ஞாயிறு, 6 ஜூன், 2010

மனிதநேயமற்ற மானுடர் கவனத்திற்கு ....இம் மானுடஉலகில் இல்லாத மனிதநேயம் ............



தமிழீழம் என்ற பெயர்... -கண்மணி

மகரந்தங்கள் என நம்பி
பாதங்களை அழுத்தியபோது
நெருஞ்சி முற்கள் தைத்தன.
கொட்டிய குருதியில்
வஞ்சகம் புரிந்தது.
புன்னகைக்குள்ளே
புதைக்குழி.

பிரிகேடியர் கபிலம்மான்-நினைவுகளின் பகிர்வு

எளிமையின் சிகரம் பிரிகேடியர் கபிலம்மான்


தமிழீழத்தின் தலைநகரம் திருகோணமலை மண்ணில் மலராகி ஈழமண்ணுக்காக சிறு வயதிலேயே தலைவனின் வழியில் நடந்தவர் தான் கபிலன் அல்லது கபிலம்மான் என அழைக்கப்படும் இந்த வீரம் செறிந்த வேங்கை. 1984 தமிழகத்தில் விடுதலைபுலிகளின் 4 வது பயிற்ச்சி முகாமில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களுடன் பயிற்ச்சி பெற்றார். இவர்கட்கான பயிற்ச்சியை முன்னாள் திருமலை தளபதி புலேந்திஅம்மான் அவர்கள் வழங்கினார். அதன் பின்னர்.........

எங்கள் காவலரண் ......!



வெளிநாட்டு உறவுகளே கொஞ்சம் இதை வெளி உலகுக்கு கொண்டு வாருங்கள் இல்லயேல் இன்னும் பத்து வருங்களில் எங்கள் ஊர் ஒரு காம களியாட்ட ஊராக மாற்றப்படும் என்பதில் ஐயமில்லை !


நீங்கள் தான் இன்று எங்கள் காவலரண் , உங்கள் குரல் தான் எங்கள் பெண்களின் கற்புக்கு கவசம் !

இன்றைய செய்தித் துளிகள்..........

வடக்கு மக்களின் அவல நிலைமைகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கட்சியும் முக்கிய பொறுப்பாளி என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

வாழ்ந்து காட்டிய தேசிய தலைவர் -கண்மணி

வீழ்த்த முடியாத உயரத்தில் தமிழின விடுதலை நிலைபெற்றிருக்கிறது. பன்னாட்டு அரச பயங்கரவாதங்கள் ஒன்றிணைந்து எமது விடுதலையை அதன் வீரியமிக்க போராட்ட வடிவங்களை வீழ்த்தமுடியவில்லை. உரிமையற்று, மானமற்று வாழ்வதைவிட செத்துப்போவதுதான் சாலச்சிறந்து என்கிற உயரிய மாந்த சிந்தனையோடு தமிழினம் தமது போராட்ட வடிவங்களை தளம், களம் மாற்றி கருத்தூண்றி நிற்கின்றது. நாம் வாழ்வதற்கு வெறும் உயிர் போதும். சோறு போதும். சோறு திண்று வாழ்வது மட்டும்தான் வாழ்வா? என்றால்

இம்ரான்-பாண்டியன்- பாண்டியன்(செல்லத்துரை சிறிகரன்) கொக்குவில் - யாழ்

(விடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவரான பாண்டியன் யாழ் மாவட்டத் தளபதியாக பணியாற்றியவர். காரைநகரில் இந்தியப் படையினர் முற்றுகையிட்டபோது தன்னைதானே சுட்டு வீரச்சாவடைந்தார்.)

விசேட புலனாய்வுப் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது.

வன்னி இறுதி யுத்தம் வரை முல்லைத்தீவில் பணியாற்றிய வைத்திய கலாநிதி கைலைநாதன் சுதர்சன் இலங்கையின் காவற்துறையின் விசேட புலனாய்வுப் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. யுத்தத்தின் இறுதியில் மக்களோடு மக்களாக முள்ளிவாய்க்காலில் இருந்து வெளியேறிய அவர் நீண்ட நாட்களின் பின் தன்னை வைத்தியர் என இனங்காட்டாது முகாமிலிருந்து வெளியேறி குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்று இந்தியா சென்றிருந்தார்.

அன்றாட பிரச்சினைகள், போராளிகளை விடுவித்தல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை

மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முதல் முறையாக நாளை மாலை நடைபெறவுள்ள உத்தியோகபூர்வமான சந்திப்பில் பேச்சுவார்த்தையில் போருக்குப் பிந்திய மீள்குடியேற்றத்துக்கும், சிறையில் உள்ள இளைஞர்களுக்கு பொது மன்னிப்பு, தமிழ் மக்களுக்கு உரிய நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதற்கும் கூடுதல் முன்னுரிமை கொடுக்கப்படும்.

சனி, 5 ஜூன், 2010

இந்தியாவை வைத்து காரியம் சாதிக்க முனைகிறதா இலங்கை ?

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு நாளை மறுதினம் இந்தியாவுக்குப் பயணமாகவுள்ளார். இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர், மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் இது.
இலங்கையில் ஜனாதிபதியாகப் பதவியேற்கின்ற எவரும் முதலில் இந்தியாவுக்குத் தான் பயணத்தை மேற்கொள்வது வழக்கம். ஆனால், மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் இந்தியாவுக்குப் பயணம் செய்யவில்லை. ரஷ்யாவுக்குத் தான் முதற்பயணத்தை மேற்கொண்டார்.

பாலித இஸ்ரேலின் மனித உரிமை மீறலை விசாரிக்க நியமனம்; ஐ. நாவுக்கு மதி கெட்டு விட்டதா?



பலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசாரணை ஆணைக்குழுவின் தலைமைப் பொறுப்பிற்கு பாலித கொஹன தெரிவு செய்யப்பட்டுள்ளார். இனப்படுகொலை செய்த ஓர் நாட்டின் பிரதி நிதியினை இன்னொரு நாட்டின் மனித உரிமை மீறல்களை விசாரிக்க எப்படி அனுமதிக்கின்றது.

மட்டக்களப்பு மீளக்குடியேறிய மக்களின் துயரம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் முன்னர் இருந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் வாழும் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக முன்னணிப் பத்திரிகையான இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
இப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த கிணறுகள் அனைத்தும் வரட்சியால் வற்றிவிட்டதால் அம் மக்கள் குடிநீரைப் பெறுவதற்கு பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அப் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

முள்ளிவாய்க்கால் மூட்டிய பெருந்தீ!


”தொடர்ந்து வடக்கே போய்க் கொண்டிருந்தால் தெற்கே தான் மிதக்க வேண்டும். அதுவும் தொடங்கிய இடத்திற்தான்.”
வரலாற்றின் பக்கங்களில் முள்ளிவாய்க்கால் ஒரு பாடநூல். இதன் தொகுப்பாசிரியர் மகிந்த ராஜபக்ச. இதன் உப ஆசிரியர்கள் பல்வேறு வெளிநாடுகளும், நாமும் தான்.
நாம் எதிரியை நோக்கி கேள்வி எழுப்ப வேண்டியதில்லை. ஏனெனில் அவன் எதிரி, அவன் எதிரி மட்டுமல்ல, அறநெறிகள் சிறிதும் இல்லாத எதிரி. ஆதலால் நாம் வீழ்ந்துபட்டதற்கான கேள்விகளை முதலில் எம்மை நோக்கியும், அடுத்து சர்வதேச சமூகத்தை நோக்கியும் எழுப்ப வேண்டி உள்ளது.

எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம்,,,,

தென் கொரியாவுடன் எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்று வட கொரியா எச்சரித்துள்ளது. அண்மையில் வட கொரிய போர் கப்பல் ஒன்று, தென் கொரிய கடல் எல்லைப் பகுதியில் மர்மமான முறையில் மூழ்கடிக்கப்பட்டது.


இந்நிலையில் தென் கொரியாதான் தங்கள் நாட்டு கப்பலை மூழ்கடித்ததாக வட கொரியா குற்றம் சாற்றியது.அத்துடன் தென் கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படுவதாகவும் அது கூறியிருந்தது. ஆனால் கப்பலை தாங்கள் மூழ்கடிக்கவில்லை என்று தென் கொரியா அதனை மறுத்தது. இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வந்தது.
இந்நிலையில் ஜெனீவாவில் ஆயுத ஒழிப்பு தொடர்பாக நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய வட கொரிய தூதரக அதிகாரி ரி ஜாங் கான், கொரிய தீபகற்பத்தில் தற்போது நிலவும் சூழல் மிகவும் அபாயகரமாக உள்ளது என்றும், எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்றும் கூறினார்.
வட கொரியாவின் போர் கப்பலை மூழ்கடித்து நிலைமையை மோசமாக்கியது தென் கொரியாவும், அமெரிக்காவும்தான் என்றும் குற்றம் சாற்றிய அவர், ஆனால் இந்த இருநாடுகளும் வட கொரியவுக்கு எதிராக மேலும் பொருளாதார தடைகளை விதிக்க கோருவதோடு,வட கொரியாவை தனிமைப்படுத்த முயற்சிப்பதாகவும் கூறினா

ஜூன் 5ல் உலக சுற்றுச் சூழல் தினம்..

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச் சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது. 2009 ம் ஆண்டுக்கான உலக சுற்றுச் சூழல் தினத்தை ‘வானிலை சவாலை எதிர்கொள்ள ஒன்றுபட வேண்டும்’ என்ற கருப்பொருளின் அடிப்படையில் கொண்டாட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இந்த நாளை சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தினமாக ஐக்கிய நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.