புதன், 17 பிப்ரவரி, 2010

சொத்துக்கள் விலை வீழ்ச்சி

கொழும்பின் தமிழர்கள் செறிந்து வாழ்ந்து வரும் வெள்ளவத்தை மற்றும் கொட்டாஞ்சேனை ஆகிய இடங்களில் தற்போது காணி மற்றும் சொத்துக்களின் விலைகளில் குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரதேசங்களில் வடக்கு, கிழக்கை சேர்ந்தவர்கள் யுத்தம் காரணமாக பெருமளவில் வந்து தங்கியிருந்தனர். இதன் காரணமாக சொத்துக்களின் விலைகளில் ஏற்றம் காணப்பட்டன. எனினும் தற்போது யுத்தம் நிறைவடைந்த நிலையில் குறித்த பிரதேசங்களில் குடியேறியிருந்த மக்கள் வடக்கு, கிழக்கில் மீண்டும் குடியேற செல்வதை அடுத்தே சொத்துக்களி;ன் விலைகளில் குறைவு ஏற்பட்டு வருவதாக தரகர்கள் தெரிவித்துள்ளனர். வடக்கு, கிழக்கு மக்களின் அதிகரிப்பை அடுத்து வெள்ளவத்தையிலும், கொட்டாஞசேனையிலும் உயர்மாடி குடியிருப்புக் கட்டிடங்கள் பல அமைக்கப்பட்டு வந்தன. இந்தநிலையில், வெள்ளவத்தையில் ஒரு பேர்ச் காணியின் விலை, 30 லட்சம் ரூபாவுக்கும், கொட்டாஞ்சேனையில் ஒரு பேர்ச் காணி: 20 லட்சம் ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டன. எனினும் தற்போதைய நிலையில் அவற்றில் 75 வீத விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக போட்டி

பாடகி மாயா அருள்பிரகாசத்தின் தந்தையார் அருளர் அருட்பிரகாசம் நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோசின் சார்பில் யாழ்.மாவட்டத்தின் முதன்மை வேட்பாளராக போட்டியிடவுள்ளார். வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தின் இரு மாவட்டங்களிலுமாக மொத்தம் 7மாவட்டங்களில் தாம் போட்டியிடவுள்ளதாக இக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. திருமலை, மட்டக்களப்பு, அம்பாறை, வன்னி, யாழ்ப்பாணம், நுவரேலியா மற்றும் ஹற்றன் ஆகிய மாவட்டங்களில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக இக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஈரோஸின் தவிசாளர் அருளர் அருட்பிரகாசம் யாழ் மாவட்டத்தின் முதன்மை வேட்பாளராக போட்டியிடவுள்ளார். வரலாற்று நாவலான லங்கா ராணியின் ஆசிரியர் இவரென்பது குறிப்பிடத்தக்கது.

ரம்பாவை மணப்பவர் .......................

நடிகை ரம்பாவை மணக்கும் கனடா தமிழ் தொழிலதிபர் இந்திரன் விடுதலைப் புலி ஆதரவாளர் என்று வெளியான செய்திகளை மறுத்துள்ளனர் ரம்பாவும் அவரது அண்ணன் வாசுவும். இந்தத் திருமணத்தை விரும்பாத சிலர் செய்யும் சதி இது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ரம்பா. ரஜினி, கமல் என அனைவருடனும் ஜோடி போட்டவர். ரம்பாவுக்கும் கனடா தொழில் அதிபர் இந்திரனுக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயமானது. இந்திரன் மேஜிக்வுட்ஸ் என்ற பெயரில் இன்டீரியர் டிசைனிங் கம்பெனி நடத்துகிறார். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழர். இந்த நிறுவனம் ரம்பாவை சில மாதங்களுக்கு முன் விளம்பர தூதுவராக நியமித்தது. அப்போது இந்திரனுக்கும் ரம்பாவுக்கும் காதல் மலர்ந்தது. ரம்பாவுக்கு பி.எம்.டபிள்யூ. காரை இந்திரன் பரிசாக வழங்கினார். சமீபத்தில் இருவருக்கும் சென்னை அடையாறு பார்க் ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடந்தது. ஏப்ரல் 8ம் தேதி திருப்பதியில் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந் நிலையில் இந்திரன் பற்றி புது வதந்தி பரவி வருகிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டு தலைவர்களுடன் இந்திரனை தொடர்புபடுத்தி செய்திகள் வெளிவந்துள்ளன. இந்தக் குற்றச்சாட்டை அவருக்கு நெருக்கமானவர்கள் மறுக்கிறார்கள். இந்திரன் விடுதலைப்புலிகள் ஆதரவாளர் இல்லை என்றும் அமெரிக்கா, கனடாவில் உள்ள இந்திய தூதரகங்கள் அவர் இந்தியா வருவதற்கு விசா அளிப்பதன் மூலம் இதை அறிய முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்

ஜனாதிபதி மாளிகையை மக்கள் கைப்பற்றுவார்கள்

போராட்டங்கள் மூலமாக மக்கள் அதிபர் மாளிகையை கைப்பற்றுவதற்கு முன்னர் சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டுமென அதிபர் ராஜபக்சவுக்கு பிரதான எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜே.வி.பி. எச்சரிக்கை விடுத்துள்ளது. பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டம் மற்றும் கூட்டத்தின் போதே அக்கட்சியின் தலைவர்களும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மேற்கண்ட எச்சரிக்கையை விடுத்தனர். ஊர்வலத்திலும், எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் பங்கேற்றோர் பொன்சேகாவை விடுதலை செய், பொன்சேகாவே உண்மையான ஜனாதிபதி, தேர்தலுக்கும் ஜனநாயகத்திற்கும் பயமில்லை என்றால் பொன்சேகாவை விடுதலை செய், விடுதலை செய், விடுதலை செய், நாட்டின் தளபதியை விடுதலை செய், அதிபர் மாளிகை உனக்கு சொந்தமானது அல்ல, மக்கள் ஆணையை மாற்றிய பொய் அதிபரை வீட்டுக்கு அனுப்புவோம் போன்ற கோஷங்களை எழுப்பினர். முன்னாள் எம்.பி.யான லால்காந்த எதிர்ப்பு கூட்டத்தில் உரையாற்றுகையில், "இந்த அரசாங்கத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பொன்சேகா கைது செய்யப்படவில்லை, கடத்தப்பட்டுள்ளார்,அவரை விடுவிக்கும் வரை இந்த போராட்டம் தொடரும் மக்கள் விடுதலை முன்னணி போராட்டத்தை கைவிடாது. ஜெனரலை விடுவிக்கும் வரை போராட்டமும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் தொடரும். மக்கள் அலரிமாளிகையை கைப்பற்றுவதற்கு முன்னர் ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யவும். தேர்தலுக்கும் ஜனநாயகத்திற்கும் பயமில்லை என்றால் ஜெனரலை உடனடியாக விடுதலை செய்யவும். இல்லையேல் ஜனநாயக ரீதியில் போராட்டத்தை முன்னெடுத்து ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுவிப்போம்" என்றார்.

கருணாவுக்கு தேசிய பட்டியலில் இடமில்லை

அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை (கருணா) தேசியப்பட்டியலில் சேர்க்க முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. தேசியப் பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட கருணா, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உபதலைவராக தற்போது பதவி வகிப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மக்கள் விரும்பிய தலைவர்களைத் தெரிவுசெய்ய அந்த மக்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதால் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுமாறு கருணாவிற்கு அரசதலைவர் மகிந்த அறிவித்துள்ளதாகத் தெரியவருகிறது. இதனடிப்படையில் கருணா எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளராக மட்டகளப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, முன்னாள் பிரதியமைச்சரான கணேசமூர்த்தி, அமீர் அலி, அலிஸாஹிர் மௌலானா ஆகியோர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளனர். அதேவேளை, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துறை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளமை தெரிந்ததே

துப்பாக்கியை மறைத்திருந்த மாணவர்,,,,,,,,,,,,

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கோகி ரத்னா பகுதியை சேர்ந்தவர் அசார் இக்பால், மாணவர். இவர் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகருக்கு செல்ல பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானத்தில் டிக்கெட் எடுத்திருந்தார். விமானத்தில் ஏற ராவல் பிண்டியில் உள்ள பெனாசிர் பூட்டோ சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தார். விமானத்தில் ஏறுவதற்கு முன்பு அவரை எக்ஸ்ரே கருவி மூலம் “ஸ்கேனிங்” சோதனை நடத்தினார்கள். அப்போது அவர் ஷூக்களில் துப்பாக்கி, மற்றும் 2 கத்திகளை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

தாலிபான்களின் முன்னணித் தலைவர் பிடிபட்டார்

தாலிபான்களின் மூத்த இராணுவத் தளபதியும் முன்னணி வியூக வகுப்பாளருமான முல்லா அப்துல் கனி பராதார் இந்த மாத முற்பகுதியில் கராச்சியில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கப் படைகளினால் கூட்டாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் பிடிக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. இந்த செய்தி முதலில் வாஷிங்டனில் இருந்து வந்தது. பின்னர் அதனை பாகிஸ்தானிய அதிகாரிகள் அதிகாரபூர்வமற்ற முறையில் பிபிசியிடம் உறுதி செய்தனர். ஆனால், இதுவரை பாகிஸ்தானிய அரசாங்கத்திடம் இருந்து இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. ஆனால், ஆப்கானிய தாலிபான்களின் பேச்சாளர் ஒருவர் இதனை மறுத்துள்ளார். அமெரிக்கர்கள் தமது தோல்வியில் இருந்து கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள் என்று அவர் கூறினார்.

அமெரிக்காவே 'சர்வாதிகாரி'

தாம் இராணுவ சர்வாதிகாரியாக வருவதாக அமெரிக்க குற்றஞ்சாட்டியிருப்பதற்கு பதிலடி தந்துள்ள இரான், அமெரிக்கா தான் சர்வாதியாக இருந்து கொண்டு பிறர் மீது குற்றஞ்சாட்டுவதாக கூறியுள்ளது. இராக்கிலும், ஆப்கானிலும் சண்டையிடுவதற்கு அமெரிக்காதான் வெளிநாட்டுக்கு நூற்றுக்கணக்கான சிப்பாய்களை அனுப்பியதே ஒழிய இரான் அவ்வாறு செய்யவில்லை என்று இரானிய அதிபர் மஃமுட் அஹ்மதிநிஜாத் கூறியுள்ளார். தமது நாட்டின் அணுத் திட்டத்துக்கு எதிரான புதிய தடைகளுக்கான அச்சுறுத்தல்களை நிராகரித்துப் பேசிய அவர், அத்தகைய நகர்வுகளினால் தமது நாடு பாதிக்கப்படாது என்றும் கூறினார்.

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

செய்த பாவத்தின் பழியை பொன்சேகா அனுபவிக்கிறார்

சரத் பொன்சேகா எனது கணவரை நியாயமற்ற வகையில் இராணுவத்திலிருந்து ஒதுக்கியபோது மிகவும் வேதனைப்பட்டேன். ஒரு பெண்ணாக தனிமைப்படுத்தப்பட்டது போன்று உணர்ந்தேன். அதற்காக ஒவ் வொருவரிடமும் முறையிடப் போகவில்லை. பெண்கள் அமைப்புக்களின் ஆதரவைத்திரட்ட முனையவில்லை. கடவுளிடம் மட்டுமே முறையிட்டேன். ஆனால், எனது கணவருக்கும் ஏனை யோருக்கும் செய்த பாவத்தையும் பழி யையும் இன்று சரத் பொன்சேகாவும் அவரது மனைவி அனோமாவும் அனு பவித்துக் கொண்டிருக்கிறார்கள் என கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பாகவிருந்த இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிபிட்டியவின் மனைவி அச்சினி இரோமா தெரிவித்துள்ளார். எனது கணவரும் சிங்க ரெஜிமன்ட்டைச் சேர்ந்தவர்தான். அநாமதேய அவதூறு குற்றச்சாட்டை வைத்துக் கொண்டு எனது கணவரை இராணுவத்திலிருந்து விலக்கினார். சரத் பொன்சேகாவின் மனைவியுடன் மிகவும் நெருங்கிய உறவுகளை நான் வைத்திருந்த போதும் எனது கணவருக்கு இவ்வாறு நடந்தது. ஆனால் இன்று சரத் பொன்சேகாவுக்கு இப்படி நடந்தவுடன் அவரது மனைவி ஒவ்வொருவரிடமும் முறையிடுவதும் பெண்கள் அமைப்புக்களை ஆதரவு வழங்கக்கோரி அழைப்பு விடுப்பதுமாக இருக்கிறார். முன்செய்த பாவங்கள் பலித்துக் கொண்டிருப்பதாகவே நான் கருதுகிறேன் என்றும் அவர் தெரிவித்தார். சரத் பொன்சேகா இன்று தண்டனை பெறும் போது அவரது பிள்ளைகள் பெரியவர்களாக இருக்கிறார்கள். எனது கணவர் விலக்கப்படும் போது எனது மூத்த பிள்ளைக்கு 12 வயது. ஏனைய இரண்டு பிள்ளைகளும் 4 வயதையும், 5 வயதையும் உடையவர்களாக இருந்தனர். கணவர் கைது செய்யப்பட்ட போது இந்தக் குழந்தைகளுடன் தனிமைப்படுத்தப் பட்டேன். குழந்தைகளுடன் வீதியிலிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. உத்தியோக பூர்வ இல்லத்திலிருந்து ஒரு மாதத்திற்குள் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில் எமக்கு உதவியது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே. அவரது மனிதாபிமானம், காருண்யம் என்பவற்றால்தான் அதிக பெரும்பான்மை வாக்குகளால் வென்று மீண்டும் ஜனா திபதியாகியிருக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.

கலைஞரின் குடுமி சும்மா ஆடாது

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மீண்டும் ஒரு தடவை சத்தமிட்டு இவ்விடயத்தில் தமது இருப்பை வெளிப்படுத்தியிருக்கின்றார் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி.இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க இலங்கை அரசு தவறுமானால் அதை தி.மு.க. வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இராது என மிரட் டல் விட்டிருக்கின்றார் அவர். இது எதிர்பார்க்கப்பட்ட ஒரு விவகாரம்தான். இனிமேல் இதையும் விட மேலும் தீவிரமாக அவர் எகிறிக் குதிப்பார் என்று எதிர்பார்க்கலாம். இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான கொடூர யுத்தம் கட்டவிழ்ந்து, பல்லாயிரக் கணக்கான அப்பாவித் தமிழர் கள் அநியாயமாகக் கொன்றொழிக்கப்பட்ட போதே அதைத் தடுக்க வக்கற்றவராக இருந்துகொண்டு பல் வேறு அரசியல் திருகுதாள நாடகங்களை வெற்றிகரமாக அரங்கேற்றிய பெரும் கலைஞர் அவர். தமிழகத்தின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர் களும் கூண்டோடு இராஜிநாமாச் செய்வர் என்ற மிரட்டல் நாடாகத்தோடு தொடங்கி, மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம், புதுடில்லி அரசை எச்சரிக்கும் விதத்தில் அனைத்துக் கட்சிக் குழுவினருடனும் புதுடில்லி படை யெடுப்பு (விஜயம்), உப்புச்சப்பற்ற வகையில் தமிழக சட்டசபையில் பிரயோசனமற்ற தீர்மானங்கள், "ஐயகோ! தமிழினம் அழிகின்றதே!' என்னும் சாரப்பட அழுது வடியும் அறிக்கைகள் என்று தொடர்ந்து, கடைசியாக சுமார் நான்கு மணி நேரம் நடத்திய சாகும்வரையான(?) உண்ணாவிரதப் போராட்டம் வரை இந்த நாடகங்களின் வரிசை நீண்டது. இறுதியாக, ஈழத் தமிழருக்கான தமது சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை சில மணி நேரம் கூட நீடிக்கமுடியாத அவர் ஈழத்தில் யுத்தநிறுத்தம் வந்துவிட்ட தாக அறிவித்துவிட்டு தமது உண்ணாவிரதக் கதையை முடித்துக் கொண்டமைதான் மிக மோசமான ஈழத் துரோக நடவடிக்கையாகும். அவரது அந்த யுத்த நிறுத்தப் பிரகடனம் பற்றிய அறி விப்பின் பின்னர்தான் வன்னியில் மக்கள் பேரழிவு மிக உச்சத்தை எட்டியது. அந்த அழிவுகள் பற்றிய சர்வதேசத் தின் கவனத்தைத் திசை திருப்பி, தவறாக வழி நடத்தும் விதத்தில் கருணாநிதியின் அந்த அறிவிப்பு அமைந்தது. தமது அரசியல் சுயலாபச் செயற்பாட்டுக்காக, ஈழத் தமி ழர்கள் மீது தொடுக்கப்பட்டிருந்த கொடூர யுத்தம் தொடர் பில் சர்வதேசத்தின் கவனத்தை அந்த இக்கட்டான சம யத்தில் இவ்வாறு தவறான திசைக்குத் திருப்பிவிட்டு "யுத்தம் நின்றுவிட்டது, தமிழர்கள் அழிவு தடுத்து நிறுத் தப்பட்டுவிட்டது' என்ற தவறான கருத்தியலை சர்வ தேசத்துக்கும் ஏற்படுத்தி வரலாற்றுத் துரோகமிழைத் தவர் கருணாநிதி என்பதை உலகத் தமிழினம் மறக்காது. கடந்த மே மாதத்தில் நடந்த இந்தியப் பொதுத் தேர்த லுக்கு முன்னர், மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு, தனது பெரும்பான்மைக்கு தி.மு.க. போன்ற தோழ மைக் கட்சிகளின் தயவில் தங்கியிருந்தது. அந்தச் சமயத் தில் கூட ஈழத் தமிழினத்துக்காக மத்திய அரசைக் கொண்டு ஆக்கபூர்வமாக எதையுமே செய்ய வைப்ப தற்கு லாயக்கற்றவராகவே கருணாநிதி இருந்தார். அச்சம யம் இலங்கையில் நடந்த யுத்தம் தொடர்பில் ஈழத் தமி ழருக்கு ஆதரவாகச் செயற்பட வைக்க அல்ல குறைந்த பட்சம் ஈழத் தமிழர்களுக்கு எதிராகச் செயற்படாமல் மத்திய அரசைத் தடுக்கக் கூட அவரால் இயலாமல் போயிற்று. இப்போது கடந்த மே மாதத்துடன் இந்திய அரசியல் நிலைமை இன்னும் மாறிவிட்டது. புதுடில்லியில் ஆளும் காங்கிரஸ் கட்சி, தனது கூட் டணிக் கட்சியான தி.மு.க. போன்றவற்றின் உதவியோ, தயவோ இன்றியே தனித்து தன் சொந்தக் காலில் உறுதியாக ஆட்சியை ஸ்திரப்படுத்திக் கொண்டுவிட் டது. ஆனால், மறுபுறமாகத் தமிழகத்தில் கலைஞர் கரு ணாநிதியின் பெரும்பான்மைப்பலம் இல்லாத தி.மு.க. அரசோ, தனது ஆட்சியைக் கொண்டு நடத்துவதற்குத் தொடர்ந்தும் காங்கிரஸ் கட்சியின் தயவில் ஆதரவில் தங்கிநிற்க வேண்டிய கட்டாயம். இந்த நிலையால் ஈழத் தமிழர் விடயத்தில் கலைஞர் கருணாநிதியின் கூத்தெல்லாம் வெறுமனே இலங்கை அரசுக்கு எதிராக மட்டுமே இருக்கமுடியும். மத்தியில் ஆட்சியிலிருக்கும் காங்கிரஸ் அரசுடன் முட்டுப்படாமல் தான் அவர் எதையும் செய்யமுடியும். சரி. இவ்வளவு நீண்ட மௌனத்துக்குப் பின்னர் மீண் டும் இப்போது ஏன் கொழும்பு அரசு மீது காட்டமாகப் பாய முயன்றிருக்கின்றார் கலைஞர்? சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பார்கள். அதே கதைதான் இங்கும்! தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க வுக்கும் காங்கிரஸுக்கும் இடையே நல்லுறவு மீண்டும் அரும்ப மலர தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகின் றது. அத்தகைய ஒரு நிலைமை ஏற்பட்டால் மறுபுறத் தில் தமது தி.மு.க. அரசியல் நடத்துவதற்குப் பொருத்தமான கோஷங்கள் அரசியல் சர்ச்சைகள் அக்கட்சிக்குத் தேவை. அத்தகைய ஒன்று ஈழத் தமிழர்களுக்கு நியாயம் பெற் றுக்கொடுக்கும் விவகாரம். அதனால் முற்கூட்டியே களத் தைத் தயார் படுத்துகின்றார் பழுத்த அரசியல் நடிகரான கலைஞர் கருணாநிதி. அவ்வளவுதான்!

'பில்பிலோட்'

ஒன்லைன்-ல் ஒரு பொருள் வாங்குவதில் இருந்து புத்தகம் வாங்குவது வரை நாம் அத்தனைக்கும் பயன்படுத்துவது பேபால்( Paypal) தான் இந்த பேபால் தான் உலகம் முழுவதும் அனைவரும் அதிகமாக இணையதளம் மூலம் பொருள்களை வாங்க விற்க பயன்படுத்தும் சேவை. பேபால் மூலம் ஒரு பொம்மை விற்பவர் கூட தனக்கென்றுஉள்ள இணையதளத்தை இலவச பேபால் கணக்கை தொடங்கி விடலாம் ஒவ்வொரு பொருளும் விற்றபின் நாம் சிறு தொகையை சேவைக்காக பிடித்துவிடுகின்றனர். இந்த பேபால் இப்போது வரை பணம் அனுப்புபவரின் முழு தகவல்களையும் சேமித்து வைப்பதில்லை எளிய முறையில் பணம் யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம் ஆனால் பணம் அனுப்பியவரின் எந்த முகவரியையும் டிரேஸ் செய்வதில்லை இதுமட்டுமல்ல மேலும் பணம் அனுப்ப பயன்படுத்தும் இமெயில் முகவரியை கூட சில நேரங்களில் தவறாக பயன்பபடுத்தலாம் ஆனால் இந்த எந்தப்பிரச்சினையும் இல்லாமல் இணையதளத்தில் ப்ண பரிமாற்றம் செய்ய பேபால் மற்றும் வென்ராக் இணைந்து புதிதாக 'பில்பிலோட்' என்ற சேவை வர இருக்கிறது. ஒரு பொருள் வாங்க பணம் அனுப்புவதற்கு பணம் அனுப்புவதில்லிருந்து அதன் அத்தனை விபரங்களையும் துல்லியாமாக கண்டுபிடித்து நமக்கு கொடுக்கும் அதுமட்டுமின்றி பணம் பெறுபவர்கள் தவறுதலாகவோ அல்லது தெரிந்தோ மாற்றி அனுப்பியிருந்தால் கூட தவறுதலாக பணம் அனுப்பியவரின் தகவல்களை கூட தெரிந்து கொள்ளலாம்.பேபால் மூலம் பணம் வெளிநாடுகளில் இருக்கும் நபர்களுக்கு அனுப்பினால் சென்று கிடைக்க மூன்று முதல் நான்கு வரை எடுத்துக்கொள்ளும் ஆனால் இந்த பில்பிலோட் சேவைமூலம் பணம் வெகு விரைவில் நம் கணக்கில் கிடைக்க ஏற்பாடும் செய்துள்ளனர். அதேபோல் இணையதள செக்யூரிட்டிக்கும் நம் கணக்கிற்கும் பாதுகாப்பு அதிகப்படுத்த்ப்பட்டுள்ளது.இணையதளத்தில் மட்டுமல்ல மொபைல்போன் மற்றும் வாய்ஸ் ரெககனேசன் மூலமும் பணம் அனுப்பும் தொழில்நுட்ப வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

தகவல்களை குறித்து வைக்க ......

கம்ப்யூட்டரில் மிகவும் கவனமாகப் பணியாற்றிக் கொண்டிருக்கையில் திடீரென நமக்கு ஒரு போன் அழைப்பு வரலாம். அவசரமாய் ஏதேனும் தகவல்களை போன் செய்பவர் கூறுவார். அப்போதுதான் பேனா, பென்சில் மற்றும் பேப்பரைத் தேடுவோம். எதிர் முனையில் இருப்பவர், என்னய்யா இதெல்லாம் பக்கத்தில் வைத்துக் கொள்வதில்லையா என்று அங்கலாய்ப்பார். ஏன், கையில் இருக்கும் கம்ப்யூட்டரில் தகவலைக் குறித்துக் கொள்ள முடியாதா? முடியும். நோட்ஸ், ஸ்டிக்கி நோட்ஸ், அர்ஜன்ட் நோட்ஸ் என இதனைக் குறிப்பிடுவோம். இது போல நோட்ஸ் குறிப்புகளை, டெஸ்க்டாப்பில் எழுதி வைக்கும் வசதியைத் தர பல புரோகிராம்கள் இருந்தாலும், ஹாட்நோட்ஸ் (Hot Notes) என்னும் புரோகிராம், இவ்வகையில் சிறப்பானதாக இருந்தது. மெசேஜ், லிஸ்ட், ஸ்கிரிப்பிள் என மூன்று வகைகளில், மூன்று தனி தனிக் கட்டங்களில் நாம் அவசரத் தகவல்களை எழுதி வைக்கலாம். இந்த கட்டங்கள் ஒளி ஊடுறுவும் தன்மை உடையதாய், டெஸ்க் டாப்பில் உள்ளதை மறைக்காதவகையில் இருக்கும். சிறிய அளவில் இதில் படங்களைக் கூட வரைந்து வைக்கலாம். அல்லது படத்தை ஒட்டியும் வைக்கலாம். வேஸ்ட் பாஸ்கட் என்னும் வசதியில், அதிகம் பயன்படாத குறிப்புகளை எழுதி வைக்கலாம். தேவைப்பட்டால், ரீசைக்கிள் பின்னிலிருந்து எடுத்துக் கொள்வதைப் போல எடுத்துக் கொள்ளலாம். முக்கியமான தகவல்களை பேக்கப் பைலாக வைத்துக் கொள்ளவும் இதனைப் பயன்படுத்தலாம். நினைவில் வைத்துக் கொண்டு, வரும் நாட்களில் மேற்கொள்ள வேண்டிய வேலைகளை, இதில் ஒரு நினைவூட்டல் போர்டு மாதிரி எழுதி வைத்துக் கொள்ளலாம்.இது எங்கும் எடுத்துச் செல்லும் வகையில் போர்ட்டபிள் வெர்ஷனாகவும் கிடைக்கிறது. இதனை பிளாஷ் டிரைவில் எடுத்துச் சென்று எந்த பெர்சனல் கம்ப்யூட்டரிலும் பயன்படுத்தலாம்.

மூளைக்கு ஆபத்து,,,,,,,,

வண்ண விளக்குகள் வசீகரமானவை. கண்களை கவர்ந்திழுக்கும். பலரும் விரும்புவதால் வண்ணவிளக்குகள் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக பூஜையறை, படுக்கை அறை மற்றும் பெரியவர்களின் படங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் `ஜீரோ வாட்ஸ்’ பல்புகளாவது ஒவ்வொரு வீடுகளிலும் ஒளிரும். அமெரிக்காவின் எம்.ஐ.டி. பல்கலைக்கழக நரம்பியல் வல்லுனர்கள், விளக்கு ஒளியால் ஏற்படும் நரம்பியல் மாற்றங்கள் குறித்து ஆய்வு நடத்தினார்கள். இதில் வண்ண விளக்குகளில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகள் மூளையைப் பாதிப்பது தெரியவந்துள்ளது. இதற்காக ஆய்வகத்தில் பல வண்ண விளக்குகளுக்கு இடையே எலிகள் பரிசோதித்துப் பார்க்கப்பட்டன. ஆய்வில் விளக்குகளை அணைக்கும்போது ஏற்படும் எலக்ட்ரிக் கதிர்வீச்சு மூளை செல்களான நிரான்களைப் பாதிக்கின்றன. அவற்றின் செயல்பாட்டை தடுப்பதால் பல விபரீத வியாதிகள் ஏற்படுகின்றன. குறிப்பாக உடல் வலி, பார்கின்சன் என்னும் ஞாபகமறதி வியாதி, மூளை முடக்கம், இதயக் கோளாறுகள், நோய் எதிர்ப்பு அமைப்பு (இம்ன் சிஸ்டம்) செயல்களில் பாதிப்பு மற்றும் இன்னும் பல வியாதிகளுக்கு வழி வகுக்கிறது. ஒவ்வொரு வண்ண விளக்கும் வேறுவேறு பாதிப்புகளை உருவாக்குவது குறிப்பிடத்தக்கது. சிவப்பு வண்ண விளக்கு நிரான்களை செயலிழக்கச் செய்கிறது. நீல வண்ண விளக்குகள் ஒரு வகை ஜீன்களைப் பாதிக்கிறது. மஞ்சள் விளக்குகள் வேறுவகை ஜீன்களைப் பாதிக்கிறது. உடலியக்கம் பல மின்தூண்டல்களால்தான் நடைபெறுகிறது. இதற்கிடையே விளக்குகளை அணைக்கும்போது ஏற்படும் மின் அதிர்வுகள், மூளையை பாதிக்கிறது என்கிறது ஆய்வு

மகிந்தவிற்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார் கே.பி

சிறிலங்காவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன், உலகின் பல நாடுகளிலும் உள்ள தனக்கு நெருக்கமானவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி வருவதாக தெரியவருகின்றது. தொலைபேசியூடாக தொடர்புகளை ஏற்படுத்தி வரும் இவர், மகிந்தவிற்கு ஆதரவான செயற்பாடுகளில் ஈடுபடுமாறு தனது ஆதரவாளர்களுக்கு கூறி வருவதாகவும், மகிந்தவின் சகோதரர் பசில் ராஜபக்சவுடன் இணைந்து பல நடவடிக்கையில் இவர் ஈட்டுபட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது. தற்போது புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தனது முன்னாள் ஆதாரவளர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், இவர்கள் மூலமாக மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக சர்வதேச ரீதியாக வலுப்பெற்றுவரும் எதிர்ப்பலைகளை தணித்து, புலம்பெயர்ந்த தமிழர்களின் மகிந்த அரசிற்கு எதிரான செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் பணி ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகின்றது. அத்துடன், எதிர்வரும் சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் தமிழத் தேசியக் கூட்டடைப்பு சனாதிபதி தேர்தலைப் போன்று ஒருமித்து நின்றால், மகிந்த ராஜபக்சவிற்கு வடக்கு கிழக்கு மாநிலங்களில் வெற்றிவாய்ப்பு கிடைக்காது என்பதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்தவர்களை அதிலிருந்து பிரித்தெடுப்பதுடன், சுயேட்சையாகப் பலரைக் களமிறக்கி, வாக்குகளை சிதறிடித்து வெற்றிவாய்ப்பை மகிந்தவிற்கு சாதகமாக திருப்புவதற்கும் இவர் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது. சுயேட்சையாக தேர்தல் களத்தில் குதிக்குமாறு இவர் தனக்கு நெருக்கமான பலருக்கு தொலைபேசி எடுத்து அழைப்பு விடுத்துள்ளதாகவும் அறியவந்துள்ளது. சிறிலங்கா இராணுவத்தின் உச்ச பாதுகாப்பில் இருப்பதாகக் கூறப்படும் ஒருவர் இவ்வாறு வெளிப்படையாக தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொள்ளத் தொடங்கியிருப்பது இவர் கடத்தப்பட்டது மற்றும் கைதானது தொடர்பான பலத்த சந்தேகங்களை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

கருணாநிதியிடம் அளவோடு பழகாவிட்டால் ஆபத்து

கருணாநிதிக்கு பல்வேறு தரப்பினரும் விழா எடுப்பதும் விழாவில் கலந்துக்கொண்டு பேசுவோர் சொறிந்து விடுவதில் சூரன் நீயா? நானா? என் போட்டிபோட்டுக்கொண்டு கருணாநிதிக்கு புகழ் மலர்கள் சொரிவதும் அந்தப் புகழுரைகளைக் கூச்ச நாச்சமில்லாமல் முதுகெலும்பே முறிந்தாலும் கவலையில்லை என கருணாநிதி காலை முதல் மாலைவரை இருந்த இடத்திலேயே இருந்து ரசிப்பதும் தமிழ்நாட்டில் அன்றாட நிகழ்வாகிப்போனது அனைவரும் அறிந்ததே. இந்த வகையில் 14-2-2010 அன்று சங்கத் தமிழ் பேரவை சார்பில் நட ந்த பாராட்டு விழவில் கலந்துகொண்டு பேசிய ரஜினி கருணாநிதியைப் பற்றி குறிப்பிடும் போது சூரியனுக்கு அருகில் சென்றால் சுடும் எட்ட இருந்தால் குளிரும் நான் அருகிலும் செல்ல மாட்டேன் எட்டியும் போக மாட்டேன் என கருணாநிதியிடம் அளவோடு பழகாவிட்டால் ஆபத்து என்பதை சூசகமாக எச்சரித்தார். போலிஸ் காரனோடு பழகும் போது இப்படி தான் பழகவேண்டும் என்று பொதுவாகச் சொல்வார்கள் காவல்துறையை கையில் வைத்திருக்கும் கருணாநிதியை விட்டு எட்ட நின்றதால் பாரதிராஜா பட்ட பாட்டை ரஜினியின் எச்சரிக்கை நினைவூட்டியது. அவரது பேச்சு இப்படியென்றால் அவரது செயல்பாடுகள் அரசியல் நோக்கர்களை வேறு மாதிரி சிந்திக்க வைத்திருக்கிறது ! தனது மகளின் நிச்சயதார்த்த அழைப்பிதழை தான்நேரில் ஜெயலாலிதாவிடம் கொடுத்ததையும், மனைவியை அனுப்பி கருணாநிதியிடம் அழைப்பிதழ் கொடுத்ததையும் ஒப்பிட்டு பேசுகிறார்கள் ரஜினியின் இந்தச் செயலுக்குக் காரணம் கான நாம் கடந்த வாரம் திரைத்துறையினர் எடுத்த விழா நிகழ்வுகளை நினைவூட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த விழாவில் நடிகர் அஜித், கலைஞர்கள் பொதுவானவர்கள் ! அரசியல் வாதிகள் தங்களது போராட்டங்களுக்கும், அரசியல் சார்ந்த நிகழ்வுகளுக்கும், வரச்சொல்லி மிரட்டுகிறார்கள். என்றும் கருணாநிதி இதில் தலையிட்டு நீதி வழங்க வேண்டும் என்றும் ஒரு குற்றப்பத்திரிகையை வாசித்தார். அஜித் பேசும் போது ரஜினி தன் இருக்கையில் இருந்து எழுந்து இரு கைகளையும் தட்டி அஜித்தின் குற்றச்சாட்டை ஆமோதித்து வரவேற்று தனது ஆதரவை அப்போதே வெளிப்படுத்தினார் இது கருணாநிதியின் கைத்தடிகளுக்கு பேரதிர்ச்சியை உண்டாக்கியது விழா முடிந்த ஒரிரு நாட்களிலேயே கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் ”உயரேயும் தூக்குவார்கள் பொத்தென்றும் போடுவார்கள்” எனக் குறிப்பிட்டது திரைத்துறையினரைத்தான் என்பதும் குறிப்பாக விழாவில் ரஜினியின் வினைக்கான, எதிர்வினை தான் அந்த அறிக்கை என்பதை எல்லோராலும் விளங்கிக்கொள்ள முடிந்தது இந்த அறிக்கைக்கு பிறகுதான் கலைஞர்கள் பொதுவானவர்கள் என்ற தன் கருத்தை செயலாக்கிக் காட்டவே ஜெயலலிதாவிற்கு நேரில் சென்று தன் மகளின் நிச்சியதார்த்த அழைப்பிதழை கொடுத்துள்ளார் என தெரிகிறது. ரஜினி, ஜெயலலிதா சந்திப்பு இன்னொரு முக்கியத்துவம் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். அ.தி.மு.க. காங்கிரஸ் கூட்டனிக்கு முயல்பவர்களின் முயற்சி வெற்றிபெற்று விடுமென்றே தெரிகிறது. தி.மு.க. காங்கிரஸ் கூட்டனியை முறியடிக்க சதி நடப்பதாக கருணாநிதியின் ஆதரவாளர் தங்கபாலு அலறுவதில் இருந்தே இச்செய்தி உறுதிபடுகிறது கோடி கோடியாய் சம்பாதிக்கும் திரைத்துறையினரைப் பொருத்தவரையில் அவர்களுக்கு சிம்மச் சொப்பனமாக விளங்குவது வருமான வரித்துரையினரும், இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு மேல் அதை தன் வீட்டு வேட்டை நாயைப்போல கட்டுக்குள் வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சியும். காங்கிரஸ் கட்சிக்குள் தமிழ்நாட்டிலும், டெல்லியிலும் உள்ள பலரும் ரஜினிக்கு நெருக்கமானவர்கள் அவர்கள் மூலமாக காங்கிரஸ் – அ.தி.மு.க கூட்டனி உறுதியாகப் போகிற செய்தி ரஜினி தெரிந்துகொண்டதன் வெளிப்பாடுதான் ரஜினி, ஜெயலலிதா சந்திப்பு. கருணாநிதி இருதலை முனியன் என்றால் அந்த முனியன் பாம்புக்கு தலையையும், இன்னொருபக்கம் வாலையும் காட்டத் தெரிந்த விலாங்கு மீன் தான் என்பதை ரஜினி நிருபித்து விட்டார். ரஜினியின் செயலில் தெரிவது முதிர்ச்சி கருணா நிதியின்முகத்தில் தெரிவது அதிர்ச்சி

பொன்சேகாவால் பாதிக்கப்பட்ட இன்னொரு பெண்ணின் ஆதங்கம்

21 வருடங்களாக இராணுவத்தில் சேவையாற்றிய எனது கணவர் செய்யாத குற்றத்திற்காக சிறைக்கு அனுப்பி, சேவையிலிருந்து நீக்கப்பட்ட அநியாயத்து க்காக சரத் பொன்சேகா தற்பொழுது தண்ட னையை அனுபவித்து வருவதாக அநீதி இழைக்கப்பட்ட படைவீரரின் மனைவியான சமிலா நிஷாந்தி விஜேதுங்க தெரிவித்தார். பத்தரமுல்லயிலுள்ள தொண்டர் படையணியின் ஒழுக்கம் மற்றும் பயிற்சி நடவடிக்கைகளுக்கு முன்னர் பொறுப்பாக செயற்பட்ட சார்ஜன்ட் மேஜர் எஸ். ஏ. எஸ். விஜேதுங்கவின் மனைவியே மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார். முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தனது கணவரை பலிவாங்கும் வகையிலேயே இவ்வாறு செய்ததாக அவர் மேலும் தெரிவித்தார். பெண் இராணுவ வீராங்கனை செய்த குற்றத்திற்காக எச்சரிக்கை விடுத்தமை தொடர்பாகவே சரத் பொன்சேகா தனது கணவருக்கு 21 நாள் சிறைத் தண்டனை வழங்கினார். என்னால் தேடிக் கண்டு பிடிக்க முடியாத வகையில் எனது கணவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்றும் கூறினார். பின்னர் எந்த ஒரு விசாரணையும் நடத் தாது இராணுவத்திலிருந்து எனது கணவர் நீக்கப்பட்டார் என்றும் சுட்டிக்காட்டினார். எனது கணவர் எங்கு இருக்கின்றார் என்பது கூட தெரியாத நிலையில் எனது சின்னஞ்சிறு குழந்தைகளுடன் நான் அழுது திரிந்ததை கண்ட சில இராணுவத்தினர் எனக்கு உதவி செய்தனர்.