புதன், 1 டிசம்பர், 2010

இனப்பிரச்சினையின் தொடக்கம், சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலானதல்ல.....!

முப்பதாண்டு கால ஆயுதப்போராட்டம் காரணமாக தமிழர்களுக்கு மட்டுமே பிரச்சினை இருப்பதாக, இலங்கைக்கு வெளியே கருத்து நிலவுகின்றது. சிக்கலான முப்பரிமாண இனப்பிரச்சினையை தீர்ப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. சிங்களவர்களுக்கும் தமிழருக்கும் இடையிலான முரண்பாடுகள். தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான முரண்பாடுகள். சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களின் தாழ்வுச் சிக்கல்கள், போன்றன தனித்தனியே ஆராயப்பட வேண்டியவை.

ஞாயிறு, 28 நவம்பர், 2010

டக்ளஸ் - மாவை இணைந்து செயற்படத் தயார் ! மாவை தெரிவிப்பு

13 வது திருத்தச் சட்டத்தை அமுல் படுத்தி அதன் மூலம் எமது மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் இணைந்து செயற்பட நாமும் தயாராகவுள்ளோம் என்றும் மாவை. சேனாதிராஜா மேலும் தெரிவித்தார். மீள்குடியேற்றத்திற்கு தயாராகவுள்ள பகுதிகளில் மீளக்குடியேறவுள்ள மக்களுடனான சந்திப்பு கீரிமலை நகுலேஸ்வரக் கோயில் முன்றலில் நடைபெற்ற மக்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவத்துள்ளார்.

வெள்ளி, 26 நவம்பர், 2010

இன்று தமிழீழ மாவீரர் நாள் ,

கடைசிக்கணம் வரை தமிழ் ஈழமே தாகம் என விலைமதிப்பற்ற தம் உயிரை தியாகம் செய்த நமது மாவீரர்களை நினைவு கூரும் இந்தப்புனிதநாளில், எதிரிகளின் நயவஞ்சக செயற்பாடுகளை உதாசீனப்படுத்தி தேசியவிடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்டுள்ள அடுத்தகட்ட நகர்வான அதிஉச்ச இராஜ தந்திர  நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கி முடிந்தவரை நாம் தமிழர்களாக தலைநிமிர்ந்து நிற்போம்!

இன்று தமிழீழ மாவீரர் நாள் ,

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள் காலத்தின் குறிப்பேட்டில் கால் பதித்துச்செல்பவர்கள் சாவு அவர்களைத் தீண்டுவதில்லை அவர்கள் காலத்தின் காவியமாக எமது தேசத்தின் ஆன்மாவில் காலமெல்லாம் நிலைத்திருப்பவர்கள்

இன்று தமிழீழ மாவீரர் நாள் ,

விடுதலை வேண்டிக்களமாடி வீழ்ந்த எமது வீரப்புதல்வர்களை நாம் எமது நினைவில் உயிர்ப்பித்துப் பூசிக்கும் நன்நாள் . தமிழ் இனத்தின் தேசிய வாழ்வு நிலைப் பதற்காகத் தமது சொந்த வாழ்வை ஈகம்செய்த சுதந்திர வீரர்களுக்கு நாம் சிரந்தாழ்த்தி வணக்கம் செலுத்தும் புனித நாள் . எமது இனத்தின் இருப்பிற்காக , தமது இன்னுயிரை ஈகம் செய்த உன்னதமானவர்களை ,
எமது நெஞ்சத்தின் நினைவாலயத்தில் நாம் நினைவு கூரும் நன்நாள் .
விடுதலை என்பது வாழ்வின் அதியுயர்ந்த விழுமியம் .
அந்த விழுமியத்தை இலட்சியமாக வரித்து ,
அதற்காக வாழ்ந்து, அதற்காகப் போராடி ,
அதற்காக மடிந்த எமது மாவீரர்கள் மகத்தான மனிதப் பிறவிகள் .
அவர்களது வாழ்வும் வரலாறும் எமது வீர விடுதலைக் காவியத்தின் உயிர்வரிகள். மாவீரர்களே,
தமிழர் தேசம் உங்களுக்குத் தலைவணங்குகிறோம் .

முட்டாள்கள் சிங்களவர்களா? தமிழர்களா?

போர் நிறைவடைந்து சுமார் இரண்டு வருடங்களை எட்டுவதற்கிடையில் தமிழர்கள் படும் அவஸ்தை சொல்லிலடங்காது.

சிங்களவர்களின் ஆதிக்கம் குடாநாட்டில் அதிகரித்திருப்பதுடன், நிலவளம், கடல்வளம் என்பவற்றை அபகரித்தும் செல்கின்றனர், அத்துடன் வெளிநாட்டு பணத்தையும் வறுகுவதற்கு என பல தமிழ் ஏமாற்று பேர்வழிகள் அரசியல் பின்னனியில் செயற்பட்டுவருகின்றனர். இதற்கு சிங்கள கூட்டும் ஒருபுறம்.

கார்த்திகை பூ எடுத்து வாடா..!

கார்த்திகை பூ எடுத்து வாடா.!
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா...!




இனம் வாழ இவர் செய்தார் தியாகம்.!
இவர் எண்ணம் வாழ நாம் செய்வோம் யாகம்.!
உறவுகளுக்காய் உயிர் கொடுத்த உத்தமரே..!
மக்களின் துன்ப துயரங்களில் பங்குகொண்டு அவர்களின் சுமைகளை நாமும் தாங்கி அவர்களின் கஷ்டங்களைப் போக்குவதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை.

- வே.பிரபாகரன்

வியாழன், 25 நவம்பர், 2010

தேசியத்தலைவருக்கு எங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.........

நீங்களெங்கள் நெஞ்சமதை வென்றீர்,வாழ்கின்றீர்..


தாய் நிலத்தின்மீது தளராத காதலுடன் நின்றீர்,நெருப்பானீர்
நீங்களெங்கள் நெஞ்சமதை வென்றீர்,வாழ்கின்றீர்
கருகற்பொழுதினிலே சென்று விடிவானம் தெரிவதற்குள்
உயிரைக்கருகாக்கி களத்திலே காவியமானீர்
உங்கள் கனவுகள் என்றுமே அழியாது,
எம் மக்களின் விடுதலைக்காய் என்றும் நீங்கள்
எங்களுடன் நிற்பீர்கள்!!!

அளவெடுக்கமுடியாத அக்கினியின் நாவுகளே!!!!.....

எம்மாலே அளவெடுக்கமுடியாத அக்கினியின் நாவுகளே
எதிரியவன் யுத்தமுறைமையினை அழித்து
புதிய வரமொன்றின் போர்வடிவமானீரே
தொட்டுணர முடியாத சோதிப்பொருளாகி
கற்பனைக்கு அப்பாலும் கடந்த வியாபகமாய்
அற்புதத்தில் அற்புதமாய் ஆன அதிசயங்கள் - நீங்கள்

தேசியத்தலைவருக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்...........

வல்லரசுகளே வியந்தவனே. !!!
வரலாறு போற்றும் உன்னை. - எம்
வாழ்வில் வந்த சூரியனே.!!!  - நீ
வந்தாலே விடியும் காலை.
வள்ளலே உன்னை வாழ்த்த
வார்த்தைகள் போதவில்லை.

புதன், 24 நவம்பர், 2010

இதயத்தில் நீக்கமறவெங்கும் நிறைந்த விடுதலைத்தீ

வந்தெம் மண்தொட்டு வளைப்போன் எவனெனினும்
கந்தகக் கணைகள் கருக்குமெனக் கூறி நடுநடுங்க வைத்தவரே
உங்களுக்கு எம் தேசம் என்றும் தலைவணங்கும்
எமையடக்கும் எதிரியவன் கதைமுடித்து
எய்யும் கணைகளுக்கே இலக்காகி பணிமுடித்தீர்
கொடியவனை வீழ்த்த வெடிசுமந்து சென்றாலும்
இதயத்தில் நீக்கமறவெங்கும் நிறைந்த விடுதலைத்தீ. நீங்கள்

ஈரவிழிகள் சொரிய உங்கள் நினைவுகளோடு.............

விண்ணிலம் பூத்த விரிகடளாய்
மரமசைத்த பண்பாடும் தென்றற் பசும்காற்றாய்
இந்த யுகத்தில் தோன்றும் ஊழித்தீச்சுடராய் பேரிடியாய்
வேண்டும் பொழுததிரும் வெடியாய்-எம்மண்ணில்
வீரமுரைக்க விளைந்த புலிகள்
ஈரவிழிகள் சொரிய  உங்கள் நினைவுகளோடு
விளக்கேற்றிவைத்து விம்முகிறோம்