இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வியாழன், 16 செப்டம்பர், 2010
விரக்தியடைந்த நிலையில் மக்கள்.. ஐ.நாவின் பிரதிநிதி நீல் பூன்
இடம் பெயர்ந்து தற்போது அங்கு திரும்பியுள்ளவர்களின் நிலைமைகளைப் பொறுத்தவரை, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டத்தின் உட்பகுதிகளில் இருக்கும் தமிழ், கிராம மக்களின் நிலமைகள் என்பவை அவர்கள் எந்தப் பகுதியில் வாழ்கிறார்கள் என்பதை பொருத்து மாறுபடுவதாக அவர் தெரிவித்தார். இவர்களில் பலர் தமது சொந்த வீடுகளுக்கு திரும்பியதில் மகிழ்ச்சியடைந்திருந்தாலும் அவர்கள் இன்னமும் பல சவால்களை எதிர்கொள்வதாகவும், பல தொலைதூரப் பகுதி கிராமங்களில் இருந்த மக்கள் விரக்தியடைந்த நிலையில் காணப்பட்டதாகவும் நீல் பூன் தெரிவித்தார்
எழுதுதல் இலகு செய்வதே சிறப்பு.
எவரஸ்ட் சிகரம் ஏறுவோம், வாருங்கள் என்கிறார்கள் சிலர்
மரியானாவின் அடியில் இருந்துகொண்டு.
அழைப்பு விடுவது மட்டுமே அவர்களின் வேலையாம்
சிகரம் ஏறிச் சிக்குண்டவர்களும் ,இமயத்தில் இன்னும் எஞ்சியுள்ளோருமே மீண்டும் ஏறவேண்டுமாம். அதுவும் முன்பு ஏறி
முடக்கப்பட்ட பாதையால்.
நின்று பாத்தவருக்கே தெரியும் .நிலைமையின் கோரம்
பட்டவருக்கே புரியும். பாடுகளின் பாரம்.
இமயத்தில் வாழ்ந்தவர்கள் எல்லையற்ற துன்பத்தில்
சிகரம் ஏறியவர் சிதைந்தவராய் சிங்கத்துக் குகையினுக்குள்.
அக்கரையில் இருந்துகொண்டு அதிகப் பிரசங்கம்
வீட்டிற்குள் இருந்துகொண்டு வீரமாய் வசனங்கள்.
முதலில் வீழ்ந்தவரை எழ விடுங்கள்
சிக்குண்டவரை மீள விடுங்கள்எழக் கைகொடுங்கள்
மீளக் வளி சமையுங்கள்.
அதன் பின் இமயம் வந்து எவரஸ்ட் ஏற
நீங்கள் தயாரென்றால் கூப்பிடுங்கள் எங்களை
அப்போது நிட்சயம் மீண்டு நாங்கள்..அதுவரைக்கும் ஆகக்கூடியத்தை
அனைவரும் செய்யுங்கள் .அனைத்து வழிகளிலும்
இணைந்து முயலுங்கள்படுத்துக் கிடந்துகொண்டு
நடப்பவனில் குறை காணாதீர்கள் சொல்லுதல் சுலபம்
எழுதுதல் இலகு செய்வதே சிறப்பு.
எவரஸ்ட் தான் எம் இலக்கு
மரியானாவின் அடியில் இருந்துகொண்டு.
அழைப்பு விடுவது மட்டுமே அவர்களின் வேலையாம்
சிகரம் ஏறிச் சிக்குண்டவர்களும் ,இமயத்தில் இன்னும் எஞ்சியுள்ளோருமே மீண்டும் ஏறவேண்டுமாம். அதுவும் முன்பு ஏறி
முடக்கப்பட்ட பாதையால்.
நின்று பாத்தவருக்கே தெரியும் .நிலைமையின் கோரம்
பட்டவருக்கே புரியும். பாடுகளின் பாரம்.
இமயத்தில் வாழ்ந்தவர்கள் எல்லையற்ற துன்பத்தில்
சிகரம் ஏறியவர் சிதைந்தவராய் சிங்கத்துக் குகையினுக்குள்.
அக்கரையில் இருந்துகொண்டு அதிகப் பிரசங்கம்
வீட்டிற்குள் இருந்துகொண்டு வீரமாய் வசனங்கள்.
முதலில் வீழ்ந்தவரை எழ விடுங்கள்
சிக்குண்டவரை மீள விடுங்கள்எழக் கைகொடுங்கள்
மீளக் வளி சமையுங்கள்.
அதன் பின் இமயம் வந்து எவரஸ்ட் ஏற
நீங்கள் தயாரென்றால் கூப்பிடுங்கள் எங்களை
அப்போது நிட்சயம் மீண்டு நாங்கள்..அதுவரைக்கும் ஆகக்கூடியத்தை
அனைவரும் செய்யுங்கள் .அனைத்து வழிகளிலும்
இணைந்து முயலுங்கள்படுத்துக் கிடந்துகொண்டு
நடப்பவனில் குறை காணாதீர்கள் சொல்லுதல் சுலபம்
எழுதுதல் இலகு செய்வதே சிறப்பு.
எவரஸ்ட் தான் எம் இலக்கு
"மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்"
தியாகசீலன் திலீபனின் நினைவுநாளை அனுஷ்டிக்கும் இத்தருணத்தில், இருபத்திமூன்று வருடங்களுக்கு முன்பு நல்லூர் முன்றலில் அந்த தியாகி கூறியவை வெறும் வார்த்தைகள் அல்ல அருள்வாக்குகள் என்பதை தற்பொழுது நாம் உணர்கின்றோம். "மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்" என அன்று தியாகி திலீபன் கூறிய வாக்கு இன்று ஈழத்தமிழினத்திற்கு அவசியமான ஒன்றாக மாறியிருக்கின்றது.
"இனவிடுதலைப் போராட்டம்" என்பது அது எவ்வகையில் அமைந்தாலும் அந்த இன மக்களின் பூரண ஆதரவு இல்லாமல் மேற்கொள்ள முடியாது. ஒட்டுமொத்த மக்களும் விடுதலையென்ற ஒரே இலட்சியத்திற்காக தமது பங்களிப்பினைச் செய்ய முன்வர வேண்டும்.
"இனவிடுதலைப் போராட்டம்" என்பது அது எவ்வகையில் அமைந்தாலும் அந்த இன மக்களின் பூரண ஆதரவு இல்லாமல் மேற்கொள்ள முடியாது. ஒட்டுமொத்த மக்களும் விடுதலையென்ற ஒரே இலட்சியத்திற்காக தமது பங்களிப்பினைச் செய்ய முன்வர வேண்டும்.
திலீபனுடன் இரண்டாம் நாள்.....
16-09-1987 அதிகாலை 5.00 மணிக்கே திலீபன் உறக்கத்தை விட்டு எழுந்து விட்டார். முகம் கழுவித் தலைவாரிக் கொண்டார். சிறுநீர் கழித்தார், ஆனால் மலம் இன்னும் போகவில்லை. அவர் முகம் சோர்வாகக் காணப்பட்டாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல் எல்லோருடனும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். சகல தினசரிப் பத்திரிகைகளையும் ஒன்றுவிடாமல் படித்து முடித்தார். பத்து மணியளவில் பக்கத்து மேடையிலே நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின.
செவ்வாய், 14 செப்டம்பர், 2010
அச்சுவேலியில் வெள்ளை வானில் கடத்தல் சம்பவம்
யாழ்ப்பாணம் அச்சுவேலிப் பகுதியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு விவசாயியை வெள்ளை வான் கடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. கப்பம் கோரலுடன் தொடர்பு பட்டதாகவே இக் கடத்தல் சம்பவம் இடம் பெற்றதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடத்தலுடன் தொடர்புபட்டவர்கள் இரண்டு லட்சம் கோரியதாகவும் பின்னர் ஒருலட்சமாக அக் கோரிக்கை மாறியதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் கடத்தப்பட்ட அன்றைய தினம் மாலையிலேயே அவர் யாழ் நகரப்பகுதியில் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. 44 வயதுடைய கே.சிவகுமார் என்பவரே கடத்தி விடுவிக்கப்பட்டவர் ஆவார். இவர் விடுவிக்கப்பட்டமைக்கு கடத்தல்காரர்களால் கேட்கப்பட்ட பணம் கொடுக்கப்பட்டது காரணமா என்பது அறியமுடியவில்லை. பொலிசார் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
முல்லைத்தீவு நகர்ப் பகுதியில் புத்தவிகாரை.
வடக்கின் பெரும்பாலான பகுதிகளில் புத்தவிகாரைகள் கட்டப்பட்டுள்ளன. இந்து வழிபாட்டுத் தலங்கள் பெருமளவு நிர்மூலமாக்கப்பட்டு பாழடைந்த நிலையில் கைவிடப்பட்டுள்ள நிலையில் புதிதாக புத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருவது குறித்து கடுமையான அதிருப்திகள் வெளிக்கிழம்பியுள்ளன. குறிப்பாக இது ஒரு திட்டமிட்ட கலாசார அழிப்ப்பாகவும் ஆக்கிரமிப்பாகவும் ஆழும் தரப்பினால் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் .முல்லைத்தீவு நகர்ப் பகுதியின் மையத்தில் புதிதாக ஒரு புத்தவிகாரை கட்டும் பணியில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
திலீபனுடன் முதலாம் நாள்........
காலை 9.30 மணி! பாடசாலை பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனைச் சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாகப் பேசுகிறார். “வோக்கிடோக்கி”யில் தலைவருடன் சில நிமிடங்கள் பேசுகிறார். பேசிவிட்டு அந்த மண்ணிற “வானை” நோக்கி நடக்கிறார்…. எல்லோரும் பின் தொடர்கிறோம்…. ஆம், அவரின் தியாகப் பயணம் ஆரம்பமாகி விட்டது. மிக மிடுக்காக நடந்து முன் ஆசனத்தில் ஏறுகிறார். அவரின் பக்கத்தில் சொர்ணம், அன்ரன் மாஸ்ரர், முரளி, பின் ஆசனத்தில் காசி ஆனந்தன், ராஐன், நான், மற்றும் சிலர்….! வான் நல்லூர் கந்தசாமி கோயிலை நோக்கி ஓடுகிறது…. பாதையின் இரு பக்கத்திலும் மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கையசைத்து வழியனுப்புகிறார்கள்.
இலங்கைப் பிரச்சினைகளை மூடிமறைக்க ஐ.நா.முயற்சி! - இன்னர் சிட்டி பிரஸ் குற்றச்சாட்டு
இலங்கை பிரச்சினைகளை மூடிமறைக்க ஐ.நா.செயலர் முயற்சிப்பதாக இன்னர் சிட்டி பிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் மற்றும் அவரது பேச்சாளர் மார்ட்டின் சினர்கீ ஆகியோர் இலங்கை, சூடான் போன்ற நாடுகளில் தீவிரமிக்க விடயங்கள் குறித்து கருத்து வெளியிடாமை குறித்து இன்னர் சிட்டி பிரஸ் கண்டனம் வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் நாளாந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போது இலங்கை, சூடான் மற்றும் கொங்கோ போன்ற நாடுகளில் முக்கியமான பிரச்சினைகள் குறித்து எந்தக் கருத்துக்களும் வெளியிடப்படவில்லை.
இரத்தினபுரி தோட்டமொன்றில் பதற்ற நிலை, தமிழ் மக்கள் இடம்பெயர்வு
இரத்தினபுரி மாவட்டம் நிவத்திகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேல குக்குலகலை தோட்டத்திலுள்ள தமிழர்களின் குடியிருப்புக்கள் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளன என்றும் அச்சம் காரணமாக தமிழ்க் குடும்பங்கள் இடம் பெயர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தேல குக்குலகலைத் தோட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த காவற்காரர் ஒருவர் கரவிட்ட திமியாவ என்னுமிடத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்தத் தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு வீடுகள் தீக்கிரைக்கப்பட்டதாகவும் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்து பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளன என்றும் தெரியவருகின்றது.
தேல குக்குலகலைத் தோட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த காவற்காரர் ஒருவர் கரவிட்ட திமியாவ என்னுமிடத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்தத் தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு வீடுகள் தீக்கிரைக்கப்பட்டதாகவும் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்து பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளன என்றும் தெரியவருகின்றது.
"எகானமிஸ்ட்" இதழ் மீண்டும் பறிமுதல்.
நேரடியாகவும், தயவு தாட்சண்டமின்றியும் கருத்துக்களைத் தெரிவிக்கும் எகானமிஸ்ட் நாளிதழின் தலையங்கங்கங்கள் இலங்கை அதிகாரிகளை சில முறை கொதிப்படையச் செய்துள்ளன. சில முறை அதன் அதிகாரிகளை எரிச்சலடையச் செய்துள்ளன. இதன் காரணமாக உலகில் பெரிய அளவில் வாசிக்கப்படும் அரசியல் மற்றும் வர்ச்சக சஞ்சிகைளில் ஒன்றான எகானமிஸ்ட்டின் பிரதிகள் இலங்கையில் இருக்கும் அதன் ஒரே முகவரை சென்றடையும் முன்பே பல முறை பறிமுதல் செய்யப்படுகின்றன.
கிணற்றில் இருந்து ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்
கைதடி வடக்கில் காணாமல் போயிருந்தவரை தேடிய போது காணாமல் போயிருந்த நபர் கிணற்றில் இருந்து சடலமாக மிதப்பது தெரியவந்தது. வீட்டுக்கு அருகில் இருந்த கிணற்றில் இவர் தவறுதலாக வீழ்ந்து இறந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. அயலவர்களின் உதவியுடன் சடலம் மேலே எடுக்கப்பட்டு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. கைதடி வடக்கை சேர்ந்த கந்தையா டபிளேஸ்வரன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்
வீரவேங்கை நிதி ( மன்னார் மாவட்டம் )
மன்னார் மாவட்டத்தில் வீரமரணம் அடைந்த முதல் புலி. இராணுவச் சுற்றிவளைப்பின் போது இறுதி வரை போராடி எதிரியின் கையில் தான் பிடிபடக்கூடாது என நினைத்து தன் கைத் துப்பாக்கியாலே தன்னைத் தானே சுட்டு எமது இயக்க மரபுக்கு இணங்க வீர மரணத்தை அடைந்தவன் நிதி.அன்று நாங்கள் நிதியைப் பற்றி அறிந்திருந்தோமே தவிர விடுதலையைப் பற்றிப் புரியவில்லை. நிதியின் இறுதி நிகழ்வு பெரிதாக ஊர்வலமாக நடத்தப்படவில்லை. அன்றைய காலகட்டம் மிகப்பயஙகரமாக இருந்ததால், ஒவ்வொருவர் வாயிலும் மெதுவாகப் பேசப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் சமூகச் சீர்கேடுகளை ஊக்குவிக்கும் படையினர்
யாழ்ப்பாணத்தில் சமூகச் சீர்கேடுகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஆபாசப் புத்தகங்கள் மற்றும் சீடீக்களின் விற்பனை, கஞ்சா அபின் போன்ற போதை வஸ்துக்களின் பாவனை போன்றவற்றை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளின் பின்னணியில் படையினர் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.அத்துடன் கஞ்சா, அபின் போன்ற போதை வஸ்துக்களை படையினரே தென்னிலங்கையிலிருந்து கொண்டு வந்து தமக்கு நெருக்கமானவர்கள் மூலம் மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே விநியோகித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கீரிமலை தீர்த்தக் கேணிக்கு “தம்பல பட்டுணவ”
வரலாற்றுப் புகழ் பெற்ற கீரிமலை தீர்த்தக் கேணிக்கு "தம்பல பட்டுணவ" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். குதிரை முகம் கொண்ட மன்னன் மகளின் பிணியறுத்து முக அழகை கொடுத்த வரலாற்று சிறப்பு மிக்க மாவட்டபுரம் கீரிமலை தீர்த்த கேணிக்கு சிங்களவர்களால் பெயர்பலகைசூட்டப்பட்டுள்ளது.
திங்கள், 13 செப்டம்பர், 2010
உங்கள் கண்டனங்களை குப்பையில் கொட்டுங்கள்
இலங்கையின் அரசியலமைப்பின் 18 - வது திருத்தச் சட்டத்தை அமெரிக்கா கண்டித்துள் ளது. அமெரிக்காவின் இந்த கண்டனம் என்ன செய்யும் என்றால் எதுவுமே இல்லை என்பதே அதற்கான பதிலாக அமையும்.கண்டனங்கள், ஆழ்ந்த அனுதாபங்கள், அதிர்ச்சிகள் அனைத்தும் சம்பிரதாயமானவை. இவற்றால் எதுவும் ஆகப் போவதில்லை. அதே நேரம் பாதிக்கப்படும் மக்களுக்கு இத்தகைய கண்டனங்கள் எத்தகைய விமோசனங்களையும் பெற்றுத்தரப் போவதில்லை என்பதும் தெரிந்த விடயமே.
மரத்தில் தொங்கிய யுவதியின் சடலம்
நாவற்குழி தச்சன் தோப்புப் பகுதியில் மரம் ஒன்றில் கயிற்றில் தொங்கிய நிலையில் யுவதியின் சடலம் காணப்பட்டது.
இதே இடத்தைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை தனுஷா (வயது 19) என்னும் யுவதியே இறந்தவராவார். இவரது சடலத்தை சாவகச்சேரி பொலிஸார் மீட்டு சாவகச்சேரி ஆதார வைத்திய சாலை பிரேத அறையில் ஒப்படைத்துள்ளனர்.
இதே இடத்தைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை தனுஷா (வயது 19) என்னும் யுவதியே இறந்தவராவார். இவரது சடலத்தை சாவகச்சேரி பொலிஸார் மீட்டு சாவகச்சேரி ஆதார வைத்திய சாலை பிரேத அறையில் ஒப்படைத்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)















