வெள்ளி, 26 மார்ச், 2010

தமிழே நீ நலமா...

நீ இறந்த காலம் நான் நிகழ் காலம் நாம் எதிர் காலம் தமிழே நீ நலமா... அமுதே என்றுன்னை அழைத்தோமே- இன்று அழுதே உன்னைப் பார்க்கின்றோம் உன்னைப் போற்றிட்ட காலம் இறந்தது தாயே மண்ணைப் புகழ்ந்திட்ட ஞாலம் மறைந்தது அம்மா விண்ணைச் சென்றவர் விரைந்திட்ட போதும் பொன்னைப் போன்றவர் கனாவை நிகழ்த்திட அருள் செய்... தமிழே நீ நலமா... தவித்தவருக்கு தானம் செய்திட்ட தாயல்லவா நீ- இன்று அவித்த ஒரு வேளைச் சோற்றிற்கேங்கும் சேயினைக் கண்டாயோ என்னைப் பாருங்கள் ஒரு செயலற்ற பாவி நான் கண்ணைக் கொண்டந்த காட்சி பார்த்தும் திண்ணை விட்டகல திராணியும் இல்லை மண்ணை மீட்டெடுக்க என்னுள் மறவனுமில்லை தமிழே நீ நலமா... சென்றவிடமெல்லாம் வீரவாகை சூட்டிய மறவனன்றோ உன் மகன் - இன்று வென்றுவிட வீரமின்றி பகைவன் எச்சிச் சோற்றினை உண்ணும் துயர நிலையை பார்த்தாயோ நான் என்று நாவிருக்கும்வரை கூறாமல் முடியாது என்று முடித்துவிடக் கூடாமல் என்னுள்ளே ஒளிந்துள்ள மறவனைக் கேட்டுக்கொண்டேன்... நாங்கள் நாங்கள் என்று நாண்கள் எடுத்தால் தானோ வாங்கள் வாங்களென வாழ்த்தும் இவ் வையகம்? தமிழே நீ நலமா... நீ இறந்த காலம் நான் நிகழ் காலம் ஆனால்... பல 'நான்'கள் (நாண்கள்) சேர்ந்திடின்.... நாம் தான் இவ் வையகத்தின் எதிர் காலம்

துணை ஆளுநராக தமிழ்மகன்.

அமெரிக்க இலினொய்ஸ் மாநிலத் துணை ஆளுநராக தமிழர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார். ஜனாதிபதி பரக் ஒபாமா இதற்கான தீர்மானித்தை எடுத்துள்ளார்.அமெரிக்காவில் வாழும் தமிழரான ராஜா கிருஷ்ணமூர்த்தி என்பவரையே ஜனாதிபதி ஒபாமா துணை ஆளுனராக நியமிக்கத் தீர்மானித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர் ஒபாமாவின் அரசாங்கத்தில் கொள்கை திட்டமிடல் ஆலோசகராக கடமையாற்றியவராவார்.இலினொய்ஸ் மாநிலத்துக்கான ஆளுநர், துணை ஆளுநர் பதவிகளுக்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ளது. துணை ஆளுநராக ராஜா கிருஷ்ணமூர்த்தி தெரிவு செய்யப்பட்டால், அமெரிக்க மாநிலமொன்றில் இந்தப் பதவியை வகிக்கும் முதலாவது தமிழர் என்ற பெருமை இவரைச் சார்ந்திருக்கும். ஜனாதிபதி ஒபாமாவின் நீண்டகால நண்பர் ராஜா கிருஷ்ணமூர்த்தி. கடந்த காலங்களில், ஒபாமாவின் தேர்தல் பிரசாரங்களில் ராஜா கிருஷ்ணமூர்த்தி முக்கிய பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரித்தானிய கிளையின் தேர்தலுக்கான கருத்தரங்கு எங்கே எப்போது?

துப்பாக்கிப் பிரயோகங்களின் எண்ணிக்கையில் உயர்வு

தென் ஆபிரிக்க காவல்துறையினரால் மக்கள் மீது நடத்தப்படும் துப்பாக்கிப் பிரயோகத் தாக்குதல்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னைய வருடத்துடன் ஒப்பீடு செய்யும் போது கடந்த வருடத்தில் தென் ஆபிரிக்க காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகங்களின் எண்ணிக்கை 25 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது. 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2009ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் தென் ஆபிரிக்க காவல்துறையினர் நடத்திய தாக்குதல்களில் 556 பேர் கொல்லப்பட்டுள்ளனர். குற்றவியல் சட்டத் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் நடைபெற்ற விவாதமொன்றின் போது இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தும் குற்றவாளிகளை சுட்டுக் கொல்வதில் தவறில்லை என ஆளும் கட்சி அமைச்சர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார். உலகில் அதிகளவு குற்றச் செயல்கள் இடம்பெறும் நாடுகளின் வரிசையில் தென் ஆபிரிக்காவும் முக்கிய இடம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறெனினும், மக்களை படுகொலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமாக காவல்துறையினர் சட்டத்தை பயன்படுத்தக் கூடாது என தென் ஆபிரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கோப்பாயில் கிணற்றிற்குள் பெண்ணின் சடலம்

கோப்பாய் தெற்கில் கிணறு ஒன்றிலிருந்து நேற்று மாலை பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சடலம், கோப்பாய் தெற்கு கும்பப்பிள்ளை என்னும் இடத்தைச் சேர்ந்த கணேசபிள்ளை தவமலர் என்பவருடையது என என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். ஆனால் இதுவரை 20 மேற்பட்ட சடலங்கள் குடா நாட்டில் கிணற்றிற்குள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. இதுவரை இதற்கான காரணங்களை பொலிசாஅர் கண்டு பிடிக்கவில்லை ‘ விசாரணைகள் தொடர்கின்றன` என்றே கூறப்படுகின்றன.

ஏங்கித்தவிப்போரை ஏமாற்றுகிறார்...........

வவுனியாவில் உள்ள சர்வதேச பாடசாலையின் அதிபரான கீதாஞ்சலி நகுலேஸ்வரன் தற்போது நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் அரச சார்பில் போட்டியிடுகிறார் இவர் இலங்கை இராணுவத்தின் ஆட்காட்டி என்பதை அனைவரும் அறிந்ததே. கடந்த வருடம் இவரின் கணவர் நகுலேஸ்வரன் இராணுவத்தால் கடத்தப்பட்டு காணாமல் போய்விட்டார் இத்தேர்தலில் கீதாஞ்சலி போட்டியிட கணவர் முற்றிலும் மறுத்ததினால் இருவரிடையேயும் பெருந்தகராறு ஏற்ப்பட்டது. இதனால் பதவி மோகம் பிடித்த கீதாஞ்சலி இராணுவத்திடையே உள்ள தனது செல்வாக்கை பயன் படுத்தி நகுலேஸ்வரனை கடத்தியுள்ளார் என்று பலராலும் பேசப்படுகிறது. எமது தமிழ்ச் சமூகப் பெண்கள் கீகாஞ்சலிக்கு ஏற்ப்பட்ட சம்பவம் நிகழ்ந்திருந்தால் உலகில் உள்ள எல்லாத் தெய்வங்களையும் வேண்டி கோயில் கோயிலாக அலைந்து திரிவது வழமை ஆனால் கீதாஞ்சலி முற்றிலும் மாறாக கணவர் காணாமல் போன அடுத்த வாரமே அரைகுறை ஆடைகளுடன் கொழும்புக்கு அடிக்கடி சுற்றுலா சென்று வருவதாக பாடசாலை ஆசிரியர்கள் வருத்தம் தெருவிக்கின்றனர். தற்போது கீதாஞ்சலி புதுக்கதை ஒன்றை சொல்லி வருகிறார் அதாவது காணாமல் போன தனது கணவனை கண்டுபிடிக்கவே தான் தேர்தலில் போட்டியிடுவதாகவும் வவுனியாவில் ஏற்கனவே காணாமல் போயுள்ளோரின் உறவுகளை அளைத்து விபரம் சேகரிப்பதோடு தனக்கு வாக்களிக்கும்படியும் கேட்டுள்ளார். இப்படி கபட நாடகம் ஆடி அப்பாவி மக்களை ஏமாற்றி தனது அரசியல் தேவைக்கு பயன்படுத்துகிறார் இப்படியாக மக்களை ஏமாற்றும் துரோகிகளை புலிகள் என்றைக்குமே விட்டுவைத்ததில்லை தற்காலிகமாகவே புலிகளின் அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதை கீதாஞ்சலி போன்றோர் மறந்துபோய் விட்டனர். மீண்டும் புலிகளின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கும் போது கீதாஞ்சலியின் பெயரும் அவர்களின் பட்டியலில் உள்ளதா? ஏன்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

வியாழன், 25 மார்ச், 2010

தலைவர்கள் மேடைக்கு மட்டும்தானா?

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்திருந்த தியாகி திலீபனின் நினைவுத்தூபி அடித்து உடைக்கப்பட்டதை கண்டித்து தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த பொ.ஐங்கரநேசனும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியை சேர்ந்த கஜேந்திரனும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரியும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக சொல்லப்படும் இரா. சம்பந்தன் அவர்கள் இதுவரை இதுபற்றி எந்த கருத்தினையும் தெரிவிக்கவில்லை. தமிழீழ தேசிய தலைவரின் தந்தை சாவடைந்தபோதும் ஏனைய தலைவர்கள் அஞ்சலி அறிக்கை வெளியிட்டபோதும் சம்பந்தன் அவர்கள் அதுபற்றி அறிக்கை எதனையும் வெளியிடாததுடன் தலைவரின் தந்தையாரின் இறுதி அஞ்சலி நிகழ்வு அன்று திட்டமிட்டபடி தனது கட்சி கூட்டத்தை நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தியாகி திலீபனின் நினைவுதூபி உடைக்கப்பட்டதை கண்டித்து பொ.ஐங்கரநேசன் வெளியிட்ட கண்டன அறிக்கை வருமாறு: யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவுத் தூபி நள்ளிரவு வேளையில் இனந்தெரியாத நபர்கள் சிலரினால் அடித்து இடித்து நிர்மூலமாக்கப்பட்டுள்ளது. தற்போது பொதுத்தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சந்தர்ப்பத்தில் இந்த இடிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் அரசியல் நலன்களுக்கு திலீபனின் சிலை பெருந்தடையாக அல்லது அச்சுறுத்தலாக விளங்கி இருக்க வேண்டும். இதனைத் தாங்க முடியாத சக்திகளே இந்தப் பண்பாட்டுக் கொலையில் ஈடுபட்டுள்ளார்கள். ஆனால் நினைவுத்தூபிகளை அழிப்பதன் மூலம் மக்கள் மனங்களில் இருந்து ஒருபோதும் நினைவுகளை அகற்றிவிட முடியாது. திலீபனின் தூபி உடைப்புச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், திலீபன் போன்ற போராளிகளின் இலட்சியத்தையும் போராட்ட மார்க்கத்தையும் புரிந்து கொள்ள மறுப்பவர்கள் ஆவர். இவர்கள் திலீபன் போன்றவர்களுக்கும் சமூகத்தில் இடமுண்டு என்பதை ஏற்கத் துணிச்சல் அற்ற பேர்வழிகள் ஆவர். இத்தகைய சக்திகளின் அதிகார ஆதிக்கம் அரசியல் கலாச்சாரமாகவே பரிணாமம் பெற்றுவிட்டது. இவர்களே அநாகரிக காலகட்டத்தை நோக்கிச் சமூகத்தையும் வழிநடத்தப் போட்டி போடுகிறார்கள். போராட்ட காலங்களில் கூட வரலாற்றுச் சிறப்பு மிக்க அமைவிடங்கள், சின்னங்கள், கோயில்கள், பாடசாலைகள் மற்றும் வைத்திய சாலைகள் யாவும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நாகரிக மரபு உண்டு. இதைவிட போர்க்காலங்களில் சரணாகதி அடைந்தவர்கள், அப்பாவிப் பொதுமக்கள் மற்றும் உயிர்நீத்தவர்கள் யாவரையும் கௌரவமாக நடத்தவேண்டிய பொறுப்பும் உண்டு. இதுவரையான உலக அனுபவம் இதைத்தான் வெளிப்படுத்துகின்றது. இலங்கையில் எல்லாளனுக்கும் துட்டகைமுனுவுக்கும் இடையிலான மோதலில் கூட எல்லாளன் இறந்தபோது துட்டகைமுனு எல்லாளனுக்கு உரிய மரியாதை கொடுத்து உடலை அடக்கம் செய்ததாகவே எமக்கு வரலாறு கற்பிக்கின்றது. ஆனால், இந்த மரபு பின்னர் வந்த பௌத்த சிங்கள தலைமைகளிடம் அறவே இல்லாமல் போய்விட்டது. யுத்தக் கைதிகள் பரிமாற்றம், யுத்த தர்மம் போன்ற உயர் விழுமியங்கள் பற்றிக் குறித்துப் பேசக்கூடிய சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். யுத்த காலத்தில் கைப்பற்றப்பட்ட அல்லது சூறையாடப்பட்ட பண்பாட்டுச் சொத்துக்களை திருப்பிக் கொடுத்து விடவேண்டுமென்ற கடமைப்பாடு உண்டென கருத்துரைக்கும் போக்கும் எழுச்சியடைந்து வருகின்றது. இந்நிலையில் திலீபனின் நினைவுத்தூபி உடைப்பு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அநாகரிக சக்திகள் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் வேகம் கொண்டு வருகின்றார்கள் என்பதையே இது அடையாளம் காட்டி வருகின்றது. போர் வெறுப்புத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டிய சக்திகள் தம்மை போரியல் வெளியுள்ளவர்களாகவே அடையாளம் காட்டுகின்றனர். இவை சமாதானம், அகிம்சை சுட்டும் வாழ் புல நெறிகளுக்கு எதிரானவை. திலீபன் போன்ற குறியீடுகள் உணர்த்திய அரசியல் மார்க்க முறைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட வேண்டிய காலத்தில், திலீபன் எதை எதிர்த்து நின்றானோ அந்த அரசியல் வழிமூலம் திலீபனின் தூபி உடைப்பு நிகழ்த்தப்பட்ட பண்பாட்டுக் கொலை கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல, தொடரக்கூடாத வழிமுறையும் கூட. தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் ஆனந்தசங்கரியின் அறிக்கை ஒரு காலத்தில் ஆயுதப்போராட்டத்தின் மீது நம்பிக்கை வைத்துத் தீவிரமாக போராடிய திலீபன் தமிழ் மக்களின் கனவும் இலட்சியமும் நிறைவேறவேண்டுமானால் அதற்கு சரியான வழி தந்தை செல்வா அமரர் அமிர் போன்றோர் உருவாக்கிய தமிழர் விடுதலை கூட்டணியின் அகிம்சை ரீதியிலான போராட்டமே. இந்தப் போராட்டமே சரியென உணர்ந்து சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்தவர் திலீபன். இறுதியில் ஓர் அகிம்சைவாதியாக உயிர்நீத்தார் அவர். அவ்வாறான இலட்சியத்தை கொண்டவர்களின் நினைவு தூபியை உடைப்பதென்பது காட்டுமிராண்டித்தனமான செயல் மட்டுமல்ல மன்னிக்கமுடியாத வரலாற்று துரோகமும் கூட. ஒருவரின் நினைவாக அமைக்கப்படும் நினைவு தூபிகளும் சரி சின்னங்களும் சரி உடைக்கப்படுவதென்பது மன்னிக்கமுடியாத குற்றமாகும். இவ்வாறான மிலேச்சத்தனமான செயலை தமிழர் விடுதலை கூட்டணி வன்மையாக கண்டிக்கிறது. தமிழ் தேசிய மக்கள் முன்னனி வெளியிட்ட அறிக்கை தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக காந்திய வழியிலே போராடிய ஈழத்துக் காந்தியே அண்ணன் திலீபன். மருத்துவ பீடத்திற்குத் தெரிவு செய்யப்பட்டு மருத்துவ மாணவனாக இருக்கும்பொழுது தமிழ் மக்களின் அவல வாழ்வு கண்டு அவர்களது நிம்மதியான வாழ்வுக்காக அகிம்சை வழியில் போராடிய உத்தம புருசர். நீராகாரம் அருந்தாமல் மக்களுக்கு விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு தனது உடம்பை உருக்கி உரமாக்கியவர். இலங்கைத்தீவில் உள்ள அனைத்துத் தமிழ் மக்களின் நெஞ்சங்களிலும் தெய்வமாகப் பூசிக்கப்படும் உயரிய மனிதர். வணக்கத்திற்குரிய வகையிலே தமிழ் மக்களால் அவரது நினைவாக நிர்மாணிக்கப்பட்டிருந்த நினைவாலயம் சிங்கள பௌத்த பேரினவாத அரசின் கோரக் கரங்களால் சிதைக்கப்பட்ட செய்தி அறிந்து ஒவ்வொரு தமிழனது நெஞ்சமும் அக்கினிப் பிளம்பாகியது. மரணித்த மாவீரனது கல்லறையை காட்டுமிராண்டித்தனமாகச் சிதைத்த செயலை தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டிக்கின்றது. தியாகதீபம் திலீபனின் நினைவுச் சுவடுகளை அழிப்பதன் மூலம் தமிழ் மக்களது உயிரோடும் உணர்வோடும் இரண்டறக் கலந்துள்ள உரிமை வேட்கையைச் சிதைத்துவிட முடியுமென சிங்கள பௌத்த பேரினவாத அரசு பகல் கனவு காண்கின்றது. சிங்கள அரசு கற்பனை செய்வது போன்று தமிழ் மக்களது உரிமை வேட்கை ஒரு போதும் தணியப்போவதில்லை என்பதனை இச்சந்தர்ப்பத்தில் தெரிவிக்க விரும்புகின்றோம்.

கோரிக்கையை கண்டு சீற்றமுறும் தென்னிலங்கை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாப னத்தைக் கண்டு அலறியடித்து சிங்கள மக்களை உசுப்பேத்தி விடும் வகையில் சீறிப் பாய்ந்து கருத்து வெளியிட்டிருக்கின் றது அரசுத் தரப்பு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம், தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்குப் பலம் சேர்க்காது என்றும், தேசிய ஒற்றுமைக்கு அது ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்றும் அரசு கூறியிருக்கின்றது. அரசின் சார்பில் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் டலஸ் அழகப்பெரும இந்தக் கருத்தை முன்வைத்திருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத் தில் உள்ள "தமிழர்களின் தனித்துவம்', "தமிழர் தாயகம்', "தமிழர்களின் சுயநிர்ணய உரிமை' போன்ற சொற்கள் தென் னிலங்கைக்கு வேம்பாய்க் கசக்கின்றன. சிறுபான்மையினருக்கு எதிரான பேரினவாத மேலாதிக்கச் சிந்தனையைத் தென்னிலங்கை பௌத்த சிங்கள மக்களின் மனதில் பெரும் கருத்தியலாக வளர்த்து, அந்த இனவாத அரசியல் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றும் குறுகிய மனப் போக்கில் காலம் காலமாகச் செயற்பட்டு வந்த தென்னிலங்கை அரசியல் தலைமைகளுக்கு அந்தப் பேரினவாதப் பூதத்திடமி ருந்து தம்மை விடுவித்துக் கொள்ள முடியாத இயலாத நிலைமை நீடிப்பதை நாம் நேரடியாக அவதானிக்கக்கூடிய தாக இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர் பாகக் கொழும்பு அரசுத் தரப்புக் காட்டிநிற்கும் பிரதிபலிப்புக் கூட அதனையே நமக்கு வெளிப்படுத்தியுள்ளது. நீதியைப் பெறுவதற்கான நியாயத்தை எட்டுவதற்கான கௌரவ வாழ்வையும் அடிப்படை உரிமைகளையும், தமது நீண்டகால அபிலாஷைகளையும் ஈட்டுவதற்கான ஈழத் தமிழர்களின் ஆயுத வழிப் போராட்டத்தை அடக்கி, ஒடுக்கி, சிதைத்து அழிப்பதில் கொழும்பு அரசின் இராணுவ மேலா திக்கம் வெற்றிகண்டிருக்கின்றது. போரில் துவண்டுபோய் நிற்கின்றது தமிழர் தரப்பு தமிழர் தாயகம். இந்தச் சமயத்தில் கூட போர் வெற்றி மமதையில் கொழும்பு அரசு மார்தட்டுகின்றதே தவிர, ஈழத் தமிழர்களுக்கு நியாயம் செய்யும் நீதி வழங்கும் தீர்வை முன்வைப்பதற்கான தாராண் மையை அது வெளிப்படுத்திக் காட்ட விரும்புவதாக இல்லை. "எல்லோரும் ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வு' குறித்துத்தான் தென்னிலங்கை அரசும், சில சர்வதேச தரப்புகளும் பேசுகின்றனவே தவிர, சிறுபான்மையினரான தமிழர்களின் நீதி,நியாயமான அபிலாஷைகளை நிறைவுசெய்யும் தீர்வு குறித்து அத்தரப்புகள் பிரஸ்தாபிக்கின்றவையாக இல்லை. இதுவே மனவருத்தத்துக்குரிய விவகாரமாகும். ஜனநாயகத் தேர்தல் ஒன்றிலே வாக்கெடுப்பிலே பெரும் பான்மையினரின் முடிவே இறுதித் தீர்ப்பாக அமையும். அது தான் ஜனநாயக விழுமியமாகும். ஜனநாயகக் கோட்பாட்டின் பண்பியல்பு அதுதான். ஆனால், அதுவே ஜனநாயகப் பெரு மதிப்பின் பின்னடைவும் கூட இழுக்கும் கூட என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஒரு தேர்தலில், பெரும்பான்மையினரின் முடிவே இறுதித் தீர்ப்பு என்கின்ற கோட்பாட்டை ஜனநாயக முறைமைக்கான அடிப் படையாக நாம் ஏற்க முடியும். அது எண்ணிக்கை சார்ந்த விடயம். ஆனால், ஒரு பிணக்கிற்கான ஒரு பிரச்சினைக்கான ஒரு சண்டை, சச்சரவுக்கான நீதி முறையான தீர்ப்பு என்பது அந்தச் சச்சரவில் சம்பந்தப்பட்ட தரப்புகளின் எண்ணிக்கை யில் தீர்க்கப்படுவதல்ல. நீதி, நியாயத்தின் அடிப்படையி லேயே அது தீர்க்கப்பட வேண்டும். இலங்கைத் தமிழர்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதுவும் கூட அத்தகைய நீதி, நியாயமான முறையிலேயே அமைய வேண்டும். இலங்கைத் தீவில் தமிழர்களை விட ஐந்து, ஆறு மடங்கு அதிகமான எண்ணிக்கையில் சிங்களவர்கள் வாழக்கூடும். அதற்காக, இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது ஜனநாயகக் கோட்பாட்டின் அடிப்படையிலானது என்று கூறிக் கொண்டு ஆட் களின் விருப்பினதும் அவர்களின் எண்ணிக்கையின் அடிப் படையிலும் அமையக்கூடாது. தீர்வு என்பது எண்ணிக்கைக் கணியங்களுக்கு அப்பால் நீதியானதாக, பாதிக்கப்பட்ட தரப்புகளுக்கு நியாயம் செய்வ தாக அமையவேண்டும். இன்னும் விளக்கமாகக் கூறுவதானால் இலங்கைத் தீவின் பெரும்பான்மையினரான பௌத்த, சிங்களவர், இத்தீவின் சிறுபான்மையினரான தமிழ்ப் பேசும் மக்களுக்கு விட்டுக் கொடுத்து, வீசி எறியக்கூடிய "பிச்சை' தான் தீர்வு என்று கருதக்கூடாது. ஜனநாயக நெறிமுறைகளின்படி எண்ணிக்கையில் அதிகமானவர்களான பெரும்பான்மையினர், இந்த இனப்பிரச் சினையில் சம்பந்தப்பட்ட எண்ணிக்கையில் குறைந்தவர்க ளான தமிழ்ப் பேசும் மக்களுக்கு விட்டுக் கொடுக்க வழங்க இரந்து அளிக்க இணங்குவதுதான் தீர்வாக அமைய முடியும் என்ற கருத்தியல் சிந்தனை முற்றிலும் தவறாகும். பாரம்பரியமாக வரலாற்று ரீதியாக காலங்காலமாக தங்களிடம் இருந்து வந்து, இப்போது பேரினத் தரப்பினால் பல வந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டு, பறிக்கப்பட்டிருக்கும் தமது உரி மைகளையே தமிழர்கள் கோருகின்றார்கள். அதுவே இனப்பிரச் சினைக்கான அடிப்படை. தரப்புகளின் எண்ணிக்கையின் அடிப்படையிலான விருப்பே தீர்வு என்று கருதாமல், நீதி,நியாயத்தின் அடிப்படை யில் அமைவதே தீர்வு என்ற கோட்பாட்டின் கீழ் இப்பிரச் சினைக்கு ஒரு முடிவு தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும். நீதி, நியாயத்தை ஒருபுறம் தள்ளிவைத்துவிட்டு, பௌத்த சிங்களப் பெரும்பான்மையினர், சிறுபான்மையினரான தமிழர்களுக்கு விட்டுக்கொடுத்து இரக்கக்கூடிய பிச்சையே தீர்வாக முடியும் என்ற கருத்தியலில் பேரினவாத அரசுகள் இருப்பதால்தான் தமிழர் தரப்பின் உரிமைக்கான குரல் அந்த அரசுகளுக்கு இப்படி வேம்பாய்க் கசக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் அரசு வெளிப்படுத்தி நிற்கும் கருத்துகளும் கூட அத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டவை தேசிய ஒற்று மைக்கு ஆபத்தானவை என்ற அரசுத் தரப்பின் எச்சரிக்கை கூட இத்தகைய மேலாதிக்க மனப்போக்கில் அமைந்தவைதான்.

பரிந்துரைக்கின்றது சிறிலங்கா !

பலஸ்தீனத்திலும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கும் பலஸ்தீனத்தின் ஏனைய பகுதிகளிலும் மனித உரிமை நிலைமைகள் மோசமடைந்து செல்வதையடுத்து சிறிலங்கா தனது ஆழ்ந்த கவலையினை வெளியிட்டிருக்கிறது. அமைதி முயற்சிகளைத் தொடர்ந்தும் முன்னோக்கி நகர்த்துவதற்கும் மோசமடைந்திருக்கும் கள நிலைமையினை மீண்டும் சீர்செய்வதற்கும் ஏற்ப தொடர்புடைய தரப்புக்கள் சுய கட்டுப்பாட்டுடனும் பொறுப்புணர்வோடும் நடந்த கொள்ள வேண்டும் என சிறிலங்கா அழைப்பு விடுத்திருக்கிறது. அனைவரும் விரும்புவதைப்போல, இரண்டு தேசங்கள் என்ற யதார்த்தத்தினை ஏற்றுக்கொண்டு, அதன் அடிப்படையில் கொண்டுவரப்படும் தீர்வு யோசனை தான் பலஸ்தீனப் பிரச்சினைக்கு நீடித்து நிலைக்கக் கூடிய தீர்வினைத் தரும் என சிறிலங்காக உறுதியாக நம்புகிறது. இவ்வாறான ஒரு தீர்வு, பலஸ்தீன நிலப்பரப்பில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பினை முடிவுக்குக் கொண்டுவருவதோடு - சுதந்திரமன, இறையாண்மை மிக்க, நீடித்து நிலைக்கக் கூடிய பலஸ்தீனத் தாயகம் அமைவதற்கும் வழி செய்யும். தவிர, பலஸ்தீன மக்கள் தமக்குரிய உரிமைகளை மீளவும் பெற்றுக்கொள்வார்கள். பலஸ்தீன நிலப்பரப்பினை இஸ்ரேலியர்கள் ஆக்கிரமித்து நிற்பது தான் அங்கு மனித உரிமை மீறல்கள் கட்டுக்கடங்காமல் தொடர்வதற்கான அடிப்படைக் காரணம் என சிறிலங்கா வாதிடுகிறது. ஆதலினால், ஆயிரக்கணக்கான பலஸ்தீனியர்கள் தங்களது சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்படுவதற்கு வழிவகுத்த இஸ்ரேலியர்களின் சட்ட விரோதமான நில ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். இவை - தவிர காசா பகுதியில் பலஸ்தீன மக்கள் மீது ஏற்படுத்தப்பட்டிருக்கும் தடைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும். இவ்வாறு சிறிலங்கா தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான நிபுணர்கள் குழு அமைக்கும் நடவடிக்கைகள் தொடங்கியது: பான் கி மூன்

இலங்கையில் போர் குற்றம் தொடர்பில் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்கும் நிபுணர்கள் குழுவை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, பான் கீ மூனின் தலைமையதிகாரி விஜய் நம்பியார் மற்றும் இலங்கைக்கான ஐ. நா.வின் நிரந்தர பிரதிநிதி பாலித கோஹன ஆகியோர் செயற்பட்டு வருவதாக பான் கீ மூன் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த, பான் கீ மூன், குறித்த நிபுணர்கள் குழுவுக்கான ஆட்களை தேர்வுசெய்யும் நடவடிக்கைகள் நடைபெறுவதாக குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், தமது அரசியல்துறை செயலாளர் லின் பாஸ்கோ, இந்த விடயம் தொடர்பாக இலங்கைக்கு சென்று அந்த நாட்டு அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவார் என பான் கீ மூன் தெரிவித்துள்ளார். அதேவேளை, குறித்த நிபுணர்கள் குழு அமைக்கப்படுவது இலங்கையின் இறையாண்மையை பாதிக்கும் என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே பான் கீ மூனின் நிபுணர்கள் குழுவில் இடம்பெற ஜப்பான் மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவுக்கு பின்லேடன் புதிய மிரட்டல்

அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல் குற்றவாளி காலித் முகமத்திற்கு மரணதண்டனையை நிறைவேற்றினால், தங்களது பிடியில் உள்ள அமெரிக்கப் படையினரை கொல்வோம் என்று அல் - காய்தா இயக்கத்தின் தலைவரான ஒஸாமா பின் லேடன் புதிய மிரட்டலை விடுத்துள்ளார். பின்லேடன் உயிருடன் உள்ளாரா இல்லையா என்பதே உறுதியாக தெரியாத நிலையில் அவரது பெயரில் அமெரிக்காவுக்கு மேற்கண்ட புதிய மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பின்லேடன் பேசியதாக கூறப்படும் ஒலி நாடாவை அல் - ஜஸீரா தொலைக்காட்சி, தனது செய்தியில் ஒளிபரப்பி உள்ளது. அதில், " அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல் மூளையாக செயல்பட்டதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட காலித் முகமத் மற்றும் வேறு யாருக்காவது மரணதண்டனையை நிறைவேற்ற முடிவெடுக்கும் தினத்தில், நாங்கள் யாரையெல்லாம் பிடித்து வைத்துள்ளோமோ(அமெரிக்கப் படையினர்) அவர்களை நாங்களும் கொல்ல முடிவெடிக்கப்பட்டுவிடும்" என்று கூறியுள்ளார். மேலும், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது முந்தைய அதிபரின் ( ஜார்ஜ் புஷ்) பாதையிலேயே செல்வதாக கூறியுள்ள பின்லேடன், " எங்களுக்கு எதிராக அநீதி இழைத்த வெள்ளை மாளிகை இருக்கும் அரசியல்வாதிகள் இன்னும் அதை செய்து கொண்டுள்ளனர்.குறிப்பாக பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து வரும் இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர். 9/11 ல் அமெரிக்காவின் சொந்த நகரத்திலேயே அல்லாவின் உதவியால் தாக்குதல் நடத்தும்வரை, தங்களால் ஒடுக்கப்பட்டவர்களின் கோபத்திற்கு உள்ளாகாதவாறு, தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவே அமெரிக்கர்கள் நினைத்திருந்தனர்" என்றும் அதில் தெரிவித்துள்ளார்.

புதன், 24 மார்ச், 2010

தலைவன் வழிகாட்டுதலில் தொடர்ந்து போராட வேண்டியதன் அவசியம்.

ஈழ விடுதலைப்பயனத்தில் மீண்டும் உறுதியான, தெளிவான முடிவினை அறுதியிட்டு பதிவுசெய்து அந்நிய ஆக்கிரமிப்பிற்குள் சிறைவைக்கப் பட்டிருந்தாலும் தலைவன் வழிநிற்கும் புலிகள் சேனை என தலைநிமிர்ந்து நிற்கின்றனர் எம்தேச மக்கள். சிறிலங்காவின் ஆறாவது சனாதிபதியை தெரிவுசெய்வதற்கான தேர்தல்களமானது எமக்கான உண்மையான உறுதியான ஒரே தலைமை தமிழீழ விடுதலைப்புலிகள்தான் என்பதனை ஏற்கமறுத்தவர்களையும் மறுப்பவர்களையும் தலைகுனியவைத்து தமிழ்தேசம் தலைநிமிர வைத்துள்ளது. இவ்வாறான தீர்ப்பினை நிச்சயமாக எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் எமது மக்கள் பதிவு செய்து தேசத்தை விலைபேச முற்பட்டவர்களை நிராகரிப்பது உறுதி. இந்த நூற்றாண்டு கண்டிராத வரலாற்றுத் துயரத்தை முள்ளிவாய்காலில் அரங்கேற்றி எமது சொந்தங்களை வேட்டையாடி எமது தேசத்தை சுடுகாடாக்கி எஞ்சியவர்களை ஒருவேளை சோற்றிற்கும் ஒருவாய் தண்ணீருக்கும் கையேந்துபவர்களாக முற்கம்பி வதைமுகாமில் சிறைவைத்தும் தமிழீழ மீட்புப் பணியில் தலைவன் வழிநின்று சமராடிய வீரப் புதல்வர்களை கொடும்சிறை வைத்து வரும் வேளை அதற்கு காரணகர்த்தா யார் என்பதனை மக்கள் தீர்ப்பின் மூலம் உறுதிசெய்து கொள்வதற்காக கடந்த சனவரி 26ம் நாள் சிறிலங்காவே அமர்களப்பட்டு ஓய்ந்து போய் தற்போது தலைகீழ் மாற்றம் கண்டுள்ளது. தமிழின அழிப்பினையும் தமிழீழ விடுதலைப்புலிகளது பலத்தினை முற்றுமுழுதாக அழித்தொழித்து விட்டதனையும் மூலதனமாகக் கொண்டு மகிந்த ராசபக்ச இக்களத்தில் முதன்மையானவராக குதித்த வேளை யாவற்றிலும் உடனிருந்த முன்னால் இராணுவத்தளபதியும் கட்டளை அதிகாரியுமான சரத்பொன்சேகா எதிர்பாராத வகையில் எதிர்க்களம் புகுந்து சிங்களம் இரண்டுபட்டு நிற்பதை உறுதிப்படுத்தியிருந்தார். இவ்வேளை அடையாளம் இழந்துபோயிருந்தவர்களை ஒருங்கினைத்து தமிழர் தரப்பின் அரசியல் தலைமையாக்கி அவர்களுக்கு தேர்தல் மூலம் அங்கீகாரம் கிடைக்க தமிழீழ தேசியத் தலைமை வாய்ப்பளித்திருந்தமையால் இம்முறை அதிக முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக விளங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தடுமாற்றமான போக்கினை வெளிப்படுத்தி மீண்டு;ம் ஒருதடவை தமிழர்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2005இல் சனாதிபதித் தேர்தலை புறக்கணிப்பது என தமிழீழ தேசியத்தலைமை எடுத்த முடிவு தவறானது எனவும் அதனாலேயே இன்றைய அழிவு, அவல நிலை ஏற்பட்டது என்றும் அவற்றை நிவர்த்தி செய்யப்போவதாகவும் தனியாவர்த்தனம் செய்ய முற்பட்ட சம்பந்தனின் முகத்தில் கரியை அள்ளிப் பூசியுள்ளனர் தமிழ் மக்கள். எதிர்பார்ப்புக்கள், நம்பிக்கைகள், எதிர்வு கூறல்களைக்கடந்து சிறிலங்காவின் ஆறாவது சனாதிபதியாக சிங்கள மக்கள் தமக்கான தலைவராக மகிந்த ராசபக்சவினை தேர்ந்தெருத்திருந்தனர். மகிந்தவின் இந்த வெற்றிக்கு பல காரணங்கள் இருந்தாலும் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த நிலைப்பாடும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது. கடந்த 2005 இல் நடைபெற்ற சனாதிபதித் தேர்தலில் 48இலட்சத்து87ஆயிரத்து162 வாக்குகளையும், போர் வெற்றியையும் தமிழின அழிப்பினையும் முக்கிய சாதனையாக காண்பித்து சமகாலத்தில் நடாத்தப்பட்ட மாகாணசபைத் தேர்தல்களில் சுமார் 50இலட்சம் வாக்குகளையும் பெற்றிருந்த மகிந்த ராசபக்ச இம்முறை 60இலட்சத்து15ஆயிரத்து934 வாக்குள் பெற்றதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் நிலைப்பாடே காரணமாக அமைந்திருந்தது என்றால் மிகையாகாது. சிங்கள மக்கள் தெளிவானவர்கள். தமக்கான தலைவனாக மகிந்த ராசபக்சவை தேர்ந்தெடுத்திருந்தமையால் பொன்சேகா ஒன்றும் குறைந்தவர் அல்ல. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பொன்சேகாவை ஆதரிப்பது என்று முடிவானபின்னர் அதுவரைகாலமும் சிங்கள மக்களது கதாநாயகனாக விளங்கிய பொன்சேகா துரோகியாக மாறிவிட்டார். இதுவே மகிந்தவை வெற்றிபெற இலகுவாக்கியது. பிரதான இனவாதக் கட்சிகள் புடை சூழ போட்டிக்களத்தில் எதிர்நின்ற பொன்சேகாவை கண்டு ஒருகணம் மகிந்த ராசபக்சவே மிரண்டுதான் போயிருந்தமை தேர்தல் முடிவு வெளியாகும் நாளுக்கு முன்புவரை அவரது தோல்விப்பயம் கவ்விய முகமும் பதட்டமான நடவடிக்கையுமே வெளிப்படுத்தியிருந்தது. 2002ல் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதை காரணம்காட்டி நாட்டை இரண்டாகப்பிரித்து புலிகளிடம் தாரைவார்த்துவிட்டதாக ரணிலை துரோகியாகக் காட்டி 2005ல் வெற்றி பெற்ற மகிந்தவிற்கு இம்முறை கூட்டமைப்பினருடனான மறைமுக உடன்படிக்கை பேருதவி புரிந்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து நாட்டை காட்டிக்கொடுத்துவிட்டதாக மேற்கொண்ட பரப்புரை காரணமாக சிங்கள மக்கள் சரத்பொன்சேகாவை நிராகரித்து மகிந்த ராசபக்சவே தமக்கான சரியான தலைவனாக தெரிவுசெய்துள்ளனர். சுருங்கக் கூறின் சிங்களத்தின் கதாநாயகனை துரோகியாக மாற்றி தோல்வியடையச் செய்த பெருமை சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பையே சாரும். இந்தப் பெருமைக்குரிய சம்மந்தனின் செயற்பாட்டின் எதிர்வினையாக தமிழ்மக்கள் எதிர்கொள்ளப் பேகும் நிலை மிகவும் ஆபத்தானதாகும். எதிரியின் கொடிய வதைகளிற்குள்ளாகிய நிலையிலும் எதிரியின் முற்றுகைக்குள் இருக்கின்ற போதும் தமிழ்த் தேசியத்தின்பால் தாம் வைத்திருக்கும் உறுதியை வாக்களிக்கச் செல்லாது வெளிப்படுத்தியிருக்கும் எமது மக்கள் தற்போதும் எதிர் நோக்கிவரும் கடத்தல் கைதுகள் மூலம் காணாமல்போகும் சம்பவங்களும் மர்மக் கொலைகளுக்கும் எதிர்வரும் நாடகளில் எதிர்கொள்ளப்போகும் யாவற்றிற்கும் சம்மந்தனே பொறுப்பாளியாவார். பொதுவான ஒரு களத்தில் மக்களை வழிநடத்தாது தோல்வியைத் தழுவி தன்னையே காத்துக்கொள்ள முடியாது தற்போது சிறைக்கம்பிகளை எண்ணிக்கொண்டு இருக்கும் சரத்பொன்சேகாவினை ஆதரிப்பது என்ற நிலைப்பாட்டினை எடுத்து குறிப்பிட்ட மக்களையும் அதற்கேற்றவாறு வழிநடத்தி மகிந்தவின் கொலைவெறிப் பார்வைக்கு உள்ளாக்கியுள்னதன் விளைவுகள் என்னவாக இருக்குமோ என்பதை சிந்திக்கும் போது கலக்கமேற்படுகின்றது. முட்கம்பி வதைமுகாமில் சிறைவைக்கப்பட்டுள்ள ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்களும் சிறப்பு தடுப்பு முகாம்கள் என்ற போர்வையில் தனித்தனியாகவும் குழுவாகவும் அடைத்து வைக்கப்பட்டு எதிர்காலமே சூன்யமாக்கப்பட்டுள்ள பதின் மூவாயிரத்திற்கு மேற்பட்ட போராளிகளதும் நிலை இனி என்னவாகுமோ என்பதற்கு சம்மந்தனால் பதில் கூறமுடியுமா……? அல்லது அவர்களை விடுவிக்கத்தான் முடியுமா…..? சிறிலங்காவின் ஆட்சிபீடத்திற்கு நடாத்தப்படும் தேர்தல்கள் மூலம் தமிழ்மக்கள் எதனையும் பெற்றுவிட முடியாது அவ்வாறு தெரிவு செய்யப்படுபவர்களும் தமிழ்மக்களிற்கு உரித்தான சுயநிர்ணய உரிமைகளை வழங்கி தனித்துவமாக வாழ வழியேற்படுத்தப் போவதில்லை என்ற நிலையை மெய்ப்பிப்பது போன்றே கடந்த 33வருடங்களாக சிறிலங்காவின் தேர்தல்களை புறக்கணித்து வந்துள்ளனர் எமது மக்கள். இதனை முற்றிலும் உணர்ந்து கொண்டதனால்தான் கடந்தமுறை 2005இல் சனாதிபதித் தேர்தலை புறக்கணிப்பது என்ற முடிவை தமிழீழ தேசியத் தலைமை எடுத்திருந்த தமிழர்களதும் சிங்களவர்களதும் எண்ணங்கள், செயற்பாடுகள் முரண்நிலை கொண்டவை என்பதனையும் அவற்றிற்கான தலைமையும் வேறு வேறுவானவை என்பதனையும் அனைத்துலகத்திற்கு புரியவைப்பதற்கு முற்பட்டிருந்தனர். இம்முடிவுதான் தவறானது எனக்கூறி சரத்பொன்சேகா என்ற சிங்களனை ஆதரிப்பதே சரியானது என மக்களை தவறாக வழிநடாத்த முற்பட்ட சம்மந்தனுக்கு சரியான பாடம் புகட்டியுள்ளனர் தமிழத் தேசியத்தில் வழிநடாத்தப்பட்டுள்ள எம் மக்கள். முள்ளிவாய்காலின் பின்னரான காலப்பகுதியில் ஏற்பட்ட துன்ப துயரங்கள் களையப்பட்டு தத்தமது சொந்த இடங்களில் யாருடைய தலையீடும் இல்லாது சுதந்திரமான நடமாட்ட உரிமையுடன் வாழக்கூடிவாறான சூழல், முட்கம்பி வதைமுகாம்களில் அடைபட்டுள்ள இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களிற்கு கிடைக்காது விடினும் ஓரளவிற்கேனும் தமது வாழ்வினை மீள அமைத்துக் கொள்வதற்கான வாய்ப்பாக ஒரு ஆட்சிமாற்றத்தினை எதிர்பார்த்திருந்தது என்னவோ உண்மதான். ஆனால் அதற்குமப்பால் தமிழர்கள் ஒன்றுபட்டு ஓரணியில் உள்ளோம் என்பதனை சனநாயக முறைப்படி வெளிப்படுத்த கிடைத்த ஓர் அரிய சந்தர்ப்பத்தினை தவறவிட்டு விட்டோமே என்ற வருத்தம்தான் மேலிடுகிறது. தமிழர் பகுதியல் மிகவும் குறைந்தளவே வாக்குப் பதிவு நடைபெற்றிருந்த போதும் அவற்றில் 70சதவிகிதமான வாக்குகள் சரத்பொன்சேகாவிற்கு கிடைத்துள்ளமையானது தமிழர்கள் பொன்சேகாவை மன்னித்து ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளனர் என அர்த்தப்படுத்திவிட முடியாது. பிரதான எதிரி மகிந்த ராசபக்சவினை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணமும் தமிழின அழிப்பினை மேற்கொண்டதற்கு எக்காலத்திலும் மன்னிப்பே கிடையாது என்பதனை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக இந்த சனாதிபதித் தேர்தல்களம் கிடைத்த போது அதனை சரியாக பயண்படுத்திக் கொண்டிருந்தனர் வாக்களித்திருந்த தமிழ்மக்கள். எமக்கான தலைமை வேறு இந்த தேர்தல் சிங்களத்தின் தலைமையினை தேர்வுசெய்யும் களம் என்பதனை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தும் முகமாக பெரும்பாலான தமிழ்மக்கள் தேர்தலை புறக்கணித்தும், கிடைத்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி கொலைவெறியன் மகிந்த ராசபக்சவிற்கு எதிரான பழிவாங்கும் உணர்வு அணையாத் தீபமாக எம்மனங்களில் கணன்று கொண்டிருக்கின்றது என்பதனை வெளிப்படுத்தும் விதமாக வாக்களித்திவர்களில் பெரும்பாலானவர்கள் சரத்பொன்சேகாவை ஆதரித்து வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மக்களது இந்த மன உணர்வினை சரியான முறையில் இனம் கண்டு தமிழர் தரப்பு பொதுவேட்பாளராக சிவாசிலிங்கத்தை முன்னிறுத்தி இந்தத் தேர்தல்களத்தை எதிர் கொண்டிருந்தால் இன்னும் அதிகமானவர்கள் முன்வந்து வாக்களித்து எமது மக்களின் மனவெளிப்பாட்டினை சனநாயக முறைப்படி பதிவுசெய்ய வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். அவ்வாறு நடைபெற்றிருந்தால் தமிழ்மக்கள் இன்று எதிர் நோக்கியருக்கும் அச்சுறுத்தல் நிலையினை தவிர்த்திருக்கராம் அல்லவா….? இந்த அரியவாய்பினை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சரியானமுறையில் கையாளாது விட்டதனால் மகிந்த ராசபக்சவின் கொலைவெறிப் பார்வை இன்னும் வீரியம் பெற்று எமது மக்களை நோக்கித் திரும்பியுள்ளது. அது எப்போது எவ்வாறு உருவம்பெற்று மீண்டும் தமிழர்களை தாக்கும் என்ற அச்சத்துடன் வாழவேண்டிய நிலைக்கு சம்மந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் தவறான நிலைப்பாடே காரணமாகும். சனநாயக முறைப்படி தேர்தல்கள்த்தில் குதித்த எதிரணி வேட்பாளரையும் அவர்சார்ந்தவர்களையும் பரம எதிரியாகக் கருதி உயிரச்சத்தை விளைவிதிருக்கும் போதும் எதிர் வேட்பாளரை கைது செய்து சகல வழிகளிலும் முடக்கப்பட்டு கொடுஞ்சிறை வைத்திருக்கும் போது தமிழர்கள் எம்மாத்திரம். சிங்களத்தின் கதாநாயகனாக விளங்கிய சரத்பொன்சேகாவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சிறுபான்மை கட்சிகள் அணிசேர்ந்து கொண்டபின்னர் சிங்களவர்களது தனிப்பெரும் தலைவன் மகிந்தராசபக்ச தான் என்ற நிலை ஏற்பட்டுள்ளமை மறுக்கமுடியாத உண்மையாகும். ஆட்சி அதிகார வெறியில் ஊறிப்போயுள்ள மகிந்த ராசபக்ச சகோதரர்களது கையில் சிறிலங்காவின் அதியுச்ச அதிகார பீடங்கள் சிக்கிக் கொண்டிருந்தமையும் இந்த அசாத்தியமான வெற்றிக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. எந்தெந்த வகைகளில் சட்டமீறல்களை, அதிகார முறைகேடுகளை, வன்முறைகளை கட்டவிழ்த்து தமக்கு சாதகமான முடிவினை நோக்கி மக்களது தீர்ப்பினை வளைத்துக் கொள்ள முடியுமோ அந்தந்த வழிகளில் எல்லாம் முயற்சி செய்தே இந்த வெற்றியை தமதாக்கிக் கொண்டுள்ளனர் ராசபக்ச சகோதரர்கள். கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் மோசமன வன்முறை வெறியாட்டங்களிற்கு இடையே இம்முறை சனாதிபதித் தேர்தல் நடைபெற்றுள்ளது. இம்முறை சனாதிபதித் தேர்தலை கண்காணித்த “ட்ரன்ஸ் பரன்ஸி இன்டர் நேசனல்” என்ற தன்னார்வ கண்காணிப்பு அமைப்பின் அதிகாரியான வெலியமூன் இது தொடர்பாக சிங்களப்பத்திரிகையாளர்களிடம் கூறியபோது: ராசபக்சே தேர்தல் நடைமுறைகள் ஆரம்பித்ததில் இருந்து வாக்கு எண்ணிக்கை நடக்கும்வரை அரச இயந்திரத்தை தனது விருப்பப்படி பயன்படுத்தியதாக 427 புகார்கள் எங்களிற்கு வந்துள்ளன, அவரது ஆதரவாளர்கள் தேர்தல்பணியாற்றுவதற்காகவும் வாக்காளர்களை கட்டாயப்படுத்தி வாக்குச்சாவடிகளுக்கு கூட்டிவருவதற்காகாவும் 1024 சிறிலங்கா அரசுப் பேரூந்துகளை பயன்படுத்தியிருக்கின்றார்கள். அதிபர் மாளிகை உள்பட அனைத்து அரச அலுவலகங்களும் ராசபச்சவிற்காக தேர்தல் வேலை பார்த்துள்ளன. இம்முறை நடந்து முடிந்த தேர்தல், வரலாற்றில் மிக மோசமாக நடைபெற்ற தேர்தலாக பதிவு செய்யப்படும் என வெலியமூன் தெரிவித்திருந்தார். இவைதவிர தேர்தலிற்கு முன்கூட்டியே வெற்றிலை சின்னத்திற்கு புள்ளடி போடப்பட்ட நிலையில் உள்ள வாக்குச் சீட்டுக்கள் நிரப்பிய பெட்டிகளை ஏற்றிக் கொண்டு யாழ்ப்பாணம் சென்றது சிறிலங்கா இராணுவவாகனங்கள். எதிர்பாராத விதமான விபத்து சம்பவத்தினை அடுத்து இந்த திருட்டுத்தனம் அம்பலமாகியிருந்தது. தமிழர் பகுதியிலையே இவ்வாறு சித்து வேலைகளை காட்டமுற்பட்ட ராசபக்சே கும்பலுக்கு சிங்களப்பகுதியில் மேற்கொள்வது என்பது கடினமானதாக இருந்திருக்காது, இருக்காது. தீவிர இனவாதவெறியில் ஊறித்திழைத்திருக்கும் சிங்கள மக்களின் வாக்குகள் இருவருக்கும் இடையே பிரிக்கப்பட தமிழர்களது வாக்கே வெற்றியைத் தீர்மாணிக்கும் என்ற நிலை நடந்து முடிந்த சனாதிபதித் தேர்தல் களத்தில் ஏற்பட்டிருந்தது யாவரும் அறிந்ததே. இன்று பலர் இந்த கூற்றை மறுதலிக்க முற்பட்டு தமது புலமையினை காட்டமுற்பட்டுள்ளமை வேடிக்கையாக உள்ளது. மேற் கூறப்பட்ட நிலையே உண்மையாகும். ஏறத்தாள 35இலட்சத்திற்கு மேற்பட்டதாக இருந்த சிறுபான்மை இனமக்களான தமிழர், இசுலாமியர்களது வாக்குள் முழுவதுமாக பதிவாகியிருக்குமாயின் நிலைமையே தலைகீழாக மாறியிருக்கும் என்பதே உண்மையாகும். இதனை உணர்ந்து கொண்டதனால்தான் தமிழர் பகுதிகளில் அச்ச கூழ்நிலையினை தோற்றுவித்து முழுமையாக வாக்குப்பதிவு நடைபெறாது பார்த்துக் கொண்டதுடன் தமது வெற்றியையும் உறுதி செய்து கொண்டுள்ளனர் கொலைவெறி பிடித்த மகிந்த சகோதரர்கள். இதற்கு எலும்பு பொறுக்கிகளாக அவர்களது காலை சுற்றிவரும் துரோகிகள் குழுக்களும் உடந்தையாக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனை உறுதிப்படுத்துவது போலவே தமிழர் பகுதி வாக்குப்பதிவு முடிவுகள் அமைந்துள்ளன. யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு தினத்தன்று அதிகாலைவேளை 13இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றதும் பேரூந்து சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டு ஒருவித அச்சுறுத்தலான சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டிருந்த போதும் அளிக்கப்பட்ட வாக்குகளில் ராசபக்சவினை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு வாக்குகள்(ஒரு இலட்சத்து ஏழாயிரம் வாக்குகள்) பொன்சேகாவிற்கு ஆதரவாக பதிவு செய்யப்பட்டிருந்தது. கள்ளவாக்கு போடுவதற்காக இருபதிற்கு மேற்பட்ட சிங்களக் காடையர்கள் கிளிநொச்சியில் கொண்டுவந்து இறக்கப்பட்டிருந்தமை பண்டாரிக்குளம் கிராமத்தில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மக்களை வாக்களிக்கச் செல்லவிடாது சிறிலங்கா இராணுவத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தமை ஒட்டுக் குழுக்களின் அடாவடி என வன்னி மாவட்டத்தில் சனநாயகம் காற்றில் பறக்கவிடப்பட்ட நிலையிலும் கொலைபாதகன் மகிந்தவை விட(24ஆயிரம்) சுமார் மூன்று மடங்கு (61ஆயிரம்) வாக்குகள் சரத்பொன்சேகாவிற்கு ஆதரவாக பதிவு செய்யப்பட்டிருந்தது. இதேபோன்று சரத்பொன்சேகாவை ஆதரித்த முசுலீம் காங்கிரசு செல்வாக்கு மிக்க பகுதிகளில் அதிகாலைமுதல் இராணுவ கவசவாகனங்களையும் இராணுவத்தினரையும் நிறுத்தி போர்ச் சூழலை ஏற்படுத்தியிருந்த நிலையிலும் அளிக்கப்பட்ட வாக்குகளில் மூன்றில் இரண்டு மடங்கு வாக்குள் சரத்பொன்சேகாவிற்கு ஆதரவாக பதிவு வெய்யப்பட்டிருந்தது. மலையகப்பகுதி உள்ளிட்ட இதர தமிழர் பகுதிகளிலும் இதே நிலைதான் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. மொத்தமாக 35இலட்சம் வாக்குப்பலத்தினை கொண்டிருந்த சிறுபான்மை இன தமிழர், இசுலாமியர்களில் ஆறு இலட்சம் பேரே இம்முறை சனாதிபதித் தேர்தலில் வாக்க்ளித்திருந்தனர். அதிலும் 70சதவிகித வாக்குள் சரத்பொன்சேகாவிற்கு ஆதரவாகவே அளிக்கப்பட்டிருந்தது. சரத்பொன்சேகா பெரும்பான்மை வாக்குகள் பெற்ற ஆறு மாவட்டங்களில் தமிழர்கள் அதிகமாக வாழும் யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட தமிழர்களின் தாயக பூமியான வடகிழக்கு பகுதியில் உள்ள ஐந்து மாவட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சரத்பொன்சேகாவை தமிழர்கள் ஏற்றுக்கொண்டதனாலோ….. அதிகப்பிரசங்கி சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினரின் வழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டதனாலோ தாயக மக்கள் இந்த முடிவை வெளிப்படுத்தவில்லை என்பதனையும் மாறாக தலைவணங்கா தேசமாக விளங்கிய வன்னியை சுடுகாடு ஆக்கி எமது இனத்தையே கொன்று குவித்த கொலைபாதகன் மகிந்தராசபக்சவையும் அவனது சகோதரர்களையும் பழிவாங்கவதற்காகவும் தமது எதிர்ப்புக்களை தெரிவிப்பதற்காகவுமே இந்த முடிவை வெளிப்படுத்தியுள்ளனர் என்பதனை இந்த அதிமேதாவிகள் புரிந்து கொள்ள வேண்டும். மேற் சொன்னவை வெறும் வாதத்திற்காக முன்வைக்கவில்லை. தேர்தல் வாக்களிப்பு சூன்யமாக்கப்பட்டால் உடனடியாக மறுதேர்தல் நடாத்தப்படும் என மிகக்கடுமையாக கருத்துத் தெரிவித்த தேர்தல் ஆணையாளர் தயானந்த திசநாயக்க தேர்தல் நிறைவடைந்த பின்னர் துண்டைக்காணோம் துணியைக் காணோம் என கதறித்துடித்து புலம்பியது மேற்சொன்னவற்றின் அடிப்படையிலே ஆகும். கடந்த சில தினங்களாக எனக்குத் தரப்பட்ட அழுத்துங்களும் நெருக்கடிகளும் மிரட்டல்களும் தாங்கமுடியாதவை எனது வரலாற்றில் இத்தகைய அழுத்தங்களை முன்னெப்போதும் நான் சந்திக்கவில்லை. நான் தேர்தல் ஆணையாளராக எட்டுவருடங்கள் கடமையாற்றியிருக்கின்றேன். இப்போது எனது பதவியில் இருந்து என்னை விடுவிக்குமாறு நான் வேண்டுகிறேன். வாக்குகள் எண்ணப்படும் வேளை பலர் மிரட்டப்பட்டனர். புத்தளம் அனுராதபுரம் மாத்தளை ஆகிய பகுதிகளில் தேர்தல் நடைமுறைகளை அமுல்படுத்த விடாமல் தேர்தல் பணியாளர்களும் அதிகாரிகளும் தடுக்கப்பட்டனர். இனியும் இந்தப்பதவியில் நீடிப்பது பொருத்தமாக இருக்காது என்றே கருதுகின்றேன். இனியும் என்னால் நெருக்கடிகளை சமாளிக்க முடியாது. இந்த அறிக்கைக்குபின்னர் எனக்கு என்ன நடக்கும் என்பது தெரியவில்லை. எவ்வளவு விரைவாக இந்தப் பொறுப்பில் இருந்து எ;னனை விடுவிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். நடந்து முடிந்த சனாதிபதித் தேர்தல் எவ்வளவு மோசமான சூழலில் நடந்து முடிந்துள்ளது என்பதற்கு இதைவிட என்ன சாட்சியம் வேண்டும். இவ்வாறு கதறிய தேர்தல் ஆணையாளரிற்கு என்ன நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதோ… அடுத்து நடைபெற இருக்கும் பொதுத் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்…. எல்லாம் மகிந்தவின் திருவிளையாடல்களே….! உலகில் எங்குமே நடந்திராதவாறு எதிரணி வேட்பாளரையும் அவரது ஆதரவாளர்களையும் தேர்தல் தலைமை ஆணையாளரையும் உயிர்ப்பயம் கொள்ளச் செய்யும் அளவிற்கு மகிந்தவின் ஆட்சி சிறிலங்காவில் அமைந்துள்ளது என்றால் ஏற்கனவே கேட்பாரற்று தமது விருப்பப்படி கொன்று குவிக்கப்பட்டுவந்த தமிழர்களது நிலை என்னவாக இருக்கும் என்பதே உலகத்தமிழர்களது தீராத கவலையாகவும் முடிவு காணமுடியாத அச்சமாகவும் உள்ளது. சிங்களத்திற்கு சேகவம் செய்து தமது எஞ்சிய காலத்தை விரையமாக்கிவரும் டக்ளசுகளையும், கருணாக்களையும், பிள்ளையானகளையும் இந்தத் தேர்தல் மூலம் தூக்கியெறிந்துள்ள எங்கள் மக்கள் கூத்தடிக்கும் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினையும் நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமைச்சுப்பதவிகளை வைத்துப் பல சலுகைகளை காண்பித்து தமது ராசவிசுவாசத்தை காட்டமுற்பட்ட டக்ளசை யாழ்மக்கள் எவ்வாறு நிராகரித்தார்களோ அவ்வாறே தலைவன் நம்பிய தளபதிகளில் ஒருவனாக இருந்து தமிழினத் துரோகியாக மாறி சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் உபதலைவர் என்ற பதவியை அலங்கரித்த கருணாவும் கழிப்பறை கட்டுவதற்கே பசில்ராசபக்சவிடம் அனுமதி வேண்டி தவம் இருக்கும் கிழக்குமாகாண முதலமைச்சர் பதவியை அலங்காரம் செய்யும் பிள்ளையானும் அரும்பணியாற்றிய நிலையிலும் கூட மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்கிளத்தவர்களில் 69சதவிகிதமான மக்கள் இவர்களை பொருட்டாக கருதாது பொன்சேகாவிற்கு ஆதரவாக வாக்களித்து துரோகத்திற்குரிய தண்டனையினை வழங்கியிருந்தனர். முழுமையாக தமிழர்கள் வாழும் வடக்கு மாவட்டங்களில் 15-20 சதவிகித வாக்குகளே அளிக்கப்பட்டிருந்மை தமிழ்த் தேசியத்தின்பால் வழிநடாத்தப்பட்ட மக்கள் தெளிவாக உள்ளதை அறிந்து கொள்ள முடிகின்றது. கடந்த முறை 2005இல் சனாதிபதித் தேர்தலை புறக்கணிப்பது என தமிழீழ தேசியத்தலைவர் முடிவெடுத்தது தவறானது என வியாக்கியானம் கூறும் சம்பந்தன் இன்று மக்கள் தன்னிச்சையாக வழங்கியிருக்கும் தீர்ப்பிற்கு என்ன பதில் சொல்லப் போகின்றார். தமிழீழ தனியரசே தமிழர்களுக்கு தீர்வாக அமையும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அதனை நான் எப்போதும் ஆதரித்தது கிடையாது என இன்று பிதற்றும் சம்பந்தன் இதனை தேர்தலுக்கு முன்பு தெளிவாக கூறியிருந்தால் துரோகிகளுக்கு வழங்கியதைவிட மிக அருமையான தீர்ப்பினை பதிவு செய்திருப்பார்கள் தன்மானம் காக்கும் தலைவனின் வழிநிற்கும் தாயகமக்கள். புலத்திலே உருப்பெற்றுவரும் அரசியல் தலைமைத்துவத்தின் வளர்ச்சியே சம்மந்தனை இவ்வாறு தடுமாறவைக்கின்றதோ தெரியவில்ல. வட்டுக் கோட்டை தீர்மாணத்தை மீள்வலியுறுத்தி புலம்பெயர் தேசமெங்கும் நடாத்தப்பட்டுவரும் வாக்கெடுப்பில் வரலாறுகாணாத தீர்ப்பினை புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்கள் பதிவு செய்து தமிழீழ தனியரசே எமது விருப்பு என உலக அரங்கில் பறைசாற்றி வரும் நிலையில் சம்பந்தன் எடுத்துவரும் முரண்நிலை பற்றி வேறுஎன்ன சொல்ல. நாடுகடந்த தமிழீழ அரசை நிறுவி அரசியில் ரீதியாக எமது தாயக மீட்பு போராட்டத்தை அனைத்துலக மன்றங்களில் முன்னெடுத்துச் செல்வதற்கு தயாராகிவரும் வேளை தாயகத்தில் இருக்கும் மக்களும் தாமும் போராட்ட உணர்வு குன்றிப்போகாது விடுதலைவேட்கையுடன இருப்ப்தனை கடந்த சனாதிபதித் தேர்தல் மூலம் வெளிப்படுத்தியிருப்பது எம்மை பன்மடங்கு பலம் மிக்கவர்களாக மாற்றியுள்ளதுடன் வீறுகொண்டு களமாடும் உற்சாகத்தினையும் தந்துள்ளது என்றால் மிகையாகாது. நாம் விரும்பியது போன்றே மேற்குலகமும் சிறிலங்காவில் ஆட்சிமாற்றத்தினை விரும்பியதை நடந்து முடிந்த நடைபெற்றுவரும் ராசதந்திர நகர்வுகள் உறுதிப்படுத்துகின்றன. நான்காம் கட்ட ஈழப்போரின் இறுதிநாட்களில் சிறிலங்கா இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை காரணம் காட்டி தைத்த ஆடைகளுக்கான ஏற்றுமதி வரிச்சலுகையினை இடைநிறுத்துவது என போக்கு காட்டிவந்த ஐரோப்பிய ஒன்றியம் தேர்தல் திகதி நெருங்கிவந்தபோது ஆடை ஏற்றுமதிக்கான வரிச்சலுகை நிறுத்தப்படுவதை உறுதி செய்து கொண்டது. அத்துடன் சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராசபக்ச மற்றும் அவரது சகோதரரும் பாதுகாப்புத்துறை செயலாளருமான கோத்தபாய ராசபக்ச மீதும் போர்க் குற்றவழக்கு போடுவதற்கான முன்நடவடிக்கைகளில் அமெரிக்க தனது பினாமிகளான உலகமன்றங்கள் சபைகளின் ஊடாக ஈடுபட்டது. அவ்வாறு ஒரு ஆட்சி மாற்றத்தினை விரும்பியதற்கு பிரதானமாக இரண்டு விடயங்கள் நோக்கப்படுகின்றது. அமெரிக்h மற்றும் மேற்குலக நாடுகளிற்கு எதிரான களத்தில் அணிவகுத்துள்ள சீனா, ரசியா, கியூபா, வெனிசுலா, ஈரான், சவுதிஅரேபியா, வியட்னாம் போன்ற பல்வேறு நாடுகளுடன் பகிரங்கமான உறவினை மகிந்தராசபக்ச ஏற்படுத்திவருவதுடன் பல்வேறு ஒப்பந்தங்களை ஏற்படுத்தி உறவினை வலுப்படுத்தி வருகின்றமை முதன்மைக் காரணமாகும். அடுத்து: தெற்காசியப் பிராந்தியத்தில் கால்பதித்து தமது மேலாதிக்கத்தினை நிலைநிறுத்துவதற்கான வாய்ப்பினை, தமிழீழ தேசியத்தலைவர் வே.பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆளுகையில் அமையும் தமிழீழ தனியரசு பாதிக்கும் எனக்கருதியதால் முள்ளிவாய்கால் வரை விரட்டி விரட்டி தமிழ் மக்களிற்கு அரணாக விளங்கிய எமது விடுதலைப் போராட்டமும் அதன் கட்டமைப்புகளும் சிதைக்கப்பட்டதற்கும் பல்லாயிரக்கணக்கிலான எமதருமை மக்கள் கொன்றொழிக்கப்பட்டதற்கும் ஒத்தாசை வழங்கியிருந்தன இந்த அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள். ஆண்டாண்டுகளாக எமது மக்கள் ஆண்டு அனுபவித்து வந்த அரசு உலக, பிராந்திய வல்லரசுகளின் விருப்பத்திற்கேற்ப முள்ளிவாய்காலில் சிதைக்கப்பட்டு விட்டாலும் புலத்தில் இருக்கும் தலைமைகளும் மக்களும் புது வேகம் பெற்று புதிய பாதையில் பயணிக்க முற்பட்டுள்ளமை இந்த சக்திகளை மீண்டும் அச்சம் கொள்ளவைத்துள்ளது. அதனால்தான் தமது கைப்பாவையாக செயற்படும் பொன்சேகாவை சிறிலங்காவில் சனாதிபதி பதவியில் இருத்தி தமிழர்களிற்கு தற்காலிக தீர்வை திணித்து தனிநாடு, சுயநிர்ணய உரிமை, வலுவான தலைமை போன்றவற்றின் தேவையை இல்லாது செய்து தமது அச்சுறுத்தலை போக்கிக் கொள்வதற்கு இந்த அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் விரும்பியிருந்தன. அவ்வாறு நடைபெற்றிருந்தால் 2002இல் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்த காலப்பகுதியில் எவ்வாறு எமது மக்கள் (வன்னி தவிர்ந்த பிரதேசங்களில் வாழ்ந்த பெரும்பாலான மக்கள்) தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இருந்து அன்நியப்பட்டு கிடைத்த வாழ்க்கையினை ஏற்றுக் கொண்டு வாழப்பழகிக் கொண்டார்களே… அதுபோன்றே தற்போதும் வெளிப்படையாக சில பல வசதிவாய்ப்புக்களை வழங்கி எம்மமை மந்தைகளாக்கியிருப்பார்கள். தற்போது யாழ்ப்பாணத்தில் வீதிச் சோதனைச்சாவடிகள் பெரும்பாலும் அகற்றப்பட்டும் ஆள் அடையாள அட்டை கொண்டுதிரிய வேண்டியதில்லை நினைத்த உடன் சிறிலங்காவின் எப்பகுதிக்கும் சென்று திரும்பலாம் கொழும்பு கடைகளில் கிடைக்கும் அத்தனை பொருட்களும் யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு ஊரிலும் தெருக்களிலும் நடைபாதை கடைகளில் கிடைக்கின்றது இவைதவிர இன்னபிற வசதிவாய்ப்புக்ள் எமது மக்களிற்கு கிட்டியுள்ளன. இவையே போதும் என்னற மனநிலைக்கு எமது மக்கள் இப்போதே வந்துவிட்டனர். புலத்திலிருந்து தொடர்பு கொள்ளும் உறவுகளுடனான உரையாடலில் இதனை வெளிப்படுத்தி வருகின்றனர். இப்போது இங்கு ஒரு பிரச்சினையும் இல்லை…. நீங்கள் ஏன் இன்னும் அங்கை இருந்து கஸ்ரப்படுகிறியள்…. ஊருக்கு வரலாம் தானே… இது போன்ற சில வினாக்களை எழுப்பி தமது நிலையினை வெளிப்படுத்திவருகின்றனர். இவை மேற்சொன்னவற்றை உறுதிப்படுத்துகின்றன. உண்மையில் சொல்லப்போனால் எமது மக்கள் பட்டுவந்த துன்பங்கள் ஏற்படுத்திய தாக்கம்தான் தற்போது ஓரளவு தற்காலிக சுகம் கிடைத்தவுடன் குதூகலிக்க வைக்கின்றது. வீட்டுப் படலையை தாண்டும் போது ஒன்றுக்கு பலமுறை அடையாள அட்டையினை எடுத்துவிட்டோமா என உறுதி செய்து கொண்டு புறப்படும் நிலையும் வீதிக்கு வீதி தெருவுக்கு தெரு இராணுவச் சோதனை சாவடிகளில் குந்தியிருந்து எமது அவசரம் தெரியாது சோதனை என்ற பெயரில் அவதிக்குள்ளாக்கும் சிங்கள இராணுவ வீரர்களது ஆக்கினையினை அனுபவித்தவர்களுக்குத் தெரியும் அதன் தாக்கம். அப்போது மீண்டும் ஒரு போராட்டம் தனி நாடு எனக்கூறிக்கொண்டு அடுத்த கட்டத்தை முன்னகர்த முற்பட்டால் எதுக்கு இவ்களுக்கு தேவையில்hத வேலை நாங்கள் சந்தோசமாக இருப்பது இவர்களுக்கு பிடிக்கவில்லை போல…. என்ற கேள்வியே வரவேற்கும். இதுவே இன்றைய நிலையும் கூட. எழுபதுகளின் ஆரம்பத்தில் அடக்கியாண்ட சிங்களனுக்கு எதிராக போரட களம்புகுந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் போதும் இவ்வாறான கேள்விகளே எமது வீரர்களை வரவேற்pருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் புலம்பெயர் தேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் அரசியல் ரிதியிலான போராட்டங்களும் வரவேற்பில்லாது போய் முக்கியத்துவம் இல்லாது போயிருக்கும். இதனை கருத்தில் கொண்டுதான் சிறிலங்காவில் தமக்கு சார்பான ஒருதலைமையினை கொண்ட ஆட்சியாக சரத்பொன்சேகாவின் ஆட்சியை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் விரும்பியிருந்தன. எப்படியோ அது சாத்தியமற்றதாய் போனபிற்பாடு முதற்காரணமான மகிந்தவின் எதிரணி உறவுகளால் சினமடைந்திருந்த அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் புலத்தில் உள்ள ஈழத்தமிழர்களது அரசியல் தலைமையினை ஏற்று அங்கீகரிப்பது போன்று ஒரு தோற்றப்பாட்டினை ஏற்படுத்தி மகிந்தவிற்கு தூக்கத்தை கலைத்துள்ளன. தமக்கு எதிரான அணியுடன் கரம்கோர்க்கும் மகிந்தவை தட்டிவைப்பதற்காகவே எம்மை நெருங்கி வந்து கொஞ்சிக்குலாவும் நாடுகள் எவ்விதத்திலும் எமக்கான நிரந்தர தீர்வினை பெற்றுத்தரப்போவதில்லை என்பதனை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சிங்களத்திற்கு எதிரான நிலைப்பாடு காரணமாக இருந்தாலும் இவ்வளவு நாட்களாக புலம் பெயர்வாழ் ஈழத்தமிழர்கள் மேற்கொண்ட போராட்டத்தின் காரணமாகவே இன்று அனைத்துலக நாடுகள் ஒப்பிற்காகவேனும் ஏற்றுக்கொள்ள முன்வந்தமைக்கான காரணமாக அமைந்துள்ளது. முன்னர் இந்த புலத்தில் இயங்கிவரும் அரசியல் தலைமைகளை செயலிழக்கச் செய்வதற்கு முன்வந்த இந்த நாடுகள் ஏன் இன்று அரவணைக்கின்றன….? இங்கும் இவர்களது சூழ்ச்சிகள் உள்ளது. முட்கம்பி வதைமுகாம்களில் சிங்களத்தால் கொடும் சிறைவைக்கப்பட்டிருக்கும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட எமது மக்களை மீட்n;டடுத்து அவர்களது பூர்விக மண்ணில் மீண்டும் குடியேற்றுவதும், அனைத்துலக போர் நியமங்களிற்கு புறம்பாக தனிமைச்சிறையில் வைத்து எதிர்காலமே சூனியமாக்கப்பட்டுள்ள பதின்மூவாயிரத்திற்கு மேற்பட்ட போராளிகளை விடுவித்து மறுவாழ்வு ஏற்படுத்திக் கொடுப்பதும் உடனடித்தேவையாக இருக்கும் போது இந்த நாடுகள், மன்றங்கள், சபைகள், அமைப்புகள் எதுவுமே இதுதொடர்பாக சிங்களத்தை வலியுறுத்தவில்லையே… குறைந்தபட்சம் கோரிக்கையோ வேண்டுதலோ வைக்கவில்லையே. செய்யவேண்டியவற்றை தமது வல்லமையினை பயண்படுத்தி செய்யாது எமக்கான நியாயமான உரிமைகளை பெற்றுத்தராது நாடகமாடி எம்முடன் ஒட்டவரும் இவர்களை அவதானத்துடன் கையாளவேண்டியது அவசியமாகும். எமக்கான விடுதலையை யாரும் தங்கத் தாம்பாளத்தில் வைத்து துக்கித்தரப் போவதில்லை. அது எமது உரிமை. அதனை நாம் போராடித்தான் பெறமுடியும். அதுவே இன்றைய யதார்த்த நிலையும் கூட. அதனால்தான் எமது தேசியத்தலைவர் எவ்வித சமரசங்களிற்கு உட்படாது தனது பாதையில் உறுதியுடன் சுதந்திர சோசலிச தமிழீழம் என்ற இலக்கு நோக்கி போராடிக் கொண்டிருக்கின்றார். முள்ளிவாய்க்காலில் முழுவதுமாக முடிந்துவிட்து என்றநிலையில் கூட சில வல்லாதிக்க நாடுகள் தேசியத்தலைவரிடம் சமரசங்கள் பேசியிருந்த போதும் அவற்றை எமது தேசமக்களின் விடுதலையினை முதன்மைப்படுத்தி புறக்கிணத்திருந்ததுடன் பாதுகாப்பான இடத்திற்கு முக்கிய தளபதிகளுடன் நகர்ந்து சென்று தமது இருப்பினை உறுதிப்படுத்திக்கொண்டுள்ளார். இவ்வாறு பாதுகாப்பான இடத்தில் தமது இருப்பினை வெளிப்படுத்தாது உலக பிராந்திய வல்லரசுகளுடன் மௌணப் போர் புரிந்துவரும் எமது தேசியத் தலைவர் புலம்பெயர்ந்திருக்கும் தமிழர்களாகிய எம்மிடம் எதிர்பார்ப்பது தொடர்ச்சியான பங்களிப்பினையே. “இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகில் எந்த மூலையில் வாழ்ந்தாலும், எந்த இடத்தில் வளர்ந்தாலும் எமது தேசவிடுதலைக்கு உறுதியாகக் குரல் எழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களை பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன். அத்துடன் தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையோடு கேட்டுக் கொள்கின்றேன்…..” இவ்வாறு கடந்த 2008 மாவீரர் நாள் உரையில் உலகத்தமிழர்களை நோக்கி வேண்டுகோள் விட்டிருந்தார் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். எனவே அவ்வளியில் தொடர்ந்து போராடுவதே எமது கடரைமயாகும். சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தினை அடைவோமென தாயக மீட்புப் போரில் களப்பலியாகிய முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களதும் அந்த போரில் தோளோடு தோள்நின்று சாவடைந்த இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களதும் கல்லறைகள் மீது கரம்பதித்து உறுதிஎடுத்துக்கொண்டு தற்போது ஏற்பட்டுள்ள அனைத்துலக சூழ்சிகள், தடைகள், நெருக்கடிகள் போன்றவற்றை தகர்த்தெறிந்து தலைவன் வழிகாட்டுதலில் தொடர்ந்து போராடுவோம். தமிழீழம் காண்போம். “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

உயிர்த்தெழுங்கள்…

முள்ளிவாய்க்காலில் பிணமான ஆயிரமாயிரம் பேரோடு பிணங்களான புலம் பெயர் தமிழர்களே உயிர்த்தெழுந்திடுங்கள். இன்னும் எம் உரிமைகள் கிடைக்கவில்லை. நீங்கள் வீதியில் இறங்கி போராடிய அந்த போராட்டத்தின் இலக்கை நாம் இன்னும் அடையவில்லை. பாராம் என்று நீங்கள் சலித்து விட்டால் மீண்டும் மீண்டும் நாங்கள் அடக்கப்ட்டுக்கொண்டிருப்போம். எம் இனத்தில் குரல்கள் அடக்கப்பட்டுள்ளது. அதன் நியாயபூர்வமான கோரிக்கைகள் மறுதலிக்கப்படுகின்றது. அது உங்கள் எல்லோருக்கும் தெரிந்த போதும் அது பற்றிய அக்கறையை காட்ட நீங்கள் யாரும் தயாராய் இல்லை என்பது வேதனையான விடயமாகும். ஆயுதப்போராட்டத்தில் முடிவு எம் ஈழப்போரின் முடிவு அல்ல. நாம் தொடர்ந்து நகரவேண்டும், எம் கனவுகள், எம் தேச மக்களின் சோகங்கள் எல்லாம் களைந்து எமக்கான தேசத்தை அடைய வேண்டும் என்பதில் ஒவ்வொரு தமிழனும் தெளிவாயும் அதே நேரம் அதற்காய் அந்த இலக்கை அடைய தம்மை அர்ப்பணித்து பணியாற்ற தயராய் இருக்க வேண்டும். வீதிகளில் கொடிகளை கொண்டு விரைந்து வந்து நின்ற போது தமிழனின் ஒற்றுமை பற்றி பேசிய இந்த ஊடகங்கள், இன்று எம்மை பற்றி குறைந்த பட்ச செய்திகளை கூட கொண்டுவருவதில்லை. போர் இல்லாதவிடத்து தமிழன் என்பவனின் அடையாளம் அழிக்கப்பட்டிருக்கும் ஆனால் இன்று அந்த விடுதலைப்போர் பின்னடைவைச் சந்தித்துள்ள இந்த வேளை நாம் அந்த இடத்தை நிரப்ப வேண்டும். கடந்த மூன்று தசாப்தங்களாக தம்மை அhப்;பணித்து மூன்று ஒரு சந்ததி போராடி அதன் இலக்கை அடையாது பின்னடைவைச் சந்தித்திருக்கின்றது. முப்பதாயிரத்துக்கு அதிகமான இளைஞர்கள் யுவதிகள் தங்கள் உயிர்களை கொடுத்து சென்றுள்ளனர். இன்னும் லட்சக்கணக்கான மக்கள் இந்த போரின் போது தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். அதுமட்டுமன்றி, கோடிக்கணக்கான சொத்துக்களை நாம் இழந்துள்ளோம். ஊரிழந்து, சொந்த நாடிழந்து சிங்களத்தின் திட்டமிட்ட வல்வளைப்பால் நாங்கள் அகதியாக அடுத்தவன் நாடுகளின் வாழ்கின்றோம். இந்த வாழ்வு எமக்கு இனிக்கின்றது. ஆனால் சொந்த மண்ணில் அகதியாய் சிங்களவன் காவலுக்குள் எந்த நேரம் என்ன நடக்கும் என்ற அச்சத்தில் உறைந்து கிடக்கும் லட்சக்கணக்கான மக்களை பற்றி கவலை இன்றி எம்மால் வாழமுடியுமா? அவர்கள் எம் உறவுகள் என்றில்லை என்று சொல்லி ஒதுக்கிட முடியுமா? புலத்தில் அமிழ்த்தப்பட்ட போராட்டங்கள் மீண்டும் மீட்சி பெறவேண்டும். உறங்கு நிலையில் இருக்கும் இளையோர் அமைப்புக்கள் புலம் எங்கும் சிலருக்கும், சில அமைப்புக்களுக்கும் பின்னால் அணிதிரள்வதை விடுத்து எமது மக்களுக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இளையோர் அமைப்பு முள்ளிவாய்க்காலின் அடுத்த நாளே செயல் இழந்து கிடப்பது வேதனை! தலைவர் இளையோரை நம்பி ஒப்படைந்த போராட்டம் சிலரின் பதவி பசியால் வாடி வதங்கி அந்த இளைஞர்களின் உணர்வுகள் முடக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இளையோரை நீங்கள் அடுத்த கட்ட தலைவர்கள், உங்களுக்குள் நிச்சயமாக பதவிச் சண்டைகள் இல்லை. சிலரின் இந்த சண்டைக்குள் நீங்கள் பலிக்கடாவாக்கப்படுகின்றீர்கள்! எமது இனத்தின் ஒற்றுமையை வளர்க்க வேண்டும் என்பதற்காகவே தலைவரின் சிந்தனையில் உதித்தது இளையோர் அமைப்பு! அந்த அமைப்பு இன்று சிலரின் தலையாட்டு பொம்மையாக செயற்ப்படுவது வருந்தத்தக்கது. இந்நிலை மாற்றம் பெற்று இளையோர் அமைப்புக்கள், மாணவர் அமைப்புக்கள், இன்னும் இதர இளையோர் சம்பந்தமான கழகங்கள் மக்களை அணிதிரட்டி போராட்டங்களை முன்னேடுக்க வேண்டும். அகதி முகாம்களுக்குள் முடங்கி கிடக்கும் உறவுகளை மனதில் வையுங்கள்! இன்னும் இன உணர்வுகளை கொச்சைப்படுத்தி சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்குள் உங்கள் உன்னத அமைப்பை அடகு வைக்காதீர்கள். பிணங்களாய் இருக்கும் அவர்களையும் உயிர்ப்பியுங்கள். நீங்களும் உயிர்த்தெழுங்;கள்.

மே பதினெட்டு எம்தேசிய துயர் பகிர்வு நாளாக எம்மவர்களால் கொண்டாடப்படவேண்டும்

தமிழ் மக்களின் உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்ட நாளை நாம் துக்க தினமாக அனுஸ்டிக்க உலகத்தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மீண்டும் எமது பலத்தை உலகுக்கு காட்டும் வாய்ப்பை தவற விட்டால் மீண்டும் மீண்டும் சபிக்கப்பட்ட இனமாகி வரலாற்றில் வீர தமிழன் வாழ்ந்தார்கள் என்ற சொற்பதம் தமிழீழ வரலாற்றில் இல்லாமல் போய்விடும்.எனவே ஒவ்வொரு தமிழனின் குருதியும் அடங்கிய அந்நாளை துக்க தினமாக அனுஷ்டித்து எம்மவர்களை மீண்டும் உயிர்ப்பிப்போம்.

தமிழர் வரலாற்றின் தொன்மை சொல்லும் கந்தளாய்க் கல்வெட்டுக்கள்

கி.பி 10 ஆம் நூற்றாண்டில் சோழரது நேரடி ஆட்சி இலங்கையில் ஏற்பட்டபோது நாகநாட்டில் இருந்த( தற்போதைய வடகிழக்கு மாகாணம்) தமிழ் அரசும் அவர்களது ஆதிக்கத்துக்கு உட்பட்டது என வரலாற்றாதாரங்கள் மூலம் அறிய முடிகிறது. சோழப்பேரரசின் படையெடுப்பின் மூலம் இப்பிரதேசம் இராஜராஜனின்(கி.பி 985 - கி.பி 1014) ஆதிக்கத்தின்கீழ் வந்தபின் 'இராஜராஜ சதுர்வேதி மங்கலம்' என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. (சோழர் ஆட்சியின் கீழ் தமிழ்ப் பௌத்தர்களால் நிர்வகிக்கப்பட்ட விகாரை இராசராசப் பெரும் பள்ளி யெனப் பெயர்மாற்றம் செய்யப்படதுபோல்) அதன் பின்னர் அவரது மகன் இராஜேந்திரன் (கி.பி 1012 - கி.பி 1044) காலப்பகுதியில் திருகோணமலை நகரம், இராஜ ராஜ சதுர்வேதி மங்கலம்(கந்தளாய்) என்பவற்றை உள்ளடக்கிய பிரதேசம் 'இராஜேந்திர சோழவழநாடு' என அழைக்கப்பட்டிருக்கிறது. கி.பி 1010 ஆம் ஆண்டி ல் இங்கு இராசேந்திர சோழனால் சிவன் கோவில் கட்டப்பட்டது. அப்புராதானக் கோயிலின் சிதைந்த பாகங்களைக்கொண்ட சிவன் பார்வதி சிலை, தூண் சிதைவுகள் , ஆவுடையார் போன்றவை இன்றும் அக்கோயிலின் வரலாற்றுத் தொன்மைதனை பறைசாற்றி நிற்கிறது. வரலாற்றுத் தகவல்களின் அடிப்படையில் இங்கிருந்த ஆலயம் பிரசித்தமானதாகவும், பலர் ஒன்றுகூடி அமர்ந்து கலந்துரையாடக்கூடிய மண்டபங்களைக்கொண்ட பிரமாண்டமானதாகவும் இருந்திருக்கவேண்டுமென அறியமுடிகிறது. கந்தளாயிலுள்ள பேராறு எனுமிடத்தில் அமைந்திருக்கும் இவ்வாலயச் சிதைவுகள் 1950ம் ஆண்டு காலப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் அவ்விடத்தில் அமைக்கப்பட்ட சிவனாலயத்தையே மேலுள்ள படத்தில் காண்கிறீர்கள் இவ்வாலயச் சூழலில் கண்டெடுக்கப்பட்ட பல சாசனங்களில் இருந்து இவ்வாலயத்தின் சிறப்பையும் இங்குவாழ்ந்த மக்களது சமய, பண்பாட்டு நடமுறைகளையும், இப்பிரதேசத்தில் நிலவிய அரசாட்சி பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது. அங்கு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் சொல்லும் செய்திகளின் சுருக்கம். 01. இராஜராஜ சதுர்வேதி மங்கலத்தின் ஊராட்சி அமைப்பான பெருங்குறி(மகாசபை) பொது மக்கள் ஒரு இரவு ஒன்றுகூடி விக்கிரம சோழ வாய்க்கால் தொடர்பாக எடுத்த தீர்மானத்தின் பதிவுகளையே ஒரு கல்வெட்டு சொல்கிறது.இதனை ஆராய்ந்த கலாநிதி.கா.இந்திரபாலாவின் கருத்துப்படி கி.பி 1033 மாசி 13ம் திகதி/ கி.பி 1047 மாசி 10 ம் திகதி இம் மகாசபைக்கூட்டம் நிகழ்ந்திருக்கவேண்டுமெனக் கருதுகிறார். 02. இங்குள்ள இன்னுமொரு சாசனம் முதலாம் விஜயபாகு தேவரின் 42 ம் ஆட்சியாண்டிலே எழுதப்பட்டது.(கி.பி 1097) நங்கைசானி என்னும் பிராமணப்பெண் தனது கணவனின் நினைவாக சதுர்வேத மங்கலத்து விஜயராஜ ஈஸ்வரம் என்னும் ஆலயத்தில் ஏற்படுத்திய அறக்கட்டளை பற்றிய விவரங்களை அது வர்ணிக்கிறது. 03.கி.பி 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதாவது கி.பி 1103 ஆண்டுக்குரியதான கல்வெட்டில் கந்தளாய் என்றே அக்காலத்தில் இப்பிரதேசம் அழைக்கப்படதாக அறிய முடிகிறது. அத்துடன் பொலநறுவையை ஆட்சி புரிந்த விஜயபாகு தனது 37ஆம் ஆட்சியாண்டில் தானமளித்தான் என்பதையும் அறியமுடிகிறது. இதுவரை இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் இதில்தான் முதன் முறையாக திருப்பள்ளியெழுச்சி, திருப்போனகம் என்னும் சொற்பதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பேராசிரியர் பத்மநாதன் அவர்கள் குறிப்பிடுகிறார். இவை தவிர சோழ இலங்கேஸ்வரன், சோழர்களின் ஆட்சிமுறை, என்பனவற்றோடு தமிழர்களின் தொன்மையையும் ஆதாரப்படுத்தி நிற்கும் இச்சாசனங்கள் அரிய பொக்கிசங்களாகும்.

ஜேர்மனியில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்கள்!

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்களை மே மாதம் 2 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் நடாத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதனைத் தாங்கள் அறிவீர்கள். ஊடக அறிக்கை 24.03.2010 ஜேர்மனியில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்கள்! நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்களை மே மாதம் 2 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் நடாத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதனைத் தாங்கள் அறிவீர்கள். இவ் அடிப்படையில் ஜேர்மனியில் நடாத்தப்படவுள்ள தேர்தல்கள் தொடர்பான திட்டங்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அமைப்பதற்கான செயற்குழுவின் அனைத்துலகச் செயலகத்தினால் வகுக்கப்பட்டுள்ளன. 82 மில்லியன் மக்கள் தொகையையும் 357112 சதுர கிலோமீட்டர் பரப்பளவையும் கொண்ட இன்றைய ஜேர்மனி (கிழக்கும் மேற்கும் இணைந்த) பதினாறு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் கிழக்கு ஜேர்மனியில் (ஐந்து மாநிலங்கள்) மிகச் சொற்ப எண்ணிக்கையிலான தமிழர்களே வாழ்கிறார்கள். மிகுதியாகவுள்ள பதினொரு மாநிலங்களிலும் (மேற்கு ஜேர்மனி) தமிழர்கள் பரந்து வாழ்கிறார்கள். இவற்றை அடிப்படையாக வைத்தே ஜேர்மனியில் தேர்தல்களை நடாத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. நான்கு தேர்தல் தொகுதிகள்: 10 பிரதிநிதிகள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவைக்காக ஜேர்மனியில் இருந்து தெரிவு செய்யப்படவேண்டியுள்ள 10 பிரதிநிதிகளையும் தமிழர்கள் பரந்து வாழும் பிரதேசங்கள் முழுவதிலிருந்தும் தெரிவு செய்யும் நோக்கத்தில் பதினொரு மாநிலங்களையும் நாம் நான்கு தேர்தல் தொகுதிகளாகப் பிரித்துத் தேர்தலை நடாத்த எண்ணியுள்ளோம். இவை பற்றிய விபரங்கள் பின்வருமாறு: தேர்தல் தொகுதி 1: Berlin மாநிலம் (தலைநகரை உள்ளடக்கியது) - 1 பிரதிநிதி தேர்தல் தொகுதி 2: வடக்கு ஜேர்மனி: Bremen, Hamburg, Niedersachsen, Schleswig-Holstein - 2 பிரதிநிகள் தேர்தல் தொகுதி 3: மத்திய ஜேர்மனி: Nordrhein-Westfalen (தமிழ் மக்கள் மிகவும் செறிந்து வாழும் இடம்) - 4 பிரதிநிகள் தேர்தல் தொகுதி 4: தெற்கு ஜேர்மனி: Baden-Württemberg, Bayern, Hessen, Rheinland-Pfalz, Saarland - 3 பிரதிநிகள் கிழக்கு ஜேர்மனியில் வாழும் சொற்ப எண்ணிக்கையிலான தமிழ் மக்கள் இத் தேர்தலின் போது பேர்லின் மாநிலத்துடன் (தேர்தல் தொகுதி1) இணைக்கப்படுவர். தேர்தல்களை ஒழுங்கு செய்து நடாத்துவதற்காக நான்கு தேர்தல் தொகுதிகளுக்கும் தனித்தனியே செயற்பாட்டுக் குழுக்கள் அமைக்கப்படும். இச் செயற்பாட்டுக் குழுக்கள் தேர்தல் ஆணையங்களை உருவாக்கி ஜேர்மனியின் நான்கு தேர்தல் தொகுதிகளிலும் தேர்தலை நடாத்துவர். இச் செயற்பாட்டுக் குழுக்கள் எமது அனைத்துலகச் செயலகத்தினால் ஒருங்கிணைக்கப்படும். இந் நான்கு தேர்தல் தொகுதிகளில் முதற்கட்டமாக தெற்கு ஜேர்மனிக்கான செயற்பாட்டுக்குழு விபரங்கள் இன்றைய தினம் அறிவிக்கப்படுகிறது. ஏனைய மூன்று தேர்தல் தொகுதிகளுக்கும் உரிய செயற்பாட்டுக்குழு விபரங்கள் விரைவில் அறியத்தரப்படும். தேர்தல் தொகுதி 4: தெற்கு ஜேர்மனிக்கான செயற்பாட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் திரு குலசேகரம் குலதீபன் 01773444282 Bayern மாநிலம்: மயில்வாகனம் ரமணன் 01638638697 அரசரட்ணம் நகுலேந்திரன் 01772098267 கிருஸ்ணமூர்த்தி தவராசா 01781300627 ஆசீர்வாதம் வின்சன் 01602259496 Hessen மாநிலம்: சாரா தவராஜா 01736978263 கிசோதனன் தேசிங்குராஜா 0277134786 Rheinland-Pfalz மாநிலம்: சுப்பிரமணியம் சிவானந்தன் 017645111626 அப்பையா தேவதாஸ் 017641037065 Baden-Württemberg & Saarland மாநிலங்கள்: கலைமகன் தங்கவேல் 01773430627 சஜீர்தன் பஞ்சலிங்கம் 017663348559 கவிதாஸ் சிவராஜா 01736275988 அன்புசெல்வன் பாலசுந்தரம் 01742117163 ஜெல்சன் ஜெகநாதன் 017665578202 வசந்தராணி பஞ்சலிங்கம் 017663348559 சாகித்தியா ஜெகதீஸ்ஐயர் 07191960739 ஜெயச்சந்திரன் பாலச்சந்திரமூர்த்தி 017682134527 அருள்தாஸ் பாலசுந்தரம் 01742117163 முகுந்தன் அன்னலிங்கம் 01772023046 நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்களை குறிப்பிட்ட காலத்தில் நடாத்தி முடித்து அரசாங்கத்தின் முதலாவது அமர்வினை மே மாதம் 17-19 காலப்பகுதிக்குள் கூட்டுவதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவை இக் காலப்பகுதிக்குள் கூடுவது முள்ளிவாய்க்காலுடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முறியடித்து விட்டதாகக் கூறி மார் தட்டும் சிறிலங்கா அரசுக்கு ஈழத் தமிழர் தேசம் கொடுக்கும் குறியீட்டு வடிவிலான பதிலடியாக அமையும். இத் தேர்தல்களை ஜேர்மனியில் வெற்றிகரமாக நடாத்தி முடிப்பதற்குத் தேவையான உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்குமாறு ஜேர்மனியில் உள்ள அனைத்துத் தமிழ் அமைப்புக்களையும் அன்புடன் அழைக்கிறோம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அமைக்கும் திட்டத்துடன் இணைந்து இயங்க விரும்பும் அனைவரையும் எம்முடன் தொடர்பு கொள்ளுமாறும் வேண்டுகிறோம். நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: infogermany@govtamileelam.org விசுவநாதன் ருத்ரகுமாரன் இணைப்பாளர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான செயற்குழு