சனி, 25 செப்டம்பர், 2010

இலங்கை கடற்படை மீது மரைன் போலீசார் வழக்கு

ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை, தாக்கிய இலங்கை கடற்படையினர் மீது, மரைன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவங்களில், இதுவரை நூற்றுக்கணக்கான மீனவர்கள் பலியாகி உள்ளனர். கை, கால், கண்களை இழந்து ஊனமாகி வாழ்க்கையை தொலைத்தவர்கள் ஏராளம். இந்திய அரசு அவ்வப்போது இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும், சில நாட்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் இலங்கை கடற்படையினர், மீண்டும் தாக்குதலை தொடர்கின்றனர்.

யாழ் -ஆரிய குளம் பகுதியில் விபச்சாரம்

யுத்தம் முடிவடைந்து தற்போது தமிழர்  பகுதிகளை ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ள சிங்கள பேரினவாத அரசின் ஆட்சி கட்டு பாட்டு பகுதியில் சிக்கி இருக்கும் யாழ்பாணம் ஆரியகுள சந்தியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் விபச்சராம் நடைபெறுகின்றது . இந்த விடுதியில் வரும் வாடிக்கையாளர்களை குசி படுத்த பல பெண்கள் உள்ளனர் . இந்த விடுதிக்கு பொறுப்பாக உள்ளவருக்கு யாழ் மாநகர சபை சேர்ந்த முக்கிய நபர் ஒருவர் பேராதரவினை வழங்கி வருகின்றார் . இவரும் அந்த பெண்களிடம் சென்று தனது லீலைகளை நடத்தி முடித்து வருகின்றார் . இந்த செய்திகளை யாழில் உள்ள ஊடகங்கள் தெரிந்திருந்தும் வெளியிட முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளபட்டுள்ளனர் .

களியாட்டத்தால் காவு கொள்ளப்பட்ட உயிர்

தமிழ் வானொலி ஒன்றின் அனுசரனையுடன் துரையப்பா விளையாட்டு அரங்கில் நடந்த களியாட்ட நிகழ்வில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். துரையப்பா விளையாட்டரங்கில் உள்ள கால்ப் பந்து தடுப்பு காப்பு கம்பி மீது ஒன்றின் அருகில் நின்று களியாட்டத்தை பார்த்துக் கொண்டிருருந்த வேளை சன நெரிசல் காரணமாக கம்பி வளைந்து குறிப்பிட் இளைஞனின் தலை  மற்றும் நெஞ்சுப் பகுதியை தாக்கியதாக தெரியவருகின்றது. இதனால் படுகாயமடைந்து யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முந்தினம் இளைஞன் உயிரிழந்தார். மல்லாகம் நீதிமன்றவீதியை சேர்த 18 வயதுடைய சி.ஜஸ்ரின் என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

நினைவு நாள் வீரவணக்கங்கள்.

25.09.1992 அன்று பூநகரி பள்ளிக்குடா பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படையினரின் இரு மினி முகாம்கள் மற்றும் 62 காவலரண்கள் மீதான அழித்தொழிப்புத் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் அவர்கள் உட்பட்ட மாவீரர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

மஹிந்தவை அதிர்ச்சியில் ஆழ்த்திய குட்டி விமானம்

ஐக்கிய நாடுகள் சபையின் 65 ஆவது மாநாட்டில் உரையாற்றுவதற்கு நேற்று முன்தினம் புறப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவுக்கு அதிர்ச்சி தரும் வகை யிலான பதாகையொன்று  கண்ணில் பட்டது. இலங்கை சர்வாதிகாரி ராஜபக்ஷ, ஜெனரல் பொன்சேகாவை விடுதலை செய்" என்ற வசனங்களுடனான பதாகையொன்று வானத்தில் காணப்பட்டதாக இணைய தளமொன்று செய்தி வெளியிட்டதுடன் பதாகையின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை அலுவலகக் கட்டடத்துக்கு கிழக்குப் புறமாக வானத்தில் குட்டி விமானமொன்று இந்தப் பதாகையுடன் வலம் வந்து கொண்டிருந்தது.

திலீபனுடன் பதினோராம் நாள் - 25.09. 1987

இன்று திலீபனின் உடல் நிலையைப் பற்றி எழுத முடியாதவாறு என் கை நடுங்குகிறது. அவரது உடலின் சகல உறுப்புகளும் உணர்ச்சியின்றிக் காணப்பட்டன. கை, கால்கள் சில சமயம் தானாகவே அசைக்கின்ற. அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்பதை இதன் மூலம்தான் அறிய முடிகிறது. 'கோமா' வுக்கு முந்திய நிலையில் (Semi Coma) ஒரு நோயாளி எவ்வளவு கஷ்டப்படுவாரோ அதைப்போல், அவர் உடல் தன்னை அறியாமலே அங்குமிங்கும் புரளத் தொடங்கியது. அவர் படுத்திருந்தது சிறிய கட்டில்…. ஆகையால், தேவரிடம் சொல்லி, பெரிய கட்டிலொன்று கொண்டுவரச் செய்து, அதில் திலீபனைப் படுக்க வைத்தோம். அப்போதுதான் அவர் கட்டிலில் ஏற்கனவே சிறுநீர் கழித்திருந்ததைக் காண முடிந்தது.

வியாழன், 23 செப்டம்பர், 2010

ராஜபக்க்ஷாக்களின் தீவு?

ராஜபக்க்ஷ சகல அதிகாரங்களையும் கொண்டிருக்கும் இலங்கையுடன் விடயங்களை கையாள்வது தொடர்பாக முழு அளவிலான தந்திரோபாயத்தை இப்போது இந்தியா வகுத்துக்கொள்வது அவசியமானதாகும்.அதேசமயம், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுப்பொதி உட்பட அடிப்படை ஜனநாயக விதிமுறைகள் மற்றும் நோக்கங்களை இந்தியா மனதில் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு இந்தியாவிலிருந்து வெளியிடப்படும் "எக்கனோமிக் ரைம்ஸ் பத்திரிகை தெரிவித்திருக்கிறது. ராஜபக்ஷாக்களின் தீவு? என்று மகுடமிட்டு  அப்பத்திரிகை ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ளது.அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

திலீபனுடன் பத்தாம் நாள் -24-09-1987

பெற்றோர் – பிள்ளைகள் - சகோதரர்- உற்றார்- உறவினர்- நண்பர் இவர்களின் யாராவது நம் கண் முண்ணாயே முன்னாலே இறக்க நேரிடும்போது மனம் துன்பத்தில் மூழ்கிவிடுறது: கண்கள் கண்ணீர்ரை சொரிகின்றது. ஆனால், இவர்களின் ஒருவர் அணுஅணுவாகச் செத்துக் கொண்டிருப்பைப் பார்க்கும்போது………. துயரத்தின் எல்லைக்கே நாம் போய்விடுகின்றோம். உலகமே சில வினாடிக்குள் வெறுத்துப்போய்விடும். கண்களில் அழுவற்குக் கண்ணீர்கூட எஞ்சியிருக்காது. ஆனால், இவர்கள் ஓருவர் ஓரு சொட்டு நீர் கூடஅருந்தால்10 நதற்களாக எம் கண் முண்ணாதல் அணு அணுவாகச் சாவின் விளின் வழளிம்பில் நின்று தத்தளிப்பதைப் பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கும் போது ஏற்படும் மன வேதனை இருக்கிறதே- அப்பப்பா! ….. அதை வாய்விட்டுச் சொல்ல முடியாது. ஆத்துனை கொடுமை அது அனுபவித்தவர்களுக்கு மட்டும் புரியும் அது.

நமது ஈழநாடு நாளிதழின் அச்சகம் சிறிலங்கா சிறப்பு குற்றப் புலனாய்வுக் காவல்துறையினரால் மூடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ’நமது ஈழநாடு’ நாளிதழின் அச்சகம் சிறிலங்கா சிறப்பு குற்றப் புலனாய்வுக் காவல்துறையினரால் முத்திரையிட்டு மூடப்பட்டுள்ளதுடன் அதன் உரிமையாளர் பொன்னுத்துரை குருதேவ் கைது செய்யப்பட்டுள்ளார். நாவலர் வீதியில் உள்ள ’நமது ஈழநாடு’ அச்சகம் மற்றும் பணியகமே காவல்துறையினரால் மூடப்பட்டுள்ளது.

புதன், 22 செப்டம்பர், 2010

திலீபனுடன் ஒன்பதாம் நாள் -23-09-1987

அதிகாலை 5 மணியிருக்கும். கிழக்குப் பக்கத்தே தேர்முட்டி வாசலில் நின்றிருந்த வேப்ப மரத்தினின்று குயில் ஒன்று கூவிக் கொண்டிருக்கிறது. "கூ.......கூ.....குக்….கூ......" அதன் குரலில் தொனித்த விரக்தியின் சாயலைக் கேட்ட நான், தலீபனை ஏக்கத்துடன் பார்க்கின்றேன். அந்தக் குயில் எதை இழந்து இப்படிக் கூவுகிறதோ தெரியவில்லை. ஆனால் இந்தக் குயில்…? எம்மை - எம் இனத்தைக் காக்க தன்னையே இழந்து கொண்டிருக்கிறதே…. இந்த சிறு குயிலின் சோக கீதம் உலகத்தின் காதுகளில் இன்னுமா விழவில்லை…..? திலீபனை நன்றாக உற்றுப் பார்க்கிறேன். அவரின் உடலிலுள்ள சகல உறுப்புகளும் இன்று செயலற்றுக் கொண்டிருக்கின்றன

வெறுமை நிறைந்த மனங்களில்

சிதைவுகளால் மூடுண்டுள்ள நிலத்தில்
சாட்சிகள் ஒளிக்கப்பட்டுள்ளது…..
ஒளித்திருப்போர் ஒளிவீசாதபடி
அச்சமூட்டும் பேய்கள் நிறைந்து
பயங்களால் அழிகிறது வாழ்வு……

பதுங்குகுளியிலிருந்த வாழ்வு இப்போ
பயங்களால் நிறைகிறது.
கம்பிகளின் பின்னால் சாவுறையும் நினைவுகளோடு
காத்திருக்கும் மகன்களுக்காகவும் மகள்களுக்காகவும்
அம்மாக்கள் அழுதுவடிக்கும் கண்ணீரால்
காலம் தனது கவிதைகளை எழுதிச் செல்கிறது.

காணாமற்போன பிள்ளைகளையும் கணவர்களையும்
கனவுகளில் கண்ணுற்றுத் திடுக்குற்று விழித்த
கண்களிலிருந்து வரலாற்றின் கதைகள்
தோற்றுக் கொண்டிருக்கிறது…..

வெறுமை நிறைந்த மனங்களில் – எல்லாம்
வெற்றிடமாய் கிடக்கிறது
ஓர் சந்ததியின் வாழ்வு
சாவுகளால் அடை(ட)க்கப்பட்டுள்ளது…..

பிரசவிக்கப்பட்ட மறுகணமே கைவிடப்படும் குழந்தைகள்

முதல் நாள் பெய்த பெருமழையின் மிச்சமாக வானம் இருண்டு கிடந்தது. மெலிதான தூறல். விடிந்தும் விடியாத காலைப்பொழுது. தூக்கத்திலிருந்து விழித்துக்கொள்ளத் தொடங்கிய கிராமத்தின் வீதிகளில் இன்னமும் மனித நடமாட்டம் தொடங்கவில்லை. எங்கும் அமைதி போர்த்தப்பட்டி ருந்தது. அந்த அமைதி வெகு நேரம் நீடிக்கவில்லை.  வீதியோரமாய் தேங்கிநின்ற வெள்ள நீரைவிலக்கியவாறு வந்துகொண்டிருந்த வயோதிபர் ஒருவரின் காதில் திடீரென எழுந்த  முனகல் ஒலி விழுந்தது.வீதியில் யாருமில்லை. வீடுகளும் திறந்திருக்கவில்லை.  எங்கிருந்து அந்த முனகல் சத்தம் வருகின்றதென அவருக்கு ஒரே குழப்பம். சுற்றும் முற்றும் துழாவிப்  பார்த்த போதுதான்   ஒரு சாக்குப்பை அவரின் கண்ணில் பட்டது. அதிலிருந்தே பூனைக்குட்டியின்  மெலிதான குரல் போல ஒலி வந்துகொண்டிருந்தது. அவருக்கு எரிச்சலாக வந்தது.

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

திலீபனுடன் எட்டாம் நாள் -22-09-1987


 இன்று அதிகாலையிலே நிரஞ்சன் குழுவின் கொட்டகை போடும் வேலையை ஆரம்பித்து விட்டனர். முதல் நாள் இலட்சக்கணக்கான மக்கள் வந்திருந்ததால் போடப்பட்டிருந்த கொட்டகைகள் எல்லாம் சனக்கூட்டத்தினால் நிரம்பி வழிந்தன ஏராளமானோர் சுடுவெயிலில் கால்கடுக்க நிற்கவேண்டி ஏற்பட்டதால் நல்லூர் கோவில் மைதானம் முழுவதிலும் படங்குகளினால் கொட்டகை போடத்தொடங்கியிருந்தார்கள். உண்ணாவிரதம் ஆரம்பிக்கும்போது இத்தனை சனக்கூட்டம் வருமென் யாருமே எதிர்பார்க்கவில்லை. இலங்கையில் மட்டுமன்றி, இந்தியா மற்றும் பல வெளிநாடுகளில் கூட திலீபனின் தியாகப் பயணம் பற்றியே  பெரும்பாலானோர் பேசிக் கொண்டிருப்பதாகப், பத்திரிகைகளில் போட்டிருந்தார்கள்.

திங்கள், 20 செப்டம்பர், 2010

எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்- திருமலை அரசியல் துறை பொறுப்பாளர் எழிலனின் மனைவி

எனக்கு பின்விளைவுகள் வந்தாலும் பிரச்சினையில்லை. நான் பயப்படவில்லை. வந்தால் எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். வாழ வேண்டும் என்ற விருப்பத்துடன் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை இலங்கை அரசால் அமைக்கப்பட்டிருக்கின்ற நல்லிணக்க ஆணையத்தின் முன்பு விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலனின் மனைவி ஆனந்தி சசிதரன் சாட்சியமளித்துள்ளார்

'பேஸ்புக்' தயாரிக்கும் இரகசிய கையடக்கத் தொலைபேசி

பிரபல சமூக வலைபின்னல் தளமான 'பேஸ்புக்', கையடக்கத் தொலைபேசி ஒன்றை உருவாக்கி வருவதாக 'டெக்கிரன்ச்' இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது. மூன்றாம் நபர் வன்பொருளில் இயங்குவதற்கான இயங்குதளத்தினை ( ஒபரேடிங் சிஸ்டம்) 'பேஸ்புக்' தயாரித்து வருகின்றதென அத்தளம் குறிப்பிட்டிருந்தது. கூகுளின் 'அண்ரோயிட்' இயங்குதளத்தினைப் போன்ற ஒரு முயற்சியில் 'பேஸ்புக்' இறங்கியிருக்கலாமெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கூகுளின் 'அண்ரோயிட்' கையடக்கத் தொலைபேசிகள் தற்போது பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளவத்தையில் தமிழ் வர்த்தகர் ஒருவர் கடத்தல்

கொழும்பு வெள்ளவத்தையில் தமிழ் வர்த்தகர் ஒருவர்  வெள்ளை வானில் வந்த இனந் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளார் என குறித்த பிரதேச மக்கள்  தெரிவித்தனர். வெள்ளவத்தையில் புதிதாக திறக்ப்பட்ட வெதுப்பகம் ஒன்றின் உரிமையாளர் ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்