இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
புதன், 7 ஏப்ரல், 2010
பொய்ப் பரப்புரையில் ஈடுபடும் தமிழ்வின் இணையத்தளம்
தமிழ்த் தேசியத்திற்காகக் குரல் கொடுக்கின்றோம் எனக்கூறும் “தமிழ்வின்” இணையத்தளம், கடந்த சில நாட்களாக தமிழ்த் தேசவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக, தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் திருகோணமலை வேட்பாளர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர். பிலிப்பையா ஜோன்சன் தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்களால் கத்திக் குத்துக்கு இலக்கான நிலையில், தமது அணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனாலேயே இந்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாகவும் தமிழ்வின் இணையத்தளம் பொய்ப்பரப்புரையை மேற்கொண்டு வருவதாக திருகோணமலை முதன்மை வேட்பாளர் சண்முகராஜா கெளரிமுகுந்தன், மற்றும் பிலிப்பையா ஜோன்சன் ஆகியோர் கூட்டாகக் கூறியுள்ளனர். தோ்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகி விட்டார்கள் என்பது உட்பட, இவ்வாறான பல பொய்ப் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அதனையும் மீறி தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு ஆதரவு பெருகி வருவதால், தமிழ்வின் இணையத்தளம் இவ்வாறான அடாவடித்தனமான பொய்ப் பரப்புரையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. உண்மையான ஊடக தர்மத்துடன் இந்த இணையத்தளம் இயங்கினால் இருவரிடமும் கருத்துக்கேட்டு அதனை உறுதி செய்திருக்க வேண்டும் என, இரண்டு வேட்பாளர்களும் கண்டனம் வெளியிட்டனர். கெளரிமுகுந்தனும், ஜோன்சனும் பிளவுபட்டுள்ளதாகக் கூறும் தமிழ்வின் இணையத்தளம், அவர்கள் இருவரும் மருத்துவமனையில் இணைந்திருக்கும் நிழற்படத்தை, தங்களுக்குத் தெரியாமலே வெளியிட்டுள்ளமைதான் மிகவும் நகைப்பிற்கிடமான விடயமாகும். தமிழ்வின், லங்காசிறி போன்ற இணையத்தளங்களின் உரிமையாளரான சுவிசில் வசிக்கும் சிறிகுகனின் சகோதரரான சிறீதரன் தமிழரசுக் கட்சியின் சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடுவதால், ஒருபக்க செய்திகளையும், இவ்வாறான விசமப் பரப்புரைகளையும் அந்த இணையத்தளம் மேற்கொண்டு வருவதாகக் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
நெஞ்ச நிமித்துக் கொண்டு போகிறார்.
1995 ஆம் ஆண்டு ஆகஸ்டு வரை விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் யாழ்ப்பாண வீதிகளில் எங்கும் யாரும் போகலாம் வரலாம். புலிகள் எந்தத் தடையும் போடவில்லை. காவலரணும் வைத்துக் காத்திருக்கவில்லை. ஆனால் 1995 இறுதியில் சூரியக் கதிர் இராணுவ நடவடிக்கை மூலம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய சிங்களப் படைகள் அங்கு பல மாற்றங்களை உண்டு பண்ணின.
உயர் பாதுகாப்பு வலயங்களை நிறுவின.
பாதைகளை மூடின.
காவலரண்களை அமைத்துக் கண்காணித்தன.
சோதனைச் சாவடிகளைத் திறந்தன.
கண்ணிவெடி வயல்களை உருவாக்கின.
மனிதப் புதைகுழிகளை நிறுவின.
வதை முகாம்களை நிறுவின.
காணிகளை சூறையாடின.
வீடுகளை இடித்துத் தள்ளின.
இப்படி என்னென்ன அடக்குமுறைகளை எல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் தங்கு தடையின்றி செய்து கொண்டே இருந்தனர் கடந்த 15 ஆண்டுகளாக. இதற்கு எல்லாம் ஒத்தூதிக் கொண்டு சிங்களத்தின் கால் பிடித்து பிழைப்பு நடத்தியவர் தான் இப்போ சிலரால் தமிழர்களின் தலைவராம் என்று சொல்லி யாழ்ப்பாணத்தில் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு திரியுறாராம் தங்கள் தலைவர் என்று டக்கிளஸ் தேவானந்தா என்ற சிங்கள அருவடியை முன்னிறுத்தி வருகின்றனர்.
அவர்களின் தங்கத் தலைவர்.. கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முதல் நாள் தென்மராட்சி மக்களை மீளக் குடியேற்றுகிறேன் என்று கூட்டிப் போய் படம் எல்லாம் எடுத்து பேப்பரில போட்டார். ஆனால் இறுதியில் தலைவரின் முயற்சிகள் எதுவும் கைகூடாத நிலையில் மக்கள் ஏமாற்றத்தோடு திரும்பினர்.
இன்றோ.. தலைவர் தனது சிங்கள அருவருடிக் கூட்டத்திடம் கெஞ்சி மன்றாடி தாங்களே பூட்டி வைத்திருந்த யாழ்ப்பாண மணிக்கூட்டுக் கோபுரம் நோக்கிய பாதையை திறந்து வேடிக்கை காட்டுகிறார். யாருக்கு இவர்கள் பூச்சாண்டி காட்டுகின்றனர்.
இதே பாதையால் எந்த தங்கு தடையும் இன்றி 1994 இல் பிக் மச் (யாழ்ப்பாணத்தில் பாடசாலைகள் மத்தியில் நடக்கும் பிரபல கிரிக்கெட் போட்டி) போய் பார்த்தவன் என்ற முறையில்.. இந்தப் பேடிகளின் கூத்தை.. இதுதான் சமாதானம்.. சுதந்திரக் காற்று என்று மக்களுக்கு காட்ட விளையும் இந்தத் தெருக் கூத்துக்களை கண்ணுறும் போது.. வேதனை தான் மிஞ்சுகிறது.
எங்கள் வீட்டில் வந்து நின்று கொண்டு எங்களுக்கே தடை போட்டுவிட்டு.. அந்தத் தடையை திறக்கிறம் என்றும் எங்களுக்கு விடிவளிக்கிறம் என்றும் வெளிக்கிட்டுள்ள இந்த விடிவெள்ளிகள்.. நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு போகவும் சிங்களப் படைகள் தான் சீருடையிலும் சிவிலிலும் காவலுக்குத் திரிகின்றன.
இதுதான் யாழ்ப்பாணத்தார் 30 ஆண்டுகளின் பின் சுவாசிக்கும் சுதந்திரக் காற்றின் மகிமையாம். கேட்கிறவன் கேணயன் என்றால் எருமை மாடும் ஏரேபிளேன் ஓடுமாம் என்பது இதைத்தான்.
இந்திய இராணுவ ரகசியங்களை திருடியது சீனா!
இந்தியாவின் ஏவுகணை தொழில்நுட்பம் உள்ளிட்ட ராணுவ ரகசியங்களை சீனா திருடியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்திய ஏவுகணையின் பழைய தொழில்நுட்பம் மட்டுமல்லாது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நடமாடும் வாகனத்தில் இருந்து செலுத்தப்படும் ஏவுகணை தொழில்நுட்பம் வரை அவர்கள் திருடிவிட்டார்கள் என்று அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்து உளவு நிபுணர்கள் கூறி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அமெரிக்க மற்றும் கனடா உளவு நிபுணர்கள், கணிப்பொறி மூலம் ஒரு நாட்டின் ரகசியங்களை பிற நாடுகள் திருடுவது குறித்து உளவு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அவர்கள் கடந்த 6 மாதம் நடத்திய உளவு நடவடிக்கையில் இந்தியாவின் இராணுவ ரகசியங்களை சீனா திருடியது அம்பலமானது.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பது: இந்தியாவின் இராணுவ ரகசியங்களை மட்டுமல்லாது அந்நாட்டின் வெளிநாட்டு உறவு ரகசியங்களையும் சீனா திருடியுள்ளது. இந்த ரகசியத் தகவல்கள் அனைத்தையும் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சக அலுவலகம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் உலகம் முழுவதும் இந்திய தூதரகங்களில் உள்ள கணிப்பொறியில் இருந்து திருடப்பட்டுள்ளன.
அந்தவகையில் பெல்ஜியம், செர்பியா, ஜெர்மனி, இத்தாலி, குவைத், அமெரிக்கா, ஜிம்பாப்வே, சைப்ரஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளின் இந்திய தூதரகங்களில் உள்ள கணிப்பொறிகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தகவல்கள் திருடப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானின் இந்திய தூதரக அலுவலகத்தில் விசாவுக்கு விண்ணப்பிக்கப்பட்டிருந்த தகவல்களும் திருடப்பட்டுள்ளன. நாகாலாந்து, திரிபுரா, மணிப்பூர், அசாம் ஆகிய மாநிலங்களில் பாதுகாப்பு சூழல் குறித்து ஆய்வு செய்து பாதுகாக்கப்பட்டுவந்த தகவல்கள் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தின் கணிப்பொறியில் இருந்து திருடப்பட்டுள்ளது.
ஒரு நாட்டின் இராணுவ ரகசியங்களை பிற நாடுகள் திருடுவதென்பது எளிதான விஷயமல்ல. அதனால் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இந்திய இராணுவ ரகசியங்களை சீனா எப்படி திருடியது என்பது தெரியவில்லை. இதற்கு இந்தியர்களே உடந்தையாக இருந்தார்களா என்பதும் தெரியவில்லை. தவிர, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவின் அலுவலக கணிப்பொறியில் இருந்தும் ரகசியத் தகவல்களை சீனா திருடியுள்ளது.
இந்த தகவல் எப்படி திருடப்பட்டது என்பதும் மர்மமாக உள்ளது. இதை கண்டறிய நாங்கள் பல்வேறு வழிகளில் தீவிரமாக முயற்சித்தோம். ஆனால் எங்களால் இறுதிவரை கண்டறிய முடியவில்லை என்று அந்த அறிக்கையில் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மாவோயிஸ்ட் தாக்குதலில் 73 காவலர்கள் பலி!
சட்டீஸ்கர் மாநிலம் டாண்டேவாடாவில் இன்று காலை மாவோயிஸ்ட்கள் நடத்திய படு பயங்கரமான தாக்குதலில் மத்திய ரிசர்வ் பொலிஸ் படையைச் சேர்ந்த 73 காவலர்கள் பலியாயினர்.சடலங்களை மீட்க ஹெலிகொப்டர் அனுப்பப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
120 பேர் கொண்ட சி.ஆர்.பி.எஃப். படையினர் இன்று காலை பாதை திறப்பு ஒன்றில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்தனர். சிண்டல்னர், டர்மெட்லா ஆகிய பகுதிகளுக்கு இடையே வந்துகொண்டிருந்தபோது, முக்ரனா வனப்பகுதியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சுமார் 1000 பேர் கொண்ட மாவோயிஸ்ட்கள் இத்தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.முதலில் காவல்படையினர் வந்த வாகனம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திறந்த வெளியில் வந்த படையினர் மீது மாவோயிஸ்ட்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
மேலும் 6 இடங்களில் மாவோயிஸ்ட்களுக்கும், காவல்துறையினருக்கும் சண்டை நடந்து வருவதாகவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. மாநிலத்தின் உயர் காவலதிகாரிகள் தாக்குதல் நடந்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.இந்தத் தாக்குதலை காட்டுமிராண்டித்தனமானது என்று வர்ணித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தான் அதிர்ச்சியில் உறைந்திருப்பதாகத் தெரிவித்தார்.
மாவோயிஸ்ட்கள் நாட்டின் முதல் எதிரிகள் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று பேசியிருந்தார். இதையடுத்தே இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இதனிடையே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.மேலும் அடர்ந்த வனப்பகுதி என்பதால் உடல்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது
நாவலடி பிரதேசம் சிங்களவர்களின் குடியேற்ற பகுதியாக மாற இருக்கின்றது.
மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட உல்லாச பயணிகளால் கவர்ந்திழுக்கப்படும் தமிழர்களின் பூர்வீக பிரதேசமாக கருதப்படும் நாவலடி பிரதேசம் சிங்களவர்களின் குடியேற்ற பகுதியாக மாற இருக்கின்றது. 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி இயற்கை அனர்த்தத்தினால் முற்றாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மட்டக்களப்பு நாவலடி பிரதேசமும் ஒன்று. இந்த பிரதேசத்தின் கிழக்கு பகுதியில் கடலும் மேற்கு பகுதியில் வாவியும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 500 மீற்றருக்கும் குறைவான அகலம் கொண்டதாக இப்பிரதேசம் அமைந்துள்ளதால் இப்பிரதேசத்தில் சுனாமிக்கு பிறகு மக்கள் வசிப்பதற்கு அஞ்சியதாலும் கடற்கரைக்கு அண்டிய பிரதேசங்களில் குடியிருப்புக்களை அமைப்பதற்கு அரசு அங்கிகாரம் வழங்காமையாலும் இப்பிரதேச மக்கள் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பிறிதொரு பிரதேசமான திராய்மடு எனும் பிரதேசத்தில் குடியமர்த்தப்பட்டார்கள் இருந்தும் ஒரு சிலர் மாத்திரம் அங்கேயே குடியிருப்புக்களை அமைத்து தற்காலிகமான முறையில்தான் வசிக்கிறார்கள். இதேவேளை கடந்த வருடம் இப்பிரதேசத்தில் உல்லாச பயண விடுதிகளை அமைப்பதற்கு தகுதியானவர்களிடமிருந்து அரசினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 5 வருடங்கள் கடந்த நிலையில் மக்கள் அச்சம் இன்றி நாவலடி பிரதேசத்திற்கு வருகிறார்கள் பலபேர் அங்கேயே வசிக்கிறார்கள் இந்த நிலையில் தற்போது உல்லாச பயணிகளும் இங்கே வருவதற்கு தொடங்கி உள்ளார்கள். இதனால் சில தமிழ் தொழில் அதிபர்கள் தாங்களும் இங்கே உல்லாச பயண விடுதிகளை அமைப்பதற்கு அரசிடம் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார்கள் ஆனால் அவர்களின் அனுமதி மறுக்கப்பட்டது அதேவேளை பாரியளவிலான உல்லாச பயண விடுதிகளை சிங்களவர்களைக்கொண்டு அமைக்கவும் அதில் வேலை பார்ப்பதற்காக அதன் சுற்றுவட்டாரங்களில் சிங்கள குடியேற்றங்களையும் அவர்களை பாதுகாப்பதற்காக ஒரு கடற்படை தளத்தையும் அரசு அமைக்க திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களினூடாக அறிய முடிகின்றது. இதன் முதற்கட்ட நடவடிக்கையாக இப்பிரதேசத்தின் நில அளவை படங்களை கச்சேரி ஊடாக அரசு கோரி இருக்கின்றது. இப்பிரதேசத்தில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ்மக்கள் இனிவரும் காலங்களில் தங்களது பாரம்பரிய பிரதேசத்தையே பார்க்கமுடியாதவாறு அமையப்போகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் மற்றுமொரு சுற்றுலா தளமாக விளங்குகின்ற பாசிக்குடா பிரதேசத்தின் பல பகுதிகளை ஏற்கனவே சிங்களவர்கள் (பசில் ராஜபட்ச உட்பட) சுவீகரித்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வடக்கு கிழக்கு பிரதேசங்களின் எல்லை கிராமங்களில் அத்து மீறிய சிங்கள குடியேற்றங்களை திட்மிட்டு செயற்படுத்தி வருகின்ற ஸ்ரீ லங்கா அரசானது தற்போது கரையோர பிரதேசங்களிலும் அதை விஸ்தரித்து இன்னும் எங்கெல்லாம் பலாத்காரமாக தமிழர்களின் நிலங்களை அபகரிக்கப் போகின்றதோ தெரியாது
தமிழனின் குருதியை உடல் முழுக்க பூசி, உளவியல் ரீதியாக தம்மை அரக்கர்களாக பதிவு செய்து கொண்டார்கள்...........
பூமி உருண்டையானது. அது மாற்றங்களை நிகழ்த்திக்கொண்டே தாமும் இயங்கிக் கொண்டு, வரலாற்றையும் இயக்கிக் கொண்டிருக்கும் தன்மை வாய்ந்தது. இந்த இயக்கத்தில் பல்வேறு நிகழ்வுகள், அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கலாம். சில நிகழ்வுகள் வியப்பை தந்திருக்கலாம். சில அச்சத்தையும், வேறு சில மகிழ்வையும் விளைவித்திருக்கலாம். இவை அனைத்தும் மாறி மாறி நிகழ வேண்டும் என்பது ஒரு நியதி. மாற்றங்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. கால ஓட்டத்தில் அனைத்தும் கலந்து அடித்துச் செல்லப்படும். அவைகளின் திடமான பதிவுகள் வரலாறாய் நிலைத்து நிற்கும். அந்த அடிப்படையில்தான் பல்வேறு சம்பவங்கள் நமக்கு நினைவுகளாய் நிலைத்து விடுகின்றன. அவை நாம் விரும்பினாலும் மனங்களைவிட்டு அகன்று போகவில்லை. இது கால, சமூக கட்டமைப்பிற்கு ஏற்றவாறு மாந்தகுலம் ஏற்று, அனுபவித்துவரும் ஒரு இயக்கவியல் கோட்பாடு. இதிலிருந்து யாராலும் மீற முடியாது. இதிலிருந்து ஒருவரும் தப்பித்துச் செல்ல முடியாது.எந்த மனிதனும் இயந்திரத்தனமாக வாழ்வதற்கு காலம் அனுமதிப்பதில்லை. அழுகையும், சிரிப்பும், கவலையும், மகிழ்வும் கலந்து தான் காலம் நம்மை அழைத்துச் செல்கிறது. நாம் அழுத காலம் நிறைவு பெறத் தொடங்கிவிட்டது. நமது சிரிப்பின் காலம் தொடங்கிவிட்டது. நமது தேசிய தலைவரின் ஆழ்ந்த அரசியல் அறிவு, அதன் அடிப்படை நகர்வுகள் சிங்கள பேரினவாத பேயாட்டத்தின் தத்துவார்த்த தவறுகளை நன்கு அறிந்த காரணத்தால் நாம், நமது கருவிகளை களத்தில் அமர செய்துவிட்டு, அவர்களுக்குள்ளான கருவி ஏந்தலை கணித்துக் கொடுத்திருக்கிறோம். மகிந்தா அரசு தமது மமதையான செயல்பாட்டால் தமிழீழத்தின்மீது தொடுத்த கடுஞ்சமர் இன்று ஒரு எல்லைக்கு வந்துவிட்டது. எந்த ஒரு பயணமும் முடிவற்றதாக இருக்க முடியாது. எந்த ஒரு நிகழ்வும் தொடர்ந்து நிகழப்போவது கிடையாது. கால அளவில் எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை இருக்கிறது.
மகிந்தாவின் கொடுஞ்செயலுக்கான எல்லை, மகிந்தாவாலேயே வகுக்கப்பட்டுவிட்டது. தாம் எந்த அளவையால் அளந்தோமோ அதே அளவையால் நமக்கும் அளக்கப்படும் என்கின்ற கோட்பாட்டியல் மகிந்தாவின் வாழ்வில் உண்மையாகிக் கொண்டிருக்கிறது. தமிழீழ வரலாற்றை பெரும் எழுச்சிக்கு உள்ளாக்கிய மகிந்தா, உள்ளபடியே நமது வாழ்த்துக்குரியவர். ஒருவேளை தமிழீழ வரலாற்றின் இந்த துயர், அத்தியாயம் படைக்கப்படாமல் இருந்தால், உலகலாவிய பெரும் ஒத்துழைப்பு நமக்கு இந்த அளவிற்கு கிடைப்பதற்கான வாய்ப்பு குறைந்திருக்கும். ஆனால் நமது சிந்தனை, தேசிய தலைவரின் வழிக்காட்டுதல், நாம் களமாடிய நேர்த்தி, நமது மாவீரர்களின் கனவு, நமக்கான தமிழ் தேசிய மண்ணை பெரும் வரலாற்று சிறப்போடு படைத்தளிக்க உறுதி அளித்திருக்கிறது.
கடந்த காலங்களில் நாம், ஒன்றுப்பட்ட தேசிய இனம் என்று மிகவும் ஆர்ப்பாட்டத்தோடு அறிவித்து, தேசிய அரசியல் பேசிய மகிந்தாவின் பொய் முகம் கிழித்தெறியப்பட்டிருக்கிறது. மகிந்தாவிற்கெதிராக சிங்கள மக்கள் சிலிர்த்தெழுந்து களம்காண தொடங்கியிருக்கிறார்கள். ஒரு சர்வாதிகாரியை வீழ்த்த வேண்டும் என்பதிலே சிங்கள ஜனநாயக பண்பு கொண்ட மக்கள், ஒரே அணியாய் திரண்டிருக்கிறார்கள். அதன் அடையாளமாக கடந்த சில நாட்களுக்கு முன் ஜப்பானிலே மகிந்தாவை கண்டித்து சரத்தை விடுதலை செய்யக் கோரி, சிங்கள மக்கள் கோரிக்கை முழக்கம் செய்திருக்கிறார்கள். இது சிங்கள பேரினவாதி மகிந்தாவின் ஜனநாயக துரோகத்தை உலகநாடுகளில் அம்பலப்படுத்த பெரும் உதவிப் புரிந்தது. தமிழீழ மக்கள் ஒன்றிணைந்து மகிந்தா ஒரு போர் குற்றவாளி.
தமிழீழ மக்கள்மீது மகிந்தா நடத்திய தாக்குதல் இன அழிப்பு நடவடிக்கை என்றெல்லாம் உயர முழங்கியபோது, அந்த குரல்களை முடமாக்கிய மகிந்தாவின் பணம், அரசியல் நிலைப்பாடுகள் இப்போது சிதறி சின்னாபின்னமாகிப் போய் கொண்டிருக்கிறது. இலங்கையிலே சரத்தை விடுதலை செய்யக்கோரி புத்தபிக்குகள் உண்ணாநிலை போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள். சரத்தை விடுதலை செய் என்று புத்த பிக்குகள் எடுத்த போராட்டத்தின் அடையாளம் மகிந்தா ஒரு கொடுங்கோலன், அடக்குமுறையாளன். அவனை எதிர்த்து யார் பேசினாலும் எழுதினாலும் அல்லது கருத்துக் கூறினாலும் அவர்களை சிறையில் அல்ல, சிரமே தறிக்க தயங்கமாட்டான் என்பதை புத்த பிக்குகளின் போராட்டம் உறுதிபடுத்தி இருக்கிறது. எந்த புத்தபிக்குகள் சிங்கள-பௌத்தத்தை உயர்த்திப்பிடித்து, சிங்கள-பௌத்த பேரினவாதத்தை தாங்கி, அதற்கு எதிரான நிகழ்வு நடந்தபோது, அன்பைப்பற்றி போதித்த, புத்தனின் வழி வந்தவர்கள், மனிதக்கறியை கரத்தில் ஏந்திய கொடுஞ்செயலை செய்து முடித்தவர்கள், தமிழனின் குருதியை உடல் முழுக்க பூசி, உளவியல் ரீதியாக தம்மை அரக்கர்களாக பதிவு செய்து கொண்டார்கள்.
அப்படி, சிங்கள பேரினவாதத்தின் அரணாக இருக்கக்கூடிய புத்த பிக்குகள், இன்று சிங்கள பேரினவாதத்திற்கு துணை நிற்கும் மகிந்தாவை எதிர்த்து களம் கண்டிருப்பது, இலங்கை-சிங்கள தேசிய அரசியல் வரலாற்றில் ஒரு புதிய திருப்புமுனையை உண்டாக்கப்போகிறது என்பதை நமக்கு தெரிவிக்கிறது. மகிந்தாவின் வீழ்ச்சி படிப்படியாய் தொடங்கிவிட்டதின் அடையாளம்தான் இன்று மகிந்தாவிற்கெதிராக சிங்கள மக்கள் தெருவுக்கு வந்து போராடத் தொடங்கியதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மகிந்தா, சிங்கள பேரினவாதிகளை மட்டுமல்ல, தமிழின துரோகிகளை தமது பக்கத்தில் அமரச் செய்து, தமிழனை காயடிக்கும் அரசியலை செய்யப்புறப்பட்டு, அதற்கு எச்சில் துண்டுகளாக மந்திரி பதவிகளையும், பணத்தையும் வழங்கியதை வாலாட்டிக் கொண்டு, நாய் பிழைப்பு பிழைக்கும் இந்த நயவஞ்சக துரோகிகள், மகிந்தாவின் பக்கத்தில் சிரிக்க சிரிக்க நின்ற நிகழ்வுகள், இன்று தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை நாம் செய்திகளில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
எமது தேசிய ராணுவம் தமிழீழ பகுதிக்குள் நிலைக்கொண்டிருந்தவரை, தமிழீழ பகுதிக்குள் எட்டிப் பார்க்கக்கூட அச்சம் கொண்டிருந்த மகிந்தா, இன்று எமது தேசிய ராணுவம் இல்லாத தைரியத்தில் தமிழீழ மக்களிடம் வாக்கு சேகரிக்க சென்று, மூக்கறுப்பட்டு திரும்பி இருக்கிறார். பெருமளவில் ஆள்திரட்டி மகிந்தாவை குளிர செய்யலாம் என தமிழின துரோகிகள் போட்ட திட்டம் தவிடுப்பொடியாகி இருக்கிறது. மேடையிலேயே கோபப்பட்டு வெளிப்படுத்திய மகிந்தா, தமது சரிவை உறுதி செய்திருக்கிறார். தோல்வி காண்பவர்களுக்கும், எதிர்சமர் புரிய அச்சப்படுபவர்களுக்கும் தான் கோபம் என்பது இயல்பான உணர்ச்சியாக வெளிப்படும். மகிந்தா, அச்சத்திலிருப்பதின் வெளிப்பாடுதான், மேடையின்மீது மகிந்தா பட்ட கோபம் என்பது நமக்கு தெளிவாகிறது.
எமது பகுதிகளில் ஒரு பழமொழி சொல்வார்கள். முட்டாளுக்கு மூன்று இடத்தில் மலம் என. காலில் மிதித்த மலத்தை கழுவிக் கொள்ளாமல் அதை கையிலே தொட்டு, மூக்கிலேயும் முகர்ந்து பார்க்கும் போக்கைத்தான் இப்படி ஒரு பழமொழியாக சொல்வது வழக்கமாக இருந்து கொண்டிருக்கிறது. இந்த பழமொழி மகிந்தாவிற்கு மிகப் பொருத்தமாக இருக்கிறது. காரணம், தமிழீழ மக்களை கொன்றொழித்து, பெரும் வெற்றி கண்டதாக நினைத்து, தமிழ் பகுதிக்குச் சென்று மக்களின் சலனத்தை கண்டு எரிச்சலடைந்து, மேடையிலேயே மக்களை திட்டித்தீர்த்த அந்தப்போக்க, மகிந்தாவின் முட்டாள்தனத்தை தோலுரித்துக் காட்டுகின்றன. ஆக, எந்த ஒரு ஜனநாயகத்திற்கெதிரான மனிதனாக இருந்தாலும் அவன் நிச்சயமாக ஒருநாள் மாந்த குலத்தின் காலடியில் மண்டியிட்டேத் தீருவான் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.
அப்படி ஜனநாயகத்தை சிதைத்து, மாந்த குலத்தை ஒழிக்க முனைந்த பல கொடுங்கோலர்கள் மக்களால் முறியடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை வரலாறு நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறது. இப்போதும்கூட மகிந்தாவின் மமதை, மகிந்தாவின் வீழ்ச்சிக்கு அடையாளமாக, தொடர்ந்து நடைபெறும் நிகழ்வுகள் நமக்கு தெரிவிக்கும் அடிப்படை செய்தி என்னதென்றால், உலக வரலாற்றில் மாந்த குலத்திற்கெதிரான ஆற்றல்களை ஒடுக்கிய மக்களின் பேராற்றல், மகிந்தாவிற்கெதிராக திசை திரும்ப தொடங்கியிருக்கிறது. இது, நடைபெறும் தேர்தலில் வெளிப்படாமல் இருக்கலாம். ஆனால் நாளடைவில் இது நிச்சயமாய் பெரும் எழுச்சியாய் மாறப்போகிறது. இந்த எழுச்சியை முறியடிக்க எந்த ஆதிக்க ஆற்றலாலும் முடியாது. மகிந்தாவின் முடிவுரைக்கு தொடக்கமே மகிந்தாவின் செயல்களாக அடையாளப்படுத்துகின்றன.
செவ்வாய், 6 ஏப்ரல், 2010
1948 திசெம்பர் மாதம் 10ம் திகதி, ஐக்கிய நாடுகள் பொதுச்சபை, மனித உரிமை பற்றிய உலகப் பிரகடனத்தை ஏற்றுச் சாற்றியது. அப் பிரகடனம் மேல்வரும் பக்கங்களில் முற்றுமுழுதாகத் தரப்படுகின்றது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்நடவடிக்கையின் பின்னர் சபையானது, பிரகடனத்தை வெளியிடுமாறும், அவ்வாறு வெளியிடப் பெற்றதை "நாடுகள் அல்லது ஆள்பலங்கனின் அரசியல் அந்தஸ்துக் காரணமாக எவ்வித வேறுபாடுமில்லாவகையில் எல்லாப் பாடசாலைகளிலும் பிற கல்வி நிறுவனங்களிலும் பரப்பவும், காட்சிக்கு வைக்கவும், வாசிக்கச் ெசய்யவும், விளக்கவும" செயற்படுமாறு அங்கத்துவ நாடுகள் யாவற்றையும் கேட்டுக் ெகாண்டது. மனிதக் குடுப்பதினைச் சேர்ந்த சகலரிவதும் உள்ளார்ந்த கௌரவத்ைதையும், அவர்கள் யாவரதும் சமமான, பராதீனப்படுத்த முடியாத உரிமைகளையும் அங்கீகரித்தலே உலகத்தில் சுதந்திரம், நீதி, சமாதானம் என்பவற்றுக்கு அடிப்படையாகவுள்ளதாலும், மனித உரிமைகள் பற்றிய அசிரத்தையும் அவற்றை அவமதித்தலும், மனுக்குலத்தின் மனச்சாட்சியை அவமானப்படுத்தியுள்ள காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு இடமளித்துள்ளதாலும், பேச்சுச் சுதந்திரம், நம்பிக்கைச் சுதந்திரம், அச்சத்திலிருந்தம், வருமையிலிருந்தும் விடுதலை ஆகியவற்றை மனிதன் பூரணமாக துயக்கத்தக்க ஒரு உலகின் வருகையே சாதாரண மக்கின் மிகவுயர்ந்த குறிக்கோளாக எடுத்துச் சாற்றப்பட்டுள்ளதாலும், கொடுங்கோன்மைக்கும், அடக்குமுறைக்கும் எதிரான இறுதி வழியாக எதிரெழுச்சி செய்வதற்கு மனிதன் கட்டாயப்படுத்தப்படாமலிருக்க, ேவண்டுமேல் சட்டத்தின் ஆட்சியால் மனிதவுரிமைகள் பாதுகாப்பப்படுவது அத்தியாவசமாகவுள்ளதாலும், நாடுகளிடையே நட்புறவுகள் ஏற்படுத்தப்படுவதனை மேம்படுத்துவது அத்தியாவசியமாகவுள்ளதாலும், ஐக்கிய நாடுகள் சபையிற் கூடிய சகல மக்களும், பட்டயத்தில், அடிப்படை மனித உரிமைமகள் பற்றிய நமது நம்பிக்கையை ஒவ்வொரு மனிதப் பிறவினதும், கௌரவம், பெறுமதியை, ஆண் பெண்ணின் சம உரிமையை மீளவலியுறுத்தி அதிசுதந்திரச் சூழலில், சமூக முன்னேற்றம், உயர்ந்த வாழ்க்கைத் தரமாதியவற்றை மேம்படுத்தத் துணிந்துள்ளாராதலாலும், மனித உரிமைகள், அடிப்படைச் சுதந்திரங்களுக்கான உலக மதிப்பையும், அனுட்டானத்தையும் மேம்படுத்தலை, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் கூட்டுறவுடன் முற்று முழுதாகச் ெசயல் படுத்த அங்கத்துவ நாடுகள் சூளுறுதி கொண்டுள்ளனவாதலாலும், இச்சூளுறுதியைப் பரிபூரணமாக நடைமுறைப்படுத்துவதற்கு, இவ்வுரிமைகள் சுதந்திரங்கள் பற்றிய ெபாது விளக்கமிருத்தல் முக்கியமுடையதாதலாலும், இப்பொழுது: பொதுச் சபை பிரகடனப்படுத்துவதாவது சமூகத்தின் ஒவ்வொரு தனி மனிதனும் ஒவ்வொரு சாதனமும், இப்பட்டயத்தை இடையறாது மனத்திலிருத்தி, இவ்வுரிமைகள் சுதந்திரங்களுக்கான மதி்ப்பினை மேம்படுத்துதற்குக் கற்பித்தல் மூலமும், கல்வி மூலமும், தேசிய, சர்வதேசிய நிலைப்பட்ட நடவடிக்கைகள் மூலமும் முயலும் நோக்கிற்காகவும், அங்கத்துவ நாடுகள் ஒவ்வொன்றும், தத்தம் மக்களிடையேயும், அத்துடன் தங்கள் நியாயாதி்க்கத்தின் கீழ் வரும் ஆள்புலத்து மக்களிடையேயும், இவ்வுரிமைகள் சுதந்திரங்கள் முழு மொத்தமாக, வலிவும் பயனுறிதிப்பாடுமுடைய முறையில் ஏற்கப்பட்டு அனுட்டிக்கப்படுவதை நிலைநிறுத்துவதற்காகவும் பயன்படத்தக்க, சகல மக்களும் நாட்டினங்களும் தத்தமது சாதனையிலக்கின் பொது அளவாகக் கொள்ளத்தக்க இந்த மனித உரிமை உலகப் பொதுப் பிரகடனத்தைப் பொதுச் சபையானது எடுத்துச் சாத்துகின்றது. உறுப்புரை 1 மனிதப் பிறிவியினர் சகலரும் சுதந்திரமாகவே பிறக்கின்றனர் ; அவர்கள் மதிப்பிலும், உரிமைகளிலும் சமமானவர்கள், அவர்கள் நியாயத்தையும் மனச்சாட்சியையும் இயற்பண்பாகப் பெற்றவர்கள். அவர்கள் ஒருவருடனொருவர் சகோதர உணர்வுப் பாங்கில் நடந்துகொள்ளல் வேண்டும். உறுப்புரை 2 இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் அல்லத வேறு அபிப்பிராயமடைமை, தேசிய அல்லத சமூகத் தோற்றம், ஆகனம், பிறப்பு அல்லத பிற அந்தஸ்து என்பன போன்ற எத்தகைய வேறுபாடுமின்றி, இப்பிரகடனத்தில் தரப்பட்டுள்ள எல்லா உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்கும் எல்லோரும் உரித்துடையவராவர். மேலும், எவரும் அவருக்குரித்துள்ள நாட் டின் அல்லது ஆள்புலத்தின் அரசியல், நியாயாதிக்க அல்லது நாட் டிடை அந்தஸ்தின் அடிப்படையில் அது தனியாட்சி நாடாக, நம்பிக்கைப் பொறுப்பு நாடாக, தன்னாட்சியற்ற நாடாக அல்லது இறைமை வேறேதேனும் வகையில் மட்டப்படுத்தப்பட்ட நாடாக இருப்பினுஞ்சரி - வேறுபாெடதுவும் காட்டப்படலாகாது. உறுப்புரை 3 வாழ்வதற்கும், சுதந்திரத்தையுடையதாயிருத்த தற்கும் பாதுகாப்பிற்கும் சகலரும் உரிமையுடையோராவர். உறுப்புரை 4 எவரும், அடிமையாக வைத்திருக்கபடுதலோ அல்லது அடிமைப்பட்ட நிலையில் வைத்திருக்கப்படுதலோ ஆகாது ; அடிமை நிலையும் அடிமை வியாபாரமும் அவற்றில் எல்லா வகையிலும் தடை செய்தல் வேண்டம். உறுப்புரை 5 எவரும், சித்திரவதைக்கோ அல்லது கொடுமையான, மனிதத் தன்மையற்ற அல்லத இழிவான நடைமுறைக்கோ தண்டனைக்கோ மட்டப்படுத்தலாகாது. உறுப்புரை 6 ஒவ்வொருவரும் எவ்விடத்திலும் சட்டத்தின் முன்னர் ஓர் ஆளாக ஏற்றுக்கொெள்ளப்படுவதற்கு உரிமையுடையவராவர். உறுப்புரை 7 எல்லோரும் சட்டதின் முன்னர் சமமானவர்கள். பாரபட்சம் எதுவுமின்றி சட்டத்தின் பாதுகாப்புக்கும் உரித்துடையவர்கள். இப்பிரகடனத்தை மீறிப் புரியப்பட்ட பராபட்சம் எதற்கேனும் எதிராகவும் அத்தகைய பராபட்சம் காட்டுவதற்கான தூண்டுதல் யாதேனுக்கும் எதிராகவும் எல்லோரும் சமமான பாதுகாப்புக்கு உரித்துடையவர்கள். உறுப்புரை 8 அவ்வந் நாட்டின் அரசியலமைப்பினால், அல்லது சட்டத்தினால் அவர்களுக்கு அளி்க்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறும் ெசயல்களுக்காத் தகுதிவாய்ந்த தேசிய நியாய சபைகளினும் வழங்கப்படும் பயனுறுதியுடைய பரிகாரத்துக்கு உரிமையுடையவர்கள். உறுப்புரை 9 ஒருதலைப்பட்ட மனப்போக்கான வகையில் கைது ெசய்யப்படுதல், தடுத்து வைக்கப்படுதல், நாடுகடத்தல் ஆகியவற்றுக்கு எவரும் ஆட்படுத்தப்படலாகாது. உறுப்புரை 10 அவர்கள் உரிமைகள், கடப்பாடுகள் பற்றியும் அவர்களுக்கெதிராகவுள்ள குற்றவியல் குற்றச்சாட்டுக்கள் பற்றியும் தீர்மானிப்பதற்கு சுயாதீனமான நடுநிலை தவறாத நியாய சபையினால் ெசய்யப்படும் நீதியான பகிரங்கமான விசாரணைக்கு ஒவ்வொருவரும் உரிமையுடையவர்களாவர். உறுப்புரை 11 1. தண்டனைக்குரிய தவறுக்குக் குற்றஞ்சாட்டப்படும் எல்லோரும் பகிரங்க விளக்கத்தில் சட்டத்துக்கிணங்க அவர்கள் குற்றவாளிகளென காண்பிக்கப்படும் வரை, சுற்றவாளிகளென ஊகிப்படுவதற்கு ஊகிக்கப்படுவதற்கு உரிமையுடையவர்கள். அவ்விளக்கத்தில் அவர்களது எதிரவாதங்களுக்கு அவசியமான எல்லா உறுதிப்பாட்டு உத்தரவாதங்களும் அவர்களுக்கிருத்தல் வேண்டும். 2. தேசிய, சர்வதேசிய நாட்டிடைச் சட்டத்தின் கீழ் ஏதேனும் செயல் அல்லா ெசய்யால் புரியப்பட்ட நேரத்தில் அச்செயல் அல்லது செய்யாமை தண்டணைக்குரிய தவறென்றாக அமையாததாகவிருந்து அச்செயல் அல்லது செய்யாமை காரணமாக, எவரும் ஏதேனும் தண்டணைக்குரிய தவறுக்குக் குற்றவாளியாகக் கொள்ளப்படலாகாது. அத்துடன், தண்டணைக்குரிய தவறு புரியப்பட்ட நேரத்தில் ஏற்புடையதாகவிருந்த தண்டத்திலும் பார்க்கக் கடுமையான தண்டம் விதிக்கப்படலாகாது. உறுப்புரை 12 ஒவ்வொருவரும் அவ்வவரது அந்தரங்கத்துவம், குடும்பம், வீடு அல்லது கடிதப் போக்குவரத்து என்பவை சம்பந்தமாக, ஒருதலைப்பட்ட மனப்போக்கான வகையில் தலையிடப்படுவதற்கோ அல்லத அவரது மரியாதை, நன்மதிப்பு என்பவற்றின் மீதான தாக்குதல்களுக்கோ உட்படுத்தலாகாது. அத்தகைய தலையீட்டுக்கு அல்லது தாக்குதல்களுக்ெகெதிராக ஒவ்வொருவருக்கும் சட்டப் பாதுகாப்புக்கு உரிமையுடையவராவர். உறுப்புரை 13 1. ஒவ்வொரு நாட் டினதும் எல்லைக்குள் சுதந்திரமாகப் பிரயாணஞ் ெசய்வதற்கும் வதிவதற்கும் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. 2. தமது சொந்த நாடு உட்பட ஏதேனும் நாட்டை விட்டுச் ெசல்லவும் தத்தமது நாட்டுக்குத் திரும்பவும் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. உறுப்புரை 14 1. வேறு நாடுகளுக்குச் ெசல்வதன் மூலம் துன்புறுத்தலிலிருந்து புகலிடம் நாடுவதற்கும், துன்புறுத்ததலிலிருந்து புகலிடம் வாய்ப்பதற்கும் எவருக்கும் உரிமையுண்டு. 2. அரசியற் குற்றங்கள் அல்லாத குற்றங்கள் சம்பந்தமாகவும், அலல்து ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்களுக்கும் ெநறிகளுக்கும் முரணான செயல்களிலிருந்து உண்மையாக எழுகின்ற வழக்குத் தொகுப்புகள் சம்பந்தமாகவும் இவ்வுரிமை கேட்டுப் பெறப்படலாகாது. உறுப்புரை 15 1. ஒரு தேசிய இனத்தினராகவிருக்கும் உரிமை ஒவ்வொருவருக்குமுண்டு. 2. எவரினரும் தேசிய இனத்துவம் மனப்போக்கான வகையில் இழப்பபிக்கப்படுதலோ அவரது தேசிய இனத்துவத்தை மாற்றுவதற்கான உரிமை மறுக்கப்படுதலோ ஆகாது. உறுப்புரை 16 1. முழு வயதடைந்த ஆண்களும், ெபண்களும், இனம், தேசிய இனம் அல்லது சமயம் என்பன காராணமாக கட்டுப்பாெடதுவுமின்றி திருமண ெசய்வதற்கும் ஒரு குடு்ம்பத்தை உருவாக்குவதற்கும் உரிமை உடையவராவர். திருமணஞ் ெசய்யும் பொழுதும் திருமணமாகி வாழும் பொழுதும், திருமணம் குலைக்கப்டும் பொழுதும் அவரக்ள் ஒவ்வொருவருக்கும் சம உரிமையுண்டு. 2. திருமணம் முடிக்கவிருக்கும் வாழ்க்கைத் துணைவோரின் சுதந்திரமான, முழுச் சம்மதத்துடன் மட்டுமே திருமணம் முடிக்கப்படுதல் வேண்டும். 3. குடும்பமே சமுதாயத்தில் இயற்கையானதும் அடிப்படையானதுமான அலகாகும். அது சமுதாயத்தினாலும் அரசினாலும் பாதுகாக்கப்படுவதற்கு உரித்துடையது. உறுப்புரை 17 1. தனியாகவும் வேெறருவருடன் கூட்டாகவும் ஆதனத்தைச் சொந்தமாக வைத்திருப்பதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. 2. எவரினதும் ஆதனம் ஒருதலைப்பட்ட மனப்போக்கான வகையில் இழக்கப்படுதல் ஆகாது. உறுப்புரை 18 சிந்தனைச் சுதந்திரம், மனச்சாட்சிச் சுதந்திரம், மதர் சுதந்திரம் என்பவற்றுக்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. இவ்வுரிமையினுள் ஒருவர் தமது மதத்தை அல்லது நம்பிக்கையை மாற்றுவதற்கான சுதந்திரமும், போதனை, பயில்நெறி, வழிபாடு, அநுட்டானம் என்பன மூலமும் தத்தமது மதத்தை அல்லது நம்பிக்கையைத் தனியாகவும், வேெறருவருடன் கூடியும் , பகிரங்கமாகவும் தனி்ப்பட்ட முறையிலும் வெளிப்படுத்துவதற்கான சுதந்திரமும் அடங்கும். உறுப்புரை 19 கருத்துச் சுதந்திரத்துக்கும் பேச்சுச் சுதந்திரத்துக்கும் எவருக்கும் உரிமையுண்டு. இவ்வுரிமையானது தலைலீடின்றிக் கருத்துக்களைக் கொண் டிருத்தற்கும், எவ்வழிவகைகள் மூலமும் எல்லைகளைப் பொருட்படுத்தாமலும் தகவலையும் கருத்துக்களையும் நாடுவதற்கும் ெபறுவதற்கும் பரப்புவதற்குமான சுதந்திரத்தையும் உள்ளடக்கும். உறுப்புரை 20 1. சமாதான முறையில் ஒன்று கூடுவதற்கும் இணைவதற்குமான சுதந்திரத்துக்கு உரிமையுண்டு. 2. ஒரு கழகத்தினைச் சேர்ந்தவராகவிருப்பதற்கு எவரும் கட்டாயப்படுத்தப்படலாகாது. உறுப்புரை 21 1. ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட் டின் ஆட்சியில் நேரடியாகவோ அல்லது சுதந்திரமான முறையில் ெதரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மூலமாகவோ பங்குபெறுவதற்கு உரிமையுண்டு. 2. ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட் டிலுள்ள அரசாங்க சேவையில் சமமான முறையில் அமர்த்தப்படுவதற்கு உரிமையுண்டு. 3. மக்களின் விருப்பே அரசாங்க அதிகாரத்தின் அடிப்படையாக அமைதல் வேண்டும். இவ்விருப்பமானது, காலாலகாலம் உண்மையாக நடைெபறும் தேர்தல்கள் மூலம் வெளிப்படுத்தப்படல் வேண்டும். இத்தேர்தல் பொதுவானதும், சமமானதுமாக வாக்களிப்புரிமை மூலமே இருத்தல் வேண்டுெமன்பதுடன், இரகசிய வாக்குமூலம் அல்லது அதற்குச் சமமான, சுதந்திரமான வாக்களிப்பு நடைமுறைகள் நடைெபறுதல் வேண்டும். உறுப்புரை 22 சமுதாயத்தின் உறுப்பினர் என்ற முறையில் ஒவ்வொருவரும் சமூகப் பாதுகாப்புக்கு உரிமையுடையவர். அத்துடன் தேசிய முறய்சி மூலமும் சர்வதேசிய நாட்டிடை ஒத்துழைப்பு மூலமும் ஒவ்வொரு நாட் டினதும் அமைப்பு முறைக்கும் வனங்களுக்கும் இணையவும் ஒவ்வொருவரும் தத்தம் மதிப்புக்கும் தத்தம் ஆளுமைச் சுதந்திர முறையில் அபிவிருத்தி ெசய்வதற்கும் இன்றியமையாதவையாக வேண்டப்பெறும் பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகளைப் ெபருவதற்கும் உரித்தடையவராவர். உறுப்புரை 23 1. ஒவ்வொருவரும் தொழில் ெசய்வதற்கான, அத்தொழிலினைச் சுதந்திரமான முறையில் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான ெசய்யுந் தொழில் நியாயமானதும் அநுகூலமுடையதுமான தொழில் நிபந்தனைகட்டு உரியோராயிருப்பதற்கான, தொழிலின்மைக்கெதிரான பாதுகாப்பு உடையோராயிருப்பதற்கான உரிமையை உடையர். 2. ஒவ்வொருவரும் வேறுபாெடதுவுமின்றி, சமமான தொழிலுக்குச் சமமான சம்பளம் ெபறுவதற்கு உரித்துடையவராவர். 3. வேலை ெசய்யும் ஒவ்வொருவரும் தாமும் தமது குடும்பத்தினரும் மனித மதிப்புக்கிணையவுள்ள ஒரு வாழ்க்கையை நடத்துவதனை உறுதிப்படுத்தும் நீதியாவதும் அநுகூலமானதுமான ஊதியத்திற்கு உரிமையுடையோராவர். அவசியமாயின் இவ்வூதியம் சமூகப் பாதுகாப்பு வழிமுறைகளினால் குறை நிரப்பபடுவதாயிருத்தல் வேண்டும். 4. ஒவ்வொருவருக்கும் தத்தம் நலன்களைப் பாதுகாப்பதற்கெனத் தொழிற் சங்கங்களை அமைப்பத்தற்கும். அவற்றில் சேர்வதற்குமான உரிமையுண்டு. உறுப்புரை 24 இளைப்பாறுகைக்கும், ஓய்விற்கும் ஒவ்வொருவரம் உரிமையுடயர். இதனுள் வேலை செய்யும் மணித்தியால வரையறை, சம்பளத்துடனான காலாகால விடுமுறைகள் அடங்கும். உறுப்புரை 25 1. ஒவ்வொருவரும் உணவு, உைட, வீட்டு வசதி, மருத்துவக் காப்பு, அவசியமான சமூக சேவைகள் என்பன உட்பட தமதும் தமது குடும்பத்தினாலும் உடனலத்துக்கும் நல்வாழ்வுக்கும் போதுமான வாழ்க்கைத்தரத்துக்கு உரிமையுடையவராவர். அத்துடன் வேலையின்மை, இயலாமை, கைம்மை, முதுமை காரணமாகவும் அவை போன்ற அவரது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பிற சூழ்நிலை காரணமாகவும் வாழ்க்கை வழியில்லாைம ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்புக்கும் உரிமையுடையவராவர். 2. தாய்மை நிலையும் குழந்தைப் பருவமும் விசேட கவனிப்பிற்கும் உதவிக்கும் உரித்துடையன. சகல குழந்தைகளும் அைவ திருமண உறவிலிட் பிறந்தவையாயினுஞ்சரி அத்தலை உறவின்றிப் பிறந்தவையாயினுஞ்சரி, சமமான சமூகப் பாதுகாப்பபினைத் துய்க்கும் உரிமையுடையன. உறுப்புரை 26 1. ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பதற்கான உரிமையுண்டு. குறைந்தது ெதாடக்க அடிப்படைக் கட்டங்களிலாவது கல்வி இலவசமானதாயிருத்தல் வேண்டும். தொடக்கக் கல்வி கட்டாயப்படுத்தல் வேண்டும். தொழில் நுட்பக் கல்வியும் உயர் தொழிற் கல்வியும் பொதுவாகப் பெறப்படத்தக்கனவாயிருத்தல் வேண்டும். உயர் கல்வியானது யாவருக்கும் திறமையடிப்படையின் மீது சமமான முறையில் கிடைக்கக் கூடியதாக்கப்படுதலும் வேண்டும். 2. கல்வியானது மனிதனின் ஆளுமையை முழுதாக விருத்தி ெசய்யுமுகமாகவும் மனிதவுரிமைகளுக்கும் அடிப்படைச் சுதந்திரங்களுக்குமான மரியாதையை வலுப்படு்த்துமுகமாகவும் ஆற்றப்படுத்தப்படல் வேண்டும். அது சகல நாடுகளுக்கிடையேயும், இன அல்லத மதக் குழுவினருக்கிைடயேயும் மன ஒத்திசைவு, பொறுதியுணர்வு, தோழமை, ஆகியவற்றை மேம்படுத்துதல் வேண்டுமென்பதுடன், சமாதானத்தைப் பேணுவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சிகளை மேற்கொண்டு செல்லுவதற்குதவவும் வேண்டும். 3. தமது குழந்தைகளுக்குப் புகட்டப்பட வேண் டிய கல்வியின் வகை, தன்மையை முதலிலே தெரிந்தெடுக்குமுரிமை ெபற்றோருக்குண்டு. உறுப்புரை 27 1. சமுதாயத்தின் பண்பாட்டு வாழ்க்கையிற் சுதந்திரமாகப் பங்குகொள்வதற்கும், கலைகளைத் தூய்ப்பதற்கும் அறிவியல் முன்னேற்றத்திலும், அதன் நன்மைகளிலும் பங்கெடு்ப்பதற்கும் எவருக்கும் உரிமையுண்டு. 2. அறிவியல், இலக்கிய, கலைப் படைப்பின் ஆக்கியற் கர்த்தர் என்ற வகையில் அப்படைப்புகள் வழியாக வரும் ஒழுக்க நெறி, பருப்பொருள் நலங்களின் பாதுகாப்பிற்கு அத்தகையோர் ஒவ்வொருவருக்கும் உரிமை உடையவராவர். உறுப்புரை 28 இப்பிரகடனத்தில் எடுத்துக் காட்டப்பட்டுள்ள உரிமைகளும் சுதந்திரங்களும் முழுமையாக எய்தப்படக்கூடிய சமூக, சர்வ தேசிய நாட் டிடை அமைப்பு முறைக்கு ஒவ்வொருவரும் உரித்துடையவராவர். உறுப்புரை 29 1. எந்த ஒர சமூகத்தினுள் மாத்திரமே தத்தமது ஆளுமையின் கட்டற்ற பூரணமான வளர்ச்சி சாத்தியமாகலிருக்குமோ அந்தச் சமூகத்தின்பால் ஒவ்வொருவருக்கும் கடமைகள் உண்டு. 2. ஒவ்வொருவரும் அவரது உரிமைகளையும் சுதந்திரங்களையும் பிரயோகிக்கும் பொழுது இன்னொருவரின் உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்குமுரிய அங்கீகாரத்தையும் மதி்ப்பையும் ெபற்றுக் கொடுக்கும் நோக்கத்துக்காகவும், சனநாயக சமுதாயமொன்றின் ஒழுக்கசீலம், பொது மக்கள் ஒழுங்கமைதி, பொது சேமநலன் என்பவற்றுக்கு நீதியான முறையில் தேவைப்படக் கூடியவற்றை ஏற்படுத்தல் வேண்டுமெனும் நோக்கத்துக்காகவும் மட்டுமே சட்டத்தினால் தீர்மானிக்கப்படும் வரையறைகளுக்கு மாத்திரமே கட்டுப்படுவராயாமைதல் வேண்டும். 3. இவ்வுரிமைகளும் சுதந்திரங்களும் ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்களுக்கும் நெறிகளுக்கும் முரணாக எவ்விடத்திலேனும் பிரயோகிப்படலாகாது. உறுப்புரை 30 இப்பிரகடனத்திலுள்ள எவையும். இதன்கண் எடுத்துக்காட்டப்பட்டுள்ள உரிமைகள், சுதந்திரங்கள் ஆகியவற்றிலுள்ள எவற்றையும் அழிக்கும் நோக்கத்தையுடைய ஏதேனும் முயற்சியில் ஈடுபடுவதற்கும் அல்லது ெசயலெதனையும் புரிவதற்கும் எந்த ஒரு நாட்டுக்கோ குழுவுக்கோ அல்லது ஒருவருக்கோ உட்கிடையாக யாதேனும் உரிமையளிப்பதாகப் பொருள் கொள்ளப்படுதலாகாது. 1948 திசெம்பர் மாதம் 10ம் திகதி, ஐக்கிய நாடுகள் பொதுச்சபை, மனித உரிமை பற்றிய உலகப் பிரகடனத்தை ஏற்றுச் சாற்றியது. அப் பிரகடனம் மேல்வரும் பக்கங்களில் முற்றுமுழுதாகத் தரப்படுகின்றது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்நடவடிக்கையின் பின்னர் சபையானது, பிரகடனத்தை வெளியிடுமாறும், அவ்வாறு வெளியிடப் பெற்றதை "நாடுகள் அல்லது ஆள்பலங்கனின் அரசியல் அந்தஸ்துக் காரணமாக எவ்வித வேறுபாடுமில்லாவகையில் எல்லாப் பாடசாலைகளிலும் பிற கல்வி நிறுவனங்களிலும் பரப்பவும், காட்சிக்கு வைக்கவும், வாசிக்கச் ெசய்யவும், விளக்கவும" செயற்படுமாறு அங்கத்துவ நாடுகள் யாவற்றையும் கேட்டுக் ெகாண்டது. மனிதக் குடுப்பதினைச் சேர்ந்த சகலரிவதும் உள்ளார்ந்த கௌரவத்ைதையும், அவர்கள் யாவரதும் சமமான, பராதீனப்படுத்த முடியாத உரிமைகளையும் அங்கீகரித்தலே உலகத்தில் சுதந்திரம், நீதி, சமாதானம் என்பவற்றுக்கு அடிப்படையாகவுள்ளதாலும், மனித உரிமைகள் பற்றிய அசிரத்தையும் அவற்றை அவமதித்தலும், மனுக்குலத்தின் மனச்சாட்சியை அவமானப்படுத்தியுள்ள காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு இடமளித்துள்ளதாலும், பேச்சுச் சுதந்திரம், நம்பிக்கைச் சுதந்திரம், அச்சத்திலிருந்தம், வருமையிலிருந்தும் விடுதலை ஆகியவற்றை மனிதன் பூரணமாக துயக்கத்தக்க ஒரு உலகின் வருகையே சாதாரண மக்கின் மிகவுயர்ந்த குறிக்கோளாக எடுத்துச் சாற்றப்பட்டுள்ளதாலும், கொடுங்கோன்மைக்கும், அடக்குமுறைக்கும் எதிரான இறுதி வழியாக எதிரெழுச்சி செய்வதற்கு மனிதன் கட்டாயப்படுத்தப்படாமலிருக்க, ேவண்டுமேல் சட்டத்தின் ஆட்சியால் மனிதவுரிமைகள் பாதுகாப்பப்படுவது அத்தியாவசமாகவுள்ளதாலும், நாடுகளிடையே நட்புறவுகள் ஏற்படுத்தப்படுவதனை மேம்படுத்துவது அத்தியாவசியமாகவுள்ளதாலும், ஐக்கிய நாடுகள் சபையிற் கூடிய சகல மக்களும், பட்டயத்தில், அடிப்படை மனித உரிமைமகள் பற்றிய நமது நம்பிக்கையை ஒவ்வொரு மனிதப் பிறவினதும், கௌரவம், பெறுமதியை, ஆண் பெண்ணின் சம உரிமையை மீளவலியுறுத்தி அதிசுதந்திரச் சூழலில், சமூக முன்னேற்றம், உயர்ந்த வாழ்க்கைத் தரமாதியவற்றை மேம்படுத்தத் துணிந்துள்ளாராதலாலும், மனித உரிமைகள், அடிப்படைச் சுதந்திரங்களுக்கான உலக மதிப்பையும், அனுட்டானத்தையும் மேம்படுத்தலை, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் கூட்டுறவுடன் முற்று முழுதாகச் ெசயல் படுத்த அங்கத்துவ நாடுகள் சூளுறுதி கொண்டுள்ளனவாதலாலும், இச்சூளுறுதியைப் பரிபூரணமாக நடைமுறைப்படுத்துவதற்கு, இவ்வுரிமைகள் சுதந்திரங்கள் பற்றிய ெபாது விளக்கமிருத்தல் முக்கியமுடையதாதலாலும், இப்பொழுது: பொதுச் சபை பிரகடனப்படுத்துவதாவது சமூகத்தின் ஒவ்வொரு தனி மனிதனும் ஒவ்வொரு சாதனமும், இப்பட்டயத்தை இடையறாது மனத்திலிருத்தி, இவ்வுரிமைகள் சுதந்திரங்களுக்கான மதி்ப்பினை மேம்படுத்துதற்குக் கற்பித்தல் மூலமும், கல்வி மூலமும், தேசிய, சர்வதேசிய நிலைப்பட்ட நடவடிக்கைகள் மூலமும் முயலும் நோக்கிற்காகவும், அங்கத்துவ நாடுகள் ஒவ்வொன்றும், தத்தம் மக்களிடையேயும், அத்துடன் தங்கள் நியாயாதி்க்கத்தின் கீழ் வரும் ஆள்புலத்து மக்களிடையேயும், இவ்வுரிமைகள் சுதந்திரங்கள் முழு மொத்தமாக, வலிவும் பயனுறிதிப்பாடுமுடைய முறையில் ஏற்கப்பட்டு அனுட்டிக்கப்படுவதை நிலைநிறுத்துவதற்காகவும் பயன்படத்தக்க, சகல மக்களும் நாட்டினங்களும் தத்தமது சாதனையிலக்கின் பொது அளவாகக் கொள்ளத்தக்க இந்த மனித உரிமை உலகப் பொதுப் பிரகடனத்தைப் பொதுச் சபையானது எடுத்துச் சாத்துகின்றது. உறுப்புரை 1 மனிதப் பிறிவியினர் சகலரும் சுதந்திரமாகவே பிறக்கின்றனர் ; அவர்கள் மதிப்பிலும், உரிமைகளிலும் சமமானவர்கள், அவர்கள் நியாயத்தையும் மனச்சாட்சியையும் இயற்பண்பாகப் பெற்றவர்கள். அவர்கள் ஒருவருடனொருவர் சகோதர உணர்வுப் பாங்கில் நடந்துகொள்ளல் வேண்டும். உறுப்புரை 2 இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் அல்லத வேறு அபிப்பிராயமடைமை, தேசிய அல்லத சமூகத் தோற்றம், ஆகனம், பிறப்பு அல்லத பிற அந்தஸ்து என்பன போன்ற எத்தகைய வேறுபாடுமின்றி, இப்பிரகடனத்தில் தரப்பட்டுள்ள எல்லா உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்கும் எல்லோரும் உரித்துடையவராவர். மேலும், எவரும் அவருக்குரித்துள்ள நாட் டின் அல்லது ஆள்புலத்தின் அரசியல், நியாயாதிக்க அல்லது நாட் டிடை அந்தஸ்தின் அடிப்படையில் அது தனியாட்சி நாடாக, நம்பிக்கைப் பொறுப்பு நாடாக, தன்னாட்சியற்ற நாடாக அல்லது இறைமை வேறேதேனும் வகையில் மட்டப்படுத்தப்பட்ட நாடாக இருப்பினுஞ்சரி - வேறுபாெடதுவும் காட்டப்படலாகாது. உறுப்புரை 3 வாழ்வதற்கும், சுதந்திரத்தையுடையதாயிருத்த தற்கும் பாதுகாப்பிற்கும் சகலரும் உரிமையுடையோராவர். உறுப்புரை 4 எவரும், அடிமையாக வைத்திருக்கபடுதலோ அல்லது அடிமைப்பட்ட நிலையில் வைத்திருக்கப்படுதலோ ஆகாது ; அடிமை நிலையும் அடிமை வியாபாரமும் அவற்றில் எல்லா வகையிலும் தடை செய்தல் வேண்டம். உறுப்புரை 5 எவரும், சித்திரவதைக்கோ அல்லது கொடுமையான, மனிதத் தன்மையற்ற அல்லத இழிவான நடைமுறைக்கோ தண்டனைக்கோ மட்டப்படுத்தலாகாது. உறுப்புரை 6 ஒவ்வொருவரும் எவ்விடத்திலும் சட்டத்தின் முன்னர் ஓர் ஆளாக ஏற்றுக்கொெள்ளப்படுவதற்கு உரிமையுடையவராவர். உறுப்புரை 7 எல்லோரும் சட்டதின் முன்னர் சமமானவர்கள். பாரபட்சம் எதுவுமின்றி சட்டத்தின் பாதுகாப்புக்கும் உரித்துடையவர்கள். இப்பிரகடனத்தை மீறிப் புரியப்பட்ட பராபட்சம் எதற்கேனும் எதிராகவும் அத்தகைய பராபட்சம் காட்டுவதற்கான தூண்டுதல் யாதேனுக்கும் எதிராகவும் எல்லோரும் சமமான பாதுகாப்புக்கு உரித்துடையவர்கள். உறுப்புரை 8 அவ்வந் நாட்டின் அரசியலமைப்பினால், அல்லது சட்டத்தினால் அவர்களுக்கு அளி்க்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறும் ெசயல்களுக்காத் தகுதிவாய்ந்த தேசிய நியாய சபைகளினும் வழங்கப்படும் பயனுறுதியுடைய பரிகாரத்துக்கு உரிமையுடையவர்கள். உறுப்புரை 9 ஒருதலைப்பட்ட மனப்போக்கான வகையில் கைது ெசய்யப்படுதல், தடுத்து வைக்கப்படுதல், நாடுகடத்தல் ஆகியவற்றுக்கு எவரும் ஆட்படுத்தப்படலாகாது. உறுப்புரை 10 அவர்கள் உரிமைகள், கடப்பாடுகள் பற்றியும் அவர்களுக்கெதிராகவுள்ள குற்றவியல் குற்றச்சாட்டுக்கள் பற்றியும் தீர்மானிப்பதற்கு சுயாதீனமான நடுநிலை தவறாத நியாய சபையினால் ெசய்யப்படும் நீதியான பகிரங்கமான விசாரணைக்கு ஒவ்வொருவரும் உரிமையுடையவர்களாவர். உறுப்புரை 11 1. தண்டனைக்குரிய தவறுக்குக் குற்றஞ்சாட்டப்படும் எல்லோரும் பகிரங்க விளக்கத்தில் சட்டத்துக்கிணங்க அவர்கள் குற்றவாளிகளென காண்பிக்கப்படும் வரை, சுற்றவாளிகளென ஊகிப்படுவதற்கு ஊகிக்கப்படுவதற்கு உரிமையுடையவர்கள். அவ்விளக்கத்தில் அவர்களது எதிரவாதங்களுக்கு அவசியமான எல்லா உறுதிப்பாட்டு உத்தரவாதங்களும் அவர்களுக்கிருத்தல் வேண்டும். 2. தேசிய, சர்வதேசிய நாட்டிடைச் சட்டத்தின் கீழ் ஏதேனும் செயல் அல்லா ெசய்யால் புரியப்பட்ட நேரத்தில் அச்செயல் அல்லது செய்யாமை தண்டணைக்குரிய தவறென்றாக அமையாததாகவிருந்து அச்செயல் அல்லது செய்யாமை காரணமாக, எவரும் ஏதேனும் தண்டணைக்குரிய தவறுக்குக் குற்றவாளியாகக் கொள்ளப்படலாகாது. அத்துடன், தண்டணைக்குரிய தவறு புரியப்பட்ட நேரத்தில் ஏற்புடையதாகவிருந்த தண்டத்திலும் பார்க்கக் கடுமையான தண்டம் விதிக்கப்படலாகாது. உறுப்புரை 12 ஒவ்வொருவரும் அவ்வவரது அந்தரங்கத்துவம், குடும்பம், வீடு அல்லது கடிதப் போக்குவரத்து என்பவை சம்பந்தமாக, ஒருதலைப்பட்ட மனப்போக்கான வகையில் தலையிடப்படுவதற்கோ அல்லத அவரது மரியாதை, நன்மதிப்பு என்பவற்றின் மீதான தாக்குதல்களுக்கோ உட்படுத்தலாகாது. அத்தகைய தலையீட்டுக்கு அல்லது தாக்குதல்களுக்ெகெதிராக ஒவ்வொருவருக்கும் சட்டப் பாதுகாப்புக்கு உரிமையுடையவராவர். உறுப்புரை 13 1. ஒவ்வொரு நாட் டினதும் எல்லைக்குள் சுதந்திரமாகப் பிரயாணஞ் ெசய்வதற்கும் வதிவதற்கும் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. 2. தமது சொந்த நாடு உட்பட ஏதேனும் நாட்டை விட்டுச் ெசல்லவும் தத்தமது நாட்டுக்குத் திரும்பவும் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. உறுப்புரை 14 1. வேறு நாடுகளுக்குச் ெசல்வதன் மூலம் துன்புறுத்தலிலிருந்து புகலிடம் நாடுவதற்கும், துன்புறுத்ததலிலிருந்து புகலிடம் வாய்ப்பதற்கும் எவருக்கும் உரிமையுண்டு. 2. அரசியற் குற்றங்கள் அல்லாத குற்றங்கள் சம்பந்தமாகவும், அலல்து ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்களுக்கும் ெநறிகளுக்கும் முரணான செயல்களிலிருந்து உண்மையாக எழுகின்ற வழக்குத் தொகுப்புகள் சம்பந்தமாகவும் இவ்வுரிமை கேட்டுப் பெறப்படலாகாது. உறுப்புரை 15 1. ஒரு தேசிய இனத்தினராகவிருக்கும் உரிமை ஒவ்வொருவருக்குமுண்டு. 2. எவரினரும் தேசிய இனத்துவம் மனப்போக்கான வகையில் இழப்பபிக்கப்படுதலோ அவரது தேசிய இனத்துவத்தை மாற்றுவதற்கான உரிமை மறுக்கப்படுதலோ ஆகாது. உறுப்புரை 16 1. முழு வயதடைந்த ஆண்களும், ெபண்களும், இனம், தேசிய இனம் அல்லது சமயம் என்பன காராணமாக கட்டுப்பாெடதுவுமின்றி திருமண ெசய்வதற்கும் ஒரு குடு்ம்பத்தை உருவாக்குவதற்கும் உரிமை உடையவராவர். திருமணஞ் ெசய்யும் பொழுதும் திருமணமாகி வாழும் பொழுதும், திருமணம் குலைக்கப்டும் பொழுதும் அவரக்ள் ஒவ்வொருவருக்கும் சம உரிமையுண்டு. 2. திருமணம் முடிக்கவிருக்கும் வாழ்க்கைத் துணைவோரின் சுதந்திரமான, முழுச் சம்மதத்துடன் மட்டுமே திருமணம் முடிக்கப்படுதல் வேண்டும். 3. குடும்பமே சமுதாயத்தில் இயற்கையானதும் அடிப்படையானதுமான அலகாகும். அது சமுதாயத்தினாலும் அரசினாலும் பாதுகாக்கப்படுவதற்கு உரித்துடையது. உறுப்புரை 17 1. தனியாகவும் வேெறருவருடன் கூட்டாகவும் ஆதனத்தைச் சொந்தமாக வைத்திருப்பதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. 2. எவரினதும் ஆதனம் ஒருதலைப்பட்ட மனப்போக்கான வகையில் இழக்கப்படுதல் ஆகாது. உறுப்புரை 18 சிந்தனைச் சுதந்திரம், மனச்சாட்சிச் சுதந்திரம், மதர் சுதந்திரம் என்பவற்றுக்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. இவ்வுரிமையினுள் ஒருவர் தமது மதத்தை அல்லது நம்பிக்கையை மாற்றுவதற்கான சுதந்திரமும், போதனை, பயில்நெறி, வழிபாடு, அநுட்டானம் என்பன மூலமும் தத்தமது மதத்தை அல்லது நம்பிக்கையைத் தனியாகவும், வேெறருவருடன் கூடியும் , பகிரங்கமாகவும் தனி்ப்பட்ட முறையிலும் வெளிப்படுத்துவதற்கான சுதந்திரமும் அடங்கும். உறுப்புரை 19 கருத்துச் சுதந்திரத்துக்கும் பேச்சுச் சுதந்திரத்துக்கும் எவருக்கும் உரிமையுண்டு. இவ்வுரிமையானது தலைலீடின்றிக் கருத்துக்களைக் கொண் டிருத்தற்கும், எவ்வழிவகைகள் மூலமும் எல்லைகளைப் பொருட்படுத்தாமலும் தகவலையும் கருத்துக்களையும் நாடுவதற்கும் ெபறுவதற்கும் பரப்புவதற்குமான சுதந்திரத்தையும் உள்ளடக்கும். உறுப்புரை 20 1. சமாதான முறையில் ஒன்று கூடுவதற்கும் இணைவதற்குமான சுதந்திரத்துக்கு உரிமையுண்டு. 2. ஒரு கழகத்தினைச் சேர்ந்தவராகவிருப்பதற்கு எவரும் கட்டாயப்படுத்தப்படலாகாது. உறுப்புரை 21 1. ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட் டின் ஆட்சியில் நேரடியாகவோ அல்லது சுதந்திரமான முறையில் ெதரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மூலமாகவோ பங்குபெறுவதற்கு உரிமையுண்டு. 2. ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட் டிலுள்ள அரசாங்க சேவையில் சமமான முறையில் அமர்த்தப்படுவதற்கு உரிமையுண்டு. 3. மக்களின் விருப்பே அரசாங்க அதிகாரத்தின் அடிப்படையாக அமைதல் வேண்டும். இவ்விருப்பமானது, காலாலகாலம் உண்மையாக நடைெபறும் தேர்தல்கள் மூலம் வெளிப்படுத்தப்படல் வேண்டும். இத்தேர்தல் பொதுவானதும், சமமானதுமாக வாக்களிப்புரிமை மூலமே இருத்தல் வேண்டுெமன்பதுடன், இரகசிய வாக்குமூலம் அல்லது அதற்குச் சமமான, சுதந்திரமான வாக்களிப்பு நடைமுறைகள் நடைெபறுதல் வேண்டும். உறுப்புரை 22 சமுதாயத்தின் உறுப்பினர் என்ற முறையில் ஒவ்வொருவரும் சமூகப் பாதுகாப்புக்கு உரிமையுடையவர். அத்துடன் தேசிய முறய்சி மூலமும் சர்வதேசிய நாட்டிடை ஒத்துழைப்பு மூலமும் ஒவ்வொரு நாட் டினதும் அமைப்பு முறைக்கும் வனங்களுக்கும் இணையவும் ஒவ்வொருவரும் தத்தம் மதிப்புக்கும் தத்தம் ஆளுமைச் சுதந்திர முறையில் அபிவிருத்தி ெசய்வதற்கும் இன்றியமையாதவையாக வேண்டப்பெறும் பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகளைப் ெபருவதற்கும் உரித்தடையவராவர். உறுப்புரை 23 1. ஒவ்வொருவரும் தொழில் ெசய்வதற்கான, அத்தொழிலினைச் சுதந்திரமான முறையில் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான ெசய்யுந் தொழில் நியாயமானதும் அநுகூலமுடையதுமான தொழில் நிபந்தனைகட்டு உரியோராயிருப்பதற்கான, தொழிலின்மைக்கெதிரான பாதுகாப்பு உடையோராயிருப்பதற்கான உரிமையை உடையர். 2. ஒவ்வொருவரும் வேறுபாெடதுவுமின்றி, சமமான தொழிலுக்குச் சமமான சம்பளம் ெபறுவதற்கு உரித்துடையவராவர். 3. வேலை ெசய்யும் ஒவ்வொருவரும் தாமும் தமது குடும்பத்தினரும் மனித மதிப்புக்கிணையவுள்ள ஒரு வாழ்க்கையை நடத்துவதனை உறுதிப்படுத்தும் நீதியாவதும் அநுகூலமானதுமான ஊதியத்திற்கு உரிமையுடையோராவர். அவசியமாயின் இவ்வூதியம் சமூகப் பாதுகாப்பு வழிமுறைகளினால் குறை நிரப்பபடுவதாயிருத்தல் வேண்டும். 4. ஒவ்வொருவருக்கும் தத்தம் நலன்களைப் பாதுகாப்பதற்கெனத் தொழிற் சங்கங்களை அமைப்பத்தற்கும். அவற்றில் சேர்வதற்குமான உரிமையுண்டு. உறுப்புரை 24 இளைப்பாறுகைக்கும், ஓய்விற்கும் ஒவ்வொருவரம் உரிமையுடயர். இதனுள் வேலை செய்யும் மணித்தியால வரையறை, சம்பளத்துடனான காலாகால விடுமுறைகள் அடங்கும். உறுப்புரை 25 1. ஒவ்வொருவரும் உணவு, உைட, வீட்டு வசதி, மருத்துவக் காப்பு, அவசியமான சமூக சேவைகள் என்பன உட்பட தமதும் தமது குடும்பத்தினாலும் உடனலத்துக்கும் நல்வாழ்வுக்கும் போதுமான வாழ்க்கைத்தரத்துக்கு உரிமையுடையவராவர். அத்துடன் வேலையின்மை, இயலாமை, கைம்மை, முதுமை காரணமாகவும் அவை போன்ற அவரது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பிற சூழ்நிலை காரணமாகவும் வாழ்க்கை வழியில்லாைம ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்புக்கும் உரிமையுடையவராவர். 2. தாய்மை நிலையும் குழந்தைப் பருவமும் விசேட கவனிப்பிற்கும் உதவிக்கும் உரித்துடையன. சகல குழந்தைகளும் அைவ திருமண உறவிலிட் பிறந்தவையாயினுஞ்சரி அத்தலை உறவின்றிப் பிறந்தவையாயினுஞ்சரி, சமமான சமூகப் பாதுகாப்பபினைத் துய்க்கும் உரிமையுடையன. உறுப்புரை 26 1. ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பதற்கான உரிமையுண்டு. குறைந்தது ெதாடக்க அடிப்படைக் கட்டங்களிலாவது கல்வி இலவசமானதாயிருத்தல் வேண்டும். தொடக்கக் கல்வி கட்டாயப்படுத்தல் வேண்டும். தொழில் நுட்பக் கல்வியும் உயர் தொழிற் கல்வியும் பொதுவாகப் பெறப்படத்தக்கனவாயிருத்தல் வேண்டும். உயர் கல்வியானது யாவருக்கும் திறமையடிப்படையின் மீது சமமான முறையில் கிடைக்கக் கூடியதாக்கப்படுதலும் வேண்டும். 2. கல்வியானது மனிதனின் ஆளுமையை முழுதாக விருத்தி ெசய்யுமுகமாகவும் மனிதவுரிமைகளுக்கும் அடிப்படைச் சுதந்திரங்களுக்குமான மரியாதையை வலுப்படு்த்துமுகமாகவும் ஆற்றப்படுத்தப்படல் வேண்டும். அது சகல நாடுகளுக்கிடையேயும், இன அல்லத மதக் குழுவினருக்கிைடயேயும் மன ஒத்திசைவு, பொறுதியுணர்வு, தோழமை, ஆகியவற்றை மேம்படுத்துதல் வேண்டுமென்பதுடன், சமாதானத்தைப் பேணுவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சிகளை மேற்கொண்டு செல்லுவதற்குதவவும் வேண்டும். 3. தமது குழந்தைகளுக்குப் புகட்டப்பட வேண் டிய கல்வியின் வகை, தன்மையை முதலிலே தெரிந்தெடுக்குமுரிமை ெபற்றோருக்குண்டு. உறுப்புரை 27 1. சமுதாயத்தின் பண்பாட்டு வாழ்க்கையிற் சுதந்திரமாகப் பங்குகொள்வதற்கும், கலைகளைத் தூய்ப்பதற்கும் அறிவியல் முன்னேற்றத்திலும், அதன் நன்மைகளிலும் பங்கெடு்ப்பதற்கும் எவருக்கும் உரிமையுண்டு. 2. அறிவியல், இலக்கிய, கலைப் படைப்பின் ஆக்கியற் கர்த்தர் என்ற வகையில் அப்படைப்புகள் வழியாக வரும் ஒழுக்க நெறி, பருப்பொருள் நலங்களின் பாதுகாப்பிற்கு அத்தகையோர் ஒவ்வொருவருக்கும் உரிமை உடையவராவர். உறுப்புரை 28 இப்பிரகடனத்தில் எடுத்துக் காட்டப்பட்டுள்ள உரிமைகளும் சுதந்திரங்களும் முழுமையாக எய்தப்படக்கூடிய சமூக, சர்வ தேசிய நாட் டிடை அமைப்பு முறைக்கு ஒவ்வொருவரும் உரித்துடையவராவர். உறுப்புரை 29 1. எந்த ஒர சமூகத்தினுள் மாத்திரமே தத்தமது ஆளுமையின் கட்டற்ற பூரணமான வளர்ச்சி சாத்தியமாகலிருக்குமோ அந்தச் சமூகத்தின்பால் ஒவ்வொருவருக்கும் கடமைகள் உண்டு. 2. ஒவ்வொருவரும் அவரது உரிமைகளையும் சுதந்திரங்களையும் பிரயோகிக்கும் பொழுது இன்னொருவரின் உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்குமுரிய அங்கீகாரத்தையும் மதி்ப்பையும் ெபற்றுக் கொடுக்கும் நோக்கத்துக்காகவும், சனநாயக சமுதாயமொன்றின் ஒழுக்கசீலம், பொது மக்கள் ஒழுங்கமைதி, பொது சேமநலன் என்பவற்றுக்கு நீதியான முறையில் தேவைப்படக் கூடியவற்றை ஏற்படுத்தல் வேண்டுமெனும் நோக்கத்துக்காகவும் மட்டுமே சட்டத்தினால் தீர்மானிக்கப்படும் வரையறைகளுக்கு மாத்திரமே கட்டுப்படுவராயாமைதல் வேண்டும். 3. இவ்வுரிமைகளும் சுதந்திரங்களும் ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்களுக்கும் நெறிகளுக்கும் முரணாக எவ்விடத்திலேனும் பிரயோகிப்படலாகாது. உறுப்புரை 30 இப்பிரகடனத்திலுள்ள எவையும். இதன்கண் எடுத்துக்காட்டப்பட்டுள்ள உரிமைகள், சுதந்திரங்கள் ஆகியவற்றிலுள்ள எவற்றையும் அழிக்கும் நோக்கத்தையுடைய ஏதேனும் முயற்சியில் ஈடுபடுவதற்கும் அல்லது ெசயலெதனையும் புரிவதற்கும் எந்த ஒரு நாட்டுக்கோ குழுவுக்கோ அல்லது ஒருவருக்கோ உட்கிடையாக யாதேனும் உரிமையளிப்பதாகப் பொருள் கொள்ளப்படுதலாகாது.
ஈழத்தமிழ் அகதிகள் மீது தமிழகக் காவல்துறையினரின் துன்புறுத்தல்கள்
தமிழகத்தில் இருந்து சிறீலங்காவுக்கு செல்ல முற்பட்ட ஈழத்தமிழ் இளைஞர்கள் பலரை கைது செய்துள்ள இந்திய கடற்படை அவர்களை தமிழக காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளது. தமிழக காவல்துறையினர் தம்மை தொடர்ந்து துன்புறுத்தி வருவதால் அவர்களின் துன்புறுத்தல்களில் இருந்து தப்பிக்கவே தாம் சிறிலங்கா செல்ல முற்பட்டதாக ஈழத்தமிழ் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஈழத்தமிழ் மக்கள் மீதான துன்புறுத்தல்கள் அதிகரித்து வருவதாகவும், தமிழக காவல்துறையினர் மேற்கொள்ளும் துன்புறுத்தல்களுடன் ஒப்பிடும் போது சிறிலங்கா இராணுவத்தின் துப்பாக்கி குண்டுபட்டு உயிரை விடலாம் எனவும் அவர்கள் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
திருச்சி பகுதியில் உள்ள கரூர் முகாமில் இருந்த ஆறு இளைஞர்கள் படகு ஒன்றை வாடகைக்கு அமர்த்தி சிறீலங்கா செல்ல முற்பட்டிருந்தனர். கடந்த மாதம் 31 ஆம் நாள் அவர்களை ஏற்றிச் சென்ற படகோட்டி நடுக்கடல் பகுதியில் உள்ள மணல் திட்டு ஒன்றில் நள்ளிரவு நேரம் இறக்கிவிட்டு அது சிறீலங்கா என கூறிச் சென்றுள்ளார்.
ஆனால் அங்கு சிக்கிய இளைஞர்கள் மூன்று நாட்களாக உணவு மற்றும் குடிநீர் இன்றி கடும் துன்பங்களை சந்தித்திருந்தனர். அதன் பின்னர் இந்திய கடற்படையின் சுற்றுக்காவல் படகினை கண்ட அவர்கள், உதவிகேட்டபோது, அவர்களை கைது செய்த கடற்படையினர், காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதேபோல அண்மையில் மற்றுமொரு தொகுதி இளைஞர்கள் சிறீலங்கா செல்ல முற்பட்டபோது இந்திய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
பத்திரிகை தர்மம்
ஜனவரி 8, 2009 அன்று காரில் சென்று கொண்டிருந்தபோது, அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் லசந்தா. தமது மரணம் எவ்வாறு நிகழும் என்பதை மாத்திரம்தான் லசந்தாவால் யூகிக்க முடியவில்லை. மற்றபடி, அவர் தன் மரணத்தை எதிர்பார்த்திருந்தார். நிச்சயம் அரசாங்கம்தான் பொறுப்பாளி என்று எழுதியும் வைத்திருந்தார். ராஜபக்சேவை மகிந்த என்று அழைக்கும் வெகு சிலரில் ஒருவர் லசந்த விக்கிரமதுங்க. ராஜபக்சேவின் ஆட்சியை தீவிரமாக விமர்சனம் செய்து, அவர் ஊழல்களை அம்பலப்படுத்தியவர்களுள் முதன்மையானவரும் அவரேதான். பெரும்பான்மையினரின் பார்வையை பதிவு செய்கிறோம் என்னும் பெயரில் இனப்படுகொலைகளை லசந்த விக்கிரமதுங்கே நியாயப்படுத்தவில்லை. நம் நண்பர்தானே என்பதற்காக கண்டும் காணாமலும் இருந்து விடவில்லை. புலிகளுக்கும் அரசாங்கத்துக்குமான போரில் பாதிக்கப்படுபவர்கள் அப்பாவித் தமிழர்கள்தான் என்பதை அழுத்தமாகப் பலமுறை அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ராஜபக்சேவை கடுமையாகக் கண்டித்தும் இருக்கிறார். மிரட்டல்கள், அடிதடிகள், தாக்குதல்கள் எதுவும் அவரைத் தடுத்து நிறுத்திவிடவில்லை. எனவே கொல்லப்பட்டார். லசந்த விக்கிரமதுங்க விடுதலைப் புலிகள் எதிர்ப்பாளர். ராஜபக்சேவை விமர்சனம் செய்ததைப் போலவே புலிகளையும் அவர் விமர்சனம் செய்திருக்கிறார். நான் எடிட்டர், நான் சொல்வதைத்தான் நீங்கள் கேட்க வேண்டும் என்று தன்னுடன் பணிபுரிபவர்களை லசந்த என்றும் அடக்கி ஆட்கொண்டது கிடையாது. பத்திரிகையாளர்கள் உண்மையை பயமின்றி எடுத்துக் கூறவேண்டும் என்பதுதான் அவர் கொள்கை. சண்டே லீடர் செய்தியாளர்களுக்கு அளவற்ற சுதந்திரத்தை அவர் அளித்திருந்தார். லசந்த விக்கிரமதுங்கவைப் போலவே என்.ராமும் ஒரு எடிட்டர். இந்தியாவின் தேசியப் பத்திரிகையாகத் தன்னை பிரகடனம் செய்துகொள்ளும் தி ஹிந்துவின் எடிட்டர். இன் சீஃப் என்.ராமும் புலிகள் எதிர்ப்பாளர். ஆனால் என்றாவது லசந்தாவைப் போல் நாணயத்தின் இரு பக்கங்களை அவர் பார்த்திருக்கிறாரா? இலங்கை அரசாங்க சார்பு செய்திகள் தவிர்த்து வேறொன்றை அவர் பதிப்பித்திருக்கிறாரா? இலங்கை அரசாங்க சார்பு செய்திகள் தவிர்த்து வேறொன்றை அவர் பதிப்பித்திருக்கிறாரா? இலங்கை இராணுவத்தின் அத்துமீறல்கள் குறித்து இரு சிறிய பெட்டிச் செய்தியையாவது தி ஹிந்துவில் யாரேனும் கண்டதுண்டா?இது தேசிய அவமானம் என்பதாக மங்களூர் பப் விவகாரம் பற்றி நீட்டியும், முடக்கியும் தலையங்கம் எழுதிய தி ஹிந்து, இலங்கை ராணுவத்துக்கு இந்தியா அளிக்கும் தார்மீக ஆதரவை என்றாவது சுட்டிக்காட்டி சாடியிருக்கிறதா? இலங்கை ராணுவம் போரில் சிறு முன்னேற்றம் கண்டாலும், ஆஹா வீழ்ந்தது முல்லைத்தீவு, அடுத்து கிளிநொச்சிதான் என்று கிளர்ச்சியுடன் எழுதிக் கொண்டு போகிறது தி ஹிந்து. புலிகள் இத்தோடு ஒழிந்தார்கள், இனி அவ்வளவுதான் என்று வாரத்துக்கு இருமுறையாவது செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.லெட்டர்ஸ் டூ தி எடிட்டர் பகுதியிலும் கடுமையான தணிக்கை. இருபது கடிதங்கள் வெளியானால் அதில் பத்தொன்பது தி ஹிந்துவை ஆதரித்து வந்திருக்கும். ஸார், மிகவும் சரியாகச் சொன்னீர்கள். புலிகள் ஒழிக்கப்பட வேண்டியவர்கள். புலிகள் ஆயுதம் ஏந்துவதால்தான் இத்தனை பிரச்சனையும். ராஜபக்சே அப்பழுக்கற்ற தியாதி. அவர் அளிக்கும் வாய்ப்புகளை புலிகள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. தமிழகத்தில் உள்ள கட்சிகளும் புலிகளிடம் பேசி, ஆயுதங்களை துறக்கச் சொல்ல வேண்டும். மற்றபடி, தமிழீழம் அமையும் என்று சொல்வதற்கில்லை. சிறிதும் சளைக்காமல் ஒருநாள் விட்டு ஒருநாள் ராஜபக்சேவிடம் பேசி, ஏதாவது மேட்டர் வாங்கி முதல் பக்கத்தில் போட்டு விடுகிறார் என்.ராம். தமிழர்களை நான் அவசியம் பாதுகாப்பேன். இந்தியா இனி அவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. உங்கள் எல்லோரையும் விட, தமிழர்கள்மீது எனக்கு அளவு கடந்த பாசமும், நேசமும் உண்டு. எங்கள் எதிரிகள் விடுதலைப்புலிகள். அவர்கள் மீது மட்டும்தான் நாங்கள் யுத்தம் தொடுத்துக் கொண்டிருக்கிறோம். இடையில் எப்போதாவது, பை மிஸ்டேக் சில சிவிலியன்கள் சிக்கிக் கொள்கிறார்கள். அவ்வளவுதான். என்.ராமின் பத்திரிகை தர்மத்துக்கும் லசந்த விக்கிரமதுங்கவின் பத்திரிகை தர்மத்துக்கும் ஏன் இத்தனை பெரிய வித்தியாசம்? அதற்கான காரணத்தை லசந்தவே சொல்லியிருக்கிறார். ‘உயர்பதவி, புகழ், பொருள், பாதுகாப்பு அனைத்திற்கும் மேலாக ஒரு அழைப்பு இருக்கிறது. அதுதான் மனசாட்சி.’ லசந்த தன் மனசாட்சியின் அழைப்பை இறுதிவரை நிராகரிக்கவில்லை.
பெண்கள் எதிர்கொள்ளும் அவலம்
வன்னி வதை முகாமில் இருந்து தங்கள் வாழ்விடங்களில் மீள்குடியமர்த்தம் செய்யப்பட்ட தமிழக் குடும்பங்களில், ஆண் உறுப்பினர் அற்ற குடும்பத்துப் பெண்கள் பல சங்கடங்களை எதிர்கொண்டு வருகின்றனர். ஈழத் தமிழர்கள் மீது சிறிலங்க அரசு தொடுத்த இனப்படுகொலைப் போரில் தங்கள் குடும்பத்து ஆண் உறுப்பினர்களை இழந்த குடும்பத்துப் பெண்கள் பாதுகாப்பற்ற ஒரு சூழலிலேயே வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் அளிக்கப்பட்ட 15 தகரங்களைக் கொண்டு பாதுகாப்பான தற்காலிக வீடுகளை அமைத்துக்கொள்ளக் கூட முடியாத நிலையில், அவர்களுக்கு கழிப்பிட வசதியில்லாத காரணத்தினால், இரவு வரை காத்திருந்து தாவரங்கள் அடர்ந்த வனப் பகுதிக்குச் சென்று - ஒரு ஆபத்தான சூழலில், தனிமையை காப்பாற்றிக் கொண்டு நிறைவேற்றிக் கொள்கின்றனர். இதுமட்டுமின்றி, தாங்கள் வாழ்ந்த பகுதியில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மக்களை அங்கு முகாம் அமைத்துள்ள இராணுவத்தினரும், காவல் துறையினரும் மறு விசாரணை என்ற பெயரில் அலைக்கழிக்கின்றனர். இவை யாவும் வன்னி முகாமில் முழுமையாக செய்து முடிக்கப்ட்டப் பின்னரே அவர்கள் விடுவிக்கப்பட்டு, மீள் குடியமர அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், மீ்ண்டும் அவர்களிடம் ‘நீங்கள் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்களா’ என்றெல்லாம் கேட்கப்படுவதும், இராணுவ, காவல் துறையினருக்கும் தமிழர்களுக்கும் இடையிலான மொழிப் பிரச்சனையும் இந்த விசாரணையை மேலும் சிக்கலாக்குகிறது. ஆண் துணையற்ற நிலையை விசாரணையின் மூலம் இராணுவத்தினரும், காவல் துறையினரும் தெரிந்துகொள்ளும் நிலையில், தங்களுக்கு மீண்டும் பாலியல் அச்சுறுத்தல் உருவாகுமோ என்ற அச்சமும் இப்படிப்பட்ட பெண்கள் மத்தியில் நிலவுகிறது. நிதியுதவி நிறுத்தம் வன்னி முகாம்களில் இருந்து 1.9 இலட்சம் தமிழர்கள் மீள் குடியமர்த்தம் அல்லது தங்களது உறவினர்களுடன் தங்கிக் கொள்ள அனுமதிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுவிட்ட நிலையில், மீள் குடியமர்த்தம் செய்யப்பட்ட குடும்பங்களுக்கு ஐ.நா.வின் அகதிகள் மறுவாழ்வு ஆணையம் அளித்துவந்த நிதியுதவி மார்ச் 8ஆம் தேதியுடன் நிறுத்தப்பட்டுவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உள் நாட்டிலேயே இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு அன்றாட நிவாரண உதவியில் இருந்து மறுவாழ்விற்கு நிதியுதவி வரை செய்துவந்த ஐ.நா. உள்ளிட்ட பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களுக்கு அயல் நாடுகளில் இருந்து வரும் நிதியுதவியைப் பெற சிறிலங்க அரசு மறுத்துவிட்டதைத் தொடர்ந்து இந்த நிதிச் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பெயர் குறிப்பிடப்படாத நபர்கள் தற்போது உயிருடன் இல்லை
பதினோராயிரம் இளைஞர் யுவதிகளுக்கு அரசாங்கம் மறுவாழ்வு அளித்து வருவதாகவும், இவர்கள் பற்றிய தகவல்கள் குறித்த அமைச்சின் இணைய தளத்தில் பிரசூரிக்கப்பட்டுள்ளதாகவும் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவ்வாறு பெயர் குறிப்பிடப்படாத நபர்கள் தற்போது உயிருடன் இல்லை என்றே கருதப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காணாமல் போனவர்கள் தொடர்பில் கரிட்டாஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மதகுருமார், ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பெசில் ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்பி உள்ளனர். இதன்போதே இந்த அதிர்ச்சியான தகவலை பசில் ராஜபக்ஸ வெளியிட்டுள்ளார். எனினும் விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட மே மாதம் அளவில் இலங்கை அரசாங்க ஊடகங்கள் அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் பாதுகாப்பிற்கான ஊடக மையம் என்பன விடுத்த பல செய்திக் குறிப்புக்களில் ஆரம்பத்தில் 17500 வரையான விடுதலைப் புலிகள் அரசாங்க படைகளால் கைது செய்யப்பட்டனர் அல்லது சரணடைந்தனர் எனக் குறிப்பிடப்பட்டது. பின்னர் 15000 வரையான புலிகள் தம்மிடம் இருப்பதாக கூறப்பட்டது. தொடர்ச்சியாக வந்த செய்திகளில் இந்தத் தொகைகள் 13500, 12500, 11500 என குறைக்கப்பட்டு தற்போது 11 ஆயிரம் என்ற கணக்கு பசில் ராஜபக்ஸவால் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறாயின் விடுதலைப் புலிகளின் உயர்மட்ட மற்றும் நீண்டகால அல்லது தீவிர செயற்பாட்டுப் போராளிகள் என 2 ஆயிரம் வரையானவர்கள் தனியான முகாமிலும் 4 ஆயிரம் வரையிலான போராளிகள் தனியான முகாமிலும் இரகசியமாக வைக்கப்பட்டு இருந்ததாக பலராலும் அறியப்பட்டு இருந்தது. இவ்வாறு இரகசியமான முறையில் விசேட முகாம்கயில் தடுத்து வைக்கப்பட்ட 6 ஆயிரம் விடுதலைப் புலிகளுக்கு என்ன நடந்தது என்ற ஐயம் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் இவர்கள் அரசாங்க படைகளால் கொல்லப்பட்டு இருக்கலாம் அல்லது தொடர்ந்தும் இரகசியமாக தடுத்து வைக்கப்பட்டு இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
வரலாற்றில் புலிகளை அழித்த தளபதி சரத் பொன்சேகா
வரலாற்றில் புலிகளை அழித்த தளபதி என்ற பெயருடன் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டவருக்கு ஆரம்பமாகும் அஸ்தமனம்?. ஜெனரல் சரத் பொன்சேகா இப்போது மறக்கப்பட்டு வரும் ஒரு மனிதராக மாறிக் கொண்டிருக்கிறார். இது எதிர்பாராத ஒரு விடயம் அல்ல. ஆனால் நிச்சயம் அவர் இதை எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. அப்படி எதிர்பார்த்திருந்திருப்பாரேயானால் அரசியலில் அவசர அவசரமாகக் குதிக்கும் முடிவை எடுத்திருக்க மாட்டார். கடற்படைத் தலைமையகத்தில் இளநிலை அதிகாரிகளுக்கான குடியிருப்பில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத்; பொன்சேகாவை மெல்ல மெல்ல அரசாங்கம் சாகடித்துக் கொண்டிருப்பதாக ஜேவிபி குற்றம்சாட்டியுள்ளது. இது பெரும்பாலும் உண்மையான கருத்தாகவே இருக்கக் கூடும். அது எந்தவகையில் என்றால்- அரசியல்ரீதியாக அவர் மெல்ல மெல்ல சாகடிக்கப்பட்டு வருகிறார் என்பதே உண்மை. கடந்த வருட இறுதியில் பாதுகாப்புத் தலைமை அதிகாரி என்ற பதவியை உதறித்தள்ளி விட்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடிவு எடுத்திருந்தார். அப்போதே அவர் அரசியல் ரீதியான தற்காலைக்குத் தயாராகி விட்டார் என்பது தெரிந்தது. ஜனாதிபதித் தேர்தலில் வென்றால் சரி தோற்றால் அவரது எதிர்காலம் பாழாகி விடும் என்பதை தெளிவாகவே உணரமுடிந்தது. ஆனால் இராணுவ அதிகாரியாக இருக்கும் போது எது நடந்தாலும் அதற்கேற்ப செயற்பட வேண்டும் என்ற கோட்பாட்டுக்கு அமைய அரசியலில் அவர் செயற்படவில்லை. வெற்றி ஒன்றையிட்டே சிந்தித்தாரே தவிர தோல்வி ஒன்றின் பின்னால் இருக்கக் கூடிய அபாயங்களையிட்டு கணிக்கத் தவறிவிட்டார். அதைவிட அவர் விரும்பியோ விரும்பாமலோ செய்த சில ஏற்பாடுகளும் சுற்றியிருந்தவர்களின் நடவடிக்கைகளும் சரத் பொன்சேகாவை பெரும் நெருக்கடிக்குள் தள்ளிவிட்டுள்ளன. ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று சினமன் லேக் சைட் விடுதியில் இடம்பற்ற நிகழ்வுகளும், அதனை ஒட்டிய சில சம்பவங்களும் தான் சரத் பொன்சேகாவின் அரசியல் எதிர்காலத்துக்குப் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன. இதன்காரணமாகவே அவர் தடுப்புக்காவலில் வைக்கப்படும் நிலையை அடைந்துள்ளார். * அதுமட்டுமன்றி இரண்டு இராணுவ நீதிமன்றங்களின் விசாரணைகளையும் அவர் சந்திக்க வேண்டியுள்ளது. இராணுவ நீதிமன்ற விசாரணைகள் ஆரம்பக் கட்டத்திலேயே இருந்தாலும் அது எப்படித் தொடரப் போகிறது என்ற கேள்விகள் இருக்கவே செய்கின்றன. காரணம் இரண்டாவது நீதிமன்றத்துக்கான புதிய நீதிபதிகள் நியமனம் கடந்த பத்து நாட்களாக இழுபட்டுக் கொண்டிருக்கிறது. அரசாங்கம் இந்த விடயத்தை எப்படி கொண்டு செல்வது என்பதைத் தீர்மானிப்பதில் சற்றுத் தயக்கம் காட்டுகிறது. இது ஒருபுறத்தில் இருக்க ஜனாதிபதித் தேர்தலின் போது சரத் பொன்சேகாவுடன் ஒட்டியிருந்த கட்சிகள் எதுவும் இப்போது அவருக்குத் துணையாக இல்லை என்பது தான் வேடிக்கை. முன்னாள் பிரதம நீதியரசர் மட்டும் சரத் பொன்சேகா விடயத்தில் அரசாங்கம் செய்வது தவறு என்று கூறிக் கொண்டே இருக்கிறார். * அதைவிட அவரது மனைவி அனோமா இன்னொரு பக்கம் அழுது வடியும் முகத்துடன் அடிக்கடி செய்தியாளர்கள் முன்தோன்றி ஏதாவது பரபரப்பான கதைகளை அவிழ்த்து விடுகிறார். உண்ணாவிரதம் இருப்பதாகவும், மதிய உணவை புறக்கணிப்பதாகவும், உணவு கொண்டு செல்வதற்கு தடை ஏற்படுத்தப்படுவதாகவும் சரத் பொன்சேகா விடயத்தில் ஒரு பரப்பரப்பான செய்தியை அவிழ்த்து விடுவதிலேயே ஜேவிபினர் குறியாக இருக்கின்றனர். காரணம் வெறும் அரசியல் இலாபம் மட்டுமே. ஜனாதிபதித் தேர்தலின் போது சரத் பொன்சேகா போட்டியில் இறங்கியது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியிருந்தது. அவருக்காக பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால் இன்று அவருக்காக வீதியில் இறங்க எத்தனை பேர் தயாராக இருக்கின்றனர் என்பதை- கொழும்பில் நடக்கின்ற அவருக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்போரின் எண்ணிக்கையைக் கொண்டே உறுதி செய்து கொள்ள முடிகிறது. ஜனாதிபதித் தேர்தலின் போது சரத் பொன்சேகாவின் பக்கம் இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலில் விலகிக் கொண்டது. பின்னர் ஐதேகவும் அதனோடு சேர்ந்த கட்சிகளும் ஒதுங்கிக் கொண்டன. இப்போது சரத் பொன்சேகாவின் பெயரை வைத்து அரசியல் நடத்திக் கொண்டிருப்பது ஜேவிபி மட்டும் தான். ஜேவிபியைப் பொறுத்தவரையில் பெரிதும் பலவீனமானதொரு கட்டத்தில் இருக்கிறது. ஐதேகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற அதன் கனவு தகர்ந்து போனபோது சரத் பொன்சேகா என்ற புளியங்கொம்பைப் பிடிப்பதை விட அதற்கு வேறு தெரிவே இருக்கவில்லை. அதனால் பொதுத்தேர்தல் வரைக்கும் சரத் பொன்சேகாவை முன்வைத்துப் போராட்டங்களை நடத்தும். அதற்குப் பிறகும் ஜேவிபி சரத் பொன்சேகாவுக்காக எந்தளவுக்குப் போராட்டங்களை நடத்தும் என்பது சந்தேகமே. சரத் பொன்சேகா விடயத்தில் அவருடன் ஒட்டிக் கொள்ள முனையும் அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்துகிறது அரசாங்கம். இதனால் அனைத்து அரசியல் சக்திகளுமே வில்லங்கத்தை எதற்கு விலை கொடுத்து வாங்க வேண்டும் என்று ஒதுங்கிக் கொள்ளவே விரும்புகின்றன. இது சரத் பொன்சேகாவின் நிலையைப் பெரிதும் கேள்விக்குள்ளாக்க ஆரம்பித்து விட்டது. சரத் பொன்சேகாவுக்குப் பொதுமன்னிப்பு வழங்க அரசாங்கம் தயாராக இல்லை. அதேவேளை அவரை சட்டப்படியாக வெளியே கொண்டு வருவதும் இலகுவான காரியமாக இருக்கப் போவதில்லை. இந்தக் கட்டத்தில் அவருக்காக குரல்கொடுத்து வந்த அரசியல் வட்டம் சுருங்கிப் போய்க் கொண்டிருப்பதால் எதிர்காலத்தில் அவர் யாருமே துணைக்கில்லாத ஒருவராக மாறிவிடக் கூடும். * வரலாற்றில் புலிகளை அழித்த தளபதி என்ற பெயருடன் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டவருக்கு இந்தக்கதி ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு வழங்கப்பட்ட இராணுவ சேவைப் பதக்கங்களைப் பறிக்கின்ற திட்டமும் கூட அரசாங்கத்திடம் இருப்பதாக பேச்சுகள் அடிபடுகின்றன. இப்போதெல்லாம் அவர் பற்றிய செய்திகள் குறைவடையத் தொடங்கியுள்ளன. வெளியாகும் செய்திகளின் மீதான மக்களின் ஆர்வம் குன்றத் தொடங்கி விட்டது. சரத் பொன்சேகா விவகாரம் மெல்ல மெல்ல மறக்கப்பட்டு வருவதையே இது உணர்த்துகிறது. சரத் பொன்சேகாவின் நிலையை அறியும் ஆர்வம் மக்களிடத்தில் மறையத் தொடங்கியிருப்பதால் ஊடகங்களும் அவரைப் பற்றிய செய்திகளை குறைத்துக் கொள்ளத் தொடங்கி விட்டன. இது அரசாரங்கத்துக்கு இன்னமும் வாய்ப்பாகவே அமையப் போகிறது. இந்தநிலை நீடிக்குமானால் வெகுவிரைவிலேயே சரத் பொன்சேகா யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டாலும் ஆச்சரியப்பட முடியாது. இந்தநிலைக்குக் காரணம் அவரைத் தவிர வேறெவராகவும் இருக்க முடியாது. அரசியல் ஆசை அவரை படுகுழிக்குள் கொண்டு போய்த் தள்விட்டிருக்கிறது. மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக அரசியல் நடத்துவதோ அல்லது நடத்த முனைவதோ தவறென்று கூறவரவில்லை. ஆனால் அவர் அரசியல் நடத்துவதற்குத் தெரிவு செய்த பாதைகளும் அதற்கான வழிமுறைகளும்- ஒரு இராணுவ அதிகாரி என்ற தோரணையில் இருந்ததே தவிர அரசியல்வாதி என்ற வகையில் அமைந்திருக்கவிலலை. * ஒரு தேர்ச்சிமிக்க அரசியல்வாதி சொல்லக் கூடாததை அவர் சொல்லத் தொடங்கியதும் செய்யக் கூடாததை அவர் செய்யத் தொடங்கியதும் தான் அவரது இந்த வீழ்ச்சிக்குக் காரணம். இந்தத் தவறுகள் தான் அவரை வரலாற்றின் பக்கங்களில் கைவிடப்பட்ட ஒருவராக மாற்றிக் கொண்டிருக்கிறது.
திங்கள், 5 ஏப்ரல், 2010
வரதராஜா பெருமாளுக்கு வடமாகாண ஆளுநர் பதவி
நாடு திரும்பியுள்ள வரதராஜா பெருமாளுக்கு அரசாங்கத்தின் பொறுப்புள்ள பதவியொன்றை வழங்குவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டமிட்டு வருவதாக தெரியவருகிறது. இதனடிப்படையில், வடக்கில் மாகாண சபையொன்றை நிறுவி, அதன் முதலமைச்சர் பதவியை வரதராஜ பெருமாளுக்கு வழங்க மகிந்த அதிகாரம் ஆலோசித்துள்ளதாக தெரியவருகிறது.
13 வது அரசியல் திருத்தத்தை அமுல்படுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரத்தை வழங்குமாறு இந்தியா தற்போது அழுத்தம் கொடுத்து வருவதன் காரணமாகவே ஜனாதிபதி மஹிந்த இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரியவருகிறது.
ஆளுனர் பதவி அல்லது முதலமைச்சர் பதவியின் பின்னர் சிங்களக் குடியேற்றங்களைத் துரிதப்படுத்தி வட கிழக்கு பிரதேசங்களின் இனச்செறிவை சீர்குலைக்கும் முயற்சிகளை இதே அரச துணைக்குழுக்களுடன் இணைந்து மேற்கொள்ளவும் இந்தியா ஆலோசனை வழங்கியுள்ளதாக கொழும்பிலிருந்து அரசியல் ஆய்வாளர் ஒருவர் கருத்துத்தெரிவித்துள்ளார்
ஐந்து வருடத்தின் பின்னர்தான் எங்களை விடுவாங்களாம் என்று இஞ்ச முகாமில கதைக்கிறாங்கள். உங்க என்னெண்டு கதைக்கிறாங்கள்?
ஐந்து வருடத்தின் பின்னர்தான் எங்களை விடுவாங்களாம் என்று இஞ்ச முகாமில கதைக்கிறாங்கள். உங்க என்னெண்டு கதைக்கிறாங்கள்? ஏதாவது தகவல் எங்களைப்பற்றி சொல்லுறாங்களா?
வெளி நாட்டில இருக்கிற எங்கட அமைப்புக்கள், சனங்கள் எங்களைப்பற்றி ஏதாவது கதைக்கிறார்களா? கிளி நொச்சியில் இருந்து ஒரு போராளியின் துணைவியார் இவ்வாறு கேட்டார். வெள்ளி கிழமை இந்த பெண் தனது துணைவரை பார்ப்பதற்காக வவுனியாவிற்கு சென்றார்.
அங்கு தனது துணைவனான ......... என்ற போராளி மேற்கண்டவாறு தனது மனைவியிடம் கூறி இருக்கின்றார். அவர் மேலும் விவரித்தார்.. நான் முகாமிற்கு இவர பார்க்க போனனான் இங்க கிளிநொச்சியிலதான் இருக்கிறம். தகரம் தந்தவங்கள் நிவாரண காசிற்கு கடிதம் தந்திருகின்றாங்கள் ஆனால் காசு இப்போதைக்கு இல்லையாம் என்று சொல்றாங்கள் நிறைய தடவை கச்சேரிக்கு போனம் ஆனால் காசு இன்னமும் வரவில்லை என்றுதான் சொல்லுகினம்.
தொழில் ஒன்றும் செய்யேலாதுதானே நிவாரணத்தோட இருக்கிறம். எனக்கு சைக்கிளும் இல்லை. பக்கத்து வீட்டு காரரிட்ட சைக்கிள் வாங்கிதான் வவுனியாவிற்கு இவரை பார்க்க நானும் தம்பியும் போறனாங்கள். இவர் உங்களிட்ட சொல்ல சொன்னார்... தங்களை 5 வருஷத்திற்கு வைச்சிருக்க போறாங்களாம் ஆனால் அது உண்மையோ பொய்யோ தெரியாது. கலியாணம் முடிச்ச போராளிகள் 1682 பேர் இருக்கினம் இவர்களை முன்னமே விடப்போறம் என்றும் சொல்றாங்களாம்.
அதோட புதிதாக ஒரு முகாம் அமைத்து கலியாணம் முடிச்ச ஆட்களை அங்க கொண்டுபோக போறாங்களாம் என்றும் சொன்னவங்களாம். எது உண்மை எது பொய் என்று தெரியாது அடிக்கடி மாத்தி மாத்தி கதைபாங்களாம்.போன வெள்ளி, சனி கிழமை காயப்பட்ட ஆட்களை விடுறது என்று அதற்கான கடிதங்களும் எல்லாருக்கும் கொடுத்தாங்கள் கூட்டிக்கொண்டுபோக பெற்றோர்கள் வந்திருந்தார்கள்.
ஆனால் கொஞ்சப்பேரைதான் விட்டவங்கள். என்று கூறியுள்ளார் அந்த போராளி. மேலும் தமக்கு அரச தொலைகாட்சி, வானொலி , பத்திரிகை செய்திகளை படிக்க கொடுப்பதாகவும் கூறியுள்ள போராளி தம்மை பார்க்க வரும் பெற்றோர்கள், உறவினர்கள் இணைய செய்திகள் சிலவற்றை அச்சிட்டு கொண்டு வந்து கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.
எங்கள எவ்வளவு காலத்திற்கு வைச்சிருக்க போறாங்கள் என்று தெரியாது ஆனால் ஆக குறைந்தது 5 வருஷம் என்று இங்க உள்ள ஆமி சொல்லுறாங்கள். வெளி நாட்டில இருக்கிற அமைப்புக்கள், மக்கள் ஏதாவது எங்கள எடுக்கிறதுக்கு அலுவல் பார்க்கிறாங்களா? அங்க என்ன நடக்குது? முடிந்தால் அறிய தாருங்கோ. எங்களை போன்ற சிறையில் உள்ள போராளிகளை பார்க்க வாறதுக்கு சில பெற்றோர், துணைவிமார் சரியான கஸ்டப்படுகினம்.
போக்குவரத்துக்கு காசு இல்லை, சிலபேருக்கு சைக்கிளும் இல்லை. இவர்களுக்கு முடிஞ்சால் இதுக்கு மட்டுமாவது கொஞ்சம் உதவி செய்யுங்கோ. சிலபேருக்கு உதவி கிடைச்சதாக கேள்விபட்டோம் நன்றி ஆனால் எம்மை போன்ற இயக்க கொடுப்பனவை நம்பி வாழ்ந்த போராளி குடும்பங்களுக்கு சரியான கஸ்டம். தயவு செய்து கைவிட்டுவிடாதீர்கள். எங்கள் வாழ்க்கை சிறையோடு முடிந்துவிடும் . எங்கள் பிள்ளைகளை கைவிட்டு விடாதீர்கள் ஏனென்றால் அதுதான் எங்கள் ஆறுதல்.
போராளிகள் எல்லோரும் காட்டி கொடுப்பதாக சிலர் ஏசுகின்றார்களாம். சிறைக்குள் இருந்து கொண்டு வெளியில் நடப்பதனை பற்றி என்னால் சொல்ல முடியாது. ஆனால் நாங்கள் நடக்குறது நடக்கட்டும் என்று சிறையிலேயே வாழ்க்கையினை கழிக்க தயாராகிவிட்டோம். விடுவாங்கள் என்ற நம்பிக்கை துளி கூட எமக்கு இல்லை. ஒரு குறிப்பிட்ட வீத போராளிகள் வெளியில் நடமாடி திரிகின்றார்கள் சிலர் வெளியே சென்றுள்ளார்கள். ஏன்? எப்படி? இதெல்லாம் நடக்கின்றது என என்னால் சொல்ல முடியாது.
ஆனால் பெரும்தொகையான போராளிகள் சிறையில்தான் உள்ளோம். ஒரு சிலரின் நடவடிக்கைகளுக்காக எங்களை கைவிட்டுவிட வேண்டாம். ஒன்றவிட்ட கிழமைதான் என்னை பார்க்க வருவினம் ஏதும் இருந்தால் சொல்லி விடுங்கோ. இவ்வளவும் அந்த போராளியினால் எமக்கு கூறும்படி தனது துணைவியாரிடம் சொல்லப்பட்டவை.
கிளிநொச்சியில் இருந்து வெள்ளிகிழமை காலை இரவல் சைக்கிளில் புறப்பட்ட அந்த போராளியின் துணைவியார் சனி மாலை வவுனியாவில் இருந்து வளர்ப்பதற்காக கோழி குஞ்சுகள் வாங்கி கொண்டு வந்துள்ளார். கிளியில் கைவிடப்பட்ட சைக்கிளை இராணுவத்தினர் சனங்களுக்கு கொடுக்க போகின்றார்களாம் அதற்காக தான் பதிந்து இருப்பதாகவும் சொன்னார்.
அதிர்ந்த ஆனந்தபுரச் சமர்: காவிய நாயர்களுக்கு வீரவணக்கம்
கடந்த வருடம் போர் உச்சக்கட்டமடைந்திருந்த வேளை, ஏப்பிரல் மாதத்தில் ஆனந்தபுரத்தில் தமிழீழ தேசிய தலைவர் அவர்கள் தங்கியிருந்த வீட்டை பெட்டி அடித்து அதனைச் சுற்றி வளைத்த இலங்கை இராணுவத்திற்கு எதிராக கடும் போர் மூண்டது. கேணல் தீபன் தலைமையில் முதலாவது அணி களமிறங்க, இராணுவ முன் நகர்வு வெகுவாகத் தடுக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட கடும் சமரை சமாளிக்க முடியாத இராணுவத்தினர், மேலதிக துருப்புக்களை வரவழைத்து முன்னேற முயன்றவேளை, தீபன் காயமுற்றார். அவருக்கு தோளில் காயம் ஏற்பட்டதன் காரணமாக தளபதி, விதுசா, மற்றும் துர்க்கா ஆகியோர் களமிறங்கினர். தலைவர் தங்கியிருந்த வீட்டை பெட்டியடித்து தாக்கி வந்த இராணுவத்தை, எதிர்த்து தாக்குதல் களத்தில் குதித்தனர் விதுசா மற்றும் துர்க்காவின் அணிகள். அகோரத் தாக்குதல் காரணமாக, பல இழப்புக்களைச் சந்தித்த இராணுவத்திற்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. இச் சமரில் கடாபி நேரடியாக களமிறங்கி பெட்டியடித்த இராணுவத்தை சுற்றி தாம் ஒரு பெட்டி அடித்து பாரிய தாக்குதலை தொடுத்தார். (அதாவது இராணுவத்தை சுற்றிவளைத்தார்) இதனை சற்றும் எதிர்பார்க்காத இராணுவம் பல இழப்புக்களைச் சந்திக்க நேர்ந்தது.
நேரத்திலேயே இலங்கை இராணுவம் உலகப் போர் மரபுகளை மீறும் வண்ணம் ஒரு ஈனச் செயலில் ஈடு படத் துணிந்தது. எதிரியை சமாளிக்க முடியவில்லை என்றதும் பேடித்தனமான செயலை அரங்கேற்றத் நினைத்தது இராணுவம். உடனடியாக தனது இராணுவத்தை 2 கி.மீட்டர் பின்வாங்கச் சொல்லி கட்டளை பிறப்பித்தது. சமரில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் உடனே தமது நிலைகளில் இருந்து பின் வாங்கி சுமார் 3 கிலோ மீட்டர் பின் நகர்ந்தனர். அப்போது இராணுவம் இழப்புக்களை தாங்க முடியாமல் பின் வாங்குவது போன்ற தோற்றப்பாடே மேலோங்கி இருந்தது. இராணுவம் பின் வாங்கிய சிறிது நேரத்திலேயே அங்கே பல எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன, நச்சுவாயுக் குண்டுகளும் பாஸ்பரஸ் குண்டுகளும் அவ்விடத்தில் மழையாகப் பொழிந்தன. இத் தாக்குதலில் காயமுற்றிருந்த கேணல் தீபன் வீரச்சாவை தழுவ, நச்சுக் குண்டின் தாக்குதலில் தளபதி விதுசா, துர்க்கா ஆகியோர் வீரச்சாவடைந்தனர். கடாபியின் அணிமீது எரிகுண்டு வீழ்ந்து வெடித்ததாகக் கூறப்படுகிறது. இறுதிநேரத்தில் 2 கால்களையும் அவர் இழந்ததாக களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேரத்திலேயே இலங்கை இராணுவம் உலகப் போர் மரபுகளை மீறும் வண்ணம் ஒரு ஈனச் செயலில் ஈடு படத் துணிந்தது. எதிரியை சமாளிக்க முடியவில்லை என்றதும் பேடித்தனமான செயலை அரங்கேற்றத் நினைத்தது இராணுவம். உடனடியாக தனது இராணுவத்தை 2 கி.மீட்டர் பின்வாங்கச் சொல்லி கட்டளை பிறப்பித்தது. சமரில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் உடனே தமது நிலைகளில் இருந்து பின் வாங்கி சுமார் 3 கிலோ மீட்டர் பின் நகர்ந்தனர். அப்போது இராணுவம் இழப்புக்களை தாங்க முடியாமல் பின் வாங்குவது போன்ற தோற்றப்பாடே மேலோங்கி இருந்தது. இராணுவம் பின் வாங்கிய சிறிது நேரத்திலேயே அங்கே பல எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன, நச்சுவாயுக் குண்டுகளும் பாஸ்பரஸ் குண்டுகளும் அவ்விடத்தில் மழையாகப் பொழிந்தன. இத் தாக்குதலில் காயமுற்றிருந்த கேணல் தீபன் வீரச்சாவை தழுவ, நச்சுக் குண்டின் தாக்குதலில் தளபதி விதுசா, துர்க்கா ஆகியோர் வீரச்சாவடைந்தனர். கடாபியின் அணிமீது எரிகுண்டு வீழ்ந்து வெடித்ததாகக் கூறப்படுகிறது. இறுதிநேரத்தில் 2 கால்களையும் அவர் இழந்ததாக களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




