புதன், 16 ஜூன், 2010

சுமை....


தூக்கமுடியாத பாரங்களும்....சுமைதான்.
தூங்கமுடியாத துன்பங்களும்....சுமைதான்.
இரு சுமைகளும்....கண்ணீர்க்கதையாய்க் கரைகின்றது.
இது தமிழரின்...
வாழ்வில் ஒட்டிப்பிறந்ததா....?
ஒட்டுண்ணியாய் திணிக்கப்பட்டதா....?

பெண் என்னும் பூகம்பம்.....

"பெண்ணிடமும் மனிதம் இருக்கின்றது! பாலியல் வேறுபாட்டிற்குப் புறம்பாக, ஆண்மைக்கும் பெண்மைக்கும் அப்பாலாக, இந்த மனிதத்தை இனம் கண்டு கௌரவிக்குமாறு, பெண்ணினம் ஆணினத்திடம் அன்புக்கரம் நீட்டுகின்றது. ஆழமான புரிந்துணர்வுடன் ஆணினம் இந்த அன்புக்கரத்தைப் பற்றிக் கொள்ளும்போதுதான் ஆண்-பெண் சமத்துவம் சாத்தியமாகும்." -
-வேலுப்பிள்ளை பிரபாகரன்

கடற்கரும்புலி மேஜர் தமிழ்மங்கை/நைற்றிங்கேள் (சத்தியவாணி துரைராசா) பூநகரி, மன்னார்.


நாலடி நடந்தாலே நகங்களுக்குச் சாயம் பூசும் வளமுள்ள செந்நிற மண்பூமி. விமான ஓடுதளம் மட்டுமன்றி பலாலிப் பகுதி முழுதுமே சிறிலங்காப் படையினரின் பிடியில் சிக்கி விட்டிருந்தது. 1990ஆம் ஆண்டு காலப் பகுதியில் பலாலிப் படைத்தளத்தின் பெரும்பகுதியை விடுதலைப்புலிகள் மகளிர் படையணி காவல் செய்தது. இந்திய இராணுவத்திடம் போர்ப் பயிற்சியை மூன்றாண்டுகள் பயின்றிருந்த, படையணியின் மூத்த உறுப்பினர்களும் அப்போதுதான் பயிற்சி முடித்து வந்த புதியவர்களுமாக துடிப்புமிக்க இளையவர்களால் எமது காவல் அரண்கள் எப்போதுமே விழிப்பாக இருந்தன.

மீண்டும் மீண்டும் எழும்!

செந்தணல் எரியும் தேசத்தின் புதல்வர்களே
செய்தி ஒன்று வரும் என்று காத்திருக்கும்
கானகத்தின் நண்பர்களே!
நிழல் எது நிஜம் எது தெரியாது
தினம் தினம் வீசும்
அறிக்கை வாளில் வெந்து நோகும்
புலம் பெயர் உறவுகளே!


சொந்தங்கள் நாங்கள் நெஞ்சத்தில்
ஆயிரம் கனதியோடு பேசுகின்றோம்
பெற்ற பிள்ளைகள் காணாமல் போனாலும்
விட்டு வந்து ஊரை துறந்து நாம்
இறத்தலே ஆகினும்...!
நாம் நம் சொந்த மண்னை அடகு வையோம்


சூரியத்தலைவனின் செந்தழல்
விழிகாண விழிதிறந்து கிடக்கி்ன்றோம்
மெய்யேன போனாலும் பொய்யேன ஆனாலும்
தலைவன் அவன் ஒருவனே நம்பிக்கை!


புது வழி செய்ய நீர் எந்த களம் புகிலும்
நலம் காணப்போவது என்னவோ
தலைவன் நாமத்தில் தான்


வெற்றியோ கொண்ட எம் தலைவன்
வீழ்ந்ததாய் எண்ணிடல் ஆகாது
வேங்கை அவன் மீள்வது நிச்சயம்


பொய்களால் ஆளும்
பேதலிகளுக்காய் பேதை கொள்ளல்
வேண்டாம் எமக்கு உறவுகளே!


அறிக்கை போரால் அழிந்தவர் நாம்
ஆயுதப்போரால் எழுந்தவர் நாம்
மீண்டும் நாம் அறிக்கைக்குள்
அள்ளுண்டு போகமல் இருந்திடல்
அத்தனைக்கும் நன்மை செய்திடும்


புலி பதுங்குமோ, பாயுமோ
புன்னகைத்த படி கதை பேசும்
புல்லர்கள் கதை முடித்து
புறனானூற்றை படித்திட
புலத்திலும் நிலத்தினும் எழுவோம்!


புலி பாய்ந்ததா படுத்ததா
கதைகளை விடுவோம்
புலியின் பெயரால் தான் நாம்
பூமியை ஆள்வது நிச்சயம்


புன்னகைத்த படி நான்
புளுகாங்கிதம் கொள்கின்றேன்
மீண்டும் மீண்டும் எழும்!
எம் தேசம்..,!

வீரப் போராளிகளே! வாழ்த்துகிறோம் -கண்மணி

பலமுறை நாம் கூறுகிறோம், மொழி என்பது நமது அடையாளம் என. மொழி குறித்த ஒரு பார்வை, அதன் உள்ளடக்கம், புறத்தன்மைகள் இவைகள் ஒரு இனத்தின் உயிர்நாடி என்பதை மறுக்கமுடியாது. செம்மொழி மாநாடு நடத்தும் இந்த காலத்தில் நாம் இதை அழுத்தமாக பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறோம். அடக்குமுறைகள், அநியாயங்கள், அட்டூழியங்கள் அனைத்தையும் தாண்டி, மொழி வாழ வேண்டும் என்று யார் மனதில் அக்கறையும் ஆவேசமும் நிலைக்கொண்டிருக்கிறதோ,

யுத்தம் முடிவுற்ற கையோடு சமாதானம் மலர்ந்து விட்டது என்பது ?????!!!!!!!!..........

பிரதானமாக இந்தியா, பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடமிருந்து இராணுவ ரீதியிலும் வேறு வழிகளிலும் தாராளமாகப் பெற்றுக்கொண்ட உதவிகளுடனே சென்ற வருடம் மே மாதம் தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டும் என்பதற்கில்லை.

சர்வதேசத்தை ஏமாற்றக் கருணாநிதியின் அடுத்த திருவிளையாடல்

வடகிழக்கு நிலைமைகளை நேரடியாக வந்து பாருங்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விடுத்த அழைப்பினை ஏற்று தமிழ் நாட்டின் 21 எம்பிக்கள் இலங்கை வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவர்கள் வடகிழக்கின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்வர் என தெரியவருகின்றது. இவர்களில் கடந்த காலங்களில் புலிகளுக்கு ஆதாரவாக குரல்கொடுத்த சிலரும் அடங்குவதாக அறியமுடிகின்றது

சர்வதேசம் இலங்கையினை வற்புறுத்தக்கூடாது

சர்வதேசம் இலங்கையினை எந்த விதத்திலும் நிர்ப்பந்திக்க கூடாது. வற்புறுத்தக்கூடாது என்று அகாஷி கூறியுள்ளார்.2002 சமாதான காலத்தில் இருந்து விடுதலைப்புலிகள் அமைப்பினை சர்வதேச ரீதியாக முடக்குவதற்கும் சமாதான பேச்சுவார்த்தையினை குழப்புவதற்கும் காரணமாக செயற்பட்ட இரு நண்பர்கள் கொழும்பில் சந்தித்தனர். ஜப்பானின் சமாதான ஏற்பாட்டாளரும் மீள்குடியேற்றம், மீள் நிர்மாணத்துறை பிரதிநிதியுமான யசூசி அகாசி - வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் இடையில் இன்று முக்கிய சந்திப்பு இடம்பெற்றது. இதன் போது ஊடகவியலாலர்களுக்கு கருத்து தெரிவித்த அகாஷி இவ்வாறு கூறியுள்ளார்.

செவ்வாய், 15 ஜூன், 2010

ஈழத்து அகதியாய்...
எதுவுமே
தெரியவில்லை நண்பனே


கனவிலும் கேட்க்கும்
உறவுகள் ஓப்பாரி
குருதி அறியா

ஓர் பிரசவத்திற்கான இறுதி வலியில்


தேசத்து ஆன்மா துடிக்கிறது.


நீண்ட நேரம் உயிர்ப்பின் வாசலில்


தங்கிவிட முடியாது.


உந்தும் வலு உறுதியாக வேண்டும்.

கப்டன் அறிவு

தூரத்தே கேட்ட சத்தம் வரவர அதிகரித்துக் கொண்டிருந்தது. அமைதியான அன்றைய சூழலை இடை விடாத அந்த இரைச்சல் ஓசை பயங்கரமானதாக மாற்றியது. அவர்களுக்கு அது வழமையானது தான். எனினும், அன்று ஏதோ ஓர் அசாதாரணமான சூழல் இருப்பதாக அவர்களுக்குப்பட்டது.


எதிரி விளக்குவைத்தகுளம்வரை

நாம் திட்டமிட்டதைவிட, நாம் கற்பனை செய்ததை விட, நாம் களமாடியதைவிட, நாம் கதைப்பதைவிட மிக விரைவாகவே............???!!!!!!

தமிழீழ மக்களின் வாழ்க்கை போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை சந்திக்காத கடும் துயர்களை எல்லாம் அவர்கள் சந்தித்து விட்டார்கள். இன்று உலக நாடுகள் தமிழீழ மக்களின் வாழ்வியல் நிலைக் குறித்து தமது நிலைகளை அறிவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். உலகம் முழுக்க பரந்து வாழும் தமிழின உறவுகள் வெளிப்படையான தமது ஆதரவை அச்சமின்றி பதிவு செய்ய துவங்கியிருக்கிறார்கள்.

தமிழர் எதிர்ப்பு நிலையை மத்திய அரசு கைவிட வேண்டும்.பா.ஜ.க.

இலங்கைத் தமிழர் எதிர்ப்பு நிலையை மத்திய அரசு கைவிட வேண்டும். இதனை மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று பா.ஜ.க. கேட்டுக் கொண்டுள்ளது.


இது குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இந்தியா தமிழ் மக்களை ஏமாற்றி வந்துள்ளமையே மிகுதியாகியுள்ளது.......................

தமிழ் மக்கள் மீது குண்டுமழை பொழிந்தபோது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இந்தியாவுக்கு தமிழர் பிரச்சினையைத் தீர்த்துவைக்கும் எண்ணம் கிடையாது.
இதை உணர்ந்துகொள்ளாத தமிழ்த் தலைவர்கள் இந்தியாவையே நம்பிக்கொண்டிருப்பதும் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருவதும் நாகரிகமானதல்ல என்று ஐக்கியதேசியக் கட்சியின் கொழும்பு மாவட்டத் தலைவரும் எம்.பி.யுமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ரவி கருணாநாயக்க எம்.பி. தலைமையிலான அரசியல் குழு ஒன்று நேற்று திங்கட்கிழமை வன்னிக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தது. இது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார்.


இது குறித்து அவர் மேலும் கூறுகையில்:
வடக்கை பொறுத்த வரையில் வன்னி மக்களின் நிலைமைகள் துக்ககரமானவை. இந்த நிலைமைகளுக்கு மத்தியில் இந்தியாவின் தலையீட்டை வலியுறுத்தியும் இனவாதப் போக்குடனான கருத்துக்களை வெளியிட்டும் வருகின்ற ஒரு சில அரசியல் தலைமைகளால் நாட்டில் பிரச்சினைகள் அதிகரிப்பதற்கு வழிவகுக்கின்றன.


தேசிய பிரச்சினை உருப்பெற்ற காலம் முதல் இதுவரையில் இந்திய தலையீடுகள் செய்துள்ள நன்மையான காரியங்கள் என்ன வென்பதை உணரமுடிகின்றதா? அல்லது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டதா என்பதெல்லாம் கேள்விக்குரியவை.

இராஜதந்திரிகள் இலங்கைக்கு விஜயம்

இலங்கை அரசாங்கம் போரில் வெற்றிபெற்று ஒரு வருடம் கழிந்த நிலையில் அந்த நாடு எதிர்கொள்கின்ற சவால்களை விவாதிக்கும் வகையில் இந்த வாரத்தில் இலங்கைக்கு பல வெளிநாட்டு மூத்த இராஜதந்திரிகள் விஜயம் செய்கிறார்கள்.

ஐ.எஸ்.ஐ.க்கும் தலிபான்களுக்குமிடையில் நேரடித் தொடர்பு!

பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கும் ஆப்கானிஸ்தானிலுள்ள தலிபான்களுக்கும் இடையில் நேரடித் தொடர்பு இருப்பதற்கான பலமான ஆதாரங்கள் இருப்பதாக புதிய தகவலொன்று தெரிவிக்கின்றது. முன்னர் நினைத்ததை விடவும் பாரியளவில் நிதியுதவி பயிற்சி மற்றும் புகலிடம் போன்றவற்றை ஐ.எஸ்.ஐ. தலிபான்களுக்கு வழங்கி வருவதாக இவ்வறிக்கை தெரிவித்துள்ளது.