இந்த உலகில் வாழ்கிற சாதாரண மனிதர்களைப் போல் உரிமைகளுடன் கூடிய வாழ்க்கைக்காக ..விடுதலை வேட்கையுடன் போராடியமாவீரர்களை பயங்கரவாதிகள் என சித்தரித்த சர்வதேச சமூக வல்லாதிக்கத்தின் முகத்திற்கு முன் அலை அலையாய் விழுந்துக் கொண்டே இருக்கின்றன...
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வியாழன், 9 டிசம்பர், 2010
விரிந்துக் கிடக்கின்ற ஈர நிலத்தில் விடுதலைக் கனவு சுமந்த கண்கள் கட்டப்பட்டு..மறுத்த உரிமைகளின் மேல் வெகுண்டெழுந்த கைகள் இறுக்கப்பட்டு… தகிக்கின்ற சுதந்திர தாகத்திற்காக, இறுதியில் ஆடையும் அவிழ்க்கப்பட்டு ..சிறு முனகலோடு சிதைகிற சகோதரன். வன்புணர்வின் வலியில் கசங்கிய மலராய்.. உதிர முகத்துடன் உரு கலைக்கப்பட்டு ..வீழ்ந்து கிடக்கின்ற சகோதரி.. இறுகிக் கிடக்கும் உடலில் போர்த்தப்பட்டிருக்கும் உடையை காற்று கூட விலக்க துணியாமல் கண் கலங்கி நிற்கையில்.. வக்கிர சிரிப்புடன் ஆடை அவிழ்ந்து காட்டும் மன நோய்க்கு உலகம் வைத்திருக்கும் பேர்தான் பயங்கரவாத எதிர்ப்புப் போர்..
தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து. சீமான் விடுதலை ஆவார்
திரைப்பட இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிபதிகள் தர்மாராவ், ஹரிபரந்தாமன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கப்படுவதை கண்டித்து, சென்னையில் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய இறையாண்மைக்கு எதிராக சீமான் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.பரபரப்பான அந்த சூழ்நிலையில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு பத்திரிகையாளர்களை சந்திக்க சீமான் வந்தபோது, போலீசார் அவரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.
வன்னி மக்கள் மழைத் தண்ணீரைத் தவிர வேறு தண்ணியினை கண்டதேயில்லை. அவர்களுக்கு தண்ணீரைக் காட்டியவர்களே நாங்கள் தான் என்று அடிதடி அமைச்சர் மேர்வின் சில்வா சபையில் கூச்சலிட்டிருக்கின்றார்!!!
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாத்தின் போது தனது உரையில் வன்னி மக்களை மிகவும் கீழ்த்தரமானவர்கள் என்றும் அவர்கள் எதனையும் கண்டதில்லை என்ற தொனிப்பட கீழ்த்தரமான சொற்பிரயோகங்களைக் கையாண்டு உரையாற்றியிருக்கின்றார்.
இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களில் இந்தியா பாரிய பொறுப்பு -அமெரிக்கா
இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு வகிப்பதாக, அமெரிக்க இராஜாங்க தகவல்கள் தெரிவித்துள்ளன. புதிதாக வெளியாகியுள்ள விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் தகவல்கள் இவற்றை உறுதி செய்துள்ளன. விக்கிலீக்ஸ் வழங்கிய தகவல் அடிப்படையில், த வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் என்ற சஞ்சிகை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
புதன், 8 டிசம்பர், 2010
இசைப்பிரியாவுடனுள்ள பெண் போராளி இனம் காணப்பட்டுள்ளார்
மல்லாவியை சொந்த இடமாக கொண்ட குணலிங்கம் - உசாளினி (இயக்க பெயர் - அகல்விழி. வயது 19 ) இவர் ஒரு புதிய போராளியாவார் ..இராணுவ கொடுமைகள் காரணமாக 2008 / 05 ம் மாதமளவிலே போராளியாக இணைந்தவர் . தமிழீழ தொலை காட்சி செய்தி சேகரிப்பாளராக பணி புரிந்துள்ளார் என உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மலேசியாவுக்குப் புறப்பட்ட விமானம். வந்தடைந்த ராஜபக்ச
இலண்டன் விஜயத்தின் போது எதிர்பாராத விதமாகச் சந்தித்த நெருக்கடிகளை அடுத்து அவசரமாக கொழும்பு புறப்பட்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் அவரது குழுவினரும் மலேசியாவுக்குப் புறப்பட்ட விமானம் ஒன்றையே கொழும்புக்குத் திசைதிருப்பி வந்ததாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கொலை வழக்கில், டக்ளஸ் . தலைமறைவு குற்றவாளி என்பதை ரத்து செய்ய முடியாது.
ஆனந்தன் என்ற டக்ளஸ் தேவானந்தா, . இவர் முன்பு `இ.பி.ஆர்.எல்.எப்' என்ற போராளி இயக்கத்தில் இருந்தார். சென்னை சூளைமேடு பகுதியில் அந்த இயக்கத்தை சேர்ந்த சிலருடன் அவர் வசித்து வந்தார். கடந்த 1.11.86 அன்று அந்த பகுதியில் ஏற்பட்ட தகராறில் திருநாவுக்கரசு என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் டக்ளஸ் தேவானந்தா உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு சென்னை 4-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
ஈரானில் தயார் நிலையில் தற்கொலைப் படகுகள்!
ஈரானின் கடற்படையினரால் பெருந்தொகையான தற்கொலைப் படகுகள் உருவாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பயங்கர வெடிமருந்துகள் இணைக்கப்பட்ட 9000 க்கும் அதிகமான வேகப் படகுககளை ஈரானின் கடற்படை உருவாக்கியுள்ளது இந்தப் படகுகள் பாரசீக வளைகுடாப் பிரதேசத்தில் காவல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன. ஈரானின் இச்செயற்பாடு அமெரிக்காவுக்கு விழுந்த பலத்த அடியாகவே அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்
தாயின் மடி செல்ல தவமிருக்கிறேன். "சிறையின் மடியில்" – பேரறிவாளன்
“எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் இந்த சோப்பு கட்டிதான் பயன்படுத்துகிறேன்.” என்ற தொலைக்காட்சி விளம்பரத்தினைப் பார்க்கும் ஒவ்வொரு கணப்பொழுதிலும் “எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் சிறைக்குள் நான் இருந்தேன்.” என வேடிக்கையாக நினைப்பதுண்டு. ஆம்! தாயின் மடியிலிருந்து நேரே சிறையின் மடிக்குள் விழுந்தவன் நான். பிறந்து 19 ஆண்டு 10 திங்கள் கரம் பிடித்து நட்ந்தவன். அடுத்த 19 ஆண்டு 6 திங்களாக சிறைக்கம்பிகள் பற்றியபடி நகர்பவன். மாந்தர் உரிமை குறித்தும், மண்ணின் பெருமை குறித்தும் கருத்துகளை விதைத்தது, என் தாயின் மடி எனில், விதைத்ததை வளர்த்து, காத்தது சிறையின் மடி.
மிக நீண்ட நெடுங்காலமாகவே ஒரு கொலையாளி என்பதாகவே சித்தரிக்கப்பட்டு, அக்கரையுள்ள சக்திகளால் பரப்புரை செய்யப்பட்ட எனது வாழ்வின் நெடுங்கதை, விரிப்பின் கொள்கைகளால் மட்டுமே நிரம்பி கிடக்கும். “மனிதனை நினை”என்பதையே தனது வாழ்வின் கொள்கையாக கொண்டுழைத்த மனித நேயர் அய்யா தந்தை பெரியாரையும் “அன்பின் வழியது உயர்நிலை” என்றுரைத்த உலகப் பொதுமறை தந்த பெருநாவலரையும் விழிகளாக்க் கொண்டு வழி நின்றவன்.எனது நடுவ புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பின் போது, ஒரு நாள் எனது தந்தையின் மடல் வந்தது. அதில் எனது தந்தை, “புதல்வ, உன்னை விசாரணை அதிகாரிகள் அடிக்கிறபோது அவர்கள் அடிக்க வசதியாக உனது முதுகை வளைத்துக்கொடு, ஏனெனில் அவர்கள் நமது சூத்திர தமிழர்கள்” (தாக்கியோர்கள் சூத்திரர்கள் அல்ல என்பது வேறு செய்தி) எனக் குறிப்பிட்டுவிட்டு “இதைத்தான் அய்யா பெரியார் நமக்கு போதித்தார்” என முடித்திருந்தார்.
மிக நீண்ட நெடுங்காலமாகவே ஒரு கொலையாளி என்பதாகவே சித்தரிக்கப்பட்டு, அக்கரையுள்ள சக்திகளால் பரப்புரை செய்யப்பட்ட எனது வாழ்வின் நெடுங்கதை, விரிப்பின் கொள்கைகளால் மட்டுமே நிரம்பி கிடக்கும். “மனிதனை நினை”என்பதையே தனது வாழ்வின் கொள்கையாக கொண்டுழைத்த மனித நேயர் அய்யா தந்தை பெரியாரையும் “அன்பின் வழியது உயர்நிலை” என்றுரைத்த உலகப் பொதுமறை தந்த பெருநாவலரையும் விழிகளாக்க் கொண்டு வழி நின்றவன்.எனது நடுவ புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பின் போது, ஒரு நாள் எனது தந்தையின் மடல் வந்தது. அதில் எனது தந்தை, “புதல்வ, உன்னை விசாரணை அதிகாரிகள் அடிக்கிறபோது அவர்கள் அடிக்க வசதியாக உனது முதுகை வளைத்துக்கொடு, ஏனெனில் அவர்கள் நமது சூத்திர தமிழர்கள்” (தாக்கியோர்கள் சூத்திரர்கள் அல்ல என்பது வேறு செய்தி) எனக் குறிப்பிட்டுவிட்டு “இதைத்தான் அய்யா பெரியார் நமக்கு போதித்தார்” என முடித்திருந்தார்.
செவ்வாய், 7 டிசம்பர், 2010
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்
இலங்கை பாராளுமன்ற எம்.பி.க்களுக்கு யோகா கற்றுக்கொடுக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் எம்.பி.க்களின் மனதுக்கு புத்துணர்ச்சி கிடைத்து இதன் மூலம் அவர்கள் தங்கள் செயல்பாடுகளை திறம்பட செயல்படுத்த முடியும் என கருதப்படுகிறது. இந்த வகுப்புகளில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. விருப்பபட்ட எம்.பி.க்கள் மட்டும் இதில் பங்கேற்கலாம். யோகா வகுப்புககள் தொடங்கப்படுவது குறித்து யோகாசன ஆசிரியர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத முகாம்கள் இலங்கையில்.
சமீபத்தில் லஷ்கர்-இ- தொய்பா தீவிரவாதி இந்தியாவில் பிடிபட்டான். அவன் கொடுத்த வாக்குமூலத்தில் இலங்கையில் தங்களது அமைப்பின் முகாம்கள் இருப்பதாகவும், அங்கு பயிற்சி பெற்றுதான் வந்து இருப்பதாகவும் தெரிவித்து இருந்தான். இதற்கு இலங்கை அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. தங்கள் நாட்டில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத முகாம்கள் எதுவும் இல்லை என்று கூறியது. ஆனால், இலங்கையில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத குழுவினரின் பயிற்சி முகாம்கள் குறித்த முக்கிய ரகசியங்களை விக்கிலீக் இணைய தளம் அம்பலப்படுத்தி உள்ளது.
ஊடக சுதந்திரம். இலங்கையானது ஆசியாவின் ஆச்சரியம்.
ஒரு நாட்டில் மிகவும் சக்தி வாய்ந்த விடயமாக இருப்பது ஊடகத்துறையாகும். ஊடகத்துறையானது ஒரு நாட்டை நல்ல வழியில் அல்லது. கெட்டவழியில் இட்டுச் செல்கின்ற ஒரு சக்தியாக இருக்கின்றது. இலங்கையில் ஒரு சுதந்திரமான ஊடகம் இருந்ததா என்பது தொடர்பில் ஒரு கேள்விக்குறியே இருக்கின்றது.ஏனெனில் .துரதிஷ்டவசமாக எமது நாட்டில் 1990 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி ரிச்சட் சொய்ஸா தொடக்கம் 2009 மார்ச் மாதம் 6 ஆம் திகதி சதிமதன் வரையும் 41 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றார்கள்.
படுகொலை செய்யப்பட்ட ஊகடவியலாளர்களில் 34 தமிழ் ஊடகவியலாளர்களும் 2 முஸ்லிம் ஊடகவியலாளர்களும் 5 சிங்கள ஊடகவியலாளர்களும் உள்ளடங்குகின்றார்கள். எமது நாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை கொண்டுவந்ததற்குப் பிற்பாடுதான் இவர்கள் அனைவரும் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்
படுகொலை செய்யப்பட்ட ஊகடவியலாளர்களில் 34 தமிழ் ஊடகவியலாளர்களும் 2 முஸ்லிம் ஊடகவியலாளர்களும் 5 சிங்கள ஊடகவியலாளர்களும் உள்ளடங்குகின்றார்கள். எமது நாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை கொண்டுவந்ததற்குப் பிற்பாடுதான் இவர்கள் அனைவரும் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்
யாழ்.நவீன சந்தைப் பகுதிகளில் கலாசாரச் சீரழிவுகள்.!!!
யாழ்ப்பாணம் நவீன சந்தைப் பகுதியில் தனியார் கல்வி நிலையங்களுக்குச் சென்று விட்டு வீடுகளுக்குத் திரும்பாமல் தேவையற்ற விதத்தில் இளைஞர்களும், யுவதிகளும் அங்கும் இங்குமாக அலைந்து திரிவதுடன் கூட்டம் கூட்டமாக நின்று மிக மோசமான கலாசாரச் சீரழிவுகள் செய்வதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இன்னொரு "கிட்லர்" பிறப்பே புலிகளின் இராணுவ தோல்விக்கு காரணமாக இருந்தது.
ஸ்ரீலங்கா இராணுவம் ஆளனி,படைக்கலன்களின் பெருக்கம் மற்றும் அதிகூடிய(பரந்த கொலைவெறி) சூட்டு வலு காரணமாக , உள்ளுர் வளங்களுடன் மற்றும் பெருளாதார, மருத்துவ நெருக்கடியின் மத்தியில் போராடிய அமைப்பை வெற்றிகண்டுள்ளமையை வெற்றி என்று கூறலாமா? .
சிலாவத்துறையில் ஆரம்பித்த போரானது எந்த இராணுவ தந்திரத்தை பின்பற்றியதாக அல்லது ஏதாவது புதிய தந்திரத்தை பின்பற்றியதாக இருந்ததா? போர் ஆரம்பித்த முதற் கொண்டு இடைவிடாத தாக்குதல் முறையையே படைகள் பின்பற்றி வந்தன. மேலும் பரவலான தாக்குதல் முறைகள் இதில் விமான குண்டுத் தாக்குதல்கள் முழத்திற்கு முழம் இடம் பெற்றதாகும்.
சிலாவத்துறையில் ஆரம்பித்த போரானது எந்த இராணுவ தந்திரத்தை பின்பற்றியதாக அல்லது ஏதாவது புதிய தந்திரத்தை பின்பற்றியதாக இருந்ததா? போர் ஆரம்பித்த முதற் கொண்டு இடைவிடாத தாக்குதல் முறையையே படைகள் பின்பற்றி வந்தன. மேலும் பரவலான தாக்குதல் முறைகள் இதில் விமான குண்டுத் தாக்குதல்கள் முழத்திற்கு முழம் இடம் பெற்றதாகும்.
அவதானம்...அவதானம்..அவதானம்...!!!
பொலனறுவையின் பிரதான பாடசாலையொன்றின் மாணவிகள் ஐவர் கர்ப்பம் தரித்த நிலையில் பாடசாலைக்கு சமூகமளித்துக் கொண்டிருந்த விடயம் அம்பலமானதில் பிரதேச மக்கள் ஆடிப் போயுள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)















