வெள்ளி, 12 நவம்பர், 2010

கார்த்திகை மாதமும் வந்துவிட்டதே எம் கண்மணிகள் துயில் எழுந்து பார்க்கப் போகின்றார்களே !! என் தாய் வந்து என்னை அணைக்கும் என்று அவர்களுக்குத் தெரியுமா? தாங்கள் துயில் எழும் கார்த்திகை நாளில் அவர்கள் விதானம் கூட களையப்பட்டுவிட்டதென்று......!!! ஆனாலும் எங்கள் மன விதான‌ங்களில் என்றென்றும் இருப்பார்கள். எவராலும் அசைக்கமுடியாத இடம் அது.......

வியாழன், 11 நவம்பர், 2010

9ம் ஆண்டு நினைவு வீரவணக்கங்கள்

யாழ். தச்சன்தோப்புப் பகுதியில் சிறிலங்கா கடற்படையினருடனான எதிர்பாராத மோதில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் கேணல் சிவநேசன், கப்டன் பருதியப்பன், கப்டன் தூயோன்ஆகிய மாவீரர்களின் 9ம் ஆண்டு நினைவு வீரவணக்கங்கள்

புதன், 10 நவம்பர், 2010

கழுத்தில் கட்டப்பட்டிருந்த சயனைட் குப்பிகளில்
இறுதி வார்த்தைகளை அவர் நிரப்பி விட்டுப் போயிருக்கிறார்கள்
கையில் இலக்கத்தகடுகள் கட்டிய கறுப்பு கயிறுகளில்
இருந்த முடிச்சுக்களினிடையில் துயர்க் காலம் படிந்திருக்கிறது
வரிச்சீருடையின் காற்சட்டை மட்டும்
அணிந்திருக்கும் இரண்டு எலும்புக்கூடுகளில்
அழிக்கப்பட்ட தாய்நிலத்தின் வரைபடம் கீறப்பட்டிருக்கிறது

எங்களுக்காகத் தங்களைக் களப்பலியாக்கிய மாவீரர் தினத்தைக் கேள்விக்குள்ளாக்கும் எவரும் நிச்சயம் எம்மவர்களாக இருக்க முடியாது. மாவீரர்களது தியாகத்தைத் தமக்கான அடையாளப்படுத்தலுக்கும், தமது சுய லாபத்திற்கும் பயன்படுத்த நினைக்கும் எவரும் தமிழனாகப் பிறந்திருக்க முடியாது..காலம் உங்களுக்கு வழங்கிய கடமைகளை நேர்மையான பாதையில் நின்ற...ு நிறைவேற்றுங்கள். மாவீரர்கள் தங்களது உயிரை அர்ப்பணித்து உயர்த்திப் பிடித்த தமிழீழ இலட்சிய நெருப்பை நீங்களும் கைகளில் ஏந்துங்கள். அவர்கள் கல்லறைகளில் உங்கள் கண்ணீரையும் காணிக்கையாக்குங்கள். மாவீரர் நாளில் ஆயிரம் ஆயிரமாகத் திரளும் தமிழ் மக்களுடன் நீங்களும் விளக்கேற்றி சத்தியம் செய்யுங்கள். ‘தமிழீழ இலட்சியம் நோக்கிய பாதையில் நாங்கள் எல்லோரும் ஒன்றாகஎழுவோம்’

ஒவ்வொரு தமிழனின் கடின உழைப்பில்தான் தங்கியுள்ளது ஈழத்தமிழரின் கையில் தமிழீழம் கிடைப்பது.!!!!

* மே 18க்கு முன் தழிழீழ விடுதலைப்போராட்டம் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தலைமையில் வீரத்தோடும் விவேகத்தோடும் களத்தில் நின்று போரடியது. ஆனால் மே18க்குப் பிறகு.... * தமிழீழ மண்ணில் ஈழத்தமிழர் படும் துயரத்தில் பங்கு கொள்ள புலம்பெயர் உறவுகள் சிலர் துடித்தநிலையில் தலைமைத்துவத்திற்காகப் போட்டி போட்டுக்கொண்டார்கள், சில பேராசை பேர்வழிகள்.....


* பெரியளவில் புலம்பெயர் மக்களின் பணத்தைச் சுருட்டியவர்கள் தலைமைத்துவத்திற்குச் சண்டையிடட்டும் நாம் ஏதோ சின்ன அளவில் முயல்வோம் என நேற்று முளைத்த சில காளான்கள்....

ஞாயிறு, 7 நவம்பர், 2010

மாவீரர்கள்..!!!

இவர்கள்
வைராக்கிய விருட்சத்தின்
விழுதுகள்!
ஏகாதிபத்தியத்தை ஏப்பம் விட்ட
அக்கினிக் குஞ்சுகள்!
குறைப் பிரசவங்களுக்கும்
கருச்சிதைவுகளுக்கும் மத்தியில்
பூரணமானவர்கள்
சூறாவளியினாலும் புயற் காற்றினாலும்
அசைக்க முடியாது போன
ஆலமரங்கள் !

ஈழத்தமிழா இனியாவது திருப்பிப்போடு தீபாவளியை ....

நேற்றய போராளி அரக்கனாக்கப்பட்டான் தீபாவளி வந்தது… இன்றய போராளி பயங்கரவாதியாக்கப்பட்டான்.. இனி என்ன வரும்…


அன்பான ஈழத்தமிழா தீபாவளி வாழ்த்துக்கள் கூறத்தொடங்கிவிட்டாயா நீ வாழ்க.. உனக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்..

செவ்வாய், 2 நவம்பர், 2010

வரலாறாய் வாழும் தமிழ்ச்செல்வன் – ச.பொட்டு

பிரிகேடியரின் இருபத்துமூன்றாண்டு கால விடுதலைப் பணியை எதிர்காலத்தில் ஆய்வு செய்கின்ற எந்தவொரு வரலாற்றாசிரியரும் அவருடைய விடுதலைப் பணியை பல்துறைகளினூடாகவும் ஆய்வு செய்யவேண்டியிருக்கும்.
ஏனெனில் அவருடைய விடுதலைப் பணியானது இரு கூறுகளாக நோக்கத் தக்கதாகவுள்ளது.
1. அரசியல் ரீதியிலானது.
2. படைத்துறை ரீதியிலானது.

1984 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராளியாக இணைந்து கொண்ட அவர் அமைப்பின் ஆரம்பகால வளர்ச்சியில் முழுமையாக ஈடுபட்டுள்ளார்.ஆரம்பத்தில் போராட்டத்தின் பின் தளமாக தமிழ்நாடு இருந்தபோது தமிழ்நாட்டில் ஒரு மருத்துவப் போராளியாக செயற்பட்ட அவர் பின்னர் களத்திற்கும், தளத்திற்குமிடையே தேசியத் தலைவர் அவர்களுக்கான இணைப்புச் செயற்பாட்டாளராக செயற்பட்டதன் மூலமாக அவரது ஆளுமை அன்றே தேசியத் தலைவர் அவர்களால் இனங்காணப்பட்டுள்ளதுடன் முதன்மையானதாகவுமிருந்துள்ளது.

திங்கள், 1 நவம்பர், 2010

நினைவு வீரவணக்கம்.

கப்டன் பிரான்சிஸ்

1948 இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து எந்த சிங்கள அரசு பதவிக்கு வந்தாலும் அந்த அரசின் பதவிக்காலத்திலும் பதவிக்காலத்தின் முடிவிலும் தமிழ் மக்கள் உரிமைகளில் ஏதோ ஒன்றை அவர்கள் இழந்துபோய் இருப்பார்கள். இவ்வாறு 48 இல் இருந்து ஒடுக்கப்பட்டுக் கொண்டிருந்த தமிழினம் தமிழ் அரசியல்வாதிகளின் கையாலாகாத்தனங்களை உணர்ந்து தன்னை சுதாகரித்து 1972 க்குப் பின்னர் தமிழ் இளைஞர்கள் மனங்களில் சிங்களத்துக்கு எதிராக போராட வேண்டும் என்ற உணர்வுகள் மேலோங்க தொடங்கியபோது ஆயுதப் போராட்டமே அதற்கான வழியென பல விடுதலை இயக்கங்கள் சிங்களத்துக்கு எதிராக போராடப் புறப்பட்டன .
சிங்களத்தின் திட்டமிட்ட குடியேற்றங்களினாலும் இன ஒடுக்கலாலும் மேலும் பாதிக்கப்பட்ட தென்தமிழீழமக்களும் தமிழ் மக்களின் விடுதலைக்கான தேவை மிக உணர்ந்து தம்மை பல இயக்கங்களில் இணைக்கத் தொடங்கினார்கள் . இவ்வாறு ஒரு ஆயுதப் போராட்டமே தமிழ் மக்களின் இருப்பை இலங்கையில் உறுதிபடுத்தும் என எண்ணிய சடாச்சரபவனும் 1983 இல் இயக்கத்தில் இணைய முடிவெடுக்கிறார் .

வெள்ளி, 29 அக்டோபர், 2010

எல்லா ஊரையும் போலதான் எங்கள் ஊரும்.....

முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்பு ஒவ்வொரு வீடுகளிலும் கறுப்புக் கொடி ஏற்றி கொண்டாடங்களைப் புறக்கணித்து வாழும் தமிழக செக்கடிக்குப்பத்து மக்கள்
ஆனால் புலத்திலோ எந்திரன் படத்திற்கு வரிசையில் நிற்கின்றது புலன் பெயர்ந்த ஈனத்தமிழினம்
“எல்லா ஊரையும் போலதான் எங்கள் ஊரும் ஒரு காலத்தில் இருந்தது. ஊரில் ஆறு ஓடாத குறையை சாராய ஆறு நிவர்த்தி செய்தது. மது மயக்கத்தில் எங்கள் சமூகம் அழிந்துகொண்டு வருவதைக் கண்டு மனம் வெறுத்துப் போனோம். தொடர்ச்சியான பிரச்சாரம் மூலமாகவே மனமாற்றத்தைக் கொண்டுவந்தோம். போதைப் பழக்கத்தால் உயிரிழந்த எங்கள் ஊர்க்காரர்களின் சோகக்கதைகளை இளைஞர்களுக்கு பரப்பினோம். மது, சிகரெட் பழக்கங்கள் உடல்நலத்தை கெடுப்பது மட்டுமின்றி குடும்பத்தையும் அழிக்கிறது என்பதை அவர்களுக்கு உணர்த்தினோம். அதன் பலனை இன்று அனுபவிக்கிறோம். எங்கள் இளைஞர்கள் இப்போது பத்தரைமாற்றுத் தங்கங்கள்” என்கிறார் ஊர்ப்பெரியவரான மா. அர்ச்சுனன்.






விவசாயத்தை பிரதானத் தொழிலாக கொண்டவர்கள் செக்கடிக்குப்பத்துக் காரர்கள். அறுபதுகளில் மேல்மலையனூருக்கு பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்ய பெரியார் வந்தார். செஞ்சிக்கு அண்ணா வந்தார். இவர்களது சிந்தனைகளை மேடைவாயிலாக உணர்ந்த ஒரு இளைஞர் கூட்டம், தங்களை பகுத்தறிவுப் பாதைக்கு திருப்பிக் கொண்டது. மூடநம்பிக்கைகளை ஒழித்து, தமிழுணர்வுக்கு முக்கியத்துவம் தர ஆரம்பித்தார்கள்.

வியாழன், 14 அக்டோபர், 2010

போராளிகளில் மேலும் 500 பேர் விடுவிப்பு

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் 500 பேர்  பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். இதற்கான வைபவம் வவுனியா கலாசார மண்டபத்தில் 15/10/ 2010 காலை நடைபெற உள்ளது  இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்த புலிகள் இயக்கச் சந்தேக நபர்கள் நாட்டில் உள்ள புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகின்றனர்?. புனர்வாழ்வுப் பயிற்சிகளை நிறைவு செய்த இவர்கள் கட்டம் கட்டமாக இவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை, நாட்டில் உள்ள புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வு பயிற்சிகளை நிறைவு செய்த நாலாயிரத்து ஐந்நூறு பேர் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அரசாங்கத்தின் படிப்பினைகள் மற்றும் இணக்கப்பாட்டுக்கான ஆணைக்குழு புறக்கணிப்பு

இலங்கை அரசாங்கத்தின் படிப்பினைகள் மற்றும்இணக்கப்பாட்டுக்கான ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியம் அளிக்க வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பை சர்வதேச மனித உரிமைக்குழுக்களான சர்வதேச மன்னிப்புச் சபை, ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் மற்றும் இண்டர் நேஷனல் கிறைசிஸ் குரூப் ஆகியவை நிராகரித்துள்ளன. இந்த நிலையிலேயே இந்த ஆணைக்குழுவால் சாட்சியமளிக்க வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பை இந்த மூன்று சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் மறுத்திருக்கின்றன. இந்த ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மை குறித்து இத்தகைய சர்வதேச அமைப்புக்கள் பல தடவைகள் முன்னரேயே விமர்சனங்களை முன்வைத்து வந்திருக்கின்ற போதிலும், அந்த விசாரணையை அவை நிராகரித்திருப்பது உள்ளூரிலும், சர்வதேச மட்டத்திலும் தற்போது ஒரு முக்கியமான அம்சமாகப் பார்க்கப்படுகின்றது.

சனி, 9 அக்டோபர், 2010

புலிகளின் பேச்சாளர் இளந்திரையனை இராணுவமே அழைத்துச் சென்றது

2009 ம் ஆண்டு மே மாதம் 17 ம் தேதி தனது கணவர் இராணுவத்தினரால் காயத்திற்கு சிகிச்சையளிக்க வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதாகக் கூறி அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அதன் பின்னர் தனது கணவனைப் பற்றிய தகவல்கள் இல்லை." என தெரிவித்தார். இளந்திரையன் மனைவி வனிதா சிவரூபன்.  கணவன் இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டு சில நாட்களின் பின்பு முகாமில் தங்கியிருந்தபோது, அங்கு சி.ஐ.டி. என தம்மை அறிமுகப்படுத்தி வந்த இருவர் கணவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறி தங்களை அழைத்துச் செல்ல வந்த போதிலும் தாம் மறுத்து விட்டதாகவும் தெரிவித்தார்

நினைவு வீர வணக்கங்கள்

1987.10.10 தமிழீழ வரலாற்றில் புதிய சரிதம் ஒன்றைப் படைக்கப்போகும் அந்த இரவு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. ஆணிவேர் ஆளப்பதிந்து கொண்டிருந்த எமது போராட்டத்தை அழித்துவிடும் நோக்குடன் தமிழீழத்திற்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் போராளிகளைத் தேடி, இருள் கிழித்து உலாவத் தொடங்கியது. எல்லா இடங்களிலும் எம்மவரின் விழிகள் பகை வரவை எதிர்பார்த்தபடி காத்திருந்தன. அப்போது நேரம் 1.15. கோப்பாய் கிறேசரடியில் நின்ற மகளிர் அணி வீதியில் போய்வரும் ஊர்திகள் யாருடையவை என அவதானித்தவாறு தாக்குதலுக்குத் தயாராக நிற்க, அதில் ஒருவராக தனது ஆ16 ஐ அணைத்துப்பிடித்தபடி மாலதியும் நிற்கின்றார்.

தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் ,02ஆம் லெப்டினன் மாலதியின் நினைவு நாளும்

மனிதகுல வரலாற்றில் கிறிஸ்துவுக்கு 6000 (ஆறாயிரம்) ஆண்டுகளுக்கு முன் தாய் வழிச் சமூகமே இவ்வுலகில் ஆட்சி புரிந்தது. காடுகளில் குழந்தைகள் குழுக்களாக வாழ்ந்த காலத்தில் தாயின் இராச்சியமே நடைபெற்றது. குழுவிற்கு தாய்தான் தலைமை தாங்கினாள். பெண்ணே பெரிதாக மதிக்கப்பட்டாள். தாய் என்ற சொல்லே மருவி தலைவி என்றாகிவிட்டது என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். தன்னுடைய இனத்தைக் காக்கும் சக்தியாக பெண் விளங்கினாள். அவளின் சக்திக்கு கட்டுப்பட்டு பின்னால் செல்ல அவளது சமூகம் தயாராகவிருந்தது அன்று. தனது இனத்தை பாதுகாக்கவும், அவர்களுக்கு உணவு கொடுக்கவும், தேவையானவற்றை தேடிக் கொடுக்கவும், தாயானவள் தன்னைப் பலி கொடுக்கவும் தயாராகவிருந்தாள் என்பது உயர்ந்த தியாகமாகும். அது அன்றே இருந்தது.