இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
திங்கள், 10 மே, 2010
நாடுகடந்த அரசுக்கு தெரிவான 272 தமிழர்களும் தேடப்படுவோர் பட்டியலில்!
நாடு கடந்த அரசு அமைப்பதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடாத்தப்பட்ட தேர்தலில் போட்டியிட்டு தெரிவான 272பேரும் தேடப்படும் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கனடா, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ், டென்மார்க், நோர்வே, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் நடாத்தப்பட்ட தேர்தலில் மேற்படி 272பேரும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இந் நாடுகடந்த தமிழீழ அரசை ஏற்கமுடியாது என்று தெரிவித்துள்ள அரசு, இவர்கள் குறித்த விபரங்களை புலனாய்வு பிரிவினர் சேகரித்துள்ளதாகவும், இலங்கைக்குள் வருவதற்கு தெரிவு செய்யப்பட்ட எவரும் அனுமதிக்க படமாட்டார்கள் என்றும் அரசு அறிவித்துள்ளது.
அன்னை !
தமிழீழப் போராட்டத்தில் நெருப்பாய் எரிந்து பகைவனை அழித்த போராளிகள் உண்டு. அதேபோல எரி குண்டின் நெருப்பில் எரிந்துபோன அப்பாவிகளும் உண்டு. இந்த இரண்டுக்கும் அப்பால் நெருப்பையே எரித்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தால் இருவர் இருக்கிறார்கள் ஒருவர் தியாகி திலீபன் மற்றவர் அன்னை பூபதி. திலீபன் போராளி ! அன்னை பூபதி ஒரு தாய் !
கூட்டமைப்புக்கு ஒரு உணர்வுள்ள தமிழனின் பகிரங்க மடல்.
புலி எதிர்ப்பின் பேரால் அரங்கேறும் அக்கிரமங்கள் .........
வன்முறை என்பது இப்போ அரசியல் ஆகி அந்த அரசியல் இராணுவ மயமாகி அந்த மையத்தில் இருந்து எழுகின்ற அனைத்துமே புலி எதிர்ப்பாகி மனிதத்தைப் பற்றி பேசுவதும் புலியாகி - பின் மாயமாகி - சடலமாக வெளித்தெரிகிறது. மனித உரிமை பற்றிப் பேசாதே. உணவு இல்லை என்றால் உண்பதனைத் தவிர். மாறாக உணவு இல்லை எனக் கேளாதே. ஊடகசுதந்திரம் பற்றிப் பேசாதே சொல்பவற்றை அப்படியே கேள் இல்லாவிடின்
வன்னிப் பேரவலத்தின் நினைவுகள் ஒவ்வொருவர் நெஞ்சையும் எரிய வைத்துக் கொண்டிருக்க, அதன் ஓராண்டு முடிவடையும் காலத்துள் நாம் வாழ்வது என்பது தாங்க முடியாத சோகமானது. பேரினவாத சிங்கள அரசு தனது ஆயுத பலத்தை தமிழ்மக்கள் மீது மூர்க்கத்தனமாக மேற்கொண்டதால் எம் மக்கள் கடந்த வருட மே மாதத்தில் வகைதொகையின்றிக் கொன்று குவிக்கப்பட்டனர். மே மாதம் 18ஆம் திகதி என்பது, உலகம் கண் விழித்துப் பார்த்திருக்க, ஈழத் தமிழினத்தின் மீது மனிதகுலம் ஏற்க முடியாத கொடூரத்தைதச் சிங்கள தேசம் ஏவி, அதன் உச்சத்தைத் தொட்ட இருண்ட நாள். மே மாதம் 18ஆம் திகதியை உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் போர்க் குற்றவியல் நாளாக கடைப்பிடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வீரம் நிறைந்த மறவர்களின் தியாகத்தாலும் தீரத்தாலும் முப்பதாண்டுகளுக்கும் மேலாக விரிக்கப்பட்ட விடுதலைப் பயணம் அவர்களின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட நிலையில், பின்னடைவைச் சந்திக்க நேர்ந்தது துயரமானது. அகதிகளாக்கப்பட்டவர்களின் அவலம் தொடர்கிறது. புனர்வாழ்வு என்ற பெயரில் கைதான போராளிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. தமிழரின் தாயக பூமியில் சிங்களக் குடியேற்றம் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. வன்னிப் பெருநிலம் இராணுவ மையமாக மாற்றப்படுகின்றது. இத்தனை கொடுமைகளையும், கண்டும் காணாதது போல சர்வதேசம் கண்மூடிப் பூனையாக நடிக்கிறது. எங்கள் மண்ணுக்காக மடிந்த மக்களையும் மாவீரர்களையும் மறந்துவிட முடியாது. அவர்களின் நினைவுகளை நெஞ்சில் இருத்தி அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை தொடர்வது காலத்தின் கடமை.
முளையிலேயே கிள்ளி விட வேண்டும் என்ற முனைப்புடன் சிங்கள தேசம்!
"கொடியும் கோசமும் தமிழர் உரிமையை பெற்றுத் தருமா"? தமிழீழ தேசியக் கொடியை நாங்கள் மறந்து விடுவது சரியானதா என்ற உணர்வுபூர்வமான கேள்வியொன்று இந்த இடத்தில் எழுவதும் இயல்பானதே. தமிழீழ இராணுவமான விடுதலைப் புலிகள் இயக்கமோ, ஈகைக்கும் தியாகத்திற்கும் இலக்கணம் வகுத்த மாவீரர்களின் மகத்தான செயற்பாடுகளோ எதுவித சர்வதேச உதவியுமின்றி தமிழீழ தாயகத்தில் நிலவிய நிர்வாகக் கட்டமைப்புகளோ எந்தவொரு தமிழனதும் நினைவுகளிலிருந்தும் அழிக்கப்படக் கூடியதல்ல. உலகில் கடைசித் தமிழன் உயிருடன் இருக்கும் வரை இந்த நினைவுகளும் வீரம் செறிந்த வரலாறும் நினைவில் இருக்கத் தான் போகிறது. ஆனாலும்
இலங்கைத் தமிழருக்கு உகந்த தீர்வை வழங்குவதற்கு இந்தியா தனது முழுப்பலத்தையும் பயன்படுத்தவில்லை "றோ' வின் முன்னாள் தலைவர்
இலங்கைத் தமிழர்களுக் கான உரிய, உகந்த தீர்வை வழங்குவதற்கு இந்தியா தனது முழுமையான பலத்தையும் பயன்படுத்தவில்லை என்று இந்திய அமைதிப்படையின் புலானாய்வுப் பிரிவின் றோவின் முன்னாள் தலைவர் கேணல் ஹரிஹரன் புட்டுக்காட்டியுள்ளார்.
சிவில் படையினர் இளைஞர் மீது தாக்குதல்:மன்னாரில் சம்பவம்
மன்னார் பஸ்தரிப்பு நிலையத்துக்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரை சிவிலில் வந்த காவற் படையினர் மூவர் இன்று இரவு 8.30 மணியளவில் தாக்கியுள்ளனர். மேற்படி 25 வயதான இளைஞர் உணவகத்தில் உணவு அருந்தி விட்டு வெளியில் நின்று கொண்டிருந்த போது, வாகனம் ஒன்றில் சிவிலில் வந்த படையினர் மூவருக்கும் இளைஞருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து படையினரில் ஒருவர் தன்னிடம் இருந்த கண்ணாடி போத்தல் ஒன்றினால் இளைஞரின் முகத்தில் தாக்கியுள்ளார். இந்நிலையில் அவ்விடத்தில் பதற்றநிலை உருவானதுடன் பொலிஸாரும், இராணுவப் படையினரும் கூடி பதற்ற நிலையை வழமைக்குக் கொண்டு வந்துள்ளனர். இதன் பின் தாக்குதலுக்கு உள்ளான இளைஞரை அவர்கள் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். தாக்குதல் நடத்திய சிவில் படையினர் மூவரும் மதுபோதையில் இருந்துள்ளதாகத் தெரியவருகின்றது.
முள்ளிவாய்க்கால்1-18
முள்ளிவாய்க்கால் முடிவல்ல.. 1. சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்று சொன்ன மகாகவியே எப்படி? கற்களினாலா? கபால ஓடுகளாலா? 2. டாங்கிகள் கிளறிப் போட்ட சேற்றில் கண்களைத் திறந்தபடி செத்துக் கிடந்த குழந்தையின் விழியில் நீலவானம் சிறுத்துச் சிறுத்து போர் விமானமாய்... இரத...்தம் உறைந்த உதடுகளின் நெளிவில் ஏளனம் 3. சிட்னியில் சிறுவர் பள்ளியில் ‘இலங்கையின் தலை நகரம் எது?’ வினாவுக்கு விடை எழுதியது புலம் பெயர் தமிழ்க்குழந்தை ‘கொழுப்பு’ 4. முகம் சிவந்தார் ஹிட்லர் மகிந்த ராஜபக்ஷேவைப் பார்த்து “ஆஸ்ட்விட்ஸ் புக்கன் வால்டு என ஆங்காங்கே கொலைக்களம் வைத்திருந்தேன் யூதர்களுக்கு... நீங்கள் என்னை வென்று விட்டீர்கள் மூன்றில் ஒரு பங்கு நாட்டையே அல்லவா படு கொலைக் கூடமாக்கிவிட்டீர்கள் விட்டுத் தருகிறேன் “பிரபஞ்சக் கொலைகாரர்” பட்டம் உங்களவர்களுக்கே” 5. டொரான்டோவில் புலம் பெயர் மக்கள் ஊர்வலம் சிறுவன் கையில் தட்டி “உயிர்த்தெழுவோம் உயிர்த்தெழுவோம்” பக்கத்தில் சென்று கேட்டேன் “தலைவர் உயிரோடிருக்கிறாரா”? சுட்டும் விழிச் சுடரோடு சுடச் சுட வந்தது பதில்: “தெரியாது உயிரோடு இருக்கிறார்கள் துரோகிகள்”. 6. பசப்பு வார்த்தைகள் பயனற்ற வார்த்தைகள் பச்சோந்தி வார்த்தைகள் கசப்பு வார்த்தைகள் கண்ணீர் வார்த்தைகள் கர்ஜனை வார்த்தைகள் சுனாமியாய்த் தாக்க ஈழத்துக் கடற்கரையில் மேலும் ஒதுங்கின தமிழர் பிணங்கள்! 7. குண்டுபட்ட தழும்பு கிளிநொச்சிச் பனை உச்சியில் தாய்க்கிளி குஞ்சுக்கிளிக்குச் சொல்லிற்று : “சிறகு முளைத்ததும் பறக்கலாம் கண்ணே எல்லாத் திசையிலும்... வேண்டாம் வடக்குத் திசை அது நமக்கு எமன் திசை”. 8. கதவு தட்டிப் பாற்சோறு காட்டி வெற்றியைக் கொண்டாடச் சாப்பிடச் சொன்னான் சிங்கள இளைஞன் கதவு திறந்த தமிழர் பார்வையில் தெரிந்தது பாற்சோறு அல்ல இரத்தம் கசியும் பலிச்சோறு. 9. யாரோ பத்திரிக்கை ஆசிரியராம் தமிழ் நாட்டிலிருந்தாம் அகதிகள் முகாமில் ஆர்வத்தோடு கேட்டாராம் “இனி யார் உங்களைப் பாத்துப்பா”? கிழிந்த லுங்கியை இறுக்கிய பெரியவர் சொன்னார் “எங்கள் உழைப்பு”. 10. முள்ளி வாய்க்காலில் பாதி கரையிலும் பாதி நீரிலுமாகக் கிடந்தது விடுதலைப்போர் வீரனின் உடல் முகம் மண்ணை முத்தமிட்டபடி கால் பிடிவாதமாக வடக்குத் திசையை எற்றியபடி. 11. பெய்ஜிங்கிலிருந்து கொழும்புக்கு வந்தது வாழ்த்துச் செய்தி! “திட்டமிட்டு வெற்றிபெற்றுவிட்டீர்கள் நாங்கள் திபேத்தில் செய்தது போல” 12. கண்டியில் படுத்திருந்தார் புத்தர் கோரைப் பற்களுடன் சிங்கள பிக்குகள் ஊதுவத்தி கொளுத்தி வழிபடலாயினர் “புத்தம் சரணம் கச்சாமி தமிழர் மரணம் கச்சாமி” 13. இன்று துரோகிகள் ஓடி ஒளிக்கின்றனர் முப்பது நாடும் ஒன்றாய் செய்த தவறை மறைக்க தமிழனுக்கு தீர்வு கொடுப்பதுபோல் நடிக்கிறன நாட்களை நகர்த்தியபடி.. 14. தமிழகத்திலும், புலத்திலும் தலைவன் வருகைக்காக பாதை அமைக்கின்றன தாயக வடக்கிலும் கிழக்கிலும் புலியில்லா வாழ்வை தமிழ் உறவுகள் ஏற்க மறுக்க தொடங்கி விட்டனர் 15. உலக வல்லரசும், சிங்கள தேசமும் தமிழர்களை முட்டாளாக்க எடுத்த முயற்சியும் படுதோல்வியிலே தன் மானமுள்ள ஒவ்வொரு தமிழனும் தலைவனுடன் இணந்து தமிழீழம் நோக்கி நடக்க புறப்பட்டு விட்டான்!!! 16. ஏற்றுக் கொள்ள முடியாத கோத்தபாய கொக்கரிக்கிறார் பசீலும் பச்சையாக பேசுகிறான் ராஜபக்சாவும் சோனியாவும் கருணாநிதியை அழைத்து கற்ப்பூரம் காட்டுகிறான் இதில் சிங்கள சொறி நாய்களும் எலும்புக்காக அலையும் துரோகிகளும் தமிழர் அடையாளங்களை அழிக்கிறான்கள்... 17. முள்ளிவாய்க்காலோடு முடக்கி கிடந்த தமிழினம் முழு மூச்சோடு நிமிர்ந்து நிற்கிறது இனிமேலும் எவனும் கிட்ட நெருங்கி எம்மை அடக்க நினைப்பான என்ன?? 18. முள்ளிவாய்க்கால் ஆன்மாவொன்று .. சின்னத் தூக்கம் கொண்டோம் அன்றி எங்கள் தேகம் வாடியது இல்லை உங்கள் அண்ணன் தங்கை பிள்ளைகள் யாரும் கண்கள் முடியது இல்லை உள்ளே உயிராய் உள்ளோம் உள்ளோம் உங்கள் நினைவுடனே.. இங்கு வெல்லும்வரையும் வீசும் காற்றை உள்ளோம் உங்கள் அருகினிலே.. ஏறக் குறைய முப்பத்தி எண்ணாயிரம் மாவீரர்களையும், இரண்டு லட்சம் மக்களையும் எம் மண் சுமந்து கொண்டுதான் எமது விடுதலைப் போர் பெரும் விருட்சமாக விழுது விட்டு இன்று உலகம் முழுவதும் விரிந்து நிற்கிறது. உலகில் எந்த ஒரு விடுதலை இயக்கமும் காணத இழப்பை சந்திச்சு மீண்டும் நிமிந்து நிற்கிறது இதற்கு காரணம் முழுமையான அற்ப்பணிப்பும், கடின உழைப்பும்தான். ஆகவே உறவுகளே, உங்களுடைய தலைவர் உங்களுடதான் இருக்கிறார் அவரை முழுமையாக நம்புங்கள் அவர் நிச்சயம் எங்கள் எல்லாருடைய கனவு மெய்ப்பட வைப்பார். அந்தக் காலம் மிகவும் எமக்கு அருகாமையிலே உள்ளது. அது எங்களுடைய தலைவர் காலத்தில் அது அமையும். தமிழீழம் என்பது வெறும் எங்களுடைய உயிர் அல்ல, ஒவ்வொரு தமிழர்களதும் உயிராயுதம் நிச்சயம் எந்த ஒரு ஆக்கிரமிப்பு சக்திகளுக்கும் உயிராயுதம் அடிபணியாது அதுவைரை மாவீரர் வழி தொடர்ந்து எம் பணி முடிப்போம் என் உறுதி எடுத்துக் கொண்டு அடுத்த எமது விடுதலைப் போருக்கு எம்மை தயார் படுத்துத்திக் கொள்வோம்.
ஞாயிறு, 9 மே, 2010
தமிழீழத்தை மீட்டெடுப்போம் .......................
என் இனிய ஈழத்து புலம்பெயர் உறவுகளே! உங்களிடமிருந்து ஒரு விடையத்தை அறிந்து தெரிந்துகொள்ள நான் விரும்புகிறேன்!…
உயிரினும் மேலான ஈழப்போராட்டத்தை, பயங்கரவாதமாகச்சித்தரித்து, உலக அரங்கில் தமிழருக்கு அவப்பெயர் உண்டாவதற்கும். பெருத்த பின்னடைவு உயிர் அழிவுகளுக்கும் எடுகோலாகி, உலகம் முழுவதையும் திசைதிருப்பி பெருத்த பிரச்சாரம் செய்து, வரலாற்றில் மறக்க முடியா வடுவையும் “வலியையும்” ஏற்படுத்தி, ஜீரணிக்க முடியாத கொடுமையான சதியை, திட்டமிட்டு தமிழர் மீது கொட்டி மண் போட்டவர்கள் எவர்?… இலங்கையுடன் சேர்ந்து இந்தியா என்ற சுயநலவாதிகள் தானே போராட்டத்தை பயங்கரவாதமென உலக நாடுகள் தடை விதிக்கவேண்டுமென ஆரம்பப் புள்ளியைப்போட்டு தலைவிரித்துக்கொண்டு ஆடியது!.. எது நடந்திருந்தாலும் சர்வதேசத் தூதர்கள் இடைவிடாமல் தேசியத் தலைமையுடன் தொடர்ந்தும் இராசதந்திர தொடர்புகளில் பேசிக்கொண்டுதானே இருந்தனர், புலிகள் பயங்கரவாதிகள் என்றால் இது எப்படிசாத்தியமானது?, எதையும் நியாயமாகவும் நேர்மையாகவும் எடுத்துக்கொள்ளாமல், ‘கொள்ளிக்கட்டையாக’ கோடரிக்காம்பாக’ நின்று அழித்தொழிக்க முயன்றது! முயலுவது!, யார்? இந்தியாதானே!,
அன்னையர் தினம்.............மாவீரர்களை ஈன்றெடுத்து தமிழீழ விடுதலைக்காக அவர்களைப் போர்க்களம் அனுப்பி வைத்த தாய்மாருக்கு இன்று எனது வீரவணக்கமும் வாழ்த்துக்களும் உரித்தாகுக.
அம்மா… இச்சொல்லில் புதைந்துள்ள அர்த்தங்களும், தொணிகளும் ஆயிரமாயிரம்… அம்மாக்களின் மேன்மையை எடுத்துரைக்காத எந்த மனிதருமே உலகத்தில் இருப்பாரென கூறமுடியாது. உலக அளவில் அம்மாக்களைப் போற்றும் வகையில் கொண்டாடப்படும் அன்னையர் தினம் Mother’s Day ஏனைய சர்வதேச தினங்களைப் போல ஒரு குறித்த நாளில் கொண்டாடப்படுவதில்லை. பொதுவாக மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறன்று உலகில் அநேக நாடுகள் கொண்டாடினாலும்கூட, வேறும் சில நாடுகள் அதற்கு முன்போ அல்லது பின்போ கொண்டாடுகின்றன.
தமிழீழம் தமிழர்களின் கடமை !
வரலாற்றின் எந்தப்பக்கமும் மிக எளிதாக கடந்ததில்லை. அது பல்வேறு கடினத்தன்மைகளை உடைத்தெறிந்து உள்வாங்கி புதியவற்றை படைத்தளித்து பதிவு செய்கிறது. மார்க்ஸ் சொல்வதை போன்று, வார்க்க போராட்டத்தின் விளைவே வரலாறு. எந்த ஒரு வர்க்கமும் தனது விடுதலைக்கான போரில் தோல்வி கண்டதில்லை. காரணம் போராட்டம் என்பது ஏதோ ஒரு எல்லையை வகுத்து நடத்தப்படுவதில்லை. இந்த நாளிலிருந்து இந்த நாளுக்கு இதை முடித்துவிடலாம் என்று சொல்வதற்கு போராட்டம் கட்டடமல்ல. அது ஒரு இயக்கம். அதன் ஒவ்வொரு அசைவும் ஏங்கிக் கொண்டே இருக்கும். அந்த இயக்கத்திலே சருக்கல் ஏற்படலாம், சரிவு ஏற்படலாம், தோல்வி ஏற்படலாம், வெற்றி ஏற்படலாம், ஒன்றுமே இல்லாமல் அழித்து துடைத்தெறியப்படலாம். ஆனால்
தமிழ் உறவுகளே...
தமிழ் என்ற சொல்லை நாவில் பதித்து, தமிழீழ தாகத்தை நெஞ்சில் சுமக்கும் என் சகோதரர்களே வணக்கம்... வைகாசி 18 (mai 18) எம்மை நெருங்கிகொண்டு இருக்கிறது... மானம் உள்ளவன் மண்டியிட மாட்டன் என்று மண்ணில் விதைந்த எங்கள் மாவீர செல்வங்களையும், புலிகள் தான் தமிழர் , தமிழர் தான் புலிகள் என்று உடலை ஆயுதமாக்கி களத்தில் மடிந்த எங்கள் ரேத்த உறவுகளையும் எண்ணி கண்கள் கலங்கும் நாள்... இன்றே சபதம் எடுப்போம் : இந்த நாளில் தமிழன் விழ்ந்தான் என்று வரலாற்றில் எழுதப்படக்கூடாது... உலகத்தமிழன் விழித்தான், போராடி ஜெயித்தான் என்று எழுதப்படவேண்டும்!! போராளிகளான நாங்கள் மரணிக்கலாம், அனால் எங்கள் போடட்டத்தை மரணிக்க விடமாட்டோம்... இதுதான் இன்று ஒவ்வொரு தமிழனும் நேசில் சுமக்கும் இலச்சியம்...ஓய்ந்து கொண்டிருக்கும் எங்கள் தமிழ் உறவுகளை மீண்டும் தட்டி எழுப்புங்கள் ...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)















