இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
புதன், 12 ஜனவரி, 2011
மழை மட்டக்களப்பு மற்றும் அப்பாறையில் கடுமையான பாதிப்புகள்:பத்து லட்சம் பேர் பாதிப்பு
இலங்கையில் பெய்து வரும் கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக பத்து லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக தற்போதுவெளியாகியுள்ளதகவல்கள்தெரிவிக்கின்றன.மட்டக்களப்பு மற்றும் அப்பாறையில் கடுமையான பாதிப்புகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் மணிக்கு மணி அகதிகளுக்கான முகாம்களின் தேவை அதிகரித்து வருகின்றது என்று இலங்கை அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.அங்கு பால், குழந்தைகளுக்கான உணவு, கொசு வலைகள், துண்டுகள், படுக்கை விரிப்புகள் ஆகியவற்றுக்கான உடனடி தேவை ஏற்பட்டுள்ளது.
இலங்கை அரசை விமர்சிக்கக் கூடாதா? குமுறுகிறார் செங்கடல் பட இயக்குநர் லீனா மணிமேகலை
இலங்கை அரசை விமர்சிக்கக் கூடாது என்று நிபந்தனையே விதிக்கும் அளவுக்கு மோசமான நிலைமைக்குள் படைப் பாளிகளைச் சிறைப்படுத்தப் பார்க்கிறது இந்திய அரசு இவ்வாறு "செங்கடல்" படத்தின் இயக்குநர் லீனா மணிமேகலை குமுறுகிறார்.துயரத்தில் தவிக்கும் இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழ் மீனவர்கள் பிரச்சினையில் இலங்கை இந்திய தமிழக அரசுகளின் நிலைப்பாட்டை விமர்சிப்பதால் "செங்கடல்" படத்துக்கு சென்னை தணிக்கைக் குழு தடை விதித்துள்ளது. இப்போது படத்தை மறுதணிக்கைக்கு அனுப்பும் முடிவில் உள்ளார் இயக்குநர் லீனா
தமிழ் தேசிய கூட்டமைப்பு - ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சந்திப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. தற்போதைய அரசியில் சூழ்நிலைகள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமசந்திரன், மற்றும் செல்வம் அடைக்கல நாதன், ஆகியோர் கலந்து கொண்டனர். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கிம் மற்றும் பொது செயலாளர் ஹசன் அலி ஆகியேர் பங்கு கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல்
ஹம்பாந்தோட்டை நகரில் சீன அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வரும் துறைமுக அபிவிருத்தி திட்டம் தொடர்பில் இந்தியா கவலை கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.அமெரிக்க இரகசிய இராஜதந்திர ஆவணங்களை வெளியிட்டு வரும் விக்கிலீக்ஸின் பிந்திய வெளியீடுகளில் இந்த விடயம் தொடர்பான தகவல்கள் அடங்கியுள்ளதாக ஏஷியன் ட்ரிபியூன் செய்தி வெளியிட்டுள்ளது.ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி 2007 ஆம் ஆண்டு என திகதியிடப்பட்ட இராஜதந்திர தகவல் பரிமாற்ற கோப்பில் இது தொடர்பான தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன.
வடபகுதி யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு...இராணுவத்தினர் பிரசாரம்
தென்பகுதி ஆடை உற்பத்தித் தொழிற்சாலைகளில் வடபகுதி யுவதிகளுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுத்தரப்படும் என்றும் அதற்காக யுவதிகள் தேவைப்படுவதாகவும் நாட்டின் வடபகுதியில் இராணுவத்தினர் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய பிரசாரங்கள் எத்தகைய உத்தரவாதமும், ஒப்பந்தமும்,வெளிப்படைத்தன்மையும்இன்றிமேற்கொள்ளப்படுவதாகவும் மக்கள் இது குறித்து விழிப்பாக இருக்குமாறும் வடபகுதியில் அமைந்துள்ள சிவில் அமைப்புக்கள் கேட்டுள்ளன. இலங்கை இராணுவத்திலுள்ள பல்வேறு தரத்தையும் சேர்ந்த அதிகாரிகள் வடபகுதியின் யாழ்ப்பாணம்,வன்னி மற்றும் மீள் குடியேறிய கிராமப்புறங்களுக்குச் சென்று இவ்வாறான பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
'ஒரு சிங்களப் பெண்ணுக்கு இருக்கும் அக்கறை இங்கு உள்ள தமிழர்களுக்கு இல்லையே!!!!!
ஐந்தரை மணி நேரம் தொடர்ந்து பேச்சாளர்கள் முழங்கிக் கொண்டே இருந்தாலும், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைக் கட்டிப்போட்டிருந்தது, 'என்ன செய்யலாம் இதற்காக?’ என்ற புத்தகம்! சென்னையில் கடந்த 9-ம்தேதி நடந்த இந்த புத்தக வெளியீட்டுக் கூட்டத்தில், ஒட்டுமொத்தக் கவனத்தையும் ஈர்த்தவர் நிமல்கா பெர்னாண்டோ.
இலங்கையில் இருந்து வந்திருந்த இவர், பிறப்பால் சிங்களவர். பாகுபாடுகள் மற்றும் இன வெறிக்கு எதிரான சர்வதேச இயக்கத்தின் தலைவரான நிமல்கா பேசப் பேச, 'ஒரு சிங்களப் பெண்ணுக்கு இருக்கும் அக்கறை இங்கு உள்ள தமிழர்களுக்கு இல்லையே?’ என்ற கவலை எல்லோர் முகத்திலும் முளைத்தது.இலங்கை மனித உரிமைப் போராளி நிமல்காவின் ஆங்கிலப் பேச்சில் அழுத்தமான அரசியல் பொறி தெறித்தது. ''நான் தமிழில் பேச முடியாமல் இருப்பதற்கு முதலில் வருந்துகிறேன்.
இலங்கையில் இருந்து வந்திருந்த இவர், பிறப்பால் சிங்களவர். பாகுபாடுகள் மற்றும் இன வெறிக்கு எதிரான சர்வதேச இயக்கத்தின் தலைவரான நிமல்கா பேசப் பேச, 'ஒரு சிங்களப் பெண்ணுக்கு இருக்கும் அக்கறை இங்கு உள்ள தமிழர்களுக்கு இல்லையே?’ என்ற கவலை எல்லோர் முகத்திலும் முளைத்தது.இலங்கை மனித உரிமைப் போராளி நிமல்காவின் ஆங்கிலப் பேச்சில் அழுத்தமான அரசியல் பொறி தெறித்தது. ''நான் தமிழில் பேச முடியாமல் இருப்பதற்கு முதலில் வருந்துகிறேன்.
செவ்வாய், 11 ஜனவரி, 2011
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் சீன உதவியில் "தயார்நிலை" முகாம்:வலிகாமத்தின் ராணுவத் தளமாகின்றது
முக்கிய மாவீரர் துயிலும் இல்லங்களில் ஒன்றாக இருந்த கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் வலிகாமத்தின் முக்கிய ராணுவத் தளமாகின்றது. மிகப் பெரிய படைத்தளம் ஒன்று அங்கு அமைக்கப்பட்டுள்ளது. நிரந்தர அரையிறுதி தகரங்களைக் கொண்டு இந்தத் தளம் அமைக்கப்பட்டுள்ளது. மாவீரர் துயிலும் இல்லத்தின் முகப்பு நுழைவாயிலை இடித்து வீழ்த்தியுள்ள படைத்தரப்பு அதனை ராணுவ தளத்திற்கேற்ற வகையில் வடிவமைத்தும் இருக்கின்றது. இப்பகுதிகளில் பொதுமக்கள் போக்குவரத்தில் ஈடுபடவும் கடந்த சில வாரங்களாக தடை விதிக்கப்பட்டும் இருந்தது.
திங்கள், 10 ஜனவரி, 2011
யாழ் சுபாஸ் ஹோட்டல் உரிமையாளரிடம் கையளிப்பு !! சிறீதர் தியேட்டர் கையளிக்கப்படுமா?
யாழ்ப்பாணம் சுபாஸ் ஹோட்டல் இராணுவ முகாம் சித்திரவதைகளுக்கு பெயர் போனது அதே போல சிறிதர் தியேட்டர் ஒட்டுக்குழு அதிபதி டக்ளஸ் இன் அசுரத்தனத்திற்கும் அனியாயங்களுக்கும் பெயர் போனது. போர் முடிந்தும் மேற்கூறிய இடங்களை விட்டு டக்ளஸ் குழுவும் இராணுவமும் இன்னமும் அகலவில்லை. இந்த சூழலில் இப்போ இராணுவம் சுபாஸ் ஹோட்டலை 15 ஆம் திகதி உரிமையாளரிடம் கையளிக்கப்போவதாக கூறியுள்ளது. இதே போல சிறிதர் தியேட்டரை டக்ளஸ் விட்டு விலகுவாரா???
இலங்கைப் புலனாய்வுப் பிரிவினருக்கு பயிற்சி வழங்கத் தயார் – பாகிஸ்தான்
இலங்கைக் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கும், புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கும் புலனாய்வுப் பயிற்சிகளை வழங்கத் தயார் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பாகிஸ்தான் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார் இதேவேளை, பாகிஸ்தானின் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு இலங்கை பூரண ஒத்துழைப்பு வழங்கும் என சபாநயாகர் சமால் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது பாகிஸ்தான் வழங்கிய ஒத்துழைப்பு அளப்பரியதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதற்பெண் தளபதியான மேஜர் சோதியா அவர்களின் வீரவணக்க நாள்
தமிழீழ விடுதலைப்புலிகளின் முதற்பெண் தளபதியான மேஜர் சோதியா அவர்களின் 21 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்’மைக்கேல் வசந்தி’ என்ற இயற்பெயருடைய, யாழ் மாவட்டத்தில் வடமராட்சி, நெல்லியடியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் மருத்துவபீட மாணவியாவார். 1984 இல் புலிகள் அமைப்பில் இணைந்துகொண்டதோடு முதலாவது பயிற்சிமுகாமிற் பயிற்சிபெற்று தாயகம் திரும்பினார். புலிகளின் படையணியில் மருத்துவப்போராளியாகவும் தளபதியாகவுமிருந்தார்.
உயிர் அச்சுறுத்தல் காரணமாக யாழ்.குடாநாட்டில் மீண்டும்சரணடையும் படலம் ஆரம்பம்
யாழ். குடாநாட்டில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் உயிர் அச்சுறுத்தல் எனக் கூறி மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சரணடைந்துள்ளார்.குடாநாட்டில் மீண்டும் படுகொலைகள் இடம்பெற்று வருவதன் காரணமாகவே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 32 வயதுடைய பிரஸ்தாபகுடும்பஸ்தர் சரணடைந்துள்ளார்.இவரை மனித உரிமைகள் ஆனைக் குழுவின் யாழ். அலுவலக அதிகாரிகள் யாழ். பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.இதேவேளை, யாழ்.மனித உரிமை ஆனைக்குழு அலுவலக இணைப்பதிகாரி த.கனகராஜ் விடுமுறையில் சென்றுள்ளதால் இது சம்பந்தமாக மேலதிக தகவல்கள் எதனையும் தரமுடியாதுள்ளதாக அங்கு கடமையில் இருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்
ஞாயிறு, 9 ஜனவரி, 2011
உரும்பிராய் பகுதியில் குடும்பஸ்தரை காணவில்லை
உரும்பிராய் வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் காணாமல் போயுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. நான்கு பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடைய சின்னத்துரை குகதாஸ் என்பவரே காணாமல் போயுள்ளார். செருப்புத் தைக்கும் தொழிலாளியான இவர் தனது வீட்டுத் தேவைக்கு விறகு வாங்கி வருவதாக கூறி கடைக்குச் சென்றவர் வீட்டிற்குத் திரும்பாத நிலையில் மனைவி இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார்.
கடந்த பத்து நாட்களுக்குள் இந்தப் பகுதியில் இருந்து காணாமல் போயுள்ளவர்களில் இது மூன்றாவது சம்பவமாகும் இத்தகைய நிகழ்வுகளையிட்டு இந்தப் பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் கலங்கிப் போயுள்ளதுடன் பதட்டத்துடனும் காணப்படுகின்றார்கள்.
கடந்த பத்து நாட்களுக்குள் இந்தப் பகுதியில் இருந்து காணாமல் போயுள்ளவர்களில் இது மூன்றாவது சம்பவமாகும் இத்தகைய நிகழ்வுகளையிட்டு இந்தப் பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் கலங்கிப் போயுள்ளதுடன் பதட்டத்துடனும் காணப்படுகின்றார்கள்.
புலிகளின் ஆயுதக்கப்பலுக்கு அரசின் தகவல்களை பரிமாறியதாம் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆயுதக்கப்பல் தொடர்பான அரசின் தகவல்களை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு தக்க சமயத்தில், புலிகளிடம் பரிமாறிக் கொண்டது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாகுமாரதுங்க குற்றஞ்சுமத்தியுள்ள போதிலும், அந்தக் குற்றச்சாட்டை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவராகச் செயற்பட்ட ட்ரைக்கோவ்டெலிப்சன் மறுத்துள்ளார் என்று விக்கிலீக்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
40 போராளிகளுடன் சரணடைந்த புலிகளின் மன்னார் தளபதி எங்கே?
மன்னார் மாவட்டத்தில் புலிகளின் சிறப்புத் தளபதியாக இருந்த எனது கணவர்,40 முக்கிய போராளிகளுடன் 18.05.2009 அன்று முல்லைத்தீவில் பங்குத்தந்தை வண.பிதாபிரான்சிஸ்ஜோசப் முன்னிலையில் இராணுவத்தினரிடம் சரணடைந்தார். இதுவரை அவர் பற்றி தகவல் எதுவும் இல்லை. எனது கணவர் இப்போது எங்கே இருக்கிறார் என்று தகவல் தாருங்கள்.இவ்வாறு இளம்தாயான ஆர்.வெரோனியா கற்றுக் கொண்டபாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் கோரிக்கை விடுத்தார். "
செவ்வாய், 4 ஜனவரி, 2011
செம்மணி நீரேரியில் இளைஞர் கும்பல் அட்டகாசம்
செம்மணி நீரேரியில் இளைஞர் கும்பல் ஒன்று மது போதை யில் அரைகுறை ஆடைகளுடன் நீராடியதுடன் வீதியில் வாகனங்களில் சென்றவர்களுடனும் சேஷ்டை விட்டனர். இதனால் பொதுமக்கள் கடும் அசௌ கரியங்களுக்கு உள்ளாகினர்இந்த இளைஞர்களில் பலர் யாழ்.நகரில் கஸ்தூரியார் வீதிப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
சிறிய ஹன்ரர் வாகனம் ஒன் றில் வந்து இவர்கள் செம்மணி யில் ஏ9 வீதியில் உப்பளப் பக்கம் இருந்து மறுபக்கமாகப் பாய்ந்த வெள்ள நீரில் அரை குறை ஆடைகளுடன் இறங்கிக் குளித்தனர்.
சிறிய ஹன்ரர் வாகனம் ஒன் றில் வந்து இவர்கள் செம்மணி யில் ஏ9 வீதியில் உப்பளப் பக்கம் இருந்து மறுபக்கமாகப் பாய்ந்த வெள்ள நீரில் அரை குறை ஆடைகளுடன் இறங்கிக் குளித்தனர்.
கரும்புலியாய் வாழ்ந்து, கரும்புலியால் வாழ்ந்து., கரும்புலிகளோடு வாழ்ந்து
புலனாய்வு வழிமுறையில் எதிரிகளைச் செயலிழக்கச் செய்வது பற்றியே அவனது சிந்தனை சுழலும். அவனுடைய எண்ணம் முழுவதும் கரும்புலிகளும், அவர்களது வெற்றிக்குத் தேவையான திட்ட நகர்வுகளுமே நிறைந்திருந்தன.அவன் இன்னமும் வாழ்ந்து சாதித்திருக்க வேண்டியவன். தமி...ழீழத்தின் திறவுகோல்களாய் அமைந்திருக்கக்கூடிய இராணுவ வெற்றிகளை நோக்கியே அவனது படையப்புலனாய்வுச் செயற்பாட்டுக்காலச் சிந்தனைகள் இருந்திருக்கும். அதற்கான அறிவும், ஆற்றலும், பட்டறிவும் அவனிடம் இருந்தது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)















