இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
ஞாயிறு, 2 மே, 2010
தமிழீழத் தமிழச்சி!
தமிழீழத் தமிழச்சி என்பதால் என் தாயும் விதவை என் சகோதரியும் விதவை என் நண்பியும் விதவையே.....! அன்று கிருசாந்தியை புதைத்த போது வாய் பொத்தியிருந்தாய் நேற்று தர்சினியை எரித்த போது கண் மூடியிருந்தாய் உனது பலதடவை அறியாமையினால் இன்று எம்மின தமிழ்ப் பெண்கள் இப்ப எம்மோடு இல்லை....! எங்கள் மிஞ்சியிருக்கும் கண்மணிகளை தமிழகத்துக்குள் ஒழித்து வைத்தால் – அங்கையும் கருணாநிதியின் மோப்ப நாய்கள் பெண்ணாய் பிறந்த எமக்கு ஈழத் தமிழச்சியாக வாழ....???
தாயுமான எமது தலைவன் .............................
சோதனைக்காலங்களில் எடுக்கும் முடிவுகளே சாதனைகளாகிறது என மார்டின் லூத்தர் சொல்வார். நமக்கான போராட்ட வடிவம் கூட, இப்போது நாம் எடுக்கும் முடிவுகளில் தீர்மானிக்கப்பட இருக்கிறது.
தீவட்டிகளோடு இரவில் செஞ்சேனை......
தீவட்டிகளோடு இரவில் செஞ்சேனை நெடும்பயணத்திற்குத் தயாராகிறது ஆயிரக்கணக்கில் நதிகளும் மலைகளுமாய் நடந்து தடைகளை எளிதில் கடந்தனர். மலைமுகட்டிலிருந்து பாம்புகள் போல் சீற்றலைகளோடு ஐந்து அருவிகள் கீழிறங்கி விழுகின்றன. மலையின் மச்சமாய் கோபுரம்போல் டாம்பீகமாய் உமெங் மலைச்சிகரங்கள் செங்குத்தான மலைகளின் மீது வெப்ப மேகங்கள் படர்கின்றன. அலையலையாய் தங்க மணல் விழும், இரும்புச் சங்கிலிப் பாலத்தின் கண்களின் வழியே தாது நதி குளிர்ச்சியாய் வழிந்தோடுகிறது. ‘மின்’ தொடர் மலைகளின் மீது பல மைல்கள் பனிபடர்ந்து உடையலங்காரம் நடக்கிறது. பெரிதாய் சிரித்தவாறு எங்கள் செஞ்சேனை வீரர்கள் இவற்றை எளிதாய்க் கடந்து ஏகினர் காண். -தோழர் மாவோ (1940) எமது இனிய உறவுகளே! மீண்டும் ஒருமுறை இந்த கவிதையை வாசியுங்கள்.
தியாகி திலிபனின் கனவை நனவாக்க எழு -மே 02
தியாகி திலிபன் அன்று கூறியதைபோல தமிழீழம்தான் தமிழ் மக்களுக்கு உண்மையான விடிவினைப் பெற்று தரும் ஆகவே தாயகத்தில் அவதியுறும் எம் உறவுகளை எம் நெஞ்சிலிருத்தி.. எமது தேசியத்தலைவரின் வழிகாட்டுதல்களைத் துணைகொண்டு தெளிவு பெறுங்கள். தெளிவுபெற்று உறவு, நட்பு, தனிமனித உணர்வுகளுக்கு இடம் கொடுக்காமல் தேசத்தின் விடிவு ஒன்றையே நோக்காக கொண்டு அனைத்து முயல்வுகளிலும் எண்ணித்தெளிந்து செயற்பட்டு நாளை தவறாமல் புலத்தில் வாழும் எல்லாத் தமிழ் மக்களும் நாடு கடந்த அரசாங்கத்திற்க்கான வாக்குப் பதிவினை செய்து, உங்கள் சரியான பிரதிநிதிகளை தெரிவு செய்யுங்கள். 'எந்தப்பலத்திலும் ஒருபலவீனம் இருக்கும். அதனைத் தேடிக்கண்டுபிடித்து, அதற்கேற்ற விதத்தில் துணிகரமான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்தான் எங்களுடைய வெற்றியே தங்கியிருக்கின்றது. அசுரபலங்கொண்ட கோலியாத்தை ஒரு சிறுவன் வெற்றிகொண்டது இவ்விதம்தான்." மேதகு வே. பிரபாகரன்
தமிழ் முஸ்லிம் உறவுகளே கவனம்!!
இலங்கையில் தமிழ் முஸ்லிம் உறவில் விரிசல்களை ஏற்படுத்தும் சதி ஒன்று அங்கு இடம்பெறத் தயாராகிக்கொண்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி கிடைத்துள்ளது. குறிப்பாகக் கிழக்கைக் குறிவைத்து இந்த சதி அரங்கேற இருப்பதாகவும் நம்பப்படுகின்றது. கிழக்கில் ஒரு தமிழ் முஸ்லிம் இனக்கலவரத்தை ஏற்படுத்தும் நகர்வுகள் இரகசியமாக மேற்கொள்ளப்படுகின்றதாக தகவல்கள் கசிந்துள்ளன.
புதிய கண்டுபிடிப்பு! எடப்பனுக்கு பிரதி அமைச்சர் பதவி கொடுத்த ஞானோதயமா?!
வவுனியா நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களும் அகதிமுகாம்களிலிருந்து மீள்குடியேற்றப்பட்ட மக்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதை தான் நேரடியாக அவதானித்ததாகவும் அந்த மக்களும் தம்மிடம் இது குறித்துத் தமது அதிருப்தியை வெளியிட்டதாகவும் ஒட்டுக்கட்சி ஒன்றின் முக்கியஸ்தர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
யாழில் கடத்தல்களாம்!!!! கூறுபவர்கள், ஐக்கிய இலங்கையை கட்டி எழுப்ப வேண்டும் என்று கூறுபவர்கள்!
யாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் ஆட்கடத்தல் நடவடிக்கைகளால் பொதுமக்கள் அச்சமும் பீதியும் அடைந்துள்ளனர். கடத்தல் சம்பவங்களோடு தொடர்புடைய குற்றவாளிகள் பிடிபட்டு வரும் நிலையிலும் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கடந்த மாதம் சாவகச்சேரியில் கப்பம் கோரி 16 வயது இளைஞன் கடத்தப்பட்டார். பின்னர், படுகொலை செய்யப்பட்ட நிலையில்
சனி, 1 மே, 2010
தென்னிலங்கை நிதிநிறுவனங்களின் ஆதிக்கத்துக்கு எதிர்ப்பு
யாழ்ப்பாணத்தில் தென்னிலங்கையின் நிதி நிறுவனங்களை திறப்பதற்கு, சிவில் அமைப்புகளும், அரச சார்பற்ற நிறுவனங்களும் தமது எதிர்ப்பை வெளிக்காட்டி வருகின்றன. யாழ்ப்பாண மக்களின் நிதி பொருளாதாரத்தை சீர்குலைக்கும் இலக்குடன் தென்னிலங்கை நிதி முதலீட்டு நிறுவனங்கள் அங்கு திறக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே அரசாங்கம் அந்த நிறுவனங்களுக்கு அனுமதிகளை வழங்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனங்கள் போலியான தொழில்வாய்ப்புகளை முன்வைத்து
தலைவனின் நாடாளுமன்றம்,,,,,
ஈழத் தமிழினம் புதியதொரு வரலாறு எழுதுவதற்குத் தயாராகிவருகின்றது. அண்ணன் உருத்திரகுமாரின் உன்னத பணியின் முதல் அத்தியாயமாக நாடு கடந்த தமிழீழ அரசு எனும் குழந்தை பிறப்பெடுக்கவுள்ளது. அந்தக் குழந்தையின் சுகப் பிரசவம் முதல் அதன் வளர்ச்சி மற்றும் அந்தக் குழந்தையின் வெற்றிப் பயணம் என்பன புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களாகிய எங்கள் ஒவ்வொருவரின் கைகளிலேயே தங்கியுள்ளது. வாக்குரிமையுள்ள சகலரும் தங்கள் வாக்குகளை செலுத்துவதன் மூலம் நாடு கடந்த தமிழீழ அரசின் வெற்றியில் நாங்கள் எல்லோரும் பங்கெடுக்க முடியும்.
அரைகுறை உணவு, பழைய ஆடைகள், புத்தகங்களோடு செலவுகளைக் குறைக்கவேண்டி அநேக மாணவர்கள் தம் வெறும் வயிற்றில் தண்ணீரை மாத்திரம் அருந்தியபடி கல்வி கற்றுக் கொண்டிருக்கிறார்கள். குடும்பத்தினர் அகதி முகாம்களிலும், தொழிலற்றும் வாடியிருக்கும்போது தமது தேவைகளுக்காக குடும்பத்தை நாடவும் இவர்களால் முடியாதுள்ளது. அடுத்ததாக யுத்தத்தின் மூலமாக ஏற்பட்ட உடல் சுகவீனங்களுக்கான மருந்துகளைப் பெற்றுக் கொள்ளவும் பணம் தேவைப்படுவதால் பலர் மருத்துவத்தை இடைநிறுத்தி, வலிகளைத் தாங்கிக் கொள்ளப் பழக்கப்பட்டுப் போயுள்ளனர். இது இப்படியிருக்க, ‘ஷெல் விழுந்தபொழுது நாங்கள் அன்றே செத்துப் போயிருந்தால் இதை விடவும் நன்றாக இருந்திருக்கும்’ என்று சொல்கிறார்கள் வவுனியா மெனிக்பார்ம் முள்வேலி முகாமில் தங்கவைக்கப்பட்டிருக்கும் இடம்பெயர்ந்த மக்கள். ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிற்பாடு இங்குள்ள அனேகமான மக்கள் பட்டினியோடுதான் காலத்தைக் கடத்துகிறார்கள். 1.5 லீற்றர் கொள்ளளவுடைய ப்ளாஸ்டிக் பெப்சி போத்தலொன்றின் மேற்பகுதியை வெட்டிவிட்டால் கிடைக்கும் பாத்திரத்தினளவு அரிசிதான் ஒரு கிழமைக்கு ஒருவருக்கு கொடுக்கப்படுகிறது. கோதுமை மாவும் அதே அளவுதான் கொடுக்கப்படுகிறது. ஐம்பது கிராமுக்கும் குறைவான அளவுடைய சீனியும், அதே அளவு பருப்பும் கொடுக்கப்படுகிறது. ஒரு சிறிய குவளையில் தேங்காயெண்ணைய் வழங்கப்படுவதோடு ஒரு கிழமையின் ஏழு நாட்களையும் இந்த உணவுப் பொருட்களோடு மட்டுமே கழிக்க வேண்டியுள்ளது. மரக்கறி, கீரை வகைகள், இறைச்சி, மீனென்று எதுவுமே இல்லை. உடைகள், சமைக்கத்தேவையான மற்ற பொருட்கள், பாத்திரங்களென அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான எதுவுமேயில்லை. ஆனால் தேர்தலுக்கு முன்பு அரச சார்பற்ற நிறுவனங்களின் மூலம் மரக்கறி வகைகள், வெங்காயம், மிளகாய்த் தூள், மசாலாத் தூள், உப்பு, முட்டை, கிழங்கு, நெத்தலி போன்றவை இவர்களுக்குக் கிடைத்துள்ளன. ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இவை அனைத்தும் நிறுத்தப்பட்டதோடு வழங்கப்பட்ட அரிசி, கோதுமையின் அளவும் பாதியாகக் குறைந்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தற்பொழுது அரிசி, கோதுமை வழங்கப்படும் அதே பாத்திரத்தின் இரு மடங்கு அளவு ஒரு வாரத் தேவைக்கென ஒருவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் இம் மக்களினது விருப்புவாக்குகள் எதிர்க்கட்சியைச் சார்ந்திருந்ததே இன்றைய நிலைக்கான காரணமென்பது வெளிப்படையாகிறது. உண்மையில் இங்குள்ள அனேகமான அகதிமக்களுக்கு வாக்களிக்கும் சந்தர்ப்பமே வழங்கப்படவில்லையென்பதையும் இங்கு சொல்ல வேண்டும். இங்குள்ள அகதிகளில் சிலர் மட்டும் வெளிநாடுகளிலிருந்து தமது உறவினர்கள் அனுப்பும் பணத்தினைக் கொண்டும், அரச வேலைகளிலிருந்தோருக்கு அரசால் கொடுக்கப்படும் பணத்தினைக் கொண்டும்தான் வாழ்க்கை நடத்துகிறார்கள். இது போன்ற உதவிகளேதுமற்ற பலர் அன்றாட வாழ்க்கையைக் கழிப்பதற்கே வழியில்லாத கையறு நிலையில் இருக்கிறார்கள். வெளியூர்களுக்குச் சென்று உழைக்கும் அனுமதியை சமீபத்தில்தான் இம் முகாம் வாசிகளுக்கு வழங்கியுள்ளது அரசு. அதுவும் கூட அதிகபட்சமாக இரு மாதங்களுக்கு மட்டும்தான். அதாவது இரண்டு மாதங்களுக்கொரு முறை முகாமுக்கு சமூகமளித்து, வெளியே சென்று வேலை பார்க்கும் அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இந்த அனுமதிப்பத்திரத்தில் பகுதிப் பெயர், குழு இலக்கம், வீட்டு இலக்கம், குடும்ப இலக்கம், மாவட்டம், பிரதேச சபை பிரிவு, கிராம சேவகர் பிரிவு மற்றும் குடும்ப உறுப்பினர்களின் விபரங்கள் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. குடும்ப உறுப்பினர்களின் பெயர்களோடு அவர்களுக்கான இலக்கங்கள், உறவு முறைகள், அவர்களது தேசிய அடையாள அட்டை இலக்கங்கள் ஆகியனவும் குறிப்பிடப்படுவது கட்டாயம். அதன் பிறகு தாம் தொழில் பார்க்கச் செல்லவிருக்கும் ஊரைக் குறிப்பிட வேண்டும். அந்த ஊருக்குப் போய் சந்திக்க இருப்பவரின் பெயரும் தொலைபேசி இலக்கமும் குறிப்பிடப்பட வேண்டும். அத்தோடு செல்லும் நாளின் திகதி மற்றும் நேரத்தோடு, இரண்டு மாதங்களுக்குள் திரும்ப வரும் நாளின் திகதியையும் நேரத்தையும் கூடக் குறிப்பிட வேண்டும். முகாமிலிருக்கும் இடம்பெயர்ந்தவர்களுக்கு, இலங்கை அரசால் வழங்கப்பட்டிருக்கும் தற்காலிக அடையாள அட்டைகள் கூட அதி நவீன பார்கோட் இலச்சினைகளுடனானவையாக இருக்கின்றன. இதனுள் முகாம்வாசியுடைய அனைத்துத் தகவல்களும் அடங்கப் பெற்றிருக்குமென நம்பலாம். நாட்டின் தேசிய அடையாள அட்டைகள் கூட இந்தளவு பாதுகாப்பானதாகவும், முக்கியத்துவம் மிக்கதாகவும் இல்லை. முகாம்வாசிகளுக்கு தினமும் காலை ஆறு மணிக்குப் பிறகே வெளியே செல்ல அனுமதி கிடைக்கிறது. அத்தோடு இரவு எட்டு மணிக்குள் திரும்பி விட வேண்டும். முகாமிலிருக்கும் ஒரு குடும்பத்தில் எல்லோருக்குமே ஒரே தடவையில் முகாமை விட்டு வெளியே செல்ல அனுமதிப்பதில்லை. மக்கள் தமது முகாமன்றி வேறு முகாம்களுக்குச் செல்வது சம்பூரணமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. தூர இடங்களிலிருந்து உறவினர்கள் இவர்களைப் பார்க்க வந்தால் கூட அவர்களோடு சுதந்திரமாக, எந்தத் தொந்தரவுமின்றி கதைப்பது சிரமமாக உள்ளது. முள்வேலியின் இரு புறமிருந்துதான் கதைக்கவும் முடியும். இவ்வாறான முள்வேலிச் சிறைகளுக்குள் தள்ளப்பட்டிருப்பது தத்தமது பாட்டில் விவசாயமோ, கூலித் தொழிலோ செய்து உழைத்து வாழ்ந்துகொண்டிருந்த அப்பாவி மக்கள். “நாங்கள் எங்கள் வீடுகளுக்குப் போய் இருக்க விரும்புகிறோம். அரசாங்கம் எதுவுமே தரவில்லையென்றால் கூட காட்டிலிருந்து தடிகளை வெட்டி, வீடு கட்டி, விவசாயம் செய்துகொண்டு வாழ விரும்புறோம்.” தங்கள் கரங்களின் பலத்தோடு வாழ்க்கையைக் கொண்டு சென்ற இம் மக்களுக்கு இன்று உண்ணாமல், குடிக்காமல் அரிசி, கோதுமை சேகரித்து வவுனியாவுக்குக் கொண்டு போய் விற்று வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. முகாமிலிருந்து வவுனியாவுக்கு வருவதற்கு ஒருவருக்கு பிரயாணச் செலவாக ஐம்பது ரூபாய் தேவைப்படுகிறது. எனவே இவர்களுக்குக் கிடைக்கும் அரிசி, கோதுமைகளை ஒரு வாரம் உண்ணாமல் சேகரித்து, வவுனியாவில் அதை சரிபாதி விலைக்கு விற்று, இவர்கள் பணம் பெற்றுக் கொள்கின்றனர். தற்பொழுது வவுனியாவிலும் தற்காலிக தொழில்வாய்ப்புகள் ஏதுமில்லை. முகாம்களிலிருந்து அன்றாடம் தொழில் தேடி வெளியேறும் இது போன்ற அகதிகளோடு, உறவினர்களுடன் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்த மக்களால் வவுனியா நகரம் நிறைந்து போயிருக்கிறது. குடிப்பதற்கான நீரையும் முகாம் மக்கள் குழாய்க் கிணறுகளின் மூலமாகத்தான் பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவற்றில் காலையிலிருந்து இரவுவரைக்கும் வரிசைகள் நீள்கின்றன. காத்திருக்கின்றன. குளிப்பதற்காக சில நாட்களில் மட்டும் குழாய்களில் நீர் வழங்கப்படுகிறது. முகாம் பள்ளிக் கூடத்திலும் ஒரு நாளைக்கு ஒரு பாடமே கற்பிக்கப்படுகிறது. முகாமில் வைத்தியர்கள் இருந்த போதிலும் மருந்து வசதிகள் ஏதுமற்ற காரணத்தால் நோயாளிகள் செட்டிக்குளம் வைத்தியசாலைக்கே அனுப்பப்படுகிறார்கள். மீள் குடியேற்றம் என்ற பெயரில், மறுவாழ்வு அளிக்கப்படுவதாகச் சொல்லப்பட்டு முகாமிலிருந்து தங்கள் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்ட மக்கள் மகிழ்வோடுதான் வெளியேறினார்களா? இல்லை. ஏனெனில் தத்தமது ஊர்களுக்குப் போக முடியாத காரணத்தால் அவர்கள் ஏ ஒன்பது நெடுஞ்சாலையின் ஓரங்களில்தான் கூடாரமமைத்துக் கொண்டு தங்கியுள்ளனர். இதுதான் மீள்குடியமர்த்தல் என்ற சொல்லுக்குப் பின்பு மறைந்திருக்கும் உண்மை. யுத்தம் முடிவுற்றதோடு இடம்பெயர்ந்த மக்களனைவரையும் ஆறு மாத காலத்துக்குள் மீள்குடியமர்த்துவதாக அரசு வாக்குறுதியளித்திருந்த போதிலும் அவர்களது சொந்தக் கிராமத்துக்குச் செல்ல அனுமதி கிடைத்திருப்பது மிகச் சிலருக்கே. மீள் குடியமர்த்தப்பட்டோரெனச் சொல்லப்படும் அனேகமான மக்கள் தங்கியிருப்பது தங்கள் உறவினர்கள் வீடுகளிலும், ஏ ஒன்பது வீதியோரக் கூடாரங்களிலும்தான். இந்தக் கொத்தடிமை முள் வாழ்க்கையிலிருந்து மீண்டு, இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாழும் சுதந்திரம் வழங்கப்படுவது எப்போது? இதுதான் அவர்களுக்கும் எங்களுக்கும் எழும் ஒரே கேள்வி. இம் முகாம் மக்கள் இன்னும் காணாமல் போவதும், முகாமிலிருந்து பலவந்தமாகக் கொண்டுசெல்லப்படுவதும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றது. இவ்வாறாக அதிகளவாகக் காணாமல் போயுள்ளவர்களுக்கும் கொண்டு செல்லப்பட்டவர்களுக்கும் என்ன நடந்ததென யாருக்கும் தெரியவில்லை. “இலட்சக்கணக்கான மக்கள் ஷெல் விழுந்து, விமானக் குண்டு போட்டு செத்துப் போனார்கள். எப்படியாவது உயிர் பிழைத்து வாழ வேண்டுமென்றுதான் பிணங்களின் மேலால் இங்கு ஓடி வந்தோம். அன்றே ஷெல்லொன்று விழுந்து செத்துப் போயிருந்தால் நன்றாக இருந்திருக்குமென இப்பொழுது தோன்றுகிறது” அவர்கள் கண்ணீரோடு சொல்கிறார்கள்
மே 16,17,18 காலப்பகுதியில் பெரும் தாக்குதல் நடத்த புலிகள் திட்டம்-ராணுவ அதிகாரி தகவல்
மே 16,17,18 காலப்பகுதியில் பெரும் தாக்குதல் நடத்த புலிகள் திட்டம்-ராணுவ அதிகாரி தகவல் கடந்த வருடம் மே 17ஆம் திகதி புலிகளை தாம் முற்றுமுழுதாக அழித்திருந்தோம். வன்னியில் இருந்து இறுதி யுத்தத்தின் போது தப்பித்து சென்ற சிலர் கொண்ட புலிகளின் அணியினர் அவர்களின் தலைமை அழிக்கப்பட்ட அந்த காலப்பகுதியில் பல பகுதிகளில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத ராணுவத்தளபதி ஒருவர் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார். இந்த விடையம் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளதுடன் பல பிரச்சனைகளையும் தமிழர்களின் வருங்காள போராட்டத்திற்கும் தமிழர்களின் ஒற்றுமைக்கும் பங்கம் விளைவிக்கும் விதமாகவே இருக்கும் என்று மக்கள் கருதுகின்றனர். 1.விடுதலைப் புலிகளை தமிழர்களிடத்திலிருந்து பிரிப்பது. அது எவ்வாறாயின்.. சிங்கள ராணுவத்தினரால் இயக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சில முன்னால் போராளிகளை வைத்து பல கொளை கொள்ளை சம்பவங்களை நடத்த வைது அவர்களை கையும் களவுமாக பிடிப்பது போல் பிடித்து இவர்கள் புலிகள் தான்,இவர்களே இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதாக பரப்புரைகள் செய்யலாம் இதன் மூலம் தமிழர்களிடத்திலிருந்து புலிகளை பிரிக்க முயற்சி செய்வதோடு உலக நாடுகளுக்கும் புலிகளின் நற்பெயரை கலங்கப்படுத்தவும் முயலலாம். 2.மே 16,17,18களில் நடத்தப்படலாம் என கருதப்படும் தாக்குதல்களும் அதன் விளைவுகளும். புலிகளின் பெயரால் மே மாதம் நடுப்பகுதியில் சிங்களப்பகுதிகளை மையமாகக்கொண்டு பல தாக்குதல்களை நடத்தி குறிப்பாக பேருந்து,புகையிரதம்,ஆட்டோ போன்ற வாகனங்களில் குண்டுகளை வைத்து வெடிக்க வைத்து அதில் பலரை கொலை செய்வதுடன் அந்த பளியை புலிகள் மீது போடுவதுடன் தற்போது ஜரோப்பா உட்பட பல நாடுகள் புலிகள் மீது அவர்களால் போடப்பட்ட தடையை நீக்க ஆராய்வதால் அதை தடுக்கும் விதமாகவும் இது இருக்கும்,புலிகள் தீவிர வாதிகள் தான் எனவே அவர்கள் மீது போடப்பட்ட தடையை நீடிக்க வேண்டாம் என்று உலக அளவில் பிரச்சாரம் பண்ண மகிந்த அரசு முயலலாம். அதிலும் முக்கியமாக இந்த தாக்குதலின் மூலம் தமிழ், முஷ்லீம் மக்களை பிரித்து அவர்களிற்கிடையில் இன மோதலை உண்டுபண்ணுவதும் இவர்களின் திட்டமாக இருக்கக்கூடும். இந்த தாக்குதல்களை துரோக கும்பல்களை வைத்து முஷ்லீம் பகுதிகளிலும் நடத்தி அதில் பல முஷ்லீம்களும் கொல்லப்படுவதுடன் அவர்களின் கடைகளும் குண்டுகள் வைத்து தகர்க்கப்படுவதோடு முஷ்லீம் மக்களை பளிதீர்க்க புலிகள் இவ்வாறு செய்துள்ளார்கள் என்று கதை கட்டி விட்டு கிழக்கில் ஒரு தமிழ்,முஷ்லீம் இன மோதலை உருவாக்கி கறுப்பு யூலை போன்ற ஒரு சம்பவத்தை அரங்கேற்ற அரசு திட்டங்கள் தீட்டிவருவதாகவே அந்த ராணுவத்தளபதி தெரிவித்துள்ளார். 3.சரத்தின் ஆதரவு ராணுவத்தினர் மீது தாக்குதல். சரத் பொன்சேகா அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும் ராணுவத்தினரை பேருந்துகளில் ஏற்றி வேறு படைத்தளத்திற்கு மாற்றுவதாக கூறி ஏற்றிச்சென்று இடையில் அவர்களின் பேருந்தின் மீது தாக்குதலை நடத்தி அதில் இருக்கும் அனைவரையும் தீர்த்துக்கட்டுவார்கள். 4.அவசரகாலச்சட்டத்தை பல ஆண்டுகள் மீண்டும் நீடிக்கும் திட்டம். எஞ்சியுள்ள புலிகளில் ஆபத்து உள்ளது இதனால் அவசர காலச்சட்டத்தை இடைநிறுத்த முடியாது என்பதோடு வீதிச்சோதனைச்சாவடிகளும் அகற்றப்பட மாட்டாது என்று அரசு தெரிவிக்கலாம். குறிப்பாக கிழக்கின் ஆயுததாரி பிள்ளையான் குழுவினர் இந்த வாரம் இந்தியாவுக்கு செல்ல உள்ள விடையம் மற்றும் யாழில் புலிகளின் பெயரில் விடப்பட்டு துண்டுப்பிரசுரங்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கக்கூடும் என்றே கருத முடிகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)























