இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வியாழன், 25 நவம்பர், 2010
நீங்களெங்கள் நெஞ்சமதை வென்றீர்,வாழ்கின்றீர்..
நீங்களெங்கள் நெஞ்சமதை வென்றீர்,வாழ்கின்றீர்
கருகற்பொழுதினிலே சென்று விடிவானம் தெரிவதற்குள்
உயிரைக்கருகாக்கி களத்திலே காவியமானீர்
உங்கள் கனவுகள் என்றுமே அழியாது,
எம் மக்களின் விடுதலைக்காய் என்றும் நீங்கள்
எங்களுடன் நிற்பீர்கள்!!!
அளவெடுக்கமுடியாத அக்கினியின் நாவுகளே!!!!.....
எம்மாலே அளவெடுக்கமுடியாத அக்கினியின் நாவுகளே
எதிரியவன் யுத்தமுறைமையினை அழித்து
புதிய வரமொன்றின் போர்வடிவமானீரே
தொட்டுணர முடியாத சோதிப்பொருளாகி
கற்பனைக்கு அப்பாலும் கடந்த வியாபகமாய்
அற்புதத்தில் அற்புதமாய் ஆன அதிசயங்கள் - நீங்கள்
எதிரியவன் யுத்தமுறைமையினை அழித்து
புதிய வரமொன்றின் போர்வடிவமானீரே
தொட்டுணர முடியாத சோதிப்பொருளாகி
கற்பனைக்கு அப்பாலும் கடந்த வியாபகமாய்
அற்புதத்தில் அற்புதமாய் ஆன அதிசயங்கள் - நீங்கள்
தேசியத்தலைவருக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்...........
வல்லரசுகளே வியந்தவனே. !!!
வரலாறு போற்றும் உன்னை. - எம்
வாழ்வில் வந்த சூரியனே.!!! - நீ
வந்தாலே விடியும் காலை.
வள்ளலே உன்னை வாழ்த்த
வார்த்தைகள் போதவில்லை.
வரலாறு போற்றும் உன்னை. - எம்
வாழ்வில் வந்த சூரியனே.!!! - நீ
வந்தாலே விடியும் காலை.
வள்ளலே உன்னை வாழ்த்த
வார்த்தைகள் போதவில்லை.
புதன், 24 நவம்பர், 2010
இதயத்தில் நீக்கமறவெங்கும் நிறைந்த விடுதலைத்தீ
வந்தெம் மண்தொட்டு வளைப்போன் எவனெனினும்
கந்தகக் கணைகள் கருக்குமெனக் கூறி நடுநடுங்க வைத்தவரே
உங்களுக்கு எம் தேசம் என்றும் தலைவணங்கும்
எமையடக்கும் எதிரியவன் கதைமுடித்து
எய்யும் கணைகளுக்கே இலக்காகி பணிமுடித்தீர்
கொடியவனை வீழ்த்த வெடிசுமந்து சென்றாலும்
இதயத்தில் நீக்கமறவெங்கும் நிறைந்த விடுதலைத்தீ. நீங்கள்

ஈரவிழிகள் சொரிய உங்கள் நினைவுகளோடு.............
விண்ணிலம் பூத்த விரிகடளாய்
மரமசைத்த பண்பாடும் தென்றற் பசும்காற்றாய்
இந்த யுகத்தில் தோன்றும் ஊழித்தீச்சுடராய் பேரிடியாய்
வேண்டும் பொழுததிரும் வெடியாய்-எம்மண்ணில்
வீரமுரைக்க விளைந்த புலிகள்
ஈரவிழிகள் சொரிய உங்கள் நினைவுகளோடு
விளக்கேற்றிவைத்து விம்முகிறோம்

திங்கள், 22 நவம்பர், 2010
வேங்கைகளே!!!!
விண் வரும் மேகங்கள் பாடும் மாவீரரின் நாமங்கள் கூறும்
கண் வெளி கங்கைகள் பாயும் இவர் காவிய நாயகர் ஆகும்.
புதைந்த குழியில் இருந்து நீங்கள் எழுந்து வாருங்கள்!!!
எரிந்த இடத்தில இருந்து நீங்கள் நிமிர்ந்து வாருங்கள்!!!.
வேங்கைகள் ஆகி விடிவுகள் தேடி விழுந்த வீரர்களே!!!
தமிழ் வீடுகள் யாவிலும் விளக்குகள் ஆக எரியும் சுடர்களே!!!
இளமைக்கால இனிமைகள் யாவும் திறந்த வேங்கைகளே!!!!
தமிழ் இனத்திற்காக இரந்து தீயில் எரிந்த வீரர்களே...

கார்த்திகை பூவே!!!
கார்த்திகை பூவே!!! கார்த்திகை பூவே!!! கல்லறை மடியினில் மலர்ந்து விடு. கன்னங்கள் சிவக்கும் செவ்வந்திப் பூவே சில்லென்று குளிர்ச்சியை பொழிந்து விடு அழகாக பூக்கும் புது ரோஜாப் பூவே தனியாக வீரர்களின் புகழ் பாடு மனசெங்கும் வாசம் தரும் முல்லைப் பூவே துயில்கின்ற வீரர்களை தாலாட்டு மல்லிகைப் பூச் சிரிப்புடன் தங்கள் உயிர் பூவைத் தந்த வீரருக்கு எந்தப் பூவும் இணை இல்லையே.....
வெள்ளி, 19 நவம்பர், 2010
உயிர் விலைகள்..
விடுதலையின் பிரசவிப்பிற்காய்
வடுக்களை ஏற்றாய்
வசந்தத்தை தொலைத்து
வடிவிழந்து கிடக்கிறாய்
துடிக்கிறது மனசு
பாதகர் கால்கள்
பதிகிறது உன்னில்
வெஞ்சினம் கொள்வாய்
வேதனை வேண்டாம்
தேற்றிடு மனதை.
நீதிக்கான யுத்தம்
அர்த்தமற்றுப்போகுமா.....?
நிறைந்து கிடக்கும் வரலாறு
மறைந்திடுமா..........?
கொடுதலை என்னும்
நிலை வந்த போதும்
விடுதலை நிலை மாறா
தலைவன்............
உயிர் நீக்கத்தயங்காத
உத்தமர்கள்........
குடும்பச் சுமையோடு
விடுதலைச் சுமையை
முழுதாய்ச் சுமந்த மக்கள்.......
குடும்பமே எல்லையில் நின்று
கடுங்சமர் புரிந்த வரலாறு.......
இப்படி இப்படி
எத்தனையோ சுமந்தாய்
எல்லாமே அழிந்துபோகுமா.....?
உன் தேகமெங்கும்
திட்டுத்திட்டாய்
கொட்டுண்டு கிடக்கிறது
உயிர் விலைகள்
அத்தனையும் வீணாகிப்போய் விடுமா?
கிட்ட நின்று
எட்டிப்பார்த்தோம்
தொட்டிடத்தான் முடியவில்லை
ஆனாலும்.........
பாதைகள் மாறலாம்
உனக்கான
பயணம் ஓய்ந்திடுமா........????
வடுக்களை ஏற்றாய்
வசந்தத்தை தொலைத்து
வடிவிழந்து கிடக்கிறாய்
துடிக்கிறது மனசு
பாதகர் கால்கள்
பதிகிறது உன்னில்
வெஞ்சினம் கொள்வாய்
வேதனை வேண்டாம்
தேற்றிடு மனதை.
நீதிக்கான யுத்தம்
அர்த்தமற்றுப்போகுமா.....?
நிறைந்து கிடக்கும் வரலாறு
மறைந்திடுமா..........?
கொடுதலை என்னும்
நிலை வந்த போதும்
விடுதலை நிலை மாறா
தலைவன்............
உயிர் நீக்கத்தயங்காத
உத்தமர்கள்........
குடும்பச் சுமையோடு
விடுதலைச் சுமையை
முழுதாய்ச் சுமந்த மக்கள்.......
குடும்பமே எல்லையில் நின்று
கடுங்சமர் புரிந்த வரலாறு.......
இப்படி இப்படி
எத்தனையோ சுமந்தாய்
எல்லாமே அழிந்துபோகுமா.....?
உன் தேகமெங்கும்
திட்டுத்திட்டாய்
கொட்டுண்டு கிடக்கிறது
உயிர் விலைகள்
அத்தனையும் வீணாகிப்போய் விடுமா?
கிட்ட நின்று
எட்டிப்பார்த்தோம்
தொட்டிடத்தான் முடியவில்லை
ஆனாலும்.........
பாதைகள் மாறலாம்
உனக்கான
பயணம் ஓய்ந்திடுமா........????
வெள்ளி, 12 நவம்பர், 2010
மாரி மழை பொழியும்,
மண் கசியும், ஊர்முழுதும்.
வாரியடித்து வெள்ளம் வான்பாயும்,
கார்த்திகையில் பூமி சிலிர்த்துப்போய் பேறடையும்,.
துயிலுமில்ல சாமிகளுக்கான சந்தன நாள் வந்தடையும்.
மாவீர செல்வங்கள் மண் கிழித்து வெளிவந்து
சாவீரச்செய்தி சாற்றி உறவுரைத்து பேசும் நாள்.
விழியில் பொலபொலன்று நீர்த்தாரை வீசும் நாள்.
தமிழீழம் விடியும் என நம்பி பாடும் நாள்.
விதைத்த பயிர்கள் நிமிர்ந்தழகாய் கூடும் நாள்.
குன்றி குரல் நடுங்கி குற்றவேல் செய்த இனம்
இன்றிந்த நிமிர்வுக்கு இட்டமுதல் விதைப்பு.
சாவைக்கொடுத்தேனும் தமிழ்வாழ்வு என நிமிர்ந்து
பேசும்படியான புதுவாழ்வின் புலர்வுதினம்.

கார்த்திகை மாதமும் வந்துவிட்டதே எம் கண்மணிகள் துயில் எழுந்து பார்க்கப் போகின்றார்களே !! என் தாய் வந்து என்னை அணைக்கும் என்று அவர்களுக்குத் தெரியுமா? தாங்கள் துயில் எழும் கார்த்திகை நாளில் அவர்கள் விதானம் கூட களையப்பட்டுவிட்டதென்று......!!! ஆனாலும் எங்கள் மன விதானங்களில் என்றென்றும் இருப்பார்கள். எவராலும் அசைக்கமுடியாத இடம் அது.......
வியாழன், 11 நவம்பர், 2010
9ம் ஆண்டு நினைவு வீரவணக்கங்கள்
யாழ். தச்சன்தோப்புப் பகுதியில் சிறிலங்கா கடற்படையினருடனான எதிர்பாராத மோதில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் கேணல் சிவநேசன், கப்டன் பருதியப்பன், கப்டன் தூயோன்ஆகிய மாவீரர்களின் 9ம் ஆண்டு நினைவு வீரவணக்கங்கள்
புதன், 10 நவம்பர், 2010
கழுத்தில் கட்டப்பட்டிருந்த சயனைட் குப்பிகளில்
இறுதி வார்த்தைகளை அவர் நிரப்பி விட்டுப் போயிருக்கிறார்கள்
கையில் இலக்கத்தகடுகள் கட்டிய கறுப்பு கயிறுகளில்
இருந்த முடிச்சுக்களினிடையில் துயர்க் காலம் படிந்திருக்கிறது
வரிச்சீருடையின் காற்சட்டை மட்டும்
அணிந்திருக்கும் இரண்டு எலும்புக்கூடுகளில்
அழிக்கப்பட்ட தாய்நிலத்தின் வரைபடம் கீறப்பட்டிருக்கிறது

எங்களுக்காகத் தங்களைக் களப்பலியாக்கிய மாவீரர் தினத்தைக் கேள்விக்குள்ளாக்கும் எவரும் நிச்சயம் எம்மவர்களாக இருக்க முடியாது. மாவீரர்களது தியாகத்தைத் தமக்கான அடையாளப்படுத்தலுக்கும், தமது சுய லாபத்திற்கும் பயன்படுத்த நினைக்கும் எவரும் தமிழனாகப் பிறந்திருக்க முடியாது..காலம் உங்களுக்கு வழங்கிய கடமைகளை நேர்மையான பாதையில் நின்ற...ு நிறைவேற்றுங்கள். மாவீரர்கள் தங்களது உயிரை அர்ப்பணித்து உயர்த்திப் பிடித்த தமிழீழ இலட்சிய நெருப்பை நீங்களும் கைகளில் ஏந்துங்கள். அவர்கள் கல்லறைகளில் உங்கள் கண்ணீரையும் காணிக்கையாக்குங்கள். மாவீரர் நாளில் ஆயிரம் ஆயிரமாகத் திரளும் தமிழ் மக்களுடன் நீங்களும் விளக்கேற்றி சத்தியம் செய்யுங்கள். ‘தமிழீழ இலட்சியம் நோக்கிய பாதையில் நாங்கள் எல்லோரும் ஒன்றாகஎழுவோம்’ஒவ்வொரு தமிழனின் கடின உழைப்பில்தான் தங்கியுள்ளது ஈழத்தமிழரின் கையில் தமிழீழம் கிடைப்பது.!!!!
* மே 18க்கு முன் தழிழீழ விடுதலைப்போராட்டம் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தலைமையில் வீரத்தோடும் விவேகத்தோடும் களத்தில் நின்று போரடியது. ஆனால் மே18க்குப் பிறகு.... * தமிழீழ மண்ணில் ஈழத்தமிழர் படும் துயரத்தில் பங்கு கொள்ள புலம்பெயர் உறவுகள் சிலர் துடித்தநிலையில் தலைமைத்துவத்திற்காகப் போட்டி போட்டுக்கொண்டார்கள், சில பேராசை பேர்வழிகள்.....
* பெரியளவில் புலம்பெயர் மக்களின் பணத்தைச் சுருட்டியவர்கள் தலைமைத்துவத்திற்குச் சண்டையிடட்டும் நாம் ஏதோ சின்ன அளவில் முயல்வோம் என நேற்று முளைத்த சில காளான்கள்....
* பெரியளவில் புலம்பெயர் மக்களின் பணத்தைச் சுருட்டியவர்கள் தலைமைத்துவத்திற்குச் சண்டையிடட்டும் நாம் ஏதோ சின்ன அளவில் முயல்வோம் என நேற்று முளைத்த சில காளான்கள்....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)