இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
திங்கள், 17 மே, 2010
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலமர்வு நிகழ்வு: வி.ருத்ரகுமாரன் ஆற்றிய உரை
தமிழ் ஈழ விடுதலைப் பயிருக்கு தம் உயிர்களை எருவாக்கிய எமது மாவீரர்களுக்கும் சிங்கள பேரினவாதத்தின் இனப்படுகொலைக்கு பலியான பொது மக்களுக்கும் முதற்கண் எனது வணக்கஙகளை தெரிவித்துக் கொள்கின்றேன். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இம் முதலமர்வு நிகழ்வுக்கு வருகை தந்திருக்கும் ஜனாதிபதி ஜோன்சன் அவர்களது ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவின் சட்டமா அதிபராக விளங்கிய திரு Ramsey Clark அவர்களே! மதியுரைக்குழு உறுப்பினர்களே! சக தெரிவு செய்யப்பட்ட அரசவை பிரதிநிதிகளே! புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களே! எமது தமிழீழத் தாயகத்தில் வாழ்ந்து வரும் எமதருமை உறவுகளே! தமிழ்நாட்டு சகோதரர்களே! உலகத் தமிழ் மக்களே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இறுதி நாள் - May 18 .....
முள்ளிவாய்க்காலில் தமிழரின் வீரம்செறிந்த விடுதலைப் போருக்கு முடிவுரை எழுதி விட்டதாக சிங்கள தேசம் மார்தட்டுகிறது. இந்தப் பேரழிவின் முதலாவது ஆண்டு நிறைவை சிங்களதேசம் பூரிப்போடு கொண்டாடுகிறது. அவர்கள் எம்மை முழுமையாக அடிமை கொண்டதை.எமது நிலம் முழுமையாக விழுங்கப்பட்டு விட்டதை நினைவு கூர்ந்து கொண்டாட்டம் நடத்துகிறார்கள்.
அராஜகத்தின் உச்சம்.....................
ஆயுதப் போராட்டம் ஓய்ந்து ஆண்டொன்றை எட்டி நிற்கிறது. எத்தனையோ துன்பங்கள், துயரங்களை கடந்தும் எந்தக் குறிக்கோளையும் எட்டாமலே இறுதி முடிவை எட்டிவிட்டது ஆயுதப் போராட்டம். கடந்த வருடம் இதே காலப்பகுதியில் வன்னி மண்ணில் அரங்கேறிய கொலை வெறியாட்டம், நம் இனத்தின் வாழ்வாதார ஆணி வேர்களையே அடியோடு சாய்த்துவிட்டது.
எங்கள் மீதான தடையை நீக்கு....!
எந்த ஒரு இயக்கமானாலும் அல்லது எந்த ஒரு நடைமுறையானாலும் அது கடந்த காலத்தின் துகள்களிலிருந்தே நமக்கு கிடைக்கிறது. கடந்த கால படிப்பினைகள் நம்மை எந்த பாதையை தேர்ந்தெடுக்க வேண்டுமென அறிவுறுத்துகிறது. அதன்படியே நம்மை முந்திச் செல்ல நாம் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற ஒரு செயலை கையிலெடுக்க தொடங்குகிறோம்.
தமிழ்பேசும் உறவுகளுக்கு களமுனைப்போராளியின் வேண்டுகோள்........................
தமிழீழம்
17.05.2010
எம் உயிரிலும் மேலான தமிழ்பேசும் மக்களே!
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக எமது விடுதலைப் போராட்டம் சந்தித்த சவால்களும்,நெருக்கடிகளும் எண்ணிப்பார்க்க முடியாதவை.
உலகமயமாக்கல் என்ற நவீன கொள்கைகளுக்குள்ளும்,உலக பயங்கரவாத எதிர்ப்பு என்ற முரண்பாடான வலைசிக்கல்களுக்குள்ளும் விடுதலைக்காக போராடும் தேசங்கள் காணாமல் போகின்றது என்பதே யதார்த்தம்.
இந்த நவீன கொள்கை ஒட்டுமொத்தமாக உலகதமிழினத்தின் விடுதலைக் குரலை நசுக்கி எமது போராட்டத்தை குழிதோண்டி புதைத்திருக்கிறது.
எந்த ஒரு நாட்டினது உதவியின்றி எம்கைகளை நம்பியே நாம் போராடினோம்.
எம்மை அழிக்கவந்தவரது கைகளை தடுக்க எங்களது வலிமையையே நம்பினோம்.ஆனால் சிங்களபேரினவாதமோ உலகெங்கும் ஓடிச்சென்று ஒப்பந்தங்கள் செய்து,ஆயுதங்களை குவித்து ஈழதேசத்தில் அரக்கதாண்டவத்தை அரங்கேற்றியது.சர்வதேசம் ஒருதேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தை புரிந்து கொள்ளாமல் சிங்கள பேரினவாதத்தின்
போலிப்பரப்புரைகளை நம்பியது எப்படி?உலகத்தின் தெருக்களெல்லாம் எம்மக்கள் கண்ணீரோடு திரண்டு நின்ற போதும் எமது போராட்ட நியாயத்தை சர்வதேசத்தின் செவிகளுக்குள் உரக்க சொல்வதற்கு நாம் தவறிவிட்டோம்
என்பதே உண்மை.
எம் வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்திகளுடன் நாம் போரிட்டோம், தாங்க முடியாத சுமைகளை எம்மக்கள் சுமந்து கொண்டனர்.ஆனாலும் எமது நியாயமான குரலை,எவராலும் மனித நேயத்துடன் புரிந்து கொள்ளவில்லையே என்ற கனத்த மனதோடு காத்திருக்காமல் சர்வதேசத்தின் செவிகளுக்கு எமதுஉரிமையின் அவசியத்தை உணர்த்திக் கொண்டே இருப்போம்.
இப்போது தாயகத்தில் நடப்பது என்ன?
காணமல்போதல்,கடத்தல்கள்,கைதுகள்,படுகொலைகள் மீண்டும் தொடர்கதையாகிறது.கட்டுப்படுத்த முடியாத களையாக கலாசார சீரழிவு தொடர்கிறது.தமிழினம்,தமிழ்நிலம்,சிங்கள மயமாக்கபடுகிறது.இந்நிலை எம் தேசியத்தை அழிவுப் பாதைக்கே கொண்டு செல்லும் என்பதே உண்மை.
இந்நிலையில் தமிழினம் திரண்டெழுந்து உரிமைக்காக குரல் கொடுக்கவேண்டும்.
இன்றுவரை தமிழ் மண்ணுக்காக போராடி தம்முயிர்விதைத்த உறவுகளை எங்கள்மனங்களிலிருத்தி அவர்களின் இலட்சியத்தை சுமந்தபடி நடப்போம்.
சிங்கள பேரினவாதத்தால் திட்டமிட்டு உருவாக்கப்படும் புலனாய்வுரீதியான பொய்ப்பரப்புரைகள் உட்பட தமிழ்மக்களுக்குள்உலவுகின்றமுரண்பாடுகளை களைந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையையும்,வழிகாட்டலையும்,
ஏற்று மண்ணுக்காக ஆகுதியான மாவீரர்களினதும்,மக்களினதும்,கனவுகளை வென்றெடுக்க உணர்வுரீதியாக ஒன்றுபட்டு ஒன்றுதிரள தமிழ்தேசியத்தின் பெயரால் வேண்டிக்கொள்கிறேன்.
"புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்"
இவ்வண்ணம்,
இன்றுவரை களமுனையில்
களமாடும்புலனாய்வுப்போராளி.
மா.ஆதித்தன்

புலிகளின் நடமாட்டம் -இராணுவம் எச்சரிக்கை
மன்னார் பகுதியில் உள்ள காட்டு பகுதிக்குள் தமிழ் ஈழ விடுதலை புலிகளின் நட மாட்டம் இருப்பதாக இராணுவம்
தெரிவித்துள்ளது .
மன்னர் பகுதி கட்டுக்குள் ரோந்து சென்ற படையினர் மனித நடமாட்டத்தின் காலடி சுவடுகளை கண்டு பிடித்துள்ளனர் .
ஆங்காங்கே தமது காலடி சுவடுகளை அழித்த வண்ணம் புலிகள் நகர்ந்து சென்றுள்ளனர் .
இந்த பகுதியில் உலவும் புலிகளிட்க்கு உணவுகள் கொடுப்போர் மீதும் அவர்களை பாதுகாப்போர் மீதும்
கடும் நடவடிக்கை எடுக்க படும் என இராணுவம் மக்களை எச்சரித்துள்ளது .
மன்னார் பகுதி தொடர் கிளிநொச்சி முல்லை காடுகள் வரை இந்த மனித காலடி சுவடுகளை இராணுவம் பரவலாக
கண்டறிந்துள்ளது .இதை அடுத்து மன்னார் மற்றும் பரந்தன் பகுதியில் அதனை சுற்றியுள்ள மக்களை கூட்டதிட்க்கு அழைத்த படையினர் இந்த பகுதியில் விடுதலை புலிகளின் நடமாட்டம் இருப்பதாகவும் அவரக்ளிட்க்கு உணவு மற்றும் அடைக்கலம் மற்றும் தகவல் வழங்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க படும் என மக்களை அழைத்து எச்சரிக்கை செய்து படையினர் அனுப்பி யுள்ளனர் .
அத்தோடு யாரவது புலிகளின் நடமாட்டத்தை சந்தேக மாணவர்களை கண்டால் தமக்கு அறியத் தரும்படி படையினர்
மக்களிற்க்கு கூறி அனுப்பி யுள்ளனர்
உலகத்தமிழினத்தின் பிரதிநிதிகள் அணிவகுக்க, அமெரிக்காவின் அரசியலமைப்பு வரையப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் மிக்க சுதந்திர சதுக்கத்தில் இன்று நாடுகடந்த தமிழீழ அரசு தனது "இலட்சியப்பயணத்தை" ஆரம்பிக்கிறது
நாடு கடந்த தமிழீழ அரச பிரதிநிதிகளின் முதலாவது அமர்வு மே 17-19ல் அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் கூடுகிறது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அரசவையின் முதலமர்வு மே மாதம் 17-19ம் திகதிகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் கூடுகிறது என விசுவநாதன் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார். இன்று வெளியிடப்பட்ட அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தென் அமெரிக்க நாடுகளில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து இலங்கை கண்காணிப்பு..!
தென் அமெரிக்க நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு செயற்பாடுகள் குறித்து இலங்கை அரசாங்கம் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெனிசூலாவில் புலிகளுக்கு ஆதரவான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக வெளியான தகவல்களை அடுத்து ஹவானாவிற்கான இலங்கைத் தூதுவர், வெனிசூலாவிற்கு விஜயம் செய்துள்ளார். தூதுவர் தமாரா குளியநாயகம் தற்போது வெனிசூலா அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஸ் ஜயசிங்க தெரிவித்துள்ளார். எனினும், தூதுவர் மீண்டும் ஹவானா திரும்பியதன் பின்னரே பேச்சுவார்த்தைகள் தொடர்பிலான முழுத் தகவல்களையும் வெளியிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாடு கடந்த தமிழீழ இராச்சிய உருவாக்கம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இதேவேளை, நாடு கடந்த தமிழீழ இராச்சிய உருவாக்கம் தொடர்பிலான செயற்பாடுகள் குறித்து இலங்கைத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து செஞ்சட்டை கிளர்ச்சியாளர்கள் தலைவர் சுட்டுக் கொலை
தாய்லாந்தில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தலைமை வகித்து வந்த முன்னாள் ராணுவ அதிகாரி கத்தியா சவாஸ்திபோல் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சூசை அண்ணையின் இறுதி வார்த்தைகள் கடந்தவருடம் ...................
நாம் அடிபணியப் போவதில்...
உலகம் கைவிட்ட உறவுகள் 25000 பேர் கோர மரணம்!’ – தளபதி சூசை பேட்டி வன்னி: தமிழ் ஈழ போர் முனையில் கடந்த 24 மணி நேரத்துக்குள் சிங்கள ராணுவம் மேற்கொண்ட கொலை வெறித் தாக்குதலில் வரலாறு காணாத இனப்படுகொலை நிகழ்ந்து வருகிறது. படுகாயமடைந்த 25000 தமிழர்கள்

முள்ளிவாய்க்கால் முடிவல்ல தொடக்கமே: சீமான்
நாம் தமிழர் இயக்கத்தின் கட்சி ஆரம்பநிகழ்வு பற்றியும், வலிசுமந்த மே 16,17,18 ஆம் திகதிகள் குறித்தும் வருடல் இணையம் சார்பாக கருத்துக் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்….
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)