வெள்ளி, 10 டிசம்பர், 2010

ஒக்ஸ்போர்ட்டுக்குச் சென்றவர் நாட்டின் தலைவரே, நாட்டாமை அல்ல" கெஹகலிய சீற்றம்

லண்டன் ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றுவதற்கு கொழும்பிலிருந்து நாட்டாமையை அனுப்பவில்லை எனவும் பொது நலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் நாட்டின் தலைவரேசென்றதாகத் தெரிவித்த

அணு குண்டு தயாரிக்கும் முயற்சியில்பர்மா!

பர்மாவில் உள்ள சர்வாதிகார ஜிந்தா ஆட்சியாளர் இரகசியமான முறையில் அணுகுண்டு, ஏவுகணைகள் போன்றவற்றை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. பர்மாவின் அடந்த காட்டுப்பகுதியில் நிலத்தடியில் மிகக் கவனமாக உருவாக்கப்பட்ட கட்டிடப்பகுதியில்

பிரச்னைகள் இல்லாத மனிதனே கிடையாது!

வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் பிரச்னைகள் கூட ஒரு அனுபவம் தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்னைகள் இருக்கும். அதுபோலவே, ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒவ்வொரு விதமான தீர்வு இருக்கும்.எனவே, பிரச்னைகளைக் கண்டு பயந்துவிடாமல்

போர்க்குற்றங்கள் தொடர்பான ஒளிப்படத்தில் போராளியொருவர் தற்போது அடையாளம் காணப்பட்டார்.!!!!!!

மல்லாவி, யோகபுரம் 02 ம் யுனிற்றை சேர்ந்த சந்திரசேனன் - வினோதன் (இயக்க பெயர்- இமையவன் .வயது 20 ) என்பவராவார் 2007 / 03ம் மாத மளவில் இயக்கத்தில் இணைந்து கொண்ட இவர் கிளிநொச்சி மருத்துவ மனை,,புதுக்குடியிருப்பு மருத்துவமனை ஆகிய வைத்தியசாலைகளில் மருத்துவ போராளியாக காயமடைந்து வரும் பொது மக்களுக்கான பணியினை மேற்கொண்டிருந்தார். போர் உக்கிரமடைந்த காலப்பகுதியில் மாத்தளன் மற்றும்,,முள்ளிவாய்க்கால் பகுதி தற்காலிக வைத்தியசாலைகளில் தனது கடமைகளை மேற்கொண்டிருந்த வேளை காயமடைந்த பொது மக்கள்,, போராளிகளுடன் இராணுவத்தால் 2009 / 05 /18 கைது செய்யபட்டுள்ளார்.. மேலும் இவரது சகோதரனான சந்திரசேனன் -விருந்தன் வயது 18 என்பவரும் படுகாயமடைந்த நிலையில் இராணுவத்தால் கைது செய்ய பட்டு காணமல் போய்யுள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை????

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, தாம் இரண்டாம் தவணையிலும் அதே பதவியில் நீடிக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக, இன்னர் சிற்றி பிரஸ் குற்றம் சுமத்தியுள்ளது. இதன் அடிப்படையிலேயே அவரது தற்போதைய செயற்பாடுகள் காணப்படுவதாக அது தெரிவித்துள்ளது.

மகிந்தவின் முட்டாள்தனம் !!!

“பிரிட்டனுக்குச் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, உறங்கிக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளைத் தட்டி எழுப்பி விட்டுள்ளார். அவர்கள் போராட் டங்களை மீள ஆரம்பிப்பதற்கான வாசலையும் திறந்து விட்டுள்ளார்’ என்று ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா நேற்றுக் குற்றஞ்சாட் டினார்.

இயற்கையும் வஞ்சிக்கிறது - மழை,வெள்ளத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிப்பு!

சிறிலங்காவில் கடந்த இரண்டு வாரங்களாகப் பெய்து கடும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் வடபகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வியாழன், 9 டிசம்பர், 2010

விரிந்துக் கிடக்கின்ற ஈர நிலத்தில் விடுதலைக் கனவு சுமந்த கண்கள் கட்டப்பட்டு..மறுத்த உரிமைகளின் மேல் வெகுண்டெழுந்த கைகள் இறுக்கப்பட்டு… தகிக்கின்ற சுதந்திர தாகத்திற்காக, இறுதியில் ஆடையும் அவிழ்க்கப்பட்டு ..சிறு முனகலோடு சிதைகிற சகோதரன். வன்புணர்வின் வலியில் கசங்கிய மலராய்.. உதிர முகத்துடன் உரு கலைக்கப்பட்டு ..வீழ்ந்து கிடக்கின்ற சகோதரி.. இறுகிக் கிடக்கும் உடலில் போர்த்தப்பட்டிருக்கும் உடையை காற்று கூட விலக்க துணியாமல் கண் கலங்கி நிற்கையில்.. வக்கிர சிரிப்புடன் ஆடை அவிழ்ந்து காட்டும் மன நோய்க்கு உலகம் வைத்திருக்கும் பேர்தான் பயங்கரவாத எதிர்ப்புப் போர்..

இந்த உலகில் வாழ்கிற சாதாரண மனிதர்களைப் போல் உரிமைகளுடன் கூடிய வாழ்க்கைக்காக ..விடுதலை வேட்கையுடன் போராடியமாவீரர்களை பயங்கரவாதிகள் என சித்தரித்த சர்வதேச சமூக வல்லாதிக்கத்தின் முகத்திற்கு முன் அலை அலையாய் விழுந்துக் கொண்டே இருக்கின்றன...

தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து. சீமான் விடுதலை ஆவார்

திரைப்பட இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிபதிகள் தர்மாராவ், ஹரிபரந்தாமன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கப்படுவதை கண்டித்து, சென்னையில் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய இறையாண்மைக்கு எதிராக சீமான் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.பரபரப்பான அந்த சூழ்நிலையில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு பத்திரிகையாளர்களை சந்திக்க சீமான் வந்தபோது, போலீசார் அவரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

வன்னி மக்கள் மழைத் தண்ணீரைத் தவிர வேறு தண்ணியினை கண்டதேயில்லை. அவர்களுக்கு தண்ணீரைக் காட்டியவர்களே நாங்கள் தான் என்று அடிதடி அமைச்சர் மேர்வின் சில்வா சபையில் கூச்சலிட்டிருக்கின்றார்!!!

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாத்தின் போது தனது உரையில் வன்னி மக்களை மிகவும் கீழ்த்தரமானவர்கள் என்றும் அவர்கள் எதனையும் கண்டதில்லை என்ற தொனிப்பட கீழ்த்தரமான சொற்பிரயோகங்களைக் கையாண்டு உரையாற்றியிருக்கின்றார்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களில் இந்தியா பாரிய பொறுப்பு -அமெரிக்கா

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு வகிப்பதாக, அமெரிக்க இராஜாங்க தகவல்கள் தெரிவித்துள்ளன. புதிதாக வெளியாகியுள்ள விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் தகவல்கள் இவற்றை உறுதி செய்துள்ளன. விக்கிலீக்ஸ் வழங்கிய தகவல் அடிப்படையில், த வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் என்ற சஞ்சிகை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

புதன், 8 டிசம்பர், 2010

இசைப்பிரியாவுடனுள்ள பெண் போராளி இனம் காணப்பட்டுள்ளார்

மல்லாவியை சொந்த இடமாக கொண்ட குணலிங்கம் - உசாளினி (இயக்க பெயர் - அகல்விழி. வயது 19 ) இவர் ஒரு புதிய போராளியாவார் ..இராணுவ கொடுமைகள் காரணமாக 2008 / 05 ம் மாதமளவிலே போராளியாக இணைந்தவர் . தமிழீழ தொலை காட்சி செய்தி சேகரிப்பாளராக பணி புரிந்துள்ளார் என உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மலேசியாவுக்குப் புறப்பட்ட விமானம். வந்தடைந்த ராஜபக்ச

இலண்டன் விஜயத்தின் போது எதிர்பாராத விதமாகச் சந்தித்த நெருக்கடிகளை அடுத்து அவசரமாக கொழும்பு புறப்பட்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் அவரது குழுவினரும் மலேசியாவுக்குப் புறப்பட்ட விமானம் ஒன்றையே கொழும்புக்குத் திசைதிருப்பி வந்ததாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொலை வழக்கில், டக்ளஸ் . தலைமறைவு குற்றவாளி என்பதை ரத்து செய்ய முடியாது.

ஆனந்தன் என்ற டக்ளஸ் தேவானந்தா, . இவர் முன்பு `இ.பி.ஆர்.எல்.எப்' என்ற போராளி இயக்கத்தில் இருந்தார். சென்னை சூளைமேடு பகுதியில் அந்த இயக்கத்தை சேர்ந்த சிலருடன் அவர் வசித்து வந்தார். கடந்த 1.11.86 அன்று அந்த பகுதியில் ஏற்பட்ட தகராறில் திருநாவுக்கரசு என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் டக்ளஸ் தேவானந்தா உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு சென்னை 4-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
 

ஈரானில் தயார் நிலையில் தற்கொலைப் படகுகள்!

ஈரானின் கடற்படையினரால் பெருந்தொகையான தற்கொலைப் படகுகள் உருவாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பயங்கர வெடிமருந்துகள் இணைக்கப்பட்ட 9000 க்கும் அதிகமான வேகப் படகுககளை ஈரானின் கடற்படை உருவாக்கியுள்ளது இந்தப் படகுகள் பாரசீக வளைகுடாப் பிரதேசத்தில் காவல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன. ஈரானின் இச்செயற்பாடு அமெரிக்காவுக்கு விழுந்த பலத்த அடியாகவே அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்

தாயின் மடி செல்ல தவமிருக்கிறேன். "சிறையின் மடியில்" – பேரறிவாளன்

“எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் இந்த சோப்பு கட்டிதான் பயன்படுத்துகிறேன்.” என்ற தொலைக்காட்சி விளம்பரத்தினைப் பார்க்கும் ஒவ்வொரு கணப்பொழுதிலும் “எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் சிறைக்குள் நான் இருந்தேன்.” என வேடிக்கையாக நினைப்பதுண்டு. ஆம்! தாயின் மடியிலிருந்து நேரே சிறையின் மடிக்குள் விழுந்தவன் நான். பிறந்து 19 ஆண்டு 10 திங்கள் கரம் பிடித்து நட்ந்தவன். அடுத்த 19 ஆண்டு 6 திங்களாக சிறைக்கம்பிகள் பற்றியபடி நகர்பவன். மாந்தர் உரிமை குறித்தும், மண்ணின் பெருமை குறித்தும் கருத்துகளை விதைத்தது, என் தாயின் மடி எனில், விதைத்ததை வளர்த்து, காத்தது சிறையின் மடி.
மிக நீண்ட நெடுங்காலமாகவே ஒரு கொலையாளி என்பதாகவே சித்தரிக்கப்பட்டு, அக்கரையுள்ள சக்திகளால் பரப்புரை செய்யப்பட்ட எனது வாழ்வின் நெடுங்கதை, விரிப்பின் கொள்கைகளால் மட்டுமே நிரம்பி கிடக்கும். “மனிதனை நினை”என்பதையே தனது வாழ்வின் கொள்கையாக கொண்டுழைத்த மனித நேயர் அய்யா தந்தை பெரியாரையும் “அன்பின் வழியது உயர்நிலை” என்றுரைத்த உலகப் பொதுமறை தந்த பெருநாவலரையும் விழிகளாக்க் கொண்டு வழி நின்றவன்.எனது நடுவ புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பின் போது, ஒரு நாள் எனது தந்தையின் மடல் வந்தது. அதில் எனது தந்தை, “புதல்வ, உன்னை விசாரணை அதிகாரிகள் அடிக்கிறபோது அவர்கள் அடிக்க வசதியாக உனது முதுகை வளைத்துக்கொடு, ஏனெனில் அவர்கள் நமது சூத்திர தமிழர்கள்” (தாக்கியோர்கள் சூத்திரர்கள் அல்ல என்பது வேறு செய்தி) எனக் குறிப்பிட்டுவிட்டு “இதைத்தான் அய்யா பெரியார் நமக்கு போதித்தார்” என முடித்திருந்தார்.