இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
சனி, 12 ஜூன், 2010
பார்வதி அம்மா, டக்ளஸ், இந்திய சட்டம் !
80 வயதை கடந்த மூதாட்டி சிகிச்சைக்கு விசா அனுமதி பெற்றும் அவரை விமானத்திலிருந்து இறங்கவிடாமல் திருப்பி அனுப்பினர் மத்திய அரசின் கூலிப் படைகள். அதே மத்திய அரசு தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவனந்ததிற்கு விசா கொடுத்ததுடன் சிவப்பு கம்பள வரவேற்பும் கொடுத்துள்ளனர். காரணம் டக்ளசால் கொல்லப்பட்டவன் இராஜிவ் குடும்பத்தை சேர்ந்தவன் இல்லை, தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழன் பொதுமக்களில் ஒருவன்.
பாதுகாப்பு அமைச்சின் அனுமதி தேவை?????????
வடக்கிற்கு வெளிநாட்டவர்கள் வருவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையினால், போருக்குப் பின்னர் சுற்றுலாத்துறையில் ஏற்பட்ட அதிகரிப்பின் பயன்களை வடக்கிலுள்ள சிறிய வர்த்தகர்கள் அனுபவிக்க முடியாமலுள்ளது என யாழ் வர்த்தகர் ஒருவர் முறையிடுகிறார்.
2ம் லெப். சுரேந்தினி-( ஜனந்தினி-பரமானந்தம் - இளவாலை)
வலிகாமத்தின் வடபகுதியில் அமைந்த அழகிய கிராமம்தான் இளவாலை. விவசாயிகளின் கை வண்ணத்ததில் பசுமை குறையாது செழிப்புடன் விளங்கியது. தமிழீழ சுதந்திரப் போராட்டத்திற்கு பெரும் உறுதுணையாக பல ஆண், பெண் போராளிகளைத் தந்து புகழ் பூத்த மண்ணது. அந்த மண்ணில் பிறந்ததாலோ என்னவோ ஜனந்தினியும் அச்சம் சிறிதும் இன்றி ஆயுதம் கரத்தில் ஏந்தி களம் பல கண்டு வீரச்சாவை புகழுடன் தழுவிக் கொணடவள்.
வன்னியில் இடம்பெறும் பயங்கரம் குரல் கொடுக்கத் தயாராகவேண்டும்- வலம்புரி
வன்னிப் பெரு நிலப்பரப்பில் நடந்து முடிந்த பெரும் போருக்குப் பின்னர் இப்போது மீள்குடிய மர்வு இடம்பெறுகின்றது. எந்தவிதமான அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில், தங்கள் சொந்த மண்ணில் குடியேறுவதை தவிர தங்கள் வாழ்க்கைக்கு வேறு ஆதாரம் இல்லை என்ற கட்டாயத்தில் மீள்குடியமர்வில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஐ.தே.க.கேள்வி???
கடந்த காலத்திலும் டில்லியே சமாதானத்தை குழப்பியது இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் விவகாரத்தில் சிறுபான்மையினக் கட்சிகளின் யோசனைகளை அறிந்து கொள்வதற்காக தமிழ், முஸ்லிம் கட்சிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்க இந்தியா திட்டமிட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தியைத் தொடர்ந்து
தமிழர்களின் நினைவு சுமந்து அமெரிக்காவில் தபால் தலை
சிறீலங்காவில் நடைபெற்ற போரில் தமிழ் மக்கள் சந்தித்த இழப்புக்கள் துன்பங்களை நினைவுபடுத்தும் நோக்கத்துடன் ஓபாமாவுக்கான தமிழர் அமைப்பு அமெரிக்காவில் தபால் முத்திரையை வெளியிட்டுள்ளது. கார்த்திகை பூவை வைத்து பதிக்கப்பட்டுள்ள இந்த தபால் தலையின் முதல் தர தபால் சேவைக்கு பயன்படுத்தப்படும்.
நிஜமான புலி நேரில் வரும்போது...-கண்மணி
ஆயுதக் குழுக்களிடம் இருந்து சகல ஆயுதங்களையும் களைய வேண்டும்
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பியதும் சட்ட விரோத ஆயுதக் குழுக்களிடம் இருந்து சகல ஆயுதங்களையும் களைய வேண்டும் என யாழ். மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி.யான விஜயகலா மகேஸ்வரன் நேற்று சபையில் தெரிவித்தார்.
வெள்ளி, 11 ஜூன், 2010
போராளி சுயந்தன்
09.01.1997 நடுநிசியைத் தாண்டிய அதிகாலை வேளை. ஆனையிரவு, பரந்தன் கூட்டுப்படைத் தளத்தினூடாக புலிகளின் அணிகள் நகர்ந்து கொண்டிருந்தன. அந்தத் தளத்தின் அமைவிடம் வலிந்த ஒரு தாக்குதலுக்குச் சாதகமற்ற பௌதீகச் சூழலைக் கொண்டிருந்தது. தரவைகள், உப்பு வெளிகள், சிறிய சிறிய உவர்நீர் நிலைகள் ஆகியவற்றைக் கொண்டிருந்தது அந்தச் சூழல், எனினும், முகாமின் முக்கியத்துவத்தை உணர்ந்த போராளிகள் அனைவரும் கண்களில் ஒரு வெறியுடனும், எங்கள் மண்ணை
கிழக்குப் பல்கலைக்கழக திருமலை வளாகத்தை சிங்களமயப்படுத்த அரசு முயற்சி
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தை சிங்களமயப்படுத்தும் முயற்சியில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது என முறைப்ப்பாடுகள் கிடைத்துள்ளன. திருகோணமலை வளாகத்தில் முகாமைத்துவ பீடம், பிரயோக விஞ்ஞான பீடம். சித்தமருத்துவ பீடம் ஆகிய மூன்று பீடங்கள் இருக்கின்றன.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் சிறிலங்காவின் போர்க் குற்றங்கள் குறித்த விவாதம்!
வன்னியில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின் போது சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்த விவாதம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 16ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
மீள்குடியேற்றத்தின் பின்னான நெருக்கடி......?!
எத்தனை முழக்கங்கள் எத்தனை அவலங்கள் எல்லாம் சுமந்த வன்னி வாழ்க்கையின் கொரூரத்தில் இருந்து மக்களால் மீண்டுகொள்ளவே முடியவில்லை. ஒவ்வொரு முறையும் வாக்குறுதிகள் வானைப் பிளப்பதாயே அமைகின்றன. எங்கு பார்த்தாலும் ஏதோ ஒரு அவலம் விதைந்தே கிடக்கிறது.
இந்த அவலத்தினை ஏற்படுத்தியவர்களே மீட்பர்களாகவும், அவதார புரிசர்களாகவும் தம்மைக் காட்டிக்கொள்ள அடிக்கடி வன்னியில் தலை நீட்டுகின்றார்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)












