இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
சனி, 13 பிப்ரவரி, 2010
vஅரசு தனது கரங்களை யாழ்ப்பாணத்தில் பலப்படுத்தும் நடவடிக்கையில்..
ஆளும்கட்சியான பொதுசன ஐக்கிய முன்னணியின் சார்பில் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள சுமார் 25க்கு மேற்பட்டவர்கள் அவசரமாக கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் யாழ்ப்பாணத்தில் நீதித்துறை, சட்டத்துறை, மற்றும் சிவில் சமூகத்தைச் சேர்ந்த உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவார்கள். வேட்பாளர் தெரிவிற்கே இவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என விடயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஈழமக்கள் சனநாயக கட்சி ஈபிடிபி தனித்து வீணைசின்னத்தில் போட்டியிடும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ள நிலையில், அரசு தனது கரங்களை யாழ்ப்பாணத்தில் பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இதற்கிடையில் வன்னியில் தமிழ்தேசிய கூட்டமைப்பு போட்டியிடுவது முடிவான நிலையில் தமிழ் புத்திஜீவிகளைக் கொண்ட சுயேற்சை குழுவினர் வேட்பாளர்களை நிறுத்தவுள்ளனர். அரசியல் கட்சிகளில் புதுமுகங்கள் பல தோன்றவுள்ளனர். 83க்கு முன்னர் இருந்த நிலைபோன்று தாம் விரும்பும் அரசியல்கட்சியில் ஈடுபட பலருக்கு சந்தர்ப்பங்கள் கிடைத்துள்ளது.
நாட்டைவிட்டு வெளியேறியவர்கள் பலர் நாடு திரும்பியுள்ளனர். இவர்களும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளனர். வன்னி தேர்தல் தொகுதி என்பது வவுனியா மன்னார் முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடகியது. வன்னியில் கல்விமான்கள் விரிவுரையாளர்கள், சட்டத்தரணிகள் உள்ளிடவர்களே சுயேற்சையாக போட்டியிட முன்வந்துள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் பொன்சேகா போட்டியிடலாம்
இராணுவத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா வை விடுதலை செய்யக் கோரி அவரது மனைவி அனோமா பொன்சேகாவும் மற்றும் சட்டத்தரணியும் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் நேற்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
இந்த அடிப்படை மீறல் மனுவை விசாரித்த நீதியரசர்கள் அடங்கிய குழு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் சரத் பொன்சேகாவுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான அனுமதி உட்பட சில மேலதிக உரிமைகளை வழங்கவும் அரசுக்கு உத்தரவிட்டது. இந்த மனு மீதான விசாரணையை பிரதம நீதியரசர் அசோக என். டி.சில்வா மற்றும் நீதியரசர்கள் சிரானி திலகவர்த்தன, சுந்தர எக்க நாயக்க தலைமையிலான நீதியரசர்கள் குழு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
மனுவை விசாரணை செய்த நீதியரசர்கள் குழு தடுத்து வைக்கப் பட்டுள்ள பொன்சேகாவுக்கு மேலதிகமான சில உரிமைகளை வழங்குமாறு உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவுக்கமைய பொன்சோவின் சட்டத்தரணிகள் மற்றும் குடும்பத்தினர் தடுத்து வைக் கப்பட்டுள்ள பொன்சேகாவை அடிக்கடி சென்று பார்வையிடுவதற்கும் அனுமதியை வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் தற்போது பொன்சேகா தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத் திலிருந்து வேறு இடத்திற்கு மாற்றப்படக் கூடாது என்றும் நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவை அரசுக்கு வழங்கியுள்ளது. இந்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 23 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தால் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது மனுவைத் தள்ளுபடி செய்யுமாறு அரச தரப்புச் சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.
எனினும் இக்கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. அரச தரப்பினால்,கைது செய்யப்பட்டவரின் மனைவி மனுவைத் தாக்கல் செய்ய முடியாது என்றும் அவரின் சட்டத்தரணியே மனுவைத் தாக்கல் செய்யலாம்.
அத்துடன் அச் சட்டத்தரணி சத்தியப்பிரமாண ஆவணம் ஒன்றை சமர்ப்பிக்காததால் அவரும் தாக்கல் செய்ய முடியாது என்பதுடன் அது சட்டத்திற்கு முரணானது என்றும் அரச தரப்புச் சட்டத்தரணி சஞ்ஜய் இராஜரட்ணம் வாதிட்டார். எனினும் இதனை நீதியரசர்கள் குழு நிராகரித்தது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொன்சேகா போட்டியிட விரும்பினால் வேட்புமனுவில் கையயாப்பம் இடவும் ஏனைய ஆவணங்களைத் தயாரிக்கவும் இடமளிக்குமாறு உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவு குறித்து கருத்து வெளியிட்ட பொன்சேகாவின் சட்டத்தரணி சிரான் திலக, நீதியரசர்களின் இவ் உத்தரவு பொன்சேகாவை இராணுவ நீதிமன்றில் நிறுத்தி விசாரணை செய்வதைத் தடுக்கும் என்றும் இது பொன்சேகாவுக்குக் கிடைத்த வெற்றி என்றும் கூறினார்.
தமிழ் வர்த்தகரிடம் கப்பம்பெற முயன்றவர்கள் வெள்ளவத்தையில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது:
வெள்ளவத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல தமிழ் வர்த்தகர் ஒருவரிடமிருந்து 70 லட்சம் ரூபாவைக் கப்பமாகப் பெற முயற்சித்த இராணுவ கப்டன் ஒருவர் உட்பட இருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கெனக் கூறி கேட்கப்பட்டுள்ள இந்த கப்பப் பணத்தை உடனடியாக பெற்றுக் கொள்ளுமாறு பாதுகாப்பு செயலாளர் ஆலோசனை வழங்கியதாகக் கூறியே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்ட மேற்படி சந்தேக நபர்களில் ஒருவர் கப்பம் கோரப்பட்ட வர்த்தகரின் உதவியாளர் எனவும் அவரே குறித்த கப்டனுக்கு வர்த்தகர் தொடர்பான தகவல்களை வழங்கியுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க தகவல் வழங்குகையில்,
கொழும்பு வெள்ளவத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரிடமிருந்து ரூ.70 லட்சத்தினை கப்பமாகப் பெற முயற்சித்த இராணுவ கப்டன் ஒருவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய வர்த்தகரின் நிறுவனத்தில் கடமையாற்றி வந்த அவருடைய உதவியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெள்ளவத்தை பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த வர்த்தகரின் மோட்டார் வாகனத்தை மறித்துள்ள மேற்படி கப்டன், விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பிலும் அவ்வியக்கத்துடனான தொடர்புகள் குறித்துமான விசாரணைகளுக்காக அவரைக் கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேற்படி கைதினைத் தவிர்க்க வேண்டுமாயின் 70 லட்சம் ரூபாவினை கப்பமாக வழங்க வேண்டும் என்றும் அந்தப் பணம் ஜனாதிபதியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் வர்த்தகரின் தொலைபேசி இலக்கத்தைப் பெற்றுக்கொண்டு அவரை விடுவித்துள்ளார் என்று விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த வர்த்தகர் இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளார். இந்நிலையில் வர்த்தகரின் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்துள்ள கப்டன் உரிய பணத்தையும் எடுத்துக்கொண்டு பம்பலப்பிட்டி பிரதேசத்துக்கு வருமாறு அறிவித்துள்ளார். இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே சந்தேக நபரான கப்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட கப்டன் கண்டியைச் சேர்ந்தவர் என்பதுடன் பிரமுகர்கள் பயணிக்கும் சந்தர்ப்பங்களின் போது பிரதான வீதிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குப் பொறுப்பாளராக கடமையாற்றி வந்துள்ளார். கைதான இருவரும் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றார்.
சீமானின் 'நாம் தமிழர்' இயக்கம்!
வரும் 18 ம் திகதி, மதுரையில் புதிய அரசியல் கட்சியை தொடங்குகிறார், நாம் தமிழர் இயக்கத்தின் தலைவரும், இயக்குனருமான சீமான்.இது தொடர்பான உத்தியோக பூர்வ அறிவிப்பாக சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் நாம் சமூக இயக்கமாக செயற்பட்டு வந்த 'நாம் தமிழர்' அமைப்பு மதுரையில் மே 18-ந் தேதி நடக்கும் தமிழ் எழுச்சி மாநாட்டில் அரசியல் கட்சியாக அறிவிக்கப்படுகிறது.
உலக அளவில் சர்வதேச இனமான தமிழினம் பரவி விரிந்து கிடக்கிறது. தமிழர்களை தொடர்ந்து அடையாள படுத்தவும், அவர்களை ஒருங்கிணைக்கும் வகையிலும் அக்கட்சி செயல்படும்.சிவப்பு நிற பின்னணியில் கொடி உருவாக்கப்பட்டுள்ளது. கொடியின் மத்தியில் `பாயும் புலி'யும், அதை சுற்றி கரு வட்டமும், அதில் இருந்து சூரியக் கதிர்கள் வெளிவருவது போலவும் அமைந்துள்ளது.முதலில் கட்சியை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். உரிய நேரத்தில் தேர்தலில் போட்டியிடும்
தேசத்துரோகி கருணாவிற்கு சவால் விடுகின்றார் பொம்மை முதல்வர்
பொதுத்தேர்தலில் போட்டியிடத்தயங்குகிறார் கருணா என்று நேற்று இடம்பெற்ற
வைபவம் ஒன்றில் வைத்துக் கூறியுள்ளார் பொம்மை முதல்வர் சிவனேசத்துரை சந்திரகாந்தன்.
2010 ஜனாதிபதித் தேர்தலின் முன்பு தன்னை பொதுத்தேர்தலில் போட்டியிட வைக்காது கடந்த
முறைபோல் இம்முறையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தருமாறு மகிந்தவிடம் கருணா
மண்டியிட்டுக் கேட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது மட்டக்களப்பில் கருணாவை வைத்து பெரும்
வெற்றி கண்டுவிடலாம் என கனவுகண்ட மகிந்த படு தோல்வியடைந்த நிலையில் இம்முறை
கருணாவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை கொடுப்பதில்லை என்று கூறியதாக ஆளும்
கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை தேசியத்தலைவரைத் தாம் அழித்துவிட்டோம் என்று அரசாங்கம் கூறும்
நிலையில் அவர்களின் கூட்டணிக்கட்சியகிய கெல உறுமய தற்போதுள்ள சூழலில் கருணாவின்
ஆதரவு தேவையில்லை என்றும் இம்முறை அவருக்கு பாராளுமன்றத்தில் இடம் கொடுக்கக்கூடாது
என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர். கடந்தமுறை கெல உறுமயவின் தேசியப்பட்டியல் மூலமே கருணா பாராளுமன்றத்தில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தான் ஒரு பொம்மை முதல்வராக இருப்பதற்கு கருணா காரணம் என்று
கருதும் பிள்ளையான் சென்ற தடவை போல் கருணா ஆளும் கட்சியிடம் மண்டியிட்டு பாராளுமன்றம் செல்லாமல் முடிந்தால் இம்முறை தேர்தலில் போட்டியிட்டும் பார்க்கலாம்
என்று சவால் விட்டுள்ளார். தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றால் தனது நிலை என்ன என்ற
மனனிலையிலேயே கருணா தற்போது உள்ளதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
நாடு செய்வோம்!
ஆடுகள் ஒருமேய்ப் பன்கீழ்
ஆனநாம் வீழ்ந்து விட்டோம்!
கூடுகள் கலைந்த தாகக்
குலவுமண் சாம்பல் ஆகப்
பாடுகள் பெற்றோம்! என்றே
படுத்திருப் போமோ சொல்வீர்?
நாடுகள் கடந்த நாடு
நமக்கது வேண்டும் வெல்வீர்!
துருக்கியக் கரையில் யூதர்
துடிப்பொடு பசுமை செய்து
பொருப்பிலே ஆற்றை ஏற்றிப்
பூம்பொழில் அமைத்த போதில்
கருக்கொடு நின்ற வையம்
காணவே எரித்த பின்னும்
நெருப்பிலே இஸ்ரேல் பூத்த
நிகழ்வதை நெஞ்சிற் கொள்ளீர்!
வயலெலாம் எரிந்த பின்னும்
வளமெலாம் புகைந்த பின்னும்
அயலெலாம் மக்கள் தீயில்
அவலமாய்த் தொலைந்த பின்னும்
வியட்னமின் சுதந்தி ரத்தை
வீழ்த்தவா முடிந்த தப்பா?
அயற்சிகொள் ளாதீர் ஈழ
அரசொன்று புலத்திற் செய்வீர்!
இராட்சதன் அவத ரித்த
இந்தநூற் றாண்டு என்க
இராசபக் சாவின் காலம்
எழுதிய பின்னும் வையம்
தராசிலே இட்ட தாமோ?
தரணியின் அயினா! அந்தத்
துரோகியைக் கட்டுப் போடத்
துணிந்ததாய் இன்னும் காணேன்!
இந்தியப் பருக்கை நாடு
ஈழத்தை எரித்து விட்டு
மந்திரிப் பதவிக் காய்ச்சல்
மசக்கையில் கிடந்தார் எங்கள்
வெந்தவோர் பிஞ்சைப், பெண்கள்
வேதனைக் குரலைக் கேட்டும்
அந்தகர் நொந்தா ரில்லை!
அழுததும் கிடையா தப்பா!
துச்சமாய் மனிதம் தீய்த்துத்
துட்டராய் மகிந்த னாட்சிக்
கச்சித மாகக் கொல்லக்
கனித்தமிழ் மாந்தர் செத்தார்!
அச்சமும் இல்லை யார்க்கும்
அடிபணிந் தானும் இல்லை!
உச்சனாய் இராச பக்சா
உயிரொடு எரிக்கின் றானே!
பிச்சையர் இல்லாச் சாதி
பிச்சையர் ஆனார்! முட்டுக்
குச்சிலே நூறு பேராய்க்
கூட்டிலே யடைந்தார்! கொட்டும்
நச்சுவேர் பரந்த பக்சர்
நங்கையர்க் கிழிவு செய்தார்!
மிச்சமாய்த் தமிழன் இன்றி
முடிவது செய்தார் கெட்டார்!
எரிந்திடும் வீட்டில் அள்ளி
எடுத்தவர் வேண்டாம்! எம்மைக்
கரந்தவர் காசை அள்ளிக்
கடந்தவர் ஒருவர் வேண்டாம்!
புரந்தனில் முடியே சூடிப்
போனவர் வேண்டாம்! வேண்டாம்!
சிரசிலே பொய்ம்மை இல்லார்
சேருக நாடு செய்வோம்!
அறப்புயல் எங்கள் தேசம்!
அறவழி எங்கள் தர்மம்
திறப்பது உண்மைத் தொண்டர்
திருக்கரம் தானே காட்டும்
கறப்பது மட்டும் காணக்
கந்தல்கள் வருவார்! ஆயின்
சிறப்பது கொள்ளத் தூய்மைச்
சிந்தனை யாளர் வாரீர்!
அரசொன்று செய்வீர்! இந்த
அகிலமெல் லாமும் நெய்வீர்!
முரசொன்று வைப்பீர்! லங்கா
மூர்க்கனை எங்கும் தைப்பீர்!
அரசியற் பாதை யோடு
அகிலத்தை மீட்பீர்! நாளை
சுரமிடும் சுதந்தி ரத்தின்
தொடுகரம் நீங்கள் தானே!
B-52 .....?
B-52 வகைக் குண்டுவீச்சு விமானம் மிக நவீன தொழிநுட்பங்களை உள்ளடக்கிய ஒரு விமானமாகும். 1955 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்க விமானப்படையின் சேவையில் உள்ள இவ்வகைக் குண்டுவீச்சு விமானங்கள் காலத்திற்குக் காலம் விருத்திசெய்யப்பட்டு நவீன தொழிநுட்பங்கள் உட்புகுத்தப்பட்டு நவீனமயப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வகை விமானத்தின் ஆரம்ப வடிவம் ஆறு சுழலி இயந்திரங்களைக் (turbo propeller) கொண்டிருந்த போதிலும் நவீன வடிவங்கள் தாரை இயந்திரங்களைக் கொண்டிருக்கின்றன.
32 000 கிலோக்கிராம் வெடிபொருட்களைக் காவிச்செல்லவல்ல இவ்வகை விமானங்கள், பனிப்போர் காலத்திலே அயுவாயுதத் தாக்குதல் நடவடிக்கைக்காக வடிவமைக்கப்பட்ட போதிலும், இவ்வகை விமானங்கள் இதுவரையான தாக்குதல் நடவடிக்கைகளில் சாதாரண வெடிகுண்டு வீச்சுக்களையே மேற்கொண்டுள்ளது.
1945 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க விமானப்படையின் நடவடிக்கைக் கட்டளை மையம், இவ்வகையான நவீன குண்டுவீச்சு விமானங்களின் குணவியல்புகளை (characteristics) வரையறை செங்தது. அவ்வரையறையினடிப்படையில் இவ்வகை விமானங்கள் நீண்டதூர நடவடிக்கைகளைத் தனித்து செய்துமுடிக்கவல்லனவாக உருவாக்கப்பட்டன. இவ்விமானங்கள், மணிக்கு 480 கிலோமீற்றர் வேகத்தில் 10400 மீற்றர் உயரத்தில் 8000 கிலோமீற்றர் வரை தொடர்ச்சியான பறப்பை மேற்கொள்ளவல்லது. Boeing நிறுவனத்தினாற் பரிந்துரைக்கப்பட்ட இவ்வகை விமானத்தின் ஆரம்ப வடிவம் நேரான இறக்கைகளுடன் ஆறு சுழலி இயந்திரங்களைக் கொண்டதாகக் காணப்பட்டதுடன் 160000 கிலோக்கிராம் சுமையினைக் காவிச்செல்ல வல்லதாகவும் 5010 கிலோமீற்றர் துர்ரம் தொடர் பறப்பை மேற்கொள்ள வல்லதாகவும் காணப்பட்டது. Boeing நிறுவனத்தாற் பரிந்துரைக்கப்பட்ட இந்த ஆரம்ப வடிவத்தில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இவ்வகை விமானங்கள் அமெரிக்க வான்படையின் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டன.
தொடர்ந்து 1959 ஆம் ஆண்டிலே அமெரிக்க வான்படை அதனது சேவையிலிருந்து, ஆரம்பகால வடிவம் தவிர்ந்த, அனைத்து B-52 வகைக் குண்டுவீச்சு விமானங்களையும் நவீன கருவிகளுடன் மேம்படுத்தும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியது. இத்திட்டத்திற்கமைய, சேவையிலிருந்த விமானங்கள் பின்வரும் நான்கு வடிவமைப்பு மாற்றங்களுக்கு (modification) உட்படுத்தப்பட்டன.
அனைத்துவிதமான காலநிலை மற்றும் தாழ்வான உயரத்தில் (150 மீற்றர்) பறப்பை மேற்கொள்ள வல்லதாகவும் சோவியத் ஒன்றியத்தின் வான்பாதுகாப்புப் பொறிமுறையை முறியடிக்க வல்லதாகவும் மாற்றியமைத்தல்.
AGM-28 Hound Dog அணுவாயுத ஏவுகணையை ஏவவல்லதாக மாற்றியமைத்தல்.
ADM-20 Quail ஏவுகணையை ஏவவல்லதாக மாற்றியமைத்தல்.
எதிரிப்படைகளின் இலத்திரனியற் கருவிகளைச் செயலிழக்கச் செய்யவல்ல கருவிகளைப் (Electronic Countermeasures) பொருத்துதல்.
B-52A வகை விமானங்கள் 1951 ஆம் ஆண்டிலேயே தயாரிக்கப்பட்டுவிட்ட போதிலும் அவை பரிசோதனைப் பறப்புக்களில் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து B-52B வகை விமானம் 1954 ஆம் ஆண்டு அதன் முதற்பறப்பை மேற்கொண்டது. ஆரம்ப நிலையிவ் இவ்விமானம் பல்வேறுபட்ட பின்னடைவுகளைச் சந்தித்தபோதிலும் படிப்படியான தொழிநுட்ப வளர்ச்சியின் காரணமாக இவ்விமானம் இன்று பலமிக்கதொரு போராயுதமாகக் காணப்படுகின்றது.
வியட்னாமிய யுத்தத்தின்போது இவ்வகை விமானங்கள் கணிசமானளவிற் பயன்படுத்தப்பட்டன. வியட்னாமியக் காடுகளை அழிக்கும் பாரிய குண்டுவீச்சுக்களில் இவ்வகை விமானங்களே பயன்படுத்தப்பட்டன. வியட்னாமியக் காடுகளை அழிப்பதற்காக இவை குண்டுகளை வீசின என்பதைவிட விதைத்தன என்பதே பொருத்தமாக இருக்கும். ஆம், B-52D வகை விமானங்கள் பெரும்தொகையான குண்டுகளைக் காடுகளுக்குள் கொட்டத்தக்க வகையில் அவற்றின் குண்டுகளைக் காவிச்செல்லும் பகுதிகள் மீள்வடிவமைப்புச் செய்யப்பட்டன.
தொடர்ந்து பனிப்போர் காலப்பகுதியில் சோவியத் ஒன்றியத்தின் மீதான அணுவாயுதத் தாக்குதல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக இவ்வகை விமானங்கள் சோவியத்தின் அண்டையிலுள்ள அமெரிக்க சார்பு நாடுகளில் எப்போதும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. 1991 இல் இந்நடவடிக்கைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன.
இதனைத் தொடர்ந்து பாலைவனப் புயல் நடவடிக்கையில் இவ்வகை விமானங்களின் பங்கு பாரியளவிற் காணப்பட்டது. ஈராக்கியப் படைகள் மீது வீசப்பட்ட குண்டுகளின் 40 வீதமான குண்டுகள் இவ்வகை விமானங்களாலேயே வீசப்பட்டது. வளைகுடா யுத்தத்தின்போது இவ்வகை விமானமொன்று தொடர்ந்து 35 மணித்தியாலங்களாக 14000 கிலோமீற்றர் தூரத்திற்குப் பறந்து ஈராக்கியப் படைகள்மீது தாக்குதலை மேற்கொண்டது.
மூளையில் ‘சிப்’?
உலகில் முதல் முறையாக ஒரு வயது சிறுவனுக்கு மூளை அருகே ‘சிப்’ பொருத்தி காது கேட்கும் அறுவை சிகிச்சை செய்து மெட்ராஸ் இஎன்டி ஆராய்ச்சி அறக்கட்டளை சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து நிறுவன நிர்வாக இயக்குநர் டாக்டர் மோகன் காமேஸ்வரன் கூறியதாவது:
சென்னையை சேர்ந்த சிறுவன் கவுசிக் (2), பிறந்த போதே காதின் உள்நரம்பு இல்லை. லட்சத்தில் ஒரு குழந்தைக்குதான் இதுபோன்ற பாதிப்பு இருக்கும். இதற்கு ‘ஆடிட்டரி பிரெய்ன் ஸ்டெம் இம்பிளான்டேஷன்’ என்ற நவீன அறுவை சிகிச்சையில் தீர்வு காணலாம். ஆனால், இதுவரை 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குதான் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இந்த அறுவை சிகிச்சையை உலகில் முதல் முறையாக சிறுவன் கவுசிக்குக்கு செய்ய முடிவு செய்தோம். காதில் உள்நரம்பு இல்லாததால், ‘பல்சா டிவைஸ்’ என்ற ‘சிப்’, மூளையின் அடிப்பகுதியில் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. இது காதின் வெளிப்புறத்தில் மாட்டப்பட்டிருக்கும் கருவி மூலம் இயங்கும். சிறுவன் ஒரு வயதாக இருக்கும்போது கடந்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து 9 மாதமாக மின்தூண்டல் மூலம் கேட்கும் திறன் பெற பயிற்சி அளிக்கப்பட்டது. இப்போது கவுசிக்குக்கு முழு அளவில் காது கேட்கிறது. இந்த கருவியின் மதிப்பு ரூ.9.50 லட்சம்.
ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க
என்னதான் பாஸ்வேர்ட் கொடுத்துப் பாதுகாத்தாலும், சில ஹேக்கர்கள் பாஸ்வேர்ட்களைக் கண்டறிந்து, திருடுவதிலும், நாசம் செய்வதிலும் கில்லாடிகளாக இருக்கிறார்கள்.
இவ்வாறு பாஸ்வேர்ட் திருடப்பட்ட கம்ப்யூட்டர் களை ஆய்வு செய்த போது மிகவும் பிரபலமான பாஸ்வேர்ட் ஒன்று பெரும்பா லானவர்களால் பயன்படுத்துவது கண்டறியப்பட்டது. அந்த பாஸ்வேர்ட் 1234356. 3 கோடியே 20 லட்சம் திருடப்பட்ட பாஸ்வேர்ட்களை ஆய்வு செய்திடுகையில் இந்த தகவல் தெரிய வந்தது.
பாஸ்வேர்டை நினைவு வைப்பதில் உள்ள சோம்பேறித்தனமும், அதனை எளிதாக டைப் செய்திட வேண்டும் என்கிற ஆசையுமே இந்த பாஸ்வேர்டைப் பலர் பயன்படுத்த இடம் அளித்துள்ளது.
பொதுவாக சிறிய பாஸ்வேர்ட்கள், சிறிய பெரிய எழுத்துக்களையும் எண்களையும் கலந்திடாத பாஸ்வேர்ட், டிக்ஷனரியில் உள்ள சிறிய சாதாரண சொற்கள் ஆகியவை பாஸ்வேர்ட்களாக இருந்தால் ஹேக்கர்கள் மிக எளிதாக அவற்றைக் கண்டறிந்து விடுகின்றனர். இந்த ஆய்வில் இன்னும் சில ஆர்வமூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன.
110 முறை முயற்சி செய்தால், நிச்சயம் ஒவ்வொரு விநாடிக்கும் ஒரு பாஸ்வேர்டைக் கண்டறியலாம். ஆயிரம் அக்கவுண்ட்களை உடைத்தெறிய ஒருவருக்கு 17 நிமிடங்களே ஆயின. கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களில் 30% பேர் மிகச் சிறிய, ஆறு எழுத்துக்களுக்கும் குறைவாக, பாஸ்வேர்ட்களைப் பயன்படுத்துகின்றனர்.
60 சதவீதம் பேர் பயன்படுத்தும் எழுத்துக்கள் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளன.
50 சதவீதம் பேர் பெயர்கள், வழக்குச் சொற்கள், அகராதியில் உள்ள சில குறிப்பிட்ட சொற்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர்.
இதனால் தான் ட்விட்டர் போன்ற தளங்கள் நூற்றுக் கணக்கான சொற்களை, பாஸ்வேர்ட்களாகப் பயன்படுத்தக் கூடாது எனத் தடைவிதித்துள்ளது
உயிர்காத்த வெப்கேம்...........
அற்புதமான சூர்ய அஸ்தமனக்காட்சியை கண்டு ரசிக்கும் மனம் யாருக்கு தான் இல்லாமல் போகும். இப்படி சூர்ய அஸ்தமனக்காட்சியை வெப்கேமில் கண்டு ரசித்துக்கொண்டிருந்த பெண்மணி ஒருவர் உரையும் கடலில் சிக்கித்தவித்த ஒருவரை காப்பாற்ற உதவியிருக்கிறார்,
ஜெர்மனியின் தெற்கு பகுதியில் அந்த பெண்மணி வசித்து வருகிறார்.அந்நாட்டின் வடக்கு பகுதியில் செயின்ட் பீட்டர் ஆர்டிங் என்றொரு கடற்கரை நகரம் இருக்கிறது.
கடற்கரை ரிசார்ட்டுகளூக்கு பெயர் பெற்ற இந்த நகரம் தான் கெர்மனியிலேயே அதிக சுற்றுலா பயணிகளை கவரும் கடற்கரையாக கருதப்படுகிறது. இங்குள்ள ரிசார்ட்டுகளில் இருந்து சூர்ய அஸ்தமனத்தை கண்டு களிப்பது கண்கொள்ள காட்சியாக புகழப்படுகிறது.
இதற்காகவே வந்து குவியும் சுற்றுலா பயணிகள் உள்ளனர். சூர்ய அஸ்தமனம் அற்புதமானது என்றாலும் கொஞ்சம் ஆபத்தானது.சூரியன் மறையும் நேரம் நெருங்கியதுமே கடற்கரையின் குணமே மாறிவிடும் என்று கூறப்படுகிறது.
திடிரென இருள் சூழ்ந்து கடற்கரையே கண்ணுக்கு புலப்படாமல் போய்விடுமாம். அதிலும் கடற்கரை பனியில் உறையத்துவங்குவதால் நிலமை மேலும் சிக்கலாகி விடுமாம்.
எனவே சுற்றுலா பயணிகள் மாலை நேரங்களில் கடற்கரையில் அதிக நேரம் செலவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுவதும் உண்டு.
ஆனால் சூர்ய அஸ்தமன அழகால் உந்திதள்ளப்படும் பலர் ஆபத்தை பொருட்பாடுத்தாமல் கடற்கரையிலேயே காத்திருப்பதும் உண்டு.
இப்படிதான சமீபத்தில் 40 வயது மனிதர் ஒருவர் சூர்ய அஸ்தமனத்தை ப்டம் எடுப்பதற்காக காமிராவோடு காத்திருந்தார்.
அந்த அற்புத காட்சியை கிளிக் செய்துவிட்டாலும் அதன் பிறகு உரைந்து கிடந்த பனிக்கட்டி மீது சிக்கி கொண்டார். அங்கிருந்த பார்த்தால் கடற்கரை கண்ணில் படவே இல்லை.பதறிப்போன மனிதர் உதவிக்கு தவித்திருக்கிறார். ஆனால் அருகாமையில் யாருமே இல்லாத்தால் மேலும் தவித்து கடைசியில் தனது காமிராவை கொண்டு பிளாஷ் அடித்து உதவிக்கு செய்கை செய்துள்ளார்.
வெளிச்சம் மங்கத்துவங்கி விட்ட ஆளற்ற கடற்கரையில் உயிருக்கு போராடும் ஒருவர் காமிராவில் பிளாஷ் அடிக்கும் காட்சி எப்படி இருந்திருக்கும் நினைத்துப்பாருங்கள். அவரது அபயக்குரல் யார் காதிலும் விழாமலேயே போயிருக்கும்.
ஆனால் நல்ல வேளையாக பெண்மணி ஒருவர் தனது வீட்டில் அமர்ந்த படி கம்ப்யூட்டர் மூலம் அந்த சூர்ய அஸ்தமனக்காட்சியை கண்டு களித்துக்கொண்டிருந்தார். நகர நிர்வாகம் வெப்கேம் மூலம் கடற்கரை காட்சியை பதிவு செய்து இண்ட்நெர்நெட் வழியே கணச்செய்து வருகிறது.
சூர்ய அஸ்தமன அழகில் மூழ்கியிருந்த அந்த பெண்மணி காமிரா பிளாஷ் வெளிச்சம் மீன்னுவதை பார்த்து யாரோ அபயக்குரல் கொடுப்பதை புரிந்து கொண்டு உடனே அதிகாரிகளூக்கு தகவல் கொடுத்தார்.
அதிகாரிகளும் விரைந்து சென்று அவரை காப்பாற்றியுள்ளனர்.
பல்கலைக்கழகத்தில் பெண் ஒருவர் கண் மூடித் தனமாக துப்பாக்கிப் பிரயோகம்
அமெரிக்க அல்பமா பல்கலைக்கழகத்தில் பெண் ஒருவர் கண்மூடித் தனமான துப்பாக்கிப் பிரயோகமென்றை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன், மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்திற்கு வெளியே இருந்து, உயிரியல் பிரிவின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
உயிரியல் பிரிவுத் தலைவர் மற்றும் இரண்டு பேராசிரியர்களே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
தாக்குதலை மேற்கொண்ட பெண் பல்கலைக்கழக பேராசிரியர் பீட உறுப்பினர் எனவும், குறித்த பெண்ணை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.
தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த இருவரின் நிலைமை கவலைக்கிடமாக காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாரிய நில நடுக்கம்.....
தெற்கு பசிபிக் கடல் பகுதியில் டோங்கா எனும் தீவு நாடு உள்ளது. இந்த நாடு 169 சிறிய, சிறிய தீவுக் கூட்டங்களை உள்ளடக்கியது. 500 மைல் சுற்றளவுக்குள் இந்த தீவு கூட்டங்கள் உள்ளன.
இன்று காலை டோங்கா தீவின் தலை நகரில் இருந்து தென் கிழக்குப் பகுதியில் சுமார் 60 மைல் தொலைவில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.3 புள்ளியாக பதிவாகி இருந்தது.
இந்த நில நடுக்கம் பூமியில் அதிக ஆழம் இல்லாமல் உருவாகி இருந்தது. இதனால் டோங்காவில் கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின.
மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் தெரியவில்லை.
டோங்கா தீவு கூட்டங்கள், அடிக்கடி நில நடுக்கம் ஏற்படும் அபாயப் பகுதியில் உள்ளன. கடந்த செப்டம்பர் மாதம் அங்கு 8 ரிக்டர் அளவு கோலுக்கு ஏற்பட்ட மிகப்பயங்கர நில நடுக்கத்தில் சிக்கி 8 பேர் பலியானார்கள்.
காதலர் தினத்துக்கு தடை
உலகம் முழுவதும் நாளை (14-ந்தேதி) காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்காக காதலர்கள் அன்பு பரிசாக ரோஜாக்கள் மற்றும் இதய வடிவிலான பெட்டிகளில் அடைக்கப்பட்ட சாக்லேட்டுகள், வாழ்த்து அட்டைகள் மற்றும் பொம்மைகளை பரிசளித்து மகிழ்வார்கள்.
இவை கடைகளில் விற்கப்பட்டு வருகின்றன. ஆனால் இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் காதலர் தின கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடைகளில் காதலர் தின பரிசு பொருட்கள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
காதலர் தின பரிசு பொருட்கள் விற்கப்படுகிறதா என சவுதி அரேபிய போலீ சார் பஜார் பகுதியில் ரோந்து சுற்றியபடி கண் காணித்து வருகின்றன. மேலும் எச்சரிக்கை போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளது. மேற் கத்திய கலாசாரம் என்பதால் இங்கு காதலர் தினத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இறப்பு 2,30,000 ஆக அதிகரிப்பு
ஹெய்ட்டி நாட்டில் பூகம்பம் ஏற்பட்டு இன்றுடன் ஒரு மாதமாகி விட்டது. இன்னமும் அங்கு முழுமையாக மீட்பு பணிகள் நடந்து முடிக்கப்படவில்லை. இடிந்த கட்டிடங்களுக்குள் இப்போதும் உடல்கள் அழுகி துர்நாற்றம் அடித்தபடி உள்ளன.
தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இது வரை 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் உயிரிழந்து இருப்பதாக ஹெய்ட்டி மந்திரி லாரன்ஸ் ஜெஸ்லின் கூறியுள்ளார். 3 லட்சம் பேர் காயம் அடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மீட்கப்படும் உடல்களை அடக்கம் செய்ய எவரும் முன் வராததால், அந்த பகுதியில் உள்ள பொதுமக்களே ஒன்றுசேர்ந்து பொது இடங்களில் அவற்றைப் புதைக்கின்றனர்.
இத்தாலியில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக சிங்களவர் ஆர்ப்பாட்டம்
இத்தாலியில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக அங்கு இருக்கும் சிங்களவர்கள் மஹிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தினர். தேர்தலில் மஹிந்த மோசடி செய்தார் எனவும், அதன் பின்னர் பொய்குற்ற சாட்டினை மேற்கொண்டு சரத் பொன்சேகாவை கைது செய்துள்ளார் மஹிந்த என்றுமே ஆர்ப்பாட்டகாரர்கள் கோசங்களை எழுப்பினராம்.
வெளி நாடு ஒன்றில் இதுவரை காலமும் மஹிந்தவுக்கு எதிராக தமிழர்களே இத்தகைய ஆர்ப்பாட்டங்களை செய்து வந்தனர். ஆனால் இப்போ சிங்களவர் மஹிந்தவுக்கெ எதிராக ஆர்ப்பாட்டம் செய்தது அங்கு இருக்கின்ற பொலிசாருக்கு அதிசயமாக இருந்தது.
இலங்கை தூதரக அதிகாரிகள் ரோமில் உள்ள பொலிசாருக்கும், ஊடகங்களிற்கும் இந்த விசயத்தை பெரிது படுத்தவேண்டாம் என கூறியுள்ளனர். இத்தாலியில் ரோம், நாப்பொலி, மிலான் ஆகிய பகுதிகளில் 30,000 மேற்பட்ட சிங்களவர்கள் இருக்கின்றனர். இவர்களில் கூடுதலானோர் படைகளில் இருந்து தப்பி ஓடியவர்கள்.
ஒரு கல்லில் இரண்டு மாங்காய்
சிறீலங்காவின் ஆறாவது நிறைவேற்று சர்வாதிகாரம் கொண்ட
ஜனாதிபதித் தேர்தல் நீண்ட வன்முறைகளுடனும் சட்டவரம்பு மீறல்களுடனும் அதிகாரத்துஸ்
பிரயோகத்தின் மத்தியிலும் நடந்து முடிந்துள்ளது தேர்தலுக்கு முன்னும் பின்னுமாக ஆறு மனித
உயிர்கள் பலியெடுக்கப்பட்டதுடன் அறுபதுக்கு மேற்பட்டோர் காயப்படுத்தப்பட்டு பல லட்சம்
ரூபாய் சொத்துக்கள் நாசமாக்கப்பட்டுள்ளது.இத்தேர்தலை நியாயமாக நோக்குமிடத்தில்
ஜெனரல் சரத்பொன்சேகாவே வெற்றிபெற்றதாகக் கருதமுடிகிறது. இருந்தும் தேர்தல் முடிவுகளின்
படி ஜனாதிபதி மகிந்தவே வெற்றிபெற்றுள்ளார்.எது எப்படியோ தமிழ் மக்கள் இத்தேர்தலில்
வெற்றி பெற்றுவிட்டார்கள் என்பதையே எடுத்துக்காட்டுகின்றது. தமிழ் இனத்திற்கே தனித்துவ
மான ஒரு குண இயல்பான நாம் எவரையும் அடக்கியாளவும் இல்லை. எவரையும் அடக்கியாள
விட்டதும் இல்லை. என்பதை தமிழ் மக்கள் மீண்டும் ஒருமுறை இத்தேர்தலின் மூலம் எடுத்துக்கா
ட்டியுள்ளனர். குறிப்பாக தமிழர் தாயகமான வடக்குக் கிழக்குப்பகுதியில் இரண்டரை இலட்
சத்திற்கு மேற்பட்ட படையினற்குள்ளும் எம்மினத் துரோகிகளான ஒட்டுக்குளுக்களின் இரும்
புப் பிடிக்குள்ளும் இருக்கும் தமிழ் மக்கள் வீரத்தையும் விவேகத்தையும் வெளிக்காட்டி தமது
தனித்துவத்தை நிலை நாட்டியுள்ளனர். அத்துடன் புதிதான தீர்மானமின்றி அற்ப சலுகை
களுக்காக நேரடியாக ஜெனரல் சரத்பொன்சேகாவிற்கு ஆதரவு தெரிவித்து அவருக்காக ஓட்டுக்கே
ட்டு பிரச்சாரத்தில் இறங்கிய தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கும் காத்திரமான செய்தியைக் கூறியுள்ளனர்.பல்வேறு காரணங்களுக்காக உறங்கு நிலையில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் ஒருவர் 2009ம் ஆண்டு இறுதிப்பகுதியில் தமிழ் தேசியக்
கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தொடர்புகொண்டு இத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எடுக்கவேண்டிய முடிவுகள் தொடர்பில் கருத்துப்பரிமாற்றத்தை மேற்
கொண்டபோது இரு பிரதான வேட்பாளர்களும் போர்குற்றவாளிகளாக இருப்பதனால் இரண்டு
வேட்பாளர்களையும் ஆதரிக்கமுடியாது ஆனாலும் மகிந்தவை எக்காரணத்தைக் கொண்டும் ஆதரிக்கக்கூ
டாது என்றும் இருப்பினும் தமிழ் மக்களின் எதிர்கால நலன் கருதி ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க
வேண்டியுள்ளதனால் எதிர்வரும் தைப்பொங்கல் நாள்வரை உங்கள்முடிவுகளை இடை நிறுத்தி
வைத்துவிட்டு மக்கள் ஆட்சிமாற்றத்தை விரும்புவதனால் பெரும்பாலான தமிழ் மக்களினதும்
புத்திஜீவிகளினதும் விருப்பத்துக்கு அமைய தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஜெனரல் சரத்பொன்சேகாவை ஆதரிப்பதாகக்கூறி அவருக்காக தேர்தல் பிரச்சாரம் செய்யாது இரு பிரதான
வேட்பாளர்களுக்குப் பின்னாலுள்ள கட்சிகளும் கடந்த அறுபது ஆண்டுகளிலும் தமிழ் மக்களுக்கு செய்த அனீதிகளையும் அழிவுகளையும் சொத்திழப்புக்களையும் விளக்கிப் பிரச்சாரம்
செய்யுமாறு ஆலோசனை கூறியதாக அறியமுடிகிறது. தமிழ் மக்களின் எண்ண ஓட்டத்தை உணர்
ந்த தன் உயிரிலும் மேலாக தமிழ் மக்களை நேசிக்கும் அத்தளபதியின் ஆலோசனையை புறம்
தள்ளிய தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளனர் என்றே கூற
வேண்டும் இனியாவது தமிழ் மக்களின் இதயத்துடிப்பை அறிந்து இரண்டு லட்சத்திற்கு மேலான
உயிர்விலையைக் கொடுத்து பல்லாயிரம் கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களையும் இழந்து
தமிழ் மக்களின் உறுதியை நிலை நிறுத்திய எமது மக்களின் உணர்வுகளைப் புரிந்து மக்களின்
தனித்துவத்தையும் தமிழ்த் தேசியத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காப்பாற்றுமா என்பதே
தமிழ் மக்களிடம் தற்போதுள்ள கேள்வியாகும். இதைவிட தமிழ் மக்கள் சிங்கள மக்களுக்கும் சிங்கள அரசிற்கு தோள் கொடுக்கும் ஒட்டுக் குழுக்களுக்கும் இத்தேர்தலை தங்கள்
பல்வேறுபட்ட சுய நலங்களிற்காக எதிர் பார்த்திருந்த சர்வதேசத்திற்கும் ஒரு செய்தியை இத்தேர்தல் மூலம் ஆணித்தரமாகக் கூறியுள்ளனர் என்றே கூறவேண்டும். அத்துடன் போர் வெற்றி
அகங்காரத்திலிருந்த சரத்பொன்சேகாவிற்கும் மகிந்தவிற்கும் கொடுத்த தீர்ப்பின் மூலம் தமிழ்
மக்கள் ஒரு கல்லில் இரு மாங்காய் அடித்ததாகவே கூறவேண்டும். அதேவேளை தமிழ் மக்கள்
சரத்பொன்சேகாவிற்குக் கொடுத்த ஆதரவு எய்தவன் இருக்க அம்பை நோவதேன் என்ற அடிப்படையிலேயே வழங்கியுள்ளனர் என்றே கூறவேண்டும். விடுதலைப் புலிகளை போரின்
மூலம் வெற்றி கொண்ட ஜாம்பவான் தானே எனக்கூறியவருக்கு ஆதரவளித்ததன் மூலம் விடுதலைப் புலிகளை போரின் மூலம் வெற்றிபெற்றதாகக் கூறுகின்றீர்களே கடந்த நான்கு
வருட போரின் போதும் விடுதலைப் புலிகள் இவ்வளவு காலமும் சாதித்த சாதனைகள் எத்னையும்
சாதிக்கவில்லையே நீதியின்பால் நில்லாது அனீதின்பால் நின்று சர்வதேசத்தின் சட்டதிட்டங்க்களுக்கு மதிப்பளிக்காது போரை வென்றதுபோல் நீதியின்பால் நீங்கள் இத்தேர்தலில் தோர்க்கடிக்கப்படவில்லை அனீதியின் பால் தோற்கடிக்கப்பட்டுள்ளீர்கள் என்று
உணர்த்தியுள்ளனர்.இதைவிட இவ்விரு கொலைகாரர்களுக்கும் நீங்கள் இருவரும் எங்களின்
மேல் எவ்வளவு அடக்குமுறைகளை மேற்கொண்டாலும் எவ்வளவு வார்த்தைஞாலம் கொட்டினாலும் தமிழர் நாம் தனித்துவமாகத் தன்மானத்துடன் வாழ்வதையே விரும்புகின்றோம்
என்பதையும் நாங்கள் உங்களை ஆதரிக்கவில்லை என்பதற்காக நீங்கள் எங்கள் மீது ஏவிவிட்ட
எட்டப்பர்களுக்கு தமிழ் மக்கள் இத்தேர்த்லின் மூலம் கூறிய செய்தி என்னவெனில் நாம் கடந்த
அறுபது வருடங்க்களாக எமது தனித்துவமான வாழ்விற்காக எத்தனையோ உயிர் விலைகளயும்
எவ்வளவோ சொத்திளப்புக்களையும் கொடுத்துள்ளோம் நீங்க்கள் விலை போனபோதும் நாங்கள்
இவ்வளவு காலமும் விலைபோகாது உள்ளோம் இனிமேலும் அப்படியே இருக்க விரும்புகின்றோம்
இனியாவது உங்கள் சுயனலத்திற்காக எமது பாதையில் தடைக்கல்லாக நிற்காமல் விலகி
நிற்கும்படி கூறியுள்ளனர்.இதன் பின்னராவது இவ் எட்டப்பர்கள் தமிழ் மக்களின் இம்முடிவினை
உணர்ந்து செயற்படுவார்களா அல்லது அடுத்துவரும் தேர்தலிலும் மூக்குடைபடப்போகிறார்களா.
சர்வதேசத்திற்கு தமிழ் மக்கள் கூறிய செய்தியென்ன கடந்த அறுபது ஆண்டுகளும் ஏதோ ஒரு வகை
யில் நீங்கள் மறைமுகமாகவும் நேரடியாகவும் எமது இனப்பிரச்சனையில் ஈடுபட்டுள்ளீர்கள் எத்தனையோ சந்தர்ப்பங்க்களில்
உங்கள் சுயனலத்திற்காக ஆதரவாகவும் எதிராகவும் செயற்பட்டுள்ளீர்கள் நேரடியாகப் பேச்சு
வார்த்தையில் ஈடுபட்டபோது எமது உரிமையைப் பெற்றுத்தர காத்திரமான முடிவை எடுப்பீர்கள்
என நம்பினோம்.நீங்கள் உங்கள் சுயனலத்திற்காக பயங்கரவாதமுத்திரை குத்தி எமது விடுதலைப் போராட்டத்தை அளித்ததுடன் இன்றுவரை
பாராமுகத்துடனே உள்ளீர்கள்.இருந்தும் பெரும்பாலான நாடுகளின் எதிர்பார்ப்புக்கமைய
இத்தேர்தலின் மூலம் எமது தேவைகளை வெளிப்படுத்தியுள்ளோம். எமது அபிலாசைகளைப்
புரிந்து கொள்ளுமாறு சர்வதேசத்திற்கும் குறிப்பாக பிராந்தியவல்லரசுக்கும் எடுத்துக்காட்டியுள்ளதுடன் எமது அடிப்படையான உரிமைப்பிரச்சனையைத் தீர்க்காதவரை நீங்கள் பொருளாதார நலன்
கருதி எடுக்கும் எந்த நடவடிக்கைகளும் விளலுக்கிறைத்த நீர் போலத்தான் ஆகும் என்பதையும்
சுட்டிக்காட்டியுள்ளனர் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும். எது எப்படியோ தமிழ் மக்கள்
கடந்த அறுபதுவருடப் போரட்ட காலத்திலும் எமது தோல்விக்குப் புறக்காரணிகளாக அமைந்
துவிட்ட பணமும் பலமும், அறிவும் ஆற்றலும்,ஒற்றுமையும் ஒருமைப்பாடும் ஒன்று சேராதவரை
யிலும் எமக்கு இவ்வாறான பின்னடைவுகள் ஏற்பட்டவ்ண்ணமே இருக்கும். அத்துடன் தமிழ்
மக்களின் தோல்விக்கு இன்னுமொரு புற்க்காரணியாக அமைந்துவிட்ட உலக மயமாக்கலும் அதன்
நலன்சார்பு நிலையும் பிராந்திய நாடுகளும் அதன் வல்லாதிக்கப்போட்டிகளையும் புரிந்துணராத
வரையிலும் உலக நாடுகளின் ஒற்றுமையை உணராதவரையிலும் தமிழ் மக்களின் நினைவு
பகல் கனவு தான் என்பதுதான் உண்மை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)