சனி, 19 ஜூன், 2010

புத்தபிரானின் வாக்கு....

யுத்தத்தில் தோற்றவர்களை விட வென்றவர் களுக்கே அதிக துக்கம் என்பது கெளதம புத்த பிரானின் வாக்கு. இந்த வாக்கின் நிஜத்தை இந்த நாடு விரைவில் அனுபவிக்கப்போவதாக சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் எச்சரித்திருக்கிறார்.
இந்த எச்சரிக்கை எதனையும் இலங்கை அரசு கவனத்தில் கொள்ளவில்லை. எனினும் நேற்றையதினம் கொழும்பில் நடத் தப்பட்ட யுத்த வெற்றியின் ஓராண்டு விழா, இலங்கை மக்களின் முழுமையான ஆதரவுக் குட்படவில்லை என்பதை உணரவேண்டும்.

கப்டன் மொறிஸ்-பரதரராஜன் தியாகராஜா ஆத்தியடி, பருத்தித்துறை

நான் போர்முனையில்
குருதி வெள்ளத்தில் நிற்கிறேன்
மீண்டும் நிட்சயமாகத் திரும்பி வருவேன் - ஆனால்
உங்கள் கனவுகளிலும் நினைவுகளிலும் மட்டுமே...!
என்றான். அவன் தான் மொறிஸ்.

இலங்கையில் 25,000 சீன கைதிகள் ! தமிழருக்கு மேலும் பாதிப்பு- டி.ராஜேந்தர்

சீன அரசு இலங்கையிலே 25 ஆயிரம் சிறைக்கைதிகளை கொண்டு வந்து அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடுத்தியுள்ளது. இதன் காரணமாக இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்புகள் குறித்து இந்திய இலட்சிய தி.மு.க. தலைவர் டி.இராஜேந்தர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அன்று நெஞ்சு பொறுக்குதில்லை.. பொறுக்குதில்லை.. என்று பாடினான் தமிழ்க்கவிஞன் பாரதி. ஐயகோ இன்று ஆகி விட்டதே தமிழன் நிலை அதோ கதி..

ஐ. நாடுகள் அலுவலகம் திறப்பு..

முள்ளிவாய்க்கால் படுகொலை இடம்பெற்று ஒரு வருடத்தின் பின்னர் ஐக்கிய நாடுகள் சபை கிளிநொச்சியில் கால் பதித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்ட அலுவலகமே இன்று கிளிநொச்சியில் திறக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 18 ஜூன், 2010

ஸ்ரீலங்காவின் தந்திரமும் தமிழர்களின் இயலாமையும் ...

ஈழத்தமிழர் விவகாரத்தில் மீண்டும் பரபரப்பாகப் பேசப்படும் நபராக மாறியிருக்கிறார் ‘கே.பி.’ என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன்.


அவரைப் பற்றி ஏற்கெனவே பல கதைகள் புழக்கத்தில் உண்டு. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு நவீன ரக ஆயுதங்களை சர்வதேச மட்டங்களில் ரகசியமாகக் கொள்முதல் செய்து, காதும் காதும் வைத்தாற்போல கடத்தி, ஆழக்கடல் ஊடாக வன்னிக் காட்டுக்குள் கொண்டுவந்து சேர்ப்பதில் அவர் பலே கில்லாடி என்பது உலகறிந்த ரகசியம்.

சீனாதான் முன்னணியில்....

விடுதலைப் புலிகள் என்ற தரப்பு களத்திலிருந்து அகற்றப்பட்டுவிட்ட நிலையில் சிறிலங்கா பலம்பொருந்திய நாடாக வேகமாக வளர்ச்சிகண்டு வருகிறது.


அதேநேரம்..........

சூரியனில் இருந்து கடும் தீச்சுடர் 2012 இல் பூமியை அடையும் அபாயம் !

கடந்த 11 ஆண்டுகளாக அமைதியாக இருந்த சூரியன் தற்போதுவிழிப்படைந்துள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். பூமியை நோக்கி அது ஒரு பெரும் சூறாவளியை அனுப்பும் அபாயம் உள்ளது.

மத்திய கிழக்கில் யுத்தம் ஏற்படக் கூடிய சாத்தியம் ஏற்பட்டுள்ளது!

மத்திய கிழக்கில் யுத்தம் ஏற்படக் கூடிய சாத்தியங்கள் உருவாகியுள்ளதென சிரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

குடிநீருக்காக எம்மக்கள் ஏங்கிக் கொண்டிருக்க ஹொலி வூட்டில் உல்லாசிக்கின்றார் மகிந்தா!

எம் மக்களை எதிலிகளாக்கி குடி நீருக்கு ஏங்கித் தவிக்க விட்டு, திரைப்படம் தயாரிக்க 80 இலட்சம் இந்திய ரூபாக்களை முதலீடு செய்கின்றார் மகிந்த.

பிரிகேடியர் தீபன்-25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த புயல்... புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே நிரந்தரமாக அடங்கிப் போனது

கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையை பிறப்பிடமாக கொண்ட தீபனின்(வேலாயுதபிள்ளை பகீரதகுமார்) இயக்கப்பெயர் சிவதீபன்.இவர் சமயங்களில் தவபாலசிங்கம் என்றும் அழைக்கப்பட்டார். யாழ் மாவட்டம் தென்மராட்சியின் வரணிதான் தீபனின் பூர்வீகமாகும். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் விஞ்ஞான பீட மாணவனாகவிருந்த தீபன் பெற்ற க.பொ.த உயர் தர பெறுபேறுகள் அவருக்கு இலகுவாக பல்கழைக்கழக இடத்தைப் பெற்றுத்தந்திருக்கும் ஆனால் வரலாற்றுக் கடமையை உணர்ந்து போராளியானார் தீபன்.

ஈழத்தமிழர்களை அழிக்க இலங்கைக்கு உதவிய இந்தியாவிற்கு ஆரம்பமாகிறது சாட்டையடி !

இந்தியாவானது இலங்கையை தனது சிறிய தங்கையைப் போன்று கவனிக்க வேண்டுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த உணர்வை தற்போது இங்குள்ள (இலங்கையில்) பலர் பகிர்ந்துகொள்ளவில்லை என்று தோன்றுகிறது. அச்சுறுத்தலளிக்கும் பூதாகரமான ஒன்றாகவே இந்தியா நோக்கப்படுகிறது.

அண்ணை இருக்கிறார் எண்ட ஒரு துளி நம்பிக்கை இருந்தது இப்ப அதுவும் இல்லை..!!! புலம்பெயர் தேசத்து பிச்சல்களும் புடுங்கல்களும்தான்........?

என்ன நடக்குது இங்க?
எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல...
யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ...


மே 18 இக்கு பிறகு எல்லாம் தலைகீழா தெரியுது எங்களுக்கு...
ஒண்டு நாங்கள் தலைகிழா நிக்கிறோமா?-இல்லை
எல்லாம் தலைகீழா நடக்குதோ?


என்ன நடக்குது இங்க?
எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல...
யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ...

விடுதலைப் பயணத்தில் உறுதியுடனும் ஒருமைப்பாட்டுடனும் முன்னேறுவோம்!: வி.ருத்ரகுமாரன்

கடந்த மே மாதம் 17-19 ஆம் நாட்களில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அங்குராப்பணமும் முதலமர்வு நிகழ்வுகளும் நடைபெற்று ஒரு மாதம் பூர்த்தியாகும் இத் தருணத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டு அணுகுமுறையினையும், செயற்பாட்டு முயற்சிகளின் தற்போதைய நிலைமையினையும் மக்களுக்கு அறியத் தருதல் அவசியமானது எனக் கருதுகிறோம்.

செய்தித்துளிகள்



ஒட்டுகுழுக்களின் துண்டுப்பிரசுரம் ....தமிழ்சினிமா எதிர்ப்பு வாரமாம் ....

இலங்கையில் மட்டக்களப்பில் அமைந்திருக்கும் திரையரங்கத் திரைகளுக்கு தீவைப்பு சம்பவம் இடம்பெற்றிருப்பதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நடவடிக்கை இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அறியமுடிகிறது. மேலும் அவர்கள் ஒரு துண்டுபிரசுரத்தையும் விட்டுச்சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆலோசனைக் குழு நியமனமாகிறதாம்?!?!

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து நடவடிக்கை எடுப்பது தொடர்பான ஆலோசனை வழங்கும் நிபுணர் குழுவை ஒரு சில நாட்களில் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அறிவிக்கவுள்ளார்.