புதன், 25 ஆகஸ்ட், 2010

தமிழர்களின் நிலைவரத்தை ஆராய................?

இலங்கைத் தமிழர்களினதும் இடம்பெயர்ந்த மக்களினதும் நிலைவரத்தை நேரில் ஆராய்வதற்காக இந்தமாத இறுதியில் இலங்கைக்கு தான் பயணம் மேற்கொள்ள விருப்பதாகவும் அதற்கு முன்னர் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கொழும்புக்குச் செல்வாரெனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அறிவித்திருக்கிறார்.

மட்டக்களப்பிலிருந்து இளம் பெண்களை தென் பகுதிக்குக் கூட்டிச் செல்லும் முயற்சி தடுக்கப்பட்டது

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண்களை தென்பகுதிக்கு அழைததுச் செல்லும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. தென்னிலங்கையிலுள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் வேலை வழங்குவதாகக் கூறி ஆடைத் தொழிற்சாலை நிறுவனங்களைச் சேர்ந்த சிலரால் இப்பெண்கள் அழைத்துச் செல்லப்படவிருந்தனர்.


“தமிழனின் கண்ணீர் தலையைக்கொய்யும்”

இராணுவ அதிகாரிகளை நினைத்தபடி பந்தாடவும், அவர்களுக்கு பதவி உயர்வு, பதவி இறக்கம்,கட்டாய ஓய்வு என்று எதையும் செய்யும் வல்லமையைப் பெற்றிருந்தார் சரத் பொன்சேகா. புலிகளை அழிக்கும் தேவைக்கு சரத் பொன்சேகா அவசியமானவர் என்பதால் அவருக்கு இந்த அதிகாரங்களைக் கொடுத்திருந்தது அரசாங்கம். தான் கேட்ட அதிகாரங்கள் அனைத்தும் கிடைத்ததால் அவர் பதவியில் இருந்த போது தலைகால் புரியாமல் நடந்து கொண்டார் என்பது வெளிப்படையான விடயம்.

ஆபாசப்படம் எடுத்தவர்கள் கைது : சிக்கியவர்கள் தமிழ்ப்பெண்களா?

கொழும்பு, பெட்டா மல்வத்த சாலையில் நெடுங்காலமாக இளம்பெண்களை வைத்து நீலப்படம் எடுத்த நான்கு இளைஞர்களை கொழும்பு குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள குறுந்தகடுகள், படமெடுக்கும் கருவிகள், சஞ்சிகைகள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன.


இந்தக் கும்பலில் சிக்கியுள்ள பெண்கள் விபச்சாரத் தொழிலில் ஈடுபடுபவர்களா ? அல்லது வதை முகாம்களில் வாடும் அப்பாவிப் பெண்களைக் கடத்தி வந்து இவ்வாறு படமெடுக்கின்றனரா ? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வதை முகாம்களிலிருந்து அவ்வப்போது கடத்திச் செல்லப்படும் தமிழ்ப் பெண்களை மயக்க மருந்து கொடுத்து இவ்வாறு உதாசீனப்படுத்துகின்றனரா என்ற சந்தேகம் தமிழர்களிடையே நிலவி வருகிறது. இதுபற்றிய விசாரணை நடந்து முடிந்தாலும் சிங்களக் காடையர்களின் ஆட்சியில் உண்மையான முழு தகவலும் வெளிவருமா என்பது கேள்விக்குறியே?.

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

மாநகரசபை உறுப்பினர் கடத்தப்பட்டுள்ளார். பிள்ளையானில் சந்தேகம்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினரும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான கில்லி என்றழைக்கப்படும் பிரகாசம் சகாயமணி காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி சகாயமணி மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தமிழர்கள் இந்த நாட்டின் உரித்தாளர்கள் அல்ல என நினைப்பது மகாதவறு.

இலங்கைத் திருநாட்டில் தமிழர்களின் தாயக மான வடக்கு கிழக்கு மாகாணங்களில் என்ன தான் நடக்கின்றது என்பதை உணரமுடியாத நிலையில் தமிழ் மக்கள் உள்ளனர். விடுதலைப் போராட்டம் நடைபெற்றது உண்மை.அந்தப் போராட்டம் போர் மூலம் முறியடிக்கப் பட்டமை உண்மை.தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை யுத்தத்தின் மூலம் அரசு தோற்கடித்து விட்டமைக்காக தமிழர்கள் இந்த நாட்டின் உரித்தாளர்கள் அல்ல என நினைப்பது மகாதவறு.

தமிழனின் உயிர் குடித்த இராணுவ அதிகாரி சவேந்திரா டி சில்வா ஐக்கிய நாடுகளின் தூதுவரா?

வன்னி போரில் சரணடைந்தோர்களை சுட்டுக்கொன்ற இராணுவ தளபதி ஐக்கிய நாடுகளின் தூதுவராக செல்கின்றார். போரின் இறுதிப்பகுதியில் வெள்ளைக்கொடியுடன் சரணடந்த போராளிகளான நடேசன் மற்றும் புலிதேவன் ஆகியோரை சுட்டுக்கொன்ற 58 வது டிவிசன் கட்டளை அதிகாரி மேஜர் கெனெரல் சவேந்திர சில்வாவே இவ்வாறு ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தர துணைத்தூதராக நியமிக்கப்படவுள்ளார்.

யாரை கண்காணிக்க ராடரும்,வேவு விமானமும்...........

கொழும்பு இரத்மலானை விமானப்படை தளத்தில் அமெரிக்கா, தனது செலவில் நவீன ராடர் கருவி ஒன்றை அமைத்துக் கொடுத்துள்ளது. சுமார் 6 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான இந்த நவீனரக ராடர், செய்மதியூடாக தொலைத் தொடர்புகளையும், தரவுகளின் பரிமாற்றங்களையும், துல்லியமாக அறியும் திறன்கொண்டது எனக் கூறப்படுகிறது. பீச் கிராப் என அழைக்கப்படும், ஆளில்லா வேவு விமானங்களையும் அவதானித்து இதனூடாக் கட்டுப்படுத்தமுடியும் என அமெரிக்க தொழில்நுட்பவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.


உங்களை நீங்களே!.....

முள்ளிக்குளம் முதல்

முள்ளிவாய்க்கால் வரை
அவன் களத்தில்
சமரின் வடுக்கள்
தங்கிய உடம்பு
குருதி கொட்டியே
மெலிந்த தேகம்.


பெற்றவர் இழந்த
பெரும் துயர் நெஞ்சில்
மக்களின் துயரம் அவன்
மனதைப் பிழியும்
உறுதி தளர்ந்திடா
உண்மை வீரன்
குண்டு மழையில்
குற்றுயிரானான்

சிறையிலிருக்கும் அம்மாவே... நீங்கள் வரவே மாட்டீர்களா?"


அன்பின் அம்மாவுக்கு,
சுவாசிக்கக் காற்றிருக்கிறது. உண்ண ஒருவேளை சோறு கிடைக்கிறது. துன்பங்களின் மத்தியிலும் உங்கள் மடியில் சாய்ந்துறங்கிய நிம்மதியான நினைவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நீங்கள் நலமாயிருக்கிறீர்களா? உங்களின் நலத்திற்கு என்றும் குறைவரக்கூடாது என்பதுதான் எனது முதல் பிரார்த்தனையும் வேண்டுதலும். நம் குலதெய்வம் உங்களின் நலன் காக்கட்டும்.

போரின் முடிவுக்குப் பின்னரான நிரந்தரமான படைகளின் பிரசன்னம்

மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு வழங்கப்படுவதாகக் கூறப்படும் உதவிகளைப் பொறுத்தரை அரசாங்கத்தின் அறிவிப்புக்கும் அந்த மக்களுக்கு கிடைக்கப் பெற்றிருக்கின்றவைக்கும் இடையேயான வேறுபாட்டை விளக்குவதற்கு நாம் இங்கு உதாரணங்களைக் காட்ட வேண்டிய தேவையில்லை. அந்த மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை ஓரளவுக்கேனும் தீர்த்து வைக்கக்கூடிய போதிய உருப்படியான நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டதாக இல்லை.

"செவிடன் காதில் ஊதிய சங்கு".. விரைவான மீள்குடியேற்றம். ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை கோரிக்கை

இலங்கையில் இன்னமும் முகாம்களில் தங்கியிருக்கும் சுமார் ஐம்பதாயிரம் பேரை அவர்களின் சொந்த இடங்களில் விரை வில் குடியேற்றுவது குறித்தும், ஏற்கெனவே மீள்குடியேற்றப் பட்டவர்களுக்கு தேவையான வாழ்வாதாரங்களை உருவாக்கு வது குறித்தும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கத்தோலிக்க ஆயர்களின் குழு வலியுறுத்தியுள்ளது.

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

நண்பர்கள் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ளும் புதிய வசதி ...பேஸ்புக் ப்ளேசெஸ்

கடந்த சில மாதங்களாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக் அதனை பயன்படுத்துபவர்கள் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ளும் படியான ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.


கொழும்பில் தமிழ் வர்த்தகர் கடத்தல்

கொழும்பில் உள்ள புறக்கோட்டை பகுதியில் ஒலிவர் பெனர்னான்டோ என்ற தமிழ் வர்த்தகர் ஒருவர் இனம்தெரியாத ஆயுததாரிகளால் காலை கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன

சிறீலங்காவில் போர் நிறைவுபெற்றுவிட்டதாக சிறீலங்கா அரசு தெரிவித்து 15 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் சிறீலங்காவில் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்வது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்திய படையினரை நினைவுகூரும் முகமாக நினைவு மண்டபம்

சிறீலங்காவின் வடக்கு – கிழக்கு பகுதியில் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் நடைபெற்ற போரில் கொல்லப்பட்ட இந்திய படையினரை நினைவுகூரும் முகமாக நினைவு மண்டபம் ஒன்றை சிறீலங்கா அரசு கொழும்பில் அமைத்துள்ளது.


வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்போர் தரைவழியாக யாழ் செல்ல அனுமதியில்லை

சுற்றுலாப் பயணிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்போர் வடபகுதிக்கு நெடுஞ்சாலை வழியாக பயணம் செய்வதற்கான தடை தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.