இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
திங்கள், 26 ஏப்ரல், 2010
அரசுடன் சேர்ந்தே கொள்ளை அடிப்போம் கொலை செய்வோம் - பிள்ளை(பிடி)யான்
பிள்ளையான் தலைமையிலான கட்சியின் கீழ் இயங்கும் கிழக்கு மாகாண சபையினை ஊழல் மோசடிகளை விசாரணை செய்ய அரசாங்கம் தொடங்கியவுடன் பீதியடைந்த பிள்ளையான் தாம் தொடர்ந்து மஹிந்த அரசுடன் சேர்ந்து இயங்குவதாக அறிக்கை விடுத்துள்ளார்.
தமது கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் பொது தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும் தாம் இப்போது அரசுடனேயே சேர்ந்து இருப்பதாக பிள்ளையானின் பேச்சாளர் அஷாத் மௌலானா தெரிவித்துள்ளார்.
200 ஆண்டுகளுக்கு முன் பேசப்பட்ட மொழிமீண்டும் உருவாக்கப்படும் அதிசயம்
அமெரிக்கத் தீவு ஒன்றில் 200 ஆண்டுகளுக்கு முன் பேசப்பட்ட மொழிகளை மீண்டும் உருவாக்குவதில் அந்நாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்று ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவில், ஐரோப்பியர்கள் குடியேறுவதற்கு முன் சிவப்பிந்தியர்கள் இருந்தனர். அப்போது, 300க்கும் மேற்பட்ட மொழிகள் அக்கண்டத்தில் பேசப்பட்டன. அவற்றில் இன்றிருப்பவை 175 மட்டுமே. அவையும் காக்கப்படாவிடில், 2050ம் ஆண்டில் 20 மொழிகள் தான் இருக்கும் என்று அமெரிக்காவில் இயங்கி வரும், ‘உள்நாட்டு மொழிகள் கழகம்’ கவலை தெரிவித்துள்ளது.
நியூயார்க் அருகிலுள்ள ‘லாங்’ என்ற தீவில் 200 ஆண்டுகளுக்கு முன், ‘ஷின்னெகாக்’ மற்றும் ‘அன்கெசவுக்’ என்ற பழங்குடி மொழிகள் பேசப்பட்டன. இன்று ‘ஷின்னெகாக்’ மொழியைப் பேசும் பழங்குடிகளாக 1,300 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சவுதாம்ப்டன் நகரில் இருக்கின்றனர்.’அன்கெசவுக்’ மொழி பேசுபவர்களாக 400 பழங்குடியினர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மாஸ்டி நகரில் வசிக்கின்றனர். இந்நிலையில், அமெரிக்காவின் ‘ஸ்டோனி புரூக்’ பல்கலைக்கழகம், அப்பழங்குடி வம்சத்தைச் சேர்ந்த இருவருடன் இணைந்து மீண்டும் இந்த இரு மொழிகளையும் உருவாக்குவதில் முனைந்துள்ளது.
இதற்காக அவர்கள், கி.பி., 1791ல் தாமஸ் ஜெபர்சன் உருவாக்கிய பழங்குடியினர் மொழிகளின் சொற்களஞ்சியம் போன்ற பழைய ஆவணங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். சமீப காலமாக, அமெரிக்காவில் பழங்குடியின மொழிகளை மீட்டுருவாக்கம் செய்வதில் அந்நாட்டுப் படித்த பழங்குடியினர் ஈடுபட்டு வருகின்றனர்.’எங்கள் மொழிகள், எங்களின் கலாசாரம் மற்றும் வாழ்க்கையை மீட்டுருவாக்கம் செய்வதில் உதவுகிறது. எங்கள் குழந்தைகள் அவர்களின் சொந்த மொழியில் சொந்த கலாசாரத்தைப் படிக்கும் போது படிப்பில் சிறப்படைகின்றனர்’ என்கிறார் இப்பணியில் ஈடுபட்டுள்ள ‘அன்கெசவுக்’ பழங்குடிகளின் தலைவர் ஹாரி வாலஸ்.’மனிதப் பண்புகளுக்கான தேசிய அறக்கட்டளை’யின் தலைவர் புரூஸ் கோல், ‘மொழி என்பது கலாசாரத்தின் டி.என்.ஏ.,’ என்று குறிப்பிடுகிறார்.
ஸ்டோனி புரூக் பல்கலை மொழியியல் தலைவர் ராபர்ட் டி.ஹாபர்மேன், ‘ஷின்னெகாக் மற்றும் அன்கெசவுக் இரு மொழிகளும் ஒத்த தன்மை கொண்டவை. இவை இரண்டும், ‘அல்கான்குயன்’ மொழிக் குடும்பத்தில் தோன்றியவை’ என்கிறார்.இவற்றை எப்படி மீட்டுருவாக்கம் செய்கின்றனர் என்று அவர் கூறுகையில், ‘முதலில் அந்த மொழிகள் எப்படி இருக்கின்றன என்பதை அவற்றில் புழங்கி வரும் பிரார்த்தனைகள், வாழ்த்துக்கள், உரையாடல்கள் மற்றும் சொற்பட்டியல்கள் மூலம் கண்டறிவோம்.
பின், அவற்றில் எந்த சொற்கள் ஒரே வடிவத்திலும் திரிவாகியும் புழங்குகின்றன என்பதைப் பார்ப்போம். பின், படிப்படியாக மீட்டுருவாக்கம் செய்வோம்’ என்கிறார்.மேலும் அவர் கூறுகையில், ‘வழக்கிழந்து போன மொழிகளை மீட்டுருவாக்கம் செய்வதில் இன்னொரு சிக்கலும் உள்ளது. அந்த மொழிகளின் அகராதிகள் யாவும் ஆங்கிலத்தில் எழுத்துப் பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. அதிலிருந்து மீட்டுக் கொண்டு வருவது என்பது கடினம் தான்’ என்கிறார்.
அவசரகால சட்டம் நீக்கப்படும் என கூறி வெளி நாட்டு சலுகைகளை பெற பீரிஸ் திட்டம்
அவசரகால சட்டத்தினை நீக்கப்போவதாக கூறி வெளி நாட்டு சலுகைகளை பெற வெளி நாட்டு அமைச்சர் பீரிஸ் திட்டம் வகுத்துள்ளார். இதன் படி இலங்கையில் பரந்துபட்ட மனித உரிமை மீறல்களுக்குக் காரணமாக அமைந்துள்ளது என உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சுட்டிக் காட்டப்பட்டுவரும் அவசரகால சட்டத்தைத் தளர்த்துவது குறித்து அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது என புதிய வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அவசரகால சட்டத்தினை நீக்குவது பற்றி தாம் யோசித்து வருவதாகவும் ஆனால் இதற்கான கால எல்லை எதனையும் தாம் தீர்மானிக்கவில்லை. எனவும் கூறியுள்ள பீரிஸ் ;சூழ்நிலைகள் மாற்றமடைந்துள்ளன. நாட்டின் பாதுகாப்பு நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளமையைத் தொடர்ந்து, யுத்த காலத்தில் நடைமுறைப்படுத்திய பாதுகாப்பு நடைமுறைகள் சிலவற்றை அரசு படிப்படியாகத் தளர்த்தும். என கூறியுள்ளார். பாதுகாப்பிற்கும் சுதந்திரத்திற்கும் இடையில் சமநிலையைப் பேணுவதற்காகவே இதனைச் செய்கிறோம். இது சரியான விடயம் என்பதால் இதனை முன்னெடுக்கவுள்ளோம்.வெளியுலக அழுத்தங்கள் காரணமாக இதனை நாம் முன்னெடுக்கவில்லை. இதேவேளை, இவ்வாரம் பூட்டானில் இடம்பெறவுள்ள "சார்க்' உச்சிமாநாட்டின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் பேச்சுகளை மேற்கொள்வார். இந்தச் சந்திப்பின் போது யுத்தத்திற்குப் பின்னர் இலங்கையில் நிலைமையை முன்னேற்றுவதற்கு அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து இந்தியப் பிரதமருக்கு ஜனாதிபதி தெளிவுபடுத்துவார். எனவும் கூறினால் பீரிஸ். ஆனால் உண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வரி சலுகையினை பெறுவதற்கும் கூடவே போர்குற்ற விசாரணைகளை தணிப்பதற்குமே இந்த முன்னகர்வு என கூறப்படுகின்றது.
"தமிழீழத் தேசியத் தலைவரின்" "இலட்சியத்தை" விலைபேசத் துணிந்துள்ள: “அனைத்துலகத் தொடர்பகம்”.................. ?
பெற்றோர் மத்தியில் அச்சநிலை!
யாழ்ப்பாணத்தில் சிறுவர்களைக் கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் பெற்றோர்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளது. யாழ். குடா நாட்டில் நேற்று முன்தினம் மட்டும் சிறுவர்களைக்கடத்தும் சம்பவங்கள் மூன்று முறியடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பொலிஸ் நிலையங்களில் முறையிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பிற்பகல் 11.40 மணி யளவில் ஓட்டுமடம் பகுதியில சிறுவன் ஒரு வனை கடத்த முயன்ற சம்பவம் சிறுவனின் சாதுரியத்தால் முறியடிக்கப்பட்டதாக அராலி யைச் சேர்ந்த பிரஸ்தாபச் சிறுவன் கணனிக் கற்கை வகுப்பை முடித்துக்கொண்டு ஓட்டு மடம் சந்தியில் பஸ்ஸுக்காக காத்திருந்த வேளை சைக்கிளில் வந்த நபர் ஒருவர் அச் சிறுவனை கடத்த முயன்றதாகவும் அதன் போது அச்சிறுவன் கூக்குரல் இடவே அந்நபர் தப்பிச்சென்றதாகவும் பொலிஸ் முறைப்பாட் டில் கூறப்பட்டது. கடத்த முயன்ற நபரிடம் கத்தி காணப்பட்ட தாக அச்சிறுவன் தெரிவித்தான். இதேவேளை அராலி வடக்கில் நேற்று முன்தினம் மாலை இரு சிறுமிகளை மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் கடத்த முயற்சித்துள்ளனர். எனினும் சிறுமிகள் இருவரும் கூக்குரல் இட்டு கத்தியதையடுத்து கடத்தல்காரர்கள் தப்பித்துள்ளனர். அராலி வடக்கு செட்டியார் மடம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை 5ஆம் தரத்தில் கல்வி கற்கும் சிறுமிகளே மோட்டார் சைக்கி ளில் சென்ற இனந்தெரியாத இருவரால் கடத் தல் முயற்சி இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, பிரஸ்தாப இரு சிறுமிகளும் தனியார் கல்வி நிலையம் ஒன்றிக்கு சென்று விட்டு ஒழுங்கை ஒன்றின் ஊடாக வீடு திரும்பிச் செல்கையில் கறுப்பு நிற கண்ணாடியுடைய தலைக்கவசமணிந்த இனந்தெரியாத இருவர் மோட்டார் சைக்கிளில்பின் தொடர்ந்துள்ளனர். சன நடமாட்டமற்ற பகுதியில் வைத்து எங்கே செல்கிறீர்கள் என சிறுமிகள் இரு வரையும் இனந்தெரியாதோர் கேட்டுள்ளனர். அதை ஏன் உங்களுக்கு என தான் பதிலளித் தாக சிறுமி ஒருவர் கூறுகிறார். பதிலுக்கு வாருங்கள் வீட்டே கொண்டு சென்று விடுகிறேன் என கடத்தல் காரர் கூறியுள்ளார். அதனை ஏற்க மறுத்த தாம் நாங்கள் வீட்டுக் குச் செல்வோம் நீங்கள் உங்களுடைய வேலை யைப்பாருங்கள் என்று தான் கூறியதாகச் சிறுமி தெரிவித்தார். இதையடுத்து கடத்தல்காரர்கள் இருவரும் கட்டாயப்படுத்தி மோட்டார் சைக்கிளில் ஏற்ற முற்பட்டபோது தாம் கூக்குரல் இட்டு கத்திய தால் அவர்கள் தப்பிச்சென்றனர் என்றும் சிறு மிகள் தெரிவித்தனர். இதேவேளை மூளாய்ப் பகுதியில் மயக்க மருந்து அடித்து சிறுவனை கடத்த முயன்ற சம் பவம் ஒன்றும் சங்கானையில் நேற்று மாலை சிறுமி ஒருத்தியை கடத்த முயன்ற சம்பவமும் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவித் தன. எனினும் அதனை உறுதிப்படுத்த முடிய வில்லை. இதேவேளை சிறுவர்களை கடத்த முய லும் சம்பவங்கள் இடம் பெறுவதால் பெற் றோரை விழிப்புடன் இருக்குமாறு புத்திஜீவி கள் ஆலோசனை கூறியுள்ளனர்.
முற்றுகையிட்டு போராட்டம்..............
கொழும்பில் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் அமிதாப்பின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மும்பையில் அவரது வீட்டை நாம் தமிழர் இயக்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இலங்கை தலைநகர் கொழும்பில் வரும் ஜுன் மாதம் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் விளம்பர தூதராக இருக்கிறார். இவரது மகன், மருமகள் ஆகியோரும் இந்த அமைப்பில் உள்ளனர். இதற்கு ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் போன்ற தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். ஆயிரக்கணக்கான தமிழர்களின் மரணத்துக்கு காரணமான ராஜபக்சே அரசாங்கம் தலைநகர் கொழும்பில் நடத்தும் சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் திரைப்படத் துறையைச் சேர்ந்த எவரும் கலந்துகொள்ளக் கூடாது. அதோடு அமிதாப்பச்சன் தனது நடவடிக்கைகளை கைவிட்டு, சக இந்தியரின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று அவர்கள் கூறியிருந்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் மும்பை ஜுஹூவில் உள்ள நடிகர் அமிதாப்பச்சனின் வீட்டை நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர். அப்போது இந்திய திரைப்பட விழாவை இலங்கையில் நடத்தக் கூடாது, அந்த நிகழ்ச்சிக்கான விளம்பர தூதர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று அமிதாப்பச்சன் வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். போராட்டம் நடந்து முடிந்த பிறகு நாம் தமிழர் இயக்கத்தை சேர்ந்த சிலர் அமிதாப்பச்சனை சந்தித்து தமிழர்களின் உணர்வை மதித்து நிகழ்ச்சியை புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை கேட்டுக் கொண்ட அமிதாப், இது பற்றி யோசிப்பதாக கூறியுள்ளார். நாம் தமிழர் அமைப்பின் போராட்டம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆட்கடத்தலில் ஈடுபடும் ஈபிடிபியினர்!
வன்னியில் போர்க் காலத்தில் பாதிக்கப்பட்ட இளம்குடும்பஸ்தர் ஒருவர் ஈபிடிபியினரால் வவுனியாவில் வைத்துக் கடத்தப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 28வயதுடைய தம்பிராசா ஜெயந்தன் என்பவரே கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வன்னியில் இருந்த குறிப்பிட்ட இளைஞர் 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் படைக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்திருந்தார். வவுனியாவில் வாழ்ந்துவந்த குறிப்பிட்ட இளைஞர் நோய் காரணமாக பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் மருத்துவத்திற்காக மருத்துவமனைக்குச் சென்றவேளையே கடத்தப்பட்டுள்ளதாக வவுனியாத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று முன்னாள் காலை 10மணிக்கு இவர் மருத்துவமனைக்குச் சென்றபோது வாகனம் ஒன்றில் சென்றவர்களே கடத்திச் சென்றுள்ளனர். இவர் கடத்தப்பட்ட விடயம் உடனடியாக குடும்பத்தவர்களுக்குத் தெரியவராத நிலையில் மிக நீண்ட நேரத்தின் பின் அவர்கள் இவரைத் தேடியுள்ளனர். இந்த நிலையில் இவரது வீட்டுக்குச் சென்ற ஈபிடிபியின் வவுனியா மாவட்ட பொறுப்பாளர் குமரேசின் பிரத்தியேகச் செயற்பாட்டாளரான தீபன் என்பவர் ஜெயந்தன் கடத்தப்பட்டுள்ளதாகவும் அவரை விடுவிப்பதாக இருந்தால் ஆறு இலட்சம் ரூபா தம்மிடம் தருமாறும் அவ்வாறு பணத்தினைத் தந்தால் தான் ஜெயந்தனை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார். அதேவேளை சம்பவம் தொடர்பில் பொலிசில் முறையிட வேண்டாம் என்றும் அவ்வாறு முறையிட்டால் கடத்தியவர்கள் ஜெயந்தனைக் கொன்றுவிடுவார்கள் என்றும் தீபன் ஜெயந்தனின் உறவினர்களிடம் மிரட்டல் விடுத்துச் சென்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஞாயிறு, 25 ஏப்ரல், 2010
குடும்ப அரசியலிற்குள் மறைந்திருக்கும் வியூகங்கள் .......?
ஆசிய நாடுகளில் இராஜ குடும்பம், இராணி, இளவரசன், இளவரசி என்ற மகாராஜா குடும்ப மனப்பான்மை இன்றைய அரசியலிற் கூட குடும்ப ஆதிக்கம் தொடர இடமளித்து வருகிறதெனலாம். இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் குடும்ப அரசியல் வலுவிழந்து மாற்றங்கள் சில தோன்றி விட்டபோதும், மீண்டும் மீண்டும் பிரபல்யம் என்பது அதே குடும்ப அரசியலை மீள நிலைநாட்ட உதவுகிறது. பிரித்தானியாவில் அரச குடும்பம் கௌரவிக்கப்படும் அதே பாணியில், பாரதத்தில் மேலே கொண்டு வரப்பட முயலப்பட்ட “பிரியங்கா” இந்திரா போன்ற தலைமைத்துவம் உடையவர் என்று பேசப்பட்டது. 1997 காலப்பகுதியில், அதற்காக கழுத்தும் , மூக்கும் , அந்த மிடுக்கும் துணைக்கு இழுத்து வரப்பட்டன. ஆனால் நளினியைச் சந்தித்த பின்னர் பிரியங்கா தெரிவித்த எங்கள் அப்பா நல்லவர் என்ற பேதமைமிக்க கற்றுக் குட்டித் தன வாக்கு மூலம் அவரின் அறிவுப் பஞ்சத்தைப் பறை சாற்றியது. சம கால நிகழ்வுகளையோ, அன்றில் மறுதரப்பு நிலைப்பாட்டையோ புரிய முயலாத, ஒரு அரசியல் மழலையாக அவர் விலகினாலும், அவரை அழ வைத்ததுடன் ஆரம்பித்ததே முள்ளி வாய்க்கால் முடக்கமாகும். ராகுல், பிரியங்கா, சோனியா ஆகிய மூவரையும் பழி வாங்கல் ஊடாகத் திருப்திப்படுத்த இந்திய நடுவண் அரச, உளவு மற்றும் அரசியல் துறை பிரமுகர்கள் எடுத்த பெரு முயற்சியின் விளைவே முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பாகும். காந்தியைச் சுட்ட போது அவர் கோட்சேயை மன்னிக்கச் சொன்னார். ராகுலோ என் தந்தை தொடர்பான நீதியான தீர்ப்பு தங்கள் குடும்பத்திற்கு கிடைக்கவில்லை என்று மீண்டும் மீண்டும் தெரிவித்து இந்த இன அழிப்பிற்கு எண்ணை வார்த்தார். இதனால் சட்டத்தை தன் கையிலே எடுத்த இந்தியா, ஒரு பேட்டை ரவுடி போல், உலக வழக்கம், சர்வ தேச மரபுகள், போர் விதி முறைகளை எல்லாம் தானே மீறி ஒரு பாரிய இன அழிப்பை நடாத்தி முடித்தமை தான் நீதியான தீர்ப்பா என்பதே மே 18 இல் இந்தியாவை நோக்கி எழுப்பப்படவேண்டிய கேள்வியாகும். இலங்கைத் தீவில் நிலவும், இந்த இன முரண்பாட்டிற்கு என்ன காரணம் என்று ராகுல் என்ற அழகிய இளைஞனோ அன்றில் நல்லவர் என்ற கணிப்புள்ள பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கோ சிந்திக்கவில்லை. ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டும் இயேசுவின் வாக்கியம் இத்தாலியப் பெண்மணியிடமிருந்து வரவில்லை. இவற்றை எல்லாம் அவதானித்த, இலங்கை அதிகாரிகள் புலிகளிற்கு எதிராக இந்தியத் துணையுடன் ஒரு பெரிய போரை நடத்தலாம் என்பதை கணித்துக் கொண்டு காரியத்தில் இறங்கி தமிழ் இனத்தையே வீழத்தி விட்டனர். ராகுலினதும், பிரியங்காவினதும், சோனியாவினதும் முயற்சி ராஜீவை திருப்பி பெற உதவுவதற்கு மாறாக ஒரே நாளில் ஆயிரக் கணக்காணவர்களை கொல்லவே உதவியது. சகிப்பும், விட்டுக் கொடுக்கும் பரந்த மனப்பான்மையும் இந்தியாவிற்கு தலைமை தாங்குபவரிற்குத் தேவை. பல இன மக்களையும், சுற்றி வர பல்வேறு நாடுகளையும் கொண்ட பாரதத்தை நிர்வகிக்கும் போது, ராகுல் இதே “றிற் போ றைற்” தன்தைக் காட்டுவாரேயானால், பொற்கோயிலைத் தொடர்ந்து வந்த இந்திராவின் முடிவு தான் திரும்ப வாய்ப்புண்டு. இவரது புலியைப் பலி எடுக்கும் முனைப்பு இன்று சோனியாவின் கை வாளாக மாறி விட்ட கலைஞரின் ஊடக மற்றும் அரசியல்க் கதிர்களால் காக்கப்பட்டாலும் “கிஸ்றி ரிப்பீடஸ் இற் செல்வ்” என்பதற்கு இணங்க 20 ஆண்டுகளின் பின்னரோ என்னமோ ராகுல் இதற்கான விணை விலையை செலுத்த வேண்டும் என்பது இயற்கையின் நியதியாகலாம். பாகிஸ்தானைப் பொறுத்தவரை, இன்றைய பிரதமர் ஜனாப் அலி பூட்டோவின் மகளின் கணவராக காணப்படுகிறார். பூட்டோவின் மகள் பெனாஜீர் கொல்லப்பட இவர் பதவிக்கு வந்தார். இவ்வாறே இந்திரா அம்மையார் சுடப்பட, சஞ்சய் ஏற்கனவே விமான விபத்தில் கொல்லப்பட்டதால் வேறு எவரும் அற்ற நிலையில் குடும்ப அடிப்படையில் ராஜீவ் இழுத்து வரப்பட்டார். இவ்வாறு இதே குடும்ப அரசியல் உண்மையான இராஜ குடும்பத்திலிருந்து அதிகாரத்தை இத்தாலிக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டதை இராம இராஜ்ஜியப் பாணி மக்கள் உணர்ந்ததாக இல்லை. இனி , நாம் நமது இலங்கைக்கு வந்தால், இதுவரை சகோதரர்களை சூழ வைத்திருந்த மகிந்த தற்போது, தனது மைந்தனையும், மூத்த சகோதரரையும் அவைக்கு இழுத்து வந்துள்ளார். புலி இயக்கத்திடமிருந்து பல விடயங்களைக் கற்றுக் கொண்ட மகிந்த, தனக்கு வேண்டிய நம்பிக்கையை உறுதி செய்ய கோத்தபாயாவை பாதுகாப்புச் செயலாளராக்கினார். சந்திரிகா அம்மையார் தனது மாமனை அமர்த்தியதைப் பிரதி செய்த மகிந்த பிறரிடமிருந்து கற்றுக் கொண்டதே மிக அதிகம். இன்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இந்த ஆண்டு இறுதியில் பதவிப் பிரமாணம் செய்யும் போதோ, அன்றில் தனது பதவி வலுக் குறைய ஆரம்பிக்கும் பிந்திய காலப்பகுதியிலோ ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைத்து, பிரதமராக தான் பாராளுமன்றத்துள் நுழையும் போது, பாதுகாப்பாக சபாநாயகராக இன்றே நியமிக்கப்பட்டிருப்பவரே சமல் ராஜபக்ச ஆவார். திரு பிரேமதாசா அரச தலைவராக இருநத போது, எச் எம் முகமட் நம்பிக்கைகக்குரிய சபாநாயகராக இருக்காமையால் ஒரு ஆபத்தை பிரேமதாசா எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சந்திரிகா அம்மையார் இரண்டாந்தடவை பதவிப் பிரமாணம் எடுத்தமை தொடர்பாக சட்டச் சிக்கலை மனதில் கொண்டு, பிரதம நிதியரசர் நியமனத்தை கையாண்ட அதே பாணியில் மகிந்த வகுக்கும் வியூகம் அவதானிப்பிற்குரியது. இவ்வாறே இந்திராவை என்றுமே எங்கும் அழைத்துச் சென்று அரசியலையும் அறிமுகத்தையும் நேரு ஏற்படுத்தினார். அதே பாணியில் வெற்றி பெற்ற தன் மைந்தனிற்கு பிரதி அமைச்சர் பதவியைக் கூட உடனடியாக வழங்காமல், தனது மாளிகையிலேயே உடன் அமர்த்தி அரசியலை போதிப்பதுடன், உலகத் தலைவர்களின் அறிமுகத்தையும் எற்படுத்துவதே மகிந்தவின் திட்டமாகும். அதே சமயம் தனது பொறுப்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் செயராளராகத் தொடர்ந்தும் கோத்தபாயாவை வைத்திருப்பதும், சமாதானப் பேச்சில் ஈடுபட்ட உலகத்தால் அறியப்பட்ட, போராசிரியர் திரு ஜி எல் பீரிஸ் அவர்களை வெளிநாட்டு அமைச்சராக்கியிருப்பதும், தன்னைச் சமாதானப் பிரியராகக் காட்டி, புலம் பெயர் தமிழர்கள் மீது வைக்கும் குறிக்கு சான்றாகின்றன. ஆயுதப் பிரயோகப் போராட்டம் என்பது தாயகத்தில் சாதகமான நிலையை தோற்றுவித்த அதே சமயம் சர்வதேசப் பரப்பில் புலிகளை பயங்கரவாதிகளாக்க மிகவும் உதவியதுடன் அவர்களை முறை வகையின்றிக் கொல்லவும் உதவி விட்டது. இந்த நிலையில் திரு வி உருத்திரகுமாரன் அவர்கள் ஆயதம் இனி எங்கள் அகராதியிலே இராது என்பது விவேகமான வாக்கு மூலமாகும். இலங்கைத் தீவில் கண்டிச் சிங்களவரின் ஆதிக்கம் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதன் அடிப்படையில் கூச்சல் போட்ட கண்டியர்களைத் திருப்திப்படுத்தவே டி எம் ஜெயரட்ண பிரதமராக்கப்பட்டுள்ளார். இந்தக் கண்டிப் பாராம்பரியத்துள்ளும் மறைந்து கிடப்பது பரம்பரைக் குடும்ப ஆதிக்கம் தான். இலங்கைத் தீவில் பெண்கள் ஆண்களிற்கு சமனாக மதிக்கப்பட்டதாலேலே உலகின் முதற் பெண் பிரதமராக சிறீமாவோ பண்டாரநாயக்கா வர முடிந்தது என்று இந்த உலகமே எண்ணிக் கொண்டிருக்கிறது. ஆனால் சந்திரிகா அடங்கலாக இந்த பெண் எழுச்சி எல்லாம் நான் ஆரம்பத்தில், குறிப்பிட்ட இராணி இளவரசி மனப்பான்மை குடும்ப அரசியலின் வெளிப்பாடுகள் தான். எது எப்படியிருப்பினும், ருக்மன் சேனநாயக்கா, பிரேமதாசா குடும்பம், பண்டாரநாயக்க குடும்பம், ராஜபக்ச குடும்பம் என்று பல குடும்பஙகள் இன்று தோன்றி விட்டதால் தனி ஒரிரு குடும்ப ஆதிக்கம் என்பது தீவில் வலுவிழந்து விட்டது என்ற திருப்தியுடன் நிறைவு செய்வோம்.
யுத்த காலத்தில் இடம்பெற்றதாக சுமத்தப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தமக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிகப்படவுள்ள நிபுணர்கள் குழுவை நியமிக்க வேண்டாம் என இலங்கை மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸினால் இறுதியாக இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகளின் செயலாளரை சந்தித்த போது மொஹான் பீரிஸ் இதனைக் கோரியுள்ளார். ஐ.நா பொதுச் செயலாளருக்கும் இலங்கையின் சட்ட மா அதிபருக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றதாக ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் மார்டீன் நெசர்கீ தெரிவித்துள்ளார், எனினும் எவ்வாறான தகவல்கள் வெளியிடப்பட்டன என்பது குறித்து தெரிவிக்கவில்லை. ஐக்கிய நாடுகளின் இலங்கைப் பிரதிநிதி பாலித கொஹணேவுடன், நிபுணர்கள் குழு நியமனம் குறித்து பல சந்தர்ப்பத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த ஆணைக்குழுவின் அறிக்கை இந்த மாத இறுதியில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்டுகிறது.
நீ எப்படி தலைவன் ஆனாய்? பிரபாகரனுக்கு ஒரு பகிரங்க மடல்
எங்கள் நாட்டில் ஒருவர் தலைவனாக வேண்டுமென்றால் அவர் ஒரு அரசியல் தலைவரின் வாரிசாக இருக்கவேண்டும், அல்லது அவரது குடும்பத்தில் ஒரு அரசியல் தலைவரின் விதவை இருக்கவேண்டும், குறைந்தபட்சம் இறந்துபோன ஒரு அரசியல் தலைவரோடு, உடன்கட்டை ஏறலாம் என்று நினைத்தேன் என்று சொல்லும் அளவுக்கு நெருக்கமான உறவு கொண்ட ஒருவராக இருந்திருக்க வேண்டும்.
இவையெதுவும் இல்லாவிட்டால், ஒரு சில திரைப்படங்களிலாவது கதாநாயகனாக நடித்திருக்க வேண்டும்; மேலே சொல்லப்பட்டுள்ள எந்தவொரு தகுதியும் இல்லாத மனிதன் நீ. ஈழத்தமிழர் சுதந்திரமாக வாழ, சுயமரியாதையுடன் வாழ “தமிழீழம்” வென்றெடுப்பது ஒன்றுதான் தீர்வு என்பதை இலட்சியமாக ஏற்றுக் கொண்டு, அந்த இலட்சியத்தித்தை எந்தவொரு சூழ்நிலையிலும், எதற்காகவும் விட்டுக் கொடுக்காதவன் நீ.
இவ்வாறு ஏற்றுக் கொண்ட இலட்சியத்தில் இன்றுவரை உறுதியாக, நேர்மையாக இருக்கின்ற காரணத்தினால் உன்னை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் “தமிழீழத் தேசியத் தலைவர்” என்று அன்போடு அழைக்கிறார்கள்.
இப்படி உலகத் தமிழர்களே ஏற்றுக் கொண்டாலும், எங்கள் தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு உரிய எந்தவொரு தகுதியும் இல்லாத நீ எப்படித் தலைவன் ஆனாய்? பொதுவாக எங்கள் நாட்டில் நேர்மை, ஒழுக்கம் என்பதெல்லாம் தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும்தான்.
அரசியலுக்கு வரும்போது அன்றாட உணவுக்கும், மாற்றுத்துணிக்கும் அல்லல் பட்டவர்கள்தான் எங்கள் தலைவர்கள் என்றாலும், இன்றைக்கு அவர்கள் பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதிகள். ஆனால் நீயோ 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு விடுதலை இயக்கத்தின் தலைவனாக இருந்து வந்தாலும், வெளிநாடுகளில் உனக்குச் சொத்துக்கள் இல்லை. ஆடம்பர மாளிகைகள் இல்லை. அட சுவீஸ் வங்கியில்கூட உனக்கு ஒரு கணக்கு இல்லையே. அதுதான் போகட்டும்! மது, புகை என்று உனக்கு ஒரு பழக்கமும் இல்லையாமே.
அதுமட்டுமல்ல! உன் இயக்கத்தில் இருப்பவர்களுக்கும் இந்தப் பழக்கங்கள் கூடாதென்று கட்டுப்பாடாமே! இதுவெல்லாம் பரவாயில்லை. உனக்கு ஒரேயொரு மனைவிதான் என்று உறுதியாகச் சொல்லுகிறார்களே! எங்களைப் பொறுத்தவரை தலைவன் என்றால், குறைந்தது இரண்டு மனைவிகள் ; அங்கங்கே பல தொடர்புகள் இருக்க வேண்டும்.
இவையெல்லாம் இல்லாத நீ எப்படித் தலைவன் ஆனாய்? எங்கள் வாழும் வள்ளுவரின் மகளுக்கும், மகன்வழிப் பேரனுக்கும் ஒரே வயதுதான். எங்களுக்கு அதில் எவ்வளவு பெருமிதம் தெரியுமா? ஆனால் உனது மூத்த மகனுக்கும் அடுத்த மகனுக்கும் உள்ள இடைவெளி பத்து வருடங்கள் என்கிறார்கள்.
இந்த பத்து வருடங்களும், ஈழ விடுதலைப் போராட்டம் மிகவும் நெருக்கடியில் இருந்த காலகட்டம் என்றும், உனது பிள்ளைகளுக்கிடையே உள்ள இந்த வயது வேறுபாடு, அந்தக் காலகட்டத்தில், நீயும், உன் மனைவியும், சாதாரண கணவன், மனைவி என்ற உறவையும் கடந்து, போராளிகளோடு, போராளிகளாய் போர்க்களத்தில் நின்றதை உணர்த்துகிறது.
இப்படி தனிமனித வாழ்க்கையில் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து சொந்த சுகதுக்கங்களை மறந்து, போராட்டத்தில் ஈடுபடுபவன் ஒரு தலைவனா?
நீ எப்படி தலைவன் ஆனாய்?
சிங்கமே வா! புலியாய் புறப்படு! இருப்பது ஓர் உயிர்! அது தமிழுக்காக போகட்டும்! தமிழனுக்காக போகட்டும்! இப்படியெல்லாம் மேடையில் பேசுவதோடு நின்றுவிட வேண்டும். அதுதான் தலைவனுக்கு அழகு!
அதிகம் போனால், காலை சிற்றுண்டிக்கும், மதிய உணவுக்கும் இடையே உண்ணாவிரதம் இருக்கலாம்! ஏன் ஆயுதப் போராட்டத்திற்கும் கூட ஒருவன் தலைமை ஏற்கலாம். ஆனால், போர் நடக்கின்ற இடத்தில் கூட அல்ல, நாட்டிலேயே இருக்கக்கூடாது. ஏதாவது ஒரு வெளிநாட்டில் சுகமாக மனைவி, பிள்ளைகளோடு இருந்து கொண்டு, போராட்டத்தை வழி நடத்த வேண்டும்.
அதுதான் ஒரு தலைவனுக்கு அழகு! ஆனால் பாவி நீ செய்தது என்ன? தாய்த்தமிழகத்தில் தங்கியிருப்பதுக்கூட, மற்றவர்கள் உனது விடுதலை இயக்கத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்க காரணமாகவிடும் என்று, களத்திற்கு சென்றுவிட்டாய். சென்றது சென்றாய்! தனியே செல்லக்கூடாதா? உன் மனைவியையும், பிள்ளைகளையும் கூட விட்டுசெல்லவில்லையே!
எங்கள் தலைவர்களை பார்! வாரிசுகள் என்று வந்துவிட்டால், சின்னவீடு, பெரியவீடு என்ற பேதமெல்லாம் பார்ப்பதில்லை. அனைவருக்கும் ஒரு பதவி! அனைவருக்கும் ஒரு அடைமொழி! இதையெல்லாம் கற்றுக்கொள்ளாத நீ எப்படித் தலைவன் ஆனாய்! தற்கொலைப் படையில் முதல் பெயர் உன் பெயர்! கழுத்தில் கட்டப்படும் நச்சுக் குப்பிக்கும் நீ விதிவிலக்கல்ல! காடுதான் உறைவிடம் என்று ஆன பிறகு, உணவிலும் கூட உனக்கும், இதர போராளிகளுக்கும் இடையே பாகுபாடு இல்லை.
இவையெல்லாம் போகட்டும்! வீட்டுக்கொருவரை இயக்கத்திற்கு தாருங்கள் என்றாய். தந்தார்கள் ஆயிரக்கணக்கில். தங்கள் பிள்ளைகளைத் தந்தவர்கள் எல்லாம் தாங்கள் போரில் ஈடுப்பட இயலவில்லையே என்ற ஆதங்கத்தில் தந்தார்கள். தமிழீழ விடுதலைக்காக தன்னையே அற்பணித்துக் கொண்ட உன்னிடம் யார் கேட்டார்கள்? பாவி! உன் மூத்தப்பிள்ளையை, இனித் திரும்பமாட்டான் என்று தெரிந்தும் களத்திற்கு அனுப்பினாயே! எப்படித் துணிந்தாய்? மொத்த ஈழத் தமிழினமும் இன்று முள்வேளிக்குள் அகதிகளாய் அடைப்பட்டு இருக்கிறது.
போகட்டும்! அதன் தலையெழுத்து அப்படி! ஆனால் உன் வயதான தந்தையையும், தாயையும் மற்ற அகதிகளோடு, அகதிகளாய் விட்டு வைத்திருக்கிறாயே? ஏனய்யா இப்படி! உன்னைப் போன்ற உறுதியும், வீரமும் மிக்க தியாக உள்ளம் படைத்த ஒருவன் பிறப்பதற்கு யோக்கியதை உடைய இனம் இந்தத் தமிழினம் அல்லவே!
எங்களுக்கு திரைப்படங்களே வாழ்க்கையாகிப் போயின! தேர்தல்களோ திருவிழாக்கள் ஆகிவிட்டன! உனது அருமை நமது மக்களுக்கு இன்றைக்கு முழுமையாகப் புரியாமல் இருக்கலாம். ஆனால் உன்னைப் பற்றிய சரியான மதீப்பீட்டை வரலாறு சரியாகவேச் செய்யும். இன்றைக்கு உன்னையும் உனது இயக்கத்தையும் ஒழித்துக்கட்டி விட்டதாக இறுமாந்து நிற்கும் இனவெறி நாய்களும், அவர்களுக்கு உதவி செய்த குள்ளநரிக்கூட்டமும் இன்றைக்கு வேண்டுமானால், மனம் மகிழ்ந்து, தங்களைத் தாங்களே தட்டிக்கொடுத்துக் கொள்ளாலாம்.
ஆனால் எதிர்கால சரித்திரமோ, இந்த இனவெறியர்களையும், இணைந்து நின்ற குள்ளநரிகளையும், நயவஞ்சகர்கள், நாணயமற்றவர்கள் சொந்த இனத்தையே காட்டிக்கொடுத்த துரோகிகள் என்று பட்டியலிட்டு காறிஉமிழும்போது, தன் இன விடுதலைக்காய், தன் இனத்தின் சுதந்திரமான, சுயமரியாதைக்கான வாழ்க்கைக்காய் போராடிய உன்னை “மாமனிதன்” என்று என்றென்றும் பாராட்டும்.
ஏனென்றால் மரணம் என்பது தன் பெண்டு. தன் பிள்ளை, தன் குடும்பம் என்று வாழும் தற்குறிகளுக்குத்தான். உன்னைப்போன்ற மாமனிதர்களுக்கு மரணம் என்பது இல்லை. நீ இருந்தாலும், இல்லையென்றாலும், இனி, தன் இன விடுதலைக்காக உலகில் எந்த இனம், எங்கு போராடினாலும், அந்தப் போராட்டத்திற்கு அடையாளமாக இருக்கபோவது உன் முகம்தான்!
வாழ்க நீ எம்மான்!
கிளர்ச்சியாளன்
வழக்கறிஞர்-சேசுபாலன்
மற்றும் குழுமம்.
“தாய்த் தமிழ்நாடு"

மனித உரிமை மீறல்களையும் இனப்படுகொலைகலையும் ஏற்றுக்கொள்கிறவர்கள் கலைஞர்கள் இல்லை.
மனித உரிமை மீறல்களையும் இனப்படுகொலைகலையும் ஏற்றுக்கொள்கிறவர்கள் கலைஞர்கள் இல்லை. இவை அனைத்தையும் உலகிற்கு எடுத்து செல்பவர்கள் தான் உண்மையான மக்கள் கலைஞர்கள் குர்திசு இன மக்களின் விடுதலைக்காக போராடிய ஒச்சலான் கைது செய்யப்பட்டபோதும்,ஸ்பெயின் சர்வாதிகாரி பிராங்கோவுக்கு எதிராக போராடியதும் வியட்நாமிய யுத்தத்திற்கெதிராக குரல்கொடுத்ததும்,இலத்தீன அமெரிக்கப் புரட்சியில் கலந்து கொண்டதும்,கலைஞர்கள் தான் இன்னும் சொல்ல போனால் இட்லரின் செய்கைகளை தன்னுடைய திரைபடங்களின் மூலம் வெளிபடுத்தியவர் சார்லின் சாப்லின். இதே வழியில் வந்த கலைஞர்கள் இன்று ஒரு இனபடுகொலையை,மாபெரும் மனித அவலத்தை நடத்திய இலங்கை இனவெறி அதிபர் கொடுங்கோலன் ராஜபக்சவுக்கு துணை போக போகிறார்களா? இரண்டு லட்சம் மக்களை கொன்றொழித்தது மட்டுமில்லாமல் இன்றும் முள்வேலி முகாமிற்க்குள் பல ஆயிரக்கணக்கான தமிழர்களை அடைத்து வைத்து அடிப்படை வசதிகூட செய்து கொடுக்காமல் ,அங்கு தமிழ் பெண்களை இலங்கை ராணுவத்தினர் மூலம் பாலியியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கி இன்னும் பல்லாயிரக்கணக்கான மக்களை நிரந்தர ஊனமாக்கி மனித நேயம் உள்ள எந்த மனிதனும் ஏற்று கொள்ள முடியாத செயல்களை செய்த செய்து கொண்டு இருக்கிற இலங்கை இனவெறி அதிபர் கொடுங்கோலன் ராஜபக்ச தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களை தடுக்க எவ்வித முன்னெடுப்புகளையும் மேற் கொள்ளவில்லை என்பதையும் தொடர்ந்து போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங் களையும் ,போரின் இறுதி காலங்களில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு நீதி பெற்றுத் தரவேண்டிய தார்மீக பொறுப்பை UN நாடுகள் மற்றும் அவை யின் உறுப்பு நாடுகளுக்கு நிறை வேற்றாது விட்டன.என்று நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் கூறுகிறது இந்த தீர்ப்பை ராஜ பக்சே மதிக்க வில்லை ஏனென்றால் அவரோடு துணை போவதற்கு சில நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. 400க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய மீனவர்கள் இந்திய கடல் எல்கையில் இலங்கை கடற்படையினரால்சுட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள். கொல்லப்பட்ட மீனவர்களின் நீதிக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில் இந்திய அரசின் வழக்கறிஞர் “சர்வதேச கடல் எல்லையில் கொல்லப்பட்ட மீனவனுக்காக இந்தியா பொறுப்பேற்க முடியாது ” என்கிறார். அவர்கள் இந்திய எல்லையில்தான் கொல்லப்பட்டார்கள் என்பதற்கான ஆதாரம் அளிக்கப்பட்ட போது “ இதற்காக இலங்கையின் மீது போரா தொடுக்க முடியும்” என்றும் பதிலளிக்கிறார். மேலும் இந்திய தமிழக கடலோர எல்லை பகுதிகளில் இந்தியா எதிரியாக நினைக்கும் சீனா,பாகிஸ்தான் போன்ற நாடுகள் காலுன்றி விட்டன. இவர்கள் என்றுமே இலங்கையின் மிக நெருங்கிய நண்பர்கள். இப்படி எல்லாவிதத்திலும் இந்தியாவிற்கு எதிராக செயல் படும் இலங்கைக்கு எதற்கு பல மில்லியன் டாலர்களை பெற்றுத்தரும் சர்வதேச இந்தியத்திரைப்பட விழா ? என்பதுதான் கேள்வி சர்வதேச இந்தியத்திரைப்பட விழா துபாயில் நடந்த பொழுது துபாய்க்கு நேரடியாக கிடைத்த வருமானம் 19 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.இதனால் துபாயின் சுற்றுலாத்துறை வருமானம் ஒரு வாரத்தில் 30% அதிகரித்தது. இதே போன்றுதான் இங்கிலாந்தில் யார்க்ஷயரிலும் நடந்தது. அயர்லாந்தில் உள்ள டப்ளினில் இந்த விழா நடந்தால் அயர்லாந்திற்கு 800 மில்லியன் வர்த்தக வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.இத்தகைய காரணங்களினால்தான் தென்கொரியா, கனடா, அயர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இந்த விழாவை தங்கள் நாட்டில் நடத்துவதற்காக போட்டிபோடுகின்றன. இதே வேளையில் ராஜபக்சேவின் நல்வாழ்விற்காக கொழும்புவில் விழா நடத்தத் துடிக்கும் இந்திய அரசாங்கமும், அதிகார வர்க்கமும் தமிழ்மக்களையும் தமிழகமக்களின் உயிரை உண்ர்வை துச்சமாக மதிக்கிறார்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)