இலங்கையில் பழைய காலனித்துவ கால பெயரான சிலோன் என்ற பெயரைக் கொண்டிருக்கும் அனைத்து அரசாங்க நிறுவனங்களுக்கும் சிறிலங்கா என்று பெயரை மாற்றிவைக்க இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.இலங்கைக்கு சிறிலங்கா என்று பெயரிடப்பட்டு 39 வருடங்களுக்குப் பின்னர் தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருக்கிறது.இந்த பெயர் மாற்ற நடவடிக்கைகள் 2011இல் முடிந்தவரை விரைவாக நடக்கும்.அனாவசியமான காலனித்துவ கால எச்ச சொச்சங்களை களைவோம் என்ற புதுவருட உறுதி மொழியாக இது மேற்கொள்ளப்படவிருக்கிறது.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வெள்ளி, 31 டிசம்பர், 2010
குடத்தனைச் சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர் உயிரிழந்தார்!? மணற் விற்பனையை அம்பலப்படுத்தினாராம்!!
வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தின் குடத்தனை கிழக்கில் வீடு புகுந்து ஆயுததாரிகள் துப்பாக்கியால் சுட்டதில் இளம் குடும்பஸ்தர் தபாலக ஊழியரான தேவராசா கேதீஸ்வரன் (வயது 28) ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மந்திகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தனது முகநூல் (Facebook) பகுதியில் சிறீலங்கா இராணுவம் மற்றும் துணைக் குழுக்களின் ஆதரவுடன் யாழ். மணித்தலைப் பகுதியில் மணல் அள்ளப்படுவதால் கடல் நீர் உட்புகுந்துள்ளதற்கான ஆதாரபூர்வமான படங்களையும், கார்த்திகைப் பூவை கையில் வைத்தபடி நிற்கும் படங்களையும் பதிவு செய்து வைத்திருந்தார். இதனாலேயே இவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. அந்தத் தகவலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குடத்தனை கிழக்கில் உள்ள இவரது வீட்டிற்குள் புகுந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் அவரது கணனியை காண்பிக்குமாறு கேட்டுள்ளனர். அதற்கிணங்க வீட்டினுள் அழைத்துச் சென்றபோது ஆயுததாரிகள் அவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
வியாழன், 30 டிசம்பர், 2010
ஜனவரி மாதம் புதிய கட்சிகள்
தற்போது தேர்தல்கள் செயலகத்தில் பதிவு செய்துக் கொள்வதற்காக விண்ணப்பித்துள்ள புதிய கட்சிகள் தொடர்பிலான இறுதி தீர்மானம், ஜனவரி மாதம் இறுதிக்குள் மேற்கொள்ளப்படவுள்ளது. கடந்த ஜுன் மாதம் புதிய கட்சிகளை பதிவு செய்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.இதன் போது 85க்கும் மேற்பட்ட அரசியல் அமைப்புகள் விண்ணங்களை வழங்கி இருந்ததாக தேர்தல்கள் செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தமிழ் அகதிகளை நாடுகடத்த கூடாது .சர்வதேச மன்னிப்புச் சபை
அகதி அந்தஸ்த்து வழங்கப்பட்ட இலங்கை தமிழ் அகதிகளை மீண்டும் அவுஸ்திரேலியா இலங்கைக்கு நாடுகடத்த கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. மனித உரிமைகள் கண்கானிப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை என்பன இந்த வலியறுத்தலை விடுத்துள்ளதாக த ஒஸ்ட்ரேலியன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை புலனாய்வுத்துறையின் தகவல் அடிப்படையில், இலங்கை தமிழ் அகதிகள் பயங்கரவாதத் தொடர்பு கொண்டவர்கள் என அவுஸ்திரேலிய அரசாங்கம் கருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மீசாலையில் கொலை செய்யப்பட்டவர் முன்னாள் போராளியா ??.
யாழ்ப்பாணம் மீசாலையில் சடலமாக மீட்கப்பட்டவர் கிளிநொச்சி உருத்திரபுரத்தைச் சேர்ந்தவரென்பதுடன் நலன்புரி நிலையத்திலிருந்து அண்மையில் விடுவிக்கபட்டவரெனவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, மீசாலை வடக்கை சேர்ந்த இவர் கடந்த காலத்தில் நடைபெற்ற இராணுவ நடவடிக்கைகளின்போது இடம பெயர்ந்து சென்று கிளிநொச்சி உருத்திரபுரத்திற்கு சென்று அங்கு விவசாய செய்து வந்துள்ளார். உருத்திரபுரத்திலேயே தொடர்ச்சியாக அவர் கடந்த காலங்களில் வசித்ததுடன் வன்னியில் இடம் பெற்ற யுத்தகாலத்தில் அங்கிருந்து இடம் பெயர்ந்து அதன் பின்னர் வவுனியாவிற்கு இராணுவக் கட்டுப்பட்டு பகுதிக்குச்சென்றார்
யுத்த குற்றவாளி சவேந்திர சில்வாவை பாராட்டும் வகையில் அரசாங்கம் காணியொன்றை அன்பளிப்புச் செய்துள்ளது
ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியும்;, 58ம் படைப்பிரிவின் பொறுப்பதிகாரியுமான மேஜர் ஜெனரல் சாவேந்திர சில்வாவிற்கு, அரசாங்கம் காணியொன்றை அன்பளிப்பு செய்துள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது ஆற்றிய சேவையை பாராட்டும் வகையில் இவ்வாறு காணித் துண்டொன்று அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.
பூசா தடுப்பு முகாமிற்குள் பிரவேசிக்க ஊடகவியலாளர்களுக்கு தடை
பூசா தடுப்பு முகாமிற்குள் பிரவேசிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவினர் பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளிடம் சாட்சியங்களை திரட்டியிருந்தனர் இந்த நடவடிக்கைகள் தொடர்பான செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதற்காக சென்றிருந்த சில ஊடகவியலாளர்களுக்கு தடுப்பு முகாமிற்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பி.பி.சீ ஊடகவியலாளர் மற்றும் உள்நாட்டு ஊடகவிலாளர்கள் சிலருக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அகதிகளுக்கான பொருட்கள் கடத்தல்
வவுனியா நகருக்கு அருகேயுள்ள அகதிகள் முகாம்களில் உள்ளவர்களுக்காக கொடுக்கப்படும் உணவுப்பொருட்கள் கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளன. இது குறித்து பிபிசி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட முகாம்வாசி ஒருவர், உணவுப் பொருட்கள் இரவு நேரத்தில் எடுத்துச் செல்லப்படுவதை மக்கள் பலர் பார்த்திருப்பதாக கூறினார். இதனால் தமக்குறிய உணவு கிடைக்காமல் இருப்பதாகவும் அவர் கூறினார். இது பற்றியும், அனாதைப் பள்ளி மாணவர்களின் பயன்பாட்டுக்காக, தொண்டு நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள பாதணிகள், தொப்பிகள், பைகள் போன்றவற்றில் சொற்ப அளவே பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் மற்றவை கடத்தப்பட்டதாகவும் தமக்கு புகார் வந்துள்ளதாக வவுனியா நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். இது குறித்து அரசாங்க அதிபருக்கு தான் முறையிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தம்பி பசிலின் வேண்டுதலை அண்ணா மஹிந்த புறக்கணித்தார்.
வெளி நாட்டு பயணங்களை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பசில் இராஜபக்ஷ தனது அமைச்சிற்கு முழு நேர அமைச்சு செயலர் ஒருவரை தருமாறு கேட்டுள்ளார். தற்போது திறைசேரி செயலர் டி.பி. ஜயசுந்தரவையே மஹிந்த பசிலின் பொருளாதார அமைச்சுக்கு பகுதி நேர செலராக நியமித்துள்ளார்.பசில் இராஜபக்ஷ கண் மண் தெரியாமல் பெருவாரியாக பணத்தை சுருட்டிக்கொண்டு இருக்கின்றார் இதில் பங்குகள் சரியாக மஹிந்தவிற்கு போய் சேரவில்லை. கோத்தபாயவை விட பசில் இராஜபக்ஷவே பணம் சுருட்டுவதில் வல்லவராம். இதனை அறிந்த மஹிந்த தானே டி.பி,.ஜெயசுந்தரவை நியமித்துள்ளார்.
அமெரிக்காவில் எரிபொருள் நிலையத்தில் கொல்லப்பட்டவர் ஈழத்தமிழர் (படம்)
அமெரிக்காவில் பெற்றோல் நிரப்பு நிலையத்தில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டவர் ஈழத்தமிழராவார். 25 வயதை உடைய சுஜேந்திரன் அமரசிங்கம் என்ர இளைஞரே கொல்லப்பட்டார். அமெரிக்காவின் கன்சாஸ் மானிலத்தில் 59 வது வீதியில் உள்ள பெற்றோல் நிரப்பு நிலையத்தில் அதிகாலை 4.30 மணியளவில் அவர் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போது ஆயுதம் தரித்த கொள்ளையர்களால் கொல்லப்பட்டார். கொள்ளையர்கள் ஆயுத முனையில் பணத்தினை பறிக்க முயன்றபோது இவர் போராடியுள்ளார். இதனால் கொள்ளையர்கள் சுட்டுக்கொன்று விட்டு, பணத்தினை எடுத்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர். சூட்டுக்காயங்களுடன் இருந்த சுஜேந்திரனை சிறிது நேரத்தின் பின் வந்த வாடிக்கையாளர்கள் கண்டதுடன் பொலிசாருக்கு தொடர்பு கொண்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது அவர் உயிர் பிரிந்ததாக பொலிசார் கூறியுள்ளனர்
புதன், 29 டிசம்பர், 2010
கப்பம் கோரி கடத்தப்பட்ட சாவகச்சேரி இளைஞன் சடலமாக மீட்பு
தென்மராட்சியின் மீசாலைப் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கப்பம் கோரி ஆயததாரிகளால் கடத்தப்பட்ட 28 வயதுடைய மகேந்திரன் செல்வம் என்பவரது சடலமே இது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த திங்கட்கிழமை கனகம் புளியடியில் உள்ள வீட்டிற்குச் சென்ற இருவர் மோட்டார் சைக்கிளில் அவரை அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் ஒரு வாகனப் புறோக்கர் எனத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் அழைத்துச் சென்றவர்கள் செல்வத்தின் நண்பர்கள் என தாம் நம்பியதாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.
குடாநாட்டில் மீண்டும் வீதிச்சோதனை ஆரம்பம்
யாழ். மாவட்டத்தில் மீண்டும் ஆரம்பமாகியுள்ள படையினரின் வீதிச் சோதனை நடவடிக்கைகளால் மக்கள் அச்சத்துடன் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.குடாநாட்டில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் படையினரின் வீதிச்சோதனை நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளன. குறிப்பாக நவாலி , சங்கானை, சித்தன்கேணி , தொட்டிலடி, மாசியப்பிட்டி, அளவெட்டி போன்ற பகுதிகளில் இவ்வாறான சோதனைகள் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சிங்களத்தில் தேசிய கீதம் பாடுவதற்கான பயிற்சியை படை அதிகாரிகள் சிலரே,வழங்கி வருகின்றனர்
யாழ்ப்பாணத்தில் சிங்களத்தில் தேசிய கீதம் பாடுவதற்கான பயிற்சியை படை அதிகாரிகள் சிலரே, நேரடியாக பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர். சர்ச்சைக்குரியவகையினில் நடந்து முடிந்த, தேசிய அனர்த்த தினத்தினில் முன்னதாக தமிழ் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் தேசிய கீதத்தினைப் பாட தாம் முடிவெடுத்திருந்ததாக தமிழ் அதிகாரியொருவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். சிங்கள மொழியில் ஆரம்பித்து அடுத்த வரிகளை தமிழென மாறிமாறி பாடவே மாணவர்கள் பயிற்றப்பட்டிருந்தனர்.
யாழ்.குடாநாட்டில் மீண்டும் குருதியுறையும் “பயப்பீதி’ நோய்!
யாழ்ப்பாணத்தில் மீண்டும் குருதி உறைந்து போகும் சம்பவங்கள் நடக்கத் தொடங்கி விட்டன. வன்னி யுத்தத்திற்குப் பின்னர் புறவய அமைதி காணப்பட்ட போதிலும் அப் புறவய அமைதி நீண்டகாலம் நிலைக்கவில்லை.மீண்டும் அளவெட்டியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.அந்த ஆரம்பம் சங்கானையில் அந்தணச் சிவாச்சாரியரை பலியடுத்தும் அவரின் இரண்டு புதல்வர்களைக் காயப்படுத்தியும் தனது தாண்டவத்தின் ஒத்திகையைக் காட்டி நின்றது.
வவுனியா சிறைச்சாலை கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்: இராணுவத்தினர் தாக்குதல்
வவுனியா சிறைச்சாலை கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட போது இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய உறுப்பினரும் கைதியுமான சதீஸ் என்பவரை வவுனியா சிறைச்சாலையில் இருந்து அநுராதப்புர சிறைச்சாலைக்கு மாற்றியதை கண்டித்து வவுனியா சிறைச்சாலை கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வவுனியா இராணுவத்தினர் கைதிகள் மேல் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் மன்னார், வவுனியா, மதவாச்சி பகுதிகளில் இருந்து கைது செய்யப்பட்டவர்களை பார்வையிடச் சென்ற உறவினர்களையும் அனுமதிக்க வில்லை என தெரிவிக்கப்படுகின்றது
தமிழ் இளைஞர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை!
பொறியிலாளரான வவுனியாவைச் சேர்ந்த தமிழ் இளைஞரொருவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். கொல்லப்பட்டவர் 25 வயதுடைய அமரசிங்கம் சுஜன் என்பவராவர்.ஒரு வருடத்திற்கு முன்னர் புலமைபரிசில் பெற்று அங்கு சென்றிருந்த இவர் பணியாற்றும் வேலைத்தளத்தில் இரவு கொள்ளையர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என பெற்றோர் தெரிவித்தார். மேற்படி இளைஞரின் சடலத்தை நாட்டுக்கு எடுத்து வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)















