புதன், 8 செப்டம்பர், 2010

நினைவு வீரவணக்கம்

"வவுனியா அமைந்திருந்த வன்னி கூட்டுப்படைத் தலைமையகம்" மீது மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலில் காவியமான கரும்புலிகளின் நினைவு வீரவணக்கம். வான் புலிகள் மற்றும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணி ஆகியவற்றின் துணையுடன் 09.09.2008 அன்று இப்பத்து கரும்புலி வீரர்களும் வன்னி கூட்டுப்படைத் தலைமையகத்திற்குள் ஊடுருவி சிறிலங்கா படையினருக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்திருந்தனர்.

தமிழில் இணையத்தள முகவரி : முதல் தடவையாக...

உலக இணையத்தள வரலாற்றில் முதன் முறையாக இணையத்தள முகவரிகளை தாய்மொழியில் பயன்படுத்தும் சந்தர்ப்பம் இலங்கைக்கு கிட்டியுள்ளது. இந்த வாய்ப்பினைப் பெறுவதற்கு 'அய்கன்" (ICANN) நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது . இணையத்தள முகவரியை 'இலங்கை' என்று நாம் பதிந்து கொள்ள இதன் மூலம் எமக்கு வாய்ப்பேற்பட்டுள்ளது. ' உதாரணமாக வீரகேசரி இணையத்தளத்தை பார்வையிடுவதாயின் http://தளம்.வீரகேசரி.இலங்கை என்று தட்டச்சு செய்யலாம். "எமது சொந்த மொழியில் இணையத்தள முகவரியை முதன் முதலாக ஆசியாவில் மட்டுமல்ல, முழு உலகிலும் அறிமுகப்படுத்திய பெருமை உண்டு. அதுவும் முதன் முறையாக தமிழில் இணையத்தள முகவரி உருவாகியுள்ளது

18ஆவது அரசியலமைப்பு திருத்தம் 144 மேலதிக வாக்குகளால் வென்றது

18-வது அரசியலமைப்பு சீர்திருத்தம் மூன்றில் இரண்டு பெரும் பான்மை அதிகாரத்துடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. சீர் திருத்தத்திற்கு ஆதரவாக 161 வாக்குகளும் எதிராக 17 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஆதரவாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரும்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் 8 உறுப்பினர்களும் உள்ளடங்குகின்றனர்.இலங்கை ஜனாதிபதிக்கு அதிக அதிகாரங்களை வழங்குவதாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கை அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச் சட்டமூலம் நேற்று நிறைவேற்றப்பட்டது.

ஆசியாவின் முக்கியமான உறுப்பினர் சீனா.

தெற்காசியாவில் தனது வகிபாகத்தை கோடிட்டுக்காட்டியுள்ள சீனா, ஆசியாவின் முக்கியமான உறுப்பினர் என்ற வகையில் உபகண்டத்தின் சமாதானத்திற்கும் ஸ்திரத்தன்மைக்கும் இந்தியாவுடன் இணைந்து செயற்படத் தான் விரும்புவதாகக் கூறியுள்ளது. தெற்காசியா உட்பட ஆசியாவின் சமாதானம், ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கு சீனா பற்றுறுதியுடன் இருப்பதாக சீன வெளிவிவகார அமைச்சுப் பேச்சாளர் ஜியாங் யூ கூறியுள்ளார்.


சம்பந்தன் ஜயாவும் , பியசேனா மாத்தையாவும்.

ஐயா சம்பந்தன் தேர்ந்தெடுத்த ஆட்கள் இவர்கள்!. பியசேன என சிங்களப் பெயருடன், தமிழ் தாயின் பாலைக் குடித்து வளர்ந்த இவர் பெயரில் உள்ள சிங்களப் புத்தியைக் காண்பித்துவிட்டார் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் முதல் முதல் போட்டியிட்ட சிங்களவர் பியசேன. நாடாளுமன்ற உறுப்பினராக இவர் தெரிவானார். மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மேல்வைத்திருந்த நம்பிக்கையால் இவருக்கு வாக்களித்தனர்.

செட்டிக்குளத்தில் யுவதி கைது !!!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலை படையைச் சேர்ந்தவரென்ற சந்தேகத்தின் பேரில் இளம் யுவதி ஒருவர் செட்டிகுளம் பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

கொன்றவன் சொகுசு வீட்டில் கொல்லப்பட்டவர்கள் மரத்தின் கீழ் !!!!!

எல்லோருமே தன் மக்கள் எனக்கூறும் மஹிந்த தமிழர்களுக்கு இன்னமும் உதவமுன்வராதது ஏன்? தொடர்ந்தும் அடிமைகளாகவும், கைதிகளாகவும் தமிழர்களை வைத்திருப்பது ஏன்? வன்னி யுத்தத்தில் 40 ஆயிரம் மக்களை கொன்று
 குவித்து 3 இலட்சம் மக்களை வேரோடு பிடுங்கி எடுத்து முகாம்களில் அடைத்தது மஹிந்த அரசு. தன்னுடைய பிசாசுகளால் கொல்லப்பட்ட மக்களின் உறவுகளுக்கோ அல்லது வேரோடு விரட்டியடிக்கப்பட்ட மக்களுக்கோ இன்னமும் நட்ட ஈடுகளையோ இழப்புக்களையோ கொடுக்கவில்லை.


ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

தாதியர் நியமனத்தில் "தமிழ் யுவதிகள் ஒருவரும்' இல்லையா?"

வடக்கு, கிழக்குப் பகுதிக்கு அடுத்தபடியாக தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசம் மலையகம் தான். கண்டி, நுவரெலியா, பதுளை, பண்டாரவளை, அப்புத்தளை என்று பல மாவட்டங்களில் தமிழர்கள் வாழ்ந்து கொண்டுதானிருக்கின்றார்கள். தமிழுக்கு சம உரிமை என்பதெல்லாம் வெறும் வெற்றுப் பேச்சுத்தான் என்பதை அண்மையில் நடந்த சம்பவம் ஒன்று நிரூபணப்படுத்தியிருக்கின்றது.

அரசு காட்டும் அசமந்தம் மறப்பதற்குரியதல்ல...

போரினால் அனைத்தையும் இழந்து முகாம்களிலும் இடைத்தங்கல் முகாம்களிலும் தமிழ் மக்கள் துன்பப்படும்போது, இராணுவத்தினரைக் குடியேற்றுவதிலும் வன்னிப் பெருநிலப்பரப்பின் பெரும் பகுதியை அரச காணியாக்குவதிலும் ,அரசியலமைப்பு சீர் திருத்தத்திலும் அரசு தீவிரம் காட்டி நிற்பதை அவதானிக்க முடிகின்றது. வன்னிப்பெரும் போர் நடைபெற்று முடிபுற்றவேளை சுமார் 3 இலட்சம் தமிழ் மக்கள் முட்கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டிருந்தனர்.

சனி, 4 செப்டம்பர், 2010

போலீஸ்காரனாக நடந்து கொள்ள முடியாது. ஆனால் கொலைகாரனாக மட்டும் நடந்து கொள்ள முடியுமா?..

“ஈவிரக்கமின்றி தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவின் சகோதரர் பசிலை ‘கிங்’ என அழைக்கிறார் டி.ஆர்.பாலு. டி.ஆர்.பாலுவின் உண்மையான மனநிலை என்ன என்பதை வெளிப்படையாக அறியமுடிகிறது. ஆக ராஜபக்சே குடும்பத்தினருடனும் அவர் நல்லுறவு கொண்டிருக்கிறார் என்பதையும் இந்த பதில் வெளிப்படுத்துகிறது,” என்கிறார்கள் தமிழுணர்வாளர்கள்!


சூரிய ஒளி சக்தியில் மொபைல் போன்.

சூரிய ஒளி  சக்தியில் இயங்கும், மொபைல் போன் ஒன்றை இந்தியாவில் " வோடபோன் " நிறுவனம், விற்பனைக்குக் கொண்டு வருகிறது. VF 247 என அழைக்கப்படும் இந்த போன், கிராமங்களில் வாழும் மக்களுக்கு, எப்போதாவது ஒருமுறை மின்சாரம் பெறும் கிராமங்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். இந்த போனை சார்ஜ் செய்வதற்கு மின் இணைப்பே தேவையில்லை. ஏற்கனவே, ஓர் ஆண்டுக்கு முன் "சாம்சங் "நிறுவனம், இதே போன்றதொரு மொபைல் போனை Guru 1107 என்ற பெயரில் இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது. "வோடபோன் '"தரும் இந்த போனை நல்ல ஒளியில் வைத்திருந்தாலே போதும். தானாகவே சார்ஜ் செய்து கொள்கிறது.

லெப்.கேணல் கிறேசி

தமிழீழ தேசத்தில் எங்கெல்லாம் ஆக்கிரமிப்பு இராணுவங்கள் நிலைகொண்டுள்ளதோ அங்கெல்லாம் அவரது சுடுகலனும் கனன்றிருக்கும். களமுனைகளில் தொடர்ச்சியாக ஓய்வு , ஒளிச்சலின்றி சுழன்றடித்த வீரன் அவர். "செய்வோம் அல்லது செத்து மடிவோம்" என்ற வசனத்தை அடிக்கடி சொல்பவர், அதனைச் செயலிலும் செய்து காட்டியவர். எந்த நேரமும் இயக்கத்தின் நலனையே சிந்தித்து செயலாற்றிய மண்ணின் மைந்தன் அவர். கிளிநொச்சிப் பிரதேசத்தில் எண்பதுகளின் நடுப்பகுதி தொடங்கி, தொண்ணுறுகளின் ஆரம்பம் வரைக்கும் சிறீலங்கா இராணுவத்திற்கு எதிரான அனைத்துத் தாக்குதல்களிலும் காத்திரமான பங்கை லெப். கேணல் கிறேசி வகித்துள்ளார்.


வெள்ளி, 3 செப்டம்பர், 2010

முள்ளிக்குளத்தில் கடற்படையின் வடமேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகம்

புத்தளத்தில் உள்ள “தம்பபன்னி“, கற்பிட்டியில் உள்ள “விஜய“, முள்ளிக்குளத்தில் உள்ள “பரண“, சிலாவத்துறையில் உள்ள “தேரபுத்தா“ ஆகிய கடற்படைத் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதிதாக நிறுவப்பட்டுள்ள வடமேல் கடற்படைக் கட்டளைத் தலைமையகத்தின் பாதுகாப்பின் கீழ் புத்தளம் தொடக்கம் மன்னாரின் அரிப்பு வரையிலான கரையோரப் பிரதேசம் முழுவதும் கொண்டு வரப்பட்டுள்ளது

சந்திரிகா குமாரதுங்காவிற்க்கும் ஆப்பு.........

சந்திரிகா சிறிலங்காவினது அதிபராகவும், நாட்டினது நிதி அமைச்சராகவும் இருந்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 'லுக்கோ மோட்டிவ்' உடன்பாடு, 'எமிறேற் ஏயார்பஸ்' உடன்பாடு மற்றும் 'இவான் இன்ரநாஷனல்' உடன்பாடு போன்றன தொடர்பான தகவல்களை மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் திரட்டி வருகிறது. குறிப்பிட்ட இந்த உடன்பாடுகள் சட்ட ரீதியாகவோ அன்றி முறையாகவோ இடம்பெறவில்லை என்றும் அவற்றுக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் ஆரம்பகட்ட விசாரணைகள் பரிந்துரைத்திருப்பதாக அந்தத் தகவல்கள் மேலும் கூறுகின்றன.

மீள்குடியேறியும் ...............

வவுனியா புனர்வாழ்வு தடுப்பு முகாமிலிருந்து விடுதலையான ஊனமுற்ற விடுதலைப் புலி சந்தேக நபர்களில் ஒரு சாரார் வாழ்வாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.கடந்த ஏப்ரில் மாதம் முதல் வாரத்தில் தாங்கள் விடுதலை செய்யப்பட்டு குடும்பங்களுடன் இணைக்கப்பட்ட போதிலும், வாழ்வாதாரம் மற்றும் தொழில் வாய்ப்புகள் தொடர்பில் தங்களுக்கு உறுதிவழங்கப்பட்ட உதவிகள் கிடைக்கவில்லை என மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது வசித்து வரும் இவர்களில் சிலர் கூறுகின்றார்கள்.


கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது

1974ஆம் ஆண்டு அன்றையப் பிரதமர் இந்திரா காந்திக்கும், அப்போது இலங்கையின் பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயகவிற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், கையெழுத்திடப்படும் வரை இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. அது மட்டுமல்ல, இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் எல்லையை வரையறை செய்ய போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவிற்குச் சொந்தமான (தமிழ்நாட்டின் சேதுபது அரசாட்சியின் ஆளுமைக்கு உட்பட்டதாக இருந்த) கச்சத் தீவை, இரு நாடுகளுக்கும் இடையிலான தகராறுக்குட்பட்ட பகுதி என்றே (disputed island) கூறி, இலங்கைக்கு டெல்லி தாரை வார்த்தது.