புதன், 30 ஜூன், 2010

லெப்டினன்ட் கேணல் ஜீவன்(பிள்ளையான் சந்திரமோகன் கதிரவெளி, மட்டக்களப்பு. மட்டு - அம்பாறை மாவட்ட துணைத் தளபதி )

கையெட்டும் தூரமே கண்ணுக்குத் துலங்காத மைசொட்டும் இரவு. உடலெங்கும் உரிமையோடு கை போட்டிருக்கும் முள் செடிகள். கொழும்பு ரோட் (மட்டு. - கொழும்பு நெடுஞ்சாலை) அண்மித்து விட்டதால் காலணிகள் கைக்கு ஏறுகின்றன. ரைபிள் சிலிங்குகள் சலசலக்காது இறுக்கிப் பிடிக்கப்படுகின்றன. ஆபத்தைத் தவிர்க்கும் அளவிற்கு அவசியமான இடைவெளி விட்டு முன்னே செல்பவரின் சிறு அரவத்தைக் கொண்டு திசையறிந்து செல்வதே ஒரு கலை. தென் ஈழக் காடுகளிலே இந்தக் காலைதான் அவசியமான அரிச்சுவடி.

தமிழீழக் கோரிக்கையை அழிக்க முடியாது!

தமிழீழக் கோரிக்கையை தமிழ் மக்களின் மனங்களில் இருந்து அழிக்க முடியாது எனவும், அது என்றும் உயிர்வாழ்ந்து கொண்டு இருப்பதால், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டியது அவசியம் எனவும், டுபாயில் இருந்து வெளியாகும் கல்ப் நியூஸ் (Gulf News) பத்திரிகை இன்றைய தனது தனது அபிப்பிராயப் பத்தியில் தெரிவித்துள்ளது.

வன்னியில் பேரழிவு யுத்தம் நடந்த காலப்பகுதியில் ..................?

தொடர்ச்சியா ஈழ விசயத்தில் மற்றவர்களை விட்டுவிட்டு கருணாநிதியை கடுமையாக திட்டுவதற்க்கு கருணாநிதியின் மீதான எந்த காழ்ப்புணர்ச்சியோ சொந்த இதர எரிச்சல்களோ இல்லை, ஈழ விசயத்தில் கருணாநிதியால் ஏதாவது செய்திருக்க இயலும் என்ற ஒரே காரணம், அதை பதவிக்காகவும் ஊழல் பணத்துக்காகவும் தன் குடும்பத்துக்காகவும் ஈழக்குருதியை குடித்து விட்டார் என்பதே அத்தனை கோபங்களுக்கும் முதல் காரணம்...

தமிழ்நாடு நடிகர்கள் .............

பற்றி எரிந்துகொண்டிருக்கிறது ஈழம், ஆனால் இங்குள்ள தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள் எல்லாம் அதில் குளிர்காய்கிறார்கள். இணையத்தில் நாம் எழுதாவிட்டால் இதைப்பற்றி யாரும் மூச்சுவிட மாட்டார்கள். தமிழ் வார இதழ்களில் விகடன்,குமுதம் மற்றும் நக்கீரனை தவிர வேறு யாரும் எழதவில்லை நாளிதழ்களில் தந்தி, மாலைமலர் தவிர வேறு எதுவும் எழுதவில்லை.

இ‌ஸ்லா‌மிய நாடுக‌ளி‌ல் அமை‌தி ‌நிலவ வே‌ண்டு‌ம்!

பால‌ஸ்‌‌தீன‌ம், இ‌ஸ்ரே‌ல் இடையே ‌நீடி‌த்து வரு‌ம் மோதலு‌‌க்கு ‌நிர‌ந்தர ‌தீ‌ர்வு கா‌ண்பத‌ற்கு அமெ‌ரி‌க்கா, சவு‌தி அரே‌பியா இணை‌ந்து முய‌ற்‌‌சிகளை தொடர உ‌ள்ளதாக அ‌திப‌ர் ஒபாமா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். ஜி 20 உறு‌ப்பு நாடுக‌‌ள் கூ‌ட்ட‌த்த‌ி‌ல் ப‌ங்கே‌ற்க வா‌‌ஷி‌ங்ட‌ன் செ‌ன்று‌ள்ள சவு‌தி அரே‌பியா ம‌ன்ன‌ர் அ‌ப்து‌ல்லா, அமெ‌ரி‌க்க அ‌திப‌ர் ஒபாமாவை ச‌ந்‌தி‌த்து பே‌ச்சுவா‌ர்‌த்தை நட‌த்‌‌‌‌தினா‌ர்.

இணக்கப்பட்டின் பிரகாரமே நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது !

யுத்தம் முடிவடைந்திருந்த நிலையில் இலங்கை வந்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்குமிடையேயான இணக்கப்பாட்டினடிப்படையிலேயே ஐ.நா செயலாளர் நாயகத்திற்கான ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சோழியன் குடும்பி சும்மாவா ஆடும் ...

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவிக்காக போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொள்வதற்கு பகீரத முயற்சிகளை மேற்கொண்டுவரும் டக்ளஸ் தேவானந்தா எந்தக்கட்சியில் போட்டியிடவுள்ளார் என்பதனை இதுவரை வெளியிடவில்லை

இந்த தத்துவம் கூறியவர் .........திரு.கமலக்கண்ணன்

கேபி என்றழைக்கப்படுகின்ற குமரன் பத்மநாதன் நினைத்தால் கூட விடுதலை புலிகளின் நிதியினை இலங்கைக்குள் கொண்டு வரமுடியாது. எனவே சர்வதேச புலம்பெயர் தமிழர்கள் நேரடியாகவேனும் வன்னி மக்களுக்கு உதவ முன் வரவேண்டும். இதற்கான ஏற்பாடுகளை இலங்கை அரசு ஒழுங்கு படுத்திக்கொடுக்கும் என்று மீளக்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

செவ்வாய், 29 ஜூன், 2010

இந்த நாட்டில் கடைசி தேசப்பற்றாளன் இருக்கும் வரையில் பான் கீ மூனின் குழுவினர் இங்கு கால்பதிக்க இடமளிக்க போவதில்லை-ஹெல உறுமய

உயிரைக் கொடுத்தேனும் பான் கீ மூனின் மூவர் கொண்ட குழுவை நாட்டுக்குள் காலடி வைக்க விடமாட்டோம். இந்த நாட்டின் கடைசி தேசப் பற்றாளன் இருக்கும் வரை பான் கீ மூனின் எண்ணம் ஈடேறாது.


இவ்வாறு ஜாதிக ஹெல உறுமயவின் சட்ட ஆலோசகர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான தலைமையகத்திற்கு முன்பாக நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேஜர் மாறன்(சின்னத்துரை சுகுமாரன் - வவுனிக்குளம் )

பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்தை இறுதிவரை எதிர்த்து நின்று போராடி வீர வரலாறுபடைத்த தமிழ் மன்னன் பண்டாரவன்னியனால் பெருமைப்படுத்தப்பட்ட மண் வன்னிப் பெருநிலப்பரப்பு. காடுகளும், குளங்களும், விளைநிலங்களும், காட்டு விலங்குகளும், மந்தைகளும் இம்மண்ணின் செல்வங்கள். இத்தகையதொரு விவசாயக் கிராமமான வவுனிக்குளம்தான் சுகுமாரன் என்ற இயற்பெயரோடு மேஜர் மாறன் பிறந்த ஊர்.

களத்திலும் புலத்திலும் ஒருமித்த அரசியல் பாதையூடாக செயலூக்கம் பெறவேண்டும்: கேணல் ஹரிஹரன்

“ஈழத்தமிழர்களின் உரிமைப் பிரச்சினையை இலங்கையிலும் மற்றும் சர்வதேச அளவிலும் அரசியல் பாதையில் முன்வைக்க வேண்டும். அதற்கு ஒருங்கிணைந்த செயல்பாட்டில் ஈழத்தமிழர்கள் பங்குபெற வழி செய்ய வேண்டும். நடைமுறையில் இயங்கக்கூடிய அடிப்படை செயல்பாட்டை. உருவாக்கி அதை ஒரு குரலுடன் எடுத்து முன்வைக்க தமிழ் தலைவர்கள் தயாராகவேண்டும். புலம்பெயர்ந்த தமிழர்கள் கடந்த காலத்தில் தாங்கள் நடந்து கொண்ட வழிமுறைகளை மனக்கண்ணாடியில் பார்த்து புதிய செயலாக்கங்களை உருவாக்க வேண்டும். பழையன கழித்துப் புதியன புகுத்தும் நேரம் வந்துவிட்டது.”

53 வது படைப்பிரிவின் கட்டளையிடும் தளபதி- புதிய இராணுவ பேச்சாளர்

இதுவரை இராணுவப் பேச்சாளராக பதவி வகித்த மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க இராணுவத்தின் பிரதான தொலைத் தொடர்பு அதிகாரியாகவும், சமிக்ஞை அதிகாரியாகவும், இராணுவ மருத்துவ பிரிவின் பொறுப்பாளராகவும் தொடர்ந்து சேவையாற்றுவார்.

சந்திப்பு?!

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் அவசிய, அவசரப் பிரச்சினைகள் குறித்து தமிழ்க் கட்சிகள் ஒருமித்துக் குரல் கொடுக்க வேண்டும் என்ற நோக்குடன் தமிழ்க்கட் சிகளின் கூட்டம் ஒன்று நாளை மறுதினம் முதலாம் திகதி நடைபெறவுள்ளது.

புலம்பெயர் மக்களை தம்மிடம் மண்டியிட வைப்பதே சிறீலங்கா அரசின் நோக்கம் -மருத்துவர் வேலாயுதபிள்ளை அருட்குமார்

செல்வராசா பத்மநாதனை சிறீலங்காவின் படைப் புலனாய்வாளர்களே இயக்கி வருவதாகவும், அவரூடாக புலம்பெயர் மக்களை தம்மிடம் மண்டியிட வைப்பதே சிறீலங்கா அரசின் நோக்கம் என, அண்மையில் கே.பியுடன் சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கொட்டாபய ராஜபக்சவைச் சந்தித்து, பிரித்தானியா திரும்பியுள்ள மருத்துவர் வேலாயுதபிள்ளை அருட்குமார் அம்பலப்படுத்தியுள்ளார்.

இந்தியா எங்களோடு இருந்தால் போதும்.....!

தமிழர்கள் எதிராக நடந்த போர்க் குற்றங்கள் குறித்து உலக நாடுகளும், ஐ.நா.வுன் என்ன கூறுகின்றன என்பது குறித்து தனக்கு கவலையேதும் இல்லை என்று கூறியுள்ள சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச, இந்தியாவும், அண்டை நாடுகளும் தங்களோடு இருந்தால் போதுமானது என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவில் 10 ரஷ்ய உளவாளிகள் கைது!

அமெரிக்காவில் சாதாரண மக்களைப் போல தங்கி உளவு பார்த்து வந்த 10 ரஷ்யர்களை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பத்து பேரும் கடந்த சில ஆண்டுகளாகஅமெரிக்காவில், சாதாரணர்கள் போல வசித்து வந்துள்ளனர்.