வெள்ளி, 23 ஏப்ரல், 2010

புத்திஜீவி பிள்ளையான் தமிழ் மக்களுக்கான அறிவுரை ........!


வடக்கு கிழக்கு மக்கள் இன்னும் அடைய முடியாத இலக்குகளை நோக்கிச் சிந்திக்கின்றார்கள் என்றும் அரசியலில் இன்னும் தெளிவுபெறவில்லை என்றும் பிள்ளையான் எனப்படுகின்ற கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் தெரிவித்துள்ள கருத்தை நோக்கிய போது சிரிப்புத்தான் வருகின்றது. வடக்கு கிழக்கு மக்கள் இன்னும் அடைய முடியாத இலக்குகளை நோக்கிச் சிந்திக்கின்றார்கள் என்றும் அரசியலில் இன்னும் தெளிவுபெறவில்லை என்றும் பிள்ளையான் எனப்படுகின்ற கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் தெரிவித்துள்ள கருத்தை நோக்கிய போது சிரிப்புத்தான் வருகின்றது. பிள்ளையானின் பிள்ளைத்தனமான கருத்தைக் கேட்கும் போது அவர் மீது அனுதாபம்தான் மேலிடுகின்றது. விடுதலைப்புலிகளுக்கு எதிராக அணிதிரண்டு, பிரதேச வாதம் பேசியபோது கிழக்கு மக்கள் உண்மையிலேயே கருணா மற்றும் பிள்ளையான் குழுவினர் தமக்கு நல்லதொரு வழிகாட்டுவார்கள் என்று அவர்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பது உண்மைதான். ஏனென்றால் கருணாவும் பிள்ளையானும் தமது பிரதேசத்திற்காக - பொதுமக்களுக்காகப் பாடுபடுவார்கள் என்று கிழக்கு மாகாண மக்கள் எண்ணினார்கள். அவர்கள் ஆரம்பத்தில் கூறியதுபோன்று, கிழக்கு மாகாணத்தை வளப்படுத்தத்தான் போகின்றார்கள் என உண்மையாகவே மக்கள் நம்பினார்கள். ஆனால் இந்த இரண்டுபேருமே, அரசாங்கத்தின் அடிவருடிகளாக மாறி, ஜனாதிபதிக்கும் அவரது குடும்ப அரசியல்வாதிகளுக்கும் வக்காளத்து வாங்கும் மலினமான அரசியல் நடத்துவார்கள் என்று கிழக்கு மாகாண மக்கள் கிஞ்சித்தும் எதிர்பார்க்கவில்லை. மட்டக்களப்பு மாநகரசபைக்கான தேர்தலிலும், கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலிலும் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பற்றியும் அந்த மாகாணத்தில் தேனும் பாலும் ஆறாக ஓடுவது பற்றியும் இந்தப் புதிய தலைவர்கள் காட்டிய கற்பனைப் படங்களையும் கலர் கலரான எதிர்காலக் கனவுகளையும் எப்படியும் தாங்கள் அடைந்துவிடுவோம் என்ற நப்பாசை மக்கள் மத்தியில் ஏற்படத்தான் செய்தது. இதனால் அவர்கள் மீது நம்பிக்கை வைத்து மாநகரசபை மற்றும் மாகாணசபை தேர்தல்களில் மக்கள் வாக்களித்தார்கள். ஆனால் நகர மேயர் சிவகீதா பிரபாகரன் பதவிக்கு வந்ததும், தேர்தல் காலத்தில் வாக்களித்ததைப் போன்று, நகரத்தை அபிவிருத்தி செய்வதில் அக்கறை காட்டவில்லை. ஏதோ அரசாங்க ஊழியரைப்போன்று அரசாங்கம் சொல்லியதைச் செய்து கொண்டு. ஜனாதிபதிக்கு நல்லபிள்ளையாக வலம் வந்தார். திடீரென்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியிலிருந்து விலகி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அவர் இணைந்தார். பின்னர் அந்தக் கூட்டமைப்பிலிருந்து விலகி ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து ஜனாதிபதி தேர்தலின்போது முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாகச் செயற்பட்டார். பிள்ளையானும் கருணாவும் சுயநல அரசியல் செயற்பாடு காரணமாக ஓரணியில் இருந்தும் வாக்குவாதப்பட்டார்கள். மோதிக்கொண்டார்கள். தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தை உலகத்தின் முதல்தரமான பயங்கரவாதம் என படம் காட்டி அதனை அனைத்துலக சக்திகளின் உதவியோடு ஒழித்துக் கட்டுவதில் வெற்றிகொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு தங்களில் யார் அதிக விசுவாசமிக்கவர் என்பதைக் காட்டுவதற்காகப் பகீரதப்பிரயத்தனம் மேற்கொண்டிருந்தார்கள். இதனால் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் காற்றில் பறந்தன. மக்கள் என்ன நினைப்பார்கள் - என்ன நினைக்கின்றார்கள் என்பதை நாடிப்பிடித்துப் பார்த்துச் செயற்படத் தவறிப் போனார்கள். தாங்கள் சொல்வதே வேதவாக்கு. அதற்கு மாற்றுக் கருத்து எதுவும் இருக்க முடியாது - இருக்கக் கூடாது என்ற மனப்பாங்கில் செயற்பட்டதன் விளைவையே நடந்து முடிந்துள்ள பொதுத் தேர்தலில் அவர்கள் அறுவடையாகப் பெற்றுள்ளார்கள். கிழக்கு மாகாண மக்களின் தலைவர்களாகத் தோற்றம் பெற்ற கருணாவும், பிள்ளையானும் மக்கள் மனங்களில் இடம் பிடிக்கத்தக்க வகையில் என்ன செய்திருக்கின்றார்கள், எந்த அளவிற்கு சேவையாற்றியிருக்கின்றார்கள் என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் பிரதிபலித்துள்ளன. கிழக்கு மாகாண மக்களின் மனங்களை எந்த அளவிற்கு இவர்கள் வென்றிருக்கின்றார்கள் என்பதையும் இந்த முடிவுகள் சுட்டிக்காட்டுவதாக அமைந்திருக்கின்றன என்றாலும் மிகையாகாது. ஒருங்கிணைந்த இலங்கைக்குள் அரசாங்கத்துடன் இணைந்து முரண்படாத வகையில், போரினால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தில் உள்ள முக்கிய பிரச்சினைகளில் எத்தனை பிரச்சினைகளை கருணாவினாலும், பிள்ளையானாலும் தீர்க்க முடிந்திருக்கின்றது என்பதை இவர்களால் கூறமுடியுமா? கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் என்ற வகையில் அடையக் கூடிய இலக்குகளில் எத்தனையை பிள்ளையான் என்ற சந்திரகாந்தனால் அடைய முடிந்திருக்கின்றது என்பதைத் தெளிவுபடுத்த முடியுமா? பொதுமக்கள் மத்தியில் இருந்து அவர்களுக்காகப் பாடுபட்டு. அவர்களில் ஒருவராக இருந்து மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி தலைமைப் பதவிக்கு வருகின்றவர்களும் சரி, சூழ்நிலை காரணமாக அரசியலில் புகுந்து மக்கள் மத்தியில் தலைமைப் பதவிக்கு வருகின்றவர்களும் சரி, எப்போதும் மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பவர்களாகவும், மக்களின் நலன்களை இலக்கு வைத்துச் செயற்படுபவர்களாக இருக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும். இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறுகின்றவர்கள் எவராக இருந்தாலும், மக்களின் நம்பிக்கையை வென்ற தலைவர்களாகத் திகழ முடியாது. இதுதான் நடைமுறை அரசியலாக இருந்து வருகின்றது. ஆயுதக்குழுக்களில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களாயினும் சரி, பாரம்பரிய அரசியல் கட்சிகளில் இருந்து அரசியல் நடத்தியவர்களாயினும் சரி அவர்கள் தமது தலைமைப் பொறுப்பில் தொடர்ந்து இருக்க முடியாமல் மக்களினால் தூக்கி எறியப்பட்ட எத்தனையோ உதாரணங்களைக் கடந்த கால அரசியல் வரலாற்றில் கண்கூடாகக் காண முடியும். ஒருங்கிணைந்த இலங்கைக்குள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பது நேற்று தற்செயலாக அரசியலுக்கு வந்த பிள்ளையான் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நிலையில் வடக்கு கிழக்கு மக்கள் இல்லையென்பதை பிள்ளையான் கருணா போன்றவர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒருங்கிணைந்த இலங்கைக்குள் அரசாங்கத்துடன் எந்தவிதமான முரண்பாடுகளுமின்றி பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதைத்தான் எமது முன்னோர்களான அனைத்துத் தமிழ்த் தலைவர்களும் விரும்பினார்கள். அதற்காகத் தம்மாலியன்ற விட்டுக்கொடுப்புகளைச் செய்து எத்தனையோ வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்கள். அவர்கள் தமது அரசியல் அனுபவத்தின் மூலம் சிங்களப் பேரினவாதத்தின் மோசமான வஞ்சகம் நிறைந்த பிற்போக்குத் தனமான அரசியல் செயற்பாடுகளையே கண்டார்களே ஒழிய தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான முன்னேற்றத்தை ஆக்கபூர்வமாகக் காணவே முடியவில்லை. தந்தை செல்வா முதல், அமரர் அமிர்தலிங்கத்திலிருந்து அனைத்து மிதவாதத் தமிழ் அரசியல் தலைவர்களினதும் அரசியல் அனுபவம் இதுவாகத்தான் இருந்திருக்கின்றது. இந்தப் பின்னணியில் தான் ஆயுதப் போராட்ட வழிமூலம் இலங்கையின் பெரும்பான்மை அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுத்து, அவர்களை வழிக்குக் கொண்டு வரலாம் என தமிழ் இளைஞர்கள் ஆயுதக்குழுக்களில் இணைந்து செயற்பட்டார்கள். அவர்களின் அளப்பரிய தியாகங்களை கருணா, பிள்ளையான் போன்றவர்கள் கொச்சைப்படுத்தி, தமிழ் மக்களைக் காட்டிக்கொடுத்து சரணாகதி அரசியலில் இறங்கியிருக்கின்றார்கள். இதன் மூலம் அவர்கள் அடையப்போவது எதுவுமே இல்லை என்பதை அவர்கள் இதுகால வரையில் தெளிவாகப் புரிந்திருக்க வேண்டும். தமிழர்களின் பாரம்பரிய வடக்கு கிழக்குத் தாயகப் பிரதேசத்தைப் படிப்படியாகக் கபளீகரம் செய்து, தமிழ் மக்களின் கலை கலாசாரம், பொருளாதார நிலைமைகளைத் தவிடு பொடியாக்கி அவர்களைக் கையேந்தி நிற்கின்ற ஒரு நிலைமைக்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகத் திட்டமிட்டு, உறுதியாகவும் இராஜதந்திர ரீதியிலும் சிங்களப் பேரினவாதத் தலைவர்கள் செயற்பட்டு வருகின்றார்கள். இந்தப் பேரினவாத அரசியல் போக்கைப் புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்து கொண்டும் புரிந்து கொள்ளாதவர்களைப் போல செயற்படுகின்ற கருணா, பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் தமிழ் மக்களின் உண்மையான அரசியல் தலைவர்களாக இருக்க முடியாது. இதனைத் தமது வாக்களிப்பின் மூலம் தமிழ் மக்கள் மிகவும் தெளிவாக வெளிப்படுத்தி வந்துள்ளார்கள். எதிர்ப்பு அரசியல், இணக்கப்பாட்டு அரசியல், சரணாகதி அரசியல் என்ற மூன்று விதமான அரசியல் சாணக்கியச் செயற்பாடுகளின் விளைவாக ஏற்பட்டு வந்துள்ள அரசியல் சூழ்நிலைகள் - அரசியல் சூறாவளிகளில் வடக்கு கிழக்கு மக்கள் சிக்கி இன்ப துன்பங்களை அனுபவித்து வந்துள்ளார்கள். இந்த அரசியல் போக்குகளில் அவர்கள் அளப்பரிய அனுபவங்களை அடைந்துள்ளார்கள். சொல்லொணாத துயரங்களையும், சோகங்களையும், அவமானங்களையும், அவர்கள் சந்தித்திருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் சரியான தலைவர்களை அடையாளம் காண்பதில் அவர்கள் பல்வேறு சிரமங்களையும், சங்கடங்களையும் சந்தித்து வருகின்றார்கள். இதன் மூலம் பழுத்த அனுபவசாலிகளாக அவர்கள் மாறியிருக்கின்றார்கள். தேர்தல் காலங்களில் தமது முன்னால் வருகின்ற கோமாளிகள், வஞ்சகர்கள், தில்லுமுல்லு நிறைந்தவர்கள், நேர்மையானவர்கள், கபடம் நிறைந்தவர்கள், அமைதியான ஆதரவான தோற்றம் கொண்ட அரசியல் சாணக்கியம் நிறைந்த சண்டியர்கள் என பலதரப்பட்டவர்களை எதிர்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். அது மட்டுமல்லாமல், வடக்கு கிழக்கு மக்கள் அனைவருமே இத்தகைய தேர்தல் சந்தர்ப்பங்களில் சிலர் தெளிவானவர்களாகவும், உறுதியானவர்களாகவும், பலர் சூழ்நிலைக் கைதிகளாகவும் இருந்து தமது வாக்குகளை அளிக்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். அண்மைக்கால தேர்தல்களின் வாக்களிப்பு வீதத்தைப் பார்த்தால், இவர்களில் பலர் இந்த நாட்டின் அரசியல் போக்குகளில் மனம் கசந்து சலிப்புற்று அக்கறையற்றவர்களாக மாறி தமது அதி உன்னத வாக்களிக்கும் உரிமையை உதாசீனம் செய்தவர்களாக இருப்பதை மிக மிகத் தெளிவாகக் காண முடியும். மொத்தமாகச் சொல்லப்போனால், வடக்கு கிழக்கு மக்கள் சிங்களப் பேரினவாதிகளினாலும், அவர்களது அடிவருடிகளின் ஊடாகவும் திட்டமிட்ட வஞ்சகமான அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வந்திருக்கின்றார்கள். இதுதான் யதார்த்தம். வடக்கு கிழக்கு மக்கள் அடைய முடியாதவற்றைக் கேட்கவில்லை. அடைய முடியாதவற்றை இலக்காக வைத்துக் கொண்டு ஆசைப்படவும் இல்லை. சுதந்திரமாக, கௌரவத்தோடு, கண்ணியமாகத் தமது பாரம்பரிய பிரதேசத்தில் தமது நிர்வாகக் கடமைகளைத் தாங்களே செய்து வாழ வேண்டும் என்பதைத்தான் அவர்கள் கேட்கின்றார்கள். ஒருங்கிணைந்த இலங்கைக்குள் இது சாத்தியப்படமாட்டாது என்று எவரும் கூறமுடியாது. இது அடைய முடியாத இலக்கு அல்ல என்று எவரும் கூறமுடியாது. இவ்வாறான ஒரு நிலைமைக்கு வடக்கு கிழக்கு மக்கள் ஆசைப்படக் கூடாது என்று கூறுவதற்கு எவருக்கும் அருகதையும் கிடையாது. எனவே வடக்கு கிழக்கு மக்களைப் பார்த்து, “நீங்கள் விழிப்படையவில்லை. அடைய முடியாத இலக்குகளுக்கு ஆசைப்படுகின்றீர்கள்” என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் கூறுவது சிறுபிள்ளைத் தனமாதே தவிர வேறொன்றுமில்லை.

இலங்கையர்களை அவுஸ்ரேலியாவிற்கு ஏற்றிச் சென்ற படகு மலேசியாவில் கைது

இலங்கையில் வாழ வழியின்றி வெளிநாட்டில் ஏதிலியாக தஞ்சம் அடைய சென்ற பெண்கள் குழந்தைகள் உட்பட 75 ஈழத்தமிழர்கள் சென்ற படகை இன்று அதிகாலை மலேசியா கடலில் வைத்து பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். மலேசிய பொலிஸார் அவர்களை தரையிறங்குமாறு வற்புறுத்தி வருகின்ற போதிலும், தாங்கள் மலேசியாவில் கரை இறங்கினால் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பபடுவார்கள் என்பதால் தரையிறங்க மறுத்த ஈழத்தமிழர்கள் தங்களை ஏதிலிகளாக ஏற்று கொள்ளக்கூடிய ஏதோ ஒரு நாட்டிற்கு அனுப்பிவைக்குமாறு மலேசிய பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தோனேசியா மெராக் துறைமுகத்தில் நம் உறவுகளுக்கு ஏற்பட்ட நிலை இவர்களுக்கும் ஏற்படலாம் என அஞ்சப்படுகின்றது.

கப்பம், கடத்தலுடன் தொடர்பு; மானிப்பாயில் மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் கப்பம் கோரி கடத்தி வைக்கப்பட்டிருந்த இருவர் பொலிஸாரால் நேற்று விடுவிக்கப்பட்டதுடன், கடத்தலுடன் தொடர்புடையவ ர்களென சந்தேகிக்கப்படும் மூவர் மானிப்பாய் பொலி ஸாரினால் கைது செய்யப்பட் டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார். சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது:- யாழ். மானிப்பாயைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரும் வாகன திருத்துனர் ஒருவரும் கடந்த 20ஆம் திகதி இனந்தெரியாத கும்பலொன்றி னால் கப்பம் கோரி கடத் தப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட சுப்பிரமணியம் மகேந்திரன் மற்றும் டி. மகேஸ்வரன் ஆகியோரை விடுவிப்பதாயின் 50 இலட்சம் ரூபா பணம் அல்லது 25 பவுண் நகையுடன் ஒரு இலட்சம் ரூபா பணத்தை கப்பமாக தர வேண்டுமெனவும் அக்கும்பல் கேட்டுள்ளது. குடும்பத்தார் பொலிஸ் நிலையத்துக்கு வழங்கிய தகவலையடுத்து பொலிஸார் தீட்டிய திட்டத்தின் படி கப்பம் வழங்குவது போல சென்று சந்தேகநபர்கள் மூவ ரையும் பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.

எங்கே? போயினர் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள்

தமிழீழ தேசிய தாயை! தமிழ் நாட்டிற்குள் செல்வதற்கு அனுமதி மறுத்து அங்கிருந்து மலேசியாவுக்கு திருப்பி அனுப்பியதைத் தொடர்ந்து தமிழகம் மீண்டும் ஒரு எழிச்சியோடு புரட்ச்சி செய்யப் புறப்பட்டிருக்கிறது, தமிழின உணர்வாளர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் சோனியாவின் தலைமையிலான இந்திய அரசிற்கும், கருணாநிதியின் தலைமையிலான மாநில அரசிற்கும் எதிரான போராட்டங்களை இன, மான, உணர்வோடு நடத்திக்கொண்டு இருக்க, மறுபுறத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக இருந்தவர்கள் கூட எம் தாயை திருப்பி அனுப்பியதைக் கண்டித்து மனித நேயத்துடன் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்! ஆனால் நாம்தான் தமிழர்களின், தலைமைகள் நாம்தான் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள்,என்று கொக்கரித்துக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், சிங்கள இனவெறியர்களின் அடக்குமுறையில் சிக்கி அழிந்து கொண்டிருந்த ஒட்டுமொத்த தமிழினத்தையும் மறுபிறவி எடுக்கவைத்து தமிழர்களை தரணியெங்கும் தலை நிமிரவைத்த தமிழ் இனத்தின் தேசியத் தாய்க்கு,தமிழக இந்திய அரசுகளால் இழைக்கப்பட்ட இந்த வக்கிரமான கொடுமையை கண்டிக்கத்தவறியது ஏன்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அவர்களுடைய பொறுப்பில் இருந்துகொண்டு இந்தியத் தூதரகங்கள் முன் இதற்க்கான எதிர்ப்புக்களைக் காட்டத் தவறியது ஏன்? இலங்கையில் இருக்கும் இந்தியத் தூதரகம் முன்கூட இவர்கள் எதிர்ப்புக்களைக் காட்டி ஒரு கண்டனம் கூடத் தெரிவிக்கத் தவறியதன் காரணம் என்ன? சரி திருகோணமலையில் நடந்த கட்சிக் கூட்டத்தில் கூட இந்திய மத்திய அரசிற்கோ தமிழ் நாட்டு அரசிற்குக் கூட ஒரு கண்டனம் தெரிவிக்கத் தவறியது ஏன் தமிழீழத் தேசியத் தாய்க்கு நடந்த கொடுமைக்கு கூட ஒரு கண்டனம் தெரிவிக்க துப்பில்லாத நீங்கள் தமிழ் இனத்தின் ஏகப்பிரதிநிதிகளா நீங்கள் தமிழ் இனத்தின் தலைமைகளா? இவற்றுக்கும் பாதுகாப்பு காரணங்களைக் காட்டப்போகிறீர்களா? அல்லது இதுவும் இராஜதந்திரம் என்று எம் இனத்தின் காதுகளில் சந்தணம் பூசப் போகிறீர்களா? இந்த ஏகப்பிரதிநிதிகள் சொல்வதை கேட்பவர்கள் கேனயனாக இருந்தால் சம்பந்தரின் தலையில் சண் தொலைக்காட்சி தெரியுமாம், கிணத்துத் தவளைபோல பதவி மோகத்துக்குள் மூழ்கிக் கிடக்கும் இவர்கள் குறுகிய வட்டத்துக்குள் மட்டும் நின்றுகொண்டு சிங்கள இனவெறி அரசையும் இந்தியப் பாதக அரசையும் இராஜதந்திரமான முறையில் அணுகுவதாகக் கூறி எம் மக்களை ஏமாற்றிக்கொண்டு, இனவெறி பிடித்த அரசுகளிடம் அடிபணிந்து தன்மானத்தை விற்று, இதுவரை காலமும் எந்த உரிமைகளுக்காக, எமது சந்ததி அகிம்சை வழியிலும் ஆயுதம் ஏந்தியும் உயிராயுதங்களாகவும் களத்திலே போராடி வெடியாக வெடித்துக் களப்பலியாகி, எம் தாய் மண்ணின் விடியலுக்காக வித்தாகிப் போனார்களோ! அந்த வித்துக்களை பிடுங்கி எறிந்து, அந்த மான மாவீரர்களின் இலட்சியங்களை எல்லாம் தூக்கி எறிந்து, அவர்களின் தாயகக் கனவுகளையெல்லாம் கலைத்து, தாய்மண்ணின்காவல்த் தெய்வங்களுக்கும், எம்தேசியத்தலைமைக்கும்,ஏன்ஒட்டுமொத்த தமிழ் இனத்திர்க்குமே நம்பிக்கைத் துரோகம் செய்து, தமிழீழக் கோரிக்கையை கைவிட்ட இவர்களா? தமிழர்களின் ஏகப்பிரதி நிதிகள்! இவர்கள்தான் தமிழினத்தின் உரிமைகளை வென்று தரப்போகிறவர்களா? ஒட்டுமொத்த தமிழ் மக்களுடன் இணைந்து ஒற்றுமையாக சிந்தித்து செயற்பட்ட தவறிய இவர்கள் கடந்த காலங்களில் இந்திய இலங்கை அரசுகளுக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் பணத்திற்காக கொடுத்த வாக்குறுதிகள் காரணமாக தற்போது சுயமாக எந்த முடிவுகளும் எடுக்க இயலாத இவர்கள்! இனி வரும் காலங்களில் என்ன செய்யப் போகிறார்கள்? சில நாட்களுக்கு முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இர,சம்மந்தன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் பத்திரிகை அறிக்கையும்,வானொலிக்கு வழங்கிய பேட்டியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உண்மைத் தன்மை என்ன என்பதை மிகவும் தெளிவாகக் காட்டியுள்ளது அவர்களின் கருத்துக்களில் சிலவற்றை இங்கே பார்ப்போம், சுரேஷ் பிரேமச்சந்திரனின் கருத்து? பி,பி,சீ,தமிழ் சேவைக்கு வழங்கிய பேட்டியில் இருந்து சில,இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்கள் தமிழ் ஈழக்கோரிக்கையை கைவிட்டுள்ளனர் இதன் அடிப்படையில் தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு மக்கள் ஆதரவு வழங்கி எமக்கு வாக்களித்துள்ளனர் அவர்களின் ஆணையை நிறைவேற்ற இனி வரும் காலங்களில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்ப்பட விரும்புகிறோம்! இரா சம்மந்தரின் பத்திரிக்கை அறிக்கை? தமிழ் மக்கள் எமக்கு வழங்கியுள்ள ஆணையை நிறைவேற்ற அரசாங்கத்துடன் இணைந்து செயற்ப்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆர்வமாக இருக்கிறது,பிளவு படாத இலங்கைக்குள்,(தமிழீழக் கோரிக்கையை கைவிட்ட)தமிழ் மக்களுக்கென ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு அரசியல் தீர்வை அரசாங்கம் முன்வைக்குமானால் தாம் அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளத் தயாராகவுள்ளதாகவும்,அவ்வாறான செயற்ப்பாடு தமிழ் மக்களின் நலனை மட்டுமல்ல முழுநாட்டின் நலன்களைப் பேணுவதாகவும் அமையும் என்று திருமலையில் நடந்த மாநாட்டின் பின்னர் வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கையில் தெரிவித்துள்ளார், இந்த அறிக்கைகளில் இருந்து ஒவ்வெரு தமிழனும் தெரிந்துகொள்ள வேண்டியது, இனிவரும் காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்ப்பாடுகளில் எமக்கு ஏமாற்றங்கள் மட்டுமே கிடைக்கும், இவர்கள் ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் உரிமைகளை விற்று விற்றுப் பிழைப்பு நடத்தப் பிறப்பெடுத்தவர்கள் , இவர்கள் இப்போது புலம்பெயர்ந்த தமிழர்களையும் குறிவைக்கத் தொடங்கியுள்ளனர், வன்னி யுத்தத்தின் பின்னர் முகாம்களில் வாழுகின்ற எம் மக்களின் மீள் குடியேற்றத்தை காரணம் காட்டி, அவர்களுக்கு உதயுவதற்கு என்ற போர்வையில் புலம் பெயர்ந்த மக்களிடமிருந்து பெருமளவான பணத்தினைப் பெற்று, அந்தப்பணத்தில் கூட்டமைப்பின் முக்கியமானவர்கள் ஒருசிலர் ஏப்பம் விடத் துணிந்துவிட்டனர் அவர்களை இனம்கண்டு அவர்களிடத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்! தமிழன் என்று சொல்லடா தலைவன் வழி நில்லடா தன்மானமுள்ள தமிழனாக வாழடா! இன்று தமிழர் பிரதேசம் எங்கும் தமிழர்களின் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் தமிழ் மக்களின் சுதந்திரமான நிம்மதியான சுயகவுரவத்துடன் தமிழ் ஈழத்தில் வாழவேண்டும் என்ற இலச்சியத்தை நெஞ்சில் நிறுத்தி அந்த மண்ணிலே மக்களுக்காக செத்து மடிந்து வித்தாகிப்போன மாவீரர்களின், வீரமறவர்களின் துயிலும் இல்லங்கள் நினைவுச் சின்னங்கள் தூபிகள் அனைத்தும் சிங்கள இனவெறி காடையர்களால் அடித்து உடைத்து தரைமட்டமாக்கிக் கொண்டிருக்க அந்தப்பிரதேசத்தில் வாழும் மக்களும் அரசியல்த் தலைவர்களும் தமக்கும் அந்தக் கல்லறைகளுக்கும் எதுவித தொடர்பும் இல்லாதது போன்று வாய்பொத்தி கண்மூடி கைகட்டி சூடுசொரணை அற்ற தன்மானமற்ற நன்றிமறந்த மானங்கெட்ட சுயநல வாழ்வில் என்னசந்தோசம் காண்கிறார்களோ தெரியவில்லை தமிழன் தமிழனாக மட்டும் வாழ வேண்டும் பச்சோந்திகளாக அல்ல !

நம்பிக்கை ஒளி ......RAY OF HOPE

432, Alexandra Avenue, Rayners lane, Harrow, Middlesex, HA2 9TW, Phone: 0044 2033769352


Email: info@rohmay2009.com

23.04.2010

இலங்கைத்தீவில் தமிழினம் கொடும் யுத்தத்தினால் காலம் காலமாக அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. கடந்த மே 2009 இல் நடைபெற்ற யுத்த அழிப்பினால் காலகாலங்களுக்கும் மாறமுடியாத பேரழிவைத் தமிழினம் சுமந்து கொண்டிருக்கிறது.

தற்போது உறவினர்களை இழந்தும் உடமைகளை இழந்தும் தமிழினம்> சீர்குலைக்கப்பட்டு சிதைந்துள்ளது. இவ்வாறு சிதைக்கப்பட்டு முகாம்களிலும்> வைத்தியசாலைகளிலும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் அத்தியாவசிய தேவைகள் கிடைக்கப் பெறாமலும்> மீளக்குடியமர்த்தப்படாமலும் தங்கள் சொந்த நிலங்களில் உணவு> உடை> வாழ்விடம்> மற்றும் வாழ்வாதார நம்பிக்கைகள்> தொழில் வாய்ப்புகள் எதுவுமில்லாமல் வாழ்கின்றனர்.

“இவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தியாக்கவும், உளவளத்தினை மேம்படுத்தவும், சிதைந்து, பிரிந்த உறவுகளைத் தொடர்புபடுத்தவும் புலத்தில் உருவாக்கம்பெற்றுள்ள நிறுவனமே நம்பிக்கை ஒளி (RAY OF HOPE).”



இதன் முதலாவது திட்டம்

“ஒரு குடும்பம் ஒரு தேசம்”(CONNECTING FAMILIES) என்னும் திட்டம் உருவாக்கம் பெற்றுள்ளது. போரின் பேரவலத்திலிருந்து தம்மை மீட்டு வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான உடனடி உதவிகளை எதிர்பார்த்து பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் தற்போது தமிழர் தாயகத்தில் உள்ளனர்.

உள்நாட்டில் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி தமது சொந்த இடங்களுக்கு மீளச் செல்லும் நிலையில் இந்த எண்ணிக்கை இன்னமும் அதிகரிக்கலாம் என நம்பப்படுகின்றது .

தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள தமிழ் மக்களின் உடனடித் தேவைகளை அடையாளம் கண்டு அதற்கான உதவியை வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

திட்ட முன்னோட்டம்

புலம்பெயர்ந்த நாட்டிலுள்ள குடும்பம் ஒன்றுடன் தாயகத்தில் உள்ள ஒரு பாதிக்கப்பட்ட குடும்பத்தை இணைத்து விடுவதன் மூலம் எமது உறவுகளுக்கான, உதவிகளை நேரடியாக வழங்குவதுடன் அவர்களுக்கான உளவள ஆலோசனைகள், மற்றும் உதவிகளை வழங்குதலே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

முகாம்களில் இருந்தும் மருத்துவமனைகளில் இருந்தும் வெளியேறியுள்ள மக்கள் தமது வாழ்வாதாரத்தை மீளத் தொடங்குவதற்கான ஒரு வழிமுறையாக இதைப் பார்க்கலாம்.

தெரிவு செய்யப்பட்ட குடும்பங்கள் அனைத்தும் போரினால் தமது குடும்ப அங்கத்தவர்கள் பலரை இழந்தவர்களாகவும், குடும்பத்தலைவர்களை இழந்தவர்களாகவும், போரினால் உடல் உறுப்புக்களை இழந்தவர்களாகவும், தமது சொத்து உடைமைகளை இழந்து நிர்க்கதியாக உள்ளவர்களாகவும் உள்ளனர்.

தகவல் சேகரிப்பு

மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு. அம்பாறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் சமூக சேவையாளர்களினால் நடாத்தப்படும் நலன்புரிச் சங்கங்கள், சமய சார்பான பராமரிப்பு இல்லங்கள், மற்றும் மூதாளர் காப்பகங்கள், தனிநபர்கள் ஊடாக பெறப்படும் பயனாளிகளின் விபரங்கள் சரிபார்க்கப்பட்டு ஒரு பொதுவான தொடுப்பில் இடப்பட்டு மையப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும்.

இத்திட்டத்திற்கு உதவிசெய்ய விரும்பும் அமைப்புக்கள், தனிநபர்கள் நம்பிக்கை ஒளியின் அந்தந்த நாடுகளின் ஒருங்கிணைப்பாளர்கள் ஊடாக உதவி தேவைப்படும் குடும்பத்தின் தகவல்களை இத்தொடுப்பிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். உதவி செய்ய விரும்பும் குடும்பம் நேரடியாக தாயகத்தில் உள்ள குடும்பத்துடன் தொடர்பு கொண்டு அவர்களின் தேவைகளை அறிந்து உதவியை வழங்கலாம்.

நிர்வாக ஒழுங்கு

நம்பிக்கை ஒளி நிறுவனம் அந்தந்த நாடுகளில் உள்ள மக்கள் கட்டமைப்புக்களுடனும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடனும், தனிநபர்களுடனும் இணைந்து செயற்படும்.

புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள மக்கள் கட்டமைப்புக்கள், தன்னார்வத்தொண்டு நிறுவனங்களின் பங்காக:-

• இத்திட்டத்தில் பொதுவான தகவற் தொடுப்பில் இருந்து குடும்பங்கள் மற்றும் தனிநபர்களின் பெயர்களையும் விபரங்களையும் எடுத்து தாங்கள் வாழும் நாடுகளில் உள்ள உதவிசெய்ய விரும்பும் குடும்பத்திடம் வழங்குதல்.

• உதவி வழங்கிவரும் ஒருவரால் தொடர்ந்து உதவி செய்ய இயலாதவிடத்து அதை மீளத் தொடுப்பில் இணைத்துக் கொள்ளுதல்.

• இந்த முயற்சிக்கு முழுமையான பங்களிப்பையும் வழங்கி உதவி வழங்குபவர்களையும் பெறுபவர்களையும் இணைத்து விடுதல்.

உதவி வழங்குவதற்கான தகுதிகள் என்ன?

• 18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல்.

• மாதாந்தம் ஒரு குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளுக்கு உதவி கொடுக்கக் கூடியவராக இருத்தல்.

• பணம் பெற்றுக் கொள்ளும் குடும்பத்தைச் சென்றடைந்ததா என்பதை உறுதி செய்வதற்கான தொலைபேசித் தொடர்பாடலை மேற்கொள்ளக் கூடியவராக இருத்தல்.









ஐயங்களும் பதில்களும்

நாங்கள் தெரிவு செய்யும் குடும்பத்திற்கு எவ்வாறு உதவி புரியலாம் ?

நீங்கள் தெரிவு செய்த குடும்பத்தின் நிலை, அக்குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை, அவர்களின் தேவை (உணவு, உடை, உறையுள், வைத்திய செலவு) போன்றவற்றினைப் பொறுத்து மாதாந்தம் ஒரு தொகையை வழங்கலாம்.

இந்தத் திட்டத்தின் பயனாளிகள் யார்?

தாயகத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்குமானது.

• உறவுகளை இழந்த சிறுவர்கள்

• மாற்றுவலு உள்ளோர்

• கணவனை இழந்தோர்

• ஆதரவு இல்லாத முதியவர்கள்

• வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள்

உதவிப் பணம் வழங்குதல் மற்றும் பெற்றுக் கொள்ளுதலுக்கு எந்த நிறுவனம் இடை நிலையில் இருக்கிறது?

உதவிப் பணக் கொடுப்பனவில் பயன்பெறுவொருக்கு இடையில் எந்த நிறுவனமோ அல்லது தனி மனிதரோ இருக்கப் போவதில்லை. உதவிப் பணம் கொடுப்பவரும் உதவி பெறுபவரும் நேரடித் தொடர்பின் மூலம் இவ் உதவியினைப் பரிமாறிக் கொள்வர்.

இந்தத் திட்டத்தில் யார் பங்குபற்றுகின்றனர்?

புலம்பெயர் மக்கள் கட்டமைப்புக்கள், தமிழ் ஊடகங்கள், ஊர்ச்சங்கங்கள், தமிழ் பாடசாலைகள், பழைய மாணவர் சங்கங்கள், சமய அமைப்புகள், மாணவர் அமைப்புகள், விளையாட்டு ஒன்றியங்கள் போன்றவை இத்திட்டத்தில் நம்பிக்கை ஒளியுடன் இணைந்து செயலாற்றும்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களை “நம்பிக்கை ஒளி” எவ்வாறு அடையாளம் காண்கின்றது?

தாயகத்தில் உள்ள நலன்புரிச் சங்கங்கள், சமய நிறுவனங்கள் மற்றும் உதவி நிறுவனங்கள், தனிநபர்களின் உதவியோடு பெறப்படும் உதவி நாடுவோரின் விபரங்கள் பரிசீலனைக்கு உட்படுத்தி மத்திய தரவுத் தொடுப்பில் இணைக்கப்படும்.

நாங்கள் உதவி செய்து கொண்டிருக்கும் போது சில சந்தர்ப்பங்களில் தொடர்ந்து எங்களால் உதவ முடியாது போனால் என்ன செய்யலாம்?

அப்படியான சூழ்நிலை வரும்போது மீண்டும் அக்குடும்பம் சர்வதேச ரீதியில் ஒருங்கமைக்கப்பட்ட தகவல் தொடுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டு பதியப்படும். உங்களைப் போன்ற யாராவது பின்னர் அக் குடும்பத்தினைத் தெரிவு செய்யலாம்.

எனது குழந்தைக்கு 4 வயது. அதே வயதுள்ள ஒரு குழந்தை உள்ள ஒரு குடும்பத்துக்கான உதவியை நான் செய்வதற்கு விரும்புகின்றேன். இது சாத்தியமா?

நீங்கள் எத்தகைய குடும்பத்துக்கு உதவி செய்ய விரும்புகிறீர்கள் என்னும் விபரத்தை அந்தந்த நாடுகளில் இத்திட்டத்தினை முன்னெடுக்கும் அமைப்புக்களில் நீங்கள் கொடுத்தால் அதற்கு ஒத்த குடும்பத்தைத் தெரிவு செய்து எம்மால் வழங்க முடியும்.

இத் திட்டத்தில் இணைந்து உதவி வழங்குவதால் சட்டச் சிக்கல்கள் ஏதும் ஏற்படுமா?

நீங்கள் செய்யப் போகும் உதவி உங்கள் குடும்ப அங்கத்தவர் ஒருவருக்கு நீங்கள் செய்யும் உதவி போன்றது. நீங்களே நேரடியாகத் தொடர்பு கொண்டு அந்தக் குடும்பத்துக்கு உதவப் போகின்றீர்கள். எந்தவித சட்டச் சிக்கல்களும் இதில் வருவதற்கில்லை.

நிதி உதவி ஒவ்வொரு மாதமும் உரியவர்களைச் சென்றடையும் என்பதை நம்பிக்கை ஒளி எவ்வாறு உறுதிப்படுத்தும்?

மேற்குறிப்பிட்ட பொதுநல அமைப்புக்களைச் சேர்ந்தோர் தாயகத்தில் உதவிபெறும் மக்களிடம் நேரடியாக மாதாந்தம் உதவி சென்றடைவதை உறுதி செய்து கொள்வார்கள். அப்படி உதவி சென்றடையாதவிடத்து அவ்விடத்தில் உள்ள இவர்கள் மூலம் தகவல் எமக்குத் தெரிவிக்கப்படும்.

நம்பிக்கை ஒளி நிறுவனத்தின் ஊடாகப் பெறப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் கிடைக்கப்பெற்ற விபரங்களிலிருந்து எவ்வளவு பேர் பயன்பெற்றுள்ளனர் ?

தற்போது 418 பயனாளிகள் புலத்தில் உள்ள குடும்பங்களுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து எத்தனை காலத்துக்கு நிதியுதவியை மாத்திரம் மக்களுக்குக் கொடுப்பது என்பது இந்தத் திட்டத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது?

தற்போது எமது மக்கள் எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் தங்களுக்கென்று எந்தவித வருமானமுமின்றி உள்ளார்கள். அவர்களின் அத்தியாவசிய தேவைகளை வழங்குவது இந்தத் திட்டத்தின் முதற்கட்ட நிலையாகப் பார்க்கலாம். தொடர்ந்து எமது மக்களின் தேவைகளுக்கு ஏற்ப சுயதொழில் அல்லது தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களின் வாழ்வை மேம்படுத்துவதே எமது எதிர்காலத்திட்டமாகும்.

புலம்பெயர்ந்து வாழும் அனைத்து உறவுகளும் இத்திட்டத்தில் இணைந்து எம்முறவுகளுக்கு நம்பிக்கையொளியேற்றுவோம்.

நிர்வாகம் நம்பிக்கைஒளி

தொடர்புகளுக்கு

0044 2033769352

Email - iniyavan@rohmay2009.com

Email - kavian@rohmay2009.com

திட்ட ஒருங்கிணைப்பு –

K.J.அருள்நேதன்

kj.nathan@rohmay2009.com

T.P – 001 416 670 4220

நாடுகள் வாரியான தொடர்பாளர்கள்

கனடா – A.காந்தன் T.P - 001 416 659 5196

kanthan@rohmay2009.com

பிரித்தானியா – B.சிறீகாந்த் 0044 79479 52773

யேர்மனி – S.சிறீசங்கர் – 0049 176 248 37466

பிரான்ஸ் - P.தனம் visu@rohmay2009.com

ஹொலன்ட் – S.ஜஸ்லின் 0031 634397002

அனைத்து நாடுகளிலிருந்தும் நம்பிக்கை ஒளி நிறுவனத்தோடு இணைந்து செயற்பட அனைவரையும் அழைக்கின்றோம்.



வியாழன், 22 ஏப்ரல், 2010

வடக்கு - கிழக்கில் புதிய தொழில் திட்டங்கள் - அமெரிக்கா அறிவிப்பு

சிறிலங்காவில் உள்ள தனியார் துறையுடன் இணைந்து புதிய வர்த்தக கூட்டணி திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது அனைத்துலக மேம்பாடுகளுக்கான அமெரிக்க நிறுவனம் [The United States Agency for International Development - USAID]. சிறிலங்காவில் வடக்கு மற்றும் கிழக்கில், பொது மற்றும் தனியார் தொழில் வாணிபக் கூட்டு என்ற திட்டத்தின் கீழ் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 5000 முழு நேர பணியிடங்களை உருவாக்கும் வண்ணம் ஐந்து தொழில் துறைகளை தொடக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்து சிறிலங்காவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள விரிவான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, இந்த ஐந்து கூட்டுத் தொழில் துறைகளும் சிறிலங்கா அரசு சார்பில்லாத தனியார் நிறுவனங்கள் மூலமே செய்யப்படும். சிறிலங்கா தனியார் துறை 1400 மில்லியன் ரூபாய்களும், அனைத்துலக மேம்பாடுகளுக்கான அமெரிக்க நிறுவனம் 600 மில்லியன் ரூபாய்களும் முதலீடு செய்யும். ஆக மொத்தமாக 2 பில்லியன் ரூபாய் முதலீடுகளில் ஐந்து தொழில் துறைகள் உருவாக்கப்படும். கடல் மற்றும் நன்நீர் மீன்கள் வளர்த்தல், ஆடைகள் தயாரிப்பு, உணவு விநியோகம், தோட்டப் பயிர்ச்செய்கை போன்ற வகையான தொழில் துறைகள் இவற்றில் அடங்கும். ஆடைகள் தயாரிப்பு கூட்டுத்தொழில்: வடக்கு பகுதியில் உள்ள வவுனியாவிற்கு அருகில் ஓமந்தையில் ஆடை தயாரிக்கும் தொழிற்கூடம் ஒன்றை உருவாகுவதன் மூலமாக வடக்கு பகுதியில் உள்ள போரினால் பாதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலுள்ள இளம் விதவைகள் மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு சுமார் 1000 வேலை வாய்ப்புக்களை ஆடை தயாரிப்பு மற்றும் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள முன்னணி நிறுவனம் அளிக்கும். மீன் வளர்ப்பு கூட்டுத்தொழில்: வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மீன் உற்பத்தியை பெருக்குவதற்காக சிறிலங்கா மீன்வளர்ப்பு நிறுவனத்திற்கும் அனைத்துலக மேம்பாடுகளுக்கான அமெரிக்க நிறுவனத்திற்கும் தொழில் கூட்டு ஏற்பட்டுள்ளது. மீன் விற்பனை வருவாய் மட்டுமன்றி உயர்தர கடல் உணவுகள் மூலமும் வருவாயை இரு மடங்காக திட்டமிடப்பட்டுள்ளது. உற்பத்தியாளர்களுக்கும் வாங்குபவர்களுக்குமான தொடர்பை உண்டாக்குதல்: போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளின் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கான வழிமுறைகளை முன்னணி விநியோக நிறுவனம் ஆராய்ந்து அதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும். இதன் மூலம் வடக்கு மற்றும் கிழக்கு பகுதி விவசாயிகளுக்கு உற்பத்தி மற்றும் வருவாயிலும் உயர்வு ஏற்படும். சுமார் 1500 விவசாயிகள் மற்றும் மீனவர்கள் இதன் மூலம் பலனடைவர். யாழ்ப்பாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய குளிர் சேகரிப்பு மையங்கள் இதற்காக உண்டாக்கப்படும். வடக்கில் தோட்டக்கலை கூட்டுத்தொழில்: சிறிலங்க தோட்டக்கலை நிறுவனத்திற்கும் அனைத்துலக மேம்பாடுகளுக்கான அமெரிக்க நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்டுள்ள உடன்பாட்டின்படி யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் பகுதிகளில் உள்ள தோட்டங்களில் நவீன முறைகளின் மூலமாக காய்கறிகள் மற்றும் பழ வகைகளின் உற்பத்தி பெருக்கப்படும். இத்திட்டத்தின் படி 1100 விவசாயிகள் பயனடைவர்.

மாறிவரும் உலகுக்கு ஏற்றவாறுமாறிவரும் .......................


இந்த ஆக்கத்தை படிக்கச் செல்லும் உறவுகளே உங்களோடு ஒரு நிமிடம்…… நடுநிலைமை என்று வெளியுலகுக்குச் சொல்லிக் கொண்டு- தமிழ்த் தேசிய இனத்துக்கு நன்மை தரமுடியாத விடயங்களை உள்ளீர்த்துக் கொள்வதில் எமக்கு உடன்பாடு கிடையாது. அதேவேளை, சமூகத்துக்குச் சொல்ல வேண்டியதை- சொல்லாமல் விடும் தவறையும் நாம் இழைக்க மாட்டோம். இன்றைய உலகில் மலிந்து போயுள்ள ஊடக யுத்தத்துக்குள்ளே சிக்கிக் கொள்வதற்கும் நாம் தயாரில்லை. தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்காக ஓங்கிக் குரல் கொடுப்பதே இன்றைய தேவை. தமிழ் மக்களின் வெளிக் கொணர வேண்டிய பிரச்சினைகள் ஆயிரம் இருக்கும் போது- வீண் விவாதங்களில் நேரத்தையும் உழைப்பையும் வீணடிக்க முடியாது. ஊடகங்கள் மக்களின் பிரச்சினையை எடுத்துச் சொல்லும்- அவர்களுக்கு சரியான பாதையைச் சுட்டிக்காட்டும் கருவிகளாக இருக்க வேண்டும். ஆனால் அந்தப் பாதை வழியிலான நகர்வும் நடப்பும் தமிழ் மக்களின் விருப்பின்பாலானது. அந்த உரிமையை மறுக்கின்ற போக்கில் எம்மால் உடன்பட முடியாது. மாறிவரும் உலகுக்கு ஏற்றவாறு- நாமும் புதிய புதிய சிந்தனைகளில்- ஆய்வுகளில் இறங்கும்போது தான் தெளிவு பிறக்கும். சரியான பாதையை இனங்காண முடியும். மாற்றுச்சிந்தனை என்று புறக்கணிக்கப்படும் போது தான் கருத்துத் திணிப்பும் இயல்பாகவே உருவாக்கம் பெறுகிறது. அந்த வகையில் நாம் கீழே குறிப்பிடும் ஆக்கம் உங்களுக்கு விசனத்தை ஏற்படுத்தலாம்..? ஆனால் …. எல்லாம் நடந்து முடிந்து நடப்பவை நல்லவையகட்டும் என்று ஆனபின்பும்…. உள்ளிருந்து கொல்லும் வியாதிபடைத்தோரின் வன்மமும் மறைமுக சதிவலைப்பின்னல்களும் துரோகங்களும் தொடரவே செய்கின்றன. இவ்வாறான இழிசெயல்களை நிறுத்தும்படி ஏன் எவரும் தட்டிக்கேட்கவில்லை? துணிவில்லையா? இல்லைப் பயமா? இல்லை விடுதலை வியாபாரமா? ஏன் எதற்கு இந்த வன்மம்? இன்நிலையில் எவரெவரோவெல்லாம் தாயகவிடுதலையை உரிமைகொண்டாடி கொடுமைசெய்யும்போது நாம் மட்டும் உண்மைகளை வெளிக்கொணர காலம் தாழ்த்துவதென்வது ஒரு தவறாகவே உணருகின்றோம்… எனவே: வெளியிருந்து கே.பி காட்டிக்கொடுத்து இயக்கத்தை அழித்தது எதிர்வினை வாதமென்றால் உள்ளிருந்தே காஸ்ரோ இயக்கத்தைக் காட்டிக்கொடுத்தா முள்ளிவாய்காலில் முழு இயக்கத்தையும் அழிக்கத் துணிந்தார் என்று நாம் திருப்பிக்கேட்டால்? [மன்னிக்கவும் இது உங்களுக்கு கோவம் வரும் என்பது எங்களுக்கு தெரியும்] உங்கள் மனம் எப்படித்துடிக்கிறது என்பதை அடுத்தவனின்மீது குற்றம் சாட்டுவோர் புரிந்துகொண்டால் வேதனையின் வலி புரியும்….., ஆனால் நாம் அப்படிக் கேட்க மாட்டோம். காரணம் தாயக விடுதலைக்காக வாழ்நாள் முழுவதும் தன்னை அர்ப்பணித்த அந்தப் புனிதனின் சத்தியத்தைக் களங்கப்படுதமாட்டோம். இந்தக் குற்றச்சாட்டை உங்களிடம் நேரடியாய் முன் வைப்பதற்குக்காரணம் உருத்திரகுமாரன் உட்பட பலருக்கு எதிரான அபாண்டமான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் கரும்படை வன்மம், அனைத்துலகத் தொடர்பகத்தின் நேரடியான கட்டுப்பாட்டில் இருந்து இயங்கும் அனைத்துலக தொடர்பகத்தின் வெளியீட்டு பிரிவின் மின்னஞ்சல் முகவரியிலிருந்து தான் எல்லோருக்கும் அனுப்பப்படுகிறது இது எமக்கு வேதனை தருவதனால் தான் இதை இங்கு நேரடியாக குறிப்பிடுவதோடு. மாவீரர் புகழ்பாடும் அனைத்துலகத் தொடர்பகத்தின் வெளியீட்டுப்பிரிவு இத்தகைய இழிவான காரியங்களில் ஈடுபடுவது வேதனையான ஒன்றே. இதுபற்றி நாங்கள் உரியவர்களிடம் முறையிட்டோம் அவர்கள் அதற்கு கூறிய கற்பிதங்கள் விசித்திரமானவை. எங்களுக்கும் பிழையான கருத்தூட்டல்கள் வருகின்றன நாங்கள் அவற்றுக்கு மதிப்பளிப்பதுமில்லை அதை மற்றவர்களுக்கு மறு வினியோகம் செய்வதுமில்லை. இன்போ தமிழ் இணையம் தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ்கிளையின் பரப்புரைப்பிரிவின் அதிகார பூர்வத்தளம். நாங்களும் காஸ்ரோ அவர்களின் பொறுப்பின் கீழிருந்து பணிசெய்தவர்கள். எனவே நீங்கள் இவ்வாறான இழிசெயலைச் செய்து, புனிதனான அந்த மாவீரனைக் களங்கப்படுத்துவதை எம்மால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. ஆகையால்.....? ஒடுக்கப்பட்டோரே ஒடுக்குமுறையாளர்களாய் ஆகிய நிலையில்........? எங்கள் கருத்தை நேரடியாகவே உரியவர்களிடம் முன்வைக்கின்றோம் - இன்போதமிழ் குழுமம்- இனி…… உங்களிடம் நேரடியாகக் கேட்கின்றோம் நாடு கடந்த தமிழீழ அரசை நாசமாக்க எழுந்து விட்ட நாசகாரக் கும்பல்களே உங்கள் உள் நோக்கம் தான் என்ன? நீவீர் யாருடைய கைக் கூலி ? தமிழினத்தின் இன்றைய பரிதாப நிலையை, அவசர அவசிய தேவைகளை முதலில் அறிந்து கொள் தெளிந்து கொள் அடுத்த நிலைக்குப் போகத் துணிந்து கொள் ! கரும்புலியாக எங்காயினும் போய் வெடித்துச் சிதறப் போகும் உணர்விருந்தால் அதைச்செய்துகொள்? அதை உனக்கு செய்யும் துணிவை உன் தொடர்பகத் தளபதிகள் ஊட்டி வழர்க்கவில்லையா? உண்மைக்காய் உயிர் கொடுத்த தலைவன் பாசறையில் வளர்ந்த்தாய் பறைசாற்றும் உங்கள் பிதற்றல்களுக்கு உது புரியவில்லையா? அதுவே உன் அறிவுச் சுடரின் ஒளியாக இருக்குமெனில் அதற்கான முழுச் சுதந்திரமும் உனக்கு உண்டு , உடனே முதலில் அதனைச் செய்து காட்டி காவியமாகுங்கள்? காவாலித்தனமாய் இருந்து கரும்படைக் கழுத்தறுப்புச் செய்து புனிதர் திருவடுயை களங்கப்படுத்தாதீர்.? யாருடைதோ எடுபிடியாக அடியாளாக இயங்கும் உன்னிடம் கருத்துச் சுதந்திரமும் செயல் வீரமும் பற்றிப் பேசுவதும் அவற்றைப் புரிய வைப்பதும் நாயின் வாலை நிமிர்த்தும் செயல்தான். எனவே அதுபற்றிப் பேசுவதில் பயனில்லை. ஏதோ தலைவரும் உருத்திரகுமாரனும் பற்றிய பல அந்தரங்க விடையங்கள் தெரிந்தவன் போல் பேசுகிறீரே? நீவீர் என்ன தலைவரின் அந்தரங்கச் செயலாளரா? அல்லது அவருக்கே எமனாக முளைத்துக் கடைசிவரை உடனிருந்து காட்டிக் கொடுத்த தமிழனத்தின் துரோகியா? உன் சொல்லையும் செயலையும் கவனத்தில் கொள்ளும் எவரும் அப்படித்தான் நினைப்பர். எமக்கும் அப்படித் தெரிந்தால் வியப்பில்லையே! வெளியிருந்து கே.பி காட்டிக்கொடுத்து இயக்கத்தை அழித்தது உன்வாதமென்றால் உள்ளிருந்தே காஸ்ரோ இயக்கத்தைக் காட்டிக்கொடுத்தா முள்ளிவாய்காலில் முழு இயக்கத்தையும் அழிக்கத் துணிந்தார் என்று நாம் திருப்பிக்கேட்டால் ? மன்னிக்கவும் இது உங்களுக்கு கோவம் வரும் என்பது எங்களுக்கு தெரியும் உங்கள் மனம் எப்படித்துடிக்கும் என்பதுவும், ஆனால் நாம் அப்படிக் கேட்க மாட்டோம். காரணம் விடுதலை விடுதலைக்காக வாழ்நாள்முழுவதும் தன்னைஅர்ப்பணித்து அந்தப்புனிதனின் சத்தியத்தைக் களங்கப்படுத்தாதீர் . இந்தக்குற்றச்சாட்டை உங்களிடம் நேரடியாய் முன்வைப்பதற்குக்காரணம் உருத்திரகுமாரன் உட்பட பலருக்கு எதிரான அபாண்டமான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் கரும்படை வன்மம், அனைத்துலகத் தொடர்பகத்தின் நேரடியான கட்டுப்பாட்டில் இருந்து இயங்கும் அனைத்துலக தொடர்பகத்தின் வெளியீட்டு பிரிவின் மின்னஞ்சல் முகவரியிலிருந்து தான் எல்லோருக்கும் அனுப்பப்படுகிறது இது வேதனை தருவதனால் தான் இதை இங்கு நேரடியாக குறிப்பிடுவதோடு. மாவீரர் புகழ்பாடும் அனைத்துலகத் தொடர்பகத்தின் வெளியீட்டுப்பிரிவு இத்தகைய இழிவான காரியங்களில் ஈடுபடுவது வேதனையான ஒன்றே. இதுபற்றி நாங்கள் உரியவர்களிடம் முறையிட்டோம் அவர்கள் அதற்கு கூறிய கற்பிதங்கள் விசித்திரமானவை. எங்களுக்கும் பிழையான கருத்தூட்டல்கள் வருகின்றன நாங்கள் அவற்றுக்கு மதிப்பளிப்பதுமில்லை அதை மற்றவர்களுக்கு மறு வினியோகம் செய்வதுமில்லை. இன்போதமிழ் இணையம் தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ்கிளையின் பரப்புரைப்பிரிவின் அதிகார பூர்வ செய்தித்தளம். நாங்களும் காஸ்ரோ அவர்களின் பொறுப்பின்கீழிருந்து பணிசெய்தவர்கள். எனவே நீங்கள் இவ்வாறான இழிசெயலைச் செய்து, புனிதனான அந்த மாவீரனைக் களங்கப்படுத்துவதை எம்மால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. சரி நீவீர் திரு. உருத்திர குமாரனைப் பற்றி சொன்னது இனியும் சொல்லப் போவதாக மிரட்டுவது அத்தனையும் அரிச்சந்திர வாக்காகவே இருக்கலாம். ஆனால் அந்த அரிச்சந்திரன் யார் என்பதை உம் அருவருப்பான கரும் உருவம் களங்கப் படுத்துகிறதே! எனவே உங்கள் திருமுகத்தைக் கொஞ்சம் காட்டுங்கள் மக்கள் முன் வாருங்கள் நேரடி விவாதத்துக்கு. நாங்கள் சொல்கின்றோம் நாம் யாரென்று அதனால் தான் துணிவோடு விமர்சனங்களை முன்வைக்கின்றோம். கோழைத்தனமாக ஆய்வு, பின்பு மறுஆய்வு, இன்று சுவிஸ் ஆய்வு என்று வன்மம் செய்யமாட்டோம். உயிருள்ளவரை உண்மைக்காய் பாடுபடுவோம். முடிந்தால் உண்மையை உரைப்போம் வாருங்கள் மக்கள் மன்றுக்கு. உங்களுக்கு யாழ் நகரபிதா விசுவநாதனைத் தெரிகிறது. அது முதல் யாழில் இடம் பெற்ற இப்பொழுதும் இடம் பெற்றுவரும் துன்ப துயரங்கள் பற்றி ஏதும் தெரியுமா? அவற்றுக்கு நீவீரும் உம்போன்ற புரட்டுப் போராட்ட வீரர்களும் காட்டும் தீர்வு என்ன? அதை செய்து காட்டுங்கள் உங்களிடம் உமையும் சத்தியமும் இருந்தால் உங்கள் பெரிய அறிவை பாராட்டி உன் வழிக்கே மக்கள் திரு. உருத்திர குமாரனின் தலைமையை விடுத்து உன்னோடு வருவர். ஏன்? அவர்கள் என்ன நாங்களும்தான் செல்லும் வழிதவறாயினும் செஞ்சோற்றுக்கடனுக்காய் வருவோம்…….? அப்படி வருவதற்கு ஒரு சிங்களவரான வைத்திய கலாநிதி பிரையன் செனவிரத்னா வட்டுக் கோட்டைத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த தமிழரை நோக்கி விடுத்த மூன்று கேள்விகளுக்கான பதிலை தந்து உங்கள் தெய்வீக முக தரிசனத்தையும் மக்களுக்கு காட்ட வேண்டும்! வட்டுக் கோட்டை தீர்மான மீள் வாக்கெடுப்பு மட்டும் ஈழத் தமிழரின் அரசியல் பயணத்தை முடிவு செய்யாது? என்பதால்? நாடு கடந்த அரசின் மூலமே எமது விடுதலைப் போராட்டத்தை இன்றைய உலக அரங்கில் முன்னெடுத்துச் செல்ல முடியும். அதனால்தான் எம் போன்றவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசமைப்பை ஆதரிக்கிறோமே அல்லாது திரு. உருத்திர குமாரன் கூறுவதற்காக அல்ல. திரு. உருத்திர குமாரனின் சட்ட அறிவும் கல்வித் தகமையும் ஆளுமையும் அர்ப்பணிப்பும் இலட்சியப் பற்றும் உங்களுக்கோ உன்னை வழிநடத்தும் எந்தக் கொம்பனுக்காயினும் இருந்தால் முன்வந்து வழி நடத்துங்கள் உங்களின் பின்னால் வரத் தமிழினம் துணிந்து விடும். இனி டாக்டர் பிரையன் செனவிரத்னாவின் வாதத்தின் சாராம்சம் இதோ! நீங்கள் சிங்கள இனத்துடன் இப்போது உள்ள இரண்டாந்தர அடிமை நிலையில் காலவரையரை இன்றிச் சந்ததி சந்ததியாக வாழச் சம்மதமா? முட்கம்பி முகாம்களில் வதைபட்டுச் சாகும் மக்களுக்கு நீங்கள் வழங்கும் தீர்வு என்ன? அரசியல் தீர்வுக்காக காலவரையரை இன்றிக் காத்திருந்து ஒரு அமைதித் தீர்வு கிடைக்கும் என நம்புகிறீர்களா? உங்களைப் போன்றோரிடம் துப்பாக்கியும் துணிச்சலும் மறு பேச்சுப் பேசுவோரைத் சுட்டுப் போடும் வீரமும் இருக்கலாம்.? உங்களின் வெத்து வேட்டு வீரத்தை விட விலை மதிப்பற்ற மாவீர மாணிக்கங்களையும் மனித நேயமிக்க மானுடத்தையும் அனைத்துக்கும் உயர்வான தாய் மண்ணையும் தன்மானத்தையும் தமிழினம் இழந்து நிற்கையில் வேண்டாம் இந்த ஐந்தாம் படைத் துரோகத் தனம்.? இறுதியாக முஸ்லீம் மக்கள் பற்றிய உங்கள் பொன்னான சிந்தனைகளை ஒரு மூலையில் தூக்கிப் போடுங்கள்.? உங்களைப் போன்றே 1940களில் இந்தியக் காங்கிரஸ் தலைவர்கள் அன்றைய முஸ்லீம் மக்களினது நியாயமான சந்தேகங்களை கேட்கவோ தீர்க்கவோ முற்படாத காரணத்தால் இன்று வரை பகமையில் இரு நாடுகளும் இந்திய பாக்கிஸ்தானிய மக்கள் மட்டுமன்றி இந்து சமுத்திரப் பிராந்தியமே அழிவுச் சகதியில் சிக்கிக் கிடக்கிறது. இந்திய பிரிவினை பற்றிய அரசியல் வரலாற்றைப் படித்துவிட்டுப் பேசுங்கள். அன்று இந்தியத் தலைவர்கள் நடந்த அதே வழியில் தான் இன்று இலங்கைச் சிங்களத் தலைவர்களும் நடந்து நாட்டைக் குட்டிச் சுவராக்கி உள்ளனர். வடக்கு கிழக்கு முஸ்லீம் மக்களின் முழுமையான நம்பிக்கையும் ஆதரவும் இல்லாமல் தமிழீழம் ஒரு போதும் சாத்தியப்படாது. தமிழீழத்தில் இஸ்லாமிய கிருஸ்தவ மக்கள் இந்துக்களைப் போன்ற உரிரைமகளும் பொறுப்புகளும் பெறத் தகுதியும் உரிமையும் உள்ளவர்கள் என்பதை நீங்களும் உம்போன்ற விடுதலை வீரர்களும் தெரிந்து கொள்வது அவசியம். நாம் இன்னமும் காட்டு மிராண்டிகள் நிலையில் இருக்க முடியாது. வீரம் மட்டும் அல்ல விவேகமும் வெற்றிக்கான படிக்கல் தான் என்பதை உணர்ந்து விட்டு ஊருக்கு உபதேசம் செய்ய வாருங்கள். "வரலாறு என்றுமே நேர் கோட்டில் பயணிப்பதில்லை" இது எமக்கான எதிர்காலம் மே18ஆம் திகதிக்குப் பின்னர் தமிழ் தேசியப் போராட்டத்தில் உண்டாகியுள்ள தலைமைத்துவ வெற்றிடம், தமிழ்த் தேசியத்துக்கு எதிரான சக்திகளுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளதோடு, தமிழர் உரிமைப் போராட்டத்துக்கு எதிரான அவர்களது செயற்பாடுகளும் வலுவாக அதிகரித்து வருகிறது. அதே வேளை, இந்த தலைமைத்துவ வெற்றிடம் தமிழ் மக்கள் மத்தியில் குழப்ப நிலையையும், விரக்தி மனோ நிலையையும் உருவாக்கி வருகிறது. இது சலிப்பான கருத்துக்களுக்கு வழியேற்படுத்துகிறது. சலிப்பான மனோ நிலை போரட்டம் ஒன்றிற்கு தேவையான உளவுரணை தகர்ப்பதற்கு வழியேற்படுத்துகிறது. ஆக்கபூர்வமான சிந்தனை ஓட்டத்திற்கு உரிய இடம் வழங்கப்படாமை இன்றைய தருணத்தில் தமிழ் மக்களை நோக்கிச் சூழ்ந்துள்ள இன்னொரு பின்னடைவு. பிரபாகரன் என்ற 'வரலாற்றின் பிரசவத்தால்' செய்ய முடியாததை, தமிழர்களின் சக்தியாக இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் செய்ய முடியாததை இனி யாரால் தான் செய்ய முடியும் என்ற கேள்வியைப் பரவலாகக் கேட்க முடிகிறது. இந்தக் கேள்வி நியாயமானதும், அதிக பெறுமதியுடையதும் தான். ஆனால், தமிழர்களுடைய இராணுவ பலம் வீழ்ச்சியடைந்துள்ளது என்ற காரணத்திற்காக, எமது விடுதலைப் பயணத்தை இடை நடுவில் விட்டுவிடமுடியாது. முள்ளிவாய்க்கால் முடிவல்ல; அது இன்னொரு ஆரம்பத்தின் தொடக்கம். அதனைத் தான், விடுதலைப் புலிகளின் இறுதிக் கட்டச் செயற்பாடுகளும் எடுத்தியம்புகின்றன. சுமார் முப்பத்தெட்டு வருடங்களுக்கு முன்னர், ஆயுதங்களைத் தமிழ் தேசியப் போராட்டத்தின் கவசங்கள் ஆக்கிய விடுதலைப் புலிகள், 2009 மே மாத நடுப்பகுதியில் அதனை மௌனமாக்குகின்றோம் என்று அறிவித்தனர். தமிழர் உரிமைப் போராட்டத்தின் அடுத்த கட்டத்தைக் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உள்ள தமிழ் மக்கள் முன்னெடுப்பதற்கான அடித் தளத்தை விடுதலைப் புலிகள் முள்ளி வாய்க்காலில் உருவாக்கி விட்டிருந்தார்கள். அதற்கு முன்னோடியாக, தமிழ் தேசியப் போராட்டத்தின் அடுத்த கட்டத்தை எதிர்கால தமிழ் சந்ததியிடம் கையளிப்பதாக 2008 மாவீரர் நாள் உரையில், திரு. பிரபாகரன் அவர்களே குறிப்பிட்டிருந்தார். தமிழர் உரிமைப் போரட்டத்தை விசுவாசிக்கின்ற, மாவீரர்களை மதிக்கின்ற மற்றும் இயக்கத்தை நேசிக்கின்ற ஒவ்வொருவருக்கும் இன்றிருக்கின்ற வரலாற்றுப் பொறுப்பு, தமிழ்த் தேசியப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதாகும். எங்களுக்காக நாம் தான் போராட வேண்டும். எமது பலம் தான் எமது வாழ்வை நிர்ணயிக்கும். யாரும் எமக்கான விடுதலையை பெற்றுத் தந்துவிடுவார்கள் என்றெண்ணி மீண்டும் ஒரு தடவை நாம் ஏமாந்து விடக்கூடாது. தாயகத்தில், எமக்கு சாதகமான நிலை இன்று இல்லாவிட்டாலும், என்றோ ஒரு நாள் அது எமக்கு மீணடும் கைகூடும் என்பதை மனதிற்கொள்க. ஆனால், நாம் எடுக்கின்ற முயற்சியில் தான் அந்தக் காலக் கனிவு உண்டாகும் என்பதையும் கவனத்திற் கொள்க. ஒரு விடுதலைப் போராட்டம் தனித்து ஆயுத பலத்தில் மட்டும் தங்கியிருக்க முடியாது. ஒரு அடக்கப்பட்ட இனம் அதன் பலத்தை வெவ்வேறு பரிமாணங்களில் வெளிக்காட்ட முடியும். ஒரு கதவு மூடப்படும் போது இன்னொரு கதவு தன்னியல்பாகத் திறக்கப்படுவதே தேசிய இன விடுதலைப் போராட்டத்திற்கான பண்பு. தேக்கமடைந்துள்ள போராட்டச் சக்கரத்தை நகர்த்துவதற்காகப் போட்டிகள், தேவையற்ற விமர்சனங்கள், சுய நலத்தைக் கைவிட்டு விட்டு தேசியம் மீதான பற்றுறுதியோடு நீண்டகால அடிப்படையில் செயற்படுவதற்கு ஒற்றுமைப்படுவோம், உறுதி பூணுவோம். ஆகவே, இன்று எமது உளவுரணை வலுப்படுத்தக் கூடிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். போரால் நாம் ஒரு வரலாற்றுப் பேரழிவைச் சந்தித்து நிற்கிறோம் என்பது உண்மை. ஆனால், அதே வேளை, வரலாறு எமக்கு சில சந்தர்ப்பங்களையும் தந்துள்ளது. இதனை நாம் சரிவரப் பயன்படுத்த வேண்டும். கிடைக்கும் சந்தர்ப்பங்களின் கடினமான பகுதிகளையே நம்பிக்கையற்றவன் பார்ப்பான். ஆனால், நம்பிக்கையானவனோ, கடினமான பகுதிகளில் கூட சந்தர்ப்பங்களை காணுவான் என்ற சாரப்பட்ட கருத்தை பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் வின்ஸ்ரன் சேர்ச்சில் [Winston Churchill] தெரிவித்திருந்தார். எமது அடுத்த கட்டப் போராட்டத்தின் நுழைவாயிலாக பின்வரும் விடயங்களை கருத்தில் கொள்ளலாம். தமிழ் தேசிய அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு இடையில் மறுசீரமைப்பினை மேற்கொள்ளல். . தமிழ் தேசிய ஊடகங்களுக்கிடையில் பொது கொள்கை உருவாக்கம் ஒன்றினை ஏற்படுத்துதல். . சிறிலங்கா அரசாங்கம் மீதான அழுத்தங்களை உருவாக்குதல் - அதிகரித்தல் . சிறிலங்கா அரசாங்கத்தின் மனித குலத்திற்கு எதிரான குற்றம் [Crimes Against Humanity] மற்றும் சமாதனத்திற்கு எதிரான குற்றம் [Crimes Against Peace] போன்ற செயற்பாடுகளில் தீவிரமாகச் செயற்பட்டு அவர்களை சர்வதேச ரீதியான குற்றவாளிக் கூண்டிற்குள் கொண்டுவந்து நீதியின் முன்னால் நிறுத்துதல். சிங்கள பேரினவாதிகளுக்கிடையே (சரத் - மகிந்த சகோதரர்கள்) ஏற்பட்டுள்ள பிளவை தமிழ் தேசியப் போராட்டத்திற்கு ஆதரவான வகையில் கையாளுதல். . ஒற்றைப் பரிமாணத்திலிருந்து விடுபடும் உலக ஒழுங்கை எமக்கு சாதகமாக பயன்படுத்துதல். உதாரணமாக, சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஏற்பட்டு வரும் பனிப் போரின் ஒரு கட்டமாக, தாய்வானுக்கான அமெரிக்காவின் ஆயுத விற்பனை விவகாரமும், தலாய்லாமாவிற்கும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிற்குமிடையில் வெள்மை மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பையும் குறிப்பிடலாம். அதே வேளை, சீனாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையில் பிணைப்பு இறுகி வருகிறது. இது, அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கும் விரும்பத்தகாத ஒன்று. தாயகத்தில் சிதவடைந்து போயுள்ள எமது மக்களின் வழ்வாதாரத்தையும், சமூக கட்டுமானங்களையும் வலுப்படுத்தல். புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களை வலுப்படுத்துதல் ஏனைய வெளிநாட்டு சமூக இயக்கங்கள், சிவில் அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள், ஊடகவியலாளர்கள், ஒருமைப்பாட்டு இயக்கங்களோடு வலையமைப்பை உருவாக்கி ஆரோக்கியமான உறவைப் பேணுதல். தமிழ் தேசிய இன விடுதலைப் போராட்டத்துக்குச் சாதமான முறையில் அமையக் கூடிய கற்கை நெறிகள், ஆய்வு மன்றங்களை உருவாக்குதல் மேற் போன்ற, காலத்துக்கு தேவையான, எத்தனையோ பணிகள் எம் முன்னே விரிந்து கிடக்கிறன. இன்று, தமிழர் உரிமையை வென்றெடுக்க விரும்புவோர் சிந்திக்க வேண்டியதும், செயற்பட வேண்டியதும் இவ்வாறான பணிகளே. வரலாறு என்பது என்றுமே ஒரே கோட்டில் பயணிப்பதில்லை.

அறிவித்தல் புலிகளின் குரல் வானொலி................


எதிர்வரும் மே மாதத்தோடு சிங்கள அரசும் அதற்கு உறுதுணையாகவிருந்த வல்லரசுகளும் எமது தாயக உறவுகள் மேல் கொடும்போர் தொடுத்து நிகழ்த்திய இனப் படுகொலையின் ஓராண்டு நிறைவடைகிறது. மூங்கிலாறு, உடையார்கட்டு, வள்ளிபுனம் என்று தொடர்ந்து, புதுமாத்தளன், வலைஞர்மடம், முள்ளியவளை என்று நடந்து முடிந்த கோரத்தாண்டவத்தில் கொத்துக் கொத்தாகவும் குடும்பம் குடும்பமாகவும் எமது மக்கள் வேட்டையாடப்பட்டார்கள். இன்னொரு புறத்திலே தமிழர் படையின் வீரம் செறிந்த போர் நிகழ்ந்துகொண்டிருந்தது. அளிவிட முடியாத பெரும் படைப்பலத்துடனும் வல்லாதிக்க சக்திகளின் முழுமையான உதவியுடனும் எம்மினத்தைக் காவுகொள்ள வந்த சிங்களப் படையை எமது போராளிகள் தீரமுடன் எதிர்கொண்டு போராடினார்கள். மகத்தான தியாகங்களும் சாதனைகளும் இறுதிநேர யுத்தத்தில் படைக்கப்பட்டன. இவ்வேளையில், கடந்த ஆண்டு நடந்த இனப்படுகொலையினதும் வீரமிகு போரினதும் பதிவுகளை புலிகளின் குரல் வானொலி தொகுக்க விரும்புகிறது. முள்ளிவாய்க்கால் பேரழிவு தொடர்பாகவோ வீரமிகு போராட்டம் தொடர்பாகவோ ஆக்கங்கள், ஆவணங்கள் வரவேற்கப்படுகின்றன. நேரடி சாட்சிகளான பலர் இன்று மேற்குலகிற்குப் புலம்பெயர்ந்தோ அயல்நாடுகளில் தஞ்சமடைந்தோ இருக்கும் நிலையில், அவர்கள் தமது நினைவுப்பகிர்வுகளைப் படைப்புக்களாக்கி புலிகளின் குரல் வானொலிக்கு அனுப்பலாம். புலம்பெயர்ந்த, தமிழக, தாயக உறவுகள் அனைவருமே தங்களது படைப்புக்களை அனுப்பலாம். படைப்புக்கள் கதை, கவிதை, சிறுகதை நாடகம் போன்ற வடிவங்களில் தயாரிக்கப்படலாம். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: articles@pulikalinkural.com நன்றி. புலிகளின் குரல் வானொலி.

மறக்கடிக்கப்படுகிறதா கிழக்கு?


மே 2009ல் போர் முடிவுக்குவந்த பின்னர் வடபகுதி மாவட்டங்களைத் தன்னகத்தே கொண்ட வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கான உதவிகளை மேற்கொள்வதிலேயே அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் தமது கவனத்தினைக் குவித்திருக்கின்றன. 'வடமாகாணத்தின் வன்னிப் பகுதியில் புனர்வாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதிலேயே அனைத்துலக சமூகம் தனது கவனத்தினைச் செலுத்துவதால் கிழக்கில் மேற்கொள்ளப்படவேண்டிய புனர்வாழ்வுப் பணிகளுக்கான உதவிகளைப் பெறுவது தொடர்ந்தும் கடினமானதாகவே இருக்கிறது' என உலக நலவாழ்வு நிறுவனத்தினது உடனடி மனிதாபிமான நடவடிக்கைக்கான தொழில்சார் அலுவலர் எட்வின் சல்வடோர் [Edwin Salvador] கூறுகிறார். 'உட்கட்டுமானங்களின் மீள்நிர்மானம், உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் மற்றும் நலவாழ்வு சேவைகளை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளைக் கிழக்குவாழ் மக்களுக்கு வழங்குவது சவால் நிறைந்த பணியாகவே இருக்கிறது' என அவர் தொடர்ந்தார். ஐக்கிய நாடுகளுக்கான அகதிகள் உயர் ஆணையத்தின் தகவலின்படி, கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்த பகுதிகள் அனைத்தையும் அரச படையினர் தம்வசப்படுத்தியதைத் தொடர்ந்து அங்கு மோதல்கள் முடிவுக்கு வர 200,000 இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டார்கள். மோதல்களின் போது கடுமையான பாதிப்புக்களுக்கு உள்ளான கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வுக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. மட்டுப்படுத்தப்பட்ட மனிதவளம் மற்றும் போதிய நிதி வழங்கல் இன்மை என்பன கிழக்கு மாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கான நலவாழ்வு சேவைகளை வழங்குவதில் பெரும் தாக்கதினை ஏற்படுத்தியதாக சல்வடோர் கூறுகிறார். 'கிழக்கு மாகாணத்தில் மோதல்கள் முடிவுக்குவர அவசரகால நிவாரணப் பணிகளை மேற்கொண்டுவந்த அனைத்துலக அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் அனைத்தும், வடக்கில் பெரும் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து கிழக்கில் தாம் முன்னெடுத்துவந்த வேலைத்திட்டங்களைக் கைவிடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். போதிய நிதியினைப் பெறுவதில் ஏற்பட்ட சிரமங்கள் மற்றும் அபிவிருத்திப் பணியினை மேற்கொள்வதில் போதிய அனுபவம் இன்மை என்பனவே இதற்காக காரணம்' என்கிறார் எட்வேட் சல்வற்றோர். கிழக்கு மாகாணத்தில் மோதல்கள் முடிவுக்கு வந்தபோது, சுகாதார சேவைகளுடன் தொடர்புடைய எண்ணற்ற தொண்டு நிறுவனங்கள் தொடக்கத்தில் அங்கு செயலாற்றி வந்ததாகக் கூறும் உலக நலவாழ்வு நிறுவனம் தற்போது Comité d’Aide Médicale [CAM] நிறுவனம் மட்டும் செயல்படுவதாக கூறியுள்ளது. மட்டுப்படுத்தப்பட்ட நிதியுடனிருக்கும் மாகாண நலவாழ்வு திணைக்கள அதிகாரிகளும் சுகாதார அமைச்சினைச் சேர்ந்தவர்களும் கிழக்கு மாகாணத்தில் போரினால் சேதமடைந்த சுகாதார வசதிகளை மீளவும் கட்டியெழுப்பும் பணிகளை முன்னெடுப்பதற்குத் தம்மால் முடிந்தவரை முயன்றுவருவதாக உலக நலவாழ்வு நிறுவனம் தெரிவிக்கிறது. கிழக்கு மாகாணத்தின் பிரதான நகரங்கள் தவிந்த சிறு நகரங்களிலிருக்கும் நலவாழ்வு வசதிகள் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த போரினால் சேதமடைந்து விட்டன. 'இவ்வாறாகச் சேதமடைந்த நலவாழ்வு வசதிகளைப் புனரமைக்கும் பணிகள் மந்த கதியிலேயே இடம்பெற்று வருகின்றன. இதன் காரணமாக தமக்கான மருத்துவ வசதிகளைப் பெறுவதற்காக மீளக்குடியேற்றப்பட்ட மக்கள் நீண்ட தூரங்களுக்குப் பயணிக்கவேண்டி இருக்கிறது' என சல்வற்றோர் தொடர்கிறார். 'இந்தத் தேவையினை நிவர்த்திசெய்யும் வகையில் நடமாடும் மருத்துவ சேவைகள் முன்னனெடுக்கப்பட்டு வந்தாலும், கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டிருப்பதால் அனைத்துக் கிராமங்களுக்கும் சென்று நடமாடும் மருத்துவ சேவையினை முன்னெடுப்பது முடியாத காரியமாகவே இருக்கிறது' என கூறுகிறார். இது தவிர, பொருத்தமான நலவாழ்வுப் பணியாளர்களை தேடிக் கண்டுபிடிப்பதும் சவால் நிறைந்த பணியே. கிழக்கு மகாண நலவாழ்வு சேவைகளைப் பொறுத்தவரையில் முக்கியமான பல பதவிகளுக்கு இன்னமும் வெற்றிடங்கள் இருக்கத்தான் செய்கிறது. இதன் விளைவாக தற்போது சேவையிலிருக்கும் மருத்துவர்களும் தாதியர்களும் நிரந்தரமாக ஓரிடத்தில் தரித்திருக்காமல் சுழற்சிமுறையில் பணிசெய்யவேண்டியிருக்கிறது' என உலக நலவாழ்வு நிறுவனத்தினைச் சேர்ந்த எட்வின் சல்வடோர் கூறுகிறார்.

ஐ.நா வின் குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.

பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டதற்கு முஷாரப் ஆட்சியில் அவருக்கு போதிய பாதுகாப்பு அளிக்க தவறியதுதான் காரணம் என்று ஐ.நா. விசாரணைக் குழு குற்றம் சாற்றியிருந்த நிலையில், இது தொடர்பாக உறுதியான ஆதாரம் கிடைத்தால்தான் முஷாரப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இஸ்லாமாபாத்தில் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக், பெனாசிர் படுகொலை குறித்த ஐ.நா. விசாரணைக் குழுவின் அறிக்கை வெளிப்படையாக இருப்பதால் அதனை பாகிஸ்தான் அரசு வரவேற்பதாக கூறினார். "பெனாசிரை கொன்றவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்பது மக்கள் விருப்பம். அரசின் முயற்சியும் அதுவேதான் என்பதால், நிச்சயம் அது நிறைவேற்றப்படும்" என்று அவர் மேலும் கூறினார்.

அன்பார்ந்த தமிழ் ௨றவுகளே‚ மே 18… சிங்கள தேசம் எங்கள் மக்கள் மீது நிகழ்த்திய கொடூர யுத்தத்தின் இறுதி நாள்… கொத்துக் குண்டுகளும், எங்கள் மக்கள் மீது கொடூர நச்சுக் குண்டுகளும் பரீட்சித்துப் பார்த்த நாள்… எங்கள் மக்கள் பல்லாயிரக்கணக்கில் உயிரோடு புதைக்கப்பட்ட நாள்… மே 18… எங்கள் நெஞ்சங்களை ரணமாக்கிய நாள்… பூக்களும், பிஞ்சுகளும், காய்களும், பழங்களுமாய் பூத்துக் குலுங்கிய எங்கள் தேசத்து ஆலம் விருட்சம் வேரோடு சாய்க்கப்பட்ட கரி நாள்… உயிர் காக்க, உடல் தெறிக்க ஓடிய எம் பாசத்திற்குரிய மக்கள் சிங்களம் வீசிய குண்டுகளுக்கு வீழ்ந்து கருகிய நாள்… மே 18… மனிதமே வெட்கித் தலைகுனிய மானிட தர்மம் நிலை குலைய விடுதலை வேண்டிய தமிழர்கள் வீழ்ந்து சாய்ந்த நாள்… மிருகவதைச் சட்டம் போட்டு விலங்குகளுக்கும் காவலர்களாய் நின்ற, அகில உலகமும் வேடிக்கை பார்க்க, எமது மக்கள் சிங்களத்தால் வேட்டை ஆடப்பட்டு குருதி சிந்திய நாள்… மே 18… நாகரீக உலகில், நமக்கு மட்டும் சுதந்திரம் மறுக்கப்பட்டது… வாழும் மனிதர்கள் போல் வாழ விரும்பிய ஈழத் தமிழர்கள் இழி நிலைக்குள் தள்ளப்பட்ட கொடூர நாள்… விடுதலை எமக்கு மீண்டும் மறுக்கப்பட்ட நாள்… எங்கள் மக்கள்மீது இழைக்கப்பட்ட கொடுமைகளை உலகுக்கு எடுத்துச் சொல்லும் நாளாக இந்த மே 18-ம் நாளை போர்க் குற்றவியல் நாளாகத் தமிழீழ மக்கள் அவை பிரகடனப்படுத்துகின்றது.எங்கள் தேசத்து மக்களின் சுதந்திர தாகத்தை முற்றாகத் துடைத்தெறிய… சிங்களம் திட்டமிட்டு நடாத்திய இனப் படுகொலையை நாம் மறந்துவிட முடியுமா…? முள்ளிவாய்க்காலில் எமது மக்களின் மூச்சு நிறுத்தப்பட்டதை உலகத் தமிழினம் மறந்துவிட முடியுமா…? மே 16 முதல் 18 வரை ஈழத் தமிழர்களுக்கு முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட கொடூரங்களை மனித குலம் மறந்துவிட முடியுமா…?

இலங்கையில் மனித உரிமைகளை பேணும் புதிய சட்டங்கள் உருவாக்கப்படவேண்டும்


இலங்கையில் நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டம், அவசரகாலச் சட்டம் மற்றும் அவசரகால விதிகள் ஆகியவற்றை நீக்கி மனித உரிமைகளைப் பேணும் சட்டங்களைப் புதிய அரசு உருவாக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கையின் போர் முடிவுற்ற பின்னர் தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்றம் அந்த நாட்டில் பலவருட காலங்களாக நடைமுறையில் உள்ள கொடுமை மிகுந்த அவசரகாலச் சட்டத்தை நீக்க வேண்டும்.அவசரகாலச் சட்டத்தின் கீழேயே அந்த நாட்டில் பரவலாக மனித உரிமைகள் மீறப்பட்டும், நசுக்கப்பட்டும் வந்துள்ளன. போர் முடிவுற்ற பின்னரான முதலாவது நாடாளுமன்றம் நாளை 22 ஆம் தேதி கூடவுள்ள நிலையில் சர்வதேச மன்னிப்புச் சபை இந்தக் கோரிக் கையை விடுத்துள்ளது. 1971 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக, இடைவிடாது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டம், அவசரகாலச் சட்டம் மற்றும் அவசரகால விதிகள் ஆகியவற்றை நீக்கி மனித உரிமைகளைப் பேணும் சட்டங்களைப் புதிய அரசு உருவாக்க வேண்டும். இலங்கை முன்னேறிச் செல்ல வேண்டுமானால் மக்களின் மனித உரிமைகளை மலினப்படுத்தி அவற்றை மீறி தட்டிப்பறிக்கும் இச் சட்டங்களை முற்றாகக்களைந்து, மனித உரிமை மீறல்களை ஊக்குவிக்கும் சட்ட விதிகளை நீக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பசிபிக் பிராந்திய உதவி இயக்குநர் மல்கோத்ரா தெரிவித்தார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், பொதுசன பாதுகாப்புச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்ட விதிகள் என்பன இலங்கையின் பாதுகாப்புப் படைகள் மனித உரிமைகளை மீறத் தூண்டுதல் அளித்தும் உதவி புரிந்தும் வந்திருக்கின்றன என்றும் மல்கோத்ரா கூறினார். இலங்கையில் போர் முடிந்து விட்டது. ஆனால் அரசாங்கம் தனது அரசியல் எதிரிகளை நசுக்குவதற்கும் மனிதாபிமான உரிமைகளை உரிய முறைப்படி நடைமுறைப்படுத்துவதை தடுப்பதற்கும் அவசரகாலச் சட்டத்தை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறது. நீதித்துறை செயலற்றுப் போகும் விதத்தில் இதனை நடைமுறைப்படுத்துகின்றது.அவசரகாலச் சட்டத்தின் கீழாக விதிகளை அமைத்துள்ளது. இப்போதுள்ள நடைமுறை நீக்கப்பட்டு அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் மல்கோத்ரா மேலும் வலியுறுத்தியுள்ளார்

துணைப்படைக் குழுக்களின் அட்டகாசங்கள் அதிகரிப்பு....

பொதுத் தோ்தலில் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அமைதிகாத்து வந்த அரச தரப்பும், துணைப்படைக் குழுக்களும், தோ்தலைத் தொடர்ந்து தமது வன்முறைச் செயற்பாடுகளை தமிழர் தாயகத்தில் கட்டவிழ்த்து விட்டுள்ளன. தோ்தல்வரை சற்று ஓய்ந்திருந்த கொலை, கொள்ளை, கடத்தல், கப்பம் கோரல், பாலியல் துன்புறுத்தல் என்பன தமிழர் தாயகப்பகுதிகளில் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளன. வவுனியா திருநாவற்குளம் சிவன்கோவில் பகுதியில் கொள்ளையிட்ட துணைப்படைக் குழுவினர் வீட்டில் இருந்த தயாரையும், 3 பிள்ளைகளையும் குத்திக் காயப்படுத்தியிருந்தனர். இதில் 9 அகவையுடைய ஜனனி என்ற சிறுமி உயிரிழந்துள்ளார். ஏனையவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ் மாவட்டத்தில் நாவாலியைச் சோ்ந்த இருவர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கடத்திச் செல்லப்பட்டு, 50 இலட்சமும், 30 இலட்சம் ரூபாவும் கப்பமாக கோரப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக யாழ் சுன்னாகம் பகுதியில் வவுனியா முகாமில் இருந்து சென்றிருந்த இளம் பெண் ஒருவர் துணைப்படைக் குழுவைச் சோ்ந்த இருவரால் கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். திங்கட்கிழமை கடத்திச் செல்லப்பட்ட இவர் மறுநாள் தப்பி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, வலிகாமத்தில் இருந்து இடம்பெயர்ந்து மானிப்பாய் பார்வதி முகாமில் தங்கியிருந்த 13 அகவையுடைய துரைசிங்கம் அஜீத்குமார் என்ற சிறுவன் கடந்த செவ்வாய்க்கிழமை வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட இருந்த போதிலும், அந்தக் கடத்தல் முயற்சியில் இருந்து சிறுவன் தப்பிச் சென்றிருந்தார். இவர் கடத்திச் செல்லப்பட முயற்சிக்கப்பட்டபோது வெள்ளை வானில் ஏற்கனவே கடத்தப்பட்டு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மேலும் இரண்டு சிறுவர்களைக் கண்ணுற்றதாக குறிப்பிட்ட சிறுவன் தனது முறைப்பாட்டில் கூறிய போதிலும், மானிப்பாயில் நிலைகொண்டுள்ள காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலங்கை படைகள், மற்றும் அரச ஆதரவுக் கட்சிகளின் துணைகள் இன்றி இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது கடினம் எனவும், தோ்தலில் அதிக பணத்தைக்கொட்டிச் செலவழித்த துணைப்படைக் குழுக்கள், மக்களைக் கடத்தி கப்பம் பெற முனைந்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது

புதன், 21 ஏப்ரல், 2010

"விடுதலைப்போரின் விருட்சமே நாடு கடந்த தமிழீழ அரசு"


நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழீழ விடுதலையை வென்றெடுப்பதற்கான ஒரு அரசியற் கட்டமைப்பு. இது சுதந்திரமும் இறைமையும் உடைய தமிழீழத் தனியரசை அமைப்பதற்காகப் பாடுபடும். இவ் அரசாங்கம் ஒரு வலுமையமாக உருவாகுவதற்கு உலகளாவிய தமிழ்மக்களின் ஆதரவும் குறிப்பாகத் தமிழக மக்களது ஆதரவும் அரவணைப்பும் அவசியமானவை என தாய்த் தமிழகத்துக்கு அறைகூவல் விடுத்திருக்கும் உருத்திரகுமாரன் தனது வேண்டுகோளில் ஈழத் தமிழ் மக்களின் அரசியற் பெருவிருப்பான தமிழீழத் தனியரசினை தாயகம், தேசியம், சுயநிர்ணயம், இறைமை போன்ற உரிமை நிலைக் கோட்பாடுகளின் வழி நின்று – தமிழக மற்றும் இந்திய மக்களினதும் அனைத்துலகசமூகத்தினதும் அதரவுடன் வென்றெடுக்கும் நோக்குடன் ஜனநாயக விழுமியங்களுக்குட்பட்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் நாம் ஈடுபட்டு வருவதனைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள். எனத் தெரிவித்திருக்கும் அவர் இந் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் முயற்சிக்குத் தங்கள் ஆதரவினை வேண்டியே இம் மடலினை வரைகிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாகத் தாய்த் தமிழகத்துக்கு அவர் எழுதிய மடல் வருமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழீழ விடுதலையை வென்றெடுப்பதற்கான ஒரு அரசியற் கட்டமைப்பு. இது சுதந்திரமும் இறைமையும் உடைய தமிழீழத் தனியரசை அமைப்பதற்காகப் பாடுபடும். இவ் அரசாங்கம் ஒரு வலுமையமாக உருவாகுவதற்கு உலகளாவிய தமிழ்மக்களின் ஆதரவும் குறிப்பாகத் தமிழக மக்களது ஆதரவும் அரவணைப்பும் அவசியமானவை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும் என்பதனை ஆய்வு செய்து பரிந்துரை செய்வதற்காக திட்டமுன்மொழிவு செய்யப்பட்ட 2009 ஆம் ஆண்டு யூன் மாதம் 16 ஆம் நாளன்று மதியுரைக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. இம் மதியுரைக்குழுவில் தமிழீழ விடுதலை இலட்சியத்தோடு தம்மை இறுகப் பிணைத்துக் கொண்ட பின்வரும் உறுப்பினர்கள் பணியாற்றி வருகின்றனர். பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல் (அமெரிக்கா) பேராசிரியர் ஜோசப் சந்திரகாந்தன் (கனடா) வைத்தியக் கலாநிதி நாகலிங்கம் ஜெயலிங்கம் (அமெரிக்கா) சட்ட அறிஞர் ஜெயப்பிரகாஸ் ஜெயலிங்கம் (அமெரிக்கா) சட்ட அறிஞர் கரன் பார்க்கர் (அமெரிக்கா) பேராசிரியர் பழனியப்பன் இராமசாமி (மலேசியா) சட்ட அறிஞர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் (அமெரிக்கா) பேராசிரியர் பீற்றர் சால்க் (சுவீடன்) வைத்தியக் கலாநிதி சிவனேந்திரன் சீவநாயகம் (அவுஸ்திரேலியா) பேராசிரியர் நடராஜா சிறிஸ்கந்தராஜா (சுவீடன்) பேராசிரியர் முத்துக்குமாரசாமி சொர்ணராஜா (பிரித்தானியா) கலாநிதி அமுது லூயிஸ் வசந்தகுமார் (பிரித்தானியா) இம் மதியுரைக்குழுவினர் தமது ஆய்வின் அடிப்படையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கம் தொடர்பாக மக்கள் கருத்துப்பரிமாற்றத்தின் பின் விடுத்த இறுதி அறிக்கையின் அடிப்படையிலேயே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்படுகிறது. இவ் அறிக்கையினை எமது இணையத்தளமாகிய www.govtamileelam.org இல் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அறிக்கை இனைப்பில் PDF நாடு கடந்த தமிழீழ அரசாங்கமானது மக்கள் மத்தியில் இருந்து இதற்கென நடாத்தப்படும் நேரடித் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டு அமைக்கப்படுகிறது. இதற்கான தேர்தல்கள் மே மாதம் 2 ஆம் நாள் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையினை 2010 மே மாதம் 17-19 நாட்களுக்கிடைப்பட்ட காலப்பகுதியில் கூட்டுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவை இக் காலப்பகுதிக்குள் கூடுவது முள்ளிவாய்க்காலுடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முறியடித்து விட்டதாகக் கூறி மார் தட்டும் சிறிலங்கா அரசுக்கு தமிழ் மக்கள் கொடுக்கும் குறியீட்டு வடிவிலான பதிலடியாக அமையும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையில் 135 பிரதிநிதிகள் அங்கம் வகிப்பார்கள். முதலாவது அரசவையின் ஆயுட்காலம் ஆகக் கூடிய அளவு மூன்று ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலாவது அரசவை விரும்பும் பட்சத்தில் அதற்கு முன்னரே அடுத்த தேர்தலை நடத்தலாம். விடுதலைப்புலிகளுக்குப் பிந்திய காலகட்டத்து அமைப்பு (post LTTE organisation) என்ற அடிப்படையில் இவ் அமைப்பு உருவாக்கப்படவில்லை. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்படுவது தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தொடர்ச்சியாகவே அமைகிறது. தாயகத்தில் தேசியத்தலைவரின் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த நடைமுறை அரசு சிறிலங்கா ஆக்கிரமிப்புப் படையினரால் சிதைக்கப்பட்டமைக்கு உலக அரசுகள் சிறிலங்கா அரசுக்கு வழங்கிய ஆதரவு முக்கியமானதொரு காரணம். நம் கண்முன்னால் நடந்து முடிந்த ஒரு மிகப்பெரும் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த முடியாதவர்களாக நாம் தவித்து நின்றோம். இதனால் உலக நாடுகளின் ஆதரவினை எமது பக்கம் வென்றெடுப்பதற்கென வலுவானதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதுமான பிரதிநிதிகளைக் கொண்ட அமைப்பு ஒன்று அவசியம் என்றும் அதுவும் தற்போதுள்ள சூழ்நிலையில் தாயகத்திற்கு அப்பாலே நிறுவப்பட வேண்டிய யதார்த்தம் உணரப்பட்டமையால் இவ் அமைப்பு உருவாக்கப்படுகிறது. அனைத்துலகத் தளத்தில் தமிழீழ விடுதலைக்கு ஆதரவினை வென்றெடுப்பதற்காக உருவாக்கப்படும் இவ் அமைப்பு தமிழீழ விடுதலைக்காத் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களையும் மக்களையும் மனதில் இருத்தி அவர்களின் கனவுகளை நனவாக்க அயராது உழைக்கும். அனைத்துலகரீதியான ஏற்புடமையினைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இவ் அமைப்பு ஜனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டு அமைக்கப்பட்டு அரசியல், இராஜதத்திர வழிமுறைகளுக்கூடாகத் தனது பணிகளை முன்னெடுக்கும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தும் இத் திட்டத்துடன் தொண்டர்களாக தம்மை இணைத்துக் கொள்ளவும் பலநூற்றுக்கணக்கான தமிழக உறவுகள் தமது பெயர்களை எமது இணையத்தளத்தினூடாகப் பதிவு செய்திருந்தனர். இவர்களின் கரங்களை நாம் தோழமை உணர்வுடன் இறுகப் பற்றிக் கொள்கிறோம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான செயற்பாடுகளைத் தமிழகத்தில் விரிவாக்கம் செய்யும் தருணத்தில் தங்களுடன் நாம் தொடர்பு கொள்கிறோம். இவ்விடத்தில் இன்னுமொரு விடயத்தினையும் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் குறித்து தமிழகத்தின் சஞ்சிகையொன்றில் இவ் வாரம் வெளியாகியிருந்த ஒரு கட்டுரையில் நான் குறிப்பிட்டதாக கூறப்பட்டுள்ள ஆயுதப்போராட்டம் குறித்த கருத்துக்கள் எவையும் என்னால் தெரிவிக்கப்படாதவை. ஆயுதப்போரட்டம் பற்றி எதுவுமே என்னுடன் பேசப்படவில்லை. இவை தவிர அதில் உள்ள ஏனைய சில விடயங்களும் எனது கருத்துக்கள் அல்லாதவை. உண்மையில் நான் அச் சஞ்சிகைக்கு பேட்டி எதனையும் வழங்கியிருக்கவுமில்லை. அச் சஞ்சிகையின் கட்டுரையாளருடன் நான் மேற்கொண்டிருந்தது தேர்தல் நடைமுறை தொடர்பான ஒரு சிறு உரையாடல் மட்டுமே. நான் குறிப்பிடாத, எனது கருத்துக்கள் அல்லாத விடயங்கள் எனது பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தமையால் இம் மறுப்பை இவ்வித்தில் பதிவு செய்கிறேன். தமிழக மக்களும் ஈழத் தமிழர் தேசத்தின் விடுதலையை தமது நெஞ்சிருத்திச் செயற்படும் தலைவர்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீதும் ஈழத் தமிழர் தேசத்தின் விடுதலை மீதும் தாங்கள் கொண்டிருக்கும் பற்றுறுதியினையும் அதற்காக வழங்கி வரும் பேருழைப்பையும் நாம் என்றும் பெரும் மதிப்புடன் நினைவிற் கொள்கிறோம். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடர்ச்சியாக அமையும் இந் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை வெற்றிகரமாக அமைத்திட தங்கள் ஆதரவையும் அரவணைப்பையும் எதிர்பார்த்து நிற்கிறோம். என அவர் தனது மடலில் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டவர்கள் 85,000 பேர் தவிப்பு.

ஐஸ்லாந்தில் எரிமலை ஒன்று வெடித்ததால் ஏற்பட்ட சாம்பல் மூட்டம் காரணமாக ஐரோப்பிய வான்பாதையில் இயக்கப்படும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருப்பதால், பிரான்சில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு சென்ற உல்லாசப் பயணிகள் நாடு திரும்ப முடியாத நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள்து.




குறிப்பாக இந்தியா, இலங்கை, மாலத்தீவு போன்ற நாடுகளுக்குச் சென்றவர்கள் பெரும் அவதிக்குள்ளாகியிருப்பதாகவும், சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாத கவலையில் பிரான்ஸ் மக்கள் தவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அதே வேளையில் பொருளாதாரப் பிரச்னையாலும் அவர்கள் சிரமத்திற்குள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட சாம்பல் மூட்டம் காரணமாக ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து 5 நாட்களாக தமது விமானச் சேவைகளை நிறுத்தியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.



விமானச் சேவைகள் யாவும் மீண்டும் மெதுவாக சேவைக்கு திரும்பியுள்ள போதும் ஆசனங்களைப் வழங்குவதில் பெரும் சிக்கல்கள் தோன்றியுள்ளதாக விமானச் சேவை நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.



யாழில்............?

கடந்த திங்கட்கிழமை யாழ்பாணம் சுன்னாகம் பகுதியில் இளம் பெண் ஒருவரை இரு இளைஞர்கள் கடத்தி பாலீயல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாக தெரியவருகிறது. வவுனியா இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்த அப்பெண் தனது உறவினரை பார்ப்பதற்காக யாழ்வந்தபோதே இவ்வாறு கடத்தப்பட்டு திங்கட்கிழமை இரவு பாலீயல்ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும் இவர் செவ்வாய் காலை ஒருவாறு அங்கிருந்து தப்பி வந்ததாகவும் அயலவர்களிடம் முறையிட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. அக்குறித்த இளம்பெண்ணிடம் இருந்து பறித்த கைத்தொலைபேசியை வைத்திருந்த நபர் மூலம் அவரை இனம் கண்டு இருவரையும் மடக்கி பிடித்த அயலவர்கள் இவ் இரு இளைஞருக்கும் நையப்புடைத்து தகுந்த பாடம் படிப்பித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்ததாகவும் அவர்கள் தற்போது காவல்துறையினரின் கண்காணிப்பில் யாழ் ஆசிரியர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறியமுடிகிறது. 24 அகவையுடைய இப்பெண் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து குடும்பத்தினருடன் வவுனியா தடுப்பு முகாமில் தங்கியிருந்தவர் என்பதுவும் தற்போது யாழ் ஆசிரியர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவருகிறது.