ஐ நா தலைமைச் செயலர் பான் கீ மூனால் அமைக்கப்பட்டிருக்கும் மூவர் குழு விசாரணைகளை நடத்துவதற்காக மட்டுமே இலங்கை செல்ல வேண்டும் என ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் கூறியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலருக்கு இலங்கை விடயங்கள் தொடர்பில் ஆலோசனை கூற அமைக்கப்பட்டிருக்கும் மூவர் குழு, இலங்கை ஜனாதிபதியால் அமைக்கப்பட்டிருக்கும் படிப்பினை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினரை மட்டுமே சந்திக்கும் நோக்கில் அங்கு சென்றால் அது பயனற்றதாக இருக்கும் என்று மனித உரிமைகள் அமைப்பான ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் தெரிவித்துள்ளது.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
செவ்வாய், 21 டிசம்பர், 2010
யாழ்நகரில் நடைபெறவிருந்த மனித உரிமைகள் மாநாடு EPDP யால் தடுக்கப்பட்டது !
யாழ்.பொது நூலகத்தில் நடத்தப்படவிருந்த மனித உரிமைகள் தொடர்பான மாநாடு கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டது குறித்து ஆழ்ந்த கவலையும் விசனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ளவிருந்த பேராளர்கள் இந்த மாநாடு நிறுத்தப்பட்டது தொடர்பாக கடும் அதிருப்தியும் கவலையும் அடைந்துள்ளனர். மனித உரிமைகள் இல்லமும் சிந்தனைக் கூடமும் இணைந்து கடந்த 18,19 ஆம் திகதிகளில் யாழ்.பொது நூலகத்தில் இந்த மாநாட்டை நடத்தவிருந்தன.
போர்க்குற்றங்கள் தொடர்பில் தெளிவான விசாரணை அவசியம்: வில்லியம் ஹேக்
இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தெளிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் வில்லியம் ஹேக் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். "ஸ்கை நியூஸ்' ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறுவலியுறுத்தியுள்ளார்.
சங்கானையில் தொடரும் துப்பாக்கிமுனை கொள்ளைகள்.
சங்கானைப் பகுதியில் துப்பாக்கி முனையில் நிகழ்த்தப்படும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்வதால் அப்பகுதி மக்கள் பெரும் பீதியுடனேயே இரவுப்பொழுதைக் கழிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. திங்கட்கிழமை இரவு சங்கானை, பிரதான வீதி யில் 7 ஆம் கட்டைப் பகுதியில் செல்லத்துரை திருஞானம் என்ப வரது வீட்டில் புகுந்த ஆயுததாரிகள் 15 பவுணுக்கும் மேற்பட்ட நகைகளை அபகரித்துச் சென்றுள்ளனர்.
இந்தியாவின் 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் பம்மாத்து .பெரும்பாலானவை புனரமைப்புக்குள்ளேயே அடங்கும்.
புதுடில்லி முன்னர் தெரிவித்தது போன்று வடக்கு, கிழக்குப் பகுதிகளில் 50 ஆயிரம் வீடுகள் புதிதாகக் கட்டிக் கொடுக்கப்பட மாட்டா என்று தெரியவந்துள்ளது. இந்தத் திட்டத்துக்கு என 300 மில்லியன் அமெரிக்க டொலர் இந்தியாவால் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் பெரும்பகுதி சேதமடைந்த வீடுகளைப் புனரமைத்துக் கொடுப்பதற்கே வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 5,000 வீடுகள் மட்டுமே புதிதாக அமைத்துக் கொடுக்கப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. ஏனைய 45,000 வீடுகளும் புனரமைப்பு மட்டுமே செய்யப்பட உள்ளன எனவும் அது தெரிவிக்கிறது. 30 வருடங்களாகப் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு உதவும் திட்டத் தின் கீழ் இந்தியா 50,000 வீடுகளைக் கட்டித்தரும் என்று பிரதமர் மன் மோகன்சிங் அறிவித்திருந்தார். இந்தியாவின் இந்தத் திட்டம் நேரடியாக ஈழத் தமிழர்களுக்கு வழங் கப்படும் என்றும் திட்டப் பயனாளிகள் நேரடியாக இந்தியாவாலேயே தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தமிழக முதல்வர் மு.கருணாநிதியிடம் நேரில் உறுதியளித்திருந்தார்.
ஞாயிறு, 19 டிசம்பர், 2010
சிங்களக் குடியேற்றங்களை அமைக்கவே செஞ்சிலுவை வெளியேற்றப்படுகின்றது!!
சிங்களக் குடியேற்றங்களை அமைப்பதற்காகவா இலங்கையின் வட மாகாணத்திலிருந்து சர்வதேச செஞ்சிலுவை சங்க குழு வெளியேற்றப்படுகின்றது என்று பிரித்தானிய நாடாளுமன்ற பொதுச் சபையில் – தொழில் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.
சனி, 18 டிசம்பர், 2010
"போர் குற்றம்"-ஐநா குழுவுக்கு அனுமதி
இலங்கை அரசு, அதன் முன்னைய நிலைப்பாட்டிலிருந்து விலகி, ஐநாவின் தலைமைச் செயலரால் நியமிக்கப்பட்டுள்ள மனித உரிமைக் குழுவை நாட்டுக்குள் அனுமதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெற்றதாக கூறப்பட்ட போர்க்கால குற்றங்கள் பற்றி ஆராய்ந்து பான் கிமூனுக்கு ஆலோசனை வழங்குவதற்காக மூவரடங்கிய நிபுணர்குழு நியமிக்கப்பட்டமையை இலங்கை அரசாங்கம் முன்னர் கடுமையாக விமர்சித்து வந்தமை குறிப்பிடத்தக்கது..
வெள்ளி, 17 டிசம்பர், 2010
ஜீவன் கூல் தொடர்பான செய்தி தவறானது! சண்முகலிங்கன் பதில் துணைவேந்தரானார்!
யாழ்.பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தராக பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் தெரிவானதாக அறிவிப்பு வெளியாகியுள்ளமை பொய்யான தகவல் என்று உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவு தொடர்பில் கடந்த சிலமாதங்களாக பல்வேறு கருத்துக்கள் வெளியாகியிருந்த நிலையில் பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்நிலையில் குறித்த தகவல் தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக சமூகத்திடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அந்தச் செய்தியில் உண்மையில்லை என்று பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
யாழ். பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் கூல்!
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் நியமிக்கப்பட்டுள்ளார்.முன்னர் துணைவேந்தராக இருந்த சண்முகலிங்கத்தின் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து பேராசிரியர் கூலை அந்த பதவிக்கு நியமிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.ஜனாதிபதியினால் கடந்த புதன்கிழமை பரிந்துரை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பதவிக்கான அறிவித்தல் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.இந்தநிலையில் தமது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது ஏற்கனவே ஒருமுறை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அவர்களால் ரட்ணஜீவன் கூல் யாழ் பல்கலைகழக துணைவேந்தராக நியமிக்கப்பட்ட போதும், அப்போதைய மணவர்களின் எதிர்ப்பு காரணமாக அவர் அப்பதவியை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்
பெண் போராளிகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய துரோகி கருணா-விக்கிலீக்ஸ்
கடந்த 2007ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி இடப்பட்டு, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு இலங்கையில் உள்ள தூதரகத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட இரகசிய ஆவணங்களை நேற்றையதினம் விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்தது.
வியாழன், 16 டிசம்பர், 2010
விடுதலைப்புலிகள் இயக்கம் மாற்று தோற்றங்களில் செயற்படுகிறது
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு விட்டாலும், அது மாற்று தோற்றங்களில் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாக வெளிநாட்டு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் அவதானத்துடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆசிய – மத்திய கிழக்கு ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், முழு ஆசியாவையும் அச்சுறுத்தும் இயலுமைக் கொண்டது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
லியாம் பொக்ஸின் இலங்கை விஜயம் ஒத்தி வைப்பு
பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் லியாம் பொக்க்ஷ், தமது இலங்கைக்கான விஜயத்தை ஒத்தி வைத்தள்ளதாக பி.பி.சி தெரிவித்துள்ளது. இந்த விஜயத்துக்கு பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சு வெளிப்படுத்திய எதிர்ப்பைத் தொடர்ந்து, அவர் இந்த விஜயத்தை கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும் லியாம் பொக்ஸின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நீடிக்கும் நோக்கில், இலங்கை தாக, லியாம் பொக்ஸின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எப்படி இருந்தவர் இப்படியாகிவிட்டார் !!!!!!....
எனக்கான பாதுகாப்பு உத்தரவாதத்தினை வழங்கியிருந்தவர் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த கத்துருசிங்கவே. நாட்டையும் மக்களையும் காக்கும் தலையாய கடமையில் அவர் நீடூழி வாழ வேண்டும் என இமெல்டா சுகுமார் தெரிவித்திருந்தார். புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ் இணையங்களை நடத்தி வருகின்றவர்கள் அரசிற்கு விரேதமானவர்கள். அவர்கள் மக்களுக்கும் விரோதமானவர்கள். அவர்கள் பொய்யான வதந்திகளை பரப்பி வருகின்றார்கள். இணையங்களில் அவர்கள் பிழையான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் குற்றம் சாட்டியுள்ளார்
வடக்குகிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் தாயகம் அல்ல: எல்லாவல மேதானந்ததேரர்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் தாயகம் அல்ல. அதற்கான எவ்விதமான சட்டபூர்வ ஆதாரங்களும் இல்லை. அவ்வாறு கூறுவதற்கு உரிமையில்லை. ஆனால் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் தாயக பூமி அல்ல என்பதற்கும் அது சிங்கள மக்களால் ஆளப்பட்ட பிரதேசங்கள் என்பதற்கும் எம்மிடம் அதிகளவான சான்றுகள் உள்ளன. மேலும் வன்னி என்பது தமிழ் சொல் அல்ல. அது சிங்கள சொல்லாகும். அங்கு 1583 விஹாரைகள் இருந்துள்ளன. ஆறாவது பரகும்பா அரசனின் பிரதிநிதியான சபுமல் குமாரயாவே யாழ்ப்பாணத்தின் நல்லூர் கோயிலை கட்டினார் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற மேதானந்த தேரர் தெரிவித்தார்.
தமிழரைச் செம்மணியிலும் முள்ளி வாய்க்காலிலும் கொன்று குவித்த சரத் பொன்சேகாவுக்குத் தமிழரையே வாக்களிக்கக் கேட்டதை நினைத்துப் பார்த்தால் ஆறறிவு பற்றிப் பேசுவது ???
இன்று தமிழரின் உரிமைப் பிரச்சினையாக ஸ்ரீ லங்காவின் தேசிய கீதத்தை தமிழில் பாடும் உரிமை மறுக்கப் பட்ட விடையம் மிகப் பெரிய அளவில் பேசப் படுகிறது. இதைப் பேசுபவர் தமிழரின்
கடவுள்தான் இனித் தமிழர்களைக் காப்பாற்றவேண்டும் -தந்தை செல்வா
10 வருட செயற்பாட்டுத் திட்டமொன்றின் கீழ் 2011இல் ‘மும்மொழி இலங்கை’ என்ற திட்டத்தினை ஆரம்பிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன்.இத்திட்டம்.....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)














