இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பியதும் சட்ட விரோத ஆயுதக் குழுக்களிடம் இருந்து சகல ஆயுதங்களையும் களைய வேண்டும் என யாழ். மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி.யான விஜயகலா மகேஸ்வரன் நேற்று சபையில் தெரிவித்தார்.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
சனி, 12 ஜூன், 2010
வெள்ளி, 11 ஜூன், 2010
போராளி சுயந்தன்
09.01.1997 நடுநிசியைத் தாண்டிய அதிகாலை வேளை. ஆனையிரவு, பரந்தன் கூட்டுப்படைத் தளத்தினூடாக புலிகளின் அணிகள் நகர்ந்து கொண்டிருந்தன. அந்தத் தளத்தின் அமைவிடம் வலிந்த ஒரு தாக்குதலுக்குச் சாதகமற்ற பௌதீகச் சூழலைக் கொண்டிருந்தது. தரவைகள், உப்பு வெளிகள், சிறிய சிறிய உவர்நீர் நிலைகள் ஆகியவற்றைக் கொண்டிருந்தது அந்தச் சூழல், எனினும், முகாமின் முக்கியத்துவத்தை உணர்ந்த போராளிகள் அனைவரும் கண்களில் ஒரு வெறியுடனும், எங்கள் மண்ணை
கிழக்குப் பல்கலைக்கழக திருமலை வளாகத்தை சிங்களமயப்படுத்த அரசு முயற்சி
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தை சிங்களமயப்படுத்தும் முயற்சியில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது என முறைப்ப்பாடுகள் கிடைத்துள்ளன. திருகோணமலை வளாகத்தில் முகாமைத்துவ பீடம், பிரயோக விஞ்ஞான பீடம். சித்தமருத்துவ பீடம் ஆகிய மூன்று பீடங்கள் இருக்கின்றன.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் சிறிலங்காவின் போர்க் குற்றங்கள் குறித்த விவாதம்!
வன்னியில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின் போது சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்த விவாதம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 16ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
மீள்குடியேற்றத்தின் பின்னான நெருக்கடி......?!
எத்தனை முழக்கங்கள் எத்தனை அவலங்கள் எல்லாம் சுமந்த வன்னி வாழ்க்கையின் கொரூரத்தில் இருந்து மக்களால் மீண்டுகொள்ளவே முடியவில்லை. ஒவ்வொரு முறையும் வாக்குறுதிகள் வானைப் பிளப்பதாயே அமைகின்றன. எங்கு பார்த்தாலும் ஏதோ ஒரு அவலம் விதைந்தே கிடக்கிறது.
இந்த அவலத்தினை ஏற்படுத்தியவர்களே மீட்பர்களாகவும், அவதார புரிசர்களாகவும் தம்மைக் காட்டிக்கொள்ள அடிக்கடி வன்னியில் தலை நீட்டுகின்றார்கள்.
பலர் வாட... -கண்மணி
. இந்தியா ஒரு ஜனநாயக குடியரசு. இங்கு அடித்தள மக்களுக்கும் மேல்தட்டு மக்களுக்கும் பிரிவினை பேதம் ஏதும் கிடையாது. சிங்கமும் ஆடுகளும் ஒரே குளத்தில் நீர் அருந்தும். ஆடுகளின் குரல் சத்தத்தைக் கேட்டு சிங்கங்களும் புல் தின்ன பழகும். இது இந்திய நாடு. சமத்துவம் நிறைந்த ஒரு மண்ணில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நீங்கள் நம்பாவிட்டால் அதற்கு நாம் பொறுப்பேற்க முடியாது. இங்கு சட்டங்கள் சாதாரண நீதிமன்றம் தொடங்கி, உச்சநீதிமன்றம்வரை எல்லோருக்கும் சமமாகத்தான் இருக்கும். இது நீங்கள் நம்பித்தான் தீர வேண்டும். ஆயிரம் ரூபாய் களவாடிய ஆறுமுகமும், ஆயிரம் கோடி களவாடும் அம்பானியும், ஒரே நீதிமன்றத்தில்தான் விசாரிக்கப்படுவார்கள்.
டக்ளஸ் மீதான வழக்கு ?
டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யுமாறு தமிழ் நாடு மக்கள் உரிமை பேரவையினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கினை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகளான எம் வை இக்பால் ரி. எஸ் சிவஞானம் ஆகியோர் வழக்கினை எதிர்வரும் 14ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
சீனாவுக்கு இந்தியாவுக்கும் இடையில் இலங்கை ஆடும் நாடகம்.............
சீனா,இந்தியா ஆகிய நாடுகளுடனான இலங்கையின் நட்பு இறுதியில் கண்ணீ ரில்தான் முடியும். புத்திசாலித்தனமாகச் செயற்படமுடியும் என்று இலங்கை நினைக்கிறது.இது மாபெரும் தவறாகும். ஆனால் இது பிழையான நினைப்பு. இலங்கை அதன் சுயாட்சியை இழக்க நேரும்.
இந்தியாவுக்கு தலையையும், சீனாவுக்கு வாலையும் காட்டும் இச்செயற்பாடு மிகவும் முட்டாள்தனமானது. இந்தியாவை மீறி சீனாவுடன் நட்பைப் பேணுவது ஆபத்தானது.
இந்தியாவுக்கு தலையையும், சீனாவுக்கு வாலையும் காட்டும் இச்செயற்பாடு மிகவும் முட்டாள்தனமானது. இந்தியாவை மீறி சீனாவுடன் நட்பைப் பேணுவது ஆபத்தானது.
வியாழன், 10 ஜூன், 2010
ராஜபக்சவுடனான சந்திப்பு நம்பிக்கையை தருகிறது: கனிமொழி, திருப்தி அளிக்கவில்லை: டி.ஆர்.பாலு
இலங்கை அதிபர் ராஜபக்சேவை, டெல்லியில் திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக, காங்கிரஸ்,. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி.க்கள் சந்தித்துப் பேசினார்கள்.
லெப்.கேணல்.சாந்தகுமாரி/ஜெயசுதா-சூசையப்பு மொறாயஸ் ரமணி மன்னார்

எல்லோருடனும் சிரித்துக் கதைக்கின்ற சாந்தகுமாரி இன்று எங்களோடு இல்லை. ஆனால் எதிரியைச் சிதறடிக்கின்ற சாந்தகுமாரிகள் எங்களோடேயே களமுனையில் நிற்கிறார்கள். சாந்தகுமாரியின் பெயரில் தயாரிக்கப்பட்ட கண்ணி வெடிகள் எதிரிகளின் கால்களோடு கதைபேசிக் கொண்டிருக்கின்றன.
புயலுக்கு முந்திய அமைதியோடு புலிகள் இருந்த காலப்பகுதியது. எதிரியானவன் எமது மண்ணை ஆக்கிரமிக்கும் நோக்குடன் ஜெயசிக்குறு, ரணகோச, வோட்டஜெற் என பெயரிட்டபடி இராணுவ நடவடிக்கைகளை மாறி மாறி மேற்கொண்டு எமது வளங்களை அழிவுக்குள்ளாக்கியதுடன், எம்மக்களையும் பெரிதும் துன்பப்படுத்திக் கொண்டிருந்தான். எவரும் எதிர்பாராத பெரு வெள்ளமாக ஓயாத அலைகள்-03 சுழன்றடித்தது.
சிறிலங்கா அரச படைகள் புரிந்த போர்க் குற்றங்கள் ....!?
“எந்தவொரு அரசாங்கமோ, அல்லது நீதி நிர்வாகக் கட்டமைப்போ குற்றவாளிகளை சட்டத்திலிருந்து காப்பாற்ற முடியாது. அவர்கள் ஒரு நாட்டின் உயர் இராணுவ அதிகாரிகளாக, அல்லது அந்நாட்டின் உயர்மட்ட அரசியல் தலைவர்களது உத்தரவினை நிறைவேற்றும் அரச அதிகாரிகளாக இருப்பினும் அவர்கள் புரிந்த குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும்”.
இவ்வாறு குறிப்பிட்டிருப்பவர் வேறு யாருமல்ல,
மஹிந்த இணக்கம்?!
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு இசைவாக, அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுத் தீர்வு ஒன்று வகுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியுள்ளாராம்.
தமிழீழம் என்று சொல்லப் பழகு -கண்மணி
தமிழ்நாட்டிலே ஒட்டுமொத்த தமிழர்களும் எழுச்சியோடு தமது உணர்வுகளை பதிவு செய்து உலக போர் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்ட இன அழிப்பு கொலைகாரன் மகிந்தாவை இந்தியாவிற்குள் அனுமதிக்க வேண்டாம் என்று கூறியவையெல்லாம் புறந்தள்ளப்பட்டு, மகிந்தா சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கப்பட்டார். தமிழின அழிப்புக்குத் துணைப்போன இந்தியாவின் அரசத் தலைவர்கள் மகிந்தாவோடு குலாவினார்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)














