பெரும்பான்மையினரின் மனத்தை புண்படுத்தாத வகையில் அரசியல் தீர்வு ஒன்றை தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
செவ்வாய், 14 டிசம்பர், 2010
திங்கள், 13 டிசம்பர், 2010
14-12-2010 தேசத்தின் குரல் அவர்களின் 4ம் ஆண்டு நினைவில் நாம்...
பாலாண்ணையை நான் ஆழமாக நேசித்தேன். விடுதலை இயக்கம் என்ற மாபெரும் குடும்பத்தில் ஒரு மூத்த தலைமகனாக பிதாமகனாக மூன்று தசாப்தங்கள் வாழ்ந்தவர் அவர். நானும் அவரை அப்படித்தான் நோக்கினேன். ஒரு குடும்பமாக ஒன்றுசேர்ந்து ஒத்திசைவாக ஒன்றித்திருந்த நாட்களில் அவர் ஒரு சாதாரண மனிதப்பிறவி அல்ல என்பதைக் கண்டுகொண்டேன். மோசமாகச் சுகவீனமுற்று தினம்தினம் சாவோடு போராடியபோதும், தாங்கமுடியாத உடல்உபாதைகளால் வருந்தியபோதும், தளர்ந்துபோகாத உறுதிப்பாடு அவரிடம் இருந்தது. அவரின் இந்த இலட்சிய உறுதி எனது நெஞ்சத்தைத் தொட்டுநின்றது. அவர் துன்பத்தால் துவண்டபோதெல்லாம் எனது ஆன்மாவும் கலங்கியழுதது.
-தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன்-
-தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன்-
“கடற்படையின் 60வது ஆண்டு நிறைவு நிகழ்வுகளில் ஐ.நா பாதுகாப்பு சபையின் நிரந்தர அங்கத்துவம் பெற்ற ஐந்து நாடுகள் பங்கேற்றதானது விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் சிறிலங்கா அரசாங்கம் பெற்றுக் கொண்ட வெற்றிக்கு அனைத்துலகம் வழங்கிய அங்கீகாராகும்“ -கோத்தாபய
ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்தர அங்கத்துவம் பெற்ற ஐந்து நாடுகளில் ரஸ்யாவும், சீனாவும் இரண்டு போர்க்கப்பல்களை கொழும்பில் நடைபெற்ற நிகழ்வுக்காக அனுப்பி வைத்திருந்தன.
ஈரானின் சக்திமிக்க நாசகாரியும் விரைவு..??
ஈரானியக் கடற்படை தளபதி மற்றும் ஈரானிய கடற்படையின் உயரதிகாரிகள் கொண்ட குழுவினர் அந்நாட்டின் பாரிய நாசகாரிக் கப்பலுடன் இலங்கை வந்துள்ளனர்.
மனித உரிமை மீறும் நாடான இந்தியா எங்களது நண்பன் ..
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக உள்ள இந்தியா, ஏராளமான மனித உரிமை பிரச்சனைகளையும் எதிர்கொண்டு வருகிறது என்று அமெரிக்க அரசின் மனித உரிமைச் செயலர் போஸ்நர் கூறியுள்ளார
தேசிய கீதம் தமிழ் மொழியிலும் பாடப்படுவது பெருமைக்குரிய ஒரு விடயம் என்பது அரசாங்கத்திற்கு புரியவில்லையா? அல்லது நீங்கள் இந்நாட்டை சேர்ந்தவர்கள் அல்லவென தமிழ் மக்களுக்கு அரசாங்கம் செய்தி விடுக்கின்றதா?- மனோ கணேசன்
தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்படுவதற்கு எதிராக அமைச்சரவையில் நடைபெற்ற கருத்து பரிமாற்றம் தொடர்பில் அவர் அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்படுவதை தடைசெய்வது தொடர்பாக அமைச்சரவையில் கருத்து பரிமாறப்பட்டது உண்மையாகும்.
ஞாயிறு, 12 டிசம்பர், 2010
இனப்படுகொலை குற்றங்களை வரும் டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் ஐ.நா வுக்கு எழுதி ராஜபக்சேவை யும் ஏனையவர்களையும் கைது செய்ய வழிவகை செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.!!!!
எல்லோரும் எழுதுவோம்! சர்வதேச விசாரணை அமைய எழுதுவோம்!
முள்ளிவாய்க்கால், தமிழர் மனங்களை இன்றும் நிறைத்து நிற்கும் வடு. அந்த பேரவலத்திற்கு இன்னும் பரிகாரம் தேடுகின்றனர் ஈழத்தமிழ் மக்கள்.
முள்ளிவாய்க்கால், தமிழர் மனங்களை இன்றும் நிறைத்து நிற்கும் வடு. அந்த பேரவலத்திற்கு இன்னும் பரிகாரம் தேடுகின்றனர் ஈழத்தமிழ் மக்கள்.
சனி, 11 டிசம்பர், 2010
தீர்வுக்காக ஒன்றிணைந்து செயற்பட தமிழ்க்கட்சிகள் அனைத்தும் இணக்கம் 6 பேர் கொண்ட குழுவும் நியமனம்??
இனப்பிரச்சினைக்குப் பொருத்த மான ஒரு தீர்வுத் திட்டத்தை முன் வைக்கும் வகையில் இணைந்து செயல்பட தமிழ்க் கட்சிகள் அனைத் தும் இணங்கி உள்ளன. பொதுத் தீர்வுத் திட்டம் ஒன்றை எட்டும் வகையில் அடிப்படைக் கொள்கை களில் இணக்கப்பாட்டை எட்டுவது தொடர்பில் ஆரா´வதற்காக 6 பேர் கொண்ட குழு ஒன்றும் நியமிக்கப் பட்டுள்ளது.
ராஜபக்ச சகோதரர்கள், இராணுவ அதிகாரிகள் கதை முடிவுறும் நிலை.....
ஒரு நெடுங்கால ஆரசியல் பிரச்சனைக்குப் போர் நடவடிக்கை மூலம் தீர்வு கண்டதற்காகப் பாராட்டப்பட்ட நாடு தானே பிரச்சனைக்குரிய நாடாக இருப்பது சமகால உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கிறது. மே 2009 ற்குப் பிந்திய சிறிது காலம் சிறிலங்கா புகழின் உச்சிக் கொப்பில் இடம் பிடித்தது.
ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல; அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு; ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்துவிடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக்கொள்கின்றது ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது
போர்க்குற்ற ஓளிப்படத்தில் இரு பிள்ளைகளின் தந்தையொருவர் அடையாளம் காணப்பட்டார்.
யாழ்ப்பாணம் . உரும்பிராயை சொந்த இடமாக கொண்ட தங்கராசா - இராசகுலசிங்கம் (சிவாஸ்) 42 வயதையுடைய குடும்பஸ்தர் ஆவார் .இவரின் தாயாரான பக்கியம் அக்கா என்பவர் இந்திய இராணுவ காலப்பகுதியில் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர் என்பதும் , இவரது இரு சகோதரிகள் மண்ணிற்காய் தம்மை ஆகுதி ஆக்கியவர்கள் என்பதும் அறிய வந்துள்ளது.
கேட்பவன் கேணையனாக இருந்தால் சொல்பவனுக்கு என்ன ?ஜனாதிபதி ஒக்ஸ்பேட்டில் பேசியிருந்தால் தீர்வு வந்திருக்குமாம் !
லண்டன் ஒக்ஸ்போர்ட் யூனியனில் ஆற்றவிருந்த உரையில் இலங்கைக் கான அரசியல் தீர்வு குறித்து சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக் கூறவிருந்தேன். ஆனால் உள்ளூர் சக்திகள் சர்வதேச சக்திகளுடன் இணைந்து அதைத் தடுத்துவிட்டன என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று நாடாளுமன்றத் தில் தெரிவித்தார். வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான
விக்கிலீக்ஸ் ஆவணங்கள் பூமிக்கு அடியில் சுமார் 100 அடி ஆழத்தில் ....
ஒட்டுமொத்த உலக நாடுகளையும் உலுக்கிய விக்கிலீக்ஸ் இணைய தளத்தின் ஆவணங்கள் ஜேம்ஸ்பாண்ட் பட பாணியில் அதி நவீன பாதாள அறை ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
வெள்ளி, 10 டிசம்பர், 2010
சர்வதேச மனித உரிமைகள் தினமும் தமிழீழ மக்களும்: ச.வி.கிருபாகரன்
கடந்த 62 ஆண்டுகளுக்கு முன்னர் (1948 டிசம்பர் 10ம் திகதி) ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட சர்வதேச மனித உரிமை பிரகடனம் ஜக்கிய நாடுகள் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சகல சர்வதேச சட்டங்களின் முன்னோடியாக அமைந்துள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)















