திங்கள், 23 ஆகஸ்ட், 2010

தமிழரிற்கு இழைத்த கொடுமையை அனுபவிக்கும்.........பொன்சேகா

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிட்டதற்காக அரசாங்கம் தன்னைப் பழிவாங்கப் பார்க்கிறதுஇலங்கையின் நீதித்துறை மீது தனக்கு நம்பிக்கையில்லையென்றாலும், தன் மீது விதிக்கப்பட்டுள்ள தீர்ப்பை எதிர்த்து தான் மேல்முறையீடுகள் செய்யப்போவதாக அவர் தெரிவித்தார்.


"எங்கு போய் முறையிட்டாலும் எனக்கு நீதி கிடைக்கப்போவதில்லை என்பது எனக்கு நூறு சதவீதம் தெரியும். அது பற்றி எங்களுக்கு கவலையில்லை. எது வந்தாலும் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்", என்றார் அவர்

யாழ். மருத்துவ பீட மாணவன் சுன்னாகத்தில் சடலமாக மீட்பு!

யாழ். மருத்துவபீடத்தின் 3ஆம் ஆண்டு மாணவனான சாரங்கன் சுன்னாகத்தில் கயிற்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இவர் பயிற்சிக்காக யாழ். போதனா வைத்தியசாலையின் 7ஆம் இலக்க நோயாளர் விடுதியில் கடமையாற்றி வருகின்றார்.


குறித்த மாணவன் தாயாருடன் வாழ்ந்து வந்ததாகவும் தாயார் கடந்த சில நாள்களுக்கு முன்னர் வெளிநாட்டில் கல்வி கற்ற மற்றுமொரு சகோதரனின் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றுள்ள நிலையில் இவர் தனித்து வீட்டில் தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

ஒரு இனத்தின் வாழ்வாதாரப் போராட்டம் இன்னொருவரின் பொழுதுபோக்கு........

அறுபதாண்டுகளுக்கும் மேலாக ஈழத்தில் நடந்துவரும் தமிழ் உரிமைப் போர் கடும் சவால்களை எதிர்நோக்கியிருக்கிறது. இப்போரில் நிகழ்ந்த படுகொலைகளும், இன்றும் இலங்கையின் திரைமறைவில் தொடரும் சுமார் 12000 போராளிகளின் சிறைவைப்பு, அவர்கள் மீதான வன்கொடுமைகள், மக்களின் நிலங்களை அரசு பறித்தல், சிங்களப் பேரினவாத அரசியல் ஆகியன உலகின் உணர்வுள்ள தமிழர்களின் ...மனங்களைச் சொல்லொணாத வேதனையில் ஆழ்த்தி வருவதைக் காண்கிறோம். இந்த வேதனைக்கு மருந்திட வேண்டிய உலகம் மௌனத்தில் ஆழ்ந்திருக்க, ஒரு விளையாட்டு நிறுவனம் வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சுவதுபோன்ற செயலொன்றைச் செய்திருக்கிறது.


2ம் லெப். சுரேந்தினி

ஜனந்தினி-பரமானந்தம் - இளவாலை வலிகாமத்தின் வடபகுதியில் அமைந்த அழகிய கிராமம்தான் இளவாலை. விவசாயிகளின் கை வண்ணத்ததில் பசுமை குறையாது செழிப்புடன் விளங்கியது. தமிழீழ சுதந்திரப் போராட்டத்திற்கு பெரும் உறுதுணையாக பல ஆண், பெண் போராளிகளைத் தந்து புகழ் பூத்த மண்ணது. அந்த மண்ணில் பிறந்ததாலோ என்னவோ ஜனந்தினியும் அச்சம் சிறிதும் இன்றி ஆயுதம் கரத்தில் ஏந்தி களம் பல கண்டு வீரச்சாவை புகழுடன் தழுவிக் கொணடவள்.

அனுருத்த ரத்வத்தை மலேசியாவிற்கான புதிய தூதர்.

சந்திரிக்காவின் மாமனும் முன் நாள் பாதுகாப்பு துணை அமைச்சரும் பிரபல தமிழின படுகொலைகளின் சூத்திரதாரியுமான அனுருத்த ரத்வத்தை அவர்கள் மலேசியாவிற்கான புதிய தூதராக விரைவில் செல்கின்றார்.

இதற்கான பேச்சுவார்த்தை அண்மையில் மஹிந்தவினால் மேற்கொள்ளப்பட்டது.

தமிழா, நீ பேசுவது தமிழா?.........

உலகின் மூலையெங்கும் தமிழ் இருக்கிறது. தமிழனின் மூளையில் மட்டும்தான் தமிழ் இல்லை' என தமிழ்க் கவிஞர் ஒருவர் கவலைப்பட்டதுபோல் இன்று தமிழர்களின் நாவில் தமிழ் இல்லை. தமிழன் உச்சரிக்கும் வார்த்தைகளைச் சலித்தெடுத்தால் பத்துக்கு இரண்டு தமிழ்ச் சொற்கள் மிஞ்சுமா என்று தெரியவில்லை.


ஒன்றுபடு ஒன்றுபடு ..........

மாவீரர் நாமென்று

மகுடங்கள் வேண்டா
புகழுரைகள் வேண்டா
புதுச் சோடனைகள் வேண்டா
வண்ணமலர் வேண்டா
வாசனைகள் வேண்டா
நெய்விளக்கு வேண்டா
நெக்குருகும் பாடல்தணும் வேண்டா
ஒன்றுமட்டும் வேண்டுகிறோம் உந்தனிடம்
ஒன்றுபடு ஒன்றுபடு ..........

'எக்னாமிஸ்ட்' சஞ்சிகை பறிமுதல்


இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ‘எக்னாமிஸ்ட்’சஞ்சிகை சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்த சஞ்சிகையின் இறக்குமதியாளரும் பிரசுரிப்பாளருமான விஜித யாப்பா தெரிவித்துள்ளார்

சனி, 21 ஆகஸ்ட், 2010

கப்டன் திவாகினி

கப்டன் திவாகினி தொலைத் தொடர்பாளராய் பணி ஆரம்பித்து நிர்வாகப் பணியும் இடையிடையே போர்களப்பணியும் ஆற்றியவள். அலைகள் விரிந்து ஓயாத அலை மூன்று வீச்சம் கொண்ட தருணத்தில் ஆட்பற்றாக்குறை நிவர்த்தியாய் தருணத்திற்குப் பொருத்தமாய் எல்.எம்.ஜி (L.M.G) கனரக இயக்குநராய் வேவுப்புலியாய் வேண்டிய விதமாய் அடையாளப்பட்டுக் கொண்டவள்.

தோல் இருக்க சுளை விழுங்கும்.........

தோல் இருக்க சுளை விழுங்கும் வடிவம். இது என்ன என்று நீங்கள் கேட்கலாம். இதுபற்றி விளங்கப்படுத்துவதை விட, இலங்கை தமிழர் விடயத்தில் அரசின் நடவடிக்கை தான் இது என்று கூறுவது விளக்கம் பெறுவதற்குச் சுலபமாக இருக்கும். அதாவது, தமிழ் மக்கள் கடந்த காலங்களில் பட்டதுன்ப, துயரம் ஏராளம். அந்த துயரம் இன் னமும் முடிந்தபாடாக இல்லை.


சிறைக் கைதி பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலி

கைதிகள் இருவர் தப்பிச் செல்ல முற்பட்டதாகவும், சிறைச்சாலை பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும் .கண்டி, போகம்பரை சிறைச்சாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் சிறைச்சாலைகள் ஆணையாளர் வீ.ஆர். டி சில்வா தெரிவித்துள்ளார்.

மனித நேய நடைப் பயணம் செய்த சிவந்தன் நேற்று இலக்கையடைந்தார்

ஈழத் தமிழர்களுக்கு நீதிவேண்டும் என்று கோரிப் பிரித்தானியத் தலைநகர் லண்டனிலிருந்து சுவிஸ்சர்லாந்தின் தலைநகர் ஜெனீவாவில் அமைந்திருக்கும் ஐ.நா. மனித உரமைகள் சபையை நோக்கி மனிதநேய நடைப்பயணத்தை பலநாள்களாக மேற்கொண்டுள்ள சிவந்தன் நேற்று தனது இலக்கினை அடைந்தவிட்டார்.


வடக்கை முழுமையாக மையப்படுத்தி யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரக அலுவலகம்


யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இந்தியாவின் தனித்தனித் துணைத் தூதரகங்கள் அமைக்கப்படவுள்ளமை குறித்து இலங்கை அரசுக்கு நேற்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

இந்து சமுத்திரத்தின் அமைதிக்கு அச்சுறுத்தல்.. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிறைவேற்றுனர் திரு விசுவநாதன் ருத்ரகுமாரன்

இலங்கைத் தீவில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் ஈழத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையையும், தமிழக மீனவர்கள் மீது மேற்கொள்ளும் தாக்குதலும் , சிங்களம் தமிழின மக்கள் மீது கொண்டுள்ள இனவஞ்சம் இலங்கை தீவின் எல்லைகளினையும் தாண்டி தமிழக மக்களையும் நோக்கி நீண்டிருப்பதானது இலங்கையின் எல்லைதாண்டிய ஒடுக்கு முறையின் கொடூர முகத்தினையும், அது தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள வெறுப்புணர்வினையுமே நிதர்சனமாக வெளிப்படுத்துகிறது.


கடற்கரும்புலி மேஜர் சந்தனா

அவளுக்கு நன்கு தெரிந்திருந்தது, தனது நீண்டநாள் கனவு, இலட்சியம் இம்முறை எந்தத் தடையும் இன்றி வெற்றியடையும் என்று. அந்த நம்பிக்கையின் நிறைவோடு தன்னைப் பெற்றவளை, தன் உறவுகளை இறுதியாக ஒரு தடவை பார்த்துவிட்டு வருவதற்காய் வீடு செல்கிறாள்.

எல்லாம் போயிற்று ,எல்லார் உயிரும் என்னைப் போல
இன்னும் வாழ்வதில் எத்தனை பிரியமுடன்வாழாது போயினர்.....?
வரலாறு எழுதிய கதைகளில் அவர்கள்பெயரிட்ட பிள்ளைகளும்
துணைவந்த துணைவிகளும்தனித்துப் போயினர்......
ஒரு நேர உணவிற்கும்ஒற்றைப் படுக்கை நிழலுக்கும்
எவரையெல்லாமோ இறைஞ்சி....எஞ்சிக் கிடப்பது கண்ணீர் மட்டுமேயான
இயலாத் துயரோடு இன்னும் நம்புகிறார்கள்....என்னை, உன்னை   ,
 எம் எல்லோரையும்....