புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் சிலர் தொடர்ச்சியாக தமது நிம்மதியான வாழ்க்கையை குழப்பிவருகின்றார்கள் என்ற நிலைப்பாடு வட பகுதியில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் கூறியுள்ளார்.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
செவ்வாய், 14 டிசம்பர், 2010
தானைத்தலைவன் கண்மணிபோல் காத்த எம் தமிழினத்தின் முகவரி நீங்கள்
நாம் என்று உம்மை இழந்தோமோ இன்றுவரை இழப்புகளையே அனுபவிக்கின்றோம் ஒருவேளை முகவரியை இழந்த துரதிஷ்டம்தானோ?ஒவ்வொரு தமிழனும் இல்லை ஒட்டு மொத்த தமிழினமே இவர் தமிழீழத்திற்கு ஆற்றிய தொண்டிற்குபோற்றி வணங்கவேண்டும் . இந்த நான்காம் ஆண்டு நினைவு நாளன்று மட்டும்மல்ல
ஒவ்வொரு தினமுமே வணங்கவேண்டும் அண்ணா அவர்களுக்கு எமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
நாம் என்று உம்மை இழந்தோமோ இன்றுவரை இழப்புகளையே அனுபவிக்கின்றோம் ஒருவேளை முகவரியை இழந்த துரதிஷ்டம்தானோ?ஒவ்வொரு தமிழனும் இல்லை ஒட்டு மொத்த தமிழினமே இவர் தமிழீழத்திற்கு ஆற்றிய தொண்டிற்குபோற்றி வணங்கவேண்டும் . இந்த நான்காம் ஆண்டு நினைவு நாளன்று மட்டும்மல்ல
ஒவ்வொரு தினமுமே வணங்கவேண்டும் அண்ணா அவர்களுக்கு எமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
இறுதிக்கட்டச் சமரின் போது விடுதலைப்புலிகள் வகுத்த உத்திகள் என்பது சிறீலங்கா அரசை போர்க்குற்றங்களில் சிக்கவைப்பதை முதன்மைப்படுத்தியதாகவே இருந்தது.- வேல்ஸ் அருஷ்
சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனஅழிப்பு, போர்க்குற்றங்கள் தொடர்பில் புலம்பெயர் தமிழ் மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்கள் கடந்த வாரம் ஒரு முக்கிய திருப்பத்தை தந்துள்ளது.
போர்க்குற்ற விசாரணை மாதிரிக்கடிதம்....
கீழுள்ள மின்னஞ்சலுக்கு நீங்கள் மாதிரிகடிதம் தேவை என எழுதினால் உங்களுக்கு மாதிரிக்கடிதம் கிடைக்கும். அதில் உங்கள் முகவரி கையெழுத்து ஆகியவற்றை பூர்த்தி செய்து போர்குற்றவிசாரணைக்கமிசனுக்கு அனுப்பி வைக்கலாம்
unpanel@gmail.com
unpanel@gmail.com
விடுதலைப் புலிகள் அமைப்பு மிகவும் ரகசியமான ஒரு அமைப்பு என்றும், அதில் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது -ஆணைக்குழுவின் முன்னர் கருணா
பெரும்பான்மையினரின் மனத்தை புண்படுத்தாத வகையில் அரசியல் தீர்வு ஒன்றை தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
திங்கள், 13 டிசம்பர், 2010
14-12-2010 தேசத்தின் குரல் அவர்களின் 4ம் ஆண்டு நினைவில் நாம்...
பாலாண்ணையை நான் ஆழமாக நேசித்தேன். விடுதலை இயக்கம் என்ற மாபெரும் குடும்பத்தில் ஒரு மூத்த தலைமகனாக பிதாமகனாக மூன்று தசாப்தங்கள் வாழ்ந்தவர் அவர். நானும் அவரை அப்படித்தான் நோக்கினேன். ஒரு குடும்பமாக ஒன்றுசேர்ந்து ஒத்திசைவாக ஒன்றித்திருந்த நாட்களில் அவர் ஒரு சாதாரண மனிதப்பிறவி அல்ல என்பதைக் கண்டுகொண்டேன். மோசமாகச் சுகவீனமுற்று தினம்தினம் சாவோடு போராடியபோதும், தாங்கமுடியாத உடல்உபாதைகளால் வருந்தியபோதும், தளர்ந்துபோகாத உறுதிப்பாடு அவரிடம் இருந்தது. அவரின் இந்த இலட்சிய உறுதி எனது நெஞ்சத்தைத் தொட்டுநின்றது. அவர் துன்பத்தால் துவண்டபோதெல்லாம் எனது ஆன்மாவும் கலங்கியழுதது.
-தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன்-
-தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன்-
“கடற்படையின் 60வது ஆண்டு நிறைவு நிகழ்வுகளில் ஐ.நா பாதுகாப்பு சபையின் நிரந்தர அங்கத்துவம் பெற்ற ஐந்து நாடுகள் பங்கேற்றதானது விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் சிறிலங்கா அரசாங்கம் பெற்றுக் கொண்ட வெற்றிக்கு அனைத்துலகம் வழங்கிய அங்கீகாராகும்“ -கோத்தாபய
ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்தர அங்கத்துவம் பெற்ற ஐந்து நாடுகளில் ரஸ்யாவும், சீனாவும் இரண்டு போர்க்கப்பல்களை கொழும்பில் நடைபெற்ற நிகழ்வுக்காக அனுப்பி வைத்திருந்தன.
ஈரானின் சக்திமிக்க நாசகாரியும் விரைவு..??
ஈரானியக் கடற்படை தளபதி மற்றும் ஈரானிய கடற்படையின் உயரதிகாரிகள் கொண்ட குழுவினர் அந்நாட்டின் பாரிய நாசகாரிக் கப்பலுடன் இலங்கை வந்துள்ளனர்.
மனித உரிமை மீறும் நாடான இந்தியா எங்களது நண்பன் ..
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக உள்ள இந்தியா, ஏராளமான மனித உரிமை பிரச்சனைகளையும் எதிர்கொண்டு வருகிறது என்று அமெரிக்க அரசின் மனித உரிமைச் செயலர் போஸ்நர் கூறியுள்ளார
தேசிய கீதம் தமிழ் மொழியிலும் பாடப்படுவது பெருமைக்குரிய ஒரு விடயம் என்பது அரசாங்கத்திற்கு புரியவில்லையா? அல்லது நீங்கள் இந்நாட்டை சேர்ந்தவர்கள் அல்லவென தமிழ் மக்களுக்கு அரசாங்கம் செய்தி விடுக்கின்றதா?- மனோ கணேசன்
தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்படுவதற்கு எதிராக அமைச்சரவையில் நடைபெற்ற கருத்து பரிமாற்றம் தொடர்பில் அவர் அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்படுவதை தடைசெய்வது தொடர்பாக அமைச்சரவையில் கருத்து பரிமாறப்பட்டது உண்மையாகும்.
ஞாயிறு, 12 டிசம்பர், 2010
இனப்படுகொலை குற்றங்களை வரும் டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் ஐ.நா வுக்கு எழுதி ராஜபக்சேவை யும் ஏனையவர்களையும் கைது செய்ய வழிவகை செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.!!!!
எல்லோரும் எழுதுவோம்! சர்வதேச விசாரணை அமைய எழுதுவோம்!
முள்ளிவாய்க்கால், தமிழர் மனங்களை இன்றும் நிறைத்து நிற்கும் வடு. அந்த பேரவலத்திற்கு இன்னும் பரிகாரம் தேடுகின்றனர் ஈழத்தமிழ் மக்கள்.
முள்ளிவாய்க்கால், தமிழர் மனங்களை இன்றும் நிறைத்து நிற்கும் வடு. அந்த பேரவலத்திற்கு இன்னும் பரிகாரம் தேடுகின்றனர் ஈழத்தமிழ் மக்கள்.
சனி, 11 டிசம்பர், 2010
தீர்வுக்காக ஒன்றிணைந்து செயற்பட தமிழ்க்கட்சிகள் அனைத்தும் இணக்கம் 6 பேர் கொண்ட குழுவும் நியமனம்??
இனப்பிரச்சினைக்குப் பொருத்த மான ஒரு தீர்வுத் திட்டத்தை முன் வைக்கும் வகையில் இணைந்து செயல்பட தமிழ்க் கட்சிகள் அனைத் தும் இணங்கி உள்ளன. பொதுத் தீர்வுத் திட்டம் ஒன்றை எட்டும் வகையில் அடிப்படைக் கொள்கை களில் இணக்கப்பாட்டை எட்டுவது தொடர்பில் ஆரா´வதற்காக 6 பேர் கொண்ட குழு ஒன்றும் நியமிக்கப் பட்டுள்ளது.
ராஜபக்ச சகோதரர்கள், இராணுவ அதிகாரிகள் கதை முடிவுறும் நிலை.....
ஒரு நெடுங்கால ஆரசியல் பிரச்சனைக்குப் போர் நடவடிக்கை மூலம் தீர்வு கண்டதற்காகப் பாராட்டப்பட்ட நாடு தானே பிரச்சனைக்குரிய நாடாக இருப்பது சமகால உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கிறது. மே 2009 ற்குப் பிந்திய சிறிது காலம் சிறிலங்கா புகழின் உச்சிக் கொப்பில் இடம் பிடித்தது.
ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல; அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு; ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்துவிடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக்கொள்கின்றது ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது
போர்க்குற்ற ஓளிப்படத்தில் இரு பிள்ளைகளின் தந்தையொருவர் அடையாளம் காணப்பட்டார்.
யாழ்ப்பாணம் . உரும்பிராயை சொந்த இடமாக கொண்ட தங்கராசா - இராசகுலசிங்கம் (சிவாஸ்) 42 வயதையுடைய குடும்பஸ்தர் ஆவார் .இவரின் தாயாரான பக்கியம் அக்கா என்பவர் இந்திய இராணுவ காலப்பகுதியில் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர் என்பதும் , இவரது இரு சகோதரிகள் மண்ணிற்காய் தம்மை ஆகுதி ஆக்கியவர்கள் என்பதும் அறிய வந்துள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
















