வழக்கம் போல் சகல பத்திரிகைகளையும் காலையில் வாசித்து முடிக்கும் திலீபனால் இன்று எதுவுமே செய்ய முடியவில்லை. யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதிலுமிருந்து தனியார் பஸ் வண்டிககளில், மக்கள் வெள்ளம்போல் வந்து நிறையத் தொடங்கி விட்டனர். இன்னமும் திலீபன் போர்வைக்குள்ளேயே புதைந்து கிடக்கிறார். ஆவரால் எழும்ப முடியவில்லை. உடல் பயங்கரமாக வியர்த்துக் கொட்டியது.மின்விசிறி அவர் பக்கத்தில் வேகமாகச் சுழன்று கொண்டிருக்கிறது. ஒரு மனித இயந்திரம் தன் முழுச்சக்தியையும் பிரயோகித்து இயங்கிக் கொண்டிருக்கிறது. அன்றைய பத்திரிகைகளில் முக்கிய செய்திகளாக வழக்கம்போல் திலீபனைப் பற்றிய செய்திகளே இடம்பெற்றிருக்கின்றன.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
சனி, 18 செப்டம்பர், 2010
இழப்பு எண்ணிக்கைகளை பலரும் பல்வேறு விதமாக கூறிக்கொள்வதன் காரணம் என்ன?...
புனர்வாழ்வு அழித்தல் எனும் பெயரில் பலசரணடைந்த முன்னாள் போராளிகள் பலரும் மேற்படி கல்அகழ்தல் வேலையில் ஈடுபடவைத்தது சிங்கள அரசு. மேற்படி சம்பவ இழப்பு எண்ணிக்கைகளை பலரும் பல்வேறு விதமாக கூறிக்கொள்கின்றனர் .மருத்துவமனை செய்திக்குறிப்பில் கூறபட்ட எண்ணிக்கையை விட அமைச்சர் முரளிதரன் ஒருபுறம்,, இராணுவ பேச்சாளர் மறுபுறம்,, பொலிஸ் பேச்சாளர் என மாறுபட்ட எண்ணிக்கைகளை கூறுவதன் காரணம் தான் என்ன?.
முன்னாள் போராளிகளின் இழப்பினை அரசு மறைக்க முயல்வதாக பலரும் கருத்து தெரிவிக்கும் வேளை பல இழப்புக்களை ஏற்படுத்தக் கூடிய பெருந்தொகை வெடிபொருட்கள் முன் பாதுகாப்பின்றி பொதுமக்கள் பலரும் ஒன்று கூடும் இடத்தில் வைத்திருந்த காரணம் தான் என்ன? இழப்புகளை மறைக்க முற்படுதுவதன் நோக்கம் தான் என்ன?

சண்டிலிப்பாயில் பெண் கடத்தல் சம்பவம்
சண்டிலிப்பாய் கொம்பனிப்புலம் பகுதியில் ஒரு வெள்ளை நிற வாகனம் வேகமாக சென்றதாகவும் அதற்குள் இருந்து ஒரு பெண் கத்தியபடி சென்றதாகவும் இதனை அவதானித்த அப்பகுதி பொதுமக்கள் அவ் வாகனத்தை துரத்தி சென்ற போது அது தெல்லிப்பளைப் பக்கமாக சென்று உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் நுழைந்து விட்டதாகவும் அப் பகுதி பொதுமக்களால் தெரிவிக்கபட்டுள்ளது. இதனை அடுத்து அப் பகுதியில் பொலிசாரும் படையினரும் சேர்ந்து வீதிச் சோதனை செய்ததாகவும் தெரியவருகின்றது. ஆனால் பொலிசார் தரப்பில் இவ்வாறான சம்பவம் இடம் பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கதுறு கொடவாக மாறியது கந்தரோடை
யாழ்ப்பாணத் தமிழர்களின் பாரம்பரிய இடங்களின் பெயர்களை சிங்களமயமாக்கி பெயர்ப்பலகைகளைத் தொங்க விட்டுள்ள இராணுவமும் அரசாங்கமும் அம்மக்கள் மீது கலாச்சார மற்றும் உளவியல் ரீதியான தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது. யாழ்ப்பாண வரலாற்றின் புரதான இடங்களில் ஒன்றான கந்தரோடை என்னும் வரலாற்று புகழ்மிக்க இடத்தினை தற்போது கதுறுகொடவாக மாற்றியுள்ளனர் பெரும்பான்மை இனத்தவர்கள்.
புத்த விகாரையி்ன் தோற்றத்தில் கந்தரோடையின் சில பகுதிகளில் கட்டிட வடிவமைப்புகள் காணப்படுகின்றன. தென்பகுதி சிங்கள சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து பார்த்துவிட்டு செல்லும் இடமான கந்தரோடை என்னும் இவ்வூரினை கதுறு கொடவாக மாற்றி பெயருடன் கூடியதான குறியீட்டு பலகை அங்கே பொருத்தப்பட்டுள்ளது. சிங்களத்திலும் தமிழிலும் இது காணப்படுகின்றது. சிங்கள சுற்றுலாப் பயணிகளுக்கு புரிவதற்காக எழுதப்பட்டிருந்தால் அதனை சிங்களத்தில் இவ்வாறு எழுதிவிட்டு தமிழில் கந்தரோடை என எழுதியிருக்கலாம். ஆனால் தமிழிலும் இவ்வாறு எழுதியுள்ளது அனைவரையும் சிந்திக்க வைக்கும் செயலாக அமைந்துள்ளது. இதுதவிர சுன்னாகம் என்ற தமிழ்ப் பெயரை தொல்பொருள் திணைக்களமானது சிங்கள மயமாக்கி ஹுனுகம என்ற பெயரைக் கொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 17 செப்டம்பர், 2010
கோண்டாவிலில் ஆயுதங்கள் மீட்பு
கோண்டாவில் குமரகோட்டம் வைரவர் ஆலய வெளிவீதியில் நேற்று முன்தினம் இரவு படையினரால் ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் மாலை விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் துப்பாக்கி ஒன்றைக் கண்டதாகவும் அது தொடர்பில் ஊரெழு இராணுவமுகாமிலுள்ள படையினருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு சென்ற படையினரால் ஆயுதங்கள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சரத் பொன் சேகாவுக்கு 3 வருட கடுங்காவல் சிறைத்தண்டனை
நாடாளுமன்ற உறுப்பினரும் முன் னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன் சேகாவுக்கு இரண்டாவது இராணுவ நீதி மன்றம் 3 வருட கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இந்தத் தீர்ப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஒப்புதலின் பின்னரே அமுலுக்கு வரவுள்ளது.
சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாகப் பதவி வகித்தபோது மேற்கொள்ளப்பட்ட ஆயுதக் கொள்வனவில் இடம் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்ட முறைகேடுகள் தொடர்பாக இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.அந்நீதிமன்றம் தண்டனையை விதித்துத் தீர்ப்பளித்தது.

திலீபனுடன் நான்காம் நாள் 18-09-1987
கடந்த மூன்று நாட்களாக மேடையில் திலீபனுடன் சேர்ந்து ஒரு சொட்டு நீர் கூட அருந்தாது இருந்தேன். மானசீகமாகத் திலீபனின் நட்புக்கு உயரிய மதிப்பளிப்பவன் நான். அதனால் தான் என்னால் எதுவும் அருந்த முடியவில்லை. திலீபன் ஒன்றும் அருந்தவில்லையே, உண்ணவில்லையே, என்ற வேதனைதான் என்வாய்க்கு பூட்டுப்போட்டதே தவிர வேறு ஓன்றுமே இல்லை. கடந்த மூன்று நாள்களாக ஒன்றுமே நான் உண்ணாமல் அருந்தாமால் இருந்தது சிறிது களைப்பை ஏற்படுத்தி இருந்தாலும் திட மனத்துடன் அதைச்சமாளித்துக் கொண்டேன். நான்காம நாளான இன்றுதான் எனக்குச் சற்று நாவறர்ச்சியாக இருந்தது. ஆனாலும் அதைப்பொருட்படுத்தாமல் யாரிடமும் என் விரதத்தைப்பற்றிக் கூறாமல் இருந்தேன். இரண்டு மூன்று முறை ராஜனும் - நவீனும் என்னைச் சாப்பிட அழைத்த போது நான் பிடிவாதமாக மறுத்து விட்டேன். என்னை மேடைக்குப் பின்புறமிருந்த வீட்டிற்கு அழைத்துப் திலீபன் இருக்கும் நிலையைப் பார்க்கும் போது என்னால் எதுவும் அருந்த முடியவில்லை என்று மாத்தயாவிடம் கூறிய போது என்னால் தாங்க முடியவில்லை. விம்மி விம்மி அழத்தொடங்கி விட்டேன்.
பதுங்கிய புலிகளின் தாக்குதலா?, சதியா?, விபத்தா?
தமது இலக்கு நிறைவேறும் வரை நீண்டகாலம் காத்திருந்து தமது இலக்குகளை அழித்தொழித்த பல தற்கொடையாளர் பலர். இந்த வகையில் மட்டு. கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் வெடிப்பு சம்பவம்.குண்டு வெடிப்பு நிகழ்வதற்கு சற்று சில நிமிடங்களிற்கு முன் அமைச்சர் முரளிதரன் பன்குடாவெளி நரிப்புத்தோட்டத்தில் மின்சாரம் வழங்கும் நிகழ்வில் பங்குகொள்ளும் நோக்குடன் தனது காவலர்களுடன் மேற்படி பொலிஸ் நிலையத்தில் தங்கி நின்று சென்றுள்ளார். குண்டுவெடிப்பு அமைச்சருக்கு குறிவைக்க பட்டதா? அண்மைய நாள்களில் பல விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள்,,ஆதரவாளர்கள் கிழக்கில் கைது செய்ய பட்டதாக சிங்கள ஊடகங்கள் பல செய்தி வெளியிட்டமை உற்று நோக்கதக்கது. புலிகள் அமைப்பின் கடந்த கால தாக்குதல்கள் பல தம் தளபதிகளின் நினைவு நாள்களிலேயே நடைபெற்றுள்ளது ..அந்த வகையில் தியாக தீபம் திலீபன் அவர்களுடைய 03ம் நாளிலேயே சம்பவம் நடந்தேறியுள்ளது
இலங்கையில் சீனாவின் அபிவிருத்தி திட்டங்கள் பல இடம்பெற்று வருகின்றது யாவரும் அறிந்ததே. சீனாவின் அபிவிருத்தி
திட்டத்திற்காக கல் உடைப்பதற்கு பல டைனமைட் வெடிபெருட்கள் ஒரு பாரிய கொள்கலனில் கொண்டுவரப்பட்டு, அது கரடியனாறு
பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக வைத்து வேறு ஒரு பாரஊர்திக்கு மாற்றப்பட்டுக்கொண்டு இருந்தவேளையே இக் குண்டுவெடிப்பு
நிகழ்ந்துள்ளது. 2 சீனர்கள் உட்பட சுமார் 60 பொலிசார் இறந்துள்ளதாக,மேலும் 60 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த டைனமைட் குண்டுகள் சி 4 வகை அல்ல அது இலகுவில் வெடிக்க. அவை பற்றவைத்தாலே வெடிக்கும். இந்நிலையில் இக் குண்டுவெடிப்புக்கும் இந்தியாவின் உளவுத்துறைக்கும் சம்பந்தம்
இருக்கலாம் என அறியப்படுகிறது. இலங்கையில் சீனாவின் அபிவிருத்தித் திட்டங்கள் மிக ஆபத்தானவை எனக் காட்டவே இவ்வாறு
ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது. அத்தோடு சில தினங்களுக்கு முன்னர் 2 இந்திய ரோ அதிகாரிகளை இலங்கை நாடு
கடத்தியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் பெருகிவரும் நிலையில், சீனாவினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களை தவிடுபொடியாக்கவும், அதன் ஆதிக்கத்தை இலங்கையில் குறைக்கவும், மற்றும் போர் ஓய்ந்துள்ள நிலையில் சுமார் 60 பொலிசார் மரணமடைந்திருப்பதும் பெரும் நெருக்கடியைத் தோற்றுவிக்கும். சிங்கள மக்கள் சீனாமேல் அதிருப்தியடைந்துள்ளனர்.
பெருந்தெருக்கள் வேலைக்கான கல்லுடைத்தல், பாறையகழ்தல் வேலைகளிற்கான மேற்படி டைனமற் நிரப்பப்பட்ட இரண்டு
கொள்கலன்களும் பாதுகாப்புக் காரணங்களிற்காக பொலிஸ் நிலைய வளவிற்குள்ளேயே நிரந்தரமாக வைக்கப்பட்டிருந்தன என்றும்
மேற்படி சீன நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தினமும் தங்களிற்கு தேவையான அளவு வெடிமருந்தை மேற்படி கொள்கலன்களிலிருந்து
பெறுவார்கள் என்றும்,அதே போன்று இன்று தமக்கு தேவையான டைனமற்றை எடுத்துக் கொண்டு கல்குவாரிக்குச் செல்வதற்காக வருகை தந்த மேற்படி
சீன நிறுவனத்தினர் டைனமற்றை தங்களின் வாகனத்திற்கு மாற்றிக் கொண்டிருந்த போதே இவ் விபத்து ஏற்பட்டதாகவும், தொடர்ந்து
அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று கொள்கலன்களும் வெடித்துச் சிதறியதாகவும் தெரியவருகிறது.

வியாழன், 16 செப்டம்பர், 2010
இராணுவ உறவைப் பலப்படுத்த சீனா-இலங்கை அரசு தீர்மானம்!
இராணுவ உறவுகளைப் பலப்படுத்துவதற்கு சீனாவும் இலங்கையும் இணங்கியுள்ளன. இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் (பி.எல்.ஏ) பிரதம பொது அதிகாரிகளின் தளபதி சென்பிங்டேவுக்கும் இடையிலான சந்திப்பின்போது இது குறித்து கலந்துரையாடப்பட்டது.
கிழக்கில் வெள்ளை வான் கடத்தல் சம்பவங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன.
ஒருவர் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டவர் மட்டக்களப்பு, திருச்செந்தூரைச் சேர்ந்த முனுசாமி நரேந்திரன் (வயது 30) எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.வாகனமொன்றில் வீட்டுக்கு வந்தவர்கள் இவரை வெளியே அழைத்துச் சென்று பலவந்தமாக வானில் தூக்கிப் போட்டுச் சென்றுள்ளனர் என பொலிஸ் நிலையத்திலும், கடத்தப்பட்வரின் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.அண்மையில் மட்டக்களப்பு மாநகரசபை யின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் பிரகாசம் சகாயமணி கடத்தப் பட்டமையும், கணவரை விடுதலை செய்யாவிட்டால் தானும் குழந்தைகளும் மாநகரசபை முன்னால் தீக்குளிப்பர் என அவரது மனைவி அறிவித்திருந்தமையும் தெரிந்ததே.
திலீபனுடன் மூன்றாம் நாள் 17-09-1987
காலை ஆறு மணிக்குத் துயில் எழும்பிய திலீபனின் முகத்தைப் பார்த்த எனக்கு, ஓரு கணம் அதிர்ச்சியாயிருந்தது. காரணம் அவரின் உதடுகள் இரண்டும் பாளம்பாளமாக வெடித்து வெளிறிப்போயிருந்தன.கண்கள் நேற்றைக்கு இருந்ததைவிட இன்னும் சற்று உள்ளேபோயிருப்பது போல் தோன்றியது...... முகம் வரண்டு, காய்ந்து கிடந்தது, தலை குழம்பியிருந்தது "பல் விளக்கி முகம் கழுவவில்லையோ?" "இல்லை வாஞ்சியண்ணை... வேண்டாம்." கலைந்திருந்த தலைமயிரை நானே அவரருகில் சென்று வாரி விடுகிறேன். அவர் இன்னும் சிறுநீர் கழிக்கவில்லை. "வெளிக்குப் போகேல்லையோ?" என்று மெதுவாகக் கேட்கிறேன். "போகவேணும் போலதான் இருக்கு." "சரி கீழே இறங்கி வாருங்கோ" என்று கூறிவிட்டு, மேடையை விட்டு நானே முதலில் இறங்கி, கீழே இறங்குவதற்கு உதவி செய்ய முயன்றேன். "வேண்டாம் விடுங்கோ......நானே வருகின்றேன்" என்று என் கையை விலக்கிவிட்டு தானே கீழே குதிக்கின்றார்.
விரக்தியடைந்த நிலையில் மக்கள்.. ஐ.நாவின் பிரதிநிதி நீல் பூன்
இடம் பெயர்ந்து தற்போது அங்கு திரும்பியுள்ளவர்களின் நிலைமைகளைப் பொறுத்தவரை, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டத்தின் உட்பகுதிகளில் இருக்கும் தமிழ், கிராம மக்களின் நிலமைகள் என்பவை அவர்கள் எந்தப் பகுதியில் வாழ்கிறார்கள் என்பதை பொருத்து மாறுபடுவதாக அவர் தெரிவித்தார். இவர்களில் பலர் தமது சொந்த வீடுகளுக்கு திரும்பியதில் மகிழ்ச்சியடைந்திருந்தாலும் அவர்கள் இன்னமும் பல சவால்களை எதிர்கொள்வதாகவும், பல தொலைதூரப் பகுதி கிராமங்களில் இருந்த மக்கள் விரக்தியடைந்த நிலையில் காணப்பட்டதாகவும் நீல் பூன் தெரிவித்தார்
எழுதுதல் இலகு செய்வதே சிறப்பு.
எவரஸ்ட் சிகரம் ஏறுவோம், வாருங்கள் என்கிறார்கள் சிலர்
மரியானாவின் அடியில் இருந்துகொண்டு.
அழைப்பு விடுவது மட்டுமே அவர்களின் வேலையாம்
சிகரம் ஏறிச் சிக்குண்டவர்களும் ,இமயத்தில் இன்னும் எஞ்சியுள்ளோருமே மீண்டும் ஏறவேண்டுமாம். அதுவும் முன்பு ஏறி
முடக்கப்பட்ட பாதையால்.
நின்று பாத்தவருக்கே தெரியும் .நிலைமையின் கோரம்
பட்டவருக்கே புரியும். பாடுகளின் பாரம்.
இமயத்தில் வாழ்ந்தவர்கள் எல்லையற்ற துன்பத்தில்
சிகரம் ஏறியவர் சிதைந்தவராய் சிங்கத்துக் குகையினுக்குள்.
அக்கரையில் இருந்துகொண்டு அதிகப் பிரசங்கம்
வீட்டிற்குள் இருந்துகொண்டு வீரமாய் வசனங்கள்.
முதலில் வீழ்ந்தவரை எழ விடுங்கள்
சிக்குண்டவரை மீள விடுங்கள்எழக் கைகொடுங்கள்
மீளக் வளி சமையுங்கள்.
அதன் பின் இமயம் வந்து எவரஸ்ட் ஏற
நீங்கள் தயாரென்றால் கூப்பிடுங்கள் எங்களை
அப்போது நிட்சயம் மீண்டு நாங்கள்..அதுவரைக்கும் ஆகக்கூடியத்தை
அனைவரும் செய்யுங்கள் .அனைத்து வழிகளிலும்
இணைந்து முயலுங்கள்படுத்துக் கிடந்துகொண்டு
நடப்பவனில் குறை காணாதீர்கள் சொல்லுதல் சுலபம்
எழுதுதல் இலகு செய்வதே சிறப்பு.
எவரஸ்ட் தான் எம் இலக்கு

"மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்"
தியாகசீலன் திலீபனின் நினைவுநாளை அனுஷ்டிக்கும் இத்தருணத்தில், இருபத்திமூன்று வருடங்களுக்கு முன்பு நல்லூர் முன்றலில் அந்த தியாகி கூறியவை வெறும் வார்த்தைகள் அல்ல அருள்வாக்குகள் என்பதை தற்பொழுது நாம் உணர்கின்றோம். "மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்" என அன்று தியாகி திலீபன் கூறிய வாக்கு இன்று ஈழத்தமிழினத்திற்கு அவசியமான ஒன்றாக மாறியிருக்கின்றது.
"இனவிடுதலைப் போராட்டம்" என்பது அது எவ்வகையில் அமைந்தாலும் அந்த இன மக்களின் பூரண ஆதரவு இல்லாமல் மேற்கொள்ள முடியாது. ஒட்டுமொத்த மக்களும் விடுதலையென்ற ஒரே இலட்சியத்திற்காக தமது பங்களிப்பினைச் செய்ய முன்வர வேண்டும்.

திலீபனுடன் இரண்டாம் நாள்.....
16-09-1987 அதிகாலை 5.00 மணிக்கே திலீபன் உறக்கத்தை விட்டு எழுந்து விட்டார். முகம் கழுவித் தலைவாரிக் கொண்டார். சிறுநீர் கழித்தார், ஆனால் மலம் இன்னும் போகவில்லை. அவர் முகம் சோர்வாகக் காணப்பட்டாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல் எல்லோருடனும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். சகல தினசரிப் பத்திரிகைகளையும் ஒன்றுவிடாமல் படித்து முடித்தார். பத்து மணியளவில் பக்கத்து மேடையிலே நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின.
செவ்வாய், 14 செப்டம்பர், 2010
அச்சுவேலியில் வெள்ளை வானில் கடத்தல் சம்பவம்
யாழ்ப்பாணம் அச்சுவேலிப் பகுதியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு விவசாயியை வெள்ளை வான் கடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. கப்பம் கோரலுடன் தொடர்பு பட்டதாகவே இக் கடத்தல் சம்பவம் இடம் பெற்றதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடத்தலுடன் தொடர்புபட்டவர்கள் இரண்டு லட்சம் கோரியதாகவும் பின்னர் ஒருலட்சமாக அக் கோரிக்கை மாறியதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் கடத்தப்பட்ட அன்றைய தினம் மாலையிலேயே அவர் யாழ் நகரப்பகுதியில் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. 44 வயதுடைய கே.சிவகுமார் என்பவரே கடத்தி விடுவிக்கப்பட்டவர் ஆவார். இவர் விடுவிக்கப்பட்டமைக்கு கடத்தல்காரர்களால் கேட்கப்பட்ட பணம் கொடுக்கப்பட்டது காரணமா என்பது அறியமுடியவில்லை. பொலிசார் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)