புதன், 14 ஜூலை, 2010

ஆர்ப்பாட்டம் நடத்திய 300 இற்கும் அதிகமானவர்கள் சென்னையில் கைது,,

சென்னையில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகத்தை மூடக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா பாண்டியன், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழநெடுமாறன், பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன், புதிய பார்வை இதுழாசிரியர் மா நடராசன் உட்பட ஏராளமானோரை தமிழ் நாடு பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.

ஜெனிவாவில் ஐ.நா வின் தலைமைச் செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

போர்க்குற்றங்கள் தொடர்பாகவும் ஐ.நா வின் செயலாளர் நாயகத்திற்கு அலோசனை வழங்கவென நியமிக்கப்பட்டுள்ள மூவர் கொண்ட குழுவினை கலைக்குமாறு கோரி நேற்று ஜெனிவாவில் ஐ.நா வின் தலைமைச் செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

புரூடஸ்கள் தேசமாக மாறும் தமிழீழம்!

உலகத் தமிழர்களின் கனவு தேசமாக விளங்கிய தமிழீழம் இப்போது ப்ரூடஸ்கள் தேசமாக மாறி வருகின்றது. ஈழத் தமிழர்களின் சுதந்திர வேள்வியின் வெப்பம் தாங்க முடியாமல் எங்கெங்கோ, தொலை தூரங்களில் ஒதுங்கி நின்ற அந்த நம்பிக்கைத் துரோகிகள் இப்போது புலிகளின் தேசத்தில் குதித்து மகிழ்கிறார்கள்.

அக்கராயன்குளம் நீர் விநியோகம் படையினரால் தடை!

கிளிநொச்சி மாவட்டத்தில் அக்கராயன்குளம் பகுதியில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கான நீர் விநியோகம், இராணுவத்தினரால் தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பகுதியின் பிரதான நீர் வழங்கும் இடமாக அக்கராயன்குளம் காணப்படுகிறது.

2ம் லெப். பூபாலினி(ஆனந்தகுமாரி.கோபாலபிள்ளை வேலணை)

2ம் லெப்ரினட் பூபாலினி, அவளிடம் எதிலும் ஒரு நேர்த்தி ஒழுங்குமுறை இருக்கும். எதனையும் முடிந்தவரை முழுமையாக, செம்மையாக,சலிப்பின்றிச் செய்யும் தன்மைகள் அவளிடம் அதிகம்.

ஜூலை 14- பிரெஞ்சுப் புரட்சி


1789பாரிஸ் மக்கள் பாஸ்டில் சிறையைத் தகர்த்து சிறைக் கைதிகளை விடுவித்து இராணுவத் தளவாடங்களைக் கைப்பற்றினர்.

"போராட்டமே பொதுமக்களின் திருவிழா" - லெனின்.


ஒவ்வொரு எழுச்சிக்கும், மக்களின் போராட்டத்திற்கும், புரட்சிக்கும் தூண்டுதலாக,

கண்டம் விட்டு கண்டம் பறக்கும் போர் விமானம் !

கண்டம் விட்டு கண்டம் சென்று எதிரி இலக்குகளை மிகச் சரியாகத் தாக்கும், எதிரி நாட்டு போர் விமானங்களை வழியில் மறித்துத் தாக்கும் திறன் கொண்ட உலகின் முதல் விமானியில்லா போர் விமானத்தை பிரிட்டன் தயாரித்துள்ளது.

சூடான் அதிபர் மீது இனப் படுகொலை குற்றச்சாட்டு பதிவு?

சூடான் நாட்டில் டாபர் பகுதியில் பழங்குடியின மலைவாழ் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடி வருகின்றனர். ஆனால், ஆட்சியில் உள்ள அரேபிய அரசு அவர்களது போராட்டத்தை கடந்த 10 ஆண்டுகளாக கொடூரமான முறையில் அடக்கி வருகிறது.

வடக்கு கிழக்கில் நிரந்தர இராணுவ முகாம்கள் நிறுவப்படும்...

எந்தவொரு வெளிநாடுகளில் பயிற்சிகள் பெற்ற குழுவையும் இலங்கைக்குள் ஊடுருவ இடமளிக்கப்போவதில்லை என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். அதற்கு அமைவாக நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாதுகாப்பு கட்டமைப்பை மேம்படுத்தி புலனாய்வு துறை வலுப்படுத்தப்படும். அத்தோடு வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நிரந்தர இராணுவ முகாம்களும் அமைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்க போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகத்தில்!

அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று மூன்று நாள் சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டு திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. "யு.எஸ்.எஸ். பேர்ள் ஹாபர்" என்ற பாரிய போர்க்கப்பலே நேற்று திருமலைத் துறைமுகத்தை வந்தடைந்தது என்று கடற்படையின் பேச்சாளர் கெப்டன் அதுல செனரத் தெரிவித்தார்.

செவ்வாய், 13 ஜூலை, 2010

மனிதாபிமானம் அற்ற இந்திய அரசிடம் போய் மனித உரிமை பற்றி பேச முடியுமா ஈழ தமிழனால் ........(மேற்கு வங்க மெதினியூர் மாவட்டத்தில்16.6.2010 அன்று காவல் படையினர் நடத்திய படுகொலையில் கொல்லப்பட்ட பெண் போராளி)

உயிர்களைக் கடந்து
சுட்டுச்சாய்த்த சடலங்களை
குப்பைகளைப் பொறுக்குவதைப் போன்றே
பொறுக்கி இருக்கவேண்டும் அவர்கள்
தாகத்தின் தீராத வலியில் துடித்த
அவளுயிர்ப்பழத்தை கால்களில் நசுக்கியிருக்கலாம்
மூச்சுக்காற்றின் கடைசி சுவாசத்தி
எச்சில் துப்பி அடைத்திருக்கலாம்
வேட்டையின் வெறியடக்க
அவளின் சுரப்பிகளைப் பொசுக்கியிருக்கலாம்ரத்தத்தில் புதைந்த அவள் கண்களில்புதைந்த வானம் குருதிச் சிவப்பாகி யிருக்கலாம்

கைது செய்வதற்கு முன் சீமான் பத்திரிக்கை நிருபர்களுக்கு அழித்த பேட்டியில்- படை திரட்டி இலங்கை செல்ல தயார்; அனுமதிக்கத் தயாரா?:

தமிழர்களை காக்க படை திரட்டி இலங்கை செல்ல தாங்கள் தயாராக உள்ளதாகவும், இலங்கைக்கு பகடியம் பேசிய முதலமைச்சர் கருணாநிதி அதனை தடுத்து நிறுத்தாமல் இருக்க தயாரா என்றும் நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் கேள்வி விடுத்துள்ளார்.

பிறவிப் பயங்கரவாதி யாருமில்லை. அவன் உருவாகிறான், உருவாக்கப்படுகிறான், எப்படி?

9/11 பயங்கரவாதத் தாக்குதல் வன்மையான கண்டனத்துக்குரியது என்பதில் ஐயமில்லை.அப்பாவி மக்களைக் கண்மூடித்தனமாகச் சுட்டுத் தள்ளும் கொடுஞ் செயலை - சுட்டுத் தள்ளுகிறவர்களின் அரசியல் நோக்கம் எதுவானாலும் - கிஞ்சிற்றும் நியாயப்படுத்த முடியாது, கூடாது. அப்பாவிகளைச் சுட்டுத் தள்ளுவதன் மூலம்தான் ஓர் அரசியலை வளர்க்க முடியும் என்றால் அந்த அரசியல் முற்போக்கானதாகவோ மக்கள் சார்பானதாகவோ இருக்க வழியில்லை.

இரண்டாம் லெப்டினென்ட் மாலதி

எமது சமூகத்தில் வேரூன்றியிருந்த, பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்துக்களை - 2ஆம் லெப். மாலதி 17 ஆண்டுகளுக்கு முன் பொய்யாக்கினாள்.
பெண்ணினால் எல்லாம் முடியும் என்று செய்து காட்டினாள். அந்நிய ஆக்கிரமிப்பில் எமது தேசம் துவண்டிருந்த போது வீறு கொண்டெழுந்தாள். பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவதைப் பார்த்துக் கொதித்தாள்.

ஆயுத கடத்தல் மோதலில் இரு இராணுவம் பலி...

திருகோணமலை ,கந்தளாய், பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த சிங்கள இராணுவ படையினர் துப்பாக்கி பிரயோகம் செய்ததில் இரு இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர் ஒரு சிப்பாய் உட்பட ஒரு பொதுமகன் காயமடைந்துள்ளனர்.
காட்டுப்பகுதியில் இருந்த இராணுவ களஞ்சியத்தில் இராணுவகுழுவினர்ஆயுதங்களை

வைத்தியரை கைது செய்ய கோரி தாதியர்கள் வீதி மறியல்போராட்டம்

வேலனை பொது வைத்தியசாலையில் பணியாற்றிய குடும்பநல மருத்துவ தாதியான சரவணை தர்சிகா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து கண்டன ஊர்வலம் ஒன்றை இன்று மருத்துவ தாதியர்கள் நடத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.