இறுதிக் கட்ட போரின்போது விடுதலைப்புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுக்கு மேலாக இராணுவம் வியந்துபோன இன்னொரு விடயம்தான் அவர்களின் இயந்திரப் படகுத் தொழில்நுட்பமாகும்.அதன் காரணமாக கடற்புலிகளின் இயந்திரப் படகுகள் மற்றும் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டிருந்த தொழில்நுட்பக் குறிப்புகள் என்பவற்றைக் கொண்டு கடந்த வருடம் தொடக்கம் கொழும்பை அண்மித்த வெலிசறவில் இயந்திரப் படகு தயாரிக்கும் திட்டத்தை கடற்படை ஆரம்பித்தது.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
திங்கள், 27 டிசம்பர், 2010
விடுவிக்கப்பட்டவர்கள் மீண்டும் கைதாகின்றனர்
புனர்வாழ்வளிக்கப்பட்டதாக கூறப் பட்டு விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் பலர் விசாரணைக்கென்று காரணம் கூறப்பட்டாலும் கைது செய்யப்படும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்திருப்பதாக தெரிகிறது. யுத்த காலத்திலும் யுத்தத்திற்குப் பின்னரும் சரணடைந்த பல போராளிகள் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். பின்னர் இவர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்.
சனி, 25 டிசம்பர், 2010
தேசிய கீதம் சிங்களத்தில் இசைக்கப்படுவதில் தவறில்லை: டக்ளஸ்
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கலந்து கொள்ளும் தேசிய நிகழ்வுகளின் போது தேசிய கீதம் சிங்களத்திலேயே இசைக்கப்படுவது வழக்கம், அதில் தவறிருப்பதாக கூறமுடியாது என்று டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்துகின்றார். அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்வும் கூட பிரதமர் கலந்து கொள்ளும் ஒரு தேசிய நிகழ்வு என்ற வகையில் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்படுவதில் தவறில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.
ஓ! இறைமகனே! யேசு பாலகா!
ஓ! இறைமகனே! யேசு பாலகா! எங்கள் மண்ணில் நடப்பவற்றை ஒரு கணம் பார்! சிலுவையில் அறையப்பட்ட போது உன் திருவுடலில் இருந்து உதிர்ந்த குருதியை விட அதிக குருதியை எங்களுக்காக சொரிவாய். அந்தளவிற்கு துயரம் அதிகமாக இருக்கும். பாதை தெரியாமல், இருளில் வாழ்ந்த மானிடத்தை வழிப் படுத்த அவதரித்த யேசு பாலகா! எங்கள் மண்ணிலும் உன் பிறப்பு நடக்கட்டும்.உன் பிறப்பால் எங்கள் பாவம் ஒழி யட்டும்.நீதி பிறக்கட்டும்.நியாயம் மலரட்டும்.மோசமான அரசியல் ,அதற்காகத் துதிபாடும் நிர்வாகக் கலாசாரங்கள் அத்தனைக்கும் முடிபு கிடைக்கட்டும்.பாலகனே உன் இரண்டாவது பிறப்பு எல்லாம் இழந்த தமிழ் மக்களின் மண்ணில் நடக்கட்டும். ஆமேன்
மானிப்பாயில் யாழ்.மாவட்ட பௌத்த தமிழ் சங்கம்
யாழ்.மாவட்ட பௌத்த தமிழ் சங்கம் என்ற பெயரிலான அமைப்பு ஒன்றினை முன்னெடுப்பதற்கான முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்ப்பாணத்தை மேற்கோள் காட்டும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இது குறித்து அந்த அமைப்பிற்கான இணைப்பாளர் எனத் தன்னைக் கூறிக்கொள்ளும் அருள்நேசரத்தினம் ரவிக்குமார் என்பவர் தெரிவித்திருக்கின்றார். யுத்த சூழ்நிலையினால் இந்தச் சங்கத்தின் செயற்பாடுகள் முடங்கிப்போயிருந்தன. தற்போது ஏற்பட்டுள்ள சுமுகமான சூழ்நிலையினைக் கருத்திற்கொண்டு அதனை மீண்டும் யாழ்ப்பாணத்தில் இயக்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளோம்” என்று தெரிவித்துள்ள குறித்த நபர், சுமார் 100 இற்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு ஆரம்பத்தில் இயங்கிய இந்தச் சங்கத்தின் ஊடாக பௌத்த தர்மத்தை போதிக்கும் பாடசாலையொன்றை மானிப்பாயில் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது
புதன், 22 டிசம்பர், 2010
வடலிகள் வானுயரும்........
ஏன் மொட்டைப் பனைமரங்களைப் பார்த்து ஏங்குகிறீர்கள். கீழே நிலத்தைப் பாருங்கள். வடலிகள் வளர்ந்து வருகின்றன. வடலிகள் வானுயரும்’
அடர்ந்த காடுகளுக்குள் மீள்குடியேற்றியுள்ள அரசு.
வன்னிப்பிராந்தியத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் தொடர்ந்தும் ஏதோ ஒரு வகையில் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருவதாகவும் தொடர்ந்தும் இன்னல்களை சந்தித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை அரசு பிரச்சாரம் செய்கின்ற போல அல்லாமல் நிவாரணக்கிராமங்களில் இருந்து அழைத்துவந்து எங்களை அடர்ந்த காடுகளுக்குள் விசப்பாம்புகளுக்கும், யானைகளுக்கும் இரையாக்குவதற்காகவே மீள்குடியேற்றியுள்ளதாக அம்மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் மாந்தை மேற்குப்பிரதேசச்செயலாளர் பிரிவுக்குட்பட்சன்னார், ஈச்சலவக்கை,பெரியமடு கிராமத்தைச்சேர்ந்த மக்களே அடர்ந்த காட்டுப்பகுதியினுள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
விக்கிலீக்ஸ் வன்னி வைத்தியர்களின் இரகசியத்தை! போட்டுடைத்தது.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது யுத்த சூனிய வலயத்தில் பணிபுரிந்த 5 வைத்திய அதிகாரிகள், அழுத்தங்களுடன், பயிற்றுவிக்கப்பட்ட கருத்துகளையே, 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்ததாக இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்க உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரி ஜேம்ஸ் மோர், ஐக்கிய அமெரிக்காவிற்கு கூறியுள்ளதாக விக்கிலீக்ஸ் மற்றுமொரு புதிய தகவலை வெளியிட்டுள்ளது.
கருணாவிடம் உரிமையினை பெறப்போகிறாராம் மாவை!
தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தினை மிகப் பாரிய அழிவை நோக்கி இட்டுச் சென்ற கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை யாழ்ப்பாண எம்.பி மாவை சேனாதிராசா வாயாரப் புகழ்ந்து தள்ளியதுடன் அவரிடம் இருந்து உரிமையினைப் பெற்றுக் கொள்ளப்போவதாகத் தெரிவித்துள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் வேதனையினைத் தோற்றுவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டம், துணுக்காப் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் மாவை சேனாதிராசா உரையாற்றும் போது கருணாவை வாயாரப் புகழ்ந்திருக்கின்றார்.
செவ்வாய், 21 டிசம்பர், 2010
விக்கிலீக்ஸ் செய்தி-இலங்கை மறுப்பு
இலங்கை தொடர்பாக விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியாகியுள்ள தகவல்கள் பொய்யானது என்று இலங்கை அரசு கூறியுள்ளது. கொழும்பிலிருக்கும் அமெரிக்கத் தூதரகத்திலிருந்து வெளியானாதாகக் கூறி விக்கிலீக்ஸ் இணையதளத்தால் பிரசுரிக்கப்பட்டுள்ள ராஜதந்திர தகவல் பறிமாற்றங்களில், இலங்கை அரசு மனித உரிமை மீறல்களை செய்தது, அல்லது அவ்வாறான நடவடிக்கைக்கு துணையாக இருந்தது என்கிற தகவல்களை இலங்கை அரசு மறுத்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளை திட்டமிட்டு கூறப்படும் பொய்கள் என்று கூறியுள்ள இலங்கை அரசு, இரகசியத் தகவல்கள் சட்டவிரோதமான முறையில் வெளியிடப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.
ஆயுததாரி பிள்ளையானால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் தொடர்புகொள்ளவும்
ஆயுததாரி பிள்ளையானின் டென்மார்க் வருகையை கடந்த வாரமே அறிந்த டென்மார்க் தமிழர் பேரவையின் மானிட விவகார குழுவின் சிறப்புப்பிரிவினர் டென்மார்க் அரசின் அனைத்துலக குற்றவியல் பிரிவினரிடம் தமிழ் மக்கள் மீது ஆயுததாரி பிள்ளையான் புரிந்த மானிடத்திற்கெதிரான குற்றங்களில் சிலவற்றை சேகரித்து டென்மார்க் தமிழர் பேரவையின் வழக்கறிஞர் ஊடாக முறையிட்டுள்ளனர் .ஆயுததாரி பிள்ளையானால் படுகொலை செய்யப்பட்ட அல்லது பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள், மனிதவுரிமைசெயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்பான மேலதிக விபரங்களையும் ஆதாரங்களையும் உடனடியாக டென்மார்க் தமிழர் பேரவையினர் எதிர்பார்க்கின்றனர். ஆயுததாரியால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் ஆயுததாரி பிள்ளையான் தொடர்பான வழக்கை விசாரணை செய்து வரும் டென்மார்க் காவல்துறையின் விசேட பிரிவினரிடம் தங்கள் பதிவுகளை நேரடியாக மேற்கொள்ள டென்மார்க் தமிழர் பேரவையினரை தொடர்புகொள்ளவும்.
ஆயுததாரி பிள்ளையான் மற்றும் அவனுடன் டென்மார்க் வந்துள்ள சகாக்கள் தொடர்பான விபரங்களையும் ஆயுததாரிகள் டென்மார்க்கில் தங்கியிருக்கும் விபரங்களையும் உடனடியாக டென்மார்க் தமிழர் பேரவைக்கு தெரிவித்து ஆயுததாரிகள் மீதான நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு டென்மார்க் வாழ் தமிழ்மக்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
மேலதிக தொடர்புகளுக்கு :மின்னஞ்சல்: forum@dansktamilskforum.dk
ஆயுததாரி பிள்ளையான் மற்றும் அவனுடன் டென்மார்க் வந்துள்ள சகாக்கள் தொடர்பான விபரங்களையும் ஆயுததாரிகள் டென்மார்க்கில் தங்கியிருக்கும் விபரங்களையும் உடனடியாக டென்மார்க் தமிழர் பேரவைக்கு தெரிவித்து ஆயுததாரிகள் மீதான நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு டென்மார்க் வாழ் தமிழ்மக்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
மேலதிக தொடர்புகளுக்கு :மின்னஞ்சல்: forum@dansktamilskforum.dk
ஐ நா குழு விசாரணைகளை நடத்துவதற்காக மட்டுமே இலங்கை செல்ல வேண்டும்: ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச்
ஐ நா தலைமைச் செயலர் பான் கீ மூனால் அமைக்கப்பட்டிருக்கும் மூவர் குழு விசாரணைகளை நடத்துவதற்காக மட்டுமே இலங்கை செல்ல வேண்டும் என ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் கூறியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலருக்கு இலங்கை விடயங்கள் தொடர்பில் ஆலோசனை கூற அமைக்கப்பட்டிருக்கும் மூவர் குழு, இலங்கை ஜனாதிபதியால் அமைக்கப்பட்டிருக்கும் படிப்பினை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினரை மட்டுமே சந்திக்கும் நோக்கில் அங்கு சென்றால் அது பயனற்றதாக இருக்கும் என்று மனித உரிமைகள் அமைப்பான ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலருக்கு இலங்கை விடயங்கள் தொடர்பில் ஆலோசனை கூற அமைக்கப்பட்டிருக்கும் மூவர் குழு, இலங்கை ஜனாதிபதியால் அமைக்கப்பட்டிருக்கும் படிப்பினை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினரை மட்டுமே சந்திக்கும் நோக்கில் அங்கு சென்றால் அது பயனற்றதாக இருக்கும் என்று மனித உரிமைகள் அமைப்பான ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் தெரிவித்துள்ளது.
யாழ்நகரில் நடைபெறவிருந்த மனித உரிமைகள் மாநாடு EPDP யால் தடுக்கப்பட்டது !
யாழ்.பொது நூலகத்தில் நடத்தப்படவிருந்த மனித உரிமைகள் தொடர்பான மாநாடு கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டது குறித்து ஆழ்ந்த கவலையும் விசனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ளவிருந்த பேராளர்கள் இந்த மாநாடு நிறுத்தப்பட்டது தொடர்பாக கடும் அதிருப்தியும் கவலையும் அடைந்துள்ளனர். மனித உரிமைகள் இல்லமும் சிந்தனைக் கூடமும் இணைந்து கடந்த 18,19 ஆம் திகதிகளில் யாழ்.பொது நூலகத்தில் இந்த மாநாட்டை நடத்தவிருந்தன.
போர்க்குற்றங்கள் தொடர்பில் தெளிவான விசாரணை அவசியம்: வில்லியம் ஹேக்
இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தெளிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் வில்லியம் ஹேக் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். "ஸ்கை நியூஸ்' ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறுவலியுறுத்தியுள்ளார்.
சங்கானையில் தொடரும் துப்பாக்கிமுனை கொள்ளைகள்.
சங்கானைப் பகுதியில் துப்பாக்கி முனையில் நிகழ்த்தப்படும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்வதால் அப்பகுதி மக்கள் பெரும் பீதியுடனேயே இரவுப்பொழுதைக் கழிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. திங்கட்கிழமை இரவு சங்கானை, பிரதான வீதி யில் 7 ஆம் கட்டைப் பகுதியில் செல்லத்துரை திருஞானம் என்ப வரது வீட்டில் புகுந்த ஆயுததாரிகள் 15 பவுணுக்கும் மேற்பட்ட நகைகளை அபகரித்துச் சென்றுள்ளனர்.
இந்தியாவின் 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் பம்மாத்து .பெரும்பாலானவை புனரமைப்புக்குள்ளேயே அடங்கும்.
புதுடில்லி முன்னர் தெரிவித்தது போன்று வடக்கு, கிழக்குப் பகுதிகளில் 50 ஆயிரம் வீடுகள் புதிதாகக் கட்டிக் கொடுக்கப்பட மாட்டா என்று தெரியவந்துள்ளது. இந்தத் திட்டத்துக்கு என 300 மில்லியன் அமெரிக்க டொலர் இந்தியாவால் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் பெரும்பகுதி சேதமடைந்த வீடுகளைப் புனரமைத்துக் கொடுப்பதற்கே வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 5,000 வீடுகள் மட்டுமே புதிதாக அமைத்துக் கொடுக்கப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. ஏனைய 45,000 வீடுகளும் புனரமைப்பு மட்டுமே செய்யப்பட உள்ளன எனவும் அது தெரிவிக்கிறது. 30 வருடங்களாகப் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு உதவும் திட்டத் தின் கீழ் இந்தியா 50,000 வீடுகளைக் கட்டித்தரும் என்று பிரதமர் மன் மோகன்சிங் அறிவித்திருந்தார். இந்தியாவின் இந்தத் திட்டம் நேரடியாக ஈழத் தமிழர்களுக்கு வழங் கப்படும் என்றும் திட்டப் பயனாளிகள் நேரடியாக இந்தியாவாலேயே தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தமிழக முதல்வர் மு.கருணாநிதியிடம் நேரில் உறுதியளித்திருந்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)














