இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
திங்கள், 15 மார்ச், 2010
சிறீலங்கா அரசு 1,422 ஊனமுற்றவர்களையும், 397 சிறுவர்களையும் தடுத்து வைத்துள்ளது
சிறீலங்கா அரசின் தடுப்புக்காவலில் 11,000 இற்கு மேற்பட்ட விடுதலைப்புலிகள் உள்ளனர். அவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களில் சிறப்பு பயிற்சி பெற்றவர்களும் உள்ளனர். பயிற்சி பெற்ற 19 தொடக்கம் 24 வயதுள்ள 4,580 பேரும், 25 தொடக்கம் 34 வயதுள்ள 4,220 பேரும் தடுப்பு முகாம்களில் உள்ளனர்.
தடுப்புக்காவலில் உள்ள 11,000 பேரில் 4,953 பேர் கடந்த இரு வருடங்களில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டவர்கள். அவர்களில் பெருமளவானவர்கள் வன்னி பகுதியை சேர்ந்தவர்கள்.
மேலும் அவர்களில் 1,422 பேர் ஊனமுற்றவர்கள். நான்கு பேர் முற்றாக கேட்கும் சக்தியை இழந்துள்ளனர். ஒருவர் பகுதியாக கேட்கும் சக்தியை இழந்துள்ளார். மூவர் முற்றாக பார்வையை இழந்துள்ளனர். 144 பேர் பகுதியாக பார்வையை இழந்துள்ளனர். ஐந்து பேர் இரு கால்களையும் இழந்துள்ளனர். 686 பேர் ஒரு காலை இழந்துள்ளனர்.
17 பேர் இரு கைகளையும் இழந்துள்ளனர். 387 பேர் ஒரு கையை இழந்துள்ளனர். இந்த வருடத்தின் மார்ச் மாதம் 1 ஆம் நாளில் இருந்து 10,781 பேர் 17 தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 8,791 பேர் ஆண்களும், 1,990 பேர் பெண்களும், 397 சிறுவர்களும் உள்ளனர்.
கஜேந்திரனின் மறுப்பு அறிக்கையும்,நம்பகதன்மைகளின் வெளிப்பாடும் ........
15-03-2010
ஊடக அறிக்கை
கடந்த 14-03-2010 அன்று தமிழ் இணையத்தளத்தில் கஜேந்திரன் குழுவினருக்கு வன்னியில் இருந்து ஒரு மடல் என்ற தலைப்பில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி மகாவித்தியாலய அதிபராக சிறீதரன் அவர்கள் கடமையாற்றிய காலத்தில் கிளிநொச்சிப் பாடசாலைக்கு விளையாட்டு மைதானம் பெறுவது தொடர்பாக அதிபர் சிறீதரன் அவர்கள் விடுதலைப் புலிகளது அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களை அணுகியதாகவும் அதன்போது தமிழ்ச்செல்வன் குழுவில் இருந்த சிலருடன் இணைந்து அந்த முயற்சியை நானும் எதிர்த்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக் குற்றச்சாட்டை நான் முழுமையாக நிராகரிக்கின்றேன். அத்துடன் கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு மைதானம் பெறுவது தொடர்பான எந்தவொரு கலந்துரையாடலிலும் எந்தவொரு சந்தற்பத்திலும் நான் கலந்து கொண்டிருக்கவில்லை. அப்படியிருக்க தமிழ்ச்சசெல்வன் குழுவில் இருந்து நானும் எதிர்த்ததாக கூறப்படுவது முற்றிலும் பொய்யான விடயமாகும்.
மைதான விடயத்தில் தமிழ்ச்செல்வன் குழு, நடேசன் குழு என்ற இரண்டு குழுக்கள் உருவாக நான் காரணம் என்ற பொய்க் குற்றச்சாட்டை சுமத்துவதன் மூலம் என் மீது சேறு பூசுவதன் மூலம் கொள்கையில் இருந்து விலகிச் செல்வும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெல்ல வைப்பதற்கான அரசியல் வங்குரோத்துத்தனமான பிரசார உத்தியை கூட்டமைப்பு கையாள்கின்றது.
அத்துடன் தலைவர் பிரபாகரனின் ஆழுமையை கேவலப்படுத்தும் மறைமுக நிகழ்ச்சி நிரலும் அரங்கேறுகின்றது. மைதானம் வழங்க தமிழ்ச்செல்வன் முட்டுக்கட்டாயக இருந்தார் என்றும், தமிழ்ச்செல்வன் குழு என்ற ஒரு இந்தது போன்றதொரு பொய்ப்பரப்புரையை இச் சந்தற்பத்தில் என்னோடு தொடர்பு படுத்தி கூற முற்படுவதன் மூலம் உலகத் தமிழ் மக்களால் ஆழமாக நேசிக்கப்பட்ட தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்கள் பற்றி தமிழ் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் சதித்திட்டம் ஒன்றை நாசூக்காக அரங்கேற்றுகின்றனர்.
திரு.சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்குப் பின்னர் நடேசன் அண்ணா அவர்கள் அரசியல் துறைப் பொறுப்பாளராக பதவியேற்ற காலத்திற்கு முன்னரும் பின்னரும் அவருக்கும் எனக்கும் மிகவும் நெருக்கமான நட்புறவு இருந்தது. இது உண்மையில் வன்னியில் வசித்த மக்களுக்கு தெரியும். பிளவுகளை ஏற்படுத்த நான் முயல்வதாக வதந்திகள் பரப்பப்படுகின்றது. ஆனால் பிளவுபட்டு சோர்வடைந்து, மரணபயத்தில் உறைந்து போயிருந்த யாழ் மக்களையும் ஏனைய தாயக மக்களையும் பொங்குதமிழ் என்ற நிகழ்வினூடாக சாதி, சமய, பிரதேச, வர்க்க வேறுபாடுகளை தாண்டி தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களது தலைமையினால புனிதப் போராட்டத்தின் பின்னால் அணிதிரட்டும் பணியை செய்திருந்தேன்.
வேற்றுமைகளை களைந்து கொள்கை அடிப்படையில் ஒற்றுமையை ஏற்படுத்த உழைத்தமையே என்னுடய வாழ்நாளில் நான் அதிகம் செய்த பணியாகும்.புலம் பெயர் மக்கள் வாழும் தேசங்களிலும் கூட பல்லாயிரம் மக்களை தேசிய விடுதலைப் போராட்த்தின் பின்னல் அரவணைத்து ஒன்று திரட்டும் பணியை நான் மேற்கொண்டிருந்தேன். ஒற்றுமை என்பது ஒரு சமூகத்தினது உரிமைகளை பெறுவதனூடாக கௌரவமானதும் பாதுகாப்பானதுமான, நீதியுடன் வாழக் கூடிய எதிர்காலத்தை பெற்றுக் கொடுப்பதற்கானதாக இருக்க வேண்டும்.
கொள்கைக்காக 150000 மக்களும் 40000 இளைஞர்களும் உயிர்த்தியாகம் செய்துள்ள நிலையில் அந்த தியாகங்களை கொச்சைப்படுத்தும் வகையில் அடிப்படை கொள்கைகளை கைவிட்ட அடிப்படையிலான தீர்வுத்திட்டம் ஒன்றை மக்களுக்கு தெரியாமலே ஒற்றுமை என்னும் பெயரால் ஏமாற்றி பிறசக்திகளின் தேவைக்காக திணிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு ஒத்துழைப்பது ஒன்றுமை அல்ல.
இராஐதந்திரம் என்பது வல்லமை மிக்க சக்திகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து அவர்கள் வழங்குவதை பெற்றுக் கொள்ள முயற்சிப்பது அல்ல. கடந்த 12-3-2010 அன்ற தினம் இரவு கல்வியங்காட்டுப்பகுதிக்கு வாகனத்தில் சென்ற எனது ஆதரவாளர்கள் அப்பகுதியில் ஒட்டப்பட்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் சுவரொட்டிகள் மீது எனது தேர்தல் பிரசார சுவரொட்டிகளை ஒட்டியதாகவும் அவ்விடத்தில் இருந்த பொது மக்கள் அதற்கு ஆட்சேபனை தெரிவித்த பொழுது எனது ஆதரவாளர்கள் டக்களஸ் வென்றாலும் பரவாயில்லை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெல்லக் கூடாதுதென எனது ஆதரவாளர்கள் கூறியதாகவும் 13-3-2010 அன்று தமிழ்வின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் இன்று வரை எனக்குரிய சுவரொட்டிகள் எதனையும் அச்சிடுப் பெற்றுக் கொள்ளவில்லை. சுவரொட்டிகளே அச்சிடப்பட்டிருக்காத நிலையில் மேற்படி சம்பவம் எப்படி நடந்திருக்க முடியும். அது மட்டுமன்றி கடந்த நான்கு நாட்களாக எனது தேர்தல் பிரசாரம் என்பது வடமராட்சிப் பிரதேசத்தில் மட்டுமே இடம் பெற்று வருகின்றது. இவர்கள் குறிப்பிடுவது போன்று கல்வியங்காட்டுப் பகுதியில் எனது ஆதரவாளர்கள் யாரையும் தேர்தல் பிரசார நடவடிக்கையில் நான் ஈடுபடுத்தியிருக்கவில்லை.
எனக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கைகளுக்கும் தாயகத்திலும், புலத்திலும் தமிழ் மக்கள் மத்தியில் அதிகரித்துவரும் ஆதரவை கண்டு சகித்துக் கொள்ள முடியாத நிலையில் எமது நற்பெயருக்கு கழங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இவ்வாறான பொய்ப்பிரசாரங்களை செய்து வருகின்றனர். கூட்டமைப்பு கொள்கையை கைவிட்டிருந்தாலும் கூட கூட்டமைப்பில் போட்டியிடும் தனது சகோதரரை வெல்ல வைக்க வேண்டும் என்ற சுயநல நோக்கின் அடிப்படையில் கூட்டமைப்பை வெல்ல வைக்க வேண்டும் என்பதற்காக கூட்டமைப்பில் போட்டியிடும் சிலருடன் இணைந்து கஜேந்திரன் குழுவினருக்கு ஒருமடல் என்ற தலைப்பிலும், வன்னியில் இருந்து ஒரு மடல் என்ற பெயரிலும் தமிழ்வின் இணையத்தள உரிமையாளரே மேற்படி பொய்யான செய்திகளை வெளியிட்டுள்ளதாக நான் கருதுகின்றேன்.
இதற்கு முன்னரும் இவ்வாறான பொய்யான ஆதராம் அற்ற செய்திகளை சொந்த சுயநலனுக்கான தமிழ்வின் இணையத்தளம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வந்தார் சென்றார்................
தென்னிந்தியாவிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலிருந்த தொடர்புகளை மீளவும் ஏற்படுத்துவதற்குத் துணைத் தூதரகம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் அமைப்பதற்கு இந்தியா விரும்புகிறது. தூதரகம் அமைக்கும் இந்தியாவின் பிரேரணையினை சிறிலங்கா ஏற்றுக்கொண்டிருக்கிறது.
கடந்த ஞாயிறன்று நாட்டினது குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் இரண்டு மணிநேரங்களுக்கும் மேலாகக் கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பின்போது யாழ்ப்பாணத்தில் துணைத் தூதரகத்தினை அமைக்கும் தமது முனைப்புத் தொடர்பில் மகிந்தவிற்கு எடுத்துக்கூறியதாக இந்தியப் பத்திரிகையாளர்களுடனான உத்தியோகப் பற்றற்ற சந்திப்பின் போது வெளிவிவகாரச் செயலர் நிருபாமா ராவ் கூறியிருக்கிறார்.
இந்தியாவின் சென்னை, மும்பாய் மற்றும் கல்கத்தா ஆகிய நகரங்களில் சிறிலங்கா தனது துணைத் தூதரகங்களைக் கொண்டிருக்கின்ற போதும் இந்தியாவின் ஒரேயொரு துணைத் தூதரகம் கண்டியில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டினது ஏனைய பாகங்களில் இந்தியா தனது துணைத் தூதரகங்களை அமைக்க விரும்பினால் அது தொடர்பாகத் தமக்கு எந்தத் தயக்கமும் இல்லையென சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் றோகித போகல்லகம ஒரு சில வாரங்களின் முன்னர் குறிப்பிட்டிருந்தார்.
யாழ்ப்பாணத்தில் துணைத் தூதுவராலயத்தினை அமைப்பதற்கான நடைமுறைச் செயற்திட்டங்கள் பூரணப்படுத்தப்படவேண்டியிருக்கிறது என்றும் யாழ் குடாநாட்டினது மக்களின் நலனே துணைத் தூதுவராலயத்தினை அமைப்பதற்கான அடைப்படை நோக்கம் என உத்தியோகபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
“துணைத் தூதரகம் அமைக்கப்படுமிடத்து அது குடாநாட்டு மக்கள் தங்களுக்குத் தேவையான விசாவினை இலகுவாகப் பெறுவதற்கு வழிசெய்யும் என்பதற்கப்பால் சிறிலங்காவின் வட மாகணத்திற்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான கலாச்சார உறவுகளை மேம்படுத்தவும் உதவும்” என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இரண்டு நாடுகளினதும் பரஸ்பர நலன்களுடன் தொடர்புடைய பரந்துபட்ட விடயங்கள் பற்றிக் கலந்துரையாடுவதற்காக சிறிலங்கா அரசாங்கத்தின் அழைப்பினை ஏற்று, மூன்று நாள் பயணமாக ராவ் கொழும்பு சென்றிருந்தார்.
சிறிலங்காவில் போர் முடிவுக்குவந்துவிட்டாலும் அரசியல் தீர்வுக்கான தேடல் அங்கு தொடர்ந்துகொண்டே இருக்கிறது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம் கிருஸ்ணா பாராளுமன்றில் தனது எழுத்து மூலப் பதிலில் தெரிவித்திருந்த ஓரிரு நாட்களின் பின்னர் நிருபாமாவின் கொழும்புக்கான இந்த பயணம் இடம்பெற்றது.
வெளிவிவகாரச் செயலராகப் பொறுப்பேற்ற பின்னர் நிருபாமா ராவ் கொழும்புக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணமாகவும் குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச மீண்டும் தேர்தெடுக்கப்பட்ட பின்னர் இந்திய உயர் அதிகாரி ஒருவர் சிறிலங்காவிற்கு மேற்கொள்ளும் முதலாவது பயணமாகவும் இது அமைகிறது.
இடம்பெயர்ந்திருக்கும் தமிழ்ப் பொதுமக்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதை வரவேற்ற நிருபாமாராவ் முல்லைத்தீவு மற்றும் கிளிநெச்சிப் பிரதேசங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படுமிடத்து இடம்பெயர்ந்த மக்கள் தங்களது சொந்த இடங்களில் இயல்பாக வாழும் நிலைதோன்றும் என ராஜபக்சவுடனான சந்திப்பின்போது வலியுறுத்தியதாக அவரது கொழும்பு பயணம் தொடர்பாக இந்தியத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
நடைபெற்று முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் திரு ராஜபக்ச வெற்றி பெற்றமைக்குத் தனது வாழ்த்தினைத் தெரிவித்த நிருபாமா, நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு சனநாயக முறையிலமைந்த தேர்தல்கள் இடம்பெறுவதானது சிறீலங்காவினது அனைத்து இன மக்களும் அமைதியுடனும் இணக்கப்பாட்டுடனும் வாழக்கூடியவகையில் அரசியல் இணக்கப்பாட்டினை முன்னெடுப்பதற்கேற்ற ஒரு வரலாற்றுச் சந்தர்ப்பத்தினை வழங்கியிருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டினார்.
கொழும்பில் தான் தூதுவராக இருந்த காலத்திற்குப் பின்னர் இப்போது நிறைய விடயங்கள் நடந்தேறிவிட்டன என்பதையும் இந்தச் சந்திப்பின் போது அவர் சுட்டிக்காட்டினார்.
இடம்பெயர்ந்த தமிழ் மக்களை மீளக்குடியமர்த்துவதில் சிறிலங்கா குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றிருப்பதாகக் கூறிய நிருபமா ராவ், இந்த விவகாரம் தற்போது அனைத்துலக சமூகத்தின் கவனத்தில் இருந்து அகன்று விட்டதாகவும் தெரிவித்தார்.
தற்போதைய அரசியல் விவகாரம் குறித்துக் கலந்துரையாடுகையில், நடக்க இருக்கும் பொதுத் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மட்டும் 1,000 வரையான வேட்பாளர்கள் போட்டியிடுவது மக்களாட்சி நடைமுறையில் மக்கள் எவ்வளவு ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது என நிருபமா கூறினார். நிலையான அமைதியுடன் அந்த மாற்றம் நடந்திருப்பதையும் அவர் எடுத்துக் காட்டினார்.
அண்மையில் நடைபெற்ற, கச்சதீவு அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் 3,000 இந்தியர்கள் கலந்துகொண்டமை இரு நாடுகளுக்கும் இடையிலான சிறந்த பரிமாற்றத்தின் மற்றொரு வெளிப்பாடு எனவும் அவர் குறிப்பிட்டார்.
குடியரசுத் தலைவர் ராஜபக்ச இந்தியாவிற்கான பயணமொன்றை மேற்கொள்ளவேண்டும் எனத் தான் அழைப்பு விடுத்ததாகவும் ஏப்பிரல் 8ம் நாள் இடம்பெறவிருக்கும் பொதுத்தேர்தலின் பின்னர் இந்தியாவிற்குப் பயணம் செய்வதற்கு அவர் இணங்கியிருப்பதாகவும் வெளியுறவுச் செயலர் குறிப்பிட்டார்.
ராஜபக்சவினது இந்திய பயணத்தினது திகதி தொடர்பாக பின்னர் திட்டமிடப்படும் என உத்தியோக பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர், வெளிவிவகாரச் செயலர், குடியரசுத் தலைவருக்கான சிறப்பு ஆலோசகர் பசில் ராஜபக்ச, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் குடியரசுத் தலைவரின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரையும் தனது கொழும்பு பயணத்தின் போது நிருபாமா சந்தித்திருக்கிறார்.
இவை தவிர, தமிழ் மற்றும் முஸ்லீம் கட்சிகள் உள்ளிட்ட நாட்டினது முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளோடும் வெளியுறவுச் செயலர் சந்திப்பினை நடாத்தியிருக்கிறார்.
இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதியின் புனர்வாழ்வு, புனர்நிர்மாணப் பணிகள் மற்றும் இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம் ஆகியவற்றுக்கு இந்தியா தொடர்ந்தும் வழங்கிவரும் உதவிகளை ராஜபக்ச பாராட்டியதாக இந்தியத் தூதரகம் வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
குறிப்பாக சிறிலங்காவின் வடக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் புகையிரதப்பாதைகள் மற்றும் புகையிரத நிலையங்களைச் சீர்செய்யும் பணிக்கென 425 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் வழங்கப்பட்டிருப்பதை சிறிலங்கா வரவேற்றிருக்கிறது.
இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தற்போது தங்கியிருக்கும் 70,000 மக்களும் தங்களது சொந்த விருப்பத்தின் பெயரிலேயே தங்கியிருக்கக்கூடும் என குடியரசுத் தலைவர் நிருபாமாவிடம் தெரிவித்ததாக தூதரகத்தின் ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
சிறிலங்காவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் அபிவிருத்தி மற்றும் மீள்கட்டுமானப் பணிகளுக்குத் தொடர்ந்தும் உதவுவதே இந்திய அரசாங்கத்தின் நோக்கம் என வெளிவிவகார அமைச்சருடனும் அவரது அமைச்சக அதிகாரிகளுடனும் இடம்பெற்ற சந்திப்பின் போது நிருபாமா உறுதியளித்திருக்கிறார்.
இடம்பெயர்ந்தவர்களின் நன்மை கருதி கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் வீட்டுத் திட்டங்களுக்கு இந்தியா தனது உதவிகளை வழங்கும் எனவும் இந்திய வெளியுறவுச் செயலர் அறிவித்திருக்கிறார்.
இடம்பெயர்ந்தவர்களின் நன்மைகருதி தற்காலிக வீடுகளை அமைத்தல், போரின் போது சேதமடைந்த வீடுகளைத் திருத்துதல் மற்றும் வீடற்றவர்களுக்குப் புதிய வீடுகளை அமைத்தல் போன்றவை இந்த வீடமைப்புத் திட்டத்திற்குள் அடங்கும்.
சிறிலங்காவின் வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் போக்குவரவுத் துறையினை மேம்படுத்துவதற்காக 55 பேருந்துகளை கல்விசார், கலாச்சார மற்றும் சமூக அமைப்புக்களுக்கும் இந்தப் பகுதியின் உள்ளுராட்சிக் கட்டமைப்புகளுக்கும் வழங்குவதற்கு இந்தியா அனுமதியளித்திருக்கிறது.
சிறிலங்காவின் வடக்குப் பகுதியில் இடம்பெற்றுவரும் தொடருந்து பாதை கட்டுமானப் பணிகளுக்கு மேலதிக நிதியினை வழங்குவது தொடர்பாகப் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் நிருபாமா தெரிவித்தார்.
“இந்திய-இலங்கை உறவில் கலாசார தொடர்புகளையும் பொதுவான பாரம்பரியத்தைப் பேணுவதுமே மிக முக்கிய விடயங்களாகக் கருதப்பட்டு வந்தன. தலதா மாளிகை வளாகத்தினுள் சர்வதேச பௌத்த அரும்பொருள் காட்சியகம் ஒன்றை நிறுவுவதில் முழுமையாகப் பங்குகொள்வதற்கு இந்தியா தீர்மானித்திருக்கிறதென நிருபாமா தெரிவித்தார்”, என இந்திய தூதரக அறிக்கை கூறுகிறது.
இந்தியத் தேசிய அரும்பொருள் காட்சியகத்தின் வழிகாட்டலின் கீழ் ஓர் கலைக் காட்சியகத்தினை சிறிலங்காவில் நிறுவுவதற்கான முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மன்னாரில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற திருக்கேதீஸ்வரத்தின் புனர்நிர்மாணப் பணிகளுக்காகவும் இந்தியா தனது உதவிகளை வழங்கும் என நிருபாமா தெரிவித்தார்.
மேற்குறித்த இந்தப் பணிகள் தொடர்பாக ஆராய்வதற்கு இந்தியாவின் மகாவலிபுரத்திலுள்ள கட்டடக்கலைக் கல்லூரி [College of Architecture] இந்தியத் தொல்பொருள் ஆய்வு மையம் [Archeological Survey of India] என்பனவற்றின் அலுவலர்களை உள்ளடக்கிய குழுவொன்று இலங்கைக்கு வரவிருக்கிறது.
மேலும் கலை, கலாச்சாரம், கல்வி, மனிதவள மேம்பாடு மற்றும் பயிற்சி போன்ற விடயங்களில் மக்களமைப்புக்கள் மேற்கொள்ளும் முனைப்புக்களுக்குத் தேவையான ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் வழங்கிவரும் தனித்துவமானதோர் அரச நிறுவனமாகச் செயற்படும் இந்திய-இலங்கை அறக்கட்டளை நிறுவனத்திற்கு [India-Sri Lanka Foundation] இந்தியா வழங்கிவரும் ஆதரவினை அதிகரிப்பது என்ற முடிவினையும் நிருபாமா ராவ் அறிவித்தார்
அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் தீர்வென்று இந்தியா எதைக் கூறுகிறது?அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் தீர்வென்று இந்தியா எதைக் கூறுகிறது?
கண்டி மாவட்டத்தில் அராஜக அரசியல் சூழ்நிலை நிலவுவதாகவும் இதனால் மக்களின் சுதந்திரம் பாதிக்கப்படுவதாகச் சுலோக அட்டை ஏந்தி நாடாளுமன்றில் போராட்டம் நிகழ்த்திய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஆளும் கட்சி வேட்பாளர் ஒருவரின் தேர்தல் பிரசார நிலையமாக நாவலப்பிட்டி காவல் நிலையம் இயங்குவதாகவும் கூறியுள்ளார்.
புதிதாக முகிழ்ந்து வரும், மனோ கணேசனின் மலையக தலைமைத்துவம் குறித்து அச்சம் கொள்ளும் சக்திகள், அவரைத் தமது முதன்மையான அரசியல் இலக்காகக் கொண்டு காய்களை நகர்த்துகின்றன போல் தெரிகின்றது.
மலையக தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை சிதைப்பதற்குப் பல அச்சுறுத்தல்களையும் அவர்களிடையே பிளவுகளையும் மேற்கொண்டு பேரினவாத கூட்டுக் குழுக்களை அவர்களுக்கு எதிராக நிறுத்துவதன் மூலம் பெரும்பான்மையின மக்களின் நாடாளுமன்ற அங்கத்துவத்தினை மலையகத்தில் அதிகரிக்கும் நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இது போன்ற நடவடிக்கைகள், வேறு பரிமாணத்தில் வடகிழக்கில் மேற்கொள்ளப்படுவதை அவதானிக்கலாம்.
வடக்கு, கிழக்கில் 31 நாடாளுமன்ற ஆசனங்களுக்கு 1,867 பேர் மோதுகின்றனர்.
யாழ். மாவட்டத்தில் 12 குழுக்களும் மட்டக்களப்பில் 26 குழுக்களும் திருமலையில் 14 குழுக்களும் அம்பாறையில் 49 குழுக்களும், சுயேச்சையாக கட்சிகளைப் பிரதிநிதித்துவம் செய்யாமல் தேர்தல் களத்தில் குதித்துள்ளன.
வடக்கு, கிழக்கில் 1,000 பேரளவில் போட்டியிடுவதால் மக்களாட்சி நடைமுறையில் மக்கள் எத்தனை ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் என்று புளகாங்கிதம் அடைந்துள்ளார் இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் நிருபமாராவ்.
போர் முடிவடைந்ததால் நாட்டின் அபிவிருத்திக்கும் மீள்கட்டுமானப் பணிகளுக்கும் எவ்வாறு உதவலாம் என்பது குறித்து கலந்துரையாடுவதற்கு நிருபமா ராவ் வருகை தந்ததாகக் கூறப்பட்டது.
ஆனாலும், இப்பயணத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்த இந்திய வெளியுறவுத்துறைச் செயலர், பிரித்தெடுக்கப்பட்ட, கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனைச் சந்தித்து இந்தியாவிற்கு வருகை தருமாறு அழைப்பினை விடுத்ததாக வந்த செய்தியே சற்று வித்தியாசமாக அமைந்திருந்தது.
5th-Cartoonஇந்தியாவின் அனுசரணை இல்லாமல் இனப்பிரச்சினைக்கான தீர்வு சாத்தியமில்லையென நம்பிக்கை கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஒரு முக்கிய செய்தியொன்று இச்சந்திப்பினூடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, 1987இல் உருவாக்கப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தம் விதந்துரைக்கும் மாகாண சபைத் தீர்வினையும் 13ஆவது திருத்தச் சட்டம் கூறும் அதிகாரப் பரவலாக்கத்தினையும் (அதிகாரப் பகிர்வல்ல) தவிர, வேறெந்த தீர்வுத் திட்டங்களையும் இலங்கை அரசின் மீது தம்மால் திணிக்கவோ அல்லது வலியுறுத்தவோ முடியாதென்கிற விவகாரத்தை மறைமுகமாக கூற விழைகிறது இந்திய அரசு.
தனது இந்தியப் பயணத்தின்போது, காணி மற்றும் காவல்துறை அமைக்கும் அதிகாரங்களைப் பெற்றுத் தருமாறு இந்தியாவிடம் ஒரு வேண்டுகோளை கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் முன்வைப்பாரெனக் கருதலாம்.
அத்தோடு, மாகாண சபை ஆட்சி முறைமையை வலுப்படுத்தும் அல்லது சீர் செய்யும் நகர்வுகளையே இந்தியா முன்னெடுக்குமென எதிர்பார்க்கலாம்.
ஆனாலும் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ஆளும் தரப்பினர் பெற்றால் அரசியல் அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் ஊடாக நடைமுறையிலுள்ள அரைகுறையான மாகாண சபை அதிகாரங்களை அழித்து விடும் நிலையும் ஏற்படலாம்.
அப்போது அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினை தாம் ஆதரிப்பதாகக் கூறிவரும் இந்தியாவும் மேற்குலகும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மேற்கொள்ளும் முடிவுகளை நிராகரிக்க முடியாததொரு கையறு நிலைக்குத் தள்ளப்படும்.
அதேவேளை, பிராந்திய அரசியலில் வல்லரசுகளின் ஆதிக்கப் போட்டிகளை எதிர்கொள்ளும் இந்திய வல்லாதிக்கமானது, மாகாண சபைத் தீர்வினை அமுல்படுத்துமாறு வலியுறுத்துவதோடு தனது வகிபாகத்தை மட்டுப்படுத்திவிடுமென்பது யதார்த்தமாகும்.
ஆனாலும் இங்கு புரிதலுக்கு உள்ளாக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், தமிழர் தாயக இறைமையை இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை என்பதாகும். அனைத்து இலங்கை மக்களுக்கும் ஏற்புடையதான தீர்வு என்பதன் உட்பொருள் பெரும்பான்மையின மக்களின் முழு இலங்கைக்குமான இறைமையை இங்கு வாழும் சிறுபான்மையான பூர்வீக தேசிய இனமானது ஏற்றுக்கொள்ள வேண்டுமென்கிற கருத்தியல் கோட்பாட்டின் அடிப்படையில் எடுத்தாளப்படுகிறது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது நோர்வே தலைநகர் ஒஸ்லோவில், 2002 டிசம்பரில் இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொண்டு வெளியிட்ட “ஒஸ்லோ பிரகடனம்’ என்று தவறாக அழைக்கப்படும் ஒஸ்லோ உடன்படிக்கையின் அடிப்படையில் தீர்வு காணப்படலாமெனக் கூறுகிறது.
உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் சரித்திர ரீதியாக தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வந்துள்ள தாயகத்தில் ஒருமித்த நாட்டிற்குள் சமஷ்டி அடிப்படையில் ஆட்சிமுறை அமைய வேண்டும் என்பதுதான் ஆராய்ந்து பார்ப்பதன் அடிப்படையில் ஒஸ்லோவில் இருதரப்பும் செய்து கொண்ட உடன்படிக்கையின் சாராம்சமாகும்.
ஆனாலும் மாநிலங்களுக்கு இறையாண்மை அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதற்குப் பதிலாக, அதிகாரப் பரவலாக்கம் (ஈஞுதிணிடூதtடிணிண ணிஞூ கணிதீஞுணூ) என்கிற பதத்தை பிரயோகிக்கவே அன்று சிங்களதேசம் விரும்பியது.
tna-1ஆகவே, ஒஸ்லோ உடன்பாட்டினை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளோம் என்பதன் அடிப்படையிலா அல்லது அன்ரன் பாலசிங்கம் கூறியது போல் ஆராய்ந்து பார்ப்பதன் அடிப்படையிலா, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஒஸ்லோ விவகாரத்தை கையிலெடுத்தது என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
இருப்பினும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒஸ்லோ நகர்வினை இலங்கை ஆட்சியாளர்கள் முற்றாக நிராகரித்து விட்டார்கள்.
ஆனால், தனியரசுக் கோட்பாட்டை மட்டுமல்ல, ஒஸ்லோ கதைகளையும் சிங்களதேசம் விரும்பாதென்பதை கூட்டமைப்பின் தலைவர் இப்போது புரிந்து கொள்வார்.
அதேபோல் ஒருநாடு இருதேசம், கூட்டாட்சி போன்ற தமிழர் இறைமையை அடித்தளமாகக் கொண்ட கோட்பாடுகளையும் சிங்களதேசம் ஏற்றுக்கொள்ளாது.
தமிழர் தரப்பின் கோட்பாட்டு ரீதியான அகநிலை முரண்பாடுகளுக்கும், தென்னாசியாவில் தமிழர் தாயக புவிவியல் அமைவிடத்தால் எழும் அனைத்துலக உறவுச் சிக்கல்களுக்கும் இடைவெளி மிகப் பெரியது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் முன்வைக்கப்படக்கூடிய குறைந்தபட்ச தீர்வுக் கோரிக்கையான ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஷ்டி முறைமை என்பதனை சிங்களதேசம் பரீசிலனைக்குக்கூட எடுத்துக் கொள்ளாது என்பதே உண்மை நிலையாகும்.
இவை தவிர அதிகாரப் பரவலாக்கம், நிர்வாகப் பரவலாக்கம், அதிகாரப் பகிர்வு போன்ற சொல்லாடல்கள் தற்போது தீர்வு யோசனைகளில் பரவலாகப் பேசப்படும் வார்த்தை ஜாலங்களாகக் காணப்படுகிறது.
இதில் அதிகாரப் பகிர்வு என்பது தமிழ்த் தேசிய இனத்தின் இறைமை என்கிற அடிப்படைக் கோட்பாட்டை நிராகரிக்காத கருத்தியலைக் கொண்ட நடைமுறை சார்ந்த அரசியல் படி நிலையாகும்.
ஆனால், சிங்களதேசம் முன்வைக்கும் அதிகாரப் பரவலாக்கலானது சிங்கள தேசத்தின் இறையாண்மையை உறுதிப்படுத்தியவாறு ஏனைய தேசிய இனங்களுக்கு வழங்கப்படும் வெறும் நிர்வாகப் பரவலாக்க நடைமுறையை சார்ந்ததாகும்.
இறைமையற்ற சுயநிர்ணய உரிமை, அதன் உள்ளார்ந்த இறுக்கமான பண்புகளை இழந்து வெறும் சொற் பிரயோகமாகவே கருதப்படும்.
ஆகவே, தாயகம், தேசியம் என்கிற அடிப்படைக் கோட்பாடுகளை நிராகரிக்கும் முரண்நிலைச் சக்திகள் இறைமை, சுயநிர்ணய உரிமை என்பவற்றை ஏற்றுக்கொள்ள மறுப்பது அதிசயமான விடயமல்ல.
ஒஸ்லோ உடன்படிக்கையில் ஆராய்ந்து பார்ப்பதற்கு முன்வைக்கப்பட்ட இறைமையுள்ள சமஷ்டி குறித்து தொடர்ந்து பேசுவதற்கும் சிங்களதேசம் மறுத்தது.
தமிழீழ விடுதலைப் புலிகளால் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் தடைநீக்கியாக முன்மொழிந்த இடைக்கால தன்னாட்சி அதிகார சபை முறைமையினை அவ்வடிவமானது தமிழரின் இறைமையை உள்ளடக்கியதாக இருந்ததால் அதனையும் சிங்களதேசம் நிராகரித்தது.
ஆகவே, சகல நிறைவேற்று அதிகாரங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள ஜனாதிபதி முறைமையானது அதிகாரங்களை பகிர்ந்தளிக்கவோ அல்லது தேசிய இனமொன்றின் பிரிக்க முடியாத பிறப்புரிமை சார்ந்த இறைமையுள்ள தமிழினத்திற்கு சுயநிர்ணய உரிமை உண்டென்பதை ஏற்றுக்கொள்ளவோ மாட்டாது.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்ததும், வட மாகாண சபைத் தேர்தலை நடத்த உத்தேசித்திருப்பதாக ஜனாதிபதி கூறி வருகிறார். அதற்கு இந்தியாவின் ஆதரவு உண்டென்று நம்பலாம்.
1980களில் பல் போராட்ட இயக்கங்களைக் கையாண்டது போலவே இப்போதுள்ள தமிழ் அரசியல் கட்சிகளை கையாள இந்தியா எண்ணுகிறது.
ஏற்கெனவே கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோட்பாட்டு ரீதியிலான உடைவுகள், பிராந்திய வல்லரசுகளின் நிகழ்ச்சி நிரலிற்கு சாதகமான தளத்தினை உருவாக்கப் போகிறது.
கிழக்கு மாகாண முதலமைச்சரை வரவேற்பதன் ஊடாக மாகாண சபை மற்றும் 13ஆவது திருத்தச் சட்டம் போன்றவற்றையே தீர்விற்கான தமது விருப்பத் தெரிவாக இந்தியா கொண்டுள்ளதென்பதை கூட்டமைப்பினர் புரிந்து கொள்வார்களா?
இந்தியாவை விட்டால் வேறு கதியில்லையென்றால் அவர்கள் பரிந்துரைக்கும் அதிகாரமற்ற மாகாண சபை முறைமையை ஏற்றுக்கொள்வதைத் தவிர கூட்டமைப்பிற்கு வேறு வழியில்லை.
ஏனெனில் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கூறப்பட்ட விடயந்தான் இனப்பிரச்சினைக்கு இந்தியா முன்வைக்கும் தீர்வு.
அதை மெருகூட்டி அழகுபடுத்தி தமிழர் மீது திணிக்கும் நகர்வினையே இந்தியா முன்னெடுக்கிறது. ஆகவே, கூட்டமைப்பு முன்வைக்கும் குறைந்தபட்ச சமஷ்டி கோரிக்கைகளை இந்திய இலங்கை தரப்புகள் ஏற்றுக்கொள்ள முன்வராது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
— இதயச்சந்திரன்
சனி, 13 மார்ச், 2010
மீண்டும் உலகை ஏமாற்ற சுயாதீன நிபுணர் குழு அமைப்பு
உலகை ஏமாற்ற பல குழுக்களை அமைத்து இழுத்தடித்த மஹிந்த இப்போ மனித உரிமைகள் தொடர்பிலும் சுயாதீன குழுவை அமைக்கப்போவதாக கூறியுள்ளது.
அரச சார்பற்ற பணியாளர்களின் முதூர் படுகொலை உட்பட பல கொலைகளுக்கு விசாரணைக்குழு அமைத்து இறுதியில் என்ன நடந்தது என்பதனை சர்வதேசம் மறந்தாலும் நிச்சயமாக தமிழர்கள் மறக்கமாட்டார்கள்.
இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையினால் நிறுவப்படபோகும் ஆலோசனைக்குழுவினை நிறுத்த அல்லது வலுவற்றதாக்கவே தற்போதைய சுயாதீன குழு அமைத்தல் நாடகம் அமையப்போகின்றது.
இது தொடர்பாக அமைச்சர் மங்கள சமரசிங்க கூறுகையில் இலங்கையில் கடந்த மூன்று தசாப்த காலங்களாக நிலவிய பயங்கரவாதத்துக்கான காரணம் என்ன? மற்றும் இனிவரும் காலங்களில் அவ்வாறான நிலைமை ஒன்று ஏற்படாமல் எவ்வாறு தடுப்பது என்பன தொடர்பில் விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க சுயாதீன நிபுணர் குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
நாங்கள் வெளிநாடுகளில் இருந்து 'இறக்குமதி' செய்யப்பட்ட தீர்வுத் திட்டங்களை இங்கு நடைமுறைப்படுத்தமாட்டோம். எமது மக்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் என்னவென்று எமது 38 வருட அரசியல் அனுபவம் கொண்ட ஜனாதிபதிக்கு நன்றாக தெரியும். எனவே நாங்கள் எமக்கே தனித்துவமான வேலைத்திட்டங்களுடன் நாட்டை முன்னெடுப்போம். சுயாதீன நிபுணர் குழு தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி முறையாக மேற்கொள்வார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
"இம்மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட ஐ. நா. செயலாளர் பான் கீ. மூன் இலங்கை தொடர்பில் ஆலோசனை பெற தான் ஆலோசனைக் குழுவொன்றை நியமிக்கப்போவதாக கூறியிருந்தார். ஆனால் அது தேவையற்றது என்று ஜனாதிபதி கூறிவிட்டார்.
தற்போது 124 நாடுகளை அங்கத்துவமாகக்கொண்ட அணி சேரா அமைப்பு ஆலோசனை குழுவை அமைப்பது தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து பான் கீ. மூனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. ஐ.நா. வில் 194 உறுப்பு நாடுகள் உள்ளன.
ஆனால் அணிசேரா நாடுகள் அமைப்பில் 124 நாடுகள் உள்ளன. இங்கும் எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது. எனவே ஆலோசனை குழு தேவையற்றது என்று நாங்கள் கருதுகின்றோம்.
இதனடிப்படையில் அரசாங்கம் ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளது. அதாவது இலங்கையில் கடந்த மூன்று தசாப்த காலங்களாக நிலவிய பயங்கரவாதத்துக்கான காரணம் என்ன? மற்றும் இனிவரும் காலங்களில் அவ்வாறான நிலைமை ஒன்றை எவ்வாறு தடுப்பது என்பது தொடர்பில் விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க சுயாதீன நிபுணர் குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
முக்கியமாக அல்பிரட் துரையப்பாவின் கொலையிருந்து அனைத்து விடயங்களும் ஆராயப்படும். யுத்தம் முடிவடைந்த பின்னர் இடம்பெற்ற விடயங்களும் ஆராயப்படும்"
ஆர்வத்துடன் பங்குபற்றுகின்றனராம்...................
இராணுவத்தினரின் ஏற்பாட்டில் இளைஞர், யுவதிகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு தற்காப்புக்கலைப் பயிற்சி வழங்கப் பட்டு வருகின்றது.
துரையப்பா விளையாட்டரங்கில் நேற்றுமுன்தினம் ஒருதொகுதியினருக்கு இந்தப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது பயிற்சி நாளை யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெறும்.
இந்தப் பயிற்சியைப் பெறவிரும்புபவர்கள் நேரடியாக அங்கு வந்து பயிற்சியில் இணைந்து கொள்ளலாம் என பலாலி படைத் தலைமையகம் அறிவித்துள்ளது.
வாரத்தில் வியாழன், ஞாயிறு ஆகிய நாள்களில் இந்தப் பயிற்சி இடம்பெறும் என்றும் முதலாவது பயிற்சியில் பங்கு பற்றியவர்கள் படையினருக்கு நன்றி தெரிவித்தனர் என்றும் படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்தத் தற்காப்பு பயிற்சிகளை வழங்கு வதற்கான ஏற்பாடுகளை யாழ்.மாவட்ட பாதுகாப்புப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த கத்துறுசிங்க செய்துள்ளாராம்.
முன்னாள் விடுதலைப் புலிகள் குடும்பங்களுக்கு தனியான சிறப்பு முகாம்
சிறிலங்காப் படைகளின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் 11,000 விடுதலைப் புலி உறுப்பினர்களுக்குமான புனர்வாழ்வு நடவடிக்கைகள் சர்வதேச சமூகத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தடுப்பிலிருக்கும் கணவன், வெளியே இருக்கும் மனைவி மற்றும் பிள்ளைகள் என அனைவரையும் குடும்பத்துடன் ஒரே கூடாரத்தில் தங்கவைப்பதற்கு ஏதுவாக மாணிக்கம் பண்ணையின் [மெனிக் பாம்] ஐந்தாவது வலயத்தில் சிறப்பு புனர்வாழ்வு மையத்தினை அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதுபோன்ற முதலாவது வசதி மல்வத்து ஓயாவின் ஓரத்திலிருக்கும் மாணிக்கம் பண்ணையின் வலயம் ஐந்தில் அமைக்கப்படவிருக்கிறது.
விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் பொதுவாழ்வில் இணைவதற்கு வழிசெய்யும் திட்டத்தின் ஒருபகுதியாக இதுபோன்ற வசதிகள் திருகோணமலை, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் அமைக்கப்படவிருக்கின்றன.
தங்களது குடும்பங்களுடனும் அன்புக்குரியவர்களுடனும் இணைந்திருந்தவாறே முன்னாள் போராளிகள் புனர்வாழ்வினைப் பெறக்கூடிய சந்தர்ப்பத்தினை இச்செயல்திட்டம் அவர்களுக்கு வழங்கும் என நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொட தெரிவித்திருக்கிறார்.
கணவன் மாத்திரம் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் எனின், மனைவி மற்றும் பிள்ளைகள் சுதந்திரமாக வெளியே சென்று வர அனுமதிக்கப்படுவார்கள்.
அதேநேரம் இப்புனர்வாழ்வுச் செயல்திட்டத்தினைத் தங்கு தடையின்றி முன்னெடுப்பதற்கு ஏதுவாக அங்கிருக்கும் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு ஏற்ப கணவன் இத்தகைய புனர்வாழ்வு நிலையங்களுக்கு வெளியே செல்ல அனுமதிக்கப்படமாட்டார்.
அரசாங்கத்தின் இந்த முனைப்புக்களுக்கு IOM மற்றும் வேறுபல உள்ளுர், வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்கள் ஆதரவு வழங்கிவருகின்றன.
அகில அலங்கை இந்து மாமன்றத்தையும் இதில் ஈடுபடச் செய்ததன்மூலம் தமிழ் மக்களுக்கும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கும் நம்பிக்கையைப் ஏற்படுத்த அமைச்சர் மொறகொட திட்டமிட்டுள்ளார்.
முன்பள்ளிகள், பகல்நேர சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் தனியான தொழிற்கல்வி, தொழில் நுட்பப் பயிற்சி மையங்களையும் இத்தகைய புனர்வாழ்வு மையங்களுக்குள் அமைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக அமைச்சர் மொறகொட தொரிவித்தார்.
விடுதலைப் புலிகள் அமைப்பு இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னான இந்தக் காலப்பகுதியில் தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையினைக் கட்யெழுப்பும் முனைப்பாக இதுபோன்ற செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
போர் முடிவுக்கு வந்து ஒருவருடம் கூட ஆகியவிடாத நிலையில் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகள் அதிக வெற்றியினைத் தந்திருப்பதாக மொறகொட மேலும் தெரிவித்தார்.
இலங்கை இராணுவம், இதரபல அமைச்சுக்களின் துணையுடன் நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கிறது.
கணவன் மற்றும் மனைவி என இருவருமே புலிகளமைப்பின் முன்னாள் போராளிகளாக இருக்குமிடத்து அவர்களை ஒரேயிடத்தில் தங்கவைத்துப் புனர்வாழ்வாளிப்பதற்கு ஏதுவாக வவுனியாவில் சிறப்பு வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திவருகிறது.
இதுபோன்ற 142 முன்னாள் போராளிக் குடும்பங்களும் குழந்தைகளுடனிருக்கும் 8 தாய்மாரும் இந்தப் புதிய முகாமிற்கு அனுப்பப்படவிருக்கிறார்கள்.
இந்த முன்னாள் போராளிக் குடும்பங்களுக்காக தனியான தொழில் நுட்ப மற்றும் தொழிற்கல்வி வகுப்புக்கள் ஒழுங்குசெய்யப்படும் என இராணுவ அலுவலர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
திருகோணமலையின் அல்லைக்கந்தளாயிலுள்ள சூரியவேவ பகுதியில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் 500 பேருக்குப் புனர்வாழ்வளிக்கப்பட்டு வருகிறது.
இவர்களுக்கான கால்நடைவளர்ப்புத் திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுக்கவிருக்கிறது. இலங்கை இராணுவமும் Ceylon Cold Stores என்ற நிறுவனமும் இணைந்தே இந்தத் திட்டத்தினை முன்னெடுக்கின்றன.
Ceylon Cold Stores என்ற இந்த நிறுவனந்தான் இத்திட்டத்திற்கான நிதியுதவியினை வழங்குகிறது. பால் விநியோகத்தினை மேற்கொள்வதற்காக 1800 வரையிலான விவசாயிகள் வேலைக்கமர்த்தப்படவிருக்கிறார்கள் என இராணுவ அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
இதற்குத் தேவையான நிலத்தினை அரசகாணியிலிருந்து பெறுவதற்கான முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். திருக்கோணமடுவின் கண்டல்காடுப் பகுதியில் அரசாங்கம் விவசாய மற்றும் கால்நடைப் பண்ணைகளை ஏற்படுத்தவிருக்கிறது.
இலங்கை இராணுவத்தினரும் கடற்படையினரும் இங்கு நிலைப்படுத்தப்படுவர். இது போன்ற ஆறு பண்ணைகள் அமைக்கப்படும். ஒவ்வொரு பண்ணைகளிலும் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் 500 போர் உள்வாங்கப்படுவார்கள்.
கொழும்பு யாழ்ப்பாண வெற்றிலைகளுக்கு இடையில் அரசியல் முறுகல்
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் நாளுக்கு நாள் முறுகல் நிலைகளும், கருத்து மோதல்களும் இடம்பெற்று வரும் நிலையில் யாழ்ப்பாணத்தில் சிறீலங்கா சுதந்திரக் கூட்டமைப்பிற்குள் பாரிய முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் வெற்றிலைச் சின்னத்தின்கீழ் ஈபிடிபியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா உட்பட்ட குழுவினரும், அதே சின்னத்தில் அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
இந்தநிலையில் அங்கஜன் இராமநாதன், மகிந்த ராஜபக்சவினால் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக கூடுதல் வாக்குகளைப் பெற்று அதன் மூலம் டக்ளஸ் தேவானந்தாவைத் தோற்கடிக்கவைக்கும் நோக்கில் யாழ்.தேர்தல் தொகுதியில் தேர்தலில் களம் இறக்கப்பட்டுள்ளமை தொடர்பிலான ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
ஆனாலும் இரண்டு தரப்பும் வெற்றிலைச் சின்னத்தில் பரப்புரை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதால் பல இடங்களில் முறுகல் நிலை ஏற்பட்டே வந்துள்ளது.
குறிப்பாக இரு தரப்பினரும் ஒரே பகுதி மக்களிடம் சென்று வெற்றிலைச் சின்னத்தில் தமக்கு மட்டுமே வாக்களிக்கும் படி கேட்டுக் கொள்வது, மற்றும் சுவரொட்டிகள் மீது தமது சுவரொட்டிகளை ஒட்டுவது போன்ற நடவடிக்கைகள் இரண்டு தரப்பிற்கும் இடையில் முறுகல் நிலையினை வலுப்படுத்தியது.
இந்த நிலையில் நேற்று முன்னாள் யாழ். நகரை அண்மித்த பகுதி ஒன்றில் அங்கஜன் இராமநாதன் பயணித்த சொகுசு வாகனத்தினைக் கலைத்துச் சென்ற ஈபிடிபி வாகனம் மோதியுள்ளது.
இதனை அடுத்து இரண்டு தரப்பிற்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் கைத்துப்பாக்கியினை எடுத்த ஈபிடிபியினர் அங்கஜன் இராமநாதன் உடனடியாக நாட்டைவிட்டே வெளியேற வேண்டும் என்றும், தவறினால் சுட்டுக் கொல்லப்படுவீர் என்றும் எச்சரித்துள்ளனர்.
சம்பவத்தினை அடுத்து பதட்டமடைந்த அங்கஜன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார். குறிப்பிட்ட அங்கஜன் வெளிநாட்டில் இருந்து தற்போதே இலங்கைக்கு வருகைதந்து தேர்தலில் குதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெள்ளி, 12 மார்ச், 2010
நேற்று கனடாவில் உள்ள ஈழவேந்தன் ஐயாவின் வசிப்பிடம் எஸ்.எம்.எஸ் அணியினரால் முற்றுகை!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கனடா முகவர்கள், முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய உணர்வாளருமான ஈழவேந்தன் வீட்டிற்குச் சென்று மறைமுகமான மிரட்டல் விடுத்ததாக நம்பகமான கனடாத் தகவல் ஒன்று சங்கதிக்குத் தெரிவித்தது.
குறித்த முக்கியமான இரு முகவர்கள் ரொரண்டோவில் உள்ள ஈழவேந்தனின் இருப்பிடம் சென்று தேர்தல் முடியும் வரையாவது, குறிப்பாக சம்பந்தன், மாவைசேனாதிராஜா, சுரேஸ்பிரேமச்சந்திரன் ஆகியோரைப் பற்றி பகிரங்கமாக எதுவும் பேசவேண்டாம் என கேட்டுக்கொண்டதாக அத்தகவல் தெரிவிக்கின்றது (அதாவது எஸ்.எம்.எஸ் அணியினர் என அழைக்கப்படும் அம் மூவரைப்பற்றிய உண்மைகளை எவரிடமும் கூற வேண்டாம் என கேட்டுள்ளனர்).
இந்த நடவடிக்கையானது தாயகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சி நிலையே தெட்டத்தெளிவாக விளக்கி நிற்பதாக குறித்த தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் ஈழத்தில் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை முற்றாக நிராகரித்து வருவதாகவும், வடபகுதியிலும், திருமலையிலும் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முண்ணணிக்கு ஈழத்தமிழ் மக்கள் பாரிய ஆதரவினை வழங்கி வரும் நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு தோல்வி அடைந்து விடுவோம் எனும் அச்சநிலை ஏற்பட்டுள்ளதாகவும் நம்பகரமான தாய்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.நா. சபையின் நல்லெண்ணத் தூதராக சச்சின நியமனம்
இந்திய கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கர், ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட (யு.என்.இ.பி.) நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் சச்சின். சமீபத்தில் ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து புதிய சாதனையும் படைத்தார். பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரரான சச்சினை தனது திட்டத்தின் நல்லெண்ணத் தூதராக யுஎன்இபி நியமித்துள்ளது.
உலகளாவிய அளவில் அவருக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி சுற்றுச்சூழல் விழிப்புணர்வுத் திட்டங்களைப் பிரபலப்படுத்தவும், சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே அதிகரிக்கவும் யுஎன்இபி திட்டமிட்டுள்ளதாக அதன் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சச்சின் கூறுகையில், இதுவரை உலகம் முழுவதும் நான் விளையாடியுள்ளேன். எனது கிரிக்கெட்டை பல்வேறு நாடுகளில் அனுபவித்து வந்தேன். இப்போது இந்த உலகுக்காக எனது பங்கை செலவிடும் நேரம் வந்துள்ளது.
உலகைக் காக்கும் முயற்சிகளில் அனைவருக்கும் பங்குண்டு. இது நமது வீடு. சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது மிகவும் சவாலானது. ஆனால் அந்த சவாலை ஏற்க நான் தயாராகி விட்டேன். யுஎன்இபியுடனும், உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுடனும் இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளேன். அனைவரும் ஒருங்கிணைந்தால் பல அற்புதங்களைப் படைக்க முடியும் என்றார்.
ஐ.நாவுடன் சச்சின் இணைவது இது முதல் முறையல்ல. முன்பு ஐ.நா. குழந்தைகள் நிதியத்துடன் இணைந்து குழந்தைகள் சுகாதாரத் திட்ட பிரசாரத்தில் இந்தியாவில் ஈடுபட்டவர் சச்சின்.
யுஎன்இபியின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள சச்சின் இன்றே தனது பணியைத் தொடங்குகிறார். இன்று தொடங்கும் ஐபிஎல் தொடரின் தொடக்க விழாவின்போது அவர் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உறுதிமொழியை வாசிக்க அதை ரசிகர்கள் திரும்பக் கூறி உறுதிமொழி ஏற்கவுள்ளனர்.
பாரிய படைத்தளம்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவை மையப்படுத்திய இரண்டாயிரத்து ஐநூறு ஏக்கர் நிலப்பரப்பில் சிறீலங்காப் படையினரின் கூட்டுப்படைத்தளம் அமைக்கும் நடவடிக்கை குறித்த தகவல்கள் வெளியாயுள்ளன. வற்றாப்பளை புதுக்குடியிருப்பினை ஒன்றிணைக்கும் வீதியினை அண்மித்து அமைந்திருக்கும் கொண்டமடு, உடையாவெளி, வாவியடி, கேப்பாபுலவு, சூரிபுரம், சீனியாமோட்டை ஆகிய கிராமங்களை ஆக்கிரமித்தே இப் படைத்தளம் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன. தமிழீழ விடுதலைப்புலிகளின் விமான ஓடு தளத்தினை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுவருகின்ற இக் கூட்டுப் படைத்தளத்தின் உள்ளேயே மாவட்டத்தின் தரைப்படைத் தலைமையகமும் அமைக்கப்பட்டுவருகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் வன வளப் பாதுகாப்பு பிரிவினால் அமைக்கப்பட்ட தேக்கந் தோப்புப் பகுதியில் சிறீலங்காப் படையினருக்கான சிறப்பு சுற்றுலா விடுதி அமைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தேக்கம் தோட்டம் 200 ஏக்கர் விஸ்தீரணம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. புதுக்குடியிருப்பில் இருந்து கேப்பாபுலவு நோக்கிய நந்திக்கடலை அண்மித்த நிலப்பரப்பில் உலங்கு வானூர்தி இறங்கு தளமும், தரைப்படையினருக்கான பயிற்சி முகாமும் அமைக்கப்பட்டுவருவதாக குறிப்பிடப்படுகின்றது. குறிப்பிட்ட ஐந்து கிராமங்களினையும் உள்ளடக்கிய ஆக்கிரமிப்பால் 300 குடும்பங்களைச் சேர்ந்த 2000 இற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்விடம் உட்பட்ட தமது அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளும் அபாய நிலை ஏற்பட்டுள்ள அதேவேளை குறிப்பிட்ட பகுதிகளை அண்மித்த பகுதிகளில் பாரிய வயல் வெளி காணப்படுகின்றமையால் புதுக்குடியிருப்பு, வற்றாப்பளை ஆகிய அயற்கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன. இதற்கு அண்மித்த பகுதிகளிலேயே அச்சலாவயல், கள்ளியடி போன்ற வயற்பரப்புக்கள் காணப்படுகின்றன. இதே போன்று கொண்டை மடுப் பிரதேசம் வன்னியில் மிகத் தொன்மை வாய்ந்த விவசாய நிலம் ஆகும். இதனைவிடவும் சீனியா மோட்டைக் குளத்திற்கு மேற்குப் புறமாக உள்ள வயல்வெளியில் வற்றாப்பளையைச் சேர்ந்த மக்களுக்குச் சொந்தமான நூறு ஏக்கர் வரையான வயல்ப்பரப்புக்கள் காணப்படுகின்றன. நந்திக்கடலை சமாந்தரமாகக் கொண்டதாக இக் கூட்டுப்படை முகாம் அமைக்கப்பட்டு வருகின்றமையால் நந்திக்கடலை நம்பி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவருகின்ற மீனவக்குடும்பங்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ளவுள்ளனர். நந்திக்கடலுக்கு மறுபக்கம் முல்லைத்தீவு அதன் அருகான வட்டுவாகல், முள்ளிவாய்க்கால்கள், இரட்டை வாய்க்கால் மற்றும் புதுக்குடியிருப்பின் காட்டந்தோனியார் கோவிலை உள்ளடக்கிய மல்லிகைத்தீவுக் கிராமமும் அமைந்திருக்கின்றன. குறிப்பிட்ட பகுதிகளாலும் மீன்பிடித் தொழில் வன்னி மீனவர்களால் பாரிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வன்னியில் பாரிய இறால் உற்பத்தி குறிப்பிட்ட நந்திக்கடல் பரப்பிலேயே அதிகளவில் இடம்பெற்று வருகின்றமை தெரிந்ததே. இதேபோன்று படையினரின் புதிய ஆக்கிரமிப்பு பாதுகாப்பு வலயப்பகுதி வன்னியின் பெருமளவான கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாகவும் விளங்கிவருகின்றமை மிக முக்கிய விடயமாகும். ஆயிரக்கணக்கான எருமைகள், மற்றும் பசுக்கள் குறிப்பிட்ட பகுதிகளிலேயே பட்டிகளாக வளர்க்கப்பட்டு வருகின்றமை இன்னொரு முக்கிய விடயமாகும். இந்தப் படை ஆக்கிரமிப்பு முப்படை கூட்டுப்படைத்தளம் காரணமாக விவாசயம், மீன்பிடி, கால்நடை வளர்ப்பு என்பன பாரிய நெருக்கடிக்கு உட்படுவதற்கான அபாய சூழல் எதிர்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை இந்தக் கிராமங்களை உள்ளடக்கிய நான்கு வணக்கத்தலங்கள், பாடசாலை ஒன்று, முன்பள்ளிகள் நான்கு உட்பட்டவையும் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட நிலப்பகுதிகள் அனைத்து தொழில்களுக்கும் பொருத்தமானதாகையால் அந்தப் பகுதி மக்கள் வேறு இடங்களில் தமக்கான சொத்துக்களையோ நிலங்களையோ தேடிக்கொள்ள முயலவில்லை. குறிப்பிட்ட பகுதிகளிலேயே காலங்காலமாக வாழ்ந்து நில ஆக்கிரமிப்புப் போரின் தொடராக இடம்பெயர்ந்து தமது உறவுகளையும் உடைமைகளையும் தொலைத்து தற்போது முட்கம்பி முகாம்களில் முடக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. புதுக்குடியிருப்பையும் வற்றாப்பளையினையும் இணைக்கும் பிரதான வீதி முல்லைத்தீவு ஊடாகவே உள்ளது. ஆனாலும் முல்லைத்தீவு ஊடான பயணத்தினை விடவும் மிகக் குறைந்த தூரத்தில் கேப்பாபுலவு ஊடான வீதி மக்கள் பயன்பாட்டில் இதுவரையில் இருந்து வந்தது. வற்றாப்பளை அம்மன் கோவில் பெருவிழாவில் கலந்துகொள்வதற்கு மக்கள் குறிப்பிட்ட வீதியினையே பயன்படுத்தி வந்திருந்தனர். இனிவருங்காலங்களில் அந்தக் கிராமங்கள் ஊடான போக்குவரத்து கனவில் தான் சாத்தியப்படும் என முதியவர் ஒருவர் கவலை வெளியிட்டார்.
அபிவிருத்தியா? தமிழர் தன்மானமா? பொதுத் தேர்தலும், ஆய்வுகளும்
இலங்கையின் பொதுத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அந்தத் தேர்தலில் போட்டியிடும் தமிழர் தரப்புக்கள், குறிப்பாக தமிழ்த் தேசிய ஆதரவுச் சக்திகள் குறித்து அண்மை நாட்களில் பல வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருவதை அவதானித்துவரும் தமிழ் மக்கள், குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மிகவும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதற்கு ஒரு சில இணையங்களிலும், ஏனைய ஊடகங்களிலும் வெளியிடப்படும் ஆய்வுப் பத்திகளும், கருத்து வெளிப்பாடுகளுமே முக்கிய காரணியாக அமைந்து வருவதால், அது பற்றிப்பார்க்க வேண்டிய நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம்
தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் 1994ஆம் ஆண்டுத் தேர்தலிலும், அதற்குப் பின்னரும் சிதறிப்போனதை அவதானித்த மாமனிதர் சிவராம் அவர்களது ஆதங்கமும், சிந்தனாவோட்டமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பதியப்படாத கட்சியை கூட்டுருவாக்க வழி கோலியது. மாமனிதரது இந்த முயற்சிக்கு தற்பொழுது சுவிற்சர்லாந்தில் புலம்பெயர்ந்து வாழும் தென் தமிழீழ ஊடகர்கள் சிலரின் பங்களிப்பும் இருந்தது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அளப்பரிய பங்காற்றிய புத்திஜீவிகளுக்கே தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தமிழீழத்தின் அதியுயர் விருதாகிய “மாமனிதர்” விருதினை வழங்கி கெளரவித்து வந்திருக்கின்றார். அந்த வகையில் மாமனிதர் சிவராம் அவர்கள் தமிழீழத்திற்கு ஆற்றிய பங்கு அளப்பரியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்க மட்டுமன்றி அரசியல், படைத்துறை, ஊடகத்துறை என அவர் தமிழ்த் தேசியத்திற்கு ஆற்றிய பணியை விடுதலைப் புலிகளின் மதிப்பளிப்பு உணர்த்தி நிற்கின்றது. தமிழீழத்திற்கு வெளியே சிங்கள தேசத்தின் களத்தில் எமது அரசியல் தளத்தை வைத்திருக்கவும், பன்னாட்டு சமூகத்திற்கு தமிழ் மக்களின் வேணவாவை எடுத்துரைக்கவும் விடுதலைப் புலிகளின் ஆசியுடன் மாமனிதர் சிவராம் வகுத்த வியூகமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) ஆகிய நான்கு மிதவாத – ஆயுதப் பிரிவுகளை இணைத்து உருவாக்கப்பட்ட இந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்பொழுது நான்கு பிரிவுகளாக உடைந்து நிற்கின்றது.
இவற்றில் மகிந்த ஆதரவுக் போக்கை எடுத்துள்ள சிவநாதன் கிசோர், கனகரத்தினம், செல்வி தங்கேஸ்வரி போன்றவர்களையும், இடதுசாரி விடுதலை முன்னணி என்ற புதிய பெயர் பெற்றுள்ள கலாநிதி விக்கிரமபாகு தலைமையிலான புதிய இடதுசாரி முன்னணியுடன் இணைந்துள்ள ரெலோ அமைப்பின் உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், சிறீகாந்தா போன்ற தரப்புக்களைவிட மற்றைய இரண்டு தரப்புக்கள் இடையே நேரடி முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இது ஆரோக்கியமானதா இல்லையா என்பதை ஆராய்வதைவிட, இதன் பின்னணி என்ன என ஆராய்வது தமிழ் மக்களைக் குழப்பும் விடயத்திற்கு சிலவேளை விடை கொடுக்கலாம்.
ஊடக ஆய்வுகளும், மன ஊடறுப்புக்களும்
ஒரு முக்கிய காலகட்டத்தில், அதுவும் தமிழ் மக்கள் தமது படைத்துறைப் பலத்தை முற்றாக இழந்து, அரசியல் தலைமையைத் தேடிக்கொண்டிருக்கும் நிலையில் ஏற்பட்டுள்ள இந்தக் குழப்பகரமான நிலை மிகவும் கவலைக்குரியதே. அதுவும் விடுதலைப் புலிகளின் அனுசரணையுடன் உருவாக்கப்பட்டு, வழி நடத்தப்பட்ட ஒரு அமைப்பின் அரசியல் தளம் உடைந்து நிற்பது மிகவும் வேதனைக்குரிய விடயமே. இது புலம்பெயர்ந்த மக்களை மிகவும் மன ஆதங்கத்திற்கு உள்ளாக்கி இருப்பதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாகத்திற்கு மாமனிதருடன் இணைந்து பணியாற்றிய சில ஊடகர்களையும் வெகுவாகப் பாதித்துள்ளது.
இதன் வெளிப்பாடே தமிழ் மக்களின் தலைமையினாலும், தமிழ் மக்களாலும் தெரிவு செய்யப்பட்ட தலைவர்களை பெயர் சொல்லி விமர்சிக்கும் அளவிற்கு அவர்களது ஆய்வுப் பத்திகள் விரிந்து நிற்கின்றன. இவ்வாறான ஆய்வுகள் தமிழ் மக்களின் மனங்களை ஊடறுத்துக் கூறுபோடும் நிலைக்குக் கொண்டு செல்லப்போகின்றது அல்லது கொண்டு சென்றுகொண்டிருக்கின்றது என்ற விபரீதத்தை இந்த ஆய்வுப் பத்திகள் மூலம் உணர முடிகின்றது.
அண்மைய ஆய்வுகளும், அதன் உள்ளடக்கங்களும்
தமிழ்த் தேசிய விடுதலைக்காக உழைக்கும் புலம்பெயர்ந்துள்ள ஆய்வாளர்கள் சிலர் வெளியிட்டுள்ள அண்மைய ஆய்வுகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உடைவினால் ஏற்படப்போகும் சில முக்கிய விடயங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. அவற்றில் பிரதானமானவையாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
1. தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இழக்கப்படப்போகின்றது.
2. தமிழர் தாயகத்தில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த முடியாது போகும்.
3. தமிழர் தாயகத்தின் அபிவிருத்தி பாதிக்கப்படப்போகின்றது.
1. தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இழக்கப்படப்போகின்றது
இது உண்மைதான். ஆனால் இது பற்றி முன்வைக்கப்படும் ஆய்வுப் பத்திகளில் ஒரு தரப்பை மட்டும் குற்றம் சாட்டி மறு தரப்பு நியாயங்களை மறுதலிப்பதும், மறுதலிக்க வைப்பதும், அல்லது ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்பதை ஆராய்ந்து உரிய தரப்பை, அதன் தலைமையைக் கண்டிக்க மறுப்பதும் இந்த ஆய்வுகளின் நேர்மைத்தன்மை பற்றிய கேள்விகளை எழுப்பி நிற்கின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சிதறடித்து, இந்தியாவின் வகிபாகத்தை இல்லாதொழிக்க சிங்கள பேரினவாதம் மேற்கொள்ளும் முயற்சிக்கு “தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி” துணை போவதாகக் குற்றம் சுமத்தும் ஆய்வாளர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை, இந்தியாவின் கைப்பொம்மைகளாக மாறுவது பற்றி எந்தக் கருத்தினையும் தெரிவிக்கவில்லை.
நேரடி எதிரியைவிட கூட இருந்து குழி பறிப்பதே மிகப்பெரும் துரோகமாகும். முள்ளிவாய்க்கால் வரை மட்டுமன்றி அதன் பின்னரும் இந்தியா ஈழத்தமிழ் மக்களிற்கு இழைத்துவரும் துரோகத்தனங்கள் பற்றி இந்த ஆய்வுகள் அலசவில்லை. தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை எனப்போராடிய தமிழ் மக்களின் தலைமையாகிய தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும் என்று விரும்பிய இந்தியா, அதே கொள்கையுடன் தற்பொழுதும் இருப்பதாகத் தெரிவிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஏன் ஆதரிக்க முற்படுகின்றது என்பது பற்றி இந்த பத்தி ஆய்வுகள் கேள்வி எழுப்ப மறுக்கின்றன.
இலங்கையில் சீன ஆதிக்கம் அதிகரித்து செல்வதால், சிங்கள தேசத்திற்கு அழுத்தம் கொடுக்க இந்தியா விரும்புவதாக வாதம் முன்வைத்தால், சீன ஆதிக்கம் இப்பொழுது தீடீரென ஏற்பட்ட ஒன்று அல்ல என்பதையும், சீன ஆதிக்கம் மட்டுமன்றி அனைத்து ஆதிக்கத்தையும் உடைத்தெறியும் வல்லமைகொண்ட விடுதலைப் புலிகளை இந்தியா ஏன் ஆதரிக்கவில்லை என்ற சதாராண கேள்வி எழுவதை தடுக்க முடியாதே?
தமிழர்கள் பாரிய இனவழிப்பை எதிர்நோக்கியிருந்தபோது, விடுதலைப் புலிகளின் சார்பு அமைப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்திக்க மறுத்த இந்தியத் தலைமைகள் (ஒரு சில சந்திப்புக்கள் பலமுனைப் பிரயத்தனத்தின் பின்னர் நடைபெற்றது), இப்பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக எதனைச் சாதிக்க முற்படுகின்றது என்பதை யாரும் இதுவரை விளக்கவில்லை. இந்தியா நினைத்திருந்தால் முள்ளிலாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளையாவது காப்பாற்றியிருக்கலாம், ஏன் அதனைச் செய்யவில்லை? வடக்கு கிழக்கு இணைப்பையே தக்க வைக்க முடியாத இந்தியா தமிழர் தாயகத்திற்கு எதனைச் செய்யப்போகின்றது.
இந்தியாவின் நிகழ்ச்சித் திட்டத்திற்கு இணங்க செயற்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் (இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன்) இணங்கியிருந்தால், அதனை தமிழ் மக்களின் பிரதிநிதிகளான ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், தம்மை தெரிவு செய்த தமிழ் மக்களிற்கும், குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழ் மக்களிற்கும் அது பற்றி ஏன் தெளிவுபடுத்தவில்லை என்பது பற்றி எந்தவொரு ஆய்வுப் பத்தியும் ஏன் கேள்வி எழுப்பவில்லை.
முள்ளிவாய்க்கால் இரத்தநெடி மாற முன்னர், இந்தியாவின் உத்தரவுக்கு அமைய கொழும்பிலுள்ள சில சட்டவாளர்கள் மூலம் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்டத்தின் பிரதியை கஜேந்திரகுமார் தவிர்ந்த ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் திரு.சம்பந்தன் அவர்கள் வழங்காததன் காரணம் என்ன எனவும், அதன் தலைப்பு தமிழர்களின் வேணவாவையும், உள்ளட சரத்துக்களோ அதனை மறுதலிக்கும் மாற்றுப்போக்கையும் கொண்டுள்ள மர்மம் பற்றி நாம் ஏன் கேள்வி எழுப்ப மறந்தோம்.
தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்ற கோட்பாடுடன் களமிறங்கும் கஜேந்திரகுமார் அணி, அதனை எப்படிப் பெறப்போகின்றது என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கும் மூத்த ஊடகவியலாளர்கள், அதே கொள்கையுடன் தேர்தலில் போட்டியிடுவதாகக்கூறும் மறு தரரப்பிடமும் அதே கேள்வியை எழுப்பியிருக்க வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவராகச் செயற்பட்ட திரு.சம்பந்தன் அவர்கள் லண்டன் சென்றிருந்தபோதுகூட, அங்குள்ள தமிழ் மக்களை உள்ளடக்கிய முக்கிய மிகப்பெரும் அமைப்புக்களைச் சந்திக்காது, தனக்கு நெருங்கியவர்களுடன் நடத்திவிட்டுச் சென்ற சந்திப்புக்கள் அவர் மீது ஏற்படுத்திய சந்தேகத்திற்கு இப்பொழுது விடைபகிர ஆரம்பித்திருக்கின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகளும் இந்தியாவை முற்றாக நிராகரிக்கவில்லை என்பது உண்மைதான், ஆனால் அதற்காக முற்றாக அடிபணிந்து நின்றுவிடவில்லை என்பதையும் நாம் உணர வேண்டும். தமிழ் மக்களின் படைத்துறைப் பலம் இழக்கப்பட்டாலும், இந்தியாவிற்கு அடிபணிந்து செல்லும் எந்தவொரு நிர்க்கதி நிலையும் தமிழர்களுக்கு ஏற்படவில்லை. அப்படி இந்தியா ஈழத்தமிழ் மக்களிற்கு உதவ முன்வந்தால் அது மகிழ்ச்சியே. ஆனால் அதனை இந்தியா வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிறீலங்கா மீது தடைகளை இட்டு, போர்க்குற்ற விசாரணை பற்றி வலியுறுத்திவரும் இந்தக் காலகட்டத்தில், இந்தியா இது பற்றிக்கூட வாய் திறக்கவில்லையே.
சிங்களத்தைக் கட்டப்படுத்த தமிழர்களைப் பகடைக்காய்களாக பயன்படுத்தும் இந்தியாவின் கைங்கரியத்திற்கு விடுதலைப் புலிகள் முற்றுப்புள்ளி வைத்திருந்தனர். அந்த நிலை மீண்டும் தோன்ற நாம் அனுமதிக்கலாமா? அதனால் எமக்கு ஏற்படப்போகும் நன்மைகள் என்ன?
மகிந்த ராஜபக்சவைத் தோற்கடித்து, சரத் பொன்சேகாவை ஆட்சியில் அமர்த்த இந்தியா மறைமுகமாகச் செயற்பட்டது என சிங்கள அமைச்சர் ஒருவர் குற்றம் சாட்டியதும், அதற்கு இந்தியத் தரப்பு வெளியிட்ட மறுப்பையும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாம் அனைவரும் செய்தியாகப் படித்திருக்கின்றோம். இந்தியாவின் மறைமுக நடவடிக்கையில் முக்கியமானதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவை ஆதரத்து களமிறங்கியதைக் குறிப்பிடலாம். அப்பயென்றால் கூட்டமைப்பில் உள்ள உறுப்பினர்களின் எதிர்ப்பையும் மீறி, த.தே.கூட்டமைப்பின் தலைமை இந்திய நிகழ்ச்சித் திட்டத்திற்கு இயங்கியது என்பதை நாம் ஏன் உணரவில்லை.
த.தே.கூட்டமைப்பின் தலைமையிலுள்ள மூவரது ஏதேச்சதிகாரப்போக்கை மாற்றியமைக்கும் மறைமுக பன்முக முயற்சிகள் தோல்வி கண்டதே காங்கிரசின் வெளியேற்றத்திற்கு காரணமாக அமைந்தது எனக்கூறப்படுகின்றது. அத்துடன் விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளை வெளியேற்றியதும் கூட்டமைப்பின் தலைமை மீதான நம்பகத்தன்மையைப் பாரிய கேள்விக்கு இட்டுச்சென்றது. காங்கிரசின் வெளியேற்றத்திற்கும், தேர்தலில் போட்டியிடுவதற்கும் கண்டனம் வெளியிடும் நாம், கூட்டமைப்பில் இருந்து சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டபோது அதற்கு எதிராக்குரல் கொடுக்கவோ, அல்லது இணைந்து, இணைத்துச் செயற்படுங்கள் என சம்பந்தன் ஐயாவுக்கு அறிவுரை சொல்லவோ முற்படவில்லை.
யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும் மட்டும் போட்டியிடுவதால், தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் தாயக – தேசிய எல்லை இந்த இரண்டு மாவட்டங்களுடன் மட்டுப்படுத்தப்பட்டு விட்டதா? எனக் கேள்வி எழுப்பும் நாம், மறு புறத்தில் அம்பாறையில் போட்டியிடும் சிவாஜிலிங்கம் தலைமையிலான (வடக்கு கிழக்கு தேர்தல் பொறுப்பு) இடதுசாரி விடுதலை முன்னணி மீதும், தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் உடைக்கப்படுகின்றது என விமர்சனக் கண்டனம் முன்வைப்பதன் ஊடாக எதனைச் சாதிக்க முற்படுகின்றோம்.
திருகோணமலையில் சம்பந்தனைத் தோற்கடிக்கவே, தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி களமிறங்கியதாகக் கூறப்படுகின்றது. சம்பந்தன் தோற்றாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெறும் ஆசனங்களின் அடிப்படையில் தேசிய பட்டியல் இடம் கிடைத்தால் (2004இல் இரண்டு ஆசனங்கள் கிடைத்தன) அதனை சம்பந்தனே பற்றிக்கொள்வார் என்பது உண்மையே. ஆனால் விடுதலைப் புலிகள் பலமாக இருக்கும்போதே அடிக்கடி வன்னிக்கு அழைத்து ஊசி அடிக்க வேண்டியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை, அவர்கள் மெளனமாக இருக்கும் இந்தக் காலகட்டத்தில் தன்னிச்சைப்படி, அல்லது இந்தியாவின் நிகழ்ச்சித் திட்டத்திற்கு இணங்க ஆடுவதைத் தடுக்க இவ்வாறானதொரு செயற்பாட்டைத்தவிர வேறு வழியில்லை என்பதையும் வாதமாக முன் வைக்கலாம் அல்லவா?
வன்னி, மட்டக்களப்பு, அம்பாறை தொகுதிகளில் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி போட்டியிடாது தவிர்த்ததற்கு முக்கிய காரணி, தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகவே என அவர்கள் தரப்பில் கூறப்படுகின்றது. அதனையே இப்பொழுது பிரதேச வாதமாகக் கிளப்பி நாம் ஆய்வுப் பத்திகளை எழுதுவதால் புண்பட்டுள்ள தென்தமிழீழ மக்களின் மனங்களில் ஆழமான வடுக்களைத் தோற்றுவிக்கும். “பிரதேசவாதம் பேசும் பிள்ளையானையும், கஜேந்திரனையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும்” என இல்லாத ஒரு அமைப்பை பொய்யாக உருவாக்கி அறிக்கை வெளியிடும் ஊடகங்கள், தாம் மறைமுகமாகப் பிரதேச வாதத்தை தூண்டுகின்றோம் என்பதை ஏன் உணரவில்லை. ஆக கருணா, பிள்ளையானுக்கும், இந்த ஊடகங்களுக்கும் என்ன வித்தியாசம்.
புலம்பெயர் நாடுகளில் இயங்கும் ஒருசில இணைய ஊடகங்களின் உறவினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுகின்றார்கள் என்பதற்காக. மறு தரப்பு மீது கண்மூடித்தனமாக மண்வாரித் தூவுவது தமிழ்த் தேசியத்திற்காக குரல் கொடுக்கின்றோம்? எனக்கூறும் இந்த ஊடகங்களின் நிலைப்பாடு பற்றி சந்தேகங்களைத் தோற்றுவிக்கும் அல்லவா?
திருகோணமலையிலும், யாழ்ப்பாணத்திலும் போட்டியிடும் த.தே.கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டால், த.தே.கூட்டமைப்பும், தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியும் தேர்தலின் பின்னர் இணைந்து செயற்படும் வாய்ப்புக்கள் உண்டு. அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம். இவ்வாறான நிலையில் முன்வைக்கப்படும் தனிப்பட்ட விமர்சனங்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் மத்தியில் ஆழமான பிழவுகளை ஏற்படுத்தும் என்பதுடன், அதற்கு நாம் துணைபோக முடியாது என்பதையும் தமிழ் மக்களை வழிநடத்த முற்படும் ஆய்வாளர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
ஊடகங்களில் ஆய்வுகளை எழுதி நேரத்தை வீணாக்கி மக்களைக் குழப்பும் நாம், தமிழ் மக்களின் பிளவுபட இருந்த தலைமைகளை ஒன்றிணைக்க எம்மால் முடிந்ததை ஏதாவது செய்தோமா என எண்ணிப் பார்க்க வேண்டும். சரி… தவிர்க்க முடியாமல் பிளவு ஏற்பட்டு விட்டது, இது பற்றி எழுதிக் குழப்புவதை விட்டுவிட்டு, இந்தத் தலைமைகளை ஒருங்கிணைக்க இப்போதாவது ஏதாவது செய்தோமா?
த.தே.கூட்டமைப்பின் பிளவினால் தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களின் பிரநிதித்துவம் பாதிக்கப்படும் என்பது உண்மைதான். அது பற்றி உரியவர்களிடம் எடுத்துக்கூறி மறைமுக ஒருங்கிணைப்புப் பணிகளைச் செய்வதே சிறந்த ஊடகருக்கு எடுத்துக்காட்டு.
த.தே.கூட்டமைப்பின் உருவாக்கம் மட்டுமன்றி, வேறு எத்தனையோ முக்கிய மறைமுகப் பணிகளை மாமனிதர் சிவராம் அவர்கள் மேற்கொண்ட போதிலும், அவர் அதனை சதாரண மக்களிற்கு தெரிவித்து, விமர்சனங்களை முன்வைக்க முற்படவில்லை என்பதை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட வேண்டும். ஏனெனில் அரசியல் வார்த்தை ஜாலங்களைப் புரிந்துகொள்ள முடியாத சாதாரண மக்கள் பிரதேசவாதம் என்ற சந்தர்ப்பவாதத்திற்குள் கட்டுப்பட்டு, அவர்களின் விடுதலை உணர்வு சிதறடிக்கப்படும் என்பதை அவர் நன்றாகவே உணர்ந்திருந்தார். பிரதிநிதித்துவம் எவ்வளது முக்கியமோ, அதனைவிட மக்களின் மனங்களும், விடுதலை உணர்வும் அதிமுக்கியம். அவற்றில் தளர்ச்சியோ, பாதிப்போ ஏற்பட நாம் துணைபோகக்கூடாது.
2.தமிழர் தாயகத்தில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த முடியாது போகும்
தமிழீழ விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலத்தைத் தவிர வேறு எந்தவொரு காலப்பகுதியிலும் தமிழர் தாயகத்தில் நிறுவப்பட்ட திட்டமிட்ட சிங்கள, முஸ்லீம் குடியேற்றங்களை யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியவில்லை என்பதே உண்மை. 1963ஆம் ஆண்டு திருகோணமலையில் 36 வீதமாக இருந்த தமிழ் மக்கள் 2007ஆம் ஆண்டில் 28.6 வீதமாக வீழ்ச்சியடைந்தனர். இதேபோன்ற நிலை வன்னியிலும், மட்டக்களப்பிலும், அம்பாறையிலும் காணப்படுகின்றது.
போர் நிறுத்தம் என்ற கயிற்றினால் விடுதலைப் புலிகளின் கைகள் கட்டப்பட்டிருந்தபோது ஏற்பட்ட சிங்களக் குடியேற்றங்களையும், திருகோணமலை நகரத்தில் நிறுவப்பட்ட பெளத்த கோவிலையும், மட்டக்களப்பில் வீதிகளுக்கு சிங்களப் பெயர் இடுவதையும், ஏன் வன்னியில் முளைத்த பெளத்த கோவில்களையும் நாடாளுமன்றில் நான்காவது பெரும் பலத்துடன் இருந்த த.தே.கூட்டமைப்பினால் தடுத்து நிறுத்த முடியாமல் போனது.
இதனால் திருகோணமலையில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் இழக்கப்படுவது சரியென்பது எனது வாதமல்ல. சம்பந்தன் பதவிக்கு வராதுபோனால் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த முடியாது போய்விடும் என முன்வைக்கப்படும் ஆய்வுகள் சரியாக மேற்கொள்ளப்படுகின்றனவா என்பதே எனது கேள்வி? அப்படியென்றால் திருகோணமலையின் நாடாளுமன்ற உறுப்பினராக திரு.சம்பந்தன் அவர்கள் நீண்ட காலம் இருக்கும் நிலையில், தமிழ் மக்களின் விகிதார வீழ்ச்சியும், சிங்களக் குடியேற்றமும், முஸ்லீம் மக்களின் பெருக்கமும் எப்படி ஏற்பட்டது என்ற கேள்வி எழுவது நியாயம் அல்லவா?
ஆக மொத்தத்தில் தமிழ் மக்களும், அவர்களின் அரசியல் தலைமையாக இப்பொழுது செயற்படக் கூடியவர்களும் ஒன்றிணைந்து செயற்படுவதே, சிங்கள தேசத்தின் இவ்வாறான செயற்பாடுகள் பற்றி பன்னாட்டு சமூகத்திற்காவது எடுத்துக்கூறி, தமிழ் மக்களிற்கான ஆதரவைத் திரட்ட வழி வகுக்குமே தவிர, விமர்சனங்களை முன்வைத்து தலைமைகளைப் பிரிப்பதால் நாம் எதனையும் சாதித்துவிட முடியாது.
3.தமிழர் தாயகத்தின் அபிவிருத்தி பாதிக்கப்படப்போகின்றது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிளவினால் தமிழர் தாயகத்தின், அதிலும் குறிப்பாக தென் தமிழீழத்தின் அபிவிருத்தி, மற்றும் வேலை வாய்ப்பு, உயர்கல்வி போன்றன பாதிக்கப்படப்போவதாக முன்வைக்கப்படும் விமர்சங்களில் உண்மை இருக்கத்தான் செய்கின்றது. அதிலும் ஒரு வருடத்திற்கு ஒரு கோடி அடிப்படையில் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு ஒரு பிரதேசத்திற்கான ஆறு கோடிகள் இல்லாமல் போகும் என நாம் கவலைப்படுகின்றோம்.
தமிழர்களின் தன்மானத்திற்காக உயிர் கொடுத்துப் போராடிய எம்மினம், அதிலும் வீரவீச்சுடன் போராடிய பல அரிய போராளிகளைத்தந்த தென் தமிழீழத்திற்கான அபிவிருத்தி தடைப்படும் என நாம் பேச முற்படுவது, அந்தப் போராளிகளின் தியாயங்களை அவமதிப்பது போன்ற செயற்பாடாகும். தமிழர்கள் தற்பொழுதுள்ள நிலையில் சில அணுசரிப்புக்களையும், விட்டுக்கொடுப்புக்களையும் மேற்கொண்டு சிங்களத்தின் உதவியைப் பெற வேண்டும் என முன்வைக்கப்படும் வாதம் எவ்வளது தூரம் சரியானது என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கின்றது.
யாழ்ப்பாணத்தில் 9 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழர்களாகவே இருப்பார்கள் என்பதால், அபிவிருத்தி நடவடிக்கைக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என எழுந்தமானமாகக் கூறுவதன் ஊடக, மகிந்தவிற்கு ஆதரவளிக்கும் டக்ளஸ் போன்றவர்கள் கூட்டமைப்பின் பிளவினால் ஆசனங்களைப் பெறுவதையும் மறைமுகமாக ஆமோதிக்கும் நாம், தென் தமிழீழத்தில் இழக்கப்படும் பிரதிநிதித்துவம் பற்றி கேள்வி எழுப்பும் அருகதையை இழந்து நிற்கின்றோம்.
கருணாவும், பிள்ளையானும் மட்டக்களப்பிலும், அம்பாறையிலும் துணைப்படைக் குழுக்களை இயக்கி, அவர்களின் அட்டகாசம் தலைவிரித்து ஆடியபோது த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் எந்தவித அபிவிருத்திப் பணிகளையும் எமது மண்ணில் மேற்கொள்ள முடியாமல் போனது. குறைந்த பட்சம் மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில்கூட கலந்துகொள்ளவோ, தமது தொகுதிக்கு வந்து போகவோ முடியாமல் போனது. அப்போது உரத்துக் குரல் கொடுத்து கண்டனங்களை வெளியிட்டு, அபிவிருத்திப் பணிகளுக்கு ஏதுநிலைகளை ஏற்படுத்தாத நாம், இப்போது என்ன நோக்கின் அடிப்படையில் தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைக்கின்றோம் என எண்ணிப்பார்க்க வேண்டும்.
வன்னியில் மூன்று இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து முகாம்களில் அடைக்கப்பட்டிருந்தபோது, அவர்களைச் சென்று பார்வையிடவோ, உதவி செய்யவோ த.தே.கூட்டமைப்பினால் முடியவில்லை. மாறாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து தற்பொழுது மகிந்த அணியில் இருக்கும் கனகரத்தினம் போன்றவர்கள் கைது செய்யப்பட்டபோது, அதற்கு எதிராகக் குரல் கொடுக்கவோ, பன்னாட்டு அரசுகளுக்கும், சமூகத்திற்கும் எம்மை ஊடகர்கள் என வெளிப்படுத்தி, அந்த மக்களின் நிலை பற்றி எடுத்துரைக்கவோ நாம் முற்பட்டோமா?
இவற்றை விடுத்து அறைக்குள் இருந்து எழுதும் ஆய்வுப் பத்திகள்? தமிழ் மக்களின் ஒற்றுமையை அம்பலத்தில் ஆடவிடும் என்ற பொறுப்புணர்வு எமக்கிருத்தல் வேண்டும் என்பதே தமிழ் மக்களின் ஏகோபித்த விருப்பாகும். நாம் வெளியிடும் எந்தப் பத்தியாய்வும் தமிழ் மக்களையோ, தமிழ் மக்களின் தலைமையையோ பிளவுபடுத்தாது, அதே நேரத்தில் தமிழ் மக்களை ஏமாற்றி துரோகம் இழைப்பவர்களை, அதுவும் இந்த முக்கிய காலகட்டத்தில் அவ்வாறானவர்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதாகவே இருக்க வேண்டும். விடுதலைப் புலிகள் என்ற மிகப்பெரும் தலைமை மெளனமாக இருக்கும் இந்தக் காலப்பகுதியில், தமிழ் மக்களின் மனங்களைக் குழப்பும் எந்தவொரு செயற்பாட்டையும் அனுமதிக்க முடியாது.
இத்துடன் எமது ஆய்வு, அறிக்கை, மற்றும் ஊடகம் ஊடான சிதறடிப்புச் செய்திகளை நிறுத்திவிட்டு, தமிழர் தாயகத்தில் தமிழ்த் தேசியத்திற்காகக் குரல்கொடுத்துப் போராடக்கூடியவர்களுக்கு தமிழ் மக்களை வாக்களிக்க வைக்கும் பணியைச் செய்வதன் ஊடாக , புலம்பெயர்ந்துள்ள நாம் அடுத்த பொதுத் தேர்தலில் (2004இல் விடுதலைப் புலிகள் போன்று) காத்திரமான பங்களிப்பைச் செய்ய முடியும் என்பதுடன், பிளவுபட்டுள்ள அணிகளை தேர்தலின் பின் ஒருங்கிணைக்கவும் முடியும் என்பதே தமிழ் மக்களின் நம்பிக்கை.இலங்கையின் பொதுத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அந்தத் தேர்தலில் போட்டியிடும் தமிழர் தரப்புக்கள், குறிப்பாக தமிழ்த் தேசிய ஆதரவுச் சக்திகள் குறித்து அண்மை நாட்களில் பல வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருவதை அவதானித்துவரும் தமிழ் மக்கள், குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மிகவும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இத்துடன் எமது ஆய்வு, அறிக்கை, மற்றும் ஊடகம் ஊடான சிதறடிப்புச் செய்திகளை நிறுத்திவிட்டு, தமிழர் தாயகத்தில் தமிழ்த் தேசியத்திற்காகக் குரல்கொடுத்துப் போராடக்கூடியவர்களுக்கு தமிழ் மக்களை வாக்களிக்க வைக்கும் பணியைச் செய்வதன் ஊடாக , புலம்பெயர்ந்துள்ள நாம் அடுத்த பொதுத் தேர்தலில் (2004இல் விடுதலைப் புலிகள் போன்று) காத்திரமான பங்களிப்பைச் செய்ய முடியும் என்பதுடன், பிளவுபட்டுள்ள அணிகளை தேர்தலின் பின் ஒருங்கிணைக்கவும் முடியும் என்பதே தமிழ் மக்களின் நம்பிக்கை.
அவசரகால சட்டத்தை நீக்குமாறு கனடா கோரிக்கை! மனிதஉரிமைகள் கடுமையாக மீறப்படுவதாக அமெரிக்கா காட்டம்!!
சிறிலங்காவில் அமுலில் இருக்கும் அவசரகால சட்டத்தை நீக்குமாறு கனடா அரசு கேட்டுள்ளது. இதேவேளை மனிதஉரிமைகள் மீறல்களை முடிவுக்கு கொண்டுவருமாறு அமெரிக்க அரசு சிறிலங்கா அரசை கேட்டுள்ளது. அவசரகால சட்டத்தை நீக்கினால் இரகசிய முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 10 000 இற்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகள் சந்தேக நபர்களை விடுவிக்கவேண்டிவரும் என சிறிலங்கா அமைச்சர் ஒருவர் முன்னர் கருத்துவெளியிட்டிருந்தார்.
கனடாவின் வெளிநாட்டலுவல்கள் நாடாளுமன்ற செயற்குழு செயலர் தீபக் ஒபராய் மேற்கண்ட கருத்தை சிறிலங்காவின் உயர் ஸ்தானிகருக்கு தெரிவித்துள்ளார்.
கொழும்பில் சிறிலங்காவின் உயர் ஸ்தானிகரை சந்தித்த ஒபராய் அவசரகால சட்டத்தை உடனடியாக நீக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார். அத்துடன் தமிழ் மக்களின் தேவைகளை நிறைவுசெய்ய கூடிய செயல் திட்டங்களை முன்னெடுக்கவேண்டும் எனவும் அரச சார்பற்ற நிறுவனங்களின் சேவைகளை தடுக்கவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.
இலங்கைத்தீவில் நடைபெற்றுவந்த போர் முடிவுக்கு வந்தநிலையில் 300 000 தமிழ் மக்களை கொண்ட கனடா நாடு தமிழ் மக்களைபற்றிய விடயங்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை மனித உரிமைகளை பேணி பாதுகாப்பதில் சிறிலங்கா அரசு தவறியுள்ளதாக இன்று வெளியிடப்பட்ட அமெரிக்காவின் வருடாந்த மனித உரிமைகள் அறிக்கை தெரிவிக்கின்றது.
கடந்த வருடம் முழுவதும் அரச ஆதரவு துணைப்படைகளும் பாதுகாப்பு படைகளும் பொதுமக்களுக்கு எதிராக ஆயுத வன்முறை பிரயோகித்துள்ளனர் எனவும் சித்திரவதைகள் கடத்தப்படுதல் தடுத்துவைத்தல் மற்றும் கடத்திவைத்து பணம் பறித்தல் ஆகிய வன்முறைகளில் ஈடுபட்டிருந்தனர்.
எனினும் அவர்களுக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக அறியமுடியவில்லை. இவ்வாறான மனித உரிமை மீறல்களை தடுப்பதற்காக சிறிலங்கா சட்டமைப்பின்படி அமைக்கப்படவேண்டிய மனித உரிமை கமிசன்களையோ அல்லது இலஞ்ச தடுப்பு கமிசன்களையோ அல்லது காவல்துறை கமிசன்களையோ அல்லது நீதிமன்ற கமிசன்களையோ அமைப்பதை தடுத்துவந்திருக்கிறது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
அரசப்படைகளும் அதன் துணைப்படைகளும் பலரை சட்டத்திற்கு புறம்பான முறையில் கொன்றுள்ளதாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊடகவியலாளர்கள் செயற்படமுடியாத சூழ்நிலையை ஏற்படுத்தி ஊடக அடக்குமுறையை தொடர்ந்தும் பின்பற்றிவந்துள்ளது எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளின் இறுதிக்கட்ட போர் நடவடிக்கைகளையும் விமர்சித்துள்ள இவ்வறிக்கை சிறிலங்கா அரசாங்கத்தின் தொடர்ச்சியான அடக்குமுறைகளை கடுமையான முறையில் வெளிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார்?
விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளராக செயற்பட்ட குமரன் பத்மநாதன் கைதுசெய்யப்பட்டிருந்த போதிலும் விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் செயற்பட்டுவருவதை உறுதிப்படுத்தி இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் ஒருவர் பாதுகாப்புப் பேரவைக்கு சமர்ப்பிக்க தயாரித்திருந்த அறிக்கையொன்றை பாதுகாப்புச் செயலாளர் திடீரென இடைநிறுத்தியதாக புலனாய்வுப் பிரிவின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுதலைப் புலிகள் சர்வதேச ரீதியில் மேற்கொண்டுவரும் ஆயுத வியாபாரம் உள்ளிட்ட வர்த்தக நடவடிக்கைகளில் கிடைக்கும் இலாபத்தை மெக்சிக்கோவிலுள்ள மூன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட்டு வருவது குறித்த சில சாட்சியங்களையும் முன்வைக்க அந்த அதிகாரி திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதேவேளை, விடுதலைப் புலிகள் அமைப்பில் உட்தரப்பு மோதல்களை எதிர்கொள்ள முடியாததால் மலேசியப் புலனாய்வுப் பிரிவினருடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட முழுமையான இணக்கத்தின் அடிப்படையில் கே.பி. இலங்கையிடம் சரணடைந்ததாகக் கொழும்பில் முக்கிய மட்டங்களில் பேசப்படுகிறது.
கே.பி. விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பில் வெளியில் தெரியும் நபராக இருந்த போதிலும் சர்வதேச வலையமைப்பை வேறொருவரே வழிநடத்தி வருவதாக இந்திய புலனாய்வுப் பிரிவினரின் நிலைப்பாடாக உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அத்துடன், விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாகவும் தகவலொன்று கிடைத்துள்ளதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொட்டு அம்மான் சமாதான உடன்படிக்கைக் காலத்தில் எந்தப் பேச்சுவார்த்தைகளிலும் கலந்துகொள்ளவில்லை. அவர் குறித்த குறிப்பிட்டுக்கூறக் கூடிய தகவல்கள் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரிடம் இருக்கவில்லை என்பதால் அவரை சிக்கவைக்க முடியாது போனதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், விடுதலைப் புலிகளுக்கிடையில் சில பிளவுகள் ஏற்பட்டிருப்பதன் காரணமாக பொட்டு அம்மான் அந்த அமைப்பின் தலைமைத்துவத்திற்கு போட்டியிடவில்லை எனவும் அவர் அரசியல் அழுத்தங்களை ஏற்படுத்தும் முனைப்புக்களில் ஈடுபட்டு வருவதாகவும் புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் மூலம் உறுதியாகியுள்ளன.
மனித உரிமை பேரவையில் உரையாற்ற விடுதலைப் புலி முகவர் ஒருவருக்கு சந்தர்ப்பம்
ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் உரையாற்றுவதற்கு தமிழீழ விடுதலைப் புலி முகவர் ஒருவருக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அமெரிக்க முகவர்களில் ஒருவரான கருன் பார்க்கர் என்பவருக்கே இவ்வாறு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் தமிழர்களை இல்லாதொழிக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக பார்க்கர், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் போலியான கருத்துக்களை முன்வைத்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
இதேவேளை, இலங்கைப் படைத்தரப்பினர் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது என திவயின பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது.
மகிந்தவுக்கும், தன் இந்திய மருமகனுக்கும் விசுவாசமாக செயற்படும் பான் கீ மூன்
போர்க்குற்ற விசாரணைகள் மற்றும் சர்வதேச அழுத்தம் ஆகியவற்றிலிருந்து இலங்கையை காப்பாற்றும் முயற்சியில் ஐக்கிய நாடுகள் சபை ஈடுபட்டுவரும் பின்னணியில், மிகப்பெரிய குடும்ப அரசியலும் பரஸ்பரம் நன்றிக்கடன் நடவடிக்கைகளும் ஒழிந்திருக்கின்றன என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக அந்த வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாவது: இலங்கைக்க்கு எந்த நடவடிக்கைக்கும் ஐக்கிய நாடுகள் சபை வெளிப்படையாக எந்த நடவடிக்கையும் மேற்கொண்டதில்லை என்பது சகல தரப்பினரும் அறிந்த உண்மை. இலங்கை அரசினால் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பாரிய மனித உரிமை மீறல்கள் முதல் சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்களை படுகொலை செய்த போர்க்குற்றம் வரை சிறிலங்கா அரசு மேற்கொண்ட மிகவும் பாரதூரமான குற்றங்களுக்கு ஐ.நா. சபை எந்த உருப்படியான நடவடிக்கையும் மேற்கொண்டதில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய மூத்த அதிகாரிகள் பலர் வெளிப்படையான கண்டனங்களையும் நடவடிக்கைகளுக்கான முஸ்தீபுகளையும் மேற்கொண்டடிருந்தபோதும் அவற்றை அந்த அதிகாரிகளின் தனிப்பட்ட கருத்தாக அறிவித்து செல்லாக்காசாக்கும் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இலங்கை விவகாரத்தில் தனது பொறுப்பையும் தொடர்ச்சியாக தட்டிக்கழித்து வருகின்றமை சர்வதேச மட்டத்தில் அனைத்து தரப்பினரும் அறிந்த விடயம். பான் கீ மூனினது இந்த காரியங்களின் பின்னணியில், இந்தியாவும் இலங்கையும் கொண்ட பல குடும்ப மற்றும் நட்பு உறவுகளே காரணம். பான் கீ மூனினது மருமகன் சித்தார்த் சட்டர்ஜி, 1987 ல் இலங்கை சென்ற இந்திய படைகளின் முன்னாள் பணிப்பாளர்களில் ஒருவர் ஆவார். அக்காலப்பகுதியில் இலங்கையில் பணியாற்றிய சித்தார்த் சட்டர்ஜி பின்னர் ஓய்வுபெற்று தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் மிகப்பொறுப்பு வாய்ந்த பதவியில் உள்ளார். இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபை படைகளின் பிரதானி விஜய் நம்பியாரின் சகோதரரும் இந்திய இராணுவத்தின் முன்னாள் பிரதானியுமான சதீஷ் நம்பியார் வன்னியில் இறுதிக்கட்ட போர் நடைபெற்றுக்கொண்டிருந்தவேளை பொதுமக்களை காப்பாற்றுவதற்காக இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்தார். இவர் தனது சகோதரரின் ஆலோசனைக்கு ஏற்ப இலங்கை இராணுவத்துக்கு ஆலோசனை வழங்கினாரே தவிர பொதுமக்களை காப்பாற்றுவதற்கு இலங்கை அரசுடன் பேச்சு நடத்தவேண்டிய தனது பொறுப்பிலிருந்து தவறிவிட்டார் என்று சர்வதேச ஊடகங்கள் ஏற்கனவே குற்றஞ்சாட்டியிருந்தன.(விஜய் நம்பியார் சமாதான காலத்தின்போது இந்தியாவின் சிறப்பு தூதுவராக இலங்கைக்கு சென்று உயர்பாதுகாப்பு வலயங்களை நீக்கக்கூடாது என்று இலங்கைக்கு ஆலோசனை வழங்கி சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.) ஆகவே, இறுதிப்போரில் தனது படைகளை நேரடியாக வன்னிக்கு அனுப்பிய இந்தியா, இலங்கைக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் ஐ.நா. மட்டத்தில் கூர்மையடையும்போது, அது போரின் பின்னணியின் தான் நடத்திய நடவடிக்கைகளை காட்டிக்கொடுத்துவிடும் அச்சத்தில், நம்பியார் சகோதரர்கள் மற்றும் பான் கீ மூனின் மருமகன் சித்தார்த் சட்டர்ஜி ஆகியோரின் செல்வாக்கை பயன்படுத்தி, இலங்கைக்கு எதிரான சர்வதேச நடவடிக்கைகளை முறியடித்து வருகிறது. இது ஒருபுறமிருக்க, ஐ.நா. செயலாளர் நாயகம் பதவிக்கு கடந்த தடவை தேர்தல் நடைபெற்றபோது அதில் போட்டியிடுவதற்கு இலங்கை தரப்பில் ஜெயந்த தனபாலவை நிறுத்திய இலங்கையின் அரச அதிபர் மகிந்த, பின்னர், பான் கீ மூனின் வெற்றிவாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஜெயந்த தனபாலவின் நியமனத்தை வாபஸ் பெற்றிருந்தார். அன்றுமுதல், மகிந்தவுக்கு நன்றிக்கடன் உடையவராக செயற்பட்டுவரும் பான் கீ மூன், இன்றுவரை மகிந்த தலைமையிலான இலங்கை அரசுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை என்பதிலும் வேறு தரப்புக்கள் நடவடிக்கை மேற்கொள்ளும் பட்சத்தில் அவற்றை அனுமதிப்பதில்லை என்பதிலும் விடாப்பிடியாக நிற்கிறார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)