காலம் காலமாக நாம செய்து வந்த தொழிற்துறைகள் எல்லாமே யுத்தத்தோட அடிபட்டுப் போயிட்டுது. நாங்கள் எங்கட இடங்களையெல்லாம் விட்டு போய் இப்ப இங்க திரும்பி வந்து இருக்கம். எங்களுக்கு அரசாங்கம் எல்லா வசதியலையும் செய்து தாறன் எண்டுதான் சொல்லுறாங்க. அதை நம்பி நாம வந்தம் ஆனா யுத்தம் ஓஞ்சாப்புறகு கூட எங்ட வாழ்வு இப்பிடித்தான் சீரழியும் எண்டா
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
திங்கள், 3 மே, 2010
தற்பொழுது நாட்டின் எதிரி பிரபாகரன் அல்ல அரசாங்கமே!
தொழிலாளர் தினமான நேற்று கம்பல் பார்க் மைதானத்தில் இடம்பெற்ற மேதின மக்கள் விடுதலை முன்னணியின் ஒன்று கூடலில் கலந்து கெண்டு பேசிய லால் காந்தா, நாம் இந்த மே தின அணிவகுப்பை நடத்துகின்ற இந்த வேளையில் போர் முடிவுக்கு வந்து விட்டது. அரசாங்கம் ஒன்றும் நம் கண் முன் உள்ளது. தற்போது நாட்டில் உள்ள தொழிலாளர்கள் நேரடியாக ராஜபக்சவினது அரசை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளோம். இப்பொழுது மக்களின் எதிரி பிரபாகரன் அல்ல. இலங்கை அரசாங்கம் தான். உழைக்கும் தொழிலாளர்களுக்கான பிரச்சினைகளை தீர்க்கும்படி அரசை வலியுறுத்தும் போராட்டம் இந்த மே தினத்திலிருந்து துவக்கப்படும் என சோசலிஸ தொழிலாளர் சங்சத்தின் அமைப்பாளர் M.D. லால் காந்த தொழிலாளர்களின் மே தின அணிவகுப்பின் கலந்து கொண்டு பேசுகையில் தெரிவித்தார்.
ஈழ அகதிகளை மீள அழைக்க சிறிலங்கா முயற்சிக்கிறதா?
இலங்கைத் தீவில் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த போரின் காரணமாக இடம்பெயர்ந்து அகதிகளாக இந்தியாவில் வசிக்கும் ஈழத்தமிழர்கள் நாடு திரும்புவதற்கான ஏதுநிலை அதிகரித்திருப்பதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. என்றவாறு அரச தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, வன்னிப் பகுதியினது நிலைமைகள் படிப்படியாக மேம்பட்டு வருவதையடுத்து போரின் காரணமாக இந்தியாவிற்கு அகதிகளாகச் சென்ற இந்த மக்கள் மீளவும் தங்களது ஊர்களுக்குத் திரும்பும் நிலை தோன்றும் என அரசாங்கம் நம்புகிறதாம்.
அதிகார துஸ்பிரயோக குற்றச்சாட்டு
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண மேயர் யோகேஸ்வரி அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபடுவதாக யாழ் மாநகர சபை எதிர்க்கட்சியும் யாழ் வர்த்தக சங்கம் உள்ளிட்ட பொதுமக்கள் அமைப்புக்களும் குற்றஞ் சாட்டியுள்ளன. யாழ். பிரதான சாலையில் புத்தர் சிலையை நிறுவுவதற்கும் யாழ் பொது நூலக சிற்றுண்டிச் சாலையின் நிர்வாகத்தை தென்னிலங்கை சிங்களவிரடம் ஒப்படைப்பதற்கும் அவர் இணங்கியதாகவே இந்தக் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன என யாழ்ப்பாணத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், யாழ் குடாநாட்டு சைவ கலாசார அமைப்புக்கள் எவ்வளவோ எதிர்ப்புத் தெரிவித்தபோதும், புகழ்பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு அண்மையில், யாழ்ப்பாண இராச்சியத்தின் இறுதித் தமிழ் மன்னன் சங்கிலியனின் மாளிகை அமைந்திருந்த வளாகத்தினுள் நட்சத்திர விடுதி ஒன்றை நிறுவுவதற்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மேயர் யோகேஸ்வரி பற்குணம் அவர்கள் அனுமதி வழங்கியுள்ளார். அதேவேளை, சிங்கள வர்த்தகர்கள் யாழ் குடாநாட்டில் சட்டவிரோதமாக வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எதிராகவும் யாழ்ப்பாண வர்த்தக ஒன்றியம் தமது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
படைச்சிப்பாய் ஒருவர் தீமூட்டி தற்கொலை
தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இடம்பெற்ற போரில் அங்கவீனற்ற இராணுவச் சிப்பாயொருவர் தனக்குத் தானே மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீமூட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று பதுளை, மடுல்சீமை என்ற இடத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: நாட்டின் யுத்த சூழ்நிலையின் போது கடமையாற்றிய இந்த இராணுவ சிப்பாய், மோதல் சம்பவமொன்றில் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார், சிகிச்சையின் போது அவருடைய பாதிக்கப்பட்ட காலொன்று அகற்றப்பட்டது. அங்கவீனரான மேற்படி நபர் மருத்துவமனையிலிருந்து வெளியேறி வீட்டிற்கு வந்ததையடுத்து, வீட்டிலேயே முடங்கி வாழ வேண்டி நிலையேற்றபட்டது. சம்பவ தினம் வீட்டில் யாரும் இல்லாத வேளையில் தனக்குத் தானே மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீமூட்டிக் கொண்டார். இதனையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அயலவர்கள் தீயை அணைத்ததுடன் உடனடியாக அவரை பதுளை அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு வந்து அனுமதித்தனர். ஆனாலும் அவரது உயிர் ஏற்கனவே பிந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. மடுல்சீமையைச் சேர்ந்த ஆர்.எம். சோமரட்ன என்ற 29 வயது நிரம்பிய அங்கவீன முற்ற இராணுவ சிப்பாயே மேற்படி மரணமானவராவார். இச்சம்பவம் தொடர்பில் மடுல்சீமை பொலிஸார் தீவிர புலன்விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஞாயிறு, 2 மே, 2010
தமிழீழத் தமிழச்சி!
தமிழீழத் தமிழச்சி என்பதால் என் தாயும் விதவை என் சகோதரியும் விதவை என் நண்பியும் விதவையே.....! அன்று கிருசாந்தியை புதைத்த போது வாய் பொத்தியிருந்தாய் நேற்று தர்சினியை எரித்த போது கண் மூடியிருந்தாய் உனது பலதடவை அறியாமையினால் இன்று எம்மின தமிழ்ப் பெண்கள் இப்ப எம்மோடு இல்லை....! எங்கள் மிஞ்சியிருக்கும் கண்மணிகளை தமிழகத்துக்குள் ஒழித்து வைத்தால் – அங்கையும் கருணாநிதியின் மோப்ப நாய்கள் பெண்ணாய் பிறந்த எமக்கு ஈழத் தமிழச்சியாக வாழ....???
தாயுமான எமது தலைவன் .............................
சோதனைக்காலங்களில் எடுக்கும் முடிவுகளே சாதனைகளாகிறது என மார்டின் லூத்தர் சொல்வார். நமக்கான போராட்ட வடிவம் கூட, இப்போது நாம் எடுக்கும் முடிவுகளில் தீர்மானிக்கப்பட இருக்கிறது.
தீவட்டிகளோடு இரவில் செஞ்சேனை......
தீவட்டிகளோடு இரவில் செஞ்சேனை நெடும்பயணத்திற்குத் தயாராகிறது ஆயிரக்கணக்கில் நதிகளும் மலைகளுமாய் நடந்து தடைகளை எளிதில் கடந்தனர். மலைமுகட்டிலிருந்து பாம்புகள் போல் சீற்றலைகளோடு ஐந்து அருவிகள் கீழிறங்கி விழுகின்றன. மலையின் மச்சமாய் கோபுரம்போல் டாம்பீகமாய் உமெங் மலைச்சிகரங்கள் செங்குத்தான மலைகளின் மீது வெப்ப மேகங்கள் படர்கின்றன. அலையலையாய் தங்க மணல் விழும், இரும்புச் சங்கிலிப் பாலத்தின் கண்களின் வழியே தாது நதி குளிர்ச்சியாய் வழிந்தோடுகிறது. ‘மின்’ தொடர் மலைகளின் மீது பல மைல்கள் பனிபடர்ந்து உடையலங்காரம் நடக்கிறது. பெரிதாய் சிரித்தவாறு எங்கள் செஞ்சேனை வீரர்கள் இவற்றை எளிதாய்க் கடந்து ஏகினர் காண். -தோழர் மாவோ (1940) எமது இனிய உறவுகளே! மீண்டும் ஒருமுறை இந்த கவிதையை வாசியுங்கள்.
தியாகி திலிபனின் கனவை நனவாக்க எழு -மே 02
தியாகி திலிபன் அன்று கூறியதைபோல தமிழீழம்தான் தமிழ் மக்களுக்கு உண்மையான விடிவினைப் பெற்று தரும் ஆகவே தாயகத்தில் அவதியுறும் எம் உறவுகளை எம் நெஞ்சிலிருத்தி.. எமது தேசியத்தலைவரின் வழிகாட்டுதல்களைத் துணைகொண்டு தெளிவு பெறுங்கள். தெளிவுபெற்று உறவு, நட்பு, தனிமனித உணர்வுகளுக்கு இடம் கொடுக்காமல் தேசத்தின் விடிவு ஒன்றையே நோக்காக கொண்டு அனைத்து முயல்வுகளிலும் எண்ணித்தெளிந்து செயற்பட்டு நாளை தவறாமல் புலத்தில் வாழும் எல்லாத் தமிழ் மக்களும் நாடு கடந்த அரசாங்கத்திற்க்கான வாக்குப் பதிவினை செய்து, உங்கள் சரியான பிரதிநிதிகளை தெரிவு செய்யுங்கள். 'எந்தப்பலத்திலும் ஒருபலவீனம் இருக்கும். அதனைத் தேடிக்கண்டுபிடித்து, அதற்கேற்ற விதத்தில் துணிகரமான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்தான் எங்களுடைய வெற்றியே தங்கியிருக்கின்றது. அசுரபலங்கொண்ட கோலியாத்தை ஒரு சிறுவன் வெற்றிகொண்டது இவ்விதம்தான்." மேதகு வே. பிரபாகரன்
தமிழ் முஸ்லிம் உறவுகளே கவனம்!!
இலங்கையில் தமிழ் முஸ்லிம் உறவில் விரிசல்களை ஏற்படுத்தும் சதி ஒன்று அங்கு இடம்பெறத் தயாராகிக்கொண்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி கிடைத்துள்ளது. குறிப்பாகக் கிழக்கைக் குறிவைத்து இந்த சதி அரங்கேற இருப்பதாகவும் நம்பப்படுகின்றது. கிழக்கில் ஒரு தமிழ் முஸ்லிம் இனக்கலவரத்தை ஏற்படுத்தும் நகர்வுகள் இரகசியமாக மேற்கொள்ளப்படுகின்றதாக தகவல்கள் கசிந்துள்ளன.
புதிய கண்டுபிடிப்பு! எடப்பனுக்கு பிரதி அமைச்சர் பதவி கொடுத்த ஞானோதயமா?!
வவுனியா நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களும் அகதிமுகாம்களிலிருந்து மீள்குடியேற்றப்பட்ட மக்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதை தான் நேரடியாக அவதானித்ததாகவும் அந்த மக்களும் தம்மிடம் இது குறித்துத் தமது அதிருப்தியை வெளியிட்டதாகவும் ஒட்டுக்கட்சி ஒன்றின் முக்கியஸ்தர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

















