இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வெள்ளி, 24 செப்டம்பர், 2010
நினைவு நாள் வீரவணக்கங்கள்.
25.09.1992 அன்று பூநகரி பள்ளிக்குடா பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படையினரின் இரு மினி முகாம்கள் மற்றும் 62 காவலரண்கள் மீதான அழித்தொழிப்புத் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் அவர்கள் உட்பட்ட மாவீரர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
மஹிந்தவை அதிர்ச்சியில் ஆழ்த்திய குட்டி விமானம்
ஐக்கிய நாடுகள் சபையின் 65 ஆவது மாநாட்டில் உரையாற்றுவதற்கு நேற்று முன்தினம் புறப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவுக்கு அதிர்ச்சி தரும் வகை யிலான பதாகையொன்று கண்ணில் பட்டது. இலங்கை சர்வாதிகாரி ராஜபக்ஷ, ஜெனரல் பொன்சேகாவை விடுதலை செய்" என்ற வசனங்களுடனான பதாகையொன்று வானத்தில் காணப்பட்டதாக இணைய தளமொன்று செய்தி வெளியிட்டதுடன் பதாகையின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை அலுவலகக் கட்டடத்துக்கு கிழக்குப் புறமாக வானத்தில் குட்டி விமானமொன்று இந்தப் பதாகையுடன் வலம் வந்து கொண்டிருந்தது.
திலீபனுடன் பதினோராம் நாள் - 25.09. 1987
இன்று திலீபனின் உடல் நிலையைப் பற்றி எழுத முடியாதவாறு என் கை நடுங்குகிறது. அவரது உடலின் சகல உறுப்புகளும் உணர்ச்சியின்றிக் காணப்பட்டன. கை, கால்கள் சில சமயம் தானாகவே அசைக்கின்ற. அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்பதை இதன் மூலம்தான் அறிய முடிகிறது. 'கோமா' வுக்கு முந்திய நிலையில் (Semi Coma) ஒரு நோயாளி எவ்வளவு கஷ்டப்படுவாரோ அதைப்போல், அவர் உடல் தன்னை அறியாமலே அங்குமிங்கும் புரளத் தொடங்கியது. அவர் படுத்திருந்தது சிறிய கட்டில்…. ஆகையால், தேவரிடம் சொல்லி, பெரிய கட்டிலொன்று கொண்டுவரச் செய்து, அதில் திலீபனைப் படுக்க வைத்தோம். அப்போதுதான் அவர் கட்டிலில் ஏற்கனவே சிறுநீர் கழித்திருந்ததைக் காண முடிந்தது.
வியாழன், 23 செப்டம்பர், 2010
ராஜபக்க்ஷாக்களின் தீவு?
ராஜபக்க்ஷ சகல அதிகாரங்களையும் கொண்டிருக்கும் இலங்கையுடன் விடயங்களை கையாள்வது தொடர்பாக முழு அளவிலான தந்திரோபாயத்தை இப்போது இந்தியா வகுத்துக்கொள்வது அவசியமானதாகும்.அதேசமயம், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுப்பொதி உட்பட அடிப்படை ஜனநாயக விதிமுறைகள் மற்றும் நோக்கங்களை இந்தியா மனதில் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு இந்தியாவிலிருந்து வெளியிடப்படும் "எக்கனோமிக் ரைம்ஸ் பத்திரிகை தெரிவித்திருக்கிறது. ராஜபக்ஷாக்களின் தீவு? என்று மகுடமிட்டு அப்பத்திரிகை ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ளது.அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
திலீபனுடன் பத்தாம் நாள் -24-09-1987
பெற்றோர் – பிள்ளைகள் - சகோதரர்- உற்றார்- உறவினர்- நண்பர் இவர்களின் யாராவது நம் கண் முண்ணாயே முன்னாலே இறக்க நேரிடும்போது மனம் துன்பத்தில் மூழ்கிவிடுறது: கண்கள் கண்ணீர்ரை சொரிகின்றது. ஆனால், இவர்களின் ஒருவர் அணுஅணுவாகச் செத்துக் கொண்டிருப்பைப் பார்க்கும்போது………. துயரத்தின் எல்லைக்கே நாம் போய்விடுகின்றோம். உலகமே சில வினாடிக்குள் வெறுத்துப்போய்விடும். கண்களில் அழுவற்குக் கண்ணீர்கூட எஞ்சியிருக்காது. ஆனால், இவர்கள் ஓருவர் ஓரு சொட்டு நீர் கூடஅருந்தால்10 நதற்களாக எம் கண் முண்ணாதல் அணு அணுவாகச் சாவின் விளின் வழளிம்பில் நின்று தத்தளிப்பதைப் பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கும் போது ஏற்படும் மன வேதனை இருக்கிறதே- அப்பப்பா! ….. அதை வாய்விட்டுச் சொல்ல முடியாது. ஆத்துனை கொடுமை அது அனுபவித்தவர்களுக்கு மட்டும் புரியும் அது.
நமது ஈழநாடு நாளிதழின் அச்சகம் சிறிலங்கா சிறப்பு குற்றப் புலனாய்வுக் காவல்துறையினரால் மூடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ’நமது ஈழநாடு’ நாளிதழின் அச்சகம் சிறிலங்கா சிறப்பு குற்றப் புலனாய்வுக் காவல்துறையினரால் முத்திரையிட்டு மூடப்பட்டுள்ளதுடன் அதன் உரிமையாளர் பொன்னுத்துரை குருதேவ் கைது செய்யப்பட்டுள்ளார். நாவலர் வீதியில் உள்ள ’நமது ஈழநாடு’ அச்சகம் மற்றும் பணியகமே காவல்துறையினரால் மூடப்பட்டுள்ளது.
புதன், 22 செப்டம்பர், 2010
திலீபனுடன் ஒன்பதாம் நாள் -23-09-1987
அதிகாலை 5 மணியிருக்கும். கிழக்குப் பக்கத்தே தேர்முட்டி வாசலில் நின்றிருந்த வேப்ப மரத்தினின்று குயில் ஒன்று கூவிக் கொண்டிருக்கிறது. "கூ.......கூ.....குக்….கூ......" அதன் குரலில் தொனித்த விரக்தியின் சாயலைக் கேட்ட நான், தலீபனை ஏக்கத்துடன் பார்க்கின்றேன். அந்தக் குயில் எதை இழந்து இப்படிக் கூவுகிறதோ தெரியவில்லை. ஆனால் இந்தக் குயில்…? எம்மை - எம் இனத்தைக் காக்க தன்னையே இழந்து கொண்டிருக்கிறதே…. இந்த சிறு குயிலின் சோக கீதம் உலகத்தின் காதுகளில் இன்னுமா விழவில்லை…..? திலீபனை நன்றாக உற்றுப் பார்க்கிறேன். அவரின் உடலிலுள்ள சகல உறுப்புகளும் இன்று செயலற்றுக் கொண்டிருக்கின்றன
வெறுமை நிறைந்த மனங்களில்
சிதைவுகளால் மூடுண்டுள்ள நிலத்தில்
சாட்சிகள் ஒளிக்கப்பட்டுள்ளது…..
ஒளித்திருப்போர் ஒளிவீசாதபடி
அச்சமூட்டும் பேய்கள் நிறைந்து
பயங்களால் அழிகிறது வாழ்வு……
பதுங்குகுளியிலிருந்த வாழ்வு இப்போ
பயங்களால் நிறைகிறது.
கம்பிகளின் பின்னால் சாவுறையும் நினைவுகளோடு
காத்திருக்கும் மகன்களுக்காகவும் மகள்களுக்காகவும்
அம்மாக்கள் அழுதுவடிக்கும் கண்ணீரால்
காலம் தனது கவிதைகளை எழுதிச் செல்கிறது.
காணாமற்போன பிள்ளைகளையும் கணவர்களையும்
கனவுகளில் கண்ணுற்றுத் திடுக்குற்று விழித்த
கண்களிலிருந்து வரலாற்றின் கதைகள்
தோற்றுக் கொண்டிருக்கிறது…..
வெறுமை நிறைந்த மனங்களில் – எல்லாம்
வெற்றிடமாய் கிடக்கிறது
ஓர் சந்ததியின் வாழ்வு
சாவுகளால் அடை(ட)க்கப்பட்டுள்ளது…..
சாட்சிகள் ஒளிக்கப்பட்டுள்ளது…..
ஒளித்திருப்போர் ஒளிவீசாதபடி
அச்சமூட்டும் பேய்கள் நிறைந்து
பயங்களால் அழிகிறது வாழ்வு……
பதுங்குகுளியிலிருந்த வாழ்வு இப்போ
பயங்களால் நிறைகிறது.
கம்பிகளின் பின்னால் சாவுறையும் நினைவுகளோடு
காத்திருக்கும் மகன்களுக்காகவும் மகள்களுக்காகவும்
அம்மாக்கள் அழுதுவடிக்கும் கண்ணீரால்
காலம் தனது கவிதைகளை எழுதிச் செல்கிறது.
காணாமற்போன பிள்ளைகளையும் கணவர்களையும்
கனவுகளில் கண்ணுற்றுத் திடுக்குற்று விழித்த
கண்களிலிருந்து வரலாற்றின் கதைகள்
தோற்றுக் கொண்டிருக்கிறது…..
வெறுமை நிறைந்த மனங்களில் – எல்லாம்
வெற்றிடமாய் கிடக்கிறது
ஓர் சந்ததியின் வாழ்வு
சாவுகளால் அடை(ட)க்கப்பட்டுள்ளது…..
பிரசவிக்கப்பட்ட மறுகணமே கைவிடப்படும் குழந்தைகள்
முதல் நாள் பெய்த பெருமழையின் மிச்சமாக வானம் இருண்டு கிடந்தது. மெலிதான தூறல். விடிந்தும் விடியாத காலைப்பொழுது. தூக்கத்திலிருந்து விழித்துக்கொள்ளத் தொடங்கிய கிராமத்தின் வீதிகளில் இன்னமும் மனித நடமாட்டம் தொடங்கவில்லை. எங்கும் அமைதி போர்த்தப்பட்டி ருந்தது. அந்த அமைதி வெகு நேரம் நீடிக்கவில்லை. வீதியோரமாய் தேங்கிநின்ற வெள்ள நீரைவிலக்கியவாறு வந்துகொண்டிருந்த வயோதிபர் ஒருவரின் காதில் திடீரென எழுந்த முனகல் ஒலி விழுந்தது.வீதியில் யாருமில்லை. வீடுகளும் திறந்திருக்கவில்லை. எங்கிருந்து அந்த முனகல் சத்தம் வருகின்றதென அவருக்கு ஒரே குழப்பம். சுற்றும் முற்றும் துழாவிப் பார்த்த போதுதான் ஒரு சாக்குப்பை அவரின் கண்ணில் பட்டது. அதிலிருந்தே பூனைக்குட்டியின் மெலிதான குரல் போல ஒலி வந்துகொண்டிருந்தது. அவருக்கு எரிச்சலாக வந்தது.
செவ்வாய், 21 செப்டம்பர், 2010
திலீபனுடன் எட்டாம் நாள் -22-09-1987
இன்று அதிகாலையிலே நிரஞ்சன் குழுவின் கொட்டகை போடும் வேலையை ஆரம்பித்து விட்டனர். முதல் நாள் இலட்சக்கணக்கான மக்கள் வந்திருந்ததால் போடப்பட்டிருந்த கொட்டகைகள் எல்லாம் சனக்கூட்டத்தினால் நிரம்பி வழிந்தன ஏராளமானோர் சுடுவெயிலில் கால்கடுக்க நிற்கவேண்டி ஏற்பட்டதால் நல்லூர் கோவில் மைதானம் முழுவதிலும் படங்குகளினால் கொட்டகை போடத்தொடங்கியிருந்தார்கள். உண்ணாவிரதம் ஆரம்பிக்கும்போது இத்தனை சனக்கூட்டம் வருமென் யாருமே எதிர்பார்க்கவில்லை. இலங்கையில் மட்டுமன்றி, இந்தியா மற்றும் பல வெளிநாடுகளில் கூட திலீபனின் தியாகப் பயணம் பற்றியே பெரும்பாலானோர் பேசிக் கொண்டிருப்பதாகப், பத்திரிகைகளில் போட்டிருந்தார்கள்.
திங்கள், 20 செப்டம்பர், 2010
எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்- திருமலை அரசியல் துறை பொறுப்பாளர் எழிலனின் மனைவி
எனக்கு பின்விளைவுகள் வந்தாலும் பிரச்சினையில்லை. நான் பயப்படவில்லை. வந்தால் எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். வாழ வேண்டும் என்ற விருப்பத்துடன் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை இலங்கை அரசால் அமைக்கப்பட்டிருக்கின்ற நல்லிணக்க ஆணையத்தின் முன்பு விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலனின் மனைவி ஆனந்தி சசிதரன் சாட்சியமளித்துள்ளார்
'பேஸ்புக்' தயாரிக்கும் இரகசிய கையடக்கத் தொலைபேசி
பிரபல சமூக வலைபின்னல் தளமான 'பேஸ்புக்', கையடக்கத் தொலைபேசி ஒன்றை உருவாக்கி வருவதாக 'டெக்கிரன்ச்' இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது. மூன்றாம் நபர் வன்பொருளில் இயங்குவதற்கான இயங்குதளத்தினை ( ஒபரேடிங் சிஸ்டம்) 'பேஸ்புக்' தயாரித்து வருகின்றதென அத்தளம் குறிப்பிட்டிருந்தது. கூகுளின் 'அண்ரோயிட்' இயங்குதளத்தினைப் போன்ற ஒரு முயற்சியில் 'பேஸ்புக்' இறங்கியிருக்கலாமெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கூகுளின் 'அண்ரோயிட்' கையடக்கத் தொலைபேசிகள் தற்போது பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
வெள்ளவத்தையில் தமிழ் வர்த்தகர் ஒருவர் கடத்தல்
கொழும்பு வெள்ளவத்தையில் தமிழ் வர்த்தகர் ஒருவர் வெள்ளை வானில் வந்த இனந் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளார் என குறித்த பிரதேச மக்கள் தெரிவித்தனர். வெள்ளவத்தையில் புதிதாக திறக்ப்பட்ட வெதுப்பகம் ஒன்றின் உரிமையாளர் ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்
திலீபனுடன் ஏழாம் நாள் -21-09-1987
நேற்றைய பேச்சுவார்த்ததையின் முடிவு என்னவாக இருக்கும்….? இந்தக் கேள்விதான் இதயத்தின் பெரும் பாகத்தை அரித்துக் கொண்டிருந்தது. காலை 10 மணிவரை எவ்வளவோ முயன்றும் அவர்கள் இருவரும் என் கண்களில் படவேயில்லை. ஆனால், திடீரென்று "இந்தியா ருடே" (India Tiday) பத்திரிகை நிருபரும் இந்திய துரதஷனின் (இந்தியத் தொலைக்காட்சி ஸ்தாகனம்) வீடியோப் படப் பிடிப்பாளரும், யோகியுடன் வந்து திலீபனைப் படம்பிடிக்கத் தொடங்கினர். "இந்தியா ருடே" நிருவர் என்னிடம் திலீபனின் உடல் நிலையைப்பற்றித் துருவித் துருவித் கேட்டுத் தெரிந்துகொண்டார்.
முறிகண்டிப் பிள்ளையார் கோவிலுக்கு அண்மையாக புத்தபிரானுக்கு இருப்பிடம்,,ஹோட்டல்
முறிகண்டிப் பிள்ளையார் ஆலய சூழல், அங்கிருந்த இறைபக்தி, நம்பிக்கை என அனைத்தும் வெறுமையாகிப் போகும் அளவில் அந்தப் பகுதி ஆக்கப்பட்டுள்ளது. முறிகண்டிப் பிள்ளையார் கோவிலுக்கு அண்மையாக புத்தபிரானுக்கு இருப்பிடம் அமைக்கப்படும் பணி நடைபெறுகின்றது. இந்துசமயம் சார்ந்தவர்கள் தங்கள் வழிபாட்டை மேற்கொள்வதற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் முறிகண்டிப் பிள்ளையார் ஆலய சூழலில் ஹோட்டல் அமைக்கும் பணி நடந்தேறியுள்ளது. ஹோட்டல் என்றால் அங்கு மதுவும் மாமிசமும் தாராளமாக பரிமாறப்படும். அவ்வாறாயின் முறி கண்டிப் பிள்ளையார் ஆலய சூழலின் புனிதத் தன்மையை வேரறுப்பதே இதன் நோக்கம் ஆகும். இத்தகைய செயற்பாட்டின் மூலம் வடக்கில் தமிழர்களின் தனித்துவமான இடங்கள் என எதுவும் இருக்கக் கூடாது.
உல்லாச நகராக யாழ்ப்பாணம் திறந்து விடப்பட்டிருக்கிறது....
சந்தியில் நிற்பதும், மது அருந்துவதும், கையடக்கத் தொலைபேசியும்தான் எங்கள் சீவியம் என்றால் இந்த மண்ணில் நிகழ்ந்த தியாகங்களுக்கு எந்த அர்த்தமும் இல்லாமல் போகும் அன்புக்குரிய இளைஞர்களே! நாங்கள் முதலில் எங்களை அறிய வேண்டும் குடாநாட்டில் எங்கு பார்த்தாலும் சிரழிகின்றது எமது தனித்துவமான கலை கலாச்சாரங்கள். "இயக்க நிலையில் சீராக இயங்கிய எமது பண்பாடு, கலாச்சாரங்கள் தற்போது இயக்கமற்ற நிலையில் சீரழிகின்றது". சரியான பாதை காட்டுவதற்கு முறையான ஆட்கள் இல்லாத நிலையில் மேய்பன் இல்லாத மந்தைகள் போல மாறிவிட்டது எமது யாழ்ப்பாணம் பட்டினம் .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)















