இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
செவ்வாய், 21 செப்டம்பர், 2010
திலீபனுடன் எட்டாம் நாள் -22-09-1987
இன்று அதிகாலையிலே நிரஞ்சன் குழுவின் கொட்டகை போடும் வேலையை ஆரம்பித்து விட்டனர். முதல் நாள் இலட்சக்கணக்கான மக்கள் வந்திருந்ததால் போடப்பட்டிருந்த கொட்டகைகள் எல்லாம் சனக்கூட்டத்தினால் நிரம்பி வழிந்தன ஏராளமானோர் சுடுவெயிலில் கால்கடுக்க நிற்கவேண்டி ஏற்பட்டதால் நல்லூர் கோவில் மைதானம் முழுவதிலும் படங்குகளினால் கொட்டகை போடத்தொடங்கியிருந்தார்கள். உண்ணாவிரதம் ஆரம்பிக்கும்போது இத்தனை சனக்கூட்டம் வருமென் யாருமே எதிர்பார்க்கவில்லை. இலங்கையில் மட்டுமன்றி, இந்தியா மற்றும் பல வெளிநாடுகளில் கூட திலீபனின் தியாகப் பயணம் பற்றியே பெரும்பாலானோர் பேசிக் கொண்டிருப்பதாகப், பத்திரிகைகளில் போட்டிருந்தார்கள்.
திங்கள், 20 செப்டம்பர், 2010
எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்- திருமலை அரசியல் துறை பொறுப்பாளர் எழிலனின் மனைவி
எனக்கு பின்விளைவுகள் வந்தாலும் பிரச்சினையில்லை. நான் பயப்படவில்லை. வந்தால் எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். வாழ வேண்டும் என்ற விருப்பத்துடன் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை இலங்கை அரசால் அமைக்கப்பட்டிருக்கின்ற நல்லிணக்க ஆணையத்தின் முன்பு விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலனின் மனைவி ஆனந்தி சசிதரன் சாட்சியமளித்துள்ளார்
'பேஸ்புக்' தயாரிக்கும் இரகசிய கையடக்கத் தொலைபேசி
பிரபல சமூக வலைபின்னல் தளமான 'பேஸ்புக்', கையடக்கத் தொலைபேசி ஒன்றை உருவாக்கி வருவதாக 'டெக்கிரன்ச்' இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது. மூன்றாம் நபர் வன்பொருளில் இயங்குவதற்கான இயங்குதளத்தினை ( ஒபரேடிங் சிஸ்டம்) 'பேஸ்புக்' தயாரித்து வருகின்றதென அத்தளம் குறிப்பிட்டிருந்தது. கூகுளின் 'அண்ரோயிட்' இயங்குதளத்தினைப் போன்ற ஒரு முயற்சியில் 'பேஸ்புக்' இறங்கியிருக்கலாமெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கூகுளின் 'அண்ரோயிட்' கையடக்கத் தொலைபேசிகள் தற்போது பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
வெள்ளவத்தையில் தமிழ் வர்த்தகர் ஒருவர் கடத்தல்
கொழும்பு வெள்ளவத்தையில் தமிழ் வர்த்தகர் ஒருவர் வெள்ளை வானில் வந்த இனந் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளார் என குறித்த பிரதேச மக்கள் தெரிவித்தனர். வெள்ளவத்தையில் புதிதாக திறக்ப்பட்ட வெதுப்பகம் ஒன்றின் உரிமையாளர் ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்
திலீபனுடன் ஏழாம் நாள் -21-09-1987
நேற்றைய பேச்சுவார்த்ததையின் முடிவு என்னவாக இருக்கும்….? இந்தக் கேள்விதான் இதயத்தின் பெரும் பாகத்தை அரித்துக் கொண்டிருந்தது. காலை 10 மணிவரை எவ்வளவோ முயன்றும் அவர்கள் இருவரும் என் கண்களில் படவேயில்லை. ஆனால், திடீரென்று "இந்தியா ருடே" (India Tiday) பத்திரிகை நிருபரும் இந்திய துரதஷனின் (இந்தியத் தொலைக்காட்சி ஸ்தாகனம்) வீடியோப் படப் பிடிப்பாளரும், யோகியுடன் வந்து திலீபனைப் படம்பிடிக்கத் தொடங்கினர். "இந்தியா ருடே" நிருவர் என்னிடம் திலீபனின் உடல் நிலையைப்பற்றித் துருவித் துருவித் கேட்டுத் தெரிந்துகொண்டார்.
முறிகண்டிப் பிள்ளையார் கோவிலுக்கு அண்மையாக புத்தபிரானுக்கு இருப்பிடம்,,ஹோட்டல்
முறிகண்டிப் பிள்ளையார் ஆலய சூழல், அங்கிருந்த இறைபக்தி, நம்பிக்கை என அனைத்தும் வெறுமையாகிப் போகும் அளவில் அந்தப் பகுதி ஆக்கப்பட்டுள்ளது. முறிகண்டிப் பிள்ளையார் கோவிலுக்கு அண்மையாக புத்தபிரானுக்கு இருப்பிடம் அமைக்கப்படும் பணி நடைபெறுகின்றது. இந்துசமயம் சார்ந்தவர்கள் தங்கள் வழிபாட்டை மேற்கொள்வதற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் முறிகண்டிப் பிள்ளையார் ஆலய சூழலில் ஹோட்டல் அமைக்கும் பணி நடந்தேறியுள்ளது. ஹோட்டல் என்றால் அங்கு மதுவும் மாமிசமும் தாராளமாக பரிமாறப்படும். அவ்வாறாயின் முறி கண்டிப் பிள்ளையார் ஆலய சூழலின் புனிதத் தன்மையை வேரறுப்பதே இதன் நோக்கம் ஆகும். இத்தகைய செயற்பாட்டின் மூலம் வடக்கில் தமிழர்களின் தனித்துவமான இடங்கள் என எதுவும் இருக்கக் கூடாது.
உல்லாச நகராக யாழ்ப்பாணம் திறந்து விடப்பட்டிருக்கிறது....
சந்தியில் நிற்பதும், மது அருந்துவதும், கையடக்கத் தொலைபேசியும்தான் எங்கள் சீவியம் என்றால் இந்த மண்ணில் நிகழ்ந்த தியாகங்களுக்கு எந்த அர்த்தமும் இல்லாமல் போகும் அன்புக்குரிய இளைஞர்களே! நாங்கள் முதலில் எங்களை அறிய வேண்டும் குடாநாட்டில் எங்கு பார்த்தாலும் சிரழிகின்றது எமது தனித்துவமான கலை கலாச்சாரங்கள். "இயக்க நிலையில் சீராக இயங்கிய எமது பண்பாடு, கலாச்சாரங்கள் தற்போது இயக்கமற்ற நிலையில் சீரழிகின்றது". சரியான பாதை காட்டுவதற்கு முறையான ஆட்கள் இல்லாத நிலையில் மேய்பன் இல்லாத மந்தைகள் போல மாறிவிட்டது எமது யாழ்ப்பாணம் பட்டினம் .
ஞாயிறு, 19 செப்டம்பர், 2010
தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை கடற்படையினர், தங்கச்சிமடம் மீனவர்களை தாக்கி மீன்களை பறித்துச் சென்றனர். ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு சென்றன. இந்திய கடல் எல்லையான 9 கடல் மைல் தூரத்தில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தனர்.
தமிழ் மக்களின் பெருமூச்சு
இலங்கையின் தமிழ் அரசியல் கட்சிகள் இன்று இருப்பதைப்போன்ற படுமோசமான பலவீனமான நிலையில் அவற்றின் வரலாற்றில் முன்னொருபோதுமே இருந்ததில்லை. தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்குப் பரிகாரம் காண்பதற்கு உருப்படியான அரசியல் அணுகுமுறைகளை வகுக்க இயலாமல் இந்தக் கட்சிகள் தடுமாறிக் கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. உள்நாட்டுப் போரின் பின்னரான காலகட்டத்தில் இலங்கைத் தமிழ்மக்கள் தங்கள் மத்தியில் கட்டுறுதியான அரசியல் சமுதாயம் ஒன்று இல்லாமல் அரசியல் வெற்றிடத்தில் விடப்பட்டிருக்கிறார்கள் திலீபனுடன் ஆறாம் நாள் -20-09-1987
அதிகாலையில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது. ஆம் ! இன்று திலீபன் காலை 5 மணிக்கே படுக்கையை விட்டு எழுந்து விட்டார். அதுமட்டுமன்றி தான் சிறுநீர் கழிக்கப்போவதாகக் கூறினார். அவர் இருக்கும் நிலையிலே படுக்கையை விட்டு எழுந்து செல்வது என்பது முடியாமல் இருந்ததால் படுக்கையிலேயே சலப் போத்தலைக் கொடுத்தேன். ஆனால் சலம் போகவில்லை. வயிற்றை வலிப்பதாகவும் சலம் போவதற்குக் கஷ்டமாக இருப்பதாகவும் கூறினார். சுகிச்சையின் மூலம் கொஞ்சமாவது சிறுநீர் கழிக்க முடியும். ஆனால் அதைப்பற்றி பேசினாலே எரிந்து விழுவார் என்பதற்காக ஒன்றும் பேசாமல் இருந்தேன்.
யாழ்ப்பாணத்தில் புதிய அரசியல் கட்சி
யாழ்ப்பாணத்தில் ஜனநாயக மக்கள் கட்சி எனும் புதிய அரசியல் கட்சி ஒன்று ஆரம்பிக்கப் படவுள்ளது. யாழ். மாநகரசபை மேயர் பதவிக்காக ஐக்கிய தேசியக்கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளரும், யாழ்ப்பாண அமைப்பாளருமான எஸ்.சத்யேந்திரா தலைமையிலேயே இந்த கட்சி ஆரம்பிக்கப்படவுள்ளது.
சரணடைந்த போராளிகள் அனைவரையும் படையினர் 16 பஸ்களில் ஏற்றிச் சென்றனர்
இறுதிக் கட்டயுத்தத்தின் போது சரணடைந்த மற்றும் பிடிபட்ட போராளிகளையும் ஏற்றி 16 பஸ்களில் கொண்டு சென்றார்கள். இன்றுவரை அவர்களின் கதி என்ன வென்று தெரியாது.இவ்வாறு முன்னாள் போராளி ஒருவரின் தாயார் தெரிவித்தார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு கண்டாவளை பிரதேச செயலகத்தில் நடத்திய அமர்வில் சாட்சியம் அளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:
சனி, 18 செப்டம்பர், 2010
திலீபனுடன் ஐந்தாம் நாள் 19-09-1987
வழக்கம் போல் சகல பத்திரிகைகளையும் காலையில் வாசித்து முடிக்கும் திலீபனால் இன்று எதுவுமே செய்ய முடியவில்லை. யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதிலுமிருந்து தனியார் பஸ் வண்டிககளில், மக்கள் வெள்ளம்போல் வந்து நிறையத் தொடங்கி விட்டனர். இன்னமும் திலீபன் போர்வைக்குள்ளேயே புதைந்து கிடக்கிறார். ஆவரால் எழும்ப முடியவில்லை. உடல் பயங்கரமாக வியர்த்துக் கொட்டியது.மின்விசிறி அவர் பக்கத்தில் வேகமாகச் சுழன்று கொண்டிருக்கிறது. ஒரு மனித இயந்திரம் தன் முழுச்சக்தியையும் பிரயோகித்து இயங்கிக் கொண்டிருக்கிறது. அன்றைய பத்திரிகைகளில் முக்கிய செய்திகளாக வழக்கம்போல் திலீபனைப் பற்றிய செய்திகளே இடம்பெற்றிருக்கின்றன.
இழப்பு எண்ணிக்கைகளை பலரும் பல்வேறு விதமாக கூறிக்கொள்வதன் காரணம் என்ன?...
புனர்வாழ்வு அழித்தல் எனும் பெயரில் பலசரணடைந்த முன்னாள் போராளிகள் பலரும் மேற்படி கல்அகழ்தல் வேலையில் ஈடுபடவைத்தது சிங்கள அரசு. மேற்படி சம்பவ இழப்பு எண்ணிக்கைகளை பலரும் பல்வேறு விதமாக கூறிக்கொள்கின்றனர் .மருத்துவமனை செய்திக்குறிப்பில் கூறபட்ட எண்ணிக்கையை விட அமைச்சர் முரளிதரன் ஒருபுறம்,, இராணுவ பேச்சாளர் மறுபுறம்,, பொலிஸ் பேச்சாளர் என மாறுபட்ட எண்ணிக்கைகளை கூறுவதன் காரணம் தான் என்ன?.
முன்னாள் போராளிகளின் இழப்பினை அரசு மறைக்க முயல்வதாக பலரும் கருத்து தெரிவிக்கும் வேளை பல இழப்புக்களை ஏற்படுத்தக் கூடிய பெருந்தொகை வெடிபொருட்கள் முன் பாதுகாப்பின்றி பொதுமக்கள் பலரும் ஒன்று கூடும் இடத்தில் வைத்திருந்த காரணம் தான் என்ன? இழப்புகளை மறைக்க முற்படுதுவதன் நோக்கம் தான் என்ன?
முன்னாள் போராளிகளின் இழப்பினை அரசு மறைக்க முயல்வதாக பலரும் கருத்து தெரிவிக்கும் வேளை பல இழப்புக்களை ஏற்படுத்தக் கூடிய பெருந்தொகை வெடிபொருட்கள் முன் பாதுகாப்பின்றி பொதுமக்கள் பலரும் ஒன்று கூடும் இடத்தில் வைத்திருந்த காரணம் தான் என்ன? இழப்புகளை மறைக்க முற்படுதுவதன் நோக்கம் தான் என்ன?
சண்டிலிப்பாயில் பெண் கடத்தல் சம்பவம்
சண்டிலிப்பாய் கொம்பனிப்புலம் பகுதியில் ஒரு வெள்ளை நிற வாகனம் வேகமாக சென்றதாகவும் அதற்குள் இருந்து ஒரு பெண் கத்தியபடி சென்றதாகவும் இதனை அவதானித்த அப்பகுதி பொதுமக்கள் அவ் வாகனத்தை துரத்தி சென்ற போது அது தெல்லிப்பளைப் பக்கமாக சென்று உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் நுழைந்து விட்டதாகவும் அப் பகுதி பொதுமக்களால் தெரிவிக்கபட்டுள்ளது. இதனை அடுத்து அப் பகுதியில் பொலிசாரும் படையினரும் சேர்ந்து வீதிச் சோதனை செய்ததாகவும் தெரியவருகின்றது. ஆனால் பொலிசார் தரப்பில் இவ்வாறான சம்பவம் இடம் பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கதுறு கொடவாக மாறியது கந்தரோடை
யாழ்ப்பாணத் தமிழர்களின் பாரம்பரிய இடங்களின் பெயர்களை சிங்களமயமாக்கி பெயர்ப்பலகைகளைத் தொங்க விட்டுள்ள இராணுவமும் அரசாங்கமும் அம்மக்கள் மீது கலாச்சார மற்றும் உளவியல் ரீதியான தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது. யாழ்ப்பாண வரலாற்றின் புரதான இடங்களில் ஒன்றான கந்தரோடை என்னும் வரலாற்று புகழ்மிக்க இடத்தினை தற்போது கதுறுகொடவாக மாற்றியுள்ளனர் பெரும்பான்மை இனத்தவர்கள்.
புத்த விகாரையி்ன் தோற்றத்தில் கந்தரோடையின் சில பகுதிகளில் கட்டிட வடிவமைப்புகள் காணப்படுகின்றன. தென்பகுதி சிங்கள சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து பார்த்துவிட்டு செல்லும் இடமான கந்தரோடை என்னும் இவ்வூரினை கதுறு கொடவாக மாற்றி பெயருடன் கூடியதான குறியீட்டு பலகை அங்கே பொருத்தப்பட்டுள்ளது. சிங்களத்திலும் தமிழிலும் இது காணப்படுகின்றது. சிங்கள சுற்றுலாப் பயணிகளுக்கு புரிவதற்காக எழுதப்பட்டிருந்தால் அதனை சிங்களத்தில் இவ்வாறு எழுதிவிட்டு தமிழில் கந்தரோடை என எழுதியிருக்கலாம். ஆனால் தமிழிலும் இவ்வாறு எழுதியுள்ளது அனைவரையும் சிந்திக்க வைக்கும் செயலாக அமைந்துள்ளது. இதுதவிர சுன்னாகம் என்ற தமிழ்ப் பெயரை தொல்பொருள் திணைக்களமானது சிங்கள மயமாக்கி ஹுனுகம என்ற பெயரைக் கொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
புத்த விகாரையி்ன் தோற்றத்தில் கந்தரோடையின் சில பகுதிகளில் கட்டிட வடிவமைப்புகள் காணப்படுகின்றன. தென்பகுதி சிங்கள சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து பார்த்துவிட்டு செல்லும் இடமான கந்தரோடை என்னும் இவ்வூரினை கதுறு கொடவாக மாற்றி பெயருடன் கூடியதான குறியீட்டு பலகை அங்கே பொருத்தப்பட்டுள்ளது. சிங்களத்திலும் தமிழிலும் இது காணப்படுகின்றது. சிங்கள சுற்றுலாப் பயணிகளுக்கு புரிவதற்காக எழுதப்பட்டிருந்தால் அதனை சிங்களத்தில் இவ்வாறு எழுதிவிட்டு தமிழில் கந்தரோடை என எழுதியிருக்கலாம். ஆனால் தமிழிலும் இவ்வாறு எழுதியுள்ளது அனைவரையும் சிந்திக்க வைக்கும் செயலாக அமைந்துள்ளது. இதுதவிர சுன்னாகம் என்ற தமிழ்ப் பெயரை தொல்பொருள் திணைக்களமானது சிங்கள மயமாக்கி ஹுனுகம என்ற பெயரைக் கொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
















