இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
திங்கள், 22 மார்ச், 2010
எங்கள் வரலாற்றுப் பதிவுகளை காப்போம்
எமக்கு முன்னுள்ள முக்கிய தேவை பற்றி இந்த கட்டுரை ஊடாக ஆராயவிருக்கின்றோம். முப்பது ஆண்டுகால மிகப் பெரிய உலகம் வியக்கும் வகையிலான தமிழனத்தின் உன்னதப் போரும் அதன் பின்னரான தற்போதைய மாறுபட்ட சூழலும் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்தியே நகர்ந்துவருகின்றது. அந்தப் போராட்டத்திற்காக கொடுக்கப்பட்ட விலைகள் சராசரியாக மூன்று இலட்சம் வரையில் எட்டிப்பிடிக்கும் நிலையில் உள்ளது. இந்த இடத்தில் நாங்கள் குறிப்பிடுவது விடுதலைக்காய் நேரடியாக வீழ்ந்த மாவீரர்கள் மற்றும் மக்கள். இந்த இடத்தில் ஒரு கனதியான பணி தற்போது உலகப் பரப்பில் வாழ்ந்துவருகின்ற எமது தமிழ் மக்களிடம் உள்ளது. அது மிகவும் இலகுவான பணி ஆனாலும் அது நெறிப்படுத்தல் இல்லாமையால் கவனிக்கப்படாமலேயே கிடப்பது வேதனைக்குரியது. எங்கள் விடுதலைப் போருக்கான அர்ப்பணிப்புக்கள் அதன் பின்னான காலச்சுழற்சி என்பவற்றில் எமது விடுதலைப் போரையும் மக்களையும் வைத்து பிழைப்பு நடத்த பலர் முற்படுகின்றமை அல்லது உண்மையான உள்ளார்ந்த உணர்வு நிலைப்பாட்டுடன் கூடிய முன்னெடுப்புக்கள் என மாறுப்பட்ட சூழல் தற்போது எதிர்கொள்ளப்பட்டாலும், எங்களுக்கான நீண்ட நோக்குடன் கூடிய பார்வைச் செலுத்தவேண்டியவர்களாக அனைத்து மக்களும் இருக்கின்றோம். எங்கள் உயிர்கள், எங்கள் இரத்தம், எங்கள் அங்கங்கள், எங்கள் அர்ப்பணிப்புக்கள், எங்கள் சொத்துக்கள் என எங்களுக்கான அனைத்தும் இழந்தும் மீளமுடியாத துயர் எங்களவர்களின் பிரிவு மட்டும் தான் என்பதை தற்போது நிலத்திலும் புலத்திலும் அனைவரும் புரிதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். எங்கள் போரும் அதன் பிரதிபலிப்பும் மட்டும் தான் எங்களை உலகம் இன்று திரும்பிப் பார்க்கின்ற நிலைக்கு கொண்டுவந்திருக்கின்றது என்பதனை அனைவரும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். எங்கள் போராட்டப் பயணம் மிகப் பிரமாண்டமானதாக இருந்தது, அதன் வியக்கவைக்கின்ற பிரமிப்புக்கள் வார்த்தைகளுக்குள் அடக்கமுடியாதவை என்பதை கால ஓட்டத்தில் நாங்கள் வார்தைகளால் மட்டும் தான் சொல்லப்போகின்றோமா? என்ற இக்கட்டான சூழல் தற்போது எதிர்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் கேள்விக்கான காரணம் எங்கள் கடந்தகாலப் பதிவுகள் அனைத்தும் மிக முக்கியமான நேரடியான ஆவணங்கள் எல்லாம் வன்னிலேயே இருந்தன. அனைத்தும் நிலங்களில் தாழ்க்கப்பட்டும் பல எரிக்கப்பட்டும், பல கைவிடப்பட்டும் உள்ளன. கருத்துரைகள், ஒளிப்படங்கள், ஒளிநாடாக்கள், பாடல்கள், பத்திரிகைகள், நாவல்கள், சஞ்சிகைகள், சிறுகதைகள், காலப் பதிவுகள், வரலாறுகள், வரலாற்றுச் சான்றுகள், எங்கள் தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள், பிரமிப்புக்கள், எங்கள் தெருக்கள், எங்கள் கோவில்கள், எங்கள் பள்ளிக்கூடங்கள் எல்லாவற்றுக்கும் மேலாக எங்களுக்காக வீழ்ந்தவர்களின் வரலாற்றுப்பதிவுகள், புகைப்படங்கள் எல்லாமும் எங்கள் கைகளில் இல்லை. அனைத்துப் பதிவுகளையும் ஒன்று சேர்ப்பதற்கான இணையம் அல்லது இணைய சேமிப்பு நடவடிக்கையினை புலம் பெயர் தளத்தில் இருக்கின்ற தாயகத்தையும் தாயக மக்களையும், விடுதலைப் போரையும் உண்மையாக நேசிக்கின்ற எவராது முன்வந்து மேற்கொள்ளவேண்டும். இந்த நடவடிக்கையினை தனிப்பட்ட அரசியல் நலன் சார்ந்ததாகவோ யாருக்கும் முண்டு கொடுப்பதற்கான நடவடிக்கையாகவோ மேற்கொள்ளாமல் உண்மையான தேசநலன் சார்ந்து சிந்தித்து செயற்பட்டால் எங்களால் இழக்கப்பட்ட ஆவணங்களில் மிகக் கூடிய அளவினை உலகப்பரப்பில் பெற்றுக்கொள்ளமுடியும் என்று நம்பலாம். ஒவ்வொருவரும் தங்களிடம் இருக்கின்ற சின்னசின்ன பதிவுகளை, புகைப்படங்களை, ஒலி, ஒளிப்பதிவுகளை, முன்னைய வெளியீடுகளை, புலம்பெயர் மற்றும் தாயகத்தில் இருக்கும் மாவீரர்களின் குடும்பங்கள் ஒவ்வொருவரும் தத்தமது வீடுகளைச் சேர்ந்த மாவீரர்களின் விபரங்களை பாதுகாப்பதன் மூலமும் நாங்கள் குறிப்பிட்டதற்கு அமைய யாராவது முன்வந்து ஆவணச் சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டால் அவர்களுக்கு உங்களிடம் இருக்கின்ற தகவல்களின் பிரதிகளை வழங்கியும் எங்கள் தொலைந்துபோகும் வரலாற்று ஆவணங்களை மீள ஒன்று திரட்டி சேமிப்பதற்கு ஒன்றுபட்டு உழைக்க முன்வரவேண்டும்.
கொந்தளிப்பான சூழலை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் இலங்கையின் எதிர்காலம்
உள்நாட்டிலும் குழப்பமான நிலை. வெளியேயும் மேற்குலகின் அதிகரித்து வரும் நெருக்கடிகள்,அழுத்தங்கள். அத்துடன் இந்தியாவா சீனாவா அமெரிக்காவா தங்கள் கால்களை பலமாக ஊன்றிக் கொள்வது என்ற போட்டிகள். இந்தப் போட்டிகள் உள் நாட்டில் உருவாக்கும் குழப்பங்கள். அரசியல் கட்சிகளின் அணிப் பெருக்கம். வெளியே புலம் பெயர்ந்த தமிழர்களைக் கையாள முற்படும் மேற்கின் போக்கு என ஒரு வெப்ப வளையம். இதில் யப்பானும் ஐரோப்பிய நாடுகளும் தாங்கள் எங்கே, எப்படி நிற்பது என்று தெரியாது தடுமாறிக் கொண்டும் போட்டியிட்டுக் கொண்டுமிருக்கும் நிலைமை. இதற்காக சுருக்குக் கயிறுகளோடு சில நாடுகளும் கத்தி, பொல்லு, குண்டாந்தடிகளோடு சிலநாடுகளும் சவக்குழி, பொறிக் கிடங்குகளோடு சில நாடுகளும் என்று ஒரு மாபெரும் பொறிவெளியில் இலங்கை இப்போது நிறுத்தப்பட்டிருக்கிறது. போர் முடிந்து விட்டது என்று யாரும் ஆறுதலடைய முடியாதபடி நிகழ்ச்சிகள் நடக்கின்றன. எல்லாமே எதிர் மறை நிகழ்ச்சிகள். ‘மரம் சும்மா இருந்தாலும் காற்று அதைச் சும்மா விடாது’ என்பது உலகப் பொதுக்கூற்றல்லவா! முன்னர், நிலைமைகளை சமநிலையில் வைத்திருப்பதற்கு போர் இருந்தது. புலிகள் இருந்தார்கள். இலங்கை அரசாங்கம் கொஞ்சம் விலகினால் புலிகளுக்கு நெருக்கமாக வந்து (இந்த நெருக்கம் இரகசிய வழிகளிலானது) அரசாங்கத்தைப் பணியவைக்கும் உத்தியை இந்த நாடுகள் பயன்படுத்தின. அல்லது ஆட்சியிலிருக்கும் தரப்புக்கு எதிராக இருக்கும் தரப்பைப் பலப்படுத்திப் பணிய வைக்க முயற்சித்தன. இதில் சிங்களம் தமிழ் என்ற பேதங்களிருக்கவில்லை. எது வாய்ப்பான தரப்பு என்பதே கவனிக்கப்பட்டது. புலிகள் இல்லாத வெளியில் உருவாகியிருக்கும் புதிய சூழலில் இலங்கையின் மீதான ஆதிக்கப் போட்டிகள் மும்முரமாகி விட்டன. இந்தியா புலிகளில்லாத இலங்கையில் தன்னுடைய ஆதிக்கத்தை முழுமையாக்க முயற்சிக்கிறது. இதில் அது ஏறக்குறைய பாதி வெற்றியை அடைந்துமிருக்கிறது. இப்போது ஆட்சியிலிருக்கும் மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் இந்தியாவுடனும் சீனாவுடனும் ஒரு வித இணைநிலை உறவைக் கொண்டிருக்கின்ற போதும் இந்தியாவுக்கு இனிப்பான முறையிலேயே அது கூடுதலாக நடந்து கொள்கிறது. இதேவேளை நீண்ட காலத்துக்குப் பின்னர் (புலிகள் இல்லாத சூழலில்) தமிழ் - சிங்கள அதிகார வர்க்கங்களோடு ஒரு இணைநிலை உறவை இந்தியா இப்போது கொண்டுள்ளது. (இந்த நிலை ஒரு அமைதித் தீர்வுக்கு இலங்கையைக் கொண்டு செல்ல உதவும். அதற்கான சூழலையே இந்தியா உருவாக்குகின்றது என்று சொல்வோர் உள்ளனர். இது வேடிக்கையானது. இலங்கையில் அமைதி நிலவ ஒரு போதுமே இந்தியா அனுமதிக்கப் போவதில்லை. அதற்கான காரணங்கள் பலவுண்டு. அதை இன்னொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பார்க்கலாம்). இப்போது இந்தியாவுக்கு மகிந்த அரசோடும் உறவு. தமிழ்க் கூட்டமைப்போடும் உறவு என்ற ஒரு புதிய சூழல். இது இந்தியாவைப் பொறுத்து வெற்றியே. ஆனால் ஒரு எல்லைவரையான வெற்றிதான் இது. இதற்கு எதிரில் பொறிகளோடும் அதிக முனைப்புகளோடும் மேற்குலகம் இருக்கிறது. திரை மறைவிலான முயற்சிகளோடு சீனா உள்ளது. உலக அரங்கில் நிகழும் அதிகரித்த வர்த்தகப் போட்டிக்கு இலங்கை ஒரு முக்கிய மையமாக இருப்பது எல்லோருக்குமே தெரிந்த விசயம். இதனால் அந்தத்தரப்புகள் தமக்கு வாய்ப்பான இடங்களின் வழியாகக் காய்களை நகர்த்துகின்றன. கைகளை வைக்கின்றன. கால்களை ஊன்ற முயற்சிக்கின்றன. போர் முடிந்த நிலையில் நிச்சயமாக ஒரு அமைதி இலங்கையில் இதுவரையில் எட்டப்பட்டிருக்க வேண்டும். பொருளாதார நிலைமைகளில் முன்னேற்றம், அகதிகளை மீள் நிலைக்குக் கொண்டு வருதல், போர் நிகழ்ந்த பகுதிகளை அவற்றின் பாதிப்புகளிலிருந்து மீளக் கட்டியெழுப்புதல், சனங்களுக்குப்; புனர்வாழ்வழித்தல், அரசியல் தீர்வு நோக்கி முன்னேறுதல் என்று நிலைமைகள் மேம்பாடடைந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை. அப்படி எதுவும் எளிதில் நடந்து விடப்போவதுமில்லை. அதற்கு இந்த நாடுகள் அனுமதிக்கப் போவதுமில்லை. போர் மனித உரிமை மீறல்களுடன்தான் நடந்தது என்று இந்த நாடுகள் அனைத்துக்கும் நன்றாகவே தெரியும். அப்படியிருந்தும் போரின்போது இலங்கை அரசாங்கத்துக்கு எல்லா நாடுகளும் எந்தப் பேதங்களுமில்லாமல் தாராளமாக உதவின. ஆனால், போருக்குப் பின்னர் அகதிகளுக்கு உதவவும் மீள் கட்டுமானம், புனரமைப்புப் போன்றவற்றுக்கு உதவவும் இவை தயாரில்லை. இது எப்படியிருக்கிறது? தமக்கு சார்பாக நடந்து கொண்டால் தாராள உதவி என்ற கொள்கை அன்றி வேறென்ன? இதற்குத் தனியே மகிந்த ராஜபக்ஸ மட்டும் காரணமல்ல. அவருக்கு இந்தக் குறைபாடுகளில் பெரும் பங்கிருந்தாலும் அவருக்கு அப்பால் ஏனைய அரசியல் தரப்பிருக்கும் சகலருக்கும் இவற்றில் பொறுப்பும் பங்குமுண்டு. போர் முடிந்த பின்னர் இரண்டு பெரும் தேர்தல்கள் அடுத்தடுத்து வந்துள்ளன. இந்தத் தேர்தலில் எல்லாக் கட்சிகளும் போட்டியிடுகின்றன. ஆனால், போர் முடிவுற்றதைத் தவிர நாட்டில் நிலவும் வேறு எந்தப் பிரச்சினைகளும் தீர்ந்ததாக இல்லை. பதிலாக இன்னும் பிரச்சினைகள் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன. அப்படியென்றால், என்னதான் நடக்கிறது? இனி என்னதான் நடக்கப் போகிறது என்ற கேள்வி எழுகிறதல்லவா? இதுதான் சுவாரஷ்யமான பகுதி. கொலனி ஆதிக்கத்தின் போது இலங்கை போன்ற நாடுகளை பிரித்தானியா பிரித்தாளும் தந்திரோபாயத்தின் மூலம் கையாண்டது. அங்குள்ள மக்களை இன, மத, மொழி அடிப்படைகளில் வௌ;வேறு சமூகங்களாகப் பிரித்தாண்டது. இந்தப் பிரித்தாளும் தந்திரோபாயம் மேற்குலகின் கைவந்த கலை. இதைப் பின்னர் இந்தியா கையாளத் தொடங்கியது. இதன் வெவ்வேறு வடிவங்கள்தான், ஐ.தே.க ஆட்சியிலிருக்கும் போது சிறிலங்கா சுதந்திரக் கட்சியைத் தமக்குச் சார்பாகக் கையாள்வது. அது சாத்தியப்படாதபோது ஜே.வி.பியைக் கையாள்வது. சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியிலிருந்தால் அதை வளைத்துப் போடுவது. முடியா விட்டால் எதிர்த்தரப்பைக் கையாள்வது. (சிறிலங்கா சுதந்திரக் கட்சி 1980 களின் நடுப்பகுதியில் ஜே. ஆரால் சிதைக்கப்பட்ட பின்னர், ஜே.வி.பி யை இந்தியா கையாண்டதை இங்கே நினைவு கூரவேண்டும்). அல்லது தமிழ்க்கட்சிகளை, இயக்கங்களைக் கையாள்வது. இது இந்தியாவின் நடவடிக்கைகள் என்றால், போரின்போது நிகழ்ந்து கொண்டிருந்த சிதைவுகளை மையமாக வைத்துக் கொண்டு மேற்குலகம் ஒரு பக்கத்தாலும் சீனா இன்னொரு பக்கத்தாலும் ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இன்னொரு பக்கத்தாலும் இலங்கையில் செல்வாக்குச் செலுத்தின. அதாவது போர் எப்போதும் எதிர் எதிரான இரண்டு தரப்புகளைக் கொண்டது என்பதால் இவை இப்படித் தமது காரியங்களை இடையில் நின்று மேற்கொள்ள முடிந்தது. இந்தப் பிரித்தாளும் தந்திரமானது நேரடியான கொலனி ஆதிக்கம் முடிவுக்கு வந்து அறுபது ஆண்டுகளான பின்னரும் தொடர்கிறது. அதுதான் கவலைக்குரியது. இப்போது இலங்கை அரசாங்கம் மேற்குலகுடன் வெளிப்படையான முரண் நிலைக்கு வந்துள்ளது. மேற்குலகமும் இலங்கையை வெளிப்படையாகவே மிரட்டவும் அதற்கு அழுத்தம் கொடுக்கவும் தொடங்கியிருக்கிறது. இதன் ஒரு வெளிப்பாடுதான், புலம் பெயர் தமிழர்களின் மாநாடுகளிலும் கூட்டங்களிலும் பிரித்தானியப் பிரதானிகள் கலந்து கொள்வதும் இவை தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் முக்கிய கவனமெடுத்துக் கருத்துரைப்பதுமாகும். இன்னும் தங்கள் தேவைகளுக்கா தமிழர்களையும் சிங்களவர்களையும் பிரித்தாள முயற்சிக்கின்றது இந்த உலகம். எல்லாமே அவரவர் நலன்களுக்காக மட்டுமே நடக்கின்றன. இல்லையென்றால், வன்னிப் போரின்போது ஈழத்தமிழர்கள் கொட்டும் பனியில் நின்று போரை நிறுத்தும் படியும் அங்கே கொல்லப்படும் மக்களைக் காப்பாற்றும் படியும் வேண்டிய போது அதையெல்லாம் கண்டு கொள்ளாத மேற்குலகம் இப்பொழுது நடக்கும் இந்தச் சிறு கூட்டங்களுக்கு பெரும் முக்கியத்துவத்தைக் கொடுக்கிறதே. இது சிரிப்பாக இல்லையா? மேற்குலகின் இந்த திடீர் மாற்றம் சில தமிழருக்கு மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் இப்போது தரலாம். ஆனால் இது மிகவும் ஆபத்தானது. பொதுவாகவே தமிழ் சிங்கள மக்களிடம் ஒரு குறைபாடிருக்கிறது. தமிழர்கள் வெளிச்சக்திகளால் நெருக்குவாரப்படும் போது சிங்களர்கள் சந்தோசப் படுவார்கள்;. அதாவது தமிழர்களின் மூக்குகள் உடைபடும் போது சிங்களவர்கள் சிரிப்பார்கள். சிங்களவர்களின் மூக்கு உடைபடும் போ தமிழர்கள் சிரிப்பார்கள். ஆனால், இரண்டு தரப்பினரும் தலைகளும் உடைபடுகின்றன என்பதை இவர்களில் பலரும் கண்டு கொள்வதில்லை. இப்போது நடந்து கொண்டிருப்பது இதுதான். இந்திய நெருக்கடி அல்லது அழுத்தம் என்பது இப்போது மறைமுகமானது. சிநேக ரீதியானது போல தோற்றம் காட்டுவது. காரணம் மகிந்த ராஜபக்ஸ ஒரு சுதேசியாகத் தோற்றம் தருபவர். அத்துடன் பிராந்திய நாடுகளுடனான உறவில் தனது பலத்தைப் பெருக்கிக் கொள்ளும் தந்திரோபாயத்தைக் கொண்டவர். மேலும் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், மேற்குலக நெருக்கம் என்பது புலம் பெயர் தமிழர்களின் மூலமாக இலங்கைத் தமிழர்களை அனுசரிக்க வேண்டி வரலாம் என்ற எச்சரிக்கையுணர்வை உடையவர். மட்டுமல்ல, வருகின்ற காலத்தில் மேற்குலகத்துக்குச் சவாலாக பொருளாதார ரீதியில் சீனாவும் இந்தியாவும் எழுச்சிபெற்று வருவதையும் சரியாக விளங்கிக் கொண்டு காரியமாற்றுபவர் மகிந்த ராஜபக்ஸ. எனவே அவர் மேற்குலகத்தை விடவும் இந்தப் பிராந்தியத்துடனான உறவையே அதிகம் விரும்புகின்றார். இதை மேற்குலகம் விரும்பவில்லை. அதனால் அவரை அது நெருக்குகிறது. பழிவாங்கத்துடிக்கிறது. இந்த நெருக்கடியை தனியே நின்று அவரால் ஒரு போதுமே சமாளிக்க முடியாது. அதற்கு தமிழ் சிங்கள உறவுக்கான அடிப்படைகளை அவர் சீராக்க வேணும். இல்லை என்றால் இந்தியாவிடமோ சீனாவிடமோ சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை. அப்போதும் மேற்குலகம் இலங்கையைச் சும்மா விட்டு விடாது.
பிரதான கட்சிகளே தமிழர்களைக் கொன்றன
கடந்த காலங்களில் ஐ.தே.க., ஐ.ம.கூ. ஆகியனவே தமிழ் மக்களைக் கொன்றனரே அன்றி ஜேவிபி அல்ல என்று சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் உள்ள உடுப்பிட்டியில் ஜே.வி.பி. கட்சியினர் தமது கிளைக் காரியாலயத்தை நேற்று திறந்து வைத்தனர்.
இந் நிகழ்வு நேற்று கட்சித் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் தலைமையில் நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த சோமவன்ச அமரசிங்க மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமும், தற்போதைய ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும் பல அப்பாவி தமிழ் மக்களைக் கொன்று குவித்தன.
எனினும் ஜே.வி.பி. இதுவரையில் ஒரு தமிழரையேனும் கொலை செய்யவில்லை. தற்போது அழைக்கப்பட்டு வருவது போல, ஜே.வி.பி. ஒன்றும் இனவாத கட்சி அல்ல.
கடந்த 1983ஆம் ஆண்டு, ரோஹன விஜேவீர தலைமையில் ஜே.வி.பி. செயல்பட்ட போது, யாழ்ப்பாணம், சுன்னாகம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் கட்சிக் காரியாலயங்களைக் கொண்டிருந்தது.
அதனையடுத்து சுமார் 27 வருடங்களின் பின்னர் ஜே.வி.பி. யாழ்ப்பாணத்தில் தனது கிளைக் காரியாலயத்தை ஆரம்பிக்கிறது” என்றார்.
மேற்படிக் கூட்டத்தின் போது, வெறும் 40க்கும் குறைவான மக்களே வருகை தந்திருந்ததாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்களும் யாழ்ப்பாணத்தில் போட்டியிடும் ஜே.வி.பி. வேட்பாளர்களின் உறவினர்களே என்றும் கூறப்படுகிறது.
MTV - SIRASA தலைமைக் காரியாலயம் தாக்குதலுக்குள்ளானது.
அமைச்சர் ஒருவரின் அடியாட்களான குழுவொன்று மகாராஜா நிறுவனத்திற்கு சொந்தமான பிரேவூட் இடத்தில் அமைந்துள்ள MTV , SIRASA TV தொலைக்காட்சிகளின் தலைமைக்காரியாலயத்தின் மேல் தாக்குதல் நாடத்தியுள்ளனர். சுமார் 100 பேர் கொண்ட குழு அலுவலகத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நாடத்தியுள்ளது. இத்தாக்குதலில் கட்டடத்தின் கண்ணாடிகள் பலவும் நொருங்கியுள்ளதுடன், அங்கு தரிந்துநின்ற பல வாகனங்களும் சேதமாகியுள்ளதாக தெரியவருகின்றது. காடையர்களின் தாக்குதலை எதிர்த்து அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் திருப்பித்தாக்கியபோது அவர்கள் பின்வாங்கிச் சென்றுள்ளனர்.
சம்பவ இடம்திற்கு விரைந்;த பொலிஸார் கலககாரர்களில் சுமார் 16 பேரைக் கைது செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது. கைது செய்யப்பட்டவர்களின் சிலர் தாம் அமைச்சர் மேவின் சில்வாவின் ஆதரவாளர்கள் என தெரிவித்துள்ளனர். சம்வத்தை தொடர்ந்து எதிர்கட்சி , ஆழும் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள் பலரும் அவ்விடத்திற்கு விரைந்துள்ளனர்.
இந்தியாவின் பாதுகாப்புக்கு தமிழீழமே தீர்வு!
21-ம் நூற்றாண்டை அணுகும் தற்போதைய உலகம் அடைந்த விஞ்ஞான ரீதியான முன்னேற்றங்களிலும் பார்க்க, அது எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் ஏராளம். இயற்கையால் ஏற்படும் அழிவுகள், விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததைவிட தீவிரமடைந்துள்ளன. புத்திஜீவிகள், பொருளாதார நிபுணர்கள், அரசியல்வாதிகள், சுற்றுச்சூழல் ஆர்வளர்கள் அனைவரும் அவற்றையெண்ணி அதிர்ச்சி, அடைந்துள்ளனர் என்றால் அது மிகையாகாது. மேற்குலக நாடுகளின் பொருளாதார வீழ்ச்சியும், இந்தியா, சீனா ஆகியவற்றின் வளர்ச்சியும் ஒரு சாராருக்கு மகிழ்ச்சியையும், பெருமையையும் அளித்தாலும், மற்றைய நாடுகளுக்கு அச்சத்தை உருவாக்கி வருகிறது என்பதை மறுக்க முடியாது. அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்த அணுசக்தி வல்லமை இன்று சீனா, இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து தாண்டி ஈரான், வட கொரியா ஆகிய நாடுகளின் கட்டுப்பாட்டில் வரும் வாய்ப்பில் உள்ளன. கணணியின் வளர்ச்சி இன்று ஒவ்வொரு நடுத்தர வசதியுள்ள வீட்டிலும் உணரப்படுவதால் உலகத்தின் தொடர்புவலைப்பின்னல் ஒரு மகோன்னத நிலையை அடைந்திருக்கிறது. இங்கு ஆராயப்படும் விடயம் 100க்கு 90 வீதம் ஓர் அரசியல் சார்பானதாக இருந்தாலும், அதைப்பாதிக்கக்கூடிய பல காரணிகள் உருவாகுவதைக் காணலாம். முக்கியமாக பொருளாதார, இராணுவ அரசியல் காரணிகள் இங்கு கவனிக்கப்பட வேண்டியதொன்று. இந்தியா தனது அண்டை நாடாகிய இலங்கையை, சுதந்திரமடைந்த அன்றைய தொடக்க காலத்தில் ஒரு சினேகித நாடாக நோக்கியிருக்கலாம். தற்போதய நிலையிலும்கூட இலங்கையை நேச நாடாக இந்தியா நோக்கவில்லை எனக்கூற முடியாது. ஆனால் துரதிர்ஷடவசமாக இலங்கையோ, இந்தியா தனது நேச நாடாக இருக்கவேண்டும் என அன்று தொடங்கி இன்றுவரை நினைத்ததாகச் சான்றுகள் இல்லை. சுமார் 5 இலட்சம் இந்தியர்களின் பிரஜாவுரிமையைப் பறிமுதல் செய்த இலங்கை, மிகுதியாகத் தங்கியிருந்தோர்களில் 40 விகிதத்தினர்க்கு மட்டுமே தனது குடியுரிமையை வழங்கியது. இந்திய-பாகிஸ்தான் யுத்தங்களிலும் இலங்கையின் எதிர் நிலைப்பாடு உலகறிந்த விடயம். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியாவின் பரம எதிரிகளான, பாகிஸ்தானுடன் பாரிய நட்பைக் கொண்டும் சீனாவைத் தனது ஞானபிதாவாகப் பூஜிக்கும் இலங்கையரசை வேறென்னவென்று கூறமுடியும்? இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் அதன் அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், மியன்மார், பங்களாதேஷ், இலங்கை ஆகிய நாடுகளினுள், தற்பொழுது, ஒரு நாடாவது இந்தியாவை ஆதரித்தோ அல்லது நட்புடனோ இருக்கிறதா என்றால் அதற்கு எதிரான பதில்தான் கிடைக்கும். சுருங்கக்கூறின் ‘பிச்சை வேண்டாம் நாயைப்பிடி’ என்பது போல அவை அனைத்தும் ‘பகை நாடுகளே’ என்று கூறின் அது மிகையாகாது. வாழ்க இந்தியாவின் இராஜதந்திரம்!
எது எவ்வாறாகினும் இத்தகைய இக்கட்டான நிலைமையில் இருக்கும் இந்தியாவில் அதன் உள்நாட்டிலேயே அல்கொய்டா அச்சுறுத்தல்களும், மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ஏற்படும் சீனாவின் ஆதரவுடன் கூடிய விடுதலை நோக்கிய எழுச்சிகளும், மத்திய அரசுக்கு ஒரு தலையிடியை ஏற்படுத்தி வருகின்றன. இப்படியான குழப்பநிலையில் ஈழத்தமிழினத்தின் விடுதலை வெற்றியடைந்துவிட்டால், இந்தியாவின் மற்றைய தேசிய இனங்களும் ஈழத்தமிழினத்தை பின்பற்றிவிடுவார்களோ என ஐயம் கொண்டு, ஈழதமிழின அழிப்புக்கு இந்தியா துணை போனது என்று கொள்ளலாம். இது இவ்வாறிருக்க, இத்தகைய ‘தற்காப்பு’ மனப்பான்மையுடன் தொடர்ந்து இந்தியாவால், ஈழத்தமிழினத்தை அலட்சியம் செய்ய முடியுமா என்பது இந்நேரத்தில் ஓரு சர்ச்சைக்குறிய விடயமாகிறது. இதற்கு முக்கிய காரணம் சீனாவின் பொருளாதார, இராணுவ வளர்ச்சியும், இந்தியாவைச் சூழ்ந்த பகுதிகளிலும், முக்கியமாக இந்து சழுத்திரத்திலும்;, சீனா திடிரெனச் செலுத்தும் ஆதிக்கமும் எனலாம். இந்தக் கோணத்தில், சீனாவின் ‘முத்துமாலை வியூகம்’ இராணுவ வட்டாரங்களில் தற்போது பலமாகப் பேசப்படும் ஒன்றாகும். அத்துடன், அம்பாந்தோட்டைத் துறைமுகமும், கச்ச தீவிலும் (பால தீவிலும் உட்பட) சீனாவின் ஆதிக்கமும் இந்தியாவின் இறையாண்மையைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. தமிழ் நாட்டின் சேது சமுத்திரத் திட்டத்தையே சீனாவின் நடமாட்டம் பாதிக்கலாமென ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த நிலைமை தொடருமானால் சீனாவின் ஆதிக்கம் பொதுவாக இந்தியா முழுவதையும் பாதிப்பதோடு, தமிழ்நாடு, கேரளம் ஆகிய கடல் சார்ந்த மாநிலங்களின் பாதுகாப்பையும் பாரிய அளவில் பாதிக்கும். இந்தியாவிற்கும், மற்றும் மேற்குலக நாடுகளுக்கும் தேவையான ஆப்பிரிக்க–தூரக் கிழக்கைத் தொடுக்கும் வழங்கற் பாதையானது (இந்து சமுத்திரம்), அவர்களின் எண்ணை, வாயு போன்ற முக்கிய எரிபொருட்களைக் கொண்டு செல்லத் தேவையானதாகும். இத்தகைய முக்கிய வழங்கற்பாதையின் ஆதிக்கத்தைச் சீனாவிடம் இழக்க யாரும் விரும்பமுடியாது. பரந்து விரியும் உலக வாணிபத்தில், மேற்கு நாடுகள்கூட இவ்விடயத்தில் கரிசனையாக இருப்பதைக் காணலாம். அதே சமயத்தில், சீனா இத்தகைய நடவடிக்கையில் மும்முரமாகச் செயற்பட வேண்டிய காரணங்கள் யாவென ஆராய்ந்தால், சில விடயங்கள் வெளிச்சத்திற்கு வரலாம். 1. பொருளாதார ரீதியில், சீனா உலகின் ஈடுஇணையற்ற நிலையில் உள்ளது. இதற்குக் காரணம், சீன மக்களின் விடா முயற்சியும், சிறந்த கல்வியும், மலிவான உற்பத்தித்திறனும் ஆகும். அத்துடன் சீனாவின் ஊழலற்ற அரசியல் நிர்வாகம் அந்நாட்டை ஒரு தனித்துவமான நிலைக்குக் கொண்டு செல்கிறது. இருப்பினும், அந்த பிராந்தியத்தில், தனக்கு ஆடுத்தப்படியாக இருக்கக்கூடிய நாடு இந்தியா என்பதால், பொருளாதாரத் துறையில் இந்தியா வலுவாக முன்னேறுவதைத் தடுத்தால், ஆசியாவில், உலகிலும்கூட சீனா ஒரு தனி உரிமையைப் பெறும் நிலை (ஆழnழிழடல) ஏற்படலாம். 2. ஆபிரிக்கா தூர கிழக்கு நாடுகளின் வழங்குப்பாதையான இந்து சமுத்திரத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம் சீனா உலகின் எண்ணை, வாயு ஆகிய எரிபொருள் சக்திகளின் வினியோகத்தைத் தனது கைக்குள் வைத்திருக்கலாம். 3. சீனா இந்தியாவுடன் பல வருடங்களாகத் தொடர்ந்து முறுகல் நிலையில் இருக்கும் அருணாச்சலப் பிரதேசம் போன்ற எல்லைப் பிரச்சனைகள் இன்னும் தீர்வின்றி சீனாவை உறுத்தி வருகின்றன. 4. பாகிஸ்தானுடன், இந்தியாவின் எதிர்போக்கான அணுகு முறைக்கு சீனாவும் பாகிஸ்தானும் கொண்டிருக்கும் நட்பு ஆசியா கண்டத்தில் ஓர் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. 5. திபேத் பிரதேசத்திலும் இந்தியாவின் நிலைப்பாடு சீனாவிற்கு ஏற்றதாக இருக்க முடியாது. 6. இந்தியாவின் அணு சக்தி முன்னேற்றம், சீனாவை (தான் ஒரு அணு சக்தி நாடாக இருந்த போதிலும்) ஓர் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டிய நிலையில் தள்ளும். 7. இலங்கையின் பொருளாதாரச் சீர்கேடு (விடுதலைப்புலிகளின் யுத்தத்தினால் ஏற்பட்டதால்)சீனாவை இந்தியாவுக்கு அண்மையில் சுலபமாக ஈர்க்க முடிந்தது. மேற்கூறிய காரணிகளைக் கருத்தில் கொள்ளும் சீனா, தனக்குச் சாதகமாக இத்தகைய ஆதிக்க நடவடிக்கைகளில் இறங்கியது வியப்பினை ஏற்படுத்த முடியாது. எனினும் சீனாவின் இந்த நடவடிக்கையை ஈடுசெய்ய இந்தியாவால் முடியுமா என்பதுதான் இந்திய அரசியல்வாதிகளை மட்டுமின்றி, மேற்குலக அரசியல்வாதிகளைக்கூட விழி பிதுங்க வைக்கும் கேள்வியாகும். இந்து சமுத்திரத்தைத் தக்க வைக்க வேண்டி வந்தால், இந்தியாவுக்கு, இலங்கையில் முழுதாகவோ அல்லது பாரிய ஒரு பகுதியிலோ பூரண ஆதிக்கம் தேவை என்பதனை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இந்தக் கோணத்தில் நோக்குமபோது, இலங’கைத் தீவில், தமிழீழக் கடற்பரப்பு மூன்றில் இரண்டு பகுதியை உள்ளடக்குகிறது என்பது முக்கியம். இலங்கை அரசை இனித் தனது கட்டுப்பாட்டிற்குள் நட்புரீதியாக ஆயினும் கொண்டு வருவது என்பது தற்போது இந்தியாவிற்கு குதிரைக் கொம்பு ஆகும். சீனாவின் பொருளாதார அழுத்தம் இலங்கையச் சீனாவுக்கு மீளா அடிமை ஆக்கிவிட்டதை உலகம் முழுவதுமே நன்கு அறியும். இந்த நிலையிலிருந்து இலங்கையை எவருமே மீட்க முடியாது. இன்று, இந்து சமுத்திரத்தின் விதி ஒரு நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கிறது எனக் கூறலாம். இந்தியாவின் தென்புறத்தில் உள்ள இலங்கை சீனாவின் கட்டுப்பாட்டில் நாளுக்கு நாள் விழுங்கப்படும் நிலையில், இலங்கைத் தமிழர் பிரச்சனையை அடிப்படையாகக் கொண்டு அதையொரு நுழைவாயிலாகப் பாவிக்கலாம் எனும் நப்பாசையில் சில சக்திகள் இருக்கலாம். இந்தியா கூட இந்த எண்ணத்திற்கு விதிவிலக்காக முடியாது. ஆனால், இதனை இராஜதந்திர முறையில் எவ்வாறு அணுகலாம் என்பதே ஒரு பொன்னான கேள்வியாகும். இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் முன், இந்தியா தனது ‘பழைய வெளிநாட்டுக் கொள்கைகளை’ அறவே கைவிட வேண்டும். தொட்டிலையும் ஆட்டி பிள்ளையைக் கிள்ளும் போக்குக்கூட இனிப் பயனளிக்காது போகலாம். காரணம், இந்தியா ஒரு சமஷ்டித் தீர்வினை தமிழர்களுக்குக் கொடுப்பதன் மூலம் சில பிரமுகர்களைத் திருப்திபடுத்தி இலங்கையரசின் அரைச்சம்மத்ததைப் பெற்றாலும் 1. அத்தகைய தீர்வால் தமிழ் மக்களுக்கு ஒரு போதும் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. 2. அது தமிழ் மக்களின் போராட்ட உணர்வினை முற்றாக மழுங்கடித்துவிடும் என்று திட்டவட்டமாக ஒருபோதும் கூறமுடியாது. இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் உயிர்த் தியாகத்தின் பின் ‘காலம் கடந்த சமஷ்டியை’ ஏற்பது, ‘மலையைக் கல்லி எலியைப் பிடித்தது’ போல் ஆகிவிடும். 3. இராஜபக்சே அரசு சொல்லளவில் சமஷ்டியை ஏற்றாலும், நடைமுறையில் அதை அமுல்படுத்துமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும். இராஜிவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தின் கதியை எல்லோரும் அறிவர். 4. இந்தியாவின் பழைய தமிழீழத்திற்கெதிரான பிடிவாதக் கொள்கைக்கு வலுச்சேர்பது என்பதே இதன் பலனாகலாம். ஆனால் இராஜதந்திர முறையில் போக்கு சரியானதா என நோக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு சமஷ்டி ஆட்சியோ, அல்லது சுயநிர்ணயமோ எழுத்தளவில் அப்படித் தீர்க்கப்பட்டாலும் கூட அது இந்தியாவின் பூகோள நிலைமையைச் சீர் செய்யுமா என்பதே முக்கியமாகும். ஏனெனில், இத்தகையத் தீர்வை இறுதியில் ஏற்கும் சிலர் இந்தியாவின் ‘கட்டுப்பாட்டில்’ இந்தியாவுக்கு ‘விசுவாசியாக’ இருந்தாலும், அவர்களுக்கு வழங்கப்பட்ட அரசியல் வலு இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையைப் பாதிக்க ஒருபோதும் முடியாது. ஒட்டுமொத்தமாக கிட்டத்தட்ட இலங்கையின் முழு ஆட்சியுமே இராஜபக்சேவினால் சீனாவுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கப்பட்ட நிலையில், இத்தகைய ‘பிச்சைக்கார அதிகாரத்துடன்’ தமிழ்த் தலைவர்களோ, தமிழ் மக்களோ, இந்தியாவையோ, இந்து சமுத்திரத்தையோ மீட்கவோ, கண்கானிக்கவோ ஒருபோதும் முடியாது. எனவே, ஈழத்தமிழ் மக்களுக்கு ஏதாவது அரைகுறைத் தீர்வைக் கொடுப்பதன் மூலம் இந்தியா தன்னைத்தானே ஏமாற்றினால் ‘தன் மூக்கு போனாலும் எதிரிக்கு சகுனப் பிழை’ என்ற கதை போலாகிவிடும். இதற்கு மாறாக ஏதோ ஒரு காரணத்தால் இந்தியா தமிழீழக் கொள்கையை அங்கீகரித்து, தமிழ் மக்களின் இனஅழிப்பை நிறுத்தி, ஒரு புதிய அரசியற் பாதையைத் திறப்பதாக வைத்துக்கொன்டால் அதன் பெறுபேறுகளைக் கீழ்கண்டவாறு நோக்கலாம். 1. தமிழீழத்திற்கு தனது சொந்த வான், காலால், கடற்படைகளை வைத்திருக்கும் உரிமை கிடைக்கும். 2. தமிழ் மக்களின் கல்வித்திறன் உலகம் முழுவதிலுமே நற்பெயர் பெற்றிருக்கும் நிலையில், சிறிய நாடாக இருந்தாலும் அது வலுவுள்ள தொழில்நுட்பம் சார்ந்த படைத்திறனை உடையதாக இருக்கும். 3. தனிநாடாக அங்கீகரிக்கப்பட்டதால், அதனுடன் நேசநாடுகளாகப் பல நாடுகள் கூட்டுச்சேர முன்வரும். 4. தமிழீழத் தனியரசால் மட்டுமே சேதுத் சமுத்திரத் திட்டத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும். 5. வடக்கே இருக்கும் தமிழ் நாடு, கேரளா ஆகிய கடல் எல்லையில் உள்ள மாநிலங்களின் பாதுகாப்புடன் இந்து சமுத்திரத்தை தமிழீழ அரசு இந்தியாவுடன் சேர்ந்து கண்கானிக்கும். 6. தமிழ் மக்களின் போர் வலிமையை உலக நாடுகள் அனைத்தும் கடந்த 30 வருடமாக நடந்த போரின் மூலம் அறிந்தமையால், சீனா போன்ற நாடுகள் (அணுச் சக்தியில்லாத) சிறிய ரகப் போரை இக்கடற்பரப்பில் தொடுக்க பின் வாங்கும் (உலக அழிவைத் தவிர்ப்பதற்காக, அணு ஆயுதங்களை வைத்திருக்கும் வல்லரசுகளும் நடைமுறையில் அவற்றைப் பாவிக்க மாட்டா). 7. இலங்கையின் கடலோரப் பகுதியில் மூன்றில் இரண்டை தமிழீழக் கடற்பரப்பு கொள்வதால், இந்து சமுத்திரத்தைக் கண்கானிப்பது தமிழீழ அரசிற்கு பெரிய பிரச்சனையாக இருக்க முடியாது. எனவே, இதனால் தென்னிந்தியக் கடற்பரப்பின் பாதுகாப்பும் உறுதிபடுத்தப்படும். 8. தமிழர்களின் பிரச்சனை முற்றாக தீர்க்கப்பட்ட நிலையில் மேற்கு நாடுகள் இலங்கை அரசியலில் அனாவசியமாகத் தலையிடும் வாய்ப்புகள் குறையும். 9. இந்தியாவைச் சூழ்ந்திருக்கும் பாகிஸ்தான், நேபால், பங்களாதேஷ், மியான்மார் ஆகிய ஒரு நாட்டையும் தனது நட்பு நாடாக இந்திய இராஜதந்திரத்தால் மாற்றமுடியாது. ஆனால், முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற பாரிய அழிவின் பின்னும் தமிழீழத்தை அங்கீகரிப்பதன் மூலம் இந்தியா தனது தென்பகுதியைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். இந்நடவடிக்கை தமிழகத்திலும் ஒரு நிரந்தர அமைதியை ஏற்படுத்த உதவும். 10. ஆசியா உபகண்டத்தில் நடைபெற்ற ஈழமக்களின் இனஅழிப்பைக் கண்டிக்காது ஆதரித்து வந்த இந்தியா, அதற்கேற்ற தகுந்த பரிகாரத்தை மேற்கொள்ளாவிடின் அது ஐ.நா.வின் நிரந்தர பாதுகாப்புச் சபைக்குள் நுழையும் வாய்ப்பையும் வலுவாகப் பாதிக்கலாம். எனவே, இந்தியா தனது சொந்த நலன் கருதியாவது, தமிழ் மக்களின் தமிழீழக் கொள்கையை பூர்த்திச் செய்வதே அதன் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தற்போது எஞ்சியுள்ள ஒரே வழியாகும். அதனையும் சீனா வடக்கு-கிழக்கு மாகாணங்களை ஆக்கிரமிக்கும் முன் விரைவுப்படுத்துவதன் மூலம் இதன் முழுப்பலனையும் அடைவதற்கு இந்தியாவிற்கு வாய்ப்பு உண்டு. முள்ளிவாய்க்காலின் அழிவும் பின்பும் உலகத் தமிழ் மக்கள் தமது வாக்கெடுப்பின் மூலம், தமிழீழக் கொள்கையை மீளுறுதி செய்ததோடு, உலகில் உள்ள 9 கோடி தமிழ் மக்களையும் ஒன்று சேர்க்கும் திராணியுள்ளவர்கள் என்பதை நிரூபித்திருக்கின்றார்கள். ஈழத்தமிழர்கள் இந்தியாவின் நலனுக்கு என்றும் எதிரானவர்கள் அல்ல. ஆனால், உலகில் எவருக்கும் தமது வாழ்வுரிமையை விட்டுக்கொடுக்க அவர்கள் தயாராக இல்லையென்பதைப் பல நாடுகள் உணர ஆரம்பித்துள்ளன. இந்தியாவும் இதை உணரும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பது உறுதி. (Courtesy:Pathivu)
போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணைக்குழு அமைப்பதில் பான் கீ மூன் உறுதி
சிறீலங்காவில் கடந்த வருடம் நடைபெற்ற போரின் இறுதிப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களின் துணையுடன் விசாரணைகளை மேற்கொள்ள ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் திட்டமிட்டுள்ளார்.
சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்த விசாரணைக்குழுவை அமைப்பது தொடர்பில் தான் அழுத்தங்களை மேற்கொள்ளப்போவதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளரை அண்மையில் சந்தித்த போது தெரிவித்துள்ளார்.
சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் மீறல்கள் குறித்து அனைத்துலக மனித உரிமைகள் அமைப்புக்கள் தெரிவித்து வரும் குற்றச்சாட்டுக்களை தான் புறக்கணிக்கப்போவதில்லை என பான் கீ மூன் நவநீதம்பிள்ளையிடம் தெரிவித்துள்ளதாக ஐ.நா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழு சுயாதீனமாக இயங்கிவருகின்ற போதும், சிறீலங்கா அரசு மீது காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நவநீதம்பிள்ளை பான் கீ மூனுக்கு அழுத்தங்களை மேற்கொண்டு வருகின்றார்.
இதனிடையே சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்து தனக்கு ஆலோசனைகளை வழங்கும் குழுவை அமைப்பதில் பான் கீ மூன் தீவிரமாக உள்ளதாகவும், அந்த குழுவில் இடம்பெறும் நிபுணர்கள் குறித்து நவநீதம்பிள்ளையுடன் அவர் பேச்சுக்களை மேற்கொண்டு வருவதாகவும் ஐ.நாவின் இணைப்பு பேச்சாளர் பார்ஹான் ஹாக் தெரிவித்துள்ளார்.
ஞாயிறு, 21 மார்ச், 2010
புத்திசாலிகள் ஏமாற்றுவதில்லை
இங்கிலாந்து பல்கலைக்கழகம் மனிதர்களின் முளைத்திறன் (ஐ.க்யூ பவர்) குறித்த ஆய்வில் ஈடுபட்டது. அப்போது பழக்க வழக்கங்களுக்கும், ஐ.க்யூ. திறனுக்கும் உள்ள தொடர்பை சோதித்தபோது புத்திசாலிகள் ஏமாற்றுவதை விரும்புவதில்லை என்று தெரியவந்தது.
ஆயிரக்கணக்கான டீன் ஏஜ் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் ஆய்வின்போது அனுபவ அடிப்படையில் சோதிக்கப்பட்டனர். அப்போது புத்திசாலிகள் (அதிகமான ஐ.க்யூ. திறன் பெற்றிருந்தவர்கள்) பிறரை ஏமாற்றும் எண்ணம் இல்லாதவர்களாக இருந்தனர். அவர்கள் திறந்த மனதுடன் எண்ணங்களை வெளிப்படுத்துபவர்களாகவும், மற்றவர்களில் இருந்து விதிவிலக்காக அவசியமற்றவற்றை ஒதுக்குபவர்களாகவும் இருந்தனர். பாலியல் ரீதியிலும் விதிவிலக்காகவே உள்ளனர்.
இந்த விஷயங்களில் புத்திக்கூர்மையுள்ள பெண்களுக்கு சம்பந்தமில்லை. அவர்களிடம் இருந்து சாதகமான எந்த தடயங்களும் கிடைக்கவில்லை.
புத்திக்கூர்மை உடையவர்கள் எண்ணங்கள் பரிணாம வளர்ச்சி பெற்று புதுமையான சிந்தனை உடையவர்களாக இருந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் திறந்த மனப்பான்மை உடையவர்கள் மற்றும் நாத்திகவாதிகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடும் சுறாவளி தாக்குதல்
வடகிழக்கு அவுஸ்திரேலியாவில் வீசிய கடும் சுறாவளி காரணமாக அங்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.அவுஸ்திரேலியாவின் ஆர்லி கடற்பகுதியில் உருவாகியிருந்த உல்யூ (Ului) புயல் இன்று காலை 200 கிலோ மீட்டர் வேகத்தில் கரையைக் கடந்துள்ளது.
புயல் கரையைக் கடக்கும் போது வீசிய சுறாவளிக் காற்றில் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. மரங்களும், மின் கம்பங்களும் முறிந்து விழுந்துள்ளன. கடற்கரையில் இருந்த பல படகுகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான 'கிரேட் பேரியர் ரீஃப்' எனும் இடத்தில் உள்ள சுமார் 60,000க்கும் மேற்பட்ட வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் ஆஸ்ட்ரேலிய அமைச்சர் நீல் ராபர்ட்ஸ் கூறியுள்ளார்.
தெளிவு இன்னமும் தேவை.............
யாழ் குடா நாட்டின் சில புத்தி சீவிகள், சம்பந்தன் தலைமையிலான குழு, சில ஊடகவியலாளர்கள் ,பத்திரிகை நிறுவனம் தம்மால் இயன்றளவு இணக்க அரசியலுக்கு விளக்கம் கொடுத்து வருகின்றனர். அதாவது தருவதை கேட்டு பெற்றுக்கொண்டு பிரச்சினை இல்லாமல் இர்க்க பார்ப்போம் என்பதற்குத்தான் எத்தனை நியாயப்பாடுகளை பொழிந்து தள்ளுகின்றன. இன்று ஒரு பத்திரிகையில் வெளிவந்த ஆசிரியர் தலையங்கமும் எதேதோ புள்ளி விபரங்களை போட்டு எழுதியுள்ளனர்.
அதில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தாயகம் பறிபோவதாகவும் அதனை காப்பாற்றத்தான் சம்பந்தரின் இணக்க அரசியல் என்றும் மறு வளமாக சம்பந்தர் சொல்வதன்படி செய்யாது போனால் அதாவது தமிழீழம் என்று புலம்பெயர்ந்தவர்களும், ஏனையோர்களும் உறுதியாக நிற்பதனால் தாயகம் முற்றாக பறிபோகும் என திருகோணமலை மாவட்ட இனவீதாசார மாற்றம் , கந்தளாய் கல்லோயா திட்டம் என்பவற்றை குறிப்பிட்டு காட்டுகின்றனர்.
அதாவது அவர்கள் குறிப்பிட்ட புள்ளி விபரங்கள் வருமாறு:
கந்தளாய், கல்லோயா, மகாஓயா, தீகவா பித் திட்டங்களை உருவாக்கி திருகோண மலை, அம்பாறை மாவட் டங்களில் சிங் களக் குடியேற்றங்களை உருவாக்கினர்.
கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடி யேற்றங்களை உருவாக்கிய அதேவேளை, சிங்களவர்களின் சனத்தொகை கிழக்கில் அதிகரிக்கும் வகையில் திருகோணமலை மட்டக்களப்பு மாவட் டங்களின் எல்லை களிலும் மாற்றங்களையும் உருவாக்கினர்.
மட்டக்களப்பு மாவட்டம் எவ்வாறு பிரிக்கப்பட்டு திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டம் உருவாக்கப்பட்டது என்ப தைப் பின்னர் பார்ப்போம்.
திருகோணமலை மாவட்டம் முல் லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கு எல்லை யான தென்னமரவாடியிலிருந்து மட்டக் களப்பு மாவட்டத்தின் மேற்கு எல்லை யான வெருகல் ஆறு வரை யான நீண்ட கரையோரப் பிரதேசமாகும். இதன் தெற்கு எல்லையாக அனுராதபுரம், பொலன்ன றுவை மாவட்டங்கள் உள்ளன.
1827ஆம் ஆண்டில் திருகோணமலை மாவட்டத்தில் 250 சிங்கள வர்கள் மட் டுமே வாழ்ந்தனர். அப்போது தமிழர்கள் 15 ஆயிரத்து 663பேராக வும், முஸ்லிம்கள் 3 ஆயிரத்து 245 பேராகவும் காணப்பட்ட னர். இம் மாவட்டத்தின் மொத்த சனத் தொகையில் தமிழர்கள் 81.76 வீதமாகவும், முஸ்லிம்கள் 16.9 வீதமாகவும், சிங்கள வர்கள் 1.3 வீதமாகவும் காணப்பட்டனர்.
1921ஆம் ஆண்டில் தமிழர்களின் சனத்தொகை 54.4 வீதமாக வீழ்ச்சி யடைந்த அதேவேளை, முஸ்லிம்க ளின் சனத்தொகை 37.6 வீதமாகவும், சிங்க ளவர்களின் சனத்தொகை 4.4 வீதமாக வும் உயர்வடைந்திருந்தது.
1971 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட சனத்தொகை முடிவுகள் சிங்களக் குடி யேற்றம் மற்றும் முஸ்லிம் களின் சனத் தொகை அதிகரிப்பு என் பனவற்றை தெளிவாகக்காட்டியிருக் கிறது. அந்த ஆண்டின் குடித்தொகை மதிப்பீட்டின்படி திருமலை மாவட் டத்தில் தமிழர்கள் (71 ஆயிரத்து 749 பேர்) 38.1 வீதமாகவும் முஸ்லிம்கள் (59 ஆயிரத்து 924 பேர்) 31.8 வீத மாகவும், சிங்களவர்கள் (54 ஆயிரத்து 744 பேர்) 29.08 வீதமாகவும் காணப்பட்டனர்.
திருகோணமலை மாவட்டத்தில் 1.3 வீதமாக இருந்த சிங்களவர்கள் கடந்த ஆண்டில் குடித்தொகை மதிப்பீட்டின் படி 30 வீதமாகவும், 16 வீதமாக இருந்த முஸ்லிம்கள் 46.5 வீதமாகவும் உயர்வ டைந்திருக்கிறார்கள். 81.76 வீதமாக இருந்த தமிழர்கள் 23.5 வீதமாக வீழ்ச்சி யடைந்திருக்கிறார்கள்.
இங்கு இவர்கள் குறிப்பிடும் புள்ளிவிபரங்கள் புலம்பெயர்மக்களும் தமிழீழம் என்று சொல்வதனாலோ அல்லது கடின போக்காளர்களினாலோ உண்டாகியதா? இந்த காலப்பகுதியில் தற்போது மீண்டும் இணக்க அரசியல், இந்தியா அனுசரணை, என்று சப்புக்கொட்டிக்கொண்டு மக்களை ஏமாற்றி சந்தர்ப்பவாத அரசியல் பேசும் தலைவர்கள் இருந்த காலத்திலேதான் நடந்தது. ஆகவே மேற்கூறப்பட்ட விடயங்கள் நடந்தேறிய வேளை இந்த தலைவர்களும் அவர்களை வால்பிடித்து எம்.பி பதவியினை பெற்று தமது வியாபாரத்தினை பெற துடிக்கும் முதலாளிகளின் குடும்பங்களும் என்ன செய்தார்கள்? இப்போ இந்தியாவின் உதவியுடன் தான் எல்லாவற்றையும் செய்யலாம் அல்லது தாயகம் பறிபோவதனை காப்பாற்றலாம் என்று கூறுகின்றவர்கள் அன்று இந்தியாவுடன் இப்போது இருந்ததனை விட அன்னியோன்னியமாக இருந்தவேளை ஏன் தாயகம் பறிபோவதனை தடுக்க முடியாது போனது.
தாயகம் பறிபோகும் வேளை இந்திய இலங்கை அரசியல் சூழல் எலியும் பூனையுமாக இருந்தவேளை புத்திசாலி தலைவர்கள் சாதித்து இருக்கலாம் அல்லவா?
சிங்கள அரசாங்கம் தான் நினைத்தவற்றை கச்சிதமாக செய்து வருகின்றது. அதனை தமிழர்கள் காலங்காலமாக எதிர்த்து வந்திருக்கின்றார்கள். சிங்கள குடியேற்றத்தினை ஆகவே யதார்த்தம் என்னவெனில் யாரும் எதுவும் செய்ய முடியாது. ஆனால் ஆயுத போராட்டத்தின் மூலம் குடியேற்றங்கள் ஓரளவு தடுக்கப்பட்டன மேலும் சில குடியேற்றங்கள் அகற்றப்பட்டன என்பதே உண்மை.
ஆகவே ஒவ்வொருவரும் தமது சுய நோக்கங்களுக்காக வரலாறுகளையும், தடங்களையும் பாவிப்பதனை நிறுத்திவிட்டு, குற்றம் சுமத்துவதனை நிறுத்தி ஒவ்வொருவரும் கூட்டாக சேர்ந்து எப்படி, எதனை செய்யலாம் என திட்டமிடவேண்டும். இல்லையேல் விட்டுவிடவேண்டும். திரும்ப திரும்ப ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி தமிழர்களுக்குள் தமிழர்கள் சண்டைபிடித்து எதிரிக்கு அனுகூலமான சூழல்களை ஏற்படுத்தி கொடுப்பதனை தவிர்க்கவேண்டும்.
ஒபாமா: உலகையும் கடைத்தேற்ற வந்த கறுப்புச்சூரியனின் அஸ்தமனம் ஆரம்பம்
அமெரிக்காவின் அமைதிப் புறா, பொருளாதார நெருக்கடியிலிருந்து அமெரிக்காவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகையும் கடைத்தேற்ற வந்த "மாற்றத்தின் நாயகன் , என்றெல்லாம் சித்திரிக்கப்பட்ட பராக் ஒபாமா, அமெரிக்க அதிபராகப் பதவியேற்று ஓராண்டு முடிந்து விட்டது. அவர் அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட போதும், தேர்தலில் வெற்றி பெற்று அதிபராகப் பதவியேற்ற போதும் அமெரிக்க ஊடகங்கள் அவரைத் தலையில் வைத்துக் கொண்டாடின. ஆம் நம்மால் முடியும்! என்ற அவரது தேர்தல் முழக்கத்தை ஒட்டு மொத்த அமெரிக்காவும் ஜபித்தது. அமெரிக்காவில் மட்டுமன்றி, இங்கேயும் சிலர் ஒபாமா காய்ச்சல் தலைக்கேறிச் சுற்றிக் கொண்டிருந்தனர். "புரட்சிப் புயல் வைகோ, ஒபாமாவைப்புகழ்ந்து ஒரு புத்தகத்தை எழுதி அதனை அவரிடமே கொடுத்து கையெழுத்து வாங்கி வந்தார். முதலாளித்துவ ஊடகவியலாளர்களும், கருணாநிதியின் வாரிசு கனிமொழி முதல் தலித்திய எழுத்தாளர்கள் வரை அனைவரும், கறுப்பின மக்களுக்காகப் போராடிய மார்டின் லூதர் கிங்கின் கனவு பலித்துவிட்டது எனக் கூறிப் புளகாங்கிதம் அடைந்தனர். ஆப்கானில் அமெரிக்கப் படையை திரும்ப அழைப்பார், ஈராக் போரை முடித்து அந்நாடு சுதந்திரமடையச் செய்வார், பொருளாதாரச் சீரழிவில் அனைத்தையும் இழந்து தவித்துக் கொண்டிருந்த அமெரிக்கர்களைக் காப்பாற்றுவார் என பலரும் நம்பிக்கையூட்டினர். ஆனால், இன்று ஒரு வருடம் முடிந்த பின்பு, இந்த நம்பிக்கைகள் அனைத்தும் பொய்த்துப் போய்விட்டது. இவரைப் பற்றி அமெரிக்க பத்திரிகைகள் கேலிச்சித்திரம் போடாத நாளே கிடையாது என்கிற அளவுக்கு அவர் காரியக் கோமாளியாகிவிட்டார். ""ஆம், நம்மால் முடியும்! என்கிற இவரது மந்திரச் சொல் துவங்கி, இவர் வாயைத் திறந்து பேசும் ஒவ்வொரு வார்த்தையும் கேலி செய்யப்படுகிறது. சமீபத்தில் ""வாஷிங்டன் போஸ்ட் என்ற பத்திரிகை நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் முக்கால்வாசி அமெரிக்கர்கள் ஒபாமாவின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்திருப்பது தெரியவந்துள்ளது. இதற்கு முன்பு எந்தவொரு அமெரிக்க அதிபரும் இவ்வளவு குறைவான மக்கள் ஆதரவைப் பெற்றதில்லை, ஜோர்ஜ் புஷ்ஷைத் தவிர. ஆப்கானில் செருப்படி வாங்கிக் கொண்டு புஷ் வெளியேறிய பின்னர், அதிபராகப் பதவியேற்றவுடன் ஒபாமா செய்த முதல் வேலை, ஆப்கானில் போரைத் தொடர்ந்து நடத்தப்போவதாக அறிவித்ததுதான். அது மட்டுமல்லாமல் ஆப்கானில் அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உத்தரவிட்டார். ஆப்கான் போரைப் பாகிஸ்தான் வரை நீடித்துச் சென்றார். ஒபாமாவின் இந்த இமாலயச் சாதனையைப் பாராட்ட நினைத்த நோபல் கமிட்டியினர் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்கிக் கௌரவித்தனர். ""நீங்கள் இதுவரை செய்த செயல்களுக்காக இந்த நோபல் பரிசு தரப்படவில்லை. இனிமேல் செய்யப்போவதற்காக முன்கூட்டியே உங்களுக்கு இந்தப் பரிசைத் தருகிறோம் எனக் கூறினார்கள் நோபல் கமிட்டியினர். எதிர்காலத்தில் செய்ய விருக்கும் "நல்ல செயல்களுக்காக நோபல் பரிசு பெற்ற நபர் உலக வரலாற்றிலேயே ஒபாமா ஒருவராகத்தான் இருக்கக்கூடும். இப்படி உலகைக் காக்க வந்த ஒபாமாவின் அடுத்த பணி, சொந்த நாட்டு மக்களைக் காப்பது பொருளாதாரச் சீரழிவில் சிக்கிய மக்களைக் காப்பாற்றுவதற்கு ஒபாமா கொண்டுவந்த தீர்வு "பெயில் அவுட் பேக் கேஜ் வீடிழந்து, வேலையிழந்து, இதுவரை சம்பாதித்தது அனைத்தையும் இழந்து நடுத்தெருவில் நின்ற ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களுக்கு ஒபாமா எதுவும் செய்யவில்லை. மாறாக, பொருளாதாரச் சீரழிவிற்குக் காரணமாக இருந்து, அதன் மூலம் பல லட்சம் கோடிகளைக் கொள்ளையடித்த முதலாளிகளுக்கு ""பெயில் அவுட் பேக்கேஜ் என்ற பெயரில், மக்களின் வரிப்பணத்தை வாரிக் கொடுத்தார்.வேலையிழப்பைத் தடுக்கப் போகிறேன் ஒருவாரத்தில் பல இலட்சம் வேலைகளை உருவாக்கப் போகிறேன் என ஒபாமா அளித்த வாக்குறுதிகளெல்லாம் வெற்று வாய்ச்சவடால்களாகப் போய் விட்டன. வேலையிழப்பு அங்கே தொடர்கதையாகிவிட்டது. 2010 ஆம் வருடம் பிறந்தது முதல் இதுவரை 20 வங்கிகளுக்கு மேல் அமெரிக்காவில் திவாலாகிவிட்டன. மருத்துவமனைகள் முற்றிலும் தனியார்மயமாகி விட்ட அமெரிக்காவில், மருத்துவத்துக்கு ஆகும் செலவுகள் மிக மிக அதிகம். மருத்துவக் காப்பீடு இல்லாமல் போனால் சாதாரண வியாதிக்கே கூட மக்கள் தங்களது சேமிப்பு முழுவதையும் இழக்க வேண்டிவரும். அமெரிக்காவில் மருத்துவக் காப்பீடு இல்லாத மக்களின் எண்ணிக்கை 4 கோடிக்கும் அதிகம். மருத்துவ வசதிகள் மறுக்கப்பட்டவர்களாக உள்ள இவர்களைக் காப்பாற்றுகிறேன் என்ற பெயரில், மருத்துவ நலச் சீர்திருத்த மசோதா ஒன்றை ஒபாமா கொண்டு வந்தார். இது “உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞரின் காப்பீட்டுத் திட்டம் போன்றதொரு மோசடித்திட்டம் என்பது வெகு சீக்கிரத்தில் அம்பலமாகி விட்டது. இவ்வாறு தொடர்ந்து சரிந்து வந்த தனது பிம்பத்தை முட்டுக் கொடுத்து தூக்கி நிறுத்த ஒபாமா தேர்ந்தெடுத்த வழி நமது முன்னாள் அரசவைக் கோமாளி அப்துல் கலாமின் வழி!; அது வேறொன்றும் இல்லை நாடு முழுவதும் பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளுடன் உரையாடுவது, அவர்களுக்கு அறிவுரை சொல்வது. ஆனால் ஒபாமாவின் அறிவுரைகளை ஆரம்பத்தில் பொறுத்துக்கொண்ட மாணவர்கள், இப்போது ஒபாமா பேசுகிறார் என்றாலே ஓடி ஒளிந்து கொள்ள ஆரம்பித்து விட்டனர். இதற்கிடையே, இஸ்லாமியர்களின் ஆதரவைப் பெற அவர்களுக்குக் கரிசனமாகப் பேசுவதை குரானிலிருந்து வாசகங்களைப் பயன்படுத்துவது எனப் பல வேலைகளைச் செய்து பார்த்தார். ஆனால், அவையாவும் பலிக்காமல் போய்விட்டன. இவற்றின் எதிரொலியாக அண்மையில் மாசாசூட்ஸில் நடந்த செனட்டருக்கான இடைத் தேர்தலில் ஒபாமா கட்சி படுதோல்வியடைந்தது. அதிகம் அறிமுகமில்லாத குடியரசுக் கட்சியின் வேட்பாளர் பெற்றுள்ள அமோக வெற்றி, இது நம்ம ஆளு! என்று ஒபாமாவை ஆதரித்து நின்றவர்களின் முகத்தில் கரியைப் பூசியுள்ளது. அண்மையில் ஹெய்டி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கப் பேரழிவால் பல்லாயிரக்கணக்கான கறுப்பின மக்கள் கொல்லப்பட்டு, பலர் படுகாயமடைந்து தத்தளித்துக் கொண்டிருந்த போது, அருகிலுள்ள அமெரிக்க ஒபாமா அரசு உடனடியாக உதவ முன்வரவில்லை. வெகுதொலைவில் உள்ள ஐஸ்லாந்து நாடு தான் உடனடியாக வந்து உதவியது.இப்போது ஆக்கிரமிப்பு நோக்கத்துடன் அமெரிக்கத் துருப்புகள் அந்நாட்டில் நிவாரண உதவி என்ற பெயரில் குவிக்கப்பட்டுள்ளன. ஒபாமா செய்த ஒரே நல்ல காரியம் ஒடுக்கப்பட்ட இனத்தின் அரசியல் வாதியால் ஏகாதிபத்தியத்தின் கோர முகத்தை மாற்றியமைத்துவிட முடியாது, அதன் தன்மையை தனிமனிதரின் ஆளுமை மயிரளவும் மாற்றி விடாது என்பதை நிரூபித்துக் காட்டியதுதான். ஒரு அரசியல் தலைவர், எந்த வர்க்கத்துக்குச் சேவை செய்கிறார், அவர் எந்த வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதி என்று பரிசீலிக்காமல், சாதிமதஇன அடிப்படையில் பிழைப்புவாதத்துடன் ஆதரிப்பது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்பதை ஒபாமா எதிர் மறையில் நிரூபித்துக் காட்டிவிட்டார்.கடந்த ஓராண்டில் ஒபாமாவின் நிலைப்பாடும் செயல்பாடும் புஷ் காலத்திய செயல்பாடுகளிலிருந்து வேறுபடவில்லை. அமெரிக்க அதிபராக புஷ் இருந்திருந்தால் அவர் என்னவெல்லாம் செய்திருப்பாரோ, அதையேதான் ஒபாமாவும் செய்துள்ளார்.தலித்தியத் தலைவி மாயாவதியைப் போல், ஆளும் வர்க்கங்களுக்குச் சேவை செய்து தனது முகத்திரையை வெகுவிரைவிலேயே கிழித்துக் கொண்ட கறுப்பின அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு நாம் நன்றி சொல்லத்தான் வேண்டும். நன்றி:infotamil
இவர்களிடமா எமக்கான தீர்வைக் கேட்டு நிற்கிறோம்.....?
மகான்களும் மகாத்மாக்களும் வாழ்ந்த காலம் போய் இன்று கொலை வெறி பிடித்த மனித நேயம் சிறிதும் அற்றவர்களாக. இந்தியா அஸ்ஸாம் மாநிலத்தில் தம்மை தாழ்த்தப் பட்ட மக்களாக அங்கீகரிக்குமாறு இந்திய அரசை வேண்டி ஊர்வலமாக வந்த அஸ்ஸாம் ஆதிவாசி மக்களுக்கு நடந்த கதியைப் பாருங்கள். உரிமை கேட்டு வந்தவர்களை துடி துடிக்க அடித்துக் கொள்வதை இந்திய காவல்துறையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கிறது. இளம் பெண்ணை நிர்வாணமாக்கி நாடு தெருவில் ஓட விடுகிறார்கள். இவர்கள் தான் இந்தியர்கள்... .இன்றைய இந்திய சமுதாயத்தை தாங்கி நிற்பவர்கள். அஹிம்சையும் அமைதிப் போராட்டமும் இவர்களிடம் எடுபடுமா...? இது தான் இந்தியாவா...? உரிமை கேட்டு வந்தால் இப்படித் தான் நடக்குமா....? இது 2007 இல் நடந்தேறிய அக்கிரமம் இதற்கான விசாரணையோ நீதியோ கிடைத்ததாக இது வரை அறிய முடியவில்லை. நடக்கும் கொடுமைகளை காண கீழுள்ள இணைப்பை அழுத்தவும்...
http://www.youtube.com/watch?v=OVReet6b2ks&feature=player_embedded
http://www.youtube.com/watch?v=OVReet6b2ks&feature=player_embedded
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தூதுவர்களுக்கு விருந்துபசாரமொன்றை அளித்துள்ளார்- அதன் பின்னணி என்னவாக இருக்கும்....?
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பணடாரநாயக்க ஐந்து நாடுகளைச் சேர்ந்த தூதுவர்களுக்கு விசேட விருந்துபசாரமொன்றை வழங்கியுள்ளார்.
சந்திரிக்காவின் சொந்த ஊரான ஹொரகொல்லவில் இந்த விருந்துபசாரம் இடம்பெற்றுள்ளது.
ஐந்து நாடுகளைச் சேர்ந்த ராஜதந்திரிகைளை சந்திரிக்கா இந்த பகல்போசன விருந்துபசாரத்திற்காக அழைத்திருந்தார்.
இதனை ஒர் நட்பு ரீதியான சந்திப்பென அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன், அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள் இதில் கலந்து காண்டனர்.
பிற்பகல் 12.30 முதல் மாலை 5.00 மணிவரை இந்த விருந்துபசாரமும், கலந்துரையாடலும் நீடித்துள்ளது.
வெள்ளி, 19 மார்ச், 2010
திகி்லில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள்
தற்கொலைகள் பற்றி மெதுவான குரலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கதைத்தார்கள். இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பையன் ஒருவன் தனது குடும்பத்தினரையும் இரண்டு கால்களையும் இழந்திருந்தான். பெண்ணொருவர் தனது குடும்பத்தை இழந்திருந்தார்.
இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த முகாம்களிலிருந்து அவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குத் திரும்பியிருந்தனர். ஆனால், நீண்ட காலம் அவர்கள் இருக்கவில்லை. “ஏனையவர்கள் போன்று எம்மால் வாழமுடியாது…” இவ்வாறு அவர்கள் எழுதிவைத்த தற்கொலைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 5 ஆயிரம் மாணவர்கள் உள்ளனர். அவர்களில் சுமார் 345 மாணவர்கள் தமது வாழ்க்கையைக் மீளக் கட்டியெழுப்புவதற்கு முயற்சிக்கின்றனர். விடுமுறையில் வீடுகளுக்குச் சென்றிருந்த போது, அவர்கள் மோதலின் இடையே சிக்கியிருந்தனர். யாழ்ப்பாணத்திற்கு அவர்களால் திரும்பிச் செல்லமுடியவில்லை. அந்த மாணவர்களில் சுமார் 12 பேர் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையுடன் கதைத்தனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்திலும் அதற்கு வெளியேயும் கடந்த வாரம் அவர்கள் இந்துஸ்தான் டைம்ஸுடன் கதைத்ததாக சுதிர்த்தோ பற்றா நோபிஸ் என்ற நிருபர் அந்தப் பத்திரிகையில் எழுதியுள்ளார்.
அப்பத்திரிகையில் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
2007 – 2008 காலப்பகுதியில் இடம்பெற்ற இடப்பெயர்வுகள் இரவு, பகலாக பதுங்கு குழிக்குள் கழித்த நாட்கள், யுத்த விமானம், ஆட்லறி ஷெல்கள் என்பவை யுத்தத்தின் போது கிரமமாக தாக்குதல் நடத்தியமை, குடும்ப உறுப்பினர்களை இழந்தமை போன்ற திகில் நிறைந்த சம்பவங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். சில பையன்கள் புலிகளினால் படையணிக்குச் சேர்க்கப்பட்டு 2 மாதகாலப் பயிற்சி வழங்கப்பட்ட பின் அவர்களுக்கு ஏ.கே.47 ரக துப்பாக்கி கொடுக்கப்பட்டது. புலிகளின் ஆட்சேர்ப்பிலிருந்து தப்புவதற்காக சில பெண்கள் திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்றுள்ளனர். நந்து என்ற பெண் கூறுகையில்;
புலிகளின் ஆட்சேர்ப்பிலிருந்து தப்புவதற்கு ஒன்றில் திருமணம் செய்திருக்க வேண்டும் அல்லது காயமடைந்திருக்க வேண்டுமென்று தெரிவித்தார். அவருக்கு பிள்ளை ஒன்று உள்ளது. “நாங்கள் மரணத்தின் நிழலில் வாழ்ந்தோம். ஒருநாள் முள்ளிவாய்க்காலில் ஆஸ்பத்திரி மீது ஷெல் வந்து விழுந்தது. நாம் இருந்த பதுங்கு குழிக்கருகே அச்ஷெல் விழுந்தது. 60 க்கு மேற்பட்டவர்கள் இறந்துவிட்டனர் என்று யசோதா என்ற பெண் கூறினார். கலை பீடத்தைச் சேர்ந்த அந்த மாணவி ஒரு குழந்தையின் தாயாவார்.
2009 மே இல் யுத்தம் முடிவடைந்த பின்னர் மாதக்கணக்காக அரசாங்கத்தின் முகாம்களில் இந்த மாணவர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டனர். பல்கலைக்கழக அதிகாரிகள் அதன் பின் அவர்களை விடுவித்திருந்தனர். இந்த மாணவர்களில் அநேகமானவர்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாகும். யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இந்த இரண்டு மாவட்டங்களும் இடிபாடுகள் நிறைந்த இடங்களாக மாறிவிட்டன. விடுதலைப் புலிகளின் உறுப்பினராக இருந்த சந்தேகத்தில் மாணவர் ஒருவர் இராணுவ தடுப்பு முகாமில் இருந்திருக்கிறார். மாதக்கணக்காக தான் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் தலைகீழாகக் கட்டி வைக்கப்பட்டிருந்ததாகவும் பிளாஸ்டிக் பைகளால் தனது தலை கட்டப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.
அதன் பின் ஜோன் என்பவர் மற்றொரு புனர்வாழ்வு முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு இலங்கைக் கொடியை எவ்வாறு ஏற்றுவது என்பது தொடர்பாக அவருக்குப் படிப்பிக்கப்பட்டது. அவர்கள் எமது மனதை மாற்ற விரும்பினார்கள் என்று அவர் கூறினார். நாதன், அக்பர் போன்ற பல மாணவர்களுக்கு ஷெல் காயங்கள் ஏற்பட்டன. பாரிய சத்தம் அதிகளவு வெளிச்சம் என்பனவற்றால் நாதன் அவ்வப்போது நினைவை இழந்துவிடுகிறார்.
இந்த மாணவர்களின் பலரின் கனவானது வெளிநாட்டிற்குச் சென்று சிறப்பான வாழ்க்கையை நடத்துவதாகும். ஆனால், இழந்த வருடங்களை அவர்களால் மீளப் பெற்றுக்கொள்ள முடியுமா?
இரண்டு மூன்று வருடங்களாக தமது கல்வியாண்டுகளை அவர்கள இழந்துவிட்டனர். ஆனால், அவர்கள் கெட்டிக்காரர்கள். கடுமையாகப் படிக்க முயற்சிக்கின்றனர் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கம் தெரிவித்தார்.
கடந்த காலத்தைக் கடந்து எதிர்காலத்தை நோக்கி முன்நகர்ந்து சென்றால் அவர்களால் கல்வியில் இழந்த வருடங்களை மீளப்பெற்றுக்கொள்ள முடியும்.
(சகல மாணவர்களின் பெயர்கள் இங்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.)
மகிந்தாவின் பிறவி குணம் ......
ஆழ குழி தோண்டி போட்டு மறைத்தாலும் அதிலிருந்து ஒருநாள் உண்மை வெளிவரும். உண்மையை மறைக்க முடியாது. இரண்டும் இரண்டும் நான்கு என்றால் நான்குதான். இதில் கூட்டியோ குறைத்தோ சொல்வதற்கு இதுவரையில் புதிய கண்டுபிடிப்போ, அறிவியல் ஆதாரங்களோ இல்லாத நிலையே நீடிக்கிறது. ஆகவே, உண்மை என்பதும், நான்கு என்ற அடிப்படையிலே தான் இருக்குமே தவிர, அது மூன்றாகவோ, ஐந்தாகவோ மாற முடியாது. சில முட்டாள்கள் அப்படி மாற்றுவதற்காக பெரும் முயற்சி எடுக்கிறார்கள்.
பொட்டு அம்மான் இறந்துவிட்டார் என்பது உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக அடுக்கடுக்காய் பொய்களை அவிழ்த்துவிடும் இலங்கை அரசு, அதன் தலைமை இறுதியாக தம்மிடம் இந்த ஆயுதங்கள்தான் இருக்கிறது. அது கனரக ஆயுதங்களைவிட மிகவும் ஆற்றல் வாய்ந்தது. அது, பொய்யாயுதம். அதை வைத்துக் கொண்டு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்துமுடிக்க இலங்கை அரசு தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இன்று இலங்கைக்கு நேரிடை நின்று அதன் அநியாயங்களை தட்டிக்கேட்க, சரியாக தலைமைக் குழு இல்லாத காரணத்தினால் தமக்கு தெரிந்த வகையில் மட்டும்தான், அல்லது தாம் விரும்புபவை மட்டும்தான் உண்மை என்று உலகையே நம்ப செய்ய பல்வேறு முயற்சிகளை, பலவாறு செய்து கொண்டிருக்கிறது.
அதன் ஒரு சான்றுதான் பொட்டு அம்மான் குறித்த செய்தி. இறந்தவரின் உடல் கிடைக்கவில்லை. சந்தேகத்தின் பேரில் அது கிடைக்கலாம், கிடைக்காமல் போகலாம். ஆகவே, இறந்தாரா, இல்லையா என்பதை காலம் முடிவு செய்யட்டும் என்று காத்திருக்கலாம். ஆனால் மகிந்தாவின் அரசு அப்படி இல்லாமல் உலக காவல்துறையினருக்கு பொட்டு அம்மான் இறந்து விட்டதாக செய்தி தருகிறது. உலக காவல்துறையினருக்கு அவர் உயிருடன் இருப்பதாக உண்மை தெரிகிறது. ஆகவே அந்த உண்மையை மறைக்க, அவரை தேடுவோர் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என இலங்கை அகில உலக போலீசை கேட்டுக் கொண்டிருக்கிறது.
உண்மையான ஒன்றை அல்லது தெரியாத ஒன்றை ஏன் இவ்வளவு அழுத்தம் கொடுத்து மறைக்க முயற்சிக்க வேண்டும் என்கிற அடிப்படை வாதம்கூட இலங்கையிலுள்ள சிங்கள பாசிச வெறியர்களுக்கு இல்லாமல் போனதற்கு என்ன காரணம் என்றால், அவர்களுக்குள் புதைந்துள்ள முட்டாள் தனமும், ஆதிக்க வெறியும்தான் என்பதை மறுத்துறைக்க முடியாது.ஒரு இனத்தின் இறையாண்மையை, தனித்தன்மையை வேரோடு அழிக்க முனைப்புக் காட்டிய சிங்கள அரசு, தமது நட்பு நாடாக தேர்வு செய்தது இந்தியாவை. இன்று இந்தியா, இலங்கையில் தொடர் வண்டிக்கான பணி திட்டங்களை மிக செம்மையாக நிறைவேற்றி வருவதாக செய்திகள் சொல்கிறது. இதை மகிந்தாவே ஒப்புக் கொள்கிறார்.
ஆனால் இலங்கை எமக்கு ரயில் திட்டத்திற்கான பாதையை அமைத்துத் தருகிறது என்பதற்காக நாம் எந்த நிலையிலும் இந்தியாவிற்கு அடிமை இல்லை என்பதை மிகவும் நாசுக்காகவும் வெளிப்படுத்துகிறார். மேலும் அவர் கூறும்போது, இலங்கையை ஒரு நாடு மற்றொரு நாட்டிற்கு எதிராக பயன்படுத்த நான் அனுமதிக்க மாட்டேன். அது இந்தியாவோ இலங்கையோ எதுவானாலும் சரி என்பதற்கு அழுத்தம் தருகிறார். ஒரு உண்மையை அவர் அப்பட்டமாக ஒப்புக் கொள்கிறார், நாம் வேறொரு நாட்டிலிருந்து இனி ஆயுதம் கொள்முதல் செய்வதில்லை. காரணம், போதிய ஆயுதங்கள் தம்மிடம் குவிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் அது.
ஆக, தேவைக்கு அதிகமாக ஒரு நாட்டின், அந்த நாட்டு மக்களின் குருதி வடித்த பணத்திலே ஆயுதங்களை வாங்கிக் குவிப்பது அடக்குமுறை, ஆணவம், ஆதிக்கம் என்கிற எல்லையை தாண்டி ஒரு மாபெரும் மனிதநேயமற்ற ஆட்சியை அங்கே மகிந்தா நிறுவி இருக்கிறார் என்பது வெளிப்படையாக தெரிகிறது. அப்படி அடக்குமுறையான ஒரு ஆட்சி அங்கே நீடித்திருக்கிற காரணத்தினால்தான், அதன் வெளித்தோற்றம் மட்டுமல்ல, உள்ளடக்கமும் மிகவும் கமுக்கமாகவே செயல்படுவதை காணமுடிந்தது. மகிந்தா எந்த அளவிற்கு தமது ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறார் என்றால், இந்த ஆட்சி கட்டிடம் கவிழாமல் இருக்க யாரையும் கவிழ்க்க அவர் தயாராக இருக்கிறார். யாரையும் கொல்ல அவர் எப்போதும் தயார் நிலையில்தான் இருக்கிறார். தம்மை எதிர்ப்பவர்கள் இருக்கக்கூடாது என்கிற ஆதிக்க மனப்போக்கிலே தான் அவருடைய நடவடிக்கைகள் அமைந்திருக்கிறது என்பதற்கான, அடுக்கடுக்கான காரணங்களை நாம் சொல்லிக் கொண்டே போகமுடியும்.
ஆனால் குறிப்பான ஒரு காரணம் மகிந்தா, சரத்தை சிறையில் அடைத்தது. சிறையில் அடைத்ததோடு அவர் பொது நீதிமன்றத்திலே வழக்கு நடத்தி, விடுவிப்போ, தண்டனையோ கொடுத்திருக்கலாம். ஆணவத்தின் உச்சமாக அவர் சொல்கிறார், ”சரத்பொன்சேக-வை நான் மன்னிக்க மாட்டேன்” என்று. ஆக, சிங்கள நாட்டிலே சட்டத்திற்கோ, ஆட்சி அமைப்பிற்கோ எந்தவித அதிகாரமும் இல்லை என்பதை அவர் அழுத்தம் திருத்தமாக சொல்கின்றார். சிங்கப்பூர் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்த நேர்காணலில், ”சரத்தை முட்டாள் என்று கடுமையாக வர்ணித்திருக்கிறார். அவர் படிப்படியாக சொல்லும்போது, சரத் 2009 நவம்பர் 16ஆம் தேதி இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள அதிபர் அலுவலகத்தில் இதோ, இந்த இடத்திலேதான் எனது வலதுப்பக்கம் அமர்ந்திருந்தார். நான் அவரிடம் பலமுறை கேட்டேன், தேர்தலில் போட்டியிட விருப்பமா? என. அவர் இல்லையென மறுத்துவிட்டார். நான் நினைத்திருந்தால் அவரை பணியிலிருந்து விடுவிக்காமல், அவர் தேர்தலின் பக்கமே வராமல் செய்திருக்க முடியும். ஆனால் அவர் கடைசிவரை என்னை ஏமாற்றினார். ஆகவே இனி நான் அவரை மன்னிக்க மாட்டேன்” என்று ஆதங்கப்பட்டிருக்கிறார்.
மேலும், மகிந்தா கூறும்போது, ”அரசியல் வேறு, ராணுவம் வேறு என்று நான் சரத்திற்கு அறிவுரை கூறினேன். அரசியலில் எதுவும் நடக்கும். நாம் நினைத்தது நடக்காது என்றெல்லாம் சொன்னேன். ஆனால் அதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை” என்று மேலும் தம்முடைய எண்ண குமுறல்களை வெளிப்படுத்தியிருக்கிறார். அதைவிட ஒரு கேவலம், இந்த நாட்டின் இறையாண்மை, இந்த நாட்டு மக்களின் பன்முகத்தன்மை, அவர்களின் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு இவைகளையெல்லாம் கடந்து, மகிந்தா சொல்கிறார், இந்த ராணுவ சட்டங்கள் இந்தியாவிலும், இலங்கையிலும் பிரிட்டிசால் ஏற்படுத்தியவை. இதுவரை அச்சட்டங்கள்தான் நடைமுறைப்படுத்தப் பட்டுக் கொண்டு இருக்கிறது. இதை யாராலும் மாற்ற முடியாது என்பதை கூறுவதின்மூலம் அவர் ஒரு மறுகாலனியின் அடிமை என்பதை தமது ஒப்புதலாக வழங்கியிருக்கிறார்.
இந்தியாவிலும், ரௌவ்ளட் போன்ற மிக கடுமையான அடக்குமுறை சட்டங்கள் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின்போது தமது நாட்டின்மீது திணிக்கப்பட்டது. அதே அடக்குமுறை சட்டங்கள்தான் இன்று வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு, சொந்த மக்களை அடக்குமுறை தன்மைக்கு அழைத்துச் செல்கிறது. இந்த நிலைப்பாட்டை உடைத்தெறிய மக்கள் திரள் ஒருநாள் எழுந்து நிற்கும். இதை எத்தனை பெரிய ஆற்றல் வாய்ந்த, கடுமையான அடக்குமுறையாளர்கள் வந்தாலும் தடுத்து நிறுத்த முடியாது. இந்தியாவானாலும், இலங்கையானாலும் இதுதான் உண்மை. காரணம், அடக்குமுறையாளர்கள் வெற்றிப்பெற்றதாக இதுவரை வரலாறு இல்லை. இனி ஒருபோதும் அப்படிப்பட்ட வரலாறு வரப்போவதும் இல்லை.
வரலாற்று நாயகர்கள் எல்லாம் அடிமை மக்களின் அணியில்தான் அணிவகுத்து இருந்தார்கள். அவர்கள் ஒருபோதும் அடக்குமுறையாளர்களின் பக்கத்தில் நின்றது கிடையாது. ஆகவே ஒரு காலத்தில் தமிழீழம் விழித்தெழும். அது மிக அருகாமையில்தான் இருக்கிறது. அதேபோன்று, சிங்கள பாசிச வெறியும் துடைத்தெறியப்படும். சிங்கள மக்களே அணித்திரண்டு அதை உடைத்தெறிவார்கள். அதற்கான கட்டமைப்பைத்தான் மகிந்தா அரசு உருவாக்கிக் கொண்டிருக்கிறது. உலகெங்கும் தமது ஆதிக்கத்தின்கீழ் வரவேண்டும் என்பதற்காக அடக்குமுறையாளன் இட்லர் ஜெர்மானிய மக்களை இனிவெறியூட்டி, படைப்படையாய் அணிவகுக்கச் செய்தான். ஆனால் அவனை வீழ்த்த செஞ்சேனை வீறுகொண்டெழுந்தது.
எப்படி அடக்குமுறையாளன் இட்லர் ஐரோப்பிய ஒன்றியத்தையே அழித்தொழிக்க முனைந்துபோய், தாம் அழிந்துபோனானோ, அதேபோன்று தமிழீழ அரசின் தமிழர் படையும் ஒருநாள் உயிரோட்டோத்துடன் அடக்க முடியா ஆற்றலோடு மீண்டும் சமர் புரிய வரும். அந்நேரத்திலே இட்லருக்கு நிகழ்ந்த அதே நிகழ்வு மகிந்தாவுக்கு ஏற்படலாம். நாம் செய்தி சொல்கின்ற இந்தநேரத்தில், பாவம் சரத்திற்கு ஒரு கதையும் சொல்லியிருக்கிறோம்.
ஒரு நாட்டில் யானையும், நரியும் நண்பர்களாக இருந்தது. காட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டதால் நரி சொன்னது, பக்கத்து ஊரில் நல்ல வளமான கரும்புத் தோட்டம் இருக்கிறது. கரும்புதான் உங்களுக்குப் பிடிக்குமே? வாருங்கள். நாம் சேர்ந்தே போய் சாப்பிடுவோம் என்று. யானையும் நரியின் பேச்சைக் கேட்டு காட்டைக் கடக்க முயன்றது. வழியில் ஓர் பெரிய நீரோடை. நரியைப் பார்த்து யானை சொன்னது, இந்த நீரோடையை நான் கடந்து விடுவேன். உன்னால் கடக்க முடியுமா? என்று. நரி சொன்னது, நான் உன் முதுகின்மீது ஏறி அமர்ந்து கொள்கிறேன். நீ ஓடையை கடந்தவுடன் இறங்கி கொள்கிறேன் என்று கூறியபடி யானையின் மீது நரி அமர்ந்துகொண்டது. யானையும் ஓடையை கடந்தது.
ஓடையை கடந்துபோய், கரும்பு தோட்டத்திலே உள்ள கரும்பை முடிந்தவரை யானையும் சுவைத்தது. நரியும் கூடி கும்மாளம் போட்டது. சற்று நேரத்திற்கெல்லாம் நரி மிக வேகமாக ஊளையிடத் தொடங்கியது. யானைக்கு ஒன்றும் புரியவில்லை. நரியின் ஊளைச் சத்தத்தைக் கேட்ட ஊர் மக்கள் ஒன்றுகூடி, கையில் கிடைத்த கல், கம்புகளைக் கொண்டு எறிந்தார்கள். ஊருக்குள் நரி வந்துவிட்டதே என்று. நரி தந்திரமாக ஓடி ஒரு புதருக்குள் மறைந்து கொண்டது. யானை பாவம். பருத்த உருவம் அல்லவா? அது கல்லின் அடிமையிலும், கட்டையின் அடியையும் தம் மேல் காயம் பட்டு, அதுவும் ஓடி ஒளிந்தது. ஊர்மக்கள் சரி, இரண்டும் ஒழிந்தது என்று நினைத்து திரும்பி சென்றார்கள்.
நரி திரும்ப வந்தது. யானை கேட்டது, ஏன் ஊளையிட்டாய். நீ ஊளையிட்டதால்தானே ஊர் மக்கள் கூடினார்கள் என்று. நரி சொன்னது, என்ன செய்வது நானும் அடக்கத்தான் நினைக்கிறேன். ஆனால் வயிறு நிறைய சாப்பிட்டு விட்டால் எனக்கு ஊளையிட வேண்டும்போல் இருக்கிறது. நானும் ஊளையிடுகிறேன். இது என் பிறவி குணம், மாற்றமுடியாது என்று சொன்னது. யானை நினைத்துக் கொண்டது, இப்படி கேடு கெட்ட பிறவி குணம் கொண்ட ஒருவனுடா நான் இத்தனை நாளும் நட்புக் கொண்டேன். அதற்காக நான் பட்ட அடி, உதை போதும். இனிமேல் நரியோடு உறவு வேண்டாம் என உளறிக் கொண்டே யானை காட்டுக்குள் சென்றது.
இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவிற்குள் முரண்பாடு?
ஜெனரல் சரத் பொன்சேக்காவிற்கு எதிராக செயற்படுவதை நிராகரித்துள்ள இராணுவத்தின் முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் மேஜர் ஜென்றல் அமல் கருணாசேகர ஓய்வுபெறத் தயாராகி வருவதாக இராணுவத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் எரித்திரியாவிற்கான பிரதித் தூதுவராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் கருணாசேகர லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பாக வாக்குமூலமொன்றைப் பெறவேண்டும் எனக் கூறி அண்மையில் மீண்டும் இலங்கைக்குத் திரும்பியழைக்கப்பட்டார்.
சண்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்கு ஜெனரல் பொன்சேக்கா காரணம் என வாக்குமூலத்தைப் பெற்றுத்தருமாறு பாதுகாப்புத் தரப்புப் பிரதானிகள் மேஜர் ஜெனரல் கருணாசேகரவிடம் கடும் அழுத்தங்களைப் பிரயோகித்துள்ளனர்.
தான் புலனாய்வுப் பிரிவின் அதிகாரியாக கடமையாற்றும்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அனுமதியின் கீழ் பணியாற்றி வந்ததாக கருணாசேகர கூறியுள்ளார்.
ஜெனரல் சரத் பொன்சேக்காவிற்கு உதவியதாகக் கூறி இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் பலர் இரகசியக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இந்த அநாவசியமான தலையீடுகள் மற்றும் அழுத்தங்கள் சம்பந்தமாக இராணுவப் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தலைவர்களுக்கெதிராக இந்த நடவடிக்கையை பாதுகாப்பு அமைச்சின் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தாவித்தாரனவே ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.
கபில ஹெந்தாவித்தாரன இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தலைவராக கடமையாற்றியபோது இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்கள் விடுதலைப் புலிகளிடம் கப்பம் பெற்று வந்தனர். ஜெனரல் சரத் பொன்சேக்கா இராணுவத் தளபதியாக பொறுப்பேற்ற பின்னர் புலனாய்வுப் பிரிவை முழுமையாக மறுசீரமைத்ததுடன் அதன் தலைவராக மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவை நியமித்தார்.
புலனாய்வுப் பிரிவுத் தலைவர் என்ற வகையில் அமல் கருணாசேகர விடுதலைப் புலிகளுக்கெதிரான நடவடிக்கையில் பாரிய பங்களிப்பை வழங்கிய அதிகாரியென்பதை இராணுவத்தினர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
யுத்தத்தின் இறுதிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருக்கின்ற இடம் குறித்தும் விடுதலைப் புலிகளின் ஏழு ஆயுதக் கப்பல்கள் அழிக்கப்பட்டமை, புலிகளின் முக்கியஸ்தரான கேர்ணல் ராம் கல்முனையில் வைத்து கைதுசெய்யப்பட்டமை மற்றும் கே.பி.யை கைதுசெய்வதற்கான தகவல்களைப் பெற்றுக்கொடுத்தமை ஆகிய பணிகளையும் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர மேற்கொண்டிருந்தார்.
சிங்கள அரசு ஒட்டுண்ணி அமைச்சர் டக்ளஸ் என்ன செய்கிறார்?
யுத்தத்தின் கோரப்பிடியிலிருந்து விலகி கொஞ்சம் கொஞ்சமாக வழமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது யாழ். குடாநாட்டுச் சூழல். எங்கு பார்த்தாலும் தென்னிலங்கை சுற்றுலா வாசிகள் இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் காட்சி மெய்சிலிர்க்க வைக்கின்றது எம்மை. நாட்டைவிட்டு வெறொரு தனித் தீவுக்கு வந்துவிட்டதான ஆச்சரியம் அனைவரது கண்களிலும் நிறைந்திருக்கிறது. குடாநாட்டின் தற்போதைய நிலவரத்தை வெளியுலகுக்கு எடுத்துக் காட்டுவதற்காக நாம் அங்கு சென்றிருந்தோம்... 'உயர் பாதுகாப்பு வலயம்' என்ற தடைவட்டம் நீக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்ட மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம்....உள்ளே சென்ற போது ஓர் ஆச்சரியம்....!. ஈழத்தில் மிகவும் தொன்மையான ஆலயங்களில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலும் ஒன்றாகும். அங்கு எம்மை வரவேற்ற ஆலயத்தின் பெயர்ப்பலகையை எமது கமராவுக்குள் அடக்கிக் கொண்டோம். தமிழ்க் கடவுளாம் கந்தன் ஆலயத்தில் தமிழில் வரவேற்க ஒரு சொல் கூட அங்கிருக்கவில்லை.... வெறும் சிங்கள - ஆங்கில மொழிகளில் பெயர்ப்பலகை..... ஏமாற்றத்தின் விளிம்பில் நாம்.....! தமிழ்மொழி இருட்டடிப்பு தமிழர்கள் வாழும் பகுதியில், இந்துத் தெய்வத்தின் ஆலயத்தில் இப்படியொரு பெயர்ப்பலகை அவசியம் தானா என எண்ணத் தோன்றியது. உண்மையில் இது இனவாதத்தை தூண்டுவதற்காகவோ இனவாதம் பேசுவதற்காகவோ எழுதப்படும் விடயமல்ல. மனதில் எழுந்த ஆதங்கத்தின் வெளிப்பாடு... ஏனைய மொழிகள் பயன்படுத்தப்படுவதில் தவறில்லை. ஆனால்.....தமிழர்களுக்கே உரிய இடத்தில், தமிழ்மொழி மறு(றை)க்கப்பட்டதேன் என்பது தான் எமது கேள்வி. இத்தனை நாள் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்தபோதுதான் இந்த 'மறைப்பு' அரங்கேற்றப்பட்டிருக்கிறது. ஓர் இனத்தை அழிப்பதற்குப் புதிதாக ஆயுதம் வாங்க வேண்டியதில்லை. அந்த இனம் பயன்படுத்தும் மொழியை அழித்தாலே போதும் என்பார்கள். மொழி இல்லையெனின் தமிழ், தமிழர்கள் என்ற அடையாளத்துக்கே இடமிருக்காது. இவ்வாறான திட்டமிடப்பட்ட செயற்பாடுகளைத் தடுப்பதற்கு உரியவர்கள் நிச்சயம் நடவடிக்கை எடுக்கத்தான் வேண்டும். இது அவசியமானது...அவசரமானது. அது சரி... இந்த ஆலயத்துக்கு இதுவரை தமிழ் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருமே செல்லவில்லையா...? அவர்களின் கண்களுக்கு இந்தப் பெயர்ப் பலகை புலப்படவில்லையா...? ஒருவேளை கண்டும் காணாமல்....... ஆலய வரலாறு அது போகட்டும்...மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தைப் பற்றி அறிந்திராதவர்களுக்கு அது பற்றிய தகவலையும் சுருக்கமாக தருகிறோம். யாழ் - காங்கேசன்துறை வீதியில் சுமார் 9மைல் தொலைவில் உள்ளது மாவிட்டபுரம். சோழநாட்டு இளவரசி மாருதபுரவீகவள்ளிக்கு குதிரை முகம் இருந்துள்ளது. எங்கு தேடியும் அதனை மாற்றுவதற்கு மருந்து கிடைக்கவில்லை. மாவிட்டபுரத்துக்கு வந்து புனிதத் தீர்த்தத்தில் நீராடிய பின்னர் முருகன் அருளால் அவள் குதிரை முகம் நீங்கி அழகு பெற்றதாக வரலாறு கூறுகிறது. மாவிட்டபுரம் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானை நூற்றாண்டு காலமாக பக்தியுடன் மக்கள் வழிபட்டு வருகின்றனர். வடக்கு எல்லையில் காங்கேசன் துறையையும் தெற்கு எல்லையில் தெல்லிப்பழையையும் கொண்டுள்ளதால் இவ்வூருக்கு சிறப்பு அதிகம். முருக பக்தரான மறைந்த கிருபானந்த வாரியார் இலங்கை வந்தபோதெல்லாம் ஒருமுறைகூட மாவிட்டபுரத்துக் கந்தனை தரிசிக்காமல் சென்றதில்லை என அவரே சொல்லியிருக்கின்றார். மாவிட்டபுரம் கந்தனின் அருளாட்சிக்கு இவரைவிட சான்றுபகர்பவர் வேறு எவராக இருக்க முடியும்?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






