்மையில் இங்குள்ள அனேகமான அகதி மக்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பே வழங்கப்படவில்லை யென்பதையும் இங்கே சொல்ல வேண்டும். இங்குள்ள அகதிகளில் சிலர் மட்டும் வெளிநாடுகளிலிருந்து தமது உறவினர்கள் அனுப்பும் பணத்தைக் கொண்டும் அரசு வேலைகளிலிருந்தோருக்கு அரசால் கொடுக்கப்படும் பணத்தைக் கொண்டும்தான் வாழ்க்கை நடத்துகிறார்கள். இது போன்ற உதவிகளேதுமற்ற பலர் அன்றாட வாழ்க்கையைக் கழிப்பதற்கே வழியில்லாத கையறு நிலையில் இருக்கிறார்கள். வெளியூர்களுக்குச் சென்று உழைக்கும் அனுமதியைச் சமீபத்தில் தான் இம்முகாம்வாசிகளுக்கு அரசு வழங்கியுள்ளது. அதுவும்கூட அதிகபட்சமாக இருமாதங்களுக்கு மட்டும் தான். அதாவது இரண்டு மாதங்களுக்கொருமுறை முகாமுக்குச் சமூகமளித்து, வெளியே சென்று வேலைபார்க்கும் அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். இந்த அனுமதிப் பத்திரத்தில் பகுதிப் பெயர், குழு இலக்கம், வீட்டு இலக்கம், குடும்ப இலக்கம், மாவட்டம், பிரதேச சபைப் பிரிவு, கிராம சேவகர் பிரிவு மற்றும் குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. குடும்ப உறுப்பினர்களின் பெயர்களோடு அவர்களுக்கான இலக்கங்கள், உறவுமுறைகள், அவர்களது தேசிய அடையாள அட்டை இலக்கங்கள் ஆகியனவும் குறிப்பிடப்படுவது கட்டாயம். அதன் பிறகு தாம் தொழில் பார்க்கச் செல்லவிருக்கும் ஊரைக் குறிப்பிட வேண்டும். அந்த ஊருக்குப் போய்ச் சந்திக்கவிருப்பவரின் பெயரும் தொலைபேசி இலக்கமும் குறிப்பிடப்பட வேண்டும். அத்தோடு செல்லும் நாளின் திகதி மற்றும் நேரத்தோடு, இரண்டு மாதங்களுக்குள் திரும்ப வரும் நாளின் திகதியையும் நேரத்தையும்கூடக் குறிப்பிட வேண்டும். முகாமிலிருக்கும் இடம்பெயர்ந்தவர்களுக்கு, இலங்கை அரசால் வழங்கப்பட்டிருக்கும் தற்காலிக அடையாள அட்டைகள்கூட அதிநவீன பார்கோட் இலச்சினைகளுடன் இருக்கின்றன. இதனுள் முகாம்வாசியின் அனைத்துத் தகவல்களும் அடங்கப்பெற்றிருக்குமென நம்பலாம். நாட்டின் தேசிய அடையாள அட்டைகள்கூட இந்தளவு பாதுகாப்பானதாகவும் முக்கியத்துவம் மிக்கதாகவும் இல்லை. முகாம்வாசிகளுக்குத் தினமும் காலை ஆறு மணிக்குப் பிறகே வெளியே செல்ல அனுமதி கிடைக்கிறது. அத்தோடு இரவு எட்டு மணிக்குள் திரும்பிவிட வேண்டும். முகாமிலிருக்கும் ஒரு குடும்பத்தில் எல்லோருக்குமே ஒரே தடவையில் முகாமைவிட்டு வெளியே செல்ல அனுமதி கிடைப்பதில்லை. மக்கள் தமது முகாமன்றி வேறு முகாம்களுக்குச் செல்வது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. தூர இடங்களிலிருந்து உறவினர்கள் இவர்களைப் பார்க்க வந்தால்கூட அவர்களோடு சுதந்திரமாக, எந்தத் தொந்தரவுமின்றிக் கதைப்பது சிரமமாக உள்ளது. முள்வேலியின் இருபுறமிருந்துதான் கதைக்கவும் முடியும். இவ்வாறான முள்வேலிச் சிறைகளுக்குள் தள்ளப்பட்டிருப்பது தத்தமது பாட்டில் விவசாயமோ கூலித் தொழிலோ செய்து உழைத்து வாழ்ந்து கொண்டிருந்த அப்பாவி மக்கள். நாங்கள் எங்கள் வீடுகளுக்குப் போய் இருக்க விரும்புகிறோம். அரசாங்கம் எதுவுமே தரவில்லையென்றால்கூடக் காட்டிலிருந்து தடிகளை வெட்டி, வீடு கட்டி, விவசாயம் செய்துகொண்டு வாழ விரும்புறோம். தங்கள் கரங்களின் பலத்தோடு வாழ்க்கையை நகர்த்திச் சென்ற இம்மக்களுக்கு இன்று உண்ணாமல், குடிக்காமல் அரிசி, கோதுமை சேகரித்து வவுனியாவுக்குக் கொண்டு போய் விற்று வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. முகாமிலிருந்து வவுனியாவுக்கு வருவதற்கு ஒருவருக்குப் பிரயாணச் செலவாக ஐம்பது ரூபாய் தேவைப்படுகிறது. எனவே இவர்களுக்குக் கிடைக்கும் அரிசி, கோதுமையை ஒரு வாரம் உண்ணாமல் சேகரித்து, வவுனியாவில் அதை சரிபாதி விலைக்கு விற்று, இவர்கள் பணம் பெற்றுக்கொள்கின்றனர். தற்போது வவுனியாவிலும் தற்காலிகத் தொழில்வாய்ப்புகள் ஏதுமில்லை. முகாம்களிலிருந்து அன்றாடம் தொழில் தேடி வெளியேறும் இது போன்ற அகதிகளோடு, உறவினர்களுடன் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்த மக்களால் வவுனியா நகரம் நிறைந்துபோயிருக்கிறது. குடிப்பதற்கான நீரையும் முகாம் மக்கள் குழாய்க் கிணறுகளின் மூலமாகத்தான் பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவற்றில் காலையிலிருந்து இரவுவரைக்கும் வரிசைகள் நீள்கின்றன. காத்திருக்கின்றன. குளிப்பதற்காகச் சில நாட்களில் மட்டும் குழாய்களில் நீர் வழங்கப்படுகிறது. முகாம் பள்ளிக்கூடத்திலும் ஒரு நாளைக்கு ஒரு பாடமே கற்பிக்கப்படுகிறது. முகாமில் வைத்தியர்கள் இருந்தபோதிலும் மருந்து வசதிகள் ஏதுமற்ற காரணத்தால் நோயாளிகள் செட்டிக்குளம் வைத்தியசாலைக்கே அனுப்பப்படுகிறார்கள். மீள்குடியேற்றம் என்னும் பெயரில், மறுவாழ்வு அளிக்கப்படுவதாகச் சொல்லப்பட்டு முகாமிலிருந்து தங்கள் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்ட மக்கள் மகிழ்வோடுதான் வெளியேறினார்களா? இல்லை. ஏனெனில் தத்தமது ஊர்களுக்குப் போக முடியாத காரணத்தால் அவர்கள் ஏ ஒன்பது நெடுஞ்சாலையின் ஓரங்களில்தான் கூடாரமமைத்துக்கொண்டு தங்கியுள்ளனர். இதுதான் மீள்குடியமர்த்தல் என்ற சொல்லுக்குப் பின்பு மறைந்திருக்கும் உண்மை. யுத்தம் முடிவுற்றதோடு இடம்பெயர்ந்த மக்களனைவரையும் ஆறு மாத காலத்துக்குள் மீள்குடியமர்த்துவதாக அரசு வாக்குறுதியளித்திருந்தபோதிலும் அவர்களது சொந்தக் கிராமத்துக்குச் செல்ல அனுமதி கிடைத்திருப்பது மிகச் சிலருக்கே. மீள்குடியமர்த்தப்பட்டோரெனச் சொல்லப்படும் அனேகமான மக்கள் தங்கியிருப்பது தங்கள் உறவினர்கள் வீடுகளிலும் ஏ ஒன்பது வீதியோரக் கூடாரங்களிலும்தான். இந்தக் கொத்தடிமை முள்வேலி வாழ்க்கையிலிருந்து மீண்டு, இடம் பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாழும் சுதந்திரம் வழங்கப்படுவது எப்போது? இதுதான் அவர்களுக்கும் எங்களுக்கும் எழும் ஒரே கேள்வி. இம்முகாம் மக்கள் இன்னும் காணாமல் போவதும் முகாமிலிருந்து பலவந்தமாகக் கொண்டுசெல்லப்படுவதும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இவ்வாறாக அதிகளவாகக் காணாமல் போயுள்ளவர்களுக்கும் கொண்டு செல்லப்பட்டவர்களுக்கும் என்ன நடந்ததென யாருக்கும் தெரியவில்லை. இலட்சக்கணக்கான மக்கள் ஷெல் விழுந்து, விமானக் குண்டு போட்டுச் செத்துப்போனார்கள். எப்படியாவது உயிர்பிழைத்து வாழ வேண்டுமென்றுதான் பிணங்களின் மேலால் இங்கு ஓடிவந்தோம். அன்றே ஷெல்லொன்று விழுந்து செத்துப்போயிருந்தால் நன்றாக இருந்திருக்குமென இப்போது தோன்றுகிறது. அவர்கள் கண்ணீரோடு சொல்கிறார்கள்.
அறுபத்திரண்டு ஆண்டுகளும் அப்பாவி(ஈழ)த் தமிழர்களும்!
இலங்கை என்னும் சின்னஞ் சிறு தீவு நாட்டிற்குச் சுதந்திரம் கிடைத்து அறுபத்திரண்டு வருடங்கள் கடந்து போய்விட்டன என்பதைக் கொண்டாடும் வகையில், இந்த வருட முற்பகுதியில் தென்னிலங்கையில் மிகவும் குதூகலமான முறையில் விழாக்கள் நடந்தேறியிருக்கின்றன.
நாட்டின் அதிபர் ‘புதிய துட்ட கெமுனு’வாக மீண்டும் அவதரித்திருக்கிறார்!
கி.மு இரண்டாம் நூற்றாண்டில், தமிழ் மன்னன் எல்லாளனை வீழ்த்தி அனுரதபுர நகரினைச் சிங்களருக்கே மீண்டும் பெற்றுத்தந்த இளவரசன் துட்டகெமுனுவைப் போன்று, பிரபாகரன் தலைமையில் தமிழுரிமைக்காகப் போராடியவர்கள் அத்தனைபேரையும்- போராளிகள்,பொதுமக்கள் என்ற பேதமின்றி- அழித்த இருபத்தோராம் நூற்றாண்டின் ‘சிங்கள அரசனை’ப் பாராட்டி மகிழ்ந்தார்கள் அவ்வினத்தைச் சேர்ந்த பலர்! கூடவே, வரலாற்றில் எப்போதும் இடம்பெறும் ‘விபீஷணக்’கும்பல்களும் தாம் வெற்றி அடைந்துவிட்ட இறுமாப்பில் நெஞ்சை நிமிர்த்திப் பீறுநடை போட்டன.
சிங்கள இனம், அண்மையில் அடைந்த ‘வெற்றி’யின் நாயகர்களில் ஒருவரான அதன் படைத் ‘தளபதி’ இப்போது தனது எதிர்காலம் பற்றிய கவலைகளுடன் காலத்தைக் கழித்துக்கொண்டிருக்கிறார் என்பது ஒரு புறமிருக்க, ஒரே இலங்கை; ஒரே மக்கள் என்று ‘கவர்ச்சி சுலோ’கங்களை முழங்கும் அரசு, முப்பதாண்டுப் போரில் தாம் முறியடித்துவிட்ட ‘எதிரி நாடொன்றில்’கூட அரங்கேற்றமுனையாத செயல்களைப், ’போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறோம்’ என்னும் போர்வையில், அண்டை நாடுகள் சிலவற்றின் பொருளுதவியோடு வெகு துரிதமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது!
இவையனைத்தையும் அறிந்திருந்தும், சென்ற ஆண்டு முற்பகுதியில் வடபுலத்தில் அரங்கேறிய படுகொலைகளைக் ‘கண்டும் காணாதிருந்ததை’ப் போன்று சர்வதேசம் ‘கள்ள மௌனம்’ சாதிக்கிறது!
படுகொலைகளின் தடயங்கள் அனைத்தும் அழிக்கப்படும்வரை ‘பொறுமை காத்த’ ஐ.நா வின் தலைவர், திடீரென ‘ஞானோதயம்’ பெற்றுவிட்டவர் போன்று இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறார்.
ஆயிரக்கணக்கில் தமிழர்கள் எரிகுண்டுகளுக்கும், தடைசெய்யப்பட்ட கனரக ஆயுதங்களுக்கும் பலியாகி உயிப்பிச்சை கேட்டு மன்றாடிக்கொண்டிருந்த சமயத்தில்; மெரீனா கடற்கரையில் ‘குளிரூட்டிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்’ சகிதம் ‘வரலாற்றுச் சிறப்பு மிக்க மூன்று மணி நேர’ உண்ணாவிரதத்தை மேற்கொண்ட ‘தலைவர்’ இப்போது ‘ஈழத் தமிழர்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்படாவிடில், நாம் சும்மா இருக்கமாட்டோம்’ என்று புதிதாக எதையோ ‘சுமந்து கொண்டு’ அறிக்கை விடுகிறார்.
தமிழர்கள் அழிந்தாலும் பரவாயில்லை அவர்களது நிழல்களுக்கு ஆடைகட்டி அழகு பார்க்கும் கலையில் வல்ல கலைஞர் இப்போது ‘செம் மொழி’ ஆடையுடன் வலம் வந்துகொண்டிருக்கிறார்.
இதோ இப்போது, இலங்கையின் பொதுத் தேர்தலும் முடிந்துவிட்டது.
தேர்தல் முடிவுகள் பலரும் எதிர்பார்த்திருந்தது போன்று, அதிபரது கட்சி அறுதிப் பெரும் பான்மையுடன் மீண்டும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கிறது.
தகுதி பெற்ற வாக்காளர்களில் சுமார் அறுபது விழுக்காட்டினர் இந்தத் தேர்தலில் வாக்களித்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றாலும், இலங்கை, சுதந்திரம் அடைந்ததில் இருந்து அங்கு நடைபெற்றுவந்த பொதுத் தேர்தல்கள் யாவற்றினையும் விடவும், இந்தத் தடவை வாக்களித்தவர்களின் எண்ணிக்கை குறைவு என்றும் செய்தி வெளியாகி இருக்கிறது.
சிங்களப் பகுதிகளில் அரசு அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது என்றும்; எதிர்க் கட்சியினர் பல குழுக்களாக்ப் பிரிந்து நின்று போட்டியிட்டதால் அரசுக்கு எதிரான வாக்குகள் சிதறிப்போய் விட்டன எனவும் மக்கள் இவ்வாறான தேர்தல் ‘விளையாட்டுகளில்’ நம்பிக்கை இழந்து வருகிறார்கள் என்றும் இதற்குப் பலவாறான காரணங்களை அவரவர் சார்பு நிலைகளுக்குத் தக்கவாறு பேசிக்கொண்டும், எழுதிக் கொண்டும் இருக்கிறார்கள்.
ஆட்சி அதிகாரத்துக்காகப் போட்டியிட்ட சிங்களக் கட்சிகளுக்குச் சிங்களர்களது உரிமைக்காகப் போராடும் நிர்ப்பந்தம் ஏதும் கிடையாது.
ஆங்கிலேயர் மூன்று நூற்றாண்டுகளாகச் சுரண்டிக் கொழுத்த இலங்கையை விட்டு, மூட்டைமுடிச்சுகளுடன் தங்கள் நாட்டுக்குத் திரும்பிய போது, ஜனநாயகத்தின் பேரால் தீவின் ஆட்சி அதிகாரத்தினை, ‘தலை’ எண்ணிக்கையில் அதிகமாயிருந்த சிங்களரிடம் விட்டுவிட்டுச் சென்றார்கள்.
எனவே, ஒரு நாட்டின் அரசியல் அதிகாரத்தின் வழியாகக் கிடைக்கவேண்டிய அத்தனை நலன்களையும், தீவின் பெரும்பான்மை இனம் பெற்றுக்கொள்வதில் எவ்வித தடைகளும் அதற்கு இருக்கவில்லை.
ஆனால் ஆளப்படும் இனமாக மாறியிருந்த தமிழ்த் தேசிய இனம்; அந் நாடு எதிர் கொண்ட ஒவ்வொரு ஆட்சி அதிகாரத்துக்கான தேர்தல்களின் போதும், படிப்படியாகத் தனது வாழ்வுரிமைக்கான இருப்பினைப் பறிகொடுத்தே வந்துள்ளது.
ஆட்சி அதிகாரத்துக்காகப் போராடிய பெரும்பான்மை இனத் தலைவர்கள், தாம் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக நாட்டுக்கு எவ்வாறான நல்ல திட்டங்களை அளிப்போம் என்று கூறி வாக்குக் கேட்பதை மறந்து, தமிழர்களிடமிருந்து எவற்றை எல்லாம் பறிப்போம் என்னுமாப்போல் பேசிவந்ததும், தேர்தல் முடிவுற்ற பின்னர் செயல்பட்டதும், அந்நாட்டின் முதல் முப்பது வருடங்களைச் சிறுபான்மை இனத்தினை அரசியல் போராட்டங்களிலும்; அதனைத் தொடர்ந்து ஆயுதப் போராட்டத்திலும் ஈடுபடவைத்தது.
இப்போது முடிவடைந்துள்ள தேர்தலின் பயனாய், அந் நாட்டில் உண்மையான அமைதியும், அதன் அதிபர் தமது வாயால் கூறும் தமிழர்-சிங்களர் என்ற பேதமற்ற சம உணர்வும் இனியாதல் நிலைபெறவேண்டுமானால்……….
சில வருடங்களுக்கு முன்னால் ஓர் மனித உரிமைப் போராளியாகத் தன்னை இனங்காட்டிக் கொண்ட இலங்கையின் இன்றைய அதிபர், இப்போது தமக்குக் கிடைத்திருக்கும் ‘அசுரத்தனமான’ வெற்றியை நன்கு பயன்படுத்தி இனப்பூசலுக்கு ஏற்ற ஓர் தீர்வினை எட்ட இயலும்.
இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக ஒன்றாக வாழ்ந்த இரு இனங்களும் ‘நாம் இலங்கையரே’ என்று மார்தட்டிச் சொல்லும் நிலையை உருவாக்குவது ஆளுபவர்களது கைகளில்தான் தங்கியிருக்கிறது.
நியாயத்துக்காகக் கூடப் போராடும் திராணியற்றுக்கிடக்கும் ஈழத்தமிழினத்தின் தன்மானத்துக்கும், சுக வாழ்வுக்கும் பாதுகாப்பளிக்கும் அரசியல் கடமை ஆளும் பெரும்பான்மை இனத்துக்கே உண்டு.
இதனை மறுப்பதும், அந்த இனத்தையே ஒறுப்பதும் மானுட விழுமியங்களை அழிப்பதற்கு ஒப்பானதாகும். இவற்றை இனியும் பார்த்துக் கொண்டிருக்கும் சர்வதேசமும், அண்டை நாடுகளும்கூட ஒருவகையில் குற்றவாளிகளே.
இலங்கை சிங்களவர்களுக்குரிய நாடு?
யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும், விடுதலைப்புலிகள் இயங்கு நிலையில் இருந்த வரைக்கும் எந்தவொரு இனத்துவேச நடவடிக்கைகளும் மேற்கொள்ளாத இலங்கை இனவெறி அரசு தற்பொழுது மிக வெளிப்படையாகவே தனது இனத்துவேச நடவடிக்கைகளை செய்ய ஆரம்பித்துள்ளது. யாழ்ப்பாணம் நீண்ட காலமாகவே இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்திருந்தாலும் விடுதலைப்புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்களோ, திலீபனின் தூபியோ இடிக்கப்படவில்லை. மாங்குளத்தில் சிங்களக் குடியேற்றங்களும் மேற்கொள்ளப் படவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்னர் தற்செயலாக இலங்கைக்கு விடுமுறையில் சென்று வந்தவர் ஒருவர் தனது ஒளிப்பட கருவியில் பிடித்துக் கொண்டு வந்த சில ஒளிப்படங்களை நான் பார்க்க நேர்ந்தது. அவர் எடுத்து வந்திருந்த ஒளிப்படங்களில் நயினாதீவு நாகபூஷணியம்மன் ஆலயத்தில் பிடிக்கப்பட்ட ஒளிப்படத்தில் காணப்பட்ட அறிவிப்புப் பலகைகள் என்னை ஒருகணம் அதிர வைத்தது. அந்த அறிவிப்புப் பலகைகள் எல்லாமே சிங்களத்தில் மட்டுமே எழுதப்பட்டிருந்ததைக் கண்டேன். அதாவது சிங்கள இனவெறி அரசு தற்பொழுது மிகவும் வெளிப்படையாகவே இலங்கை சிங்களவர்களுக்குரிய நாடு என்று சொல்லாமல் சொல்வதாகப் படுகிறது. 1956 இல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவந்தார்கள். ஆனால் இன்று அதை வெளிப்படையாகவே நடைமுறைப் படுத்துகிறார்கள். கொழும்பில், கண்டியில் ஏன் கதிர்காமத்தில் கூட ஆலயங்களில் தமிழிலும் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் அறிவித்தல் பலகைகள் எழுதப்பட்டிருக்குமிடத்தில், யாழ்ப்பாணத்தில் அதுவும் தமிழ் மண்ணில் இருக்கும் ஒரு இந்துக்கோவிலில் சிங்களத்தில் மட்டுமே அந்த அறிவித்தல் பலகையில் எழுதப்பட்டிருக்கின்றது. அதாவது இலங்கையின் வெவேறு பகுதிகளில் வாழும் தமிழ்மக்கள், வெளிநாடுகளில் இருந்து விடுமுறையில் செல்லும் தமிழ்மக்கள், மற்றும் தமிழரோ, சிங்களவரோ அல்லாத வெளிநாட்டுப் பிரஜைகள் அந்த ஆலயத்திற்கு வழிபடவோ பார்வையிடவோ சென்றால், அந்த பலகையில் என்ன எழுதப்பட்டிருக்கின்றது என்று தெரிந்து கொள்வதற்கு ஒரு சிங்களவரையோ அல்லது சிங்களம் தெரிந்த ஒருவரையோ தான் உதவிக்கு நாடவேண்டும். எனவே இந்த இனவெறி அரசு என்னத்தை சொல்லவருகின்றது என்பதை தமிழ்மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இதில் மிகவும் மனவருத்தம் என்னவென்றால், தமிழ் தேசியவாத அரசியல் கட்சிகளோ, சிங்கள இனவாத அரசுக்கு துணைபோகின்ற தமிழ் கட்சிகளோ, அந்த பிரதேசத்தில் வாழுகின்ற தமிழ்மக்களோ கண்டுகொள்ளாததும், கண்டிக்காததும் தான்.
புதன், 14 ஏப்ரல், 2010
ராஜீவ் கொலை - நளினி விடுதலை - தடை என்ன? - கீற்று
ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை விடுவிக்க வேண்டும் என்ற சட்ட நடவடிக்கை தற்போது சூடுபிடித்துள்ளது. இந்த விவகாரத்தில் பெரும்பாலான இந்தியர்கள், நளினியை விடுதலை செய்யக்கூடாது என்ற கருத்துடையவர்கள் என்று மீடியாக்கள் கூறுகின்றன.
நளினியை விடுவிப்பதில் அரசியல் ரீதியான தடையைவிட, சட்டரீதியான தடையைவிட உளவியல் ரீதியான தடையே மிகுந்த முக்கியத்துவம் வகிக்கிறது. நளினியை விடுதலை செய்யவேண்டும் என்று கருத்து தெரிவிப்பவர்களுக்கு தேசவிரோதி, தீவிரவாதி என்பது போன்ற முத்திரைகள் குத்தப்படலாம் என்பதாலேயே இந்த பிரச்சினையில் கருத்து கூறுவதற்கு பலரும் தயங்குகின்றனர்.
ராஜீவ் காந்தியை கொலை செய்ததை நியாயப்படுத்தியும், நளினியை தண்டித்தது தவறு என்றும் நாம் வாதிடுவதாக பொருள் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை விடுவிக்கவே கூடாது என்று கருதுவதிலும், அக்கருத்தை பரப்புவதிலும் உளவியல் ரீதியான சிக்கல்கள் இருக்கின்றன.
இந்த உளவியல் ராஜீவ் காந்தி கொலை வழக்கு மற்றும் நளினி ஆகியோர் மட்டுமே தொடர்புடையது அல்ல. இந்த உளவியல் சமூகத்தின் அனைத்து பிரச்சினைகளிலும் பிரதிபலிக்கும்போது அது அனைத்து இந்தியர்களின் மனித உரிமைகளுக்கும் எதிராக செயல்படுகிறது. அதாவது பொதுமக்களின் நலன்களுக்கு எதிரான உளவியல் பொதுமக்களிடமே இருக்கிறது என்பது சுவாரசியமான ஆனால் கவலைக்குரிய உண்மை.
விரிவாகப் பார்ப்போம்.
நளினி விடுதலை குறித்து கருத்து சொல்ல விரும்பும் அரசியல் சாராத பொதுமக்கள், இந்த பிரச்சினை குறித்து ஆழ்ந்து யோசித்து முடிவுகளையும், கருத்துகளையும் சொல்வதில்லை. அதற்குப் பதிலாக சமூகத்தில் பிரபல மனிதர்கள் மீது மீடியாக்கள் கட்டமைக்கும் பிம்பங்களை உண்மையென்று நம்பி, அதன் அடிப்படையில்தான் பொதுமக்களின் கருத்துகள் உருவாக்கப்படுகின்றன. தங்களுக்கு சாதகமான இந்த நிலை நீடித்திருப்பதையே ஆதிக்க சக்திகளும், மீடியாக்களும் விரும்புகின்றன.
இதற்கு மிகச்சிறந்த உதாரணம் ராஜீவ் காந்தி விவகாரம்தான். ராஜீவ் காந்தி குறிந்து இந்திய மீடியாக்கள் கட்டமைக்க விரும்பும் பிம்பம் இதுதான்! அவர் மலிவான அரசியலுக்கும், ஊழல் கலாசாரத்திற்கும் அப்பாற்பட்டவர்... இளமைத் துடிப்பு மிக்கவர்... அவர் உயிரோடு இருந்திருந்தால் இந்தியா மிக எளிதில் வல்லரசாகி இருக்கும்... என்பது போன்ற கருத்துகளையே மீடியாக்கள் மக்கள் மனத்தில் உளவியல் ரீதியாக நிறுவ விரும்புகின்றன. தற்போது ராஜீவ் காந்தி இல்லாததால்தான் இந்தியா இத்தகைய முன்னேற்றங்களை அடையமுடியவில்லை என்று மக்கள் எண்ணுவதற்கு மீடியாவின் இத்தகைய திட்டமிட்ட செயல்பாடுகளே காரணம்.
ஆனால் உண்மைகளோ வேறு விதமாக இருந்ததை வரலாறு உணர்த்துகிறது. மிக இளம் வயதில் பிரதமர் பதவியை ராஜீவ் காந்தி ஏற்றதற்கு, அன்றைய காலகட்டத்தில் நிலவிய அரசியல் சூழலே காரணம். உண்மையில் ராஜீவ் காந்தியே அதை அன்று எதிர்பார்த்திருக்க மாட்டார்.
இந்திரா காந்தி கொலை சம்பவத்தை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தலைமை பீடத்தை அலங்கரிக்க அனைத்து மாநில மக்களின் ஆதரவு பெற்ற கவர்ச்சியான தலைவர்கள் யாரும் இல்லை. எனவே நேரு குடும்பம் மற்றும் காந்தி என்ற பெயர் ஆகியவற்றுக்கு மக்களிடையே இருந்த நல்லெண்ணத்தை கொள்முதல் செய்யும் வகையிலும், காங்கிரஸின் வாரிசு அரசியல் பாரம்பரியத்தை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையிலும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராஜீவ் காந்தி தேர்வு செய்யப்பட்டார். அதோடு பிரதமர் பதவியையும் ஏற்றார்.
காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளை ஏற்று, பல்வேறு பணிகளை செய்த தலைவர்களும், இளைஞர்களும் ஏராளமானோர் இருந்தபோதிலும், “நேரு குடும்பத்து வாரிசு” என்ற ஒற்றைத் தகுதியின் அடிப்படையிலேயே அவரிடம் அதிகாரமும், பதவியும் போய்ச் சேர்ந்தது. சீமான் வீட்டு வாரிசாக, சாதாரண மக்களின் எந்த பிரச்சினை குறித்தும் உரிய அறிவோ, தெளிவோ இல்லாத நிலையில் மிகப்பெரும் செல்வந்தர்களின் பொழுதுபோக்கான விமானம் ஓட்டுதலில் ஆர்வம் செலுத்திவந்த ராஜீவ் காந்தியிடம் பதவி வந்து சேர்ந்தது. ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ராஜீவ் காந்தி அவரது இயல்புக்கு ஏற்ற ஆட்சியையே நடத்தினார்.
உதாரணமாக, இந்திரா காந்தி கொலையைத் தொடர்ந்து சீக்கியர்களை அழித்தொழிப்பதை ஒரு பிரிவு காங்கிரஸ் கட்சியினர் ஒரு வேலைத்திட்டமாகவே நிறைவேற்றினர். இந்த சம்பவத்தில் சுமார் 3 ஆயிரம் சீக்கியர்கள் கொல்லப்பட்ட கொடுமை நிகழ்ந்த்து. இந்தப் படுகொலைக்கு காரணமானவர்கள் மீதான விசாரணை இதுவரை முழுமையாக முடியவில்லை. இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த திருவாளர் ராஜீவ் காந்தி, “ஒரு பெரிய ஆலமரம் வீழும்போது, அருகிலிருக்கும் நிலம் அதிரத்தான் செய்யும், அந்த அதிர்வில் புல், பூண்டுகள் பாதிப்படைவதை தவிர்க்க முடியாது!” என்று கூறினார். அதாவது இந்திரா காந்தி ஆலமரமாம். அவரது மரணத்தைத் தொடர்ந்து கொல்லப்பட்ட சீக்கியர்கள் அனைவரும் புல், பூண்டுகள்! ராஜீவ் காந்தியின் இந்தக் கருத்து அகில உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாத ராஜீவ் காந்தி தமது கருத்துக்கு பகிரங்கமாக மன்னிப்பு கோரி அக்கருத்தை திரும்பப் பெற்றார்.
ஆனாலும், சுமார் 3 ஆயிரம் சீக்கியர்கள் கொல்லப்பட்ட சம்பவம் நடந்து 25 ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும் இதுவரை ஒருவர்கூட இந்த வழக்கில் தண்டிக்கப்படவில்லை. இந்த சம்பவங்கள் குறித்து எந்த சான்றுகளும், ஆதாரங்களும் இல்லாதவகையில் திட்டமிட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த கயமைக்கு அப்போதைய இந்திய அரசின் தலைவரான ராஜீவ் காந்தியும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறந்து விட முடியாது.
இத்தகைய சிந்தனையோட்டம் கொண்ட ராஜீவ் காந்தி இன்று இருந்திருந்தால் என்னவெல்லாம் நடந்திருக்கும் என்பதை எண்ணிப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவை தாரை வார்க்கும் இன்றைய அரசியல் சூழலில் எவ்வாறு செயல்பட்டிருப்பார் என்பதை கணிக்க முடியவில்லை. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் உள்ள தாது மற்றும் இயற்கை வளத்திற்காக அப்பகுதியின் மண்ணின் மைந்தர்களான பழங்குடி மக்களை கொன்றும், பாலியல் உள்ளிட்ட பலவகை வன்முறைகளை செய்தும் அகற்றி, அப்பகுதிகளை பன்னாட்டு நிறுவனங்களுக்கு கையளிக்கும் ஆபரேஷன் கிரீன்ஹன்ட் என்ற அரச பயங்கரவாத நடவடிக்கைக்கு சிதம்பரத்திற்கு பதிலாக ராஜீவ்காந்தியே தலைமை ஏற்று செயல்பட்டிருப்பார்.
ராஜீவின் சகோதரர் சஞ்சய் காந்தி நெருக்கடி நிலை காலத்தில் அறிவிக்கப்படாத அதிகார மையமாக செயல்பட்டதும், ஏராளமான ஏழை மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு கட்டாய கருத்தடை செய்து, வறுமை ஒழிப்புத் திட்டங்களை அமல்படுத்தியதும் இளைய தலைமுறைக்குத் தெரியாது. மூத்த தலைமுறையோ இதுபோன்ற அராஜகங்களை திட்டமிட்டு மறைத்து வருகிறது.
ஈழத் தமிழர் பிரச்சினையிலும் ராஜீவ் காந்தியின் போக்கு அவரது இயல்புக்கு ஏற்றதாகவே இருந்தது. பிராந்திய மேலாதிக்கத்தை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கத்தில், பிரச்சினை தொடர்பானவர்களை ஆலோசிக்காமலே ஒப்பந்தங்களை தீட்டி அந்த ஒப்பந்தத்தை ஈழத்தமிழர் மீது திணித்ததில், தமது அரசியல் திறனின்மையை ராஜீவ் காந்தி வெளிக்காட்டினார்.
இதையடுத்து ஏற்பட்ட அரசியல் சூழல்களில் இந்திய ராணுவம் இலங்கையின் அரசியலில் நேரடியாக தலையிடும் சூழல் ஏற்பட்டது. அமைதி காப்பதற்காக போன ராணுவம், அங்கே செய்த காரியங்கள் அன்றைய முதலமைச்சர் கருணாநிதியையும் பெருத்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இலங்கைக்கு சென்ற ராணுவம் திரும்பிவந்தபோது அந்த ராணுவத்தை வரவேற்க முதலமைச்சர் கருணாநிதி செல்லவில்லை என்பது வரலாறு!
இதற்கிடையில் இந்திய அரசியலில் சமூக நீதி என்ற புதிய ஆயுதத்தோடு களம் இறங்கிய வி.பி. சிங்-கின் வீச்சால் காங்கிரஸ் ஆட்சியையும் இழந்திருந்தது. கூட்டணி ஆட்சியின் பிரதமராக வி.பி. சிங் பதவியேற்று, பல ஆண்டு காலமாக காங்கிரஸ் கட்சி கிடப்பில் போட்டிருந்த மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல் செய்து பெரும்பான்மை மக்களான பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கு வழிவகுத்தார். வி.பி. சிங்கின் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சி, ராமர் கோவில் பிரச்சினையை கையில் எடுத்து வி.பி.சிங் ஆட்சியை கவிழ்த்தது.
மீண்டும் தேர்தல்! நாட்டின் பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களின் ஆதரவு பெற்ற வி.பி.சிங், மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு உகந்த சூழ்நிலை நிலவியது.
தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழகம் வந்த காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பிரதமர் வேட்பாளருமான ராஜீவ் காந்தி சென்னை அருகே திருபெரும்புதூர் அருகே பொதுக்கூட்டம் ஒன்றிற்கு வந்தபோது மனிதவெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார். இந்த தாக்குதலில் வேறெந்த காங்கிரஸ் கட்சித்தலைவரோ, காவல்துறை உயர் அதிகாரிகளோ பாதிக்கப்படவில்லை என்ற உண்மை உலகத்தினரை வியப்பில் ஆழ்த்தியது.
இதையடுத்து நடந்த விசாரணையில் ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட நளினிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் இது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. இதன்படி கடந்த 19 ஆண்டுகளாக நளினி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆயுள் தண்டனை என்பதன் பொருள் இந்திய சட்டங்களில் சரியான வரையறை செய்யப்படாத நிலையில், நீண்ட நாட்களாக சிறையில் நன்னடத்தையுடன் இருக்கும் சிறைவாசிகளை விடுவிக்க பல்வேறு மாநில அரசுகள் பல்வேறு நடைமுறைகளை பின்பற்றி வருகின்றன.
தமிழ்நாட்டில் பத்து ஆண்டுகளை சிறையில் கழித்த ஒரு சிறைவாசி, அவர் மீது வேறு எந்தப் புகார்களும் இல்லாத நிலையில் (ஆயுள் தண்டனை என்பதற்கான கால அளவு சரியாக நிர்ணயிக்கபடாததால்) முன் விடுதலைக்கு பரிசீலிக்கப்படுகிறார். இவ்வாறான முன் விடுதலைக்கு தம்மை பரிசீலிக்க வேண்டும் என்று கேட்கும் உரிமை ஒவ்வொரு சிறைவாசிக்கும் உண்டு. இந்த உரிமையை நளினியும் பயன்படுத்துகிறார். ஆனால் மற்றக் கைதிகளை விடுதலை செய்வதில் ஆர்வம் காட்டும் தமிழக அரசு, நளினி விவகாரத்தில் மட்டும் ஏனோ தயங்குகிறது. இந்த தயக்கத்திற்கு நளினி விடுதலை குறித்து சமூகத்தில் நிலவும் பொதுக்கருத்தும் ஒரு காரணமாக அமைகிறது.
நளினியை தூக்கில் போட வேண்டும்: நளினியின் கை மற்றும் கால்களை செயல் இழக்கச் செய்துவிட்டு அவரை விடுதலை செய்யலாம் என்பது போன்ற பல்வேறு கருத்துகள் செய்திநிறுவனங்களின் இணையதளங்களில் பொதுமக்கள் கருத்தாக சேர்கிறது. ஏன் இந்த நிலை?
தங்கள் உரிமைகள் மிதிக்கப்படும் போதெல்லாம் விலங்குகள் கூட எதிர்ப்பை தெரிவிக்கும். ஆனால் எந்த உரிமை பறிக்கப்படும்போதும் அதை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் தியாக உள்ளம் கொண்டவர் சராசரி இந்தியர். சராசரி இந்தியனின் உளவியல் என்பது ஆன்மிகத்தின் அடிப்படையில் அமைந்தது. அடையாளமே தெரியாத கடவுளை, அனைத்தும் அறிந்தவன் – அனைத்தையும் இயக்குபவன் என்று நம்பும் இந்த உளவியலின் மறுபக்கமோ, தன்னை மிகவும் வலிமை இல்லாதவனாக, எதற்கும் பயனற்றவனாக, மிகவும் எளிமையானவனாக உருவகப்படுத்துகிறது.
கடவுளை, எல்லாம் வல்லவனாக பார்த்துப் பழகிய இந்த உளவியலின் நீட்சியே, ஆட்சித் தலைமைகளை – அது மன்னனாக இருந்தாலும் சரி: மக்களாட்சி முறையில் மந்திரியாக இருந்தாலும் சரி – மிகவும் உயர்ந்தவனாக பார்க்கிறது. அதன் மறுபக்கமாக தம்மை எளியேனுக்கும், எளியேனுமாக உருவகிக்கிறது. இதனால்தான் தனக்கு நடக்கும் எந்த அநீதிகளையும் உணரவே மறுக்கும் இந்தியனின் மனசாட்சி, அரசியல் தலைவர்களுக்கு ஒரு சாதாரண பிரச்சினை என்றால்கூட தீக்குளிக்குமளவுக்கு துணிகிறது. சாமானிய மனிதர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டால்கூட எந்த அதிர்ச்சியையும் அடையாத இந்தியனின் மனசாட்சி, ஒரு அரசியல் கட்சியின் தலைவன் இறந்த 20 ஆண்டுகள் கழிந்த பின்னரும் துக்கம் அனுஷ்டிக்கிறது.
இதன் காரணமாக பல்வேறு முக்கிய அம்சங்கள் இந்தியனின் மனசாட்சிக்கு எட்டாமல் போகிறது. இந்திய கடல் எல்லைக்கருகில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு இலங்கையின் கடற்படைதான் காரணம் என்று காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தாலும் இந்தியனின் மனசாட்சி அதை இயல்பாக ஏற்றுக்கொள்கிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ளதாக செய்திகள் வந்தாலும், ஏதோ ஒரு சாமியாரின் படுக்கை அறையுள்ளேயை இந்தியனின் மனசாட்சி சிக்கிக் கொள்கிறது.
இந்திய கடல் எல்லையை தாண்டிய மீனவர்களுக்கு இந்திய அரசு எந்த உத்தரவாதமும் கொடுக்க முடியாது: சாதாரண மீனவர்களை கொன்றதற்காக இலங்கை மீது போர் தொடுக்கமுடியுமா? என்று மத்திய அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பும்போது இந்தியனின் மனசாட்சி இலவசத் தொலைகாட்சியிலிருந்து திரும்ப மறுக்கிறது. அதேபோல் பாதிக்கப்பட்ட இனத்தின்மீது போர் தொடுத்த ஒரு நபர் கொல்லப்பட்டதற்கு பழி தீர்க்கும் விதத்தில் அந்த இனத்தை சார்ந்த பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டபோதும்கூட இந்தியனின் மனசாட்சி “மானாட, மயிலாட” நிகழ்ச்சியிலேயே மூழ்கி இருக்கிறது. ஆனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட நளினியை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்படும்போதுமட்டும் இந்தியனின் மனசாட்சி துயிலெழுந்து துள்ளி குதிக்கிறது, நளினியை தூக்கில் போடவேண்டும் என்று கூக்குரல் எழுப்புகிறது!
ஆனால் சட்டத்தின் நிலையோ வேறாகத்தான் இருக்கிறது. சட்டம் என்ற கருத்தியலின் முன் அனைவரும் சமமே. ராஜீவ் காந்தியை கொன்றவருக்கு கடும் தண்டனை: நடைபாதையில் படுத்துறங்கும் அன்றாடங்காய்ச்சியை கொன்றவருக்கு வேறு சாதாரண தண்டனை என்ற பேதமெல்லாம் சட்டத்திற்கு கிடையாது. சட்டத்தைப் பொறுத்தவரை அது இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 302ன் கீழ் ஒரு குற்றம். அந்த குற்றத்தில் பலியானவரின் சமூக முக்கியத்துவம் குறித்து ஒரு நீதிமன்றம் கவலை கொள்ளக்கூடாது.
ஆனால் நடைமுறையில் இது வேறாக இருக்கிறது. சாமானிய இந்தியனுக்கு நடக்கும் எந்த தீவிரமான மனித உரிமை மீறலையும் மிக எளிதாகவும், இயல்பானதாகவும் பார்க்கும் அமைப்புகள், சமூகத்தில் ஏதோ ஒரு வகையில் பிரபலமடைந்தவர்களின் சிறு பிரச்சினைகளைக்கூட மிகுந்த அக்கறையோடு கவனிக்கிறது. எத்தனையோ தொழில் சார்ந்தவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு போராடினாலும் திரும்பி பார்க்காத தமிழ்நாடு அரசு, திரைப்படத்துறையினரின் மிகவும் சாதாரண பிரச்சினைகளைக்கூட அதிகபட்ச கரிசனத்தோடு பரிசீலிப்பதை ஒரு உதாரணமாக கூறலாம். இதை எதிர்த்துப் போராட வேண்டிய இந்தியனின் மனசாட்சி அதற்குப் பதிலாக இது போன்ற அநீதிகளையும், முறைகேடுகளையும் இயல்பாக ஏற்க பழகிவிடுகிறது.
இதன் விளைவாகவே தமது உண்மையான பிரச்சினைகளை உணரவும், அதை எதிர்த்துப் போராடவும் தயங்கும் இந்தியனின் மனசாட்சி – அரசியல் தலைவர்களின் இழப்புகளை மட்டும் பிரமாண்டமாக்கி பார்க்கிறது. தன்னிச்சையாக செயல்பட்டு மக்களுக்கு பணியாற்ற வேண்டிய மீடியா, நீதித்துறை உள்ளிட்ட அமைப்புகள் அரசு சார்பு அமைப்புகளாக செயல்பட்டு வருகின்றன.
எனவேதான் அரசின் பார்வையிலேயே, அதாவது மக்களுக்கு எதிரான பார்வையிலேயே மீடியாக்கள் இயங்குகின்றன. அதாவது மக்களின் நலன்களுக்கு எதிரானவற்றை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் வகையில் மக்களை மீடியாக்கள் மூளைச்சலவை செய்கின்றன. இவ்வாறு மூளைச்சலவை செய்யப்பட்டு உருவாக்கப்படும் பொதுக்கருத்துகளுக்கு எதிரான முடிவை மேற்கொள்ள நீதிமன்றங்கள் தயங்குகின்றன.
இவ்வாறு ஆளும் வர்க்கங்களால் திட்டமிட்டு கட்டமைக்கப்படும் பொதுக்கருத்துகளுக்கு எதிராக ஒரு நீதிபதி தீர்ப்பளித்துவிட்டால், அந்த நீதிபதிக்கு எதிரான பிரச்சாரத்தில் மீடியாக்கள் இறங்கிவிடும். இதனால் அந்த நீதிபதியின் எதிர்கால பதவி உயர்வுகளோ, வேறு வாய்ப்புகளோ பாதிக்கப்படலாம் என்ற நிலை காரணமாகவே இதுபோன்று அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு மிக அதிக தண்டனை வழங்கப்படுகிறது.
உண்மையிலேயே சட்டத்தின் ஆட்சி நடைபெற வேண்டும் என்றால் இந்த நிலை மாற வேண்டும். எந்த விவகாரத்திலும் உணர்ச்சிவசப்பட்டு செயல்படுவதைவிட, அறிவுப் பூர்வமாக சிந்தித்து செயல்படுவதற்கு மக்கள் பழக வேண்டும். ஆனால் இதை ஆளும் வர்க்கமோ, ஆதிக்க சக்திகளின் மீடியாக்களோ உதவி செய்யாது என்பதுடன், இடையூறும் செய்யும். இதையெல்லாம் மீறினால்தான் மக்களின் நலன்களை முன்னிறுத்தும் அரசை அமைக்கமுடியும். இதற்கான பணிகளில் மக்கள் இயக்கங்களும், மாற்று ஊடகங்களும் தொடர்ந்து செயல்பட்டால்தான் மனித உரிமைகளை மதிக்கும் சமூகத்தை அமைக்க முடியும்.

நீரடி நீச்சல் எல்லாம் நாம் அறிவோம் துயர் - நீந்திக்கரையேறும் வழியறிவோம் யாரடிச்சாலும் திருப்பியடிப்போம் தன்மான மீட்பிற்க்காய் உயிரை கொடுப்போம்.. நம்பியேமாறும் அண்ணன் அவன் மறுத்து விட்டான் தன்னாட்டின் உரிமைதனை வன்னியிலே நடாத்திவிட்டான் தாய் மண்ணை மீட்டெடுக்கும் தன்னாட்சியாய் மலர்வோம் என்று ஈழத்தமிழா நீயும் எழுச்சி குரல் உறுமலடா.. மண்ணின் விடுதலையும் பெண்ணின் விடுதலையும் கண்ணின் மணியாக நாம் கருதி வாழ்ந்திருந்தோம் புண்ணில் வழிந்தோடும் ரத்தமாய் நெஞ்சம் சிதறி அங்கே நித்தமும் சாக்காடு.. புலம் பெயர் வாழ் தமிழனின் தன்மான காற்று தனதானிக்காற்றாக ஈழத்தை நிரப்பட்டும் வெடிக்கட்டும் மக்கள் புரட்டிச்சியின் வேகாறுகள் அன்னியக் கட்டுக்களை பொசுக்கி எரிக்கட்டும் ஆழுமையும் ஆழுகையும் உந்தனுக்கு இல்லையென்றால் வீடுமில்லை நாடுமில்லை தமிழனே நீயும் நம்பு.. ஈழத்தமிழனின் வாழும் தன்னாட்சி உரிமை தன்னை மறுத்துரைக்கும் சிறப்புரிமை உலகின் எந்த உருப்புரிமை நாடுகளுக்கும் கிடையவே கிடையாது எம் இனத்தை இல்லாதொளிக்கும் இறுதி இலக்கில் சிங்களம் வெற்றி பெறும் என்று நம்பும் இரட்டை நாக்கு உலக நாடுகளின் நம்பிக்கைகளை நாம் தவிடு பொடியாக்காவிட்டால் நாமும் நம் ஈழக்கொள்கைகளும் பின்னடைவிற்கு உள்ளாகும்... நாளைய இருப்பிற்கான எம் இனத்தின் ஈழத்திற்கான எம் கரங்களின் பலங்களின் அசைவிலேதான் வாழ்வா சாவா என்ற எம் இனத்தின் இறுதி மூச்சு.. தமிழனே நீயும் பலமாகு தாயக கோட்பாடு உனதாகும்.. தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்..
ஆழும் கட்சியினுள் தொடரும் உள்வீட்டு மோதல்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களுள் விருப்பு வாக்குகளுக்காக இடம்பெற்றுவந்த உள்வீட்டு மோதல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ள காலம்சென்ற அமைச்சர் டி.எம் தசநாயக்கவின் மனைவியான இந்திராணி தசநாயக்கவின் ஆதரவாளர் ஒருவர் வெற்றி பெற்றுள்ள வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர்களால் அடித்துக்கொலை செய்யப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்துள்ள ஆனமடுவப் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் தேர்தல் காலங்களில் திருமதி இந்திராணி தஸநாயக்க சார்பாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டவர் என தெரியவருகின்றது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)