இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
சனி, 15 ஜனவரி, 2011
ஊரிக்காடு கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது
வல்வெட்டித்துறை ஊரிக்காடு இராணுவ முகாமுக்கு பின்புறமாக கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.சுமார் 45 வயது மதிக்கத்தக்க காக்கி நிற அரைக்காற்சட்டையுடன் காணப்படும் சடலத்தின் இடது கையில் "கே. குப்புசாமி" என்று பச்சை குத்தப்பட்டுள்ளது.5 அடி 4 அங்குலம் உயரம் கொண்ட இந்தச் சடலத்தின் வலது கால் தொடையில் நட்சத்திர அடையாளமும் காணப்படுகிறது என்றும் தலைப்பகுதி மோசமாக அழுகி சிதைந்துள்ளது என்றும் வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்தச் சடலம் இந்திய மீனவர் ஒருவருடையதாக இருக்கலாம் எனச் சந்தேகம் தெரிவிக்கப்பட்டது
கூட்டமைப்பு எங்கே செல்கிறது!? ஆனந்த சங்கரி, வரதாஜப்பெருமாள், சித்தார்த்தனுடன் கூட்டு!
தமிழர்விடுதலைக்கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி, ஈபிஆர்எல்எப் வரதர் அணித் தலைவர் வரதாஜப்பெருமாள், புளொட் தலைவர் சித்தார்த்தன், தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் சிவாஜிலிங்கம் உட்பட்டவர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து செயற்படுவதற்கான தீவிர முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழ் அரங்கத்தில் செயற்பட்டுவந்த குறித்த கட்சிகளின் குழுவினருக்கும் கூட்டமைப்புக் குழுவினருக்கும் இடையிலான குழு நிலைச் சந்திப்புக்கள் நடைபெற்றுவரும் நிலையில் இந்த விடயத்தில் உடன்பாடு எட்டுவதற்கான முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய விமானப்படைத் தளபதி இலங்கை பயணம்!
இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்சல் ஜீ.வீ.நயிக் உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பயணத்தின் போது இரு நாட்டு பாதுகாப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக விமானப்படைத் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
இந்திய விமானப்படை தளபதி தனது இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.இரண்டு நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை பயணமாகவுள்ள அவர் இலங்கையில் காணப்படும் இராணுவ முகாம்களுக்கும் விஜயம் செய்யவுள்ளார் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பயணத்தின் போது இரு நாட்டு பாதுகாப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக விமானப்படைத் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
இந்திய விமானப்படை தளபதி தனது இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.இரண்டு நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை பயணமாகவுள்ள அவர் இலங்கையில் காணப்படும் இராணுவ முகாம்களுக்கும் விஜயம் செய்யவுள்ளார் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதவி ஏற்பின் போதே இந்தியாவிற்கு சவால் விடுத்தார் இலங்கை கடற்படைத் தளபதி!
இலங்கை கடற்படை அதிகாரிகள் இந்திய மீனவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதை முடிந்தால் ஆதாரத்துடன் நிரூபிக்குமாறு புதிய கடற்படைத் தளபதி சோமதிலக திஸாநாயக்க சவால் விடுத்துள்ளார்.புதிய கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் இன்றைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட போதே அவர் சவால் விடுத்துள்ளதாக தெரியவிக்கப்படுகின்றது.இலங்கையின் 17ஆவது கடற்படைத் தளபதியாக சோமதிலக திஸாநாயக்க பாதுகாப்பு செயலாளரால் அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சில நாட்களின் முன்னர் இலங்கைக் கடற்படையினர் நடத்திய தாக்குதில் இந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது
இலங்கை செல்லத் தயாராகும் ஐ.நா நிபுணர் குழு!
இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் குறித்து தனக்கு ஆலோசனை வழங்கவென ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்துள்ள நிபுணர் குழு இலங்கை வர தயாராகி வருவதாக பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.இலங்கை வருவதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்தி அதற்கான திட்டங்களை நிபுணர் குழு செயற்படுத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிட்டுள்ள பான் கீ மூன் கூறியுள்ளார்.
80 முன்னாள் போராளிகள் யாழில் விடுதலை
யாழ்ப்பாணத்தில் யாழ் மாவட்ட செயலகம்,, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், யாழ் பல்கலைக்கழகம், கல்வித் திணைக்களம் மற்றும் சமூக அமைப்புக்கள் ஆகியவற்றின் அனுசரணையோடு தைப்பொங்கல் கலாசார விழா நடைபெற்றபோது புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 80 முன்னாள் போராளிகள் உறவினர்களிடம் ஓப்படைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
வியாழன், 13 ஜனவரி, 2011
புலிகளின் தாக்குதலில் தப்பியவரே புதிய கடற்படைத் தளபதி
17வது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரியர் அட்மிரல் எஸ்.திஸாநாயக்க தமிழீழ விடுதலைப் புலிகள் 1995ஆம் ஆண்டு மேற்கொண்ட தாக்குதல் ஒன்றில் உயிர் தப்பியவர் எனத் தெரிய வருகிறது.1995ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த “ரணசுறு” என்ற சீனத் தயாரிப்புப் பீரங்கிப் படகின் மீது கடற்கரும்புலிகள் மேற்கொண்ட தாக்குதலின் போதே இவர் உயிர் தப்பியிருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளால் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போது இவர் அப்பீரங்கிப் படகில் இருந்தார். இவருடன் இருந்த பல கடற்படை அதிகாரிகளும் மற்றும் கடற்படையினரும் இத்தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்டிருந்தனர்.
கிட்டு ஒரு தனிமனித சரித்திரம்,
கிட்டு ஒரு ஓர்மமான போராளி. அவரது வீரம், விவேகம், வேகம், துணிச்சல் மக்களிடையே பிரமிப்பை ஊட்டியது. எண்பது முற்பகுதியில் மக்கள் இராணுவத்துக்குப் பயந்து மூலையில் பதுங்கி நடுங்கி ஒடுங்கி இருந்த காலம். "ஆமி கோட்டையில் இருந்து வெளிக்கிடுறானாம்" என்ற செய்தி காற்றில் வந்தால் போதும். கிட்டு காற்றினும் வேகமாகச் சென்று வெளிக்கிட்ட இராணுவத்தை மறுபடியும் கோட்டைக்குள் அடித்துத் துரத்துவார். அப்படி அடித்துத் துரத்து மட்டும் ஓயமாட்டார். பலாலி, நாவற்குழி, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஆனையிறவு இப்படி எந்த முகாமில் இருந்து இராணுவம் புறப்பட்டாலும் கிட்டு அங்கு தனது போராளிகளுடன் நிற்பார். கிட்டு களத்தில் நிற்கிறார் என்றால் மக்களுக்கு இனந்தெரியாத துணிவு எங்கிருந்தோ வந்துவிடும்.
உரும்பிராயில் கிணற்றுக்குள்ளிருந்து மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது
உரும்பிராய் யோகபுரம் பகுதியில் கிணற்றுக்குள் இருந்த சடலம் நேற்று மீட்கப்பட்டு போதனா வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டிருந்தது.குறித்த சம்பவம் தொடர்பில் நீதிமன்ற உத்தரவிற்கமைவாக குறித்த கிணற்றை இறைத்தபோது கிணற்றுக்குள்ளிருந்து கையடக்கத் தொலைபேசி மற்றும் சறம் என்பன மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இது காணாமற் போன தமது உறவினரென உறவினர்களால் சடலம் அடையாளம் காணப்பட்டது இச் சம்பவத்தில் உரும்பிராய் யோகபுரத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் அமல்ராஜ் 35 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இவர் கடந்த 3ம் திகதி காணாமற் போயுள்ளதாக அவரது சகோதரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டினைச் செய்துள்ளமை. குறிப்பிடத்தக்கது மனைவி வன்னியில் இடம்பெற்ற இறுதிநேர யுத்தத்தின்போது ஷெல்வீச்சில் பலியானதாகவும் குறித்த நபர் தனது பிள்ளைகளுடன் தாயாருடன் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருவதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர் கொலை: இலங்கையிடம் இந்தியா புகார்
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் ஒருவர், இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து, இது குறித்து, இலங்கையிடம் இந்தியா தனது கவலையை வெளிப்படுத்தியிருக்கிறது. டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரை அழைத்து இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் இது தொடர்பாக முறைப்படி புகார் அளித்திருக்கிறார்கள். நாகை, புதுக்கோட்டை மாவட்டங்ளைச் சேர்ந்த மீனவர்கள், நேற்று ஜெகதாப்பட்டினத்திலிருந்து விசைப்படகில், கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார்கள். அப்போது, இந்தியக் கடல் எல்லைக்குள் இலங்கைக் கடற்படை நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதில் பாண்டியன் என்பவர் உயிரிழந்ததாகவும் மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
புதன், 12 ஜனவரி, 2011
மழை மட்டக்களப்பு மற்றும் அப்பாறையில் கடுமையான பாதிப்புகள்:பத்து லட்சம் பேர் பாதிப்பு
இலங்கையில் பெய்து வரும் கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக பத்து லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக தற்போதுவெளியாகியுள்ளதகவல்கள்தெரிவிக்கின்றன.மட்டக்களப்பு மற்றும் அப்பாறையில் கடுமையான பாதிப்புகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் மணிக்கு மணி அகதிகளுக்கான முகாம்களின் தேவை அதிகரித்து வருகின்றது என்று இலங்கை அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.அங்கு பால், குழந்தைகளுக்கான உணவு, கொசு வலைகள், துண்டுகள், படுக்கை விரிப்புகள் ஆகியவற்றுக்கான உடனடி தேவை ஏற்பட்டுள்ளது.
இலங்கை அரசை விமர்சிக்கக் கூடாதா? குமுறுகிறார் செங்கடல் பட இயக்குநர் லீனா மணிமேகலை
இலங்கை அரசை விமர்சிக்கக் கூடாது என்று நிபந்தனையே விதிக்கும் அளவுக்கு மோசமான நிலைமைக்குள் படைப் பாளிகளைச் சிறைப்படுத்தப் பார்க்கிறது இந்திய அரசு இவ்வாறு "செங்கடல்" படத்தின் இயக்குநர் லீனா மணிமேகலை குமுறுகிறார்.துயரத்தில் தவிக்கும் இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழ் மீனவர்கள் பிரச்சினையில் இலங்கை இந்திய தமிழக அரசுகளின் நிலைப்பாட்டை விமர்சிப்பதால் "செங்கடல்" படத்துக்கு சென்னை தணிக்கைக் குழு தடை விதித்துள்ளது. இப்போது படத்தை மறுதணிக்கைக்கு அனுப்பும் முடிவில் உள்ளார் இயக்குநர் லீனா
தமிழ் தேசிய கூட்டமைப்பு - ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சந்திப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. தற்போதைய அரசியில் சூழ்நிலைகள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமசந்திரன், மற்றும் செல்வம் அடைக்கல நாதன், ஆகியோர் கலந்து கொண்டனர். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கிம் மற்றும் பொது செயலாளர் ஹசன் அலி ஆகியேர் பங்கு கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல்
ஹம்பாந்தோட்டை நகரில் சீன அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வரும் துறைமுக அபிவிருத்தி திட்டம் தொடர்பில் இந்தியா கவலை கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.அமெரிக்க இரகசிய இராஜதந்திர ஆவணங்களை வெளியிட்டு வரும் விக்கிலீக்ஸின் பிந்திய வெளியீடுகளில் இந்த விடயம் தொடர்பான தகவல்கள் அடங்கியுள்ளதாக ஏஷியன் ட்ரிபியூன் செய்தி வெளியிட்டுள்ளது.ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி 2007 ஆம் ஆண்டு என திகதியிடப்பட்ட இராஜதந்திர தகவல் பரிமாற்ற கோப்பில் இது தொடர்பான தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன.
வடபகுதி யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு...இராணுவத்தினர் பிரசாரம்
தென்பகுதி ஆடை உற்பத்தித் தொழிற்சாலைகளில் வடபகுதி யுவதிகளுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுத்தரப்படும் என்றும் அதற்காக யுவதிகள் தேவைப்படுவதாகவும் நாட்டின் வடபகுதியில் இராணுவத்தினர் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய பிரசாரங்கள் எத்தகைய உத்தரவாதமும், ஒப்பந்தமும்,வெளிப்படைத்தன்மையும்இன்றிமேற்கொள்ளப்படுவதாகவும் மக்கள் இது குறித்து விழிப்பாக இருக்குமாறும் வடபகுதியில் அமைந்துள்ள சிவில் அமைப்புக்கள் கேட்டுள்ளன. இலங்கை இராணுவத்திலுள்ள பல்வேறு தரத்தையும் சேர்ந்த அதிகாரிகள் வடபகுதியின் யாழ்ப்பாணம்,வன்னி மற்றும் மீள் குடியேறிய கிராமப்புறங்களுக்குச் சென்று இவ்வாறான பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
'ஒரு சிங்களப் பெண்ணுக்கு இருக்கும் அக்கறை இங்கு உள்ள தமிழர்களுக்கு இல்லையே!!!!!
ஐந்தரை மணி நேரம் தொடர்ந்து பேச்சாளர்கள் முழங்கிக் கொண்டே இருந்தாலும், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைக் கட்டிப்போட்டிருந்தது, 'என்ன செய்யலாம் இதற்காக?’ என்ற புத்தகம்! சென்னையில் கடந்த 9-ம்தேதி நடந்த இந்த புத்தக வெளியீட்டுக் கூட்டத்தில், ஒட்டுமொத்தக் கவனத்தையும் ஈர்த்தவர் நிமல்கா பெர்னாண்டோ.
இலங்கையில் இருந்து வந்திருந்த இவர், பிறப்பால் சிங்களவர். பாகுபாடுகள் மற்றும் இன வெறிக்கு எதிரான சர்வதேச இயக்கத்தின் தலைவரான நிமல்கா பேசப் பேச, 'ஒரு சிங்களப் பெண்ணுக்கு இருக்கும் அக்கறை இங்கு உள்ள தமிழர்களுக்கு இல்லையே?’ என்ற கவலை எல்லோர் முகத்திலும் முளைத்தது.இலங்கை மனித உரிமைப் போராளி நிமல்காவின் ஆங்கிலப் பேச்சில் அழுத்தமான அரசியல் பொறி தெறித்தது. ''நான் தமிழில் பேச முடியாமல் இருப்பதற்கு முதலில் வருந்துகிறேன்.
இலங்கையில் இருந்து வந்திருந்த இவர், பிறப்பால் சிங்களவர். பாகுபாடுகள் மற்றும் இன வெறிக்கு எதிரான சர்வதேச இயக்கத்தின் தலைவரான நிமல்கா பேசப் பேச, 'ஒரு சிங்களப் பெண்ணுக்கு இருக்கும் அக்கறை இங்கு உள்ள தமிழர்களுக்கு இல்லையே?’ என்ற கவலை எல்லோர் முகத்திலும் முளைத்தது.இலங்கை மனித உரிமைப் போராளி நிமல்காவின் ஆங்கிலப் பேச்சில் அழுத்தமான அரசியல் பொறி தெறித்தது. ''நான் தமிழில் பேச முடியாமல் இருப்பதற்கு முதலில் வருந்துகிறேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)














